Wednesday, December 5, 2007

சங்கத்து மக்களுக்கு ஆப்புரேசலாம்


என்னடா சங்கத்துல்ல வந்து புலிகேசி இந்தச் சிரிப்பு சிரிக்குறேன்னு பாக்குறீங்களா?? படிங்க...உங்களுக்கே புரியும்
சங்கத்து கட்டடம் முன்னிருந்த டீக்கடையில் பாண்டியும் கப்பியும் உட்கார்ந்து இருந்தார்கள். நம்ம புலி தற்காலிக டீ மாஸ்டரா மாறி டீ போட்டுகிட்டு இருந்தான். தம்பி டீக்கடைக்கு எதிரே ஓட்டியிருந்த ராமேஸ்வரம் படப் போஸ்டரில் சேர்ந்து இருந்த ஜீவாவையும் பாவனாவையும் எப்படி பிரிக்கலாம்ன்னு படு பயங்கர யோசனையில் இருந்தான்.

ராம் கையில் இருந்த மொபைலை காது பக்கம் வைத்து..
"ஹலோ துபாயா.... அங்கே என் பிரதர் அபி அப்பா இருக்காரா.. அவரை லைன்ல்ல வரச் சொல்லுங்க...ஏய் அபி அப்ஸ் ஒய் ஆர் யூ க்ரையிங்... ஹே நோ க்ரையிங்... டேக் இட் ஈசி.... ஒகே..கூல் டவுண்..கூல் டவுண்... ஹே பி ஹேப்பி...."

அப்படின்னு தாறுமாறாப் பேசிகிட்டு இருக்கதைக் கேட்ட நம்ம விவாஜி...

"என்னது?" அப்படின்னு டிராக்டர் டாப் விட்டு இறங்காமலே கேட்டார்.

"துபாய்ல்ல இருக்க நம்ம பிரதர் அபி அப்ஸ் கிட்டத் தான் பேசிகிட்டு இருந்தேன்...நேத்து தான் அவருக்கு அப்புரேசலாம்.... ஒரே டேமேஜாம்.... சின்னப்பில்ல மாதிரி போன்ல்ல அழுகாச்சி...அவர் கிட்ட இருந்த கம்ப்யூட்டரைப் புடுங்கிட்டு கையிலே கால்குலேட்டரைக் கொடுத்துட்டாங்களாம்.. கால்குலேட்டர்ல்ல கணக்கு தானே வரும்..பிளாக் வருமான்னு கேட்டுப் பச்சப்புள்ள மாதிரி கதறி கதறி க்ரையிங்..." ராம் பீலிங்காப் பேச...

"ராயல்.. அவர் அழுகுறது இருக்கட்டும்.... இன்னும் கொஞ்ச நேரத்துல்ல நீ அழப் போற பாரு..." சரக்கடிக்க மாட்டேன் இது சத்தியம் அப்படின்னு காமிக்சான் ஸ் பாண்ட்ல்ல டீ ஷர்ட் முன்னாடி எழுதி போட்டுகிட்டு தளபதி சிபி புல்லட் விட்டு இறங்கினார்.

"என்னத் தள ஏன் நான் சந்தோச்சமா இருந்தா உங்களுக்கு ஆவாதா?"

"இன்னிக்கு சங்கத்துக்கு ஆப்புரேசல் தேதி தெரியும்ல்ல.." அப்படின்னு சொல்லி சிபி ஸ்டலாத் திரும்ப... டீஷ்ர்ட் பின்புறம் நயன் தாரா போட்டோ எதிர்பார்த்த மொத்த சங்கமும் ஏமாந்தேப் போனது.

அந்தப் பக்கம் ஏரியல் பாண்ட்ல்ல "தங்கமணி லீவு முடிஞ்சு வந்தாச்சு அப்படின்னு கொட்டை எழுத்துல்ல பிரிண்ட் போட்டிருந்தது..."

டீ ஷர்ட் முன் வாசகமும் பின்வாசகமும் சேர்ந்து தளபதியின் நிலைமை திருவாசகமாய் எங்களுக்கு விளங்கியது.

"அண்ணே ஆப்புரேசல் எனக்கு நல்லாத் தான்னே வரும்... நானெல்லாம் சங்கத்துக்கு எந்த பங்கமும் வராமா சொக்கத் தங்கமா உழைச்சு.. ஒரு நிரந்தர அங்கமா இருக்கேண்ணே.. நம்ம தலக்கு என்னியப் பத்தி நல்லாவேத் தெரியும்... என் ஆப்புரேசல் யார் ஏத்தி விட்டாலும் தல கேக்காது "அப்படின்னு ராம் ராயலாச் சொல்ல...

அப்போ லவுட் ஸ்பீக்கரில்.. மாப்பிள்ளைன்னா மாப்பிள்ளை.. வாச கருவேப்பில்லை... அப்படின்னு பழைய மாப்பிள்ளை பாட்டை லேட்டஸ்ட்டா வந்த தெலுங்குப் பட பாட்டு மெட்டுல்ல ரீமிக்ஸ் போட்டு ஒரு கார் வந்து நின்னுச்சு...அதுல்ல இருந்து இறங்குனது... அவரே தான்....

"ஹாய் கைஸ்.....எனி ப்ராப்ளம்... ஆப்டர் அ லாங் டைம் எல்லாரும் ஒண்ணு கூடியிருக்கீங்க... சொல்லுங்க"

"வெட்டிண்ணே..???!!!!" அப்படின்னு ஒரு பதிவா நடந்த மேட்டரைக் கப்பிச் சொல்லிமுடிக்க...

"ஆகா... அனுபவிக்க வேண்டிய நேரத்துல்ல ஆப்புரேசல்... அது இதுன்னு என்னை ஆராயச் சொல்லுரீங்களே சிங்கங்களா.... அயம் எஸ்கேப்....." அப்படின்னு போனக் காரை பார்த்து பாலகிருஷ்ணா ஸ்டைல்ல கை தட்டி கூப்பிட கார் ரிட்டன் வந்து நின்றது...

இப்போ காரில் சுத்தத் தமிழில் புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா பாட்டு ஒலித்தது...

"சரி மாப்பூக்கு ஸ்பெஷல் ஆப்பு எதுவும் இருக்காது.. அவனை விடுங்க..." என்று விவாஜி சொல்ல..

"ஆமா நம்ம போர்வாளை எங்கே ரொம்ப நேரமாக் காணும்.. அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு வச்சுட்டு அடுத்து ரீமேக்ல்ல யார் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு பெசன்ட் நகர் பீச்சுல்ல உக்காந்து யோசிக்கறதுல்ல இதை மறந்துட்டாரோ" அப்படின்னு பாண்டி பீல் பண்ணவும் நான் என்டர் ஆகவும் சரியா இருந்துச்சு.

வந்தவுடன் டீக் கடை எதிரில் இருந்த போஸ்டரை நான் எதேச்சையாப் பாக்க பாவம் ஜீவா துணைக்கு ஆள் இல்லாமல் தனியா போஸ் கொடுத்துகிட்டு இருந்தான்.

ஒரு லாங் ட்ஸ்டண்ஸ்ல்ல... தம்பி தனியா நடந்துப் போயிகிட்டு இருந்தான்.. அவன் கக்கத்துல்ல மடிச்சு வைக்கப் பட்டிருந்த போஸ்ட்டர்...

இவன் ஏன்டா இப்படி? விவாஜி கேட்க...

"அண்ணே அவன் ஒரு யதார்த்த தமிழன்ண்ணே... கவிஜன்ண்ணே... பாசக்காரப் பயண்ணே... பாவன்ணே..ச்சே பாவம்ண்ணே... தலயைப் போஸ்டர் கொடுத்து ஆப்புரேசல்ல ஆட்டயப் போடலாம்ன்னு கிளம்பிட்டான்ணே" கப்பி விளக்கம் கொடுத்து முடித்தான்.

இந்தக் கேப்பில் டீக்கடை சுவத்தில் விதவிதமானக் கலரில் போங்கடா நீங்களும் உங்க வேலையும் அப்படின்னு ராயல் தம்பி எழுத ஆரம்பிச்சுட்டான்.

நடக்கும் விவாதங்கள் எதிலும் அதிகம் கலந்து கொள்ளாமல் டீ ஆற்றுவதிலே கருத்தும் கண்ணுமாய் இருந்தான் புலி. ஜொள்ளு பாண்டி கையில் எதோ புத்தகத்தை வைத்து நடுப் பக்கத்தை நாலு திசைகளிலும் சுத்தி சுத்தி வந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"தேவு... அந்தப் பெனத்தலாருக்கு எதிரா நீ ஆரம்பிச்சப் போராட்டம் கூட பெரிய ரெஸ்பான் ஸ் இல்லமாப் போயிருச்சுப்பா.. கூட சவுண்ட் விட்ட நமக்கும் அதிக மவுஸ் இல்லாமப் போய்ருச்சு... தல வேற வந்து ஆன் சைட் எல்லாம் போய் என்னக் கிழிச்சன்னு கேட்டா என்னத்தைச் சொல்லுறது..." விவாஜி கடுமையாக யோசிக்க.

சிங் இன் த ரெயின்... அயாம் சொய்ங் இன் த ரெய்ன் அப்படின்னு அந்த காந்தக் குரல் கேட்க சங்கத்து மக்கள் யாரும் கண்டுக்காம அவங்க அவங்க யோசனையில்ல இருக்காங்க...

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" இப்படி பல சவுண்ட் எழுப்பியும் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால்.... புலி ஆத்திகிட்டு இருந்த டீ சட்டியை எடுத்து நடு கூடத்தில் போட்டு உடைக்கிறார் நம்ம தலக் கைப்புள்ள...

"ஆகா உங்களை எங்கேயோப் பாத்தாப்புல்ல இருக்கே...." அப்படின்னு தளபதி சொல்ல....

"பாத்தப்புல்ல இருக்கா.. நக்கலா... தளபதி முழி இருந்த இடத்துல்ல வெறும் குழி தான் இருக்கும் இப்படி எகத்தாளப் பேச்சு பேசுனாச் சொல்லிபுட்டேன்."

"ஆகா எங்கேயோ கேட்டக் குரல்" நான் சொன்னேன்.

"ஆமாண்ணே தலீவர் நடிச்சப் படம்ண்ணே... எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்.. பட்டுவண்ணச் சேலைக்காரி பாட்டைக் கூட தேன்கிண்ணத்துல்ல போடாலாம்ண்ணு இருக்கேண்ணே" ராம் பதில் சொல்ல.

'என்னக் கிண்டல் பண்ணுறீயா..கீத்துக்கொட்டாயிலே பதிவு போட டிவிடியாக் கொடுத்தேன் இப்போ.. அதுக்கு நீ சப்போர்ட் பண்ணுற....குப்புற போட்டு கும்மிருவேன்... ஒரு பயம் வேண்டாம்.. ஒரு மரியாதை வேண்டாம்.. போர் வாள்ன்னா... பொக்ரான் ஆள்ன்ன்னு நினைப்பா... ராயலு...ம்ம்ம் காயலு ஆயிருவ... சொல்லிட்டேன்"

அப்படியே லுக்கை விவாஜி பக்கம் திருப்பினார் கைப்பு.

"கண்ணாடியக் கழத்து ராஸ்கல்...ஹாலிவுட் படத்துல்ல அர்னால்ட்க்கு நடிப்பு வர்றல்லன்னா சொல்லிக்கொடுக்க என்னியத் தான் கூப்பிடுறான்வ... ஒரு வெத்துப் படத்துல்ல விளக்கெண்ணெய் நடிப்பை நடிச்சுப் போட்டு... கொடுக்கற போஸைப் பாரு... களைப் புடுங்குற மாதிரி கழுத்துல்ல இருந்து தலையைப் புடுங்கிருவேன்.."

பென்சில் மீசையைத் தடவிய கைப்ஸின் பார்வைக் கப்பி பக்கம் திரும்பியது...

"காஞ்சிபுரத்துல்ல கிளம்பியிருக்க திமிர் தெரியுது...எனக்குத் தெரியாத மொழியிலே படம் பாத்து அதை அப்படியே சிலாகிச்சு விமர்சனம் எழுதறதையேத் தொழிலா வச்சுருக்க... ஒரு சில்க் சுமிதா..ஷகிலா...குயிலி..நம்ம நமீதா.. இவிங்க நடிச்ச படமெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதா?...அவிங்க நடிப்பை எல்லாம் எழுதமாட்டீயா.. கப்பித் தனம் பண்ணிகிட்டு திரிஞ்சன்னா கயித்துல்ல கட்டி தொங்க விட்டுருவேன் சாக்கிரதை ராஸ்கல்.. என்ன அறிவாளித் தனம்...ம்ம்ம்"

பார்வை அப்படியே பாண்டி பக்கம் திரும்புகிறது..

"எல்லாரையும் மன்னிச்சிரலாம்.. உன்னை..... எவ்வளவு வில்லத்தனம் இருந்தா... எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்லி நான் வாங்கி வச்சிருந்த பேர் அன்ட் லவ்லி ஆண்கள் பேர்ன ஸ் க்ரீமை ஆட்டயப் போட்டிருப்ப....எனக்கு இன்னும் வாலிப வயசு தான்... கல்யாணம் ஆனாலும் நாங்க கட்டிளம் காளை... எங்களுக்கும்...." கைப்பு அடுத்த டயலாக் பேசுவதற்குள்...

"அண்ணி...." அப்படின்னு இதுவரை எதுவும் பேசாமல் இருந்த புலி சவுண்ட் கொடுக்க....

"எங்கேஏஏஏஏஏ..." தலயிடம் இருந்து அப்படி ஒரு அலறல் வெளியே வந்தது.

"இல்லத் தல... அண்ணிக்குன்னு மூணார் மலை ஏலக்கா போட்டு ஸ்பெஷல் டீ போட்டுருக்கேன்..அதைப் பிளாஸ்க்ல்ல ஊத்தி தர்றேன் போகும் போது கொண்டு போய் கொடுங்க... தம்பி சிவாக் கொடுத்தேன்னு சொல்லிக் கொடுங்க.." அப்படின்னு சிவா பிளாஸ்க் கொடுக்க

"அடி ராஸ்கல்.... அதை ஏன்டா அண்ணின்னு சொல்லி பாதியில்ல நிறுத்துன்ன.. இந்த விவரத்தை முழுசாச் சொல்ல வேண்டியது தானே.."

"இல்லத் தல வார்த்தை சிக்கிருச்சு" அப்படின்னு சிவா பதில் சொல்ல.

"வார்த்தை சிக்கும்.. சிக்கி அதுக்கு சிக்கன் குன்யா கூட வரும்...நல்லாத் தான் கிளப்புர பீதிய.... இந்த பின்னால வந்து வார்த்தையைப் போட்டு குசும்பு பண்ணுர வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்... வெங்காயத்தை வெட்டி வாயிலே வச்சு அடைச்சுருவேன் ராஸ்கல்... டீயைக் கொடு முதல்ல"

"என்னைய மாதிரியே சமீபக் காலத்துல்ல வீரமா ஒரு காரியம் செஞ்சானே.. அவனைக் காணுமே எங்கே அவன்?"

"அது என்ன வீரமானக் காரியம்?" கப்பி கேட்டு விட...

"குரூப்பா வந்து கும்மி அடிச்சு.. மேடை எல்லாம் ஏறி.. போட்டாவுக்கு பல் எல்லாம் காட்டீனீங்களே.. சாப்புட்டுக் கூடப் போனீங்களே..அதுக்குள்ளே மறந்துப் போயிருச்சு.. நீ மறந்துப் போயிருக்கலாம்..அதை எல்லாம் இந்த வீரன் அவ்வளவு சுலபத்துல்ல மறக்க மாட்டான்ய்யா மறக்க மாட்டான்.."

"கல்யாணம் பண்ணதுக்கு என்னப் பில்டப்பு கொடுக்குறாப்பல்ல பாத்தீயா விவாஜி என் காதில் சொல்ல..

"ஒரு வீர வரலாறு சொல்லும் போது அங்கே என்ன கிசுகிசுன்னு" தல எங்களைப் பார்க்க..

"நீங்களா.. நீங்களும் வீரய்ங்க அப்படிங்கறதால சும்மா விடுறேன்..இல்லன்னா..." அப்படின்னு ஒரு சிங்க கர்ஜனை விட்டு விட்டு திரும்புகிறார்.

"அரி சரி எனக்கும் ஒரு ஆப்புரேசல் ஷீட் கொடுங்க...."

"உங்களுக்கு எதுக்கு தல ஆப்புரேசல் ஷீட்.. நீ தானே எல்லாருக்கும் ஆப்புரேசல் பண்ணனும்" சிபி கேட்கிறார்.

ம்ம்ம் அதெல்லாம் போன வருசம்.. இது இந்த வருசம்... முதல் ஆப்புரேசல் வீட்டுல்ல அண்ணி வைக்கிறாங்கப்பா... அப்பளம் பொறிக்கறது எப்படின்னு ஆறு பக்கத்துக்கு கேள்வி கேட்டு இருக்கா... அதை நான் முதல்ல முடிக்கணும் " எனக் கைப்ஸ் பொலம்ப..

"அது சரி " என சங்கத்தினர் மொத்தமும் சுத்துப் போட்டு நின்றோம்.

"ம்ம்ம்... அப்பளம் பொறிக்கறது எப்படின்னு ஜென்டில் மேன் டிவிடி போட்டு பாத்து கண்ணு எல்லாம் பொறிஞ்சு குவிஞ்சுப் போச்சு... அடுத்து கொத்துப் ப்ரோட்டா போடறதைப் பத்தி தெரிஞ்சிக்கணுமாம் கொத்ஸ் பதிவுக்கு லிங்க் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்காங்க..."

"என்னக் கொடுமை கைப்ஸ் இது " சிபி சவுண்டாகவே சொன்னார்..

"ம்ம்ம்ம் உனக்குத் தெரியுது தளபதி..ஆனா எங்காளுக்கு தெரியல்லயே"

"சரி அப்போ எங்களுக்கு நீங்க ஆப்புரேசல் பண்ணல்ல...."

"ம்ம்ஹூம்... அந்தப் பதவியையும் புடுங்கிட்டாங்கய்யா புடுங்கிட்டாங்க... அதுக்கு இன்னொருத்தன் வர்றான்....EXTERNAL AUDITAAM"

"என்னது ஆடி எட்டா.. மார்கழி மாசத்துல்ல என்ன ஆடி எட்டுன்னு" கக்கம் நிறைய போஸ்ட்ர்களோடு திரும்பிய தம்பி கேட்டேன்.

'வாப்பா பாவண்ணா.. தம்பி... துபாய்ல்ல நான் தங்கியிருந்த ரூமை உனக்குக் கொடுத்து சங்கத்தை வளக்கச் சொன்னா அதை பார்க்கா மாத்தி ஆட்டம் போடுற நீயு... இப்போ கக்கத்துல்ல என்ன துக்கத்தை சுமந்துகிட்டு இருக்க..?"

"அது உங்களுக்குப் புரியாது.. வாழ்க்கை தல... காபி சூடாத் தான் இருக்கும் ஆறுற வரைக்கும்... சொன்னாப் புரியாது.. புரிஞ்சா சொல்ல முடியாது..."

"போதும் நிப்பாட்டு.... கொலைக்காரன் ஆயிரப் போறேன்.. மூக்குக்கு கீழே வாய் இருக்குன்னு முழம் நீளத்துல்ல பேசிட்டேப் போற..."

"கூல் தல கூல்" பாண்டி குறுக்காகப் பாயந்து தலயைத் தடுத்தான்...

"ஓ.கே...ஓ.கே...ஆல் சங்கம் சிங்கம்ஸ் ரெடியாயிருங்க... சங்கத்தை ஆடிட் பண்ண அந்த புலிகேசி மன்னனும் அவன் மங்குனி அமைச்சனும் வர்றாய்ங்கன்னு ஆடி ஆபிஸ் ஆயா எனக்குப் போன் போட்டு சொல்லிருச்சு... ஏற்கனவே அந்த முள் மீசை மன்னனுக்கும் எனக்கும் பல காலப் பகை.. அதை அவன் இந்த ஆடிட்ல்ல காட்டுவான்.. நாமத் தான் உசாரா இருக்கணும்...."

சங்கத்து சிங்கம்ஸ் எல்லாம் ஆடிட்டுக்கு தலக் கைப்புவின் தலைமையில் ரெடியாக துவங்கினார்கள்...


புலிக்கேசி மன்னன் ஆடிட் நடந்ததா? மேலும் விவரங்களுக்கு நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்.. இப்போ வேலை இருக்கு