Tuesday, April 13, 2010

பலி ஆடுகளும், சிலப்பதிகாரமும்




பொறுப்பு அறிவித்தல் : எச்சரிக்கை இலக்கிய இடுகை 


பலின்னு சொன்னா பழி தீர்க்க பலியானவர்களை சொல்லலாம், இயற்கை மரணம் இல்லாமல் பாதியிலே போனவர்களைஎல்லாம் பலி ஆனார்கள் என்று சொல்லலாம்.ஆனா நாம பார்க்க போறது பலி ஆடுகள் என்கிற பரிதாப பட்ட ஜீவன்களை பற்றி பேசுகிறது இந்த கருப்பு ஆடு.கருப்பு ஆடுன்னு ஏன் எல்லோரும் சொல்லுறோம், அது எங்கே இருந்து வந்தன்னு முழம் போட்டு விளக்க மணி அண்ணன் இருப்பதாலே, அவரு என்னன்னு விளக்கம் கொடுப்பாரு, நான் சொல்ல வந்த கதைக்கு திரும்ப வாரேன். 

ஏன்  பலி பன்னிகள், பலி கழுதை, பலி குரங்கு, பலி சிங்கம், பலி புலி  ன்னு சொல்லுறது இல்லை, கிராமங்களிலே கோவிலுக்கு பலி கொடுப்பதற்கு கடா வளர்ப்போம்.பலி போட்டு, ஆட்டு ரத்தம், கிட்னி, குடல் எல்லாத்தையும் பொரியல் பண்ணி சாப்பிடுவோம்.ஆமா மனுசனா இருக்கிற பலி ஆடுகள், தங்கள் வாழ்கையை தியாகம் செய்து அடுத்தவர் வாழ வழி செய்கிறார்கள்.

இந்த பலி ஆடுகள் எங்கே இருக்கிறது, அதைப்பற்றி இலக்கியத்திலே என்ன சொல்லுறாங்கன்னு பார்க்கலாம்.
கல்யாணம் ஆனா புதுசிலே 


மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே

என்று  கண்ணகியை புகழ்ந்த கோவலன், கொஞ்ச நாள் கழிச்சி வீட்டு சாப்பாடு பிடிக்காம, கடை பக்கம் போனவன் மாதவியை பார்த்து துண்டு போட்டு உட்கார்ந்து விடுகிறார்.


கோவலன் மாதவிக்கு உதட்டு சாயம், முகச்சாயம் ஆடை அணிகலன்கள் வாங்கின செலவு, பிசா, பர்கர் சாப்பிட்ட செலவிலே,வெள்ளை துண்டு போட்டுக்கிட்டு போன மனுஷன், கடைசியிலே மஞ்ச துண்டு போட வேண்டிய நிலை வந்தது.



















இங்கே இன்னொரு உண்மையும் சொல்ல வேண்டிய இருக்கு, கோவலனுக்கும்,மாதவிக்கும் பிறந்தவள் தான் மணிமேகலை ன்னு மணிமேகலையை எழுதிய சீத்தலை சாத்தனார் சொல்லுறாரு, கோவலன் மாதவியை திருமணம் செய்து இருந்தால் மாதவி கோவலனை வஞ்சித்து மஞ்ச துண்டு போட வைத்தாளா என்று தெரியலை.



இங்கே பலி ஆடாய் முதலிலே கண்ணகி இருப்பதாக தோன்றினாலும், உண்மையான பலி ஆடு கோவலனே, போன மச்சான் எப்படியும் திரும்பி வருவான்னு நம்பிக்கையோடு காத்து இருந்தாள் கண்ணகி.அவ நம்பிக்கை வீண் போகலை,அடிச்சாலும் பிடிச்சாலும் தங்கமணியே தெய்வமுன்னு திருப்பி வந்தார், அவரு திருந்தி வந்தாரான்னு எனக்கு தெரியலை, இளங்கோவடிகள்ட தான் கேட்கணும்.









திரும்பி வந்த கோவலனுக்கு நல்ல ஒரு ருசியான விருந்து கொடுத்து கண்ணகி அவனை எரித்து இருந்தால், இன்றைக்கு சென்னை கடற்கரையிலே இருக்கும் சிலையானது அகில உலகமெங்கும் பரவி நியூயார்க் சுதந்திர தேவி சிலையே இன்றைக்கு கண்ணகி தேவி சிலையாக மாறி இருக்கும்.கதை ஆசிரியர் ஏன் அதை செய்யலைன்னு தெரியலை, ஒருவேளை அரியணைக்கு தகுதியாக இருந்தும் தம்பி சேரன் செங்குட்டுவனுக்காக துறவு வாழ்க்கை மேற்கொண்டு தியாகம் செய்த காரணமோ என்னன்னு தெரியலை.

முதல் பாதியிலே ஆட்டம், பாட்டு மேலும் களியாட்டம் என்று ஆடி கலைத்து விட்ட நாயகன், இரண்டாம் பாதியிலே வயத்து பொழைப்புக்கு வழி இல்லாம, கண்ணகி காலிலே சரணம் அடைந்து(?) விட,புண்ணியவதி பெரிய மனசு பண்ணி கோவலனை மீண்டும் சேர்த்து கொள்கிறாள். 

வந்தவனை வீட்டு செலவுக்கு பணம் ஏற்பாடு பண்ண மதுரைக்கு தன்னோட கால் சிலம்பை கொடுத்து சேட்டு கடையிலே அடகு வைத்து/வித்து பணம் வாங்கி வர அனுப்பிய கண்ணகியின்  நகைகள் கட்டாயமாக கழட்டப் பட்டது. கணவன் அகால மரணத்திற்கு காரணமான மதுரை மண்ணையும், மன்னனையும் சுடு காட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள்.

இங்கே கதையின் ஆசிரியர் சேர நாட்டை சேர்ந்தவர், ஆனால் கதைகளம் அமைக்கப் பட்டது சோழ, பாண்டிய நாட்டிலே, தன்னோட தம்பி சேரன் செங்குட்டுவன் பாண்டிய நாட்டை பிடிக்க முடியலையே என்ற ஆதங்கத்தை வைத்து கதையின் முடிவில் மதுரையை எரித்து இருக்கலாம்(?).

கண்ணகி ஏன் மாதவியை எரிக்க வில்லை?,அவளே கோவலனின் நிலைக்கு மூல காரணம்.மாதவியும் தன்பால் சேர்ந்த ஒரு பெண் என்றால், மதுரை எரியும் போது அங்கும் அநேக பெண்கள் இருந்து இருக்க வேண்டும்.இதற்கு 
ஊள் வினை, மண் வினை, மச்சி வினை காரணமான்னு தெரியலை.ஆனால் கண்ணகியின் கோபத்துக்கு மதுரை மக்கள் பலி ஆடுகள் ஆகி இருக்கிறார்கள்.அதனாலேயே என்னவோ இன்னும் மதுரை பெரிய கிராமமாக இருக்கிறது(?).

இலக்கியங்களிலே மட்டுமல்ல நிஜ வாழ்கையிலே நிறைய பலி ஆடுகள் இருக்கிறது, பலி ஆடுகள் இல்லாவிட்டால் பணிக்கு இடம் இல்லை. இப்போதைக்கு  ஆராய்சி இவ்வளவு தான், இனிமேல ஏதாவது யோசித்தா(?) சொல்லி அனுப்புறேன்.

Sunday, April 4, 2010

பதிவர்களுக்கென ஒரு சங்கம் தேவையா


இது சர்வேசன் பண்ண வேண்டிய வேலை, அவரு பண்ணலை அதான் சங்கமே பண்ணறதுனு முடிவு பண்ணி ஒரு வாக்கெடுப்பு வெக்கிறோம். உங்க கருத்துக்களை காபி பேஸ்டாவது பண்ணி மக்களுக்கு அறியத்தாருங்க. பின்னூட்டக் கயமைத்தனம் அலவ்டு.. மக்கள் முடிவே மகேசன் முடிவுன்னு ஏத்துக்குவோம் கருத்துக்கணிப்பு உங்க சோத்தாங்கை பக்கம் இருக்குங்க.

Friday, April 2, 2010

பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?


கடந்த முறை யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி போட்டேன். பெருவாரியான இளவட்டங்களின் ஹஸ்புல் காட்சிகளோடு பதிவு வெள்ளி விழாவைத் தாண்டி விட்டது. இதைப் பார்க்கும் போது "ஆண்பாவம்" படத்தில் வி.கே.ராமசாமி சொன்னது தான் ஞாபகம் வருது.
" இந்த ஊர் நல்லா இருக்கணும்னு பள்ளிக்கூடம் கட்டினேன், கோயில் கட்டினேன், ஆஸ்பிட்டல் கட்டினேன், ஒருத்தனும் ஏறெடுத்துப் பார்க்கல, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.
இப்ப ஒரு சினிமா கொட்டகை கட்டினதும் நீங்கள்ளாம் எனக்கு மாலை, மரியாதையோட கொடுக்கிற மரியாதையைப் பார்த்ததும் உங்களை இவ்வளவு நாளாப் புரிஞ்சுக்க முடியலையேனு வருத்தமா இருக்கு" அப்படிச் சொல்வார் வி.கே.ஆர்.

என்ன தான் மாஞ்சு மாஞ்சு நாலைந்து பக்கங்களுக்கு பதிவு எழுதி என்னத்தைக் கண்டோம் ;-)

சரி இந்தப் பதிவில் எனக்குத் தெரிந்த பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்லும் வழிமுறைகளைப் பார்ப்போம். லவ்ஸ் அகராதி பழைய பதிப்பு எண்டு சொன்ன ஆட்களின் ஆலோசனையும் ஏற்கப்பட்டு இந்தப் பதிவில் அவர்கள் சொல்லும் பாதுகாப்பான வழிமுறைகளும் சேர்க்கப்படும் ;-)

வழிமுறை 1

ஜீமெயில் கணக்கு மூலம் தான் விரும்பும் காதலிக்கு மின்னஞ்சல் மூலம் காதலைச் சொல்லலாம். குறித்த பெண்ணின் ரியாக்க்ஷன் நேர்மாறானதாக இருப்பதை அறிந்தால் உடனே நீங்கள்
"ஐயையோ என்னோட ஜீமெயில் ஹாக் (hack)பண்ணுப்பட்டுடுத்து" என்று சமாளிப்பிக்கேஷன் சொல்லலாம்.

வழிமுறை 2

காதலி உள்ளூர்க்காரி என்றால் கோயிலுக்குப் போகும் சமயம் பார்த்து உள்ளே சென்று காதல் கடிதத்தைக் கொடுக்கலாம். இதில் இருக்கும் பாதுகாப்பு என்னவென்றால் பாதணிகளோடு (செருப்பு, ஹீல்ஸ்) கோயிலுக்கு உள்ளே செல்லமுடியாது. எனவே நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக் குறைவு. இதில் இருக்கும் அபாயம் என்னவென்றால் இந்துக் கோயிலுக்குத் தான் இது பொருந்து. சர்ச்சில் வேலைக்கு ஆவாது. செருப்பு, ஹீல்ஸ் உடன் உள்ளே செல்லலாம்.

வழிமுறை 3

ஏப்ரல் முதலாம் திகதி வரை காத்திருக்கவும். அந்த நாள் வந்ததும் காதல் கடிதத்தைப் பரிமாறலாம். கடிதத்தைக் கண்ட பெண் கடு கடு என்று மாறினால், உடனே சமாளித்துக் கொண்டு
"ஹய்யா! ஏப்ரல் பூல் உனக்கு, ஏமாந்துட்டியா, என் ரேஞ்சே வேற" என்று சொல்லலாம்.


வழிமுறை 4

மாதம் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதிக் கொண்டு மற்றைய நாளெல்லாம் ஸ்கிரீன் சேவர், பொன்மொழிகளை மின்னஞ்சல்களை அனுப்பும் "தல" கோபி போல நீங்களும் இப்படித் தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு அனுப்பலாம். ஒரு ரெண்டு மாசம் கழிச்சு சைக்கிள் கேப்பில் காதலை உயர்வாகச் சொல்லும் பொன்மொழிகள், ஸ்கிரீன் சேவரை அனுப்பிப் பாருங்கள். மறுமுனை ரியாக்க்ஷன் எப்படி என்று நாடி பிடித்து அறியலாம். பிடிக்கலை என்றால் இருக்கவே இருக்கு இன்னொரு கிளி.


வழிமுறை 5

காதல் கடிதத்தை வாங்கினால் செல்போன் இலவசம், இன்கம்மிங் கால்ஸ் ப்ரி என்று சொல்லிப் பார்க்கலாம்.


வழிமுறை 6.

இது என் சொந்த அனுபவம் (காப்பி ரைட் கிடையாது, யாரும் உபயோகிக்கலாம்)
மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களில் இருந்து, வைரமுத்து, பா.விஜய், தபூசங்கரை காப்பி அடிச்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு காதல் கடிதத்தை எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் அதைக் கொடுக்கும் போது ஒரு வரி கூடப் படிக்காமல் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு "இடியட்" என்று அவள் திட்டினால் உங்கள் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.
எனவே முதல் கடிதத்தில் ஒன்றுமே எழுதாதீர்கள். வெறும் வெற்றுத் தாளையே நாலாக மடிச்சு நீட்டுங்கள். அந்தக் கடிதத்தை வாங்கி உங்கள் முன்னிலையிலேயே ஆவலோடு (காதல் பனிக்க) பிரித்தாள் என்றால்
"இந்தத் தாளைப் போல என் மனசு இப்பவெல்லாம் வெறுமையாவே இருக்கு, சம்மதமா" என்று பல்டி பிளஸ் லூட்டி அடிக்கலாம்.
படிக்காமலே அதைக் கிழித்துப் போட்டு விட்டாள் என்றால்
"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)

இது ஒரு மீள்பதிவு-எழுதியது- கானாபிரபா