Wednesday, April 23, 2008

இளைய தளபதியின் "குருவி" க்குப் போட்டியாக...

இளைய தளபதியின் "குருவி" க்குப் போட்டியாகக் களம் இறங்குகிறதாம் இப்படம். திரையுலகம் மட்டுமல்ல எல்லா உலகத்திலும் இது தான் பேச்சு. நாயகன் ரித்திஸ் இப்பவே வெள்ளி விழா நோட்டீஸ் எல்லாம் அடிச்சிருப்பார். ஸ்டில் இல் இருக்கும் பாண்டியராஜனைப் பாருங்க ஒரு நிமிஷம், அப்படியே படம் குறித்த எதிர்பார்ப்பை குறிப்பா சொல்றார்.கலைஞர் திரையுலகத்துக்காக எவ்வளவோ செய்றார், இதைக் கொஞ்சம் கவனிக்கக் கூடாதோ?

19 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

உருப்படாத ரெண்டு படத்துக்கு இப்படி ஒரு பில்ட்-அப்-ஆ? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

நாயகன்: நீங்க நல்லவரா? கெட்டவரா? :-P

Harur said...

ennathu poster la irukarathu pandiyarajana ??!!!

Harur said...

என்னது பொஸ்டெர்ல இருகரது பன்டியரஜனா??!!

கானா பிரபா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
உருப்படாத ரெண்டு படத்துக்கு இப்படி ஒரு பில்ட்-அப்-ஆ? :-P//

ரித்திஷ் எதுவும் செய்வார், தாங்கணும் ;-)

//Harur said...
என்னது பொஸ்டெர்ல இருகரது பன்டியரஜனா??!!//

போஸ்டர்ல ஒரு ஓரமா பாண்டியராஜன் இருக்கிறாரே

ஆயில்யன். said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
உருப்படாத ரெண்டு படத்துக்கு இப்படி ஒரு பில்ட்-அப்-ஆ? :-P

//

ரீப்பிட்டலாம் :)

Anonymous said...

ஆஹா விட மாட்டீங்களா இவர?
அதெப்படி இந்த மாதிரி மொக்கைப் படம் எல்லாம் அட்லாஸ் கண்ணுக்கு மட்டும் சரியா சிக்குது? வ.வா.ச சிங்கங்கதான் மொக்கைன்னா அட்லாஸுமா? Same Blood

ILA

இராம்/Raam said...

ரீத்திஸ்'ன் நாயகன் திரைகாவியத்தை இளையதளபதி குருவியோடு ஒப்பிட்டு பார்க்கும் உங்கள் ரசனையை கடுமையாக,கன்னாபின்னாவென இன்னும் என்னனென்ன இருக்கோ அதெல்லாம் சொல்லி எதிர்க்கிறேன்.

:))

இராம்/Raam said...

இந்த வரலாற்று பதிவில் துபாய் ஆணழகரின் பதிவின் சுட்டியை அளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைக்கிறேன்....

கானா பிரபா said...

// ஆயில்யன். said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
உருப்படாத ரெண்டு படத்துக்கு இப்படி ஒரு பில்ட்-அப்-ஆ? :-P

//

ரீப்பிட்டலாம் :)//

சரி நானும் ரிப்பீட்டிக்கிறேன் ;-)

//Anonymous said...
ஆஹா விட மாட்டீங்களா இவர?
அதெப்படி இந்த மாதிரி மொக்கைப் படம் எல்லாம் அட்லாஸ் கண்ணுக்கு மட்டும் சரியா சிக்குது? வ.வா.ச சிங்கங்கதான் மொக்கைன்னா அட்லாஸுமா? Same Blood

ILA//

என்ன பண்றது நம்ம கண்ணில் பட்டு தொலைச்சிடுறாரே ;-(

வந்தியத்தேவன் said...

பிரபா தமிழ்சினிமா.கொம்மில் வந்த இந்தச் செய்தியையும் பாருங்கள்.

நாயகனை அடுத்து தளபதி?
-புதுமுக ஹீரோவின் பலே பிளான்!


கிட்டதட்ட எட்டு கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது நாயகன் திரைப்படம். தமிழ் சினிமாவில் திடீர் அவதாரம் எடுத்திருக்கிறார் ஜே.கே.ரித்தீஷ். தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இவரை கடவுளாகவே கும்பிடுகிற குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறதாம். அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன் என்ற தங்க விசிட்டிங் கார்டு ஒருபக்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்களுக்கு அவ்வப்போது நிதியை வாரிவழங்கி தங்கமாகவே கொண்டாடப்படுவது இன்னொரு பக்கம் என்று விஸ்வரூபம் எடுத்துவரும் ரித்தீஷ், இதற்கு முன்பு கானல் நீர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர்.

நாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. ஆடியோவை முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் வெளியிட்டார். தயாரிப்பாளர் விஜயகுமார் ரெட்டி பேசும்போது, “முதலில் இரண்டு கோடியில் இந்த படத்தை எடுத்துவிடலாம் என்று நினைத்தோம். பின்பு ராமநாதபுரத்திற்கு சென்றிருந்த போது ரித்தீஷின் புகழையும், பெருமையையும் அறிந்தோம். இவ்வளவு செல்வாக்கு பெற்ற ஒருவரை சாதாரணமாக காட்டிவிடக் கூடாது என்பதாலேயே இத்தனை கோடி ரூபாய் செலவு செய்தோம். ரித்தீஷ் அறிமுகமாகும் ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்றார்.

முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே அடுத்த படத்தின் பெயரையும் இயக்குனரையும் அறிவிப்பது பெரிய தைரியம்தான். இந்த விழாவில் ரித்தீஷ் அந்த அறிவிப்பை செய்தார். “எனது அடுத்த படம் தளபதி. படத்தை பாவா என்பவர் இயக்கப் போகிறார்”

இப்படி கமல், ரஜினி நடித்த முன்னணி படங்களின் தலைப்புகளை தனது படங்களுக்கு வைக்கும் ரித்தீஷ், மற்றவர்களுக்கு எப்படியோ? அவரது மாவட்டத்தை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார், உலக நாயகன் எல்லாம் இவர்தான் போலிருக்கிறது.

கானா பிரபா said...

//இராம்/Raam said...
ரீத்திஸ்'ன் நாயகன் திரைகாவியத்தை இளையதளபதி குருவியோடு ஒப்பிட்டு பார்க்கும் உங்கள் ரசனையை கடுமையாக,கன்னாபின்னாவென இன்னும் என்னனென்ன இருக்கோ அதெல்லாம் சொல்லி எதிர்க்கிறேன்.//

;-)) நம்ம ரித்திஸ் காணாத கண்டனங்களா?

//வந்தியத்தேவன் said...
பிரபா தமிழ்சினிமா.கொம்மில் வந்த இந்தச் செய்தியையும் பாருங்கள்.

நாயகனை அடுத்து தளபதி?
-புதுமுக ஹீரோவின் பலே பிளான்!//

வந்தி

தளபதிக்குப் பிறகு, சாமி, கில்லி எண்டெல்லாம் தலைப்புக்கள் கொடுப்பார். இருந்து பாருங்கள், வேற வழி ;-)

Sen said...

//கலைஞர் திரையுலகத்துக்காக எவ்வளவோ செய்றார், இதைக் கொஞ்சம் கவனிக்கக் கூடாதோ?//--intha line thaan kalakal

krish said...

ulaka cinemavil puthu muyarchi

வந்தியத்தேவன் said...

இந்தச் செய்தியையும் பார்த்து காண்டாகுங்க.

என்ன கொடுமை இது

இன்னும் மூனறு வருடங்களில் J.K.ரித்திஷ் சூப்பர் ஸ்டாராகிறார் என ஆரூடம் கூறியிருக்கிறார் 'நாயகன்' இயக்குனர்.

'கானல் நீர்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ். படம் வெற்றிபெற்றதோ இல்லையோ கோடம்பாக்கத்தில் இவரது முகம் தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு கடஅவுட்களிலும் போஸ்டர்களிலும் இவரது முகம் பரிட்சயம்.
தமிழக அமைச்சர் சுப.தங்கவேலுவுக்கு இவர் பேரன் உறவு என்பதுடன் இராமநாதபுர மக்கள் தங்கள் மனசுக்குள் ரித்திஷூக்கு கோயில் கட்டி கும்பிடுகின்றனராம். எட்டாம் வள்ளலுக்கு பிறகு எண்ணிக்கை உயர்த்தும் அளவிற்கு வள்ளலாகவும் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.

ரித்திஷ் இரண்டாவதாக நடித்துள்ள படம் 'நாயகன்'. இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அனிதா. இன்னொரு நாயகனாக ரமணாவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லாவும் நடித்துள்ள இப்படத்தை சரவண ஷக்தி இயக்கியுள்ளார். மரியா மனோகர் இசையமைப்பில் முத்துவிஜயன், யோகி, க.செழியன், கார்த்தி்க் நேத்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் பாடல்களையும், ட்ரெயிலர்களையும் வெளியிட, குடிசை மாற்றுவாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் பெற்று்கொண்டார். பாடல் சி.டி.யை செய்தி துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி பெற்றுக்கொண்டார். படத்தின் ட்ரெயிலரை வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டார்.

விழாவில் பிலிம் சேம்பர் தலைவர் கேயார்ஜி, தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இராம நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விழா முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் ஜெயகுமார் ரெட்டி, "இரண்டு கோடி ரூபாய் படஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் இப்போது எட்டு கோடி ரூபாய் பட்ஜெட்டை தொட்டுள்ளது. அதற்கு காரணம் படத்தின் நாயகன்தான். இராமநாதபுர மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கையும், மரியாதையையும் பார்த்தபிறகு படத்தை பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்தோம். ரித்திஷ் - அனிதா ஆடிப்படும் பாடல் காட்சிக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இயக்குனர் சரவண ஷக்தி போசியபோது "அடுத்த மூன்று ஆண்டுகளில் ரித்திஷ் தமிழ்நாட்டின் இன்னொரு சூப்பர் ஸ்டாராக மாறிவிடுவார் என பாராட்ட" ரித்திஷ் முகத்தில் பெருமிதத்தின் எல்லை.

சினிச‌வுத்

கானா பிரபா said...

சென், கிரிஷ், வந்தி

என்னமோ தெரியல தமிழ் சினிமாவுக்கு அவ்வப்போது பல சாபக்கேடுகள் வந்து தொலைக்குது.

பொன்வண்டு said...

தலைவரைப் பற்றிய அனைத்து விமர்சனங்களுக்கும் கண்டனங்கள்.. :)

ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் படி தலைவர் வற்புறுத்துகிறார். பதவிக்கு வந்தவுடன் பதிவு போட்டவர், பின்னூட்டத்தில் கலாய்த்தவர் என எல்லோர் வீட்டுக்கும் ஏரோப்ளேன் அனுப்புவோம் (ஏன்னா எங்க ரேஞ்சே வேற) என எச்சரிக்கிறேன்.

ஒரிஜினல் "மனிதன்" said...

அய்யா பிரபா,

விஜய் நடிச்ச முதல் படமான செந்தூரபாண்டிக்கு தினமலர் எழுதுன விமர்சனம் என்ன தெரியுமா?

"காசு கொடுத்து இந்த மூஞ்சிய பார்க்கனும்ங்கிறது தமிழர்களோட சாபக்கேடுன்னு எழுதியது.

கானா பிரபா said...

//பொன்வண்டு said...
தலைவரைப் பற்றிய அனைத்து விமர்சனங்களுக்கும் கண்டனங்கள்.. :)//

ஆஹா இணையத்திலேயே கண்காணிப்பு பலமா இருக்கா ;-)


//ஒரிஜினல் "மனிதன்" said...
அய்யா பிரபா,

விஜய் நடிச்ச முதல் படமான செந்தூரபாண்டிக்கு தினமலர் எழுதுன விமர்சனம் என்ன தெரியுமா?//

வாங்க ஒரிஜினல் மனிதன்

விஜய்யை அது மட்டுமா சொன்னாங்க, பலான படங்களின் நாயகன் என்றும் பத்திரிகைகள் சோப்பு போட்டன.

விஜய் என்றாலும் சரி ரித்திஷ் என்றாலும் சரி அளவுக்கு மீறிய பில்ட் அப் உடம்புக்கு ஆகாது.