Monday, May 22, 2006

வாழ்த்து + போட்டி

இன்று _ _ ஆம் பிறந்த நாள் காணும் எங்கள் சங்கத்தின் பாதுகாப்பு அரண், தங்கத்தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள், அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ சங்கத்தின் சார்பாக மனதாற வாழ்த்துகிறோம்.

சரி இப்ப மேட்டரு... "_ _"க்கு மேலே சரியான நம்பரைப் பொருத்தும் முதல் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு, சங்கத்து சட்டியில் இப்போது கிண்டப் பட்டுக் கொண்டிருக்கும் டைமண்டு கல்கண்டு 100 கிராம் டிஜிட்டலாக வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் இரண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக, சங்கத்து சார்பில் நாளை எங்கள் தானைத் தலைவியுடன் டீ நாஸ்தா பண்ணும் அரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.

25 comments:

துளசி கோபால் said...

55

நன்மனம் said...

கிதா மேடம் வாழ்த்துக்கள்.

இப்ப போட்டிக்கு பதில். 18.

கிதா மேடம்க்கு 18, அப்ப மேடம்னு கூப்பிடற எனக்கு... ஹி..ஹி

Unknown said...

happy birthday geetha akka.Many more happy returns of the day.

Unknown said...

சங்கத்தின் புரட்சி சுனாமி எங்கள் பாசமிகு கீதா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

பாசத்துடன்,
சங்கத் தொண்டன்
தேவ்.

ILA (a) இளா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதா!!!.
சங்கதினர் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் வயது குறைந்துகொண்டே வருவதால் வயசெல்லாம் சொல்லி யாரோட வயசையும் காட்டிக்கொடுக்க முடியாது.

ஜொள்ளுப்பாண்டி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதாக்கா :))

Geetha Sambasivam said...

என்னோட வயசைச் சொல்ல மாட்டேனே. என்றும் 16 நான்.

Geetha Sambasivam said...

வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் என் நன்றி.
துளசி நீங்க சொன்னதைக் கண்டுக்க மாட்டேன்.

Unknown said...

என்னப்பா பாண்டி அக்கா பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லி எஸ்கேப் ஆகுறே... ம்ம் சரியில்ல...

தல நீ பண்ணுறது சரி இல்ல இம்புட்டு நாள் கைப்பொண்ணு அண்ணி பேச்சு கேட்டுகிட்டு சங்கத்து நிரந்தர தலைவலி அக்கா கீதாவுக்கு மகளிரணியிலே எந்த பதவியும் கொடுக்கல்ல.. இப்போவது கொடு தல...

ஆற்றலரசி பிகுலு அக்கா வேற ஊருல்ல இல்ல... சங்கத்து மகளிரணியை அக்கா கையிலே கொடுத்துக் காப்பாத்து தல....

அக்கா பொறந்த நாளுக்கு எதாவது விழா எடுங்கப்பா

Anonymous said...

அக்காவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

பொன்ஸ்~~Poorna said...

//ஆற்றலரசி பிகுலு அக்கா வேற ஊருல்ல இல்ல... சங்கத்து மகளிரணியை அக்கா கையிலே கொடுத்துக் காப்பாத்து தல....
//
தேவ், ஊர்ல இல்லைன்னாலும், இதெல்லாம் பாத்துகிட்டு தான் இருக்கேன்... இருக்கட்டும், சென்னை வந்து உங்களை!!!

அக்கா கீதாக்கா, 20ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்!! எப்படி, சரியா சொல்டோமா??!!

கைப்புள்ள said...

//என்றும் 16 நான்.//

ரைட்டு
:)

கைப்புள்ள said...

//அக்கா கீதாவுக்கு மகளிரணியிலே எந்த பதவியும் கொடுக்கல்ல.. இப்போவது கொடு தல...//

மேடம் அவர்களின் பிறந்த நாளான இந்நாளில் அவர்களுக்குச் சங்கத்தின் "சபாநாயகி" பதவியை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல் சங்கத்தின் மக்களவை, மாநிலங்கள் அவை இரண்டையும் வழிநடத்தும் பொறுப்பு மேடம் அவர்களிடத்தில் உள்ளது.

வெட்டிப்பயல் said...

கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

வெட்டிப்பயல் said...

//கிதா மேடம்க்கு 18, அப்ப மேடம்னு கூப்பிடற எனக்கு... ஹி..ஹி
//

ஆமாமா! நன்மனம் இப்பதான் சின்ன குயந்தை! பிறந்து நாலு மாசம்தான் ஆகுது!

Santhosh said...

கீதாக்கா,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//என்னோட வயசைச் சொல்ல மாட்டேனே. என்றும் 16 நான்.//

அப்ப நான் என்றும் 14..:))

சிங். செயகுமார். said...

கீதாக்கா வாழுதுக்கள் போன எலக்ஷன்ல நீங்க ஓட்டு போட்டிங்க அப்ப்டின்னா 18+தானே ! எப்பிடி கர்ரிட்டா கண்டு பிடிச்சேன்:)

Karthik Jayanth said...

கீதா மேடம்,

பிறந்த நாள் வாழ்த்துக்கள். ..

கொஞ்சம் லேட் தான் மன்னிச்ச்சிகோங்க :-) .. கடைல வேல ஆப்பு ஓவரா இருக்கு

Unknown said...

//மேடம் அவர்களின் பிறந்த நாளான இந்நாளில் அவர்களுக்குச் சங்கத்தின் "சபாநாயகி" பதவியை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.//

தல தக்க தருணத்தில் கீதாவின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு சபாநாயகி பதவி கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்....

//தேவ், ஊர்ல இல்லைன்னாலும், இதெல்லாம் பாத்துகிட்டு தான் இருக்கேன்... இருக்கட்டும், சென்னை வந்து உங்களை!!!//


அட நீங்க வேற அக்காவுக்கு பிறந்த நாள் விழா.. இங்கே இப்படி ஒரு நாலு வார்த்தையை அள்ளிவிட்டாத் தானே அவங்க மனசு சந்தோஷப்படும்...

சபாநாயகி கீதா அக்கா வாழுக...ஆற்றலரசி பிகுலு பொன் ஸ் அக்கா வாழுக.....

Geetha Sambasivam said...

போன எலக்ஷன் அப்போதான் நான் பிறந்தேன். அப்போ ஓட்டு எப்படிப் போட்டிருபேன்? எனக்கு இன்னும் ஓட்டுப் போடற வயசு ஆகலை. பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு வந்து பார்த்தால் சங்க வேலை அப்படியே இருக்கு. புதுசா வேறே ஆளைச் சேர்த்திருக்கீங்க. புதுப் பதிவு ஒண்ணும் போடலியா? இதுக்குத் தான் என்னை மாதிரிச் சின்னப் பொண்ணுங்களா இருக்கணும்கிறது.

Unknown said...

//போன எலக்ஷன் அப்போதான் நான் பிறந்தேன்.//

அப்போவே பொறந்திட்டீங்களா... அப்போ நம்ம சங்கத்துப் பசங்க யாரும் பொறக்கவே இல்லியே..

//புதுப் பதிவு ஒண்ணும் போடலியா? //

அட என்ன அக்கா விவரம் தெரியாமல் பேசுறீங்க நம்ம சங்கத்து விவசாய செம்மல் பாசமிகு இளா மீது யாரோ வாலிபர்களை வருத்தப் பட வைக்கும் நோக்கத்தில் நேற்று மாருதி காரினால் மோதி விளையாடி இருக்கிறார்கள்..இந்த விஷ்யம் அறிந்து நாங்கள் பதறி பதிவு போட முடியாமல் இருக்கிறோம் ... நீங்க இப்படி கேட்டா எப்படி?:(

Unknown said...

தல சீக்கிரம் வாத் தல போட்டி ஓவர்.. வந்து பரிசு கொடு தல

கைப்புள்ள said...

எல்லாரும் கலத் ஜவாப் குடுத்ததால, யாருக்கும் பரிசு கெடயாது. கல்கண்டை நானே துன்னுட்டேன்.

Geetha Sambasivam said...

ஒரு வாரமாப் பிறந்த நாள் கொண்டாடியும் வெறும் கல்கண்டு தானா? ஷேம், ஷேம். என்ன தலைவர், என்ன சங்கம்,? ஒரு பொன்னாடை, மாலை(ரூபாய் நோட்டிலதான்) மரியாதை, ஒரு ஊர்வலம், ஒரு அன்னதானம், தீமிதி, பச்சை குத்துறது, நாக்கில அலகு குத்துறது எதுவுமே இல்லை. at least தலைவிக்காக மண்சோறானும் சாப்பிட வேண்டாமா?

கைப்புள்ள said...

//தீமிதி, பச்சை குத்துறது, நாக்கில அலகு குத்துறது எதுவுமே இல்லை. at least தலைவிக்காக மண்சோறானும் சாப்பிட வேண்டாமா?//

இது வேறயா?
:((-