Thursday, April 27, 2006

நல்லாருங்கய்யா...நல்லாருங்க

சங்கத்து ஆளுங்களோட கொள்கையும் கைப்புள்ளயைக் கலாய்த்தலா?யாரு பெத்த புள்ளங்களோ...எப்படியோ நல்லா இருந்தா சரி தான்.

பிள்ளை பிராயத்தில திருவல்லிக்கேணியிலும் சற்று பெரியவனானதும் தில்லியிலும் பின்னர் இந்தூரிலும் முதுமை பருவத்தில்(!) இப்போது மால்கேட்டிலும் கேட்பாரில்லாமல் அனாமத்தா ஆப்பு வாங்கி கொண்டிருந்த என்னை இண்டர்நேசனல் ஆப்பு வாங்கும் அளவுக்குத் தகுதியானவன் ஆக்கிய என் சங்கத்து செல்வங்களின் எல்லையில்லா அன்பிற்கு சிறந்தாழ்த்தி நெக்குருகி, மால்கேட் சிமெண்ட் கம்பெனியில் வாங்கிக் கொண்டிருக்கும் க்ளையண்டு ஆப்புகளுக்கு மத்தியில் இப்பதிவினைக் காணிக்கையாக்குகிறேன்.

15 comments:

பொன்ஸ்~~Poorna said...

வாங்க தலைவா.. வாங்க வாங்க..

அயராத சிமெண்டு பணிகளுக்கிடையிலும்
தவறாது வந்து சங்கத்தின் தம்பி தங்கைகளுக்குத்
தன் நல்வாழ்த்தைச் சொல்லி நல்வழிப்படுத்தும்
எங்கள்
மால்கேட் மாணிக்கமே,
தங்கத் தலைவா
சிமென்ட் கம்பெனியில் மூட்டை தூக்கும் சீ.. பொட்டி தட்டும் சிங்கமே
மீண்டும் மீண்டும் வருக..
இப்படிப் பட்ட ஊக்க மொழிகளைத் தருக :)

நாமக்கல் சிபி said...

அப்பாடா! தலை வந்தாச்சு! தலை வந்தாச்சு!

இனி உன் சார்பா நாங்க வாங்கத் தேவை இல்லை!

சந்தோஷ் aka Santhosh said...

வாங்க தலை நீங்க இல்லாம மருத்துவர் கட்சி போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல தம்பி தேவு, கார்த்திக், பொன்ஸ், ஜொள்ஸ் மற்றும் நம்ம கட்சியினர் எல்லாம் ஆப்பு வாங்கி வாங்கி டயர்டு ஆயிட்டோம் இதுக்கு மேல கவலை இல்லை.

தேவ் | Dev said...

அப்பாடா சிபி எனக்கும் அதே சந்தோஷம் தான்... இனி தல பாத்துப்பார்... நம்ம இனிமே பொழச்சோம்டா சாமீ

ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா தல எம்ம்புட்டு நாளாச்சுய்யா உன்னய பாத்து!!!

'தல'யே வா
தலைநிமிர்ந்து வா
தள்ளாடாமல் வா
தாவியோடி வா
தத்திதாவி வா
ஆப்பு வாங்க வா !

ஆப்பம் சாப்பிட்டு
ஏப்பம் விடுபவர் மத்தியில்
ஆப்பு வாங்கி
காத்து நிற்கும்
அய்யனாரே வா !

பொன்ஸ்~~Poorna said...

ஆகா.. கவித கவித..

ஜொள்ளு பாண்டியின் வ.வா.'சங்கத்' தமிழ் :)

சரளாக்கா said...

கைபுள்ளைய ரொம்பநாளா தேட்டிட்டு இருக்கேன்.எட்டியே பாக்க மாட்டேங்கறாரு

கவிதா|Kavitha said...

சே!..பாவம் ப்பா கைப்புள்ள..இப்படி Group ப்போட்டு அவருக்கு ஆப்பு வைக்கறது நல்லது இல்ல.. விட்டுங்கப்பா..

பொன்ஸ்~~Poorna said...

வாங்க கவிதா, வாங்க.. இப்படிப் பரிதாபப்பட்டு அண்ணனுக்கு உதவத் தான் நானும் இந்தக் கட்சியில் சேர்ந்தேன்.. ஆனா, இப்போ இந்த கட்சியோட கொள்கை (அதான் கைப்புள்ளையைக் கலாய்த்தல்) பரப்புச் செயலாளர் ஆய்ட்டேன் :)
உங்கள் வரவும் நல்வரவாகுக... :)

சொஜ்ஜி said...

என் ராசா.. என்னமா படம் போட்டிருக்காரு.. அய்யனாரு கணக்கா, குருதைல வாராரே என் ராசா..
என்கண்ணே பட்டுடும் போல இருக்கு.. எல்லா தம்பிகளும் எம்புட்டு கண்ணு வைக்கறாலுவ..

சுத்திப் போடணும் ராசாவுக்கு..

கவிதா|Kavitha said...

பொன்ஸ், அணில் தான் உங்களுக்கு தகுந்த ஆள், கொள்கைய பரப்பும் போது, பாட்டு பாட கூட்டிட்டு போங்க.. கொரிக்க ஏதாவது கொடுத்து தொரத்தி விட்டுருங்க..இல்லைனா என்னமாதிரி கஷ்டபடனும்.. ஒரு super idea உங்க தலைக்கு தனிக்காவலா நம்ம அணில recommand பண்ணுங்கப்பா...அதோட லொல்லு தாங்கல...

சிவமுருகன் said...

தலைவரே படம் சூப்பரப்பு,

போட்டு கலக்குங்க.

அரையணா said...

யப்பா!.. இப்பவே கண்ணை கட்டுதே!...

Karthik Jayanth said...

ஆஹா என்ன இது. சங்க கொள்கைகளை பரப்ப இப்படி ஒரு வழியா,

வாங்க சங்கத்தின் சிங்கமே,

தல எல்லாரும் மால்கேட் மால்கேட் ந்னு சொல்லுறங்க.. அது என்ன இடம் தல. அங்க என்ன இருக்கு தல. ரெஸ்ட் எடுக்க போய்டயா.. எனக்கும் ஒரு இடம் போடு தல... இங்க கடைல ஆப்பு மேல ஆப்பா இருக்கு. சிக்கி சின்னா பின்னமா ஆகுறேன். முடியல தல. எவ்வளவு நாள்தான் சமாளிக்கிறதுன்னு தெரியல.. சங்க சார்பா தமிழ் எலக்கிய பணிய ? வேற ஆத்த முடியல.. ஒரே சோகமா இருக்கு.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


சங்கத்தின் சக சிங்கங்களே,

இப்படி ஒரு மேட்டர் இருக்குன்னு சொல்லவே இல்ல.. வீக் என்டுல இப்படி சோகம்மா இருக்குற மாதிரி பண்ணலாம ?

கீதா சாம்பசிவம் said...

வாங்க கைப்புள்ள, கொஞ்ச நாள் ஊருக்குப் போயிட்டு வரதுக்குள்ள என்ன என்னமோ வேலையெல்லாம் நடந்திருக்கு. ஜமாயுங்க. அது சரி, Team members மத்தவங்க என்ன சுறுசுறுப்பே காணோம், எலக் ஷன் நேரம், பார்த்து, கட்சி மாறிடப் போறாங்க. இந்த பெனாத்தலாரு வேறே அவர் கட்சிக்கு ஆள் பிடிக்கிறாரு. ஜாக்கிரதைங்க.அவங்க அறிக்கை எல்லாம் படிச்சீங்க இல்ல?