Friday, January 16, 2009

சங்கத்தின் "சிங்கம்", "மாட்டுப்" பொங்கலில் பிறந்தது ஏன்?

"கேல்வி" நம்பர் 01:
இளமுருகு என்றும் விவ+சாயி என்றும் அறியப்படும்
சங்கத்தின் "சிங்கம்", "மாட்டுப்" பொங்கலில் பிறந்தது ஏன்?

"கேல்வி" நம்பர் 02:
ஒரு தென்றல் புயலாகும்! ஒரு சிங்கம் மாடு ஆகுமா? :)


"கேல்வி" நம்பர் 03:
பொங்கல் தினத்தைப் புத்தாண்டு என்று மாற்றி வெற்றி கண்டது போல்...
மாட்டுப் பொங்கலை, இனி, சிங்கப் பொங்கல் என்று தமிழக அரசு மாற்றுமா?

"கேல்வி" நம்பர் 04:
* அந்தப் "புரட்சி" இன்றே நடக்க, அனைவரும் கீழே விண்ணப்பத்தில் கையெழுத்து போடுவீங்களா?
* இல்லை வெட்டி பாணியில், சும்மா கை-நனைச்சிட்டும் போகலாம்!(கை நனைப்பதற்கென்றே, தண்ணி பேரல், அமெரிக்காவின் சிகாக்கஸ் மாநகரில், இன்னிக்கி ஸ்பெசலாகக் காய்ச்சப்படுகிறதாம்!)


குறிப்பு நம்பர் 05:
ஒரு சிங்கம் என்ன தான் மாடானாலும்...சிங்கம் பிறந்தது என்னவோ Jan-16 தான்! (இன்னிக்கு)
ஆனாப் பாருங்க, அது பொறந்த "அந்த" வருடத்தில் மட்டும், ஏனோ மாட்டுப் பொங்கல், அன்னிக்கே வந்து விட்டது!

இது சங்க வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய விடயம்! மீதிப் பொறியலை எல்லாம் நீங்களே பொறிச்சிக்குங்க மக்கா!!

விவ.....சாயி.....
போலி பொறந்த நாளா இல்லாம.....

இனிய, "உண்மையான" பொறந்த நாள் வாழ்த்துக்கள்! :))


Kid Friendly Section:
ஒரு சிங்கம் மாடான கதை! (குழந்தைகளே, படம் பார்த்துக் கதை சொல்லவும்:)

===>===>

Saturday, January 10, 2009

ஓஹோ புரொடெக்சன் " யார் தளபதி " ?

வால் பையன், சஞ்செய், ஓசை செல்லா, நாமக்கல் சிபி, நிஜமா நல்லவன், குசும்பன், இளைய கவி கூட்டணி வழங்கும் ஓஹோ புரொடஷனின் யார் தளபதி ?


கதை டிஸ்கசன் தொடங்குகிறது.

இ.கவி :-  எல்லாத்துக்கும் வணக்கம் பா !

கூட்டணி :- வணக்கம் இ.கவி

இ.கவி :- உங்க எல்லாத்தையும் பல முறை சொல்லி இருக்கேன் இ.கவின்னு பப்ளிக்ல சொல்லப்படாது இளையகவின்னு டிசன்டா சொல்லனும் ஒகே வா ??


வால் :- என்ன இழவோ சரி இங்க வெறும் டேபிள் சேர் மட்டும் தான் இருக்கு, பாட்டில் எல்லாம் எங்க ??

செல்லா :- பாட்டில்னு சொன்னவுடனே எனக்கு ஒரு மேட்டர் தோனுது.. இந்த படத்துக்கு நானே ஒளிப்பதிவு பண்ணிறவா ?

சஞ்செய் :- ஆமா அவரே பண்ணட்டும் ஏன்னா இப்போதான் கேமராவோட புது மொபைல் வாங்கி இருக்கார்.

நா.சிபி :- அப்படியா இது வரைக்கும் என்ன ஒரு போட்டோ கூட எடுக்கல ?? !!!

நி நல்லவன் :- அதுக்கெல்லாம் யூத்தா இருக்கனும் தல .

சஞ்செய் :- கரெக்டு அதுக்கெல்லாம் என்னைய மாறி யூத்தா இருக்கனும்.

நா.சிபி :- அப்ப நானு ???

இ.கவி :- வாட் நான்சென்சஸ் இஸ் திஸ் ? நாம இங்க ஒரு முக்கியமான மேட்டர பேச வந்திருக்கோம். யாருக்காவது கொஞ்சமாவது சிரியஸ்னஸ் இருக்கா ??

வால் :- ஏன் மச்சான் என்கிட்ட கேக்குற உன் கிட்ட இல்லையா ? என் கிட்ட ஒரு கட்டிங்கு காசு இருக்கு அவ்ளோதான்.

ஒ.செல்லா :- யாரு கதை எழுதுறது ? ஏன் கேக்குறேன்னா அதுக்கேத்த மாதிரி நான் மூட் கிரியட் பண்ணணும்.

வால் :- நானும் நல்ல மூட்ல தான் இருக்கேன் ஆனா யாரும் கூட்டு சேர்ர மாதிரி எனக்கு தெரியல.

இ.கவி :- மச்சான் கொஞ்சம் அடக்கிவாசி மச்சான் நம்ம மேட்டர் எல்லாம் கடைசிலதான் ஓகேவா ?

வால் :-
அட சண்டாளா இதை முன்னாடியே சொல்லியிருந்தா கடைசியில வந்திருப்பேனே. ! உன்னால பாரு எனக்கு பல கோடி ரூவா நஷ்டம்..( வால் போகும் போது சொய்ங் இன் த ரெயின் பாட்டு ஒலிக்கிறது )

ஒ.செல்லா :- என்னது கடைசியில தானா .. இதுக்கு நாம முதல்லேயே வால் கிட்ட கூட்டணி போட்டிருக்கலாம் போலவே !


நா.சிபி :- சரி டைட்டில மட்டும் வச்சிகிட்டு என்ன பண்றது ? யாரு கதை எழுதுறது ?

மொத்த கூட்டணியும் நி.நல்லவனை பாத்து கை நீட்டுகிறது . ( பின்னியில் ஏகன் டைட்டில் சாங் ஒலிக்கிறது )

தொடரும் ...... ( நிறைய ஆணி புடுங்க வேண்டி இருக்கு )

Thursday, January 8, 2009

சங்கம் டெக்னாலஜிஸ் - IN RECESSION

நம்பர் 12 விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து
துபாய் மெயின் ரோடு
துபாய் பஸ் ஸ்டாண்ட் அருகில்
துபாய்...

கடந்தப் பல ஆண்டுகளாக அகில உலக வருத்தப்படாத வாலிபர்களின் வருத்தப்படாத தலைமையிடமாக செயல்பட்டு வருவது உலகறிந்த செய்தி... அத்தோடு மட்டுமின்றி அகில உலகச் சந்தைக்கும் சவால் விடும் பல கில்லித் தனமான மென்பொருட்களையும் தயாரித்து வினியோகித்து வரும் மென்பொருள் நிறுவன ராட்சசன் (SOFTWARE GIANT) சங்கம் டெக்னாலஜீஸின் தலைமையிடமும் அதுவே...

சற்று முன் அந்த நிறுவனத்தின் தலைவர் திரு .கே.ஆர்.எஜு ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார்...அந்த அறிக்கையோடு தனது ராஜினாமா கடிதத்தையும் இணைத்துள்ளார்...உலக வர்த்தக சந்தையையே அந்த அறிக்கை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது... இது பற்றி கருத்து அறிய சங்கம் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைவர் திரு.பார்மர் இளாவை தொடர்பு கொள்ள அவரது அமெரிக்க மேயர் இல்லத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.. அவரது செல்லில் தொடர்ந்து ஆப்பிள் ஜூஸ் குடித்தால் உடம்புக்கு நல்லது..அதனால் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுங்க... அப்புறமாப் பேசலாம் என்ற செய்தியே மீண்டும் மீண்டும் ஒலித்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

திரு.கே.ஆர்.எஜூ தம் அறிக்கையில் தமது நிறுவனமான சங்கம் டெக்னாலஜீஸ் கடந்த பல வருடங்களாக சாப்ட்வேர் தயாரிப்பதாக கூறி பல கஸ்டமர்களை நம்ப வைத்து.. ஆண்டு கணக்கில் தொடர்ந்து புராஜக்ட் செய்வதாக தாங்கள் கூறியதெல்லாம் வெறும் பொய் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்... மேலும் அதிர்ச்சிகரமான வகையில் அவர் கூறியதாவது தமது நிறுவனத்தில் வேலை பார்க்கும் யாருக்கும் சாப்ட்வேர் என்றால் என்னவென்றே தெரியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்...

கடந்தப் பல ஆண்டுகளாக தமது நிறுவனம் எப்படியோ சாப்ட்வேர் செய்ய தெரிந்தது போலவே தொடர்ந்து ஒரு பில் டப்பு கொடுத்து உலக வங்கி முதல் உள்ளூர் சவுக்கார் பேட்டை சேட் வரைக்கும் குறைந்த வட்டிக்கு கணக்கு வழக்கின்றி பணம் வாங்கி குவித்த கதையையும் வெட்கம் இன்றி வெளிபடையாக ஒத்துக் கொண்டுள்ளார்.

சங்கம் டெக்னாலஜிஸ் தீடிரென கடந்த மாதம் மேக்னாஸ் பயாஸ்கோப் என்ற படக் கம்பெனி ஆரம்பித்து...அதில் முக்கிய தயாரிப்பாளர் கம் இயக்குனர் கம் நடிகராக சங்கம் டெக்னாலஜிஸின் முக்கிய போர்ட் மெம்பர் தளபதி சிபி பொறுப்பேற்றதும் சங்கம் டெக்னாலஜீஸ் மீது பொது மக்கள் அதிருப்தி கொள்ள செய்தது..அதிலும் சிபி இரு கோடுகள்.. வஞ்சிக் கோட்டை வாலிபன்.. மற்றும் நான் அவன் இல்லை போன்ற காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த படங்களை தானே நடித்து ரீமேக் செய்ய திட்டமிட்டது ஷேர் ஹோல்டர்ஸ்க்கு மேலும் ரத்தக் கொதிப்பு ஏற்படுத்தி விட்டது நமக்கு தெரிந்த செய்தி...

சங்கம் டெக்னாலஜிஸை சேர்ந்த தன்னிச்சை இயக்குனர்களில் ஒருவரான ராயல் ராம் சங்கம் டெக்னாலஜீஸ் சேர்மன் இளா மீது 100 ரூபாய் தன்னிடம் கடன் வாங்கி ஏமாற்றியதாக... சூடான் கிழக்கு ஜில்லா பஞ்சாயத்தில் பிராது கொடுத்துள்ளதாக சங்கம் டெக்னாலஜீஸ் சூடான் இயக்குனர் சிவா தெரிவித்தார்...

சூடான் சந்தையில் புது சொம்பு வாங்கியதும்.. ராயல் ராமின் பிராது விசாரிக்கப்படும் என சிவா மேலும் தெரிவித்தார்...

ச்ங்கம் டெக்னாலஜீசின் மற்ற தன்னிச்சை இயக்குனர்கள் கைப்புள்ள,பாண்டி ஆன்சைட்டில் அப்ஸ்காண்டாக இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன...உள்ளூரில் இருக்கும் தேவ்.. வெட்டி பயல் பாலாஜி எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாத இந்த நிலையில் சங்கம் டெக்னாலஜீஸின் தற்காலிக தலைவராக கப்பி பொறுப்பேற்று உள்ளார்...

இன்று மாலை நிருபர்களைச் சந்தித்த கப்பி...
சங்கம் டெக்னாலஜிஸில் சில பல தவறுகள் நடந்திருக்கலாம்...அது புரிதல்களில் ஏற்பட்ட தவறு.. நிச்சயம் திருத்தி கொள்ளுவோம்...அதாவது கடந்த பல ஆண்டுகள் சாப்ட்வேர் தயாரிக்க எவ்வளவோ முயன்றோம்..அந்த முயற்சி மிகவும் உண்மையானது... எங்கள் முயற்சியின் பலனால் சாப்ட்வேரில் வேரை அடைந்து விட்டோம்... தயாரித்த வேரை இப்போது உங்கள் முன்னிலையில் கஸ்டமர்களுக்கு அளிக்கிறோம் விரைவில் மீதியையிம் கொடுப்போம் என உறுதி கூறுகிறேன்...

பத்திரிக்கைகாரர்கள் பிளாஷ் எல்லாம் மின்ன... கப்பி சங்கம் டெக்னாலஜிஸ் தயாரித்த பட்டாபட்டி அன்டர்வேர்களை சிரித்தப் படி உயர்த்திப் பிடித்து போஸ் கொடுக்கிறார்....

சூடானில் ஒரு அடர்ந்த காட்டில் ஒளிந்த படி இந்தக் காட்சியை சாட்டிலைட் டிவியில் பார்க்கும் மற்ற சங்கத்துப் பெருமக்கள்....

ஆனாலும் நம்ம கப்பிக்கு ரொம்பத் தான் தைரியம்... பச்சப் புள்ள மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு போஸ் வேற கொடுக்கிறான் பாருப்பா...

அட விடுங்க சிங்கம்ஸ் மக்கள் இதை எல்லாம் டக்குன்னு மறந்துருவாங்க...அடுத்த பிஸ்னெஸ் என்ன ஸ்டார்ட் பண்ணுறதுன்னு யோசிப்போம் வாங்க....

கலவி அல்ல இது கல்வி !!!


காலை எல்லாம் பார்திருக்க முடியவில்லை

அதனால்தான் கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்


என மாலை மாடிக்கு வரச்சொல்லி

அங்கிருந்த துணியெல்லாம் துவைத்து காயப்போடச் சொல்லி

தென்றலையும் சூடாக்கும் பெருமூச்சு விட்டிருந்து

அதை வெச்சி அப்படியே கொஞ்சம் துணிகளுக்கு இஸ்திரியும் போட்டு

மாடிப்படியை நோக்கி முக்தியடையும் முனிவன் போல்

அதாவது ஆஃபாயில் போட்டு பிளாட் ஆகும் சிட்டிசனைப் போல

காத்திருந்து காத்திருந்து அந்தியும் சாய

அப்படியே மப்பில் நானும் சாய

அத்தானை தேடியே அணங்கு நீ வந்திட

வாடகையைத் தேடி வீட்டு ஓனரும் அங்கு வந்திட

தெய்வம் கண்ட பக்தன் போல் மெய்சிலிர்ப்பில் நான்

பணிவைக் காட்டி பம்மிப் பதுங்கிட

வீட்டு கடமைகளை முடித்து களைப்பில் நீ இருந்தாலும்

கதவு ரிப்பேர், வீட்டு மெயிண்டனன்ஸ் வேலைகளின் களைப்பில் ஓனர் இருந்தாலும்

கள்ளி உன் ஒற்றைகல் மூக்குத்தி எனை கேலியாய் பார்குதடி

பின்னே ஒரு வருஷ வாடகை பாக்கியை பெருமையாவா பார்ப்பாங்க


வீட்டில் ஆரவாரம் அடங்க அரைமணி நேரம் ஆனாலும்

ஓனர் சத்தம் அடங்க ஆறு மணிநேரம் அல்லவா ஆகும்

காத்திருப்பின் அவசியத்தை கண்ணாலையே

ஒரு வருஷக் காத்திருப்பு, கண்ணால மட்டும் இல்லடா, கை காலாலயும் என ஓனர் சொல்ல

சொல்லிநான் படும் வேதனையை கண்டு

சிக்கித் திண்டாடித் தடுமாறும் என் தைரியத்தைக் கண்டு

நமட்டு சிரிப்புடன்வேலை இருக்கு நான் வ்ருகிறென் என நீ வேண்டுமென்றே சொல்ல


வேலை இல்லாம வெட்டியா இருக்கேன்னு நினைச்சியா, அப்புறமா வருவேன் மருவாதியா வாடகையை எடுத்து வையென்று அவரும் சொல்ல

வேலை எல்லாம் இருக்கட்டும் என நான் மஞ்சத்தில் உனை தள்ள

ம்ஹூம்! வாடகை கொடுக்க வக்கில்லை! ஆளுங்களைப் பாரென்று

ஊரடங்கும் வேளையிலே ஒய்யார மஞ்சத்தில் நீயும் நானும்

தெருக்கோடியிலே அவர் என் கழுத்தில் துண்டைப் போட

மின்னும் நிலவொளியில் வேர்வைத்துளிகள் முத்தாய் மின்ன


பேசவேண்டும் என வரச்சொல்லி பேச்சுக்கே வேலை இன்றி

நையப் புடைத்து என்னை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்க

ஒளியிருக்க ஒலிஎதற்கென வளையல் கொலுசுகள் களைந்து

கத்தாதே என்று எச்சரிக்க என் கழுத்தில் கத்தி வைத்து

ஆலிங்கனம் அது அன்பின் உச்சம் என உணர

அவரது கடுப்பு என்பதன் உச்சம் எதுவென்று உணர்த்த

ஆன்மாவையும் அணைத்தாயடி கள்ளி

பின்னி எடுத்தாயடா சண்டாளா! அடித்துத் துவைக்க வேறு இடமா இல்லை

இது கலவி அல்ல கல்வி.

இது அறை அல்ல! தெரு! எல்லோரும் பார்க்கிறார்கள் வேடிக்கை


(பேசியபடியே ஒவ்வொரு வரிக்கும் இடைவெளி விட்டு நான் அக்காலி வரிகளை நிரப்பி ஒரு புதுவித கவுஜை படைப்போம் என்றழைத்த அட்லாச் இளையகவிக்கு நன்றி- நாமக்கல் சிபி)

நில் கவனி பதிவிடு

 
ஆன்லைனில் ஸ்டோரேஜில் தாங்கள் தங்கள் படத்தை சேமிப்பவரா??
இன்று வலைஉலகில் புகைப்படங்களை இலவசமாக சேமிக்க பல இணைய தளங்கள்இலவச சேவைகளை தருகின்றன ( www.photobucket.com, www.imageshock.com )இவ்வாறன சேவைகளை நாம் பயன்படுத்தும் போது மிககவனமாக இருத்தல் வேண்டும்.இல்லை எனில் தங்களின் புகைப்படங்கள் வலை உலகத்திற்க்கு வெட்டவெளிச்சமாகிவிடும்.


தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்தயவு செய்து தங்களின் அக்கவுண்ட் ஆப்சனில் பிரைவேட் என்பதை தெரிவு செய்யவும்இல்லை எனில் தங்களின் புகைப்படங்கள் வேறு ஏதாவது பயன்பாட்டிற்க்கு உங்களுக்கு தெரியாமலேயே பயன்படுத்தப்படாலாம்.


இவ்வாறான ஆனலைன் சேமிப்பு சேவைதரும் இணையதளங்களில் தேடுதல் பொறியும் இருக்கும்எனபது பல பேருக்கு தெரிவதில்லை. வேறு ஒரு தேவைக்காக ஒரு புகைப்படத்தை இவ்வாறான இணையம் ஒன்றில் தேடிய போது ஒரு இளம் பெண் கணிணி வல்லுனரின் ஆல்பம் ஒன்று அவரின் அன்றாட வாழ்கையை வெளிச்சம் போட்டு காட்டியது மிக வருத்தத்தை அளித்தது. படித்த வலை உலக நெளிவு சுளிவு தெரிந்த கண்ணி வல்லுனர்களே இவ்வாறு செய்யும் போது புதிய வரவுகள் எம்மாத்திரம்?


முடிந்த அளவிற்க்கு அந்தரங்க புகைப்படம் எடுக்காதீர்கள், அவ்வாறு எடுத்தாலும் ஆன்லைனில் சேமிக்காதீர், அவ்வாறு சேமித்தாலும் அக்கவுண்ட் ஆப்சனில் பிரைவேட் என்பதை தெரிவு செய்ய மறக்காதீர்.இவ்வாறு புகைப்படங்களை பதிவிடவே டெடிகேட்டட் இணையங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா ??

Wednesday, January 7, 2009

காமத்தீயடி நீ எனக்கு !

ஆற்றோரம் நடைபயில அண்ணம் நீ எனை அழைக்க.
உன் பின்னழகை கண்டு மனம் செத்து பிழைக்க.


கரையோர தென்றலிலே உன் மல்லிகை வாசம்
மனம் போடத்துவங்கியது குரங்கென வேசம்

உன் இடையழகு கண்டு நான் சிதறி கிடக்க
உன் கொலுசொலியில் மனம் பதறி தவிக்க


நடப்பது என்னவென்றே அறியாமல் நான்
என்னை கேலிசெய்து போனது ஒரு மீன்

புள்ளிமானை கண்டு பதைபதைத்த புலியாக
உன் முன்னழகும் கண்டு நான் பலியாக


உன் வளைகரம் தீண்டி வாலிபம் உருக
காமத்தீ கண்களில் ஆழியென பெருக.


அய்யகோ அடுத்தென்ன என்ற வேளையில
காதல் சூடு தாங்காமல் காமனவன் மாரி பொழிய
நனைந்த உன் கோலம் கண்டு மனம் கசக்கி பிழிய.
நிமிடங்கள் கலைந்தது மெளனத்தில்
கண்கள் உரைந்தன மோகத்தில்.

என் சிருங்கார வித்தைகளை சிங்காரி உன்னிடம்
மன்மத கலைகளை கற்றிந்த பெண்ணிடம்.
அட்டவணையிட்டு ஆற்றிக்கொள்ள
அம்மம்மா என என்னவள் எனை ஏற்றுக்கொள்ள.


காளையடக்குதல் வீரமாம் இங்கே -
கன்னியடக்குதலும் வீரம் தானே

Monday, January 5, 2009

சுயம் - சங்கத்தான்ஸ் விசிட்

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப் பட்ட பிரம்மரசம் மற்றும் ரெண்டு போட்டியின் வெற்றியாளர்கள்
சார்பாக அவர்களுடைய பரிசுத்தொகையை இவ்வருடம் சுயம் அமைப்பிற்கு நன்கொடை அளிப்பதாக தீர்மானித்தபடி கடந்த ஞாயிறு (ஜனவரி 4, 2008) அன்று சுயம் அமைப்புன் டிரஸ்ட் அலுவலகத்திற்கு விசிட் செய்தோம்.

முதலில் வின்னர்ஸ் லிஸ்ட்

பிரம்ம ரசம்

முதல் பரிசு : வெங்கி
இரண்டாம் பரிசு : அம்பி

ரெண்டு போட்டி

முதல் பரிசு : அருட்பெருங்கோ
இரண்டாம் பரிசு : லக்கி லுக்
பெனாத்தல் சுரேஷ்

ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் தல கைப்பு, தேவ், நாகை சிவா மற்றும் நாமக்கல் சிபி ஆகிய நால்வரும் சென்ட்ரல்-வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் சுயம் அமைப்பின் டிரஸ்ட் அலுவலத்தை அடைந்தோம்!

முதல் நாளே லிவிங்க் ஸ்மைல் வித்யா அவர்களிடம் எங்கள் விசிட் பற்றி கூறி முகவரி தொலை பேசி எண்கள் ஆகியவை வாங்கி வைத்திருந்தோம். லிவிங் ஸ்மைல் வித்யா தனக்கு ஞாயிறன்றும் அலுவலகம் இருக்கிறதென்று அவர் அங்கு இல்லை!

நிர்வாக அலுவலர் திரு முத்துராம் அவர்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்று இருக்கைகள் கொடுத்து அமரச் செய்தார்.

முதலில் எங்களைப் பற்றி சிறிய அறிமுகம் கொடுத்தோம்! பதிவுலக நன்பர்கள் என்று ஏற்கனவே வித்யாவும் கூறி வைத்திருப்பதாகக் கூறினார் .

அதன் பின்னர் தங்கள் அமைப்பின் நோக்கம், எப்பொழுது, எப்படி ஆரம்பித்தார்கள், எந்த அளவு சவால்களை/சிரமங்களை எதிர்நோக்கினார்கள் என்று தங்கள் ஒவ்வொரு கட்ட வளர்ச்சி பற்றியும் இப்போதைய சவால்கள் தேவைகள் பற்றியும் விவரித்துக் கூறினார்.

அந்த அமைப்பின் ஆரம்பம், வளர்ச்சி பற்றி பின்னர் பிரிதொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்!

இதன் பின்னர் அவ்வமைப்பில் உள்ள ஊழியர்களின் கைவண்ணத்தால் தயாரிக்கப்பட்ட பைகள், குழந்தைகள் வரைந்த ஓவியங்களுடன் கூடிய லெட்டர் பேக்ஸ், கைப்பைகள், ஃபைல் போல்டர்கள் ஆகியவற்றையும் காண்பித்தனர்.

இப்படியே நேரம் ஆகிக்கொண்டிருந்த படியாலும் அங்கே மேலும் சில விசிட்டர்கள் வர இருப்பதை அறிந்ததாலும் புறப்பட ஆயத்தமானோம்!

தல கைப்பு அவர்கள் மொத்த பரிசுத் தொகையான ரூ10,000 க்கான காசோலையை நிர்வாக டிரஸ்டி திரு முத்துராம் அவர்களிடம் சேர்ப்பித்தார்.

அப்போது நாகையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஓரளவே பார்வை உடைய 7 வயதுச் சிறுவன் ஒருவன் எங்களிடையே வந்து தானாகவே அறிமுகப் படுத்திக் கொண்டான். கணிதத்தில் அவன் ஜீனியஸ் என்று நிர்வாக டிரஸ்டி எங்களிடம் அறிமுகப் படுத்தியபோது அவனது முகத்தில் தெரிந்த பிரகாசமும், மகிழ்ச்சியும் எங்களை என்னவோ செய்தது!

வருங்கால கணித நிபுணர் என்று நினைத்து கை குலுக்கி அறிமுகப் படுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்!

மேலும் இவ்வமைப்பைப் பற்றிய விவரங்களுக்கு:

சுயம்

Suyam Charitable Trust- Projects

சிறகு

உங்களால முடிஞ்ச உதவிகளை பொருட்களாகவோ, நிதியாகவோ நீங்களும் இந்த அமைப்புக்கு கொடுக்கலாம்!

Sunday, January 4, 2009

சங்கத்தான்களின் புத்தாண்டு பேனர்ஸ்ப்ப்ப்பா... வெளம்பரம் வேணாம்ன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாயங்கப்பா

போட்டோ புடிச்சு போட்டுறாங்கப்பா...இன்னிக்கு தினமலர்ல்ல வந்த படமிது..

அப்புறம் சங்கத்தான்கள் சார்பா அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..சாமியோவ்...

Thursday, January 1, 2009

நன்றி நன்றி மிக்க நன்றி மக்கா

 
அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் ( நல்ல உள்ளங்களுக்கும் ) என்னை இம்மாத அட்லாஸாக தேர்தெடுத்த எங்க சித்தப்பூ நாமக்கல் சிபிக்கும், எங்க மாமா ஒண்டி புலி பொடியன் அவர்களுக்கும் , எங்க மச்சான் வால்பையன் அவர்களுக்கும், எங்க பெரியப்பா ஓசை செல்லா அவர்களுக்கும்,  மற்ற சொந்த பந்தம்,  பங்காளிகளுக்கும் ஒரு பெரிய சலாம் அப்பால எல்லாத்துக்கும் கேப்பீ நீயு ஈயர் சொல்லிட்டு நம்ம ஆட்டைய ஆரம்பிக்கிறேன். எல்லாம் ஒரு தடவை ஜோரா கைத்தட்டுங்கோ !!!!!!