Tuesday, March 31, 2009

நானும் ராதாவும் ஸ்கூல் டூர் போன கதை பாகம் 1


டேய் பசங்களா நாம வரும் வெள்ளி கிழமை டூர் போறோம்! நேரா மாயவரத்தில் இருந்து கிளம்பி சிதம்பரம் கடலூர் வழியா பாண்டிச்சேரி அங்க ஹார்பர் பார்க்கிறோம். பின்ன அங்க இருந்து கிளம்பி மரக்காணம் ரோடுன்னு ஒரு ரோடு இருக்கு அது பார்க்க வேண்டிய ரோடு ஒரே நேரா இருக்கும், அதை பார்கிறோம். அது வழியா திருகழுகுன்றன் போறோம். அங்க கழுகு வந்து சாப்பிடுவதை பார்க்கிறோம். பின்ன நாம சாப்பிடுறோம். அங்க இருந்து செஞ்சி கோட்டை போறோம். அதன் மேல சுத்தி பார்த்துட்டு அப்ப்டியே ராத்திரி சாத்தனூர் டேம் போறோம். அங்க முதலை பண்ணை போறோம். அது அப்படியே பெங்களூர் மாதிரி இருக்கும். அங்க இருந்து அப்படியே மகாபலிபுரம் போறோம், அங்க ராத்திரி ஒரு ஸ்கூல்ல தங்குறோம். காலை முழுக்க மகாபலிபுரம் பின்ன ராத்திரி மாயவரம் ரிட்டர்ன், ஒரு டிக்கெட் 30 ரூவா!

சார் இப்படி சொன்ன பின்ன A குரூப்பில் இருந்த நான் C குரூப்பில் இருந்த ராதாவை பார்க்க ஓடினேன். அவன் முதல்ல கேட்ட கேள்வி " டேய் இன்னிக்கு தான் தேதி 3 ஆச்சே உன் கிட்ட மாச பீஸ் கட்ட 20 இருக்குமே இருக்கா?"'ன்னு கேட்க நான்" இல்லடா அப்பா கிட்ட சில்லரை இல்லை 100 ரூவா கொடுத்தாங்க"ன்னு சொல்ல அதை வச்சு இந்த பதிவை ஆரம்பிச்சிட்டோம். ஸாரி எங்க விளையாட்டை!


வெள்ளி கிழமை டூர் என்பதால் வியாயன் ராத்திரியே எல்லாரும் ஸ்கூல்க்கு வர சொல்லிட்டாங்க. விடிய காலை 4 மணிக்கு கிளம்பனும். எல்லாரும் வந்தாச்சு. என்னையும் ராதாவையும் பார்த்தாலே சிவசங்கரன் பி டி மாஸ்டருக்கு ஒரு டர். ஆளுக்கு ஒரு மஞ்ச பையும் 20 இன்ச் பெல்பாட்டமும் பட்டை பெல்டும் போட்டுகிட்டு வந்தாச்சு. சரி படுத்து தூங்குங்கடான்னு சார் சொன்னப்ப ராதா சொன்னான் "பத்தியா ஓடம் ஒரு நாள் வண்டியில ஏறும்"ன்னு ன்னு ஏதேதோ சொன்னான். ஏன்னா நான் அதே கிளாஸ்ல தூங்கினதுக்கு மரத்துக்கு தண்ணி ஊத்த அனுப்ப பட்டேன். (அப்படி நான் வளர்த்த மரம் தான் இப்ப இருக்கும் பெரிய வேப்ப மரம்)


கொஞ்ச நேரம் கழிச்சு ராதா சுரண்டினான். "மாப்ள நாளைக்கு பாயும் புலி ரிலீஸ் இன்னிக்கு போய் மன்னவன் வந்தானடி பியர்லெஸ்ல பார்த்தா எதுனா டிரெய்லர் போடுவான்ன்னு சொல்ல எனக்கும் சரியா பட்டுச்சு. ரெண்டு பேரும் நைசா எழுந்து போனோம்.


ராதா சொன்னது போலவே பாயும் புலி டிரைலர் போட்டாங்க. தக்காளி வண்டி பக்கத்திலே "கொட்டிகிட்டு ஊத்துதடி வானம்" பாட்டு 2 வரி கழுகு பார்வையில் பார்த்தோம்.


பின்ன படம் முடிஞ்சு வந்து ஸ்கூல் பக்கம் பார்த்தா அய்யோடா எல்லோரும் போயாச்சு. நானும் ராதாவும் பதறி போய் வாட்ச் மேன் கிட்ட கேட்டா "எல்லாரும் போயாச்சு"ன்னு சொல்லிட்டார்!


எங்க 2 பேருக்கும் டூர் பாழாய் போனது கூட முக்கியமா இல்ல! வீட்டிலே ஊருகாய் நினைச்சா பயமா இருந்துச்சு. "ராதா நாம இப்ப முக்கியமான முடிவு எடுக்கனும் உன் கிட்ட என் கிட்ட சேர்த்து 97 ரூவா தனியா இருக்கு நாம நேரா பாண்டிக்கு போயிடலாம் அங்க நம்ம பஸ் பிடிச்சிடலாம்"ன்னு சொன்னேன். சரின்னு அந்த ராத்திரி 3 மணிக்கு கிளம்பியாச்சு பாண்டிக்கு நாங்க 2 பேரும்.


இதிலே என்ன கூத்துன்னா "பிரபாகரன்" பஸ் சர்வீஸ் பஸ் ரிப்பேர் ! அவங்க அடுத்த பஸ் அடுத்த நாள் காலை 10 மணிக்கு தான் பஸ் தருவேன்ன்னு சொல்லிட்டாங்க! அதனால சார் எல்லாரையும் அவங்க அவங்க வீட்டுக்கு போக சொல்லிட்டாரு! ஆனா நானும் ராதாவும் தான் கிளம்பிட்டோமே டூர்க்கு அது தெரியாம!


அடுத்து என்னன்னு ஆச்சர்யமா இருக்கா வெயிட் பிளீஸ்!!!

Thursday, March 19, 2009

வைகிங் ஜட்டியும் ஆம்பூர் பிரியானியும்!!!

போன வியாழன் என் ரூம்க்கு வந்த ஒரு பிரண்டு ரொம்ப நொந்து போய் பேசினான். என்னடான்னு கேட்டதுக்கு "ஒன்னும் இல்ல அபிஅப்பா, என் கிட்ட இருக்கும் ஒரு போர்மென் அவன் பொண்டாட்டிய என் முன்னாடியே கன்னா பின்னான்னு திட்டினான் லூசுப்பய"ன்னு சொன்ன உடனே ஆகான்னு எனக்கு பத்திகிச்சு.

"எதுக்கு திட்டினான்"ன்னு கேட்டேன்.

""அது அபிஅப்பா அவனுக்கு வைக்கிங் ஜட்டின்னா ரொம்ப பிடிக்குமாம். அது இங்க கிடைக்கலையாம், அதனால யார் ஊர்ல இருந்து வந்தாலும் அவனுக்கு அவன் பொண்டாட்டி அதை கொடுத்து அனுப்புமாம், ஆனா அது 2 மாசமா அனுப்பலையாம். அதுக்காக ஆம்பூர்ல இருந்து யார் வந்தாலும் அவனுக்கு அது அனுப்பிகிட்டு இருக்கு. அப்படி இருந்தும் ஒரு மாசமா இவனுக்கு வர்லை, அதான் கடுப்பாகி திட்டினான். எனக்கே அசிங்கமா இருந்துச்சு, அவனை எப்படி பழி வாங்கலாம்ன்னு யோசனை பண்ணிய போது தான் உங்க நினைப்பு வந்துச்சு \”

எனக்கு பகீர்ன்னு ஆகிடுச்சு. அவன் வைக்கிங் போடுறதுக்கு நான் என்ன என் வைக்கிங் தர முடியுமா என்ன? அப்படியே அந்த விஷயத்தை விட்டுட்டேன். சரி இருக்கட்டுமேன்னு அவன் நம்பர் கேட்டு வாங்கி வச்சுகிட்டேன்.அந்த நண்பனும் போயாச்சு.

அடுத்த நாள் வெள்ளிகிழமை. என் மெஸ் 4 பேருக்கும் வெள்ளிகிழமை சமைம்பதுன்னா வேப்பங்காய் மாதிரி. “அபிஅப்பா நீங்க இன்னிக்கு பிரியானி போடுங்க”ன்னு சொன்ன போது தான் டக்குன்னு நம்ம ஆம்பூரார் நியாபகம் வந்துச்சு.அதிலே எம்ம விஷயம் என்னன்னா அவன் நல்லா பிரியானி செய்வானாம்.

உடனே போன் பண்ணிட்டேன்.

“அல்லோ ஜாஹாங்கீரா”

“ஆமாம் நீங்க யாரு”

“நான் கொமாரு, உங்க ஊர் தான், நேத்து தான் ஊர்ல இருந்து வந்தேன், உங்க சம்சாரம் உங்களுக்கு ஷட்டி கொடுத்து விட்டுருக்காக”

“அப்படியா தம்பி சந்தோஷம், நான் வந்து வாங்கிகறேன். எங்க இருக்கிய நீங்க”

“அண்ணாச்சி நான் அல்கூஸ், நீங்க ஜேபலலி தான நானே அங்க வந்து தரேன், அண்ணாச்சி நீங்க ந்ல்லா பிரியாணி செய்வீங்கன்னு வீட்டுல சொன்னாங்க, நான் அங்க வந்து ஷட்டிய கொடுத்துட்டு பிரியானி சாப்பிட்டு போறேன்”

“அட இல்லப்பா நான் அங்கயே வரேன், நான் வேணா உன் ரூம்ல இருந்து பிரியானி போடுரேன். எங்க ஊருக்கே பிரியானி பேமஸ் ஆச்சே”

“சரி அண்ணே” வந்துடுங்க இங்க “ அப்படீன்னு சொல்லிட்டு அட்ரஸ் சொல்லிட்டேன்!

என் மெஸ் மெட் எல்லாருக்கும் சந்தேகம். பின்ன விளக்கமா என்ன நடக்க் போவுதுன்னு சொல்லிட்டேன்.

சரியா ஒரு மணி நேரம் பின்ன வந்தாரு நம்ம ஹீரோ.

டொக் டொக் டொக்

“வாங்க நீங்க யாரு?’

‘என் பேரு ஜகான்கீரு இங்க கொமாரு யாரு?’

“அட அவரு ஜெபல்லலி போயிருக்காரே, யாருக்கோ பார்சல் வந்துச்சாம், அதை கொடுக்க போயிருக்காரு” இது நான்.

‘அட அவன் ஒரு வெளங்காத பயங்க, எனக்கு சின்னதுல இருந்தே தெரியும் அதை, அந்த லூசு இப்பவும் அப்படித்தான் இருக்குதா, நான் தெளிவா சொன்னேன் நான் இங்க வந்து வாங்கிகரேன் என் பார்சலைன்னு, கேட்டுச்சா பாருங்க, இருங்க அந்த லூசுக்கு போன் பன்ணுறேன்”

நான் தான் வெவரமா போனை சைலண்ட்ல வச்சிட்டனா. ஜகாங்கீர் கிட்ட இருந்து போன் வந்ததும் வெளியே போயிட்டேன்.

“அல்லோ கொமாரு, நான் தான் அண்ணன் ஜகாங்கீரு பேசுறேன்”

‘அட சொல்லுங்க அண்ணே, நான் ஜேபலலியிலே இருக்கேன், உங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்ன்னு, என் மெஸ் பார்ட்னர் எல்லாம் பிரியானி செய்யனும்ன்னு சொன்னாங்க வந்து செஞ்சுடலாம்ன்னு இங்க வந்துட்டேன்”

‘சரி சரி நான் உன் ரூம்க்கு வந்துட்டேன். நானே பிரியானி செஞ்சுடுறேன். நீ இங்க வந்துடு”

“சரி அண்ணே, அங்க சிவா, கார்த்தின்னு இருப்பாங்க நான் ஏற்கனவே கறி 3 கிலோ வாங்கி வச்சுட்டேன், நீங்க ஆரம்பிங்க நான் வந்துடறேன்”

“சரி நீ இங்க வந்துடு”

நானும் வெளியே போய் போன் சென்சுட்டு அழகா உள்ளே வந்தேன்.

“யாருங்க சிவா, கார்த்தி கொமாரு கறி வாங்கி வச்சிருக்கானாம். எங்க அது எடுங்க, எனக்கு நான் கேக்குறதை எல்லாம் கொடுங்க”

உள்ளே வந்த நான் “சார் நீங்க மொதல்ல கைலி கட்டுங்க”ன்னு சொன்னதுல பூரிச்சு போயிட்டாரன்.

ஆச்சு சர சரன்னு பிரியானி தான் ஒருத்தனே செஞ்சான். நாங்க யாரும் எந்த ஹெல்ப்பும் பண்ணலை. அதிலே அவருக்கு ரொம்ப பெருமை. தான் ஒத்த ஆளா செய்வதை நினைத்து.

90 நிமிஷத்தில் பிரியாணி ரெடி. நடுவே நடுவே எனக்கு வேற போன். நான் வெளியே போய் போய் பேசிட்டு வந்தேன்.

பின்னவும் எனக்கு போன் பண்ணினான்.

“அண்ணே எனக்கு செம டிராபிக் ஜாம், நீங்க அங்க சாப்பிட்டு கிளம்புங்க, நான் உங்க ரூம்ல வாசல்ல இருக்கும் பயர் ஹோஸ் ரீல் டப்பா திறந்து அந்த பார்சலை வச்சுட்டேன். நீங்க வந்து எடுத்து கோங்க”ம்மு சொன்னேன்.

“சரி தம்பி நான் வந்து எடுத்துக்கறேன். சின்ன பிள்ளையிலே உன்னை பார்த்தது. அதான் பார்க்க ஆர்வமா இருந்தேன். சரி விடு அடுத்த தபா பார்த்துக்கலாம். சரி நான் சாப்பிட்டு கிளம்பறேன். உன் மெஸ் ஆளுங்க எல்லாம் நல்ல ஆளுங்க, கார்த்தி, சிவா, சேகர், தினேஷ், பின்ன தொல்ஸ்ன்னு ஒருத்தரு எல்லாம் நல்ல ஆளுங்க, நான் சாப்பிட்டு கிளம்பறேன்”

‘சரின்ண்ணே, நீங்க கிளம்புங்க”

இப்படி சொல்லிட்டு நான் ரூம் உள்ளே வந்துட்டேன்.

பின்ன எல்லாரும் சாப்பிட்டோம். அருமையான பிரியானி.

அவன் ஜேபல்லலி போய் பார்சல் இல்லாம போன் பண்ணினா நான் என்ன செய்யட்டும்????

Wednesday, March 18, 2009

இரவல் சரக்கடிப்பதால் ஏற்படும் 11 சங்கடங்கள்1. முதல்ல சரக்கடிக்கப் போகிறோம் என்ற ஆவலில், ஆர்வத்தில் நாம சீக்கிரமாவே வேலைகளை( வேலைகள் இருக்கா என்ன?) முடித்துக் கொண்டு ஸ்பாட்டுக்கு போயிடுவோம்! இரவலா சரக்கு வாங்கித் தரேன் என்று சொன்ன நண்பர் நிதானமா வேலையை முடிச்சி கெளம்பும்போதுதான் அறவே வராத தொலைபேசி அழைபுகளெல்லாம் வந்துத் தொலையும்! எவ்ளோ நேரம்தான் பொறுமையா காத்து கிடக்குறது!

2. அப்படியே வாங்கித்தர நண்பர் வந்துட்டாருன்னு வெச்சிக்குவோம்! நாம இன்னிக்கு வி.எஸ்.ஓ.பி அடிக்கலாம்னு ஆர்வமா வந்திருப்போம்! ஆனா அவரோ எம்.சி அசிக்கலாம்னு சொல்லுவாரு! மறுத்துப் பேச முடியுமா நம்மால!

3. நாம எப்பாவாவது ஒரு தபா சரக்கு அடிக்கிறோம்! அடிக்கிறப்போ பெப்ஸி, செவனப், சோடான்னு ஏக தடபுடலா(அறுக்க மாட்டாதவன் இடுப்புல ஆயிரத்தெட்டு கறுக்கருவா கணக்கா) இருந்தாத்தான் சரக்கடிக்குற மூடே வரும்!
நம்ம நண்பர் அப்படியா? சும்மா ஜஸ்ட் லைக் தட்! ஒரே ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி வெச்சி ஒரு ஆஃப்பை காலி பண்ணுற ஆளா இருப்பார்! நம்ம சுந்தந்திரம் என்ன ஆச்சு! அடிக்கிறதே இரவல் சரக்காச்சே!

4. அதே மாதிரிதாங்க சைட் டிஷ்ஷும்! சிக்கன் 65, சிப்ஸ், மிக்ஸர்னு எல்லாம் வெச்சிகிட்டு எல்லாத்தையும் காலி பண்ணிட்டு கூட ரெண்டாவது பெக்குல முக்காவாசிக்கு மேல குடிக்க முடியாத ஆஃப் பாயிலடிக்கிற ரேஞ்சுக்கு இருக்குற நாம எங்கே? ஒத்த ரூவா ஊறுகாப் பாக்கெட்டு ரெண்டு வாங்கித் தந்து ஃபுல் பாட்டிலும் காலி பண்ணச் சொல்லுற நம்ம நண்பர் எங்கே? என்னங்க பண்ணமுடியும் இரவல்தான் என்றாலும் இப்போதைக்கு ஸ்பான்ஸர் அவராச்சே!

5. நாம நிதானமா அழகா அவுன்ஸ் அவுன்ஸா ரசிச்சி ஒவ்வொரு சிப்பா அடிச்சிகிட்டே இந்தக் கையில ஒரு தம்மு வெச்சிகிட்டே அப்பப்போ கவிதைத் தொகுப்பு அட்டைப் படத்துக்கு போஸ் கொடுக்குற ரேஞ்சுல சிந்திச்சிகிட்டே அனுபவிச்சி குடிக்கணும்னு ஆசைப் பட்டிருப்போம்! முக்கா கிளாஸ்ல சரக்கை ஊத்தி வாட்டர் பாக்கிட்டை உடைச்சி தண்ணி கலக்குறத்துக்குள்ளே நம்ம நண்பர் அவரோட கிளாஸை ஸ்வாஹா பண்ணி முடிச்சிட்டு சீக்கிரம் அடிறா! அடுத்த பெக்கு ஆரம்பிப்போம் னு ஒரு கேவலமான லுக்கு விடுவாரு பாருங்க!......ம்ஹூம்!

6. அடிச்ச பிறகு ஆய் ஊய்னு அலப்பறை பண்ணி லந்து விடாட்டி அடிச்ச சரக்குக்கு மதிப்பு இருக்குமா? இவரு வாங்கித் தராரே ன்னு(இரவலாவே இருந்தாலும்) ஒரு லாயல்டிக்காகவது நாம அடக்கி வாசிக்க வேண்டிய அவலமான நிலைல நம்மை அறியாமலே தள்ளப்பட்டிருப்போம்!

7. என்னதான் ஆஃபாயில் போட்டே ஆகணும்ங்குற மூடு வந்தாக் கூட ஃப்ரீயா ஆஃப் பாயில் போட முடியுதா? வாங்கித் தந்தவன் என்ன நினைப்பானோ, கேவலமா பார்ப்பானோன்னெல்லாம் நினைழ்ச்சி கஷ்டப்பட்ழு அடக்க வேண்டியிருக்கும் பாருங்க...! ச்சே! இனிமே சென்மத்துக்கும் இந்த்ழ சனியழை தொடக்கூடாதுன்னு தோழும்.

8. ம்ஹூம்! அதென்னங்கழா இரவல் ச்ரக்குன்னா மட்டும் இழப்பமா என்ன? என்ன நண்பா சொல்றே நீ! இருந்தாழும் இரவல் சரக்குன்னா சங்கடங்கள்னெல்லாம் பேசுறாங்க நண்பா! அதான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு! இரு நண்பா இந்த பெக்கோட முழிச்சிக்கிழேன்!

9. அவ்வ்வ்வ்வ்வ்வ்..நண்பா யாரைப் பத்தி வேணும்ழாலும் சொல்லுவேண், உன்னைப் பத்தி ..ஹிக்.. உன்னை பத்தி ஒரு வார்த்தை பேசி இருக்கனா? எதா இருந்தாலும் முகழ்த்துக்கு முன்னாலே சொல்லிடுவேன் நண்பா! அடுத்தவன்கிட்டே போயி பேசுறதோ, அப்பாலிக்கா உன்னை பத்தி பதிவெழுதறதோவெல்லாம் செய்ய மாட்டேன் நண்பா!"


10. விடு! விடு! உன்னைப் பத்ழி எவன் என்னெ பேசிடுறான்னு பார்க்குறேன்! எவனாழ்ச்சும் மூக்கு மேல நாக்கு... இல்ல இல்ல... நாக்கு மேல மூக்கு..ச்ச்சே அதுவும் இல்ல் நண்ப்ழா.. ஆங்க்! நாக்ழு மேழே பல்லு போழ்த்து பேச விட்டுடவனா நானு! அவன் மூஞ்சிழிய உடைச்சிட மாட்டேன்!

11. "நண்பா! நான் யாழுடா! எனக்கெழ்ழால்ம் சரக்கு வாங்கித் தரயே! நான் எதாழ்ச்சும் திருப்ழிச் சேய்வேன்னு எதிர்பார்க்காம வாங்கித் தரயே! இந்த நாழ் இருக்குல்லா நாழ்! அதைவிட உனக்கு நானு விழுவாசமா இருப்பேன் நண்பா!
நீ என்னை என்ன வேணும்னாலிம் சொழ்ழு நண்பா! உனக்கு எல்ழா உரிமையும் இருக்கு நண்பா! ஆனா எனக்குத் தெரியும்.. நான் இப்பழி மப்புல ஓவரா பேசுறேன்.. அத்தனை பேழ்த்துக்கும் முன்னாதி உனக்கொ தர்ம சங்கழமா இருக்கும்னு..நல்லா ஏழிடுத்து..தலையில ரொம்ப பாரமா...அப்படியே உலகமே சுத்துது நண்பா! உனழ்க்கும் அப்பழித்தான.....! அட சட்! பாத் ழூம் எங்கே இங்கழான இழுந்தது....உவ்வ்வ்வாவ்......."

Tuesday, March 17, 2009

இளமுருகாற்றுப்படை

இது ஒரு மொய் பதிவு. சங்கத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு அரும்பணியாற்றி வரும் எங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் உரிய விவசாயி அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக வெளிவரும் சங்கத்தின் 501ஆம் பதிவு. சங்கத்துக்கு இளா அவர்கள் ஆற்றிய அரும்பணியினைப் பாராட்டி ஒரு பதிவு எழுதி தருமாறு சங்கத்தின் தளபதியும் அறங்காவலருமான சிபியைக் கேட்டோம். அவர் அளவிலாத குரோதம் கொண்டு பின்னங்காலைக் கொண்டு பிடரியில் அடித்து "என்னையா பதிவெழுதச் சொன்னாய். நான் புத்தகமே எழுதியிருக்கேண்டா" என்று ஒரு புத்தகத்தை மேசை மீது வீசினார். அந்த புத்தகம் "இளவாக்கிய சிபியடியார் ஸ்ரீலஸ்ரீ பித்தானந்தா சுவாமிகள் அருளிச் செய்த இளமுருகாற்றுப்படை". இந்த புத்தகத்தில் இருந்து உங்களுக்கு பரிட்சை வைக்கப் போகிறேன் என்று அரை மணி நேரம் கொடுத்தார். அந்த அரை மணியில் எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெட்ரூ செய்து பிட் அடித்து ஒருவாறு பரிட்சையை எழுதி முடித்தோம். சிபியடிகள் வழங்கிய வினாத்தாளும் அதற்கு எங்களின் பதில்களும் இனி உங்கள் பார்வைக்கு.

1. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக
"வளிநாணும் வெண்புரவி மீதமர் கொற்றவ
நின்மதி கண்டு நாணி புறந்தள்ளியோடும்
புறந்தட்டி எழும்வேளை இலைமறை காயென
இளகும் கன்னியர் நிலையறிவரோ அண்ணியார்"
மேற்கண்ட இச்செய்யுளில் உள்ள அணிநயத்தையும் விளக்குக.
பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றை விட வேகமாகப் பாயக் கூடிய வெண்மையான குதிரையின் மீது ஏறி அமர்ந்து பயணிக்கும் கொற்றவனே. சங்ககால இலக்கியத்தின் படி கொற்றவனே அப்படின்னா கொட்டு வாங்கறவனே என்று பொருள். அந்த குதிரையை நீ செலுத்த முற்படும் போது, "என்னை விட வேகமாக வேலை செய்யக் கூடிய மதியைப் படைத்த என் தலைவனைத் தாங்கிப் பயணம் செய்யக் கூடியது என்னால் இயன்ற செயல் தானோ" என்றெண்ணி நாணப்பட்டு உன்னை கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது. கீழே விழுந்த எம் மன்னவனான நீ மண்ணாலான மீசையையும் உன் பின்புறம் அப்பியிருக்கும் மண்ணையும் யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையால் தட்டி விட்டு விட்டு கண்டவர் விண்டிலாத பாங்கோடு ரே பான் கண்ணாடி அணியும் அழகை இலை மறை காய் போல ஒளிந்திருந்து பார்க்கும் பெண்கள் மயங்கி ரசித்து இளகி ஆனந்த கண்ணீர் வடிப்பதை அண்ணி அறிவாரா என்று கேட்கிறார் ஆசிரியர். இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி இடம்பெற்றிருக்கிறது. அதாவது சொல்ல வந்த கருத்தை நேரிடையாக தெரிவிக்காமல் குறிப்பால் உணர்த்துவது. காற்றை விட அதி விரைவாக ஓடக் கூடிய குதிரையும் நாணப்படும் அளவுக்கு பல வித வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவர் என்பதும், தமிழ்மணத்தில் இவர் இட்ட பல பதிவுகளைக் கணப் பொழுதில் காணாமல் போக வைக்கும் இவருடைய வல்லமையையும் பாடலாசிரியர் வியந்து போற்றுகிறார்.

மாணவர் பெயர் : கைப்புள்ள
சுழல் எண் : 00.07
பள்ளி : இளமுருகு வித்யாஷ்ரம், சென்னை


2. மனப்பாடப் பகுதி - இளமுருகாற்றுப்படை

ஆணிபுடுங்கு காதையில் "பிசியோ பிசி" எனும் ஈற்றடி கொண்ட பாடலை அடி பிறழாமல் எழுதுக.

மாதமோ மார்ச்
விவாஜி நம்ம சங்கத்துக்கு டார்ச்
பதிவில்ல கிடையாது மேட்டர்
ஆனா போடுற பதிவெல்லாம் ஹீட்டர்

எப்படியோ ஏறிடும் ஹிட் மீட்டர்
அதுல்ல எங்க அண்ணன் பெரிய பீட்டர்
படிச்சிட்டு பிகிலு அடிச்சா
அண்ணன் செலவுல்ல ஆளுக்கொரு
குவாட்டர்..குவாட்டர்..குவாட்டரு..

பொறந்தது பவானி பக்கத்துல்ல
வளர்ந்தது தாவணி ஏக்கத்துல்ல
பிகரு பாத்தா கண்ணுல்ல ஏறும் கிளாஸ்
நகரு நகரு விவாஜிக்கு எப்பவுமே தனி மாஸ்நட்புக்கு விவாஜி ஹோல்சேலு
நடப்புக்கு விவ்ஸ் டோட்டல் கோல் மாலு..
தமிழ் நாட்டுல்ல பொறந்த வில்லு
பெங்களூரு வீதியிலே திரிஞ்ச ஜொள்லு அசலூர்

ஆப்பிள் தோட்டக் காவல்காரன்
அந்தூர்ல்ல சேட்டுப் புள்ளக்கும்
அண்ணன் தான் ஏவல்காரன்
மெகா சீன் போடுறதுல்ல மில்லியனரு
போட்ட சீன் கிழிஞ்சா போதும்

அண்ணன் மில்லி யேறுனவரு...
பாசக்கார பயபுள்ள
பதிவுலகம் தந்த இந்த மாப்புள்ள
அண்ணனுக்கு ஆல்வேஸ் பதிவு பசி
பிங் பண்ணி பாருங்க அவரு 24 அவர்ஸும்

பிசியோ பிசி....

மாணவர் பெயர் : தேவ்
சுழல் எண் : 00.089
பள்ளி : இளா ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சென்னை


3. புதரகத்து புரட்சி தலைவர் மக்களுக்கு ஆற்றிய பணியினை தூதுவன் வாய்மொழி சொல்வதாய் விளக்குக?

பழம்பெரும் பதிவரான இளா அவர்கள் புதரகத்தில் பல்லாண்டாய் தஞ்சம்புகுந்து ஆணி புடுங்குவதுமாதிரி பாவனை செய்வது நாமெல்லாரும் அறிந்ததே.... இதை நாம் தூதுவன் குவார்டர்க்கடியான் வாய்வழி விளக்கமாகக் காணலாம்.

சங்கத்து சிங்கங்களின் தூதுவனாக அதாவது ஒற்றனாக ஆகிய நான் இளா என விளிக்கப்படும் இளமுருகு'வே பின்படர்தலில் எனக்கு கிட்டிய சில கூறுகள்.

இளமுருகு'னு இவருக்கு பேரு வைச்சாலும் வைச்சாங்க... வயது 40 தாண்டியும் நான் யூத்'னு சொல்லிக்கிறதுக்காக மழை பெஞ்சாலும் சரி,வெள்ளை பனி மழை மட்டு மட்டுன்னு தலையிலே விழுந்தாலும் குருட்டு கருப்பு கண்ணாடியே மாட்டிக்கிட்டு பண்ணுற அலும்பு இருக்கே... அதெக்கெல்லாம் நூறு பக்கத்திலே ஜோக் புத்தகமென்னு போடலாம்.. அதிலே எங்க விவாஜி பேசுற இங்கிலிபிசு இருக்கு தெரியுமா? அதுவும் எஸ்பெசலி 100 மீட்டர் பின்னாடி அட்டுபிகர் நடந்து வர்றது தெரிஞ்சதும், ஓரே பீட்டர் மயம் தான்... அவரு பேசறதெல்லாம் இங்க போட்டா படிச்சு பார்க்கிற ஒங்களுக்கெல்லாம் கொஞ்சநஞ்சம் தெரியுற இங்கிலிபிசு'ல்லாம் மறந்து போயிரும்.

இது கூட ஓகே ஆப்பிசர்ஸ், நார்மலா எல்லா ஆம்பிளகளும் போடுற சீன் தான்.. இவரு பையன் படிக்கிற ஸ்கூல் டீச்சர் கொஞ்சம் அழகா இருக்குன்னு அவங்க ஸ்டூண்ட்'ஸ்கெல்லாம் Hot-Dog, ஆனியன் ரிங்'னு லஞ்சமா வாங்கி கொடுத்து ஃபிரண்ட் பிடிக்கிறாரு.. ஆனா அதெல்லாம் வாங்கிதின்னுட்டு அந்த பிள்ளைகள் வாயை தொறக்கலைகிறது வேற மேட்டரு...

மேற்கண்டவைகள் அனைத்தும் வெளியே நடந்தது. இனி வீட்டிற்குள் நடக்கும் சில அக்கப்போருகள்:-

எப்பவும் 'ஐம் ஷோ பிஜ்ஜீ'ன்னு ஸ்டேட்மெண்ட் விடுவாரு... சரி ஆப்பிசிலே தான் டேமேஜரா இருக்குற இவரு வேலை பார்க்க மாட்டாருன்னு நினைச்சி ஊடு போயி சேர்ந்ததும் ஃபிரியா இருப்பாருன்னு நினைச்சா.. அம்மணி உத்தரவுக்காக ஊட்டு முன்னாடி இருக்கிற பனி அள்ளறது பத்தாமே எதிர்த்த ஊட்டு மார்வாடி பொண்ணுக இருக்கிற அபார்ட்மெண்ட் வாசலிலேயும் சுத்தம் பண்ணிட்டு இருக்காரு... கேட்டா போறதுக்கு வழி வேணுமாம்...

தன்னோட ஊட்டு காரை கிளின் பண்ணுறது பத்தாமே பக்கத்து ஊட்டு கெழவி காருக்கெல்லாம் ஃப்ரி வாட்டர் வாஸ் பண்ணிட்டு இருக்காரு.... நோண்டி நொங்கு உருவி பார்த்ததும் தான் தெரியுது, அந்த கெழவி'க்கு பேத்தி ஒன்னு பாஸ்டன்'லே படிச்சிட்டு இருக்கிறது.. கொஞ்சநாளா ஆப்ஷிய்ல் வொர்க்'க்கா 'ஐ ஹவ் டூ கோ பாஸ்டன்'னு சொன்னப்பவே புரிஞ்சு போச்சு... இதையும் கொஞ்சம் எடுத்து சொல்லி ரெண்டாவது கோடி புண்ணியமும் வாங்கிக்கோங்க...

(பி.கு : மதிப்பிற்குரிய திரு.Evaluator ஐயா அவர்களுக்கு. நான் மிகவும் கஷ்டப் பட்டு இப்பரிட்சையை எழுதியிருக்கிறேன். இவ்விடையில் முதல் இரண்டு வரிகளைத் தவிர ஏனைய வரிகளை என் சொந்த நடையில் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் கூட குறைச்சல் இருந்தாலும் தயவு செய்து என்னை பாஸ் செய்து விட்டு விடவும். மிக்க நன்றி)

மாணவர் பெயர் : ராயல் ராம்
சுழல் எண் : 3 3/4
பள்ளி : டி.வி.எஸ் இளா மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, மதுரை


4. புதரகம் புகு காதையில் வரும் இளாவின் திருவிளையாடல் காட்சிகளைக் குறித்து விளக்கமாக எழுதுக.

அவரின் விளையாடலை விளக்கமாக எல்லாம் எழுதினால் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கியே அழிந்து போவோம், அதை ஒரு மெகா தொடர் கதையாக தான் எழுத வேண்டும். அதனால் கொஞ்சமாக அவரை பற்றிய சிறு குறிப்பு

விவசாயி.... விவசாயி
சிங்கம் என்னும் சங்கம் கண்டு எடுத்த தங்கம் விவசாயி விவசாயி
சிங்கம் என்னும் சங்கம் கண்டு எடுத்த தங்கம் விவசாயி விவசாயி

பிறந்தது - பவானி கரையோரம்
பிழைப்பது - சுகந்திர தேவி சிலையோரம்
பிரிக்க முடியாதது - இளாவும், டாலரும்
பிரிய கூடாதது - இளாவும், கடலையும்
சேர்ந்தே இருப்பது - இளாவும், கருப்பு கண்ணாடியும் (மிட் நைட்ல கூட கழட்ட மாட்டாரு)
சேராத இருப்பது - முன்னாள் பிகரும், இன்னாள் பிகரும் கடலையும்
சொல்லக் கூடாதது - தங்கமணியிடம் தண்ணி அடிப்பதை
சொல்லக் கூடியது - வயசு ஆனாலும் உங்க அழகும் ஸ்டைலும் குறையல
பார்க்க கூடாதது - கார் + கேமரா (உடனே போஸ் தான் )
பார்த்து ரசிப்பது - நமீதாவின் குத்தாட்டம்

மாணவர் பெயர் : புலிக்குட்டி நாகை சிவா
சுழல் எண் : 2 1/4
பள்ளி : அரசினர் இளமுறுக்கு மேனிலைப் பள்ளி, நாகை.


(பரிட்சையை எங்க திறனுக்கு ஏற்ப நாங்க எழுதிட்டோம். இப்போ யாராருக்கு என்னென்ன மார்க் போடலாம்னு நீங்க தான் சொல்லனும்...தேறிடுவோமா?)

Monday, March 16, 2009

கவுண்டர்ஸ் டெவில் ஷோ - சங்கத்து சிங்கங்கள்

வெற்றிகரமா ஐநூறு பதிவு போட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நம் சங்கத்து மக்களுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது, கவுண்டரை ஏன் சங்கத்துக்கு கூப்பிட்டு வர கூடாதுனு ஒரு யோசனை. என்ன இருந்தாலும் ஒரு காமெடியன் மனசு இன்னொரு காமெடியனுக்கு தானே தெரியும்னு எல்லாரும் முடிவு பண்ணி, கவுண்டரை டெவில் ஷோ நடத்த சங்கத்துக்கு கூப்பிட்டு வந்துட்டோம். பொதுவா டெவில் ஷோக்கு மக்கள் தான் கவுண்டரை தேடி போவாங்க, இது சங்க விழாங்கறதால கவுண்டரை நாங்க சங்கத்துக்கு கூப்பிட்டு வந்துட்டோம். இப்ப டெவில் ஷோக்கு போகலாம்.

க: "வழக்கமா தனியா ஒருத்தனை புடிச்சி கும்மிட்டு இருந்தேன். இன்னைக்கு ஒரு கூட்டத்தையே கும்மனும்னு நம்மல கூப்பிட்டு வந்திருக்கானூங்க பசங்க. பொதுவாழ்க்கைனு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே. சரி, இப்ப நிகழ்ச்சிக்கு போவோம். சரி இங்க கூட்டமா நிக்கறானுங்க. ஒவ்வொருத்தனையா கூப்பிடுவோம். டேய் அரை டவுசர் மண்டையா. நீ முதல்ல வா. வந்து உன்னைப் பத்தி சொல்லு"

இளா : "நான் தான் விவசாயி"

க: "எங்க இங்க அப்படியே உழவு ஓட்டிக் காட்டுப் பார்ப்போம்"

இளா: "நான் அதெல்லாம் பண்ண மாட்டேன். நல்லா கடலை சாகுபடி பண்ணுவேன். அதான் விவசாயினு பேர் வெச்சிக்கிட்டேன்"

க: "டேய் விவா மண்டையா, கடலைப் போடறவனெல்லாம் விவசாயினு உனக்கு எவன்டா சொல்லக்கொடுத்தது. முதல்ல உன் பேரை மாத்துடா!"

இளா: Done.

க: "டேய் டன் மண்டையா. எதுக்கெடுத்தாலும் டன், கூல், ஃபைன் அப்படினு ஒரு வார்த்தைல பதில் சொல்றதுக்கு நீ என்ன மணிரத்னம் படத்துலயா மேன் நடிக்கிற. இனிமே எதை பேசினாலும் நாலஞ்சி வார்த்தை சேர்த்து வாக்கியமா சொல்ற. சரியா?"

இளா : ஓகே.

க: "உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. நீயா திருந்தனா தான் உண்டு. சரி, அடுத்த அந்த நாடக நடிகர் காஸ்டியூம்ல இருக்கற திருட்டு முழி முழிச்சிட்டு இருக்கற ஆள் வா. சரி உன்னை பத்தி சொல்லு"

சிபி : "நான் நாமக்கல் சிபி. நான் தான் இந்த சங்கத்து தளபதி"

க: "ஆமாம். இது பெரிய சோழ பேரரசு. இதுக்கு இவர் தளபதி. டேய் மாநக்கல் மண்டையா, இந்த டப்பா வீட்டுக்கு பேரு ஒரு சங்கம். இதுக்கு நீ ஒரு தளபதி. எங்க ஒரு கத்தி சண்டை போட்டுக் காட்டு"

சிபி: "டேய் யாருடா அது எங்க தலயைப் பத்தி தப்பா பேசினது. தைரியமிருந்தா அவர் மேல கையை வெச்சி பாருடா"

க: "டேய் தளபதி மண்டையா. என்ன மேன் பண்ண?"

சிபி: "நீங்க தானே ”கத்தி” சண்டை போட சொன்னீங்க. அதான்"

க: "ஜோக்கா'ம்டா. கஷ்ட காலம்டா சாமி. உன்னையெல்லாம் வெச்சி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ. சரி, தி நெக்ஸ்ட்"

தேவ்:"அம் தேவ். நான் தான் இந்த சங்கத்து போர் வாள்"

க: "என்னது? திரும்ப சொல்லு"

தேவ்: "நான் தான் இந்த சங்கத்துப் போர் வாள்"

க: "டேய் சிபி மண்டையா. இங்க வா"

சிபி: "சொல்லுங்க கவுண்ட்ஸ்"

க: "சரி, இந்த போர் வாளை தூக்கி ஒரு சொழட்டு சொழட்டி காட்டு பார்ப்போம்"

தேவ், சிபி இருவரும் எஸ்கேப்.

க: "நீ யார்டா என்னை பார்த்து மொறைச்சிக்கிட்டே இருக்க. உன் பேரு என்ன?"

புலி : "என் பேர் நாகை சிவா. ஆனா மக்கள் எல்லாம் என்னை புலினு தான் சொல்லுவாங்க"

க: "கொட்டை எடுத்ததா இல்லை கொட்டை எடுக்காததா?"

புலி : "ஹலோ நான் சொல்றது கடிக்கிற புலி."

க: "எங்க, அந்த சைட்ல நிக்கறானே அவனை கொஞ்சம் கடிச்சிக் காட்டு"

சிபி: "புலி, கோபத்துல என்னைக் கடிச்சிடாத. வேணும்னா நம்ம தலயை ஒரு நாலு கடி கடி. சதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா வரும்"

க: "எதுக்கெடுத்தாலும் அவன் தல தலனு சொல்லிட்டு இருக்கான். யார்டா அது தல"

சிபி: "இதோ இவர் தான் எங்க தல கைப்புள்ள."

கவுண்டர் மேலும் கீழும் பார்க்கிறார்.

க: "இது கைப்புள்ளையா மேன். இது கைப்புள்ளையா? எங்க கொஞ்சம் இதை இடுப்புல தூக்கி வெச்சிட்டு ஒரு வாக் போயி் காட்டு"

KRS: "கவுண்டமணி ஐயா"

க: "Who is the disturbance... ஓ நீயா? சொல்லுடாப் பையா?"

KRS: "கைப்புள்ள என்பது வேறு கைப்பிள்ளை என்பது வேறு, இதை தான் ஏழாம் நூற்றாண்டில் காக்கைப்பாடினியார் கைப்பிள்ளை காவியம் என்று பாடியுள்ளார். அதை இந்த அப்பாவி சிறுவனாகிய நான் சமீபத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்துள்ளேன்"

க: "ஆறடி உயரம் இருந்துட்டு நீ அப்பாவி சிறுவனா மேன்? கார்த்திக் ஸ்டைல்ல கூலிங் கிளாஸ் போட்டு கேப் போட்டுக்கிட்டா உன் வயசு தெரியாதா? நீயெல்லாம் ஜனலை திற. நாத்தம் வரட்டும்னு குமுதத்துலயோ, குங்கமத்துலயோ எழுத வேண்டிய ஆளு. இங்க இருந்து ஓடிப்போயிடு. போ மேன் போ. அவனை சொன்னா நீ என்ன மேன் மொறைக்கிற. நீ வா. உன்னைப் பத்தி சொல்லு"

வெட்டி : "என் பேரு வெட்டிப்பயல். நான் தான் சங்கத்தோட இளைய தளபதி"

க: அது என்னடா பேரு வெட்டிப்பயல், சட்டிப்பயல்னு. உங்களுக்கு எல்லாம் நல்ல பேரே கிடைக்கலயா? அப்பறம் அது என்ன இளைய தளபதி? எங்க அந்த காமெடிக்காரன் விஜய் மாதிரி ஒரு பாட்டுக்கு ஆடிக்காட்டு பார்க்கலாம்.

வெட்டி: ?!

க: "இனிமே இந்த மாதிரி வீணாப் போன பேர் எல்லாம் வெச்சிட்டு திரியாத. சரி இந்த கலவரத்துலயும் அங்க ஒருத்தன் ஜன்னல் பக்கத்துல் நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கானே. அவன் யாரு"

சிபி: "அவர் தான் ஜொள்ளுப்பாண்டி"

க: "சரி சரி. இந்த பேர்ல இருந்தே தெரியுது அவன் அங்க இருந்து என்ன பண்ணிட்டு இருக்கானு. ஆனா, இங்க இருந்து பார்த்தா அந்த இட்லிக்கடை ஆயாத்தான் தெரியுது. அதைக் கூடாவாடா விட்டு வைக்க மாட்டீங்க."

சிபி: "அவர் எதுக்கும் பார்ஷியாலிட்டி பார்க்கறதில்லை"

க: "ஆமாம், அங்க ஒருத்தன் பயங்கரமா வேலை செஞ்சிட்டு இருக்கானே. அவன் யாரு?"

சிபி: "அவன் தான் ராயல் ராம். சேட்டிங்ல கடலை போட்டுட்டு இருக்கான்"

க: "விளாங்கனாப்போல தான். ஆமாம், ரொம்ப நேரமா, நானும் யூத்து தான் . நானும் யூத்து தான். நானும் யூத்து தான்னு சொல்லிட்டு இருக்காரே இந்த பெரியவரு. இவர் யாரு"

அபி.அப்பா: "நான் தான் இந்த மாசத்து அட்லாஸ் வாலிபர்"

க: "டேய் உங்களுக்கே இது அடுக்குமாடா? ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வாலிபனா இருந்ததை எல்லாம் கூப்பிட்டு வெச்சிக்கிட்டு வாலிபர்னு சொல்லிட்டு திரியறீங்களேடா. வேணும்னா அட்லாஸ் வாலிபருக்கு பதில் வயோதிக வாலிபர்னு பேர் வைங்க. இல்லை உங்க சங்கத்துக்கு சிவராஜ் சித்த வைத்திய சாலைனு பேர் வைங்க. சரியா இருக்கும். சரி, எனி படி ஐ மிஸ்"

சிபி: "எங்க சங்கத்து யூத்து கப்பி ஊருக்கு போயிருக்காரு. அவர் மட்டும் மிஸ்ஸிங்"

க: "சரி, சரி எங்க போயிட போறான். அவனுக்குனு ஒரு நாள் டெவில் ஷோ தனியா போட்டிடுவோம்"

தல: "அதெல்லாம் முடியாது.. எங்க சங்கத்து செல்லப்பிள்ள, ஞானகுழந்தை,ஜாவா பாவலர், கவிஞ்ஞர் கப்பி நிலவரை நீங்க பெருமை படுத்தனும்..."

க: "டேய், முழுசா வேகாத ஆப்பாயில் தல மண்டையா, இவ்வளோ நேரமா ஞானக்குழந்த, கவிஞ்ஞர், சொரிஞ்சர்'னு நக்கல்விட்டுடு என்கிட்டே பெருமைப்படுத்தனுமின்னு வேற கேட்கிறியா?"

கப்பி: "அவ்வ்வ்வ்..... தல'க்கு எம்மேலே அம்புட்டு பாசம்"

க: "ஏன்டா நீ கெட்டகேட்டுக்கு உருகுவே'லே ரசிகையர் மன்றம், ஆர்குட்'லே அம்பது கம்யூனிட்டியா? ஒனக்கே ஓவரா தெரியல"

சிபி: "கப்பி வாழ்க!! நமிதா வாழ்க!!!"

க: "இந்த வெட்டி கூவல் வேறயா? ஏண்டா ஒங்களுக்கெல்லாம் மனசாட்சியா இல்லையா? அந்த பீப்பா'வுக்கு இந்த பாப்பா மூஞ்சி மண்டயன் சரியான ஆளுதான்!! "

சிபி: "என்னோட அக்கவுண்ட்'க்கு அமெண்ட் போட்டிங்கன்னா, ஒங்களுக்கு ஸ்பெசலா கூவுவோம்... "

க: "இதெல்லாம் ஒரு பொழப்பாடா? நல்ல சங்கம்டா சாமிங்களா... சரி சரி, வந்ததுக்கு கடைசியா, இதே மாதிரி எல்லாரையும் சிரிக்க வைச்சிட்டு இருங்க. டாட்டா. பை பை."

Tuesday, March 10, 2009

499

உலக பிரச்சினைய தீர்க்கும் நம்ம நம்பூதிரி:

கவுன்சிலேட்டுல என்னய்யா ஒரே ஆம்புலன்ஸ் சத்தம்.

ஒபாமா வீட்டுல பில்லி சூன்யம் வெச்சிதனாலதான் ரிசஸ்சென்னாம், அதை எடுக்க விசா வேணும்னு கேட்டு இருக்காரு?


இந்திய பிரச்சினை வம்பூதிரி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்: நாடு முழுவதும் ஐந்து கட்டங்களாக தேர்தல்.

வெயில் பழமா இருந்தாலும்,
யாருக்கும் சூடு சுரணை இருக்காது.

மழை பெய்யாட்டாலும்
பிரியாணி மழை, காசு மழை, தண்ணி மழை(அடிக்கிற தண்ணிங்க).

வோட்டு இருக்கிறவங்க எல்லாம் பணக்காரங்க.
டிவி இருந்தா டிவிடி பிளேயர் இலவசம்.
ரெண்டும் இருந்தா திருட்டு டிவிடி சப்கிரிப்சன் இலவசம்.

பொய் மட்டுமே இருக்கும், சிலர் பேசுவாங்க, பலர் நம்புவாங்க.

500ரூவாய் எல்லாம் சில்லரையா இருக்கும், 1000 ரூபாய் மினிமம் டாப் அப் ஆவும்.

இனி செய்தி விமர்சனம்:
பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கின-3000 பறக்கும் படைகள்

மாப்ளே, எப்படி நம்ம பசங்க பிட் அடிச்சு தப்பிக்கிறாங்கன்னு தெரியுதுடா?

எப்படி?


நம்ம பசங்க அடியிலதான பிட் வெக்கிறாங்க. பறக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்?

தொகுதிப் பங்கீடு: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சு துவக்கம்

குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி ஆர்ப்பாட்டம்- அதிகாரிகள் திணறல்

மேலே இருக்கிற ரெண்டு செய்திக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லே. இருக்குன்னா சொன்னா ஆட்டோ, லாரி இல்லே வரும்?

சட்டக்கல்லூரி அட்மிசன் துவக்கம்.

குஸ்தி, சண்டை, சிலம்பம், சோடாபாட்டில் விடறது, கெட்ட வார்த்தையில் திட்டுபவர்களுக்கு முன்னுரிமை. இல்லாதவர்களுக்கு ஸ்பெசல் கிளாஸ் 3வது செமஸ்டரில்(கட்டணம் அதிகம், கட்டாய பாடம்)

சுப்ரமணியபுரத்திற்கு மாத்ருபூமி விருது

ரத்த பூமி விருதுன்னு ஒன்னும் இல்லையா?.

லோக்சபா தேர்தலில் 50 - 50 சீட் வேண்டும் : பவார் கட்சி பிடிவாதம்

பிஸ்கோத்து லெவலுக்கு வந்திருச்சு இந்திய அரசியல்

சுப்ரீம் கோர்ட் சொல்லும் பாதையில் சேது திட்டம் நிறைவேற்றப்படும்*மத்திய அமைச்சர் டி.ஆர்., பாலு உறுதி.

ஹிஹி,. எலக்சன் ஏப்ரல் மாசமாமே. சொல்லாம இருப்பிங்களா?


நமீதா 'ஆசைகாட்டி' தொழிலதிபரிடம் கொள்ளை!

நமீதா, நம்ம கிட்டே காட்டி காட்டியே கொள்ளயடிக்கிறாங்க.(மனசதாங்க மச்சான்ஸ்).

எங்கள் கட்சி வெற்றி பெரும்-சரத்
மன்னனில் கவுண்டர்- பருத்தி, புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்க சொல்லிக்கிறாங்கடா

No Comments

மேல இருக்கிற சோக்குக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லீங்க. இது சங்கத்தோட 499 பதிவு அவ்வளவுதான்.

Monday, March 9, 2009

"நச்" நாராயணன் & நாராயணீஸ்!!!சில பேர் பதிவு போட்டு நகைச்சுவைன்னு லேபில் கொடுத்தும் அது போணியாகாது. சில பேர் "சீரியஸ்"ன்னு லேபில் கொடுப்பாங்க. அதுல வந்து ஒரு பின்னூட்டம் விழும் முதல்ல! "அப்ப ICU விலே சேர்க்க வேண்டியது தானே"ன்னு! நமக்கு சிரிப்பு பிச்சுகிட்டு போகும்.ஆக நாம இந்த பதிவிலே பார்க்க போவது சில "நச்" பின்னூட்ட நாராயணன்ஸ்& நாராயணீஸ் பத்தி தான்.
இந்த பதிவை எல்லாம் விட பின்னூட்ட சிரிப்பு இருக்கே அது ரொம்ப பெரிய சிரிப்புங்க. அப்படித்தான் நம்ம மாநக்கல் சிபி ஒரு பதி போட்டாரு "நான் ஓய்வெடுக்க போறேன்"ன்னு அதுக்கு நம்ம கொத்ஸ் வந்து "ஓய் வெடுக்குனு வா"ன்னு ஒரு சின்ன 3 வார்த்தை பின்னூட்டம். அதிலே எத்தனை சிரிப்பும் அர்த்தமும் இருக்கு பாருங்க.அது போல இன்னிக்கு நம்ம அய்யனார் இருக்காரே (அய்யனாரை 1 வருஷத்துக்கு நானும் குசும்பனும் லீஸ்க்கு எடுத்து இருக்கோம், எங்களை தவிர வேற யாராவது கலாய்ச்சா எங்களுக்கு கப்பம் கட்டனும்) நம்ம அய்யனார் இப்ப தான் இப்படி ஆகிட்டாரு. ஆனா அவரு அடிச்ச கும்மி இருக்கே அட ஆண்டவா அதல்லாம் இப்ப புதுசா வந்த பசங்களுக்கு தெரியாது. அவரு மட்டுமா இப்ப இருக்கும் லாடுலபக்குதாஸ் எல்லாம் அப்ப கும்மி குரூப் தான். கொத்தணார் அடிக்காத கும்மியா?ஒரு மகளிர் தினத்திலே உஷா அண்ணி கும்மின்னு சொல்வதுக்கு பதிலா கும்பின்னு சொல்லிட்டங்க! அப்ப அவந்து லக்கியும், கொத்தனாரும் வந்து முனியாட்டம் ஆடினது யாருக்கு மறக்கும்!அது போல நம்ம போர்வாள் தேவ் அடிக்காத கும்மியா? ஒரு கட்டத்துல அய்யனார் " வாங்க தேவ் எப்படி இருக்கீங்க போன கும்மில பார்த்தது" அப்படின்னு ஒரு பின்னூட்டம்.அப்படில்லாம் இருந்தோம் அது ஒரு டைம்!
சரி அதை விடுங்க!இப்ப நான் சொல்ல வருவது! சமீபத்துல நான் ரசிச்ச சில பின்னூட்ட சிரிப்புகள்!ஒரு பிரபல அப்பா பதிவர் தன் தங்கமணிக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துட்டு " அய்யோ என் மனைவி ஸ்கூட்டியோட பயங்கர ஸ்பீடா பறக்குறாங்க"ன்னு போட்ட ஒரு பதிவுக்கு நம்ம குசும்ப சித்தர் "ஆஹா அவங்க தனியா பறப்பதே கஷ்டம் இதில ஸ்கூட்டிய வேற தூக்கிகிட்டு பறந்தாங்கன்னா உங்க குடும்பம் பெரிய ஆளுங்க தான்"இப்படித்தான் துளசி டீச்சர் பதிவிலே ஒரு எறும்பு ஒரு ஆண் உள்ளாடையில் பத்தி ஒரு போட்டோ! அப்ப வழக்கமா வரும் மாணவ மாணவி வகுப்பறையில் வந்து உட்காரும் போது ஒரு மாணவி வந்து பிரசண்ட் டீச்சர் சொன்ன போது "வாம்மா வந்து எறும்பு இல்லாத இடமா பார்த்து உட்காரு"ன்னு டீச்சர் சொன்ன போது எனக்கு சிரிப்பு வயித்த பிச்சுகிட்டு போச்சு!இப்ப சொல்லுங்க சிரிப்பு வருமா வராதா?
குசும்ப சித்தர் ரஹ்மான் விருது வாங்கின பின்ன போட்ட பதிவில் கீழ்கண்ட பின்னூட்டம் படித்து சிரிங்கப்பா!

//க்ராக்ஜாக் said...
//முனைவர் விஜய் said...ஸ்லம்டாகிற்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்பதால் தான் வில்லுவை போட்டிக்கு அனுப்பவில்லை..//அடேய் அரை மண்டையா .. அதான் வந்ததும் பொட்டிக்குள்ள போய்டிச்சே. அப்புரம் என்னதைட போட்டிக்கு அனுப்பறது?\\

\\க்ராக்ஜாக் said...
தேவாவின் இசையை காப்பி அடித்து ஜெய் ஹோ பாட்டுக்கு ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். அதற்கு போய் ஆஸ்கரா?அதான் எனக்கு வெருப்ப
\\

க்ராக்ஜாக் said...
//ஆஸ்கார் விருது ஏன் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை----> இளையராஜா விசிறி//அட்ரஸ் தெரியாம குரியர் திரும்ப போய்டிச்சாம்..
\\


அதை விடுங்க சில சமயம் செந்தழல் ரவி " அய்யா நான் இதுக்கு முன்ன போட்ட கமெண்ட்டை அனானியா ஆக்கிவிடவும்" - இதுக்கு நான் 3 நாள் ரூம் போட்டு சிரிச்சேன்.அதை எல்லாம் விடுங்க மேலே இருக்கும் போட்டோ என் சகோதரியின் மகன்! மாப்பு எப்படி போஸ் கொடுக்கிறார் பாருங்க!

நான் அதுக்கு போட நினைச்ச கமெண்ட்!
"அல்லோ RTO சார் 8 போட்டாதான் லைசென்சா? அதான் நான் 7 வரை போட்டுட்டேனே! பின்ன ஏன் எனக்கு லைசன்ஸ் தர கூடாது???"


இப்படியாக பின்னூட்டத்தில் புயல் கிளப்பும் நம்ம சகோதர சகோதரிகள் இருக்கும் வரை நமக்கு நோய் என்பது ஏது?????????

Friday, March 6, 2009

Where is the Send off Party? கப்பி

சனி ஒருத்தனை புடிக்கும்,
ஒரு கண்டத்தை புடிக்குமா?
அப்படித்தான் நீ வந்தே நாட்டுக்கும் சேர்ந்தே
வந்துச்சு சனி, பிணி, ரிசஸ்சென்.

டெக்ஸாசுல புள்ளைங்களுக்கு கொண்டாட்டம்
சொதந்திரம் கிடைச்சாப்ல கும்மாளம்.

ஊருக்கு எல்லாம் சந்தோசம் - நீ போனா
எங்களுக்கு எல்லாம் உல்லாசம்.

நாட்டை விட்டு நீ போற- சீக்கிரமே US
முன்னேறிடுனு ஒபாமா சொல்றாரு.
என்ன ஒத்துமை??

இந்தியாவுக்கு இனி கஷ்ட காலம் - IT மக்கள்
ஜட்டி எல்லாம் கழண்டும் போகலாம்,
ஓசி டிக்கெட்டு, ஓசி பேப்பரு எல்லாம் பார்த்திருக்கோம்
நீதான் ஓசி ஃபிகருன்னு ஒன்னை எங்களுக்கு
சொல்லிக்கொடுத்தே-

கொழந்தையாட்டம் ஒரு வில்லன்,
மீசை இல்லாத கள்ளன்,
ஓசில கிடைச்சா நீ ஒரு 'Full'லன்.

ஊருக்கு போற!
சீக்கிரமே வந்துருன்னு மனசு சொல்லுது,
கண்ணீரெல்லாம் இல்லே,
மொக்கை போட இனி ஆளே இல்லே!

போய் வா சிங்கமே(கப்பி)

மனைவியை கொடுமைப்படுத்துவது எப்படி?


ரொம்ப சிம்பிள்! அதுக்கு தேவையான உபகரணங்கள் ஒரு கம்பியூட்டரும் நெட் கனக்ஷனும் இருந்தா போதும். எப்படியோ தத்தி குத்தி தமிழ்ல டைப்ப ஆரம்பிச்சுட்டு பின்ன ஒரு பிளாக் எழுத ஆரம்பிச்சுட்டா போதும். அத்தோட உங்க கவலை விட்டுச்சு. இனிமே கவலைப்பட போவது எல்லாம் மத்தவங்க தானே.
நானும் அப்படி இப்படி ஏதோ கிச்சு கிச்சு காட்டும் பதிவரா ஃபார்ம் ஆகிட்டேன். என்ன தான் நீங்க எல்லாம் ஒத்துகிட்டாலும் வீட்டுல ஒத்துகிட்டா தான கொஞ்சம் மரியாதை. அப்பத்தானே கல்யாணபரிசு தங்கவேல் பொண்டாட்டி மாதிரி பிளாக்கர்ஸ் வீட்டு தங்கமணிகளும் ஆப்பிள் ஜூசும், ஆட்டுக்கால் சூப்பும் தருவாங்க.


ஆனா என் வீட்டுல எல்லாம் தலைகீழ் கதை தான். இந்த தடவை நான் போனப்ப எப்படியும் என் தங்கமணியை என் பதிவு எல்லாம் படிக்க வச்சு சிரிக்க வச்சு போட்டோ எடுத்து "பாருங்க நான் எப்படி சந்தோஷமா வச்சிருந்தேன்"ன்னு என் வருங்கால சந்த்திக்கு காட்டிட ஆசைப்பட்டேன். ஏன்னா வரலாறு முக்கியம் இல்லியா?


"சரி நான் இத்தன எழுதறேனே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்ன்னு பயரியா 1431 பல்பொடி மாதிரி பேமஸ் ரைட்டரா இருக்கேனே, உனக்கு பெருமை இல்லையா அதல்லாம்?"


"ஹி ஹி, வேற பேச்சு இருந்தா பேசுங்க"


"அட நான் ஒரு காமடி எழுத்தாளன் தெரியுமா? என் பதிவை படிச்சுட்டு எத்தன பேர் சிரிக்கிறாங்க. பாரேன் இந்த பதிவை இதை படி பின்ன தான் சாப்பாடு சாப்பிடுவேன்"


மனசுக்குள்ளே (அட ஆண்டவா இவரை சாப்பிட வைக்க இந்த நரக வேதனை தேவையா)


"அட சூப்பர் பதிவு, நல்லா இருக்கு அதும் அந்த எழுத்து ஓட்டம் நல்லா இருக்கு, கதாநாயகன் டயலாக் அருமை, இப்ப சாப்பிடுங்க"


அடப்பாவமே ரமணர் சொன்னது சரிதான் போல இருக்கு. ஒருவன் பிறருக்கு கொடுப்பது எல்லாம் தனக்கே கொடுத்து கொள்வதாக அர்த்தம்’ன்னு, ஆகா நாம எத்தன பதிவிலே இதே டயலாக்கை படிக்காமலே போட்டு தாக்கியிருக்கோம். நமக்கே திரும்புதேன்னு நெனைச்சுகிட்டேன். இதை இப்படியே விடலாமா?


"அட இதுல ஹீரோ எல்லாம் கிடையாது. உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தரேன். படி, பின்ன இதுல கேள்வி எல்லாம் கேப்பேன் எல்லாம் சரியா இருந்தா அட்லீஸ்ட் 80% வாங்கினா சாப்பாடு இல்லாட்டி சாப்பிட மாட்டேன்''.


பின்ன பத்து நிமிஷம் கழிச்சு வந்து பார்த்தா தங்கமணி கண்ணுல தாரை தாரையா கொட்டுது. என் காமடி பதிவை படிச்சுட்டு இப்படி அழுத முதல் ஆள்! என்ன்ன்னு கேட்டா "இந்த சிலபஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு வேற ஈசியா கொடுங்க"ன்னு சொன்னாங்க. விடுவனா? சரி தர்ரேன். இந்த பதிவிலே பாப்பா பாரத மாதா வேஷம் போடுறா, அதுல என்ன கஷ்டம் ஈசி சப்ஜெக்ட் தானே. சரி இந்த பதிவை படி ரொம்ப ஈசி தான் இந்த சப்ஜெக்ட் "பசுவுக்கு சவாலா" நல்லா இருக்கும் படி. பின்ன சாப்பாடு.


ஒரு வழியா 2 பதிவை படிக்க வைக்கும் முன்னே தாவு தீந்து போச்சு. ஆனா தங்கமணி தான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமா எப்போதும் போல "பேசாம அந்த சென்னை வரனுக்கே அப்பா முடிச்சிருக்கலாம், விதி எல்லாம் விதி"ன்னு சலிச்சுகிட்டு போனாங்க.


அடுத்த நாள் காலையிலே மாத்திரை மருந்துன்னு எடுத்து வரும் போது கண்டிப்பா சொல்லிட்டேன். சில கேள்வி எல்லாம் கேப்பேன். பின்ன தான் எந்த மருந்தும்ன்னு. சில பல கண்டிஷன் எங்களுக்கு இடையே. அதாவது அபிபாப்பா குளூ கொடுக்கலாம். ஆனா ஜாடையால் மட்டுமே. வாயால் சொல்ல கூடாது! சரின்னு ஒத்துகிட்டு சிலபஸ் கேட்டாங்க. சரி நானும் முதல்ல நம்ம வ.வா சங்கத்தையே முதல் சிலபஸ்ன்னு சொல்லிட்டேன். அதுக்கு இலவச இனைப்பா பாப்பா சங்கம்.


ஒரு மணி நேரம் அம்மாவும் பொண்ணும் விழுந்து விழுந்து படிச்ச பின்னே நான் வந்து உக்காந்தேன். என்னை ஒரு வில்லன் மாதிரியே பார்க்கிராங்க.


"சரி வவாசங்க தல யாரு"


"கைப்புள்ள"


"குட், இது கேள்வில சேர்த்தி இல்ல! சும்மா டிரையல் பால் மாதிரி(இப்படித்தான் தெரு பசங்க கிட்ட கிரிக்கெட் விளையாடும் போது நான் அவுட் ஆகும் போதல்லாம் அது டிரயல் பால்ன்னு சொல்லுவது வழக்கம்) முதல் கேள்வி கேட்கவா"


"அய்யோ நான் இந்த போங்கு ஆட்டத்துக்கு ஒத்துக்க மாட்டேன், இதும் ஒரு கேள்விதான், ஏன் சங்கத்து தல அதுக்கு கூட ஒர்த் இல்லியா? சரி அட்லீஸ்ட் இந்த பதிலுக்கு இந்த சின்ன மாத்திரை ஓக்கேவா"


"சரி ஓக்கே சின்ன மாத்திரை தானே, இப்ப கேக்குறேன் பாரு, சங்கத்தின் போர் வாள் யார்?"


"அய்யோ எடுத்த உடனே பத்து மார்க் கேள்வி கூடாது சின்ன சின்ன தா கேளுங்க 1 மார்க் கேள்வியா கேளுங்க, சிபி சம்மந்தமா, பாலாஜிதம்பி சம்மந்தமா இப்படி ஒரு மார்க் கேள்வி ஓக்கே"


"சரி ஓக்கே சிபிக்கு எத்தனை பிளாக் இருக்கு, ஊருக்கு தெரிஞ்சு எத்தனை, ரகசியமா எத்தனை?"


"அய்யோ இது அவருக்கே தெரியாது! வேற எதுனாவது பாலாஜி பத்தி கேளுங்க"
"சரி பாலாஜி பின்னூட்டம் வாங்க என்ன பண்ணுவாரு?"


"பதிவு போடுவாரு"


"அய்யோ அதிக பின்னூட்டம் வாங்க என்ன பண்ணுவாருன்னு கேட்டேன்"
அபி அப்ப குறுக்கிட்டு"அப்பா நீங்க கேட்ட கேள்விக்கு சரியான பதில் தான் இது மரியாதையா மார்க் கொடுங்க, அதனால இந்த பெரிய மாத்திரை ஓக்கேவா"ன்னு சொல்லிகிட்டே வாயிலே மாத்திரையை போட்டு தண்ணி ஊத்திட்டா.


"அப்படியா சரி இப்ப சொல்லு, புலி யாரு?"


"பிரபாகரன்"


"நோ"


"இல்லியா, அப்ப அவரு யாரு?"


"அந்த நோ இல்லை இது, சங்கத்துல யாரு புலி"


"சங்கத்துல எல்லாம் சிங்கம் தான் புலி இல்ல"

இல்ல ஒரு புலி இருக்கு நாகையிலே இருந்து"


"அய்யய்யோ நாகைல புலியா அப்ப உங்க ஆட்சி அம்பேலா?"


அதுக்கு அபி"அய்யோ அம்மா, அந்த புலி அங்கிள் புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் போட்டு குளிப்பாராம் அதான் அந்த பட்ட பேரும்மா, அதுக்கு எல்லாம் ஆட்சியை கலைக்க மாட்டாங்க"


"சரி இப்ப சொல்லு தேவ்க்கு என்ன பட்ட பேர்? "


தங்கமணி அபியை பார்க்க அபி தன் முயற்சி எல்லாம் சைகையிலே சொல்லியும் புரியாமல் விழிக்க அப்ப பார்த்து தம்பி நட்டு "வாள்"ன்னு கத்த நான் "அபி ஏன் அவன் வாள்ன்னு கத்துறான்ன்னு நான் கேட்க அபி அதுக்கு "அவன் "போர்" அடிச்சா அப்படித்தான் கத்துவான்ப்பா"ன்னு சொல்ல தங்கமணிக்கு ஞானம் வந்து "போர்வாள்"ன்னு சொல்ல நான் அப்படியே நட்டுவும் அபியும் சைகையால் உதவி செய்யாம வார்த்தையால் உதவி செய்தமையால் நான் மார்க் கொடுக்கவில்லை.


"ந்தோ பாருங்க உங்க சங்கத்து சிங்கத்துக்கு எல்லாம் பத்து பத்து புள்ள பொறந்து எல்லாம் ஆளுக்கு 8 பிளாக் ஒரிஜினலாவும், 27 பிளாக் பினாமியாவும் வச்சு எப்ப பார்த்தாலும் அவங்க அப்பா எல்லாரையும் படிச்சு கமெண்ட் போடுங்கப்பான்னும், ஆன்லைன்ல இருந்தாலும் ஆஃப் லைன்ல இருந்தாலும் லிங் கொடுத்தும், தனி மெயில்ல "நேரம் இருக்கும் போது படிங்க,இதான் என் லிங் :குறிப்பு: இன்னும் 10 நிமிஷத்துல நேரம் உங்களுக்கு கிடைக்கலைன்னா நான் திரும்பவும் ஒரு மெயில் அனுப்பி ஞாபகப்'படுத்தறேன்' எனவும் சொல்லி தொல்லை குடுக்கலை என் பேரை மாத்திகுங்க"ன்னு சாபம் விட்டுட்டு போயிட்டாங்க.


அத்தோட நான் 2 நாள் டைம் கொடுத்தேன். நல்லா படிச்சு பாஸ் பண்ணுங்கன்னு சொல்லி!
*************************
மக்கா பதிவு முடிஞ்சுது. இப்ப தலைப்பு ஓக்கேவா! ஆனா பாருங்க பதிவு தான் முடிஞ்சுதே தவிர ஒரு விஷயம். எல்லார் தங்கமணியும் ஒரு கொடுமைன்னா தாங்கிட்டு விதின்னு போயிடுவாங்க. ஆனா என் வீட்டு நிலைமை இருக்கே ரொம்ப கொடுமை. "கணவனை கொடுமை படுத்துவது எப்படி"ன்னு அடுத்த பதிவே போடும் அளவு சமாச்சாரம் இருக்குங்க. வந்தது வந்துட்டீங்க அதையும் படிச்சு தொலைங்க அந்த கொடுமையை!
*******************************
"என்னங்க இன்னுமா தூக்கம் ஆயில்யன் காலை பதிவு போடும் நேரம் ஆச்சு, விட்டா தூங்கிகிட்டே இருப்பீங்க தம்பி ஆயில்யன் மதிய பதிவு போடும் வரைக்கும்"


"அல்லோ என்னங்க பப்பு இன்னிக்கு ஸ்கூல்க்கு டிபன் வேண்டாம், சும்மா திராட்சை பழம் போதும்ன்னு சொல்லிட்டா"- இது தங்கமணி!


"ஏன் டேய் அபி என்ன நினைச்சுகிட்டு இருக்க நல்லா சாப்பிடனும்"- இது நான்


"அப்பா நான் பப்பு இல்ல பாப்பா, அம்மா சொன்னது பப்புவை பத்தி, முல்லை ஆண்டி பதிவு படிச்சிருப்பாங்க போல இருக்கு"- இது அபி!


"சாப்பாடு என்ன ஆச்சு?" இது நான்!


"இருங்க நல்லா ஸ்டெர்லைஸ் பண்ணாம தட்டு கொடுக்க கூடாதுன்னு அம்மா வலைப்பூவிலே போட்டிருந்தாங்க"- தங்கமணி

மதியம்: அல்லோ என்ன பண்ணிகிட்டு இருக்க!

தங்கமணி: இருங்க எட்டு புள்ளி எட்டு வரிசை கோலம் போட்டு ஸ்கேன் பண்ண போரேன்!


"நான் கடவுள் படம் இன்னிக்கு போலாமா"


"லக்கி நல்லா இருக்குன்னு சொல்லியாச்சு, அதிஷா அருமைன்னு சொல்லியாச்சு, அடுத்து 4 பதிவு ஒரே கொடுமை அதும் லேடீஸ் வர கூடாதாம். நீங்க போய் தனியா பார்த்துட்டு வாங்க"


"ஹல்லோ சாப்பாடு என்ன இன்னிக்கு"


"இருங்க அதுக்கு தான் நானும் வெயிட்டிங், தூயா எப்படியும் இன்னிக்கு ஒரு பதிவு போடுவா, இன்னிக்கு அதான் மெனு!"

"ஏங்க இன்னிக்கு போய் LIC கட்டிடுங்க ஏன்னா இன்னிக்கு கோபி பதிவு போடும் நாள்!"

"ஓ இன்னிக்கு சம்பள நாளா சரி ஓக்கே, ஆமா 6 மாசத்துக்கு ஒரு தடவை வீட்டு வரி கட்டனுமே அதை எப்படி நியாபக படுத்துவ?"

"அதான் டுபுக்கு பதிவு போடுவாரே அப்ப கட்டினா போதும்"
"சரி ஹீட்டர் போடு நான் குளிக்க போறேன்"
"அய்யோ ரிஷான் பதிவு படிக்கலையா உலக செய்தி, ஆப்ரிக்காவிலே ஒருத்தர் ஹீட்டர் போட்டு குளிச்சதுக்கு அமிஞ்சிகரையிலே எலக்ட்ரிக் பில் வந்துச்சாம்"


" சரி ஷூ எடு நான் விளையாட போகனும்"


"அய்யோ டெட்டால் தீர்ந்து போச்சு சேத்துல நடந்து போய் டெட்டால் வாங்கிட்டு வாங்க, டாக்டர் புரூனோ சொல்லிட்டாரு"


'சரி எதுனா அய்யனார் பதிவு வந்துச்சா?"


"அய்யோ ஏன் இப்படி புத்தி போகுது உங்களுக்கு நான் கேயாரெஸ் பதிவு நறுக்குன்னு 4 எடுத்து வச்சிருக்கேன் வந்து படிங்க"


"இல்ல நாம ஒரு முடிவுக்கு வரலாம்! இனி நானும் உன்னை கொடுமை படுத்த மாட்டேன், நீயும் என்னை கொடுமை படுத்த கூடாது ஓக்கே"

Monday, March 2, 2009

"ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!"
சின்ன வயசுல பெரிய அண்ணாத்த அக்கா இவிங்களுக்கு எல்லாம் தம்பியா இருக்கும் அவலம் இருக்கே ரொம்ப கொடுமை. அவங்க விளையாட்டுக்கும் சேர்த்துக்க மாட்டாங்க. நம்மையும் தனியா விளையாட விட மாட்டானுங்க. அப்படியே சேர்த்து கிட்டா கூட உப்புக்கு சப்பானியா ஒரு கை குறைஞ்சா பெரிய மனசு பண்ணுவானுங்க. அந்த ஸ்டேஜ் எல்லாம் போய் நானும் ரவுடிதான்ன்னு ஜீப்பிலே ஏறிகிட்டு லந்து விட்டு முடிச்ச பின்ன இப்ப திரும்பவும் அப்படி ஒரு டிப்ரஷன் வந்துடுச்சு.


இந்த 40+ வந்தாலே ஆணோ, பெண்ணோ சரி. இந்த யூத்துங்க தொல்லையும் தாங்கலை. பெரிசுங்க தொல்லையும் தாங்கலை. எவனும் சேர்த்துக்க மாட்டங்கிறாய்ங்க. எதுனா ஒரு பதிவிலே கும்மி அடிக்கலாம்ன்னு பார்த்தா கூட "அபிஅப்பா கொஞ்சம் உக்காந்து நாங்க எப்படி கும்மி அடிக்கிறோம்ன்னு பாருங்க. உங்க அனுபவத்தை நாங்க மைண்டுல வச்சிக்கிறோம்"ன்னு குசும்பன், கோபி, சென்ஷி, பொடியன் & குரூப் சொல்லுது.


சரி இந்த பக்கம் போவும்ன்னு பார்த்தா சீனாசார், தருமி சார் எல்லாம் "போங்க போங்க அபிஅப்பா நாங்க சீரியஸ் பதிவு போடுவோம், நீங்க பரிசல், வேலன் அண்ணாச்சி அப்படியே அந்த பக்கம் ஒதுங்குங்க"ன்னு கழட்டி விட்டுட்டு போறாங்க.


சரி அம்மாக்கள் வலைப்பூ, பேரண்ட்ஸ் கிளப்ன்னு போய் "இந்த குழந்தை வளர்ப்பு இருக்கே அது ஒரு கலை" அப்படீன்னு ஒரு பிட்டை போட்டு நாமலும் யூத்து தான்ன்னு காமிச்சுகிட்டு உள்ளே போனா அங்க "கொலையே விழும், போங்க போங்க நாங்க குழந்தை வளர்ப்பு பத்தி எல்லாம் அபிஅம்மா கிட்ட கேட்டுக்கறோம்"ன்னு விரட்டி கழுத்த பிடிச்சு வெளியே தள்ளி விட்டுராங்க.


அப்படி பேஸ்தடிச்சு உக்காந்தப்ப தான் வீட்டு கதைவை யாரோ தட்டினாங்க.


"ஹல்லோ யாருங்க வீட்டில? அபிஅப்பா வீடுதானே இது! "


காத்து வாங்கும் கடைக்கு கூட யாரோ வர்ராங்களேன்னு எனக்கு ஒரே குஷி .எனக்கு 504 மில்லி அடிச்சு ஆஃப்பாயில் சைட் டிஷ்ஷா வச்ச மாதிரி ஒரு ஜிவ் வந்துடுச்சு. சிட்டு குருவிக்கு என்ன கட்டுப்பாடுன்னு பாடிகிட்டே ஓடி வந்து கதவை திறந்தா அட நம்ம வருத்த படாத வாலிபர் சங்கத்து சிங்கம் எல்லாம் தல கைப்புள்ள தலைமையிலே வந்திருக்காங்க.


முதல்ல இளாதான் ஆரம்பிசாரு!


"அபிஅப்பா சங்கத்துல இருந்து வந்திருக்கோம். உங்க ஒதவி வேணும்"


"அய்யய்யோ 180ல 90 போச்சுன்னா மீதி எத்தன ஆங் 90 தானே இருக்கு" இது நான்!


"டேய் டேய் டேய் வேணா! விட்டுடு, சங்கம் ஆரமிச்சு 3 வருஷம் ஆக போவுது! ரொம்ப கண்ணு பட்டு போச்சு எதுனா திருஷ்டி சுத்தி போடனும்ன்னு பாசக்கார பயலுக கேட்டானுக! உன் போட்டோ குடு சங்க ஆபீஸ்ல மாட்டனும்" இது கைப்புள்ள!


"அடங்கொய்யால, அதுக்குதான் தல உங்க போட்டோவையே மாட்டிகலாமே" இது நான்.


"யோவ் என்னுது வேற மூஞ்சி, உன்னுது நாற மூஞ்சி" - கைப்ஸ்


"அதுல ஒரு சிக்கல் ஆகி போச்சு அபிஅப்பா, இஸ்கூல் போற நாதாறி பய புள்ள எல்லாம் "குறி" பார்த்து அடிப்பது எப்படின்னு பழகுறானுங்க அந்த போட்டோவை வச்சு அதான்" இப்படி கச்சேரி வச்சது தேவ்!


"டேய் இத இவரு கேட்டாரா பக்புக்பக்புக்ப்க்" - கைப்ஸ்


"சரி ராயல் ராம் வச்சு பசங்களை சமாளிக்க வேண்டியது தானே?" - அபிஅப்பா


"அய்யோ அய்யோ சரியான மக்குனி பாண்டியனா இருக்கீர் அபிஅப்பா, எனக்கு அந்த ஆப்பு வக்கிறதே ராயலு தான் அபிஅப்பூ ...ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே, முடியல," கைப்புள்ள பின் அடி முதுகை பிடிச்சுகிட்டு உக்காந்த பின்னே அடுத்து நானும் பரிதாபப்பட்டு என் போட்டோவை சங்கத்து திருஷ்டிய கழிக்க வேண்டிய காரணத்தால் கொடுத்துட்டேன், ஒரு நிபந்தனை போட்டு.


"தல எனக்கு என் போட்டோவை நீங்க சங்கத்து வாசல்ல மாட்டினாலும் சரி இல்ல ஆண்கள் கக்கூஸ்ல மாட்டினாலும் சரி ஆனா அந்த ஒரு மாசமும் நான் சங்கத்துல எழுதியே "தீர்ப்பேன்"


கைப்புள்ளக்கி கோவம் வந்து பக்கத்துல நின்ன கப்பிக்கு ரெண்டு பளார்ன்னு விட்டு "ராஸ்கல் சங்கத்து திருஷ்டிய போக்க வலைஉலக ஆன்மீக ஆழ்வாரு கேயாரெஸ் கிட்ட குறி கேட்டு வந்து திருஷ்டி கழிக்க சரியான மூஞ்சி என் மூஞ்சிக்கு அடுத்து அபிநொப்பா மூஞ்சி தான்ன்னு சொல்லி என்னய கூட்டிட்டு வந்தீங்களே, இப்ப பாரு நானும் எழுதுவேன்னு அடம், இதுக்கு பேசாம நீ தகர கவித எழுதி சங்கத்து பேரை காப்பாதுலாம், இல்லாட்டி சங்கத்தை வித்துபுட்டு பேரீச்சம் பழம் வாங்கி திங்கலாம், யோவ் அபிஅப்பா அப்படி சங்கத்துல இல்லாதவங்க எழுதினா அது அட்லாஸ் வாலிபரு அய்யா வாலிபர்"


"வாலிபர்ரோ வைரமுத்துபர்ரோ நான் எழுதுவேன் வேணும்ன்னா முதல் போஸ்ட் தலைப்பை "ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!"ன்னு தலைப்பு வச்சிக்கறேன்"


"சரி வச்சு தொலைங்க, ஆனா நீங்க யூத்து மாதிரி எழுதனும் என்னைய மாதிரி எழுதனும்"


"சரி சரி, "பீடிங் பாட்டிலை கழுவுவது எப்படி?", "டயப்பர் மாட்டுவது எப்படி?", "ரிங்கா ரிங்கா ரோஸ் ரோஸ் பாட்டு குழந்தை கண்ணன் பாட்டு தான் - ஒரு கல்வெட்டு ஆராய்சி", "ஆபீஸ் போகும் போது எடுத்து செல்லும் பொருட்கள் - ஒரு செக் லிஸ்ட்", "டயனோரா டிவியும் டயானா மாமியும்!!" அப்படீன்னு ஒரே யூத் தலைப்பா போட்டு தாக்கிடுறேன் தல, மறக்காம நம்ம போட்டோவை மாட்டுங்க"


"சரி நான் போட்டோவை மாட்டுறேன். சரியா எழுதலைன்னா நம்ம போர்வாள் அதுக்கு கீழ ஊதிவத்தி ஏத்தி வைக்கிற மாதிரி இருக்கும் பர்வால்லயா. டேய் வாங்கடா போவும், ஒரு மாசம் கழிச்சு சங்கம் இருந்தா வருவும்"


எல்லாம் சங்கத்து சாவிய என் கைக்கு கொடுத்துட்டு போயாச்சு. வாங்க மக்கா இனி நம்ம கொண்டாட்டம் தான்!