Thursday, January 31, 2008

வார்த்தைகள் எதுவுமில்லாத Aபாசப் பதிவு.
பேச்சே இல்லாத ஆ பாச பதிவு. நாங்களும் போடுவோம்ல

Wednesday, January 16, 2008

கலைஞர் டிவிக்குக் கண்டனம்

நேற்று பொங்கலை ஒட்டி தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிய வண்ணம் இருந்தன..இதில் ராகதேவன் இசைஞானி இளையராஜாவின் துபாய் இசைக் கச்சேரி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது நாம் அனைவரும் அறிந்ததே..

இந்த நிகழ்ச்சிக்கு நம் பதிவுலகைச் சேர்ந்த சிங்கங்கள் சென்று சிறப்பித்து வந்த விவரம் பதிவுலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டதை உலகமே அறியும்...

பொங்கி வழிந்த அவர்களின் இசை ரசனை பதிவுகளில் கண்டு நாம் பழரசம்...சாரி பரவசம் அடைந்த விவரத்தை இப்போது உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

அப்பட பட்ட உயர்வான இசை ரசனை கொண்ட நம் பதிவுலகச் சிங்கங்கள் ராஜாவின் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டு அகில பதிவுலகமும் கொந்தளித்து கொப்புளித்துப் போய் உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்றும் நம் சிங்கங்களின் வருகையை கலைஞர் தொலைக்காட்சி பதிவு செய்ய தவறியுள்ளது ஒரு திட்டமிட்ட சதிச் செயலாகவே பரவலாகக் கருதப்படுகிறது..

தமிழே புரியாத ஷேக்குகளின் வரவைக் கூட மீண்டும் மீண்டும் க்ளோஸ் அப் வைத்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள் கலைஞர் டிவியினர்.. அதிலும் பாதி ஷேக்குகள் ஓசி டிக்கெட் எடுத்து வந்திருந்தார்களாம்..அவர்களுக்கு அளித்த முக்கியத்துவம் கூட நம்ம நற்றமிழ் இசை ரசிகர்களுக்கு அளிக்கப்படாத்து பதிவுலகின் பல மட்டங்களிலும் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரவ விட்டுள்ளது.

இது குறித்து நேற்று மாலை கிடேசன் பார்க்கில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது..

அதில் நம் துபாய் பதிவுலகப் பெருந்தகைகள் பினாத்தலார், ஆசிப் அண்ணாச்சி, குசும்பன், கோபி, சென்ஷி ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.. இந்த ஆலோசனைக் கூட்டத்தககுச் செல்ல புறப்பட்ட அபி அப்பா, அய்யனார் மற்றும் நம்ம சங்கத்து சிங்கம் தம்பி கதிர் ஆகியோர் தடுக்கப்பட்ட நிலையில் கிடேசன் பார்க் சுவர் ஏறி குதித்து அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பதிவுலகம் எங்கும் நேற்று மதியம் முதல் பரவத் தொடங்கிய இந்த தகவல் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கபடுகிறது..

இது குறித்து கருத்து தெரிவிக்கவும் இயலாத நிலையில் பெனத்தலார்,அண்ணாச்சி ஆகியோர் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

தொலைபேசியில் வ.வா.சங்கத்து நிர்வாகிகளோடு தொடர்பு கொண்ட நண்பர் குசும்பன் இது குறித்து கூறியதாவது..." நிகழ்ச்சி டிக்கெட் வாங்கிச் சென்ற எங்களது வருகையை கலைஞர் டிவி வேண்டுமென்றே இருட்டடிப்பு செயதுள்ளது..நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்காமல் வந்த இளையராஜாவையும் அவர் மொத்தக் குழுவினரையும் காட்டியதைக் கூட பரவாயில்லை என்று ஏற்று கொள்ள முடியும்... குஷ்பு, ஜெயராம் போன்றவர்களும் டிக்கெட் வாங்காமல் மேடை வரை அனுமதிக்கப்பட்டதும் கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டதும் எங்களை வருத்தப்பட வைத்துள்ளது... அத்தோடு மொழி புரியாத ஷேக்குகளையும் அவர்களோடு வந்து இருந்த கொழுக் மொழுக் செட் அப்புகளையும் தொடர்ந்து காட்டியது எங்கள் வருத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது... இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் " எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்து வ.வா.சங்கம் நடந்து முடிந்துள்ள இந்த அநியாயத்தைக் கிடேசன் பார்க் மக்களோடு சேர்ந்து கண்டப்படி கண்டனம் செய்கிறது...கண்டனத்துடன் பெரும் போராட்டமும் அறிவிக்கிறோம்.. போராட்டத்தின் கோரிக்கையாக

அடுத்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக சங்கத்தினரையும் கிடேசன் பூங்காவினரையும் அழைத்து நடந்த நிகழ்ச்சிக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..

Monday, January 14, 2008

போர்வாள் பொங்கல் வைக்குறாரு

கரும்பெல்லாம் எட்ட நின்னு பாக்கும் போது ரெட்டைச் சடைப் போட்ட புள்ளகளாக் கண்ணுக்குத் தெரிஞ்சு.... வாயோரம் பொங்கல் சாப்பிட்ட எபெக்ட் வந்துச்சுன்னா.... அப்படி ஒரு பொங்கலுக்குப் பேரு "ஜொள்ளு பாண்டி பொங்கல்"

கரும்பை வாங்கி வாயாலக் கடிக்காம... கரும்பு விக்கறவரை வாயிலே வர்ற வார்த்தையாலக் கடிச்சீங்கன்னா... இந்த வருசம் நீங்க கொண்டாடப் போறது "சிபி பொங்கல"

பொங்கல் அன்னிக்கு வூட்ல்ல உக்காந்து பழசை எல்லாம் நினைச்சுப் பாத்து....நான் பத்து வயசுல்ல எப்படி எல்லாம் பொங்கல் கொண்டாடினேன்ன்னு பீலிங்க்காப் பதிவு போட உக்காந்து அடுப்புல்ல வச்சு தங்கமணி உங்க கன்ட்ரோல்ல விட்டுப் போனப் பொங்கலைக் கண்டபடி பொங்க விட்டீங்கன்னா அது கண்டிப்பா "கைப்புள்ள பொங்கல்ங்கோ"

அமெரிக்கா ஹவேஸ்ல்ல.... காரெல்லாம் சர் புர்ன்னு போகவும் வரவும் இருக்க... ரோட்டோரம் அஞ்சு கிலோ மீட்டர் வேகத்துல்ல போற டிராக்டர்ல்ல ஏறி... பில்லாவுல்ல அஜித் போட்ட கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு.. புரட்சித்தலைவர் பாடுன்ன.. விவசாயி விவசாயி.. பாட்டை ஐ பாட்ல்ல கேட்டுகிட்டு மாட்டுப் பொங்கல் அன்னிக்கு புல் பைட் பாக்க போனீங்கன்னா... அது நம்ம "விவசாயி பொங்கல்ங்க..."

பொங்கல் அன்னிக்கு பொழுது விடிஞ்சும் விடியாமலும் இருக்கும் போதே எழுந்து கூகுள் டாக்கை திறந்து வச்சு...ஸ்ட்டேஸ் மெசேஜ்ல்ல எல்லாருக்கும் ஒரு பொங்கல் வச்சா எனக்குன்னு ஒரு பொங்கல் வச்சுருக்கான்னு மெசெஜ் போட்டு அந்த மெசெஜை மதியமே போங்கடி நீங்களும் ஒங்க பொங்கலும்ன்னு மாத்துனா..அது தாங்க "மதுரக்கார ராயலு பொங்கல"்

பொங்கல் வைக்கறது எப்படின்னு போனைப் போட்டு அம்மாகிட்டே கேட்டுக்கன்னு புது மாப்பி ஜோரோட உத்தரவெல்லாம் போட்டுட்டு...அப்புறம் அப்படியே சைலண்ட்டா தங்கமணி வச்ச பொங்கலை மாங்குன்ன்னு மாங்குன்னு தின்னுபுட்டு எங்க அம்மா கூட இப்படி எனக்குப் பொங்கல் வச்சுக் கொடுத்ததுல்லன்னு அரிச்சந்திர அவதாரமெடுத்தீங்கன்னா... புது மாப்பிள்ளைகளா நீங்க எல்லாரும் கொண்டாடப் போறது நம்ம "வெட்டி பொங்கல"

பொங்கல் அன்னிக்கு பொழுது முழுக்க தூங்கிபுட்டு..சாயங்காலமா எழுந்து புதுப்படம் பாக்க கிளம்பி போய் போஸ்டரைப் பாத்து டிக்கெட் வாங்கிட்டு தமிழ் படம் மொத்தத்தையும் பாத்து முடிச்சுட்டு ..அதுக்கு விமர்சனமும் பொட்டித் தொறந்து தட்டிட்டு...அப்படியே பொங்குற பிலீங்கோட கிழக்காப்பிரிக்கவுல்ல 1935ல்ல எப்படி பொங்கல் வச்சாங்கன்னு கருப்பு வெள்ளையிலே வந்த எதாவது படத்தை டவுண்லோட் பண்ணிப் பாத்துட்டு..ஐ பொங்கல் அப்படின்னு !!!!?????? எல்லாம் போட்டு ஒரு பதிவைப் போட்டு படுத்தீங்கன்னா...அது கண்டிப்பாக் "கப்பி பொங்கல்ங்க..."

வழக்கமா சூடான பொங்கல் சாப்பிடுறவங்க....கொஞ்சம் சூடு ஆறுன பொங்கலை இங்கன இந்தியாவுக்குள்ளே சாப்பிட்டுட்டு..... மீசையை ஏத்தி இறக்கி விட்டுட்டு....போட்டோவுக்கு போஸ் எல்லாம் கொடுத்துகிட்டு.... உள்ளூர்ல்ல நடக்குற கோலி விளையாட்டுல்ல இருந்து வீர விளையாட்டு வரைக்கும் போய் வேடிக்கை மட்டும் பாத்துகிட்டே அலப்பரை கொடுத்துகிட்டு....சாயங்காலமா அழுக்கான வேட்டியோட வீட்டுக்கு வந்து ஒரு புலி மார்க் சீயக்காய் பாக்கெட்டை உடைச்சி தலைக்குத் தேய்ச்சு குளிச்சு ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அப்படின்னு ஒரு எபெக்ட் கொடுத்தீங்கன்னு வைங்க...அது "நாகை புலி பொங்கல்ங்க..."

பொங்கலுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்ன்னு முழுசா சொல்லாம.... வெறும் வாழ்த்துக்கள் அப்படின்னு வாய் வலிக்கற வரைக்கும் சொல்லிகிட்டு திரிஞ்சிங்கன்னா..அது நம்ம "தம்பியின் பாவனா பொங்கல்ங்க...."

இப்படி பொழப்பு இல்லாம எல்லாரையும் நக்கல் விட்டு பதிவுல்ல பொங்கல் வச்சா... அது கண்டிப்பா நம்ம பொங்கல் தாங்க...

எல்லாப் பொங்கலையும் சொல்லியாச்சு.. உங்களுக்குப் பிடிச்சப் பொங்கலை எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி குடும்பத்தோட நண்பர்களோட நம்ம வ.வா.சங்கத்தோடச் சேர்ந்து கொண்டாடுங்க...

எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு

போர்வாள்

Saturday, January 12, 2008

லவ் பண்ணாதீங்க...

பாருக்குள் போகிறார் கைப்புள்ள. அங்கு காலியான இருக்கையில் அமர்கிறார். அவருக்கு அருகில் இருப்பவர் வருத்தத்துடன் 90 இறக்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம்....

வடிவேல் :- அண்ணே என்னண்ணே சோகம் கலர்கலரா பாட்டில கமுத்தரிங்களேண்ணே.....

அவர்:- அது ஏகப்பட்ட பிரச்சனைப்பா...ஆமா நீ யாரு ....

வடிவேல் :- நான் ...நேத்திக்குதான் அமரிக்காவுலயிருந்து வந்தேன்.....

அவர்:- டேய் வெருப்பேத்தாத...நீ ஏற்கனவே துபாய் போயிட்டு வந்தவான்
தானே.....இப்ப அமெரிக்கா போய் அந்த ஊரையும் கெடுக்கரயா...

வடிவேல் :-என்ன சின்ன புள்ள தனமா ராஸ்கேல்....அதுயிருக்கட்டும் ஏன் இந்த கொல வெறீ...

அவர்:-எங்க வீட்ல எனக்கு பொண்ணு பாக்கராங்க...நல்ல பொண்ணா கிராமத்து பொண்ணா......ஆன எனக்கு அதுல கொஞசம் கூட இஷ்டமேயில்ல....லவ் பண்ணி கல்யான பண்ணனும்னு ஆசை....அதனாலதான் இறக்கிட்டு இருக்கேன்.......எனக்கு அரேஞ்சுடு மேரேஜ் ரொம்ப எரிச்சலா இருக்கு....ஆமா நீங்க ஏன் இங்க வந்திங்க.....

உடனே வடிவேல் மனதில்..." ஏண்டா உனக்கு நல்ல பொண்ணா பாத்தா புடிக்காதா....லவ் கேக்குதா....ஏண்டா .என்கிட்டயே லந்து குடுக்கரியா.........
அப்போ ஆரமிச்சரவேண்டியாதுதான்......"

வடிவேல் :- பரவாயில்ல அப்பு உனக்கு.... நா ஒரு சின்ன பிரச்சனைனால வீணா போயிட்டேன்......

அவர்:- விவரமா சொல்லுங்கண்ணே.....

வடிவேல்:- அப்படிவா.....டே.. நா அமரிக்கா போயி ரொம்ப வருஷ்ம் ஆகுது. இத்தன வருஷத்துல என்னென்னல்லாம் நடந்துது தெரியுமா. ஒரு வெள்ளகார பொண்ணா பாத்து லவ் பண்ணேன்.அது ஒரு கணவன இழந்த பொண்ணா, நான் ஆதரவு காட்டிகிட்டு வந்தேன்....... அந்த பொண்ணுக்கு ஒரு 15 வயசுல பொண்ணு இருக்குடா.........என் கூட இருந்த அந்த 15 வயசு பொண்ணுக்கும் என் சித்தப்புக்கும் லவ் வந்துடுச்சி. இதுனால என்னாச்சி என் சித்தப்பு இப்போ எனக்கு மருமகனாயிட்டாண்டா.....நான் என் சித்தப்புக்கு மாமனார் ஆயிட்டேண்டா.....என் சித்தி எனக்கு மகளாய்ட்டாடா..அந்த பொண்ணு இப்போ எனக்கு அம்மாவாயிட்டா...
இதுக்கப்புறம் தான் பிரச்சனையே ஆரமிச்சது......எனக்கு ஒரு பையன்
பொறந்தான்........இப்போ என் பையன் என் சித்தப்புக்கு சகலையானதுனால..நா அவனுக்கு மாமாவாயிட்டேன்....நிலைமை ரொம்ப இப்போ தான் என்னன்னா... சித்தப்புக்கு ஒரு பையன் பொறந்ததான். அந்த பையனுக்கு நான் தான் தாத்தா ..என் வீட்டுகாரிதான் பாட்டி......என் சித்தப்பு தான் அந்த பையனுக்கு அப்பா..... இதுதாண்டா என் சின்ன பிரச்சனை....எல்லாம் காதல்னால வந்த பிரச்சனை

......

அவர்:- அண்ணே முடியல .......நா வீட்ல பாக்கர பொண்ணயே கல்யாணம்
பண்ணிக்கிறேன்.....


வடிவேல்:- ம்ம்ம் அப்படிவா வழிக்கு........எதாவது லவ் கிவ்ன்னு சுத்துன சோளிய முடிச்சிபுடுவேன் ஆமா........
Thanks to (¯`•._Σ└ªñ_.•´¯) ♣

Thursday, January 10, 2008

டல்லான அபி அப்பாவுக்காக

அபிஅப்பாவோட பிரச்சினை என்னாவா இருக்கும்? எதுவா வேணுமின்னா இருக்கட்டுமே, சோர்ந்து போனா உற்சாகப்படுத்தவே இந்தப் பதிவு. அது ஏன் அபி அப்பாவை பத்தி எழுதறோம்னா.. அய் அஸ்கு அப்புறமா சொல்றோம்..

Wednesday, January 9, 2008

ஒலகம் உருண்டையா.. எந்த மடையன் சொன்...

உலகம் உருண்டைன்னு சொன்னா நம்ப முடியுமா? முடியாதே. காரணம்? தட்டையாத்தான் இருக்கும். காரணம். கீ போர்ட் தட்டையாத்தானே இருக்கு. சாப்பாட்டுக்கு ஆர்டர் பண்ணலாம், படம் பார்க்கலாம், பாட்டு கேக்கலாம். அப்பா அம்மா கூட பேசலாம், கடலை வறுத்து தள்ளலாம், அப்புறம் என்ன போன நூற்றாண்டுல மக்கள் சொன்ன மாதிரி ஒலகம் தட்டைதான். உருண்டைன்னு சொன்னா நிரூபிங்க பார்க்கலாம்(ஒரு வேளை கீ போர்டு உருண்டையா தயாரிச்சா ஒத்துகிறோம்?)


அவனவன் கஷ்டபட்டு ஒரு டூல் கண்டுபுடிச்சு அதை crack பண்ண எவ்ளொ கஷ்டப்படுறோம்.

ஆமாம்யா, வளரைலன்னா.. நல்லா வளருங்கோன்னு அனுப்புவீங்ளாக்கும்?


சோத்துக்கு ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி போல இருக்கு..

'


என் பேரு ரோமியோ, டைமிங்காக இனிமே என் பேரு ரோபோ...


வாசம் புடிக்கிற மாதிரி சோறு கட்டும்வே..

எவ்ளோ வசதியா இருக்கும்ம்னு தாய்மார்கள் சொல்லுவாங்களே. அப்போ father of foreign country யாரு? Software இஞ்சினியர்களா?இஸ்கூலுல பிட் அடிச்ச பழக்கம்தான்.. ஹிஹி