Monday, November 27, 2006

கன்னிப்பதிவு (புது வ.வா)

இடம்: பெங்களூரூ நேரம்: அதிகாலை 11.00

வெள்ளிக்கிழமை அதிகாலையிலே தீடீரென்னு நம்பரை இல்லாமே ஒரு அனானி போன கால்வந்திச்சுங்க... பயந்துதான் போனையே எடுத்தேன்.

"ஹலோ யாருங்க பேசுறது?"

"நான் தல கைப்புள்ள செகரட்டரி பேசுறேன்!"

"ஆகா அப்பிடியா! என்னா விஷயம்?"

"தல உங்களை பார்க்கிறதுக்காக இன்னிக்கு பெங்களூரு வர்றாரு!"

"என்னை எதுக்காக பார்க்க வர்றாரு?"

"அதே அவரு நேரா வந்து சொல்லுவாரு! சரி உங்க வீட்டுக்கிட்டே பெரிய கிரவுண்ட் இருக்கா??"

"எதுக்கு??? தல வந்ததும் அங்கே போய் ஏதாவது விளையாட்டு விளையாடுவாரா??"

"ஹலோ! நம்ம தல சாதாரணமான தலைவரா ??? அவரு பெரிய தலைவர்! அதுனாலே ஹெலிக்காப்படருலே வருவாருய்யா!! அதுக்குதான் மைதானம் இருக்கானு கேட்கிறோம்??? இருக்கா இல்லேய்யா? அது மட்டும் சொன்னா போதும்!"

"இருக்கும்மா! தாயே வரச்சொல்லு! இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதுனாலே நிறைய வேலை இருக்குங்க! சீக்கிரமா வந்து வேலையை முடிச்சிட்டு போயிட்டாருன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்!"

"சரி இன்னும் ஒன்றரை மணி நேரத்திலே அதாவது மதியம் 12.30 மணிக்கு வந்துருவார்... அவரு வர்றது ரொம்ப ரகசியமா இருக்கனும்! யாருக்கிட்டேயும் சொல்லிறாதே!!!"

"ஏங்க அவ்வளவு புரெடக்சன் தல'க்கு?"

"அதெல்லாம் அவரே வந்து சொல்லுவாரு!!! சரி போன் வைச்சிரு! தல கிளம்பிட்டாரு!!!"

"என்னா சொன்னீங்க? சரியா கேட்கலை?"

"கிளம்பிட்டாருய்யா..!! கிளம்பிட்டாருய்யா!!!"

போன் வைக்கப்பட்டதும் எனக்கு பரபரப்பு பத்திக்கிச்சு! எம்பூட்டு பெரிய தலைவரு வர்றாரு? அதுவும் என்னை பார்க்க வேறே வர்றாரு? வர்றதில்லாம் சரி அதுக்கு ஏன் அதிலே ரகசியம். இப்பிடியே சிந்திச்சுக்கிட்டே இருந்தேனா மறுக்கா இன்னொரு போன்! ஆனா அதுவும் வேறே நம்பர்.

"ஹலோ யாரு பேசுறது"

"சினனச்சாமி ஸ்டேடியத்திலே இன்னிக்கு மதியம் 12.20க்கெல்லாம் வந்திரு!!"

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது! ஆகா மணி இப்பொ பதினொண்ணு! இங்கெயிருந்து கிளம்பி ஸ்டேடியத்துக்கு போறதுக்குள்ளே பாதி உசுரை போயிருமே! தல ஆகாயமார்க்கமா வந்து இறங்கிறதுக்குள்ளே, நாமே சாலை மார்க்கமா போய் சேர்றதுக்குள்ளே பாதி செத்து சுண்ணாம்பை ஆயிருவோம், ஊரா இது பக்கத்து தெருவுக்கு போறதுக்கு எழுபதிரண்டு சிக்னலு, ஒன்வேயி, ஸ்பிட்லிமிட்'ன்னு சட்டத்திட்டங்க.

இடம்: சின்னச்சாமி ஸ்டேடியம் நேரம்: அதிகாலை 12.20

அகில உலக வருத்தப்படாத வாலிபர்களின் ஒப்பில்லா,எல்லையில்லா,தங்க தலைவன் ஆகாயமார்க்கமாய் வரும் கண்கொள்ளா காட்சியே காண என்தவம் செய்தேன் என் இறைவா??? இம்மாதிரி கப்பித்தனமா நினைச்சிக்கிட்டு இருந்தோப்பா சடாரன்னு நிக்கிற நிலத்துலே அப்பிடியே ஒரு ஆரம் பிடிச்சு வட்டம் சுத்த ஆரம்பிச்சிதது. நாமெல்லாம் ஆறடி அறுபது கிலோ சிங்கமில்லே அப்பிடியே பக்கத்திலே இருந்த ஒரு கம்பத்தை பிடிச்சிக்கிட்டே வானத்தே பார்த்தேன்.

சங்கத்து வாகனம்நம்ம தல மஞ்ச சொக்கா அதுக்கு மேலே ஒரு செக்க்செவ்வன்னு ஒரு செவப்பு கலருலே கிழிச்சே கோட்டு ஒன்னே போட்டுக்கிட்டு கையிலே பைனாகுலரே வேறே பிடிச்சிக்கிட்டு "ஹாய் ராயலு"ன்னு சவுண்ட் விட்டாருப்பா!! அப்பிடியே சோத்துக்குள்ளே குழம்பை ஊத்துனா டக்குன்னு நடுவிலே ஊடுருவி உள்ளே போறேமாதிரியே ஹெலிக்காப்படரு நடுமையமா ஸ்டேடியத்திலே இறங்கிச்சு.. அதிலே இருந்து இறங்கி ஒரு சிங்கம் கணக்கா தல நடந்து வந்தாரு பார்க்கணுமே! பின்னாடி ரெண்டு பாடிக்கார்ட்ஸ் ஏகே45 பிடிச்சிக்கிட்டு வந்தாங்க..

ராஜ நடை
"வாங்க அகில உலக வருத்தப்படாத வாலிபர் தலைவரே! எதுக்காக நீ வர்றதே இவ்வளவு ரகசியமா வைச்சிருக்கிமின்னு சொன்னீங்க?"

"எனக்கு எங்கேயிருந்து எப்படி, எந்த ரூபத்திலே ஆப்பு வர்ருமின்னு தெரியாது! அதுவும் இந்த ஊருக்குள்ளே ஒரு ஆளு என்னை ஓப்பேத்தினிமின்னே டிராக்டருலே திரியறார்! அவருக்காவே தாய்யா இம்பூட்டு புரெடக்சன்! பார்த்திய்யா பின்னாடி ரெண்டு பயலுவேல்லே? நமக்கு வாகனமும் ஓட்டிக்கிட்டு போலிஸ் மாதிரி துப்பாக்கியே தூக்கிட்டு பாதுக்காப்புக்கும் வர்றாயங்கே! இப்போ பார்ப்போம் யார் நம்மக்கிட்டே மோதறதின்னு??"

"ஆமா தல! உங்களுக்கு இம்பூட்டு பாதுக்காப்பு தேவைதான்!"

"நான் எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா? உன்னை சங்கத்திலே சேர்க்கலாமின்னு நேர்காணல் நடத்த வந்திருக்கேன்! ம் சொல்லு உனக்கு என்ன வ.வா'க்கான தகுதி இருக்கு???"

"ஓ அப்பிடியா!! அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்!"

"சரி வரிசையா சொல்லு பார்ப்போம்!!"

"1)ரெண்டு ஸ்டாப்ன்னாலும் பஸ்ஸிலே போயிரலாமின்னு வெயிட் பண்ணி பண்ணி வெறுப்பாகி கடைசிலே நடக்க ஆரம்பிச்சா நாலு பஸ் சர்புர்ன்னு என்னை கடந்து போகும்????

2)பத்தாவது படிக்கிறொப்பா ரெண்டு தடவை கோட்டு அடிச்சு மூனாவது தடவையா பாஸ் பண்ணுறதுக்குள்ளே ஊருஉலகத்தோட ஏச்சுபேச்சுக்களுக்கெல்லாம் அசரதாதது!!!!???

3)ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பாருக்கிட்டே வெளு வாங்கி விழுப்புண் விழுந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அழுது முடிச்சிட்டு அவருக்கிட்டே காசு வாங்கிட்டு மார்னிங்ஷோ சினிமாவுக்கு போனது!!!

4)இவ்வளவு காலமா இங்கிலிபிசே தெரியமே அதே என்னமோ கரைச்சு குடிச்சே கணக்கா வவ்வால்,கிராம்மாருன்னு எல்லாமே தெரிஞ்சமாதிரியே வெள்ளைக்கார தொரைக்கிட்டெய்ல்லாம் இங்கிலிபிசுலேயே பேசுறது!!"

"ஓகே! நெருங்கி வந்திட்டே! இன்னும் வேறே இருந்தா சொல்லு! இந்த பிளாக், ஒயிட்'ன்னு வேறே ஏதாவது இருக்கா???"

"ஓ இருக்கே தல! ஒரு மேட்டருமில்லாம ஒரு வருசமா ப்ளாக் எழுதறது??

எந்த பதிவுல யார் ஆப்படிச்சாலும் வலிக்காத மாதிரியே நல்லவனா ஆக்ட் வுடறது??

கட்டதுரைய பார்த்தா எங்க தலக்கிட்ட முடிஞ்சா மோதி பாருடானு சவுண்ட் விடறது??"

"சரி நான் நினைக்கிற எல்லாதகுதியும் உன்க்கிட்டே இருக்கு! யூ ஆர் அப்பாயிண்டெட்"

ஆப்பு ஆயிண்மெண்ட்"உனக்கு இன்னிலிருந்து அப்போ ஆயிண்மெண்ட்'தான் தடவணும்"

"வொய்"

"நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்படிக்க வர்றேன்!!!!"

"ஹி ஹி நாங்கெல்லாம் எதுக்கும் அஞ்சாத சிங்கமெல்லே! சேர்ந்து போகதே கருஞ்சிறுத்தயப்பு!! நீ இன்னிலிருந்து சங்கத்து டெக்னால்ஜிலே ஆப்ரைண்டிஸா ஜாயின் பண்ணிக்கோ! உனக்கு என்னோட செகரட்டரி ஆப்பர் லெட்டர் அனுப்புவாங்க! ஒரே கண்டிசன் நீ ஒழுங்கா இருந்தேனா எந்த பிரச்சினையிலும் காப்பாத்த வருவேன்! அதிகபிரசங்கிதனம் பண்ணனு வை!! எந்த கம்பத்திலே யாரு கட்டி வச்சு அடிச்சாலும் நாப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்பேன்! என்னா சொல்லுறே???"

"இல்லெ தல! நான் நல்லவந்தான்!"

"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"

"நான் ஒன்னே ஒன்னு இந்த மக்களுக்கிட்டே சொல்லிக்கலாமா"

"ம் சொல்லு!"

"மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவது எனக்கிட்டே வம்பிழுத்தா எங்க தலை வருவாரு! `யாருடா என்சங்கத்து ஆளே அடிச்சதுன்னு???` கேட்பாரு! ஆமா சொல்லிட்டேன்!"

28 comments:

பாலராஜன்கீதா said...

// இம்மாதிரி கப்பித்தனமா நினைச்சிக்கிட்டு //

அனாவசியமா எங்க ஊரு ஆள இப்படி வம்புக்கு இழுக்கக்கூடாது :-)))

ஜொள்ளுப்பாண்டி said...

//உனக்கு இன்னிலிருந்து அப்போ ஆயிண்மெண்ட்'தான் தடவணும்"//

:))))))))))) மாமூ சங்க சிங்கமே ராமூ பின்னிட்டயேப்பா!!! வாலிபமே வா வா .... ;)))

இராம் said...

//அனாவசியமா எங்க ஊரு ஆள இப்படி வம்புக்கு இழுக்கக்கூடாது :-))) //

வாங்க பாலராஜன்,

அது என்னாங்க அந்த வார்த்தை கப்பிபய'க்கு மட்டுமே சொந்தமின்னு ஆகிருச்சா என்னா??? ;))

கப்பி பய said...

//ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பாருக்கிட்டே வெளு வாங்கி விழுப்புண் விழுந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அழுது முடிச்சிட்டு அவருக்கிட்டே காசு வாங்கிட்டு மார்னிங்ஷோ சினிமாவுக்கு போனது!!!
//பெரியார் பக்கத்துல இருக்க அந்த தியேட்டருக்கு போனா வெளுத்து வாங்காம என்ன பண்ணுவாங்க?? :))

கப்பி பய said...

//"நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்படிக்க வர்றேன்!!!!"
//

:))))

கலக்கல்ஸ் ஆப் தி பெங்களூரு!

கப்பி பய said...

//அனாவசியமா எங்க ஊரு ஆள இப்படி வம்புக்கு இழுக்கக்கூடாது :-)))
//

:))

//அது என்னாங்க அந்த வார்த்தை கப்பிபய'க்கு மட்டுமே சொந்தமின்னு ஆகிருச்சா என்னா??? ;))
//

யோவ்..நீங்க எங்க யாருக்கு உகு வச்சிருப்பீங்கன்னு யாருக்கு தெரியும்..அதனால கேக்கறார் :))

இலவசக்கொத்தனார் said...

//
"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"
//


இது என்னப்பா உள்குத்து?

இராம் said...

//பெரியார் பக்கத்துல இருக்க அந்த தியேட்டருக்கு போனா வெளுத்து வாங்காம என்ன பண்ணுவாங்க?? :)) //

ஆஹா அது ஒரு அழியா இளமை காலங்கள் ராசா!!! ஹீம் நீயும் நிறையதடவை அந்த பக்கம் வந்திருப்பே போலே.... :)

//:))))

கலக்கல்ஸ் ஆப் தி பெங்களூரு! //

டாங்கீஸ்ப்பா..


//யோவ்..நீங்க எங்க யாருக்கு உகு வச்சிருப்பீங்கன்னு யாருக்கு தெரியும்..அதனால கேக்கறார் :)) //

அதெல்லாம் இல்லேப்பா... என்னை நம்பு!! நான் நல்லவய்தேய்ன்!!!

இராம் said...

//
"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"
//


இது என்னப்பா உள்குத்து? //

வாங்க கொத்ஸ்,

எந்த உள்குத்தும் இல்லே அதிலே... நம்ம தல யாரோட மனசு கோணமே தான் பேசுவாரு!!! என்னை ஆப்புரண்டிஸா போட்டதுக்காக அப்பிடியொரு டயலாக் விட்டாரு அம்புட்டுதேய்ன்....

;))

கில்லி பையன் said...

கலாம் சொல்லுறதைக் கேளுங்கடான்னு நாக்கு வறள கத்துன்னா.. கைப்புள்ள சொல்லுறதைக் கேப்போம்ன்னு இப்படி குரூப்பாத் திரியறீங்களே இது நியாமாடா சொல்லுங்க...

எலிகாப்டர் உன் கையாலே செஞ்சு பறக்க வேண்டிய நீ.. எலிகாப்டர் எறங்குனவனைப் பத்தி புகழாராம் சூட்டலாமாடா...

சங்கம் மொத்தத்தையும் சொல்லி அடிக்க கிளம்பிட்டேன்டா.. டிசம்பர் மாதம் வரட்டும் பாருங்க,,,
பஞ்ச் பாலா உங்களை எல்லாம் பஞ்ச்ர் பண்ணியே தீருவான்டா

தம்பி said...

புதிதாக சங்கத்தில் இணைந்திருக்கும் ராயல் மேன்மேலும் பல ஆப்புகளை தனக்கும் தனது தல க்கும் வாங்கி கு(டு)விக்குமாறு வாழ்த்துகிறோம்.

சித்தப்பு said...

பாத்து பதமா ஆப்புகள இருக்குங்கடா அப்ரசண்டிகளா!

ஒரு லட்ச ரூவா காண்ட்ராக்டு அவன் கைல கால்ல விழுந்து புடிச்சிருக்கேன்.

இராம் said...

//கலாம் சொல்லுறதைக் கேளுங்கடான்னு நாக்கு வறள கத்துன்னா.. கைப்புள்ள சொல்லுறதைக் கேப்போம்ன்னு இப்படி குரூப்பாத் திரியறீங்களே இது நியாமாடா சொல்லுங்க...//

அப்பிடித்தான் கேப்பாம் என்னாக்கிறே நீ இப்போ????

தலை போலே வருமான்னு பாட்டே பாடுவோம்மய்யா!!!! ;)

//எலிகாப்டர் உன் கையாலே செஞ்சு பறக்க வேண்டிய நீ.. எலிகாப்டர் எறங்குனவனைப் பத்தி புகழாராம் சூட்டலாமாடா...//

நீ நல்லவனா கெட்டவனா'னு தெரியலை?? நான் எங்கேய்யா புகழாராம் சூட்டிருக்கேன்.. நல்லா படிய்யா.... :(

//சங்கம் மொத்தத்தையும் சொல்லி அடிக்க கிளம்பிட்டேன்டா.. டிசம்பர் மாதம் வரட்டும் பாருங்க,,,//

ஆஹா நீதானா அது ... இன்னும் கொஞ்சம் நாள்லே உலகம் அழியப்போகுதுன்னு டயலாக் விட்டு திரிஞ்ச பய???

//பஞ்ச் பாலா உங்களை எல்லாம் பஞ்ச்ர் பண்ணியே தீருவான்டா //

எதுக்கு ஆல் இன் ஆல் அழகுராசா இருக்காரு... அவரு பஞ்சர் ஒட்டி கொடுப்பாரு.... ;))

இராம் said...

//புதிதாக சங்கத்தில் இணைந்திருக்கும் ராயல் மேன்மேலும் பல ஆப்புகளை தனக்கும் தனது தல க்கும் வாங்கி கு(டு)விக்குமாறு வாழ்த்துகிறோம். //

வாப்பா துபாய் தம்பி, என் இனிய தும்பி,

உன் சொல்லுக்கு மறுப்பேது??? அப்பிடியே ஆகட்டும்!!!

:-)))))))))))

இராம் said...

//சித்தப்பு said...
பாத்து பதமா ஆப்புகள இருக்குங்கடா அப்ரசண்டிகளா!//

சித்தப்பு நீங்களா வாங்க வாங்க!!!

//ஒரு லட்ச ரூவா காண்ட்ராக்டு அவன் கைல கால்ல விழுந்து புடிச்சிருக்கேன். //

இன்னும் இந்த பழைய டயலாக்கே மாத்தலையா????

நாமக்கல் சிபி said...

ராயலு... வருத்தப்படாத வாலிபனுக்குள்ள எல்லா தகுதியும் உனக்கிருக்குனு ப்ரூவ் பண்ணிட்ட...

முடிஞ்சளவுக்கு தலைக்கு ஆப்பு வாங்கி தருவனு நம்பறேன் ;)

நாமக்கல் சிபி said...

ராம் ஜாயின் பண்ணுற அன்னிக்கு ராகிங் உண்டு! நாங்கல்லாம் யாரும் ஹெல்ப்புக்கு வரமாட்டோம்!

நீயேதான் தலையை தனியா ராகிங்க் பண்ணணும்!

இப்பவே சொல்லிட்டேன்!

Syam said...

//எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே//

தல என்னவேனா சொல்லட்டும்...நீங்க உங்க வேலைல கவணமா இருங்க :-)

கைப்புள்ள said...

//"மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவது எனக்கிட்டே வம்பிழுத்தா எங்க தலை வருவாரு! `யாருடா என்சங்கத்து ஆளே அடிச்சதுன்னு???` கேட்பாரு! ஆமா சொல்லிட்டேன்!"//

அந்த எண்ணம் எல்லாம் வேற இருக்கா? யாருப்பா இப்படி எல்லாம் பொரளி கெளப்பறது ஊருக்குள்ள?

சேதுக்கரசி said...

//"இல்லெ தல! நான் நல்லவந்தான்!"

"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"//

இதெல்லாம் தெரிஞ்சே, அதையும் மீறி கைப்ஸ் உங்க மேல நம்பிக்கை வச்சிருக்காரு போல.. ம்... :)

Anonymous said...

கைப்புள்ள சார். இப்பத்தான் ஒங்க
"சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்... " மேட்டரை தமிழ்ப்படுத்தியுள்ளேன். இங்கே படித்து பார்த்து கருத்து சொல்லுங்க. http://paradise-within.blogspot.com/2006/11/blog-post_8827.html

என்றென்றும் அன்பு செய்குவோம்.

இராம் said...

//ராயலு... வருத்தப்படாத வாலிபனுக்குள்ள எல்லா தகுதியும் உனக்கிருக்குனு ப்ரூவ் பண்ணிட்ட...

முடிஞ்சளவுக்கு தலைக்கு ஆப்பு வாங்கி தருவனு நம்பறேன் ;) //

வெட்டி நீயென்ன சொல்ல வர்றே??? நாந்தான் ஏற்கெனவே தல'கிட்டே சொல்லீட்டேனே!! நான் ஜால்ரா அடிக்க வர்றலே... ஆப்படிக்க வர்றேன்னு!!!!! ;)

//ராம் ஜாயின் பண்ணுற அன்னிக்கு ராகிங் உண்டு! நாங்கல்லாம் யாரும் ஹெல்ப்புக்கு வரமாட்டோம்!

நீயேதான் தலையை தனியா ராகிங்க் பண்ணணும்!

இப்பவே சொல்லிட்டேன்! //

உங்களின் உத்தரவுக்கு தலை வணங்குறேன் தள.... ;)

இராம் said...

//தல என்னவேனா சொல்லட்டும்...நீங்க உங்க வேலைல கவணமா இருங்க :-) //

வாங்க 12B,

இனிமே ஆப்படிக்கிறே வேலையே தலையாய கடமையா எடுத்துக்கிறேன்.... :-))))

இராம் said...

//அந்த எண்ணம் எல்லாம் வேற இருக்கா? யாருப்பா இப்படி எல்லாம் பொரளி கெளப்பறது ஊருக்குள்ள? //

தல,

இந்த ஒரு ஸ்டேட்மெண்ட்க்காக ஒனக்கு இருக்கு நிறையவே ஆப்பூஸ்.... :))))

இராம் said...

//இதெல்லாம் தெரிஞ்சே, அதையும் மீறி கைப்ஸ் உங்க மேல நம்பிக்கை வச்சிருக்காரு போல.. ம்... :) //

ஆமாம் மேடம்!

நம்பினார் கைவிடபடார்'ன்னு யாரு சொன்னாலும் உடனே படார்ன்னு நம்புறவருங்க எங்க தல... :-)))

சேதுக்கரசி said...

//ஆமாம் மேடம்!//

என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? சங்கத்துல சேர வர்ற புது வ.வா.க்கெல்லாம் யார் கிட்ட என்ன சொல்லப்படாதுன்னு ஒழுங்கா ட்ரெயினிங் குடுக்குறதில்ல?

இராம் said...

//என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? சங்கத்துல சேர வர்ற புது வ.வா.க்கெல்லாம் யார் கிட்ட என்ன சொல்லப்படாதுன்னு ஒழுங்கா ட்ரெயினிங் குடுக்குறதில்ல? //

இல்லேங்க தல ஒன்னுமே சொல்லிக் குடுக்கலை இதைப்பத்தி.... :)

இராம் said...

//என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? சங்கத்துல சேர வர்ற புது வ.வா.க்கெல்லாம் யார் கிட்ட என்ன சொல்லப்படாதுன்னு ஒழுங்கா ட்ரெயினிங் குடுக்குறதில்ல? //

இல்லேங்க தல ஒன்னுமே சொல்லிக் குடுக்கலை இதைப்பத்தி.... :)