Friday, May 26, 2006

கைப்பொண்ணுவின் கடைசி கடிதம்

இன்று காலை வரு.வா.சங்கம் தலைமை நிலையத்துக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கடிதம் மற்ற கடிதங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது.

உடைந்த இதயம் வடிவில் இருந்த அந்தக் கடிதத்தை பாண்டியும் நானும் பார்த்து திடுக்கிட்டோம் காரணம்... அந்தக் கடித்தின் அனுப்புனர் பெயர்....எங்கள் ஒன்னே முக்கால் வயதில் இருந்து எங்களின் ஓரேத் தானை தலைவனாக நாங்கள் முழு மனதோடு ஏற்று கொண்ட எங்கள் 'தல' பாசமிகு அண்ணன் கைப்புவின் உயிருக்குச் சொந்தக் காரியாகிய அன்பு அன்றில் பேர்ட் மற்றும எங்கள் மரியாதைக்கும் பாசத்திற்குமுரிய அண்ணியாம்... கைப்பொண்ணு...
அந்தப் பெயர் கோழிக் கிறுக்கலாய் கவ்ரின் பின்புறம் இருந்தது .

எங்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் கட்டிக் கொண்டது.. அவ்வ்வ்வ்வ்வ் என்ற சங்கத்தின் நாத ஒலிக் கூட எழுப்பமுடியாமல் திக்கி திணறி விக்கி உதறி நின்றோம் நாங்கள்....

கடித்ததின் முதல் வரியிலேயே ஒரு பேரல் காதல் வழிந்தது....
அந்த முதல் வரி என்னன்னா...

இந்த பாரசீக பேரட் மனசுல்ல வந்து கொய்யாச் செடி நட்டு வச்ச என் மம்முதக் கொய்யாலே.. என் காதல் அய்யாலே....

அதுக்கு மேலப் படிக்க முடியாம நாங்க அப்படியே அழுக ஆரம்பிச்சிட்டோம்.

கடிதத்தின் ரிவர்ஸ்ல்ல விலாசம் தேடுனோம்... அதுல்ல எதோ அமெரிக்கா அட்ரஸ் இருந்துச்சு....(புத்ரகம் வரு.வா.ச கிளைக்கு கடித்தின் நகல் அனுப்பப்ப்ட்டுள்ளது.. விவரங்கள் தனிப் பதிவில்)

அதுக்கு அடுத்த வரி எங்களைப் பதற வைத்தது...

அது...மேக்னட் கலர்ல்ல வந்து பிஷ் நெட் போட்டு என்னைக் கவர் பண்ண களவாணி மாமனுக்கு இந்த க்யூட் கைப்பொண்ணு எழுதும் கடைசி மடல்.....

பாண்டி கூட்டிட்டு வந்தப் பிரெஞ்சுப் பொண்ணு அது பிரெஞ்சு இல்லன்னு சொல்லிருச்சு... கடித்திலே இதுக்குப் பொறவு வர்ற செயதி எல்லாம் தலை கீழா தமிழ்ல்ல தான் எழுதி இருக்கு இந்தா மொத்தம் கடிதமும் அதன் விவரமும்...

என் ஆச சிரிப்பு எம்.சீ.ஆரே.. உம்ம மேல கொண்ட லவ்க்கு எப்படி நான் விளக்கம் கொடுப்பேன்...?

மொதமொதல்ல வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் என்னைப் பாத்ததும் என்னைய வச்ச கண்ணு வாங்காம சைட் அடிச்சுகிட்டே நின்னிங்க...அப்போ உங்களைப் பாத்துப்புட்ட உங்க அய்யாகிட்ட, அம்புட்டு பயலும் வேடிக்கைப் பாக்க டவுசர் கிழிய அடிய வாங்கிட்டும் கொஞசம் கூட அசராம என்னியப் பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சியளே அதச் சொல்லவா?

அதுக்கு அப்புறம் எங்கப்பார் இளவ்ட்டக் கல்ல தூக்குனாத் தான் உனக்கு எம்பொண்ணை உனக்குக் கொடுப்பேன்ன்னு சொன்னத்துக்காக இளவ்ட்டக் கல்லைத் தூக்கப் போய் மூச்சு திணறி முக்கி மூணு மாசம் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியிலே கிடந்தியளே அந்த வீரத்தைச் சொல்லவா?

ஆத்தூர்ல்ல அச்சு முறுக்கும்... கம்பத்துல்ல கடலை உருண்டையும்... பெரிய குளத்துல்ல பெப்பர் மின்ட்டும் வாங்கி கொடுத்த என் வில்லேஜ் வீராண்டியில்ல நீங்க....

தேனி டவுண்ல்ல வசந்து தியேட்டர்ல்ல இன்ட்ர்வெல் விடும் போது தேன் முட்டாய் வாங்கப் போன நீங்க... அது இல்லாம திரும்பி வர... நான் கண் கலங்க.... அங்கிட்டு இருந்த தேன் கூட்டுல்லயே கைய விட்டு தேனீகிட்ட கொட்டு வாங்கியும் கம்பீரமாக் கதறி பெரும் கலவரமே செஞ்ச காதல் அரசா... என் கனவு புருசா...

என் அழகு ராசா மேல எம்புட்டு பேருக்கு கண்ணு....உங்க அழகு எனக்கு மட்டும் தான்ன்னு உங்க ஆத்தாக் கிடாரி மேல சத்தியம் ப்ண்ணியளே...

ம்ம்ம் இம்புட்டு வீரம்.. காதல்... பாசம்.. இது எல்லாம் எந்தப் புள்ளக்குக் கிடைக்கும்

டார்லிங்!!!! ராசா அழகு ராசா ஐ லவ்ஸ் யூ....

ஆனா அந்த சரளாக்கா அன்னிக்கு உங்களைப் பார்த்து ஆயிரம் இருந்தாலும் ஆம்பிளைன்னா மீசை வேணும்டான்னு சொன்னதேக் கேட்டு என் சின்ன இதயம் சிதறிப் போச்சு.

கரபுர கரடி லேகியமெல்லாம் தடவிப் பார்த்தும்.. ஏன் மடக் மடக்குன்னு குடிச்சுப் பார்த்தும் எம் பொம்முக்குட்டி சிங்கத்துக்கு மீசையும் தாடியும் வளரவேயில்லையே.

இந்த ஏக்கத்துல்லயே என் வெயிட்டும் குறைஞ்சது.. என் கலரும் போயிகிட்டு இருந்துச்சு...

ஆச ராசா மீசையிலே இந்த கருப்பு ரோசா முகம் புதைச்சு லவ்ஸ் பண்ணனும்ங்கற கனவெல்லாம் கலைஞ்சுப் போயிட்டே இருந்தது...

என் மம்முத ராசாவும் என் மனக் கவலையைப் போக்க ஐடெக்ஸ் பென்சில் வச்சு வித்விதமா மீசை வரைஞ்சிட்டு வந்து செல்லம் அழுவாதாடா கண்ணுன்னு ஆறுதல் சொல்லுவீங்க.. அது என் மனசை எவ்வளவு வலிக்க வச்சதுத் தெரியுமா?

பென்சில் மீசை முகம் கழுவும் போது அழிஞ்சுப் போயிரும்ன்னு எனக்காக மூணு மாசம் முகம் கழுவாம என் ராசா கருத்து வேறப் போயிட்டீங்க... என் மவராசா காதலைப் போல வருமா?

அப்புறம் முகம் கழுவல்லன்னா நாறிப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்லி நீங்களும் முகம் கழுவிட்டு என் ஆசைக்காக ஒட்டு மீசை வச்சுட்டு நிப்பீங்க...
அந்த ஒட்டு மீசையை அந்த எடுப்பட்ட பயல்வ பார்த்தீபனும் கட்டத்துரையும் ஊதுவத்தி வச்சு நீங்க உறங்கும் போது சுட்டு சுட்டு விளையாடுவாய்ங்க... அதைக் கூட எம்மேல இருக்க அளவுக்கதிமான பியார் காரணமாப் பொறுத்துகிட்டு புன்னகைப்பீங்களே...

அய்யா எருமைக்கெல்லாம் பெருமை, கருமை பொறுமைன்னு புத்தி சொன்னவரே...

என்னாலேத் தாங்க முடியல்ல நீங்க மீசை இல்லாம தனியாப் போய் கண்ட சரக்க அடிச்சிட்டு கண்டமேனிக்கு புலமபறதை..

அதுன்னாலே நான் ஒரு முடிவு பண்ணுனேன்... உங்களுக்கு மீசை வளர எம்புட்டு செலவு ஆனாலும் பரவாயில்லன்னு...

ஆராய்ச்சிக்கு அஞ்சு கண்டம் சுத்தி வந்தேன்... அன்டார்டிக்காவுக்கு கூடப் போயிட்டு வந்தேன்...

என் முயற்சிக்கு நல்ல பலன் வந்துச்சு... மீசை முளைக்கிற மூலிகையை புதரகத்துல்ல ஒரு புதருக்குப் பின்னாலேக் கண்டுபிடிச்சேன்...

ஆனா..எப்படி சொல்லுவேன்...

இந்தக் கட்டத்துரையும் அவன் குரூப்பும் நான் கண்டுபிடிச்ச மூலிகையைப் புடுங்கி என் முகத்துல்ல மூணு வாரம் தேய்ச்சு விட்டுட்டாங்க...

அதுனால்ல...

அய்யோ இனி நான் உங்க முகத்துல்ல எப்படி விழிப்பேன்...

என் அழகு ராசா.. வீரமாண்டி ...அழகனுக்கெல்லாம் அழ்கன்ன்னு அசலூர் சந்தையில்ல பேர் எடுத்த மம்முத சிங்கத்து முகத்துல்ல நான் எப்படி முழிப்பேன்... அய்யோ

என்னிய சிரிக்கச் சொல்லி போட்டாவெல்லாம் புடிச்சாயங்க...

நான் என் பாட்டி ஊர் கிழக்காப்பிரிக்காவுக்குப் போறேன்... இனிமே நான் உன்னியப் பாக்க திரும்பி வரவேமாட்டேன்...

எனக்காக ஒண்ணு செய்வீயா மாமா.. அந்தக் கட்டத்துரை குரூப் கிட்டே தான் உனக்காக ஆசயாத் தயாரிச்ச மூலிகைத் தைலம் இருக்கு அதை எப்படியாவது நீ அவங்க கிட்ட இருந்து கைப்பற்றி மூணுவாரம் தேச்சு மீசை வளத்துக்கோ மாமா.. அப்போ நீ என் மேல வச்சுருக்க காதல் உண்மையானதுன்னு இந்த ஊருக்கே தெரியும்...

லவ் அன்ட் லவ் ஒன்லி
உன் பாச ஜிலேபி கைப்பொண்ணு:(

லெட்டர் கூட வந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு....




அந்த புகைப்படத்துக்குப் பின்னாடி இருந்த விஷயம்

மாமா இன்னொரு விஷ்யம் அந்தக் கும்பல் கூட ஒரு பொண்ணும் இருந்துச்சு... அந்தப் பொண்ணு கைப்பொண்ணைக் கொல்லணும்.. அப்படின்னு சவுண்ட் வேற கொடுத்துச்சு.. நான் பயந்துப் போயிட்டேன்.. அந்தக் குரல் நம்ம சங்கத்துக் கூட்டத்துல்ல கேட்டுருக்கேன்...ஆனா யாருன்னு சொல்ல பயமா இருக்கு....பாத்து மாமா
மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்...

21 comments:

Unknown said...

கைபு அமெரிக்கா போயி எங்க அண்ணியை மறந்துட்டாரா?

பார்த்திபா,கட்டதுரை..உடனே தீகுளிக்க தயாராகுங்கப்பா......

பொன்ஸ்~~Poorna said...

அய்யய்யோ.. கைப்பொண்ணுக்கு என்னாச்சு? அமெரிக்காவின் எந்த ஓரத்தில் இருந்து லெட்டர் வந்திருக்கு!! சொல்லு தேவ், நானும் செல்வனும் போய் பார்த்துட்டு வர்றோம்!!!

Unknown said...

அக்கா , செல்வன் ரெண்டு பேரும் பதறாதீங்க... பாதி லெட்டர் டா வின்சி கோட் படத்துல்ல வர்ற சிம்பலஸ் மாதிரி இருக்கு.. ,மேல ஒண்ணும் புரியல்ல... பிரெஞ்ச் மாதிரியும் தெரியுது... ஒரு வேளைத் தலக்கு ஸ்பெஷல் கோட் லாங்குவேஜ் யூஸ் பண்ணியிருப்பாங்களோன்னும் விளங்கல்ல

Unknown said...

பாண்டி அவனுக்குத் தெரிஞ்ச பிரெஞ்ச் பொன்ணு எதோ ஒண்ணு இருக்கு கூட்டிட்டு வ்ர்றேன்னு போனான்..ம்ஹ்ம் இன்னும் வர்றல்ல:(

Anonymous said...

அண்ணாச்சிக்கு என்னாச்சு தேவு!!!!!
எங்க அழுகாச்சில அரபிக்கடல் நிரம்பறதுக்கு முன்னாடி விவரத்த
சொல்லிப்புடு ஆமா!!!!!!!!.

அவ்வ்வ்வ்வ்வுடன்,
துபாய் ராஜா.

ரிஷி said...

Ada da...

Kaipulla ininime....Vazavetten ayiduvara?

tangaliye...makka....

கைப்புள்ள said...

அட பாவிகளா! இங்க கூட எனக்கு ஜோடி இல்லாம ஒத்தையாக்கிட்டீங்களேடா? லவ்பேர்ட்ஸைப் பிரிச்ச பாவம் ஒங்கள சும்மா வுடாது.

சுதாகர் said...

இந்த கடுதாசியப் பாத்தா கைப்பொண்ணுவை கட்டதுரை கடத்திட்டு போயி, வலுக்கட்டாயமா எழுத வச்ச மாதிரி இருக்கு!

நம்மள சீண்டுடறதே அந்த கட்டதுரைக்கு வேலையா போச்சு. இனிமேலும் சும்மா இருக்கக் கூடாது. எடுடா வண்டிய!

கைப்புள்ள said...

லவ்பேர்ட்ஸை அன்றில் பறவைகள்னு மாத்தி எளுதிக்க.

ஜொள்ளுப்பாண்டி said...

//பாண்டி அவனுக்குத் தெரிஞ்ச பிரெஞ்ச் பொன்ணு எதோ ஒண்ணு இருக்கு கூட்டிட்டு வ்ர்றேன்னு போனான்..ம்ஹ்ம் இன்னும் வர்றல்ல:) //

தேவண்ணா நான் தீவிரமா சங்கப்பணி ஆத்திகிட்டு இருந்தப்போ அந்த ப்ரெஞ்ச் கிளிய எவனோ தேத்தீட்டாண்ணா :(((

இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடலே இப்பவே மாக்ஸ்முல்லர் பவன் பக்கம் வண்டிய விடறேன் ஏதாச்சும் ஜெர்மன் தெரிஞ்ச இளஞ்சிட்டு கெடைக்கமயா போய்டும்?
இல்லேன்ன கஷ்டப்பட்டாவது அலையன்ஸ் ப்ரான்ஸிஸ் ஓரமா ஒதுங்கிடறேன். அண்ணி லெட்டரை படிக்காம விடறதில்லை.

Geetha Sambasivam said...

தேவ், பாண்டி,
லெட்டர்ல என்னதான் இருக்குது? இரண்டு பேரும் சீக்கிரமா நம்ம டோண்டு சார் கிட்டப் போய்த் தெரிஞ்சுகிட்டு வாங்க. கைப்பொண்ணு ஒருவழியாப் போயிட்டாளானு தெரிஞ்சுக்கணும். அவ வந்தால் என் தலைமைப் பதவி என்னா ஆயிடுமோ?

ஜொள்ளுப்பாண்டி said...

//மாமா இன்னொரு விஷ்யம் அந்தக் கும்பல் கூட ஒரு பொண்ணும் இருந்துச்சு... அந்தப் பொண்ணு கைப்பொண்ணைக் கொல்லணும்.. அப்படின்னு சவுண்ட் வேற கொடுத்துச்சு.. நான் பயந்துப் போயிட்டேன்.. அந்தக் குரல் நம்ம சங்கத்துக் கூட்டத்துல்ல கேட்டுருக்கேன்...ஆனா யாருன்னு சொல்ல பயமா இருக்கு....//

தேவண்ணா என்னமோ நடக்குது இத கிறுக்குப்பயபுள்ள பாண்டிக்கு ஒன்னும் புரிபடமாட்டீங்குது.

அப்போ கம்பொண்ணு அம்பேலா ?
'தல' க்கி புதுசா ஒரு ஜோடியத்தேடனுமா ? அப்போ நாம அல்லாறும் பொண்ணு பார்க்கப் போறோமா ? என்னில இருந்து ஆரம்பிக்கலாம்?

பொன்ஸ்~~Poorna said...

//கைப்பொண்ணு ஒருவழியாப் போயிட்டாளானு தெரிஞ்சுக்கணும்//

//அந்தப் பொண்ணு கைப்பொண்ணைக் கொல்லணும்.. அப்படின்னு சவுண்ட் வேற கொடுத்துச்சு.. நான் பயந்துப் போயிட்டேன்.. அந்தக் குரல் நம்ம சங்கத்துக் கூட்டத்துல்ல கேட்டுருக்கேன்...ஆனா யாருன்னு சொல்ல பயமா இருக்கு....//

ooooo

பொன்ஸ்~~Poorna said...

//அப்போ நாம அல்லாறும் பொண்ணு பார்க்கப் போறோமா ? என்னில இருந்து ஆரம்பிக்கலாம்? //
என்ன பாண்டி புச்சா கேக்குற?!! நீ தெனைக்கும் செய்யற வேல தானே? ;) நல்லா மாக்ஸ்முல்லர் பவன், ஸ்பென்சர்ன்ஸுன்னு பாரு!!..

தல நீ என்னவோ க.பி.க ல சேரப் போறதா சொன்னாங்க!! அது கேட்டு தான் கைப்பொண்ணு மனசொடிஞ்சி கடைசி கடிதம் வரிக்கும் போய்டுச்சுன்னு ஒற்றர் படைத் தளபதிய வேவு பார்க்கப் போன ஆள் சொல்லிகினான்!! இப்போ மறுக்கா ஒரு ஜோடியா?!!

Geetha Sambasivam said...

யம்மா, பொன்ஸு, நம்மளைக் காட்டிக் கொடுக்கறியே, நியாயமா அது சரி, புதரகத்திலே கூட கணினியைக் கழுத்தில கட்டிக்கிட்டுத் தான் தூங்குவீங்களா? கரெக்டா டயத்துக்கு வந்து பின்னூட்டம் போடறீங்க. உங்களுக்காக நான் வால்மார்ட், வால்க்ரீன்,சாம்ஸ் க்ளப், க்ரோக்கர், வ.வா.ச. மார்ட், (தம்பி தேவ் புதுசாத் திறந்திருக்கார் உங்களுக்காக. )எல்லா அட்ரஸும் அனுப்பிடறேன். இந்தக் கூட இருந்தே எட்டப்பர் வேலை மட்டும் வேணாம் தாயி.(ஸ்மைலீ போட்டுக்குங்க.) நீங்களாவே சிரிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா சிரிச்சு, பக்கத்து கேபின் ஆளுங்க எல்லாம் வந்து பார்க்கிற மாதிரி ஆகிடுச்சுக்கா!! :))

நாகை சிவா said...

//அட பாவிகளா! இங்க கூட எனக்கு ஜோடி இல்லாம ஒத்தையாக்கிட்டீங்களேடா? //

தல விடு தல, புதுசா, பவிசா ஒரு சிட்ட புடிச்சிடலாம். நான் சூடானில் தேட ஆரம்பிச்சுடேன். உன்னோட ஒரு அழகான(????) போட்டோ இருந்தா கூடு.
என் ஒன்னு, இங்க இருக்குற பொண்ணுகளுக்கு மண்டையில் முடி இருக்காது. மீசை இல்லாத நமக்கு இது போதும்கிறியா. அதுவும் சரி தான்.

Syam said...

கைப்புள்ளன்னே இந்த கோக்கு மாக்கு வேலய உன்கிட்டவே ஆரம்பிச்சுடாய்ங்லே...நீ ஒன்னும் கவல படாதனே உங்க "சிங் இன் த ரெய்ன்" பாட்ட எடுத்து விட்டீங்கன்னாஅண்ணி தானா ஆப்பிரிக்கால இருந்து அரபிக்கடல் வழியா மதுர வந்து சேர்ந்துருவாங்க...

Nice one Dev...

Unknown said...

தல தல இருக்கீயா நீ?
எவ்வளவு பெரிய விஷ்யம் நடந்திருக்கு?
வழக்கம் போல நீ மௌனமா இருந்தா நியாமா?
நீதி வேணும் தல... அண்ணி கைப்பொண்ணு மீது மெய்யாலுமே நீ லவ்ஸ் வச்சுருந்தீன்னா அண்ணி சொன்னதைச் செய்.... செய் தல
உம் மேல தாய்குலங்களுக்கு ரெஸ்பெக்ட் கொறையுது தல..
லவ்க்காக எதுவும் செய்ய நீ தயார்ன்னு ஊருக்கு காட்டு தல....

பொன்ஸ்~~Poorna said...

இதை எப்போ முடிச்சீங்க?!! நான் பார்த்தது கொஞ்சம் தான்.. பிரஞ்சைப் புரிஞ்சதுக்கப்புறம், தனிப்பதிவா போட்டிருக்கலாம்!! எத்தனி பேரு படிச்சாங்களோ!!!

சரி, கைப்பொண்ணு என்னதான் ஆச்சு?

Unknown said...

சங்கத்தின் இரும்புத் தாராகை கொட்டாம்பட்டி கோமகள் அன்பு அண்ணியை எல்லோரும் மறந்து விட்டார்கள்...

அண்ணி யார் மீது மங்காத காதலும் வற்றாத மீசையும் ச்சீ ஆசையும் வைத்திருந்தாரோ அந்தச் சித்தூர் சிமெண்ட்காரரே அந்த அன்றில் பறவையை மறந்து உதை பந்து உதைக்க உற்சாகமாய் கிளம்பியப் பின் அண்ணி நான் ஒரு சாதாரண்த் தொண்டன் .. என்ன செய்ய முடியும்..

கண்ணீர் அஞ்சலி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்