Thursday, August 3, 2006

ஒன்று இரண்டாவது எப்படி?

நம்முள் பலருக்கு தண்ணியடித்தால் ஒன்று இரண்டாவதாகத் தெரிவது எப்படி என்ற ஐயம் காலம் காலமாக இருந்து வருகிறது. என்னிடம் கூட நண்பர்கள் கேட்பதுண்டு. அப்படி என்னதான் இருக்குன்னு தண்ணியடிக்கறே என்று? அதைக் கண்டு பிடிக்கத்தான் மச்சி தொடர்ந்து அடிக்கிறேன். கண்டு பிடிச்சி திஸீஸ் சப்மிட் பண்ணியவுடன் நிறுத்திடுவேன் என்று கூறுவேன். அவர்களும் (அப்புறமா மப்பூ ஓவரா பூடுச்சுனா அலம்பல் தாங்கறது யாரு? என்று)அத்தோடு கப்சிப் ஆகிவிடுவார்கள்.
சரி இத்தனை நாள் அடித்ததில் கண்டறிந்த அந்த உலக ரகசியம் என்னவென்று பார்ப்போம்.
கணித ரீதியாகவே விளக்குகிறேன்.

முதலில் ஒரு வட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வட்டத்திற்கு எத்தனை குவார்ட்டர்? (அதாவது எத்தனை கால் பாகம்) - 4. வட்டத்திற்கு மொத்தம் எத்தனை - 360 பாகை (இது யாஹூ 360 அல்ல)

அப்போ ஒரு குவார்ட்டருக்கு - 90 பாகை. முழு வட்டத்திற்கு 360 பாகை. சரியா.

இப்போ சரக்குக்கு வருவோம்.
ஒரு குவார்ட்டருக்கு எத்தனை 90? இரண்டு. அதாவது (2X90) அதாவது 180. அப்போ ஒரு ஃபுல்லுக்கு எத்தனை மில்லி - 4 குவார்ட்டர் ( 4X180) ஆக மொத்தம் 720 மி.லி.

இப்போது இரண்டையும் ஒப்பிடுவோம்.

குவார்ட்டர் (வட்டம்) : குவார்ட்டர்(சரக்கு)
90 : 180

ஃபுல்(சர்க்கிள்) : ஃபுல்(சரக்கு)
360 : 720

ஆக கிடைக்கும் விகிதம் 1 : 2
அதனால்தான் சரக்கு அடிக்கும்போது மட்டும் ஒன்று இரண்டாககத் தெரிகிறது.

அது ஏன் வட்டத்துடன் சரக்கை ஒப்பிடவேண்டும். தலை சுற்றுகிறது என்று சொல்லும்போது வட்டத்துடன்தானே ஒப்பிடவேண்டும்!

அப்படியே சொல்லியும் பாருங்க! காரணம் என்னன்னு விளங்கும்!

சர்க்கிள் : சரக்கில்

71 comments:

ILA(a)இளா said...

ஷ்ஷ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே

பொன்ஸ் said...

இதைப் பத்தி எழுதினது கூட ரெண்டு முறை வருது.. தமிழ்மண முகப்பில் ... ;)

இலவசக்கொத்தனார் said...

என்னமோ மசமசன்னு தெரியுது. தலையெல்லாம் கிர்ர்ர்ன்னு இருக்குது. என்னய்யா எழுதியிருக்க?

மகேந்திரன்.பெ said...

இன்றுவரை நானடித்த வரையினில் எல்லாம் நான்காகத்தான் தெரிகிறது :)
xxx
குவாட்ட்ர் கோவிந்தன்

உங்கள் நண்பன் said...

கணக்கப் படிச்சதே ஒரு குவாட்டர ராவாத் தள்ளூன
எஃபெக்ட் வருதே
லாமாக்ல்ல்ல்ள் ச்சிச்ச்ப்ப்ப்பிபி....

அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

நல்ல ஆராய்ச்சி.
முழு திஸிஸ்சையும் சீக்கிரமே எதிர்பார்க்குறேன்.

நாகை சிவா said...

யப்பா இளா, தளபதிக்கு சங்கம் சார்பாக முனைவர் பட்டத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கப்பா. என்ன ஒரு கண்டுபிடிப்பு.

கொங்கு ராசா said...

அடச்சே.. நாளைக்குத்தான் வெள்ளிக்கிழமையா... இன்னைக்கே கிளப்பிவிட்டுட்டீங்களே..:)

கைப்புள்ள said...

கோட்ட்ர் மேட்டரை வெழக்கிய டாட்டர். ழாவக்கட் ஷிவி வாழ்வ வாழ்வ!

ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா சிபியண்ணே பாகை வட்டம்னு போட்டு தாக்குறீயளே !! சீக்கிரம் மூணு லார்ஜ் சொல்லி வைங்க!!(ஆன் தி ராக்ஸ் இருந்தாவே போதும்ணே ;)

கண்ணால் பார்த்ததை நம்பாமல்
காதல்கேட்டதை நம்பாமல்
சந்தேகம் தீர தீர தீர்த யாத்திரை செல்பவனே இந்தப் பாண்டி :)))

(துபாய்) ராஜா said...

சிபித் தங்கம்!சிப்,சிப்பா மேட்டர்களை
அள்ளிவுடு கண்ணா.

நாமக்கல் சிபி said...

//இதைப் பத்தி எழுதினது கூட ரெண்டு முறை வருது.. தமிழ்மண முகப்பில் //

அட! ஆமாம்பா ஆமாம்!

நாமக்கல் சிபி said...

//அப்பா இப்பவே கண்ண கட்டுதே //

ராவா அடிக்கக் கூடாது! அப்படித்தான் கண்ணைக் கட்டும்! உடுனே படுத்துடக் கூடாது! கொஞ்ச நேரம் அலம்பல் பண்ணணும்! அப்பதான் சர்க்குக்கே மருவாதை!

நாமக்கல் சிபி said...

//இன்றுவரை நானடித்த வரையினில் எல்லாம் நான்காகத்தான் தெரிகிறது //

சில எக்ஸ்ட்ரார்டினரி நபர்களுக்கு அப்படியும் தெரிவதுண்டு! ஆராய்ச்சியில் அதனையும் சேர்த்துக் கொள்கிறேன்.

அது போன்ற நபர்கள் முகர்ந்து மட்டும் பார்க்கவும்! குடிக்கக் கூடாது!

:)

நாமக்கல் சிபி said...

//என்னமோ மசமசன்னு தெரியுது. தலையெல்லாம் கிர்ர்ர்ன்னு இருக்குது.//

பின்னூட்டப் புயலரே!,
குடித்துவிட்டு படித்தீர்களா?
இல்லை படித்துவிட்டு குடித்தீர்களா?

நாமக்கல் சிபி said...

//முழு திஸிஸ்சையும் சீக்கிரமே எதிர்பார்க்குறேன்.
//

நிச்சயம் சங்கத்தில் சப்மிட் செய்யப்படும் -நாகையாரே!

நாமக்கல் சிபி said...

//கணக்கப் படிச்சதே ஒரு குவாட்டர ராவாத் தள்ளூன
எஃபெக்ட் வருதே
//
எங்கள் நண்பரே!
65 ரூபாய் சங்கத்தில் கட்டி ரசீது பெற்றுக் கொள்ளவும்!

நாமக்கல் சிபி said...

//தளபதிக்கு சங்கம் சார்பாக முனைவர் பட்டத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கப்பா.//

நன்றி நாகையாரே!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையினர் என்னை காலையிலிருந்து வலை வீசி தேடி வருகின்றனர். தேடும் செய்தி அறிந்துதான் பதிவை நீக்கிவிட்டு தலைமறைவானேன்.

நாமக்கல் சிபி said...

தீர்த்த யாத்திரை செல்லும் பாண்டித்தம்பி அவர்களை வாழ்த்தி வழியணுப்புகிறோம்!

ஜொள்ளுப்பாண்டி said...

//கைப்புள்ள said...
கோட்ட்ர் மேட்டரை வெழக்கிய டாட்டர். ழாவக்கட் ஷிவி வாழ்வ வாழ்வ! //

தல இதைத்தான் எதிர் பார்தோம் எங்கே வச்சுருக்கீங்க இந்த சரக்க ??:))))

நாமக்கல் சிபி said...

//நாளைக்குத்தான் வெள்ளிக்கிழமையா//

ஐயா ராசா! நீங்க வெள்ளிக் கிழமையே ஆரம்பிச்சிடுவீங்களா? நல்ல நாள் என்பதாலா?

கப்பி பய said...

இளைய தளபதி சொன்ன 'வாழ்க்கை ஒரு வட்டம்' தத்துவத்தில் இருந்து 'குவார்ட்டர் ஒரு வட்டம்' தத்துவத்திற்கு வித்திட்ட எங்கள் தளபதி 'டகிலா தங்கம்' சிபி!!!

தம்பி said...

நேத்து எந்த கடை சரக்கு அடிச்சிங்க?

ஓவரா போய்ட்டாப்புல இருக்கு.

பீர் அடிக்கறவங்களுக்கும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை போடுங்ணா புண்ணியமா போகும்

ராசுக்குட்டி said...

//குவார்ட்டர் (வட்டம்) : குவார்ட்டர்(சரக்கு)

சர்க்கிள் : சரக்கில்//

மேக்ஸிமம் கவர் பண்ணிட்டீங்க... சிபி நீங்க எங்கயோ போய்ட்டீங்க

சந்தோஷ் aka Santhosh said...

// தளபதிக்கு சங்கம் சார்பாக முனைவர் பட்டத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கப்பா. என்ன ஒரு கண்டுபிடிப்பு.//

சிவா நீங்க பாட்டுக்கு இது மாதிரி ஏதாவது ஒண்ணை பண்ணி டாஸ்மார்க் வியாபாரத்தை நஷ்டத்துல ஓட வெச்சிடாதிங்க தளபதி தான் சொல்லி இருக்காரு இல்ல ஆராய்ச்சி முடுஞ்ச உடனே இதை நிறுத்திடுவேன்னு.

Syam said...

சலக்குக்கு ஒலு தீஸிஸ் பள்னி..குடிமகன்களின் குலங் கால்த..லாமக்கல் லிபி வால்க வால்...

நாமக்கல் சிபி said...

//சலக்குக்கு ஒலு தீஸிஸ் பள்னி..குடிமகன்களின் குலங் கால்த..லாமக்கல் லிபி வால்க வால்...
//

சரக்குக்கு ஒரு தீஸிஸ் பண்ணி குடிமகன்களின் குலம் காத்த நாமக்கல் சிவி வாழ்க வாழ்க
ன்னுதான் சொல்ல வந்தாரு!
பாவம் மப்புல முழுசா சொல்ல முடியாம ஃபிளாட் ஆயிட்டாரு ஷியாம்!

மின்னுது மின்னல் said...

சாரி ரொம்ப ஓவரா போயிட்டு அதான் வாந்தி எடுத்துட்டேன்

புதுசு தானே போக போக உள்ள போக போக சரியாயிடும்

தெளிவா சொல்லியாசு

SK said...

உங்க தீசிஸோட முன்னோட்டம் அப்ரூவ்ட்!
முழு தியரியையும் சீக்கிரமா முடிச்சுட்டு, ரெண்டு குவார்ட்டரோட அனுப்பி வைக்கவும்.
"குவார்ட்டர்" பட்டம் தர்றதுக்கு!

Syam said...

//பாவம் மப்புல முழுசா சொல்ல முடியாம ஃபிளாட் ஆயிட்டாரு//

அது ஒன்னும் இல்லீங்க,அது எப்படி ரெண்டு ரெண்டா தெரியுதுனு பார்க்க,கோட்டர் அடிச்சேன், கரெக்டா ரெண்டு ரெண்டா தெரிச்சுது...உங்க கணக்குல இருக்க புல் அடிச்சு பார்த்தேன்...அதுதான் பிளாட்... :-)

மகேந்திரன்.பெ said...

வவா சங்கத்தில் பிளவு ! குவாட்டர் கோவிந்தன் துப்புகிறார்.
உலகம் ஆகஸ்டு 3. இந்த மாத வவா சங்க அட்லாஸ் வாலிபராக ஆப்பு வாங்கும் கொங்குராஸாவை பின்னூட்டமிட்டு பெரிய ஆளாக்க கூடாது என்றும் அப்படி செய்தால் தன்னால் தொடர்ந்து களப்பணியாற்ற முடியாதென்றும் இலவசகொத்தனார் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அதற்கு பயந்தே கொங்குராசா இந்த மாத அட்லாஸ் வாலிபராக இருந்தும் வயதான வாலிபரான போனமாத அட்லாஸ் வாலிபர் கொத்ஸுக்கு இன்னும் பின்னூட லஞ்சம் கொடுக்கப் படுகிரதாம். இத் தகவலை அறிந்த கொங்குராசா தனது ஆதரவை சங்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள விவசாய அணிகளிடம் ஆலோசித்து வருகிறாராம். அப்படி விலகும் போது தன்னோடே, இளா, கைப்பு, நாகை சிவா இன்னும் தனது ஆதரவாளர்களையும் அழைத்து புதிய வவா சங்கம் ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிராராம் அதனால் தான் தேர்தல் களப்பணி செலவாக இப்போது குவாட்டர் பதிவை நாசூக்காக தனது ஆதரவாளர்களிடம் சொல்கிரார். சங்கத்தில் பிளவி ஏற்படுவதை பொன்ஸ் விரும்பவில்லை என்றும் அப்படி பிரிந்தால் தான் தனிக் கட்சி ஆரம்பிக்கவும் இப்போதே முடிவெடுத்தே தனது சின்னமான யானை சின்னத்தில் இருந்து கப்பலுக்கு மாறிவிட்டாராம். சங்க உறுப்பினர்கள் இது குறித்து அச்சப் பட தேவையில்லை என போனமாத பின்னூட்ட நாயகர் சொல்லி விட்டாராம் . குவாட்டர் கோவிந்தனின் செய்தி அறிக்கைகளின் படி

ILA(a)இளா said...

//இதைப் பத்தி எழுதினது கூட ரெண்டு முறை வருது//
//என்னமோ மசமசன்னு தெரியுது. தலையெல்லாம் கிர்ர்ர்ன்னு இருக்குது.//
//எல்லாம் நான்காகத்தான் தெரிகிறது //
//லாமாக்ல்ல்ல்ள் ச்சிச்ச்ப்ப்ப்பிபி//
//ழாவக்கட் ஷிவி வாழ்வ வாழ்வ//
//குடிமகன்களின் குலங் கால்த..லாமக்கல் லிபி வால்க வால்//
எழுத்துலேயே போதை ஏத்துவாங்கன்னு சொல்லுவாங்க, அதானா இது?

ILA(a)இளா said...

//வவா சங்கத்தில் பிளவு !//
ஆடி வெள்ளிகிழமை அதுவுமா ஏன்யா இப்படி மப்புல உளறுகிறீர்

ILA(a)இளா said...

சங்கம் சார்பா, இனி நீவிர் "நாமக்கல்" சிபி என்றல்லாமல் "நக்கல்" சிபி என்றே அழைக்கப் படுவாய்.
பேரை மாத்தி வச்சுட்டோம்.

[[நக்கல் கார்னர்- நக்கல் சிபி]]

மின்னுது மின்னல் said...

நக்கல் சிபி வாழ்க வாழ்க

(ஊருக்காய்) நக்கல் சிபி இல்லையே
::))))))))

(கோஷம் போடவே ஒரு கூட்டமா திரியிரானுவோ..!)

நாமக்கல் சிபி said...

//(ஊருக்காய்) நக்கல் சிபி இல்லையே//

இங்கதான இருக்கேன்! எங்க போயிட்டேன்?

அதென்ன இருக்கிறேனா இலையான்னு பார்த்துட்டு கோஷம் போடுறது?

(ஆமா மினல், அதென அது ஊருக்காய்?)

கோவி.கண்ணன் said...

//அப்படியே சொல்லியும் பாருங்க! காரணம் என்னன்னு விளங்கும்!

சர்க்கிள் : சரக்கில்//

இறங்கினோன பின்னூட்டம் போடுகிறேன் இப்ப எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது :) :)

இறங்கினோன பின்னூட்டம் போடுகிறேன் இப்ப எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது :):)

சிவமுருகன் said...

குடிகாரனையும் ஏமாற்றும் உலகம் 180-ஐ குவாட்டர்ன்னும், 360 - ஐ ஹாப்ன்னும், 720 - ஐ புள்ன்னுசொல்லி ஏமாத்துது,இந்த ஜனநாயக நாட்ல இதை தட்டி கேட்க்க யாருமே இல்லையா. தோழா, பொருத்தது போதும் பொங்கி எழு, போர்வை எடு பொத்தி படு.

மின்னுது மின்னல் said...

//
(ஆமா மின்னல், அதென அது ஊருக்காய்?)
//

சரக்கடிக்க சைடிஸ்

நீங்க என்ன யூஸ் பன்னுறீங்க இப்ப ???

கால்கரி சிவா said...

180 = 1/4
375 = 1/2
750 = 1


அதென்ண 1/2 15 மில்லியும் புல்லுலே 30 மில்லியும் குறையுது

மப்பிலேயும் எண்ணும் போது ஸ்டடியா இருப்போம் நாங்க மதுரே.

நாமக்கல்லிலே நாமம் போடமுடியும் மதுரையிலே நடக்காதுப்பு

பொன்ஸ்~~Poorna said...

யப்போவ். குமரன் பதிவு தவிர எங்குமே பார்த்ததில்லையே!! சிவமுருகனா? இந்தப் பதிவுலயா?!!! ஏதாச்சும் போலியா இருக்கப் போவுது... பார்த்து...

நாமக்கல் சிபி said...

//அதென்ண 1/2 15 மில்லியும் புல்லுலே 30 மில்லியும் குறையுது//

கொள்முதல்(!?) செய்வோரை ஊக்கப்படுத்த(!?) கொடுக்கப்படும் கொசுறுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது!

கால்கரி சிவா said...

யப்பா சிபி நான் சரண்டர்...நல்ல நகைச்சுவை உணர்ச்சி ஐயா உங்களுக்கு

மின்னுது மின்னல் said...

//
அதென்ண 1/2 15 மில்லியும் புல்லுலே 30 மில்லியும் குறையுது
//

யாருப்பா அங்க.

அண்ணன் கண்டுபிடிச்சுட்டாருல தனியா கவனிங்க !!
:(

Syam said...

சிபியன்னே, அடுத்து ஊருக்காய் பத்தி போடுங்க...ஏன்னா உலகத்துலயே கலோரி கம்மியா இருகர சைட் டிஷ் ஊருக்காய் தான்...அந்த பெருமை நமக்கு தான்...

Syam said...

கோட்டரை ஒரு வட்டத்துக்குள் அடக்கியதால் இன்று முதல் நீர் "வட்டக்கோட்டர் சிபி" என்று அழைக்கப்படுவீர்... :-)

ENNAR said...

சரி இந்த கணக்கு எப்படித் தெரியும் இந்த தண்ணியடிக்கிற சமாச்சாரம் உள்துறைக்குத் தெரியுமா?( home department) சரி நான் சொல்லி விடுகிறேன். அப்படி செல்ல வேண்டாம் என்றால் எத்தனை குவார்ட்டர் எனக்கு?

நாமக்கல் சிபி said...

இதுக்கு மேல ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை!!! இதுக்கே ஒரு முனைவர் பட்டம் உண்டு... வேணுமுனா அடுத்த ஆராய்ச்சிக்கு தனியா இன்னொரு முனைவர் பட்டம் கொடுத்துக்கலாம்... (இரண்டு டாக்டர் பட்டம்)

முனைவர். நக்கல் சிபிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

மகேந்திரன்.பெ said...

esto es mi apu especial para su sangam, puede usted llevarlo a cabo? puedo ponerlo profundamente

மகேந்திரன்.பெ said...

Los postes y los comentarios en este Blog no son todo el nada sino simulación hacer que los espectadores sonríen y que ríen. Los dueños de Sangkam no hacen ninguna representación que trata y no garantizan la fuente, la originalidad, la exactitud, lo completo o la confiabilidad de ninguna declaración, información, datos, encontrar, interpretación, consejo, opinión, ni viewpresented.

kekkE PikkuNi #25511630 said...

மப்பு மழையிலும் தன் கவனம் கலங்காத கணித மாமேதை நக்கல் சிபி வாள்க!

SK சொன்னது: ரெண்டு குவார்ட்டரோட அனுப்பி வைக்கவும்.
"குவார்ட்டர்" பட்டம் தர்றதுக்கு!

சார், ரெண்டு குவார்ட்டர்-னா "செமி"-ன்னு எங்களுக்கு தெரியாதா? வட்டத்துக்குள் உலக ரகசியத்தை கண்டறிந்த தளபதியை இவ்வாறு செமியாக்குவது ஏன்?

நாகை சிவா said...

மகேந்த் ஏன் இப்படி இங்கன வந்து சேட்டை பண்ணிக்கிட்டு இருக்க. அதான் உனக்கு ஊறுக்காய் கப்பி அங்கன இருக்கார்ல.
தோ வரணேன் இரு

நாகை சிவா said...

//Los postes y los comentarios en este Blog no son todo el nada sino simulación hacer que los espectadores sonríen y que ríen. Los dueños de Sangkam no hacen ninguna representación que trata y no garantizan la fuente, la originalidad, la exactitud, lo completo o la confiabilidad de ninguna declaración, información, datos, encontrar, interpretación, consejo, opinión, ni viewpresented. //
நாங்க போட்டத எங்களுக்கே திருப்பியா. இதுல அந்த காப்பி ரைட் சிரிப்பு சங்கத்த விட்டுட்ட பாரு. ஏத செஞ்சாலும் திருந்த செய்யனும் புரியுதா?

நாகை சிவா said...

//esto es mi apu especial para su sangam, puede usted llevarlo a cabo? puedo ponerlo profundamente//
யப்பா எங்க தல எந்த ஆப்பா இருந்தாலும் தாங்குவார். அது எவ்வளவு ஆழமாக இருந்தாலும் சரி. தலய நீ என்ன நினைத்தே......
சிங்கமுல அவரு...

Ramya said...

ஐய்யொ நிஜமாவே தலை சுத்துதூ. நல்லா இருக்கு நீங்க சொல்வது

கப்பி பய said...

//அதான் உனக்கு ஊறுக்காய் கப்பி அங்கன இருக்கார்ல.
//

ஏலேய்..உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா?

யாரோ உடைச்ச பாட்டிலுக்கு நான் காசு கொடுக்கனுமா??

நல்லா இருங்கடே!!

Thekkikattan said...

சாரயத்தை ஊத்து, தண்ணி கொஞ்சம் காட்டு, ஏ... தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுகுட்டி நான்...

தேவ் | Dev said...

//யப்பா இளா, தளபதிக்கு சங்கம் சார்பாக முனைவர் பட்டத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கப்பா. //

//எங்கள் தளபதி 'டகிலா தங்கம்' சிபி!!! //

//முழு தியரியையும் சீக்கிரமா முடிச்சுட்டு, ரெண்டு குவார்ட்டரோட அனுப்பி வைக்கவும்.
"குவார்ட்டர்" பட்டம் தர்றதுக்கு! //

//இன்று முதல் நீர் "வட்டக்கோட்டர் சிபி" என்று அழைக்கப்படுவீர்... :-) //வாழ்க்கை ஒரு வட்டம் என்பதைத் திட்டம் போட்டு கண்டுப்பிடித்த எங்கள் தளபதிக்கு இன்னுமொரு பட்டம்... ஆகா வாழ்த்துக்கள் தள்பதி

சிவமுருகன் said...

//யப்போவ். குமரன் பதிவு தவிர எங்குமே பார்த்ததில்லையே!! சிவமுருகனா? இந்தப் பதிவுலயா?!!! ஏதாச்சும் போலியா இருக்கப் போவுது... பார்த்து...//

பொன்ஸ் ஐயா,

ஒரிஜினல் அக் மார்க் சிவமுருகனே தான்.

அப்பப்போ சங்க பதிவுகளை படிப்பதுண்டு. இந்த பதிவில் கருத்து சொல்ல எண்ணினேன். தட்டினேன்.

நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ் ஐயா,//
சே!!! நான் வரலைய்யா!!! :(

Divya said...

\"சர்க்கிள் : சரக்கில்\"

ஆஹா சிபி, என்னா ஒரு ஆராய்ச்சி பண்ணியிருகிறிங்க.........அப்படியே அசந்து போய்ட்டேன் உங்கள் விளக்கங்களை படிச்சு.

கடைசியா 'சர்க்கிள் : சரக்கில்'
சொல்லி முடிச்சிருக்கிறீங்க பாருங்க....சும்மா நச்சுன்னு இருக்குது!

Anonymous said...

இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லையே. இத எழுதும்போது சரக்கு அடிச்சிருந்தீங்களா?

SK said...

கணக்கெல்லாம் சரியாத்தான் வருது!

ஆனா, இந்தக் கணக்கு பீருக்கு ஒத்து வரலியே நக்கலாரே!

அது அடுத்த பதிவுல வருமா?

சிவமுருகனோட 'பொன்ஸ் ஐயா' ஜோக்தான் இந்த பதிவுலியே ஹைலைட்!

பாவம்! நொந்து நூலாயிருப்பாங்க பொன்ஸ்!

:))

நாமக்கல் சிபி said...

//ஆனா, இந்தக் கணக்கு பீருக்கு ஒத்து வரலியே நக்கலாரே!
//

பீரா! அதெல்லாம் புட்டிப் பால் குடிக்க வேண்டிய வயசுல குடிக்குறது!

அதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணி பாக்க முடியுமா? பீர் அடிச்சா ஏதோ சுள்ளெறும்பு கடிச்ச மாதிரி இருக்கும்! அவ்வளவுதான்!

நாமக்கல் சிபி said...

//சே!!! நான் வரலைய்யா!!! :( //

:-))

சிவமுருகன்! கலக்கிப்புட்டீங்க போங்க!

நாமக்கல் சிபி said...

//இத எழுதும்போது சரக்கு அடிச்சிருந்தீங்களா?
//

ஜீ! பின்னே எப்படி இவ்வளவு தெளிவா எழுதறதாம்?

SK said...

இதை எழுதக் கொள்ள நக்கலார் சரக்கு அடிச்சிருந்தாரோ என்னவோ தெரியாது!

ஆனா, அந்த 'பொன்ஸ் ஐயா' ஆளு கண்டிப்பா மப்புலதான் இருந்திருக்கணும்னு நினைக்கிறேன் !

சிவமுருகன், கோவிச்சுக்காதீங்க!
சும்மா தமாஷுக்கு!
:)

சந்தோஷ் aka Santhosh said...

ஆக சிபி இந்த angleல யோசிக்கவே இல்லையே நானு... என்னபா சங்கத்து சிங்கங்கள் எல்லாம் ஒரே ஆராய்ச்சி மயமா அலையுறீங்க..

சேதுக்கரசி said...

உங்க thesisஉடைய அறிமுகப் பக்கம் படி, ஒண்ணு ரெண்டா தெரியறது ஓகே. முகப்புப் பக்கத்தில் அட்லாஸின் முகம் நாலா தெரியுதே?

சுப்பு said...

அது என்னங்கோ குவார்ட்டர் பாட்டிலின் மேல் ஒரு தட்டு தட்டி கரெக்டா நம்ம மக்கள் மூடி ஸிலிப் ஆகாமல் திறக்கிறார்கள். நானும் ஒவ்வொரு முறையும் மூடி ஸ்லிப் ஆகி பிறகு படாதபாடு படுகிறேன்

நாமக்கல் சிபி said...

//ஒவ்வொரு முறையும் மூடி ஸ்லிப் ஆகி பிறகு படாதபாடு படுகிறேன்//

பாட்டிலை வாங்கியவுடன், குடித்து விட்டோமா, இல்லையா என்று ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்!

பாட்டிலைப் பார்த்தவுடன் குடித்துவிட்டதாகவே பாவித்துக் கொண்டு அலம்பல் செய்யும் ஆசாமிகளுக்கு இப்படி ஸ்லிப் ஆகும் பிரச்சினை இருக்கிறது!