Thursday, November 9, 2006

ப்ளாக்கர்ஸ் Meet - வ வா ச

வவாச மீட்டிங்
இப்போ வர வர வலைபதிவாளர் சந்திப்பு அப்படீங்கறது பேஷனா போயிடுச்சு.பதிவு போடுரமோ இல்லையோ ஒரு வலைபதிவாளர் மீட்டிங்காச்சும் போயிருக்கீங்களான்னு கேட்டு இல்லேன்னு சொன்னா அற்பனே அப்படீன்னு புழுவைபோல பார்பாங்க போல இருக்கு. ஊர்ல weekend ல எல்லா Park க்குக்குள்ளேயும் எல்லா Bar க்குள்ளேயும் ஒரு இடம் free ய இல்லைனா பார்த்துக்குங்களேன் அங்கங்கே நம்ம ப்ளாக்கருகதான். 'மீட்டிங்கு' ‘கட்டிங்’ குன்னு சும்மா பட்டைய கெளப்பிகிட்டு இருக்காங்க. இதையெல்லாம் பார்த்திட்டு படு டென்சனா சங்கத்துக்குள்ள வர்றாரு தல கைப்புள்ளே !

கைப்பு : ஏடா மக்களா ஒரு பயபுள்ளய சங்கத்துக்குள்ள காணமே. எங்கடா போய்த் தொலைஞ்சீங்க ?? அங்க பாருங்கய்யா நேத்து ப்ளாக் ஆரம்பிச்சு இன்னிக்கு ப்ளாக்கர் மீட்டிங்குக்கு போய்ட்டு வந்து அப்படியே மீட்டிங்கப்பத்தி அப்புறம் அடிச்ச கட்டிங்கப்பத்தி யே பத்தி பத்தியா எழுதி அம்பூட்டு அப்ளாசையும் வாங்கிட்டு போறாகளே. நாம சங்கம் ஆரம்பிச்சு ஏதாச்சும் இப்படி பணியிருக்கமா ?? ஏண்டா உங்களுக்கெல்லாம் இப்படி பண்ணனும்னு தோணாம போச்சு. இப்படியே விட்டா வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படுற சங்கமாகிபோய்டுமேய்யா. ஆராச்சும் ரோசனை சொல்லுங்கப்பூ. டேய் ஜொள்ளுப்பாண்டி ஏண்டா எத்தினி நாளுதான் இந்த பொட்டிக்கடை டீக்கடைன்னு சங்கத்துபக்கமே தலை வச்சுப் படுக்காம இருப்ப ? எங்கய்யா இந்த விவசாயி ?? ஏன்யா தேவு உங்களைப்பார்க்கவே தேவுடு காக்க வேண்டியிருக்கேய்யா ?? ஏன்யா அப்பரண்டீஸ்ஸுகளா எங்கப்பா இருக்கீங்க??

தலயோட புலம்பல் கேட்டு எல்லாரும் அலறியடிச்சிகிட்டு சங்கத்துக்குள்ள வர்றாங்க.

தேவ் : என்னா தல புலம்பல்?? நான் ஏதோ கொஞ்சம் தியேட்டர் பக்கம் ஒதுங்கி தீபாவளிக்கு மக்களுக்கு படம் பார்க்க ஆலோசனை சொல்லலாம்னு பார்த்தா விட மாட்டீங்களே ??

கைப்பூ : வாய்யா தேவு. இப்போ அதுதான் குறைச்சல். நாம படம் காட்டணும்யா! நாம படம் பார்க்ககூடாது. தெரியுதா? அங்க அவங்கவங்க படம் காட்டிகிட்டு இருக்காங்க. நீங்க இங்க இப்படி சிம்புவையும் நயன்ந்தாராவையும் பர்த்துகிட்டு இருந்தா எப்படிய்யா?

தேவு : தல ஓவரா பேசுறீங்க. அயராது சங்கப்பணி ஆத்தி ஆத்தி சங்கத்து சிங்கமெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுக்கனும்தான் இப்போ புதுசா ரெண்டு சிங்கக்குட்டிகளை அப்பரண்டீஸ்சுகளா சேர்த்துவிட்டுருக்கோம்ல ??

தளபதி சிபி : ஏதோ நயன்ந்தரான்னு சத்தம் கேட்டுச்சே என்ன இடம் இது?? கந்தா கடம்பா !!! எல்லாரையும் காப்பாத்தும் வேலவா !!!

கைபூ : யாருயா நீ? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே ?? அட நம்ம தளபதி சிபி. ஏன்யா என்னாய்யா ஆச்சு உனக்கு ?? சங்கத்து தளபதியா பகைவனின் சிரம்கொய்து வந்திருக்க வேண்டிய நீ ! கழுத்தில் கொட்டை! நெத்தியில் பட்டை! என்ன கோலம் இது ?

சிபி : கைபுள்ளாய்!! நாம் அப்போதே சங்கத்திலிருந்து VRS ( Voluntary Retirement ) வாங்கிக்கொண்டு எம்மப்பன் முருகனின் திருவடி சரணம் என நாடிப் போய்விட்டோம் தெரியாதா?? ஏதோ அர்சனை சத்ததிற்கு நடுவில் என் தேவி நயன்ந்தாராவின் திருப்பெயர் செவியில் விழுந்ததால் இவ்விடம் வந்தோம்.

கைப்பூ : அப்பூ இவரு ஒருகாலத்திலே நம்ம தளபதி இப்போ பாவம் ஏதோ காவி கமண்டலம்னு போய்டாரு !! அப்படியே ஒரு நயன்ந்தாரா போஸ்டரை கொடுத்து ஒரு ஓரமா பய்ய ஒக்கார வைங்கயா.

அப்போது அண்ணா! என்னை மறந்ததேன் அண்ணா! என ஒரு உருவம் அலறிக்கொண்டு வருகிறது. கைப்பு குலை நடுங்க பார்க்கிறார்

கைப்பூ : ஆரும்மா நீ??

பெண் : ஐய்யகோ அண்ணா என்னாயா யாருன்னு கேட்கறே?? “கைவீசம்மா கைவீசு! வெண்பா வடிக்கலாம் கைவீசுன்னு ! “ என பாடிக்கொண்டே அழ ‘ ஜெர்க்' ஆகிறார் தல கைப்பூ

கைபூ : ஆஹா உடன் பொறவா சகோதரியே! என் அருமை பொன்ஸே! எங்கேம்மா போய்ட்டே? யோவ் பாருங்கய்யா சங்கத்து பெருசுக எல்லாம் ஒண்ணா கூடி இருக்குரப்போ இன்னும் என்ன ?? ரோசணைய அள்ளி விடுவாங்க பாருங்க. தங்கச்சீ இப்போ எதுக்கு கூடி இருகோம்னா

பொன்ஸ் : அதான் ஒரு பயலும் சங்கத்தை சரியா கவனிக்கலேன்னு தான் என் உளவுப்படை மூலமா தகவல் வந்துச்சே !!!

ஜொ. பாண்டி : பொன்ஸக்கா நீங்க பூனைப்படை நாய்ப்படை யானைப்படைன்னு ஒரு Zoo effect ல இருக்கரதா நெனச்சா உளவுப்படை ரிவால்வர் படைன்னு பட்டையக் கெளப்பிகிட்டு இருக்கீங்களே

பொன்ஸ் : ஹூம் யேய்! யேய்! இதெல்லாம் எனக்கு ஜூஜூபி பிஸ்கோத்து . எல்லாரும் சேர்ந்து கைப்பூவ கலாக்கிரது உங்க பாலிசி ! என்னைய நானே கலாய்க்கிரது என் பாலிசி. பொ.க.ச க.கா.ச, க.க ச. ஏ.ஐ.ச. யூ.பி.,ச. ஆ ஆ.ச. இதெல்லம் என்னானு பாகுறீயளா ??

சங்கத்திலே இருந்தாதேன் சிங்கமா ? அசிங்கமா இல்லை ? நாமதேன் இப்படி பல சிங்கங்களை அலைய உட்டுருக்கோம்லே ?!

இளா : சரி சரி யப்பா என்னாமா மழையடிக்குது. சும்மா நேரத்தை கடத்தாம கருத்தை சொல்லுங்கப்பா !!

சிபி : எந்த மீட்டிங் வச்சாலும் திருவடி சரணம்னு கைபூவ சங்கத்தை சுத்தி 100 தடவை அங்கப்பிரதட்சணம் பண்ணச்சொல்லி ஆரம்பிச்சா ரொம்ப நல்லதுன்னு திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லி கேட்டுருக்கேன் !!!

கைபூ : (மனசுக்குள்) இந்தாளு நெசமாதேன் சொல்றார இல்லை நம்மளை சுத்தமா ஒழிச்சுபிடணும்னு சொல்றாரா தெரியலையே !!

பொன்ஸ் : எல்லாரும் ப்ளாக்கர்ஸ் மீட்ட்ங்கை ஏதாச்சும் ஹோட்டல், BAR ன்னு தானே வைக்கிறாங்க ! சங்கத்து சிங்கம் சங்கத்து சிங்கம்னு சும்மா சொன்னா போதாது. நெசமாலுமே சிங்கம்னு நிரூபிக்க வவாச மீட்டிங்கை வண்டலூர் zoo விலே நடத்தினாதான் சூப்பரா இருக்கும் !!!

நாகை சிவா : வாவ் சரியான யோசணை ! அப்படியே நம்ம ‘தல’ ஒரு சிங்கத்தோட கழுத்தை கட்டிகிட்டு நின்னு போஸ் கொடுத்தா அதை அப்படியே என் கேமிராவில் சுட்டு ப்ளாக்கில போட்டு படம் காட்டீரமாட்டேன் ?

கைபூ : அப்புறம் எங்க படம் காட்டுறது ? பாடை தான் கட்ட முடியும் ! ஏன்யா ஒரு முடிவோடதான் இருப்பாண்க போல இருக்கே !!

வெட்டிபயல் : சூப்பர் யோசனை. என்ன சிங்கத்து பக்கதிலே நிக்கிரது ? ‘தல’ க்கி அவமானமில்லையா ? சிங்கத்து மேல ஏறி ஒக்காந்துகிட்டு அப்படியே ரெண்டு சிங்கக்குட்டிய மடியிலே வச்சுகிட்டு போஸ் கொடுக்கர மாதிரி கொடுத்தா அப்படியே என்னோட ஹாண்டிகேம்ல சுட்டு ஆர்குட்ல போட்டா போதும், சும்மா பொண்ணூங்க ஈ மாதிரி மொய்க்குமே !!!

ஜொ. பாண்டி : வெட்டி நானெல்லாம் கட்டுமரம் கட்டி நாயா அலைஞ்சு செய்யுரதை நீ சும்ம கம்யூட்டர் முன்னாடி ஒக்கார்துகிட்டு ஒய்யாரமா பண்ணுரியே !! எனக்கும் அந்த டெக்னாலஜிய கத்துக்குடு மாப்ளே !!

கைபூ : யேய் யேய் பாண்டிப்பயலே!! எங்க போனாலும் இந்த வேலைதானா ? சங்கத்தை முன்னேத்துங்கன்னா என்னா பேச்சு பேசிகிட்டு இருக்கீங்க ?

அப்போ வெளியில் ஒரு வண்டி வந்து நிக்கிற சத்தம் கேட்கிறது.

இளா : ‘ தல ‘ ஏதோ கார்பரேஷன்ல இருந்து நாய் புடிக்கிற வண்டி மாதிரி தெரியுதே. சங்கத்து வாசல்ல வேற வந்து நிக்குது ?!

பொன்ஸ் : மாதிரி இல்லை நாய் வண்டியேதான். Zoo ல மீட்டிங்குன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் zoo வுக்கு போறதுக்கு zoo effect லயே ஒரு வண்டிய நாந்தான் ஏற்பாடு செஞ்சேன். நான் சொன்னா என் உடன்பொறவா அண்ணன் மறுப்பாரா ?? சீக்கிரம் சீக்கிரம் சங்கத்து சிங்கம் எல்லாம் நாய் வண்டிலே ஏறுங்க. வண்டலூர்ல போய் மீட்டிங்க கண்டினியூ பண்ணலாம்

பொன்ஸ் உற்சாகமாக சொல்லிக்கொண்டே போக ஆளாளுக்கு துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு தெரித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.


29 comments:

ஜொள்ளுப் பேச்சி said...

நாய் வண்டியா இருந்த என்ன சங்கத்து மீட்டிங்தான் முக்கியம் அப்பு.போயிட்டு வாங்க சங்கத்து சிங்கங்களா!

Anonymous said...

good one.....பொன்ஸ் சங்கத்தில் இல்லைன்னு கேள்விப்பட்டேன்....அது தவறா?

Anonymous said...

// மாதிரி இல்லை நாய் வண்டியேதான். Zoo ல மீட்டிங்குன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் zoo வுக்கு போறதுக்கு zoo effect லயே ஒரு வண்டிய நாந்தான் ஏற்பாடு செஞ்சேன்.//
:)))) கைப்பு இன்னும் வந்து சேரலியே!!!


//நாமதேன் இப்படி பல சிங்கங்களை அலைய உட்டுருக்கோம்லே ?! //
பல சங்கங்களை அலைய உட்ருக்கோம்னு இல்லை இருக்கோணம்.. எழுத்துப் பிழையா? (எ.பி.தி.ச தெரியுமா? எழுத்துப் பிழை திருத்துவோர் சங்கம்..விஜய் படம் மாதிரி இதுவும் ஒரு ஒன் வுமன் ஆர்மி ;) )

//சிங்கத்து மேல ஏறி ஒக்காந்துகிட்டு அப்படியே ரெண்டு சிங்கக்குட்டிய மடியிலே வச்சுகிட்டு போஸ் கொடுக்கர மாதிரி //
ஹலோ, இதெல்லாம் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் செல்லாது.. ஒழுங்கா வண்டலூருக்கு வந்தமா, யானை பூனையெல்லாம் தொல்லை பண்ணாம தூரத்துலேர்ந்து பார்த்தோமா, போனமான்னு வரணும் சொல்லிட்டேன்..

தேவ் | Dev said...

அடுத்த ப்ளாக் மீட் ஹாவாய்ல்ல வைக்கலாம்ன்னு தலச் சொன்னாரே அதைச் சொல்லாம விட்டுட்டியே நியாமா?

தேவ் | Dev said...

பாண்டி பேச்சி பேசுற பேச்சுக்கெல்லாம் நீயே வந்துப் பதில் சொல்லிடுப்பா

Anonymous said...

//இப்போ வர வர வலைபதிவாளர் சந்திப்பு அப்படீங்கறது பேஷனா போயிடுச்சு.//
சங்கம்தான்யா முதன் முதலா பதிவாளர் மீட்டிங்கை பகிரங்கமா போட்டது, வரலாறு எங்களுக்கும் தெரியும் இல்லே.

ஜொள்ளுப்பாண்டி said...

//ஜொள்ளுப் பேச்சி said...
நாய் வண்டியா இருந்த என்ன சங்கத்து மீட்டிங்தான் முக்கியம் அப்பு.போயிட்டு வாங்க சங்கத்து சிங்கங்களா! //

யாரும்மா அது ஜொள்ளூபேச்சி ?? நாய் வண்டியா இருந்தா என்னவா ?? என்ன பொன்ஸக்கா நக்கல் உட்டுகிட்டு இருக்கு நீ அதுக்கு ஒத்தா?? no never சிங்கத்தை அவமானப்படுத்தாதீங்க :)))))

ஜொள்ளுப்பாண்டி said...

//Anonymous said...
good one.....பொன்ஸ் சங்கத்தில் இல்லைன்னு கேள்விப்பட்டேன்....அது தவறா? //

பொன்ஸக்கா சங்கங்களின் ராணிங்கோ !!!

ஜொள்ளுப்பாண்டி said...

//பொன்ஸ் said...
எழுத்துப் பிழை திருத்துவோர் சங்கம்..விஜய் படம் மாதிரி இதுவும் ஒரு ஒன் வுமன் ஆர்மி ;) )//

எழுத்துப்பிழையும் இல்லை சந்திப்பிழையும் இல்லை. இதையே சாக்கா வச்சு ஒரு சங்கத்தை தேத்தீட்டீங்களே பொன்ஸக்கா இது ஞாயமா ?? :)))

ஜொள்ளுப்பாண்டி said...

//தேவ் | Dev said...
அடுத்த ப்ளாக் மீட் ஹாவாய்ல்ல வைக்கலாம்ன்னு தலச் சொன்னாரே அதைச் சொல்லாம விட்டுட்டியே நியாமா? //

அட ஆமா தேவண்ணா விட்டுப்போச்சு சேர்த்துக்கோங்கோ !!!!

ஜொள்ளுப்பாண்டி said...

//Anonymous said...
//இப்போ வர வர வலைபதிவாளர் சந்திப்பு அப்படீங்கறது பேஷனா போயிடுச்சு.//
சங்கம்தான்யா முதன் முதலா பதிவாளர் மீட்டிங்கை பகிரங்கமா போட்டது, வரலாறு எங்களுக்கும் தெரியும் இல்லே. //

யாருப்பா இது ஹிஸ்டரி வாத்தியாரு திரைக்கு பின்னாடி இருந்து கொரல் வுடுரது ??

சங்கத்துக்கு பல வரலாறு இருக்குங்கண்ணா நீங்க எந்த வரலாற சொல்றீங்க?? ;))))

ஜொள்ளுப்பாண்டி said...

//தேவ் | Dev said...
பாண்டி பேச்சி பேசுற பேச்சுக்கெல்லாம் நீயே வந்துப் பதில் சொல்லிடுப்பா //

பதில் சொல்லியாசுங்கண்ணா :)))

தம்பி said...

ஆஹா சங்கத்து சிங்கங்கள் மீட்டிங் Zooல நடக்குதா!

சங்கத்துக்குள்ளவெ பேரு எல்லாம் ஒரு மார்க்கமாதான் இருக்கு.

யோவ் புலி எதுக்கும் பத்திரமா இருந்துக்க நிஜபுலிய பார்க்கும்போது டரியல் ஆகிடப்போற!

தம்பி said...

//வெட்டி நானெல்லாம் கட்டுமரம் கட்டி நாயா அலைஞ்சு செய்யுரதை நீ சும்ம கம்யூட்டர் முன்னாடி ஒக்கார்துகிட்டு ஒய்யாரமா பண்ணுரியே !! எனக்கும் அந்த டெக்னாலஜிய கத்துக்குடு மாப்ளே !!//

வெட்டிய இஞ்ச் பை இஞ்சா புரிஞ்சி வச்சிருக்கியே ஜொள்ஸ். உண்மையிலயே நீ ஒரு தீர்க்கதரிசிதாம்பா!

எப்ப்டியெல்லாம் கரெக்ட் பண்ணுறாங்க பாருய்யா!

நான் எல்லாம் இன்னும் எல்.கே.ஜி லெவெல்லதான் இருக்கேனோ!.

வெட்டி ஆர்குட்டில் ஆளை அமுக்குவது எப்படின்னு ஒரு கோர்ஸ் போட்டேன்னா பைசா தேத்திரலாம்!

சந்தோஷ் aka Santhosh said...

யப்பா சிங்கங்களே, நீங்களா zooவுல மீட்டிங்கை போடலாம் அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்துடிங்க. அங்கன இருக்குற மிருகங்களை பத்தி கொஞ்சமாவது ரோசனை செஞ்சிங்களா?

இலவசக்கொத்தனார் said...

ஆஹா, அடுத்த இடம் வண்டலூரா? நம்ம கிட்ட கூட ஒருத்தர் பொது மாத்து பாத்து நாளாச்சேன்னு சொன்னாரு. எப்ப மீட்டிங்குன்னு சொல்லுங்க. அவரை அனுப்பி வைக்கறேன்.

நாமக்கல் சிபி said...

அட்டகாசமா இருக்கு...

பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தேன் :-)

ஹவாய்ல அடுத்த மீட்டீங்கிற்கு ஆர்குட்ல அழைப்பு போட்டுடுவோமா? ;)

நாமக்கல் சிபி said...

//வெட்டிய இஞ்ச் பை இஞ்சா புரிஞ்சி வச்சிருக்கியே ஜொள்ஸ். உண்மையிலயே நீ ஒரு தீர்க்கதரிசிதாம்பா!

எப்ப்டியெல்லாம் கரெக்ட் பண்ணுறாங்க பாருய்யா!

நான் எல்லாம் இன்னும் எல்.கே.ஜி லெவெல்லதான் இருக்கேனோ!.

வெட்டி ஆர்குட்டில் ஆளை அமுக்குவது எப்படின்னு ஒரு கோர்ஸ் போட்டேன்னா பைசா தேத்திரலாம்//

தம்பி,
ஏற்கனவே உனக்கு ஆப்பு ஒண்ணு ரெடியா இருக்கு... ஜாக்கிரதையா இரு...

இல்லைனா அடுத்த பதிவுல ரெண்டு பேர் மாட்ட வேண்டியதா இருக்கும்...

விநய்? said...

சங்கத்து மீட்டிங் சூப்பருங்கோ!!
அப்படியே அடுத்த பதிவுல, மீட்டிங்ல நடந்த விஷயங்களையும்,
தல என்னென்ன தீர்மானத்துல Sign (கைநாட்டு) போட்டாருங்கிறதையும்
சீக்கிரம் சொல்லுங்க.. ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிறோம்!!

//ஹலோ, இதெல்லாம் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் செல்லாது..//
தல'யும் ஒரே இனம் தானே...அப்புறம் எப்படி மிருகவதையாகும்?? சட்டமே செல்லாது!
தல தான் சிங்கம்மாச்சேனு சொல்ல வந்தேன் ;)

சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள்..
இந்த மாதிரி Zoo'ல மீட்டிங் வச்சா,
ரெண்டு நாளைக்கு முன்னாடியே பேப்பர்ல ஒரு விளம்பரம் போடுங்கன்னா. ஓரே (Zoo) டிக்கெட் காசுல எல்லாத்தையும் (எல்லா மிருகங்களையும்னு படிச்சுராதீங்க!) பாத்துரலாம் பாருங்க...அதுக்குதான் ;)

-விநய்*

Anonymous said...

சங்கத்து மீட்டிங் சூப்பருங்கோ!!
அப்படியே அடுத்த பதிவுல, மீட்டிங்ல நடந்த விஷயங்களையும்,
தல என்னென்ன தீர்மானத்துல Sign (கைநாட்டு) போட்டாருங்கிறதையும்
சீக்கிரம் சொல்லுங்க.. ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிறோம்!!

//ஹலோ, இதெல்லாம் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் செல்லாது..//
தல'யும் ஒரே இனம் தானே...அப்புறம் எப்படி மிருகவதையாகும்?? சட்டமே செல்லாது!
தல தான் சிங்கம்மாச்சேனு சொல்ல வந்தேன் ;)

சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள்..
இந்த மாதிரி Zoo'ல மீட்டிங் வச்சா,
ரெண்டு நாளைக்கு முன்னாடியே பேப்பர்ல ஒரு விளம்பரம் போடுங்கன்னா. ஓரே (Zoo) டிக்கெட் காசுல எல்லாத்தையும் (எல்லா மிருகங்களையும்னு படிச்சுராதீங்க!) பாத்துரலாம் பாருங்க...அதுக்குதான் ;)

-விநய்*

கைப்புள்ள said...

யய்யா பாண்டி,
மீட்டிங்ல எதோ பிரியாணி போடப் போறதா சொன்னியே...அது என்னது ஜீப்ரா பிரியாணி தானே? அதப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை?

பொன்ஸ்~~Poorna said...

பாண்டி, சங்கத்துச் சிங்கமே, பாண்டி நாடு பெற்றெடுத்த தங்கமே..

நீ ஆசைப்பட்டு எழுதிய அடுத்த நொடியே அண்ணன் கைப்புவின் பெயர் நிலைத்து நிற்க வேண்டி, மற்ற சங்கங்கள், பேரணிகள் மூலமாக ஏற்பாடு செய்து விட்டேன் இந்தச் சென்னை வலைப்பதிவர் சந்திப்பை !

முழங்கட்டும் தாரையும் தப்பட்டையும்.

சங்கப் போர்வாளே தேவ்,
சென்னையின் திரையரங்கங்களைக் குறிவைத்துப் போனது போதும்!திரைவிமர்சனங்களால் குழம்பிக் கிடக்கும் அந்தச் சென்னைக் கச்சேரியை உண்மையான வலைப்பதிவர் சந்திப்பால் தெளிவிக்கும் காலம் வந்துவிட்டது! புறப்பட்டு வா! பொங்கி எழுந்து வா!!

மீட்டிங் போகாமலே படம் காட்டிக் கொண்டிருக்கும் கூட்டம் என்ற அவப்பெயரை நம் சங்கத்தை அண்ட விடலாமா? கைப்புவின் புகழை மங்க விடலாமா? நூறாவது பதிவு கண்டபின்னும் ஒரே ஒரு சந்திப்பைக் காணாமல் இருப்பது தகுமா?

அண்ணன் கைப்புள்ளையின் புகழ் திக்கெட்டும் எட்ட, கொட்டுங்கள் முரசை! கிளம்புங்கள் சிங்கங்களே...

எந்த ஏரியான்னு சொன்னீங்கன்னா நாய் வண்டியைத் திரும்பவும் ஒரு ரவுண்டு அனுப்பி வைக்கிறேன் ;)

ஜொள்ளுப்பாண்டி said...

//தம்பி said...
ஆஹா சங்கத்து சிங்கங்கள் மீட்டிங் Zooல நடக்குதா!

சங்கத்துக்குள்ளவெ பேரு எல்லாம் ஒரு மார்க்கமாதான் இருக்கு.

யோவ் புலி எதுக்கும் பத்திரமா இருந்துக்க நிஜபுலிய பார்க்கும்போது டரியல் ஆகிடப்போற! //

அட தம்பி இப்படி பேரப்பார்த்தே மெரண்டு போனா எப்படியப்பூ?? இன்னும் ஆப்பு வாங்குன அப்பூ கதையெல்லாம் லைன்ல இருக்கு !!!

என்னாது புலி டரியலா ?? ஹஹஹஹ்ஹா நாங்கெல்லாம் புலிகே புல்லுக்கொடுக்குறவுகப்பூ ;))))

ஜொள்ளுப்பாண்டி said...

//சந்தோஷ் said...
யப்பா சிங்கங்களே, நீங்களா zooவுல மீட்டிங்கை போடலாம் அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்துடிங்க. அங்கன இருக்குற மிருகங்களை பத்தி கொஞ்சமாவது ரோசனை செஞ்சிங்களா?//

அட என்னா சந்தோஷ் !! அங்கன இருக்குற மிருகங்கள் எல்லாம் நம்மளை விட பரிதாப கேஸ்ஸுங்கோ ;)))

ஜொள்ளுப்பாண்டி said...

//இலவசக்கொத்தனார் said...
ஆஹா, அடுத்த இடம் வண்டலூரா? நம்ம கிட்ட கூட ஒருத்தர் பொது மாத்து பாத்து நாளாச்சேன்னு சொன்னாரு. எப்ப மீட்டிங்குன்னு சொல்லுங்க. அவரை அனுப்பி வைக்கறேன். //

கொத்ஸ் பொது மாத்து எல்லாம் ஓல்ட் பேஷன் ஒன்லி டிஜிடல் ஆப்பு ஓகே ? வர்றவரை பார்த்து வர சொல்லுங்கோ எந்த புத்துலே எந்த ஆப்பு இருக்குதோ ஆருக்குத்தெரியும் ;))))

ஜொள்ளுப்பாண்டி said...

//வெட்டிப்பயல் said...
அட்டகாசமா இருக்கு...

பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தேன் :-)

ஹவாய்ல அடுத்த மீட்டீங்கிற்கு ஆர்குட்ல அழைப்பு போட்டுடுவோமா? ;) //

வாப்பா வெட்டி :)) அட பார்த்து கண்ணு வுழுந்து வுழுந்து சிரிச்சு எங்காச்சும் அடி பட்டுர போகுது. அப்புறம் ஆர்குட்டுல ஒன்னிய நம்பி இருக்குர ஜீவனுகளையெல்லாம் ஆரு காப்பாத்துவா ?? பைய பைய சிரிக்கோணும் சரியாப்பூ?? ;))))

ஜொள்ளுப்பாண்டி said...

//கைப்புள்ள said...
யய்யா பாண்டி,
மீட்டிங்ல எதோ பிரியாணி போடப் போறதா சொன்னியே...அது என்னது ஜீப்ரா பிரியாணி தானே? அதப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை? //

தல என்னா இப்படி பிரியாணி கேட்டுபுட்டீக. நம்ம ராம் கிட்டெ சொல்லி வச்சுருக்கேன்.,கோனார் மெஸ்ஸையே வண்டலூருக்கு கொண்டு வந்துருவாருல்ல?? ஜீப்ரா பிரியாணி நல்லா இருக்காது. பேசாம மான் பிரியாணி தேருமான்னு பார்ப்போம். மக்கா தலக்கி பிரியாணி வேணுமாம் வேட்டைக்குப் போவோணும் துப்பாக்கியோட வாங்கப்பூ !!!;))))

ஜொள்ளுப்பாண்டி said...

//பொன்ஸ் said...
பாண்டி, சங்கத்துச் சிங்கமே, பாண்டி நாடு பெற்றெடுத்த தங்கமே..

நீ ஆசைப்பட்டு எழுதிய அடுத்த நொடியே அண்ணன் கைப்புவின் பெயர் நிலைத்து நிற்க வேண்டி, மற்ற சங்கங்கள், பேரணிகள் மூலமாக ஏற்பாடு செய்து விட்டேன் இந்தச் சென்னை வலைப்பதிவர் சந்திப்பை !

முழங்கட்டும் தாரையும் தப்பட்டையும்.//

ஆஹா பொன்ஸக்கா தாரை தப்பட்டிஅ சத்தம் கேட்டு இப்போவே லேசா உடம்பு உலுக்கி உலுக்கி போடுதே. யாருபா அது பொன்ஸாத்தா ஏற்பாடு பண்ணுர மீடிங்குக்கு அல்லாறும் உடுக்கை எடுத்துகிட்டு வந்துருங்கோ.

யக்கா 'மீட்டிங்'கு அப்புறம் 'கட்டிங்' உண்டா ?? ;))))

Anonymous said...

அடுத்த meeting எப்பங்கோவ்வ்வ்வ்வ்வ்??????
கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்கோ....