~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Thursday, April 24, 2008
பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?
கடந்த முறை யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி போட்டேன். பெருவாரியான இளவட்டங்களின் ஹஸ்புல் காட்சிகளோடு பதிவு வெள்ளி விழாவைத் தாண்டி விட்டது. இதைப் பார்க்கும் போது "ஆண்பாவம்" படத்தில் வி.கே.ராமசாமி சொன்னது தான் ஞாபகம் வருது.
" இந்த ஊர் நல்லா இருக்கணும்னு பள்ளிக்கூடம் கட்டினேன், கோயில் கட்டினேன், ஆஸ்பிட்டல் கட்டினேன், ஒருத்தனும் ஏறெடுத்துப் பார்க்கல, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.
இப்ப ஒரு சினிமா கொட்டகை கட்டினதும் நீங்கள்ளாம் எனக்கு மாலை, மரியாதையோட கொடுக்கிற மரியாதையைப் பார்த்ததும் உங்களை இவ்வளவு நாளாப் புரிஞ்சுக்க முடியலையேனு வருத்தமா இருக்கு" அப்படிச் சொல்வார் வி.கே.ஆர்.
என்ன தான் மாஞ்சு மாஞ்சு நாலைந்து பக்கங்களுக்கு பதிவு எழுதி என்னத்தைக் கண்டோம் ;-)
சரி இந்தப் பதிவில் எனக்குத் தெரிந்த பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்லும் வழிமுறைகளைப் பார்ப்போம். லவ்ஸ் அகராதி பழைய பதிப்பு எண்டு சொன்ன ஆட்களின் ஆலோசனையும் ஏற்கப்பட்டு இந்தப் பதிவில் அவர்கள் சொல்லும் பாதுகாப்பான வழிமுறைகளும் சேர்க்கப்படும் ;-)
வழிமுறை 1
ஜீமெயில் கணக்கு மூலம் தான் விரும்பும் காதலிக்கு மின்னஞ்சல் மூலம் காதலைச் சொல்லலாம். குறித்த பெண்ணின் ரியாக்க்ஷன் நேர்மாறானதாக இருப்பதை அறிந்தால் உடனே நீங்கள்
"ஐயையோ என்னோட ஜீமெயில் ஹாக் (hack)பண்ணுப்பட்டுடுத்து" என்று சமாளிப்பிக்கேஷன் சொல்லலாம்.
வழிமுறை 2
காதலி உள்ளூர்க்காரி என்றால் கோயிலுக்குப் போகும் சமயம் பார்த்து உள்ளே சென்று காதல் கடிதத்தைக் கொடுக்கலாம். இதில் இருக்கும் பாதுகாப்பு என்னவென்றால் பாதணிகளோடு (செருப்பு, ஹீல்ஸ்) கோயிலுக்கு உள்ளே செல்லமுடியாது. எனவே நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக் குறைவு. இதில் இருக்கும் அபாயம் என்னவென்றால் இந்துக் கோயிலுக்குத் தான் இது பொருந்து. சர்ச்சில் வேலைக்கு ஆவாது. செருப்பு, ஹீல்ஸ் உடன் உள்ளே செல்லலாம்.
வழிமுறை 3
ஏப்ரல் முதலாம் திகதி வரை காத்திருக்கவும். அந்த நாள் வந்ததும் காதல் கடிதத்தைப் பரிமாறலாம். கடிதத்தைக் கண்ட பெண் கடு கடு என்று மாறினால், உடனே சமாளித்துக் கொண்டு
"ஹய்யா! ஏப்ரல் பூல் உனக்கு, ஏமாந்துட்டியா, என் ரேஞ்சே வேற" என்று சொல்லலாம்.
வழிமுறை 4
மாதம் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதிக் கொண்டு மற்றைய நாளெல்லாம் ஸ்கிரீன் சேவர், பொன்மொழிகளை மின்னஞ்சல்களை அனுப்பும் "தல" கோபி போல நீங்களும் இப்படித் தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு அனுப்பலாம். ஒரு ரெண்டு மாசம் கழிச்சு சைக்கிள் கேப்பில் காதலை உயர்வாகச் சொல்லும் பொன்மொழிகள், ஸ்கிரீன் சேவரை அனுப்பிப் பாருங்கள். மறுமுனை ரியாக்க்ஷன் எப்படி என்று நாடி பிடித்து அறியலாம். பிடிக்கலை என்றால் இருக்கவே இருக்கு இன்னொரு கிளி.
வழிமுறை 5
காதல் கடிதத்தை வாங்கினால் செல்போன் இலவசம், இன்கம்மிங் கால்ஸ் ப்ரி என்று சொல்லிப் பார்க்கலாம்.
வழிமுறை 6.
இது என் சொந்த அனுபவம் (காப்பி ரைட் கிடையாது, யாரும் உபயோகிக்கலாம்)
மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களில் இருந்து, வைரமுத்து, பா.விஜய், தபூசங்கரை காப்பி அடிச்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு காதல் கடிதத்தை எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் அதைக் கொடுக்கும் போது ஒரு வரி கூடப் படிக்காமல் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு "இடியட்" என்று அவள் திட்டினால் உங்கள் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.
எனவே முதல் கடிதத்தில் ஒன்றுமே எழுதாதீர்கள். வெறும் வெற்றுத் தாளையே நாலாக மடிச்சு நீட்டுங்கள். அந்தக் கடிதத்தை வாங்கி உங்கள் முன்னிலையிலேயே ஆவலோடு (காதல் பனிக்க) பிரித்தாள் என்றால்
"இந்தத் தாளைப் போல என் மனசு இப்பவெல்லாம் வெறுமையாவே இருக்கு, சம்மதமா" என்று பல்டி பிளஸ் லூட்டி அடிக்கலாம்.
படிக்காமலே அதைக் கிழித்துப் போட்டு விட்டாள் என்றால்
"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
தல!!!
காலை காட்டுங்க!!!!
///
வழிமுறை 4
மாதம் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதிக் கொண்டு மற்றைய நாளெல்லாம் ஸ்கிரீன் சேவர், பொன்மொழிகளை மின்னஞ்சல்களை அனுப்பும் "தல" கோபி போல நீங்களும் இப்படித் தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு அனுப்பலாம்.////
இது அல்டிமேட்டு!!!! :D
///வழிமுறை 6.
இது என் சொந்த அனுபவம் (காப்பி ரைட் கிடையாது, யாரும் உபயோகிக்கலாம்)
/////
ஆகா!!!
நீங்க!! செட்டில் ஆகின விஷயம் இன்று வரைக்கும் எனக்கு தெரியாதே.....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!! :-)
கல்யாணம் எப்போ?? ;)
//ஹய்யா! ஏப்ரல் பூல் உனக்கு, ஏமாந்துட்டியா, என் ரேஞ்சே வேற" என்று சொல்லலாம்.
//
இது நல்லா வரும் போலன்னு எனக்கு தோணுது!
பட் தலைவா! நீங்க லேட்டு!அதனால நானும் லேட்டு! நான் இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கறதுக்குள்ள பட்சி பறந்துடுமே....????????
//மாதம் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதிக் கொண்டு மற்றைய நாளெல்லாம் ஸ்கிரீன் சேவர், பொன்மொழிகளை மின்னஞ்சல்களை அனுப்பும் "தல" கோபி போல நீங்களும் இப்படித் தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு அனுப்பலாம்.///
கோபி அண்ணா! இதுதான் உங்கட டெக்னிக்கா?????
சொல்லவேயில்லை :(
/"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)//
அவ்வளவுதான்..... :)))
/"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)//
எத்தனை தடவ சமாதானப்படுத்திக் கொள்வது :-(((((
//CVR said...
தல!!!
காலை காட்டுங்க!!!!//
தல
காலையெல்லாம் காட்டமுடியாது போங்க ;-)
இதையெல்லாம் நீங்க செஞ்சு பார்த்து முடிவைச் சொல்லணும், ஓகே
//வழிமுறை 5
காதல் கடிதத்தை வாங்கினால் செல்போன் இலவசம், இன்கம்மிங் கால்ஸ் ப்ரி என்று சொல்லிப் பார்க்கலாம்.//
உது சரிப்பட்டு வராது உதுல சொல்லியிருக்கிறதெல்லாம் காதலித்தால் கட்டாயம் செய்யவேண்டியவை என்கிற பிரிவுக்கள் வரும். மேலதிகமா ஒண்டும் புதுசா இல்லை இதில...
ஆகவே இதை நிராகரிக்கிறேன் மற்ற வழிமுறைகளில் முயற்சித்து சொல்றன். உங்களைப்போல அனுபவ சாலிகள் இருக்கிறது எவ்வளவுவுவுவுவுவுவுவு நல்லது
சர்ச்சில் வேலைக்கு ஆவாது. செருப்பு, ஹீல்ஸ் உடன் உள்ளே செல்லலாம்.//
ஆமால்ல.. யோசிக்கவேயில்லை ::))))
//என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)//
அப்புறம் நகர்ந்தீங்காளாலே :)
கல்யாணம் எப்போ?? ;) //
ஓவர்யா.
எப்படிச் சொன்னாலும் செருப்பாலோ, இல்லைன்னா ப்ளார்னு அறை வாங்காம இருக்கிறது எப்படி?
//ஆயில்யன். said...
//ஹய்யா! ஏப்ரல் பூல் உனக்கு, ஏமாந்துட்டியா, என் ரேஞ்சே வேற" என்று சொல்லலாம்.
//
இது நல்லா வரும் போலன்னு எனக்கு தோணுது!
பட் தலைவா! நீங்க லேட்டு!அதனால நானும் லேட்டு! நான் இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கறதுக்குள்ள பட்சி பறந்துடுமே....????????//
அடுத்த ஏப்ரல் வரும் வரைக்கும் நான் சொன்ன மற்றைய அணுகுமுறைகளைச் செய்து பார்க்கலாமே. ஏதாவது ஒன்று சரிவந்தால் நமக்கு நல்லது/கெட்டது தானே
//கோபி அண்ணா! இதுதான் உங்கட டெக்னிக்கா?????//
தலய சீண்டாதீங்க, ஒரு உதாரணத்துக்குத் தான் சொன்னேன்
;-)))
/படிக்காமலே அதைக் கிழித்துப் போட்டு விட்டாள் என்றால்
"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-) /
:)))
நோ நோ இது எந்த முறையும் சரியில்லை..நேருக்கு நேர் அட்டாக் தான் நல்லம்.
//இராம்/Raam said...
/"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)//
அவ்வளவுதான்..... :)))//
வாங்க இராம், இப்ப நிறைவா இருக்கும் போல ;-)
// விக்னேஸ்வரன் said...
எத்தனை தடவ சமாதானப்படுத்திக் கொள்வது :-(((((//
அடுத்த பிகரைக் காணும் வரை ;-)
எங்களைப்போன்ற டீன் ஏஜ் பையன்களுக்கு உங்கள் வழிமுறைகள் மிகவும் உதவும். உங்கள் அனுபமும் சிறந்தது.
ஏன் இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க? பழகும் விதம் கண்ணில் தெரியும். இல்லாவிட்டாலும் மனதில் தோன்றியதைச் சொல்லவே தைரியம் இல்லாதவரை பெண்கள் விரும்ப மாட்டார்கள். சினேகிதி சொன்னதைப் போல நேரடி அட்டாக் தான் நல்லது. மாட்டேன் என்று கத்தினால் நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று அலட்சியம் பிளஸ் நக்கலாக சொல்லி விட்டு நகர்ந்தால் அதற்குப் பிறகு consider பண்ணும் girls நிறைய இருக்கினம்.
பாரதி
//வழிமுறை 5
காதல் கடிதத்தை வாங்கினால் செல்போன் இலவசம், இன்கம்மிங் கால்ஸ் ப்ரி என்று சொல்லிப் பார்க்கலாம்.//
உது சரிப்பட்டு வராது உதுல சொல்லியிருக்கிறதெல்லாம் காதலித்தால் கட்டாயம் செய்யவேண்டியவை என்கிற பிரிவுக்கள் வரும்.//
இருக்கலாம்,ஆனால் வலைபோடும் விஷயங்களில் இதுவும் ஒன்று என்று ஆணித்தரமாகக் கூறுகின்றேன். மற்றைய விடயங்களைப் பரீட்சித்துப் பார்த்துச் சொல்லவும். ஆவலாக இருக்கிறேன்.
//சயந்தன் said...
சர்ச்சில் வேலைக்கு ஆவாது. செருப்பு, ஹீல்ஸ் உடன் உள்ளே செல்லலாம்.//
ஆமால்ல.. யோசிக்கவேயில்லை ::))))//
ஆஹா அனுபவஸ்தர் வந்துட்டார் ;-)
நகர்ந்தேன் லே ;-)
/"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)//
நாங்களும் அப்படித்தான்...
போய்க்கிட்டே இருப்போம்...
Senthil,
Bangalore
:))))))))))
தல
கிர்ர்ர்ர்ர்ர்...இப்போ ரொம்ப சந்தோஷமா !!!
தம்பி!
இவ்வளவு வழிமுறையா??
இப்பிடியெல்லாம் வழிமுறை சொல்ல அப்போ ஆளின்றி; அதற்குச் சந்தர்ப்பம் இல்லாமலே போய்விட்டது.
//ILA said...
எப்படிச் சொன்னாலும் செருப்பாலோ, இல்லைன்னா ப்ளார்னு அறை வாங்காம இருக்கிறது எப்படி?//
வாங்க இளா
இது குறித்த விபரங்களை உங்களிடமிருந்து விரிவாகத் தெரிந்து கொள்ள ஆசை ;-)))
//அருட்பெருங்கோ said...
:)))//
வாங்க அருட்பெருங்கோ
தபூ சங்கர் வரிசையில் உங்க பெயரையும் வைக்க இருந்தேன், ஏன்னா இணையத்தில் உங்க கவிதையை சுட்டுடுறாங்களே நம்ம மன்மதன்கள் ;-)
//சினேகிதி said...
நோ நோ இது எந்த முறையும் சரியில்லை..நேருக்கு நேர் அட்டாக் தான் நல்லம்./
தங்கச்சி
முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சியின் வீரம் உங்களில் தெரிகிறது ;-))
எத்தகையதொரு சேவை... நன்றி.. அடுத்த பதிவில காதலிக்கிறவங்கள் எப்படி காதலிக்கலாம் என்று சொல்லுங்க.. நிறைய பேருக்கு உதவும்.
//வந்தியத்தேவன் said...
எங்களைப்போன்ற டீன் ஏஜ் பையன்களுக்கு உங்கள் வழிமுறைகள் மிகவும் உதவும். உங்கள் அனுபமும் சிறந்தது.//
இப்பிடியே கடந்த பத்துவருசமாய்ச் சொல்லிக்கொண்டிருக்காமல் களத்தில் இறங்குங்கள் ;)
//அலட்சியம் பிளஸ் நக்கலாக சொல்லி விட்டு நகர்ந்தால் அதற்குப் பிறகு consider பண்ணும் girls நிறைய இருக்கினம்.
பாரதி//
பாரதி
உங்கள் வெளிப்படையான கருத்துக்கு நன்றி. நிறைய ஆண்கள் ஒருவித பாதுகாப்பு உணர்வோடு தான் செயற்படுகிறார்கள்.
//நாங்களும் அப்படித்தான்...
போய்க்கிட்டே இருப்போம்...
Senthil,
Bangalore//
செந்தில்
நீங்களும் நம்ம கூட்டணியா ;-)
தெய்வமே,
எங்கயோ போயிட்டீங்க...
பதிவு சூப்பரோ சூப்பர்...
//இதைப் பார்க்கும் போது "ஆண்பாவம்" படத்தில் வி.கே.ராமசாமி சொன்னது தான் ஞாபகம் வருது.
" இந்த ஊர் நல்லா இருக்கணும்னு பள்ளிக்கூடம் கட்டினேன், கோயில் கட்டினேன், ஆஸ்பிட்டல் கட்டினேன், ஒருத்தனும் ஏறெடுத்துப் பார்க்கல, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.
இப்ப ஒரு சினிமா கொட்டகை கட்டினதும் நீங்கள்ளாம் எனக்கு மாலை, மரியாதையோட கொடுக்கிற மரியாதையைப் பார்த்ததும் உங்களை இவ்வளவு நாளாப் புரிஞ்சுக்க முடியலையேனு வருத்தமா இருக்கு" அப்படிச் சொல்வார் வி.கே.ஆர்.//
ஆரம்பமே அசத்தல்...
இந்த பதிவை எல்லாருக்கும் ஈமெயில் மூலமாவது அனுப்பனும்...
இந்த பா(ட)ம் வேறயா?
அந்த கோயில் மேட்டர்
சூப்பர்!
// மங்களூர் சிவா said...
:))))))))))//
மங்களூர்க்காரரே
இவ்வளவு பலமான சிரிப்பின் பின்னணி எதுவோ ;-)
//கோபிநாத் said...
தல
கிர்ர்ர்ர்ர்ர்...இப்போ ரொம்ப சந்தோஷமா !!!//
நம்ம கடமை தல, இன்னும் ஏதாவது செய்யணும்னா தயங்காம சொல்லுங்க ;-)
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தம்பி!
இவ்வளவு வழிமுறையா??
இப்பிடியெல்லாம் வழிமுறை சொல்ல அப்போ ஆளின்றி; அதற்குச் சந்தர்ப்பம் இல்லாமலே போய்விட்டது.//
யோகன் அண்ணா ;-)
இதை விடவும் நிறைய இருக்காம், இப்பத்தயப் பெடியள் சொல்றாங்கள்.
//U.P.Tharsan said...
எத்தகையதொரு சேவை... நன்றி.. அடுத்த பதிவில காதலிக்கிறவங்கள் எப்படி காதலிக்கலாம் என்று சொல்லுங்க.. நிறைய பேருக்கு உதவும்.//
வணக்கம் யுபி
நீங்கள் கேட்ட பதிவை எழுத உங்களிடம் தான் நிறைய உதவி எடுக்கவேணும் ;-)
//வெட்டிப்பயல் said...
தெய்வமே,
எங்கயோ போயிட்டீங்க...
பதிவு சூப்பரோ சூப்பர்...
இந்த பதிவை எல்லாருக்கும் ஈமெயில் மூலமாவது அனுப்பனும்...
//
வெட்டிகாரு,
மெயிலில் அனுப்பும் மேட்டர் தல கோபி சொல்லிக் கொடுத்ததா?
/சுரேகா.. said...
இந்த பா(ட)ம் வேறயா?
அந்த கோயில் மேட்டர்
சூப்பர்!//
வாங்க சுரேகா
விட்டா ரெபிடெக்ஸ் 30 நாள் புத்தகமே போடுவோம்ல ;-)
ஆஹா கானா பிரபா,
ஐடியா மன்னராகிட்டீங்க... :D
வழிமுறை 6 உங்க சொந்த அனுபவமா?
முடிவு என்னாச்சு?
அவங்க காதல் பொங்கப் பிரித்து உங்களுக்குக் கவிதைப் புத்தகங்கள் வாங்கச் செலவு வச்சிட்டாங்களா?
இல்லைன்னா,இன்னமும் நீங்கவெள்ளைப் பேப்பராக் கொடுத்துட்டு இருக்கீங்களா?
இன்னுமொரு சூப்பர் ஐடியா இருக்குல்ல...
"நீங்க அழகா இருக்கீங்கன்னு நினைக்கல..
உங்களைக் காதலிக்கணும்னு நினைக்கல..
ஆனா இதெல்லாம் நடந்திடுமோன்னு பயமாயிருக்கு" ன்னு நம்ம ஜிரா அண்ணாச்சியோட பிட்டை நேரடியாவே போட்டுப் பாருங்க...
சூப்பரா வேர்க் அவுட் ஆகும்..
வாழ்த்துக்கள் நண்பரே :)
அண்ணை,
கொஞ்சநாளா நீங்கள் இந்தச் சங்கத்தில எழுதிறதுகள் பெரிசா விளங்குதில்லை.
ஒண்டுமட்டும் விளங்குது.
பிள்ளையார் எண்டில்லாமல் உள்ளநாட்டுக் கடவுளெல்லாம் உங்கட கனவில வந்து குழப்பிறாங்கள் எண்டது விளங்குது.
காத்துக் கறுப்பு மட்டுமில்ல... உந்தக் கடவுள்மாரும் அண்டாமல் இருங்கோ எண்டு சொல்ல வேண்டிக்கிடக்கு.
//எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆஹா கானா பிரபா,
ஐடியா மன்னராகிட்டீங்க... :D
வழிமுறை 6 உங்க சொந்த அனுபவமா?
முடிவு என்னாச்சு?//
வாங்க ரிஷான்
முடிவு எல்லாம் சஸ்பென்ஸ் உங்கட ஐடியா சொந்த அனுபவமா ;-)
//வசந்தன்(Vasanthan) said...
அண்ணை,
கொஞ்சநாளா நீங்கள் இந்தச் சங்கத்தில எழுதிறதுகள் பெரிசா விளங்குதில்லை.//
அண்ணை
இளமையிலேயே துறவறம் போனவைக்கு இதெல்லாம் எப்படி விளங்கும், அதைப்பற்றிக் கனக்க யோசியாதேங்கோ விட்டுத் தள்ளுங்கோ.
காத்துக்கருப்பு மெல்பனுக்கு வராமலும் பாருங்கோ ;-)
//காத்துக்கருப்பு மெல்பனுக்கு வராமலும் பாருங்கோ ;-)//
வந்திருந்தா நாளுக்கோர் இடுகை எண்டு எழுதித்தள்ளியிருக்க மாட்டோமே?
;-)
//வசந்தன்(Vasanthan) said...
//காத்துக்கருப்பு மெல்பனுக்கு வராமலும் பாருங்கோ ;-)//
வந்திருந்தா நாளுக்கோர் இடுகை எண்டு எழுதித்தள்ளியிருக்க மாட்டோமே?
;-)//
இடுகைக்குப் பதில் பின்னூட்டத்திலேயே அந்த விஷயத்தைச் செய்து குறையை நிரப்புறியள் ;-)))
வழிமுறை ஆறு தான் இருக்கறதுக்குள்ளேயே பெஸ்ட் :-)பிள்ளைகள் கெட்டு போவதற்கு வழிச் சொல்லி கொடுக்கிறீர்கள் :-)
amas32
Post a Comment