Friday, June 30, 2006

2. அறிஞன் அநிர்பிரும்ம தேவன்: வ.வா.ச. வரலாறு

கைப்போங்காவும் விவசாயியும் விருந்து வரிசையில் நிற்கிறார்கள். வாசலில் யானை பிளிறுகிறது.

ஆப்பிரிக்கா தந்த அஞ்சா நெஞ்சனாம் கைப்போங்கா, யானையின் பிளிறலில் சற்று அதிர்ந்த இதயத்தைக் கையால் பிடித்துக் கொண்டு, பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து யானையைப் பார்த்தான். அதே நேரம், தங்கவை நாச்சியார் என்னும் அந்தக் கம்பீரமான போர்யானையும் நம் நாட்டில் இது என்ன புது மிருகம் என்ற எண்ணத்துடன் கைப்போங்காவைப் பார்த்தது.

அண்ணலும் நோக்கினார்...........
.....
.....
.....
....



தங்கச்சியும் நோக்கினார்...

நோக்கியா போனைக் கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் காட்சியை விவசாயியும் க்ளிக்கினார்.


பார்த்த நொடியே இருவருக்கும் அந்தப் பேருண்மை தெரிந்து விட்டது. ஆப்பிரிக்கக் கிராமத்திலும் இந்தியக் காடுகளிலும் பிறந்திருந்தாலும், ஏதோ ஒரு இனம் தெரியாத, "அட எல்லாம் நம்ம இனம் தான்" என்று தெரிந்து கொண்ட பாசம், ஒரு கொடியில் பூக்காத அந்த இரு மலருக்குள்ளும் இருப்பது இருவருக்கும் நொடியில் புரிந்து விட்டது.

அன்பு மேலிட்டால், அண்ணனை நோக்கி ஓடி வந்த யானை அப்படியே துதிக்கையில் தூக்கித் தட்டாமாலை சுற்றியதில் இதைச் சற்றும் எதிர்பார்க்காத கைப்போங்காவின் அலறல்கள் விண்ணை முட்டின. கைப்போங்காவின் அதிர்ச்சிக் கூவல்களை, பாசத்தின் ஒலிவடிவமாக எண்ணிய விவசாயி ஆனந்தக் கண்ணீர் மல்க அதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், கைப்போங்காவும் அதிர்ச்சிக் கண்ணீருடன் "காப்பாத்து காப்பாத்து" என்று வாய் திறக்கப் பயந்து கையால் மேலும் கீழும் அடிக்கத் தொடங்கினான்.

யானை ஓடிவந்ததால், அருகில் பாட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த அறிஞன் அநிர்பிரும்ம தேவனின் தபேலாக்கள் ஒரு முறை விண்ணில் எழும்பிப் பின் கீழே இறங்கின. அநிர் பிரம்ம தேவன் இனிமையான சாரீரம் உடையவன் அல்லன் என்றபோதும் கச்சேரி செய்வதை மட்டும் விடுபவனில்லை. ஏற்கனவே அவரது சத்தம் தாங்காமல் காதை மூடிக் கொண்டிருந்த பக்கத்துத் திண்ணைப் பெரியவர்களும் இதுவரை போல் இல்லாமல் இன்று, தாம் அமர்ந்திருக்கும் இடமே லேசாக ஆட்டம் கண்டதைப் பார்த்து, அநிர்தேவனின் குரலுக்குப் பூமாதேவியே ஆட்சேபம் தெரிவிக்கிறாள் என்று எண்ணி நடுங்கத் தொடங்கி விட்டனர்.

தபேலாக்களை அசைத்துத் தன் இசைத் தவத்தைக் கலைத்தவன் யாரென்று அறிய எண்ணி அநிர்தேவன் கோபத்துடன் வீதியில் இறங்கிப் பார்த்தான். எப்போதும் அவனது கச்சேரித் திண்ணையில் வந்து வாத்தியங்களை அசைத்துப் பார்க்கும் தங்கவை நாச்சியாரின் சேட்டை தான் இது என்பதைப் பார்த்த கணமே புரிந்து கொண்டான்.

இந்த யானையை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அவன் நிமிர்ந்தபோது தங்கவையின் பிடியில் ஒரு புதுவிதமான உருவம் இருப்பதையும், அது பயத்தில் அலறுவதையும் கைகாலை அடித்துக் கொள்வதையும் பார்த்த தேவன், சுற்றுமுற்றும் பார்த்தான்.

விவசாயியும் மற்றவர்களும் அந்த விபரீதத்தை உணராமல் கைகொட்டி ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தங்கவையின் கோரப் பிடியில் சிக்கி இருக்கும் கைப்போங்காவை எப்படிக் காப்பது என்று தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சற்றுத் தூரத்தில் அந்த இளைஞன் நடந்து கொண்டிருந்தான்.

சோழனின் அவையில் போருக்காகத் தூது சொல்ல வந்து பூம்புகார்ப் பெண்களின் அழகில் மயங்கி போர் தொடங்கிய பின்னும், சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லுப் பாண்டிதான் அவன். மின்னலென ஒரு யுக்தி அநிர்தேவனுக்குப் புலப்பட்டது.

(தொடரும்)

Thursday, June 29, 2006

கோ.வி..கண்ணன் பதிவு - சங்கத்துக்கு வாங்க

கைப்புவை கலாய்த்தால் தான் சங்கத்துல சேர்த்துக்குவோம், கைப்பு எப்படி ஆறு போடுவார் என்று எழுதும்படி சங்கத்தினர் என்னை கலாய்த்ததை தொடர்ந்து, கைப்பு மறுபடியும் கையில் சிக்கிக் கொண்டார்

கைப்புவும் பார்த்தியும் விளம்பர பலகை எழுதும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பார்த்தி சற்று மேலே சாளரத்தில் நின்று கொண்டிருக்கிறார். கைப்பு கீழே நின்று சுவற்றில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்

இந்தப் பதிவினை மேலும் படித்து ரசிக்க இங்கே சுட்டுங்கள்

Tuesday, June 27, 2006

நமது கைப்பு

அதென்ன எல்லாரும் ஆறு ஆறுன்னு எழுத சங்கம் மட்டும் எழுதாம விட்டுட்டா என்ன ஆகிறதுன்னு நினைக்கும் போது, தேவ் "நமது கைப்பு" பத்திரிக்கையின் முதல் பிரதியை ரெடி பண்ணி வெச்சதா B.B.Cல செய்தி வந்துருச்சு.

அதுக்கு விளம்பரம் பண்ண பெரியம்மா நிர்மலா பெரியசாமியை அணுக நினைக்க கீதாக்காவுக்கு வந்துச்சே கோபம்.

அதனால இனிமே அவுங்க செய்தி மற்றும் ஒளிபரப்பு துறையின் ஆமைச்சாராக கைப்பு கைநாட்டு வெச்சு அறிக்கை குடுத்துட்டாரு.

கீதாக்காவும், விடியகாலையில தொண்டை தண்ணி வத்த வத்த அதே பாணியில பேச டிரெய்னிங் பண்ண ஆர்ம்பிச்சுட்டாங்க. அதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே..

* நயன் தாரா மேட்டரில் நடந்த கவிழ்ப்பு சதி என்ன? விளக்குகிறார் சிபி..

* சிந்து பைரவி ராகம் கேட்டு சிதறினேனா? சீறுகிறார் ஜொள்ளு பாண்டி

* ஐ.நாவில் பிடித்த மஞ்ச காட்டு மைனா.. விவரிக்கிறார் நாகை சிவா..

* சான் பிரான்ஸிச்கோவில் சரக்கு அடித்து விட்டு சறுக்கினேனா? சந்தோஷ் தன்னிலை விளக்கம்.

* சித்தூர் கேட்டில் சொப்பன சுந்தரியுடன் சில்மிஷமா? பதில் அளிக்கிறார் கைப்பு..

* யானைக்கு வைத்த கவளைச் சோற்றை பாதி விலைக்கு விற்றேனா? பொங்குகிறார் பொன்ஸ்

பக்கத்துக்கு பக்கம் ஆப்பு,

வாங்கி விட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Friday, June 23, 2006

வரு.வா.சங்கம் - BEHIND THE SCENES 1

சமீப காலமா வந்திருக்கும் புதிய வலைப்ப்திவர்களுக்காகவும்.. ஏற்கனவே வலைப் பதிந்து வலையை அறித்தெறியும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் பல கோடி வருத்தப்படாத வாலிபர்களுக்காகவும் இந்தப் பதிவு.

எப்படி வரு.வா.சங்கம் உருவானது?

சுமார் சில நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ராஜ ராஜ சோழன் ஆண்டு கொண்டிருந்தக் காலம்.
அப்போது கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஒரு குக் கிராமத்தில் கழுதைப் புலிகள் கண்ட படி ஊளை இட அந்த சிம்பொனி சவுண்டில் அவதரித்த குழந்தையின் பெயர் கைப்போங்கா ஆப்புமாங்க.
அது ஒரு தெய்வீக குழந்தை.
அந்தக் குழந்தை நாளொரு மொள்ளமாரித்தனம் பொழுதொரு கேப்மாரித்தனம் எனக் கண்டபடி கட்டுக்கு அடங்காமல் கட்டவிழ்த்த கழுதையாக வளர்ந்து நின்றது.

வருத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் வளர்ந்த அந்த வாலிபனைக் கண்டு ஊரே பயந்தது.
அந்தப் பக்கமாய் சுற்றும் கழுதைபுலிகளின் வாலில் வெடி கட்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பது...அது வெடிக்கிறதா எனச் சோதனை செய்ய கிட்டப் போய் பார்த்து மூக்கு கிழிவது என்ப் பெரும் கவுரவமாய் வாழ்ந்தான் அந்த வாலிபன்.
அணில் குட்டிகளை விரட்டி சென்று அதன் முதுகில் இருக்கும் பின் கோட்டுக்கான முகவ்ரி தேடுவது எனத் திரிந்தான் அந்த வாலிபன்...

இப்படியிருக்க அந்த வாலிபன் ஒருநாள் ஆப்பிரிக்கா மன்னனின் அந்தப்புரத்தில் எட்டிப் பார்த்ததாய் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தான். மன்னன் அவனிடம் விசாரிக்க

டேய் கைப்போங்கா... என் மகளைக் கையப் பிடிச்சு இழுத்தியா?

ஒரு இளைஞன் ஒரு இளைஞியைக் கையைப் பிடிச்சு இழுக்குறது எல்லாம் சகஜம் அதை எல்லாம் பெரிசுப் பண்ணப்பிடாது...

என் அந்தப் புரத்தில் எட்டிப் பார்த்தீயா?

என்ன எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க...

ஒழுங்காச் சொல்லு எட்டிப் பார்த்தீயா?

என்ன ஒழுங்காச் சொல்லு எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க...
என்னடா நான் பேசுறதையேத் திருப்பிப் பேசுறே எட்டிப் பார்த்தீயா?

என்ன என்னடா நான் பேசுறதையேத் திருப்பிப் பேசுறே எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க...

அடேய் கைப்போங்கா வேணாம்டா உண்மைய சொல்லிரு எட்டிப் பார்த்தீயா?

என்ன அடேய் கைப்போங்கா வேணாம்டா உண்மைய சொல்லிரு எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க...

மன்னர் மயக்கமாகிச் சரிகிறார்.

ஆப்பிரிக்காவிற்கு விவசாயக் கலையை அறிவிக்கச் சென்ற ஒரு தமிழ்நாட்டு விவசாயி இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்து வியந்து நினறார்.
விவசாய பிரசென்டேஷன் முடிந்த நிலையில் இந்த வாலிபனின் வருத்தப் படாத தன்மையைக் கண்டு கண் கலங்கிய அந்த விவசாயி.. அவனைத் தனியே சந்தித்து தன் விசிட்டிங் கார்டைக் கொடுக்கிறார்.
தன்னோடு வரமுடியுமா? வந்தால் நல்ல ஆபர் தருவதாய் கூறுகிறார். கடலைச் சாகுபடி வித்தைகளை பக்காவாகச் சொல்லித் த்ருவதாய் வாக்கும் கொடுக்கிறார்.

கழுதைப் புலி வால்களில் வெடி வைத்து அதுகளிடம் கடி பட்டும் கண்ட மன்னர்களிடம் அடிப்பட்டும் இன்னும் எவ்வளவு நாள் வாழ்கிறது என யோசித்த அந்த வாலிபன் ஓ.கே சொல்ல அங்கு அக்ரிமெண்ட் சைன் ஆப் ஆகிறது...

ஆப்பிரிக்கா கண்டமே அன்றைய தினத்தைப் பேரல் பேரலாக பீர் குடித்துக் கொண்டாடின. குறிப்பாக கழுதைப் புலிகளை அந்த வாலிபனுக்கு தங்கள் பேக் ஏரியா பலவாறு ஜெர்க் காட்டியபடி குதூகாலமாய் கொண்டாடின...

அந்த விவசாயியோடு கப்பலேறிய கைப்போங்கா வந்து இறங்கியது பூம்புகார் கடற்கரை...
அங்கு வாசலில் யானைக் கட்டப் பட்டிருந்த ஒரு அரண்மனைக்குள் கைப்போங்கா அழைத்துச் செல்லப்பட்டான்.

வரவேற்பறையில் பொற்குவியல் குவிந்திருந்தது கண்ட கைப்போங்கா ஹே..ஹேன்னு எகத்தாளமாய் சிரித்தான்...

சுவர்களில் வெண்பாக்கள் வடிக்கப் பட்டு வழிந்துக் கொண்டிருந்தன... கைப்போங்கா வெண்பாக்களைப் பார்த்து லேசாய் மிரண்டாலும் பார்வையில் கெத்து குலையாமல் நின்றது விவசாயிக்குப் பெரும் பீதி ஏற்படுத்தியது...

ஆமா விவசாயி பாய் என்னிய எதுக்கு இங்கேக் கூட்டிட்டு வந்தே.. இது என்ன இடம்.. இதுக்கு ஓனர் யாரு என்று நக்கலாய் கேட்டான் கைப்போங்கா...

விருந்து ரெடி... விருந்து ரெடி... என ஒரு பெண்குரல் கேட்க பல சைடுகளில் இருந்தும் மக்கள் மாளிகைக்குள் வெள்ளமெனப் பாயந்தனர்.
ஆகா... அமிர்த்ம்... ஓஹோ... என விருந்து உண்ணும் முன்னே பாராட்டுக்கள் தொடங்கின...

ஏய்யா விவ் ( விவசாயிக்கு நிக் நேம்) ஆமா இன்னும் சோறே கண்ணுல்ல காட்டல்ல அதுக்குள்ளே அம்புட்டு பேரும் அப்படி சவுண்ட் விடுறாங்க... ஆமா இவக யாரு.. என்ன?

இவங்க ரொம்பப் பெரிய ஆளு... அரச பரம்பரை ஆனா ரொம்ப நல்லவங்க... யார் ஊரை விட்டு வெளியே போயிட்டு ஊருக்குத் திரும்பி வந்தாலும் உட்னே விருந்து வச்சு கொண்டாடிடுவாங்க.. அவ்வளவு உயர்ந்த மனசு...

ஆமா இப்போ யார் திரும்பி வந்துருக்கா.. பெரிய ஆளா...

பெரிய ஆள் தான்..

யாருப்பா

அந்தா வாசல்ல நிக்குதுப் பாரு யானை அது தான் போருக்குப் போயிட்டு திரும்பி வந்துருக்கு அதுக்கு தான் இம்புட்டு மரியாதை.. இந்த விருந்து சமைச்சதும் அதுக்கு தான் ....இவங்களைப் பத்தி நீங்கத் தெரிஞ்சிக்க இன்னும் நிறைய இருக்கு....

கைப்போங்காவும் விவசாயியும் விருந்து வரிசையில் நிற்கிறார்கள். வாசலில் யானை பிளிறுகிறது.

தொடரும்

Thursday, June 22, 2006

வ.வா.ச தொண்டனின் பதில் (பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த்)

கொஞ்ச நாட்களுக்கு முன் பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் புதரகப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்திருந்தப் பேட்டியில் இருந்து சங்க மக்க்ளின் கவனத்திற்காக இப்போது சங்கப் பலகையில் மறு ஒளிபரப்பு

நான் இந்த பதிவை எழுதுவது ஒரு பொறை கடையிலிருந்து, ஆகவே இங்கு ஓடும் பாட்டுக்களும், வசனங்களும் எனது பதிவில் தெரிந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

வ.வா. சங்கத்தின் மிக முக்கியஸ்தரான அக்கா ஆற்றலரசி பொன்ஸ் அவர்கள் சங்கத்துக்கு வந்ததாக கூறப்படும் ஒரு கடிதத்துக்கு பதில் சொல்லும் பதிவில், நான் இதுகாறும் அரசியல், பொது வாழ்வு, மக்கள் தொண்டு, இலக்கிய பணி, உருவாக்க சிந்தனை, பொருளாதார மேம்பாடு, இன்னும் என்னிலடங்காத்துறைகளில் நான் பெற்றிருந்த இடத்தை ஒரே நாளில் புல்டோசர் கொண்டு இடிக்கும் விதத்தில் இருப்பதாக சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் கருதுவதால், இந்த அறிக்கையை சங்கத்தின் தூண் என்று சொன்னாலும் கூட சங்கபலகையில் இடம் / அனுமதி மறுக்கபட்ட நிலையில் நானே எனது சொந்த செலவில், எனது சொந்த ஊடகத்தில் வெளியிடும் கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளேன்.

மேலும் விவரமாய் படிக்க

இந்த அறிக்கைக்கு தொடர்பான பிற விவரங்கள் 1

இந்த அறிக்கைக்கு தொடர்பான பிற விவரங்கள் 2

Wednesday, June 21, 2006

'கை' திடீர் மாயம் - திடுக்கிடும் உண்மைகள்

'நாம ரெண்டு பேரும் செத்துச் செத்து வெளாடலாமா" என்று பாசத்தோட கூப்பிட்டு என்னைய கதிகலங்கச் செய்யும் பாசத்தின் பிறப்பிடம், சங்கத்தின் உண்மைத் தொண்டன் - "கை" என்று அனைவராலும் அழைக்கப்படும் தேவ் ஆறு வருசம் லீவு சொல்லிட்டு திடீர்னு மாயமா மறைஞ்சு போனது நம்ம எல்லாத்துக்கும் தெரியும். ஆனா காணாமப் போனவரு எங்கே போனாரு என்ன ஆனாருன்னு யாராச்சும் நெனச்சுப் பாத்தீங்களாய்யா? அந்தப் பாசப்பிழம்பை நீங்கல்லாம் இம்புட்டு சீக்கிரம் மறந்திட்டீங்கன்னு நெனக்கும் போது தான் மேல்(Male இல்ல) எல்லாம் கொதிக்குதுய்யா.

இப்பச் சொல்றேன் கேட்டுக்கங்க. எம்புட்டுத் தான் தல தெருத் தெருவாத் திரிஞ்சு ஆப்பு வாங்கினாலும் ஒரு மனுசன் இல்லறத்துல வாங்குற "ஆப்பு" மாதிரி வராதுன்னு அனுபவத்துல பட்டு பட்டுத் தெரிஞ்சுக்கிட்ட தேவ் ஒரு மெகா ஆப்புக்கு மெகா ப்ளான் போட்டாப்புல. தலக்கு இல்லறத்துல ஆப்பு வாங்க வைக்க என்ன பண்ணலாம்னு பயங்கரமா யோசிச்சதுல கட்டத்துரை பார்த்திபன் சதியால கெழக்காப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போன தன்னோட உடன்பிறவா அண்ணி "கைப்பொண்ணு"வைத் திரும்ப சங்கத்து ஹெட்குவார்ட்டர்ஸ்க்கு கூட்டியாறது தான் இதுக்குச் சரியானத் தீர்வுன்னு முடிவுசெஞ்சாப்புல. ஆறு வருசம் லீவுன்னு ஒரு மெகா பீலாவை அவுத்துவிட்டுப் புட்டு சங்கத்து ஆளுங்களுக்கும் டன் கணக்குல அல்வாவைக் குடுத்துப்புட்டு யாருக்கும் தெரியாம "கைப்பொண்ணோட பொறந்த வீடான கெழக்காபிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்குக் ராவோட ராவாக் கெளம்பிட்டாப்புல.

அங்கே போனா பட்டித் தொட்டியெல்லாம் கைப்பொண்ணு பேரு தானாம். அவுங்க நாட்டுலேயே கைப்பொண்ணு தான் செவத்தப்புள்ளங்கிறதால லோரியல் ஹேர் க்ரீம், லாங்கைன்ஸ் கைகடியாரம், கோகா கோலா இப்படின்னு இந்தியாவுல 'அக்கா ஐஸ்" வர்ற வெளம்புரத்துக்கெல்லாம் புக் ஆயிட்டாங்கப் போல. எங்கே பாத்தாலும் கைப்பொண்ணோட போஸ்டரும் பேனரும் தானாம். ஏற்கனவே 'மிஸ் கெலக்காப்பிரிக்கா'வா வேற தேர்ந்தெடுக்கப்பட்டுட்டாங்களாம். அடுத்ததா 'மிஸ் ஆப்பிரிக்கா' பட்டம் வாங்க பூனை நடை பழகிட்டு இருக்கும் போது தான் நம்ம தேவ் கைப்பொண்ணைப் பாத்துருக்காப்புல. "கண்டேன் கைப்புவை ஆப்பினுக் கணியாய்" அப்படின்னு கைப்பொண்ணுக் கிட்ட 'சொல்லின் செல்வர்' ஸ்டைல்ல சொல்லப் போன தேவைக் கைப்பொண்ணோட சித்தாப்புக்களல ஒருத்தரு பாத்துட்டாப்புல. பார்த்துட்டு சும்மா போயிருந்தா பரவால்லியே...அதுக்கப்புறம் நடந்ததை நெனச்சா தான் மறுபடியும் மேல் எல்லாம் பதறுது. எங்க நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தர்ற எங்க "குடும்பத்து குலவிளக்கு" கைப்பொண்ணைக் கூட்டிட்டு போகவாடா வந்திருக்கே?"ன்னு ஒரு நாலு நாளு கட்டி வச்சி பேக்சைட்ல கழுதைப்புலியை வச்சி கடிக்க வச்சிருக்கானுங்க. அம்புட்டு வலியிலயும் 'கை'க்கு சங்கத்து நெனப்பு தானாம்...ஐயோ தல இப்ப ஆப்பு இல்லாம் தவிச்சிட்டிருக்குமேன்னு ரொம்ப தவிச்சிப் போயிட்டாப்புலயாம். எப்படியோ அங்கேருந்து தப்பிச்சி யார் யார் கையைக் காலையெல்லாமோ புடிச்சி ஒரு வழியா எதோ ஒரு கடலோரப் பிரதேசத்துக்கு தேவ் வந்து சேர்ந்திருக்காப்புல.

எறங்குன எடத்துல கழுதைப்புலி கடிக்கு எச்சியைத் தொட்டுத் தொட்டு ஒத்தடம் குடுத்துக்கிட்டே மெல்ல நடந்து வந்தா சங்கத்து கீதமான "ஒன்றா ரெண்டா ஆப்புகள், எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா"ங்கிற பாட்டை யாரோ ரெண்டு கட்டையில பாடுறதைக் கேட்டுருக்காப்புல. ஆஹா...நம்ம சங்கத்து சிங்கங்கள்ல யாரோ ஒருத்தரு இங்கே பக்கத்துல இருக்காருன்னு நம்ம தேவ் புரிஞ்சிக்கிட்டாப்புல. கட் பண்ணா அங்கேருந்து ஒரு நாலு கல்லு தூரத்துல நம்ம வெவசாயி இளா 'கஜா கா தோஸ்த்'னு சொல்லி கள்ளத் தோணியில ஏறி கதாருக்குப் பதிலா கேரளால எறங்கி அங்கே வேஷ்டி கட்டுன அம்மணிங்களை லுக் விட்டுக்கிட்டே சங்க நாதத்தை மொழங்குன படியே போயிட்டிருக்காப்புல. மறுபடியும் கட் பண்ணா தேவ் சரி நாமும் சங்கத்துப் பாட்டைப் பாடினா அங்கிட்டுப் பாடுற சிங்கம் யார்னு கண்டுபிடிச்சிரலாம்னு இவரும் ஒரு நாலு கட்டையிலே பாட ஆரம்பிக்கிறாரு. அப்படியே வெவசாயி பாட, தேவ் பாட இப்படின்னு ரெண்டு பேரும் பக்கத்துல வந்து அண்ணா தம்பின்னு கட்டிப் பிடிச்சிக்கிறாங்க. தேவைக் கண்டுபிடிச்சாச்சு அடுத்த பஸ்ஸைப் புடிச்சு சீக்கிரம் விதவுட்ல வந்துடுறோம்னு நம்ம வெவசாயி நேத்து டிரங் கால் போட்டு சொன்ன சேதி தான் மேலே?

மக்களே! அப்பு வைப்பதே ஒன்றே தன் கடமை என்று எண்ணும் தேவ் தலக்காக முதல் முறையாகக் கழுதைப்புலியிடம் கடி வாங்கியுள்ளார். அந்த கடிக்கு அருமருந்தாய் கை தேவிடம் நீங்கள் சொல்லும் ஆறுதல்கள் அமைய வேண்டும் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

"தலக்காக கழுதைப்புலி கிட்ட கடி வாங்கினியாடா...'கை' செல்லம்? ரொம்ப வலிக்குதாடா? இனிமே நீ இந்த இல்லறம் இல்லாத அறம்னு இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ண அப்புறம் என்னை மனுசனாவே பாக்கமுடியாது. எனக்கு நீங்க தாண்டா கண்ணுங்களா முக்கியம். அதை புரிஞ்சி நடந்துக்கங்க. இந்த சேதியை நேத்து நைட்டு கேட்டதுலேருந்து ரெண்டு ஃபுல் மீல்ஸ் ரெண்டு குவார்ட்டரு இதைத் தவிர அன்னந்தண்ணி எறங்கலைய்யா..எறங்கலைய்யா"

Saturday, June 17, 2006

விருந்து சமைக்கிறாங்க வ.வா.சவிலே..

நூறாவது பதிவில் அண்ணன் கைப்புவின் புகழைப் பறை சாற்றிப் பெருமை சேர்த்த கழகப் போர்வாள் கச்சேரி தேவ் தம் வலையுலகப் பயணத்தில் நூறு என்னும் மைல்கல்லை அடைந்ததைப் பாராட்டி அண்ணன் கைப்பு சொந்த சமையல் செய்து விருந்து வைப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அண்ணன் இதுவரை சமையற்கட்டுப் பக்கம் வந்ததே தன் தாயாரிடமிருந்து தீய்ந்த தோசையை வாங்க மட்டுமே என்பதால் சமையலறையில் உதவிக்காக சங்கக் கண்மணிகள் கை கொடுக்க வருகிறார்கள்.

கைப்பு டீக்காக ஏப்ரான் எல்லாம் அணிந்து தொப்பியுடன் சமையலுக்குத் தயாராக வருகிறார்.

கைப்பு: ஓகே.. சங்க மெம்பர்ஸ், எல்லாரும் ரெடியா? சமையலை ஆரம்பிப்போமா?


பாண்டி: எல்லாம் ரெடி தல.. நீ சொன்னதும் ஆரம்பிக்க வேண்டியது தான்..

கைப்பு: ஆமாம், சங்கத்து மக்கள் எல்லாரும் இருக்காங்க சரி, அதோ அந்தாண்ட நிக்குதே ஒரு பொண்ணு, அது யாரு பாண்டி?

பாண்டி: ஹி ஹி.. தல, என்ன தல அப்படிக் கேட்டுப்புட்டீங்க.. அதான் நம்ம சிந்து.. ஹி ஹி..


பார்த்தி: சிந்துவா? அந்த கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டர்?என்னாது இது.. பெரிய ஊழலா இருக்கும் போலிருக்கு... கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டருக்கு இங்க என்ன வேலைன்னு கேக்கறேன்?.. விசாரிக்கறேன். விசாரணை கமிஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.. இது ஒண்ணும் சரியில்லை..

சிபி: பார்த்தி, கொஞ்சம் சும்மா இரு.. பாண்டி, ஹி ஹி.. சிந்துவுக்கு சமையல் தெரியும்னு கூட மாட ஒத்தாசையா கூட்டிகிட்டு வந்த தானே?

பாண்டி: இல்ல சிபியண்ணே.. நம்ம சமையல் செய்ய என்ன வேணும்?

பொன்ஸ்: என்ன வேணும்? மைக்ரோவேவ் ஒவன் வேணும்.. அதுல பவர் பட்டனைப் பார்த்து..

இளா: ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. விட்டா சோறு வடிச்சி, கொழம்பு வச்சி, வெண்பாவும் வடிச்சிட்டுத் தான் மூடுவாங்க.. அக்கா.. பொன்ஸக்கா.. கொஞ்சம் சும்மா இருங்கக்கா.. பாண்டி சொல்லட்டும்...


பாண்டி: சமையல் செய்ய, முதல்ல ரெசிபி வேணாமா? அதான், என்னென்ன ரெசிபி வேணும்னு சொல்றீங்களோ, அதையெல்லாம் கம்ப்யூட்டர்ல தேடிக் குடுக்க எனக்கு உதவியாத் தான் சிந்து வந்திருக்கு.. சிந்து, கமான் யா.. கொஞ்சம் டீ போடுவது எப்படின்னு தேடு பார்க்கலாம்..

பொன்ஸ்: டீ போட எல்லாம் எதுக்கு கம்ப்யூட்டர்.. என் கிட்ட விடுங்க தல.. என்னோட அடுத்த பதிவே.. மைக்ரோவேவில் டீ போடுவது எப்படி?ங்கிறது தான்

பெருசு: ஐயோ ஐயோ.. இந்த டீ போடுவது மாதிரி சின்ன மேட்டரை எல்லாம் விடுங்கப்பா.. என்னா இது.. சின்ன பிள்ளத் தனமா. அப்படியே முன்னேறி ஹைடெக்கா உப்புமா சாப்பிடுவீங்களா.. டீப் போடறாங்களாம் டீ..

கைப்பு ( பெருசுவை அதிசயமாகப் பார்க்கிறார், தனக்குள்): நம்ம சங்கத்துல உப்புமா எல்லாம் செய்யத் தெரிஞ்ச ஆளா?!!! பெரிய ஸ்டார் குக்கா இருப்பார் போலிருக்கே.. இவரை விடக் கூடாது.. (வெளியில்) அட பெருசு, வெவரமான ஆளாத் தான் இருக்கீரு.. உப்புமாவே செஞ்சுடுவோம்.. உப்புமா உங்க டிபார்ட்மென்ட் ஆமாம், சொல்லிட்டேன்.. பாண்டி, இவருக்கு உப்புமா செய்ய என்ன வேணும், ஏது வேணும்னு கேட்டு லிஸ்டுவாங்கிக்க..


பாண்டி (மனசுக்குள்): தலைக்கு புத்தி போவுது பாரு.. போயும் போயும் விருந்துக்கு உப்புமா எவனாவது செய்வானா?!! ஒரு பிரியாணி, ஒரு சிக்கன் 65ன்னு போட்டா சொகமா சாப்டுட்டு சொகமாத் தூங்கலாம்..ம்ஹும்.. நேரம், (சத்தமாக) பெருசு, முத ஐட்டம் உன் ஐட்டம் தான்யா.. என்ன வேணும் உப்புமா செய்ய? சேமியா உப்புமாவா, இல்லை ரவா உப்புமாவா?

பெருசு: இல்லை இல்லை.. இதெல்லாம் இல்லை.. உப்புமா செய்யணும்னா, எனக்கு இட்லி வேணும்..

பொன்ஸ்: என்னது இட்லியா?

இளா: இட்லி யெல்லாம் யாருக்கு செய்யத் தெரியும்? இட்லி வடைன்னு ஒருத்தர் இருக்காரு.. அவரை வேணா கூட்டிட்டு வரலாம்..

பெருசு: எனக்கு இட்லி இருந்தாத் தான் உப்புமா செய்ய வரும்.. கரெக்டா சொல்லுங்க, இட்லி எப்போ வாங்கியாருவீங்க? எனக்கு அஞ்சுமணிக்கு வெண்பா க்ளாஸ் இருக்கு.. கொத்தனார் வரச் சொல்லி இருக்காரு.. போகணும்..

கைப்பு: ஏய்யா? !! இட்லி எல்லாம் செஞ்சா அத விட்டுட்டு எவனாவது உப்புமா செஞ்சி சாப்டுவானாய்யா? இட்லி செய்யும் அளவுக்கு சமைக்கத் தெரிஞ்சா நாங்க இப்படிப் பேசிகிட்டு இருப்போமா? ம்ஹும்.. இது தேறாத கேஸு.. சரி சரி பாண்டி, நம்ம தான் மெனு முடிவு பண்ணணும் போலிருக்கு.. யாருக்கு என்னென்ன சமைக்கத் தெரியும்னு சொல்லுங்க..

பொன்ஸ்: எனக்கு சாதம் வடிக்க நல்லா தெரியும்ணே.. அதாவது... மைக்ரோவேவ்ல,,

கார்த்திக்: ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்.. நீங்க சாதம் வடிச்ச கதை தான் அமெரிக்காலேர்ந்து நியூசிவரைக்கும் எல்லாருக்கும் தெரியுமே.. கொஞ்சம் எங்களையும் பேச விட்டா நல்லா இருக்கும்..

அப்போது கீதா வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு ஆக்ரோஷமாக உள்ளே வருகிறார்

பொன்ஸ் (முணுமுணுப்பாக) வந்துட்டாங்க.. தலைவலி

கீதா : என்ன தலைவரே.. நிரந்தரத் தலைவலியான என்னை விட்டுவிட்டு எல்லாரும் எங்கே போய்விட்டீர்கள்? "சிபி ஏன் குமார காவியம் எழுத வில்லை" என்று திடீர் என்று நினைவு வந்ததால், பாதி சாப்பாட்டில் எழுந்து அவருக்கு போன் செய்த காரணத்தால் நீங்கள் இங்கே இருப்பது தெரிந்தது.. இல்லைன்னா என்னை விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் என்ன சதி செய்கிறீர்கள் என்றே தெரியாமல் போயிருக்கும்.

பாண்டி: கீதாக்கா, அமைதி அமைதி..சதி இல்லைக்கா, சமையல் தான் செய்யறோம். எதுக்கு இத்தனைக் கோபப் படுறீங்க.. நம்ம தேவ் நூறாவது கச்சேரி போட்டுட்டாப்ல.. அதுக்குத்தேன் எல்லாரும் சேர்ந்து விருந்து சமைக்கப் போறோம்.. இப்போ பொன்ஸக்கா சாதம் வடிக்கப் போறாங்க.. (பொன்ஸ் ஏதோ பேச ஆரம்பிக்கிறார்..)
அக்கா.. இருங்கக்கா.. எப்படி வடிக்கிறதுன்னு கேட்கலை.. இருங்க இருங்க.. பேராசிரியர் கார்த்திக் தோசை சுடுவதில் எக்ஸ்பர்ட்.. அவரு தோசை செஞ்சிடுவாரு.. நீங்க என்னக்கா செய்வீங்க?


கீதா: நான் சாம்பார் நல்லா வைப்பேன்.. நானே சாம்பார் வைக்கிறேன்..

பொன்ஸ்: ஆனா அதுல உப்பு மட்டும் போட மறந்துருவாங்க!!

கீதா திரும்பி பொன்ஸை முறைக்கிறார்.

கீதா: சிலப்பதிகாரத்துல சாம்பாரைப் பத்தி என்ன சொல்லி இருக்குன்னா,..

சிபி: இருங்க இருங்க.. இதெல்லாம் வேண்டாம்... சரி, பாண்டி, எனக்கென்ன வேலை.. நான் என்ன செய்யணும்? கமான்.. டெல் மீ.. கமான்... கை பர பரங்குது..

கார்த்திக்: ஆமா, என்னவோ விருந்துங்கறீங்க ஒரே வெஜிடேரியனா இருக்கு.. மருந்தாகிடப் போகுது.. பார்த்து...

மகேஸ்: ஆமாம்.. எல்லாம் மருந்து ஐட்டமாவே இருக்கு.. ஒரு கிடா வெட்டி பிரியாணி போட்டோம்னு வைங்க..

பொன்ஸ்: ஆடெல்லாம் வெட்டக் கூடாது.. ஆடு பாவம்.. மல்லிச் செடி கூட பாவம்.... இருங்க நான் போய் மேனகா காந்தி கிட்ட சொல்லப் போறேன்..

கைப்பு : ஆகா.. இந்தப் பொண்ணை வச்சிகிட்டு ஒண்ணுமே செய்ய முடியாது போலிருக்கே.. பூனையை மடியில கட்டி சகுனம் பார்த்த மாதிரி..

பொன்ஸ்: ஆமாம் அண்ணே.. எனக்குப் பூனை ரொம்ப பிடிக்கும்.. யானையும் பிடிக்கும்.. யானை இருக்கு பாருங்க..எத்தனை பெரீசு..

பெருசு: இதுக்கு நம்மளே பரவாயில்லை போலிருக்கு.. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறாங்க..


கீதா: ஆமாம்..இந்த ஆடு கோழி எல்லாம் பேசாதீங்க.. பேசாம, போளி செய்யலாம்...

பெருசு: ஆகா, போலியா.. எனக்கு வெண்பா க்ளாசுக்கு நேரமாச்சு..

கைப்பு: இருங்கம்மா.. இந்த மகளிர் அணியைச் சும்மா இருக்க வைக்கிறதுக்குள்ள மனுசனுக்கு உயிர் போய் உயிர் வருது.. ரெண்டு பேர் இருக்கும் போதே இப்படின்னா, இன்னும் புதுசா கெக்கே பிக்கேன்னு எல்லாத்தையும் போய் கூட்டிட்டு வருது இந்த பொன்ஸு.. கொஞ்சம் அடக்கி வைக்கணும் எல்லாத்தையும்.. சரி சரி.. விவசாயி இளா.. உங்க பண்ணையிலேர்ந்து ஒரு பத்து ஆடு, இருபது கோழி, அஞ்சு கிலோ கோஸ், பத்து கிலோ வெங்காயம் எல்லாம் எடுத்துட்டு வாங்க.. சமையலை ஆரம்பிக்கலாம்..

இளா: (தனக்குள்) அடடா.. என்னது இது.. தின்னே அழிச்சிடுவாங்க போலிருக்கே.. கட்சி நிதி வேற காலியா இருக்கு.. அப்டியே எஸ்கேப் ஆக வேண்டியது தான்.. (சத்தமாக) அண்ணே.. அதெல்லாம் இந்த முறை வெளில வாங்கிக்குங்க.. எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு.. கதார் வேற போகணும்.. இப்போ தான் நேரம் பார்த்தேன்.. வரேண்ணே...


கைப்பு: தம்பி.. இளா.. இளா.. (கூப்பிடக் கூப்பிட திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.. )

(இதற்குள் கட்ட துரை பெருசு, சிபி காதில் ஏதோ சொல்கிறார்)

சிபி: இருங்க தல.. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..

கைப்பு: அட நீ வேறயா? என்ன உண்மை?

சிபி: நானும் சங்கத்துல தானே இருக்கேன். நானும் இப்போ தானே ஒரு நூறாவது பதிவைப் போட்டேன்.. எனக்கு மட்டும் எந்த ட்ரீட்டும் வைக்கலை.. இப்போ கச்சேரில நூறாவது பதிவுன்ன உடனே பிரியாணி என்ன, ஜிகிர்தண்டா என்னன்னு ஒரே பெரிய ஸ்பெசல் விருந்தே தயார் பண்றீங்க.. அதை வேற என்னை வச்சே வேலை செய்ய வைக்கிறீங்க?? என்ன நடக்குது?

பொன்ஸ்: தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது..


கைப்பு: ஐயோ, ஐயோ பேச ஆரம்பிச்சிட்டாளே.. டேய் பாண்டி.. அவளைக் கொஞ்சம் அந்தப் பக்கம் கூட்டிப் போடா...

சிபி: அப்டீன்னா? என்ன சொல்ல வர்றீங்க?

பொன்ஸ்: இப்போ, தேவோட நூறாவது பதிவைப் பாருங்க.. நம்ம சூப்பர் ஸ்டாரு, கைப்புன்னு போட்டு அசத்திட்டாரு.. நீங்களும் போட்டீங்களே ஒரு நூறாவது பதிவு.. ப்ரோபேசன் பதிவாம்ல..
நூறாவது பதிவிலயே நீங்க ப்ரோபேஷன் லெவல் தான் நினைவிருக்கட்டும்..


இதைக் கேட்டதும் தளபதி சிபிக்குக் கோபம் வந்து விடுகிறது, அவரது காது மற்றும் கண் தெரியாமல் போய் விட்டது.(refer to Sibi's profile). இத்துடன் சங்க உறுப்பினர்களும் பயந்து போய் ஒவ்வொருவராக எஸ்கேப் ஆக, சிபி கோபத்தோடு கைப்புவின் எறும்பை எடுத்து பொன்ஸின் யானை மீது போட்டுவிட்டு "அவன அமுக்கிக் கொல்லுடா மாப்ள..." என்று கத்தத் துவங்க.. கைப்புவும் எஸ்கேப்..

Wednesday, June 14, 2006

விவசாயி க(உ)தார் விஜயம்

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஒட்டகப் படையில் ஆள் சேர்ப்பதற்காக...(சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்...ஒட்டகம் சேர்ப்பதற்காக) ஞாயிற்றுக் கிழமை கதார் செல்லவிருக்கும் சங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவசாயி இளா அவர்களின் பயணம் இனிதே அமைய எங்கள் வாழ்த்துகள்.

இப்பயணத்தின் வாயிலாக கதார் சேக்குடன் வ.வா.ச. கதார் நாட்டு எக்ஸ்டென்ஷன் கவுண்டர் திறப்பது குறித்தும், வளைகுடா வட்ட சங்கத்து சிங்கங்களுக்குப் ப்ளாக்கில் விவசாயம் செய்வது குறித்தும் மகசூலை மேம்படுத்துவது குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கவிருக்கிறார்.

கதார் நாட்டு விமான நிலைய வாயிலில் கடலை சாகுபடி குறித்து கதார் நாட்டு காலேஜ் பசங்களுடன் தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பர் விளைச்சல் பெறுவது குறித்து பேச சங்கத்துச் சிங்கம் பாண்டிக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வ.வா.ச. தென்மதுரை வட்ட கண்மணிகள் விவசாயியை ஞாயிற்றுக் கிழமை அன்று வழியனுப்ப சென்னை மெரினா கடற்கரையில் கரகாட்டம் ஒத்திகை நடத்தியபோது எடுக்கப் பட்ட படம்.

Monday, June 12, 2006

வருத்தப்படாதீங்க ப்ளீஸ் !!

இப்படியெல்லாம் வருத்தப்படணுமா?


வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வந்த பின்னூட்டத்திலே பலபேரு தேவையில்லாமல் வருத்தப்பட்டுகிட்டு இருக்கறத நெனச்சு ‘தல’ கைப்பு ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருக்குறாரு. எப்படி வருத்தப்படாம இருக்கறதுன்னு ஆலோசனை நடக்குது.

கைப்பூ : இதப்பய புள்ளக எல்லாம் வருத்தப்படாம இருப்பங்கன்னும்னு தான் சங்கத்தை ஆரம்பிச்சா என்னய்யா அல்லாருக்கும் பார்த்தா ஒவ்வொரு கொறை இருக்கும் போல என்ன பண்ணலாம் சொல்லுங்கப்பூ.

சிபி : வருத்தத்தை வருத்தப்பட வைக்க வேண்டும் . வருத்தம் என்னும் விருத்தம் இங்கே தொக்கி நிக்கிறது ஏன் என்ற கோள்வியினை நம்முன் வீருகொண்டு எழுப்பி கெக்கலிட்டு பார்க்கிரது.

கைப்பூ : ஐயா ஐயா சிபி கொஞ்சம் புரியமாதிரி சொல்லுப்பூ. என்னடா சிபி சொல்றது கூட புரிய மாட்டீங்குடேன்னு அவனவன் அப்புறம் புதுசா வருத்தப்பட ஆரப்பிச்சுடுவாங்க !

தேவு : நிறுத்தச் சொல்லுங்க. அவனை நிறுத்தச்சொல்லு இவனை நிறுத்தச்சொல்லு.

கைப்பூ : தேவு எதையப்பா நிறுத்தச்சொல்றே ??

ஜொள்ளு பாண்டி : நான் வரும்போதே என் வண்டிய நிறுத்திட்டு தானே வந்தேன் !

தேவு : நிறுத்தனும். எல்லாரும் வருத்தப் படுறதை நிறுத்தனும் !! ஏன் எப்படி எதுக்குன்னு யாரும் எதுவும் கேள்வி கேட்காம வருத்தப்படுரதை நிறுத்தனும் !!!

பொன்ஸ் : என்ன இப்படி பேசறீங்க? எப்படி நிறுத்தது?? வருத்தப்படாத இருக்கனும்னா எப்படி வருத்தப்படரதுன்னு தெரிஞ்சாத்தானே வருத்தப்படாம இருக்க முடியும் என்ன நான் சொல்றது ??

ஜொள்ளுபாண்டி : ஐயா எல்லாரும் என்னமோ சொல்றீங்களே ‘தல’ என்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கய்யா !!!

கைப்பூ : ஏ வெளங்காத பயலே. நானே என்னடா சொல்றாங்க இவங்கன்னு மண்டையப் பிச்சிகிட்டு இருக்கேன் என்கிட்ட போயி வெளக்குன்னு கேட்டுகிட்டு.

விவசாயி : வருத்தம் அப்படீங்கறது வயக்காடுல சாகுபடி செய்யிறப்போ இடையிலே வளர்ற ‘களை’ மாதிரி. அதைய முற்றிலும் களைய முடியாட்டியும் அப்பப்போ களைய முடியும் அப்ப்டீங்கறதைத்தான் நம்ம விவசாய விஞ்ஞானி விஸ்வனாதனும் சொல்லியிருக்காறு. அப்படியே வயக்காட்டிலே ‘ வரப்பு’ ஓரமா ஒக்காந்து யோசிச்சா நல்லா தீர்வு கெடைக்கும் !

பொன்ஸ் : வாவ் !! சரியாகச்சொன்னீர்கள் விவசாயி.. இதையேதான் காளமேகப்புலவரும் சொல்லியிருக்காருன்னு நேத்துதான் படிச்சேன் !

ஜொள்ளு பாண்டி : என்னாச்சு எல்லாருக்கும் . குடுகுடுப்பை காரன் மாதிரி ஆளாளுக்கு என்னமோ புரியாத பாசையிலே சொல்லிகிட்டு இருக்காங்களே !’ இனிமே சங்க மீட்டிங்குக்கே ட்ரான்ஸிலேட்டர் வச்சிக்கனும் போல !

கைப்பூ : யப்பா கண்ணுகளா யாராச்சும் புரியரமாதிரி பேசுங்களேப்பா. உங்க பேச்சைக் கேட்கிறப்போ கண்ணை கட்டிகிட்டு வருதே !

பொன்ஸ் : ஐயோ தல இவ்ளோ நேரமா உயிரைக்கொடுத்து பேசிக்கிட்டு இருக்கேன் புரியலையா ?? ஐயகோ. இப்போதே ஒரு மன்னிப்பு அறிக்கை விடிறேன்.

கைப்பூ : ஆத்தா பொன்ஸு கொஞ்சம் நில்லும்மா ! நான் என்னாத்த சொல்லிபிட்டேன்னு இப்படி அறிக்கை விடுறேன்னு சொல்லுதே ?

பொன்ஸ் : யாரையும் அலட்சியம் செய்வது என் லட்சியமல்ல ! அலட்சியம் என்ற லட்சியம் கொண்டவருக்கு அதைக்கொள்ளாமல் இருக்கதானே நான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் ??

தேவு : வருத்தப்படாத சங்கத்திலிருந்து ஒப்பாரிச்சத்தம் வருவது அழகல்ல ! எங்கெல்ல்லாம் வருத்தமின்மை கண்ணகி சிலைபோல் களையப்பட்டு கொடும் கூற்றாம் ‘கவலை’ முன் வீழ்ந்து கிடக்கிறதோ அங்கெல்லாம் வருத்தப்பாடாதலை மீட்டு மீண்டும் நிறுவவேண்டிய கடமையைத்தான் செய்ய வேண்டுமெயொழியா ஏன் வீழ்ந்ததென வீண் வாதம் விளக்கம் தேவையில்லை !!

பொன்ஸ் : ஆஹா எப்படி முடியும்? வருத்தம் கொள்ளல் பாவமில்லை. வருந்தா மருந்தொன்று உண்டென்று சொன்னால் அது மருந்தல்ல அகழ்தெடுத்த அமிர்தம்.

சிபி : அதைத்தானே பொன்ஸ் நாம் கடைந்து கடைந்து சங்கம் வரும் தங்கங்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஜொள்ளுபாண்டி : என்னய்யா ஆச்சு எல்லாருக்கும் ? ஏதோ சங்ககாலப் படம் பார்த்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கீயளே !!

கைப்பூ : எலே பாண்டி. எனக்கு அப்படியே கண்ணை கட்டிகிட்டு வருது. கொஞ்சம் கைத்தாங்கலா கூட்டிகிட்டு போறியா ??

தேவு : என்னாச்சு ‘தல’ சோமபானம் சுராபானம்னு எதாச்சும் உள்ள போச்சா ?

கைப்பூ : பானமாவது? பனங்காயாவது ? வருத்தப்படாம இருக்கரது எப்படீன்னுதனே கேட்டேன். இப்படி போட்டு பொளந்து கட்டீட்டீயளே ! ஒன்னூமே புரியலையே ? எவ்ளோ நேரந்தான் புரியரமாதிரியே நான் நடிக்கிறது ??


Tuesday, June 6, 2006

போட்டோ போட்டாச்சு

சங்கத்து மக்களை அறிமுகத்துக்கு முன் சங்கத்து சின்னத்தை அறிமுகப்படுத்திறோம். அதாங்க ஆப்பு.
ஆப்புக்கு மட்டும், தல போடும் சட்டை வண்ணங்களான கிளி பச்சை, பஞ்சு மிட்டாய், ஊதா ஆகியன கலந்து அடிச்சு விட்டு இருக்கோம். இனிமே இதுவே நமது சின்னம், அடுத்த தேர்தலிலும் இதுவே நமது சின்னமாக இருக்கும்.



இவர் தேவு, தேவுடான்னு இருக்கிற கைப்புவ செத்து செத்து விளையாட மலை உச்சிக்கு போலாம்ன்னு கூப்பிட்டவரு. மண்டையோட்டை கம்பெனி முத்திரையாக்கி சங்கத்தை உறுவாக்கி, கைப்புவை கல்கி காண வைத்தவர். என்றும் கூடவே இருந்து சலிக்காம ஆப்பு வைப்பவர். பேச்சு பேச்சா இருக்கிறப்பவே போட்ட கோட்டை தாண்டி சங்கத்து ஆளை அடிச்சது யாருன்னு கட்டதுரைகிட்ட நேருக்கு நேர் கேட்டு ரப்புன்னு செவுளுமேல அடி வாங்கி உய் உய்ன்னு சத்தம் போட்டு திரும்பி வந்த வீரச் செம்மல்.


சங்கத்துல ரொம்ப டீசன்டுன்னு சொன்னா அது ஜொள்ளு பாண்டிதான். "அவருக்கு நிறைய முடி இருக்கு எனக்கு நிறைய கடை இருக்கு"ன்னு சொல்லி பின்லேடன் அட்ரஸ் கேட்டு கைப்புவையே அசர அடிச்சவர். அடிச்சதோட மட்டுமில்லாமல் போட்டிருந்த துணியை எல்லாம் நாசமாக்கிய சூரர்.


திருட்டு விசிடி ஓடுறதா தகவல் சொல்லி சினிமா தியேட்டர் அதிபரான நம்ம தல'ய ரத்தம் துப்ப வெச்சவர். அர்ஜுனனுக்கு தேரோட்டிய கண்ணன் மாதிரி நம்ம தல'யோட மூணு சக்கர வண்டிக்கு டிரைவராக இருப்பவர். எந்த நேரமும் கூடவே இருந்தாலும் தல்'க்கு அடி விழப்போகுதுன்ன முதல்ல ஓடிப்போர அசகாய வீரர் சிபி.


பெல்பாட்டம் முதலாளி என்று தல'ய அன்போடு அழைக்கும் நம்ம பிகுலுதாங்க இவுங்க. அப்படியே பெட்ஷீட்டுல சுருட்டி ரோடு ரோலர் மாதிரி மேல குதிச்சு கைப்புவை சட்னியாக்கி இட்லிக்கு தொட்டு தின்ற குண்டம்மா. அருள்ல சைக்கிள் கத்து குடுத்த குருங்கிற மரியாதை இல்லாமல் தல'ய சாக்கடைய சுத்தம் செய்ய வெச்ச சங்கத்து கொளுகை பரப்பு செயளாளர்.


"வாங்க பாஸ் நாம அடி வாங்குறது சகஜம் தானே, பயந்தா தொழில் பண்ண முடியுமா, இவுங்க எப்பவுமே இப்படிதான் இருப்பாங்கன்னு" தத்துவம் சொன்னவர். ஹோட்டலில் டீ சாப்பிட சொன்னதும் ஒரு கிராமத்தையே கூட்டி வந்து சாபாட்டை கட்டு கட்டுன்னு கட்டி ஜென்மத்துக்கும் சம்பளமே வாங்க முடியாமல் செய்த பாசக்கார விவசாயி.


கடைசியா சொல்லாத ஒண்ணை சொல்லிக்கிறோம், நாங்க இருக்கிற இடத்தை அதாங்க சங்கத்தோட ஹெட் குவாட்டர்ஸ் (Head-Quarter)படத்தையும் வெளியிட்டு இருக்கிறோம்.

முக்கிய அறிக்கை

நன்றிங்க!

எங்களுக்கு இவ்ளோ சப்போர்ட் இருக்குன்னு தெரிய வெச்சதுக்கு.இனிமே எங்களை நாங்களே மறைச்சுகிட்டு பதிவு எழுதப் போறதில்லை. தெளிவா இந்த உலகத்துக்கு நாங்க யார்ன்னு சொல்லப்போறோம். எங்க அடுத்த பதிவுல சங்கத்தினரின் (கைப்பு, இளா, தேவு, சிபி, பாண்டி, பொன்ஸ்) அனைவரின் புகைப்படத்தையும் வெளியிடப்போகிறோம். அது மட்டுமில்லாம இன்னார் இன்னார் என்ன பண்றாங்கன்னும் தைரியமா சொல்ல போறோம்.

(06-06-06) இன்னைக்கு சரியா இந்திய நேரப்படி 12:30PM க்கு இது வெளியிடப்படும்.


தத்துவம் 2:
சொல்லி அடிச்சா கில்லி
சொல்லாம அடிச்ச தண்ணி
சொல்லியும் சொல்லாம அடி வாங்கினா அது கைப்பு

Monday, June 5, 2006

சங்கம் சாராத பதிவர்களுக்கு ஒரு மடல்

நண்பர்களே..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் சங்கத்தை ஆரம்பித்து இத்துடன் 30 பதிவுகள் ஆகி விட்டன. முதல் பதிவு ஆரம்பித்தது ஏப்ரல் 2006 இறுதியில்.

சங்கத்தின் கொள்கை என்று நாங்கள் சொன்னது கைப்புவைக் கலாய்த்தல் என்பது தான் என்றாலும், கைப்புவைத் தவிர, எங்கள் சங்கத்தில் சேரும் எல்லாரையும் கலாய்ப்பது எங்களின் பொழுதுபோக்காகிவிட்டது.

தமிழகத் தேர்தல் நேரத்தில் ஆரம்பித்த சங்கமாதலால், ஆரம்பத்தில் பல்வேறு தேர்தல் கால கேலிக் கூத்துகளைக் கிண்டல் செய்து தான் எங்கள் செயல்பாடுகள் இருந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக சில தமிழ் சினிமா ஸ்டன்டுகளையும் கிண்டல் செய்தோம். இப்போது உதைபந்து விதிகளைக் கலாய்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இதுவரை எங்கள் பதிவுகள் யாரையும் மனதறிந்து கேலி செய்பவை அல்ல. ஏதேனும் மறைமுக கிண்டலையோ பதிவுலக அரசியல் உள்குத்துகளோ இல்லாத பதிவுகளாகத் தான் அவை இருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம். மிகத் தீவிரமாக எழுதும், எழுதுவதை வாழ்க்கைக் கடமையாகக் கருதி எழுதும் யாரும் பொதுவாக எங்கள் சங்கத்துப் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்கள் சும்மா எட்டிப் பார்ப்பதோடு சரி.

இந்த சுய விளக்கம் எதற்கு என்று கேட்பவர்களுக்கு:

இந்தப் பதிவின் ஒரே நோக்கம், எங்களைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்துவது தான்.

எங்கள் பதிவுகள் நகைச்சுவையைத் தாண்டி வேறு யாரையேனும்/ எதையேனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ கேலி செய்வதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனவா?

பதிவுகள் அளவுக்கு மீறிய நையாண்டியாக இருக்கின்றனவா?

வ.வா.சங்கத்தினரைத் தவிர்த்து மற்றவர்களின் பதிலை மட்டும் இதற்கு எதிர்பார்க்கிறோம். உங்கள் பின்னூட்டங்கள் எங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ள உதவும்.

இந்தக் கேள்விகள் எழும்பக் காரணமான அனானிக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, June 4, 2006

தளபதியின் அறிக்கை

சங்கத்தின் புதிய சிங்கங்களாம் புதிய தோழர்கள் சங்கத்துப் பணியை செவ்வனே செய்வதோடு கடமையை எள்ளளவும் மறக்காது கேள்விகள் எழுப்புகின்றனர். இவற்றிற்கு விளக்கம் கொடுப்பது ஆற்றலரிசி பிகிலு அவர்களின் கடமை எனினும் சங்கத்து சிங்கங்களுக்கு தலை கைப்புவின் அனுமதியோடு ஒரு சில வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன்.

உடன் பிறப்புகளே..... சங்கத்து வரலாற்றை கொஞ்சம் உன்னிப்பாய் ஆராய்ந்து பாருங்கள். சங்கத்து உறுப்பினர்கள் எப்பொழுதெல்லாம் சற்று கண்ணயர்ந்து காணப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் இது போன்ற பிரச்னைகள் தலை தூக்குகின்றன. இவற்றின் காரணம் என்ன?

நமக்குள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கையை பயன்படுத்தி சூழ்ச்சிகளால் சங்கத்தில் கலகம் ஏற்படுத்தி சங்கத்தின் புகழையும், அதிவேக வளர்ச்சியையும் கெடுக்க நினைக்கும் வீணர்களின் வேலை என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் சங்கத்தின் கொ.ப.செ வான தங்கத் தலைவி, ஆற்றலரிசி பிகிலு பொன்ஸ் அவர்கள் மேல் களங்கத்தை சுமத்தி, கேள்விகள் கேட்பதும் நம் சங்கத்தின் உறுப்பினர்களே என்ற மாயத் தோற்றத்தை உண்டாக்கி சங்கத்தில் சலசலப்பை உண்டாக்குவதே இது போன்ற புல்லுருவிகளின் வேலை. இத்தகு விஷமங்களுக்கு இனி நாம் இடம் கொடுக்கலாகாது.

இனி நாம் கைப்புள்ளயை எப்படியெல்லாம் புதிது புதிதாய்க் கலாய்ப்பது என்பது குறித்து உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நிலையில், இது போன்ற வெளி கலாய்த்தல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் காலத்தை வீணாக்கலாமா?

சற்றே சிந்திப்பீர்.

வாழ்க வ.வா.சங்கம். வளர்க நமது கடமைகள்.

இந்தப் பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்? சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?
சங்கத்துக்காகவே உழைத்து உழைத்து உணவு சமைக்கக் கூட நேரம் இல்லாமல் காய்ந்து போன பர்கரையும் உப்பு சப்பில்லாத பிஸ்ஸாவையும் சாப்பிட முடியாமல் முழுங்கும் என்னைப் பார்த்து, களவாடிய நிதியா, ஊழல் செய்த சதியா என்னும் கேள்வியைக் கேட்டது யார்?!!! யார்?!!!
யார் கேட்ட போதும் கேள்வி என்று ஒன்று வந்து விட்ட காரணத்தால், சட்டத்துக்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட என்னுடைய பதில் இதோ: அட்சய திருதீயை அன்னிக்கு எல்லார் வீட்டுக்கும் போய் வந்துகிட்டு இருந்தேனா, எல்லார் வூட்லயும் கொஞ்சம் தங்கம் வாங்கி வச்சிருந்தாங்க.. அங்கங்க ஒரு காசு எடுத்ததுல இம்புட்டு சேர்ந்து போச்சு. (சங்கத்துல அப்படியே நிதி இருந்துட்டாலும்!! ம்கும்)

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?
இது சதி.. உங்களை யாருய்யா கூப்டச் சொன்னாங்க?!! ரொம்ப தான். நான் சொன்னேனா?, நான் சொன்னேனான்னு கேக்குறேன்.. கைப்புவை அண்ணான்னு சொன்னேன்.. அவரு தங்கச்சின்னு சொல்லிட்டாரு.. கார்த்திக்கை பாசமலர்னு சொன்னேன்.. அவரு அக்கான்னு சொல்றாரு!! நானா கூப்பிடச் சொன்னேன்?!!! ம்ஹும்..
தம்பி தேவு.. அக்காவுக்கு ஒரு சோடா எடுத்தா.. தொண்டைத் தண்ணி தீர்ந்து போகுது கத்திக் கத்தி... !!!

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு... இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?
ஐயகோ.. என்னைப் பார்த்து என்ன ஒரு கேள்வி.. இதைக் கேட்க யாருமே இல்லையா?? புதிய பூமியே.. பழைய வானமே.. உனக்குமா தெரியவில்லை என் அருமை!!!!
சரி.. நான் வந்தேன்!! அதை விடுங்க.. நான் இங்க வந்ததும், சங்கத்துல எத்தனை அயல் நாட்டுக்காரங்க புதுசா சேர்ந்திருக்காங்க தெரியுமா?!! மகேஸ், சுகா, மனதின் ஓசை இவங்க எல்லாம் புது வரவு.. இங்க நான் வந்த நேரம் தான் இவங்க எல்லாம் நம்ம சங்கத்துல சேர்ந்திருக்காங்க.. ஏன், சூடான் சிவா கூடத் தான்..
கணக்கு கேட்கும் சங்கத் தலைமையே..
இந்தக் கணக்கையும் பார்!!!
கண்களைத் திறந்து பார்..
கண்ணாடியைத் துடைத்துப் போட்டுப்பார்!!!
இன்னோரு முறை கேட்டுப் பார்!!

4. புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?
என்னைய்யா துரோகம், பொல்லாத துரோகம், என்னைக் கேட்டுகிட்டா தல புட்பால் ஆடப் போனாரு?!! புட்பால் ஆடத் தல போறாருன்னு சொன்னீங்க.. அதான் புட் பத்தின பதிவா போட்டேன்!!!.. அதான்யா, food - உணவு.. அது பத்தின பதிவா போட்டு கிட்டு இருக்கேன்.. "சக்கரை இல்லாமல் காபி போடுவது எப்படி ?" அடுத்த பதிவு, பால் பத்தி.. காத்திருங்கள்!!

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கிய பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்பு பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?
என்ன இது?!! சிறுபிள்ளைத்தனமால்ல இருக்கு?!! பந்தை எசகுபெசகா எடுத்து, தலக்கு அடிகிடி பட்ருச்சுன்னா, பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு பின்னாடியே ஒருத்தனை ஓட விடறேன்.. சரியாப் பாருங்கைய்யா.. அது வேற யாரோ இல்லை.. நானே தான். நானே தான் தலைக்கு பாதுகாப்பு வளையமா பிகிலோட கூட ஓடிகிட்டு இருக்கேன்.. என்னோட தியாகத்தை மெச்சாம, இப்படி போட்டு மொத்துறீங்களே?!! பசங்க எல்லாம் சேர்ந்துகிட்டு!!!

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச... இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?
இது ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டு.. அவதூறு பரப்பும் வேலை.. நெக்ஸ்ட்!!!

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?
கொத்தனாரின் உணவுத் துறை ஒரு காய்ந்து போன பரோட்டா! ஊசிப் போன சால்னா! அதை ஒருத்தர் கைப்பற்ற வேற பற்றணுமா??!! நம்ம எங்கயோ அடுத்த கிரகத்துல சாதம் வடிக்கிறதப் பத்தி ஹைடெக்கா யோசிச்சிகிட்டு இருக்கோம்.. அவரு இப்போ தான் தரமா வெண்பா எப்படி வடிக்கிறதுன்னு பதிவு போடறாரு பதிவு.. அதுக்கு ஒரு சதி வேறயா?!! நம்ம காரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே!!

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?
இந்தக் கேள்விக்கு கொத்தனாரும் ஜீவாவும் பதில் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.. என்னைப் போன்ற அறியாச் சிறுபெண் இதற்கெல்லாம் என்ன கூறுவது??!!

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது... இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?
ஆறு லட்சம் ரசிகர் மன்றம் எந்த ஊர்லங்க இருந்துச்சு?!! ஆறு பேர் கூட இல்லை அந்த ரசிகர் மன்றத்துல.. அவங்க கூட "என்னை இங்கேர்ந்து விடுவி.. காப்பாத்து!!"ன்னு கெஞ்சிகிட்டு இருந்தானுங்க!! நான் தான் போய் அவங்களை எல்லாம் விடுதலை செஞ்சி கூட்டியாந்தேன். இதோ இப்போ சங்கத்து சார்பா மன நல மருத்துவமனைல சேர்த்துட்டு வந்தோமே, அந்த ஆறு பேர்தான்!!

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான...உயிரான... கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று 'வருத்தப்படுவதாய்' பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
வருத்தப்பட்டதாகச் சொன்னேன்.. ஏன் சொன்னேன்?!! எதற்குச் சொன்னேன்? நமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்னும் தெளிவு பிறக்க வேண்டுமென்று சொல்லப்பட்ட மதியூகமான வார்த்தைகள் அவை.
உங்களுக்கு இது புரியாமல் போனது வருத்தமில்லை என்ற போதும், கேள்வி கேட்டு இதைக் கொச்சைப் படுத்திய போது தான் மனம் ரணமாகிறது!!!

தங்கத் தம்பிகளே! ரத்தத்தின் ரத்தங்களே!! அன்பு உடன்பிறப்புகளே!!!
ஒரே கொடியில் நாம் அனைவரும் பூத்திருந்தால், கொடி தாங்காமல் உடைந்து விடக் கூடும் என்பதால், வெவ்வேறு கொடியில் பூத்த உடன்பிறவா சகோதர சகோதரர்களே!!!
நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?!! சங்கத்திற்காக வீக் என்டைக் கூட விலக்கி வைத்து விட்டு வியர்வை வழிய வேலை செய்து கொண்டிருக்கும் என்னை,
வெண்பா பாடவா என்று கூறி கொத்ஸும், வெ.வா. ஜீவாவும் அழைத்துக் கொண்டிருந்த போதும் சங்கத்தின் வெண்பலகையில் என் பெயர் கறுப்பு மையால் எழுதப்படக் கூடாது என்று எண்ணி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும்,
நமது சங்கம் புட்பாலுக்குப் பின் பேஸ்பாலுக்கும், பாக்கெட் பாலுக்கும், ஆவின் பாலுக்கும் ஆடி அடுத்தடுத்துச், சங்கத்தைச் சிறப்பாக்க என்ன செய்யலாம் என்பது தான் நான் அல்லும் பகலும் அனவரதமும் எண்ணிக் கொண்டிருப்பது என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன் (அட, இளவஞ்சி வாத்தியாரை விட நீ...ளமான வாக்கியம் ;))

இப்படிப் பட்ட என்னை நோக்கி, பத்து கேள்விகளை வீசியதல்லாது, அவற்றைப் பதில் சொல்லச் சொல்லி நாளொரு பின்னூட்டமும் பொழுதொரு குற்றச்சாட்டும் வைத்து இந்த ஒரு வாரமாக என்னை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கி விட்டீர்கள்!!

=> இதில் சங்கத்துக்குச் சம்பந்தமில்லாத கட்டதுரையும் பார்த்திபனும் என்னைக் கெக்கலிகொட்டிச் சிரித்த போது அதைக் கண்டிக்க வேண்டிய தலைவர் எதுவுமே சொல்லாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது ஏன்?!!
=> ஒரு கொடியில் பூத்த இரு மலர் என்று அவ்வப்போது சொல்லிக் கொள்ளும் பேராசிரியர் கமிட்மென்ட்ஸ் கார்த்திக் இந்த விவகாரத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்று மௌனம் காத்தது ஏன்?!!
=> கேள்விகளின் ஆழம் புரிந்தும், அதனால் கேள்விக்குள்ளாக்கப் படும் எனது கட்டுரிமை புரிந்தும் கேள்விகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், பேரிச்சம் பழங்களைப் பற்றியே பேசி இந்தக் கொடுமையைத் தளபதி சிபி கண்டிக்காமல் விட்டது ஏன்?
=> இந்த நிகழ்வைக் கண்டித்து "தீக் குளிக்கிறேன்!! தீக் குளிக்கிறேன்!!" என்று கொதிப்பதாகச் சொல்லிய ஜொள்ளு பாண்டி, ஒரு டீக் கூட குடிக்காதது ஏன்?
=> மற்ற தம்பிகள் எல்லாம் இது மாதிரி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போது, ஓடோடி வந்து கைக் கொடுத்த தலைவலி கீதா இப்போது இந்தப் பிரச்சனையில் ஒன்றுமே சொல்லாதது ஏன்?

இத்தனை கேள்விகள் இப்போது எழுகின்றன.. கைப்பொண்ணு காணாமல் போனதற்கும் இப்போது சங்கத்துக்காக, ஒட்டகம் போல் உழைத்த என்னை(நாய், கழுதைன்னு எத்தனை நாள் சொல்றது?!!) ஓரம் கட்ட முயல்வது.. இவை எல்லாம் எதற்காக?!!

* மகளிர் அணியை ஒரே நபர் கட்டி ஆள வேண்டும் என்னும் பேராசையால் எழுந்த பொறாமைக் கடிதமா?
* வட அமெரிக்காவில் கொள்கை பரப்ப நான் வந்து விட்டேன் என்று அஞ்சி தோசை சுடும் பேராசிரியரின் பெரிய சதியா?
* தளபதி தலை மறைவாய் இருந்த போது தலையெடுத்து பொறுப்புடன் கட்சியைப் பார்த்துக் கொண்டேனே, அதற்கு அவர் செய்யும் கைம்மாறா?
* கழகப் போர்வாள், தலயின் கை என்று சொல்லப்படுபவர் எங்கே கைக்கு போட்டியாக, தலயின் மூளையாக நான் வந்துவிடுவேன் என்று எண்ணிக் கிளப்பிய பழியா?

இத்தனை கேள்வியும் எழுந்தாலும், எதுவும் நான் கேட்கும் கேள்வி அல்ல!! இதைக் கேட்பது எனக்காக உயிரையும் தரத் தயாராய் இருக்கும் என் அருமைத் தொண்டர்கள்..
அவர்களுக்கு நியாயமான பதில் சொல்லக் கட்சித் தலைமை கடமைப்பட்டுள்ளது.. சீக்கிரத்தில் இதற்கொரு பதில் தெரியவில்லையெனில், சோழங்க நல்லூர் சந்திப்பில் அஜன்டாவில் இல்லாமல் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வெளிவிட வேண்டியதாகிவிடும்!!!

Friday, June 2, 2006

கைப்பூ ‘பெக்’ காம்

Image Hosted by ImageShack.us


‘தல’ கைப்புவை இந்த உலகக்கோப்பை உதைபந்துல எப்படியாச்சும் ஒரு ‘கோல்’ லாச்சும் போடவைத்து ‘தல’ யின் வீரத்தையும் சங்கத்தின் மேலாண்மையையும் நிரூபிக்க வேண்டிய அவசியத்திலிருப்பதால் அதற்கான ‘டெக்னிகல் அட்வைஸ்’ கொடுக்க சங்கத்தின் தங்கங்கள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். போனதடவை மாதிரி இல்லாம இந்த தடவை ஆளாளுக்கு ஒவ்வொரு கண்டத்திலே இருக்கறதாலே சங்க கூட்டத்தை Video Conference மூலம் நடத்த இந்தியாவில இருந்து ‘போர்வாள்’ தேவு, சங்க டீக்கடை செயலாளர் ஜொள்ஸ், தள்ளாடாத தளபதி சிபி, வீரத்தை ஏக்கர் ஏக்கரா சாகுபடி பண்ணிகீடு இருக்கர விவசாயி எல்லாரும் வந்து அசெம்பிள் ஆகியிருக்காங்க.

விளையாட்டுத்துறை டெக்னிகல் கமிட்டி தலைவரான , வட அமெரிக்க சிங்கம் புட்பால் கண்ட காளை பந்தினைப்பற்றிய அளப்பறியா அறிவையும் அதன் நெளிவு சுளிவுகளைப் பற்றி அர்ஜென்டீனிய டீன் தேழியிடமும் பேக்வார்ட் பார்வார்ட் ஆட்டத்தைப்பற்றி ப்ரேசில் தோழியிடமும் டிபன்ஸ் தொழில்நுட்பத்தை ஜெர்மானிய பெண் சிங்கத்திடமும் பல களங்களிலே கற்று , பயிற்சி பெற்று, வரலாற்று ரீதியாக இதுவரை நடைபெற்ற ஆட்டத்தினை பற்றி அலசி ஆராய்ந்து பதிவுகளை அள்ளித்தெளித்திருக்கும் அண்ணன் கார்த்திக் ஜெயந்த் தலைமையில் இந்தக் கூட்டம் கூடியிருக்கிறது.

சங்கம் கண்ட எங்கள் தல புட்பாலின் நாயகன் ஜெர்மனி கண்ட வ.வா ச. கோமகன் தல கைப்பு , வளைகுடாகிளை செயலர் துபாய் ராசா,( ராசா திருப்தியா ?) தென்னமெரிக்கவிலிருந்து பெருசு மற்றும் இந்தியாவிலிருந்தாலும் இண்டியானாவிலிருந்தாலும் ஓடி ஒடி சங்கப்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும் ஆற்றலரசி ( அப்படீன்னா என்னாக்கா??) ஆவிக்கதைகளையும் ஆவிபறக்க சாதம் வடித்தக் கதைகளையும் ஒருசேர பறிமாறிக்கொண்டிருக்கும் அக்கா பொன்ஸ்சும் ஆஜராகியிருக்கிறார்கள். மேலும் ஆற்றலரசிக்கு கடும் சவால் விட்டு சங்கப்பணிகளை ஆற அமர ஆற்றிவரும் கீதாக்கா மற்றூம் ஒரே கட்சி ஒரே தலைவர் ஒரே தொண்டர் என கழகம் கண்ட மாணிக்கம் எங்களுக்கு தோள் கொடுத்த நாயகன் அ.உ.ஆ.சூ.கு.ம.க. செல்வனும் தன் பரிவாரத்தோடு ப்ரெசென்ட் ஆகிறார். ( தேவூ அத்தனை பேரு பேரையும் சொல்றதுக்குள்ள தாவு தீருதப்பா!! யாரையாச்சும் வுட்டுருந்தா மன்னிச்சி என்னைய வுட்டுருங்க ப்ளீஸ் !! )

கைப்பூ : யப்பா யெல்லாருக்கும் திருப்த்தியா ? நான் பாட்டு செவனேன்னு ஒட்டகத்துலே ஏரி சித்தூர்காட்டு சிலுக்குவார்பட்டின்னு போயி கிட்டிபுல்லோ கபடியோ ஆடிகிட்டு இருந்தேன். என்னையப் போயி புட்பால் ஆடுறான்னு அல்லாரும் சேர்ந்து இப்படி அனுப்பி விட்டுட்டீயளே !!

கார்த்தி : தல கவலைப்படாதீங்க தல. அர்ஜென்டீனாவுக்கு ஒரு மரடோனா பிரேசிலுக்கு ஒரு ரொனால்டோ மாதிரி உங்களையும் ஆக்கிக் காட்டறேன் !!

ஜொள்ஸ் : கார்த்தி அண்ணே ‘தல’ க்கும் ட்ரென்யினிங்க கொடுக்க அர்ஜென்டீனால இருந்தோ இல்ல ப்ரேசில்ல இருந்தோ ஏதச்சும் பொண்ணு ட்ரெய்னர் வாறாகளா ??

கார்த்தி : ஏன் தலய மொத்தமா கவுக்கவா? தல முதல்லா கார்லோஸ் மாதிரி ஹேர் ஸ்டைல்ல மாத்துங்க ! மரடோனா மாதிரி உடம்மை ஏத்துங்க. ரொனால்டினோ போல பின்னாடி தீப்பிடிச்ச மாதிரி ஓடுங்க !!

பொன்ஸ் : ஹேய் கார்த்தி என்னா மேன் சொல்றே ? ‘தல’ இந்த வேர்ல்ட் கப்புல வெளையாடனும் தெரியுதா ?

கார்த்தி : அதுக்கும் கைவசம் பல டிப்பு வச்சிருக்கேன். ‘தல’ . இன்னிக்கு பெரிய பெரிய டீமுக்கே கேப்புல அல்வாவ கிண்டி கிண்டி கொடுக்கர சின்ன டீம் கேமரூன். அங்கன எனக்கு தெரிங்ச பெண்தோழி ‘உகாண்டா ஜிலேபியா’ இருக்காங்க. கால்பந்து ஸ்பெஷலிஸ்ட். . போனதடவை நான் லாஸ்வேகாஸ் போயிருந்தபோ ஒரு டான்ஸ் பார்ல பழக்கம். கோல் போடறது எப்படி அப்படீன்னு அவங்க உங்களுக்கு நெட் ப்ராட்டீஸ் கொடுப்பாங்க.

துபாய் ராசா : நெட் ப்ராக்டீஸ் கொடுக்கரப்போ நானும் ‘தல’க்கி தார்மீக ஆதரவு தரட்டா ??

ஜொள்ஸ் : உங்களுக்கு எதுக்கு சிரமம் துபாய் ? அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?
பொன்ஸ் : நெட் ப்ராக்டீஸ் கொடுக்க ஏதும் ஆம்பிளை கோச் இல்லையா கார்த்தி ?

கைப்பூ : ( அதை காதிலே வாங்காதவர் போல ) அப்படியா கார்த்தி இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம் நெட் ப்ராக்டீஸ்.

நாகை சிவா : என்னா கேமரூன் ? சூடான்ல இருந்து ஒரு ‘கோச்’ சை சூடா நான் இறக்கரேன் . ‘தல’ ம்ம்னு சொல்லுங்கோ !!

கார்த்தி : ச்சூ சும்மா குறுக்க பேசப்பிடாது. சங்க மக்கள் யாருக்காச்சும் புட்பால் தெரியுமா ? இல்ல அதையப் ஒரு பதிவாத்தான் போட தெம்பு இருக்கா ? யாரும் ஏது பேசப்பிடாது சொல்லிட்டேன்.

கைப்பூ : சரி சரி கோச்சுக்காத மேல சொல்லு கார்த்தி !!

கார்த்தி : கோலடிச்சா மட்டும் போதாது தல ! கோலடிச்சதுக்கப்புறம் அப்படியே ஓரமா நின்னு ரோஜர் மில்லா மாதிரி ஒரு ஸ்டைலா ஆட்டம் போடனும் அதுக்குத்தான் மதிப்பே. அப்படி ஆட கத்துக்கொடுக்க ப்ரேசில்ல இருந்து ரெண்டு ‘பெல்லி டான்சரை’ ஏற்பாடு பண்ணிடறேன்.

சிபி : எப்பா முதல்ல தல காலுக்கு பந்து வர ஏற்பாடு பண்ணுங்கப்பான்னா சும்மா பெல்லி டான்ஸ்சு பல்லி டான்சுன்னு ..

தேவு : அட இருங்க சிபி. நான் பெல்லி டான்ஸே பார்த்ததில்லை ஹிஹிஹி

கார்த்தி : குவாட்டர் பைனல் வந்துட்டாலே கூட போதும் எங்கேயோ போய்டலாம்.

ஜொள்ஸ் : கார்த்தியண்ணே அங்கேயும் குவாட்டர் தானா ? ???

தேவு : டேய் ஜொள்ளு மானத்த வாங்காதே .கொஞ்சநேரம் கம்ம்முனு கெட இது வேற குவாட்டர்.

இளா : சரி சரி மேட்டருக்கு வாங்க !

பொன்ஸ் : என்னா கார்த்தி சும்மா மரடோனா , ரோஜர் மில்லா ன்னு ரிடயர்டு கேஸ்சுகளப் பத்தி சொல்லிகிட்டு . ஒரு பெக்காம், ஒரு தியரி ஹென் மாதிரி கொஞ்சம் லேட்டஸ்ட் ப்ளேயர்ஸை பாரு.

கார்த்தி : ‘ தல ‘ The great german Wall ஆலிவர் கானுக்கே சூப்பு கொடுத்துட்டு ஆப்பு அடிக்கற மாதிரி ஒரு கோலடிச்சீங்கன்னு வைங்க. அவ்ளோதான் ! சும்மா பிச்சிக்கும்.

கைப்பூ : ( மனதுக்குள் ) ஆலிவர்கான், பெக்காம்னு ஏதேதோ சொல்றாங்களே நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஆப்பக்கடையும் ரெண்டு ‘பெக்’கு ந்தானே. இவனுக நம்மளை கவுக்காம வுடமாடானுக போல இருக்கே !!!

கார்த்தி : தல என்ன ஒரே யோசனை. பயமா இருந்தா சொல்லுங்க மெக்சிகோ சரக்கு ‘டக்கீலா’ இருக்கு. ரெண்டு ரவுண்டு உட்டுக்குங்க .அப்புறம் புட்பால் க்ரவுண்ட்
என்ன ? சும்மா எகிறி அடிக்கிற அடில பந்து கோல் கீப்பரை பேத்துகிட்டு உள்ள போயிறாது ?

ஜொள்ஸ் : என்னாது ஷக்கீலாவா ???

செல்வன் : ச்சூ என்ன பாண்டி??! அது ஷக்கீலா இல்லை ஆனா அதைவிட கிக்கா இருக்கற டக்கீலா .

கீதாக்கா : அபச்சாரம் அபச்சாரம் சங்க மீட்டிங்குண்ணு கண்ட கருமாந்திரத்தையெல்லாம் பேசிக்கிட்டு. ‘ சிறுசுக வெளச்ச வெள்ளமை வீடு வந்து சேராதாம் ‘ இதுக்குத்தான் என்னைய மாதிரி ஒரு பெரியவங்க வேணுங்கரது.
பொன்ஸ் : ( மனதுக்குள் ) க்கும் அப்படியே இருந்துட்டாலும் . ( சிரித்தபடி ) சரியா சொன்னீங்கக்கா.

கீதக்கா : போதும்பா கார்த்தி நீங்க கைபூவுக்கு ட்ரெய்னிங் கொடுத்தது. ஏ பொன்ஸு எல்லாம் ரெடியா ?

பொன்ஸ் : ( மந்தகாசப் புன்னகையுடன் ) அப்போவே எடுத்து ரெடியா வச்சுட்டேன்க்கா!!
என்னாது? என்னாது ?? எல்லா இடத்திலிருந்தும் குரல் வருகிறது. பொன்ஸ் புன்னகையுடம் ஒரு பொட்டியை எடுத்து மேலே வைக்கிறார்.

பொன்ஸ் : போன மீட்டிங்ல நான் உங்களுக்கு வெண்பா வடிக்க கத்துக் கொடுத்தேன். இந்த மீட்டிங்குல இப்போ நான் வெண்மையா ‘ சாதம் ‘ வடிக்க கத்துக்கொடுக்கப்போறேன்.
வாலிபர்கள் அனைவரின் முகத்திலும் மரண பீதி தெரிகிறது.

பொன்ஸ் : இதுதான் மைக்ரோவேவ் ஓவன். ரெண்டு கப் அரிசிய எடுத்துக்குங்க. சுத்தமான தண்ணியிலே அரிசிய ரெண்டு தடவை அலசுங்க. ஒருகப் அரிசிக்கு..

சொல்லிக்கொண்டே போக ஆங்காங்கே ஒவ்வொரு கண்டத்திலிருக்கும் சங்க செல்வங்களின் மானிட்டர்கள் ஆட்டொமேடிக்காக shutdowm ஆகிறது.