Tuesday, September 30, 2008

எல்லோருக்கும் நன்றி!!! கேப்டனுக்கும் நன்றி!!!

எல்லோருக்கும் வணக்கம்.

எனக்கு அதிகமா எழுத வராது. ஆனா, நம்மளையும் மதிச்சி சங்கத்திலே கேக்கும்போது மறுக்கமுடியாம சிங்க அழைப்பை ஏத்துக்கிட்டேன்.

அன்னிக்கே வீட்லே சொல்லிட்டாங்க - சங்கத்திலே மட்டும்தான் நீங்க சிங்கம். அதுவும் ஒரே ஒரு மாசம்தான். வீட்லே எப்போவும் போல **&*$%** தான் அப்படின்னு. நானும் சரின்னு தலயை (அஜீத்தை இல்லீங்க) நல்லா ஆட்டி ஒத்துக்கிட்டேன்.

நான் இனிமே வவாச எழுதலே - அதனாலே வாலிபன் இல்லே - அப்படின்னு யாரும் தயவு செய்து நினைச்சிடாதீங்க... நான் எப்பவுமே வாலிப வாலிப அன்பன் தாங்க. (இந்த நேரம் யாரும் துக்ளக் பின்னட்டை விளம்பரத்தை நினைக்காதீங்க....)

என்னுடைய எல்லா மொக்கைகளையும் பொறுத்துக்கிட்டு பின்னூட்டம் போட்டவங்களும், பின்னூட்டம் போடாத கோடிக்கணக்கான மக்களுக்கும், சங்கத்துக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.. (அட.. கையெல்லாம் தட்டாதீங்கப்பா....)

போறதுக்கு முன்னாடி நம்ம கேப்டனுக்கு ஒரு முறை நன்றி கூறிவிட்டு சில புள்ளிவிவரங்களை கொடுக்கிறேன்.

மீண்டும் உங்க எல்லாரையும் பூச்சாண்டியில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ச்சின்னப்பையன்... ச்சின்னப்பையன்... ச்சின்னப்பையன்...

சிங்கமாக எழுதிய மொத்த பதிவுகள்: 23 (இதையும் சேர்த்து)

கிடைத்த மொத்த பின்னூட்டங்கள்: 445 (இந்த பதிவை சேர்க்காமல்)

ஒரு பதிவுக்கு வந்த அதிக பின்னூட்டங்கள்:47

ஒரு பதிவுக்கு வந்த குறைந்த பின்னூட்டங்கள்: 8

நடுனடுவே வவாசவில் மற்றவர்கள் போட்ட பதிவுகள்: 5

நான் துவங்கும்போது வவாச்வின் Counter: 123050

நேற்றைய தேதியில் Counter: 137500


Sunday, September 28, 2008

இது வகுச-லேந்து சுட்டது!!!


பிஸ்கட் பிஸ்கட்

ஜாம் பிஸ்கட்

என்ன ஜாம்?

கோ ஜாம்

என்ன கோ?

டீ கோ

என்ன டீ?

ரொட்டி

என்ன ரொட்டி?

பன் ரொட்டி

என்ன பன்?

ரிப்பன்

என்ன ரிப்பன்?

பச்சை ரிப்பன்

என்ன பச்சை?

மா பச்சை

என்ன மா?

அம்மா

என்ன அம்மா

டீச்சரம்மா

என்ன டீச்சர்?

கணக்கு டீச்சர்

என்ன கணக்கு?

வீட்டு கணக்கு

என்ன வீடு?

மாடி வீடு

என்ன மாடி?

மொட்டை மாடி

என்ன மொட்டை?

பழனி மொட்டை

என்ன பழனி?

வட பழனி

என்ன வட?

ஆமை வடை

என்ன ஆமை?

குளத்து ஆமை

என்ன குளம்?

திரி குளம்

என்ன திரி?

விளக்கு திரி

என்ன விளக்கு?

குத்து விளக்கு

என்ன குத்து?

கும்மாங் குத்து.... ஹாஹாஹா....

பிகு: அங்கங்கே ச்சின்னச்சின்ன தப்பு இருக்கும்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா, அது வகு சங்கத்தை சேந்தவங்ககிட்டேதான் கேக்கணும்!!!


Friday, September 26, 2008

வாலின் தலை எந்த சர்ச்சையிலும் அடிபடாமல் இருக்க 100 யோசனைகள்!!!

பதிவர் நண்பர் வால்பையன் மிகவும் வருத்தப்பட்டு நேற்று ஒரு பதிவு போட்டிருந்தார். அவருடைய தலை இனிமேல் எந்த சர்ச்சையிலும் அடிபட்டு உருளாது இருக்க நம்மாலான 100 யோசனைகளை தரலாமென்று நினைத்து இந்த பதிவிடுகிறேன்...


வால் -> இனிமேல் இந்த பதிவுத்தலைப்புகளில் மட்டுமே பதிவிடுங்கள்... இதற்காக நீங்கள் எனக்கு நன்றி கூறியெல்லாம் பதிவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


எலிக்குட்டியை சற்றே கீழே உருட்டுங்கள்...





கீழே





சற்றே கீழே...




இசையை துவக்குக......



1. மொக்கை
2. பயங்கர மொக்கை
3. சூப்பர் மொக்கை
4. அருமையான மொக்கை
5. மொக்கையோ மொக்கை
6. மென்மையான மொக்கை
7. கடுமையான மொக்கை
8. நல்ல மொக்கை
9. கெட்ட மொக்கை
10. லோக்கல் மொக்கை
11. ஃபாரின் மொக்கை
12. உலக மொக்கை
13. சொந்த மொக்கை
14. அடுத்த வீட்டு மொக்கை
15. எதிர் வீட்டு மொக்கை
16. மேல் மொக்கை
17. கீழ் மொக்கை
18. வலது மொக்கை
19. இடது மொக்கை
20. சன்டே மொக்கை
21. மண்டே மொக்கை
22. ட்யூஸ்டே மொக்கை
23. வெட்னஸ்டே மொக்கை
24. தர்ஸ்டே மொக்கை
25. ஃப்ரைடே மொக்கை
26. சாடர்டே மொக்கை
27. வீக் ஸ்டார்ட் மொக்கை
28. வீக் எண்ட் மொக்கை
29. ஞாயிறு மொக்கை
30. திங்கள் மொக்கை
31. செவ்வாய் மொக்கை
32. புதன் மொக்கை
33. வியாழன் மொக்கை
34. வெள்ளி மொக்கை
35. சனி மொக்கை
36. வார துவக்க மொக்கை
37. வாரயிறுது மொக்கை
38. ஜனவரி மொக்கை
39. பிப்ரவரி மொக்கை
40. மார்ச் மொக்கை
41. ஏப்ரல் மொக்கை
42. மே மொக்கை
43. ஜூன் மொக்கை
44. ஜூலை மொக்கை
45. ஆகஸ்ட் மொக்கை
46. செப்டம்பர் மொக்கை
47. அக்டோபர் மொக்கை
48. நவம்பர் மொக்கை
49. டிசம்பர் மொக்கை
50. சித்திரை மொக்கை
51. வைகாசி மொக்கை
52. ஆனி மொக்கை
53. ஆடி மொக்கை
54. ஆவணி மொக்கை
55. புரட்டாசி மொக்கை
56. ஐப்பசி மொக்கை
57. கார்த்திகை மொக்கை
58. மார்கழி மொக்கை
59. தை மொக்கை
60. மாசி மொக்கை
61. பங்குனி மொக்கை
62. விடியல் மொக்கை
63. முற்பகல் மொக்கை
64. மதிய மொக்கை
65. பிற்பகல் மொக்கை
66. மாலை மொக்கை
67. முன்னிரவு மொக்கை
68. நள்ளிரவு மொக்கை
69. பின்னிரவு மொக்கை
70. அரியலூர் மொக்கை
71. சென்னை மொக்கை
72. கோவை மொக்கை
73. கடலூர் மொக்கை
74. தர்மபுரி மொக்கை
75. திண்டுக்கல் மொக்கை
76. ஈரோடு மொக்கை
77. காஞ்சிபுரம் மொக்கை
78. கன்னியாகுமரி மொக்கை
79. கரூர் மொக்கை
80. கிருஷ்ணகிரி மொக்கை
81. மதுரை மொக்கை
82. நாகை மொக்கை
83. நாமக்கல் மொக்கை
84. நீலகிரி மொக்கை
85. பெரம்பலூர் மொக்கை
86. புதுக்கோட்டை மொக்கை
87. ராமநாதபுரம் மொக்கை
88. சேலம் மொக்கை
89. சிவகங்கை மொக்கை
90. தஞ்சாவூர் மொக்கை
91. தேனி மொக்கை
92. தூத்துக்குடி மொக்கை
93. திருச்சி மொக்கை
94. திருநெல்வேலி மொக்கை
95. திருவண்ணாமலை மொக்கை
96. திருவாரூர் மொக்கை
97. திருவள்ளூர் மொக்கை
98. வேலூர் மொக்கை
99. விழுப்புரம் மொக்கை
100. விருதுநகர் மொக்கை





Thursday, September 25, 2008

ஒரு மென்பொருள் நிபுணரின் கதை...!!!

1996 - ஜனவரி 1:

"அப்பா. இங்கே வந்து பாருங்கப்பா. நான் இந்த வருஷ போனஸ்லே இந்த புது BSA SLR சைக்கிள் வாங்கியிருக்கேன்".

"ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்கம்மாவை பின்னாடி உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா".


2003 - ஜனவரி 1

"அம்மா, இங்கே வந்து பாரும்மா. நம்ம குடும்பத்திலே முதல்முதல்லே நான் கார் வாங்கியிருக்கேன்."

"ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உன் பொண்டாட்டியை பக்கத்துலே உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா."


2009 - ஜனவரி 1

(மனைவியிடம்) "ஏம்மா, இங்கே வந்து பாரு. ஆறு மாசமா சேமிச்ச பணத்திலேர்ந்து ஒரு புது சைக்கிள் வாங்கியிருக்கேன்".

"ரொம்பவே சூப்பரா இருக்குங்க. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்க பொண்ணை உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வாங்க".


செய்தி:

அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாவதைத் தொடர்ந்து, இந்தியாவில் மென்பொருள் நிறுவனங்களுக்கு ப்ராஜக்ட்ஸ் வருவது குறையும் என்று நம்பப்படுகிறது.

பல நிறுவனங்களில் ஏற்கனவே ஆட்குறைப்பு, கணிசமான சம்பளம் குறைப்பு ஆகியவை துவங்கிவிட்டன.

ஆனால், நான் வேலை செய்யும் நிறுவனம் போலவே எல்லா நிறுவனங்களும் இத்தகைய நடவடிக்கைகளை மறுத்து வருகின்றன.... :-(

ஆனாலும், எதற்கும் மனம் தளராத விக்கி போல் ( நம்ம விக்கி இல்லீங்க...), எதற்கும் வருத்தப்படாமல், பதிவுகளா, பின்னூட்டங்களா போட்டுத் தள்ளுங்கன்னு சங்கத்தின் சார்பாக வருத்தப்படாமல் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...

Wednesday, September 24, 2008

ர்ரிவர்ஸிபிள் (irreversable) - ஒரு உப்புமா முயற்சி!!!

நானும் நேத்து காலைலேர்ந்து யோசிச்சி யோசிச்சி ரொம்ப டயர்டா இருக்கேன்.

ர்ரிவர்ஸிபிள் - அப்படின்னா என்ன? கிழே இருக்கிற படத்தை பாருங்க.




இது பேருதான் உப்புமா. (சாப்பிட குடுக்கும்போது தங்கமணி அப்படித்தான் "சொல்லிக்" கொடுத்தாங்க!!!).

இதிலே உப்பு, ரவை, நெய், கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், மிளகாய், தண்ணீர், புளித்த மோர் எல்லாம் சேத்து செஞ்சிருக்காங்க..

ஆனால், உப்புமா ஆனபிறகு மறுபடி மேலே கூறிய பொருட்களை தனித்தனியா பிரித்தெடுக்க முடியுமா?


அதனால், ர்ரிவர்ஸிபிள் = உப்புமா அப்படிங்கற தீர்மானத்துக்கு நான் வந்துட்டேன்..


நீங்க என்ன சொல்றீங்க?


முக்கியமான பின்னுரை:

இதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு உப்புமா பற்றிய பதிவுகள் இருக்காதுன்றதை நான் இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாக கூற விரும்புகிறேன்...

ஆபீஸுல எபபடித் தூங்கறது?

கேள்வி: தல,ஆபீஸுல எபபடி தூங்கறது?
கைப்பு: கண்ண மூடிட்டுதான்.

Tuesday, September 23, 2008

ரெண்டு வருட காலம் உழைத்து நான் கற்ற மொழி...!!!

ஸ்பானிஷ் மொழியைப் படிக்க வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஸ்பானிஷில் ஒரு பக்கம், இரண்டு பக்கம், நாலு பக்கம் எழுதும் அளவுக்கு மொழி கைவசப்படும்.


சமீபத்தில் இதை படித்தவுடனேயே, டக்கென்று கொசுவர்த்தி கொளுத்தி விட்டேன்.


நானும் 'அந்த' மொழியை படிக்க/பேச எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். தினமும் போவோர் வருவோரிடமெல்லாம் 'அந்த' மொழி தெரியுமா என்று கேட்டு, அவரிடத்தில் பேசுவேன். சரியாக இரண்டே இரண்டு வருடம், 'அந்த' மொழியில் தேர்ச்சி பெற்றேன். என் திறமையைக் கண்டு என் பெற்றோரும், நண்பர்களும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


சரி சரி.. பில்டப் போதும்... 'அந்த' மொழி எந்த மொழி என்று கேட்பவர்கள் சிறிது கீழே படிக்கவும்....


கணிணிக்கு கீழேயல்ல... கணிணித்திரையிலேயே கீழே....



...கீழே...




.. இன்னும் கொஞ்சம்...




... ப்ளீஸ்...




அந்த மொழி : தமிழ்
கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது என் வயது: இரண்டு


Monday, September 22, 2008

வ.வா. சங்கமும் 2011ம்

கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

ப:செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க...


கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...


கே:மக்கள் மத்தியிலே உங்க வ.வா.ச கூட்டணிக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

ப: இது கேள்வி... நல்லா கேக்குறப்பூ...
வயல்ல மவுசு தின்ன விவசாயில்லருந்து ... வேலியில்ல கம்ப்யூட்டர் முன்னாடி மவுசு உருட்டற பயபுள்ளக வரைக்கும் வ.வா.சக்கு தான் மவுசு... எங்க கூட்டணி தான் ரவுசு.... அம்புட்டு பயலும் நம்ம சங்கத்து மேல பாச மழையப் பொழியறாங்க... ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல). அ.உ.ஆ.சூ.கு.க கொ.பா.செ செல்வனாரும் இதையே தான் சொல்லுறார்... இப்படி இப்போ என்க கையிலே இருக்க ஓட்டை எண்ணிப் பார்த்தாலே நாங்க எங்கிட்டோ லீடிங்ல்ல இருக்கோம் தம்பி...
இது தெரியாமா.. எதிர் கட்சிக்காரய்ங்க கிரகம் ஆடுறாயங்க....ஹய்யோ...ஹய்யோ...

கே: உங்க சங்கத்துல்ல ஆளே இல்லன்னு ஒரு குற்றசாட்டு அது பத்தி சொல்லுங்களேன்..
ப: இது என்ன சுப்பித்தனமாப் பேசுற...வாலிப சங்கம்ய்யா இது... இளைஞர்கள்ன்னா அங்கே இங்கேப் போய் அப்பிடி இப்பிடி இருப்பான்... அவங்களை எல்லாம் ஒரே இடத்துல்ல வச்சு எண்ணுறதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாதுப்பா...
எங்க சங்கத்து தம்பி பாண்டி டாவு கட்டுற புள்ளங்களை எண்ணுனா அதுவே அந்தக் கட்சிக்கு விழுற ஓட்டை விட மூணு மடங்கு அதிகம் இருக்கும்ப்பா எண்ண தெரியாததும் எண்ண முடியாததும் எதிர் குருப்போட வீக்னஸ் அப்பு... அந்த விவஸ்தக் கெட்ட கூட்டம் கூவிச்சுன்னு வக்கனையா நீயும் கேக்குற.. பாத்துக் கேளுப்பா இல்ல பத்திக்கும்....

கே: ப.ம.க பற்றி?
ப:நல்லவர்கள் நிறைந்த அந்த இயக்கம் இன்று பிளவுப் பட்டு கிடப்பது மனத்தை வாட்டுகிறது....ஒரு உண்மையச் சொல்லுறேன் அந்தக் கட்சி இப்போ தாலிபன் பிடியிலே இருக்கு....அதைக் காப்பாத்த
இந்த கைப்புள்ள வாலிபனால்
மட்டுமே முடியும் என அங்குள்ளவர்கள் உண்மையாக நம்புகிறார்கள்.. விரும்புகிறார்கள்... இது யாராலும் மறுக்க முடியாது...
என்ன ஆனாலும் சரி... பரிதாபகரமாக இருக்கும் ப.ம.க வை ஆண்டவன் மற்றும் அ.உ.ஆ.சூ.கு.க , மல்லிகை கூட்டணித் தோழ்ர்கள்...வ.வா.ச செயல் சிங்களின் துனை கொண்டு இந்தக் கைப்பு மீட்பதை யாராலும் தடுக்கவே முடியாது....

எல்லாரும் மீள் பதிவு எழுதுறபோது நாங்களும் டைமிங்கா போடுவோம்ல.. முன்னாடியே நாங்க இந்த விஷயத்தைப் பத்தி எழுதுன பதிவு

பதிவர்களின் நலனுக்காக எனது முதல் சமையல் குறிப்பு...!!!










Friday, September 19, 2008

இந்த வாரயிறுதியில் நான் செய்யப்போகும் வேலைகளின் நீண்ட பட்டியல்!!!

ரொம்ப நாட்களாக தள்ளிக்கொண்டே போன வேலைகள் சிலவற்றை இந்த வாரயிறுதியில் செய்தே ஆகவேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். யார் நினைத்தாலும் என்னைத் தடுக்கமுடியாது என்றும் கூறிவிட்டேன்.

அதன்படி, செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் தயார் செய்துகொண்டுவிட்டேன். அது உங்கள் பார்வைக்கு.... பட்டியலில் ஏதேனும் விட்டுப்போயிருந்தால், தயவு செய்து எனக்கு உடனே தெரியப்படுத்தவும்...

சனிக்கிழமை:

1. காலையில் சிற்றுண்டி
2. சிறு தூக்கம்
3. மதிய உணவு
4. சிறிது நேரம் ஓய்வு
5. மாலை சிற்றுண்டி
6. சிறிது நேரம் கட்டையை சாய்த்தல்
7. இரவு உணவு
8. இரவுத் தூக்கம்

ஞாயிற்றுக்கிழமை:

1. காலையில் சிற்றுண்டி
2. சிறு தூக்கம்
3. மதிய உணவு
4. சிறிது நேரம் ஓய்வு
5. மாலை சிற்றுண்டி
6. சிறிது நேரம் கட்டையை சாய்த்தல்
7. இரவு உணவு
8. இரவுத் தூக்கம்

Wednesday, September 17, 2008

சுயசொறிதல் எனக்கும் பிடிக்காது - சென்ஷி, பரிசல் FYI...


நான் முதல் பதிவு போட்டு சுமார் 9 மாதங்களாகின்றது. தொடக்கத்திலிருந்தே எனக்கு சுயசொறிதல் பிடித்ததேயில்லை. நேற்றிலிருந்து தமிழ்மணத்தில் இப்படிப்பட்ட தலைப்புகள் சுற்றிக்கொண்டிருப்பதால், நானும் என் சார்பு நிலையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன்.


ஆனால், சில சமயம் சுயசொறிதல் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, நான் செய்வது என்னவென்றால்....

கீழே போய் பார்க்கவும்...

...



..

கீழே...



...

..

இன்னும் கொஞ்சம்தான்...



...


சஹானாவிடம் சீப்பு கொடுத்து உதவி கேட்பேன்... ஹிஹி... பின்னே முதுகுலெல்லாம் ஒரு மனுசனாலே எப்படி சுயசொறிதல் செய்யமுடியும், சொல்லுங்க....




Tuesday, September 16, 2008

ஜிங்சக்... ஜிங்சக்... ஜிங்சக்...!!!

அலுவலகத்தில் ஜால்ரா
அடிப்பவர்களைப் பார்த்தால்

சில சமயங்களில்
சிரிப்பாக இருக்கிறது

பல சமயங்களில்
பயங்கர கோபமாய் வருகிறது

என் மேல் எனக்கே
ஏகப்பட்ட வெறுப்பாய் இருக்கிறது

என்ன காரணமாக இருக்கும்
என்று நினைத்துப் பார்க்கிறேன்

ஒரு வாரமாக தினமும்
ஒரு கடைவிடாமல் தேடியும்

ஜிங்சக் போட
ஜால்ரா கிடைக்கவில்லை

பல கடைகளில் சொல்கிறார்கள்
பயங்கர டிமாண்டாம்

அட்வான்ஸ் புக்கிங் செய்து
அள்ளிப் போகிறார்களாம்

இனியும் தாமதிக்க வேண்டாமென்று
இணையத்தில் தேடினேன்

ஈபேயில் வாங்கியது கைக்கு வந்து சேரும்வரை
ஈஈயென இளிக்கவேண்டும் வாய் காதுக்கு வரும்வரை...

Friday, September 12, 2008

கொஞ்சம் காசு இருந்தா குடுங்க...!!!



என் சிரிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் சிரிக்கமுடியவில்லை!!!




என் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் பேசமுடியவில்லை!!!




என் பணம் அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் செலவழிக்கமுடியவில்லை!!!

அதனால், கொஞ்சம் காசு இருந்தா குடுங்க...!!!

பெண்கள் மென்பொருள் துறையில் பட்டையை கிளப்புவது எப்படி?

மத்த எல்லா துறைகளையும் விட மென்பொருள் துறைல பொண்ணுங்க அதிகமா வேலை செய்யறதுக்கு என்ன காரணம்னு ரொம்ப நாளா சிந்திச்சிருக்கேன். பதில் தெரியவே இல்லை. சரி யாரை கேக்கலாம்னு யோசிக்கும் போது மென்பொருள் துறைல யார் யார் வந்தா எப்படி எப்படி வேலை செய்வாங்கனு அந்த துறையை புரிஞ்சிருக்கறவரும், பொண்ணுங்க மனசை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கறவருமான நம்ம அட்லாஸ் சிங்கம் ச்சின்னப்பையனை கேட்டுடலாம்னு ஒரு ஃபோனை போட்டேன்.

ச்சி.பை : என்னப்பா வெட்டி எப்படி இருக்க?

வெ.ப: நல்லா இருக்கேண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?

ச்சி.பை: நான் என்ன உன்னை மாதிரி தங்கமணியை இந்தியாக்கா அனுப்பிருக்கேன். இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு டென்ஷனாக்காதப்பா.

வெ.ப: சரி சரி. எனக்கு ஒரு சந்தேகம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.

ச்சி.பை: எனக்கும் ஒரு சந்தேகமிருக்கு. தங்கமணியை இந்தியா அனுப்புவது எப்படினு ஒரு பதிவு போடேன். மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

வெ.ப: அண்ணே. அதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம். இப்ப எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம். அதை தீர்த்து வைங்க.

ச்சி.பை: சரிப்பா. சொல்லு.

வெ.ப: மத்த எல்லா துறையும் விட மென்பொருள் துறைல பெண்கள் அதிகமா இருக்கறதுக்கு காரணமென்ன?

ச்சி.பை: இது ஒரு நல்ல கேள்வி.

வெ.ப: பதிலை சொல்லுங்கண்ணே!

ச்சி.பை: இதுக்கு நான் பதில் சொல்றதை விட சில பல கேள்விகள் கேக்கறேன். அதுல இருக்குற சூட்சமத்தை புரிஞ்சிக்கிட்டா உனக்கே தானா புரிஞ்சிடும்.

வெ.ப: சரிண்ணே. கேள்வியை கேளுங்க

ச்சி.பை: சாப்ட்வேர்ல அதிகமா எல்லாரும் என்ன வேலை செய்வாங்க?

வெ.ப: டெவலப்பர்.

ச்சி.பை: டெவலப்பர்ஸ் அதிகமா என்ன செய்வாங்க?

வெ.ப: காப்பி பேஸ்ட்

ச்சி.பை: நதியா தோடு, குஷ்பூ ஜாக்கெட், சித்தி ராதிகா புடவை, கஜோல் சல்வார் இந்த மாதிரி பல ஐட்டம்ஸ் இருக்கு. ஆனா அஜித் சட்டை, விஜய் பேண்ட், சிம்பு பர்முடாஸ்னு ஏதாவது இருக்கா?

வெ.ப: இல்லையேண்ணே.

ச்சி.பை: இது தான் காப்பி பேஸ்ட்டோட துவக்கமே. இதுல யாரு எக்ஸ்பர்ட்னு புரியுதா?

வெ.ப: புரியுதுண்ணே.

ச்சி.பை: அது. அடுத்து என்ன வேலை அதிகமா செய்யறாங்க?

வெ.ப: டெஸ்டிங்

ச்சி.பை: அதுல என்ன பண்ணுவாங்க.

வெ.ப: எதுல என்ன தப்பு இருக்குனு கண்டுபிடிப்பாங்க.

ச்சி.பை: அப்படினா பொண்ணுங்க எல்லாம் பிறப்பாலே டெஸ்டர்ஸ் தான்பா. அவுங்களுக்கு எல்லாம் ட்ரெயினிங்கே கொடுக்க தேவையில்லை.

வெ.ப: எப்படினே சொல்றீங்க?

ச்சி.பை: மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனையெல்லாம் தெரியாதா உனக்கு? இந்த மாதிரி மாமனார்- மருமகன் பிரச்சனைனோ, மாமன் மச்சான் பிரச்சனனோ ஏதாவது இருக்கா? ஒரு பொண்ணு கல்யாணமாகி வந்தா ஒரே நாள்ல அவள பத்தி ஆயிரம் Bugsஐ ஒரு மாமியாராலயும், நாத்தனாராலயும் ரிப்போர்ட் பண்ண முடியும். அதே மாதிரி மாமியார் நாத்தனாரை பத்தி ஆயிரம் Bugsஐ அந்த பொண்ணு ரிப்போர்ட் பண்ணும். ஆனா நம்ம பையனால ஒரு நாலு அஞ்சி பக்ஸ் கூட ரைஸ் பண்ண முடியாது.

வெ.ப: ஓ. அப்ப பொண்ணுங்க டெஸ்டிங்லயும் பட்டையை கிளப்புவாங்கனு சொல்றீங்க?

ச்சி.பை: நான் என்ன சொல்றது. உலகத்துக்கே அது தெரியும். அடுத்து என்ன வேலை அதிகமா பண்றாங்க?

வெ.ப: மெயிண்டனன்ஸ் ப்ராஜக்ட்

ச்சி.பை: அதுல என்ன செய்வாங்க?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச ப்ராஜக்ட்க்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை இருந்தா ஏற்கனவே பண்ணியிருந்ததுல கொஞ்சம் மாறுதல் செய்வாங்க. அதிகமான வேலை இருக்காது.

ச்சி.பை: இட்லி உப்புமானா என்னனு தெரியுமா?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச இட்லி மீந்துச்சுனா வீணாகாம இருக்க அதை கொஞ்சம் மாத்தி எல்லாரும் சாப்பிடற மாதிரி கொடுக்கறது.

ச்சி.பை: அதே அதே. நீ முன்னாடி சொன்னதும் கொஞ்சம் கொஞ்சம் அது மாதிரி தானே ;)

வெ.ப: அண்ணே. எங்கயோ போயிட்டீங்க. அடுத்து டேமஜர்.. சாரி சாரி மேனேஜர்

ச்சி.பை: அதுல எல்லாரையும் வேலை வாங்கனும். அப்படி தானே?

வெ.ப: ஆமாம்னே.

ச்சி.பை: இது நான் உனக்கு சொல்லி தான் தெரியனுமா? வேலை வாங்கறதுல பொண்ணுங்களை மிஞ்ச ஆள் இருக்கா? காலேஜ் படிக்க ஆரம்பிக்கும் போது பசங்க பொண்ணுங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கறானுங்க. அது கட்டைல போற வரைக்கும் கண்டினியூ ஆகுது. சரி தானே?

வெ.ப: ஆமாங்கண்ணே...

ச்சி.பை: போதுமா இல்லை இன்னும் ஏதாவது வேணுமா?

வெ.ப: பொதும்ணே.. பொதும். என் அறிவு கண்ணை திறந்து வெச்சிட்டீங்க... பொண்ணுங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியராகற திறமை பை பர்த்தே இருக்குனு புரிய வெச்சிட்டீங்க.

ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.

வெ.ப: இதெல்லாம் நீங்க சொல்லனுமா? என்ன மக்களே. ரெடி தானே? கும்மி அடிக்கின்ற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

Thursday, September 11, 2008

நலம் நலமறிய ஆவல்...

காதல் கோட்டை படத்தில் ஒரு அருமையான பாடல் 'நலம் நலமறிய ஆவல்...'. இது காதலர்கள் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி பாடறது.

அதே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு அறுபது நாள் ஆனப்பிறகு (என்ன வெட்டி?... முப்பது நாள் போதுமா...) பாடினா எப்படி இருக்கும்றதுதான் இந்த கற்பனைப் பாடல்.

இது ஒரு ஜாலியான கற்பனைதான். அந்த பாட்டை கொலை செய்யும் முயற்சி இல்லை. அதனாலே, பின்வர்ற பாட்டை அதே மெட்டுலெ பாடி, எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

நம்ம ஹீரோ தனியா வெளிநாட்டுக்கு வந்துடறார். ஹீரோயின் இந்தியாவிலே....

இன்னொரு முக்கியமான விஷயம். ஒரிஜினல் பாட்டுலே - கேள்விகள் ஹீரோ கேக்கறமாதிரியும், பதில்கள் ஹீரோயின் சொல்றாமாதிரியும் இருக்கும். இங்கே அது அப்படியே உல்டா.

இப்போ பாட்டு....

நலம்.. நலமறிய ஆவல்... உன் நலம் நலமறிய ஆஆவல்...

நான்இங்கு சுகமே.... நீ அங்கு சுகமா?... ( நான்)

தீண்டவரும் காற்றினையே இங்கனுப்புங்க...... வேர்க்கிறதே...
ஏற்கனவே சம்மர் இங்கே... வெயில் வேறே மண்டையை பொளக்கிறதே...

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிவெக்கட்டா?
கப்பினில் போஸ்ட்மேனும் மயங்கிடுவாரே...

இரவினில் கனவுகள் தினம் தொல்லையா...
மப்பினில் நினைவில்லை கனவுகளே...ஏஏஏ......... ( நலம்)


கோயிலிலே நான் தொழுதேன்... கோவைக்கு நீங்க திரும்பிடவே...
கோடி முறை நான் தொழுதேன்... Contract Renew ஆகிடவே......

என் முகம் நீங்க பார்க்க கடிதமேதானா....
ஊர்லே வெச்சி பார்த்ததே... பயம் போகலியே....

நிழற்படம் அனுப்பட்டா, என் உயிரே...ஏ..?
திருஷ்டி பொம்மை இருக்குது... என்கிட்டேயே..... ( நலம்)

--------

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமே தப்பிக்கறவங்கல்லாம், மேலே சொன்ன கருத்தை வழிமொழியறாங்கன்னு நான் தெரிஞ்சிப்பேன். ரொம்ப ரொம்ப நன்றி...


Wednesday, September 10, 2008

தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மானியம்!!!

தரமான 70 தமிழ் திரைப்படங்களுக்கு தலா ஏழு லட்சம் ரூபாய் வீதம் ரூபாய் 4,90,00,000 மானியத்தை தமிழக அரசு வழங்கியது பழைய செய்தி.


இதைக் கேள்விப்பட்டு தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பவர்களும் அரசிடம் மானியம் கேட்டால் உபயோகமாக இருக்கட்டுமே என்று ஒரு பட்டியல் தயார் செய்தேன்.


கீழே உள்ளவை நல்ல தரமான தொலைக்காட்சித் தொடர்கள் ஆகும். பட்டியலில் விட்டுப்போனவைகளை தயவு செய்து பின்னூட்டத்தில் கூறினால், உங்களுக்கு ரொம்பவே புண்ணியமா போகும்...


1. அலை பாயுதே
2. ஆனந்தம்
3. அரசி
4. அத்திப் பூக்கள்
5. பந்தம்
6. கங்கா யமுனா சரஸ்வதி
7. கனா காணும் காலங்கள்
8. கலசம்
9. கஸ்தூரி
10. காதலிக்க நேரமில்லை
11. குலவிளக்கு
12. கெட்டி மேளம்
13. கோலங்கள்
14. சித்தி
15. சிம்ரன் திரை
16. சொந்தம்
17. சொர்க்கம்
18. மகள்
19. மணிக்கூண்டு
20. மதுரை
21. மலர்கள்
22. முகூர்த்தம்
23. மெட்டி ஒலி
24. மேகலா
25. மை டியர் பூதம்
26. நாகவல்லி
27. ராஜ ராஜேஸ்வரி
28. ரோஜா
29. லக்ஷ்மி
30. வசந்தம்
31. வீட்டுக்கு வீடு லூட்டி

Tuesday, September 9, 2008

தமிழகத்தில் ஒலிம்பிக்ஸ்: திரைக்கலைஞர்களின் கருத்துக்கள்!!!

உலக ஒலிம்பிக் சங்கத்தினர் அடுத்த ஒலிம்பிக்ஸை தமிழகத்தில் நடத்தலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. அதுக்காக கருத்துக்களைக் கேட்கறதுன்னு தமிழ் நாட்டுக்கு வர்றாங்க. இங்கத்திய மக்களுக்கு உடல், பொருள், ஆவி ஆகிய எல்லாமே திரைப்படக் கலைஞர்கள்தான் அப்படின்னு தெரிஞ்சிக்கிட்டு பல திரைப்படக் கலைஞர்களைப் பார்த்து பேசறாங்க. அந்த சமயத்திலே நம்ம கலைஞர்கள் சொன்ன கருத்துக்களைத்தான் நீங்க இப்போ பாக்கப் போறீங்க.


டாக்டர் விஜய்:

நமக்குன்னு சொந்தமால்லாம் ஒண்ணும் கருத்து இல்லீங்ணா. கொஞ்ச நாள் டைம் கொடுத்தீங்கன்னா, பக்கத்து நாட்லேல்லாம் எப்படி கருத்து சொல்லியிருக்காங்கன்னு பாத்துட்டு, அதை அப்படியே மொழி பெயர்த்து, என்னங்ணா, உல்டாவா... இல்லீங்ணோவ்... மொழி பெயர்த்து சொல்றேன். இதுக்கு மேலே ஏதாவது பேசணும்னா எங்கப்பாவை பார்த்து பேசுங்ணாவ்....

கமல்ஹாசன்:

எல்லா ஓட்டப்பந்தயத்திலேயும், எல்லா பதக்கங்களும் நம்ம பாரதத்துக்கே, பாரத மக்களுக்கே கிடைக்கறதுக்கு என்கிட்டே ஒரு நல்ல யோசனை இருக்கு. நானே பல நாட்டு வீரர்களைப் போல ஒப்பனை செய்துகொண்டு ஓடறேன். எல்லா கமலும் ஒரே சமயத்திலே ஒடக்கூட இப்பல்லாம் முடியும். க்ராஃபிக்ஸ் அந்தளவுக்கு வளர்ந்துடுச்சு. பரிசு வாங்கினப்பிறகு வேஷத்தை கலைச்சிட்டு எல்லாமே நாந்தான் அப்படின்னுட்டா, எல்லா பதக்கமும் நமக்கே!!!

பி.வாசு:

கேரளாலே படகுப்போட்டி சூப்பரா இருக்கும். அதை அப்படியே இங்கே கொண்டு வர்றோம். அஃப்கோர்ஸ், நம்ம தமிழக மக்களுக்காக அங்கங்கே மாற்றம் செய்றோம். அதாவது அந்தப்போட்டி தண்ணியிலேயில்லாமே, படகுகளுக்கெல்லாம் சக்கரம் மாட்டி பீச் ரோட்லே போட்டி வெக்கறோம். அருமையா இருக்கும். மக்கள் இப்போல்லாம் இதைத்தான் ரசிக்கறாங்க.

ஏ.ஆர்.ரகுமான்:

ஓட்டப்பந்தயப் போட்டிக்கு எல்லாரும் ஒரே இடத்துக்கு வந்து ஓடணும்றது இல்லே. அவங்கவங்க இடத்திலே ஓடிட்டு எனக்கு கேஸட் அனுப்பிடச் சொல்லுங்க. நான் எல்லாத்தையும் சேர்த்து ஒரே ட்ராக்லே போட்டுப் பாத்துக்கறேன். ஆனா, ஒரு விஷயம். போட்டி எப்போ நடந்தாலும் பரவாயில்லை. நான் முடிவுகளை ராத்திரி மட்டும்தான் அறிவிப்பேன்.

விவேக்:

ஓட்டப்பந்தயத்திலே பாத்தீங்கன்னா எல்லாம் அவங்கவங்க ட்ராக்லே சீரியஸா ஓடிக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்குப் பக்கத்திலே ஒரு காமெடி ட்ராக் போடுங்க. என்கிட்டே நிறைய ஐடியா இருக்கு. அந்த பந்தயத்துக்கு சம்மந்தமேயில்லேன்னாகூட, அந்த காமெடி ட்ராக்கை சேத்துக்கலாம். அப்படி சேர்த்தா, அந்த போட்டியும் சூப்பர் ஹிட்டாயிடும்.

கவிஞர் வைரமுத்து:

இதோ பாருங்கள், என்னிடத்தில் நிறைய யோசனைகள் இருக்கின்றன. ஆனால், நான் எதை கூறினாலும், வீட்டிலே... அதாவது... மண்டபத்துலே யாரோ எழுதிக்கொடுத்து - நான் அதை உங்களுக்கு கொடுத்ததாகப் ஊரார் பேசுவார்கள். இருந்தாலும் பரவாயில்லையென்று அவர்களை புறந்தள்ளி விடலாம். நீங்கள் எதற்கும் இரண்டு நாட்கள் கழித்து வரவும். என்னோட யோசனைகளை முதலில் தமிழினத் தலைவரிடத்தில்தான் காட்டுவேன். நன்றி. வணக்கம்.

விஜய டி.ஆர்:

இங்கே பாருங்க. நானும் 30 வருஷமா இந்த ஃபீல்டுலே இருந்தாலும் இன்னும் ஸ்டடியா இருக்கேன். அதுக்கெல்லாம் தன்னம்பிக்கைதான் காரணம். இன்னிக்கும் என் பையனோட என்னாலே குத்துச் சண்டை, மல்யுத்தம், நீச்சல், ஓட்டப்பந்தயம் ஆகிய எல்லாப் போட்டியிலும் போட்டி போட்டு - அதில் எல்லாத்திலேயும் வெற்றி பெற முடியும். அதனாலே, எல்லாப் போட்டியிலேயும் என் பேரும், என் பையனோட பேரும் எழுதிக்கோங்க.

எல்லா போட்டியிலேயும் எனக்குத்தான் தங்கம்...

எஞ்சியவங்க மானத்துக்கு வந்துடுச்சு பங்கம்...

மாங்கொட்டை சிம்புவுக்கு எல்லாத்திலேயும் வெள்ளி...

தமிழகமே பாடப்போகுது எங்க பேரை சொல்லி...

ஏய். டண்டணக்கா.. ஏய்.. டணக்குணக்கா...

ஒலிம்பிக்ஸ் குழுவினர் இந்தப் பேச்சைக் கேட்டு - வித்தவுட் ஆனாலும் பரவாயில்லை - ஸ்டாண்டிங் ஆனாலும் பரவாயில்லை - உடனடியா பத்திரமா ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்று ஓட்டம் எடுக்கின்றனர்.




Monday, September 8, 2008

நீங்க எந்த ஈயம்-ங்க?

நீங்க ஒரு வேளை ஆணியவாதியா இருந்தீங்கன்னா - அதாவது ஆண் விடுதலைக்கு போராடறவரா இருந்தீங்கன்னா, கீழே இருக்கறதை உங்க ஆண் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.

அல்லது நீங்க பெண்ணியவாதியா இருந்தீங்கன்னா - அதாவது பெண் விடுதலைக்கு போராடறவரா இருந்தீங்கன்னா, கீழே இருக்கறதை உங்க பெண் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.

A - அடங்க மறு
B- போங்காட்டம் ஆடு
C- குக்கர் வெக்கத்தெரியாதுன்னு சொல்லு
D- தினமும் நிறைய பேசு. வேறே யார்கிட்டேயாவது
E- என்னாலே முடியும்னு சொல்லாதே
F- ஃபார்வட் மெயில் நிறைய அனுப்பு
G- ( நீ) குண்டாயிட்டேன்னு சொல்லிக்கிட்டே இரு
H- ஹல்வா கொடுக்கத் தெரிஞ்சிக்கோ
I- இளிச்சிக்கிட்டே இருக்காதே
J- ஜால்ரா போடாதே
K- குட்டகுட்ட குனியாதே
L- லொள்ளு பண்ணு
M- மண்டைய மண்டைய ஆட்டாதே
N- நல்லவனாட்டம் நடி
O- ஒட்டடை அடிக்காதே
P- பழைய மேட்சானாலும் எப்பவும் கிரிக்கெட் பாரு
Q- கியூவில் நிக்கமுடியாதுன்னு சொல்லு
R- ராவடியா பேசு
S- சமையலறைப் பக்கம் போகாதே
T- தொடப்பத்தை எடுத்து பெருக்காதே
U- உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு கேள்
V- விடுமுறை அன்னிக்கு லேட்டா எழுந்திரு
W- வகை வகையா சமைக்கச் சொல்லு
X-
Y- எங்கே போறேன்னு சொல்லாதே
Z- சுகமா தூங்கிக்கிட்டே இரு


என்னது, நானா? நான் நடுநிலைவாதிங்க.... இந்த பதிவு பத்தி எங்க வீட்டுக்கு யாரும் தொலைபேசாதீங்க.... அவ்வ்வ்...





Friday, September 5, 2008

அன்புள்ள மாமாவுக்கு...


முன்: இந்த பதிவுக்குக் காரணம் இதுவோ அல்லது இதுவோ அல்ல!!!
-----

நீங்க ஊரெல்லாம் சுத்திட்டு ராத்திரி லேட்டா வந்தாலும், தூங்கறதுக்கு முன்னாடி சூடா பால் கேப்பீங்க. ஆனா நான் கொஞ்ச நேரம் லேட்டா வந்தாகூட, இருக்கிற பாலையெல்லாம் குடிச்சிட்டு நீங்க தூங்கியிருப்பீங்க.
-----

நீங்க தூங்கும்போது தொலைக்காட்சியின் ஒலியை கொஞ்சம் கூட்டினாலும், உங்களுக்கு கோபம் வரும். ஆனா, நான் தூங்கும்போது நீங்க மட்டும் நல்ல ஒலியை கூட்டி வெச்சிக்கிட்டு, மானாட மயிலாட பாப்பீங்க.
-----

சாப்பாட்டுப் பொருள் எவ்ளோ மேலே இருந்தாகூட உங்களுக்காக நான் மேசை மேல், நாற்காலி மேல் ஏறி எடுத்துத் தரணும். ஆனா, எனக்கு பசிச்சா நீங்க எனக்காக கண்டுக்கவே மாட்டீங்க.
-----

உங்க வாலை நான் தவறுதலா மிதிச்சிட்டா, மன்னிப்பு கேக்காதவரைக்கும் விடமாட்டீங்க. ஆனா, நீங்க என் வாலை மிதிச்சிட்டா, மன்னிப்பு கேக்கறதுக்கு எனக்கு கன்னடம் தெரியாதும்பீங்க.
-----

எனக்கு நாய்னாலே பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும். ஆனாலும், இன்னொரு மொழி கத்துக்கப்போறேன்னு நீங்க நாய் மொழி கத்துக்கிட்டு வந்து தினமும் என்கிட்டே 'லொள்ளு' பண்றீங்க.
-----

தினமும் உங்க முகத்திலே முழிக்கறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஆனா, நான் நடுவிலே வந்தாகூட சகுனம் சரியில்லேன்னு நீங்க வீட்டுக்குள்ளே போயிடறீங்க.
-----

உங்களுக்காக நானே தினமும் எலியைப் பிடிச்சி சுடச்சுட எலிக்கால் சூப் செய்து போடணும். ஆனா நீங்க, உங்க பக்கத்திலேயே எலி போனால்கூட, அதை பிடிக்காமெ ஒதுங்கி வழி விடறீங்க.
-----

மாமா...

ஒரு நாளாவது நீங்க நானாகவும்.. நான் நீங்களாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...

அப்போதுதான் என் மியாவ் உங்களுக்குப் புரியும்!!!

------

குருவியை விட்டுவிட்ட ரஜினி, ஆனால்...

Thursday, September 4, 2008

கதை... கதை... கதை... கதை....!!!















இதெல்லாம் இருந்தாலும், காலா காலத்துக்கும் மேட்டர் என்னன்னா....




நிஜார் எக்ஸ்பிரஸ் - 02

தல தர தர'ன்னு இழுந்துட்டு வந்த நிஜார் எக்ஸ்பிரஸ் என்னோட ஸ்டேசனிலே ஆணிகளெனும் அவஸ்தை புயலினால் தடம் புரண்டுவிட்டது, தடம் நிமிர்த்தி ட்ராக்'க்கு இழுந்துட்டு வந்தாச்சு.

டவுசர்(aka) நிஜார் அணிந்த காலங்களில் நாம் புரிந்த அக்கப்போருகளை சரித்தரபக்கங்களாக ஆவணப்படுத்தும் சுயமுயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.... (ஹி ஹி)

அந்த சரித்திரத்தை நீங்கள் அறிந்துக்கொள்ள உங்களின் காலச்சக்கரத்தை சென்ற நூற்றாண்டின் இறுதிகளில் சுழற்றி(டிஜிட்டல் கடிகாரமாயிருந்தாலும்) வைக்கவேண்டும், ச(த)ரித்தர நாயகனான அவனும், அவனின் உடன்பிறப்பான தமக்கையாரும் பள்ளி முடிந்து வந்ததும், விளையாட செல்கிறோம் என அவர்கள் வீட்டில் அனுமதி வாங்கி வந்து, அவர்கள் குடியிருந்த தெருவில் தங்கியிருந்த சக வானராங்களுடன் அடித்த கொட்டத்தை எழுதி வைக்க நூறு அல்ல நூறாயிரம் பக்கங்கள் கொண்ட ஏடுகள் தேவை.

சரித்திரநாயகனின் வீடு விசாலமான தெருவில் அமைந்து விட்டதால் அதற்கடுத்த மற்ற தெருக்கள் எல்லாம் குறுகலானது எனபதினால் மற்ற தெரு வானாரங்களும், ஒரே தெருவில் கூடிதான் விளையாடுவார்கள். அந்த விசாலமான தெருவில் அனைத்து வீடுகளும் உயரமான வாசல் அதாவது திண்ணை இருப்பதினால், முதலில் எல்லாரும் ஆரம்பித்து வைப்பது, "கல்லா - மண்ணா" விளையாட்டுதான். பத்து பதினைந்து பேரு கூடி சாட்-பூட் த்ரி போட்டு கடைசியாக மிச்சமாக இருப்பவன்/ள் தவிர அனைவரும் திண்ணையில் ஏறி நின்னு அவன்/ள்'க்கு பழிப்பு காட்டுவார்கள், யாராவது கிழே வந்துவிடுவார்கள் என அவன்/ள்'ம் மிகவும் பிரயத்தன படுவான்/ள். அவன்/ள்'ஐ இவர்கள் வெறுப்பேத்த இந்த திண்ணையிலிருந்து அந்த திண்ணைக்கு தாவி குதிப்பார்கள், தாவி குதிப்பது என்பது ஒரு ஆளாக செய்வதில்லை, மொத்தமாக இந்த திண்ணையிலிருந்து ரெண்டு பேரும், அந்த திண்ணையிருந்து ரெண்டு பேரும் இண்டர்சேன்ஞ் பண்ணி அவனை/ளை போட்டு குழப்பிவிடுவார்கள். அதிலும் கொஞ்சம் சோதா'வான ஒருத்தன் இண்டர்-சேன்ஞ் செய்யும்பொழுது மாட்டிக்கும் பொழுது அவன்/ள் அவுட்.. அப்புறம் அதற்கடுத்து அவர்களிடமிருந்து ஆட்டம் மறுபடியும் தொடங்கும், எப்பிடியும் அவர்களிடம் மாட்டுவது நமது சரித்தரநாயகன் என்பது உள்ளங்கை மாங்கனி,(மங்காணி தான்).

அவன் மண்ணுக்கு வந்துவிட்டதால், நமது சரித்தரநாயகன் சோதா'பய என்பதினாலும் ஓடிச்சென்று திண்ணை மாற்றுபவர்கள் மெதுவாக நடந்துச்சென்று திண்ணையில் ஏறி நின்று வெறுப்பேத்துவார்கள், இவனும் தன்னால் இயன்றவரை முயன்று பார்த்து தன்னுடைய தன்மானம் பெண்ணினத்துக்கு முன்னால் தலைகுனியும் அவலத்துக்கு உள்ளாக்கப்பட்டதை நினைத்து தன்னுடைய ஆணாதிக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவும், தன்மான ஆணினத்தை உசுப்பேத்துவிதமாகவும், "டேய் பசங்களா, நாமே எதுக்குடா பொம்புள்ளபிள்ளக கூட வெளாயாடாணும்? நாமே போயி பச்சக்குதிர தாண்டி வெளையாடுவோமி"ன்னு சங்கத்தை கலைத்து இனம் இனத்தோடு சேர்த்தே தொலையுமின்னு இருக்கிற எல்லாபேத்தயும் உசுப்பேத்தி வைத்து, அவர்கள் எல்லாரும் வேறுவழி இல்லாமல் பச்சக்குதிர வெளயாட ஆரம்பிப்பார்கள். நிரகாரிக்கபட்ட இனமான அந்த பகுதியினர் "போங்கடா வெளக்கெண்ணெய்களா, என ரோட்டில் கவருமெண்ட் போட்டு வைத்த நிரத்தர கோடுகளால் அமைந்த மைதானத்தில் பாண்டியாடுவார்கள். அது எப்பிடின்னா சின்ன சில்லாக்கு எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டே, அந்த கோடு'ஐ மிதிக்காமால் காலை எட்டிவைச்சு நடந்து அடுத்த எல்கைக்கு போயி சேரவேண்டும், அந்த விளையாட்டு ஆரம்பிக்கும் பொழுதே சரித்திரநாயகனின் இனத்தார்கள் இதெல்லாம் பொண்டுக வெளையாட்டு, அலுங்கமே குலுங்கமே வெளயாடுதுக'ன்னு எளக்கார அறிக்கைவிட்டு, வழக்கம்போலே சாட்-பூட் த்ரி'யில் தோற்கும் நமது சரித்திரநாயகனின முதுகில் ஏறி குதிப்பார்கள், சிக்கினது நம்ம சரித்திரநாயகன என்பதினால் தெருவில் போகும் கிழ கட்டைக்கூட ஒரு ஜம்பு அடித்துவிட்டு செல்லும். அனைவரும் பச்சகுதிர தாண்டுவதற்காக, தன்னுடைய முதுகை கவுத்திப்போட்ட 'U'வாக வளைத்துகாட்டியவன் தன்னுடய தாண்டும் முறை வருவதற்குள் சோர்ந்துவிடுவான், கிடைத்தது லாபமின்னு மற்றவர்களும் செவனே'னு உக்கார்ந்துவிடுவார்கள். இப்போழுது விளம்பர இடைவேளை, அல்லது டிரிங்ஸ் பிரேக்.

வெளையாடி வெளையாடி களைந்து போனவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று தண்ணிக்குடிக்க செல்லும் போது, அம்மா "டேய் பசங்களா, இருட்டுற பொழுதாச்சு, வெளாயாண்டது போதும் வந்து வீட்டுப்பாடத்தை எழுதிட்டு படிங்க" என கட்டளை பிறப்பிப்பார். இருட்டுவதற்கு இன்னும் ரெண்டு மணி நேரமிருக்கிற மிதப்பில் அடுத்தக்கட்ட விளையாட்டுப் போட்டிகள் அந்த தெருவான மைதானத்தில் நடக்க ஆரம்பிக்கும். இப்போழுது பம்பரம் சுழற்றுவது. ஆணினம் மட்டும் ஆடும் ஆட்டமெனில் அது பெரும்பாலும் "ஆக்கர்" வகையறவாகே இருக்கும், அனைவரும் சாட்டைய பம்பரத்தில் சுற்றி ரெடி 1 2 3 சொல்லியதும் சுழற்றவிடுவார்கள், அபேஸ் சொல்லும் கணநேரத்தை பம்பரமும், அதன் எஜமானரும் சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள். எப்பிடியெனில் பம்பரத்தை சுழற்றிவிட்ட சமயத்தில் சரியாக எல்லாரும் "அபீட்" சொன்னதும் எஜமான விசுவாசத்தின் கட்டமைப்புகளின் தக்கநிலையான கிழ்படிதல் மற்றும் சொல்பேச்சு கேட்டல் ஆகிய காரணிகளை பொறுத்து அந்த பம்பரம் அவர்களின் கைகளில் தஞ்சம் புகுந்துக்கொள்ளும். இவ்விடத்தில் உங்களால் எளிதாக யூகித்துக்கொள்ளும் வகையில் நமது சரித்திரநாயகனின் சொல்லிற்கு கீழ்படியாமல் அந்த பாழாய்ப்போன பம்பரம் கிழே இருந்துக்கொண்டு புவியுர்ப்பு சக்திக்கு என்னால் எதிர்ப்பு சக்தி கிடையாது என காந்திவழியில் அறப்போராட்டத்தில் ஈடுபடும். அப்புறமென்ன எல்லாரும் நமது சரித்திர நாயகனின் பம்பரத்தை வட்டத்திற்குள் வைத்து செம சார்ப் "ஆக்கர்" வைப்பார்கள். சில பல என இந்த பேருலகத்தில் சூழ்ந்த எதிரிகளால் அந்த அருமை கொண்டை வைத்த பம்பரம் ரெண்டு முன்று பிளவாக பிளக்கப்பட்டு சரித்திரநாயகனின் வரலாற்று பக்கங்களில் கரும்புள்ளிகளின் பங்கில் ஒன்றாய் பல்லுளிக்கும்.

மாலைகருக்கலின் இறுதியில் வசிறி கம்போடு அம்மா வர எல்லாரும் ஹெ.. ஹெ...ன்னு கத்திக்கொண்டே வீடு என்னும் கூடு அடைந்து வீட்டுபாடங்களும், மறுநாள் ஒப்பிக்க வேண்டிய மனபாடங்களுக்கும் படிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் வரு(று)புறுத்தல்கள் காரணமாக நமது சரித்திரநாயகனின் நிஜார் எக்ஸ்பிரஸ் அப்பிடியே நிறைவடைந்தது...

இன்னும் எழுத வேண்டியது நிறைய இருந்தாலும் தடம் புரண்ட தண்டவாளத்தை சரி பண்ணி எக்ஸ்பிரஸ் டிரெயின் ஓடவைக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே கண்ணுக்கு தெரிந்ததால் சரியாக கொசுவர்த்தி சுருளை சுற்றுவதில் கொஞ்சகாணு சிரமம்... ஆன விடமாட்டோமில்ல.... மிச்சமிருக்கிற கதை எல்லாத்தையும் வலையேத்தாமா விடமாட்டோமில்லே..... :))

நான் வந்து திரும்ப எக்ஸ்பிரஸ் ஓட்டிட்டு போறவரைக்கும் வலையுலக விவசாயி'யுடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறேன்.

முதல் நிறுத்தம் :- சென்னை
இரண்டாம் நிறுத்தம்:- மதுரை
முன்றாம் நிறுத்தம்:- பவானி

Wednesday, September 3, 2008

தங்கமணி மென்பொருள் நிபுணரானால்!!!

முதல்லேயே சொல்லவேண்டிய மிகப்பெரிய டிஸ்கி:
இது என்னோட தங்கமணி இல்லீங்க.... சும்மா என்னோட பொதுஅறிவ(!!!) பயன்படுத்தி எழுதினதுதாங்க....

-------

நான் எது சொன்னாலும் நம்ம கம்பெனி நலனுக்காகத்தான் சொல்வேன்னு தெரியாதா. மரியாதையா நான் சொல்றத செய்யுங்க...
-----

பக்கத்து குழுத்தலைவரை பாருங்க. குழுவிலே இருக்கறவங்க கேட்காமலேயே நிறைய வசதிகளை செய்து தர்றாரு. நீங்களும் இருக்கீங்களே.. ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லாம....
-----

வாப்பா. இன்னிக்குதான் நீ இந்த கம்பெனியிலே புதுசா சேர்ந்திருக்கே. நம்ம குழுத்தலைவர் மாதிரி இல்லாமே, நீயாவது நல்லபடியா முன்னேறி ஒரு பெரிய கம்பெனியிலே வேலை கிடைச்சி போயிடு.
-----

அந்த குழுவிலே வந்து சேர்ந்திருக்கறவங்கல்லாம் எப்படி சூப்பரா வேலை பண்றாங்க பாருங்க. நமக்கும் வந்து வாய்ச்சிருக்குதே? தனக்கும் தெரியல. சொன்னாலும் புரியல.... எல்லாம் என் தலயெழுத்து.
-----

என்னது? உங்களுக்கு ஜாவாகூட தெரியாதா? இது தெரியாமே எப்படி இவ்ளோ வருஷம் வளர்ந்தீங்க? மரியாதையா எங்கேயாவது போய் இன்னும் ரெண்டே நாள்லே ஜாவா கத்துக்கிட்டு வாங்க.
-----

விப்ரோ - ஏதாவது கம்பெனிகளை வாங்கணுமா, இன்ஃபோசிஸ் ஏதாவ்து கம்னெனிகளை விக்கணுமா, இப்படிங்கற பெரிய பெரிய முடிவுகளை நீங்க எடுங்க, இந்த ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களை நான் பாத்துக்கறேன். அதிலே நீங்க தலையிடாதீங்க..
-----

என்னை டிசிஎஸ்லே கூப்பிட்டாங்க... விப்ரோலே கூப்பிட்டாங்க... அங்கேயெல்லாம் போகாமே, வீட்டுப் பக்கத்திலேயே இருக்கேன்னு இந்த கம்பெனியிலே வந்து சேந்தேன் பாருங்க... என்னை.....

------

தொலைக்காட்சித் தொடரில் வரக்கூடிய தங்கமணி:
என்னோட வேலையை அவ வாங்கிட்டா இல்லே... இந்த வாரத்துக்குள்ளே அவ சிஸ்டத்துலே வைரஸ் ஏத்தலேன்னா, என் பேரு .... கிடையாது!!!

-----

கடைசியிலே என் ' நிஜமான' தங்கமணி:
இந்த மாசம் நீங்க சிங்கம்ன்றதாலே, வீட்லேயும் கணிணி முன்னாடி உக்கார விடறேன். மரியாதையா அடுத்த மாசத்திலேர்ந்து எல்லாத்தையும் அலுவலகத்திலேயே மூட்டை கட்டிட்டு வந்துடுங்க.

Monday, September 1, 2008

பெரியோர்களே!!! தாய்மார்களே!!!


தம்பி வாப்பா... வந்து இந்த மாதம் அட்லஸா இருன்னு சொன்னப்போ.. எனக்கு என்னமோ வடிவேலுக்கு பார்த்திபன் குடை பிடிச்சிண்டு வரும்போது அந்தப் பக்கமா ஒரு ஊர்வலம் வருமே, அந்த சீன் தான் டக்குன்னு நினைவுக்கு வந்தது... அது ஏன்னு தெரியல....

அண்ணாச்சி, ஏதாவது பிரச்சினை கிரச்சினை ஆயிடப்போகுதுன்னு சொன்னப்போ - அப்படி ஏதாச்சும் ஆயிட்டா, என்னிடம் வா நான் பார்த்துக்கொள்கிறேன்னு திருவிளையாடல் ஸ்டைல்லே சொல்லிட்டாங்க.

வழக்கமா என்னோட பதிவுன்னா, மனசிலே தோணினத கடகடன்னு எழுதி போட்டுடுவேன். (அப்போ இங்கே போடறதுக்கு மண்டபத்திலே யார்கிட்டேயாவது வாங்கப்போறியான்னு கேக்கப்படாது!!!).

ஆனா, பல பெரிய தலைகள் பதிவுகள் போட்டு ஜெயிச்ச இந்த பாடல் பெற்ற தலத்திலே பதிவுகள் போடறதுக்கு மூணுக்கு முப்பது தடவை யோசிக்கவேண்டியிருக்கு. அதனாலே... சரி சரி நிறுத்திட்டு ஒழுங்கா பதிவு போடற வழியப்பாருப்பான்னு யாரோ சொல்றதாலே... ஸ்டார்ட் மீஜிக்...

வழக்கம்போல் என்னோட பதிவுலே ஆதரவு தர்ற மாதிரி இல்லாமே, ரொம்ப நல்லாவே ஆதரவு தாங்க மக்களே!!!