Thursday, November 30, 2006

மாதா பிதா குரு பிகரு

2001 ம் ஆண்டு ஜான்ஸ் கல்லூரி சாலையில் இருக்கும் ரிதம் கேண்டீன் அருகே
அந்த வெட்டி காம்ப்ளக்ஸில் இருந்துகொண்டு உடன் இருக்கும் ஜான்ஸ் கல்லூரி
மாணவர்களை குஷிபடுத்துவதற்காக வருகின்ற போகின்ற பிகர்களைப் பார்த்து
எழுதிய கவிதை இது.

நான் எழுதிய பிறகு அதனை ஏதாவது பிகர் வரும்பொழுது அந்த வரிகளை சத்தம்
போட்டுப் படிக்கும் சாக்கில் நண்பர்கள் உற்சாகமாக கத்துவார்கள். மிகவும்
ஜாலியாக இருக்கும்.

இதோ இன்று அந்த காம்ப்ளக்ஸைக் கடந்து செல்லும்போது அந்த ஞாபகம் வந்ததால்
உடனே வீட்டிற்கு வந்து பழைய டைரியைப் புரட்டி எடுத்து புதுப்பிக்கிறேன்.

*




என் இனிய கல்லூரி பிகர்களே
நீங்கள்
பிரம்மாவால் படைக்கப்பட்டீர்களா?
இல்லை
பிரம்மாவையே படைத்தீர்களா?

எங்கிருந்ததடி வந்தது உங்களுக்கு? - இந்த
ஏகாதிபத்திய அழகு

பிகர்களே! உங்களையெல்லாம்
பிரம்மா எங்கேயோ
அடைத்து வைத்திருக்கிறான் போல!

ஆம்
குற்றால சீசனுக்குக் கொஞ்சம்
பொருட்காட்சிக்குக் கொஞ்சம்
பஸ்ஸ்டாண்டுக்குக் கொஞ்சம்
கல்லூரி விழாவிற்கு கொஞ்சம்
ஊட்டிக்குக் கொஞ்சம்
இப்படிக்
கொஞ்சம் கொஞ்சமாய்
அனுப்புகிறான் போல!

- பிகர்
வேலைதேடி
வெயிலில் சுற்றும்
இளைஞர்களுக்கெல்லாம் இந்த
ஒற்றை வார்த்தைதான்
உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

- பிகர்
ரிதம் கேண்டீனில்
டீ குடிக்காமலேயே
இதம் கொடுக்கின்ற
இன்பமான வார்த்தை!

- பிகர்
சுவாசிப்பது போல
இமைப்பது போல
கடலை போடுவது போல
ஜான்ஸ் கல்லூரி ஸ்டிரைக் போல
இந்த வார்த்தை
அடிப்படை தேவைகளுக்கு
அடுத்தபடியாகிவிட்டது!

- பிகர்
ஒற்றை வார்த்தையில்
ஒரு ஹைக்கூ




8 மணிக்கு ஸ்கூல் பிகர்
9 மணிக்கு காலேஜ் பிகர்
9.30 மணிக்கு வொர்க்கிங் பிகர்
9.45 மணிக்கு போலிஸ் பிகர்
ஏனோ தெரியவில்லை இதில்
கடைசிவகை
பிகர் வந்தால் மட்டும்
எமது இளைஞர்கள்
வெட்கப்பட்டு ஓடிவிடுகிறார்கள்!

ஹாய் பிகர்களே
உங்கள்
கண்கள் என்ன
கம்னியூஸ்ட்டா ?
இப்படியா போராட வைப்பது
இதயத்தை?

போங்கடி
உங்களைப்
பார்க்காமலிருக்கவும் முடியவில்லை
பார்த்துவிட்டும் செல்லமுடியவில்லை

ஏமாளியாய் இருக்கும் எங்கள்
இந்திய இளைஞர்களையெல்லாம்
உங்கள்
இதயத்தில் மட்டுமல்ல
பஸ்ஸில் படிக்கட்டிலும்
தொங்கவிடுவதிலும்
உங்களுக்கென்னடி ஒரு
தூரத்து சந்தோஷம்?

நாங்கள் என்னடி
பாவம் செய்தோம்?
கல்லூரிக்கு அப்பாவியாய்
கிளம்புகின்ற அந்த நேரத்தில்தான்
நீங்கள்
மொட்டைமாடியில் துணியுலர்த்தி எங்களை
மொட்டையடிக்க வேண்டுமா?

நீங்கள்
கம்ப்யூட்டர் படித்திருக்கலாம்.
அதற்காக நாங்கள்
வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில்தான் உங்கள்
ஜன்னல்கள் திறந்துவிடட்டுமென்று
ஜாவா புரோகிராம் எழுதியிருக்கிறீர்களோ?

எந்தப்பட்டறையில்
தீட்டிக்கொள்கிறீர்களோ
தெரியவில்லை?
உங்கள்
விழி ஆயுதத்தை!

ஜன்னலுக்கு பின்னால்
ஜெயில்கைதிகளைப்போலவே
பயந்து கொண்டிருக்கும்
அந்த
இரட்டைவிழிகள்..
யப்பப்பபா

பாரதியின்
கவிதையை விடவும்
பயங்கரமாயிருக்கிறது!

இந்த டீக்கடையின்
டீயை விடவும்
கொடுமையாயிருக்கிறது!

பஸ்ஸடாண்டில் நிற்கும்போது
தோழிகளோடு
அப்படி என்னதான் பேசுவீர்களோ?
ராஜாவையா...
ஞானியாரையா...
ரூபனையா...
எவனை இன்று
வழுக்கி விடலாமென்று தோள்களைக்
குலுக்கிக் குலுக்கி பேசுகிறீர்கள்?

எங்கள்
எதிரில் வரும் பொழுதுதான்
தோழிகளோடு
சிரித்துச் சிரித்துப் பேச வேண்டுமா?

நாங்கள்
பார்க்கவேண்டுமென்றே யாரும்
ஜோக்கே சொல்லாமல்
சம்பந்தமே இல்லாமல்
சிரிக்கிறீர்கள் என்ற சேதி
சேரியில் இருப்பவனுக்கு கூட தெரியும்!
தயவுசெய்து
சிரிப்பதை நிறுத்துங்கள்
அன்று இரவு
நாங்கள் தூங்க வேண்டும்!

இளைஞர்கள்
நாங்களும் ஒரு
பி.சி. சர்க்கார்தான்!
ஒரு
மாபெரும் மைதானத்தில்
ஒரே ஒரு பிகரை மட்டும்
ஒளித்து வைத்தாலும்
கண்டுபிடித்துவிடுவோம்!
ஆனால்
அவளுக்கு பின்னால்
அண்ணன்கள் இருப்பது
அடிவாங்கிய பிறகுதான் தெரிகிறது!

இன்றைய
இந்திய இளைஞர்களெல்லாம்
நாளொன்றிற்கு ஒரு பிகரைப்
பார்க்காவிட்டால் கூடப்
பைத்தியம் பிடித்துவிடுவார்கள்!

அது ஏன்டி?
ஒரு
வெளுத்துப்போன கைக்குட்டையால்
அடிக்கடி
இதழை சுத்தமாக்குகிறீர்கள் - எங்கள்
இதயத்தை அசுத்தமாக்குகிறீர்கள்!

எந்தட் டெய்லரிடம்
உங்கள்
சுடிதாரைத் தைக்கிறீர்களோ?
ஒருவேளை
எலிசபெத் டெய்லராக இருக்குமோ?

அது எப்படியடி?
அழுக்கு சுடிதார் அணிந்தாலும்
அழகாகவே இருக்கிறீர்கள்!

குளிக்காமல் வந்தாலும் எங்களைக்
குப்புறவிழச் செய்கிறீர்கள்!

குற்றாலத்திற்கு வருகிறீர்களே
குளித்துவிட்டுப் போகவேண்டியதுதானே ஏன்டி
இடித்துவிட்டு போகிறீர்கள்?

பொருட்காட்சிக்கு வந்திருக்கும்
அனைத்து இளைஞர்களையும்
அழைத்து வாருங்கள்!
பிகர்காட்சிதானே நடக்கிறது என
பிதற்றிக்கொண்டிருப்பார்கள்

- பிகர்
விடுதியில் இருக்கும்
ரூபனின் வாழ்வை
ரூட் மாறச்செய்கிறது!

- பிகர்
மூர்த்தியோடு தங்கியிருக்கும்
ராஜாவை
ராட்சஷனாக்குகிறது!

-பிகர்
பைக்கில் சுற்றும்
ஞானியின் வாழ்வை
நாசமாக்கிச் செல்கிறது!

-பிகர்
கேண்டீனில் இருக்கும்
ஜோதியின் மனசை
வீதியிலே எறிகிறது

-பிகர்
கடலையோடு திரியும்
சுடலையின் வாழ்வை
சுட்டுவிட்டுப் போகிறது!

இறைவா
சுகர் தவிர்த்து வாழக்
கற்றுக்கொடுத்தாய்!
அதுபோல
பிகர் தவிர்த்தும் வாழக்
கற்றுக்கொடுப்பா!
எங்களால்
ஏமாந்து கொண்டிருக்கமுடியவில்லை

"எந்த பஸ்ஸும் வரவில்லை
பஸ் வந்தால் பிகரில்லை
பிகரிருந்தால் அழகில்லை


பாளை பஸ்ஸ்டாண்ட்"

இப்படிப்
புரு விளம்பரத்ததையெல்லாம்
காப்பியடித்துக்கொண்டிருக்க முடியாது!

தினம் ஒரு
ஜீன்ஸ் பேண்ட்
அணிந்து வர முடியவில்லை

சேமித்த பணத்தையெல்லாம்
ஷேவிங் கிரீமுக்கே
செலவிட முடியவில்லை

பட்டதரிகள் எல்லாம்
பவுடர்தாரிகளாக முடியவில்லை

பிச்சையெடுத்துப்
போன் செய்ய முடியவில்லை


ஒருநாளைக்கு
32453 முறை
தலையை சீவிக்கொண்டிருக்க முடியாது


இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கும் நேரம்கூட
எதிர்வீட்டு பிகர் ஒன்று
மொட்டைமாடியில் டீ குடிப்பது போல
என்னை
பார்த்துக்கொண்டிருக்கிறது
போங்கடி நீங்களும்
உங்க லுக்கும்!...

பிகரைப் பார்த்துக்கொண்டே


- ரசிகவ் ஞானியார்

டிசம்பர் மாத அட்லாஸ் வாலிபர்

"எலேய் தேதி முப்பதாச்சி சங்கத்து கூட்டுங்கப்பு" சவுண்ட் விட்டுக்கொண்டே தல கைப்பு உள்ள வர...கூடவே புதுசா சேர்ந்த ராயலும் சங்கத்துக்குள் வர...

உள்ளே இருக்கும் சங்கத்து சிங்கங்களெல்லாம் தலய ஒரு லுக் உட்டவுடனே ஜெர்க் ஆகிறார்...

"எல்லாம் இங்கனத்தான் இருக்கீங்கனு தெரியாம ஓவராத்தான் சவுண்ட் விட்டுட்டனோ" என்று மனதிற்குள் நினைத்தவாரு ஒரு கர்ஜனையோட ஆரம்பிக்கிறார்!!!

"எலேய் வெட்டி உங்கிட்ட என்ன சொன்னேன்?"

"என்ன சொன்னீங்க?"

"போன வாரம் உங்கிட்ட என்ன சொன்னேன்?"

"போன வாரம் எங்கிட்ட என்ன சொன்னீங்க?"

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா!!!

"ராயலு இதுக்கு மேல நான் பேசினேனா ரணகளமாயிடும்... நீயே அவன்கிட்ட கேளு"

"வெட்டி, அதான்யா நம்ம தலைக்கு ஆப்பு வாங்கறதுக்கு துணையா ஒருத்தர பிடிப்போமேயா. அவர் பேரு என்ன?
ஹா...அதான் அட்லாஸ் வாலிபரு. இந்த மாசத்துக்கு அட்லாஸ் வாலிபரு ரெடியா?"

"அதெல்லாம் எப்பவோ ரெடி... பதிவோட வெயிட்டீங்ல இருக்காரு!"

"ஆஹா! யாருப்பா அது? நம்ம ரேஞ்சுக்கு ஆப்பெல்லாம் தாங்குவாறா?"

"ராயலு என்ன இப்படி கேட்டுட்ட? ஒரு பொண்ணு ஓட்டனதுக்கே நீ போட்டோவ மாத்திட்ட... நாலு தமிழ் பொண்ணுங்க கூட்டமா சேர்ந்து ஓட்டனத பெருமையா பதிவு போட்டு இன்னும் போட்டோ போட்டுருக்க சிங்கமுங்க!!!"

"அது சரி.. நம்ம ரேஞ்சுக்கு கவிதை எழுதுவாரா?" தளபதி பெருமை பொங்க கேட்கிறார்!!!

"தள!!! கடைசி ரெண்டு பதிவும் கவிதைனு ஏதோ எழுதி வெச்சிருக்கிறார். அதுல அவருக்கு ஏன் தூக்கம் வரலைனு ஒரு கவிதை பல பேர சிந்திக்க வெச்சிருக்கு"

"ஓ! நம்ம ரேஞ்சிக்கு ஏதாவது ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்காறா?" ஜொள்ளு தவிப்போட கேட்கிறார்.

"ஜொள்ளு! உனக்கு முன்னாடியே ஏன் எதற்கு எப்படினு ஒரு ஆராய்ச்சி பதிவ போட்டுட்டாரு! அவரு கேட்ட கேள்விகளை பார்த்துதான் நம்ம ஜொள்ளு பேச்சியக்காவே பல பதிவுகள போட ஆரம்பிச்சாங்க!!! நிஜமல்ல கதைனு நிஜத்துல அவரு விட்ட ஜொள்ள பத்தி ஒரு தொடரே போட்டாருப்பா"

"சரி, நம்ம ரேஞ்சுக்கு நக்கல் நையாண்டி எல்லாம் வருமா?" புலி நக்கலாக கேட்க

"தீபாவளி அன்னைக்கு பொங்கல் பதிவு போட்டாருப்பா! இது போதுமில்ல"

"யாரடா அது நமக்கு தெரியாம இவ்வளவு பெரிய தில்லாலங்கடி?" விவசாயி ஆர்வமாக கேட்க

"விவா, வெடக்கோழிய எப்படி பிடிக்கிறதுனு நம்ம வாசுக்கு சொல்லி கொடுத்தாரே!!! இதுக்கு மேலையும் சொல்லனுமா?"

எல்லாரும் புரிந்துகொண்டு "வாவ் கலக்கல்" என்று சொல்ல...

தலை ஜெர்க்காகிறார்...

"ராஸ்கல்ஸ் என்னது இது சின்ன புள்ளத்தனமா? பேர சொல்லாம என்னதிது விளையாட்டு?"

"தல நீ மட்டும் கேள்வி மேல கேள்வி கேட்டு மனுசன கொல்லுவ... நாங்க பண்ணக்கூடாதா?"

"அதெல்லாம் சொல்லப்படாது!!! நான் கேள்வி கேப்பேன் நீ பதில் சொல்லனும். நீ கேள்வியெல்லாம் கேக்கப்படாது"

"சரி தல... ரொம்ப சவுண்ட் விடாத! நான் பார்ட்டிக்கு போறேன்... போயிட்டு வந்து சொல்றேன்" சொல்லிவிட்டு வெட்டி வெளியே போகிறார்.

"டேய் அப்பரண்டீசுகளா!!! யாராவது சொல்லுங்களேன்டா. யார்டா அந்த அட்லாஸு?"

"தல இன்னுமா தெரியல? நம்ம மில்வாக்கி நாயகன்தான்" சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் போர்வாள் தேவ்!!!

இதுக்கு மேலயும் கேட்டா நமக்கு விவரம் பத்தாதுலனு நெனச்சிக்குவானுங்க இந்த அப்பரண்டீசுங்க. எப்படியும் நாளைக்கு பதிவ போடும் போது
பார்த்துக்கலாம். அது வரைக்கும் தெரிஞ்ச மாதிரியே எஃபக்ட்ட கொடுத்துடுவோம் ...

"சரி சரி!!! எல்லாம் பார்ட்டிக்கு ரெடி பண்ணுங்க. நான் போய் நம்ம கட்டதுரைய சந்திச்சிட்டு வரேன்" சவுண்ட்விட்டு எஸ்ஸாகிறார் கைப்பு!!!

Wednesday, November 29, 2006

இது ஒரு நகைச்சுவை நாள்

*

தப்பு செய்றது எப்பவுமே தப்புதான்.

யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.

தப்புங்கறது சில சமயம் தப்பு இல்லைன்னு நினச்சு நாம செய்ற சில காரியங்களால தப்பா போயிடும். எதுக்கு இத இப்போ சொல்றேன்னா..

வ.வா.ச. அப்டிங்கிற பேர்ல உள்ள 'வா'வ இன்னைக்கி ஒரு நாளைக்கு மட்டும் கடாசிடறது அப்டின்ற முடிவை வாலிபர்களெல்லாம் எடுத்துட்டாங்களாம். அது தப்பில்ல...

அவங்க சங்கம்; அவங்க பேரு. அதனால அது தப்பில்ல...

அதோடு, அந்தக் காலத்து ஆள் ஒருத்தரைப் பத்தி எழுதணும்னா,இன்னொரு அந்த காலத்து ஆள்தான் வேணும்னு அவங்க நினைச்சிருக்காங்க; அதுவும் தப்பில்லைதான்.

ஆனால் இப்படி தப்பே செய்யாத அவங்க பண்ணுன ஒரே தப்பு என்னன்னா,
என்னை இங்க ஒரு நாள் டேரா அடிக்கச் சொல்றதுதான்.

'ஆனாலும் இந்த ஆண்டவன் இந்தச் சின்னூண்டு நெத்தியில எவ்வளவு எழுதியிருக்கான்,பாத்தீங்களா?" (காதலிக்க நேரமில்லை)
என் தலைவிதி எனக்குத் தொடர்பில்லாத ஒரு சங்கத்தில, அதுவும் நகைச்சுவைக்கு முதலிடம் - இல்ல..இல்ல - முழு இடமே கொடுக்கும் வ.வா.ச. ஆட்கள் என்ன இப்படி பிடிச்சி மாட்டுவாங்களா? உங்க தலைவிதி அவங்க செஞ்ச தப்புனால இப்போ பாருங்க நீங்க இத வாசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. (எங்க கடைசிவரை வாசிக்கப் போறீங்க? எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியே வாசிச்சிங்கன்னா, அது உங்க தப்பு! )

இன்னைக்கி எழுத நினச்சதை ஒரு வாரத்துக்கு முந்தியே எழுதியிருந்தா நல்லா இருந்திருக்கும். இன்னைக்கி நம்ம கலைவாணர் பிறந்த நாள். இதப் பத்தி ஒரு வாரத்துக்கு முந்தியே நினச்சி, இந்த நாளை ஒரு 'நகைச்சுவை நாள்' அப்டின்னு நாம பதிவர்கள் எல்லோரும் ஒரு விழாவா கொண்டாடியிருக்கலாம். இன்றைய பதிவுகள் எல்லாமே நகைச்சுவையை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதி இந்த நாளைக் கொண்டாடியிருக்கலாம். அடுத்த வருஷமாவது இந்த நாளை அப்படி கொண்டாடலாம் - தமிழ்மணத்தில் மட்டுமாவது. இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல விஷயமாவது செய்யலாம்ல..? காதலுக்கு நாளிருக்கு;நன்றி சொல்ல நாளிருக்கு.எல்லோருமா சேர்ந்து சிரிக்கிறதுக்கு ஒரு நகைச்சுவை நாளுன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்ல..அடுத்த வருஷம் பதிவர்கள் சேர்ந்து திட்டமிடுங்க.. வருத்தப்படாதவங்களுக்கு இதில ஒரு முக்கிய ரோல் இருக்கு; பாத்து செய்யுங்க. சரியா?



எல்லா நகைச்சுவை நடிகர்களின் நடிப்பிலும் நான் ஒரு விஷயம் பார்த்திருக்கிறேன். அவங்க காமெடி செஞ்சு முடிச்சதும் ஆடியன்ஸ் ரீயாக்ஷனுக்காக ஒரு சின்ன இடைவெளி தெரியும். ஒரு சில நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகள்ல தான் இந்த gap இல்லாதமாதிரி தெரியும். பேசும்போது ஆற்றொழுக்கு நடை அப்டின்னு சொல்லுவாங்களே அதே மாதிரி இவங்க நடிப்பும் ஒரே சீராகச் செல்லும். நம்ம ஊர் ஆள்களில் கலைவாணர், எம்.ஆர்.ராதா இந்த இருவரின் நடிப்பில் இதைக் கண்டதுண்டு. அதனாலே அதில் ஒரு இயல்புத் தன்மை இருக்கும்.

கலைவாணர் வில்லுப்பாட்டில் ஆரம்பித்து, நாடகங்களில் வளர்ந்து சினிமாவுக்குள் வந்தவர். இப்படி வருபவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத் தனமும் ஒட்டிக் கொண்டு விடும். ஆனா எப்படின்னே தெரியவில்லை. கலைவாணருக்கிருந்த body language அந்த செயற்கைத்தனம் இல்லாமல் இருந்தது - அதுவும் சினிமாக்களின் ஆரம்ப காலத்திலேயே அவர் அதைப் புரிந்து நடித்தது - உண்மையில் ஒரு பெரிய விஷயம்தான்.

இப்போ வர்ர படங்களில் நம்ம இயக்குனர்கள் "கோனார் நோட்ஸ்" போடுவார்கள் தெரியுமா? அதாவது ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒன்று செய்யும் முன் அதைப்பற்றி அந்த பாத்திரமே ஒரு soliloquy-ல் அது எதற்கு ஏன் என்று ஒரு detailed lecture கொடுக்கும்; அதாவது படம் பார்ப்பவர்கள் மடையர்கள்; அவர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இது போல் விளக்கம் கொடுத்தால் தான் அவர்களுக்குப் புரியும் என்று நம் இயக்குனர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான நினைப்பு. இப்படி இல்லாத தமிழ்ப்படம் கொஞ்சம் அரிது. கடைசியில் கதாநாயகனுக்குப் பைத்தியம் தெளிந்தும் அவன் பைத்தியங்களோடு போனானா; இல்லை பைத்தியமாகவே திரும்பி போனானா என்று ஒரு கேள்வியோடு படம் பார்த்தவர்களைத் தியேட்டரைவிட்டு வெளியே அனுப்பியதே 'சேது'படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக எனக்குத் தெரியும். இப்படி ஒரு கேள்விக்குறியோடு ஒரு படத்தையே முடித்த பாலாவுக்கு நல்ல தைரியம்தான்.ஆனால் மற்ற படங்களைப் பாருங்கள்; சீனுக்கு சீன் விளக்கவுரை இருக்கும்.

ரொம்ப பழைய படம் (அப்புறம் கலைவாணர் நடித்திருந்தா புதுப்படமாகவா இருக்கும்; வந்திட்டாய்ங்க கத சொல்றதுக்கு) - பணம்னு நினைக்கிறேன். சிவாஜி - பத்மினி..? வரதட்சணைப் பிரச்சனையால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு விரட்டியிருப்பார்கள். கலைவாணர் மாப்பிள்ளை பையனின் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பார். மாப்பிள்ளைப் பையனுக்கு மறைமுகமாக புத்தி சொல்ல நினைப்பார். கையில் ஒரு புறாவுடன் இன்னொரு வேலைக்காரனைத் திட்டிக் கொண்டிருப்பார். கதாநாயகனிடம் நியாயம் கேட்பார்.'பாருங்க, ஒருத்தர் இவனுக்கு இந்த அழகான மணிப்புறாவை இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவரிடம் நன்றியோடு இருப்பதைவிட்டு அதை வளர்க்கவும் காசு கேட்கிறான்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். பத்த வைக்கிறதுதான். நல்லா பத்திக்கும். ஆனா இந்த இடத்தில் புறாவையும் புதுப்பெண்ணையும் ஒப்பிட்டோ அல்லது வேறு மாதிரி கதாநாயகனுக்கு அறிவுரை சொல்றது மாதிரி வசனங்கள் ஏதுமிருக்காது. அதாவது நோட்ஸ் ஏதும் கிடையாது.

சிரிப்பைப் பத்தியே ஒரு பாட்டு - எந்தப் படமென்று நினைவில்லை. அந்தப் பாட்டைக் கேட்டுட்டு ஒரு சின்ன புன்முறுவலாவது வரலைன்னா அவங்கள் என்ன மனுசங்களோன்னுதான் சொல்லணும். பலவகை மனிதர்களின் விநோதச் சிரிப்பை பாட்டாகப் பாடி, சிரித்துக் காண்பிப்பார். நடிப்புக்கு நடிப்பு; சிரிப்புக்கு சிரிப்பு.

நடிகர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் தாங்கள் நடிக்கும்போது சொல்பவைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. பெரியார் படத்திற்கு ராஜா இசை அமைக்க மறுத்ததாக வந்த செய்தியை வைத்து நாம் எல்லோரும் அலசினோமே அதுவும் இதைச் சார்ந்த கேள்விதான். இரண்டுக்கும் தொடர்பு தேவை என்பது கட்டாயம் இல்லை. ஆனாலும் இரண்டும் ஒரே கோட்டில் சென்றால் அதன் மவுசே தனிதான். அந்த வகையில் கலைவாணர் ஒரு நல்ல முன்னோடி.அவர் படத்தில் பொதுவுடமைக் கருத்துக்கள், சமூக நல கருத்துக்கள், அப்போதைய தி,க.வின் கருத்துக்கள், சமய எதிர்ப்பு, மூட நம்பிக்கைகளின் மேல் சாடல் - இப்படிப் பல சேதிகளைச் சொல்லுவதாக வரும். அவைகளை தன் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மனிதனும், நடிகனும் ஒன்றிணைந்த இந்த பிணைப்பு அவர் புகழுக்கு அச்சாணி.

புரட்சிக் கருத்துக்களைப் படங்களில் பேசிவிட்டு, 'அது நடிப்பு; நடிப்பு வேறு; வாழ்க்கை வேறு' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அது ஒரு நடிகனுக்குப் பெரிய சறுக்குதான் என்பதை இந்த நாளில் பார்த்தோமே. சொல்லப்போனால் நாம நடிகரா திரையுலகில் பார்த்த நிழல் மனிதரை விடவும் அந்த நிஜ மனிதரின் குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்தவரை உதவி வேண்டி பார்க்கப் போனவருக்கு, கொடுக்க ஒன்றுமில்லாத நிலையில் அருகில் இருந்த அவரது வெள்ளிக் கூஜாவைக் கொடுத்தனுப்பினார் என்று வாசித்த நினைவு அந்த மனிதரின் மேல் ஒரு பெரும் மரியாதையை அளிக்கிறது.

நம்ம தமிழ் மக்கள்ட்ட ஒரு "நல்ல" குணம் உண்டு. செத்துட்டா எல்லோரையும் ஓஹோன்னுருவோம். அதனாலேயே 'அவர் ஒரு சகாப்தம்' அப்டின்றதில எனக்கு மரியாதை இல்லாம போச்சு. நமக்குப் பிடிச்சிட்டா செத்தவங்களை சகாப்தமாக்கிடுவோம் - அரசியல்வாதிகள் இன்னொரு அரசியல்வாதி இறந்ததும் 'யாராலும் நிரப்பப்பட முடியாத வெற்றிடம் ஏற்பட்டுரிச்சி' அப்டின்னு சொல்ற ஒரு வார்த்தை ஜாலம் மாதிரி. அதனால கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகாப்தம்னு சொல்லி அவரை சீப் ஆக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகில் அவரது பெயர் எப்பவுமே மறையாது.

அவர் பிறந்த இந்த நாளில் அவரைப் பற்றிய ஒரு பதிவின் மூலம் அவரை நினைவுகூற நினைத்த வ.வா.ச. வாலிப, வயோதிக - (இன்னைக்கு மட்டும் நானும் இதிலே இருக்கேனே; அதுக்காக வயோதிக அப்டின்னு சேர்த்திருக்கேன்) உறுப்பினர்களுக்கு என் வாழ்த்து.




என்னை இப்படி இழுத்துவிட்ட தப்பை செய்தவர்களுக்கு நன்றி சொன்னாலும் அது தப்புதானே!?

பதிவர்களே, இப்படி என்னை இழுத்துவிட்டவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்தத் தப்பைச் செய்துவிட்டார்கள். அவர்களை மன்னியுங்கள்.


*

Tuesday, November 28, 2006

தொடர் கொள்ளை-தொடர் மழை

நெல்லையில் சமீப காலமாக தொடர்ந்து கொள்ளையும் தொடர்ந்து மழையும் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. அவை இரண்டிற்கும் இடையே உள்ள சுவையான வித்தியாசங்கள்.

எண் - தொடர் கொள்ளை - தொடர் மழை
1 ஆள் இல்லாத வீட்டில்தான் நுழைவான் -

ஆள் இருக்கின்ற வீட்டிலும் நுழைந்துவிடும்

2 பெரும்பாலும் இரவில்தான் -

பகல் இரவு என்று நேரகாலம் பார்க்காமல் வரும்

3 விலையுயர்ந்த பொருள் - பணம் என்று தேடிப்பிடித்து சுருட்டுவான் -

கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடும்

4 மக்கள் கூடி நின்று எதிர்த்தால் ஓடிவிடுவான் -

எவ்வளவு மக்கள் கூடி நின்று எதிர்த்தாலும் தகர்த்துவிட்டு நுழையும்

5 காவல்துறைக்கு பயப்படுவான் - காவல்துறையே பயப்படும்

6 தனிப்படை அமைத்தால் ஒருவேளை பிடிபடலாம் -

தனிப்படை அமைத்தால் தனிப்படையும் தண்ணியில்தான்.

7 மக்களின் மனநிலை அறிக்கையால்தான் கண்டுபிடிக்கமுடியும் -

வரும்முன் வானிலை அறிக்கையில் சொல்லிவிடுவார்கள்

8 வீட்டைவிட்டு வெளியே சென்றால் பயம். -

வீட்டுக்குள் இருக்கும்போதும் பயம்

9 நகைகளைத் திருடுவான் - புன்னகையைத் திருடிவிடும்

10 வீட்டுக்குள் சதி - வீட்டுக்குள் நதி

11 வரப்போவது தெரிந்தால் வாசலில் அல்லது

வீட்டைச் சுற்றி காவல் இருக்க வேண்டும் -
வரப்போவது தெரிந்தால் மாடிக்கு செல்ல வேண்டும்

12 வந்தால் பொருட்கள் சுத்தமாகிவிடும் -

வந்தால் இடம் சுத்தமாகிவிடும்

13 பாதுகாப்பு கோரி காவலரிடம் புகார் கொடுக்கலாம் -

பாதுகாப்பு கோரி கடவுளிடம் பிரார்த்திக்கலாம்


-ரசிகவ் ஞானியார்

Monday, November 27, 2006

கன்னிப்பதிவு (புது வ.வா)

இடம்: பெங்களூரூ நேரம்: அதிகாலை 11.00

வெள்ளிக்கிழமை அதிகாலையிலே தீடீரென்னு நம்பரை இல்லாமே ஒரு அனானி போன கால்வந்திச்சுங்க... பயந்துதான் போனையே எடுத்தேன்.

"ஹலோ யாருங்க பேசுறது?"

"நான் தல கைப்புள்ள செகரட்டரி பேசுறேன்!"

"ஆகா அப்பிடியா! என்னா விஷயம்?"

"தல உங்களை பார்க்கிறதுக்காக இன்னிக்கு பெங்களூரு வர்றாரு!"

"என்னை எதுக்காக பார்க்க வர்றாரு?"

"அதே அவரு நேரா வந்து சொல்லுவாரு! சரி உங்க வீட்டுக்கிட்டே பெரிய கிரவுண்ட் இருக்கா??"

"எதுக்கு??? தல வந்ததும் அங்கே போய் ஏதாவது விளையாட்டு விளையாடுவாரா??"

"ஹலோ! நம்ம தல சாதாரணமான தலைவரா ??? அவரு பெரிய தலைவர்! அதுனாலே ஹெலிக்காப்படருலே வருவாருய்யா!! அதுக்குதான் மைதானம் இருக்கானு கேட்கிறோம்??? இருக்கா இல்லேய்யா? அது மட்டும் சொன்னா போதும்!"

"இருக்கும்மா! தாயே வரச்சொல்லு! இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதுனாலே நிறைய வேலை இருக்குங்க! சீக்கிரமா வந்து வேலையை முடிச்சிட்டு போயிட்டாருன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்!"

"சரி இன்னும் ஒன்றரை மணி நேரத்திலே அதாவது மதியம் 12.30 மணிக்கு வந்துருவார்... அவரு வர்றது ரொம்ப ரகசியமா இருக்கனும்! யாருக்கிட்டேயும் சொல்லிறாதே!!!"

"ஏங்க அவ்வளவு புரெடக்சன் தல'க்கு?"

"அதெல்லாம் அவரே வந்து சொல்லுவாரு!!! சரி போன் வைச்சிரு! தல கிளம்பிட்டாரு!!!"

"என்னா சொன்னீங்க? சரியா கேட்கலை?"

"கிளம்பிட்டாருய்யா..!! கிளம்பிட்டாருய்யா!!!"

போன் வைக்கப்பட்டதும் எனக்கு பரபரப்பு பத்திக்கிச்சு! எம்பூட்டு பெரிய தலைவரு வர்றாரு? அதுவும் என்னை பார்க்க வேறே வர்றாரு? வர்றதில்லாம் சரி அதுக்கு ஏன் அதிலே ரகசியம். இப்பிடியே சிந்திச்சுக்கிட்டே இருந்தேனா மறுக்கா இன்னொரு போன்! ஆனா அதுவும் வேறே நம்பர்.

"ஹலோ யாரு பேசுறது"

"சினனச்சாமி ஸ்டேடியத்திலே இன்னிக்கு மதியம் 12.20க்கெல்லாம் வந்திரு!!"

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது! ஆகா மணி இப்பொ பதினொண்ணு! இங்கெயிருந்து கிளம்பி ஸ்டேடியத்துக்கு போறதுக்குள்ளே பாதி உசுரை போயிருமே! தல ஆகாயமார்க்கமா வந்து இறங்கிறதுக்குள்ளே, நாமே சாலை மார்க்கமா போய் சேர்றதுக்குள்ளே பாதி செத்து சுண்ணாம்பை ஆயிருவோம், ஊரா இது பக்கத்து தெருவுக்கு போறதுக்கு எழுபதிரண்டு சிக்னலு, ஒன்வேயி, ஸ்பிட்லிமிட்'ன்னு சட்டத்திட்டங்க.

இடம்: சின்னச்சாமி ஸ்டேடியம் நேரம்: அதிகாலை 12.20

அகில உலக வருத்தப்படாத வாலிபர்களின் ஒப்பில்லா,எல்லையில்லா,தங்க தலைவன் ஆகாயமார்க்கமாய் வரும் கண்கொள்ளா காட்சியே காண என்தவம் செய்தேன் என் இறைவா??? இம்மாதிரி கப்பித்தனமா நினைச்சிக்கிட்டு இருந்தோப்பா சடாரன்னு நிக்கிற நிலத்துலே அப்பிடியே ஒரு ஆரம் பிடிச்சு வட்டம் சுத்த ஆரம்பிச்சிதது. நாமெல்லாம் ஆறடி அறுபது கிலோ சிங்கமில்லே அப்பிடியே பக்கத்திலே இருந்த ஒரு கம்பத்தை பிடிச்சிக்கிட்டே வானத்தே பார்த்தேன்.

சங்கத்து வாகனம்



நம்ம தல மஞ்ச சொக்கா அதுக்கு மேலே ஒரு செக்க்செவ்வன்னு ஒரு செவப்பு கலருலே கிழிச்சே கோட்டு ஒன்னே போட்டுக்கிட்டு கையிலே பைனாகுலரே வேறே பிடிச்சிக்கிட்டு "ஹாய் ராயலு"ன்னு சவுண்ட் விட்டாருப்பா!! அப்பிடியே சோத்துக்குள்ளே குழம்பை ஊத்துனா டக்குன்னு நடுவிலே ஊடுருவி உள்ளே போறேமாதிரியே ஹெலிக்காப்படரு நடுமையமா ஸ்டேடியத்திலே இறங்கிச்சு.. அதிலே இருந்து இறங்கி ஒரு சிங்கம் கணக்கா தல நடந்து வந்தாரு பார்க்கணுமே! பின்னாடி ரெண்டு பாடிக்கார்ட்ஸ் ஏகே45 பிடிச்சிக்கிட்டு வந்தாங்க..

ராஜ நடை




"வாங்க அகில உலக வருத்தப்படாத வாலிபர் தலைவரே! எதுக்காக நீ வர்றதே இவ்வளவு ரகசியமா வைச்சிருக்கிமின்னு சொன்னீங்க?"

"எனக்கு எங்கேயிருந்து எப்படி, எந்த ரூபத்திலே ஆப்பு வர்ருமின்னு தெரியாது! அதுவும் இந்த ஊருக்குள்ளே ஒரு ஆளு என்னை ஓப்பேத்தினிமின்னே டிராக்டருலே திரியறார்! அவருக்காவே தாய்யா இம்பூட்டு புரெடக்சன்! பார்த்திய்யா பின்னாடி ரெண்டு பயலுவேல்லே? நமக்கு வாகனமும் ஓட்டிக்கிட்டு போலிஸ் மாதிரி துப்பாக்கியே தூக்கிட்டு பாதுக்காப்புக்கும் வர்றாயங்கே! இப்போ பார்ப்போம் யார் நம்மக்கிட்டே மோதறதின்னு??"

"ஆமா தல! உங்களுக்கு இம்பூட்டு பாதுக்காப்பு தேவைதான்!"

"நான் எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா? உன்னை சங்கத்திலே சேர்க்கலாமின்னு நேர்காணல் நடத்த வந்திருக்கேன்! ம் சொல்லு உனக்கு என்ன வ.வா'க்கான தகுதி இருக்கு???"

"ஓ அப்பிடியா!! அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்!"

"சரி வரிசையா சொல்லு பார்ப்போம்!!"

"1)ரெண்டு ஸ்டாப்ன்னாலும் பஸ்ஸிலே போயிரலாமின்னு வெயிட் பண்ணி பண்ணி வெறுப்பாகி கடைசிலே நடக்க ஆரம்பிச்சா நாலு பஸ் சர்புர்ன்னு என்னை கடந்து போகும்????

2)பத்தாவது படிக்கிறொப்பா ரெண்டு தடவை கோட்டு அடிச்சு மூனாவது தடவையா பாஸ் பண்ணுறதுக்குள்ளே ஊருஉலகத்தோட ஏச்சுபேச்சுக்களுக்கெல்லாம் அசரதாதது!!!!???

3)ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பாருக்கிட்டே வெளு வாங்கி விழுப்புண் விழுந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அழுது முடிச்சிட்டு அவருக்கிட்டே காசு வாங்கிட்டு மார்னிங்ஷோ சினிமாவுக்கு போனது!!!

4)இவ்வளவு காலமா இங்கிலிபிசே தெரியமே அதே என்னமோ கரைச்சு குடிச்சே கணக்கா வவ்வால்,கிராம்மாருன்னு எல்லாமே தெரிஞ்சமாதிரியே வெள்ளைக்கார தொரைக்கிட்டெய்ல்லாம் இங்கிலிபிசுலேயே பேசுறது!!"

"ஓகே! நெருங்கி வந்திட்டே! இன்னும் வேறே இருந்தா சொல்லு! இந்த பிளாக், ஒயிட்'ன்னு வேறே ஏதாவது இருக்கா???"

"ஓ இருக்கே தல! ஒரு மேட்டருமில்லாம ஒரு வருசமா ப்ளாக் எழுதறது??

எந்த பதிவுல யார் ஆப்படிச்சாலும் வலிக்காத மாதிரியே நல்லவனா ஆக்ட் வுடறது??

கட்டதுரைய பார்த்தா எங்க தலக்கிட்ட முடிஞ்சா மோதி பாருடானு சவுண்ட் விடறது??"

"சரி நான் நினைக்கிற எல்லாதகுதியும் உன்க்கிட்டே இருக்கு! யூ ஆர் அப்பாயிண்டெட்"

ஆப்பு ஆயிண்மெண்ட்



"உனக்கு இன்னிலிருந்து அப்போ ஆயிண்மெண்ட்'தான் தடவணும்"

"வொய்"

"நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்படிக்க வர்றேன்!!!!"

"ஹி ஹி நாங்கெல்லாம் எதுக்கும் அஞ்சாத சிங்கமெல்லே! சேர்ந்து போகதே கருஞ்சிறுத்தயப்பு!! நீ இன்னிலிருந்து சங்கத்து டெக்னால்ஜிலே ஆப்ரைண்டிஸா ஜாயின் பண்ணிக்கோ! உனக்கு என்னோட செகரட்டரி ஆப்பர் லெட்டர் அனுப்புவாங்க! ஒரே கண்டிசன் நீ ஒழுங்கா இருந்தேனா எந்த பிரச்சினையிலும் காப்பாத்த வருவேன்! அதிகபிரசங்கிதனம் பண்ணனு வை!! எந்த கம்பத்திலே யாரு கட்டி வச்சு அடிச்சாலும் நாப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்பேன்! என்னா சொல்லுறே???"

"இல்லெ தல! நான் நல்லவந்தான்!"

"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"

"நான் ஒன்னே ஒன்னு இந்த மக்களுக்கிட்டே சொல்லிக்கலாமா"

"ம் சொல்லு!"

"மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவது எனக்கிட்டே வம்பிழுத்தா எங்க தலை வருவாரு! `யாருடா என்சங்கத்து ஆளே அடிச்சதுன்னு???` கேட்பாரு! ஆமா சொல்லிட்டேன்!"

Friday, November 24, 2006

ராயலோ ராயல்


இன்றைய வருத்தப்படாத வாலிபனுக்கு என்ன வேணும், முதல்ல ஸ்டைல்லா ஓட்ட ஒரு வண்டி, அதுவும் பழைய ராயல் என்ஃபீல்ட் வண்டி வாங்கி ஹேண்டில் பாரை வளைச்சு, நெளிச்சு, நல்லா இருக்கிற வண்டிய கேனத்தனமா மாத்திட்டா "வாவ் சூப்பர்"ன்னு சொல்லுவாங்க மக்கள்.

அப்புறம் என்ன,

சொகமா ஒரு ராயல் சேலஞ்ச் பீர ஏத்திக்க வேண்டியது தான்.

ராயலா ஒரு டின்னர்.

எதுக்கு இதெல்லாம், வாலிபப் பசங்க வெளங்காம போவதான் இத்தனை ராயல் மேட்டரு.

என்னா இத்தனை ராயல் மேட்டருன்னு பார்க்குறீங்களா? அதாங்க வெளங்காம போக எத்தனை வழிங்க ராயலா இருக்கு, அதே மாதிரி "ராயல்" ராம் கைப்புவை வெளங்காம பண்ண வ.வா.சங்கத்துல சேர்ந்துட்டாரு. அவர வரவேற்கத்தான் இப்படி ஒரு வெளங்காத ராயல் பதிவு.

அப்படியே சோத்தாங்கை பக்கம் மேல் மூலையில் "Contributors" ல "ராயல்" ராம் பேர் இருக்குதான்னு பார்த்துக்கங்க.

Thursday, November 23, 2006

உங்க மனசுல யாருங்கோ



விஜய் தொலைக்காட்சியில் நான் ரசித்து பார்க்கின்ற நிகழ்ச்சிகளில் கிராண்ட் மாஸ்டரும் ( யார் மனசுல யாரு) ஒன்று.

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுகின்றது..

யார் மனசுல யாரு ..? உங்க மனசுல யாரு. இப்போ பார்ப்போமா ?கிராண்ட் மாஸ்டர் ஆரம்பிக்கின்றார்.


அவங்க இப்ப உயிரோட இருக்காங்களா..?

ஆமாம் ஆனால் நிகழ்ச்சி முடியும் பொழுது உறுதியா சொல்லமுடியாது


இப்ப எங்க இருக்காங்க?

என் மனசுல

அரசியல், கலை, இலக்கியம் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..?

இது சம்பந்தமான அறிவு இல்லை


இயற்பியல், கணிதம், கணிப்பொறி, இவற்றில் ஏதாவது?

ஆமாம் எல்லாப்பாடமும் உண்டு


அவங்க படிக்கிற கல்லூரி காயிதே மில்லத், ஸ்டெல்லா மேரீஸ்..?

ஆமாம்..


காயிதே மில்லத்..?

ஆமாம்


அவங்க விரும்பி அணியுற உடை சுடிதார்?

ஆம்


அவங்களுக்கு பிடிச்ச கலர் பச்சை கருநீலம் கறுப்பு?

ஆம்


கருநீலம்?

ஆம்

உங்களுக்கு பிடிச்ச கலர் அவங்கதானே?

ஆம்


தினமும் காலேஜ்க்கு அவங்க கொண்டுபோற மதிய உணவு தயிர்சாதம் - தோசை - முட்டை சோறு இவற்றில் ஒன்றா?

ஆமாம்


தயிர்சாதம்?


ஆம்

அவங்களுக்கு பிடிச்ச பூ ரோஜா - மல்லிகை - பிச்சுப்பூ?

ஆம்


ரோஜா..?

ஆம்


ரோஜாப்பூவை வித்தியாசமா இடப்பக்கம் வச்சிட்டு வருவாங்களா..?

ஆம்

உங்கள அடிச்சதனால அவங்க செருப்பு சமீபத்துல அறுந்து போச்சா?

ஆம்

இப்ப புதுசா கறுப்பு கலர் பாட்டா செருப்பு வாங்கியிருக்காங்களா?

ஆம்

தினமும் வெள்ளை நிற கைனடிக் வண்டியில வருவாங்களா..?

ஆம்

அவங்க வண்டி நம்பர் டி என் 72 பி 1717 தானே..?

ஆம்..

"அடப்பாவி நம்மகிட்டேயே கள்ளம் பறைஞ்சிட்டியேடா மவனே..அது என் பொண்ணுடா.."
அலறுகிறார் கிராண்ட் மாஸ்டர்..

நீங்களும் இந்த நிகழ்ச்சியில பங்கு பெறனும்னா ஏதாவது பெண்கள் கல்லூரி முன்னால நின்னுக்கிட்டு ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிங்க..உங்க லவ் உண்மையா இருந்துச்சுன்னா..நீங்க தான் அடுத்த போட்டியாளர்..யார்..மனசுல யாரு..? பை..

- ரசிகவ் ஞானியார்

Wednesday, November 22, 2006

பாண்டி- அவசரக் கச்சேரி

Image Hosted by ImageShack.us




கிழக்கப் பார்த்த கம்பத்துல்ல நம்ம பாண்டியை பாட்சா படத்து ரஜினிகாந்து மாதிரி கட்டிப் போட்டிருந்தாங்க...

சங்கத்துல்ல அடிச்ச போனை எடுத்தப்போத் தான் விவரம் தெரிஞ்சுது..
ஆஹா சிக்கிட்டான்ய்யா பாண்டி... இனி சிதறு தேங்காத் தான்டீயோன்னு சங்கத்து சிங்கம் ஒண்ணு டைனமைட்டை மிதிச்ச எபெக்ட்ல்லக் கர்ஜிச்சுட்டு ஒதுங்கிருச்சு.

எங்கேப்பா நம்ம சங்கத்து வாகனம்... எடுங்கப்பான்னு ஆளுக்காளு கொரலு விட.. போன மாதம் பேரீச்சபழ ஆசையில் பாண்டி செய்த பழைய ஊழல் வெளியே வந்தது. வாகனம் விலைக்குப் போடப்பட்ட விவகாரம் பாண்டி மீது இருந்த குற்றங்களின் எண்ணிக்கையை கணிசமாய் உயர்த்தியது.

சங்கத்து சபையின் முன் வாசலில் தளபதியும், இளைய தளபதியும் கம்பத்துப் பக்கம் பாண்டிக்குப் பக்கா காவலாய் நின்றுகொண்டிருந்தனர். தல அகமதாபாளையத்துகாரர்க்ளோடு அண்டாவுக்கு அளவெடுத்து அல்ட்ரா டிஸ்டம்பர் அடிப்பது எப்படி என்று அடிக்கடி மீட்டீங் போட்டு பேசவேண்டி இருப்பதாலும் விவசாயியாரின் டிராக்டர் பாகிஸ்தான் பார்டரில் பஞ்ச்ர் ஆகி நிற்பதால் அவரும் சங்கத்தில் மிஸ்ஸிங்.

கச்சேரிக்கான மைக்செட், சவுண்ட் சர்வீஸ் எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டு திருப்பதியா.. ச்சே திருப்தியான்னு நான் தளபதியைப் பார்த்துக் கேட்டுட்டு ஓரமா ஓதுங்கி நின்னுட்டேன். சிவா கையிலே சாட்டை எடுத்து தளபதி கையிலேக் கொடுக்க.. ராசுக்குட்டி என்ன நடக்கப் போவுதோன்னு பயத்துல்ல என் கையை எடுத்து அவர் கண்ணை அரையும் கொரையுமாப் பொத்திகிட்டு வேடிக்கைப் பார்த்தார்.

அப்போ நிறுத்துடா....என்று சவுண்ட்

வெள்ளைக் குருதப் பூட்டுன்ன சாரியட்ல்ல இருந்து ட்ரிம் பண்ண மீசையோட புலிக்கேசி மன்னர் இறங்குறாரு...

"ஏ...பாண்டி.. என்ன இது?"

"என்ன என்னாது?"

"என்னச் செய்தாய்?"

"என்ன என்ன செய்தாய்?"

"ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?"

"என்ன..ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?"

"பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?"

"என்ன பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?"
"அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?"

"என்ன அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?"

"டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது....?"

"என்ன டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது....?"

"ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?"

"என்ன ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?"

"வேணாம் எனக்கு கோவம் வராது"

"என்ன வேணாம் எனக்கு கோவம் வராது"

"ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?"

"என்ன ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?"

"டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?"

"என்ன டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?"

"மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?"

"என்ன மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?"

"டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?"

"என்ன டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?"

"சொல்லிருடா தப்பா ரைட்டா?"

"என்ன சொல்லிருடா தப்பா ரைட்டா?"

நீ அவன் ஆளுதானே.. அவன் பிட்ட எனக்கேப் போடுறீயா.. இனி வாய் பேசி பிரயோஜனம் இல்லை...

புலிக்கேசி கையில் இருந்து கிளம்பிய சாட்டை சரியாகக் குறி தவறி பாண்டியின் இடமும் வலமும் மாறி மாறி அடிக்க.. புலிக்கேசி மன்னர் களைத்துக் கன்னத்தில் கை வைத்து உட்கார்கிறார். டேய் மன்னருக்கு எதாவது புத்துணர்ச்சிக்கு வழி பண்ணுங்கடான்னு மிகவும் பரிதாபமானக் குரலில் மன்னர் கெஞ்சுகிறார்...

அவ்வளவுத் தான் பாண்டி கைக் கட்டுக்களை நொடியினில் அறுத்தெறிந்து விட்டு மின்னலெனப் போய் தலக் கொடியில் காயப்போட்டிருந்த வேட்டியை அவிழ்த்து கம்பங்களுக்கு நடுவினில் கட்டி.. டிஜிட்டல் டால்பி டிஸ்க் பிளேயரில் ஜெசிக்கா சிம்சனின் லோ ஹிப் நடனக் காட்சியினை ஓட விடுகிறான்.

மன்னர் மெய்மறந்து குத்துப் போடுகிறார். கூடவே கச்சேரியும் களைக் கட்டுகிறது..

"ஆடி வா.. ஆடி வா.. ஆணழகைத் தேடிவா.. பாடல் ஸ்பீக்கரில் அலறுகிறது..."

ஆடலின் உச்சத்தில் புலிக்கேசியின் மீசை மண்ணில் விழுகிறது...

"ஆ..தல.. நீயா?" பாண்டி வாய் பிளக்க...

சத்தம் போடாதே... உன்னிய விசாரிக்கத் தான் இந்த வேசம்... இந்தா அந்த பில்ல இடுப்பு மட்டும் தனியாக் கழண்டு விழற மாதிரி என்ன அழகா ஆடுது.. அதை எம்புட்டு அழகா நீயும் ரசிச்சு எங்களையும் ரசிக்க வைக்கற மாதிரி பண்ணியிருக்க்.. இதுல்ல உன்னிய மாதிரி திறமைசாலி நாட்டுல்ல காட்டுல்ல் ஏன் நெட்டுல்ல கூட உண்டாச் சொல்லு?

பாண்டி தல்யைப் பெருமையாய் பாக்குறான்.

"அதை செய் ராசா..அதைச் செஞ்சு மக்களைச் சந்தோசப்படுத்து.. அதை விட்டுட்டு இட்லி சுடுறேன்.. வடைத் திங்குறேன்னு என்ன இது சின்னப்பில்லத் தனமா இல்ல இருக்கு..அதுக்குன்னு இருக்கவங்க அதைச் செய்வாங்க.. நீ வேணாம்.. என்ன?"

விவசாயின் டிராக்டரின் சத்தம் கேட்க எல்லாரும் வாசலைப் பார்க்க...

விவசாயிக்கு ஸ்பெஷலா... ஜெனிபர் லோபஸ் பாடல் 1000 வாட் ஸ்பீக்கரில் அலறியது....

"நல்லது யார் செய்தாலும் சங்கம் கண்டிப்பாப் பாராட்டும்ய்யா.... நல்லதைச் செய்ங்கய்யா...செய்ங்கன்னு " தல சவுண்ட்டா சொல்லிகிட்டே அகமதாபாளையத்து அடுத்த மீட்டிங்க்கு விவசாயி டிராக்டரில் கிளம்பிப் போனார்.

வாழ்க வளமுடன்.

Monday, November 20, 2006

சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்...

உலகெங்கிலும் இருக்கும் சோமபானப் பிரியர்களே! பெக் அடிச்சா கிக்கு வரும்னு தீர்த்தம் சாப்பிடாதவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் சரக்கு உள்ளே போனதுக்கு அப்புறம் என்னவெல்லாம் நடக்கும், என்னவெல்லாம் எப்படியெல்லாம் தெரியும்னு ஒரு புண்ணியவான் எழுதி வச்சிருக்காரு. இக்கட கொஞ்சம் ச்சூடண்டி...

மராட்டிய நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை கீழே. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Peg after Peg
I never take risk while drinking
When I come from office in the evening, wife is cooking
I can hear the noise of utensils in the kitchen
I stealthily enter the house

Take out the bottle from my black cupboard
Shivaji Maharaj is looking at me from the photo frame
But still no one is aware of it
Becoz I never take a risk

I take out the glass from the rack above the old sink
Quickly enjoy one peg
Wash the glass and again keep it on the rack
Of course I also keep the bottle inside my cupboard
Shivaji Maharaj is giving a smile

I peep into the kitchen
Wife is cutting potatoes
No one is aware of what I did
Becoz I never take a risk

I: Any news on Chopra’s daughter’s marriage
Wife: Nope, she doesn’t seem to be that lucky. Still they are looking out for her

I again come out; there is a small noise of the black cupboard
But I don’t make any sound while taking out the bottle
I take out the glass from the old rack above sink
Quickly enjoy one peg

Wash the bottle and keep it in the sink
Also keep the Black Glass in the cupboard
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: But still I think chopra’s daughter’s age is not that much
Wife: What are you saying? She is 28 yrs old… like an aged horse
I: (I forgot her age is 28) Oh Oh…

I again take out potatoes out from my black cupboard
But the cupboard’s place has automatically changed
I take out the bottle from the rack and quickly enjoy one peg in the sink

Shivaji Maharaj laughs loudly
I keep the rack in the potatoes and wash Shivaji Maharaj’s photo and keep it in the black cupboard

Wife is keeping the sink on the stove
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (getting angry) you call Mr. chopra a horse? If you say that again, I will cut your tongue…!
Wife: Don’t just blabber something, go out and sit quietly…

I take out the bottle from the potatoes
Go in the black cupboard and enjoy a peg
Wash the sink and keep it over the rack
Wife is giving a smile

Shivaji Maharaj is still cooking
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (laughing) So Chopra is marrying a horse!!
Wife: Hey go and sprinkle some water on your face…

I again go to the kitchen, and quietly sit on the rack
Stove is also on the rack
There is a small noise of bottles from the room outside

I peep and see that wife is enjoying a peg in the sink
But none of the horses are aware of what I did
Becoz Shivaji Maharaj never takes a risk

Chopra is still cooking
And I am looking at my wife from the photo and laughing
Becoz I never take what???

மராட்டிய மூலக் கவிதையை மராட்டிய மொழியில் படிக்கனும்னா(!!???) இங்கு சுட்டுங்கள். சரி...இதை அப்படியே தமிழ்ல நம்மால பேக்க முடியமான்னு பாத்தேன். உஹும்...ஒன்னும் முடியலை. LOL, ROTFL சமாச்சாரத்தை எல்லாம் கெடுத்த பாவம் நமக்கெதுக்குன்னு அப்படியே இங்லிபீசுலேயே போட்டுட்டேன்.

Friday, November 17, 2006

எம் சி ஏ - ஆட்டோகிராப்

[எம் சி ஏ படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரி இறுதி ஆண்டில் நண்பர்களுக்கு சும்மா தமாஷாக எழுதிய ஆட்டோகிராப்..டைரியை புரட்டி எடுத்து வந்தது]


என் இனிய கிராமத்து
மாணவர்களே!

ஒரு
ஆர்ப்பாட்டத்தோடு
கல்லூரிக்குள் நுழைந்த
என் இதயம்
இந்த
ஆட்டோகிராப் டைரிக்குள்
அமைதியோடு நுழைகின்றது
(நம்ப முடியலையே)

மீண்டும் எந்தஇடத்தில்
சந்தித்துக் கொள்வோமோ?
தெரியாது,
ஆனால்
இபபொழுது பிரியப்போகிறோம்

நம்பவேமுடியவில்லை
நேற்றுதான்
சேவியர் கல்லூரியில்
தயங்கி தயங்கி
நுழைவுத்தேர்வு எழுத வந்தது போலிருக்கிறது
ஆனால் அதற்குள்
பேர்வெல்(Farewell)....
ஆட்டோகிராப்...
ச்சே ரொம்ப வலிக்குதுப்பா
(என்ன காலில் முள் குத்திடுச்சா)

நாம்
Week-End ல் சந்தித்துக்கொண்டாலும் இது
Strong ஆன நட்பஜதான்
(ஏன் லைட்டான நட்பில்லையா
நீயென்ன டீக்கடையிலையாடா
வேலை பார்க்கிற)


ஒவ்வொரு வாரமும் நமக்கு ரம்சான்
ஒவ்வொரு வாரமும் நமக்கு தீபாவளி
ஒவ்வொரு வாரமும் நமக்கு கிறிஸ்துமஸ்
இப்படி
வருஷப்பண்டிகை அல்ல
வாரப்பண்டிகைதான் நமக்கு

எதை நினைத்துப்பார்ப்பது,
கடைசி பெஞ்சு கலாட்டக்கள்...
விதைக்காமலையே முளைத்த கடலைகள்...
கிண்டலுடனே கடந்த பீரியடு...
சில காதலின் வளர்ச்சிகள்...
பள்ளி வராண்டாவில் தேங்காய் உடைத்தது...

Photobucket - Video and Image Hosting

ஜோசப்புக்கு பெண் பார்த்தது..
ஜன்னலொரம் கடப்பவர்களை கிண்டலடித்தது...
டீக்கடை பெஞ்ச்...
யாருடைய திருமணத்திலும் அழைப்பிதழ் இல்லாமல்
வி எம் எஸ் சாப்பிட்ட சாப்பாடு..
ப்ராக்டிகல் ருமில் செய்த லூட்டி..
ரவுண்டானாவில் அடித்த ரவுண்ட்..
செமினார்கிளாசில் சேட்டைகள் ..
கல்லூரி விழாவில் தோப்புக்கரணம்..
ஜெராக்ஸ் வாங்கிவிட்டு
ஏமாற்றியவர்கள்...
டூர் செல்லும் இரவில் சீட்டுவிளையாட்டு...
பாரீனரோடு எடுத்த Photo..

Photobucket - Video and Image Hosting
பாத்ரூமூக்குள் ஆடிய டான்ஸ்..
கிழிந்தாலு போட்டுவந்த ஜீன்ஸ்..
டூரில் யார் யாரோ ஜோடியோடு
நான் மட்டும் தனியே...(?)
இப்படி
எல்லாமே கனவாகப்போகிறது
(நினைச்சுடாதீங்கப்பா,)

இனிமேல்
குடும்பம- குழந்தை
வேலை-பணம்
என்று
சாதாரண மனிதவாழ்க்கைக்குள்
நுழையப்போகிறோம்
(கவலைப்படாத நைனா)

மீண்டும் சந்திப்போம் என்று
நம்பிக்கையோடு கூறினாலும்
சூழ்நிலைகள் எப்படியிருக்குமோ,


என்றாவது ஒருநாள்
இந்த டைரியை
படிக்கும்பொழுது
என் ஞாபகம் இருக்குமா,
(கண்டிப்பா இருக்காது)

என் பெயர் சொல்லி
யாராவது அழைத்தால்
என் ஞாபகம் இருக்குமா,
(ரொம்ப அலட்டாதடா)

பத்திரிக்கையில் வரும்; என்
கவிதையைக் கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,

குரங்குசேட்டை செய்யும்
யாரையாவது கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,
(குரங்குன்னு ஒத்துகிட்டா சரி)

ஆனால்
நான் உங்களையெல்லாம்
ஞாபகப்படுத்தியே
பார்க்கமாட்டேன்
ஏனெனில் என்னையே
நான் எப்படி ஞாபகப்படுத்துவது,
(ஹைய்யா ஐஸ் ஐஸ் ))

அயர்ன் செய்த சட்டை
கூட்ட நெரிசலில் கசங்கிப்போவதைப்போல

இந்த
கடைசிநேரப்பிரிவில் இதயம்
கசங்கிவிட்டது
(யப்பா என்ன சென்டிமென்ட்)

கூட்டம்கூட்டமாய் பழகிவிட்டு
தனித்தனியே பிரியப்போகிறோம்
(சிலபேர் ஜோடியா பிரியறாங்க)

எங்கையோ பிறந்து
பள்ளிவாழ்க்கை எங்கையோ படித்து
கல்லூரி வாழ்க்கையில்
நம்மை நண்பர்களாக்கிய
இறைவனுக்கு நன்றி
(இறைவா மாட்டிவிட்டுட்டியே)

இஙகே நாம்
சந்தித்துக்கொள்ளவேண்டுமென
இறைவன் கட்டளை
சந்தித்துவிட்டோம்
(அரியர்ஸ் வச்சதும்
அவனோட கட்டளையா,)

இப்பொழுது இந்தநேரம்
பிரியவேண்டுமென
இறைவன் கட்டளை
பிரியப்போகிறோம்
(யப்பா சனியன் ஒழிஞ்சது)


உன்னுடைய திருமணத்திற்கு
எல்லோருக்கும்
அழைப்பிதழ் அனுப்பு
மீண்டும்
அனைவரும் சந்தித்துக்கொள்வோம்
(யப்பா வந்துடாதீங்கடா)

இனிமெல்
எந்த வீதிகளில்
எந்த இரயில்வேஸ்டேஷனில்
எந்த பிளாட்பாரத்தில்
எந்த பஸ்டாண்டில்
எந்த ஊரில்
எந்த நாட்டில்
எந்த சாப்ட்வேர் கம்பெனியில்
எந்த சூழ்நிலையில்
மீண்டும் சந்திப்போமோ?

அந்தச் சூழ்நிலையில்
நீ பணக்காரனாகவோ..
நீ தொழிpலதிபராகவோ..
நீ அதிகாரியாகவோ..
எப்படியிருந்தாலும்
பதவிகளை எறிந்துவிட்டு முதலில்
பழைய நண்பனாய் வா!
(வரமாட்டேன் போடா)

நாளைக்கும் நிலவு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(ஆமா பெரிய தத்துவம்)

நாளைக்கும் சனி ஞாயிறு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(சரியான லுசுப்பா)

இனியொரு ஜென்மமிருந்தால்
இதே கல்லூரியில்
இதே நண்பர்களாய்
சந்திப்போம் என்று
சங்கடத்தோடு பிரிகிறேன்
(யப்பா முடிஞ்சுது)



- ரசிகவ் ஞானியார்

Thursday, November 16, 2006

கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ

100 பதிவுப் போட்டாச்சு.. படமெல்லாம் எடுத்தாச்சு.. எதித்து வந்த பார்த்தீபன், சரளாக்கா கட்டத்துரை குரூப்பை எல்லாம் ஓரம் கட்டியாச்சு... ப.ம.கன்னு ஒரு குரூப் அதைக் கூட அரசியல் ரீதியா சமாளிச்சாச்சு...

ஒரு மனுஷனுக்கு எவ்வளவு புகழ் வரணுமோ அதுக்கும் மேல வந்தாச்சு... கோடிக் கணக்குல்ல ரசிகர்கள் அதுக்கும் சில் கோடிகள் அதிகமான ரசிகைகள்.. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் எதோ மிஸ்ஸிங் ஆகுதோன்னு பீலிங்...

சங்கம் பில்டிங்கை பளிங்குல்ல கட்டி ஐரோப்பா ஸ்டைல் பாத் டப் கட்டி அதுல்ல குளிக்கலாமா....

ம்ம்ஹும் அது சரி பிடாது... காசினோ ராயல் படத்த தமிழ்ல்ல எடுக்கச் சொல்லி குழாய் கோர்ட் போட்டு அசினையும் திரிஷாவையும் சோடியாக்கி டூயட் பாடலாமா..... எதாவது செய்டா கைப்புள்ளன்னு கிரகம் தலக் காதுல்ல ஓதிகிட்டே இருக்க...


"நீ பாக்க காக்கா மாதிரி கருப்பா இருந்தாலும் ஓன் கொரலு குயில் மாதிரி ஸ்வீட்டா இருக்குன்னு முன்னொரு காலத்திலே அந்த பார்த்தி பையச் சொன்னது இப்போ எக்கோ எபெக்ட்ல்ல தலக் காதுல்ல மறுபடியும் ரிப்பீட்டாக ஆரம்பிச்சுருச்சு"

"எட்டணா இருந்தா எட்டூரு எம் பாட்டக் கேக்கும்...அட பத்தணா இருந்தா பத்தூரு என் பாட்டைப் பாடும்..." அப்படின்னு லைட்டா கொரலு விட ஆரம்பிச்சார்...

தல ஆஹா என்னமாப் பாடுறீங்கன்னு சங்கத்து இளைய தளபதி வெட்டி வெடுக்குன்னு எடுத்துக் கொடுக்க தலக்குப் பிடிச்சிருச்சு கிறுக்கு.

ராயல் ராமுக்கு போனைப் போட்டு பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் மருத ஹாஜி மூசாவில்ல இருந்து எடுத்தாரச் சொல்லு.. இனி நான் ஒரு சங்கீத வித்துவான்ன்னு சொல்லிட்டார்.

பாட்டுக்கு கொரலு முக்கியம் ட்ரெஸ் எல்லாம் எதுக்குன்னு சைட்ல்ல பம்மி நின்னு கேட்ட பாசக்கார பாண்டியைப் படக்கென்னு கோவமாப் பார்த்தார் தல..

"ட்ரெஸ் இல்லாம என்னிய அம்மணக்கட்டையாப் பாடச் சொல்லுறீயா நீ.. தெரிஞ்சிப் போச்சுறா எனக்கு தெரிஞ்சுப் போச்சு.. நான் ஒரு மேஜர் சுந்தர்ராஜ பாகவதரா ஆகறது ஓனக்குப் பிடிக்கல்ல எங்கே எல்லா பிள்ளைகளும் ஒன்னிய விட்டுட்டு என் பின்னால என் கொரலுக்கு மயங்கி வந்துருவாங்களோன்னு ஓனக்கு பயம்டா.. "

தல அது மேஜர் சுந்தர்ராஜ பாகவதர் இல்ல.. தியாகராஜ பாகவதர்... பவ்யமாய் வாசல் பக்கம் நின்ற நமது புலிக்குட்டி சிவா எடுத்துக் கொடுக்க...அவன் மீது டென்சன் ஆனார் தல்.

நான் என்ன பரீட்சைக்காப் போயிட்டு இருக்கேன்ய்ன்.. கரெக்ட் பண்ணுற.. ஒரு கலைஞன் பீலிங்க்ல்ல வார்த்தையை அப்படி இப்படி தான் சொல்லுவான்.. நீ தான் புரிஞ்சிக்கணும்...

அதே கோவத்தோடு இளைய தளபதி வெட்டியைத் தல முறைக்க...



"தல நீங்க பாடலாம் தல,... நம்ம எளையராசா கூட உங்க மருதக்காரரு தானே அவர் அமைக்காத இசையா தல.. நீங்க நினைச்சா ஒரு லயனல் ரிச்சி, எரிக் கிளப்டன், ப்ங்க் பிளாயிட், எல்டன் ஜான், எல்விஸ் பிரிஸ்லி.. இவிங்க மாதிரி நீங்களும் வரலாம் தல"

"ஒரு பய பேர் கூட நம்மூர் காரன் மாதிரி இல்லையேடா.. அம்புட்டும் அசலூர் கார பேரா இல்ல இருக்கு என்று சந்தேகத்தோடு மறுபடியும் பாண்டியைப் பார்த்தார் தல..."

"அவ்ங்க எல்லாம் பாப் ஸ்டார்ங்க தல.."

" ஆகா.. இம்புட்டு நாளும் ஆப் வச்சிங்க.. நான் பாடப் போறது தெரிஞ்சது பாப் வைக்கப் போறீங்களா? விட மாட்டான்டா இந்தக் கைப்புள்ள"

"தல பாப்ங்க்றது ஒரு வகை பாட்டு தல... அதாவது.." என்று ஆரம்பித்த ராசுக்குட்டியைப் பார்த்து

"போது நிப்பாடிக்கா.. நீயும் அந்த விக்கிபீடியா குருப்ல்ல சிக்கிட்டியா.. அவிங்க தான் என்னக் கேள்வி கேட்டாலும் பதிவாப் போட்டு பல் இடுக்கு வரைக்கும் தகவல் சொல்லி நிரப்பி விட்டுருவாயங்க... எனக்கு அது வேணாம்.."

"அது இருக்கட்டும்.. ஒரு நல்ல வித்துவானுக்கு நல்ல ஆடை வேணும்.. அதை நம்ம ராயல் ராம் செஞ்சுருவான்... ஆங் வாகனம் வேணுமே" அப்படின்னு தல யோசிக்க..

தளபதி சிபியின் செல் போனில் கரகாட்டக்காரன் ரிங் டோன் அலறியது.

சிபி தலயைப் பாக்க.. தல சிபியை மொறைக்க...
தல சிபியை மொறைக்க..சிபி தலயைப் பாக்க..
சிபி தலயைப் பாக்க தல சிபியை மொறைக்க...
தல சிபியை மொறைக்க..சிபி தலயைப் பாக்க...

"இங்கேப் பார் இது டூ மச் ஆமா...கிரகம் புடிச்ச அந்தச் செல் போனை ஆப் பண்ணுப்பா இல்ல..." என தல எந்திரிச்சி நிக்க

"தல தல.. விவசாயி லைன்ல்ல இருக்காரு" என சிபி பதற...

"ஆரியம்... காரியம்.. வீரியம்ன்னு எதாவது வம்பு பிடிக்கப் போயிருப்பார்.. என்னான்னு கேளூ"

"தல சங்கம் நடத்துன போட்டியில்ல செயிச்சவங்க எல்லாருக்கும் கொடுக்கறதுக்குப் பரிசு வாங்கறதுக்கு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் போயிருக்காராமா.. அதுன்னால சங்கத்துக்கு ஒரு மூணு மாசம் லீவு சொல்லச் சொல்லுறார்"

தல லீவ் பத்தி யோசிக்கும் கேப்பில்

"தல விவசாயி ஊர்ல்ல இல்ல அவர் டிராக்டர் சும்மா தான் இருக்கும் வாகனமா அதையே வச்சுக்கலாமா.." பாண்டி பக்தி சிரத்தையாய் ஐடியா கொடுக்க

தல பாண்டியைக் கடிக்கும் பார்வை பார்க்கிறார்.

"வேணாம் வலிக்குது.. அழுதுருவேன்..ஆமா.. என்னிய நீ ரொம்பக் கேவலப் படுத்துற..."

தல மீண்டும் சிந்தனைக்குப் போகிறார்.. அப்படியே SWING IN THE RAIN பாடலை அலறலாய் பாடுகிறார்... பாட்டை நிறுத்திட்டு

"நான் முடிவு பண்ணிட்டேன்.. இந்த சங்கீத சீசன்ல்ல நான் கச்சேரி பண்ணப் போறேன்... எனக்குள்ளே ஒளிஞ்சு குப்புற படுத்து குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்க அந்த இசை ஜீவனை தட்டி எழுப்பி எதாவது சபா மேடையிலே உக்கார வச்சு பாட வைக்கத் தான் போறேன்..."

"தல ராகம் தாளம் பல்லவி இதெல்லாம் தெரியாம எப்படி தல நீங்க?" என்று பாண்டி மிகப் பணிவாய் கேட்க..

"தல அதெல்லாம் நம்ம ஊர்ல்ல தான் இருக்கு... நானும் தளபதியும் ஓங்களைக் கூட்டிட்டு போய ராகத்துல்ல 4 ஷோ பல்லவியில்ல 4 ஷோ... அனுபல்லவியில 4 ஷோன்னு பாக்க வச்சு தெரிய வச்சிடுறோம் தல"
என்று ராசுக்குட்டி உதவிக்கு வர....தல பெருமிதத்தில் ராசுக்குட்டியைக் கட்டிபிடித்து கதறுகிறார்.

தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க...

"போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.." பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.

பி.கு: தலயின் கச்சேரியில் விளம்பரம் செய்ய விரும்புவோர்கள் அணுகவும்
தேவ் - சென்னைக் கச்சேரி.

Wednesday, November 15, 2006

இடம் கிடைத்துவிட்டது

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

பாரதச்சிறுவன் ஒருவன்
சந்தோஷத்தில்
சப்தமிட்டுக் கொண்டிருக்கிறான்

Photobucket - Video and Image Hosting

இதைக்கேட்டு
விண்ணிலிருந்து
விரைந்து வந்த நேரு - ஒரு
ரோஜாவைப் பரிசளித்துவிட்டு
மெலிந்துபோன புறாவோடு
மீண்டும் மேலோகம் சென்றார்


"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

இவனுடைய
சப்தம் கேட்டதால்
சிலிர்ந்துக் கொண்டெழுந்தான் பாரதி!
"காலை எழுந்ததும் படிப்பு
கனிவு தரும் நல்ல பாட்டு "

கவிதையை
மீண்டுமொருமுறை
அச்சேற்றிவிட்டு அடங்கிப்போனான்

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

காந்தி அவசரமாய்
கண்விழித்து
"இந்தியனை
இந்தியனிடமிருந்து காப்பாற்ற
நன்றாகப் படி"
என
வாழ்த்திவிட்டு - யாரும்
கட்சி ஆரம்பிப்பதற்குள்
கரைந்தோடிப்போனார்

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

அன்னை தெரசாவின் தூக்கமும்
அவசரமாய்க் கலைக்கப்பட்டது

அவனை அருகிலழைத்து
ஆசீர்வதித்துவிட்டு
அரசியல்வாதிகள் வரக்கூடுமோ என்ற
அச்சத்தில் மீண்டும் உறங்கிப்போனாள்.
"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

கன்னியாகுமரியில்
குளித்துக்கொண்டிருந்த திருவள்ளுவர்
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

பழைய குறளைப்
புதுப்பித்துவிட்டு
பாறை மீதேறி
படுத்துக்கொண்டார்

அனைவரின் ஆசீர்வாதமும்
சிறுவனை உற்சாகப்படுத்தியது
அப்படியே உறங்கிப்போனான்
மறுநாள் சீக்கிரம்
போகவேண்டுமல்லவா..?

ஆனால் அவனுடைய
விதவைத்தாய் மட்டும்
விடிய விடிய
அழுதுகொண்டிருந்தாள்

காதல் தோல்வியடைந்த
கம்ப்யூட்டர் இளைஞனொருவன்
தனக்குத் தூக்கம் வராததால்
கோபப்பட்டு
இரவை இழுத்துக்கொண்டு
எங்கோ ஓடிவிட்டான்?

ஆகவே
சீக்கிரமாய் விடிந்தது

விடிவதற்குள்
விழித்துக்கொண்டான் சிறுவன்
கசங்கிப்போன சட்டை உடுக்க...
கட்டுச்சாதம் கையில் எடுக்க...
விதவைத்தாய் முத்தம் கொடுக்க...
"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது
தீப்பெட்டித் தொழிற்சாலையில்
இடம் கிடைத்துவிட்டது"

சிறுவன் சப்தமிட்டுக்கொண்டே
சென்றுகொண்டிருக்கிறான்

எனக்கு மட்டும் கேட்கிறது
வாழ்த்திய தலைவர்களின்
விசும்பல் ஒலி


- ரசிகவ் ஞானியார்

வ. வா. ஆட்டோகிராப் - 3!!!

முந்தைய பாகம் பார்க்க

பாகம் 1
பாகம் 2

நமக்கும் நம்ம தமிழ் வாத்தியாருக்கும் எப்பவுமே பிரச்சனைதாங்க....
அதுக்கு முக்கிய காரணம் இந்த திருக்குறள் தான்...

எனக்கு தெரிஞ்சது மொத்தமே 2 குறள் தான்

அகர முதல எழுத்தெல்லாம் தகர
ஸ்லேட்டில் எழுதி பழகு

அடுத்து

இனிய உளவாக இன்னாத கூறல்
கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று

இந்த இரண்டு குறளை மட்டும் தெரிஞ்சி வெச்சிக்கிட்டு நானும் எவ்வளவு நாள்தான் சமாளிப்பேன்.

நமக்கு முதல் வார்த்தைய சொல்லி திருக்குறள் எழுத சொன்னாலே வராது. இதுல கடைசி வார்த்தைய வேற சொல்லி எழுத சொல்லுவானுங்க...

பரிட்சைல எப்படி கேட்பானுங்கனா அருளென்னும் என்று தொடங்கும் குறளையும், பிறர்க்கு என்று முடியும் குறளையும் எழுதுகனு கேப்பாங்க...

சரினு நானும் வேற வழியில்லைனு

அருளென்னும் உளவாக இன்னாத கூறல்
கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று

அகர முதல எழுத்தெல்லாம் தகர
ஸ்லேட்டில் எழுதி பிறர்க்கு

இப்படி எழுதிடுவேன். இதுக்கு அவர் மார்க் போடமாட்டாரு. அப்பறம் அவர்ட போய் சண்டை போட்டா அரை மார்க் போடுவாரு.

அப்பறம் அந்த பகுபத உறுப்பிலக்கணம்னு ஒண்ணு இருக்கு
நேரா போனா மாங்கா, குறுக்கால போனா புளியாங்கானு இருக்கும்.

எனக்கும் சொல்லி கொடுக்க அவர் ரொம்ப முயற்சி பண்ணாரு. பாவம் அவருக்கு அனுபவம் பத்தல.

இது இல்லாம அணினு (நமக்கு ஞாபகம் இருக்கறது வஞ்ச புகழ்ச்சி அணிதான்) ஒண்ணு இருக்கு. பாட்ட சொல்லி அது எந்த அணினு கேப்பாரு. நமக்கு பாட்டை சொல்லி எந்த படம்னு கேட்டா கரெக்டா சொல்லிடுவோம். இல்லை க்ரிக்கெட் ப்ளேயர சொல்லி எந்த அணினு கேட்ட கரெக்டா சொல்லுவோம். ரெண்டும் இல்லாம பாட்ட சொல்லி எந்த அணினு கேட்டா மனுசன் என்னதாங்க பண்ண முடியும்.

கடைசியா அவரால எனக்கும் எங்க கணக்கு வாத்தியாருக்கும் சண்டை வந்ததுதான் மிச்சம்... அந்த சம்பவம் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு...

சுமார் 9 வருடங்களுக்கு முன்னால்... கணக்கு பரிட்சை நடந்து கொண்டிருந்தது (கொசு வத்திய சுத்துங்க)

கணக்கு வாத்தியார், "பாலாஜி! எழுந்திரி"

எழுந்து நின்றேன்...

"கைல என்ன புக்?"

"தமிழ் மீடியம் மேத்ஸ் புக் சார்" (நான் ஆங்கில மீடியம்)

"என்னடா காப்பி அடிக்கறயா?"

"இல்லை சார்... தமிழய்யா சொன்னதைத்தான் பண்ணேன்"

"என்னடா உளற?"

"எனக்கு தமிழய்யா தான் சொன்னாரு... வேற மொழில இருக்கறத பார்த்து எழுதினா அது காப்பியில்லைனு. வேணும்னா நீங்களே அவரை கூப்பிட்டு கேளுங்க"

"டேய் குமாரு நீ போய் உங்க தமிழய்யாவை கூப்பிட்டு வாடா"

குமார் சென்று தமிழய்யாவை கூப்பிட்டு வந்தான். நானும் கணக்கு வாத்தியாரும் (கையில் கணக்கு புத்தகத்துடன்) நின்றிருந்ததை பார்த்ததும் தமிழய்யாவிற்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது.

"என்னா சார்... ஏதாவது பிரச்சனையா?" தயக்கத்துடன் தமிழய்யா கணக்கு வாத்தியாரை கேட்டார்...

"இங்க பாருங்க சார்... தமிழ் மீடிய புக்கை வெச்சி காப்பி அடிச்சிட்டு நீங்க தான் அந்த மாதிரி பண்ண சொன்னீங்கனு சொல்றான்"

"பாலாஜி... என்ன இது? நான் எப்ப உனக்கு சொன்னேன்"

"சார்... ஏன் பொய் சொல்றீங்க? போன வாரம் கம்ப ராமாயணம் கிளாஸ் ஞாபகமில்லை?"

மீண்டும் கொசுவர்த்தி...

"பாலாஜி எழுந்திரி... கம்பரின் பெருமைகள் என்னனு நேத்து நடத்தனனே சொல்லு பார்ப்போம்?"

""

"இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம்?
கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் இந்த பூமிதனில் எங்கேயும் காணோம் (தூர்தஷன்ல சொல்லி அறிவிப்புகள்ல போட சொல்ல வேண்டியதுதான?)

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்

இது கூட ஞாபகம் இல்லையா?"

"சார்... இது அநியாயம். வால்மீகி எழுதனத அவ்ர் காப்பிதான அடிச்சாரு"

"இங்க பாரு... அவர் ஒன்னும் காப்பி அடிக்கல... வடமொழில இருந்ததை தமிழுக்கு ஏத்த மாதிரி எழுதினார்"

இப்ப திரும்ப பரிட்சை ஹாலுக்கு வாங்க... (பரிட்சை எழுத இல்லை)

"சார் நீங்க சொன்ன மாதிரி நான் தமிழ்மீடியம்ல இருக்கறதை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துட்டு இருக்கேன்... நியாயமா பார்த்தா நீங்க என்னய புகழ்ந்து தான் சொல்லனும்...
பாலாஜி வீட்டு கட்டுத்தறியும் கணக்கு போடும்னு சொல்லனும்.

நானும் அப்படியே காப்பி அடிக்கல. அதுல x,y,z னு இருக்கறத a,b,cனு மாத்திதான் போடறேன்"

அதுக்கு அப்பறம் நமக்கு அட்வைஸ் பண்றதையே நிறுத்திட்டாரு...

Tuesday, November 14, 2006

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

சவுதி – அல்கோபரிலிருந்து நண்பர் முஜிபுதீன் அனுப்பிய கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Photobucket - Video and Image Hosting

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

- ரசிகவ் ஞானியார்

Friday, November 10, 2006

கரகாட்டம்..டண்டணக்கா டணக்கா



அண்ணே ஒரு விளம்பரம் தான்..

என்னடா விளம்பரம், அந்த நடிகருங்கதான் வருசா வருசம் தெரு முழுக்க போஸ்டர் அடிச்சு பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அட அப்படியாவது 30 வயச தாண்டறாங்களான்னு பார்த்தா அதுவும் இல்லே. இவுனங்க மட்டும் பொறந்தாங்களா இந்த உலகத்துல?

இந்தா என்ன அந்த பொன்னமாராவதி பார்ட்டில கூப்பிட்டாக......

செய்தி: கச்சேரி தேவுக்கு வர 12ம் தேதி பொறந்த நாளு. வாழ்த்துக்கள்

அம்மாவைப் பார்த்தீங்களா அங்கிள்..

Photobucket - Video and Image Hosting

கருவை வயிற்றில் சுமந்து தன்னுடைய மூச்சின் மூலம் அதற்கும் சுவாசம் கொடுத்து ,தன்னுடைய உணவுக்குழாயை அதன் வயிற்றுக்குள் நுழைத்து, தான் உண்டு அதன் பசி நீக்கி, தவமாய் தவமிருந்து இன்னொரு ஜென்மம் போல குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்குத் தெரியும் பிரசவ வலி.

அப்படி பெற்றெடுத்த குழந்தை பிரசவத்தில் இறந்து பிறந்தால் கூட சில நாள் வேதனைகளோடு அந்தச்சோகத்தை ஆற்றிவிடலாம். கடவுள் தந்த குழந்தையை கடவுளே பறித்துவிட்டான் என்று ஆறுதல் சொல்லிவிடலாம்.ஆனால் பெற்ற குழந்தை காணாமல் போய்விட்டால்..

அந்தக் குழந்தை இந்த நொடி என்ன செய்யுதோ..? அடுத்த நொடி என்ன செய்யுமோ..? பசித்தால் என்ன செய்யும்..? யாருடைய அரவணைப்பில் இப்பொழுது இருக்கும்..? அழுதால் யார் அரவணைப்பது? அதனுடைய சிரிப்பை ரசிப்பவர்களின் கையில் சிக்கியிருக்குமா ?இல்லை அதனைக் காயப்படுத்துபவர்களின் கையில் சிக்கியிருக்குமா..? என்று ஒவ்வொரு நொடியும் செத்துக்கொண்டிருக்கிறாள் எங்கோ ஒரு தாய்..?
Photobucket - Video and Image Hosting
இதோ இந்த பூஜா என்ற 4 வயது குழந்தையை ஒரு பிச்சைக்காரன் கடத்தி வந்து தன்னுடன் பிச்சை எடுப்பதற்காக வைத்திருக்கின்றான். பொதுவாக குழந்தைகளை கையில் வைத்து பிச்சை எடுப்பவர்களுக்கு மற்றவர்களை விடவும் அதிகமாக காசு கிடைக்கும். இந்த இரக்கச்சுபாவத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்டான் அந்தப் பிச்சைக்காரன்.

திருநெல்வேலி பேருந்துநிலையம் அருகில் கூட நான் இதுபோன்ற காட்சியை காண்பதுண்டு. பச்சிளங்குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுகின்ற வயதில் சாலையில் பிச்சையெடுக்கும் கொடுமைகளை காண சகிக்காது. கைகளில் தூக்கி கொஞ்ச வேண்டிய வயதில் கால்களைக் கட்டிக்கொண்டு "அண்ணே! அண்ணே" என்று அவர்கள் கெஞ்சுவதை பார்க்கும்பொழுது என்னையறியாமல் விழுந்துவிடுகின்றது காசும் கண்ணீரும்.

பூஜாவைக் கடத்திய அந்தப்பிச்சைக்காரன் கேரள போலிஸ்காரர்களின் கைகளில் தற்பொழுது வசமாக சிக்கியுள்ளான். பூஜா தற்பொழுது (Nirmala Sisu Bhavan in Trivandrum, Kerala, India) திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா சிசு பவன் என்ற ஒரு அநாதைக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளாள்.

போலிஸார்கள் அந்தப்பிச்சைக்காரனின் மூலம் அந்தக்குழந்தையின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிடலாம் என்று விசாரித்திருக்கின்றார்கள்.
ஆனால் அந்தக்குழந்தையின் துரதிஷ்டம் அந்தப்பிச்சைக்காரனுக்கு காதும் கேட்காதாம். வாய் பேசவும் முடியாதாம். ஆகவே அவனிடமிருந்து உண்மையை கண்டறிவது சிரமமாகிவிட்டது.

அது மழலை மொழியில் கூறியுள்ள விபரத்தின் படி அந்தக் குழந்தையின்
தாய்மொழி : இந்தி
தந்தை பெயர் : ராஜூ
தாயார் : முன்னி தேவி
அதற்கு ஒரு தம்பியும் அக்காவும் இருப்பதாகவும் கூறியுள்ளாள்.பிறந்த இடம் : நாகலுப்பி (Nagaluppe) என்றும் கூறியிருக்கின்றாள். ஆனால் விசாரித்துப் பார்த்ததில் அப்படி ஒரு பெயரில் ஒரு ஊர் இல்லது இடம் இருப்பதாக யாருமே கேள்விப்படவில்லை. ஒருவேளை ஊர்ப்பெயரை உச்சரிக்கத்தெரியாமல் அதற்கு தெரிந்த மழலை மொழியில் கூறியிருக்கலாம்.
Photobucket - Video and Image Hosting
யாருக்கேனும் இந்தக்குழந்தையைப்பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ அல்லது அந்தக்குழந்தை கூறிய இடத்தைப் பற்றிய ஏதாவது தகவல்கள் கிடைத்தாலோ அல்லது குழந்தையைக் காணாமல் தவித்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களை காண நேர்ந்தாலோ திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா சிசுபவன் அனாதை இல்லத்திற்கு தகவல் தெரிவிக்கவும்

நிர்மலா சிசுபவன் அநாதை இல்லம் : 0471-2307434 (0471 is the area code for Trivandrum, Kerala).தங்களால் முடிந்தவரை தங்களது நண்பர்களுக்கு உறவினர்களுக்கு இந்த தகவலை இந்தப் புகைப்படத்துடன் அனுப்புங்கள்.
Photobucket - Video and Image Hosting
தன் எதிர்காலம் பற்றிய பயமே இல்லாமல் இந்தக் குழந்தை சிரித்துக்கொண்டிருப்பது தங்கள் எல்லார் மீதும் வைத்த நம்பிக்கையினால்தான்.

"அங்கிள் அங்கிள் நீங்க எங்க அம்மா அப்பாவை கண்டுபிடிச்சு தந்துறுவீங்க தானே ?"என்று உங்கள் காதுகளுக்குள் அந்த மழலையின் வேண்டுகோள் வந்து விழுகின்றதா..? "

தயவுசெய்து அலட்சியப்படுத்தாதீர்கள் நண்பர்களே. நாம் காசு பணம் செலவழிக்கப்போவதில்லை. ஏதோ நம்மால் ஆன உதவி தகவலை பரப்பினால் போதும். நமக்கென்ன வேறு யாராவது இந்த தகவலை பரப்பிக்கொள்வார்கள் என்று உங்கள் மனதில் சிறு அலட்சியம் கூட வரவேண்டாம்.

இந்தக்குழந்தை
தெருவைத்தாண்டி வந்தால் கூட
திருப்பி அனுப்பிடலாம்!
ஆனால்
கருவைத்தாண்டி வந்துவிட்டதால்
கதறிக் கொண்டிருக்கின்றது..

வாசித்து முடிந்தவுடன் இந்த ப்ளாக்கின் முகவரியை அல்லது http://www.helppoojafindherparents.org என்ற இணையதளத்தை நண்பர்களுக்கு அனுப்புங்கள். கண்டிப்பாக நீங்கள் செய்யும் இந்த சிறு உதவி உங்கள் வாழ்க்கையை நிச்சயமாய் மேம்படுத்தும்.ஏனென்றால் கடவுள் கவனித்துக்கொண்டே இருக்கின்றார்.

வேண்டுகோளுடன்

ரசிகவ் ஞானியார்

ஆர்குட்டில் "வருத்தப்படாத வாலிபர்களின்"!!??? அட்டகாசம்

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட்(?) பிடிக்கரானுங்கனு பாருங்க...








1. hi nice pictures ...u in tat saree.try wearin a white or Red saree u will look amazing..bye ...tc..do reply me

ஆமாம் இவர் பெரிய ஃபேஷன் டிசைனர்... அட்வைஸ் கொடுக்க வந்துட்டாரு... பேச்சை குறைங்கடா...

2. Hi. U look really awesome in the Photo and inside in the album in Saree. u look lik a tradional angel. i hav crossed ur profile once bfore, found intersting woman. can i b a part of ur friendship circle yar

டேய் நாயே இதுக்கு முன்னாடி முன்ன பின்ன ஏஞ்ஜல பாத்துருக்கியாடா? ஆமாம் அது என்ன ட்ரடிஷனல் எஞ்சல்? வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சு உடறது...
அப்பறம் என்னடா நாயே ஃபிரெண்ட்ஷிப் சர்குலு, ஸ்கோயர்னு கதைய விட்டுட்டு இருக்க?

3. hi!!!!!!!!!this is mani 4rm chennai!!!!!!
int in bein ma friend then jus giv me a scrap dood!!!
well ab me!!!!I can sya that..........its upto ya !!!!B ma freind and know abt me dood!!!!!

மூணு லைன்ல முன்னூறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற டாக் உனக்கு கடலை வேண்டி இருக்கு...

4. hello girlie!!!!!how r things wid u???am an engg guy who's IGNORING BOOKS and trying 2 orkut wid u...how abt uuuuuu???

டேய் இத உங்க அப்பா அம்மா பாத்தாங்கனா... உனக்கு சங்குதாண்டி

5. Hi,how r u......ur so cute!!!!more if ur in my friends list!!!!will u!!!

அடாடா இவ்வளவு புத்திசாலித்தனம் ஒரு மனசனுக்கு கூடாதப்பா...

6. U looking Mallika Sheravathi looking Imran aasmiCome let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட... அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

7. hey annikku Ravi yoda b'day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???Hi..

(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

8.Hi!if u retain this scrap I will understand that you are interested in meandif u delete this scrap, it means you are dreaming about me.Now u decide wat to do

(இவரு புத்திசாலியாம்... அப்படியே மடக்கிட்டாராம்)

9. hi,the numerical value of L+O+V+E=54but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 10854+54= 108LOVE+LOVE= FRIENDSHIPso friendship is two times greater than love.............so will u be my friend ?

(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by
2னு சொல்லுவ)

10.heyyy gal,Barcelona hav won the champions league finals!hurraaaayyyy!!!! come on lets be friends....

(மக்களே இதை பார்த்துட்டும் என்னய பொறுமையா இருக்க சொல்றீங்களா?)

11 .generally i never scrap to unknown ones but this pic just caught my eye...awesome pic gal.kalakita po.. lol

(இவரு நல்லவராம்.... ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்...மொன்ன நாயி...இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)

12. hi niki.. well can i expect a scrap back from ya..well thought u are a person who can read and write... is it true.,... ?

(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க என்னைக்குடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணாங்க?)

13.If u add me in ur list ill make ur life more pleasant and colorful...watsay?scrap me bak if u wannna be ma friend!

(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)

14.Scrap- Eyy black beauty,how are you so fair???If you don't add me its very unfair...(இவருக்கு கவிதை வேற...)

15.Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips....Overall stunning effect...But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..ya i know u dont know me.. but who bothers??come on-add me as friend..am waiting 2 b ur fan...

(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா... ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா...)

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா...

Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

Thursday, November 9, 2006

பிகு

Photobucket - Video and Image Hosting

புதிதாய் வாங்கும்
பேனாக்கள் எல்லாம்...
உன் பெயர் எழுதி
அழகு பார்ப்பதும்...

நிலவைப் பார்க்கும்
நிமிடங்களில் எல்லாம்
நீ வந்து
நினைவைக் கலைப்பதும்,

என் வீட்டுத் தோட்டத்தில்
ரோஜாவாய் வந்த...
உன் வருகையும்,

தினம் தினம்
நீ கொடுத்த கடிதத்தை
படித்து ,படித்து கண்கலங்குவதும் ,

என் பழைய டைரியில்
உன் புதிய புகைப்படம்..
ஒளித்துவைப்பதும் ,

பீச்சில்...பார்க்கில்
ஜோடிகளைக்
காணும்பொழுதெல்லாம்
தனியாய் செல்லும் நான்..
தவித்த தவிப்பும் ,

எவனோ...எவளோ...
பைக்கில்
பக்கம் அமர்ந்து
செல்லும்பொழுது
நான் பதறிய பதறலும்,

மாறிப்போன உன்
முகவரியைக் கண்டறிய...
உன்
பக்கத்து வீட்டுக்காரனை
பிராண்டிய பிராண்டலும் ,

நண்பர்களின் காதலிகள் பற்றி
கிண்டலடித்து விளையாடும்பொழுது நீ
அடிக்கடி என் இதயத்தில்வந்து...
சடுகுடு ஆடிச்செல்வதும்,

இப்படி
அவஸ்தை நிமிடங்களிலையே...
ஆயுள் கழிவதைவிட
நீ காதலை சொல்லியபொழுதே
பிகு செய்யாமல்
உன்னை...
காதலித்துத் தொலைத்திருக்கலாம்.

- ரசிகவ் ஞானியார்

ப்ளாக்கர்ஸ் Meet - வ வா ச

வவாச மீட்டிங்




இப்போ வர வர வலைபதிவாளர் சந்திப்பு அப்படீங்கறது பேஷனா போயிடுச்சு.பதிவு போடுரமோ இல்லையோ ஒரு வலைபதிவாளர் மீட்டிங்காச்சும் போயிருக்கீங்களான்னு கேட்டு இல்லேன்னு சொன்னா அற்பனே அப்படீன்னு புழுவைபோல பார்பாங்க போல இருக்கு. ஊர்ல weekend ல எல்லா Park க்குக்குள்ளேயும் எல்லா Bar க்குள்ளேயும் ஒரு இடம் free ய இல்லைனா பார்த்துக்குங்களேன் அங்கங்கே நம்ம ப்ளாக்கருகதான். 'மீட்டிங்கு' ‘கட்டிங்’ குன்னு சும்மா பட்டைய கெளப்பிகிட்டு இருக்காங்க. இதையெல்லாம் பார்த்திட்டு படு டென்சனா சங்கத்துக்குள்ள வர்றாரு தல கைப்புள்ளே !

கைப்பு : ஏடா மக்களா ஒரு பயபுள்ளய சங்கத்துக்குள்ள காணமே. எங்கடா போய்த் தொலைஞ்சீங்க ?? அங்க பாருங்கய்யா நேத்து ப்ளாக் ஆரம்பிச்சு இன்னிக்கு ப்ளாக்கர் மீட்டிங்குக்கு போய்ட்டு வந்து அப்படியே மீட்டிங்கப்பத்தி அப்புறம் அடிச்ச கட்டிங்கப்பத்தி யே பத்தி பத்தியா எழுதி அம்பூட்டு அப்ளாசையும் வாங்கிட்டு போறாகளே. நாம சங்கம் ஆரம்பிச்சு ஏதாச்சும் இப்படி பணியிருக்கமா ?? ஏண்டா உங்களுக்கெல்லாம் இப்படி பண்ணனும்னு தோணாம போச்சு. இப்படியே விட்டா வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படுற சங்கமாகிபோய்டுமேய்யா. ஆராச்சும் ரோசனை சொல்லுங்கப்பூ. டேய் ஜொள்ளுப்பாண்டி ஏண்டா எத்தினி நாளுதான் இந்த பொட்டிக்கடை டீக்கடைன்னு சங்கத்துபக்கமே தலை வச்சுப் படுக்காம இருப்ப ? எங்கய்யா இந்த விவசாயி ?? ஏன்யா தேவு உங்களைப்பார்க்கவே தேவுடு காக்க வேண்டியிருக்கேய்யா ?? ஏன்யா அப்பரண்டீஸ்ஸுகளா எங்கப்பா இருக்கீங்க??

தலயோட புலம்பல் கேட்டு எல்லாரும் அலறியடிச்சிகிட்டு சங்கத்துக்குள்ள வர்றாங்க.

தேவ் : என்னா தல புலம்பல்?? நான் ஏதோ கொஞ்சம் தியேட்டர் பக்கம் ஒதுங்கி தீபாவளிக்கு மக்களுக்கு படம் பார்க்க ஆலோசனை சொல்லலாம்னு பார்த்தா விட மாட்டீங்களே ??

கைப்பூ : வாய்யா தேவு. இப்போ அதுதான் குறைச்சல். நாம படம் காட்டணும்யா! நாம படம் பார்க்ககூடாது. தெரியுதா? அங்க அவங்கவங்க படம் காட்டிகிட்டு இருக்காங்க. நீங்க இங்க இப்படி சிம்புவையும் நயன்ந்தாராவையும் பர்த்துகிட்டு இருந்தா எப்படிய்யா?

தேவு : தல ஓவரா பேசுறீங்க. அயராது சங்கப்பணி ஆத்தி ஆத்தி சங்கத்து சிங்கமெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுக்கனும்தான் இப்போ புதுசா ரெண்டு சிங்கக்குட்டிகளை அப்பரண்டீஸ்சுகளா சேர்த்துவிட்டுருக்கோம்ல ??

தளபதி சிபி : ஏதோ நயன்ந்தரான்னு சத்தம் கேட்டுச்சே என்ன இடம் இது?? கந்தா கடம்பா !!! எல்லாரையும் காப்பாத்தும் வேலவா !!!

கைபூ : யாருயா நீ? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே ?? அட நம்ம தளபதி சிபி. ஏன்யா என்னாய்யா ஆச்சு உனக்கு ?? சங்கத்து தளபதியா பகைவனின் சிரம்கொய்து வந்திருக்க வேண்டிய நீ ! கழுத்தில் கொட்டை! நெத்தியில் பட்டை! என்ன கோலம் இது ?

சிபி : கைபுள்ளாய்!! நாம் அப்போதே சங்கத்திலிருந்து VRS ( Voluntary Retirement ) வாங்கிக்கொண்டு எம்மப்பன் முருகனின் திருவடி சரணம் என நாடிப் போய்விட்டோம் தெரியாதா?? ஏதோ அர்சனை சத்ததிற்கு நடுவில் என் தேவி நயன்ந்தாராவின் திருப்பெயர் செவியில் விழுந்ததால் இவ்விடம் வந்தோம்.

கைப்பூ : அப்பூ இவரு ஒருகாலத்திலே நம்ம தளபதி இப்போ பாவம் ஏதோ காவி கமண்டலம்னு போய்டாரு !! அப்படியே ஒரு நயன்ந்தாரா போஸ்டரை கொடுத்து ஒரு ஓரமா பய்ய ஒக்கார வைங்கயா.

அப்போது அண்ணா! என்னை மறந்ததேன் அண்ணா! என ஒரு உருவம் அலறிக்கொண்டு வருகிறது. கைப்பு குலை நடுங்க பார்க்கிறார்

கைப்பூ : ஆரும்மா நீ??

பெண் : ஐய்யகோ அண்ணா என்னாயா யாருன்னு கேட்கறே?? “கைவீசம்மா கைவீசு! வெண்பா வடிக்கலாம் கைவீசுன்னு ! “ என பாடிக்கொண்டே அழ ‘ ஜெர்க்' ஆகிறார் தல கைப்பூ

கைபூ : ஆஹா உடன் பொறவா சகோதரியே! என் அருமை பொன்ஸே! எங்கேம்மா போய்ட்டே? யோவ் பாருங்கய்யா சங்கத்து பெருசுக எல்லாம் ஒண்ணா கூடி இருக்குரப்போ இன்னும் என்ன ?? ரோசணைய அள்ளி விடுவாங்க பாருங்க. தங்கச்சீ இப்போ எதுக்கு கூடி இருகோம்னா

பொன்ஸ் : அதான் ஒரு பயலும் சங்கத்தை சரியா கவனிக்கலேன்னு தான் என் உளவுப்படை மூலமா தகவல் வந்துச்சே !!!

ஜொ. பாண்டி : பொன்ஸக்கா நீங்க பூனைப்படை நாய்ப்படை யானைப்படைன்னு ஒரு Zoo effect ல இருக்கரதா நெனச்சா உளவுப்படை ரிவால்வர் படைன்னு பட்டையக் கெளப்பிகிட்டு இருக்கீங்களே

பொன்ஸ் : ஹூம் யேய்! யேய்! இதெல்லாம் எனக்கு ஜூஜூபி பிஸ்கோத்து . எல்லாரும் சேர்ந்து கைப்பூவ கலாக்கிரது உங்க பாலிசி ! என்னைய நானே கலாய்க்கிரது என் பாலிசி. பொ.க.ச க.கா.ச, க.க ச. ஏ.ஐ.ச. யூ.பி.,ச. ஆ ஆ.ச. இதெல்லம் என்னானு பாகுறீயளா ??

சங்கத்திலே இருந்தாதேன் சிங்கமா ? அசிங்கமா இல்லை ? நாமதேன் இப்படி பல சிங்கங்களை அலைய உட்டுருக்கோம்லே ?!

இளா : சரி சரி யப்பா என்னாமா மழையடிக்குது. சும்மா நேரத்தை கடத்தாம கருத்தை சொல்லுங்கப்பா !!

சிபி : எந்த மீட்டிங் வச்சாலும் திருவடி சரணம்னு கைபூவ சங்கத்தை சுத்தி 100 தடவை அங்கப்பிரதட்சணம் பண்ணச்சொல்லி ஆரம்பிச்சா ரொம்ப நல்லதுன்னு திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லி கேட்டுருக்கேன் !!!

கைபூ : (மனசுக்குள்) இந்தாளு நெசமாதேன் சொல்றார இல்லை நம்மளை சுத்தமா ஒழிச்சுபிடணும்னு சொல்றாரா தெரியலையே !!

பொன்ஸ் : எல்லாரும் ப்ளாக்கர்ஸ் மீட்ட்ங்கை ஏதாச்சும் ஹோட்டல், BAR ன்னு தானே வைக்கிறாங்க ! சங்கத்து சிங்கம் சங்கத்து சிங்கம்னு சும்மா சொன்னா போதாது. நெசமாலுமே சிங்கம்னு நிரூபிக்க வவாச மீட்டிங்கை வண்டலூர் zoo விலே நடத்தினாதான் சூப்பரா இருக்கும் !!!

நாகை சிவா : வாவ் சரியான யோசணை ! அப்படியே நம்ம ‘தல’ ஒரு சிங்கத்தோட கழுத்தை கட்டிகிட்டு நின்னு போஸ் கொடுத்தா அதை அப்படியே என் கேமிராவில் சுட்டு ப்ளாக்கில போட்டு படம் காட்டீரமாட்டேன் ?

கைபூ : அப்புறம் எங்க படம் காட்டுறது ? பாடை தான் கட்ட முடியும் ! ஏன்யா ஒரு முடிவோடதான் இருப்பாண்க போல இருக்கே !!

வெட்டிபயல் : சூப்பர் யோசனை. என்ன சிங்கத்து பக்கதிலே நிக்கிரது ? ‘தல’ க்கி அவமானமில்லையா ? சிங்கத்து மேல ஏறி ஒக்காந்துகிட்டு அப்படியே ரெண்டு சிங்கக்குட்டிய மடியிலே வச்சுகிட்டு போஸ் கொடுக்கர மாதிரி கொடுத்தா அப்படியே என்னோட ஹாண்டிகேம்ல சுட்டு ஆர்குட்ல போட்டா போதும், சும்மா பொண்ணூங்க ஈ மாதிரி மொய்க்குமே !!!

ஜொ. பாண்டி : வெட்டி நானெல்லாம் கட்டுமரம் கட்டி நாயா அலைஞ்சு செய்யுரதை நீ சும்ம கம்யூட்டர் முன்னாடி ஒக்கார்துகிட்டு ஒய்யாரமா பண்ணுரியே !! எனக்கும் அந்த டெக்னாலஜிய கத்துக்குடு மாப்ளே !!

கைபூ : யேய் யேய் பாண்டிப்பயலே!! எங்க போனாலும் இந்த வேலைதானா ? சங்கத்தை முன்னேத்துங்கன்னா என்னா பேச்சு பேசிகிட்டு இருக்கீங்க ?

அப்போ வெளியில் ஒரு வண்டி வந்து நிக்கிற சத்தம் கேட்கிறது.

இளா : ‘ தல ‘ ஏதோ கார்பரேஷன்ல இருந்து நாய் புடிக்கிற வண்டி மாதிரி தெரியுதே. சங்கத்து வாசல்ல வேற வந்து நிக்குது ?!

பொன்ஸ் : மாதிரி இல்லை நாய் வண்டியேதான். Zoo ல மீட்டிங்குன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் zoo வுக்கு போறதுக்கு zoo effect லயே ஒரு வண்டிய நாந்தான் ஏற்பாடு செஞ்சேன். நான் சொன்னா என் உடன்பொறவா அண்ணன் மறுப்பாரா ?? சீக்கிரம் சீக்கிரம் சங்கத்து சிங்கம் எல்லாம் நாய் வண்டிலே ஏறுங்க. வண்டலூர்ல போய் மீட்டிங்க கண்டினியூ பண்ணலாம்

பொன்ஸ் உற்சாகமாக சொல்லிக்கொண்டே போக ஆளாளுக்கு துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு தெரித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.


Wednesday, November 8, 2006

காதல் அரசாங்கம்

Photobucket - Video and Image Hosting


காதலும் அரசாங்கமும்
ஒன்றுதான்


சாதி மதம் பார்க்காததால்
காதல் ஒரு
சமத்துவபுரம்

தன்னைத்தானே
உருக்கிக் கொள்வதால்
காதல் ஒரு
நமக்கு நாமே திட்டம்

நம்
கறுப்பு வாழ்க்கையை
கலராக்குவதால்
காதல் ஒரு
இலவச கலர்டிவி திட்டம்

இன்ப துன்பங்களை
இணைந்தே கடப்பதால்
காதல் ஒரு
மேம்பாலத்திட்டம்

இருவருக்குமே
லாபம் கிடைப்பதால்
காதல் ஒரு
உழவர் சந்தை

ஆகவே
காதலும் அரசாங்கமும்
ஒன்றுதான்

- ரசிகவ் ஞானியார்

Monday, November 6, 2006

ஒரு கல்லூரி விழா

Photobucket - Video and Image Hosting

1998 ம் வருடம் மாணவர் பேரவை தொடக்க விழாவுக்கு யாரை அழைப்பது என்பது தொடர்பான கூட்டம் ஒன்றினை பிரின்ஸ்பால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் அதில் சேர்மன் நவாஸ்கான் , துணை சேர்மன் முத்து பின் செயலாளராக நான் மற்றும் அனைத்து வகுப்பு லீடர்களும் அழைக்கப்பட வட்ட மேசை மாநாடு போல அமர்ந்திருந்தோம்.

என்னப்பா சேர்மன் யாரை அழைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க..?- சக்திமான் என்று மாணவிகளால் செல்லமாய் அழைக்கப்படும் பிரின்ஸ்பால் பீர் முகம்மது அவர்கள் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்

சேர்மன் நவாஸ்கான் உடனே பக்கத்தில் உள்ள என்னிடம் கேட்டான். என்ன ஞானி யாரை கூப்பிடலாம் நீ சொல்லேன்..?

வைரமுத்துவை கூப்பிடலாமா.? சும்மா கிண்டலுக்குத்தான் கேட்டேன்..

வைரமுத்துவா..நீயே பிரின்ஸ்பால்கிட்ட சொல்லுப்பா.. - பயந்தான் நவாஸ்கான்

சார் வை..ர..முத்து..வை கூப்பிடலாமா..? - நானும் தயங்கிபடியே கேட்டேன்

துப்பாக்கியில் பட்டனை அழுத்தியவுடன் புறப்படும் குண்டுகளின் வேகத்தைப்போல உடனே பதில் வந்தது.

ச்சே ச்சே அதெல்லாம் செலவாகும் பா..நமக்கு இப்ப டைம் இல்ல..

- மறுத்துவிட்டார்

வேற யாரையாவது சொல்லுங்கப்பா..

நான் திமு அப்துல்காதர் - வலம்புரிஜான் மற்றும் சில அரசியல் புள்ளிகள் என்று சில பரிந்துரைகளை எடுத்துரைத்தேன்.

எல்லாவற்றிற்கும் ஒரே பதிலைத்தான் வைத்திருந்தார்.

ச்சே எதுக்கு நவாஸ் இந்த மீட்டிங்..? எதை சொன்னாலும் மறுக்கிறார்..

வந்திருந்து அனைத்து மாணவர்களும் அவர்களுக்கென்று வந்த தேநீர் - லட்டுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அவர்களுக்கென்ன நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் அலட்சியமாக இருந்தார்கள்.

மறுபடியும் பழுதாகிப்போன டேப்ரிக்கார்டர் திருப்பி திருப்பி படிப்பது போல மீண்டும் ஆரம்பிக்கிறார்..

என்னப்பா சீக்கிரம் சொல்லுங்க..

எல்லா விழா மேடைகளிலும் வழக்கமாய் நடை பெறுகின்ற ஒரு காட்சி : ஒருவர் மற்றவர்கள் காதில் ஏதோ ஒன்றைப் பேசி இருவரும் சிரிக்க முற்பட்டு பின் சபை நாகரீகம் கருதி சிரிப்பை அடக்கிகொள்வது போல நடிக்கும் பெரிய பெரிய தலைவர்கள் போல.

நான் உடனே பக்கத்தில் உள்ள பிகாம் லீடரின் காதில் பேசாம "டேய் ஷகிலாவை கூப்பிட்டா கூட்டமாவது கூடும்..கேட்டுப்பார்ப்போமா?.."என்று நக்கலடிக்க அவன் சேர்மன் காதில் இதைப்போட..

அதைக்கேட்ட பக்கத்தில் உள்ள மைக்ரோபயாலஜி மாணவன் சிரித்துக்கொண்டே இன்னொரு மாணவனிடம் கூற அப்படியே அது பரவிற்று அடுக்கி வைக்கப்பட் சீட்டுக்கட்டு ஒவ்வொன்றாய் விழுவதைப்போல..

பிரின்ஸ்பால் இதைப்பார்த்து மாணவர்கள் சீரியஸாக ஏதேதா விவாதம் செய்கிறார்கள் என நினைத்துக்கொண்டார்.

இந்தச்சலசலப்பில் பிஸிக்ஸ் வகுப்பு லீடர் அதோ பிரின்ஸ்பால் அருகே அமர்ந்திருக்கும் இராமய்யா சாரிடம் காதில் சார் சார் ஞானியார் ஷகிலாவை கூப்பிடலாமான்னு கேட்கிறான்.

அவருக்கு உடனே சிரிப்பை அடக்க முடியவில்லை..அவருக்கு எப்போதுமே என் மீது பிரியம்..என்னை கண்களால் பார்த்தார்..உதட்டுக்குள்ளேயே சிரித்துக்கொண்டு கண்களால் மிரட்டியபடி இதெல்லாம் கூடாது என்ற அர்த்தத்தில் தலையாட்டினார்..

அப்போது மஸ்தான் காதில் கிசுகிசுக்கிறான். டேய் எஸ்டிசியில் படிக்கிறாள நம்ம பாளைகோட்டையில தினமும் லுக் விடுவோமே டா அதான் அந்த ரெண்டு பொண்ணுங்க..
அவங்கள பார்த்த மாதிரி இருக்கும்டா..நாம எஸ்டிசி காலேஜ் போகலாம்டா..அதுக்கு ஏதாவது வழிபண்ணு..

எந்த பொணணை சொல்றான்? நினைவலைகள் சுழல்கிறது.

காலை நேரத்தில் இளைஞர்களின் சொர்க்கமாக இருக்கும் பாளைங்கோட்டை பஸ்நிலையத்தை மேலப்பாளையம் நீதிமன்றம் 22சி என்ற பேருந்து நெருங்கி கொண்டு இருக்கிறது. நானும் மஸ்தானும் பேருந்தில் இடமிருந்தும் கல்லூரி மாணவர்களின் ஒழுக்க விதியைப் பின்பற்றி தொங்கிக்கொண்டே வருகிறோம்.

இறைவன் சொர்க்த்தில் இருந்து ஒட்டு மொத்த தேவதைகளையும் காலையில் பாளை பஸ்ஸ்டாண்டில் இறக்கி விட்டு விடடானோ என்று தோன்றியது.

எப்பொழுதோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது..?


ஏமாளியாய் இருக்கும் எங்கள்
இந்திய இளைஞர்களையெல்லாம்
உங்கள்
இதயத்தில் மட்டுமல்ல
பஸ்ஸில் படிக்கட்டிலும்
தொங்கவிடுவதிலும்
உங்களுக்கென்னடி ஒரு
தூரத்து சந்தோஷம்?



பேருந்து உள்ளே நுழைந்ததும் கையில் ஒற்றை நோட்டினை வைத்துக்கொண்டு நாங்கள் ஓடும் பேருந்தில் இருந்து குதித்துக் ஹீரோதனத்தை வெளிக்காட்டினோம்

( ஒரு நாள் அப்படித்தான் குதித்து இறங்கும்போது வழுக்கி விழுந்து ..காலில் அடிபட்டு..அந்த கதையெல்லாம் சொல்ல மாட்டேன் )


அதோ அந்த இரண்டு பெண்களும் நிற்கிறார்கள். நாங்கள் கண்டு கொள்ளவேயில்லை..பேருந்து மறுபடியும் கிளம்புகிறது..உடனே நாங்கள் ஓடிச்சென்று ஏறி திரும்பிபார்த்து அந்த இரண்டு பெண்களை பார்த்தும் குட்மார்னிங் என்று ஒரு சல்ய+ட் அடிப்பது வழக்கம். அப்படியே நட்பாகிப்போனோம்.


நினைவை மறுபடியும் மீட்டிங் ரூமிற்கு கொண்டு வந்தேன். என்னடா யோசிக்கிற என்ன செய்யலாம்..? யாரை அழைக்க..? - மஸ்தான் மீண்டும் கேட்கிறான்.

நான் உடனே பிரின்ஸ்பாலிடம் சார் எஸ்டிசி கல்லூரி பிரின்ஸியை கூப்பிடலாம் சார்..எப்போதும் மத்த காலேஜ் உடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவங்களோட படிப்பு - தேர்வுக்கு தயாராகிற வழிமுறை எல்லாம் நாமும் தெரிஞ்சிக்கலாம்.ஏன்னா அவங்க காலேஜ் எப்போதுமே பர்ஸ்ட் வர்றாங்க..என்று பொறுப்பாய் பதிலளிக்க..

பிரின்ஸ்பாலுக்கும் புரிந்துவிட்டது. அவரும் எங்கள் வயதை கடந்து வந்தவர்தானே..? பசங்களோட பிளான் எப்படியிருக்கும்னு..?
அதுமட்டுமல்ல அவர்களை அழைத்தால் செலவும் அந்த அளவுக்கு ஆகாது என்ற கணிப்பில் சரிப்பா கூப்பிடலாம் என்று சம்மதித்தார்..?

மாணவர்களுக்குள் ஒரே கிகிசுப்பு..டேய் அவங்க வேண்டாண்டா..அவங்களுக்கு பேசவே தெரியாது..போரடிச்சிடும்; யாராவது நல்லா பேசறவங்களா கூப்பிடலாம்..

என்று ஆளாளுக்கு கூற..எல்லோரிடமும் செலவு ஆகிவிடும் - டைம் இல்லை- என்று சில காரணங்களை கூறி சம்மதிக்க வைத்துவிட்டோம்.

முடிந்து விட்டது வட்ட மேசை மாநாடு சாரி வெட்டி மேசை மாநாடு..

மீட்டிங் ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறோம்..கடந்து போகும்போது இராமய்யா சார்..ஞானி ... யாரை கூப்பிடனும்.. ஷகிலாவையை..? என்று நக்கலடித்துச் சிரித்துக்கொண்டே சென்றார்..

சேர்மன் நவாஸ்கான் அழைத்துக்கொண்டே வருகிறான்..

ஞானி வேற யாiயாவது கூப்பிட்டிருக்கலாம்பா..ச்சே..- அலுத்துக்கொண்டான்

சரி விடு..வேற என்ன செய்ய..என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த பிஎஸ்ஸி கணிதப் பெண் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டே செல்கிறாள்.

நவாஸ் இங்க பாரேன் ..லுக்க பார்..ச்சே சரியான லுக்கு..

அங்க பார்க்காத பிரின்ஸ்பால் பார்த்தாருன்னா தொலைஞ்சோம்..

ஏன் இப்ப பயப்படுறே...?

அவன் சரி இவ்வளவு பேசறியே..ஒரு பெட்.. இப்ப எல்லா பொண்ணுங்களும் உட்கார்ந்திருப்பாங்க அதோ கேர்ள்ஸ் ஒன்லின்னு எழுதியிருக்கிற அந்த வராண்டாவுல..நீ போய் தண்டால எடுத்திட்டு வா பார்ப்போம்.. 100 ரூ பெட்.. –

- சும்மா கிண்டலடித்துச் சிரித்தான்

நான் பண்ணிருவேன் ஆனா இப்ப எல்லா பொண்ணுங்களும் வர்ற டைம்டா..மதியானத்திற்குப்பிறகு பண்றேன்..

இந்த பயம் இருக்குல உனக்கு..என்று கூறி அவங்க க்ளாஸ் மாணவர்களுடன் சேர்ந்து என்னை நக்கலடித்து சிரித்தான்.

அய்யோ ஹீரோதன்மையை இழந்துவிடக்கூடுமோ எனப்பயந்து சரி டா பண்றேன்.எனக் கூறி நேராக கேர்ள்ஸ் ஒன்லி பகுதிக்கு செல்கிறேன்..இங்கே சில தேவதைகள் வராண்டாவில் படித்துக்கொண்டு சில தேவதைகள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு..சில பெண்கள் என்னடா செகரட்டரி வர்றான் ஏதாவது இன்பார்ம் பண்ண வர்றானோ எனற் ஆர்வத்தில் என்னை பார்க்க..

நான் நேராக போய் தரையில் விழுந்து 3 முறை தண்டால் எடுக்க ஆரம்பிக்க எல்லாரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். என்னதான் வீரமாக சவால் விட்டாலும் அத்தனை பெண்கள் ஒட்டுமொத்தமாய் திரும்பிபார்த்து சிரித்த போது எனக்கு அவமானமாகி விட்டது. திரும்பி கூட பார்க்காமல் விறுவிறுவென்று வந்துவிட்டேன்.

ம் கொடு 100 ரூ - சேர்மனிடம் கேட்டேன்

சொன்ன மாதிரியே போய் செய்திட்டு வந்திட்ட..ஆனா வேகமா பண்ணிட்ட நான் தரமாட்டேன் - தப்பிக்க நினைத்தான்

நான் அடம்பிடித்து நச்சரிக்க 50 ரூ தான் இருக்கு நாளைக்கு 50 ரூ தர்றேன்.. என்று
அழுதுகொண்டே தந்தான்

---

மறுநாள் நானும் மஸ்தானும் ஒரு பைக்கில் நவாஸ்கான் மற்றொரு பைக்கில் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக டவுணில் ஒரு பிரமுகரைச் சந்தித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருக்கிறோம்.

பைக் ரத்னா தியேட்டரை தாண்டி சீறி வந்துகொண்டிருந்தது. மஸ்தான் ட்ரைவ் பண்ண நான் பின்னால் அமர்ந்து கொண்டேன்.

பைக்கை விரட்டாதடா மெதுவா போடா - நான்

அவனோ இல்லடா வயிறு பசிக்குது அவங்களுக்கு முன்னால நாம அரசன் போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வந்திருவோம்..அவங்கள பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில தினகரன் அலுவலகம் முன்னால வெயிட் பண்ண சொல்லுவோம். சரியா..

ச்சே ஒம் புத்தி ஏன்டா இப்படி போகுது..தப்பா நினைச்சுக்குடுவாங்க..நீ அவங்க பின்னாலயே போ.. நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு சத்தம் ..

ஹா..ய்... ஹா..ய் அட சித்தா கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் எங்கேயோ சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் கடைசி சீட்டிலிருந்து சில தேவைதைகள் சப்தமிடுகிறார்கள்.. ஹா..ய்...

டேய் வண்டிய விரட்டுடா..மெதுவா போகாதடா.. - நான்

நாயே இவ்வளவு நேரம் மெதுவா போன்னு சொன்னே..இப்ப பிகரைப்பார்த்தவுடனே விரட்ட சொல்றியோ.. - தத்துவம் பேசியது நாய்

டேய் டேய் விரட்டுடா..அந்த பொண்ணுங்க கைகாட்டிட்டுப் போறாங்கடா..- என்று நான் திருக்குறள் சொல்ல விரட்ட ஆரம்பித்தான் வண்டியை.

ஹா..ய்..ஹா..ய் - மறுபடியும் அவர்கள் தான் நாங்கள் விரட்டி பின் தொடர்வதை கண்டதும் குஷி அவர்களுக்கு..

நான் கைகாட்டினேன். இவன் மட்டும் ஹ{ரோதனத்தை தட்டிக்கிட்டு போயிடுவானோ என்கிற பயத்தில் மஸ்தானும் கைகாட்ட முயற்சிக்க வண்டி தடுமாறியது. ( பாருங்களேன் பெண்களை கண்டவுடன் பைக் கூட தடுமாறுகிறது)..

தடுமாறிய வேகத்தில் ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட இதயத்திலும் இடப்பக்கம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த முதியவர் மீதும். அவர் தடுமாறி விழுந்து..

அறிவிருக்கால ஏல... ஏல... நில்லுல..கண்ணு தெரிலையால.. - கத்த ஆரம்பிக்க

காதில் வாங்கிக்கொள்ளாமல் வண்டியை விரட்டினோம்.

பக்கத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சேர்மன் பயந்து போய் நாங்கள் ஏதும் பிரச்சனையை உருவாக்கி விடுவோமோ என் பயந்து.. வண்டியை விரட்டி செல்ல ஆரம்பித்தான்

அந்த தேவதைகள் எந்த காலேஜ் என்று எங்களிடம் கண்ணாடி வழியாக கைகளை அசைத்து சைகையில் காட்ட

காற்றை காகிதமாக்கி கைகளை பேனாவாக்கி எழுதினேன் ..ச..த..க் என்று

அவர்கள் எந்த குரூப் என்று கேட்க..மறுபடியும் மேத்ஸ் என்று மறுபடியும் காற்றில் எழுத ஆரம்பித்தேன்.

அவர்களோ கழுத்தில் கைவைத்து அறுப்பது போல காட்டினார்கள்..அறுவை என்று..

திடீரென்று புகையாக வந்தது ..என்னவென்று பார்த்தால் இதையெல்லாம் முன்னால் அமர்ந்து கவனித்து வந்த மஸ்தானின் வயிற்றெரிச்சலில் வந்த புகை அது.

பின் கைளில் வைத்திருந்த அழைப்பிதழை கொடுக்கலாம் என்று அழைப்பிதழை எடுத்து அவர்களை நோக்கி கைகளை காட்ட அந்த வெல்வெட் சுடிதார் மாணவி..தன் கைகளை வெளியில் நீட்டினாள்..நான் உடனே மஸ்தானை வண்டியை அந்த பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் விரட்ட சொல்லி அழைப்பிதழை கை நீட்டிக்கொண்டிருக்கும் தேவதையிடம் கொடுக்க முயற்சித்து தோல்வியடைய..ஓ ஓ ஓ என் கத்தத் தொடங்கினார்கள் தேவதையின் தோழிகள்

மறுபடியும் கொடுக்க முயற்சித்தேன்..வெற்றி வெற்றி கொடுத்துவிட்டேன்..அழைப்பிதழையும் மனசையும்.

அதை வாங்கிய அவள் படிக்க நான் சைகையில் காட்டினேன்.

நவாஸ்கான் ஞானியார் முத்து
சேர்மன் செயலாளர் துணை சேர்மன்


அந்த நடுவில் இருப்பதுதான் என் பெயர் என்று சைகையில் காட்டினேன். கண்டிப்பாய் விழாவுக்கு வரவேண்டும் என்று சைகையில் ஒரு சம்பிராயத்திற்காக கூற அவர்களும் சரி என்று தலையசைக்க.....சைகையும் கத்தலுமாக ஜாலியாக பயணப்பட்டுக்கொண்டிருந்தது பைக்கும் இதயமும்.


இப்படி அந்த பாளைங்கோட்டை போகும் பாதைகள் சொர்க்கம் செல்லும் பாதைகள் போல அப்பொழுது எங்களுக்குத் தெரிந்தது. அந்த பேருந்தை தவிர வேறு எந்த வாகனமும் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.


மேம்பாலத்தில் இறங்கி அந்தப்பேருந்து ஜங்ஷன் செல்லும் பாதையை நோக்கி திரும்ப எங்களுக்கோ நேராக பாளையங்கோட்டை போகவேண்டியது இருந்ததால் கையசைத்துக்கொண்டே வருத்தத்தோடு விடைபெற்றோம்.

வண்டியை விரட்டிக்கொண்டே சென்றோம்..அட நம்ம சேர்மன் நடக்கின்ற கூத்தினை கவனித்துக்கொண்டே முன்னால் சென்றவனை பிடித்துவிட்டோம்..

டேய் இப்ப நேரா எஸ்டிசி காலேஜ் போய் இன்வைட் பண்ண போறோம் என்ன..அதுக்குள்ள எங்கையாவது போயிறாதீங்க.. - கடுப்பில் கூறினான்

( அவன் இப்படி கூற நினைத்தான்.. டேய் நேரமாச்சுடா..வேற எந்த பொண்ணாவது டாட்டா காட்டினா ன்னு சொல்லி பல்ல இளிச்சிகிட்டு போயிடாதீங்கடா..)


எஸ்டிசி கல்லூரியின் வாசலில் அதோ நெல்லை இளைஞர்களின் எதிரி வாட்ச்மேன் நின்று கொண்டு எங்கப்பா எங்க தம்பி போறீங்க..பர்மிசன் இருக்கா..

நாங்கள் இன்விடேசனை கையில் எடுத்து காட்ட இடம் கிடைத்துவிட்டடு சொர்க்கத்தில் நுழைய..

அந்த பெண்கள் கல்லூரியில் நாங்கள் மூவரும் நுழைகிறோம்..எங்கெங்கு நோக்கினும் பெண்களடா..மிடியில் சுடிதாரில் சேலையில் என்று கலர்கலராய்..

சிலர் ஏதோ அவர்கள் கண்களுக்கு நாங்கள் தென்படவேயில்லை என்கிற மாதிரி அலட்சியமாக செல்வது போல நடித்து செல்கின்றனர்;.

( கடந்து சென்றபோது திரும்பி பார்த்தாங்களோ இல்லையோ..? )

மஸ்தான் தன் வேலையில் கரெக்டாக இருந்தான். ஞானி அங்க பாரு..நம்ம பஸஸடாண்டுல பார்ப்போம்லடா அந்த பொண்ணுங்க அதோ வர்றாங்க பாரு..

நாங்கள் உடனே சேர்மனிடம் கொஞ்சம் வெயிட் பண்ணச்சொல்லிவிட்டு அவர்களிடம் சென்று கடலை வறுக்க ஆரம்பித்தோம்..

ஹலோ எங்க இந்தப்பக்கம்

எங்க காலேஸ் பங்ஷனுக்கு உங்க பிரின்ஸியை இன்வைட் பண்ண வந்தோம்..நீங்களும் கண்டிப்பா வரணும்..என்ன.? என்று ஒரு இன்விடேசனை அவர்கள் கையில் கொடுத்து அசடு வழிந்து
என்ன சாப்பிட்டாச்சா

எங்க அவள காணோம்.. ( என்று இன்னொரு பொண்ணை பற்றி கேட்டு)

எங்க சொந்தக்கார பொண்ணு இங்கதான் படிக்கிறா ( என்று இல்லாத சொந்தக்கார பொண்ணை பற்றி விசாரித்து)

பீரியடு முடிஞ்சிடுச்சா..

ரெஸ்ட் டைம் எப்போ..

எங்களுக்கு மேத்ஸ் கால்குலஸ் நோட்ஸ் வேணும் உங்க காலேஜ் நோட்ஸ் நல்லாயிருக்கும்னு சொன்னாங்க

என்று சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கடலை கடலை கடலை வறுத்து அந்த கல்லூரி வளாகமே புகை மண்டலமாய் காட்சியளிக்கும் வண்ணம் வறுத்துத் தள்ள

கடலையின் நெடி தாங்காமல் மூச்சு முட்டி அய்யோ நேரமாச்சு வர்றோம் என்று அவர்கள் விடைபெற்;றனர்..

இங்கே நவாஸ்கான் மட்டும் தனியாக அந்த மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க..

டேய் ஏண்டா எங்கே போனாலும் லேட்டாக்குறீங்க..டைம் ஆச்சுடா..

பிரின்ஸியை பார்த்து அழைப்பிதழ் கொடுத்து தேநீர் பருகி விடைபெற்றோம். ( தனியா வந்தோம்னா இந்த மரியாதையெல்லாம் கிடைக்காது..அப்படியே வாசல் வழியே அனுப்பிறுவாங்க )

விடைபெற்று மறுபடியும் அந்த சொர்க்கத்தை கடந்து வந்துகொண்டிருக்கும் போது எதிரில்
சில பெண்கள் தலை குனிந்தபடி வந்து கொண்டிருக்க டேய் மஸ்தான் அநத பொண்ண பாரேன் சூப்பரா இருக்கால..

யாருடா..

அந்த குதிரை வால்டா..ரெட் கலர் சுடிதார்..


அவர்கள் பக்கம் நெருங்க..நவாஸ்கான் கிசுகிசுத்தான் டேய் எதுவும் வம்பு இழுத்திறாதீங்கடா..மரியாதையா வந்திருக்கோம்..


எக்ஸ்கியுஸ் மி டைம் என்ன..? - என்னுடைய ஹார்மோன்கள் உசுப்பிவிட கேட்டேவிட்டேன்.

தலை நிமிர்ந்து பார்த்து முறைத்தபடி கடந்து செல்ல..அய்யோ ஞானி அவமானப்பட்டுட்டாயடா.. என்று ஒரு ஹார்மோன் வந்து காதில் சொல்லி விட்டுப் போனது.

எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது ஹலோ என்ன சொல்ல மாட்டீங்களா..ரொம்ப அலட்டிக்கிடாதீங்க..இப்ப உங்க பாட்டியைத்தான் இன்வைட் பண்ணிட்டு வர்றோம்..

வந்ததே கோவம் அவர்களுக்கு..(தேவதைக்கு எவண்டா ஆங்கிலம் சொல்லி கொடுத்தது?)

ஹவ் டேர் யு... ஐ வில் கம்ளைண்ட் டு மேடம்..என்று கூறி விறுவிறுவென்று பிரின்ஸி ரூமை நோக்கி படையெடுக்க


சொன்னேன்ல சரி சரி சீக்கிரம் வாங்க போயிறலாம் சேர்மன் நடையை அதிகப்படுத்தினான்.

வெளியே வந்து பைக்கை எடுத்து சீறிப்பறந்தோம்..


-----


அந்த நாள் வந்தது..மேடையில் எஸ்டிசி கல்லூரியின் பிரின்ஸி மெ வில் ஆரம்பிக்கும் றி யில் முடியும் அவர்கள் மற்றும் பிரின்ஸ்பால் சில பேராசிரியர்கள் விஐபிக்கள் உட்கார்ந்திருக்க

எங்கள் மூவருக்கும் மேடையில் விஐபிக்களுக்குப்பின்னால் சீட் ஒதுக்கியிருந்தார்கள்.

சேர்மன் காதில் கிசுகிசுத்தான். டேய் பசங்க எல்லாம் திட்டுறாங்கடா ..விழாவுக்கு அவங்கள அழைத்ததற்கு..ஏன்னா அவங்களுக்கு மேடைப்பேச்சு சரியா வராது ..போரடிக்கும்..

சரி என்ன செய்ய கூப்பிட்டாச்சு..விடு - நான்


நான் வரவேற்புரையில் பேசுகிறேன்.


பெண்கள் கல்லூரியின் முதல்வர்
திருமதி ..........

இவர்கள்
பெண்கள் கல்லூரிக்கே
முதல்வர் என்றால்
மிகப்பெரிய தைரியசாலிதான்..

( கை தட்டல்..பிரின்ஸியோ முறைக்கிறார் )

இவர்களுக்கு
பேசவே தெரியாது

( கைதட்டல் பலமாய் ஒலிக்கிறது..விசில் சப்தம் வேறு எங்கள் கல்லூரி பிரின்ஸ்பால் பீர்முகம்மதுவோ ஒரு மாதிரியாய் பார்க்கிறார்..என்னடா இன்னொரு கல்லூரி முதல்வரை இப்படி அவமானப்படுத்தும்படி பேசுகிறான் என்று )

நான் தொடர்கிறேன்.

இவர்களுக்கு பேசவே
தெரியாது
ஆம்
உண்மையைத் தவிர வேறெதுவும்
பேசவே தெரியாது.

என்று கூற மறுபடியும் பலமான கைதட்டல் பிரின்ஸ்பாலுக்கு நிம்மதி..

பிரின்ஸி மட்டும் சிரித்துக்கொண்டே முறைக்கிறார்கள் முறைத்துக்கொண்டே சிரிக்கிறார்கள்.

பின் பிரின்ஸ்பாலை பற்றி கூறும்போது

காதலிப்பவர்களுக்கெல்லாம்
தலை மொட்டையாகட்டும் என
கடவுள் கட்டளையிட்டுவிட்டால்
நமது பிரின்ஸ்பால் தலைதான்
முதலில் மொட்டையாகும்.

( பிரின்ஸ்பால் பார்க்கிறார்..என்னடா இவன் நம்மள வம்புக்கு இழுக்கிறான் என்று )

ஆம்
குழந்தைகளை காதலிக்கும்
பெற்றோர்களை போல
மாணவர்களை காதலித்துக்கொண்டிருக்கிறார்

என்று கூறினேன். அவர் முறைக்கிறாhர் - வேறு வழியின்றி யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்று சிரிக்கிறார்.

பின் எல்லோரையும் வாழ்த்தி வரவேற்றுவிட்டு அமருகிறேன்.

பிரின்ஸி அவர்கள் பேச வருகிறார்கள்..எங்களுக்கோ பயம் காலேஜ்ல அந்தப் பொண்ணுங்கள கிண்டல் பண்ணினதை சொல்லி கொடுத்திருவாங்களோ என்று?


ஒரு கல்லூரியிலிருந்து இன்னொரு கல்லூரிக்கு மாணவர்கள் வந்தால்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முதலில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் புத்தகத்தை படிப்பதற்கு முன்னால் முதலில் ஒழுக்கத்தை படிக்கவேண்டும்

என்று பொதுவாக ஆரம்பிக்கிறார். சேர்மன் நவாஸ்கான் என்னைப்பார்த்து சிரித்து காதில் கிசுகிசுக்கிறான். ஞானி இது உனக்குத்தான்னு நினைக்கிறேன்.

நானோ என்ன எனக்கா..நமக்குன்னு சொல்லு - கூட்டணி சேர்த்தேன்.

எனக்கும் புரிந்துவிட்டது இது எங்களைப்பற்றிதான் என்று. மாணவர்கள் ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் ஏதோ அறிவுரை சொல்லுகிறார்கள் என நினைத்து ஆர்வமாய் கவனிக்கிறார்கள்.

இன்னமும் அந்த நாட்களை நினைக்கும் போது குஷியாகத்தான் இருக்கிறது.

(நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு என் உறவுக்கார பெண்ணின் சீட் வாங்கும் விசயமாக அவர்களை சந்தித்தேன். ( இப்பவும் அவர்கள்தான் பிரின்ஸி ) அவர்களிடம் கேட்டேன்

என்ன மேடம் உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா..?

ஒரு மாதிரியாய் உற்று பார்த்துவிட்டு..எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு

இல்ல மேடம் நான் சதக் காலேஜ்ல என்று சொல்ல வந்து பின் நினைத்துக்கொண்டேன் சீட் விசயமாக வந்திருக்கிறோம் பழைய கடுப்பில் சீட் தரவில்லை என்று கூறிவிடுவார்களோ எனப்பயந்து பாதியிலையே முழுங்கி நீங்க சதக் காலேஜ் பங்ஷனுக்கு வந்தீங்க நான் பார்த்திருக்கிறேன் என்று முடித்தேன்.நல்லவேளை அவர்களுக்கு ஞாபகம் வரவில்லை.. )


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்