Thursday, August 31, 2006

இது நம்ம ஆளு

வணக்கம் ... வந்தனம்... இது செப்டம்பர் மாதம்.. புதிய நாள்... இங்கே பக்கத்துல்ல இவருக்கு வரவேற்பு தட்டி எல்லாம் கட்டி வச்சு ஒரு வாரமாச்சு..

பினாத்தலாருக்கு முன்னுரைக் கொடுக்கறதுங்கறது சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான்.

பளிச்சுன்னு சொல்லணும்ன்னா ஒரு சூப்பர் ஸ்டார் பாட்டு நமக்கு டக்குன்னு ஞாபகம் வருது

"பொதுவாக என் மனசுத் தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்...

இந்த வரிகள் நம்ம ஆளுக்கு நச்சுன்னு பொருந்தும். இது வரை வலை உலகில் நடத்தப் பட்ட போட்டிகளில் பெரும்பான்மையானவற்றில் நம்ம ஆளு வெற்றி மாலைச் சூட தவறியதில்லை. இவர் வென்ற போட்டிகளையும் அதன் விவரங்களையும் அறிந்துக் கொள்ள இங்கே சுட்டுங்கள்.

கலகலன்னு சிரிக்க வைக்கிறது நம்ம ஆளுக்குக் கைவந்தக் கலைன்னா.. கல் மனசையும் கலங்க வச்சிருக்கு அவருடையப் பல படைப்புகள்.

ஒரு பல்சுவைப் பதிவாளர். பேச்சிலே எப்போதும் ஒரு அழகியச் சிரிப்பினைத் தேக்கி வைத்திருப்பவர். பழகுவதில் எளிமை, இனிமை, தோழமை என்ற குணங்களுக்குச் சொந்தக்காரர்.

அடிப்படையிலே ஒரு ப.ம.க. காரர் தான் நம்ம ஆளு ஆனாலும் சங்கம் மற்றும் சங்கத்து மக்கள் மீதும் தனிப்பாசம் கொண்டவர்.

நம்ம ஆளு நகைச்சுவையை அள்ளி விட்ட சிலப் பதிவுகள் உங்களுக்காக
அவள் விகடன் பதிப்பித்தஅவன் விகடன்

தான் காரோட்டியக் கதையை நகைச்சுவையாய் கூறிய ஆத்தா நான் பாசாயிட்டேன்

மற்றும் இவரது ஒண்ணரைப் பக்க துக்ளக், கொள்கை டிராக்கர் போன்ற அரசியல் நையாண்டி பதிவுகளும் படிக்க படிக்க சிரிப்பை அள்ளித் தெளிப்பவை.

இவர் சினிமா தயாரித்தப் பதிவுகளும் வெகுப் பிரபலம்... ஆமாங்க ஷங்கருக்கு முன்னாடியே சிவாஜி எடுத்தாரு... கஜினின்னு கலக்குனார்....பதிவுலக ஸ்பீல்பெர்க் கணக்கா நம்ம ஆளு அடிச்ச லூட்டிக்கு அளவே இல்லைங்க.

ஒரு போட்டியிலே ஜெயிச்சு கலக்கனவங்க இருக்காங்க.. பாத்திருக்கோம்.. நம்ம ஆளு ஒரு போட்டிக்கு தலைப்பு மட்டும் கொடுத்தேப் பட்டயக் கிளப்புனார்ன்னா பாருங்களேன்

கதை, கவிதை, கட்டுரை, சினிமா விமர்சனம் என நம்ம ஆளு பொளந்துக் கட்டாத ஏரியாவே கிடையாதுங்க.

இவ்வளவு தானா இவர் பதிவுகள்ன்னு கேட்கறவங்களுக்கு... இதெல்லாம் சும்மா ட்ரெயிலர் தான் இந்த மாசம் சங்கத்துல்ல நம்ம ஆளு மெயின் பிக்சரே ஓட்டுவாரு பாருங்க

இந்த மாதம் நம்ம ஆளு பினாத்தல் சுரேஷ் தான் அட்லாஸ் வாலிபர்...

கட்டம் எல்லாம் கட்டி அலங்காரமா வாங்கய்யா வாங்கன்னு வரிசையில்ல நின்னு சங்கத்து மக்கள் எல்லாம் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வழக்கம் போல ஸ்டார்ட் மியூசிக் தான்... ஆப்புகளை அள்ளி அடிங்க... நம்ம ஆளு நின்னு ஆடுவார்..

Wednesday, August 30, 2006

குயி...குயி...குயி...குயிஜு

குயி...குயி...குயி...குயிஜு அப்படின்னே ஒரு 10 பதிவு போட்டு அறிவாளியா காட்டிகிட்ட கைப்புக்காகவே இந்தக் கேள்விகள். இப்படியே குயி...குயி...குயி...குயிஜு ன்னு வெச்சு, எல்லாம் மக்களையும் எவ்வளவு நாள்தான் திசை திருப்பறது. அப்படியே பின்னூட்டம் வேற போட்டு பரிசு கெலிக்கிறார். உம்மையாவே அறிவு ரொம்ப ஜாஸ்தியாகிப்போச்சு நம்ம கைப்புக்கு.

போன முறை சினிமா கேள்விகளை மட்டுமே போட்டு கலாய்த்தது சங்கம். அதுக்கு வரவேற்பு் நல்லா இருக்கவே இந்த முறை விவரமாக வேற வேற துறைகளிலும் சினிமா, வலை உலகம்னு எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்டா அள்ளி விட்டு இருக்கோம். மக்கா, பதிலைக் கண்டுபுடிச்சா அது கைப்பு குடுத்த ட்ரெய்னிங்க்ன்னு நெனச்சுக்குவோம். இல்லைன்னா....கைப்பு திரும்பவும் குயி குயி'ன்னு சொன்னாருன்னா ..ஹூ ஹூம் சொல்ல மாட்டோம் செஞ்சு காட்டுவோம். சரி கேள்விக்கு வருவோம்

கம்ப்யூட்டர்ஜி மக்களுக்கு அந்த கேள்விகளை காட்டுங்க.
டொடொடொயங்க்

1) இடைவேளை எடுத்துக்கொண்டு ரொம்ப நாளாக தன் களப்"பணியை" செய்யாமல் இருந்தவர் இவர். மீண்டும் வந்த பொழுதும் ஒன்றுமே செய்யமுடியாமல் போனதாம். இவர் மட்டைகிளப்பைச் சேர்ந்தவராம். 'திருட்டு' மாம்பழங்கள் என்றால் ரொம்ப இஷ்டமாம். துப்பு- தினமலர்.


2) ஒரு ஊரில் நடந்த வலை மாநாட்டில்(???!!!!) கலந்து கொண்டவர்களில் இருவர் 'சிங்கிள்' எடுத்தவர்கள், ஒருவர் ஒரு 'சிங்கிளும்' ஒரு பவுண்டரியும் அடித்தவர், இன்னொருவர் இரண்டு பவுண்டரிகளை அடித்தவர். பவுண்டரிகளின் "தொல்லைகளே ஆவாது சாமி" என்று அந்த இரண்டு 'சிங்கி'ள்களும் நாட்டை விட்டே பறந்து விட்டார்களாம்.

3) இவர்கள் தவற்றைக்கண்டு 'புயல்' எனப் பாய்ந்து வேட்டையாடியதில் கிடைத்தது இரண்டு இலக்கம் 'சரக்கு'. இந்த கூட்டத்தில் ஒருவன் சிக்கியதால் வந்த வினையே இது. இதுக்கும் ஒரு துப்பு, போலீஸார்.


4) இவர் இவரோட லட்சியத்துக்காக் போராடியவர். இதற்காக ஒரு புரட்சியே நடந்து கொண்டு இருக்கிறது. துப்பு, போராடியவருக்கு நிர்வாகமே எதிரியாம்.


5) பெரிய 'கலக'த்தை உருவாக்கியவர், போனால் போகட்டும் என விட்டுவிட்டது நிர்வாகம். இவர் ரொம்ப நல்லவர்ர்ர்ர்ன்னு சொன்னது ஒரு சாரார்.

6) வலைப்பதிவை சேர்ந்த இவருக்கு ஒரு பெரிய வீடும் 5+ சின்ன வீடுகளும் உள்ளதாம். இதில் ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை, நேரடியாகக் கேட்டால் மனம் திறந்து ஒத்துக்கொள்வாராம். துப்பு- இவர் கண்ணாடி, சால்வை அணிந்த 'சக்கி'.

7) முதலாமவர்(கள்) தனித்தனியாக வலைச் சேவை செய்து தன் பொழப்பை விற்று வந்தார்கள். இரண்டாமவர் ரொம்ப பிரபலமானவர், திடீரென்று பல இடத்தில 'கால்/கை' வைத்து வெற்றி பெற்றவர். இரண்டாமவர் இப்போது முதலாமவரின் துணையோடு இன்னும் பிரபலமாகிறாராம். உள்ளுக்குள் என்ன 'Bond'ஓ ஆண்டவருக்கே வெளிச்சம்.


8) தமிழ்மணத்தில் தனி மனித தாக்குதல் தவறு என்று தெரிந்த பிறகும், அப்படித் தான் செய்வேன் என்று சொல்லும் பதிவர்கள் இவர்கள். என்று தான் திருந்துவார்களோ? சங்கமாவி யுகே யுகே

Friday, August 25, 2006

ஆப்பரேஷன் போலி வரு.வா.சங்கம் - 2

முதல் பகுதியை வாசிக்க இங்கேச் சுட்டவும்

கைப்பு கிளம்பிப் போன பிறகு...

சிபியின் ஆவேசமானத் தோற்றம் கண்டு கலங்கிப் போயிருந்தோம் நால்வரும். தளபதி டக்கென்னு பாக்கெட்டுக்குள் கைவிட்டு கையை மடக்கி மேலேத் தூக்கி காற்றில் நாலைந்து முறை ஆட்டிக் காட்டினார்.

" எதாவது தாயத்து மேட்டரா?" இது நான்.
"ச்சே எல்லா தாயத்தையும் டாலருக்கும் பவுண்டுக்குமா வித்து நல்ல ரேட் பாத்துட்டார்ப்பா.. இப்போ ஸ்டாக் இல்ல அவர்கிட்ட்" இது விவசாயி.

கையைத் திறக்கிறார் உள்ளே சிம்ரன் படம்.

"தள, கட்சி மாறிட்டீயா... சிம்ரன் ஆன்ட்டி போட்டோவைக் காட்டுற.. எங்கே அந்த ..."
பாண்டியின் கதறல் முடியும் முன், சிபி க்ரீஷ் படத்தில் வரும் ஹிரித்திக ரோஷன் மாதிரி சரக்புரக்கென என்ன என்னமோ வித்தைக் காட்ட கொஞ்ச செகண்டுக்குள் அவர் கோலம் மாறுகிறது.. கருப்பு கோடு கருப்பு பேண்ட் கருப்பு தொப்பி கருப்பு கண்ணாடி கையிலே கருப்பு செல்போன்.. அதுல்ல கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு ரிங் டோன்...

பேக் கிரவுண்டில் ஸ்பானீஷ் பாடல் ஒன்று படு ஸ்டைலா ஒலிக்க... ருமுக்குள்ளே குறுக்கும் நெடுக்கும் முப்பது தடவை நடந்தார் தள.

"சிக்கிட்டோம் இனி சிதறாம போறது சிரமம்" இது புலிக்குட்டி சிவாவின் பம்மல் பஞ்ச்.

சிம்ரன் படத்துக்குப் பின்னாடி இருந்தது ஒரு உணவகத்தின் விசிட்டீங் கார்ட். அந்தக் கடையின் நம்பருக்கு சிபி போனைப் போட்டார்.

"ஹலோ ... சிம்ரன் ஆப்பக் கடையா....?"

என்னாது கொய்யாலேலே..... திறந்த வாய் மூடாமல் மற்ற நால்வரும் பீதியில் பிளிறினோம். தளபதி எதையும் கண்டுகொள்ளவில்லை

"ஹலோ..ஹல்ல்லோ... நான் வ.வா.சங்கம் தளபதி கலாயத்தல் திலகம் ஜாலித் தம்பி அண்ணன் சிம்பு.. சீ சிபி.. பேசுறேன்.. " என்று ஏற்ற இறக்கத்தோடு பேசினார்.

"நான் எதோ விதைச்சது விளைஞ்சது.. வித்தது.. விலைப் போகாததுன்னு ஒரு ஓரமா உக்காந்துப் பதிவுப் போட்டுகிட்டு இருக்கேன் என்னிய் சங்கம் அது இதுன்னு கூட்டிட்டு வந்து பங்கம் பண்ணிட்டீங்களே பாவி மக்கா" இது விவசாயி.

"நான் பாட்டுக்கு அத்து வானக் காட்டுல்ல கிடைச்ச பாகிஸ்தான் நாட்டு பிகர்களைப் படம் புடிச்சுப் பாண்டிக்கு அனுப்பி எதாவது ஆகுமாப் பார்ன்னு விசாரிக்க வந்த இடத்துல்ல சங்கம்.. நீ எல்லாம் சிங்கம் சொல்லி மந்தரிச்சு மஞ்சத் தண்ணீ ஊத்தி இப்படிக் கிடத்திப் புட்டியளே மக்கா.. சங்கத்துல்ல சுனாமி வர.. வந்து எல்லாத்தையும் சுருட்டிகிட்டு போக.." புலிக்குட்டி சிவா கண்ணீரில் நனைய...

பாண்டியும் நானும் அங்கிட்டு இருந்து தப்பிக்க எதாவது வழி கிடைக்குமான்னு சுத்தும் முத்தும் பார்த்துகிட்டு இருந்தோம்..

"தேவண்ணே... இவங்க இப்படி பொலம்பியே நம்ம கழுத்தை அறுத்துருவாய்ங்கப் போலிருக்கு... நான் வேணும்ன்னா டைம் பாஸ்க்கு நான் சாட்டிங்க்ல்ல கரெக்ட் பண்ண ஒரு ஆன்ட்டி நம்பர் போட்டு தர்றேன் கொஞ்சம் நேரம் கச்சேரி பண்றீங்களா"

"ஏலே பாண்டி நாங்க விவரம்டீ.. நீ இப்படித் தான் போனத் தடவை.. நயந்தாராவுக்கு நமபர் போட்டுத் தார்ரேன்னு சிபிக்கு அவர் பொண்டாட்டி நம்பரைப் போட்டுக்கொடுக்க.. அவரும் ஒரு பீலிங்க்ல்ல போன்ல்ல நம்ம கவுண்டர் கணக்கா ரொமான்டிக் லுக் எல்லாம் கொடுக்க.. மீதி வரலாரு நாடறியும்... நீ என்னை அத்து விட்டுட்டு இங்கே இருந்து போகவே முடியாது.." பாண்டி கையை இறுக்கிப் பிடிச்சௌ வைச்சுகிட்டேன்.

இந்தக் கேப்பல்ல போன்ல்ல என்னவோ நடந்து இருக்கணும்.. ஒரு வாட்டி தல இப்போ இந்த கிராண்ட் மாஸ்டர் ஷோவுல்ல வருதே ஒரு புள்ள... பேரு கூட காயத்ரி ஜெயராம் ( பெயர் தகவல் உபயம் : நன்றி பாண்டி) அது கிட்ட பேட் வேர்ட்ஸ்ல்ல வாங்கு வாங்குன்னு வாங்கி கட்டுவாரே.. அதே ரியாக்ஷன் சிபி மொகத்துல்ல..

" மே ஐ கம் இன்சைட்" இது நான்.
" ஊ இஸ் தட் டிஸ்டபன்ஸ்" இது விவசாயி..

"நத்திங்.. நான் எல்லாம் பேசிட்டேன்.. ஆப்பக் கடைக்கு அர்த்த ராத்திரியில்ல நம்மளை வரச் சொல்லியிருக்கார். "

"பட் உங்க மொகம் வாடி போயிருக்கு" இது சிவா

" அப்படி தெரியுதா..அது கன்டி நியூஸா வேலைப் பாக்குறேன் இல்ல அதான் வேற ஒன்னும் இல்ல"

"நம்பலாமா?" இது பாண்டி.

" ஒ.கே நம்பலாம் போலி இஸ் மை பெஸ்ட் பிரெண்ட்யா.. நம்புங்க.. போலியும் நானும் ஆர்.எஸ் புரம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல்ல பலத் தடவை ஒண்ணா போளி எல்லாம் சாப்டு இருக்கோம்யா"

"அப்புறம் அர்த்த ராத்திரில்ல மீட்டீங் எதுக்கு?"

'அவ்ர் கொஞ்சம் ஷை டைப் .. நம்புங்க வயசுப் பசங்க பாக்க வர்றீங்க ஒரு சின்ன வெக்கம் இருக்கும்ல்ல" சிபி திடமாய் சொன்னார்.

"அவர்ட்ட எல்லாம் பேசிட்டேன்... இப்போ சங்கத்தைப் பெரிய லெவலுக்குக் கொண்டு போறதுக்கு அவரும் ஓ.கே சொல்லிட்டார்.. அதாவது.. நம்ம சங்கத்துப் பேர்ல்ல ஒரு போலி சங்கம் அவரே ரெடி பண்றேன்னு சொல்லிட்டார்...அவர் வழ்க்கமா அனுப்புற போலி லிஸ்ட்வோட லேட்டஸ் வெர்சன் இன்னிக்கு ரிலீஸாமா.. அதுல்ல கடைசிப் பெயரா நம்ம சங்கமும் வந்துருமாம்.. உறுதி கொடுத்துட்டார்"

"அப்புறம் நாமளும் வலை உலகிலே பெரிய பெரிய ஆளுங்க லெவலுக்கு போயிருவோம்.. இது வரைக்கும் நம்மளை எல்லாம் வெறும் தமாஸ் கூட்டம், மூளைக்கெட்ட பசங்க அப்படி பாக்குற அந்த இமெஜ் அப்படியே மாறிடும்... நம்ம தல கைப்புவை இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் நம்ம வலை உலக மக்கள் எல்லாரும் ஒரு ஆல்பர்ட் அயன்ஸ்டீனோட மறுபிறப்பாப் பாப்பாங்க அது உறுதி.

"இந்தா நம்ம இளா ஒரு அரிஸ்டாட்டில்.. நம்ம தேவு ஒரு ஷேக்ஸ்பியர்...சிவா ஒரு ப்ளூட்டோ...

"தள.. அது பிளேட்டோ.. ப்ளூட்டோ.. டிஸ்னி காமிக்ஸ்ல்ல வர்ற நாயி ண்ணே" இது சிவா

"ம்ம் அது அதே தான் நீயு"

"தள ..என்னிய விட்டுட்டீங்களே.. நானு" இது பாசக்கார பாண்டி.

" நீ எல்லாம் லியோ டால்ஸ்டாய் லெவலுக்கு போயிருவ..நாம் எழுதறது எல்லாம் எங்கியோப் போகும்.. நமக்கு இனிமே இந்த தமிழ்மணம் மக்கள்ஸ் சப்போர்ட் வேணாம்.. இங்கிலீஷ் மணம், பிரெஞ்ச் மணம், ஜெர்மன் மணம், ஜப்பான் மணம்ன்னு பிக் அப் ஆகிப் போயிகிட்டே இருப்போம்ய்யா"

"எங்களுக்கெல்லாம் பதவி கொடுத்துட்டு நீங்க...தள" விவ்சாயின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

"இளா.. அவர் தான் சாக்கு ரெட்ஹில்ஸ்" இது நான்

"அது யார்ப்பா.. ?"

"அவர் நம்ம தள மாதிரி பெரிய மேதைப்பா அவர் ப்ரொப்ல்ல அந்த படம் தான் இருக்கும் நீ பார்த்தது இல்லயா விவசாயி"

"அப்படியா? "

தமிழ்மணம் மற்றும் அதையும் தாண்டி எங்களுக்கு கிடைக்கப் போகும் மாபெரும் பெயர் புகழ் இதையெல்லாம் நினைத்து... லா..லா.லா.லா..... ராகம் போட ஆரம்பிச்சோம். தளபதி சிபியின் திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பதாய் முடிவு செய்தோம்.

ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு எல்லாரும் மொத்தமாய் கிளம்பி ஆப்பக் கடை வாசலை அடைந்தோம்...

"என்ன தள.. கடை அடைச்சு இருக்கு? " பாண்டி கேட்டான்.

"நாம் கொஞசம் லேட்டுன்னு நினைக்கிறேன். சரி தம்பிகளா எல்லாரும் இங்கேயே வெயிட் பண்ணுங்க நான் உள்ளேப் போய் பாத்துட்டு வர்றேன்"
தள எஙக்ள் கையில் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை கொடுத்துவிட்டு உள்ளேப் போனார். போகும் முன்னர்,

"தம்பிகளா.. யாராவது இங்கே என்னப் பண்றீங்கன்னு கேட்டு வந்தா.. அவஙக்ளுக்கு எல்லாம் இந்தப் பிஸ்கெட் கொடுத்து பேசிகிட்டே இருங்க... புரியுதா?.. தள உள்ளே போயிட்டு கரேக்ட்டா வேலையை முடிச்சுட்டு வந்துறேன்...இது டைமிங்.."

அப்படின்னு உள்ளே போனார்.தளபதி உள்ளே போய் ஒரு மணிநேரமாகியும் ஆளைக் காணவில்லை. பசி வேற வயிற்றைக் கிள்ளியது. பின்னூட்ட மார்க் பிஸ்கெட்க்களைப் பிரித்து நாங்களே அந்தப் பிஸ்கெட்டுக்களைச் சாப்பிட ஆரம்பித்தோம்.

"இது தப்பில்லயா அடுத்தவங்களுக்குக் கொடுக்க வச்சிருக்க பிஸ்கொத்தெல்லாம் நாமளே சாப்பிடக்கூடாது" பாண்டி பாவமாய் கேட்க

"நோ இது தப்பே இல்ல... இது பத்தி சுஜாதாக் கூட 2002ல்ல.." என ஆரம்பித்த இளாவுக்கு ரெண்டு பிஸ்கெட் எக்ஸ்ட்ரா கொடுத்து அமைதிப்படுத்தினோம்.

"என்னய்யா, பூராப் பிஸ்கோத்தும் காலியாடுச்சு இன்னும் தளபதியே காணும்... " சிவா எச்சரிக்கை மணி அடிக்க

நாங்கள் பீதி அடைய ஆரம்பித்தோம்....அதே சமயம் ஆப்பக் கடை கிரைண்டர்கள் அலறிப் புடைத்து ஓட ஆரம்பித்தன....

ஆத்தாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீ.. என்ற பயங்கரப் பேரிரைச்சலோடு ஒரு கொரல் எங்கள் ரத்தததையே நிறுத்துவதுப் போல் கேட்டது.

"இது நம்ம தலக் கைப்பு கொரல் இல்ல்.. தல எப்போ எப்படி இங்கே வந்தார்...."

அதிர்ச்சியில் நாங்கள் நடுங்கி நின்றோம்....


தொடரும்

Wednesday, August 23, 2006

மனோகரா

திருக்குரல்'ன்னா பி.சுசீலா, எஸ்.ஜானகி குரல் மாதிரி ஸ்வீட்டா இருக்குமா....?

---

நடந்து முடிஞ்ச கல்யாணத்துக்கு இப்ப ஏன்ன் சார்ர்ர் மோளம் அடிக்கர்ரீங்க...?

---

ஞானப்பழம் சாப்பிட்டா, ஞானம் வரும்ன்னா, புளியம்பழம் சாப்பிட்ட புளி வருமா..?

---

திருக்குரளை எழுதினது யாரு?
நம்ம பெயிண்டர் மணி சார்..

---

ட்ரெயினுக்கு நேரமாச்சு நான் கிளம்பரேன்..
ட்ரெயினுக்கு நேரமானா, ட்ரெயின் தான கிளம்பனும், நீ ஏன் போற..?

---

ஈ.பி.கோ.. ஈ.பி.கோ'ன்னு சொல்றீங்களே, அங்கயும் வசந்த் அன் கோ'வில கிடைக்கிற மாதிரி டீ.வி, ப்ரிட்ஜ் எல்ல்லாம் கிடைக்குமா..?

---

இந்த மாதிரி எல்லாம் பேசுனா அப்புறம் நான் பெனால்ட்டீ குடுத்திடுவேன்..
குடுங்க குடுங்க.. அப்படியே கொஞ்சம் சக்கரை ஜாஸ்த்தியா போட்டு குடுங்க..

---

நரசிம்மாவா? அது ப்ரிபெயிட் சிம்மா இல்லை போஸ்ட் பெயிட் சிம்மா??

---

கவிதை எழுத தெரியாது, சாக்ஸஃபோன் வாசிக்க தெரியாது, உனக்கு என்னதான் தெரியும்?
தூர இருக்கிற நிலாவை தெரியும், கண்ணை கட்டி விட்டாலும் கரெக்ட்டா வைன்ஷாப் போக தெரியும்.. அப்புறம்... உங்க அப்பா வச்சிருக்கிற ஆன்ட்டிய தெரியும்.

---

ஹெலிகாப்டர்க்கு ஏன் வெளியில ஃபேன் வச்சிருக்காங்க, உள்ளார வச்சிருந்தா குளு குளுன்னு போலாமில்ல..

---

டேய் தல'க்கு ஒரு டீ போடு
தலைக்கு ஷாம்பூ தான போடுவாங்க, நீ எதுக்கு டீ போட சொல்ற?

---

டேய் டைம் என்னாச்சு?
உன்கையில தான் வாட்ச் கட்டியிருக்கில்ல
அது ஓடலை, அதான் உன்னை கேக்குறேன்..
கட்டி வச்சா எப்படி ஓடும், அவுத்து வுடு அப்பத்தான் ஓடும்..

---

வண்டிய ஏன் தள்ளிட்டு வர்ற, என்ன பிரச்சனை?
காத்து இல்லை..
அந்த ஆலமரத்துக்கு கீழ போயி நில்லு, அங்க நல்ல்லா காத்து வரும்

---

படிச்ச பொண்ணா இருந்துட்டு அய்யோ அய்யோ'ன்னு கத்துறா..
ஏன் படிச்ச பொண்ணா இருந்து அழகப்பா யூனிவர்சிட்டி, அண்ணாமலை யூனிவர்சிட்டி'ன்னு தான் கத்தனுமா??

---

மேல இருக்கிற தெய்வீகவசனங்களோட சொந்தக்காரர்.. நம்ம கைப்புள்ள'க்கு அடுத்தாப்படியா, நம்மள அவரோட ஒவ்வொரு அசைவுக்கு சிரிக்க வைக்கிற கில்லாடி.. திருவாளர். 'சொட்டை'மனோகர்..


விஜய் டீ.வி'யில லொல்லு சபா பார்க்கரீங்க இல்ல, முன்னயெல்லாம் புதங்கிழம ராத்திரி ஒம்போதுமணிக்குங்கோ'ன்னு சொல்லிட்டிருந்தாங்க இப்ப அது வெள்ளிக்கிழம ராத்திரி ஒம்போது மணிக்குங்கோ'வா மாறியிருக்கு...

இணையத்துல லொல்லுசபா

கவுண்டர் பத்தி ஒரு ஒன்லைனர் பதிவு போட்டது நல்லாயிருக்குன்னு சொன்னீங்களா.. அதுதான் மறுபடியும் அதே மாதிரி பதிவு.. ஹி..ஹீ.

Tuesday, August 22, 2006

உதயமாகிறது கிசுகிசு சங்கம்

ஷெர்லாக் ஹோம்ஸ்'னு ஒரு உப்பு சப்பிலாத மேட்டருக்கு ஒரு மொக்க படத்த உத்து பார்க்க வெச்சவுரு Dr. நமது கைப்பு. இது வேற மாதிரி.. ஜூட்

1)மருத்துவரும் கட்டிட காண்டிராக்டரும் இணைந்து அமானுஷ சக்திகளை எதிர்த்து போராடுகிறார்களாம். வெற்றி நிச்சயமாம், இதற்கு பிண்ணனியில் இருப்பது ரா.ரா வாம்.

2) ரே'னாவுக்கும், கீ'னாவுக்கு கடுக்காக் குடுத்த பி'னா சு'னாவிடம் வகையாக மாட்டிக்கொண்டார். ர.மா'னா வந்துதான் முடித்துவைப்பாரே?

3) வைகைக்காரருக்கும் சென்னைக்காரருக்கும் நடுவில் சிக்கிக் கிடக்கிறதாம் திரி. கொளுத்தப்போவது யாரு?

4) அடக்க ஒடுக்கமாய் இருப்பாராம், அழகிய பெண்கள் மயங்கி இவர் பின்னால் போகிறார்களாம், தப்புகள் செஞ்சா பிடிக்காதாம் நெருப்பென பாய்வாராம். கடைசியில, இது எங்கே போய் முடியுமோ சங்கரா, சங்கரா...

5) புத்தரின் மறுபெயர் கொண்டவருக்கும், மரம் நட்ட சாம்ராட்டுக்கும் நடுவில் உறவுப் பிரச்சினையாம், நட்சத்திர மணியானவருக்கே எல்லாம் வெளிச்சம்.

6) கலகலப்பு கோஷ்டி ஊரு விட்டு ஊருவந்து, இருக்கிற ஒரு டப்பா மேட்டரை உருட்டிகிட்டு, பண்ணும் அழிச்சாட்டியம் தாங்க முடிய வில்லையாம். அட்வஸ் பண்ணியும் கேட்கலையாம். சந்திரனின் சூழ்ச்சி வெற்றி பெருமா?

7) பாலைவன ஊரில் இருக்கும் அவருக்கும், குளு குளு ஊர் பொண்ணுக்கும் இடையில் காதலாம். அஞ்சல்கள் பறக்கும் அவசரத்தைப் பார்த்தால் அடுத்தது என்ன? குள்ளப் புலவர் சொன்ன கதை இது.

8) கிராமத்து ராசா, தோகையப் பார்த்து மயங்கி நின்னாராம், இது வயசுக்கோளாராம். . என்னாத்த சொல்ல.

9) ஆனை மாதிரி செலவு, படகுல சவாரி, பொன்னும் பொருளும் புதைஞ்சு இல்லே கிடக்கு. ரகசியம் தேடிப் போயிருக்காம் ஒரு கும்பல்

10) ஆட்டோவும் இருக்கு, ஆஸிடும் இருக்கும், எதையும் எதிர்த்து ஜெயிக்க துணிவும் இவருக்கு இருக்கு. பட்டைய கிளப்புவாரா?

Disc: இந்தப்பதிவு வழக்கம் போல யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை. தனிமனித தாக்குதலும் இல்லை.

பதில் தெரிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்
நன்றி: விசாரணை குழு தலைவர் தேவ், மற்றும் உறுப்பினர்கள்

Friday, August 18, 2006

ஆப்பரேஷன் போலி வரு.வா.சஙகம்.

ஹல்லோ கைப்புள்ள காலிங்.....

குரல் கேட்டதும் வரப்பில் இடறி விழுகிறார் விவசாயி. பிதற்றலானந்தா ஆசிரமத் திண்ணையில் கலாய்ததலின் நடுவே கதறி எழுகிறார் தளபதி சிபி. பேட்டையில் லொள்ளு அன்ட் ஜொள்ளு எல்லாத்தையும் நிறுத்திட்டு எள்ளென ஆஜரானார் பாண்டி. எதோ சொல்கிறேன்... என்னத்தா நான் சொல்ல எனப் பேச்சைக் குறைத்து புலிக்குட்டி சிவா தலக் குரலுக்கு பணிவாய் பம்மி நிற்கிறார். கச்சேரி மைக் செட்டிலும் தலக் கொரலு காந்தமா ஒலிக்க நானும் வெலவெலத்து நின்னேன்.

" என்னப் பண்றீங்க...அவன் அவன் ஆட்டோ வச்சு அவன் அவன் தலைவனுக்கு ஆப்பை ஆப் ரேட்ல்ல வாங்கி அனுப்பிகிட்டு இருக்கான் இங்கே என்னன்னா அம்புட்டு பயலும் அமுக்கிட்டு ஆளுக்கொரு பக்கம் சிங்கம்லேன்னு சீட்டியடிச்சுகிட்டுத் திரியறீங்களா.. என் சினத்தைச் சுண்டி இழுக்குறீங்க.. இனி சிக்கி சிதற போறீங்க ஆமா"

"ஆமா தல கைப்பொண்ணு கிளம்புனப் போது கூட இப்படி ஆவேசமா ஆகல்லியே.. இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி அவர் வேட்டி அவுந்து விழுறதுக் கூடத் தெரியாமா அவிஞ்சுப் போய் அலறிகிட்டு இருக்கார்"
தளபதி சிபி தலைமையில் மற்ற ஐவரும் ஒரே மாதிரி யோசித்தாலும் யாரும் வாய் திறக்கவில்லை

"நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலையைப் பார்த்துகிட்டு இருந்தேன்.. என்னியக் கூட்டிட்டு வந்து சங்கம் தங்கம்.. கவுரவம் கிராதகம்ன்னு சொல்லி மொத்தச் சோலியையும் முடிக்கத் தான் அம்புட்டுப் பயலும் திட்டம் போட்டுருக்கீங்காது எனக்குத் தெரிஞ்சுப் போச்சுறா.. தெரிஞ்சுப்போச்சு.. முழிக்கற முழியப் பாரு.. அப்ரசெட்டுக்களா"

"தல.. அது அப்ரசட்டு இல்ல.. அப்பரண்டிஸ்.. A..PP.." என்று விவசாயி மகா சிரத்தையோட திருத்த முயல...

"என்ன கிண்டலா.. நான் என்னப் பரீட்சைக்காப் போயிகிட்டு இருக்கேன் பாடம் நடத்திகிட்டு இருக்க..என்னியக் கேக்காம கொள்ளமா தமிழ் சங்கம் ஆரம்பிச்சவன் தானே நீயு"

"தல என்ன கோவம்.. எதுக்கு டென்சன்.." நான் தலயைக் கூல் பண்ண முயற்சிக்க

"கொந்தளிச்சுப் போயிருக்கேன்.. கோபத்தைக் கொப்பளிக்கறதுக்கு முன்னாடி உன் கச்சேரிய நிறுத்தி வை... ஆமா பின்னூட்டம் போட மாட்டீயா நீ... தனிக் கச்சேரி பண்றியா நீ...கண்ணு முழியெல்லாம் குதறிடுவேன் ராஸ்கல்... ஒழுங்காப் போய் சங்கத்துப் பக்கத்துக்கெல்லாம் பின்னூட்டம் போட்டுத் தேவையில்லாம தலக்கு வர்ர ஆப்பு அம்புட்டையும் தடுத்து நிறுத்துப் போ"

"அடேய் அப்ரசட்டுகளா.. அம்புட்டு பேரும் எங்கேடாப் போறீங்க?"
" தேவையில்லாத ஆப்பை எல்லாம் தடுத்து நிறுத்த"
"அதெல்லாம் வேண்டாம் இங்கே வாங்க"
என்னையும் கூப்பிடுறாருன்னு பாசத்தோட நானும் திரும்பி வர...
" ஏய்.. கச்சேரி. அபரச்ட்டு நீ எங்கே திரும்பி வர்ற?"
" அதான் ஆப்பை எல்லாம் தடுக்க வேணாம்ன்னு நீங்கத் தானே சொன்னீங்க"
" அது அவங்களைச் சொன்னேன்.. நீ போய் தேவை இல்லாத அம்புட்டு ஆப்பையும் தடுத்து நிறுத்து.. போ"
'எனக்கு ஒரு சின்ன டவுட் தல... தேவையான ஆப்பு எது தேவை இல்லாத ஆப்பு எதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது?"
"அடேய் அப்ரசட்டு நீ தடுக்குர ஆப்பு அம்புட்டும் தேவை இல்லாத ஆப்பு தான் போதுமா... போய் கொடுத்த வேலையை ஒழுங்காச் செய்.. நல்லா இழுத்து வச்சு லந்து அடிக்கிறாங்க ராஸ்கல்ஸ்"
பாண்டி பதறி பம்முகிறார்.

"ஓங்களுக்கெல்லாம் நல்லாச் சொல்லுறேன் கேட்டுக்கங்க..சங்கத்து மேலக் கடன் சொல்லித் தான் நான் கேமரா வாங்கி படம் புடிச்சுட்டுத் திரியற உண்மையை அந்த கிசுகிசு குரூப் கண்டுபிடிச்சுச் சொல்லுரதுக்குள்ளே சங்கத்து நிதி நிலைமைச் சரியாகணும்... என்னப் பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது.. பின்னூட்ட எண்ணிக்கை அதிரடியா ஏறணும் ஆமா"

"ஆமாத் த்ல சங்கத்து மேல இருக்க கடனுக்கும் பின்னூட்ட எண்ணிக்கைக்கும் என்ன சம்பந்தம்.."
"கேள்வி எல்லாம் வேறக் கேக்குறீங்களா... அதெல்லாம் ஒரு கணக்கு உங்களூக்குப் புரியாது..."
"அப்படி என்ன கணக்கு?"
"மெதுவாப் பேசுங்கய்யா.. அடி வயிறு கலங்குது... சங்கத்துல்ல கணக்குக் கேட்டாயங்களாம் கிசுகிசுப் போட்டுறப் போறாயங்க"

"சரி... மெதுவாகக் கேக்குறோம் சொல்லுத் தல"

"ம்ம்ம் ஐ.நா. சபையிலே வருததப்படாம வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் திட்டம்ன்னு ஒண்ணு இருக்காம்.. மேலே தம்பி புலிக்குட்டி சொல்லும் கேளூ"

"அதாவது நம்ம கைப்பு மாதிரி மாமாபெரும் தலயின் தலைமையில் முடிச்சவிக்கி வேலையெல்லாம் செய்து மொள்ளமாரி ..."

"போதும் நிப்பாட்டு.. நான் புலிக்கேசி இல்ல.. கைப்பு...உஷார் நாங்க.. நாங்களே சொல்லுவோம்"
புலிக்குட்டி பதுங்கி நிற்க.. கைப்பு தொடர்கிறார்.

"அது பெருசா ஒண்ணும் இல்ல.. ஒரு பின்னூட்டத்துக்கு 100 டாலர் விதம் கடன் கொடுத்துட்டு இருந்தாயங்க... நானும் பணம் வருதுன்னு கையிலே கேம்ரா எடுத்துட்டு லேடிஸ் ஓணான்.. லேடிஸ் பல்லி, லேடீஸ் ஒட்டகம்ன்னு ஜாலியாச் சங்கத்துப் பக்கமே வராமப் படம் பட்மாஎடுத்துகிட்டுத் திரிஞ்சேன்... தீடிரென்னு நேத்து சனிவால்ல இருந்து போன்... "

"தல அது ஜெனீவா"

"எங்களுக்கும் தெரியும்.. நீங்கப் பொ... "
"தலலலல...."
"போதும் நிறுத்துன்னு சொல்ல வந்தேன்.. அதுக்குள்ளே ஏன்ய்யா அலறி உயிரை வாங்குற ஸ்ப்பப்பா"
தலக்கு மூச்சு வாங்குகிறது.

"இப்போ உன் சங்கம் போற போக்குக்கு உனக்கு டாலர் எல்லாம் தர முடியாது.. வேணும்ன்னா வடபழனி கோயில் வாசல்ல விக்குற டாலர் தான் கிடைக்கும்ன்னு ஏகப் பேச்சு பேசிட்டான்..."

இப்போ எங்களுக்கு எல்லாம் விளங்கியது,

"ஆகாப் பின்னூட்டக் கயமைத்தனம் இது தானா.. நான் கூட வேற என்னமோன்னு இல்ல நினைச்சேன்" தளபதி சிபி

"ம்ம்.. நீ ரொம்ப நல்லவன்னு நம்பி இல்ல இருந்தேன்" பாண்டி

"ஆகா... தல கிளம்பிட்டய்யா.. எங்களைச் சிக்கி வச்சிட்டு கிளம்பிட்ட" இது புலிக்குட்டி சிவா

"ஆக மொத்ததுல்ல எங்களை வச்சுக் காமெடி கீமெடி எல்லாம் பண்ணி இருக்க நீயு" இது விவ்சாயி.

நான் கடனேன்னு கொல்லைப் பக்கம் நின்னு வர்ற ஆப்பை எல்லாம் தடுத்துகிட்டு நிக்குறேன்.

கால் கட் ஆகிறது...

தலயின் ஆவேச மிரட்டலால் மிரண்டுப் போன சங்கத்து மக்கள்.. வளைகுடா முதல் வால்பாறை வரையிலான அனைத்துக் கிளைகளுக்கும் தகவல் கொடுத்தப் படி இருந்தனர்.

என்னப் பண்ணா தலயின் புகழை மேலும் பெருக்கலாம்.. பின்னூட்டக் கயமைத்தனம் மீது விசாரணைக் கமிஷன்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அந்த விபரீதத் திட்டத்தை தளபதி சிபி தன் விழிகள் விரிய சொன்னார்..

அஞ்சுப் பேரும் அல்லு தெறிக்க அம்புட்டும் நடுங்க சிபியைப் பார்த்தோம்...
வேற வழியே இல்ல.. தல புகழை வளர்க்கவும்... முக்கியமாச் சங்கத்துல்ல நம்ம பதவிகளைக் காப்பாத்தவும் இதைப் பண்ணியே தீரணும்...

பாண்டியின் பிஞ்சுக் கண்களில் மழையென கண்ணீர் பீடியில் பொங்கி கிளம்ப...

என் இனமடா நீ என அவனை நான் இறுக கட்டிப் பிடிக்க, என்னையும் தாண்டி மெகா சவுண்டில் அதே டயலாக்கைச் சொல்லிப் பாண்டியைக் கட்டிப் பிடித்தார்.

தள்பபதி... வாக்கு.. சே .. நாக்கு எல்லாம் தள்ளுது.. இது நமக்கு வேணுமா? வேற எதாவது யோசிப்போமே " புலிக்குட்டி வாலை சுருட்டி வாய்க்குள் விட்டுக் கொண்டு வேண்டுகோள் வைக்க...

தளபதி சிபி மேலும் உறுதியான குரலில் சொன்னார்...
இதை நாம் செய்து தான் தீரணும்.. நம்ம வீரத்திருமகன் தலக் கைப்புக்கு நாம் காட்டுற விசுவாசம் உண்மைன்னா இதை நாமே செய்தே தீரணூம்...

சஙக்த்துக்குப் பலகையில் பெரிய எழுத்துக்களில் அழுத்தமாய் எழுதினார்

ஆப்பரேஷன் போலி வரு.வா.சஙகம்.

நாங்கள் ஐவர் மட்டுமன்றி இந்த தகவலை விடியோ கான்பிரஸ்ல்ல பார்த்துக் கொண்டிருந்த மொததச் சங்கக் கிளை நிர்வாகிகளும் கதி கலங்கி வாய் அடைத்துப் போயினர்...

தொடரும்

Thursday, August 17, 2006

சங்கம் - கவிதைப் போட்டி- 1

இந்தச் சங்கத்துக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு நீங்க கேட்டா அதுல தப்பே இல்லை. ஆனா இருக்குன்னு தான் நாங்க பதில் சொல்லுவோம். எதுக்கு தமிழ்ச்சங்கம் அப்படின்னு ஆரம்பிச்சீங்கன்னு ஒருத்தர் தனி மடல்ல என்னையை ரின் சோப்பு இல்லாமையே துவைச்சு தொங்கப் போட்டுட்டாரு. உங்களுக்கு பொதுவுல பதில் சொல்றேன்னு அப்போ தப்பிச்சிகிட்டேன். தமிழ்நாட்டுக்கு அப்பால் இருக்கிற மக்கள் தமிழ்
பேச வாய்ப்பு கம்மியானாலும் தமிழ் மேல ஒரு அக்கறை ஈடுபாடு வந்துரும். இதைப் பொய்'ன்னு சொல்றவங்க கையை தூக்கலாம்.

சரி, போட்டிக்கான் விஷயத்துக்கு வருவோம். இது ஒரு கவிதைப் போட்டி. இது எங்கள் முதல் முயற்சி. உங்கள் ஆதரவைப் பொறுத்து தொடர்ச்சியா போட்டிகளை நடத்த நாங்கள் முடிவு செய்து உள்ளோம்.

* போட்டிக்கான தலைப்பு "இன்னும் இருக்கிறது ஆகாயம்"

* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)

* படைப்புகளை அனுப்ப - மின்னஞ்சல - kavithai.tsangam@gmail.com



இனி விதிமுறைகள்
1. கவிதைகள் மட்டுமே. ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, எப்படி வேணுமின்னாலும் இருக்கலாம்
2. 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. ஆங்கில வார்த்தை கலவாமல் இருத்தல் நல்லது
4. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.
5. படைப்புகளை எங்களுக்கு யுனிகோட் எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் தனி மடலிடல் வேண்டும். தனி மடலில் உங்கள் வலைப்பதிவு முகவரி இருத்தல் அவசியம்.(ஆங்கிலத்தில் இருப்பினும் யுனிகோட்டில மாற்றிக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்கவும்)
7. உங்கள் படைப்பினை தமிழ்ச் சங்கத்தில் தனிப்பதிவாக வெளியிடப்படும்.
8. ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது.
9: போட்டிக்கான முடிவுகள் பிறகு அறிவிக்கப்படும்.
10. 'போட்டிக்கான நடுவர் கவிதைக்கு கௌரவம் தந்த மிகப் பெரிய கவிஞர். அவர் யார் என்பது அடுத்த அறிவிப்பில்!'
11. போட்டிக்கான படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31-Aug-2006 (நள்ளிரவு 23:30-IST)

Wednesday, August 16, 2006

ஒன் - லைனர்ஸ்

நம்ம கூட்டாளிக ஒரு இடத்துல கூட்டமா சேர்ந்தா அந்த இடத்துல கேட்க கிடைக்கிற சில 'ஒன்-லைனர்'கள இங்க உங்களுக்காக தொகுத்து குடுத்திருக்கேன்.. நீங்களும் படிச்சு (நினைச்சு) ரசிங்க.


ஹ.. ஹா. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

---

(வாட் டூ யூ வான்ட் சார்?)
பீஸ் ஆஃப் மைன்ட்..

---

டேய்.. வந்ததே ராங்கு, இதுல என்னடா சாங்கு..?

---

ஹூ ஈஸ் த்தட் ட்டிஸ்ட்டபன்ஸ்..?

---

என்னடா சிரிப்பு அது, கரடி கக்கூஸ் போற மாதிரி..?

---

உங்க தம்பி நல்லவ்ருங்கோ.. வல்லவருங்கோ. தங்கம்ங்கோ.. கோல்டுங்கோ.. டையமன்டுங்கோ..

---

போதும்டா சாமி.. ரீல் அந்து போச்சு..

---

ஹை.. எகுறுங்கோ.. ஆஹா எகுறுதுங்கோ.. மச்சானுக்கு எகுறுதுங்கோ..

--

ஓ.. இனி இதுல டான்ஸ் வேற ஆடசொல்லுவாங்க போல இருக்குதுப்பா..

--

இஸ்தலக்கடி லோலா சுந்தரி அஸ்தலக்கடி கோல கொப்புற கொய்யா

--

இதுக்கு பேரு தான் மேண்டில்.. இது தான் ப்பளீர்ர்னு எரியும்..

--

அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்ட் எடுக்கறதுல வல்லவரு

--

அண்டடாயர் கணக்கு பார்க்கரீங்க, டண்டடாயர்டண்டடாயர்ன்னு..

--

நாலு வூடு வாங்கி திங்கற நாயிக்கு, லொல்லப்பாரு,
எகத்தாளத்தப்பாரு,
பழமையப்பாரு,
வந்தன்னா குறுக்கெட்டி முதிச்சுபொடுவேன்

--

மாப்பி.. யூ கோ, ஐ கம்மிங்

--

மை நேம்? குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டர்ட், அவ்வையார் ஆரம்ப்ப பாட சாலை..

--

அதாவது, கழுதை மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு எல்லாருக்கு பொறாமை
(அக்காங்ண்ணே)

--

கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்குதாங்கிறது தான்டா நமக்கு முக்கியம்

--

டேய், பழம் பழுக்கலைன்னாலும் இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா புகை போட்டு பழுக்க வைப்பான்டா

--

எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா, எல்லாம் இருக்கு

--

இது உலக மகா நடிப்புடா சாமியோவ்..

--

அட்றா.. அட்றா.. அட்றா சக்கை

--

நோ'ப்பா. ப்ரூஸ்லீ மை ஃப்ரண்ட், அவர் டெத்துக்கு அப்புறம், எனக்கு இந்த கராத்தே எல்லாம் புடிக்கறதில்ல

--

காந்தகண்ணழகி.. தோ இங்க ப்பூசு, சைட்ல பூசு, பேக்..

--
ஸ்டார்ட்ட் மீசிக்..

--

சங்கூதுற வயசுல சங்ங்க்கீதா..

--

ரிஜக்ட்டட்..

--

இங்க சந்த்ரு சந்த்ரூன்னு ஒரு மானஸ்த்தன் இருந்தான்..

--

என்னை பார்த்து எப்படிர்றா அந்த கேள்விய கேட்ட..? ம்ம்.. என்னைய பார்த்து..?

--

முப்பது ருவா முழுசா குடுத்தா, நான் மூணு நாலு கண்ணு முழிச்சு வேலை செய்வன்டா

--

எட்டணா போட வக்கில்லாத நாயி.. லா பேசுது பாத்தியா

--

செய்யிறதயும் செஞ்சுட்டு, திருவிழாவுல காணாம போன புள்ள மாதிரி முழிக்கறதப்பாரு

--

டேய்.. நீ எந்தந்த நேரத்துல் எந்தஎந்த டைப்புல மூஞ்சிய மாத்துவேங்கிறதெல்லாம் எனக்கு தெரியும்டா

--

ஓ.. லுக் தேர்.. சவுத் இண்டியன் டயானா

--

குட்மார்னிங் ஆப்பீசர். ச்சரீங்க ஆப்பீசர்

--

யோவ் தாடி, முதல்ல வாயுல கைய விட்டு வாந்தி எடுய்யா, உன் தொல்லை தாங்க முடியல..

--

சாகும் போது கூட அடுத்தவனுக்கு தொந்திரவு குடுக்காம சாகமாட்டானுகப்பா இவனுக

--

அண்டப்புளுகு ஆகாச்ப்புளுகு கேள்விப்பட்டிருக்கேன்.. இது உலகமகாப்புளுகுடா சாமி

--

டேய், பொள்ளாச்சி சந்தையில, அத்தனை ஊர்கவுண்டனுகளுக்கும் டேக்கா குடுத்துட்டு, கலெக்டர் மச்சான்னு பொய் சொல்லி, கவர்மென்ட் கார்லயே மெட்ராஸ் வந்தவன்டா நான்.. எங்கிட்டயே உன் டகால்டி வேலைய காட்டுற பாத்தியா

--

நாட்டுல இந்த தொழிலதிபர்க தொந்திரவு தாங்க முடியலைடா சாமீ.. புண்ணாக்கு விக்கறவன், குண்டூசி விக்கவரவன் எல்லாம் தொழிலதிபர்ங்கிறானுக


---

மொத்தத்தையும் படிச்சதுக்கப்புறம் நம்ம கூட்டாளிகள பத்தி ஒரு தெளிவான அயிப்பராயத்துக்கு வந்திருப்பீங்கன்னு நம்பறேன்.. :)


(சும்மா ஒரு அவசர உப்புமா பதிவு.. கண்டுக்காதீங்க..)

கோவியாரின் நாடக சபா - பாகம் 2

பாகம் 1

காட்சி 3 :

எனக்கு வேணும் ... எனக்கு வேணும் ... ஆசை .. ஆசை ஆயாக்கட ஆப்பம் பாயாமேல ஆசப்பட்டு ... இங்கிட்டு வந்து மாட்டிக்கிட்டேனே ... அவ்வ்வ் .. சுத்தி நின்னு அடிக்கிற மாறியே இருக்கே ... இன்னிக்கு பிளாஸ்திரி தான் .... ஐயோ ... இந்த நேரம் பார்த்து சிவாவைக் காணும்... சொக்கா .... நானே சொக்காவை கிழிச்சிக்கறத்துக்குள்ள வந்துடய்யா என் ராசா... ! அவன் இல்லை வரமாட்டான் நம்பாதே ... அவ்வ்வ்வ்வ்வ் !

ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ங்,
மறுபடியும் சிவா சின்னப்பிள்ளையின் முன் தோன்றுகிறார்
சின்னப்பிள்ளை : வா அப்பு ... லொள்ளுதானே ... !
சிவா : அதைவிடும் பரிசு கிடைத்ததா ?
சின்னப்பிள்ளை : எல்லாம் கெடச்சிது ... கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வண்டிக்கு ஆளு அனுப்பாததுதான் குறை ... செத்த பொருத்திருந்தா ... அவனுங்க சொக்காவை கிழிச்சி அனுப்பியிருபானுக ... எம காதக பயலுவ ...!
சிவா : சின்னப்பிள்ளை என்ன உளருகிறீர்
சின்னப்பிள்ளை : உளரலப்பு ... உண்மையைத்தேன் சொல்றேன் ... நீ வடித்ததில் ஜொள் இல்லையாம்
சிவா : என் பாட்டில் ஜொள் இல்லையென்று சொன்னவன் எவன் ?
சின்னப்பிள்ளை : ம் ... ஒனக்கு எகனைக்கு மொகனையா மாத்தி மாத்தி நக்கலா பதில் குடுக்கறத்துக்குன்னே ஒருத்தன் இருக்கான் ...
சிவா : எனக்கு சரிக்கு சரி லொள்ளு பண்ண ஒருவன் இருக்கிறானா எவன் ?
சின்னப்பிள்ளை : பேரு நக்கலாராம்
சிவா : சின்னப்பிள்ளையாரே ... ! என் கூடவாரும் !
சின்னப்பிள்ளை : அப்பு ஆளவிடுவியா ... ஏற்கனவே பசி காதை அடைக்கிது...!
சிவா : இப்ப வருவிரா வரமாட்டிரா ? என்று கோபமாக பார்க்கிறார்.
சின்னப்பிள்ளை மனதுக்குள் ... 'விடமாட்டேங்கிறானே... !வரலைன்ன .. அங்கன ஆவுனுங்க செய்யததை இவன் செஞ்சிடுவானோ' நினைத்து பயந்தபடி
சின்னப்பிள்ளை : ம் விதியாரை விட்டிச்சு ... வர்ரேன் வர்ரேன் ..... ஆப்பு வாங்கனும்னு விதியிருந்தா யாரால மாத்த முடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்.
இருவரும் ஜொள்ளுப் பாண்டியின் அரண்மனையை நோக்கிச் செல்கிறார்கள்

காட்சி 4 :
சிவாவும் சின்னப்பிள்ளையும் உள்ளே நுழைகிறார்கள்
சிவா : என் பாட்டில் ஜொள் இல்லை என்று லொள்ளு பண்ணியவ எவன் ?
ந.நக்கீரர் : அவையடக்கத்துடன் கேட்டால் அதற்குத் தக்க நக்கல் செய்யப்படும்
சிவா : ஓ நக்கல் பேசுகிறவரிடம் நாவடக்கமாக பேசவேண்டும் ? நீர் யார்
ந.நக்கீரர் : நானே நக்கலா ... நானே உமது பாட்டில் லொள் இல்லையென்றேன்

சிவா : ஓ நீர் தான் நக்கல் நக்கீரரா .... ? என் பாட்டில் என்ன ஜொள் இல்லை ?

ந.நக்கீரர் : பாட்டை ஏற்றியவர் நீர் வராமல் யாரோ ஒருவரிடம் கொடுத்தனுப்பியதன் காராணம் ?
சிவா : காரணம் ஆயிரம் இருக்கிறது ... அவற்றை உம்மிடம் சொல்லி ... ஜொள் சங்கதிகளை உம்மிடம் மொத்தமாக விற்க முடியாது ... ஒன்று மட்டும் சொல்கிறேன் ... சரியாக 5 மணிக்கு எத்திராஜ் காலேஜ் வாசலில் ஆஜராகிவிடுவது வழக்கம்... அதுதான் சின்னப் பிள்ளையிடம் கொடுத்து அனுப்பினேன் ... உமக்கு என்ன ஓய் ?

ந.நக்கீரர் : சரி நீர் வடித்த ஜொள் பாடலை பாடிக்காட்டு ஓய் !

சிவா : நன்றாக கேட்டுவிட்டு பிறகு லொள்ளு பேசு ஓய், இதோ கேளும்

காலேஜ் பிகர்கள்,
கட்டிளங் குமரிகள்,
அங்கயற் கன்னிகள்,
மணமான மாதுக்கள்,
பேத்தி கண்ட பாட்டிகள் ... ஏன் ?
அத்தினி, சித்தினி, பத்தினி பெண்களுக்கும்
இன்னும் எத்தனையே
வகை தமிழ் பெண்டிருக்கும்,
நெற்றிப் பொட்டில் வைக்க
ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !

ந.நக்கீரர் : பாடலின் பொருள் ... ?

சிவா : ம் ... புதுக்கவிதை புரியவில்லை என்று சொல்லும் ஒரு புலவரை வைத்திருப்பது ஜொள்ளுப் பாண்டிக்கு வெட்கக்கேடு ! சரி நானே சொல்லிவிடுகிறேன்

தமிழ் பெண்களில் எத்தனை வகை இருந்தாலும், எந்த வயதாக இருந்தாலும் அவர்களின் நெற்றியில் வைக்க ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது ... !

ந.நக்கீரர் : சாந்துப் பொட்டுதான் சிறந்தது என்கிறேன் நான் !

சிவா : எப்படி சரி என்கிறீர்கள் ?

ந.நக்கீரர் : சாந்து பொட்டுதான் நம் பாரம்பரியம், நம் பண்பாடு, நம் கலாச்சாரம்

சிவா : பழம்பெருமை பேசுகிறீர் நக்கலாரே !

ந.நக்கீரர் : உண்மையாகத் தான் சொல்கிறீரா, ஸ்டிக்கர் பொட்டு சிறந்ததென்று ?

சிவா : காலேஜ் பிகர்கள்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்

ந.நக்கீரர் : சத்தியமாக ?

சிவா : ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிகர்கள் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன் ... ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !

சிவா கோபமாகிறார்

சிவா : நக்கலாரே ... நன்றாக என்னைப் பாரும் .. நான் வடித்த பாடலில் ஜொள் இல்லையா ?

ந.நக்கீரர் : நீரே ஜொள்ளுக்கெல்லாம் ஜொள்ளலானாக இருக்கட்டும் ... அரண்மனை காவல் ராஜபாளையம் நாய்களே ... நீர் வடிக்கும் ஜொள்ளைப் பார்த்து தலைகுணிந்தாலும் ... உம் பாட்டில் ஜொள் இல்லை ... ஜொள் இல்லை !

சிவா நக்கலாரை மேலும் கீழும் பார்த்து பிரகாசம் ஆகிறார்

சிவா : ஜொள்ளுபாண்டி மன்னரே ... ! அவையோர்களே ... ! நக்கலாரின் அங்க வஸ்திரத்தைப் பாருங்கள் ... ஆடையைப் பாருங்கள்... அவர் அவைக்கு வரும் முன்னர் இவருடன் வண்டியில் வந்த பிகரின் சாந்து/குங்குமம் இவரது ஆடையில் ஒட்டியிருப்பதைப் பாருங்கள் ... அங்க வஸ்திரத்திலும் ஆடையிலும் சாந்து பொட்டு ... அதாவது குங்குமம் எங்கும் பட்டிருக்கிறது பார்த்தீர்கள் தானே !

சிறிது நேரம் எல்லோரும், ஜொள்ளையும், லொள்ளையும் மறந்து 'கொள்' என்று சிரிக்கிறார்கள்

நக்கலாரின் லூட்டி வெளியில் தெரியவந்ததை நினைத்து நக்கலார் வெட்கத்தால் தலைகுனிகிறார் !

சிவா : ஜொள் மன்னா ! அதற்காகத்தான் சொன்னேன் ... சாந்து பொட்டு அசவுகர்யமானது ... காட்டிக் கொடுத்துவிடும் .. அதுமட்டும் தானா இல்லை இல்லை .... . மேலும் அதை வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு கலப்படம் காரணமாக நெற்றித்தோல் வெளிர்ந்து அரிப்பும் வரும் !

நக்கலார் சிக்கல் தீர்ந்ததும் மெதுவாக சிவாவை நோக்கியபடி,
ந.நக்கீரர் : ஜொள்ளரே ... சாந்து குங்குமம் விற்கும் அனைவரும் தொழில் நசிந்து சாப்பாட்டிற்கு வழியில்லாமால் போய் கஷ்டப்படுவார்களே என்ற நல்லெண்ணத்தில் அவ்வாறு கூறினேன். மன்னியுங்கள் எங்காவது தவறியிருந்தால்.

சிவா: நக்கலாரே... ! எல்லாம் எமக்குத் தெரியும். உங்கள் நக்கலை ரசித்து லொள்ளு பண்ணுவே நான் இங்கு வந்தேன். வந்திருப்பது லொள்ளிலும், ஜொள்ளிலும் வல்லவர் என்று தெரிந்தும். தொடர்ந்து எக்குதப் பாகவே பேசி எல்லி நகையாடி நக்கல் செய்ததற்கு உங்களை போற்றி மகிழ்கிறேன் . வாழ்க உமது நக்கல். இனி உங்களுக்கு ஒரு காலமும் இல்லை சிக்கல்.

ஜொள்ளுப்பாண்டி : ஆகா அருமையான விளக்கம் தீர்ந்தது சந்தேகம் ... இனி அந்தப்புர மங்கையர் அனைவருக்கும் ஸ்டிக்கர் பொட்டையே சிபாரிசு செய்கிறேன். இந்தாருங்கள் ஒரு லெட்சம் ரூபாய்க்கான காசோலை.

சிவாவிடம் கையெழுத்துட்டு கொடுக்கிறார்

காட்சி 5 :

மண்டபத்துக்கு திரும்பவும் வருகிறார்கள்

சின்னப்புள்ளை :அப்பு சிவா... ! ஆகா பரிசு எனக்கே கிடைத்துவிட்டது

சிவா : ரொம்ப குதிக்காதே சின்னப்புள்ள ... காசோலை அதுவும் கிராஸ் பண்ணப்பட்ட காசோலை என் பெயரில் இருக்கிறது ... வா .. நாயர் கடையில் ஒரு பொறையும் டீயும் வாங்கித் தருகிறேன் ... சாப்பிட்டு விட்டு மண்டபத்தில் போயி படுத்துக்க.

சின்னப்புள்ளை : ஆகா பரிசு தரேன் சொல்லி சொல்லி பட்டை போட்டுட்டான்யா போட்டுட்டான் !

திரை
*******************************************
ஆக்கம் : கோவி.கண்ணன்
மேற்பார்வை : எஸ்.கே
*******************************************
சங்கப் பக்கங்களில் இந்த நாடகப் பதிவினை வெளியிட அனுமதியளித்த நண்பர் கோ.வி.கண்ணனுக்கு சங்கத்தின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, August 14, 2006

கோவியாரின் நாடக சபா - பாகம் 1

லொள்ளுபவர்கள் : கைப்புள்ளை சின்னப்புள்ளையாக, நாகை சிவா லொள்ளு சிவாவாக, நாமக்கல் சிபியார் நக்கல் நக்கீரராக, ஜொள்ளுப்பாண்டி ஜொள்ளுப்பாண்டியாகவே

தயாரிப்பு : வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அனைத்து வலைநண்பர்களுக்கும் இந்த நாடகம் சமர்பணம்

காட்சி 1 : மண்டபம்

மண்டபத்தில் தனியே நாஷ்டாவுக்கு துட்டுக்கு எவன் தலையை தடவலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் சின்னப்புள்ளை. அந்த நேரத்தில் தண்டோரா சத்தம் பலமாக கேட்கிறது.

"நாட்டு மக்களுக்கோர், நற்செய்தி ... ! நம் மன்னன் ஜொள்ளுப் பாண்டிக்கு பெரும் பிரச்சனையில் ஒரு பெருத்த சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது அதை உடனடியாக தீர்த்து வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை பரிசாக வழங்கப்படும்"
என்று அறிவித்துச் சென்றான் அரண்மனை அறிவிப்பாளான்.

சின்னப்புள்ளை தனக்குள்
அப்பு .. 1 லட்சம் ரூபாயா ... இதை வச்சிக்கிட்டு ஒரு வருசம் வயித்தை கழுவலாமே, இம்புட்டு நேரம் யோசிச்சும் ஒரு யோசனையும் வரமாட்டக்குதே, அந்த பணம் எனக்கில்லை எனக்கில்லை...... இந்த நேரம் பார்த்து ஒரு பயலையும் காணும், அப்பு சிவா ... நீ எங்கிட்டு இருக்க... வாப்பு ... !

ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ங்,
உடனடியாக சிவா அவர் முன் தோன்றுகிறார்

லொள்ளு சிவா : அழைத்து யாரோ ?

சின்னப்புள்ளை : நான்தேன் ... ! ஆனா நா ஒன்னும் ஒன்னிய கூப்பிடலயே... ! யாரப்பு நீயீ... ? கெட்டப்பல்லாம் பலமா இருக்கு, பின்லேடன் அட்ரஸ் கேட்டு வந்திருக்கிறாயா ? என்று பயந்தபடி கேட்கிறார்.

லொ.சிவா : ஹா ஹாஹ் ... ஹா ..... !
பலமாக சிரிக்கிறார் சிவா

சின்னப்புள்ளை : இப்ப இப்படித் தான் சிரிப்ப... ! அப்பறம் என் சட்டையையும் .. ஒன் சட்டையும் கிழிச்சிட்டு திரும்பி நின்னும் சிரிப்பே ! ... ஆள வுடு... நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்கும் பின்னால திரும்பு துணியெல்லாம் நல்லா இருக்கான்னு ஒருதடவ பாக்கிறேன் !

லொ.சிவா : சின்னப்புள்ள ... நீ என்னை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் ... நான் யாரென்பது தெரியுமா ?

சின்னப்புள்ளை : ஏன்பு நீ யாருவேனுமானாலும் இருந்துட்டு போ ... ஒன்னால ஜொள்ளுப் பாண்டி சந்தேகத்தை தீத்துற முடியும்னா நில்லு இல்லையென்றால் திரும்பி அப்படியே போ !

லொ.சிவா : ம் .... க்கும்ம் சின்னப் புள்ளையாரே ... !வேண்டுமென்றால் எம்மை சோதித்து பாரும் உனக்கு திறமை இருந்தால், கேள்விகளை நீர் கேட்கிறீரா அல்லது நான் கேட்க்கட்டுமா ?

சின்னப்புள்ள ... மனதுக்குள் ஆத்தாடி நம்ம தொப்பையைப் பார்த்து புள்ளையாருன்னு சொல்றானே... இருக்கட்டும்... என்னத் தான் சொல்றான்னு பாப்பமே

சின்னப்புள்ள : இந்தாப்பா இரு ... எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும் ... சரி நான் கேகுறத்துக் பதிலை சொல்லு !

லொ.சிவா : சரி நீரே கேளும் ... !
சின்னப்புள்ள : பிரிக்க முடியாதது எது ?
லொ.சிவா : ஜீன்சும் டாப்சும்
சின்னப்புள்ள : பிரியக் கூடாதது ?
லொ.சிவா : சாரியும், மல்லிகைப்பூவும்
சின்னப்புள்ள : சேர்ந்தே இருப்பது ?
லொ.சிவா : சுடிதாரும் ஷாலும்
சின்னப்புள்ள : சேரா திருப்பது ?
லொ.சிவா : ஹை ஹீல்சும், புடவையும்
சின்னப்புள்ள : பார்த்து ரசிப்பது
லொ.சிவா : காலேஜ் பிகர்களை
சின்னப்புள்ள: பார்காது ரசிப்பது
லொ.சிவா: சினிமா நடிகைகளை
சின்னப்புள்ள : சொல்லக் கூடியது ?
லொ.சிவா : ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
சின்னப்புள்ள : சொல்லக் கூடாதது ?
லொ.சிவா : பெண்களிடம் ஐ லவ் யூ
சின்னப்புள்ள : ஆசைக்கு ?
லொ.சிவா : ஜொள்ளு !
சின்னப்புள்ள : அறிவுக்கு ?
லொ.சிவா : லொள்ளு !

சின்னப்புள்ள : அப்பு நீர் ஜொள்ளர் !

லொ.சிவா : இல்லை இல்லை நீர் தான் ஜொள்ளர் !

சின்னப்புள்ள : சரி பாட்டைக் கொடும், ஜொள்ளுப் பாண்டி என்ன தருகிறாரோ, அதைக் கொண்டுவந்து அப்படியே கொடுத்து விடுகிறேன்

லொ.சிவா : எனக்கு அந்த பரிசு வேண்டாம் எல்லாவற்றையும் ... நீயே எடுத்துக் கொள்ளும்

சின்னப்புள்ள : ம் நல்லா பிளாஸ்திரி போட்டு அனுப்புவாங்க அதானே தகிரியாமாக சொல்லுறீரு

லொ.சிவா : ஹா ஹாஹ் ... ஹா ..... !

சின்னப்புள்ள : லொள்வீக சிரிப்பையா உமக்கு !
சிவா பாடலை எழுதி சின்னப்பிள்ளையிடம் கொடுக்கிறார்

காட்சி 2 : சபை

சின்னப்புள்ள : மன்னா ... ஜொள்மன்னா .. பார் மன்னா .. ! பாட்டுடன் வந்திருக்கும் சின்னப்புள்ளையைப் பார் மன்னா !

ஜொள்ளுப்பாண்டி : சின்னப்பிள்ளை ! என் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் பாடலை கொண்டு வந்திருக்கிறீரா ? எங்கே கொடும் ... !

அதற்குள் நக்கல் நக்கீரர் சின்னப்புள்ளையை மடக்குகிறார்
ந.நக்கீரர் : ஜொள்மன்னா சற்று பொறுங்கள் !

சின்னப்புள்ள : நக்கலாரே ... மன்னனே அழைக்கும் போது நீர் யாரைய்யா தடுப்பது? உமக்கு என்னய்யா பொறாமை ? நக்கலாரு என்று சொல்றது சரிதாம் போல .. !

ந.நக்கீரர் : சின்னப்புள்ளை ... அதை கிடப்பில் போடும் ... எங்கே நீர் வடித்த ஜொள்பாடலைப் பாடலை பாடும்

சின்னப்புள்ள : இதோ படுகிறேன் ... நன்றாக கேளும்

"காலேஜ் பிகர்கள்,
கட்டிளங் குமரிகள்,
அங்கயற் கன்னிகள்,
மணமான மாதுக்கள்,
பேத்தி கண்ட பாட்டிகள் ... ஏன் ?
அத்தினி, சித்தினி, பத்தினி பெண்களுக்கும்
இன்னும் எத்தனையே
வகை தமிழ் பெண்டிருக்கும்,
நெற்றிப் பொட்டில் வைக்க
ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !"

ஜொ.பாண்டி : சரியான பாட்டு ... சரியான ஜொள்ளு ... தீர்ந்தது என் சந்தேகம்

ந.நக்கீரர் : ஜொள் மன்னா, சற்றுபொறும் அவசரத்தில் ஜொள்ளை நினைத்து துள்ளிக் குதிக்காதீர்... ! சின்னப்பிள்ளை இப்படி வாரும்

சின்னப்புள்ள : வந்தேன் நக்கலாரே ... உமது நக்கல் லொள்ளு ஆரம்பம் ஆகிவிட்டதா ?

ந.நக்கீரர் : உமது பாட்டில் பிழை இருக்கிறது !

சின்னப்புள்ள : இருக்கட்டும் ஓய்... எவ்வளவு பிழை இருக்கிறதோ ... எழுத்துப் பிழையாரிடம் சொல்லி சரிசெய்தால் போகிறது

ந.நக்கீரர் : அது இல்ல ஓய் ... பொருள் பிழை

சின்னப்புள்ள : வந்துட்டான்யா ... வந்துட்டான் !

ந.நக்கீரர் : சின்னப்புள்ள ... உன் சின்னப்புள்ளத் தனத்தை நிறுத்து .... முதலில் சொல்லும் பாட்டை வடித்ததி நீர்தானே ?

சின்னப்புள்ள : ஏ.... ஏன் நான் தான் நான் தான் வடித்தேன் ... நக்கலாரே ... பின்ன மண்டபத்தில் யாரோ வடித்ததையா எடுத்து வந்திருக்கிறேன் ?

ந.நக்கீரர் : அப்படியென்றால் வடித்த வரிகளுக்கு விளக்கம் சொல்லிவிட்டு பரிசைப் பெற்றுக் கொள்ளும் !

சின்னப்புள்ள : ஏனப்பபு ஜொள்ளுப் பாண்டியே சந்தேகம் தீந்துடுச்சின்னு சொன்னபிறகு போது நீ எதுக்கப்பு நக்கல் பண்ணுகிறீரு ?

ந.நக்கீரர் : சின்னப்புள்ளை ... ! சரியான ஜொள்ளுக்கு என் ஜொள் மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதைப்பார்த்து முதல் ஜொள்விடுபவனும் நான் தான் ... அதே சமயத்தில் பிழையான பாட்டுக்கு பரிசளிக்கிறான் என்றால் முதலில் லொள்ளு பண்ணுகிறவனும் நான் தான்

சின்னப்புள்ள : ம் .. இங்கு எல்லாமே நீர் தானா .. ?

அவையோர் எல்லோரும் சிரிக்க சின்னப்புள்ளை நொந்து நூடூல்ஸ் ஆகி சபையை விட்டு வெளியேறி மண்டபத்துக்கே வருகிறார்.

(தொடரும்)


ஆக்கம்-கோவி.கண்ணன்

ஊக்கம்- சங்கம்

Friday, August 11, 2006

உறவுகள்- ஒரு தொடர்கதை

இந்த உலகத்துல எல்லாரும் சந்தோசமா இருக்க ஏன் நம்ம கைப்பு மட்டும் ஆப்பு வாங்கி கஷ்படறாருன்னு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா? வரவங்க போறவங்க எல்லாம் ஆப்பு அடிச்சிட்டு போயிட்டே இருக்கீங்க..
ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?.
இதுக்கு பதில் தெரியாம நம்ம தேவ், திருவிழாவுல காணாம போன புள்ள மாதிரி பேந்த பேந்த முழிக்க, எங்களுக்கு எல்லாம் ஒரே பாவமா போயிருச்சு. அதனால யாருக்கு தெரியாம ஒரு கீதாக்கா தலைமையில விசாரணைக்கமிஷன் ஒன்னு வெச்சோம். அதுக்கு அவுங்க அரும்பாடு பட்டு மேல்மருவத்தூருக்கெல்லாம் போய் சாமி கேட்டு, வெத்திலையக்கிழிச்சு ஒரு உண்மையை கண்டுபுடிச்சு குடுத்தாங்க. படிச்ச உடனே சிபியும், பாண்டியும் அந்த இடத்துலேயே...... போயிட்டாங்க.
ஒரு மோசமான ஒரு பாவ காரியம் செஞ்சதுனால தான் இப்படி வாங்கு வாங்குன்னு வாங்குகிறாரு கைப்பு. சரி சரி பில்டப்பு போதும்.

விசயத்துக்கு நேராவே வந்துருங்க.(ஏன் sidela வரக்கூடாதா). கைப்பு-ஆப்பு வரலாறு தெரியனுமின்னா நீங்க பல வரலாறு தெரிஞ்சிக்கனும்.

இந்த பதிவை இன்னும் படிக்கனுமின்னா ஒரு கண்டிசன் நீங்க இம்சை அரசன், வின்னர் படம் பார்த்து இருக்கனும். இல்லாங்காட்டி வேற ஜோலியப் பாருங்கப்பு.

சரி புவியியல் பார்க்கலாமா? சே வரலாறுதாங்க spelling mistake..

கீதா அக்கா ஒரு 1330 பக்கம் விளக்கம் தந்து இருந்தாங்க அதுல ஒரு பாகம் தான் இது. அதன் ஒரு நகல்தான் இது. வுடு ஜூட்

வரலாறு -1
விவசாயின் அப்படிங்கிறவர் யாரு?
"வாங்க பாஸ் நாம அடி வாங்குறது சகஜம் தானே, பயந்தா தொழில் பண்ண முடியுமா, இவுங்க எப்பவுமே இப்படிதான் இருப்பாங்கன்னு" தத்துவம் சொன்னவர். ஹோட்டலில் டீ சாப்பிட சொன்னதும் ஒரு கிராமத்தையே கூட்டி வந்து சாபாட்டை கட்டு கட்டுன்னு கட்டி ஜென்மத்துக்கும் சம்பளமே வாங்க முடியாமல் செய்த பாசக்கார விவசாயி.


வரலாறு-2
சிபி சொன்ன சரக்கு மாதிரியான கணக்கு இது.
நாகை சிவா=மங்குனி அமைச்சர்
(விளக்கம் பின்னூட்டதுல சிபியே வந்து சொல்லுவாரு)

வரலாறு -3 சொடுக்கிப் பார்த்துக்குங்க
இதுல நல்லா கவனிக்க வேண்டிய விஷயம் அந்த ஓணான் படம், மூதேவி சீதேவிக்கதை. நல்லா படிச்சுக்குங்க. படிச்சு இருந்தாலும் இன்னொரு முறை படிச்சுக்குங்க அப்புறம் புரியலைன்னா அதுக்கு கீதாக்கா பொறுப்பு கிடையாது.

வரலாறு 4


இது ஒரு முக்கியமான வரலாறு.

லகுட பாண்டி 1: மன்னா தங்களைக் காண புலவர் பாலபத்திரி ஓணான்டி வந்திருக்கிறார்.

இம்சை: பாலபத்திரி ஓணான்டி...... வந்து தொலையச்சொல்லும், ஓணான்டி... கோணான்டி....

ஓணான்டிப்புலவர்: எனதருமை 23ம் புலிகேசியே நீர் வாழ்க நின் கொடை வாழ்க

இம்சை: அமைச்சரே இந்த லகுட பாண்டி என்னை பேர் சொல்லிதான் அழைப்பானா?

மங்குனி : புலவர்களுக்கே உள்ள ஆணவம் மன்னா.

இம்சை: தாங்கள் வந்த நோக்கம்?

ஓணான்டிப்புலவர்: நான் எழுதியுள்ள புதுக்கவிதை ஒன்றைப்பாடிகாட்டி பரிசு பெற்று செல்லலாம் என்று வந்துள்ளேன் மன்னா?

இம்சை: (மனசுக்குள்-அதெல்லாம் உன் வரப்புல வெச்சுக்க வேண்டியதுதானே) பாடும் பாடித்தொலையும்.

ஓணான்டிப்புலவர்: மன்னா! மாமன்னா, நீ ஒரு மாமாமன்னா!
பூமாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி!

அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி!

தேடி வரும் வரியவர்க்கு மூடா...........!!
நெடுங்கதவு உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு!
எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு!

மண்ணோடு மண்ணாக்கு!
இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கையே!


இம்சை: நிறுத்துடா ஓணான்டி, சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து அதனுடைய பிடறியை பிடித்து தொங்கவா பார்க்கிறாய்?

ஓணான்டிப்புலவர்: நான் என்ன குற்றம் செய்தேன் மன்னா.

இம்சை: எதற்காகடா என்னைத்திட்டினாய்?

ஓணான்டிப்புலவர்: நான் திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல் தானே பாடினேன்?

இம்சை: அமைச்சரே என்ன பிதற்றுகிறான்?(அது நமது தளபது சிபியின் வேலையாச்சே, அவர் மட்டும்தான் பிதற்றுவார். அது அவருக்கு மட்டும்தான் புரியும் சரக்கு போட்டாதான் நமக்கும் புரியும் )

மங்குனி: ஓணான்டி, சிறிதும் இடைவெளியில்லாமல் மன்னரை பார்த்து திட்டினாயே எதற்காக?

ஓணான்டிப்புலவர்: எப்போது திட்டினேன்?

மங்குனி: புழுகாதே புலவா. மன்னரை பார்த்து மாமாமன்னா என்றாயே.

ஓணான்டிப்புலவர்: ஆமாம், மாமன்னன் என்றால் பெரிய மன்னன் மாமாமன்னன் என்றால் மன்னர்களுக்கு எல்லாம் பெரிய மன்னர் என்று கூறினேன்.

மங்குனி: மன்னரின் முகம் பார்த்து மொள்ளமாரி என்றாயே.

ஓணான்டிப்புலவர்: ஆமாம், மாரி என்றால் மழை, முல்லைகளிடத்து பெய்யும் மழை என்றேன்.

இம்சை: முடிச்சவிக்கி..........

ஓணான்டிப்புலவர்: அரசியலில் போடும் சூழ்ச்சியான முடுச்சுகளை அவிழ்ப்பவன் அன்று கூறினேன்.

மங்குனி: மூடா என்றாயே.........

ஓணான்டிப்புலவர்: அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும், பசி என்று ஏழைகளுக்கு அள்ளிக்கொடுகின்ற மூடா நெடுங்கதவு உன் கதவு என்றேன்.
புண்ணாக்கு? எதிரிகளை புண்ணாக்கு என்று சொன்னேன்.

இம்சை: என் அழகான மூக்கைப்பார்த்து அண்டங்காக்கை என்று சொன்னாயடா அதற்கு என்ன அர்த்தம்?

ஓணான்டிப்புலவர்: அண்டம் என்றால் உலகம், காக்கை என்றால் காப்பாற்றுவது, உலகத்தை காப்பாற்றுபவன் என்று சொன்னேன். பாடியதற்கு உரிய பரிசை குடுத்தால் ..............நன்றாக இருப்பாய்

இம்சை: பரிசு எதுவும் கிடையாது நான் உன்னை எட்டி உதைப்பதற்குள் ஓடி விடு.

ஓணான்டிப்புலவர்: மன்னா?........

இம்சை: என்னா?

ஓணான்டிப்புலவர்: என் சாபத்திற்கு ஆளாகாதே

இம்சை: ஹாஹாஹாஹாஹாஹாஹாஹஹாஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹா

ஓணான்டிப்புலவர்: மன்னா வயசிலே மூத்தவன் என்ற முறையிலே சொல்லுகின்றேன். அளவுக்கு அதிகமாக நடக்கிறீர், எதற்கும் ஓர் எல்லை உண்டு.

இம்சை: டேய், பாலபத்திர ஓணான்டி, என்னிடமா எதிர்த்து பேசுகிறாய்? இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் கண்விழிகள் ரெண்டும் பிதுங்கி வெளியே தொங்க
போகிறது. யாரங்கே, யாரங்கே, யாரடா அங்கே ...அந்த மூக்குப்பொட்டியை எடுத்து அவன் முகத்தில் போடுங்கள்



[புலவனை தலைகீழாக தொங்கவிட்டு கதறக் கதற மூக்கு பொடிய அவர் மூஞ்சிமேலையே தூவ அரம்பிக்கிறார்கள்]

ஓணான்டிப்புலவர்: அநியாயம் அக்கிரமம்..

இம்சை: எனக்கு இது நியாயமடா ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்

ஓணான்டிப்புலவர்: ஐயோ ஐயோ

இம்சை: நன்றாக தூவுங்கள் ஹாஹாஹாஹாஹாஹஹாஹஹஹஹ் உனக்கு மட்டும் தான் மூக்குப்பொடி தண்டனை. இனிமே யாராவது பாட வந்தால்
மிளகாய் பொடி தண்டனை.

ஓணான்டிப்புலவர்: கர்வம் தலைக்கேறிய மன்னா, நீ அடுத்த ஜென்மத்தில் ஒரு மோசமான பிறவியாக பிறப்பாய். அப்போது உன்னிடம் தண்டனை பெற்ற அனைவரும் வந்து ஆப்பு அடிப்பார்கள், உனக்கு கவிதை எழுதவே வராது அப்படியே கவிதை கற்றுகொள்ள நேர்ந்தாலும் நீ மண்டூகமாக கற்றுக்கொள்ள என்னிடமே அலைய வேண்டி இருக்கும்.



இப்படி 1795ல ஓணான்டி புலவர் விட்ட சாபம் தான் இன்னைக்கு கைப்பு ஓணான் படம் புடிக்க இவ்வளவு கஷ்டப்படறாரு. அந்த ஜென்மத்துல ஓணான்டி புலவர், இந்த ஜென்மத்துல விவசாயியா பொறந்து இருக்காரு. இந்த ஏழை விவசாயி தமிழ்நாட்டுல ஒரு குக்கிராமத்துல இருந்தாலும் ராஜஸ்தான் சித்தூர்காட்ல இருக்கிற கைப்பு ஒரு ஓணான் (ஓணான்டி புலவர் என்பது விவசாயியின் போன ஜென்மம்) படம் புடிக்க ஆசைப்பட்டாருன்னு தெரிஞ்சவுடனே ஒத்த ரூபாயில ஒரு போனை போடு ஆட்டைய கலைச்சு புட்டாரு. படம்தான் ஒழுக்கமா
புடிக்கத்தெரியாட்டாலும், கைப்புக்கு மூதேவி சீதேவின்னு கதை சொல்லறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.
இந்த உறவு ஜென்மம் ஜென்மமா தொடர்ந்து வந்துகிட்டேயிருக்கும். இது கைப்பு போன ஜென்மத்துல பண்ணின மூக்குப்பொடி பாவம். இந்தனால அவருக்கு கஷ்டம் ஆப்பு எல்லாமே வந்து கொண்ட்டே இருக்கும் அத ஒன்னியும் பண்ணமுடியாது

அடுத்த உறவு..

வரலாறு -5.1
இவர் தேவு, தேவுடான்னு இருக்கிற கைப்புவ செத்து செத்து விளையாட மலை உச்சிக்கு போலாம்ன்னு கூப்பிட்டவரு. மண்டையோட்டை கம்பெனி முத்திரையாக்கி சங்கத்தை உறுவாக்கி, கைப்புவை கல்கி காண வைத்தவர். என்றும் கூடவே இருந்து சலிக்காம ஆப்பு வைப்பவர். பேச்சு பேச்சா இருக்கிறப்பவே போட்ட கோட்டை தாண்டி சங்கத்து ஆளை அடிச்சது யாருன்னு கட்டதுரைகிட்ட நேருக்கு நேர் கேட்டு ரப்புன்னு செவுளுமேல
அடி வாங்கி உய் உய்ன்னு சத்தம் போட்டு திரும்பி வந்த வீரச் செம்மல்.

..(தொடரும்)

Wednesday, August 9, 2006

செயற்குழு கூட்டம்!

சங்கத்தின் நூறாவது நாளை முன்னிட்டு சென்னை லீ-ராயல் மெரீடியன் ஒட்டலுக்கு எதிரில் இருந்த கரும்பு ஜுஸ் கடையில் சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் கரும்பு ஜுஸ் கொடுப்பட்டது. ஜுஸ் குடிக்க வந்த கூட்டத்தால் கத்திபாரா ஜங்கசனில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தை கண்டு அரசியல் கட்சிகள் எல்லாம் அரண்டு போயி இருப்பதாக தகவல். மேலும் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை கடிதம் வந்ததால் அன்று மாலை மெரீனா கடற்கரையில் நடக்க இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அன்று மாலை சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்து திண்ணையில் நடைப்பெற்றது. ஒவர் டூ செயற்குழு கூட்டம்.

கலந்து கொண்டவர்கள் : சங்க திண்ணையில் தல கைப்பு, தளபதி சிபி, போர்வாள் தேவ், விவ் இளா, ஜொள்ஸ் பாண்டி, டெலி காண்பரஸ் மூலமாக நாகை சிவா. மற்றவர்கள் களப்பணியில் தீவிரமாக இருப்பதால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கைப்பு : யப்பா, முதல் முறையாக செயற்குழு கூட்டம் போடுறோம். இதுல எப்பவும் பண்ணுவது போல இந்த கோமாளித்தனம், கேப்பாரித்தனாம் ஏதும் பண்ணாம எல்லாத்தையும் முறைப்படி செய்யுங்கப்பா.
(உடனே தேவ் வேகமாக எழுகின்றார்)
தேவ் : இந்த செயற்குழு கூட்டத்தை தளபதியார் சிபி அவர்களை நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
சிவா : அதை நான் வழிமொழிகின்றேன்.
சிபி : நன்றி, இந்த கூட்டத்திற்கு தல கைப்பூ தலைமை வகிக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
கைப்பு : எப்பவும் நான் தானே தல, அப்புறம் என்ன, நடக்கட்........
(இடையில் கைப்பு அருகில் அமர்ந்து இருக்கும் இளா மிக வேகமாக எழுந்து)
இளா : இதை நான் வழிமொழிகின்றேன்.
கைப்பு : யோவ், மெதுவா எந்துறியா, இப்படி போசுக்குனு எழுவதை பாத்தா உயிர் போயி உயிர் வருது
தேவ் : தல, உயிர் பிரச்சனை உன்னோட தனிப்பட்ட பிரச்சனை, அத சங்கத்துக்கு கொண்டு வராத
கைப்பு : நான் எங்கய்யா கொண்டு வந்தேன்.
தேவ் : இப்ப தானே உயிர் போயி உயிர் வருதுன்னு சொன்ன
கைப்பு : அது விவ் வேகமாக எழுந்ததுக்கு சொன்னேன். ஒரு சொல் சொல்லக்கூடாதே. அந்த சொல்ல நெல் ஆக்கி, அத அரிசியாக்கி பொங்கல் வச்சி என்னை சட்னியா தொட்டு சாப்பிடாட்டி உனக்கு தூக்கம் வராதே. கொஞ்ச நேரம் நீ கம்முனு இரு. சிபி, யூ ஸ்டார்ட் மியூச்சிக் (சே ராசா பதிவ படிச்சு படிச்சு நானே இப்படி ஆகிட்டேன்) யூ கண்டியூ.
சிபி : நன்றி தல. இன்றுடன் நாம் ஒரு புது வரலாற்றை படைத்து உள்ளோம். மாபெரும் சரித்திர வெற்றியுடன் சங்கத்தை நூறு நாட்கள் நடத்தி உள்ளோம். இந்த வெற்றி பொன் எழுத்துக்களால் கல்வெட்டில் பதித்து, அதை நயன் தாராவை கொண்டு திறந்து வைக்க வேண்டிய வெற்றி.
பாண்டி : இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தேவ் : இப்ப அது எல்லாம் வேண்டாம், தற்சமயம் அதற்கு நம் பொருளாதார நிலைமை ஒத்துழைக்காது.
சிவா : ஹுக்கும் என்னைக்கு தான் ஒத்துழைத்து இருக்கு.
சிபி : சரி, சரி, இந்த விசயத்தை பிறகு பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கலாம். இப்ப இந்த 100 வது நாள் வெற்றி கொண்டாடும் வகையில் சிறு விருந்து.
(திண்ணையில் அமர்ந்து இருக்கும் அனைவருக்கும் சிங்கிள் டீயும், டபுள் பொறையும் வழங்கப்படுகின்றது. அவர்கள் சாப்பிடுவதை சிவா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்)
சிபி : இப்ப நம்மளை நாமே சரி பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம். அதனால் இந்த தருமணத்தில் நாம் கடந்து வந்து நூறு நாட்களில் நாம் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் கூறலாம். அதை பிறகு தீர்மனாமாக நிறைவெற்றி வாசலில் அலைமோதும் பத்திரிக்கையாளர்களிடம் தரலாம். முதலில் இளா நீங்க சொல்லுங்க
இளா : சங்க வரலாற்றை உலகறிய செய்யும்படி சங்க சிங்கங்களின் சரித்திரத்தை சங்கப்பலகையில் ஒட்டியதும், கத்தாரில் போய் உதார் விட்டதும் சாதனை. அதுக்கு என் கை காச செலவு பண்ணியது சோதனை.
சிபி : சரி சரி, சங்கத்துக்காக தானே விடுங்க, எப்பா தேவ் நீ சொல்லு
தேவ் : கல்கியில் தல வந்தது சாதனை. அவருக்காக பின்னாடி கழுதைப்புலியால கடிப்பட்டது வேதனை. சீ சோதனை
சிபி : அதுக்கு தான் சங்கம் மருத்துவ செலவ ஏத்துக்கிட்டுல அப்புறம் என்ன
தேவ் : (மெதுவாக) ஹுக்கும் சுண்ணாம்ப தடவி விட்டு, அதையும் செலவு கணக்குல எழுதிட்டாங்க.
சிபி : என்ன அங்க முணுமுணுப்பு,
தேவ் : நீங்க இன்னும் சாதனை சோதனைய சொல்லயே அத கேட்டேன்.
சிபி : எல்லாரும் சொல்லிய பிறகு சொல்லாம் என்று இருந்தேன், நீ கேட்டதால் இப்பவே சொல்லுறேன். சிங்கப்பூரில் நடைப்பெற்ற வ.வா.ச.வின் நாமக்கல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் வரலாறு காணாத கூட்டத்தை கூட்டி அதற்கு நயன் தாராவை தலைமை ஏற்க வைத்தது சாதனை. கூட்டம் முடிந்ததும் நயன் தாரா என்ன கண்டுக்காம போனது சோதனை.
சிவா : அடச்சே எப்ப பாத்தாலும் நயன் தாரா தானா. வேற எதுமே தெரியாதா..
சிபி : சரி, சரி. நீங்க சொல்லுங்க உங்க சாதனைகளையும் சோதனைகளையும்
சிவா : நம்ம தல கைப்பு உலக கோப்பை உதைப்பந்தில் கலந்து கொண்டது சாதனை, அதில் உதை வாங்கியது சோதனை.
சிபி : அது எப்பவும் நடப்பது தானே, வேற எதுவும் இருக்கா
சிவா : ஆங் இருக்கு, உங்க எல்லாத்தையும் பிரிந்து மிக தொலைவில் களப் பணியாற்றுவது மிகப் பெரிய சோதனை.
பாண்டி : நெஞ்ச நக்கிட்டான்யா. இந்த தடவை இண்கிரிமெண்ட் வாங்கிடுவான்.
(இடையில் கைப்பு அழுது கொண்டே எழுந்து)
கைப்பு : சிவா, நோ ஹார்டு பீலிங்கஸ்... எல்லாம் சங்கத்துக்காக தானே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிபி : சரி சரி, கண்ட்ரோல் பண்ணுங்கப்பா உங்க பீலிங்கஸ்ச.... அடுத்து பாண்டி நீ சொல்லு உன் சாதனையையும், சோதனையும்.
பாண்டி : சோதனையா, எல்லாமே சாதனை தான். கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்துக் கொண்டு, ஜொள்ளு துறையையும் ஏற்று அயராது களப்பணி ஆற்றிய நான், பின் சங்கத்தை மகளிர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து மகளிர் கல்லூரிகள் முன்பும் நின்று களப்பணி ஆற்றி சங்கத்தை உலகம் முழுவதும் பரவச் செய்தை விட வேற என்ன சாதனை வேண்டும்.
சிபி : அப்பாடா, கொஞ்சம் தண்ணி குடி முதல, இப்படி விடாம பேசுற. இது மாதிரி எல்லாம் நீ பேச மாட்டியே. என்ன ஆச்சு உனக்கு. ஹும் சோதனைகளை சொல்லுங்க.
பாண்டி : நான் தான் முன்னாடியே சொன்னேனே எல்லாமே சாதனை தான் என்று அப்புறம் என்ன தனியா சோதனை என்று மறுபடியும் கேட்டுக்கிட்டு.
சிபி : சரிப்பா. தெரியமா கேட்டுட்டேன்.
சிவா : (மெதுவாக) எல்லாம் குங்குமம் பண்ணும் வேலைனு நினைக்கிறேன். பாப்போம் எம்புட்டு நாளைக்குனு.
சிபி : அங்க என்ன சத்தம். தல நீ சொல்லுமா
கைப்பு : பேரன்பு கொண்ட பெரியோர்க்களே, தாய்மார்களே
தேவ் : தலலலலலலல....
கைப்பு : சாரிப்பா, பொதுக் கூட்டம் ஞாபகம் வந்து விட்டது. அதான். சரி நான் சாதனைகளையும் சோதனைகளையும் சொல்லுறேன் கேட்டுங்க. இந்த சங்கத்தில் நீங்க எல்லாம் இருப்பதே ஒரு மிக பெரிய சாதனை தான்.
இளா : சூசூசூச்ச்ச்ச்சோ
கைப்பு : ஏலேய், யாரு அது சைட்ல சவுண்ட் விடுது, நானே ஏத சொல்ல ஏத விட யோசிக்கினு இருக்கேன். இதுல இது வேற, ஹும் சரி, நம்ம படத்த புதர பத்திரிக்கையில் வந்தது சொல்வேனா, நம்ம சங்கப்பத்திரிக்கை டாக்டர் நமது கைப்பு வெளியிடப்பட்டதை சொல்வேனா, ஜெர்மனியில் உதைப்பந்தாட்டத்தில் கோலாயிச்சியதை சொல்வேனா, ஜமைக்காவில் இந்திய அணி வெற்றி பெற ஆலோசனை வழங்கியதை சொல்வேனா, எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல நமது சங்கத்திற்கு அட்லாஸ் வாலிபராக சிறப்பு வருகை தரும் "முக்கி"யஸ்தற்களை சொல்வேனா....அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னால் பேசப் முடியலப்பா பேசப் முடியல...... அவ்வ்வ்வ்வ்வ்வ்.
பாண்டி : ஆஹா, தல அழுக்காச்சி ஆரம்பிட்டாரயே. நிறுத்த மாட்டாரேய....இப்ப என்ன பண்ணுறது.
சிபி : சரி, சரி விடுங்க. சாதனைகளை விடுங்க சோதனை ஏதும் இருக்கா.
கைப்பு : என்னத்த சொல்ல, நீங்க எல்லாம் சாதனை பண்ணுறேன் பேர்வழினு எனக்கு ஆப்பு மேல ஆப்பு கொடுத்து சோதனை கொடுத்துகிட்டு இருக்கீங்க. அது ஒன்னு தான். ஆங்! இன்னும் ஒன்னு இருக்கு. ஆனா இப்ப வேணாம், இந்த சாதனை திருநாளில் அதை பத்தி பேச வேணாம், இன்னவொரு நாள் பாத்துக்கலாம்.
இளா : சோதனைகளை களைந்து சாதனைகள் படைக்க வேண்டும் என்பது தான் நம் எண்ணம், அதனால் இன்றே சொல்லுங்க.
கைப்பு : விவ், சொல்வதும் சரியா தான் இருக்கு. சரி சொல்லுறேன். யாரும் தப்பா எடுத்துக் கூடாது. என்னா....
சிவா : பீடிக்கை எல்லாம் பலமா இருக்கு. என்னனு சீக்கிரம் சொல்லுங்க. யாரும் தப்பா எடுத்துக்க மாட்டோம்.
கைப்பு : சரி, சொல்லுறேன். சாதனைகள் பல இருந்தாலும் நம்ம சங்கத்து ஆட்களில் சிலர் மேல் ஏற்பட்ட சில ஊழல் புகார் எனக்கு சோதனையா தெரியுது.
தேவ் : சுத்தி வளைக்காம யாரு மேல அந்த புகார் வந்துச்சுனு சொல்லுங்க
கைப்பு : நான் உன்ன சொல்லப்பா, பொதுவா தான் சொன்னேன்.
தேவ் : பொதுவாக சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு, என்னை சொல்ல என்று தனிப்பட்ட முறையில் கூறுவது ஏன்?
கைப்பு : ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க. எப்படி சொன்னாலும் இப்படி தான் சொன்னேனு சொன்ன நான் என்ன பண்ணுறது.
தேவ் : சொல்வதை சொல்லிட்டு, அப்பறம் என்ன சமாளிப்பு. சரி தல, நான் முடிவு பண்ணிட்டேன். என் மேல இப்படி ஒரு அபாண்ட குற்றச்சாட்டு ஏற்பட்டதை முன்னிட்டு நான் என் செயற்குழு பதவியை ராஜினாமா செய்கின்றேன்.
பாண்டி : ஐய்யகோ, என்ன இது தீடிரென்று இப்படி ஒரு முடிவு எடுத்துட்டீங்க. போர்வாள் இல்லாமல் களப்பணி எப்படி ஆற்றுவது. நீங்க சங்கத்தில் இல்லாட்டி.....
தேவ் : பாண்டி ரொம்ப ஆசைப்படாத, நான் செயற்க்குழு பதவியை தான் ராஜினாமா செய்கின்றேன். அடிப்படை உறுப்பினர் பதவியை இல்ல.
சிபி : சரி சரி. பிரச்சனை வேண்டாம். தேவ்வின் இந்த முடிவை குறள் ஒட்டு எடுப்பிற்கு விடுகின்றேன். முதலில் நான்,
குறள் - "இட்லிக்கு சட்னி இல்லையென்றால் சிறிது
சாம்பார் ஈயப்படும் "
- நன்றி இட்லிவடையார் என்ற குறளை கூறி தன் மேல ஏற்பட்ட பழியை தொடைத்து எடுத்து, அதன் மேல் எச்சா பண்ணி தலை சுற்றி, விட்டு எறிந்து விட்டு மீண்டும் சங்கத்தின் செயற்க்குழு பதவியை ஏற்க வர வேண்டும் என்று கூறி என் ஆதரவை தேவ்வுக்கு தெரிவிக்கின்றேன்.
இளா : "தண்ணீர் என்ப உரம் என்ப இவ்விரண்டும்
கண் என்ப விவசாயத்திற்கு"
- நன்றி வரப்பு என்ற குறளை கூறிய தேவ் அவர்கள் தன் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று கூறி அவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.
தேவ் : "கற்க கற்கண்டு, குமுதம், விகடன் கற்றப்பின்
விற்க பாதி விலைக்கு"
என்ற குறளை கூறி செயற்க்குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகின்றேன், நானாக ஏதுவும் உளர விரும்பவில்லை, இருந்தாலும் என் முடிவிற்கு நானே ஆதரவு தெரிவிக்கின்றேன்.
பாண்டி : குறளா..... குறளா......... நான் எங்குட்டு போவேன் குறளுக்கு........குறள் எல்லாம் எங்கிட்ட இல்ல ஜொள்ளு தான் இருக்கு. அத வச்சி ஜொள்ளிகிட்டே சொல்லுறேன். தேவ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.
சிவா : "உதையினால் வாங்கிய அடி உள்ளாரும் ஆறாதே
ஆப்பினால் வாங்கிய காயம்"
என்ற குறளை சொல்லி எனக்கு இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாதால் நான் நடுநிலை வகிக்கின்றேன்.
இளா : ஆழம் அதிகம் இல்ல ஜெண்டில்மேன், ஒரு இருபத்தைந்து அடி தான்.
சிபி : உச்ச்ச்ச்ச்ச். பாண்டி குறள் சொல்லாதால், அவரின் ஒட்டை ஒதுக்கி விட்டு பார்த்தால் தேவ் ஆதரவாக இரண்டு ஒட்டுக்களும், எதிர்ப்பாக ஒரு ஒட்டும் உள்ளது, ஆதலால் தல நீங்க உங்க முடிவை சொல்லி இதற்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
கைப்பு : "சதாரணமாக வாங்கும் ஆப்பு எல்லாம் ஆப்பு இல்ல
ஸ்பெஷலாக வாங்கு ஆப்பே ஆப்பு"
என்ற குறளை சொல்லி தேவ் தன் முடிவை உடனே கை விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இந்த பிரச்சனையை இத்துடன் முடிக்கம்படி கேட்டுக் கொள்கின்றேன்.
சிபி : தல கூறியதை கருத்தில் கொண்டு அத்த இத்தோட விட்டு விட்டு செயற்குழுவின் தீர்மானத்தை தாக்கல் செய்யுமாறு சிவாவை கேட்டுக் கொள்கின்றேன்.
சிவா : இன்றைய கூட்டத்தில் எந்த தீர்மானம் நிறைவேற்ற படவில்லை என்ற தீர்மானத்தை சபையின் முன் வைக்கின்றேன்.
(அனைவரும் கோரஸ்சாக)
அதை நாங்கள் வழிமொழிகின்றோம் என்று கூறி அந்த தீர்"மானத்"தை நிறைவேற்றி, மீண்டும் பொதுக்குழுவில் சந்திப்போம் என்று விடைப்பெற்றார்கள்.

Tuesday, August 8, 2006

கண்டனங்கள்

"ஒரு இளைஞன் ஒரு இளைஞி கையைப் பிடிச்சு இழுப்பது ஜகஜம்.. ஏன்னா இது வாலிப வயசு. "
- வாலிப சுனாமி கைப்புள்ள

அந்த மாணிக்கம் வாழும் மண்ணில் நடந்த நிகழ்வைப் பாருங்கள் வாலிபர்களே


ஆனால் ஒரு வாலிபனின் கையை இத்த்னை இளைஞிகள் பிடித்து இழுப்பது மாபெரும் கொடுஞ்செயல்.. இந்த நிகழ்ச்சியை வாலிபர்களின் இதய் வேந்தன் தலக் கைப்புள்ள தலைமையில் தோன்றி அவர் வழியில் நடக்கும் வ.வா.சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அனைத்துலக வருத்தப்படாத வாலிபர்களையும் இந்தக் கொடுஞ்செயலைக் கண்டிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Monday, August 7, 2006

அட்லாஸ் வாலிபர் - ஒரு விளக்கம்

நம்ம சக விவசாயி இளா நம்மள சங்கப்பணி ஆற்றிட வாங்கன்னு கூப்பிட்டப்ப இருந்து நம்ம மனசுல ஒரு சந்தேகம்ங்க.. 'அட்லாஸ் வாலிபர்' அட்லாஸ் வாலிபர்'ன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன?
வாத்தியார் நடிச்ச உலகம் சுற்றும் வாலிபன் தெரியும், வைஜெய்ந்திமாலா நடிச்ச வஞ்சிக் கோட்டை வாலிபன் தெரியும், நம்ம 'சிங்கம் பெத்த புள்ளை' மனோஜ் நடிக்கிறதா இருந்த வாலிபன் கூட தெரியும், இவுங்கென்னமோ புதுசா அட்லாஸ் வாலிபர்'ங்கிறாங்க, எதாவது வாலிபவயோதிக அன்பர்கள் மாதிரி சமாச்சாராமான்னு கொஞ்சம் டர்ரியலா இருந்துச்சுங்க. சொன்னவுடனே மிதப்பா சரின்னு சொல்லியாச்சு, இப்ப மறுபடி போயி, 'அட்லாஸ்'ன்னா என்னன்னு கேட்டு 'அட்லாஸ்ட்'ல இவன் அவ்ளோதானான்னு நம்மள பத்தி தப்பா நினைச்சுட்டாங்கன்னு என்ன செய்யிறதுன்னு கம்முன்னு அமைதியா இருந்துட்டனுங்க. நம்மளா எதுக்கு போயி வாயகுடுத்து வாங்கிகட்டிகிட்டு, அப்புறம் நம்ம மனவிகாரத்தை நாலு பேரு தெரிஞ்சுகிட்டு, தேவைங்களா அதெல்லாம்? அதுனால தாங்க, நிறையா நேரத்துல நாம அமைதியா இருந்துட்டம்ன்னா நம்மள மெத்த படிச்ச அறிவாளிக, ஆழ்சிந்தனை கூட்டத்தை சேர்ந்தவங்கன்னு அடுத்தவங்க முடிவு பண்ணிக்குவாங்க, நாமளா போயி 'ஐயம் குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டார்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை'ங்கிற ரேஞ்சுல எதயாவது பேசி, 'நம்ம மேதாவிதனத்தை காட்டி திருவாத்தானாகறத விட அமைதியா இருக்கிறது மேல்ன்னு, நான் அடிக்கடி இந்த மாதிரி அமைதியா இருந்திடறதுங்க.. (அப்படி இருந்தும் யாரும் நம்மள அறிவாளின்னு ஒத்துகலைங்கிறது வேற விசயம் :( )

நமக்கு தெரிஞ்சு, நாலாப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்துல தினமும் அட்லாஸ் பார்த்து நாலு இடத்தை தெரிஞ்சுகிட்டா அறிவுவிருத்தியாகும்னு கார்த்திகா மிஸ் சொன்னாங்கன்னு, எங்கய்யன் கிட்ட சொல்லி கடைவீதி நாகமாணிக்கஞ்செட்டியார் கடையில வாங்கன TTK அட்லாஸ் தான் ஞாபகத்துக்கு வந்துச்சுங்க.. கலர் கலரா குறுக்க கோடு போட்டு உலகத்தை முழுசா நான் பார்த்தது அதுல தாங்க், இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். 'யாருய்யா அது அட்லாஸ் பார்த்து அறிவு வளந்துச்சான்னு எல்லாம் கேக்கிறது..?? எதோ அன்னைக்கு மிஸ் சொன்னாங்க வாங்கினோம், அவ்ளோ தான், அப்படி எல்லாம் அறிவு வளர்ந்திருந்தா இந்நேரம் நாம எப்படி இருந்திருப்போம். அந்த அட்லஸ வாங்கிட்டு பள்ளிகூடத்துக்கு போயி, பக்கத்து பெஞ்சு 'திருப்பு' நம்ம கிட்ட அதுல நைல் நதிய காட்ட சொல்லி நானும் அதைய அமேரிக்ககண்டம் பூராவும் தேடிப்பார்த்து கிடைக்காம, அப்படி ஒரு ஆறே இல்லைன்னு நம்ம கூட்டாளி 'செந்தான்' கூட சேர்ந்து அடிச்சு விட்டு, அப்புறம் 'ஃப்ரான்சிஸ்' அதைய ஆப்ரிக்காவுல கண்டுபுடிச்சு குடுத்து, 'திருப்பு'கிட்டயும் அவ நட்புவட்டத்து கிட்டயும் நாங்க பட்ட அவமானம் எல்லாம்... ம்ம்.. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்க, நம்ம ஆப்பு வாங்க ஆரம்பிச்ச வரலாறு. இதெல்லாம் வாலிப வயசுல ஜகஜம் தான்னு வச்சுக்கோங்க, வாழ்க்கையில இப்படிப்பட்ட அவமானங்களை எல்லாம் சர்வ சாதரணமா கடந்து அதையே வெற்றிபடிகளாக்கி தாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கோம், சும்மா கிடையாது.. ஆமாம்..!

அதுவுமில்லாம் நமக்கு இந்த வரலாறு தான் இஷ்டமான பாடம்ங்க, செத்தவன் கதை கேக்கிறதுல அவ்வளவு சந்தோஷம் நமக்கு, இந்தபூகோளம் அவ்வளவா புடிக்காதுங்க, சிவிக்ஸ் கூட எப்படியோ இந்த 'preamble' வச்சே ஓட்டிட்டோம். பூகோளத்துல சும்மாவாச்சும் எதாவது ஒரு மேப்பை குடுத்து, மலை காடு ஆறு ஊருன்னு எல்லாம் எங்கிருக்குன்னு குறிக்க சொல்லி படாத பாடு படுத்துவாங்க, தப்பா குறிச்சு வச்சா தங்கவேலு சார் வேற ஒவ்வொரு தப்புக்கும் திரும்பி நிக்க வச்சு பிரம்புல ஒரு அடி போடுவாரு... ம்ம் அதுக்காகவே பேண்ட்டுக்குள்ளார எக்ஸ்ட்ராவா ஒரு டவுசர் போட்டுட்டு வருவானுக நம்ம பசங்க. நம்ம கூட்டாளிகளுக்கு அதெல்லாம் அவ்வளவு வேக்யானம். நானா..? நானெதுக்குங்க அப்படி எல்லாம் செய்யிறேன்.. 'பழம் பழுக்காட்டியும் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா புகை போட்டு பழுக்க வப்பானுங்க', யூ நோ தி மேட்டர், உங்களுக்கு மட்டும் சொல்றேன், ரகசியமா வச்சுக்கோங்க, நமக்கு முன்னாடி உக்காந்து பரிட்ச்சை எழுதுன 'பார்த்தி' தான் பூகோளத்துல பிச்சு உதறுவானே, அப்படி ஒருத்தன் முன்னாடி பெஞ்சுல உக்காந்து பரிட்ச்சை எழுதும் போது, நாம தப்பு பண்ணுவமா என்ன? 'பள்ளிக்கூடம் முச்சூடும் இப்படியேதான் படிச்சியா?' 'பரிட்ச்சைக்கு போகும் போது 'பார்த்து எழுது தம்பி'ன்னு எங்கம்மா சொல்லிவிடுவாங்க, நாமெல்லாம் தாய் சொல்லை தட்டாம வளர்ந்த புள்ளையாச்சுங்களா, அதான் அப்படியே லேசா..என்னங்க, பப்ளிக்ல இப்படி சின்ன புள்ளத்தனமா எல்லாம் கேள்விகேட்டுட்டு, உங்களோடு ஒரே ரவுசுங்க.. அதெல்லாம் நான் தனியா வச்சுக்கலாம்.

ஆஹா, வழக்கம் போல அட்லாஸ் வாலிபர் பத்தி ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன், இது ஒரு கெட்ட பழக்கம்ங்க எனக்கு..
ஒரு வேளை அட்லாஸ் வாலிபர்ன்னா நாலாப்பு படிச்சப்போ நடந்த மாதிரி தினமும் நாலு இடத்தை தெரிஞ்சு அதை பத்தி எழுதனமோன்னு நினைச்சனுங்க.. சரி அப்படியே பொள்ளாச்சி டவுன்ல ஆரம்பிச்சு மாக்கினாம்பட்டி, ஊஞ்ச்வேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோலார்பட்டி, கோழிக்குட்டை, ஆனமலை, சேத்துமடை, ஒடையகுளம், ஊத்துகுளி, காளியாபுரம், சமத்தூர், கோட்டூர், ஆழியார், கிணத்துகிடவு, தாமரைக்குளம், புரவிபாளையம், நல்லூர், நெகமம்ன்னு நம்ம ஊரை சுத்தி இருக்கிற 225 கிராமங்களையும் பத்தியும் பூகோள குறிப்புகளா எழுதிடுவோம்ன்னு கொஞ்சம் தயாரா இருந்தனுங்க.. தினம் ஒரு ஊரை பத்தி எழுதினாலும் அட்லாஸ் வாலிபரா ஒரு வருஷம் ஓட்டிலாம்னு நொம்ப சந்தோசத்துல இருந்தனுங்க. அப்படி நம்மள சந்தோஷமா இருக்க விட்டிருவாங்களா என்ன..?

அப்பத்தான் முன்னாடி சங்கத்துல இலவசகொத்தனாரை வரவேற்க்க போட்ட பதிவுல இந்த படத்தை பார்த்தனுங்க, அப்பத்தான் நமக்கு லேசா விவரம் புரிஞ்சுதுங்க.. அட்லாஸ் வாலிபர்ன்னா இந்த பூகோளபாடத்துல வர்ற அட்லாஸ் கிடையாதுங்களாம், இது வேறயாம்..

இந்த மாசத்துக்கு வருத்தப்படாத வாலிப சங்கத்துக்கு வர்ற ஆளுக கொண்டார ஆப்பையெல்லாம் சிரிச்ச மாதிரியே வாங்கிகிட்டு சங்கத்தை என் தோள்மேல தூக்கி வச்சி அப்படியே சப்ஜாடா கலகலப்பா கொண்டுட்டு போற வேலையாம் இது.. சரி நமக்கு எப்பவுமே பொறுப்புகளை சுமக்கிறதுன்னா ரொம்ப சந்தோஷமான விசயமாச்சே.. நமக்கு இதெல்லாம் சாதரணம் பாருங்க..
ஹூ ஈஸ் தட்ட் ட்டிஸ்ட்டர்பன்ஸ்..?? யாருய்யா அது 'வேற வேலை வெட்டி ஒன்னும் இல்லாட்டி இப்படித்தான்'னு எல்லாம் சவுண்ட் விடுறது.. அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது.. சூரியன்ல தலைவர் 'பன்னிக்குட்டி ராமசாமி' சொல்ற மாதிரி 'நான் ஒர்ர்ரே ப்பிஸி செட்டியார் மதர்'.

ஆக மொத்தம் அட்லாஸ் வாலிபருக்கு அர்த்தத்தை அட்லாஸ்ட் கண்டுபுடிச்சாச்சுங்க.. இதை பத்தி விளக்கமா சொல்றதுக்கு கோணார் தமிழ் உரை எல்லாம் போட முடியாதுங்களே, அதுனால நானே சொல்லிடறனுங்க. நெத்தியில அடிச்சாப்புல ஒரே வரியில பளிச்சுன்னு சொல்லனும்ன்னா "தூக்கி தோள்ல போட்டுட்டு நிக்கிற ஆளு தான் அட்லாஸ் வாலிபர்".. இது தாங்க விளக்கம்.

எப்படியாவது ஒரு மாசத்துக்கு தூக்கி தோள்ல வச்சுகனும் அவ்ளோதாங்க..:)

சரி, இப்பத்தான் என்ன விசயம்னு தெரிஞ்சிருச்சு இல்லை, இனி மேல் தெம்பா தோள்ல தூக்கி வச்சுக்கறேன். சரீங்களா?

(இப்படியே பில்டப் குடுத்துட்டே போனா எப்படி, ஏற்க்கனவே ரெண்டு மூணு நாளாச்சு, எப்பத்தான்டா உருப்படியா ஒரு பதிவு போடுவேன்னு கேட்டீங்கன்னா, ஹி.. ஹீ.. அதுக்கு மேட்டர் இருந்தா நான் ஏங்க இப்படி உளரிகொட்டிட்டு இருக்கேன்.. இன்னும் இருவது இருவத்தஞ்சு நாள் இருக்குதில்லீங்க.. ஒரு கை பார்த்திருவோம்)

Sunday, August 6, 2006

சங்கத்தின் வாழ்த்து!


"சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் அன்று
சங்கம்(சிரிக்க) வைத்து நண்பர்கள் வளர்கின்றோம் இன்று "

வ.வா.சங்கத்தின் சார்பாக தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எங்கள் நன்றிகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மேலே இருக்கும் இந்த நண்பர்கள் பேண்டை அனைவரும் எடுத்துக் கட்டிக் கொள்ளவும். எப்படி என்று யாரும் கேள்விக் கேட்க கூடாது சொல்லிட்டோம்.

கடைசியா சில தத்துவங்கள் : (கைப்பு சொன்னது தான்)

"A hug is worth a thousand words. A friend is worth more."
"Friends are the most important ingredient in this recipe of life."
"The better part of one's life consists of his friendships."

உங்களின் தத்து(பித்து)வங்களை பின்னூட்டங்களில் எங்களுக்கு தெரிவிக்கவும்.

Thursday, August 3, 2006

ஒன்று இரண்டாவது எப்படி?

நம்முள் பலருக்கு தண்ணியடித்தால் ஒன்று இரண்டாவதாகத் தெரிவது எப்படி என்ற ஐயம் காலம் காலமாக இருந்து வருகிறது. என்னிடம் கூட நண்பர்கள் கேட்பதுண்டு. அப்படி என்னதான் இருக்குன்னு தண்ணியடிக்கறே என்று? அதைக் கண்டு பிடிக்கத்தான் மச்சி தொடர்ந்து அடிக்கிறேன். கண்டு பிடிச்சி திஸீஸ் சப்மிட் பண்ணியவுடன் நிறுத்திடுவேன் என்று கூறுவேன். அவர்களும் (அப்புறமா மப்பூ ஓவரா பூடுச்சுனா அலம்பல் தாங்கறது யாரு? என்று)அத்தோடு கப்சிப் ஆகிவிடுவார்கள்.
சரி இத்தனை நாள் அடித்ததில் கண்டறிந்த அந்த உலக ரகசியம் என்னவென்று பார்ப்போம்.
கணித ரீதியாகவே விளக்குகிறேன்.

முதலில் ஒரு வட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வட்டத்திற்கு எத்தனை குவார்ட்டர்? (அதாவது எத்தனை கால் பாகம்) - 4. வட்டத்திற்கு மொத்தம் எத்தனை - 360 பாகை (இது யாஹூ 360 அல்ல)

அப்போ ஒரு குவார்ட்டருக்கு - 90 பாகை. முழு வட்டத்திற்கு 360 பாகை. சரியா.

இப்போ சரக்குக்கு வருவோம்.
ஒரு குவார்ட்டருக்கு எத்தனை 90? இரண்டு. அதாவது (2X90) அதாவது 180. அப்போ ஒரு ஃபுல்லுக்கு எத்தனை மில்லி - 4 குவார்ட்டர் ( 4X180) ஆக மொத்தம் 720 மி.லி.

இப்போது இரண்டையும் ஒப்பிடுவோம்.

குவார்ட்டர் (வட்டம்) : குவார்ட்டர்(சரக்கு)
90 : 180

ஃபுல்(சர்க்கிள்) : ஃபுல்(சரக்கு)
360 : 720

ஆக கிடைக்கும் விகிதம் 1 : 2
அதனால்தான் சரக்கு அடிக்கும்போது மட்டும் ஒன்று இரண்டாககத் தெரிகிறது.

அது ஏன் வட்டத்துடன் சரக்கை ஒப்பிடவேண்டும். தலை சுற்றுகிறது என்று சொல்லும்போது வட்டத்துடன்தானே ஒப்பிடவேண்டும்!

அப்படியே சொல்லியும் பாருங்க! காரணம் என்னன்னு விளங்கும்!

சர்க்கிள் : சரக்கில்

Wednesday, August 2, 2006

வணக்கம்ங்க

நான் பாட்டுக்கு காய்ச்ச வந்து செவனேன்னு படுத்து தூங்கிட்டு இருந்தனுங்க, திடீர்ன்னு தலகாணிக்கு பக்கத்துல அமைதியா உக்காந்திருந்த நம்மாளு ஒரே சினுங்கல், என்னடா செல்லம்னு எடுத்து பார்த்தா, நம்ம சக விவசாயி இளா. 'நம்ம சங்கத்து பக்கம் வாங்க ராசா'ன்னு ஒரு கோரிக்கை வச்சாருங்க..
நம்ம தான் பொதுவாவே இந்த மாதிரி சங்கம் கட்சின்னு எல்லாம் சேர்ந்துகிறது இல்லைங்கலா, அதுனால நம்ம தலைவர் ராஜாதிராஜா'வுல பாடுற மாதிரி 'ஒரு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம், அட டாங்குடக்கரடக்கர..'ன்னு எட்டு கட்டையில ஆரம்பிச்சேன், ஆனா பாருங்க எதிர்தரப்புல் இருந்து 'அடங்குடா டேய்'ங்கிற மாதிரி ஒரு அதட்டல்.. 'உன்னைய யாருய்யா சங்கத்துல சேர சொன்னா'ன்னு நக்கலா ஒரு கேள்வி. 'என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே'ன்னு ஒரு சந்தேகமா கேட்டா, 'அதெல்லாம் சந்தேகமே படாத கண்ணு மாசாமாசம் ஒரு தீவட்டி தடியன கூட்டிட்டு வந்து நடுவால ஆட விட்டு, நாங்க ஆளாளுக்கு விதவிதமா ஆப்பு வைப்போம், அது தான் எங்க கொள்கை, இந்த மாசம் உன்னைய வச்சு விளையாடலாம்னு கூப்பிடறோம் அவ்ளோ தான்'ன்னு சீரியசா சொல்றாங்க..


இதெல்லாம் நமக்கு தேவையா, நம்ம பதிவுல எழுதறதுக்கே ஒரு சமாச்சாரமும் இல்லாம ஓனான் முட்ட வச்ச மேட்டுக்காடு கணக்கா வெறோச்சுன்னு கிடக்கு, இதுல துடிப்பா போயிட்டிருக்கிற சங்கத்துல எல்லாம் போயி நாம என்னத்தை எழுதறது, அதுவும் போன மாசம் பூராவும் நம்ம இலவசகொத்தனார் போட்டு கொத்தி எடுத்துட்டு போயிருக்காரு, இந்த நேரத்துல நாம எதுக்கு அங்க போயி, அதுவும் கை நிறையா ஆப்போட நிக்கற ஆளுக மத்தியில.. இதென்னடா இது சொந்த செலவுல சூனியம் வச்சுகிற கதையா இருக்குதுன்னு, நானும் பல மாதிரி உக்காந்து படுத்து நடந்துகிட்டே ரோசனை செஞ்சு பார்த்தனுங்க..

அப்புறம் கடைசியா 'சரி, நமக்கு இந்த ஆப்பு வாங்கிறதெல்லாம் புதுசா என்ன. என்னதான் ஆகுதுன்னு பார்த்திருவோம்'ன்னு ஒத்துகிட்டு... இதோ.. உங்கமுன்னாடி, உங்க ஆப்புகளை எதிர்பார்த்து, இந்த மாசத்தின் பலிகடா'வாக அப்பாவி 'கொங்கு ராசா'..



தயாரா இருங்க.. நெக்ஸ்ட் மீட் பண்ணவோம்..

ஆகஸ்டு 2006- அட்லாஸ் வாலிபர்

கொங்குஆகஸ்டு 2006- அட்லாஸ் வாலிபர், ஒரு சக விவசாயி,புது மாப்பிள்ளை நம்ம கொங்கு "ராசா" தாங்க. எழுதுறதுலயும் படம் போட்டு கதை சொல்றதுலயும் அவருக்கு நிகர் அவரே. கிராமிய மணம் கமழ பாரதிராஜா மாதிரி ஆரம்பிச்சு பாலசந்தர் மாதிரி இமையம் தொட்டு, நவரசங்களையும் புழிஞ்சு எழுதிகிட்டு இருக்கிறவர். அரசியல், குழு மாதிரி எந்த பிரச்சினைகளையும் சந்திக்காத சங்கத்து கொள்கைக்கு சரி நிகர் கொள்கை வெச்சு இருக்கிறவர், அந்த கொள்கையினால ஈர்க்கபட்டுதான் இந்த மாத அட்லாஸ் வாலிபர் ஆகியிருக்கார். பதிவு மக்கள் சில பேர் "வாடா,போடா, மாப்பிள்ளை" அப்படின்னு கூப்பிடற அளவுக்கு அறிமுகம் ஆகி சீக்கிரமே நெருங்கி பழகக்கூடியஒரு நல்ல மனிதர். சுருக்கமா சொன்னா "DOWN TO EARTH". விவசாயம்தான் தன்னுடைய மூச்சுன்னு நினைக்கிற ஒரு விவசாய குடிமகன். பொள்ளாச்சிகாரர், கவுண்டரோட ரசிகர், "தல" அஜித் ரசிகர், யமாஹா பிரியர். காய்ச்சல் வந்தததைக்கூட கொங்கு மண்டல குசும்போட சொன்னவரு. வென்னிலா கேக், "தளபதி" வேட்டி கட்டு, ஜவ்வரிசி பாயாசம், குறள் #70 ன்னு அவரோட சூப்பர் பதிவுகளை என்னைக்குமே மறக்க முடியாது. தமிழ் பதிவு ஆரம்பிச்ச முத 20 பதிவாளர்களுள் இவரும் ஒருத்தர். வாத்தியாரோட செல்ல மாணவர்களில் இவரும் ஒருவர்(சுதர் கோவிச்சுக்காதீங்க).வாங்க கொங்கு "ராசா" வாங்க வந்து ஆரம்பிங்க உங்க கலாய்ச்சல. ஜூன் மாதம் தேன்கூடு போட்டியில ஆறுதல் பரிசு வாங்கினவரு(வாத்திக்கு முதல் இடத்த விட்டுகுடுத்த நல்ல மாணவர்)
அவரோட பதிவு-சொடுக்குங்க .
கவுண்டமணி பதிவு போடுவீங்கதானே ராசா?