Thursday, May 22, 2008

கில்மாவோ கில்மா

1. GO TO THE FOLLOWING SITE:
www.tatuagemdaboa.com.br/

2. TYPE YOUR FIRST NAME ON THE 1st LINE
3. TYPE YOUR LAST NAME ON THE 2nd LINE (Skip your e-mail address.)
4. Click on 'Vizualizar' and watch what happens .
கில்மாவை என்ஜாய் பண்ணுங்க

ரெண்டு போட்டிக்கு வோட்டுப் போட்டாச்சா?

Tuesday, May 20, 2008

ரெண்டு போட்டி - முதல் கட்ட வாக்கெடுப்பு - Updated

வணக்கம் மக்களே!! ரெண்டு போட்டியில் பட்டையைக் கிளப்பும் உங்க பங்களிப்புல மகிழ்ச்சிக் கடலில் கைப்புவை தள்ளிவிட்டுட்டு மத்த சிங்கங்கள் படகுல மிதந்துட்டிருக்கோம். போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் ஏற்கனவே சொன்னது போல் உங்களின் முதல் இரண்டு பதிவுகளையோ அல்லது இந்தப் பதிவில் நீங்க சொன்ன இரண்டு பதிவுகளையோ முதல் கட்ட வாக்கெடுப்புக்கு சேர்த்திருக்கோம்.



போட்டியில் கலந்துகொள்ளும் பதிவுகளின் முழுப்பட்டியல்:


செல்விஷங்கர்

1. இரண்டடியில் இன்பம்

2. இரண்டு மனம்

பாஸ்டன் பாலா

1. ரெண்டுக்கு வந்த கோலாகலம்

அம்பி

1. ரெட்டை ஜடை வயசு

2. தமிழ் Vs உதித் நாராயண்

சென்ஷி

1. என் இரண்டாம் காதலி

2. உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

ச்சின்னப் பையன்

1. எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!

2. கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்

தமிழரசன்

1. ஜோடிப் புறா

2. ப்ளாஸ்டிக் பூக்கள்

கோவி.கண்ணன்

1. சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

PPattian : புபட்டியன்

1. இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா

2. குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்

ramachandranusha(உஷா)

1. தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

KING

1. வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...


பாச மலர்

1. நதியொன்று விதி தேடி..

2. நிறைமதி காலம்

ஆயில்யன்

1. இது ”ரெண்டுக்கு” மேட்டர்

2. ”இரண்டு”ங்கெட்டான்


திகழ்மிளிர்

1. இதயம் இரண்டாகிறது

2. அன்பே சிவம்

கண்மணி

1. ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...


இரா. வசந்த குமார்

1. எனவே, நான், வேண்டாம்.

2. இது நாடகம்?


அபி அப்பா

1. வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!

2. தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!


சுல்தான்

1. இரண்டுமே அவள்தான்


பினாத்தல் சுரேஷ்

1. இதென்ன கலாட்டா?

2. இரண்டும் ஒன்றும்


இளைய கவி

1. வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"


நிஜமா நல்லவன்

1. ரெண்டாவது அட்டம்ப்ட்!!

2. யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!


சிறில் அலெக்ஸ்
1 இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்


மங்களூர் சிவா

1. ரெண்டு


இரவு கவி

1. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக...


Sen22

1. எனது புலம்பல்கள்_(9)


லக்கி லுக்

1. திரும்பிப் பாருடி!

2. ரெண்டக்கா.. ரெண்டக்கா.. ரெண்டக்கா..


KRP

1. கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே ...

2. கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்



Radha Sriram
1. இரட்டை பதிவர்கள் இம்சை...


Sathiya

1. இரண்டக்க இரண்டக்க...

2. ரெண்டே ரெண்டு ஆசைதான்...


தமிழ் பிரியன்

1. தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''

2. ஆத்தா! ரெண்டாவது ரேங்க் வாங்கிட்டேன்..

சந்தோஷ்

1. இரண்டு வார்தைகளால் உல‌கை அறிந்தோம்

2. இரண்டு விரல்களின் நடுவில் ஒற்றை குழல்


NewBee

1. ஒரே ஒரு கதை

2. டாக்டர் புதுவண்டின் பரிந்துரை


நிலா

1. நிலாவுக்கு இன்று இரண்டு


கல்யாண்ஜி

1. இரண்டு மனம் வேண்டும்- டிஎம்எஸ்ஸின் திகில் அனுபவம்

2. இடமாற்றம் - வ.வா.சங்கத்திற்கான போட்டிக் கவிதை


ஓகை

1. ரெப்பா கியர்.


சகாதேவன்
1. யூ ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்

2. கல்யாண சமையல் சாதம்


ஷைலஜா

1. எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்


ஜாம்பஜார் ஜக்கு

1. இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.


பொன்வண்டு

1. அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )

1. முருகன் கொடுக்காத இரண்டு


அருட்பெருங்கோ

1. தண்டவாளப்பயணம்

கபீரன்பன்

1. ஒரு ஜோடி நாற்காலியின் கதை


சக்தி

1. அன்பு மகனே

TBCD

1. இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!!-

68 பதிவுகளையும் படிச்சுட்டீங்களா? வோட்டுப் பொட்டி கீழே இருக்கு. உங்களுக்கு புடிச்ச ஒரு 'ரெண்டு' பதிவைத் தேர்ந்தெடுங்க. ஒவ்வொரு பதிவுக்கும் பக்கத்தில் இருக்கற பொத்தானை க்ளிக்கினாலே வோட்டு விழுந்துடும். எல்லா வாக்கெடுப்பும் போல இங்கயும் ஒருத்தருக்கு ஒரு வோட்டு தான். சங்கத்துல புகுந்து யாராவது வாக்குப்பொட்டியைத் தூக்கனும்னு நினைச்சா தல தன்னோட தலையை அடமானம் வச்சாவது வாக்குப்பொட்டியைக் காப்பாத்துவாரு.

பூத் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை திறந்திருக்கும். ஒரு வாரத்துக்குள்ள எல்லா பதிவுகளையும் படித்து உங்களுக்குப் பிடித்த ஒரு 'ரெண்டு' பதிவுக்கு வோட்டு போடுங்க. இந்த வாக்கெடுப்பின் மூலம் இருபது பதிவுகள் இரண்டாம் கட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.


போட்டியில் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துக்களும்!!

கீழே இருக்க பொட்டியில் உங்க பொன்னான வாக்குகளை கன்னாபின்னான்னு போட்டுத் தாக்குங்க!! ஸ்டார்ட் மீஜீக்க்!!

Update: மக்களே, முதல்ல வைத்த வாக்குப்பெட்டி நான் எழுதற நிரலி மாதிரியே புட்டுக்கிச்சு.....சொதப்பிருச்சு..டமாலாயிருச்சு..டூமிலாயிடுச்சு..புஸ்ஸாயிடுச்சு..மொத்தமா வெடிச்சிருச்சு....

Zoho-வில் உள்ள சில குறைகளால் அதை தூக்கிட்டு புதுசா ஒரு பொட்டி இறக்கியிருக்கோம்..இப்ப உங்க விரல்ல நீங்களே மையை வைச்சுக்கிட்டு ஆளுக்கு ஒரே ஒரு கும்மாங்குத்து குத்துங்க...வோட்டு போட்டதும் உங்க மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் வரும்(எரிதமாகக்கூட(Spam) வரலாம்)..அந்த மின்மடல் மூலம் உங்க வாக்கை உறுதிசெய்யனும்..மறந்துடாதீங்க..



வோட்டு பொட்டி தூக்கியாச்சு!!

Saturday, May 17, 2008

கைப்புள்ள VS கட்டதுரை ! சிங்கத்துக்கே சிக்கெடுத்தவண்டா நானு !

கிராம சந்தைக் கூடும் போதெல்லாம், ரவுடி பில்டப்பில் பணம் வசூல் செய்துவருகிறார் கைப்புள்ள, அவருக்கு நான்கு அல்லக்கைகள் வேறு.

எல்லோரும் சந்தைக்கு வசூல் வேட்டைக்கு கிளம்புகிறார்கள்.
சந்தையில் கடைக்காரர்கள் கைப்புள்ளையை கண்டதும்

"கைப்புள்ள வர்றான், கைப்புள்ள வர்றான் காசை மூடுங்க, முடிஞ்சா எல்லாத்தையும் துணியைப் போட்டு மூடுங்க"

அல்லக்கை 1 : அண்ணே, உங்களப் பார்த்து எம்புட்டு பயம்

கைப்பு அவனுக்கு ஒரு அரை விட்டுவிட்டு

கைப்பு : நான் யாரு, ரவுவுடி.....பயப்படாமல் என்கூட பம்பரம்
வெளையாட கூப்பிடுவாங்களா ?

அல்லக்கை 2 : அண்ணே அங்க பாருங்க, முறுக்குகாரி உங்களைப் பார்த்ததும் முறுக்கெல்லாம் மூடி வைக்கிறா...

அனைவரும் அங்கே செல்கிறார்கள்

கைப்பு : அடியே என் பெரிய அத்தே, ஏன் மூடி வச்சு வியாபாரம் பார்க்கிறியே ?

முறுக்குகாரி : மூடி வைகலைன்னா , கண்ட நாயும் கவ்விக்கிட்டு போய்டும்

கைப்பு : நக்கலு ? சரி இன்னிக்கு எம்புட்டு வியாபாரம் ஆச்சு ?
முறுக்குகாரி : அதையேன் உன்கிட்ட சொல்லனும், இந்த இரண்டு முறுக்கை கடிச்சிக்கிட்டே எடத்தை காலி பண்ணு.

கைப்பு : அதை மொதலிலேயே கொடுத்து இருந்தா, நான் ஏன் உங்கிட்ட மல்லுக்கட்டப் போறேன்

முறுக்குகாரி : மல்லுக்கட்டிதான் பாரேன், என் புருசன் வெட்டிட்டுதான் ஜெயிலில் இருக்கான்.

கைப்பு அங்கிருந்து நகர்கிறார், அடுத்து பட்டானிக்கடைக்குச் செல்கிறார்கள்

ஒரு பிடி வறுத்த வேர்கடலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே

கைப்பு : இது பொறிக்கடலை தானே ?

கடைக்காரர் : உங்க ஊரில் பொறிக்கடலை, எங்க ஊரில் வறுகடலை

கைப்பு : என்னமோ ஒரு கடலை, சரி கமிசனை எடு

கடைக்காரர் : டேய் கொள்ளிக் கட்டையை வெளியே இழு

கைப்பு : எதுக்கு கொள்ளிக்கட்டையெல்லாம், இன்னிக்கு வியாபாரம் ஆகலைன்னு தன்மையாக சொன்னால் போயிடப் போறோம்

கடைக்காரர் : அட அது இல்லை, ஒரே பொகையாக இருக்கு வேற கரியைப் போடச் சொன்னேன்,

கைப்பு : சரி சரி வாரேன், சாயந்தரம் இந்த பக்கம் வருவேன் எடுத்து வை

கடைக்காரர் : இப்பயே வாங்கிட்டுப் போ, டேய் அந்த ...

செல்லிக்காமல் இடத்தை காலி செய்கிறார்

அடுத்து கட்டதுரை கறி விற்கும் இடத்திற்கு செல்கிறார்கள்

அல்லக்கை 3 : அண்ணே, கட்டதுரை பாயி ரொம்ப நாளாக ஏமாத்திக்கிட்டு வர்றாண்ணே

கைப்புள்ள : இன்னிக்கு பாரு, அவன் ஆடு வெட்டுறானா இல்லை நான் அவனை என்ன செய்கிறேன்னு பாரு

இடத்தை நெருங்குகிறார்கள்

கைப்புள்ள : டேய் கட்டதுரை ...

கட்டதுரை : வா...கைப்புள்ள....இங்கே எப்படியும் வருவேன்னு தெரியும்...என்ன வேண்டும், இன்னிக்கே வாங்கிக்கிறியா ? இல்லாட்டி ?

தள்ளி நின்று கொண்டே

கைப்புள்ள : என் ஆளை அங்கிட்டு அனுப்புறேன், அவன்கிட்ட கொடு

நெருங்கிச் சென்ற அல்லக்கைக்கு கட்டதுரையின் கையால் பலத்த அரை விழுகிறது

கைப்புள்ள : இப்ப என் ஆள அடிச்சுட்டே மன்னிச்சு விட்டுறேன்...என்மேல கைவச்சு பாரு

கட்டதுரை கைப்புள்ளையை நெருங்கி, ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டு,

கட்டதுரை : இப்ப என்ன சொல்றே ?

அசராமல்

கைப்புள்ள : ம்ம்ம்ம்ம் இரண்டாவதும் கைவச்சுதான் பாரேன்

மறுபடியும் அறை விழுகிறது

கைப்புள்ள : ஸ்டாப் ஸ்டாப் உனக்கு இரண்டு சான்ஸ் கொடுத்தேன் முடிஞ்சுட்டு, அத்தோடு முடிச்சிக்கிறனும், அது மரியாதை.

கட்டதுரை : இல்லேண்ணா ?

அதற்குள் நான்காவது அல்லக்கை செல்பேசியில் யாருனோ பேசிவிட்டு

அல்லக்கை 4 : அண்ணே, அண்ணே உங்களுக்கு மூத்திர சந்தில் இருந்து போன் வந்திருக்கு

கைப்புள்ள : கட்டதுரை கட்ட்ட்ட்ட்ட்ட துரை பார்த்தியா என் ரேஞ்ச...நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லை, அங்கங்கே அப்பாய்ன்மெண்ட் கொடுத்து...அடிவாங்க போன் போட்டு கூப்பிட்டு கொடுக்கிறானுங்க, நான் அவ்வளவு பிசி.... உன்னிய மதிச்சி 2 அரைவாங்கினது நான் உனக்கு கொடுத்த மரியாதை...காப்பாத்திக்க...

கட்டதுரை : இந்தா கைப்புள்ள....வாங்கிட்டுப் போ,,,,,,,

கட்டதுரை கைகொட்டி சிரிக்கிறார்.

கைப்புள்ள மனதுக்குள், 'பாவி பய கன்னத்துல கைவச்சுட்டனே, கண்ணெல்லாம் பொறி பறக்குது...வலிதெரிகிற மாதிரி காட்டிக்கிட்டா அப்பறம் ஒரு பயலும் பயலுக்கும் பயம் இல்லாமல் போய்டும்'

அல்லக்கை 3 : அண்ணே வலிக்குதான்னே ?

கைப்புள்ள : நான் யாரு சிங்கத்துக்கே சிக்கெடுத்தவண்டா நானு...... எனக்கு வலியா ? போடா எ...வென்று...

வலியை பொறுத்துக் கொண்டு அவனை முறைக்கிறார்

பிகு : தமிழகம் செல்வதால் நேரம் கிடைக்கும் போது கர்ஜிப்போம் ! சிங்கமாமே...:))

Thursday, May 15, 2008

இவிங்கெல்லாம் எப்படி பெயர் வைப்பாங்க ?

வலைப்பக்கத்துக்கு பெயர் வைத்துவிட்டு எழுதுகிறோம். வலைப்பக்கத்தின் தலைப்புக்கும் (மொட்டைத்தலை) எழுதுவதற்கு (முழங்காலுக்கும்) எதாவது தொடர்பு இருக்கிறதா ?. ஒருசிலர் தலைப்பில் உள்ளவாறு அதன் தொடர்பிலேயே முடிந்தவரையில் எழுதுவார்கள்.

அறியப்பட்டவர்கள் (பிரபலங்கள்) ,அவர்களின் வலைப்பக்த்திற்கு பெயர் வைத்தால்,

கலைஞர் : பாசவலை
ஜெயலலிதா : என்னுயிர் தோழி
மருத்துவர் இராமதாஸ் : மதில்மேல் பூனை
திருமாவளவன் : அடங்குடா
வைகோ : சிறைப்பறவை
விஜயகாந்த் : புள்ளிவிவரம்
கிருஷ்ணசாமி : எங்கே நிம்மதி
ஈவிகேஎஸ் இளங்கோவன் : ஏட்டிக்கு போட்டி
சரத்குமார் : அண்ணாச்சி
ஸ்டாலின் : பட்டத்து இளவரசன்
அழகிரி : மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்
கனிமொழி : டெல்லி தமிழச்சி
வழக்கறிஞர் ஜோதி : அந்தரங்கம்
மாறன் சகோதர்கள் : கிரஹ(ண)ம்
ரஜினிகாந்த் : 6 லிருந்து 60 கோடிவரை
கமலஹாசன் : முகங்கள்
அஜித் : பூவா தலயா ?
விஜய் : 'கருடன்' என்று பெயர் வைக்க இருந்தார், குருவியினால் கைவிட்டுவிட்டார்
சூர்யா : ஞாபகங்கள்
விக்ரம் : ஏற்றம் இறக்கம்
சிம்பு : சகலகலாகெட்டவன்
தனுஷ் : மருமகன்
வடிவேல் : கிளம்பிட்டாங்கையா
விவேக் : நக்கலு
குஷ்பு : 'கற்'பகம்

இதுக்கே மூச்சு வாங்குது

நயன்தாரா : ________ ?
நமீதா : ______ ?
த்ரிசா : ______ ?

விடுப்பட்ட இடங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். மற்ற மற்றவர்களின் பெயர்களையும் வலைப்பூ தலைப்புகளையும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். எல்லோரும் படித்து மகிழ்வோம்.

Tuesday, May 13, 2008

இவ்வளவு செலவு ஆச்சா ?

சென்னைப் போன்ற பெரிய நகரங்களில் ... எல்லாம் தினப்படி சரியாக பழக்கத்தில் வைத்திருக்காமல் இருந்து... திடிரென்று திணறடிக்கும் அடிவயிற்றின் அவசரத்திற்கு, கட்டண கழிப்பிடம் கிடைப்பதே பெரிய விசயம் தான், அங்கு மூக்கைப் பிடித்துக் கொண்டு உள்ளே (வெளியே) சென்று வருபவர்களுக்கு எப்போதும் நரக(ல்) வேதனைதான்.

ஒன்றாக தங்கி இருக்கும் இரு நண்பர்கள் பேசிக் 'கொல்வதை' கிழே கவனியுங்கள்,

*********

"ஏண்டா அடிவயித்தை முட்டுவது போல மூஞ்ச வச்சிருக்கே....வயுத்த வலிச்சா போய்டு வர வேண்டியதுதானே"

"போய்டு வந்ததால் தான் அந்த கொடுமையே நடந்து போச்சு"

"வயிறு கடுப்பா ? கடுக்கா தண்ணி குடிச்சா சரியாப் போய்டுன்னுவாங்க "

"அட அதில்லடா....ஒன்னுமில்ல நீ சும்மா இரு" அவன் தீவிரமாக அன்றாட கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டு இருந்தான்,

முதலாமவன் எட்டிப்பார்த்து,

"என்னடா இது, டாய்லெட் சென்று வந்த செலவு ரூ 25.70 ன்னு எழுதி வைச்சிருக்கே"

"ஆமாம், வீன் விரயம் ஆனாலும் செலவு செலவு தானே"

"அப்படி என்ன விரயமாச்சு, கழுவ பன்னீரையா வாங்கிப் போனே ?"

"ஐயோ......., வீட்டுக்கு திரும்பி வரும்போது பயங்கர வயுத்து வலி, கட்டண கழிவறைக்குச் போனேன், அவசரத்தில் குனிந்த போது, சட்டை பாக்கெட்டில் இருந்த 23.70 காசு டாய்லெட்டில் கொட்டிவிட்டது, நான்கு ஐந்துரூபாய் காய்ன், அப்பறம் சில்லைரைகள்
மொத்தம் 23.70 வைத்திருந்தேன், அத்தனையும் கொட்டிட்டு...போனது போனது தானே..."

"அடப்பாவி... டாய்லெட் கட்டணம் 2 ரூபாய் சேர்த்து மொத்தம் 25.70 ஆன கணக்கு இப்பதான் புரியுது...வெவரமானவன் தான் நீ..."

இது எப்போதோ ஜூவி டயலாக் பகுதியில் யாரோ எழுதி சின்னதாக வந்த டயலாக்,

கொஞ்சம் விரித்து எழுதி இருக்கிறேன்.

பிகு : இது வவாச "இரண்டு" போட்டிக்காக எழுதியது இல்லை. :)

Monday, May 12, 2008

ரெண்டு போட்டி அறிவிப்பு

ரெண்டு போட்டி முடிஞ்சி ஒரு வாரமாகுது என்னடா இன்னும் எந்த அறிவிப்பும் வரலைனு யோசிச்சிட்டு இருக்கற மக்கள் எல்லார்கிட்டையும் மாப்பு சொல்லிக்கறேன். ஆபிஸ்ல ஆணிகளின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாகிடுச்சி.

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்.

போட்டி ரொம்ப அருமையா போச்சு. நிறைய பேர் கலந்துகிட்டு பட்டையை கிளப்பனீங்க (ஏன் லவங்கத்தை கிளப்பலையானு யாரும் கேக்க கூடாது). எல்லாருக்கும் எங்களோட நன்றி. இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இது தான்.

* இரண்டு பதிவுகளுக்கு மேல போட்டிருக்கவங்க எல்லாரும் போட்டிக்கான தங்களோட இரண்டு பதிவை இன்னும் இரண்டு நாளைக்குள்ள (May 14 22:22 PST) இந்த பதிவுல சொல்லிடுங்க. (யாராவது கலந்துக்கனும்னு ஆசைப்பட்டா இந்த ரெண்டு நாளைக்குள்ள பதிவு எழுதி இங்க லிங் கொடுத்துடுங்க. இறுதி வாய்ப்பு).

*இரண்டு நாள்ல கொடுக்காதவங்களோட முதல் இரு இடுகைகள் கணக்கில் கொள்ளப்படும்.

*அடுத்து ஒரு வாரத்துக்கு ஓட்டெடுப்பு நடக்கும். அதுல ஜெயிக்கற 20 பேர் மீதி இருக்கற படைப்புகளுக்கு மதிப்பெண் கொடுப்பாங்க. அதுக்கான அறிவிப்பு May 15ஆம் தேதி வரும்.

ரெடி ஸ்டார்ட்...

பித்தாஸ்ரமம் - பித்தானந்தா - பக்தைகள் !

வெள்ளிக்கிழமை இரவு பூசைக்காக பித்தாஸ்ரமத்தில் பக்தைகளுக்கு நடுவே அமர்ந்திருக்கிறார் பித்தானந்தா,

கண்ணை மூடியபடி... மொதுவாக,

பித்தானந்தா : ஓம், கிரீம். க்ளீம்....கிரீம்....கிரீம்....கிரீம்....கிரீம்....கிரீம் .... என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

பக்தை ஒருவர்,

பக்தை : சுவமிஜி, என்ன இது கிரீம் கிரீம் என்று பலமுறை சொல்கிறீர்கள்

பித்தானந்தா : குழந்தாய், நம் பக்தர் ஒருவருக்கு 'ஏஜீஎஸ் ரிங்சோலின்' போட்டும் அரிப்புத் தீரவில்லையாம், என்னிடம் என்ன செய்வது ....குழப்பமாக இருக்கிறது என்று கேட்டார், அவருக்காகத்தான், கண்ணை மூடிக் கொண்டு வேறு எதாவது நான் பயன்படுத்திய நல்ல கிரீம் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று கிரீம்... கிரீம்... என்று சொல்லிப் பார்த்து நல்ல அரிப்பு நிவாரணி களிம்பின் பெயர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

எல்லா பக்தைகளும், குருவே சரணம்....குருவே சரணம்... என்று சொல்ல மற்றொரு,

பக்தை : சாமி தும்மினாலும் கூட அதற்கு பொருள் இருக்கிறது, ம் சாதாரணவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப் போகிறது.

சிறிது மூக்குப் பொடியைப் போட்டுவிட்டு, அப்போது பித்தானந்தா பலமாகவே தும்மினார்.

பித்தானந்தா : அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

பக்தை : சுவாமிஜி, என்ன ஆயிற்று ? ஏன் இந்த பலமான தும்மல் ?

பித்தானந்தா : குழந்தாய், உலகம் கெட்டுக்கிடக்கிறது, நான் போட்ட பட்டணம் பொடியிலும், கெட்டப்பயல்கள் கலப்படம் செய்து விற்கிறார்கள், நாசியில் தூசி படிந்தது போல் ஒரே நெடி.

பக்தை : சுவாமிஜிக்கு மோப்ப சக்தி அதிகம், முகர்ந்து பார்த்தே கலப்படத்தைச் சொல்லிவிடுகிறாரே, சுவாமி இது தெய்வீகத் தன்மை தான்

அனைவரும் உடனே கன்னத்தில் போட்டுக் கொண்டு,

பக்தைகள் : பித்தானந்த பகவானே.....பித்தானந்த பகவானே

மற்றொரு பக்தை, சுவாமிஜியிடம்

பக்தை : சுவாமிஜி தவறாக நினைக்கக் கூடாது. ஒண்ணு கேட்கனும்

பித்தானந்தா : குழந்தாய், நான் தவறாக நினைப்பேன் என்று நீ தான் தவறாக நினைக்கிறாய், முக்காலமும் உணர்ந்த எனக்கு எல்லாம் சரியாகாவே தெரியும். ம் சொல்லு.....

பக்தை : வெளியே 'புகை உடலுக்கு பகை' என்று பதாகையில் எழுதி தொங்கவிட்டிருக்கிறீர்கள், இங்கே வெண்குழல் வத்தியை 10 நிமிடத்திற்கு ஒரு முறை பற்ற வைக்கிறீர்களே, இது சரியா சுவாமிஜி ?

பித்தானந்தா பலமாக சிரிக்கிறார்......

பித்தானந்தா : குழந்தாய்.... உடல் என்றால் இந்த தேகம்.....புகை என்றால் அதனுள் உள்ள ஆவி....ஆன்மா

பக்தை : சுவாமிஜி புரியவில்லை. தேகமும் ஆன்மாவும் ஏன் ஒன்றுக்கொன்று பகை ?

பித்தானந்தா : இந்த பூவுலகில் உயிரும், உடலும் சேர்ந்திருப்பதால் தானே வாழ்கையே, ஆனால் இந்த வாழ்கையை உண்மை, நிரந்தரம் என்று எண்ணி, மனிதர்கள் அடுத்தவர்களையெல்லாம் ஏமாற்றி சொத்து சேர்க்கிறார்கள். என்றோ ஒரு நாள் உடல் - ஆன்மா பகை ஏற்பட்டு இரண்டும் நிரந்தரமாக பிரிந்துவிடும். இது தெரியாமல் மனிதர்களுக்கிடையே பகை.....பேராசை .......நிம்மதி இழந்து வாழ்கிறார்கள்.


பித்தனந்தாவின் 'புகை உடலுக்கு பகை' விளக்கம் கேட்டு, ஒட்டுமொத்தமாக பக்தைகள் அனைவரும், பரவசத்துடன்

பக்தைகள் : "பித்தானந்தா சுவாமிஜி உங்களால் பேறு பெற்றோம்.......பெரும் பேறு பெற்றோம்"

பித்தானந்தா : சத்தமாக சொல்லாதீர்கள், பெரும் பேறு பெற்றோம் என்பதை....குழந்தை பெறும் பேறு பெற்றோம் என்று யாரும் புரிந்து கொண்டு என்னை பிரேமானந்தாவுக்கு பக்கத்து செல்லில் போட்டுவிடப் போகிறார்கள்.

Friday, May 9, 2008

இதுவும் காதல் தானோ ?!

முதன் முதலில் அவளை கோவிலில் தான் சந்தித்தான், ஒரு சின்னக்குழந்தை அவளைப் பார்த்து எதோ சொல்ல... சில்லைரையைக் கொட்டியது போன்று அவளின் சிரிப்பு, திரும்பிப் பார்த்தான்,

கையில் இருந்த தட்டில் உடைந்த தேங்காய் மற்றும் பழங்கள் இருந்தன.

அவன் பார்பதை கவனித்துவிட்டதாலோ, வேறு காரணத்தினாலோ விறுவிறுவென்று
கிளம்பி சென்று விட்டாள்,

அடுத்து ஒருவாரம் சென்று, அதே கோவில் வாசலில் அவள்,

அவனை கண்டுகொண்டு, பார்த்து புன்னகைத்தாள், இப்படி ஒரு பெண்ணுக்குத்தான்

இங்கே தினமும் வந்து, காத்துக் கிடந்தது போல் அவனுக்கு மனசு குளிர்ந்தது .

அவள் சிரிப்பு கொடுத்த தைரியத்தில், அவன்

"எ....என்ன ஒருவாரம் இருக்குமா ? இங்கே வந்து"

அவளும் தயங்கி தயங்கி,

"இங்கே யாரும் நல்லவர்களே வருவதில்லை, பூரா காலி பசங்க, என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள், அதுதான் இப்பெல்லாம் கபாலிஸ்வரர் கோவிலுக்கு போய்விடுகிறேன்"

"ஓ...! அங்கே பரவாயில்லையா ?"

"ம் அப்படித்தான் நினச்சு போனேன், போய்வர பஸ் செலவு அது இதுன்னு...அலைச்சல், பேசாமல் பழையபடி இந்த கோவிலுக்கே.."

அவள் இயல்பாக பேசுவதை வைத்து, தயங்காமல் சட்டென்று கேட்டுவிட்டான்

"என்னைய உனக்கு பிடிச்சிருக்கா, ஒருவாரமாக உன் நினைவில் தான் இருக்கேன்"

"பிடிக்கலைன்னா பேசுவனா ?" வெட்கப்பட்டாள்

"அது என்ன தட்டுல, ஏன் மூடி வச்சிருக்கே..."

"கொரங்கு தொல்லைதான்... திறந்து இருந்தால் தட்டிப்பறிச்சுட்டு ஓடிடும்"

"...ம் சரிதான்...நீ எவ்வளவு நாளாக இந்த கோவிலில்"

"நான் கேட்கவேண்டிய கேள்வி, உங்களை போனவாரம் தான் முதன் முதலில் பார்த்தேன்"

"ஆமாம், நான் காரணீஸ்வரர் கோவிலுக்கு போவது தான் வழக்கம், அங்கும் கூட்டமாகிவிட்டது, ஒரே கூட்டம் எனக்கு சரிப்பட்டுவராது...அப்பறம் எப்படி அங்கேயே....அதுதான் இந்த கோவிலுக்கு வந்தேன்"

"சரி சரி ... முதலில் வரிசையைப் பிடிக்கனும்... வாங்க பக்கத்திலேயே கொஞ்சம் தள்ளி உட்காருங்க"

"ம் சரிதான் நம்ம கதையை இனி தினமும் பேசுவோம்"

அதன் பிறகு அவர்கள் இருவரும்,வரும் போகும் பக்தர்களைப் பார்த்து, கோரசாக

"அம்மா, ஐயா, தாயே தருமம் செய்யுங்கம்மா... புள்ளக் குட்டிகெல்லாம் புண்ணியமாப் போவும்"

****

பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது இல்லை. ச்சும்மா டுவிஸ்டு சிறுகதை(?) - அடிக்கவராதிங்க. பிச்சைக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் காதல் வருமே, துணை தேவைப்படுமே. ஒரு படத்தில் விவேக் - கோவை சரளா (பிச்சைக்காரியாக), இருட்டுக்குள் நடக்கும் காமடி நினைவு வந்தது, இதை எழுதி தொலைத்தேன்.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... பிச்சைக்காரர்கள் கிள்ளுக் கீரைகளா ? அவர்களை வைத்து காமடி செய்தால் ஏன் எந்த சிந்தனையாளர்களும், அமைப்புகளும் அதை எதிர்ப்பதே இல்லை ? அவர்களை விலங்குகளைவிட கேவலமாக நினைக்கிறதா உலகம் ? உடலியலாமை என்ற காரணம் தவிர்த்து பிச்சை எடுப்பது இழிவான செயல்தான், ஆனால் திருடர்களை ஒப்பிடுகையில் இவர்கள் பரவாயில்லையே, கேட்டுதானே வாங்குகிறார்கள்.

கடைகளில் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசத்திற்கு கூடும் கூட்டத்தை என்னவென்று சொல்வது ?

Thursday, May 8, 2008

:-) பல்டி லெவல் மார்கெட்டிங்க் (-:

எதோ ஒரு விதத்தில் முன்பே அறிமுகமான இந்திய மலேசியர் இருவரின் உரையாடல்கள்,

"சார் உங்களை சந்திக்கனும்னு நினச்சிக்கிட்டே இருப்பேன்...எதாவது வேலை வந்து தள்ளிப் போய்டுது"

"நானும் தான் சார், உங்க தொலைபேசி எண்ணை தொலைத்துவிட்டேன் அதனால தொடர்பு கொள்ள முடியல..."

"எப்படி இருக்கிங்க....அழஞ்சி திரிஞ்சு எதாவது செய்தால் தான் பொழைக்க முடியும் போல இருக்கு"

"சரிதான், முன்னமாதிரி மாச சம்பளத்தில காலம் ஓட்ட முடியல"

"சார், நீங்க தனியார் நிறுவனத்தில் தானே வேலை செய்றிங்க, சம்பளம் கட்டுப்படி யாகுதா ?

"அட...நானே கூட அதை உங்களிடம் கேட்க நினைத்தேன்"

"ஆமாம், பாருங்க சார், ஏறுகிற விலை வாசியில் எங்கே கட்டுப்படி ஆகுது, இருந்தாலும் ஒருவாறு சாமாளிக்கிறேன்"

"உங்களிடம் ஒண்ணு ..."

அவரை பேசவிடாமல்,

"உங்களுக்கு பார்டைம் வேலைப் பார்க்க இஷ்டம் இருக்கா ?"

"உங்களிடம் ஒண்ணு"

"சார், ஸெங்கோ (மங்குஸ்தான் பழசாறு) பற்றி கேள்விப்பட்டு இருக்கிங்களா ?, இதோ பாருங்க "

"...."

"பாருங்க சார்...இது சர்வரோக நிவாரணி சார், ப்ளட் ப்ரசர், சர்கரை எல்லாத்தையும் கட்டுபடுத்துது"

"......!!!! ? " வியப்பு பொங்க அவரைப் பார்க்க,

"ரொம்ப ஆர்வமாக இருக்கிங்க, சொல்றேன், இது பாட்டிலில் அடைத்த ஒரு திரவ உணவு...மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி ஜென்மத்துக்கும் திரும்பாது"

"...."

"ஒரு பாட்டில் விலை 100 ரிங்கிட்.... ஆனால் இது வெளி மார்க்கெட்டில் 120 ரிங்கிட் வரை போகுது"

"...."

"பாருங்க சார்...இதை என் பார்டைம் கம்பெனி 80 ரிங்கிட்டுக்கு உறுப்பினர்களுக்கு கொடுக்கிறார்கள்"

அவரே தொடர்ந்து...

"அத நாம 100 ரிங்கிட்க்கு பொதுமக்களுக்கு விற்கலாம், கூடவே எங்க கம்பெனியில் விற்பனை செய்ய உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால் மாச மாசம் நிரந்தரமாக கமிசன் வரும்..."

"........!!!"

"என்ன சார் அப்படி பார்க்கீறிங்க ? புரியுது நானே சொல்லிடுறேன் .... இதை எல்லோரும் மல்டி லெவல் மாட்கெட்டிங்கான்னு கேட்கிறாங்க... ஆனா இது அது இல்லை...இது வேற..."

"நான் சொல்ல வந்தது..."

"பாருங்க சார்...நீங்க யோசிக்கிறிங்க, தயங்குறிங்க, புரியுது... இப்ப பாருங்க என் மாத வருமானமாக அலுவலக சம்பளம் தவிர கூடுதலாக 5000 ரிங்கிட் வரை கிடைக்குது, என்கிட்ட கார் இருக்கு....பேங்கில சேவிங் இருக்கு"

"நான் சொல்ல வந்தது..."

"நம்புங்க சார், 3 மாதத்தில் உங்க தேவையெல்லாம் பூர்த்தியாகிடும்...."

"நான் சொல்ல வந்தது...."

"இன்னும் எதோ கேட்க நினைக்கிறீர்கள் ....சரி உங்க சந்தேகத்தைக் கேளுங்க...."

"சார் நானும் அதே மங்குஸ்தான் பழச்சாறு தான் விற்கிறேன்"

அதிர்ச்சி அடைந்தவர்,

"கெட்டுது போங்க...வீட்டுக்கு போக நேரமாச்சு...நாம அப்பறம் பேசுவோம்"

இருவரும் அசடு வழிந்து பிரிகிறார்கள்.

Wednesday, May 7, 2008

IPLல் சங்கம்ஸ் 'டரியல்' சிங்கம்ஸ்

நாட்டில் உள்ள அனைத்து டிவி..பேப்பர்.. வார..மாத பத்திரிக்கை எல்லாத்தையும் கூப்பிட்டு சங்கத்தின் புதிய அலுவலகம் முன் உட்கார வைத்திருந்தார் தலக் கைப்பு

சங்கத்தின் மொத்த நிர்வாக குழுவும் அங்கே ஆஜர் ஆயிருந்தாங்க.. சங்கம் டீ ஷ்ர்ட் எல்லாம் போட்டுகிட்டு தல யைச் சுத்தி நின்னாங்க...

"இங்கேப் பாருங்கப்பா.. வெளியே வெள்ளைக்காரன் பேப்பர்ல்ல இருந்து வெறூம் வெள்ளை பேப்பர் வச்சு விக்கறவன் வரைக்கும் வந்துருக்கான்.. எல்லாம் என்னோட மகிமை...இன்னிக்கு நம்ம சங்கம் ஓலக் லெவல்ல கிரிக்கெட் புகழ் அடையப்போகுதுன்னா அதுக்கு என்னோடு உழைப்பு தான் காரணம்.. அதைப் பத்தி விலாவரியா பேட்டி எடுக்க தான் வந்துருக்காங்க.. ஒருத்தனும் வெளியே வந்து பேசபிடாது... அம்புட்டு பயலுக்கு காபி..டீ..டிபன்.. முறுக்கு வடைன்னு சப்ளை பண்றதோட நிறுத்திக்கணும்... நான் கேள்வியை எல்லாம் ஹேண்டில் பண்ணிக்குவேன் .. புரியுதா....இப்போ நான் கிளம்பட்டா...." கைப்பு கிரிக்கெட் கெட்டப்பில் கிளம்ப

"தல தனியா அவ்வளவு பேரையும் எப்படி நீங்க சமாளிப்பீங்க... நான் துணைக்கு வர்றவா" தளபதி சிபி கேட்க.. கடும் கோபத்தோடு ஒரு டஜன் முறை தல தன் சொந்த தலையை சிபியை பார்த்து திருப்புகிறார்.. அந்த வேகம் தாளாமல் சிபியோடு மொத்த சிங்கங்களும் சிலிப் ஆகி கீழே விழுகிறார்கள்...

தல வெளியே கால் வைக்கும் போது.. ஸ்பீக்கரில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே.... அப்படின்னு பாட்டு ஒலிக்குது..

"இந்தப் பாட்டு யாரோட வேலை ராஜா?"

"இந்த தேன்கிண்ணம் மேட்டர் எல்லாம் ராம் கப்பி வோட வேலைங்கறது நாட்டுக்கே தெரியுமே தல.." தேவ் பிட்டைப் போட...

"பாட்டு நல்லாயிருக்கு.. பட் லிரிக்ஸ் சின்ன சேஞ்ச் பண்ணு... வெறும் சிங்கம் வேணாம்... சிங்கம் ஒண்ணு புறப்பட்டதே..டரியல் சிங்கம் ஒண்ணு புறப்பட்டதேன்னு மாத்து.." டரியலுக்கு அழுத்தம் கொடுத்து சொல்லிவிட்டு போகிறார்.

எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு விட்டு பேட்டியை ஆரம்பிக்கிறார் கைப்பு.

"எல்லாரும் கேளுங்க... கேளுங்க.. கேட்டுகிட்டே இருங்க....."

சூரியன் எப்.எம் 98.3 ஐ கப்பி ஆன் பண்ணி அலற விடுகிறான்...எல்லாரும் குழம்பி நிக்குறாங்க.

"ராஸ்கல் காமெடி பண்ணுறீயா... நான் என்ன எப்.எம் வெளம்பரமாக் கொடுக்குறேன்.. வந்து இருக்க நிருபரை எல்லாம் கேள்வி கேக்கச் சொன்னேன்... ஒழுங்கா காபி ஊத்தி கொடுடா இல்ல கொலை பண்ணிருவேன் உன்னை..."

"மிஸ்டர் கைப்பு... இது வரைக்கும் நடந்த எந்தப் போட்டியில்லயும் நீங்க ஆடவே இல்லையாமே...சும்மா இடுப்புல்ல சுளுக்கு அப்படின்னு சொல்லிட்டு உக்காந்துக்குறீங்கன்னு உங்க எதிர் டீமிலே உங்களைப் பத்திச் சொல்லுறாங்களே...?"

"சின்னப் பசங்க ராஸ்கல்ஸ்.. என்னைய அவனுங்கச் சரியாக் கவனிக்கல்லன்னு நெனக்கிறேன்.. போன மேட்ச் பெங்களூர்ல்ல நடந்தப்போ பவுண்டரிக்கு வெளியே.. நம்ம சிவ மணி மோளம் அடிக்க.. அந்த குட்டைப் பாவடைப் போட்ட புள்ளக கூட நான் குத்துன குத்தாட்டத்தைப் பாத்து மிரண்டு பவுண்டரில்ல நின்ன அவங்க பய ஒருத்தன் கேட்ச்சையே விட்டான் தெரியும்ல்ல...நான் ஆடல்லன்னு சொல்லியிருக்காய்ங்க,... அடுத்த வருசம் அந்த புள்ளக அவங்க ஊர்ல்ல மாதாக் கோயில் திருவிழாவுக்கு ஆடுற காண்ட்ராக்ட் கிடைச்சா சொல்லி விடுறோம் அவசியம் வந்து ஆடணும்ன்னு சொல்லிட்டுல்ல போயிருக்காய்ங்க..." சொல்லிட்டு கெத்தாப் பாக்குரார் கைப்பு

கொல்கத்தா மேட்ச்ல்ல டாஸ் போட நீங்க லேட்டா வந்தீங்கன்னு வைன் ஷார்னே கம்ப்ளையிண்ட் பண்ணியிருக்காரே..

அவன் ஒரு வெளக்கெண்ணெய்... டாஸ் போட சில்லரை வேணாமா... கையிலே அம்புட்டும் நூறு ரூவா தாளும் 500 ரூவா தாளுமா இருந்துச்சு..சரின்னு பக்கத்துல்ல இருக்க கடைக்குப் போய் புள்ளங்களுக்கு குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு சில்லரை வாங்கிட்டு வந்தேன்.. கொஞ்ச தாமதம் ஆகிருச்சு...

"தல எங்களுக்கு நீ குச்சி மிட்டாய் தரவே இல்லையே..." சிவா கேட்க

"ஆமா தல குருவி ரொட்டிக் கூட தர்றல்லயே" வெட்டியும் துணைக்கு சேர்ந்து கேட்க..

அது அந்த டான் ஸ் ஆடுற புள்ளகளுக்குக் கொடுத்துட்டேன்ப்பா.. அடுத்து நம்ம ஊர் திருவிழா வரும் போது அண்ணன் உங்களுக்கு இதே குருவி ரொட்டி குச்சி முட்டாயும் கூட கம்மர் கட்டும் வாங்கி தர்றேன்.. ஓ.கே...ம்ம்ம் நெக்ஸ்ட் கொஸ்டீன்?"

"சார் இன்னும் நீங்க அந்த கம்ப்ளையின்ட் மேட்டருக்கே பதில் சொல்லல்லயே.... என்ன இருந்தாலும் லேட் லேட் தானே சார்..."

"என்னய்யா லேட் என்னய்யா டாஸ் போட லேட்டா வந்தாலும் பந்து அடிக்க வந்துட்டு ஒரே பந்துல்ல சீக்கிரம் போயிட்டேன்ல்ல.. அவனை மாதிரி நான் வந்து உள்ளே நின்னு நிதானாமா பந்தை அங்கிட்டும் இங்கிட்டும் தூக்கியும் வீசியும் அடிச்சு டைம் வேஸ்ட்டா பண்ணேன்... நல்லா கேக்குறாங்கய்யா கேள்வி.. அவன் ஒரு பந்தை மைதானத்துக்கு வெளியே அடிச்சான்... எங்க பைய ஒருத்தன் தொலைஞ்ச பந்தை தேட வண்டி எடுத்துட்டு கொல்கத்தாவுல்ல வழி தெரியாம காணமலே போயிட்டான்... அதை எல்லாம் நான் கம்ப்ளையின்ட்டாப் பண்ணேன்.. நல்லா சொல்லுறாங்கய்யா கம்ப்ளையிண்ட்..." ஹேஹேன்னு கைப்பு சிரிக்க கூட சிங்கங்களும் சிரிக்கிறாங்க...

"தல பந்து கிடைச்சிருச்சு... இந்தா இருக்கு பாருங்க... பயபுள்ள் பொறுப்பே இல்லாம பந்தை பர்மாவுக்கு இலல் அடிச்சு அனுப்பிட்டான்...இருந்தாலும் கண்டுபிடிச்சோம்ல்ல..." கையில் பந்தோட வரும் இளா சங்கக் கூட்டத்தில் சங்கமம் ஆகிறார்.

"சரி உங்க டீம் சிறப்பு தூதரா இருந்த அந்த ஸ்டார் நடிகையை எதுக்கு எடுத்தீங்க?"

"இது கொஞ்சம் சிக்கலான கேள்வி இருந்தாலும் சொல்லுறேன்... அந்த புள்ள மேட்ச் பாக்க வந்தா தான் நாங்க நல்லா ஆடுவோம்ன்னு சிங்கமெல்லாம் சொன்னாங்க...அந்தப் புள்ளையை நானும் கெஞ்சி கதறி கான்ட்ராக்ட் போட்டு கூப்பிட்டு பவுண்டரி பக்கமா சீட் போட்டு உக்கார வச்சேன்.. படு பாவி பயலுக.. அடிக்கிறவன் பந்தை சிலிப்க்கு அடிச்சாக் கூட அதை புட் பால் மாதிரி தட்டி பவுண்டரிக்குப் போக வச்சு அந்த சாக்குல்ல இவனுங்களும் பின்னாலேயே போய் அந்த புள்ள கிட்ட கடலை வறுக்கிறானுங்க.. அதுல்லயும் அந்த சிபி இருக்காரே... பவுண்ட்ரி பக்கம் பந்தை ஏன்டா அடிக்க மாட்டேங்குறன்னு எதிர் டீம் கிட்ட சண்டைக்கே போயிட்டார்..."

"அப்புறம் உங்க டீம் ராம் எதுக்கு எல்லார் முன்னாடியும் உங்களை அடிச்சாரு....?"

"அடிச்சவனே மறந்துட்டான்.. நீங்க ஏன்டா....?"

"தல இந்தக் கேள்விக்கு நானே பதில் சொல்லவா...." ராம் பவ்யமா வந்து நின்னான்.

"ம்ம்ம் சொல்லு"

"இதுக்குக் காரணம் எங்க கோச் தான்...."

"யோவ் கொத்ஸ் நீயா ய்யா....." கைப்பு தேவை முறைக்க

"ஆமாங்க கடைசி ஓவர்ல்ல ஆறு பாலுக்கு முப்பது ரன் இருந்துச்சு... அப்போ எங்க கோச் வந்து காட்டுக் கத்தலா அடிச்சு ஆடுறா கொய்யா.... அடிச்சு ஆடுறா கொய்யா.....அப்படின்னு உசுப்பு ஏத்துனார்"

"சுத்திப் பாத்தேன்... நான் அடிக்கிற அளவுக்கு யாரும் பக்கத்துல்ல இல்ல... எதிரி டீம்ல்ல எல்லாருமே வாட்டச் சாட்டமா இருந்தாங்க.. யோசிச்சேன்... யார் அடிச்சாலும் சும்மா அசால்ட்டா தாங்குற ஒரே மனதைரியம் கொண்ட ஒப்பற்ற மனுசன்.. எங்கத் தல தான் அதான் வேகமா ஓடிப் போய் பெவிலியன்ல்ல குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்த எங்கத் தல கன்னத்துல்ல பளேர்ன்னு ஒரு அரை விட்டுட்டு வந்து ஆடுனேன்... நாங்க செயிச்சுட்டோம்.. ஆனா எங்கத் தல கண்ணீர் விட்டு அழுததை டிவியிலே திரும்ப திரும்ப பாக்கும் போது தான் மனச் சங்கடமாப் போயிச்சுங்க"

"ராயலு... களத்துல்ல இறங்கிட்டா ஒரு வீரனுக்கு பிலீங் வரவேக் கூடாது.. அதுவும் நீ ஒரு டரியல் சிங்கம்... " ராயலை நெஞ்சோடு தழுவி கொள்கிறார்...

"சரி இன்னொரு கேள்வி பொதுவா கிரிக்கெட்ல்ல ட்ரிங்க்ஸ் பிரேக் வேணாம்ன்னு சொன்னீங்களாமே ஏன்?"

"ஆமாய்யா வேணாம்ன்னு தான் சொன்னேன்...போனத் தடவை இப்படித் தான் வெளையாட்டு சூடாப் போயிட்டு இருந்தப்போ நம்ம அம்பையர் அண்ணாச்சி ட்ரிங்க்ஸ்ன்னு சொல்லி நிறுத்திட்டார்... நானும் நம்ம சிங்கம்ஸும் வெளையாட்டு முடியட்டும் அப்புறம் ஒண்ணா உக்காந்து ட்ரிங்க்ஸ் எல்லாம் வச்சுக்கலாம் அப்படின்னு எவ்வளவோ சொன்னோம்... அவர் கேக்கல்ல ரூல்ஸ் அது இதுன்னு சொல்லிட்டார்... பொறவு நம்ம சிங்கம்ஸ்க்கு எல்லாம் அசலூர் சரக்கு ஒத்துக்காதுன்னு நல்ல நாட்டுச் சரக்கு வாங்கி வச்சிருந்ததை எடுத்துட்டு வந்து மைதானத்துல்ல அடிச்சோம். தனியா சாப்பிடுறது தமிழர் பண்பாட்டுக்கு இழுக்குன்னு சொல்லி அந்த எதிர் டீமுக்கு ஊத்தி குடுத்தோம்... நம்ம சிங்கம்ஸ் எல்லாம் ஸ்டெடியா நிக்குறாயங்க..ஆனாப் பாருங்க அவனுவ எல்லாம் அப்பீட் ஆயிட்டாங்க...அம்பையர் அண்ணாச்சி முதல் மடக்குல்லேயே ரீப்பிட் ஆயிட்டார்.... பொறவு கப் எங்களுக்கு கிடைச்சது..கப் கையிலேக் கிடைச்சு என்னப் பிரயோசனம் அதுல்ல ஊத்தி குடிக்க இல்லாம சரக்கு மொத்தமும் தான் தீந்துப் போயிருச்சே... அதான் சொல்லுறேன் மேட்ச் முடிஞ்சப் பொறவு தான் ட்ரீங்க்ஸ் எல்லாம் ...நான் சொல்லுறது சரி தானே..."

ஆமா ஆமான்னு சங்கத்து சிங்கம்ஸ் எல்லாம் சவுண்ட்டா சொல்ல நிருபர்கள் பக்கம் அமைதி....
ஜொள்ளுபாண்டி கேன் கேனாக டிரிங்க்ஸ் சப்ளை பண்ணி சைலண்ட்டாச் சிரிச்சுகிட்டு இருந்தான்.

உங்கள் ஆதரவைப் பொறுத்து IPLல் டரியல் சிங்கம்ஸ் செய்யும் அட்டகாசங்கள் தொடரும்ங்கோ

கைப்புள்ள கலாட்டா ! - டிக்கெட் ... டிக்கெட் ...

சென்னை மாநகர பேருந்து ஒன்றில் நடத்துனராக இருக்கிறார் கைப்புள்ள

கைப்பு : டிக்கெட் டிக்கெட்...டிக்கெட் வாங்கதவங்கெல்லாம் டிக்கெட் எடுத்துடுங்க பின்னால செக்கர் வந்தா அம்புட்டுதான்.

அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பார்த்தி ஏறுகிறார்.

கைப்பு : இவன் ஏன் இங்கிட்டு வந்தான்

பார்த்தி தெரியாதது போல்,

பார்த்தி : தேனாம்பேட்டைக்கு ஒரு டிக்கெட் கொடு

கைப்பு : தேனாம்பேட்டையெல்லாம் போகாது

பார்த்தி : என்னது தேனாம் பேட்டை போகாதா ? தேனாம்பேட்டை என்னைக்கு போச்சு இன்னிக்கு போக, எனக்கு தெரிஞ்சு அங்கேயே தான் இருக்கு

கைப்பு : ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான், இந்த பஸ்ஸு அங்கிட்டு போகாதுன்னு சொல்ல வந்தேன்

பார்த்தி : அத தெளிவாகச் சொல்ல வேண்டியது தானே

கைப்பு : இப்ப சொல்லிட்டேன்ல இறங்கு

பார்த்தி : இது உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா ? நான் எங்கே வேண்டுமானாலும் போவேன், ஏன் இந்த பஸ் எங்கே போவுதோ அங்கே போவேன்

கைப்பு : அட நீ எங்கிட்டாச்சும் போப்பா, மொதலில் டிக்கெட் எடு

பார்த்தி சுற்றிலும் பார்த்துவிட்டு, மெதுவாக

பார்த்தி : ஆமாம் உனக்கு சம்பளம் என்ன கிடைக்குது ?

கைப்பு : அத ஏன் கேட்கிறே, என்ன பிடித்தமெல்லாம் போவ எட்டாயிரம் இருக்கும்

பார்த்தி : இப்ப விக்கிற வெல வாசியில் உன்னால தாக்கு பிடிக்க முடியுதா ?

கைப்பு : ஆமாம்பா, வாங்குற காசு கந்துவட்டிகே சரியாப் போயிடுது

பார்த்தி : நான் ஒரு யோசனை சொல்றேன்

கைப்பு : உனக்கு புன்னியமா போச்சு. சொல்லு என்ன செய்யனும்

பார்த்தி : என்கிட்ட டூப்ளிகேட் டிக்கெட் இருக்கு, 100 ரூபாய்க்கு 500 டிக்கெட் தருகிறேன்

கைப்பு : அத வச்சு சீட்டுக்கட்டு விளையாடச் சொல்றியா ?

பார்த்தி : மடையா, ஒர்ஜினல் டிக்கெட்டு பதிலாக இந்த டிக்கெட்டை ஜனங்களுக்கு கொடுத்தா, வசூலாகும் அம்புட்டும் உனக்குத்தான், கூடவே ஒரிஜினல் டிக்கெட்டும் கொஞ்ச கொஞ்ச கொடுக்கனும், அப்பறம் வசூலில்லை என்று சந்தேகம் வரக்கூடாது இல்லையா ?

கைப்பு : நல்ல யோசனையாக இருக்கே, இந்த 100 ரூபாய், 500 டிக்கெட் கொடு

பார்த்தி பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கட்டு கட்டுகளைக் கொடுக்கிறார்

கைப்பு : என்னைய ஏமாத்த முடியாது

பார்த்தி : ?? (முழிக்கிறார்)

கைப்பு : பத்தியா பத்தியா, நீ இன்னும் டிக்கெட் வாங்கலைன்னு சொன்னேன்

பார்த்தி : (மனதுக்குள் சிரித்துக் கொண்டு) ஒன் அறிவுக்கு நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை. சரி பஸ்ஸு போகும் கடைசி ஸ்டாப்புக்கு ஒரு டிக்கெட் கொடு

கைப்பு : அது...! என்ன தான் இருந்தாலும் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கே.
டிக்கெட்டை கொடுக்கிறார்

பார்த்தி : ஏய் என்கிட்டேயே என் டிக்கெட்டா, ஒரிஜினல் டிக்கெட்டைக் கொடு,

கைப்பு : ச்சும்மா சோதிச்சு பார்த்தேன்...சோதிச்சு

பார்த்தி : மனதுக்குள் 'இருடி உனக்கு இருக்கு' என்னையே ஏமாத்த பார்க்கிறியா ?

ஒரிஜினல் டிக்கெட்டை வாங்கிக் கொள்கிறார். அடுத்த ஐந்து ஸ்டாபிங்குற்குள் ஏறும் பயணிகளுக்கு டூப்ளிக்கேட் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, பணப்பை நிறம்பிவிட்டதா என்று குலுக்கி குலுக்கி பார்க்கிறார் கைப்பு

ஆறாவது ஸ்டாபிங்கில் செக்கர்கள் ஏறுகிறார்கள்

ஒவ்வொருவராக சோதனை செய்கிறார்கள், பாதி டூப்ளிகேட் டிக்கெட்

பார்த்தி : சார், இதுவும் டூப்ளிகேட்டா பாருங்க, நான் அவசரமாகப் போகனும் - என்று டிக்கெட்டைக் காட்டுகிறார்

செக்கர் : ஒரிஜினல் தான், நீங்க எறங்கிப் போகலாம் என்கிறார்.

பார்த்தி கைப்புவைப் பார்த்து,

பார்த்தி : நான் வரட்டா ? என்கிறார்

கைப்புக்கு பார்த்திதான் டூப்ளிகேட் டிக்கெட் கொடுத்தார் என்று சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் செக்கர்களைப் பார்க்க

செக்கர் : உன் மேல என்கொயரி வைக்கிறோம், வண்டியை விட்டு இறங்கு


கைப்பு : மாப்பு மாப்பு வச்சுட்டான்யா ........ஆப்பு.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்று சொல்லியபடி செக்கர்களுடன் இறங்கிச் செல்கிறார்

Monday, May 5, 2008

குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !

இளைய தளபதி விஜயின் குருவி படத்தை சிறப்புக் காட்சியாக கலைஞருக்கு போட்டுக் காண்பித்து, விமர்சனம் எழுதித்தரச் சொல்லி தலையை சொறிகிறார், அந்த படத்தின் இயக்குனர் தரணி. பேரன் உதயநிதியின் படம் என்பதால் அரைமனதாக ஒப்புக் கொள்கிறார் கலைஞர், இனி கலைஞரின் விமர்சனம் இங்கே,

********
குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !

உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வருவது தான் குருவி.

இந்த படத்தை சிறப்புக் காட்சியாக எனக்குப் போட்டுக் காட்டினார்கள், தம்பி தரணியின் மற்றொரு தங்கமான படைப்புதான் குருவி. அன்பு தம்பி இளைய தளபதி என்னும் இளைய சூராவளி விஜயின் மற்றொரு வெற்றிப் படம் தான் குருவி.

தமிழகத்தில் இந்த படத்தை எடுத்து இருந்தால் பொதுமக்களே எதிர்த்திருப்பார்கள். காரணம் அமைதிச் சோலையான தமிழகத்தில் கொத்தடிமை முறை என்பது திமுக முதல் முறை அரியணை ஏறிய போதே ஒழிக்கப்பட்டுவிட்டது. தம்பி தரணி அண்டை மாநிலம் கடப்பாவில் நடக்கும் கொத்தடிமையை களைவதற்கு கடப்பாடு கொண்டு தன்னாலான முயற்சியை நன்றாக செய்து இருக்கிறார்.

கண்குளிர மலேசிய காட்சிகள், சீறிப்பாயும் காளையென விஜயின் அதிரடி சண்டைக்காட்சிகள். மின் தூக்கியில் அடைக்கப்பட்டு மீண்டுவரும் இளைய தளபதி விஜய், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனோகராவை நினைவு படுத்துகிறார். அழகு பதுமையாக வனிதை திரிசா காதல் பாடல்களில் இளைஞர்களின் மனைதை கொள்ளையடிக்கிறார். பாடல் காட்சிகளில் பம்பரமாக சுழன்றாடும் விஜய் பரவசப்படுத்துகிறார். அன்று தாயைக் காத்த தனயனாக மனோகரா இன்று தந்தையை காட்கும் தனயனாக வெற்றிவேலுவாக விஜய் என் நினைவுகளையெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னால் இட்டுச் செல்கிறார். முதல் பத்து நிமிடங்கள் (மட்டும்) வந்தாலும் சின்னக் கலைவாணர் விவேக்கின் நகைச்சுவை நம் நாடி நரம்புகளையெல்லாம் சிரிக்க வைக்கிறது.

படத்தின் சிறப்பென ஆசிஸ்வித்யார்த்தியின் அருமையான நடிப்பு, தம்பி சுமனின் வில்லத்தனம், தம்பி வித்யாசாகரின் தரமான இசை, கழக உடன்பிறப்பு மணிவண்ணனின் குணச்சித்திர நடிப்பு இப்படி எதைவிடுவது எதைச் சொல்வதென்றே இந்த படத்தைப் பார்த்த நான் திக்குமுக்காகிவிடுகிறேன்.

கனவு பாடல்களுக்காக வனிதை திரிசாவா, திரிசாவுக்காக கனவுப் பாடல்களா ? உங்களோடு சேர்ந்து எனக்கும் ஐயம் ஏற்படுகிறது. முதல் (தர) காட்சிகளில் வந்து இளமையை கிள்ளிச் செல்கிறார் படர்ந்த பருவக் கொடி மாளவிகா.

குருவி - இது வணிகம் சார்ந்த திரைப்படம் அல்ல. ஏழை எளியவர்களின் கொத்தடிமை துயர் துடைக்கும் பாடம். கழக உறுப்பினர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து, பயன்பெற்று தம்பி விஜயையும், இயக்குனர் தரணியையும் தாராளமாகப் போற்றலாம்.

குருவி மூன்றெழுத்து
விஜய் மூன்றெழுத்து
தரணி மூன்றெழுத்து
திரிசா மூன்றெழுத்து
சுமன் மூன்றெழுத்து
விவேக் மூன்றெழுத்து

மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !

பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம், இதில் அரசியல் எதுவும் இல்லை.

வருத்தப்படாமல் ஒரு இன்ப சுமை !

சர்க்கரை இனிப்பாக இருக்கும் ! சர்கரை மூட்டையோடு தூக்கச் சொன்னால் இனிக்குமா ? முயற்சி செய்கிறேன். நம்(ம) வவா சங்கம் நண்பர்களின் வவாச பதிவில் ஒரு மாதகாலத்திற்கு அட்லஸ் வாலிபராக இருக்கச் சொல்லி உறுப்பினராக இணையும் அழைப்பும் வந்தது. அதன் பிறகு வவாச பதிவின் முகப்பில் எனது இடுகையின் பற்றிய (புரொபைல்) படம் வந்திருந்தது. இடையில் வெளியூர் சென்றிருந்ததால் உடனடியாக இடுகை எதையும் இட முடியவில்லை.

வவாச-வில் ஏற்கனவே மண்டபதில் இருந்து எழுதிய போல் (வெளியில் இருந்து) இரு இடுகைகள் எழுதி இருக்கிறேன்.

வவாசவில் எழுத ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. தனிப்பட்ட எவரையும், எந்த சமூகத்தையும் புண்படுத்தக் கூடாது, படிக்கிறவர்கள் சிரிக்காவிட்டாலும் முகம் சுழிக்காமல் இருக்கும் படி எழுதப்பட்டவை இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து எல்லோரும் அது போலவே நன்றாக எழுதி இருக்கிறார்கள். சமூகம் அரசியல் இதைப்பற்றியே எனது பதிவுகளில் மிகுந்தவையாக எழுதி வருகிறேன். அவ்வப்போது நகைச்சுவை எழுதுவதுண்டு. இங்கு நகைச்சுவை எழுத வேண்டும். என்ன விதமான நகைச்சுவை எழுதுவேன் என்று தெரியவில்லை. பார்ப்போம். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் கால்களை வைப்பதால், தலையை கொடுப்பதால், முன்பே எதையும் எழுதி வைக்கவில்லை. இனி எழுதப்போவதைத் தான் இடவேண்டும்.

நான் வாலிபரா ? நடுத்தரவயது வாலிப வயது இல்லையா ? :)



மேலே வண்ண நிழல் படத்தில் ? நான் தானுங்க, நம்ம டிபிசிடி ஐயாவின் கைவண்ணம். என்னமோ வளைச்சு வளச்சு எடுத்தாரு... அப்பறம் இந்த கொடுமை நடந்து போச்சு. :)

எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன் !!!

உங்க(ள்) யாருக்கும் இளமை திரும்பி வாலிபராக வேண்டுமென்றால் டிபிசிடிக்கு முன்னால் நில்லுங்க(ள்), நிழல்படத்தில் நீங்கள் வாலிபராகிவிடுவீர்கள், அப்பறம் அதைப்பார்த்து வேறு யாராவது வருத்தப்படனும். :)