Saturday, April 26, 2008

சங்கம் ஒன் டூ முடிஞ்சு இப்போ த்ரீ

என் உயிரினும் மேலான் உடன்பிறப்புக்களே அப்படி ஆரம்பிச்சா அது கலைஞர் ஸ்டைல்
என் ரத்தத்தின் ரத்தங்களே அப்படின்னு ஆரம்பிச்சா அது புரட்சித் தலைவர் ஸ்டைல்
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே அப்ப்டின்னு ஆரம்பிச்சா அது சூப்பர் ஸ்டார் ஸ்டைல்
எங்கப் பாசத்துக்குரிய சிங்கங்களே அப்படின்னு ஆரம்பிச்சா அது நம்ம வ.வா.சங்கம் ஸ்டைல்ன்னு ஆகிப் போச்சு...

இதே ஏப்ரல் 26, 2006 சங்கம் ஆரம்பிச்சோம்... இரண்டு வருசம் ஓடிப் போச்சு... மூணாவது வருசம் பொறந்திருச்சு...சந்தோசமா இருக்கு... எதோ சாதிச்ச மாதிரி இருக்கு... ஆரம்பிக்கும் போது என்னவோ தமாசாத் தான் ஆரம்பிச்சோம்....குழு பதிவு அதுவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊருல்ல இருந்துகிட்டு குழுவா செயல்படுறது அவ்வளவு சுலபம் இல்லை...சங்கம் ஆரம்பிக்கும் போது இருந்த உற்சாகத்துல்ல இளையதளபதி விஜய் சொல்லுற மாதிரி எவ்வளவோ செஞ்சுட்டோம் இதை செய்யமாட்டோமான்னு தான் ஆரம்பிச்சோம்... மக்களும் எவ்வளவோ படிச்சிட்டாங்க இதை படிக்க மாட்டாங்களான்னு ஒரு நம்பிக்கை... அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை... நகைச்சுவைக்கு என்றுமே மரியாதை உண்டு என்பது நாடறிந்த செய்தி... எங்கள் நகைச்சுவைக்கும் பதிவுலக மக்கள் கொடுத்த வரவேற்பும் ஆதரவும் தான் எங்களை இப்போ மூணாவது ஆண்டுக்குள்ளே அழைத்து வந்திருக்கு...

350க்கும் அதிகமான பதிவுகள், அதுக்கு அச்சு ஊடகங்களில் கிடைத்த ஆதரவு அங்கிகீகாரம், தொடர் வாசகர்கள் அதையும் தாண்டி சங்கத்து மக்களாகிய எங்களுக்கு கிடைத்த நட்பு வட்டம்.இதெல்லாம் சங்கத்தின் சின்னச் சின்ன சாதனைகள்...

முதல் ஆண்டு விழாவில் நடத்திய போட்டிகள்..அதில் உற்சாகமாய் பங்கேற்ற பதிவுலக நண்பர்கள்..அதின் மூலம் கொடுக்கப்பட்ட பரிசினை, பரிசு வென்ற நண்பர்களின் இசைவோட தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தது என சங்கம் மூலம் கிடைத்த மனநிறைவான அனுபவங்கள்...

இரண்டு ஆண்டுகள் முடிந்து மூணுல்ல அடியெடுத்து வைக்கும் போது கொஞ்சம் கொசுவர்த்தி சுத்தல்லன்னா எப்படி?

சங்கம் துவங்கிய 2006 ஆம் ஆண்டு வெளியான சில சுவாரஸ்யமான பதிவுகள் உங்கள் பார்வைக்குப் படைக்கிறோம்... பாருங்க... ரசியுங்க...எங்களோடு கொண்டாட்டத்தில் இணையுங்கள்

வ.வா.சங்கத்தின் முதல் சுவரொட்டி இது தானுங்க

சங்கத்தின் தல கைப்புள்ள சங்கத்தில் வெளியிட்ட முதல் அறிக்கையைப் படிக்க இங்கே வாங்க

சங்கத்தின் தல கைப்புள்ள பதிவுலக அரசியல் பிரவேசம் குறித்து அளித்த பேட்டியைப் படிக்க

கல்கி இதழில் சங்கம் வந்த நிகழ்வு பற்றி அறிய இங்கே பாருங்க

சங்கத்து இளம் சிங்கம் ஜொள்ளு பாண்டியின் கொள்கை முழக்க கவிதைப் படியுங்கள்

சங்கம் நடத்திய முதல் பற்றிய விவரம் இங்கே

தலக் கைப்புள்ளயின் காதல் கதை பத்திய விவரம் வேணுமா?

சங்கத்து மக்களின் கிரிக்கெட் ஆர்வம் பத்தித் தெரிஞ்சிக்கங்க

கிரிக்கெட் மட்டுமா கால்பந்தாட்டத்திலும் நாங்க குறைஞ்சவங்க இல்ல

சங்கத்தின் முதல் அட்லாஸ் பதிவர் யார்ன்னு தெரியுமா... சங்கத்தின் முதல் அட்லாஸ் பதிவு இதோ

பின்னூட்டக் கயமை ஆரம்பித்த வரலாறு இங்கே.. இந்தப் பதிவு பின்னூட்டக் கயமையை எதிர்த்து சிறப்பு பதிவுலக போலீஸ் வரும் அளவுக்கு பெயர் போன கொத்தனாரின் பதிவு

ஐன் ஸ்டீன் எடிசன் எல்லாரும் வியக்கும் அளவுக்கு சங்கத்து தளபதி சிபி உலகுக்கு எடுத்துச் சொன்ன சரித்திரப் புகழ் தத்துவம் இங்கே

சமீபக் காலத்தில் பதிவுலக ரங்கமணிகள் படித்து பயனடைந்த பெனத்தலாரின் MSc WIFEOLOGY ஆரம்பித்ததும் நம்ம சங்கத்தில் தான்

கொங்கு ராசா போட்டுத் தாக்குன ஒன் லைனர்ஸ்

கொங்குராசா கொடுத்த அட்லாஸ் வாலிபன் விளக்கம் கேளுங்க

நம்ம வெட்டிப் பயலின் ஆட்டோகிராப் பாகம் 1, பாகம் 2 பாகம் 3

டுபுக்கு சங்கத்தில் சொன்ன தீவாளி அனுபவம்

வானத்தில் இருக்க நிலாக் கிட்டவே பிரண்ட்ஷிப் வச்சிகிட்ட இவரை இந்தக் கெட்டப்புல்ல சங்கத்திலே தான் பாருங்க...

சங்கத்தின் 100வது பதிவில் சங்கம் பற்றி பாஸ்டன் பாலா அளித்த ரிப்போர்ட்

BLOGGERS MEET அப்படின்னா என்ன அப்படின்னு சங்கத்துல்ல நடந்த அலசல்

ஆர்குட் அலம்பல் பற்றி சங்கத்தில் வெட்டி பயல் அளிக்கும் தகவல்

தலக்கு வச்ச ஸ்பெஷல் கச்சேரி படிங்க

ராயல் தம்பியின் கன்னிப் பதிவு படிங்க...

இது ஓலக குடி மக்களுக்காக தலயோட ஸ்பெஷல் கட்டுரை

பேராசிரியர் தருமி சாரின் கலைவாணர் பிறந்த நாள் சிறப்பு பதிவு பாருங்க

சவுண்ட் பார்ட்டி உதயின் அசத்தலான சேட்டன் பத்தி தெரிஞ்சுக்குங்க

சங்கம் நடத்திய ஸ்டார் நைட் பத்தி இங்கே

2006 முடிஞ்சு 2007 ஆரம்பிச்ச தளபதி சிபியின் இந்த டைமிங் போஸ்ட் பாருங்க

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து சங்கத்தின் பயணம் இனிதே தொடர்கிறது..

இப்படிக்கு
இளா- மோகன்ராஜ்- தேவ் - சிபி- நவீன்பிரகாஷ் - நாகை சிவா - பாலாஜி - ராம் - அப்பாண்டை ராஜ் - கதிர்
வ.வா.சங்கம்

11 comments:

இலவசக்கொத்தனார் said...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து சங்கத்தின் பயணம் இனிதே தொடர வாழ்த்துவது....

அன்புக் கொத்தனார்!!

நாகை சிவா said...

சங்கத்தின் மத்த சிங்கங்களுக்கு வாழ்த்துக்களையும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகளையும் சொல்லிக்குறேன் சாமியோவ்!

ஆயில்யன் said...

சங்கத்து சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்
:)))

கோபிநாத் said...

அனைத்து சிங்கங்களுக்கும் வாழ்த்துக்கள் ;))

நாமக்கல் சிபி said...

சங்கத்துச் சிங்கங்கல் அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

//சங்கத்தின் மத்த சிங்கங்களுக்கு வாழ்த்துக்களையும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகளையும் சொல்லிக்குறேன் சாமியோவ்!
//

Repeateey!

Anonymous said...

Hi Guys,

Wishes for your Long Journey!

வெட்டிப்பயல் said...

சங்கத்து சிங்கங்களுக்கு என் வாழ்த்துகள் (எனக்கும் சேர்த்து தான் ;) )

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கு நன்றிகள் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

இரண்டு வருடங்களாக எங்களுக்கு இனிய பதிவுகளை கொடுத்த சிங்கங்கள் எல்லோருக்கும் நன்றியும், வரும் வருடங்களிலும் தொய்விலாது கொண்டு செல்ல வாழ்த்துக்களும்.....

கானா பிரபா said...

சங்கத்து சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்

Syam said...

//இதெல்லாம் சங்கத்தின் சின்னச் சின்ன சாதனைகள்...
//

இம்புட்டு தன்னடக்கமா.... :-)

வாழ்த்துகள்...இன்னும் பல ஆண்டு சங்கப்பணி தொடர....