Tuesday, December 23, 2008

நெஞ்சுக்கு சேதி - பாகம் - 2

அண்ணன் போர்வாள் போர் முனையில் வஞ்சகர் தம் நஞ்சு கலந்து தொடுக்கும் விஷ அம்பினை எதிர்கொண்டு இனமானம் காக்க...சங்கத்தின் கோடானு கோடி வாலிப நெஞ்சங்களுக்கு சேதி அறிவித்து கொண்டிருக்கும் இந்த வேளையிலே... உலக பொருளாதாரம் முதல் வீட்டில் இருக்கும் தாரம் வரை பிரச்சனைகளை எதிர்கொண்டு..அண்ணனின் அழைப்புக்கு பின்னூட்டம் மின்மடல்..தொலைபேசி என பல வகையிலும் ஆதரவு தெரிவித்து உங்கள் தம் இனமான உணர்வுகளை பொங்கி எழச் செய்து கொண்டிருக்கும் இந்தச் சூழலை நாடே பார்க்கிறது......ஏன்..தில்லி சர்கார் கூட குனிந்து கவனிக்கிறது என்றால் அது மிகையாகாது...

பாலிவுட்டிலே பரபரப்புக்காக... அமிதாப்பச்சனும்.. அமீர்கானும் பதிவிட்டார்களே...அந்தப் பதிவுகள் அகில உலக கவனத்தை கவர்ந்ததாக கவர் ஸ்டோரி எழுதிய வட நாட்டவர் பத்திரிக்கைகள் இன்று இந்த இனமான நெஞ்சுக்கு சேதி பதிவினைப் பக்குவமாக பார்க்க துவங்கியுள்ளது என நாம் நெஞ்சை நிமிர்த்தினால் அது தவறகாது.. இது யாருக்கு கிடைத்த வெற்றி.. அண்ணனின் அழைப்புக்கு அவசரமாய் செவி மடுத்து சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து களம் காண புறப்பட்ட வீர வாலிப இனமே... என் உடன் பிறவா பிறப்புகளே... பதிவுலகின் பரபரப்புகளே.. நீங்கள் தான்...

"பதிவு தோன்றி பின்னூட்டம் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த கும்மி குடியாம்" அப்படி ஒரு சிறப்பான இனமாம் சங்கத்து சிங்கங்கள் இன வரலாற்றின் முதல் பக்கத்தைக் கூட முழுசாய் படிக்காமல் சங்கத்தின் மீதும் சங்கத்தின் முன்னணியினர் மீதும் ஊழல் என்றும்... ஊது குழல்... என்றும் புழுதி வாரி இறைப்பது இன்றைய சூழலில் ஒரு சிலருக்கு வாடிக்கையாகவும் வேறு பலருக்கு வேடிக்கையாகவும் போனது நெஞ்சுக்கு வேதனை அளிக்கக் கூடிய சேதி...

அண்ணனின் இந்தப் பதிவினை ஒரு பல்கலைகழகப் பட்டப்படிப்பாய் நினைத்து படிக்கும் பதிவுலக பரபரப்பே... எங்கள் தமிழின சுறுசுறுப்பே....

பதிவுகள் என்பது பிளாக் என அழைக்கப்பட்டு ஆங்கில மொழியில் லாக் ஆகி கிடந்த அந்த இருண்ட காலத்தை தமிழ் பதிவிடும் உயர் உள்ளங்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.. ஆங்கில கீ போர்ட்களில் தமிழ் போர் தொடுத்து... அழகு தமிழில் பதிவிட துவங்கியதில் சங்கத்து முன்னணியினர் பலரும் முதல் வரிசையில் நின்றது தமிழன் ஆன் சைட் சென்று கொடி நாட்டிய தலங்கள் அனைத்தும் மறுக்க முடியாத வரலாறு

பதிவு தேய்கிறது பின்னூட்டம் வாழ்கிறது... நம் பதிவுலக பேராசான் கொத்தனார் நமக்கு விடுத்த கூக்குரல்... நம் சங்கத்து பதிவுலக போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்ப்ட வேண்டிய வாக்கியம்...

அனானியின் பின்னூட்டத்தில் கும்மியைக் காண்போம்...அந்த கும்மிகளால் ஒலிக்கும் ஒவ்வொரு சிரிப்பிலும் இறைவனைக் காண்போம் சங்கத்து தளபதியார் ஆரம்பித்த இந்த கும்மிக் குரல் இன்னும் பதிவுலகின் வரலாற்று பக்கங்களில் ஆங்காங்கே எதிரொலித்த வண்ணமே உள்ளது... இதை உங்களால் மறுக்க முடியுமா???

ஒன்றே பதிவு அதில் ஒருவனே பின்னூட்டம் என்ற பொது தத்துவங்களை நாட்டுக்குச் நவின்றது சங்கம் என்பதை ஆன்றோர் பெருமக்கள் மறந்து விடக்கூடாது.. சான்றோர் சபையில் சொல் பிறழ கூடாது.... என்பதை இங்கு உயர் தமிழ் பதிவு குடிமக்களின் நெஞ்சுக்கு உரத்த சேதியாகச் சொல்லிக் கொள்ள விழைகிறேன்...

கூட்டணி என்பது ஒரு குடும்பம் என்பதையும்....குடும்பமே கூட்டணி.... என்பதையும்....சங்கத் 'தல' வரலாறு அறிந்தவர்கள் சாட்சியாக சொல்லுவர்... கூட்டணி பதிவின் கொள்கை கொடி தரணியெங்கும் பட்டொளி வீசி பறப்பதை இன்று கண்டு மகிழாத தமிழ் பதிவிடும் நெஞ்சம் உண்டா....

தனி பதிவுகளின் ஆவர்த்தனம் கோலோச்சியக் காலக்கட்டத்தில் சமத்துவம்.. சமநீதி.. சமப் பின்னூட்டம் அதன் மூலம் தேசிய நீரோட்டம் என உன்னதக் கருத்துக்களை ஊருக்குச் சொன்ன ஈரோட்டு உழவன் வளர்த்தெடுத்த சங்கத்தின் மீதா திராவகம் வீசுவது... சிந்திக்க வேண்டும்... சித்தம் கலங்கியவர் செய்யும் செயல்களுக்கு காரணம் தேடக் கூடாது...

பாண்டிய மன்னர்கள் கண்டது மூன்று தமிழ் சங்கம்.. இன்று பதிவுலகம் காண்பது தம்பி ஜொள்ளுபாண்டி சிறந்த நான்காம் நவீன தமிழ் சங்கம்.. இயல் தமிழ் ,இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனத் தமிழ் வளர்த்தனர் அந்த பாண்டிகள்.... நம் பாசத்துக்குரிய இந்த தம்பி பாண்டி வாலிப நாட்டின் இதய இடுக்குகளில் குந்தி குனிந்து கொண்டிருந்த இன்னொரு தமிழாம் "ஜொள்ளு" தலை நிமிரச் செய்த உணர்வான உண்மை பெருமைக்குச் சொந்தக்காரன் என்பதை மறுக்க முடியுமா...

வா ரணம் ஆயிரம்... என ரணங்களைத் தாங்க பழகிய இரும்பு நெஞ்சுகளுக்கு நாங்கள் சொந்தக்காரகள்... அந்த இரும்பு நெஞ்சுக்குள் ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களைப் பற்றியே சிந்திக்கும் உங்கள் பதிவ்லக தொண்டர்கள் நாங்கள்... போர் என்றாலும் முதல் வரிசையிலும்... வார் என்றால் வரிந்துக் கட்டியும் நிற்பவர்கள் இந்த வ.வா.சங்கத்தின் சிங்கங்கள்....

ஏ கன் எடுத்து எங்களைச் சுட்டாலும் அந்த தோட்டாவுக்கும் தோழமை பாராட்டும் உயர் தலயின் வழி நடப்பவர்கள் நாங்கள்...

வில்லு பூட்டி வந்தவரையும் சொல்லு கூட்டி பேசாத பழந்தமிழ் பண்பு கொண்டவர்கள் நாங்கள்

மர்ம யோகிகளின் மூடப் பேச்சுகளால் விழையாது நீதி... அதனால் கிளம்பப் போவது வெறும் பீதி...அவர்கள் கேள்விகளால் வேள்வி செய்வார்....வினாக்களால் வினை செய்வார்....ஒரு உன்னத கொள்கை பயணத்தைத் தடை செய்ய இப்படி வித்தைகள் பல புரிவார்கள்...அதில் எல்லாம் என் பாசத்துக்குரிய..உயிரினும் மேலான பதிவுலக பரபரப்புகளே சிக்கி சிதறாதீர்கள்

மக்கள் பணி அழைக்கிறது... நமக்கு நாமே பின்னூட்டமிட்டு நம் பதிவுகளை இன்னும் பரபரப்பாக்கும் திட்டம் இதோ துவங்கப்பட்டு வெற்றியடைந்து விட்டது.. அந்த வெற்றியை மேலும் சிறப்புறச் செய்ய உன் பங்கு அவசியம்...

வா... ஒரு எந்திரனாய் எழும்பு... வசூல் வேட்டைக்கு கிளம்பு...பதிவு புரியாவிட்டால் கொஞ்சம் குழம்பு... பரவாயில்லை.. புரிந்தவுடன் சோர்வினை அகற்றி சிற்று எறும்பை பணியாற்ற களம் காண வா....வா...வா...

அண்ணன் நெஞ்சுக்கு சொல்லிய சேதி இப்போதைக்கு முற்றும்...

பாலைவன பகலவன் பெனத்தலார் கொள்கை நாமம் வாழ்க... வாழ்க...
பேராசான் கொத்தனார் நமக்கு இட்ட நாமம் வாழ்க.. வாழ்க...

Monday, December 15, 2008

நெஞ்சுக்கு சேதி - பாகம் 1

பதிவுலக மாமணிகளே... பின்னூட்டப் பெருமணிகளே...கேள்விகள் ஒன்றும் எனக்கு புதிதல்லவே.. நான் நடந்து வந்த பாதையில் நாகங்களும் ஓடி வந்த ஹவேக்களில் ஒலமிட்ட ஒநாய்களும் ஏராளம்..தாராளம்..இந்தக் கேள்விகளில் ஒலிக்கும் ஏளனம் கூட எனக்கு பூபாளம்..

என் பொது வாழ்க்கை ஆசான் பாலைவன பகலவன் பெனத்தலாரும்..என் அண்ணன் ஜெர்சி தலைவன் இலவசனாரும் எனக்குக் காட்டிய வழியில் இது வரை இஞ்ச் அளவு கூட இப்படி அப்படி நகராமல் நடந்து கொண்டிருப்பவன் நான்...

பதிவுலகமும் அதைச் சார்ந்த ஆதி பதிவர்களின் வரலாறு புவியியல் புள்ளியியல் எதுவும் அறியாமல் காலம் மடியில் கொடுத்தக் கணிணியை விரலிடுக்கின் வித்தைகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சீமான்களும் கோமான்களும் கனவான்களும் கேள்வி என்ன... கேலி என்ன....விட்டால் பதிவுலகையேக் காலி கூடச் செய்வார்கள் போலிருக்கிறது...

பொறுமை காப்போம் பொறுத்துப் போவோம் என பல அன்பு நெஞ்சங்களும் பாச உள்ளங்களும் எனக்கும் மடலும் குடலும் ஆம் நல்ல அசைவ விருந்தில் முக்கிய பதார்த்தம் இட்டு கேட்டுக் கொண்டார்கள்.. சங்கத்தின் ஊது குழலாய் ஓயாமல் ஒலித்த என்னைப் பார்த்தூஉழல் ஊழல் என குழல் ஊத இன்று கிளம்பியிருக்கும் கண்ணபிரான்களின் கேள்விகளைப் படித்தப் போது...சங்கத்துச் சிங்கங்களே போர்வாளாம் எனக்கு இதயம் இடித்தது...கண்கள் பனித்தன....

போர்வாளுக்கு இப்படி என்றால்... ஒரு சாதரண அடிப்படை தொண்டனுக்கு எப்படி இருக்கும்... போர்வாளை தங்கள் தவப்புதல்வனாய் நினைக்கும் தாய்மார்களும்... அண்ணனாக கொண்டாடும் தங்கையரும் தாங்குவரா... சிந்தித்தேன்.. சித்தம் தெளிந்தேன்...களம் எனக்கு புதிதல்ல...பதிவு மேடை எனக்கு பஞ்சு மெத்தை..அதில் விழும் கமெண்ட்கள் என் மீது தெளிக்கப் படும் பன்னீர் புஷ்பங்கள் என எண்ணுபவன் நான்...


இன்று கேள்வி கேட்க கண்ணி தொடும் மேதாவிகள்.... சங்கம் வளர்ந்த வரலாறு அறிவார்களா...அவர்கள் எல்லாம் வேலை பார்க்கவே அலுவலகம் சென்றவ்ர்கள்... பன்னிரெண்டு மணி நேரம் உழைத்து அதற்கு பின் அவர் தம் மேலதிகாரிக்கு வளைத்து நெளித்து கூனி குறுகியவர்கள்... பதிவுலகமே வாழ்க்கை என பல நாட்கள் பணி செய்ய மறந்து புராஜ்க்ட்டைத் துறந்து..பெஞ்சில் அமர்ந்து.. அப்புரேசல் ஆப்புரேசல்களாய் மாற்றி.... அதனால் கிடைத்த வசைகளை இசையென மாற்றி கச்சேரி படைத்தவன் இந்தப் போர்வாள் என்பதாய் உண்ர்வார்களா...

அலுவலக கீ போர்ட்களுக்கும் அழகு தமிழ் உடுத்தி தமிழ் வளர்த்த பரம்பரையிடம் கேள்வி கேட்கிறீர்கள்..

பந்தல் போட்டு பதிவு வளர்த்த உங்களுக்கு சென்னை வீதி கச்சேரிகள் வைத்தவனிடம் எடக்கு கேள்விகள் கேட்க மட்டும் தான் தெரியும்...

ம்ம்ம்ம் மூன்று எழுத்துக்கும் தமிழக அரசியலுக்கும் உள்ள நெருக்கம் உம் கண்ணை மறைக்கிறதோ... ஆம்ஸ்ட்ராடாம்.. பாரீஸ் எனக் கண்ட இடத்தில் எல்லாம் கைத் தூக்கிய வண்ணம் புகைப்ப்ட கருவிக்கு வசிகரமாய் விருந்தளித்து உலகம் சுற்றும் வாலிபனாக ஆக முடியாது... அது பகல் கனவு... அதனால் கிடைக்காமல் போகலாம் உமக்கு அடுத்த வேளை உணவு...

அரிதாரம் பூசியதால் அரியணை ஏறலாம்... போர்வாள் போருக்கு வரவில்லை.. வாளோரம் துரு பிடித்திருக்கும்... அந்த துருவை வைத்து போர்வாளுக்கு பதிவுலகில் இருந்து துறவு கொடுக்கலாம் என எண்ணம் கொண்டீரோ....

நயகாரா ஓரமாய் நீங்கள் அமர்ந்து வயாக்ரா பற்றி நடத்திய ஆராய்ச்சி என்ன என்று என்னாலும் கேள்வி கேட்க முடியும்...கேள்விக்கு கேள்வி பதிலாகாது என நான் பாடம் படித்திருக்கிறேன்... அதனால் நாக் காக்கிறேன்... நாணயமாய் இருக்கிறேன்...

வாலிபத் தலைவன் வாலிபால் இளைஞன் கைப்புள்ள மால்கேட்டில் சிறைப்பட்ட போது சதிகாரர்களின் கையில் சங்கத்து மெயின் கேட் சாவி சிக்காமல் காத்தச் சரித்திரப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு வந்து கேள்வி கேளுங்கள்

பாலைவனத் தேசத்துக்கு பதிவுலக சூப்பர் ஸ்டார் விவாஜியார் பிடித்து அனுப்பப் பட்டப் போது அந்த விமானத்தில் அழகிகள் புடைச் சூழ அவர் அவதிப் பட்ட அல்லல் கதைகளை அயலவர் ஆசைக் காட்டி பதிவெழுதச் சொன்னப்போது கூட அதற்கெல்லாம் அசையாதவன் இந்த போர்வாள்

பல முக சித்தர் பல ஐடி பித்தர் அருமை நண்பர் தளபதியாரின் ஐடிகள் எத்தனை என்று என்னை விலை பேச வந்தவர்கள் புறமுதுகிட்டு ஓடிய விவரங்களைக் கேட்டு விட்டு வந்து கேள்வி கேளுங்கள்

தாவணி கனவுகளின் மொத்தக் காதலன் வாலிப தேசத்தின் முதல் குடிமகன் ஜொள்ளு பாண்டியின் காதல் டைரி குறிப்புகளுக்கு பொழிப்புரை புரியுமா உங்களுக்கு... முடிந்தால் புரிந்து கொண்டு வந்து கேள்வி கேளுங்கள்

நீங்கள் வரிசைக் கட்டி கேள்வி கேட்டு விட்டீர்கள்....

நெஞ்சுக்குள் பெய்யுது மாமழை... நீருக்குள் முழ்குது தாமரை....ஆம் இதயம் இடித்தது.. கண்கள் பனித்தன...

சத்தியத்தின் சோதனை துவங்கி விட்டது.... யுத்தம் துவங்கி விட்டது.... பதிவு போடும் நல்லுலகமே கேளுங்கள்... போர்வாள் முழக்கம்... உங்கள் நெஞ்சுக்கு ஒரு சேதி சொல்ல கிளம்பி விட்டேன்....

வாழ்க பதிவு... வளர்க பின்னூட்டம்... எழுக சங்கம்.. ஒழிக துரோகம்....

ஊழல் பதிவர் தேவ் - சில பகிரங்கக் கேள்விகள்!

ஜங்கத்தின் ஜிங்கம், சங்கப் போர்வெல்...ச்சே போர்வாள், அண்ணன் தேவ்-க்கு சில பகிரங்கக் கேள்விகள்!

1. எப்போ வருவார், எப்படி வருவார்-ன்னு தெரியாத தலைவர் கூட எந்திரன் பட ஷூட்டிங்கைத் தொடங்கிட்டாரு! ஆனால் பல படங்களுக்குப் பூஜை போட்டு, பேமன்ட்டை மட்டும் லம்ப்பா வாங்கிய நீங்க, இப்போ "தலைமறைவா" என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க?

2. அத்தனை படத்தின் கதாநாயகிகளையும் அவர்கள் அம்மாக்களையும் அப்பவே புக் பண்ண நீங்க, ஏன் இன்னும் கதாநாயகர்களையும் அவர்கள் அப்பாக்களையும் புக் பண்ணாம இருக்கீங்க?

3. போன மாசம் அந்தக் கதாநாயகிகளில் இரண்டு பேர், தங்கள் சீமந்தப் பத்திரிகையவே சங்கத்துக்கு அனுப்பி இருக்காங்க!
இதைப் பார்த்துட்டு மனமொடிந்து போன தளபதி சிபி, சங்கத்தின் 22ஆம் மாடியில் இருந்து தற்கொலை செஞ்சுக்கப் பாத்தாரு!
ஆனா ஆஸ்பத்திரியில் இருந்த சிபிக்கு, ஒரு சாத்துக்குடிப் பழம் கூட நீங்க அனுப்பி வைக்காததன் காரணம் என்ன?

4.
* விசாவதாரம்,
* பாபாகன்,
* ஷூ லேசு,ப்ரெளன் சாக்சு,
* அஞ்சரைக்குள்ள வண்டியிலே ராம்
* வெள்ளை மாளிகை 305-இல் கேஆரெஸ்,
* பதிவர் ஜிராவின் அவனோட ராவுகள்,
- இது போன்ற ஒலகத் தரம் வாய்ந்த படங்களுக்கு போட்ட ஒப்பந்தத்தின் கதி என்ன ஆச்சு?

5. சங்கத்தின் என்றும் பதினாறான எங்கள் ராயலை இந்தியாவில் இருந்து இந்தோனிஷியாவுக்கு ஏன் நாடு கடத்தினீங்க? அவன் செய்த குற்றம் தான் என்ன?

6. நீங்க வேலூர் ஜெயிலில் இருந்த போது, உங்க சார்பா பதிவு போட்ட CHINNA BOSS, உங்க வாரிசா? பினாமியா? போலியா?

7. சுட்டி விகடனில் வந்த உங்க "ஜொள்ளுப் பேட்டை"க்கு, சென்சாரில் முறையான அனுமதி வாங்கினீங்களா?

8. கோவியின் நாடக சபா-ன்னு நீங்க பதிவு போட்ட ஒரே காரணத்தால், பதிவர் கோவி.கண்ணன் இன்று விளிம்பு நிலைப் பதிவர் ஆகி விட்டார்!
கண்ட விவசாயிகளும் அவருக்கு Blog-O-Graphy போட்டு Mammo-graphy செய்யறாங்க!

விளிம்பு நிலைப் பதிவர், கோவி. கண்ணனின் மறு வாழ்வுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

9. முன்னாள் அட்லாஸ் சிங்கங்களான
* ரிஷான் ஷெரீப்,
* இச்-சின்னப்பையன்,
* ஆயில்யன்,
* கானா பிரபா
என்ற நால்வர் கூட்டணி, உங்க கிட்ட சங்கத்தை விலை பேசறாங்களாமே? அது உண்மையா?

10. சங்கத்தின் ரெண்டு போட்டியை, எதுக்கு மூன்றில் நடத்துனீங்க?
நீங்க "அதுல" மட்டும் தானே வீக்கு? கணக்குலயுமா வீக்கு?


மேற்கண்ட ஒவ்வொரு கேள்விக்கும் தேவ் அண்ணாத்த மட்டுமே பதில் சொல்லணும்-னு அவசியம் இல்லை! அவர் சார்பா யார் வேணும்னாலும் பதில் சொல்லலாம்!
குறிப்பா, அனானி பதில்களுக்கு அதிக மதிப்பெண்கள் உண்டு-ன்னு சொல்லிக்க கடமைப்பட்டுள்ளேன்! :)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தேவ், இங்கு வரும் தவறான பதில்களைத் திருத்தலாம்! தன் தரப்பு பதிலைத் தாராளமாகச் சொல்லலாம்! அதற்கான முழு உரிமையும் அவருக்கு கொடுக்கிறோம்!

தேவ் அண்ணனின் ஊழலை எதிர்த்து, தமிழ்ப் பதிவர்கள் தங்கள் தார்மீகக் கடமையாத்தணும்-ன்னு சங்கத்துச் சிங்கங்களின் சார்பாக கர்ஜித்து அமைகிறேன்!
2009-இல் சங்கம் மந்திரிசபையின் விஸ்தரிப்புக்கு இதெல்லாம் உதவும்!

தேவ் "நாமம்" வாழ்க!
நன்றி! வணக்கம்!
(மற்ற சிங்கங்களின் மேலும் கேள்விகள்/வேள்விகள் தொடரும்...
இப்படிக்கு ஆண்மீகப் பதிவர், கேஆரெஸ்)

Wednesday, December 3, 2008

அட்டுபிகரை டாவடிப்போர் சங்கத்தில் சில்ப்பாகுமார்.

ன்று, அண்ணன் சில்ப்பாகுமார் அவர்கள் வழக்கம்போல் பியூரெட் கழுவும் பி.ஹெச்.டி -பிகருக்கு நூல் விட்டுக்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக மின்மடலை பார்க்குமாறு ஒரு மர்மக்குரல் எச்சரித்துவிட்டு தொடர்பை துண்டித்தது. பேஸ்த்தடிச்சுபோய் மெயில் செக் பண்ணா, 'அட்டு பிகரை டாவடிப்போர்' சங்கத்தில் இந்த மாத சில்ப்பாகுமாராக செயல்படுமாறு அழைப்பு வந்திருந்தது. கூடவே சங்கத்து விதிமுறைகள் நிறைந்த கையேடும் அனுப்பப்பட்டிருந்தது. அவ்விதிமுறைகளை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே தருகிறார் அண்ணன் சில்ப்பா.


1. அ.டா. சங்கத்து சில்ப்பா குமாராக ஒப்புக்கொண்டமைக்கு நன்றி

2. உங்களை தொடர்பு கொண்டு சில்ப்பா குமாராக பரிந்துரைத்த நபர் இனிமேல் MM என்று அழைக்கப்படுவார்(மாப்ள பெஞ்ச் மன்னார்சாமி). உங்களுக்கும் அ.டா. சங்கத்திற்கும் உறவுப்பாலமாக MM இருப்பார்.

3. சில்ப்பாகுமாராக ஒப்புக்கொண்ட மாதத்தில், நீங்கள் குறைந்த பட்சம், அதாவது வாரம் ஒன்று என்ற வீதம் 4 அட்டுகளையாவது மடிக்க வேண்டும். MMன் ஆலோசனைப்படி அதிக பிகர்களை மடிப்பதை அ.டா. சங்கம் வரவேற்கிறது.

4. நீங்கள் மடித்த பிகரை காலேஜ் காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு மாப்ள பெஞ்சுக்கு அறிவியுங்கள். பிகரை அங்கீகரிக்கும் உரிமை மன்னார்சாமிக்கே உண்டு. நீங்களாகவே டாவடிக்கும் உரிமை உங்களுக்கு அளிக்கப்பட்டால் கீழ்கண்ட விதிகளுக்கு உட்படுதல் வேண்டும்.

அ. அட்டுபிகரை எந்த நேரத்திலும் அத்து விட முழு உரிமை மன்னார்சாமிக்கு உண்டு.

ஆ. பிகரிடம் பணம் பறிப்பது, பர்சை நோண்டுவது, அத்துமீறுவது, இன்னொரு பிகரிடம் சென்று டபுள் ஆக்ட் கொடுப்பது கூடாது.

இ. மடித்த பிகரை வைத்து பந்தா பண்ணுவது, சக சில்பாகுமாரை வெறுப்பேற்றுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்


5. நீங்கள் அ.டா.சங்க உறுப்பினராக இருக்கும் காரணத்தினால் உங்கள் பிகர்கள் தானாகவே மற்ற பொறாமை பொன்னுசாமிகளுடன் பழக அனுமதி உண்டு. நீங்கள் ஆட்சேபிக்கும் பட்சத்தில் உங்கள் அட்டு பிகர், விதி 4 ன் கீழ் உட்படுதல் அவசியம்.

6. அ.டா. சங்கத்தின் நோக்கமான டாவுக்கு உங்கள் பிகர்களை உடன்படச்செய்யுமாறு வேண்டுகிறோம்.

7. மேற்கண்ட விதிகளுக்கு உட்படாவிடில் உங்களை எந்த நேரத்திலும் உங்கள் பிகரிடம் போட்டுகொடுக்கவோ, பிகரை தூண்டிவிட்டு வேடிக்கைபார்க்கவோ மாப்ள பெஞ்சுக்கு முழு உரிமை உண்டு.

8. உங்களுக்கு அ.டா'வில் (சாதா) ஜிப்பா உரிமை மட்டுமே அளிக்கப்படும், அதாவது அட்டுகளை டாவடிக்கும் உரிமை மட்டுமே வழங்கப்படுகிறது. உங்கள் பிகரின் பிரன்சுகளை டாவடிக்கும் சில்க் ஜிப்பா உரிமை மாப்ள பென்ச் மன்னார்சாமிக்கே உண்டு.

9. மேற்பட்ட விதிகளுக்கு உட்பட்டு சில்பா குமாராக செயல்பட அ.டா.சங்கம் அன்புடன் அழைக்கிறது, புரிதலுக்கு நன்றி.

Tuesday, December 2, 2008

இட்லிவடை யாரு? ஆதாரத்துடன் விளக்கம்

இட்லிவடை யாருன்னு தெரியாம மண்டை காய்ஞ்சி போயிருக்கீங்களா? ஆதாரமே தர்றோம் பாருங்க. இட்லிவடை யாருன்னு மக்கள் சந்தேகப்பட்டாங்க?
  1. கிருபா சங்கர்
  2. பாபா(பாஸ்டன் பாலாஜி)
  3. ஐகாரஸ் பிரகாஸ்
  4. பாரா
  5. பத்ரி
  6. பெனாத்தலார்
  7. ஹரன் பிரசன்னா

இதுல பாபா, ஐகாரஸ், பத்ரி எந்தத்திரட்டியிலும் இணைச்சுக்கிறது இல்லே(சங்கமத்துல மட்டும் Fame categoryல நானே இணைச்சுகிட்டேன்-இளா).

இட்லி வடை என்ன சொல்றாருன்னா "இட்லிவடை எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக் கொள்வதில்லை. அவர்களாக இணைத்துக்கொண்டால் நான் பொறுப்பு இல்லை. "

இதுகொஞ்சம் இவுங்களுக்குப் பொதுவான விசயம். மீதிப் பேரை இப்போதைக்கு தள்ளி வெப்போம். கில்லி கோஷ்டியில பாபா, ஐகாரஸ், பாபா, பத்ரி இருக்காங்க. இது எதுக்குன்னு கேட்காதீங்க, மேட்டர் இருக்கு. அப்படியே தமிழிஷ்ல யாரு இ.வ'வை இணைக்கிறதுன்னு பார்த்தா கில்லி'ன்னு ஒரு பேரு.

அதனால மக்களே பாபா, ஐகாரஸ், பாபா, பத்ரி இவுங்கதான்னு சங்கம் சொல்ல வரலே.... நீங்களே முடிவு பண்ணிக்குங்க. சங்கம் இதுக்குப் பொறுப்பாவாது.