Wednesday, May 31, 2006

முக்கிய அறிக்கை - நாகை சிவா

நம் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடரை இழந்த சேதியை மூன்று நாள் தாமதமாக ஜொள்ளு பாண்டியின் மூலம் அறிந்த நம் தல கைப்புள்ளளை மன வேதனையும் ஆத்திரமும் அடைந்தார்.

நம் மகளிரணி தலைவி புதகரத்தில் இருந்து அனுப்பிய புது கைப்பேசியின் மூலம் ஜமைக்காவில் இருக்கும் ராகுல் டராவிட்டை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியாத காரணத்தால் மனம் கொதிப்பு அடைந்து உள்ளார்.

தான் உதைப்பந்து விளையாட சென்ற காரணத்தால் தான் இந்திய கிரிக்கெட் அணி தகுந்த ஆலோசனை கிடைக்காமல் தோல்வி அடைந்து இருக்குகலாம் என்ற குற்ற உணர்ச்சியில், உதைப்பந்தை உதறி விட்டு ஜமைக்கா புறப்பட தயார் ஆன அவரை தேவ் சமாதனப்படுத்தி நம் சங்க விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து உள்ளார்.

இதுகுறித்து முடிவு எடுக்க, சங்கத்தின் செயல்வீரர்கள் அனைவரையும் இன்று இரவு 11.11மணிக்கு நடைப்பெரும் அவரச கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிகிறோம்.

இக்கூட்டத்தில்,
நம் தல கைப்புள்ள உதைப்பந்தில் தொடர்ந்து உதை வாங்குவதா, இல்லை இந்திய கிரிக்கெட் அணியின் பெருமையை நிலைநிறுத்த ஜமைக்காவுக்கு உடனடியாக புறப்படுவதா? என கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.பின் குறிப்பு: ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நம் சங்க பத்திரிக்கையின் வாயிலாக சங்கத்தின் சிங்கங்களுக்கு அறிவிக்கபடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

51 comments:

பொன்ஸ்~~Poorna said...

//அனைவரையும் இன்று இரவு 11.11மணிக்கு //

EST - ஆ, CST-ஆ, IST-ஆ அல்லது SST -ஆ அதாங்க, சூடான் ஸ்டான்டர்டு டைம்????

இலவசக்கொத்தனார் said...

அட உங்க சங்கத்தில்தான் நீங்க இருக்கீங்களா? இரவ்ய் 11.11 அவர் அவர் நேரம். அப்படித்தானே?

பொன்ஸ்~~Poorna said...

இப்போ தான் எனக்கு இன்னும் குழப்பம்.. (ராம் ஆவி பத்தி சுரேஷுக்கு வந்தா மாதிரி) - இந்த அறிக்கை விட்டது சூடான் சிவா.. எடுத்துப் போட்டது சென்னை தேவ்.. இப்போ அவர் நேரம்ங்கிறதுல இருக்கும் அவர் எவர்??

பொன்ஸ்~~Poorna said...

டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருக்கும் நீங்க EST, நான் CST. அட, எல்லாமே வந்துடுச்சே!!

Syam said...

அவசர வேலை நிமித்தமாக நான் செல்வதால் (அட பாத்ரூம்குங்க) 11.11 மணிக்கு வர இயலாது என அறிவித்து, நம்ம அண்ணனுடைய திறமைக்கு அவர் ஜெர்மனி மற்றும் மேற்கு இந்திய தீவுகளிலும் அடி வாங்குவாங்கினாலும் தாங்குவார் என்று எனது ஆலோசனயை இப்பொழுதே தெரிவித்துக்கொள்கிறேன்

சுதாகர் said...

தல,
ஃபுட்பால் விளயாடினா உலக முழுக்க ஒரு கலக்கு கலக்கலாம். இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு தக்கூண்டு டீம்மு. அத சரிக்கட்ட நம்ம சங்கத்துல இருக்குற பொடி பசங்க போதும். உங்க ரேஞ்சுக்கு ஆஸ்திரேலியாதான் சரியான போட்டி. இப்போ அவனுங்களும் சுருண்டு கிடக்காய்ங்க (நினப்புதான்..)

அதனால,ஃபுட்பால்-ல கான்சன்ரேட் பண்ணி ரொனால்டோ-வையும் மத்த டீமயும் ஒரு கலக்கு கலக்கு மாமோய்!

(துபாய்) ராஜா said...

"'அமீரக நேரம்' இரவு 11.11க்கு வளைகுடா கிளை ஆஜருங்கோ!!!!!".

(துபாய்)ராஜா.

நாகை சிவா said...

சங்கத்தின் சிங்கங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், சங்க நடவடிக்கை எப்பொழுதும் IST தான்.
SST - ஏதும் கிடையாதுங்க, நமக்கு EST.

நாகை சிவா said...

கொத்ஸ்!
IST - 11.11PM தான். சங்கத்து கண்மணிகள் எங்கு இருந்தாலும் சரியாக இந்திய நேரப்படி இன்று இரவு 11.11 மணிக்கு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவார்கள்.
எப்படினு கேட்க மாட்டீர்க்கள் என நினைக்கின்றேன்.

பொன்ஸ்~~Poorna said...

//எப்படினு கேட்க மாட்டீர்க்கள் என நினைக்கின்றேன்.
//
அப்படியே கன்டின்யூ.. அறிக்கை விட்டவர்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்..

So, Carry On.. Expecting 50 ATLEAST on our Sudan Siva's post :)

மகேஸ் said...

உங்க தல காட்டுவாசியா மாறி மேற்கிந்தியாவில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
படங்களை இங்கே சென்று பார்க்கவும்.

பொன்ஸ்~~Poorna said...

எங்க தல தான் ராஜஸ்தானில் சித்தூர் காட்டு வாசியாகத் தான் இருக்காருன்னு நாங்களே சொல்லிட்டோமே?!!

எதுக்கு இப்படி தான் தோன்றித்தனமான நிருபர்களின் (FreeLance Reporters) படமெல்லாம் போட்டுகிட்டு இருக்கீங்க?!! இருக்கட்டும், இதெல்லாம் எங்கயாவது பயன்படும்.. எனவே நன்றி :)

தேவ் | Dev said...

சாரி சங்கத்து மக்களே.. கண்ணகி பதிவுப் போட்டதில் லைட்டாக கண்ணயர்ந்து விட்டதால் 11:11க்கு டீப் நித்திரையில் இருக்க வேண்டியதாய் போயிற்று...

எப்படியோ சங்க மீட்டீங் நல்ல படியா முடிஞ்சு இருக்கும்ன்னு நம்புறேன்....

யப்பா சிவா என்ன முடிவு எடுத்தீங்க?

தேவ் | Dev said...

//இப்போ அவர் நேரம்ங்கிறதுல இருக்கும் அவர் எவர்?? //

நேத்து முழுக்க தலயின் உள்குத்துக்களை சமாளித்து வெளிகுத்து வாங்காமல் எஸ்கேப் ஆவதற்குள் பெரும் கூத்தாய் ஆகிப் போனது...

இது மகளிரணியின் உள்குத்தா? இல்ல அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லாம் பேயான்னு தெரியல்லையே:-(

தேவ் | Dev said...

சங்கத்துக்கு வாங்க மகேஸ் வாங்க,

அது மேற்கீந்தியத் தீவுல்ல எடுத்த படம் இல்லிங்க.. இங்கே கொட்டாம் பட்டியிலே அவர் அண்ணி கைப்பொண்ணுவை லவ்ஸ் பண்ணப்போ அண்ணி அணில் குட்டி பிடிச்சித் தரச் சொல்லி தலயை ஒரே நச்சரிப்பு அப்போ நம்ம தல சூப்பர் ஸ்டார் எஜமான் படத்துல்ல மீனாக்கா ஆசப்பட்டு பட்டாம்பூச்சி கேக்கும்ன்னு பட்டாம் பூச்சி புடிக்க போய் சேத்துல்ல விழுந்து திரும்பி வருவாரே அதே கணக்காத் தல கொட்டாம் பட்டி காட்டுல்ல அணில் புடிக்கப் போவச் சொல்ல எடுத்த ஸ்டில்.

(தல நோ சில்லி பீலீங்ஸ் என்னியத் திட்டப்பிடாது ஆமா சொல்லிப்புட்டேன்)

Rishi said...

சங்க கூட்டம் நல்லா முடிசுதா?தல எங்கே போறார்? WI or German? சொன்னிஙனா நானும் டிக்கெட் வாங்கனும்

நாகை சிவா said...

தேவ் கண்ணா!
நேற்று இரவு சரியாக 11.11 ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தல, நானு, பாண்டி, சிபி, இளா(தன் திருமண நாளை விட சங்க நடவடிக்கை தான் முக்கியம் என்று நம் இளா அடம் பிடித்து நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்.) மற்றும் சங்க செயல் வீரர்க்கள் எல்லாம் சேர்ந்து நல்லபடியா ஆலோசனை நடத்தினோம். ஆனா அதுல ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு தேவ். இரவு நல்லா கலந்து பேசியதில் என்ன பேசினோம் என்று காலையில் மறந்து போச்சு. எல்லாம் பாண்டியின் பாண்டிச்சேரி பண்ணிய வேலை. அதனால் இன்று மறுபடியும் 12.12(மதியம்) அடுத்த கூட்டம் நடத்தி நேற்று இரவு என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படும்.

நாகை சிவா said...

//ஃபுட்பால் விளயாடினா உலக முழுக்க ஒரு கலக்கு கலக்கலாம். இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு தக்கூண்டு டீம்மு. அத சரிக்கட்ட நம்ம சங்கத்துல இருக்குற பொடி பசங்க போதும்.//
சுதாகர்!
நீங்க நல்ல ஒரு கருத்தை கூறியுள்ளீர்க்கள். இன்றைய கூட்டத்தில் உங்கள் கருத்தும் சபையில் வைக்கப்படும்.

நாகை சிவா said...

மகேஷ்!
ஆமாங்க, நம்ம தேவ் சொல்லுறது உண்மை தாங்க. கொட்டம்பட்டி காட்டுல அணில் பிடிக்க தல போட்ட பல வேஷகளில் சில புகைப்படங்கள் தான் அது. நானும் தேவும் அவருக்கு தெரியாம பின்னாடியே போயி இத கண்டு இருக்கோம். இதுவரைக்கும் அது தலக்கு தெரியாது. இப்போ கூட தலக்கு ஒரு தவறான பெயர் வந்து விட கூடாது என்ற காரணத்தால் இதை எல்லாம் இங்கு சொல்ல வேண்டியது இருக்கு.

ALIF AHAMED said...

தல மேற்கு இந்திய தீவ ஒரு கலக்கு தல

(துபாய்) ராஜா said...

//"நேற்று இரவு சரியாக 11.11 ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தல,நானு,பாண்டி,சிபி,இளா....."//

'வளைகுடா கிளை' புறக்கணிப்பை
வன்மையாக கண்டிக்கிறேன்.

சிவா கண்ணு!மப்புல மறந்துட்யாமா?.
இந்தஅறிகையில 7-வது பின்னூட்டம் எங்களோடது பாருங்க!!!!.

http://vavaasangam.blogspot.com/2006/05/blog-post_29.html.யும்,மத்த 25 அறிக்கை பின்னூட்ட்ங்கள்ளேயும்
போய் பாருங்க!நம்ம வளைகுடா கிளை வளர்ச்சி தெரியும்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.
வ.வா.ச.வளைகுடா கிளை.

ஜொள்ளுப்பாண்டி said...

//பாண்டியின் பாண்டிச்சேரி பண்ணிய வேலை. //

என்னாங்க சிவா எல்லாத்துக்கும் நாந்தேன் காரணமா ???? :((

'பாட்டிலு கோக்கு மாக்கா இருந்தாலும்
சரக்கு நல்லா இருந்தா போதும்' ங்கற கொளுகை உள்ளவன் நான்.:))

துபாய் ராசா ஏன் இப்படி புலம்பறீங்க ? வீடியோ கான்பரன்சிங்கில் சங்க மீட்டிங்கை 'கட்டிங்' கோட நடத்தீடுவோம். விரிவான அறிக்கை விரைவில் ஒகேவா ? சும்மா இப்படி சின்னப்பிள்ளைத்தனமா தரையில உருண்டு அழக்கூடாது சரியா?

சரி சரி எந்திரிச்சு வாங்க. பந்திக்கு நேரமாச்சு. அப்புறம் தேவு வைவாரு!

(துபாய்) ராஜா said...

//"நாகை சிவா said... ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு.இரவு நல்லா கலந்து பேசியதில் என்ன பேசினோம் என்று காலையில் மறந்து போச்சு. எல்லாம் பாண்டியின் பாண்டிச்சேரி பண்ணிய வேலை."//.

ஓ!!பாண்டிதான் இவ்வளவுக்கும் காரணமா??.அதான் பதறியடிச்சு பதில் எழுதிட்டியா???.

கீதா சாம்பசிவம் said...

நல்லாத்தான் இருக்கு, நீங்க கூட்டம் நடத்துறது, இதுக்குத் தான் என் மாதிரி குழந்தைங்க சங்கப் பொறுப்பிலே இருக்கணும்னு அடிச்சுக்கறேன் கேட்டாத்தானே?

நாகை சிவா said...

என்ன ராஜா உங்கள மறப்போமா!
நீங்க அனுப்பின பேர்ச்சம்பழம் இன்னும் முழுவதாக தீரவில்லை. அதுக்குள் எப்படி உங்களை மறப்போம்.
பாண்டி கூறி மாதிரி அடுத்த தடவை வீடியோ கான்பரன்ஸ் நடத்தி விடுவோம் என்ன?
இப்ப போயி சங்க பணிகளை கவனிக்க ஆரம்பிங்க, போங்க போங்க.....

சுமா said...

பதிவுகளை படித்தேன்.அருமையாக இருக்கு.

நாகை சிவா said...

பாண்டி, நான் எப்பங்க எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என கூறினேன். இது போன்ற வதந்திகளை எல்லாம் நம்பாதீர்க்கள்.

//'பாட்டிலு கோக்கு மாக்கா இருந்தாலும்
சரக்கு நல்லா இருந்தா போதும்' ங்கற கொளுகை உள்ளவன் நான்.:))//
உங்க கொள்கை தான் உலக பிரசித்தம் ஆச்சே. எனக்கு தெரியாமா இருக்குமா...........

பொன்ஸ்~~Poorna said...

//'பாட்டிலு கோக்கு மாக்கா இருந்தாலும்
சரக்கு நல்லா இருந்தா போதும்' ங்கற கொளுகை உள்ளவன் நான்.:))//
ஐயோ ஐயோ.. ஜொள்ளுபாண்டியின் தத்துபித்துவம் சே.. தத்துவ புத்தகம்னு பொஸ்தகம் போடுற அளவுக்கு உன் கிட்டேர்ந்து தத்துவம் ஸ்டாக் வந்துகிட்டே இருக்கேப்பா!!

எப்படி இதெல்லாம்? உக்கார்ந்து யோசிப்பீங்களோ?!!!

நாகை சிவா said...

சங்கத்து சிங்கங்களே!
இன்று மதியம் 12.12 மணிக்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் நம் தல கைபுள்ள நம் சங்கத்தின் பெருமையை உலக நாடுகள் அனைத்துக்கும் பரப்பும் நோக்கில் தொடர்ந்து உதைப்பந்தாட்டதில் உதை வாங்கவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் உலக கோப்பையின் போது உதவ வேண்டும் என சங்கத்தின் கண்மணிகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கபட்டது. அதற்கு செவிசாய்த்து நம் அஞ்சாநெஞ்சனும் ஒப்புதல் அளித்து உள்ளார். மேலும் நாளை முதல் தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடுவதற்கு தன் ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் மின் அஞ்சல் மூலம் தெரிவிக்க உள்ளார்.
இன்று இரவே ஜெர்மன் கிளம் புவதற்கும் நம் தல கைப்புள்ள முடிவு செய்து உள்ளார்.
சங்கத்து தங்கங்கள் தொடர்ந்து தங்களின் ஏகோபித்த ஆதரவை தொடர்ந்து அவருக்கே, அவருக்கு மட்டுமே தருமாறு கேட்டு கொண்டு உள்ளார்.

நாகை சிவா said...

மகளிரணி தலைவி திட்டி கொண்டதற்கு இணங்கி...............


நான் எழுதியதையும் ஒரு பதிவுனு நம்ம சங்க பதிவில் போட்டு என்னை ஃபீல் பண்ண வைச்சதுக்கு ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரொம்ப தேங்க்ஸ்........

நாகை சிவா said...

ரிஷி...
ஜெர்மனுக்கே டிக்கெட் போடுங்க......

நாகை சிவா said...

//ALIF AHAMED said...
தல மேற்கு இந்திய தீவ ஒரு கலக்கு தல //
அடுத்த வருடம் உலகப் கோப்பையின் போது மேற்கு இந்திய தீவை நம்ம தல ஒரு கலக்கு கலக்குவார். கவலை வேண்டாம்.....

மனதின் ஓசை said...

இந்தியாவின் தேசிய விளையட்டான கிரிக்கெட்டை விட்டு விட்டு தல இந்தியருக்கு சுட்டுப்போட்டலும் வராத புட்டுபாலு ஆட போனதை வன்மையாக கண்டிக்கிறேன்...இதை கன்டித்து தேவு அவர்கள் தீக்குளிக்கப் போவதர்க்கு என் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

நாகை சிவா said...

வாங்க... சுமா.
சங்கத்திற்கு உங்களை நம் தல கைப்புள்ள சார்பாக வரவேற்கின்றேன்.

நாகை சிவா said...

எங்க மனதின் ஒசை! இது மாதிரி எத்தனை பேருங்க கிளம்பி இருக்கீங்க.
தீ குளிக்க போறது என்னமோ டீக் குடிக்க போற மாதிரி சொல்லுறீங்க. நீங்க தேவ் கூப்பிட்டதால் அவரே உங்களுக்கு பதில் சொல்லுவார் என சொல்லி அமர்ககின்றேன்.

நாகை சிவா said...

என்னங்க பொன்ஸ், நம்ம சங்கத்து சிங்களை பத்தி இப்படி ஒரு தவறான எண்ணத்துக்கு வந்துடீங்க. நம்ம சங்கத்துக்கு யாரு வந்தாலும் வரவேற்பது தானுங்க நம்ம பழக்கம்......
ஒரு நிமிடத்தில் எங்கள் நேர்மையை சந்தேகப்பட்டுடீங்களே.... இது நியாமா? இது தர்மமா?
அதுவும் இங்க சொல்லாம, அங்க போயி சொல்லாமா?

நாகை சிவா said...

//இந்தியருக்கு சுட்டுப்போட்டலும் வராத புட்டுபாலு //
நீங்க கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். தல உதைப்பந்தில் கலக்கிய போது எடுத்த புகைபடங்களை பார்த்து விட்டு பின்னூட்டம் விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேவ் | Dev said...

//இதை கன்டித்து தேவு அவர்கள் தீக்குளிக்கப் போவதர்க்கு என் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்..//

ம்ம்ம் START MUSIC 1....2....3....

அப்படியே அடுத்து என்னன்னு விவரமா சொல்லு ஹமீது...

குத்தாலத்துல்ல குளிக்கப் போறார்ன்னு சொல்லற மாதிரி எம்புட்டு சந்தோசமாச் சொல்லுறான் பயப்புள்ள...

ஜொள்ளுப்பாண்டி said...

//ஐயோ ஐயோ.. ஜொள்ளுபாண்டியின் தத்துபித்துவம் சே.. தத்துவ புத்தகம்னு பொஸ்தகம் போடுற அளவுக்கு உன் கிட்டேர்ந்து தத்துவம் ஸ்டாக் வந்துகிட்டே இருக்கேப்பா!!

எப்படி இதெல்லாம்? உக்கார்ந்து யோசிப்பீங்களோ?!!!//

பொன்ஸக்கா அதெல்லாம் தானே வருது என்ன பண்றது ? எல்லாம் உங்க வெண்பா மகிமை !! :)))

மனதின் ஓசை said...

//தல உதைப்பந்தில் கலக்கிய போது எடுத்த புகைபடங்களை பார்த்து விட்டு பின்னூட்டம் விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
தல மட்டும் கலக்கினா போதுமா? கூட விளையான்ட பசங்க எல்லாம் சேந்து சொதப்பி தலய அடி வாங்க வச்சிட்டாங்களே.. :-(

மனதின் ஓசை said...

//தல உதைப்பந்தில் கலக்கிய போது எடுத்த புகைபடங்களை பார்த்து விட்டு பின்னூட்டம் விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
தல மட்டும் கலக்கினா போதுமா? கூட விளையான்ட பசங்க எல்லாம் சேந்து சொதப்பி தலய அடி வாங்க வச்சிட்டாங்களே.. :-(

மகேஸ் said...

//'பாட்டிலு கோக்கு மாக்கா இருந்தாலும்
சரக்கு நல்லா இருந்தா போதும்' ங்கற கொளுகை உள்ளவன் நான்.:))//

எனக்கு சரக்கெல்லாம் அடிக்கிற பழக்கம் இல்லீங்க. அதனாலே 'கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா போதும்' ங்கற கொளுகை உள்ளவன் நான்.:))

ஆளுக்குத் தகுந்த மாதிரி பழமொழி(??)யையும் மாத்திக்க வேண்டியது தானே

நாகை சிவா said...

//பசங்க எல்லாம் சேந்து சொதப்பி தலய அடி வாங்க வச்சிட்டாங்களே.. :-( //
அடி, சாரி உதை வாங்குவது எங்க தல புதுசா என்ன, எவ்வளவு உதை வாங்கினாலும் சும்மா உதறிட்டு போயிகிட்டே இருப்பாரு.
அடுத்த இடத்துல உதை வாங்கனுமுல ........அதான்....

பொன்ஸ்~~Poorna said...

//என்னங்க பொன்ஸ், நம்ம சங்கத்துக்கு யாரு வந்தாலும் வரவேற்பது தானுங்க நம்ம பழக்கம்......
ஒரு நிமிடத்தில் எங்கள் நேர்மையை சந்தேகப்பட்டுடீங்களே.... இது நியாமா? இது தர்மமா?
//

அது சரி.. சூடான் சிவா!!! அடுத்த பதிவுல கார்த்திக்கைக் கலாய்ச்சது தப்புங்க.. நீங்க தான் சரியான ஆசாமி!!

//அதுவும் இங்க சொல்லாம, அங்க போயி சொல்லாமா?
//
ஆமாம், என் கிட்ட சொல்லிட்டு தான் அங்க போனீங்களா? இல்லதானே? அதான் நானும் உங்க கிட்ட சொல்லாம!! :)

பொன்ஸ்~~Poorna said...

//'கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா போதும்' ங்கற கொளுகை உள்ளவன் //
மகேஸ், சங்கத்துல சேர்ந்த ஒரே நாள்ல இம்புட்டு தேறிட்டீங்களேய்யா!!!

இந்த ஜிகிர்தண்டா பத்தி எதுவும் கொள்கை/தத்துவம்/பழமொழி இல்லையா?

பை த பை,
//பால்ல ஆப்பிளை வெட்டிப்போட்டு சர்பத்தை ஊத்தி, மிக்ஸியில அடிச்சு ஐஸ் போட்டு புது விதமான டிர்ங்ஸ் //
இதெல்லாம் எந்த சரக்குல சேரும்???? - இல்ல, ஒரேடியா பழமும்/பாலும்/சர்பத்தும்னு ஒரு வெவகாரமான காம்பினேஷனா இருக்கு..

நாகை சிவா said...

//சூடான் சிவா!!! அடுத்த பதிவுல கார்த்திக்கைக் கலாய்ச்சது தப்புங்க.. நீங்க தான் சரியான ஆசாமி!! //

பொன்ஸ் என்னங்க, சொல்லுறிங்க.
நான் கார்த்திக்யை கலாய்த்தது தவறு என்று கூறுகின்றீர்களா,அப்புறம் நீங்க தான் சரியான ஆசாமி சொல்லுறீங்க.........
ஒன்னுமே புரியலை....
கொஞ்சம் விளக்கம் ப்ளிஸ்.

மகேஸ் said...

//இதெல்லாம் எந்த சரக்குல சேரும்???? //

அய்யோ! அய்யோ!. பொன்ஸ் பாப்பா வெவரம் தெரியாத புள்ளயா இருக்கே.

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ் என்னங்க, சொல்லுறிங்க.
நான் கார்த்திக்யை கலாய்த்தது தவறு என்று கூறுகின்றீர்களா,அப்புறம் நீங்க தான் சரியான ஆசாமி சொல்லுறீங்க.........
ஒன்னுமே புரியலை....
கொஞ்சம் விளக்கம் ப்ளிஸ்//

இல்லிங்க சிவா. அடுத்த பதிவுல.. அதான், கைப்பூ ‘பெக்’ காம் பதிவுல, கார்த்திக்கைக் கலாசிகிட்டு இருந்தேன்.. அதான்.. நீங்க தான் சரியான ஆசாமி.. கார்த்திக்கைப் போய் டார்கெட் பண்ணினோமேன்னு :) இப்போ புரியுதா??

நாகை சிவா said...

ஏதோ கொஞ்சம் விளங்குதுங்க.

ALIF AHAMED said...

:))

ALIF AHAMED said...

50 Comments he he he