Tuesday, December 29, 2009

நற்குடி- தண்ணியோட கேட்டாத்தான் வரலாறு

தனியா போய் கேட்டா தகராறு, தண்ணியோட போய் கேட்டா அது வரலாறு- கஞ்சய் சாந்திஅது வேற வாயி, இது நாற வாயி - நாலு பையன்


ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் தெரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி - &^%&^%&*பிரச்சினையெல்லாம் வேணாம்னுதானே இருக்கோம், போய் கேட்டா பிரச்சினை ஆவும் - குசும்பன் ஸ்பெசல்Becareful, இது என்ன சொன்னேன், இங்கே ஒரு பய இருக்கக்கூடாது- டாஸ்மாக் பங்குதாரர்கள்

Wednesday, December 9, 2009

சங்கமம் - நடக்கப்போவது என்ன?

எங்கே ::

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி),-சஞ்சய்ய சார்ன்னு கூப்பிட்டதுக்காக வருத்தப்பட்டாரே. அந்த ஏஸிங்களா?

லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,(நிறைய அன்பளிப்பு கிடைக்கும்னு வால் எதிர்பார்க்கிறாரோ?)

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,(என்ன அடிவாங்கினாலும் வாலு கண்டிப்பா அங்கே எல்லாம் புகார் தரமாட்டாருங்க)எப்போது ::

மதியம் 15:30 முதல் குறைந்தது 19:00 வரை. (பலருக்கு ராகு காலமாச்சே)

எப்படி வருவது :: - துணிபோட்டுக்கொண்டு’னு யாருமே சொல்லல பார்த்தீங்களா?

இந்தப் பதிவர்ச் சங்கமத்தில் சில குறிக்கோள்கள் வைத்திருப்பதாகத் தெரிகின்றது.

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்- (ஹாய் ஹல்லோ ஹல்ல்லோ சொல்றது)
* நட்பை மேம்படுத்துதல்- (இது கடைசியா இல்லே வரனும், அப்போதான் பதிவர்கள் சரக்கு கொண்டு மேம்படுத்த முடியும்)
* எழுதுவது பற்றிய தயக்கத்தைத் தகர்த்தல் - (எழுதுவதை நிறுத்துனவங்களை எப்படி எழுத வெக்கறதுன்னு யோசிங்க மக்களே, அதுவே ஆயிரத்த தாண்டுது)
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு-( இந்த நேரத்துல, அவுட் ஆஃப்தி சிலபஸ்னு நிறைய பேரு ’புகை’ப்படம் எடுக்க போகாமல் இருக்க இறுக்கி கதவைச் சாத்திருங்க)

விடுபட்டவை : (புகைப்பட வித்தகர் நந்து அவர்கள் சுத்தி சுத்தி(சுத்திய இல்லீங்க) படம் எடுப்பார். படம் வரும் ஆனா வராது)

(தாகம்அதிகமிருப்பதால் எங்கே தாக சாந்தி நடைபெறும் என்று கடைசி வரை தெரிவிக்கவே இல்லே)

(நாமக்கல் சிபி எல்லாருக்கும் கோலி குண்டு எப்படி விளையாடுவது என்று Practical Class எடுப்பார்)

வேட்டைக்காரன் Countடர் Downசும்மா உலாவிட்டு இருக்கும் பார்த்த படம்..

Thursday, September 17, 2009

ஜனகராஜ் -Spl- Janagaraj Videos
பதிவுலகில் தங்கமணி உருவான காரணம் இதே இதே
Friday, September 11, 2009

Tamil Comedy Classics-1

தமிழ் சினிமா மறக்க முடியாத சில நகைச்சுவை துணுக்குகள்- இது ஒரு தொடர் போல
Friday, August 14, 2009

ஆரப்பாளையம் போலீசார் Vs டவுசர் பாண்டிகள்

In certain situations, there is a classical function and responsibility there that must not be avoided, even if it is just to appeal to good sense.
- Jacques Derridaதலித் கலை விழாக்கு மதுரை இறையிறல் கல்லூரிக்கு போய் கலந்துகிட்டு திரும்பும் போது நடந்த மேட்டரு இது.

" டேய் இருக்குறது வெறும் முன்னூரு ரூபாதாண்டா, அளவா குடிங்கடா" சுகுணா பொலம்பிக்கொண்டிருந்தான். உட்காந்து குடித்து கொண்டிருந்தது "கபடி கருப்பையா ஒயின்ஸ்" ஆரப்பாளையம் பஸ்ஸாடண்டுக்கு பக்கத்துல. நானும் ,கண்ணீர் புகை இருவரும் "டெரித்தா"வின் டவுசரை நார் நாராய் கிழித்துகொண்டிருந்தோம் , அவன் குரலை காதுல வாங்காம. பொறுமை தாங்காம எந்துரிச்சு நிக்கறது, பெருமுச்சு விடுறதுன்னு டிராஹன் எபெக்ட் கொடுத்தவனை பார்த்து எரிச்சலாகி கன்ணீர் புகை எழுந்து போலாம் வரவனை என்றார். சரி என்று கிளம்பி வெளியே வந்தோம். வைகை இங்க தானே ஓடுது, பக்கத்துல என்றார் க.பு. ஆமாம் அதோ தெரியுது பாருங்க என்றேன். அப்போது மழை பெய்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் போய் பார்க்க ஆசைப்பட்டார். சரி வாங்க போகலாம் என்று அருகில் போனோம். நான் வாய் சும்மா இருக்க மாட்டாம, " அங்க தெரியுது பாருங்க ஒரு குடிசை, அங்கதான் இஞ்சி விப்பாங்க " நம்ம அடிக்கிறதுலாம் என்ன சரக்கு அது ஒரு லார்ஜ் அடிச்சா ஆஃப் அடிச்ச மப்பிருக்கும்"( பொட்"டீ"க்கடை note the point) அப்படின்னு சொல்லிப்புட்டேன். அத புடிச்சுகிட்டாரு க.பு, சரி வாங்க போலாம் நானும் ஸ்கூல்ல படிக்கும்போது அடிச்சதுன்னு சொல்லி நடையகட்டுனோம். டேய் காசில்லடான்னு சுகுணா பொலம்பல ஆரம்பிக்க." ராசா அங்க உட்கார்ந்த்து குடிச்சாலும் ஆளுக்கு 30 ரூவாய்க்கு மேல் குடிக்க முடியாது' பேசாம வா ன்னு சொல்லி போய் உட்காந்தோம்.

மல்லிகா அக்கா கிழவியாகி போயிருந்துச்சு, அப்பலாம் பாத்தா அவ்வளவு அலம்பல கொடுக்கும், மாமூல் வாங்க வர போலீசு கூட உடுப்பில் வரக்கூடாதுன்னு கண்டிசன் போட்டுரூக்குன்னு கோசிப் சொல்லுவாய்ங்க. சிங்காரவேலன் படம் மிட்லேண்ட் தியேட்டரில் ரீலிஸ் ஆனப்ப இது கடைக்கு சாராயம் , இஞ்சி, குடிக்க வந்தவங்கலாம் லைன்ல நின்னுதான் வாங்கிட்டு போகனும் சொல்லிடிச்சு. அப்ப ரெண்டு லைன் நிக்கும் ஒன்னுபடம் பாக்க , ஒன்னு இஞ்சி குடிக்க. நான் இஞ்சி குடிக்க லைன்ல நின்னு வீட்டுல யாரோ போட்டு குடுத்துட்டாய்ங்க. வீட்டுக்குபோனா செம பரைடு , படம் பாக்க போனேன் வரிசை மாறி நின்னுட்டேன்னு சொல்லி தப்பிச்சது தனிக்கதை.

ஆளுக்கு ரெண்டு கிளாஸ் அடிச்சோம் , சரி போலாம் மணீ 11 என்றான் சுகுணா , என் டிரசும் அவன் டிரசும் மழையில் நனைந்து பார்த்தவுடன் சந்தேக கேசுல கூட்டிட்டு போய் உக்கார வைக்கிற மாதிரி இருந்தோம். க.பு குறுந்தாடி, சங்கிலியுடன் கூடிய கண்ணாடி ,இன்ஷர்ட், பார்மல் ஷு என்று "விஞ்ஞானி முருகன்" கெட்டப்பில் இருந்தார். பொறமையாக அவரை பார்த்தபடி பஸ்ஸடாண்ட் வந்தோம். கூட இருந்த இன்னொரு நண்பர் டைட்டாகி படுக்க இடம் தேடினார். அவரை தாங்கிபிடித்த படி பேருந்துக்குள் ஏறினால் நடத்துனர் ஏற்றவில்லை. அவரிடம் பயணிகளுக்கான உரிமைகள் குறித்து பொங்கியெழுந்து கொண்டிருந்தார் க.பு , அப்போது அங்கு வந்த ரோந்து போலிசாரிடம் புகார் சொன்னார் நடத்துனர். எங்களுக்கு லேசா டர்ரு கிளம்பிச்சு. போலிசுகாரய்ங்க எங்கள பாத்து இங்க வாங்கடான்னு கூப்பிட்டாய்ங்க. நானும் சுகுணாவும் பக்கத்துல போயி என்ன சார்னோம்.
அந்த நடத்துனர் வந்து இவைங்க நல்லவனங்க சார் ! அங்க நிக்கிறானே கண்னாடி அவந்தான் ரூல்ஸ் பேசுறான். ரூல்ஸ் பேசுனானா " எவேய்ன் அவேன் " என்று லத்தியை வாகாய் எடுத்து க.பு'வின் கு***யில் நாலு இழுப்பு வைத்தார். தன் பேண்ட்'ன் பின்புறத்தை தடவி விட்டவாறே உட்டாரு ஒரு டயலாக்கு, ஊருக்கு வந்து ஒரு வாரம் சிரிச்சோம் நானும் சுகுணா திவாகரும்.

" இப்ப நீங்க யாரை அடிச்சிங்க தெரியுமா' தமிழ்நாட்டோட மிகமுக்கியமான எழுத்தாளர" என்றபடியே நீவிக்கொண்டிருந்தார் பின்புறத்தை. அந்த போலீஸ்காரன் பாவம் பயந்து போயி ஸாரி சார் ! உங்களை பார்க்கறப்பவே நினைச்சேன், இவர பாத்துதான் தப்ப கணக்கு போட்டுடேன் என்றான் எங்களைப்பார்த்து. அதைக்கேட்டு க.பு மேலும் டென்சனானார். சார் வாங்க ஒ.பி(புறக்காவல் நிலையம்) ஸ்டேசன் போயி முகத்த கழுவிட்டு போலாம் என்றபடி அழைத்து போனார். அங்கு சென்று லெமன் ஜூஸ் அந்நேரத்துக்கு எங்கிருந்தோ வாங்கி வந்து குடிக்கச்சொல்லி உபசரித்துக்கொண்டிருந்த போது உள் நுழைந்தார் அக்காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர். எங்க நேரம் அன்னைக்கு சாயுங்காலந்தான் அந்த எஸ்.ஐ பொண்டாட்டியை எவனோ தண்ணியைப்போட்டு லந்த(கிண்டல்) கொடுத்துருக்கான். உள்ள வந்தவரு எங்கள ஒரு மாதிரியா பாத்துட்டு அந்த போலீச்காரன் பக்கம் திரும்பி என்ன கேசு, இது ? உக்கார வச்சு கொஞ்சிகிட்டு இருக்கேன்னு எரிச்சலா கேட்டான். அதுக்கு அந்த போலீசு' எழுத்தாளர்களாம் சார், அரசரடி மாநாட்டுக்கு வந்துருக்காங்க கொஞ்சம் ஓவராச்சு போல அதான் உங்காந்துட்டு போங்கய்யான்னு உக்காரா வச்சுருக்கேன் என்றான்.

யோவ் பஸ்ல ஏத்தி வெரட்டி விடுயா, சாயுங்காலத்துல இருந்து குடிச்சவுனங்களை கண்டாலே வெறி வருது என்றபடி , க.பு'வை அழைத்து எந்த ஊருயா நீ ! என்றார் . சென்னை என்றார், சுகுணாவும் சென்னை என்றே சொல்ல நான் எனது ஊரைச்சொன்னேன்.

சென்னைல எங்க ? என்றார் . நம்பர் 117 , பெருமாள்கோவில் தெரு, சூளை என்று கண்ணீர்புகை சொல்ல. சுகுணாவும் தனது முகவரியாக , நம்பர் 118 , பெருமாள்கோவில் தெரு , சூளை என்று சொல்லி அந்த எஸ்.ஐ யிடமும் க.பு'க்கு கு***யில் மேலும் இரண்டு வாங்கித்தர முயற்சித்தார்.

சரி என்னா பொஸ்தகம்யா எழுதிருக்கே என்றார்? உழைப்பை ஒழிப்போம் என்கிற புத்தகத்தை ஜெர்மன் லருந்து மொழி பெயர்த்திருக்கேன் சார் என்றார் க.பு'

புத்தக தலைப்பைகேட்டு பொறுமையிழந்த எஸ்.ஐ. சுகுணா திவாகரை நீ என்ன எழுதிருக்கே என்றார். நான் கவிஞன் சார் என்றார். அப்போ ஒரு கவிதை சொல்லியிட்டு போ என்றார்.

*பறக்க இயலா சிறகுகளின் ஓலத்தை
மேலும் கேட்டபடி தொடர்கிறது பயணம்
மாட்டுவண்டிகளின் தடம் நம் வாழ்க்கை
போல் காய்ந்த தரையில் இருக்காது
விழிகள் மூடு செவிகள் திற...

அவரு அவனையே பாத்துகிட்டு இருந்தாரு. புரிஞ்சுச்சா புரியலையான்னே தெரியல. சரி ஒழுங்க ஊரு போயி சேருங்க என்றபடி அனுப்பி வைத்தார்.

என்ன ரொம்ப போரடிச்சிட்டேனா, இனிமேதான் இருக்கு நம்ம "பஞ்ச்"

நாங்க போயி அடுத்த பஸுக்கு காத்துகிட்டு இருந்தோமா, அப்போ ஒரு நாலு பேரு கடலைவண்டி காரனுடன் போதையில் வம்பிழுத்துக்கொண்டிருந்தனர். நம்ம எஸ்.ஐ அங்க வந்தவர் அவனுங்களை கூப்பிடு விசாரித்து கொண்டிருந்தார். எதோ ஓவியர் மாநாடுக்கு கோவில்பட்டி போயிட்டு ரிட்டர்ன் ஆயிருக்கானுங்க போல


எஸ்.ஐ நம்மள பாத்து சிரித்துக்கொண்டே என்னய்ய இன்னைக்கு பூராம் கலைஞர்களா வந்து நம்ம தாலிய அறுக்குறிங்க என்றபடி அவனுங்களை அழைத்து எச்சரித்து ஒழுங்காய் ஊர் போய் சேரும் படி சொல்லிவிட்டு அவனுங்களை ஒருத்தன கூப்பிட்டு ஓவியம் வரைஞ்சுகாமிச்சுட்டு போ என்று உத்தரவிட்டார்.

நான் சிகரட் வாங்க போயிட்டு வந்து பாக்கறேன் , அவன போட்டு வெளுத்துகிட்டு இருக்காரு. 'ஏது அம்மன படம் வரஞ்சிட்டான் போலன்னு பக்கத்துல போனா, " யாருகிட்டடா பொய் சொல்ற பிராடுகாரா என்றபடி திரும்பவும் அடிக்கிறாரு. அப்படி என்னாதான் வரஞ்சானு பாத்தா

பாவம்யா அவனுங்க நவீன ஓவியர்கள். அவனுக்கு தெரிஞ்சத வரைஞ்சுருக்கான். அதுக்கு இந்த எஸ்.ஐ அவனிடம் "ஏண்டா சாயத்தை பூராம் கரச்சு ஊத்திட்டு ஓவியம்னா சொல்றன்னு அடி பின்னிருக்காரு.

-வரவனையான்

Friday, August 7, 2009

டவுசர்பாண்டிகளின் " அந்த" - பாகம் 2


டிரை சைக்கிள்காரன் நம்ம டவுசர்பாண்டியின் முப்பாட்டியின் அம்மாவின் கற்பையெல்லாம் கேள்விக்குள்ளாக்கி கொண்டிருந்தான். ஒரு வழியா அவன தாக்காட்டி மண்டபத்துக்கு போனோம். கருத்தரங்கம் நடத்துன டிரஸ்ட்காராரு தெரிஞ்சவன் சொந்தகாரய்ங்க, எதுத்தவீட்டுகாரய்ங்கனு அல்லாத்தையும் அள்ளி போட்டு வந்திருந்தாரு.

கருத்தரங்கம் துவங்கி பேசின மென்டல் டாக்டர் ஒருத்தர், இத எழுதறவைங்க எல்லாம் லூசுப்பயலுகங்கற மாறியே பேசி முடிச்சாரு. நம்மாளு கையை ஓங்கி முன்னாடி இருக்குறவேய்ங் சேருல குத்தி அந்த டாக்டர கொலைவெறியா பாத்துகிட்டே "வாடா தம் போட்டுட்டு வரலாம்ன்னு சொல்லி கிளம்ப நானும் பின்னடியே போனேன். நம்மாளு டென்சனாகிட்டா மட்டும் தான் தம் அடிக்க போயிடுவாரு. ஒரு நாளைக்கு இருவது தடவ டென்சனாவாரு. கக்குசு வரலைனா, அவங்கப்ப பாக்கெட்ல காசு ஆட்டைய போட கையவிட்டு அங்க காசில்லைனா, காது கொடைய எதுத்த கடை நாடாரு கடனுக்கு இயர் பட்ஸ் தரலைனா இப்படி அவரு டென்சனாக நிறைய காரணம் இருக்கும். இப்ப இந்த மென்டல் டாக்டரு காரணமாகிட்டாரு.

இவரு சாணிப்பேப்பரு ஒரு கட்டை கைல வச்சுகிட்டு என்னமோ The Brief History of Timeமை உலகத்துக்கு வாசிச்சு காட்டபோற மாதிரி தம்மடிக்கவும் , உள்ள வந்து உக்காரவும்னு பயங்கர படம் போட்டுட்டு இருந்தாரு. நான் அப்பன்னு பாத்து "ஆம்பளை கக்குசுலாதன் இப்படி எழுதி வைப்பானுகளா இல்ல பொம்பளைகளூம் எழுதுவாகலான்னு அசமம் தெரியாம கேட்டுவைக்க, டவுசரு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. கொஞ்ச நேரம் கழிச்சு நாயகன் கமல் மாதிரி "தெரியலைப்பா"ன்னு உணர்ச்சிவசப்பட இவர கட்டுரை வாசிக்க கூப்பிட்டானுங்க. சரி "சனியன் சடைபோட்டு பூ வச்சு போகுதுன்னு" நிம்மதியா டீ குடிக்க போயிட்டு 10 நிமிசம் கழிச்சு வந்து பாத்தா அப்பவும் பேச ஆரம்பிக்காம மைக்க சரி பண்ணிட்டு இருந்தவரு ஒரு செருமல் செருமி வாசிக்க துவங்கினார்,

" முதலில் கழிவறை எழுத்துகளென்பதை கழிவறை இலக்கியம் என்று உலகம் ஏற்றுக்கொண்டது. ஆகவே அதை ஒரு இலக்கியமாக பார்க்கவேண்டும். நாம் கிழக்கில் உறைந்து போயுள்ளோம். மேற்கின் அறிவே நமது திறவுகோல், அதைப்பற்றி பார்த்துவிட்டு கழிவறைக்குப்போவோம். ( இதுக்கே கடைசி ஒரு வரிசை காலி) தோழர்களே ! இலக்கியம் - தத்துவம் அல்லது தத்துவார்த்த இலக்கியம் அல்லது இலக்கியபூர்வமான தத்துவம் இப்படித்தான் அவைகளை பார்க்கவேண்டும். அதற்கு முன் ஹெய்டேக்கரை நீங்கள் படிக்கவேண்டும். ஹெய்டேக்கரை படிக்கவேண்டுமானால் அதற்கு முன் ஹெகலிடம் இருந்து துவங்கவேண்டும். ( இன்னைக்கு இவன் பேச்ச கேட்டா எப்படியும் ஒரு 5 பேரு மென்டாலாகிடுவானுக - நமக்கு பேஷன்டுக்கு பேஷென்டாச்சுன்னு ' மென்டல் டாக்டர் சந்தோஷமான மாதிரி தெரிஞ்சுது என் கண்ணுக்கு )

அந்த என்.ஜி.ஓ க்காரரு பின்னாடி வந்து சட்டைய புடுச்சு இழுத்தாரு என்னை, சொல்லுங்க அங்கிள், ( புது ஸ்கூட்டி ஓட்டித்திரியும் வினோதா அவரு மகள் என்று தெரிந்த பின் அவரை அண்ணேன்னா கூப்பிட முடியும் ) இங்க பாருப்பா, டிரஸ்ட் ஆரம்பிச்சவுடனே ஒரு ரத்ததான முகாம், அப்புறம் ஒரு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் , அதுக்கு பிறகு ஒரு கருத்தரங்கம் நடத்துனாத்தான் பண்டு அலாட் பண்ணுவேய்ன்னு கலக்டரு சொல்லிட்டாரு அந்த கருமத்துகாகத்தான் இந்த எழவெல்லாம் நடத்துறேன். தெரிஞ்ச பயலாச்சேன்னு கூப்பிட்டா இப்படியா கொல்லுறதுன்னு கண்ணீர் மல்க டவுசர்பாண்டி மேல புகார் வாசிச்சார். "ஒன்னும் பிரச்சினையில்ல நான் கொடுக்கிற துண்டு சீட்ட அவருட்ட கொடுங்க டக்க்ன்னு முடிச்சிட்டு வந்திடுவாருன்னு" சொல்லி ஒரு சீட்ல " ஜானி ஒயின்ஸ் மாடி , ஓல்டு டிராவன் ஃபுல் ரெண்டே பேர்"ன்னு எழுதி கொடுத்துவிட்டேன்.

அதுவரைக்கும் அவரு படிச்ச எல்லா கழிவறை எழுத்துகளுக்கு பூராம் தத்துவார்த்த விளக்கம் கொடுத்து அரங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி கொண்டிருந்தார் டவுசரு.

"இதோ சமீபத்தில் திருச்சியில் ஒரு இலவச கழிவறையில் பார்த்த பாலியல் கலப்பில்லாத வாசகம் " எரிக்காத சக்தியும் ' செரிக்காத உணவும் சுடுகாட்டு தேரின் சக்கரங்கள்" இத எதுக்கு எழுதிருக்கான் அவனுக்கு அஜிரனம், கூடவே மலச்சிக்கல் சோ தன் துயரை அங்கு வெளிக்காட்டியுள்ளான். இதைத்தாண்டி "இன்செஸ்ட்" என்கிற வகையில் உள்ள எழுத்தகளை பற்றியும் கண்டிப்பாக இங்கு சொல்லவேண்டும் என்று ஆரம்பிக்க .அய்யயோ இவன் கூட வந்த கொடுமைக்கு நம்மளையும்ல அடி வாஙவைப்பான் போலருக்குன்னு மேடைக்கு சீட்ட கொடுக்க அதை இடக்கையால் "இசுடைலாக" ( சுத்த தமிழாம், ஸ் வடமொழியென்பதால் ஸ்டைல் , இசுடைலாக மருவிகிறது ) வாங்கியவரின் முழி நட்டுகிட்டது. அடுத்த வார்த்தையே "ஆகவே கழிவறை எழுத்தக்கள் நம் சமுகத்தை பிரதிபலிக்கிற கண்ணாடி என்று சொல்லி முடிக்கிறேன் என்றார். பேசி முடித்தபின் டிரஸ்டுக்கார அங்கிள் வந்து ஒரு 500ரூவாய் நோட்ட இவரு பாக்கட்டுல சொருவி விட்டாரு "வேணாங்க வேணாங்க ந்னு சொல்லிட்டே எடுத்து உள்பாக்கட்டுல வச்சுகிட்டாரு. நான் எஸ்கேப்பு.

மறு நாள் காலையில பாஸ்கர் இட்லிக்கடைல டவுசர பாத்து ஒரு 50 குடுங்க தோழர் ரெண்டு நாளையில தாரேன்னு நான் கடன் கேக்க "காசு இருந்தா ஒரு வில்ஸ் வாங்கி பத்தவச்சு அடிச்சிட்டு பாதி கொடுன்னாரு" சரி ரவுண்டா 500 வச்சுருக்காரு 1.75 ( அப்போதைய விலை ) வில்ஸுக்கு போயி அத முறிக்க சங்கட படுறாறோன்னு தம்மை வாங்கி கொடுத்தேன்.

நேத்து கோரிப்பாளையம் கலா லாட்ஜுக்கு போனேன்னு சொன்னாரு. எனக்கு கொஞ்சம் எரொடிக் கதை கேக்கபோறோம்ன்னு உள்ளுக்குள்ள தோணவே ஹார்வி நகர் மொத தெருவுக்கு கூட்டிட்டு போயி யாருமில்ல இங்க , இப்ப சொல்லுங்கன்னு கேட்டேன்.

அவரும் அவரு கூட ஒரு வீணாப்போன கவிஞரும் கலா லாட்ஜுகு போயிருக்கானுங்க. கலா லாட்ஜு "அந்த" மாதிரி லாட்ஜு. டவுசருக்கும் அவர் நண்பருக்கும் பெண்வாசணை என்பது 7அ பஸுல காலேஜுக்கு போகும் பட்டதுதான் அதுக்குபிறகு வெறும் "வறட்டிழுப்பு"தான். கையில 500ரூவாய் இருக்கவும் பல பத்தாண்டுகளின் பேராவலை போக்க போயிருக்கிறார்கள். அங்க போனதும் தலைக்கு 200 வாங்கிட்டானுக, அப்புறம் "உள்ளபோகும் " போது 50 ரூவாய் டிப்சு கொடுங்க இல்ல கம்பெனி கிடைக்காதுன்னு "புத்தி" சொல்லி அனுப்பிருக்கானுங்க. மொதல்ல கவிஞரு போயிருக்காரு, அடுத்து டவுசர் உள்ளே போயிருக்காரு. கால் லேசாக நடுங்குகிறது. முதன் முதலில் ஒரு பெண்ணுடன் தனியே என்று இவரின் நடுக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. விட்டால் தன் கால்சட்டையிலேயே ஒன்னுக்கு அடிக்கிற கண்டிசன்ல இவரு அந்த பெண் பாலியல் தொழிலாளியிடம் கேட்டிருக்கிறார் " டென்சனாய் இருக்கு ஒரு தம் அடிச்சிக்கவான்னு" அதுக்கு அந்த பெண் சொல்லியிருக்கா "ஏன்ய்யா நாங்க என்ன டீக்கடையா வச்சிருக்கோம்' இப்பத்தான் உனக்கு முன்னாடி வந்தவன் தம்மடிச்சிட்டு போன்னான்னு"

அன்னைல இருந்து தோழர் என்னை தம்மடிக்க கூப்பிடுறதே இல்லை

Thursday, August 6, 2009

டவுசர் பாண்டிகளின் கதை பாகம் 1" கழிவறை எழுத்துக்கள் தவிர்க்கலாமா ? இல்லை, தலையெழுத்தா? " என்கிற தலைப்பில் ஞானஒளிபுரம் ( சின்னப்பிள்ளையில் ஒகாராத்தை ஓகாரமாய் சொல்லியும் சிறப்பு "ழ"கரம் போட்டும் முதுகில் அடிக்கடி வாங்கிக்கட்டிக்கொள்வேன் ) சமூகபணி மன்றத்தில் ஒரு வீணாய்ப்போன NGO கருத்தரங்கம் நடத்திக்கொண்டிருந்தது. நம்ம டவுசர்பாண்டிக்கும் கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு. சோலமலை தியேட்டரில் மட்ட மத்தியானம் வேகாத வெயிலில் எஸ்.ஜே. சூர்யாவின் "நியு"("ட்" சைலன்ஸ் போல ) எங்கிற புளுபிலிம் பார்க்க வரிசையில் நின்னுகிட்டு இருந்தவனை கூப்பிட, ஏஸ் வென்சுரா'வில் நெருப்புக்கோழியில் வந்திறங்கும் ஜிம் கேரி போல் ஒரு 350 CC யமகாவை கியர் மாத்துகிறேன் பேர்வழியென்று வதை செய்தவாரே வந்தான் "டேஞ்சர்" கிருட்டிணன். இவனும் ஒரு டவுசருபாண்டிதான், வயசு 40யை தொடப்போதுன்னு பேசிகிறாய்ங்க. கேட்டா "இளமையாய் சிந்திக்கும் இடத்தில் உறைந்து போனது வயது"ன்னு எதையாவது புரியாத மாறி சொல்லி கிறுக்குசுத்தி விட்டுடுவான். என்னய்யா கிருஷ்ணா ! படத்துக்கா இவ்வளவு மேக்கப்பு போட்டு வந்திருக்க.

சரி வண்டியை ஸ்டாண்டுல விட்டுட்டு வா'ன்னு சொன்னேன்.

ஸ்ஸ்ஸ்... பேர மாத்தாதட என் பேரு கிருட்டிணன்'ன்னான்.

அட தமிழ்க்கிறுக்கா, அப்படின்னா உன் பேர கண்ணன்னு மாத்திக்க வேண்டியதுதானே . கிருட்டினன் உருட்டினன் மிரட்டினன் அப்படின்னு இருக்கவனுக்கு நாக்க சுளுக்கு விழ வைக்கிறிங்கடா'ன்னு டென்சன் ஆனேன். இந்த படம் பார்த்துதான் ஆகனுமான்னு கேட்டான், ஆமாம்டா "சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை - சிம்ரனுக்கு மிஞ்சிய பிகருமில்லை" மிஸ் பண்ண முடியுமா அப்படின்னு சொன்னேன்.டேய் நான் கட்டுரை வாசிக்கபோறேன் வாடா'ன்னான்.எங்கடான்னு கேட்டா எங்க தெருவுக்கு எதித்தாப்ல இருக்கிற மண்டபம். வேணாம்ட அரியர் எக்ஸாம் பீஸ் கட்ட போறேன்னு சொல்லிட்டுதான் வந்திருக்கேன். என் ஜென்ம விரோதி எங்க அண்ணன் பார்த்தா நான் அவ்வளவுதான்.

வீட்ல தோடு ( பெந்தே கோஸ்தே) இல்லாதவைங்க கூட்டத்துல போய் உக்காந்துருக்கான்னு போட்டு கொடுத்திருவான், நான் வரலை தோழர்ன்னு சொன்னேன். இல்லட பின்னாடி வழியா ஏறிக்குதிச்சி போலாம்டான்னு சொல்ல தலையெழுத்தேன்னு கூட வண்டில ஏறி உக்காந்தேன். ஸ்டார்ட் பண்ணிட்டு கேட்டான். இந்த வண்டிக்கு விசை( கியராம்) எப்படி போடுறதுன்னு. இந்த வண்டி யாருது தோழர்ன்னு கேட்டேன்.

நம்ம ரெட்டை மண்டை அப்பா இருக்காரலுல அவருதுதான்னான். "ரெட்டை மண்டை" செல்வி டவுசர்பாண்டியின் தங்கை முறை. இவருக்கும் அந்த பேரு வச்சு கூப்பிடுறது தெரியாது என்று நினைதிருந்தேன் . பரவாயில்ல தோழர் நெருங்கிட்டார்ன்னு நினைச்சு. தோழர் அவங்க அப்பாதான் இறந்திட்டாருல்ல அதுமில்லாம அவங்கப்பன் சாகுகிறவரைக்கும் டயர உருட்டிகூட பார்த்ததில்லையே அப்புறம் எப்படி 350 CC யமகா வந்ததுன்னு கேட்டேன்.
நீ யார சொல்லுற' நான் சொன்னது ரெட்டை மண்டை ஃபாதரைத்தான் தமிழில் ரெட்டை மண்டை அப்பான்னு சொன்னேன்னான்.
அட ஒந்தமிழ்ல தீயை வாரிக்கொட்டன்னு நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நேரா போய் ஒரு டிரை சைக்கிள்காரனை தூக்கிட்டாரு.
( நாளை முடிக்கிறேன்)முல, கப சுட்டி : http://kuttapusky.blogspot.com/2007/04/blog-post_27.html

Wednesday, August 5, 2009

கோழித்திருடன் Updated

புதிய வாசகர்களும் ரசிக்க, என்னுடைய பழைய சிறுகதையொன்று மீள்பதிவாக !!!

தங்கத்தமிழகத்து திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...அதான் இந்த குறிஞ்சி கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த, அதாங்க, சாப்புடாம உண்ணாவிரதம் இருந்து செத்துப்போன கபிலர் குன்று இருக்குதே, அந்த ஊரு...

மூவேந்தர் முற்றுகை படையெடுப்புல செத்துப்போன கடையெழு வள்ளள்கள்ள ஒருத்தர் பாரி, அவரோட மகளுங்க அங்கவை, சங்கவைய திருக்கோவிலூர் ராஜா திருமுடிக் காரிக்கு கட்டிகொடுத்துட்டு, நன்பனுக்கு செய்துகொடுத்த கடமை முடிஞ்சுதுன்னு அந்தமாதிரி செத்துப்போனாராம் கபிலர்..இந்த காரியும் கடையெழு வள்ளல் தானே, ஏழாவது வகுப்புல படிச்ச நியாபகம் இருக்குதுங்களா ?

அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர் மினிபஸ்ஸில் போனா நெடுங்கம்பட்டு என்ற கிராமம் வருமுங்க...அந்த காலத்துல திருக்கோவிலூரு ராஜா புலவருங்களை ஊருகளுக்கு பேரு வெக்கச்சொல்லி அனுப்புவாங்களாம்...நெடு நெடுன்னு நடந்து வந்ததால இந்த ஊரு நெடுங்கம்பட்டு, ஆடு மேஞ்சு கொழுந்து இல்லாத செடிங்களை பார்த்த ஊரு கொழுந்திராம்பட்டு, சடையை கட்டிக்கிட்டு ஒரு பொண்ணு நடந்து போன ஊரு சடகட்டி, அத்திமரம் இருந்ததால அத்திப்பாக்கம், ஆத்தோரம் மணல் அள்ளிக்கிட்டு மக்கள் இருந்த எடம் மணலூர்பேட்டை, அப்படீன்னு புலவருங்க பேரு வச்சாங்க அந்த காலத்துல...

இந்த கதை அதை பத்தி இல்லைங்க...ஒரு சம்பவத்தை பத்தி..இந்த சம்பவம் நடந்து ஒரு 8 வருடம் இருக்கும்...

எங்க தாத்தா போய் சேர்ந்த பிறது - நெடுங்கம்பட்டு கிராமத்தில எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...நிலத்தை பார்க்கனும் இல்லையா...

நாம அப்பப்போ விசிட் அடிக்கிறது...காரணம் இரண்டு - ஒன்று - சுருட்டு மிலிட்டரி தாத்தாவோட சீட்டாட்டம்...

பத்து ரூவாயை வைத்து - கிழவனார் ஏமாந்தா - சுத்தி போதையில் ஆடுறவனுங்க கண்ணுலே மண்ணை தூவி - 50 ரூபாயை ஜெயிச்சிடலாம்...எல்லாம் திருட்டு ஆட்டம்தான்...கார்டுகளை ஒளித்து - மறைத்து - எப்படியாவது ஜெயிக்கிறது...

மற்ற காரணம் - நல்ல வெடக்கோழிகளை பங்காளிங்க உதவியோட அமுக்கி - காட்டுல கொண்டுபோய் வறுத்து திங்கறது.

இந்தமாதிரி தான் ஒருநாள்...கிளம்பி போறேன் கிராமத்துக்கு...

கிழவி வீட்டுலே பையை போட்டுட்டு - பத்துரூவாயை பாக்கெட்டுல சொருவிக்கிட்டு சுருட்டு கிழவனார் வீட்டுப்பக்கம் போறேன்.

தெரு முக்குல - என்னோட கண்ணு நெலை குத்துது.ஆகா.!!!நல்ல எளஞ் செவப்பு கலர்ல - நல்ல வெடச்சாவல் ஒன்னு மேயுது.

அட இன்னாடா இது...போனவாரம் கண்ணுல படல..சந்தையில எவனோ புதுசா வாங்கிட்டு வந்திருக்காண்டோய்.

ஆவறதில்லையே இது...என்று சீட்டாட்ட கிளப்புக்குள் ( நம்ம கிழவனார் வீடுதான்) நுழைகிறேன்.

ஆட்டத்துல மனசே போவல...எப்படி அந்த கோழியை பிடிச்சு மொக்கறது (திங்கறது) என்பதுலேயே சுத்துதுடோய்.

ஆச்சு...சுருட்டை இழுத்துக்கிட்டே கிழவனார் - ரம்மி ஆட்டத்துல என்னை ரெண்டு புல்லு தூக்கினார். பிறவு கடைசியா ஒரு ஸ்கூட் அடிச்சார். பத்துரூவா போச்சு.

கிழவணார் கிட்ட திருடுன ஒரு அரை சுருட்டை பத்தவச்சிக்கிட்டே - யோசனையா வரேன்.

நம்ம பங்காளி கோபு - திருக்கோவிலூர்ல இருக்கான்.

ஒம்போது மணி மினி பஸ் டிரைவர் அண்ணாச்சிக்கிட்ட தகவல் சொல்லிவிடுறேன்.

போன் எல்லாம் ஏது எங்கூருல..அதுலயும் கோடு வேர்டு தான்.

அண்ணாச்சி.நாளைக்கு முனியப்பசாமிக்கு படையல் போடனும்.என் பங்காளி கோபு இல்லைன்னா கோபி - பஸ்டாண்டுல திரியுவானுங்க.கொஞ்சம் சொல்லிவிட்டுடுங்க..காலையில வெரசா வந்துடச்சொல்லுங்கப்பு.

என்றேன்.

கிழவி வீட்டுக்கு போய் - அது வைத்திருந்த காரக்குழம்பை ஒரு வெட்டு வெட்டிட்டு - அந்தி சாயும் நேரத்தில் குடிசை வீட்டு முற்றத்தில் கட்டையை சாய்த்தேன்..

டேய்.டேய்.ஏந்திருடா என்று கோபுவும் ( இப்போது ஊரில் விவசாயம் பார்க்கிறார்)- கோபியும் ( இப்போது இவர் போலிசாக இருக்கிறார்) எழுப்பினாங்க..

காலையில் ஏழு மணிக்கு முதல் பஸ்ஸை பிடித்து வந்துட்டானுங்க...

டேய்..எந்திரிடா..பொட்டையா இல்ல சாவலா, உடம்பு எத்தனை கிலோ தேறும், தொடை நல்லா இருக்கா ?

என்னம்மோ உலக அழகி போட்டியில கலந்துக்கப்போற கோழி மாதிரி ஆர்வமா விசாரிக்கானுங்க.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....கிழவி இன்னும் கொல்லிக்கு போவல...கொஞ்சம் இருங்க டோய்.என்றேன்..

கிழவி கிளம்பியது.

தூம்பாவுல இருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறேன்...காலையில் பல்லு விளக்கவில்லை.

அவ் அவ் அவ் அவ் என்று அரிசியை மெல்லாமல் குதப்புகிறேன்.

மெல்ல கிளம்பி போகிறோம் மூன்று பேரும்.

கோபி - பொட்டிக்கடைக்கு போயி எண்ணையை ஒரு கவரில் கட்டிக்கோ - மொளகாத்தூள் ஒரு கவரில் வாங்கிக்கோ - அப்படியே காட்டு கொல்லிக்கு வந்திடு...நம்ம இடத்துக்கு...என்றேன்.

உப்பு - மஞ்ச தூள் ??? என்றான் கோபி.

அது ஏற்க்கனவே பாலித்தீன் கவரில சுத்தி வைச்சிருக்கோம்.என்றான் கோபு.

டேய் கோழியக்காட்டுங்கடா...கோபு அவசரப்படுறான்.

இரு ராசா.கொஞ்சம் பொறு.இது நான்.

ஆங்...அதோ மேயுறான் பாரு.

சிவப்பு நிறத்தில் கும்முனு இருக்கு சாவல்.

அப்படியே வாயில் குதப்பிக்கிட்டிருந்த அரிசியை துப்புறேன்.கோழிக்கு வெகு அருகில்..

பொ..பொ...பொ...பா.

அரிசி கிட்ட வருது சாவல்.

லபக்..லபக் னு பொறுக்குது.

அஞ்சே நிமிஷம்..நாங்க அப்படியே பெறாக்கு பாத்துக்கிட்டு நிக்குறோம். ஏதோ எங்களுக்கும் இந்த கோழிக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி..

கோழி இப்ப லைட்டா தள்ளாடுது...பல்லு விளக்காத வாயில் புழுங்கல் அரிசியை போட்டு கொஞ்சம் குதப்பி, வாயிலேயே அந்த அரிசியை வைத்திருந்து அதை கோழி தின்றால், கோழிக்கு மயக்கம் வந்து விழுந்துவிடும். என்ன ஆசிட் இருக்கோ அதில் ? கோழிக்கு அதுதான் சயனைடு..

டேய் கோபு...தெருவுல யாரும் இல்லை..கோழிய அமுக்குடா..என்றேன்.

கையோடு கொண்டுபோயிருந்த சிமெண்ட் சாக்கில் அய்ட்டத்தை - கொஞ்சம் கழுத்தை திருகி - உள்ளே அனுப்புறோம்.

அப்புறம் - பரபரன்னு எங்க ரெகுலர் இடத்தில் சந்திப்பு...அந்தோனியார் காட்டுக்கோயில் அருகே.

எங்க ஆப்பரேஷன்களுக்காக தயாராக - ஒரு புதரில் ஒளியவைத்திருக்கும் - வாணல் - கரண்டி வெளியே வருகிறது...உப்பு, மஞ்சள் தூள், எண்ணை ஆகிய துணைவர்களும் தயாராகிறார்கள்.

காட்டில் திரிந்து, கொஞ்சம் நன்றாக காய்ந்த சுள்ளிகளை கொண்டுவருகிறான் - கோபி.

கோழியை உரித்து - மஞ்சள் தடவி லைட்டாக தீயில் காட்டி - பிறகு பீஸ் போட்டு - மிளகாய்தூள் - உப்பு போட்டு - எண்ணை சட்டியை வத்து - வேலை ஜரூராக நடக்குது.

இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கட்டையை எடுக்கிறான் கோபு....ஏற்க்கனவே குடித்து மீதி வைத்திருந்த வாத்தை - புதரில் இருந்து எடுத்து வருகிறான் - கோபி.

(கட்டை : விஸ்கி குவார்ட்டர் - காரணம் குள்ளமா இருக்கில்ல... வாத்து - புல் பாட்டில் சரக்கு - காரணம், ஓப்பன் செய்யும்போது - வாத்து கழுத்தை திருகுவது மாதிரி திருகனும் இல்லையா, இது சகாய விலைக்கு மிலிட்டரி மாமாவிடம் வாங்கிய ரம்.)

வேலை முடிஞ்சது...ஏப்ப்ப்.

பெருத்த ஏப்பம் ஒன்றை விட்டுவிட்டு, பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்து, கிணற்று தண்ணீர் ஒரு சொம்பு குடித்துவிட்டு, கட்டையை மீண்டும் சாய்க்கிறேன்...ஜில்லென வேப்ப மரத்து காத்து சலசலக்க, அரை மயக்க போதையில் எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது...

சாயங்காலம் - கிழவி லபோதிபோ என்று அலறும் சத்தம் கேட்டு எழுந்துகொள்கிறோம்.

பாடையில போவ...கட்டையில போவ என்று சென்சார் செய்யாத வார்த்தைகளை அள்ளி தெளித்துக்கொண்டிருக்குது எங்க ஆயா.

மண்ணை வாரி விட்டு சாபம் கொடுத்துக்கிட்டுருக்கு.

ஓ..ஆயா...நிறுத்து...இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி கூவுற...என்றேன் சிவந்த கண்களுடன்.

கம்முனாட்டி..எடுபட்ட பய..படுபாவி - சாண்டாக்குடிச்சவன் - கட்டையில போவ என்று மீண்டும் ஆரம்பிக்குது.

தே, என்னா ஆச்சு மொதல்ல சொல்லு அத்த.என்றேன்.

போனவாரம் சந்தையில ஒரு கோழி வாங்கி வச்சிருந்தேன் டா..பாவிப்பய எவனோ அத்தை திருடி தின்னுப்புட்டான்...எடுபட்ட பய...கட்டிய திண்ணவன்., முனீஸ்வரனுக்கு படையல் போட்டு அவன் கையு காலு வெளங்காம பண்ணனும்.

ஆடு மேய்க்கிற பசங்க - செவப்பு சாவல் ரெக்கை காட்டு கோயில் பக்கம் கிடக்குன்னு சொல்லுறானுங்க.

பாடையில போவ..கட்டையில போவ..என்று மீண்டும் ஆரம்பிக்குது.

அடக்கொடுமையே, நம்ம வீட்டு சேவலை நாமே மாஸ்டர் ப்ளான் போட்டு திருடி தின்னுருக்கோம்.

சரி சரி சாவனை விடாத ஆயா.

எந்த நெலமையில நம்ம வீட்டு சேவல்னு தெரியாம திருடி திருடினானுங்களோ.என்றேன்.

Tuesday, August 4, 2009

அண்ணா நகர் ரவுண்டானாவும் நைக்கி ஷூவும்


ஹல்லோ..ஏ.எஸ்.எல் ப்ளீஸ்..

நாகா, என்னாது அது ஏ.எஸ்.எல் அப்படீன்னா ?

நாகா என்னுடைய அலுவலக நன்பர். கண்ட மொக்கை படங்களையும் 2002ல் இருந்து 2004 வரை என்னுடன் இணைந்து பார்த்தவர்..முந்தின நாள் இயற்கை என்ற ஷாம் நடித்த மொக்கை படம். க்ளைமாக்ஸ் மட்டும் மாற்றியிருந்தால் ஷாம் தமிழின் முன்னனி ஹீரோவாக மாறியிருந்திருக்கக்கூடும். லீவ் தட் அஸைட். கணிப்பொறியும் சாட்டும் அப்போதுதான் எனக்கு அறிமுகமான காலகட்டம். காரணம், அலுவலகத்தில் கிடைத்த இலவச இண்டர்நெட்.

கல்லூரி காலத்தில் ஒருமுறை மணிக்கு 100 ரூபாய் கொடுத்து யாகூ டாட் காமில் மின்னஞ்சல் முகவரி உருவாக்க முயன்று தோற்றபின், இணையத்தை காசு கொடுத்து எந்த ப்ரவுசிங் செண்டரிலும் பார்ப்பதில்லை என்ற கொள்கை முடிவால், அலுவலகத்தில் நிரந்தர வேலை கிடைத்தபின், வேலை நேரம் முடிந்து ஓஞ்ச வாழப்பழம் கிடைக்கும் மொக்கையான மத்தியான நேரங்களில் இண்டநெட்டும் சேட்டும்.டேய். ஏ எஸ் எல் அப்படீன்னா, ஏஜ், செக்ஸ், லொக்கேஷன்.

ஐ..செக்ஸா ?

முண்டம். செக்ஸ்னா ஜெண்டர். ஆம்பளையா, பொம்பளையான்னு கேக்குறது.

சரி. இந்த சாட்டிங் ரூம்ல எப்படி போறதுன்னு கொஞ்சம் சொல்லிக்குடு மாமா...

உன்னோட யாகூ ஐடியை வெச்சு உள்ளாற போகனும்டா. அப்புறம் சாட் ரூம் அப்படீங்கறதை க்ளிக் பண்ணினா, சென்னை ரூம், மும்பை ரூம், இண்டியா ரூம் அப்படீங்கறமாதிரி வரும்.

அதில் ஒன்னை க்ளிக் பண்ணிட்டேன்னு வை. உன்னுடைய ஐடி ரூம் உள்ளாற எண்டர் ஆகிரும். அதுக்கு அப்புறம் நீ பேசுறது எல்லாருக்கும் தெரியும்.

அப்படியே ஓரத்துல பார்த்தியா. பேரு எல்லாம் வருது. அதுல ஒரு நல்ல பிகர் பேரா எடுத்து, சேட்டிங் பண்ணவேண்டியது தான்...

மாமா, உன்னோட மூஞ்சி அதுல தெரியுமா ?

நாகா, மேட்டுக்குடி கவுண்டர் ரொமாண்டிக் லுக்கோட என்னைய பாக்குறார்.

இல்லைடா. போட்டோ போட்டாதான் தெரியும்.

அதான், உன்னோட மூஞ்சிய மட்டும் பாத்தாளுங்க, கம்ப்யூட்டர ஷட்டவுன் இல்ல பண்ணிட்டு ஓடுவாளுங்க.

கு.ரங்கா. ஒழுங்கா பாருடா...எப்படி பிகரை மடக்கி காட்டுறேன்...

அதில் ஓரத்தில் இருந்த gayathiri2000 என்ற ஐடியை ஒரு க்ளிக் செய்கிறார் நாகா.

Naga -> hello. asl please.

gayathiri2000 -> 'male here'

என்று உடனே பதில் வருகிறது...

மாமா. ஹி ஹி. ஆம்பளையாம்ல. இருந்தாலும் பரவால்ல, பேசு மாமா.

டேய். என்ன என்னா 'அவன்' னு நினைச்சியா ? பிகரை மட்டும்தான் மடிப்பான் இந்த மகாதேவன். ஆம்பிளைன்னா பேசக்கூட மாட்டேன். அவனும் பேசமாட்டாண்டா..எதிர்முனையில் ஒரு மொக்கை ஸ்மைலி வந்தவுடன் அந்த விண்டோவையே க்ளோஸ் செய்கிறார் நாகா..

நாகாவை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லனும்னா, நாகா பேஸிக்கலி ஒரு கொலுட்டி. தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர், கொஞ்சம் ஆந்திரா கருப்பு. டி நகர் ரேணுகா ஹோட்டலில் அவர் தின்ற பருப்பு பொடியை மட்டும் மூட்டை கட்டினால் ரெண்டு ஊரு ஒரு வாரத்துக்கு திங்கலாம்...அவர் அப்பாகாரு, தெலுங்குதேசத்தில் தீவிர பொண்ணு வேட்டையில் இருந்தாலும், நாகா காருவுக்கு சிங்கார வேலன் கமல் மாதிரி, ஒரு பொண்ணை பார்க்கனும், அப்புறம் லவ் பண்ணனும், அப்புறம் கல்யாணம் கட்டனும், என்ற கொலைவெறி.

தினமும் நாகாகாரு கண்ணாடி பார்த்து தலை வாறுவதால், நேரடியாக சென்று ஐ லவ் யூ என்று ப்ரப்போஸ் செய்தால் பிகர்கள் வெளக்குமாறு, ஹை ஹீல்ஸ், கருங்கல் என்று கையில் கிடைப்பதை கொண்டு அடிப்பார்கள் என்ற உண்மை தெரிந்ததாலோ என்னமோ, கடந்த ஒருவருடமாக asl asl asl என்று யாகூவிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்...

அப்படித்தான் திடீர்னு ஒரு நாள்...

டேய் டேய் டேய்...சிக்கிருச்சு, சிக்கிருச்சு..என்று கிசுகிசுப்பாக அலறுகிறார் நாகா...

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம்..

ஏதோ ஒரு ப்ராஜக்டில் ஏதோ ஒரு பைல் ஒர்க் ஆகவில்லை என்று நான் மண்டை காய்ந்துகொண்டிருக்க. நாகாவோ, ஏதோ பழமும் பாலும் நழுவி வாயில் விழுந்தது போல சந்தோஷத்தில் துள்ளுகிறார்.

அவருடைய இடத்தில் இருவரும் ஐக்கியமானோம்.

annanagar80 என்பது ஐடி. நாகா குஜாலாக பேச பேச, எதிர்முனையும் பேச, உற்சாகமாக சேட்டுகிறார் நாகா...

ஞாயிற்றுக்கிழமை அண்ணா நகர் ரவுண்டானாவில் வந்து காத்திருப்பதாக எதிர்முனை குயில் கூவுகிறது...

அலைபேசி எண்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஞாயிறு காலைதான் அந்த அலைபேசி எண் தன் கையில் இருக்கும் என்றும், அப்போது மட்டுமே அழைக்குமாறும் டைப்புகிறார் சாட் அழகி...

அன்றைக்கு இரவு பார்ப்பதாக இருந்த மொக்கை படத்தை ஸ்கிப் செய்துவிட்டு, பிகர் கிடைத்த குஜாலில் சரக்கை போட்டுவிட்டு, மல்லாந்துவிட்டார் நாகா...

ஆயிற்று ஞாயிற்றுக்கிழமை...

திருவான்மியூரில் சோம்பலாக விடிகிறது என்னுடையது...ஊருப்பட்ட துணிகள் துவைக்க..அப்படியே பல்லு கூட விளக்காமல் அண்ணன் கொண்டுவந்த் இட்லி பார்சலை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும்போது, ரிங் ரிங்.

எதிமுனையில் நாகா..

யோவ் என்ன ஆச்சு அண்ணா நகர் ?

இன்னும் போகல டா..

நாகா, என்ன நேரக்கொடுமை இது ? இன்னுமா போகல ?

என்னொட அப்பா நேத்து நைட்டு ஏதோ வேலையா கெளம்பி சென்னை வந்துட்டார். அவரோட அம்பத்தூர் போறேண்டா. உனக்கு அவளோட நம்பர மெசேஜ் அனுப்பியிருக்கேன். நீ போயி பாருடா..வெக்கட்டா ?

நாகா, நாகா, என்ன பேரு அவளுக்கு ?

எவனுக்கு தெரியும் ? நீ ரவுண்டானா போய் அவளை கால் பண்ணு. அவள்ட்டே கேட்டு தெரிஞ்சுக்கடா. கிங். துண்டித்துவிடுகிறார் நாகா...

திடீரென இதயத்துடிப்பு அதிகமாகிவிட்டது எனக்கு. மேற்கொண்டு இட்லி இறங்கவில்லை. அண்ணனோட யமஹா சாவியை எடுத்துக்கொண்டு, எவ்வளவு வேகமாக ட்ரஸ் பண்ண முடியுமோ, அவ்வளவு வேகமாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு, பைக்கை ஸ்டார்ட் செய்கிறேன் நான்..

தொடரும்...!!!

Monday, August 3, 2009

I am Back- சாம் ஆண்டர்சன்

சாம் ஆண்டர்சனின் முதல் படத்தை இயக்கிய ஸ்டான்லி, தனது ரெண்டாவது படத்திலும் சாம் ஆண்டர்சனை கதாநாயனகாக தேர்வு செய்திருக்கிறார். படத்திற்கான தலைப்பை தேர்ந்தெடுக்கும் உரிமையை பதிவுலகத்திற்கு விட்டுக்கொடுத்திருக்கார். இந்த முறை இசையமைப்பது அவர் இல்லையாம். தேவா அ வித்யாசாகராக இருக்கலாம் என அறிவித்திருக்கிறார்.

ஆதலால் அடுத்தப் படத்திற்கான தலைப்பை நீங்களே சொல்லுங்க.

Thursday, July 30, 2009

மனக்குஷ்டம் பார்ட் -2

நான் ஒன்னாவது படிக்கசொல்லோ வழக்கம்போல பலிபீடத்துக்கு(பள்ளிக்கூடம்) வந்தா, அந்த மிஸ்சும் விடாம நொய்நொய்னு ஒரே இம்ச. ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல தெனமுமா மானங்கெட்டுப் போய் இப்டி என்கிட்டே கெஞ்சறது? என்னா செஞ்சாங்களா? திரும்பத் திருமப் த்ரீ டேபிள்ஸ் சொல்ல சொல்லி கேக்குறாங்க. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எனக்கு பத்திக்கிட்டு வந்திடுச்சி ஒரு நாளு. 'ச்சீ பே'ன்னு சொல்லிட்டு நடையக் கட்ட ஆரம்பிச்சேன். பட் என் நேரம், எங்கம்மா அங்கயே டீச்சராயிருக்கக் காரணத்தால, தரதரன்னு புடிச்சு இஸ்தாந்துட்டாங்க. அப்புறம் நடந்தது வீர வரலாறு. ஆனா அந்த விழுப்புண்களப் பாக்கும்போது மட்டும் இப்டி ஒரு வீரக் கொயந்தையை, அதன் தெறமய நாடு அமுக்கப் பாக்குதேன்னு ஒரு மனக்குஷ்டம் வரும்.


கொஞ்ச நாள்ல டெலிபோன் வாங்கினாங்க. அதை நான் தொடக்கூடாதுன்னே, ஒசரத்துல தூக்கி வெச்சு வெறுப்பேத்தினாங்க. எனக்கா உள்ளுக்குள்ள அஞ்சாறு காட்டெரும உறும ஆரம்பிச்சுது. ஒரு நாள் எங்கம்மா மாடில எதையோ ஏறக்கட்டிக்கிட்டிருக்கும்போது வசமா நேரம் கெடச்சிது. வீட்டு வேலைக்கு புதுசா சேர்ந்த கலாக்காக்கு என்னயப் பத்தி தெரியாததால, அவங்கள விட்டே எடுத்துக் கொடுக்கச் சொன்னேன். டெலிபோன் டயரியையும் எடுத்துக்கிட்டேன். எங்கப்பா ஸ்கூல் வாத்திங்க, ஹெச்எம், இந்த த்ரீ டேபிள்ஸ் மிஸ், அக்காவோட கிளாஸ் மிஸ், மேத்ஸ் மிஸ், எங்க ஹெச்எம்னு இப்டியாப்பட்ட ஆளுங்களுக்கா போனைப் போட்டு, 'அடச்சீ போனை வை'ன்னு திட்டிட்டு டபக்னு கட் பண்ணிடறது. வேலைய முடிச்சப்புறம் அந்த நம்பருங்களை அழுத்தி கிறுக்கி அடிச்சி வெக்குறது. அப்புறம் ஏதோ ஒரு துரோகி (அப்போ எங்கள மாதிரி அப்பாவிங்களுக்குத் தெரியாத) காலர் ஐடியை வெச்சு போட்டுக் கொடுத்து, ஒதை வாங்கினேன். அடப்பாவிகளா தர்மத்தின் வாழ்வுதனை சூது வவ்வுன்னு கவ்வும், ஆனா பன்னெண்டு வருஷங்கழிச்சு செல்போனும் ப்ரீ எஸ்எம்எஸ்சும் கொடுத்து உங்கள சாவடிக்கும்னு கம்னு விட்டுட்டேன்.

எங்கம்மாக்கு குட்டியூண்டு வேண்டுதல்னா சாமி பிரிபரன்ஸ் கம்மியாக் கொடுத்திடப் போகுதுன்னு ஒரே பயம். அதால பெருசா வேண்டிப்பாங்க. நான் இதெல்லாம் பாத்து சாமி கூட ஒரு டீலிங் வெச்சுக்கிட்டேன். அதாவது, நான் கேக்குற மார்க் வந்துச்சின்னா, புடிக்காத டீச்சருக்கு டைபாய்டுன்னான்னு ஒவ்வொரு கோரிக்கைக்கும் ஒவ்வொரு அமவுண்ட். இது கொஞ்ச நாள் கழிச்சு ஜாலியாகி, இன்னைக்கு இன்னாரோட இந்தக் காரியம் உருப்படாம போனா இத்தன ஆயிரம் போடறேன். இன்னார் பல்லு ஒடஞ்சா இவ்ளோ லட்சம் போடறேன்னு இஷ்டத்துக்கு வேண்டிக்கிறது. அப்புறம் வேண்டுதல நிறைவேத்தணுமே, அதுக்கு எங்கருக்கு காசு? நானா அசருவேன். தெனமும் டர்ன் போட்டுக்கிட்டு அம்மா, அப்பா, அக்கா பர்சை பதம் பாக்குறது. ஒரு கட்டத்துல அவுங்களுக்குள்ள சண்டைப்போட்டு மண்டயப் பிச்சிக்கிட்டாங்க, ஆனா என்னைய மட்டும் சந்தேகப்படல. அடக் கெரகமே, இந்த டீலிங்கோட டீலிங்கா இவங்களுக்கு கொஞ்சம் புத்தியக் கொடுன்னு கொசுறா கோரிக்கைய ஆட் பண்ணிட்டு, நானும் செவனேன்னு பெருமாளுக்குத் துட்ட தேத்திக்கிட்டிருந்தேன். எவ்ளோ நாள்தான் இப்டி நூத்துக்கணக்குல போட்டு பைசல் பண்றது, இனி ஆயிரத்துல செட்டில்மென்ட்னு முடிவு பண்ணி, எங்கப்பா கொண்டாந்த சம்பளக் கவர தொறந்து அம்புட்டையும் உண்டியல்ல போட்டாச்சு. ஒருவழியா சினிமா போலீசாட்டம் கண்டுப் பிடிச்சு, உண்டியலத் தொறந்துப் பாத்தா கிட்டத்தட்ட அஞ்சாயிரம் தேத்திருக்கேன் ரெண்டே மாசத்துல(இப்போ போட்ட சம்பளத்த சேக்காமலே). இந்த சாதாரண பக்தி சம்பந்தப் பட்ட விஷயத்துக்கு எதுக்கு அவ்ளோ டென்ஷன் ஆனாங்கன்னு தான் எனக்கு சரியா புர்ல. சரிதான் போங்க, நாடு ஒரு குட்டி விவேகானந்தினிய எழந்திடுச்சி, நஷ்டமும் குஷ்டமும் நாட்டுக்குத்தான?

Monday, July 27, 2009

பிரபல பதிவர் ஆவது எப்பிடி? Guide For Dummies

எங்கன திரும்பினாலும் பிளாக் பிளாக்’னு ப்ளேக் நோய் மாதிரி பெருசா பரவி, அமிதாப் பச்சன்’லே இருந்து எங்கூரூ அரைடவுசரு வரைக்கும் பிளாக் ஆரம்பிச்சிட்டு இருக்குதுங்க.. வெள்ளைக்கார தொரை படிக்கிற டைம்ஸ் ஓப்பன் பண்ணினாலும் ப்ளாக், நாமே எழுத்துக்கூட்டி படிக்கிற இந்தியன் டைம்ஸ், இந்து’ன்னு எடுத்தாலும் ப்ளாக், தினதந்தி, தினமலருன்னு எல்லாபயலுவெல்லாம் ப்ளாக், பளாக்’ன்னு பத்த வைச்சி இப்போ தீயை கொழுந்து விட்டு எரிய விட்டுட்டாய்ங்கே..

ஆக எப்பிடியோ இதை பத்தி தெரிஞ்சி இந்த பக்கம் வந்து பிளாக்’ன்னு ஒன்னு ஆரம்ப்பிச்சி எல்லார்கிட்டேயும் ஐ யூஸ் டூ ப்ளாக்கிங்’னு பீலா விட ஆரம்பிச்சிட்டோம்’லே.. அப்பிடின்னா பேமஸ் ஆகிருக்கனுமின்னு பார்த்தா அதுவுமில்ல.. இப்போ ரெண்டு ப்ளாக்கர் மீட்டை போட்டா ”என்னாங்க நாமளும் நொங்கு நொங்குன்னு கீ-போர்ட் தேய தேய தமிழிலே தட்டச்சி பதிவெழுதினாலும் இன்னும் பிரபலமாகலே’னு மேவளையே சொறிஞ்சிட்டு பேசி கொல்லுறாங்க

அந்த மாதிரி டம்மி பதிவர்களுக்காக பாடம் சொல்லிகொடுக்க போறோம்.. ஒழுங்க கிளாஸ்’க்கு வரனும் ஆமாம் சொல்லிப்பிட்டோம்...
நீங்க எப்பிடி பதிவெழுத வந்தீங்கன்னு முதலிலே ஜீலேபி சுத்தி பார்த்து தெரிஞ்கிட்டாச்சு, அடுத்து தமிழிலே எப்பிடி பதிவெழுத வந்தமின்னும் ஒரு சுத்து சுத்தி பார்த்துக்கோங்க.. எவனோ ஒருத்தன் வீணா போனவன் சும்மா இருக்கிறதை விட்டுட்டு படிச்சதே அப்பிடியே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி மயில் தட்டி விட்டுருப்பான். நீங்களும் அதை படிச்சி பார்த்துட்டு நாமே தட்டுனா கூட தமிழிலே வருமான்னு முன்னர் காலத்திலே டைரி’லே எழுதி வைச்சதெல்லாம் டைப் பண்ணி பார்த்து சுவத்திலே திரிஞ்சிட்டு இருக்கிற பல்லிக்கு கூட பயம் வர அளவுக்கு டெர்ரா போஸ் கொடுத்தீருபீங்க... ஆக ஏரியா’விலே தமிழ் எழுத தெரியுமின்னு பில்ட்-அப் ஆனதும் ப்ளாக்வுலகத்திலே டொப்பக்குன்னு குதிச்சிருப்பீங்க. ஓகே.. அமீர்கான் தன்னோட நாய்க்குட்டிக்கு ஷாருக் பேரு வைச்சிருந்ததே தன்னோட பிளாக்’லே போட்டு பிளாக்-வேர்ல்ட்’லே ரவுடியா ஃபார்ம் ஆவுறாரு, சிவாஜி, எம்ஜீஆர்’னு எல்லாரையும் டரியல் ஆக்கி ஜேமோ லைம்-லைட்’க்கு வந்துட்டாரு.. இங்கன ஒன்னு ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. கைய்யா புய்யா’னு கத்துனாதான் எல்லாரும் திரும்பி பார்ப்பானுக.. எப்பிடி கத்துறதுன்னு பார்க்கலாமா?

1) போனமாசந்தான் தமிழிலே டைப் பண்ண தெரிஞ்சாலும் பத்து வருசமா ப்ளாக் படிக்கிறேன். ஏழரை வருசமா பின்னூட்டபதிவரா இருந்தேன்.. இப்போ ஒன்றரை வருசா ப்ளாக் எழுதிட்டு இருக்கேன்னு சொல்லனும்.. எல்லாரோட பிளாக்’ம் படிப்பேன். எல்லாரையும் கூகிள்-ரீடரிலே சேர்த்து வைச்சிருக்கேன். ஆனா படிக்கதான் நேரமில்லை’னு சீன் போடனும். ஆக எழுதுறது இல்லாட்டியும் நிறைய படிப்பாரு போலே’னு நினைச்சிக்குவாங்க. அப்போ எப்போதான் எழுதுவீஙன்னு ஆரும் கேட்டா இப்போல்லாம் எழுதவே ஒன்னுமே தோணமாட்டேங்கிதுன்னு சொல்லனும். அப்பிடின்னா என்னான்னு அவங்க கேட்டா It's kinda writing stroke’னு பீட்டரு வீட்டுட்டு வெடுக்குன்னு வந்துறனும்.. சொல்லிட்டு அங்கனெ நின்னுங்கன்னு வைச்சிக்கோங்க.. அப்புறம் அவங்க துப்பினதை தொடைக்கிறது கிலோ கணக்கிலே துண்டு வாங்கனும்...

2) இது இன்னொரு முக்கியமான பாயிண்ட்: சொல்லவந்ததை கொலைவெறியோட சொல்லனும், எப்பிடின்னா சன்னலை தொறந்தா காத்து வருதுக்கிறதே’னு எழுதுறதே கூட இப்பிடி எழுதனும், மண்ணின் அடுக்குமுறைக்கு அடங்கா வீரியமிட்டு எழுந்த விதையின் வளர்ந்த விருட்சம், தன் இருந்தலியத்தினை என் சாளரம் நுழைந்து மேனி தழுவி சென்றது காற்றாய்’ன்னு எழுதி இது தமிழா, இல்லே என்னான்னு தெறிக்க விட்டு அந்த பயலை இதுக்கெல்லாம் என்ன அர்த்தமின்னு தயவு செய்து சொல்லிருங்கன்னு கதறவிடனும். நமக்காக ஆராவது கண்ணீரு விட்டா அது ஆனந்தம் தானே? ஆக கொலைவெறி கவுஜனா பார்ம் ஆகிச்சாசு. அடுத்து கதை எழுதுறது, அது எப்பிடி தெரியுமா? ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் எல்லாத்தையும் பழைய பேப்பர் கடையிலே மொத்தமா பத்து கிலோ வாங்கிட்டு வாங்க. அதிலே இருக்கிற ஒரு பக்கத்து கதையெல்லாம் படிச்சி பாத்து அதிலே எது ஒரே மாதிரியான கதையமைப்பிலே இருக்கிறதே எல்லாத்தையும் ஒரே கதையா மாத்துங்க. உண்மையே சொல்லனுமின்னு நம்ம ஊரு பழம்பெரும் எழுத்தாளர்களெல்லாம் ஒரே கதையே கொஞ்சகாணு மாத்தி அப்புறம் தன்னோட புனைபேரையும் மாத்தி மூணு-நாலு பொஸ்தககாரவுங்களும் அனுப்பி வைச்சிருப்பாங்க, அது பிரசுரம் ஆகி வெகுமானம் வாங்கினது பத்தாமே ஏதோ ஒரு ஊரு பேரு போட்டு வாசகர்கடிதத்தை தனக்கு தானே எழுதிருப்பானுக. சரி அதை விடுங்க, நம்ம மேட்டருக்கு வருவோம். கதையே எல்லாத்தையும் கலந்து கட்டி மிக்ஸ் பண்ணிட்டிங்களா? அத அப்பிடியே ஆருக்காவது மயில் தட்டி விடுங்க, ஒன்னொன்னு இங்கன முக்கியமான விசயம், அனுப்பி வைக்கிற ஆளுக்கு அரைகொறயா தான் எல்லாமே தெரிஞ்சிருக்கனும், இல்லன்னா ஒங்களே அது இதுன்னு கேள்வி கேட்டே கொன்னுருவாய்ங்க, அதை விட முக்கியமான விசயம் ஒங்கள மாதிரியே அவரும் டீ-யானை’யா இருந்தா ஒன்னியுமே பண்ணமுடியாது. அதுனாலே பண்ணுற நாதாரிதனத்தை நாசுக்கா பண்ணுங்க.

3) தன்னோட பிளாக்’லே எழுதுறதிலே கொலைவெறி காட்டுறோமின்னு இல்லாமே மத்த இடத்திலே போய் ரத்தபூமியாக்கி, அந்த இடத்தே சொத சொதன்னு ஆக்கி, அந்த ஈரத்திலே கோலியாடிட்டு வரனும்.. அது எப்பிடின்னு கேட்கிறீங்களா? நம்மாளு தட்டுமுட்டி எப்பிடியோ (உண்மையாகவே) கதை எழுதி வைச்சிருந்தா, இதெல்லாம் எப்போவோ சுஜாதா’கிற சின்ன எழுத்தாளர் அந்த காலத்திலே கிறுக்கி வைச்சிட்டாரேன்னு சொல்லனும்.. அப்புறம் இன்னோரு நாளு அதே பதிவர் சுஜாதா பத்தி எதாவது எழுதி வைச்சிருந்தா கூட ”அவர்கள்” படத்திலே ரஜினிக்கு சோடி கட்டி நடிச்சிட்டு அவரோட உழைப்பாளி,பாபா படத்திலேல்லாம் அம்மா வேஷம் கட்டுனாங்களே அவங்களான்னு கேட்டு வைக்கனும்.. ஒடனே சுத்தி இருக்கிறவங்கல்லாம் ஆகா இவரு அவளோ பெரிய ஆளையே சும்மான்னு சொல்லுறாரே.. மண்டை பார்ட்டி’னு சொல்லிரும்.. அப்பிடியே ஃபார்ம் ஆகிறலாம்.

4) இப்போ இன்னொரு முக்கியமான பாயிண்ட்: கூட்டம் சேர்க்கிறது. அது எப்பிடின்னா பாட்சா படத்திலே ரஜினி அன்பாலே சேர்ந்தகூட்டமின்னு சொல்லுறமாதிரி கெத்தா சேர்க்கனும். கூட்டம் சேர்க்கிறது பெரிய கம்பசூத்திரமில்ல, சுமாரா எழுதுறவங்களே லிஸ்ட் எடுத்து வைச்சிக்கிட்டு நீயெல்லாம் இன்னும் எழுதினேன்னா நல்லாவருவே, இன்னும் நிறையபடி! ஒலக சினிமாகள் பாரு! அது இது’னு காதல் படத்திலே வர்ற சொட்டையரு வசனமான “நீங்க நல்லா வருவீங்க தம்பி!! நீங்க நல்லா வருவீங்க!!”னு சொல்லிட்டு வரனும். இதே கேட்கிறதுங்க ஆகா நம்மளையும் நம்புறாங்களேன்னு நீங்க அடிவாங்கிற கைப்புள்ளயா இருந்தாலும் ஒங்களை வைச்சி சங்கமின்னு ஒன்னு ஆரம்பிச்சி புது கோஷ்டி பார்ம் பண்ணிருவானுக.. அப்புறமென்னா நல்லா கூவு.. ஒரக்கா கூவு’ன்னு சொல்லிட்டு கையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தா போதும்.

5) அப்பிடி இப்பிடின்னு தல’ன்னு நாலு பேரு கூப்பிடுறளவுக்கு ஃபார்ம் ஆகீட்டிங்கன்னா போதாது, அப்பிடியே ரவுடியா வாழனும், வாழ்ந்துகாட்டனும்.ஆஸ்கர் வாங்கின ரகுமானிலிருந்து, இசைஞானி இளையராஜா வரைக்கும் எல்லாரையும் திட்டி தீர்த்து தள்ளனும் மைக்கேல் ஜாக்சனை பத்தி நல்லா எழுதிருந்தா கூட இடையிலே பாப்-மார்லி அளவுக்கெலாம் நானு MJ'வே மதிக்கிறது இல்லை’னு சொல்லனும். எதை எழுதனாலும் அதுக்கு நாலு பாகம் போட்டு இருக்கிறவனை கொன்னு தள்ளனும், உள்ளுக்குள்ளே ஒன்னுமில்லாட்டியும் படிக்கிற அரைப்பேக்கு’ங்க அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங்க்’ன்னு மனசாட்சியே இல்லாமே சொல்லுவாங்க. எல்லாத்தையும் பெருமையா எடுத்துக்கிட்டு எனக்கு இப்போ டைம் இல்லை. சீக்கிரமே எழுதுறேன்’ன்னு பொளந்து கட்டனும். அதுக்கொ இல்லே எதுக்கொன்னாலும் சரி எதுக்குமே எதையும் ஒத்துக்க மட்டும் செஞ்சிறக்கூடாது, யாராவது துறை சார்ந்த பதிவெழுதுறேன்னு கிளம்பி வந்தா இந்த வேலையே பார்க்கிறதுக்கு நீங்க பேசாமே உருப்படியா வேலையே பார்த்து முன்னேற வழியை பாருங்கன்னு அட்வைஸ் ஆறுமுகமா அவதாரம்மெடுக்கனும். அப்பிடியும் அவரு அடங்கலைன்னு வைங்க, அவரு எழுதின ஒவ்வொரு எழுத்திலையும் குத்தம் கண்டுப்பிடிச்சி பின்னூட்ட பக்கத்திலே பாண்டியாடனும்.

இது வரைக்கும் பதிவரிலிருந்து, பின்னூட்ட பதிவராகி அப்புறம் எளக்கியவியாதி பதிவர், தல பதிவர், கலவர பதிவர்’ன்னு படிப்படியா பிரபல பதிவர் ஆகிறதுக்கு உண்டான வழிமுறைகளை பார்த்தாச்சு’லே.. எல்லாத்தையும் ஒவ்வொன்னா அதுவும் படிப்படியா பின்பற்றிட்டு சொல்லுங்க. அடுத்து மாபெரும் பிரபல பதிவராவது எப்பிடி? மா-மாபெரும் பிரபல பதிவர் ஆவது எப்பிடின்னு அடுத்த பாகம் போடுறோம்.. இப்போ ஐயம் ஷோ பிஸீ... நோ -டைம்.. யூ சீ.....

தெய்வக் கொயந்தைகள்

நாங்க மூணு பேரு இருந்தோம் எங்க தெருவில், என்னைய விட அவங்க ரெண்டுப் பேரும் ஒரு வருஷம் சீனியர். ஒன்னு பாலாஜி பஜ்ஜி வாழக்கா சப்ஜி, இன்னொன்னு கண்ணம்மா கண்ணம்மா வாயெல்லாம் பொய்யம்மா. (ஹையா என் வெர்ஷன், ஜாலியா என்னைய அப்பாவி தெய்வக் கொயந்தயா அளக்கலாம்).

இந்தப் பட்டத்துக்கு அம்புட்டு பொருத்தம் ரெண்டு பேரும். என்னோட மொதோ ஞானக்குருமார்கள் இவங்கதான். பாலாஜி, கம்முனு போற போக்குல கொளுத்திப் போட்டுட்டு, வர்ற வழில அதுல கேண்டில் ஏத்திட்டு வர்ற ஆளுன்னா, கண்ணம்மா சூப்பரோ சூப்பர், சும்மாச்சுக்கும் காரணமே இல்லாம பொய் சொல்லிட்டே இருப்பா.

நான்தான் ஏற்கனவே சொல்லிருக்கேனே, வராது வந்த 'நாய்'கின்னு. எங்கக்காவுக்கும் எனக்கும் ஏழு வயசு வித்தியாசம்(எப்டியோ இங்கயும் சொல்லி கடுப்புக்கு கால் போட்டாச்சு). அதால நான் கொஞ்சம் வளந்து வெள்ளாடுற ஸ்டேஜ் வந்தப்போ அவங்க சீச்சமம்மு கொயந்தப் பருவத்துக்கு டாட்டா சொல்லிட்டாங்க. கூட சேர்த்து நான் பண்ணுன இம்சையில் என்னைய உசிரோட விட்டதே பெரும்புண்ணியம். அதேசமயம் நான் மனசளவுல பக்த மீராவாட்டம் அவங்கள பிரெண்ட் பிடிக்க அம்புட்டு பாடுப்பட்டிருக்கேன்.

பாலாஜி வீட்லயும் அதே அதே சபாபதே. அவங்கண்ணன் இவன விட எட்டு வயசு பெரியவரு. அவர்தான் எங்கூரு, வெங்கடபதி ராஜு மன்றத் தலைவர்(அது டெண்டுல்கரோட விசிறிகள மெரட்டறத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட மன்றம்). கண்ணம்மா வீட்டுக்கு ஒரே பொண்ணு. எங்க மூணு குடும்பமும் நல்ல நட்போட இருந்தாங்க.

விடுவமா? நாங்க மூணு பேரும் ஒண்ணா சேரக்கூடாது, குறிப்பா பாலாஜியோட சேரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆடர். ஏன்னா, சம்பவத்த சட்டையில் குத்திக்கிட்டு திரிஞ்சோம். ஒன் ஸ்மால் எக்சாம்பில்னா,அந்த டைம்ல தூர்தர்ஷன்ல ரசகுல்லா விளம்பரம் ரொம்ப பேமஸ். நாங்கெல்லாம் எப்படா மறுபடி திங்கலாம்னு காத்திட்டிருப்போம். இவன் என்ன பண்ணான்னா ஒரு தடவ, ஸ்வீட் டப்பால நாலஞ்சு வெள்ள உருண்டைய (ரசகுல்லாவாட்டம் இருந்துச்சி) சக்கரத் தண்ணீல போட்டு கொண்டுவந்தான். என்கிட்டயும் கண்ணம்மாகிட்டையும் சாப்டுங்கன்னு நீட்டினான். ரெண்டு பேரும் செம ஒத்தும. பிளஸ் நான் எங்கக்காக்குக் கொடுகாம எதையும் சாப்ட மாட்டேன்னு கொள்கை வெச்சிருந்தேன். பல்பத்தை அவ நக்கலங்கறதால தின்னாம விட்டேன்னா பாத்துக்கங்க. நான் தின்னாம அவளும் திங்கல. ஸ்கூல்லருந்து வர்ற வழில எங்கம்மாக் கிட்ட பெருமையா விஷயத்தைச் சொல்லி, ஸ்நேக்ஸ் டப்பாவை காமிக்கிறேன், வாங்கிப் பாத்தவங்க அப்டியே மயக்கம் போடாதக் குறைதான். பிக்காஸ் அதிலிருந்தது ரசக்கற்பூரம். தப்பித் தவறி வாய்ல போட்டிருந்தா அவ்வவ்.........எத்தன பேர் உறுப்பட்டிருப்பாங்க நாட்ல , அப்டி போய் விடலாமா? கண்ணம்மா வீட்லயும் சேம் பிளட். ஆனாலும் எதைக் கேட்டிருக்கோம் இதைக் கேக்க. அடி, உதை, அட்வைஸ், கெஞ்சல், இதெல்லாம் எங்களுக்கு பிரிட்டானியா பிஸ்கட்டாட்டம். எதற்குக் கொடுக்கிறாய் அடி, யாரைக் கொல்லப் பிழிகிறாய் அட்வைஸ்னு எதாச்சும் பேசி இன்னும் வாங்கறதுதான் ஹாபியாச்சே.

கண்ணம்மா எப்டின்னா ஸ்வாரஸியமா டூப்படிப்பா. அவ சொல்ற கதைய வெச்சே நானூறு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளக் கொடுக்கலாம். நாங்க எங்க நட்பை இன்னும் உறுதியா உலகத்துக்கு எடுத்துரைப்பதெப்படின்னு ஒரு கருத்தரங்கம் நடத்தினப்போ, கண்ணம்மா சொன்ன ஐடியாதான் இது. அடுத்தநாள்ளருந்து மத்த பிரெண்ட்ஸ் கிட்டல்லாம் போய் அனாவசியமா அவங்கம்மாப்பா பேரோ, ஏதோ ஒன்னு கேக்குறது. அவங்க பதிலுக்கு ஏதாச்சும் எங்க அம்மாப்பாப் பத்தி கேட்டாக்கா, ரகசியக் குரலில்(அப்பத்தான் நம்புவாங்கலாமா) ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறது. எங்கம்மாதான் கண்ணம்மா அம்மான்னும், அவங்கப்பாதான் பாலாஜி அப்பான்னும், சும்மா ஜாலிக்காக இப்டி தத்து கொடுத்தாச்சு, கொஞ்ச நாள்ல நான் அவன் வீட்டுக்கும், கண்ணம்மா எங்க வீட்டுக்கும், பாலாஜி கண்ணம்மா வீட்டுக்கும் போயிடுவோம்னு கேவலமா ஒரு கதையை சொல்ல ஆரம்பிச்சோம். பாலாஜிக்கு இது ரொம்பப் பிடிச்சுப் போய், ஒரு படி மேலப் போய் 'எனக்கு நாலஞ்சு அம்மா, ஆறு ஏழு அப்பா'னெல்லாம் கத கட்ட ஆரம்பிச்சிட்டான். எங்களுக்கு ஸ்லைட்டா ஏதோ தப்புன்னு தெரியிது, ஆனா முழுசா என்னதுன்னு தெரியல. ஒரு கட்டத்துல ரோட்ல போறவர்றவங்கள்ளருந்து எல்லாரையும் தன்னோட அம்மாப்பான்னு இவன் சொல்ல ஆரம்பிக்க, ஒருதரம், ஒருத்தரோட பொண்ணு அங்க உக்காந்திருக்கறது கவனிக்காம இவன் பாட்டுக்கு பீலாவ பீச்சிக்கிட்டிருந்தான். அந்தப் பொண்ணு அழுதுக்கிட்டே போய் டீச்சருங்கக்கிட்ட பத்த வெச்சிருச்சி. அதோட ரிசல்ட் தான் அவனோட முன்மண்டை தழும்புக்குக் காரணம். அப்டியாப்பட்ட வீரமறக் குடியில் வந்தவங்க நாங்க.

இதுக்கு நடுவுல இந்த அம்மாங்க ஓவரா பவர காமிக்கிறேன்னு முதுகுல நாலு சாத்து சாத்திக்கிட்டு எங்கள கர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு உறும வெச்சாங்க. இதப் பத்தி தீவிரமா விவாதிச்சதுல நானும் கண்ணம்மாவும் ஒரு முடிவுக்கு வந்தோம். அப்போதான் ஏதோ போட்டிக்கு, Snow White and the Seven Dwarfs, Hansel and Gretel இதெல்லாம் எங்களுக்கு பிரைசா கெடச்சிருந்தது. இதுகள வெச்சு ஒரு மாஸ்டர் பிளான் போட்டோம். முட்டை கொண்டுட்டு வர்ற அண்ணன் சைக்கிள்ல காத்தெறக்கி விடுறது, இல்லன்னா வேகமா பாஞ்சு வந்து அவரு கைலருந்து முட்ட டிரேயை தட்டி விடுறது, இல்லன்னா பெசஞ்சு வெச்சிருக்க கோதும மாவை கூரைல அடிச்சு அது தொங்குரதப் பாத்துக் கூத்தாடுரதுன்னு அமைதியா நாங்க உண்டு எங்க என்டர்டெயின்மென்ட் உண்டுன்னு செவனேன்னு இருக்கறச்சே, அந்நியர் எதிரில் அந்நியனா மாறி இழுத்துப் போட்டு மொத்துற அம்மாங்களுக்கு சரியான பாடம் புகட்ட, சாத்துன ஒடெனே சுதாகரிச்செழுந்து, 'சித்தீ'ன்னு அவங்களப் போய் கட்டிக்கணும். ஆனா இதுக்கு ஒரு தற்கொலைப் படை வீரனுடயத் துணிவிருக்கனும். ஏன்னா விளைவுகள் எப்டி இருக்கும்னு அந்த விஷ்ணுவாலயே சொல்ல முடியாது. அதேசமயம் பலன் நிச்சயமுண்டு. 'ஆபரேஷன் சித்தி'யை நான்தான் மொதோ அரங்கேற்றம் பண்ணேன். நான் நெனச்சதுக்கு மாறா எங்கம்மா சிரிசிரின்னு சிரிச்சு வெறும் அட்வைசோட விட்டுட்டாங்க. சப்புன்னு போச்சு. கண்ணம்மா டைரெக்டா காரியத்தில் இறங்காம, 'இனி அடிச்சே, சீக்கிரமே காலைல எழுந்து, பால்காரம்மா எதிர்ல உன்னைய சித்தின்னு கூப்டிருவேன்னு' முட்டாள்தனமா மெரட்டி, மெடிக்கல் லீவ் போட்டுக்கிட்டா.

அதேமாதிரி, சிலபல வருஷங்கழிச்சு, ஒரு தடவ எங்க ஸ்கூல் பின்னாடி இருந்த வீட்ல பெயிண்டடிக்கிற வேலை நடந்திட்டு இருந்தது. பில்லருக்கு செகப்பு பெயிண்டடிச்சிக்கிட்டிருந்த ஆளுங்க மேலையும் கொஞ்சம் ஜாஸ்தி பெயின்ட் ஒட்டிக்கிட்டு இருந்தது. நம்ம பாலாஜி இதை பாத்துட்டான். ஒடனே, கெளப்பி விட்டுட்டான்,'டேய் பின் வீட்ல பேய் இருக்குடா', 'செகப்பு கலர்ல இருக்குடா', 'நங்கு காட்டுதுடா'ன்னு. பாவி என்கிட்டக்கூட அப்டியே சாதிச்சான். இதெல்லாம் காலை அசெம்பிளிக்கு முன்ன. அடுத்து பிரேக் வர்றத்துக்குள்ள, எப்டி பர்ஸ்ட் ஸ்டாண்டர்டுலருந்து டென்த் வரைக்கும் ரூமருக்கு ரூட் போட்டுக் கொடுத்தானோ தெரியாது, பிரேக் சமயம், அம்புட்டு பேரும் அங்க ஆஜர். அது ஏதோ ஸ்கூல் விசேஷத்துக்கு ஒரு வாரம் முந்திங்கறதால எங்க டீச்சருங்க அந்த பிசில எங்கள சரியா பாக்கல. நாங்கெல்லாம் காச் மூச்னு கத்திட்டு ஆர்ப்பாட்டம். சத்தம் கேட்டு பெயிண்டடிக்கிறவங்க வந்து பாத்தா, இன்னும் கத்துறது. அவங்க ஏதோ பசங்க வெள்ளாடுறாங்கன்னு போய்ட்டாங்க. அதுக்குள்ள, இவன் கல்லெடுத்து எங்க கைல கொடுத்துட்டான்.பெரிய பசங்க தடுக்க தடுக்க நாங்கெல்லாம் கல்லெடுத்து அடிக்கிறோம். கொடும என்னன்னா, அந்த வீட்டுப் பையனும் எங்க கூட சேர்ந்துக்கிட்டு கல்லடிச்சு ஒரே கூத்து. ரெண்டு மூணு நிமிஷம் கூட கடமைய எருமை கணக்கா நாங்க செஞ்சி முடிக்கல, அவங்க கோவமா பின்கதவ தொறந்திட்டு வந்து சத்தம் போடறாங்க. பக்கத்து வீட்டு ஆட்களும் ஸ்கூலுக்கு வந்தாச்சு. மீட்டிங்க்ல இருந்த டீச்சருங்களும் வெளில வந்தாச்சு.

நல்லா செம மாத்து வாங்கினோம் அத்தனைப்பேரும். அப்டியாச்சும் கம்னு இருந்தோம்ங்கறீங்க?

இது நடந்து ஒரு வருஷத்துல உலகக் கோப்பை கிரிக்கட் வந்துச்சி. உலகப் பிரசித்திப் பெற்ற கல்கத்தா கேவலம் நடந்தது அந்த வாட்டிதான். நாங்க எல்லாரும் செம சோகமாகி, கண்டிப்பா சூசயிட் பண்ணிக்கறதுன்னு முடிவுக்கு வந்துட்டோம். ஆனா,அன்னைக்குன்னு பாத்து எப்டி மாஸ் சூசயிட் திடீர்னு பண்றது? இப்போ மாதிரி நாளுக்கு நாப்பது டிவி சீரியலா இருந்துச்சி எங்களுக்குக் கத்துக் கொடுக்க?அதே சமயம், கும்ப்ளேவும் காம்ப்ளியும் கதறின சீனையும், நாம அங்கருந்து நாலு அழுகின தக்காளி அடிக்க முடியலயேங்குற வருத்தத்தையும் தாங்கிட்டு எப்டி தூங்கறது? ஒடனே நம்ம கண்ணம்மாதான் ஐடியாவ சொன்னா, ஏய் பேசாம ஆளுக்கு கொஞ்சம் பெனெட்ரில குடிச்சிட்டு மட்டயாகிடலாம்னு. ஒடனே போன்ல கதறின மத்த அன்புள்ளங்களுக்கும் நாங்க காட்டுத்தீய விட வேகமா இதை பரப்பிட்டோம். ஒடனே எல்லாரும் போருக்குப் புறப்படராப்ல பொறப்டாச்சி மருந்துக் கடைய நோக்கி.

அவ்ளூண்டு ஊர்ல இருந்த பத்து மருந்துக்கடைல, கடசாத்துறத்துக்கு ஒருமணிநேரம் முன்ன திடீர்னு நூத்துக் கணக்குல பசங்க வந்து பெனெட்ரில் கேட்டா ஈசியா கண்டுப்பிடிச்சிட மாட்டாங்களா? அதுவும் கூட்டத்தோட கூட்டமா, அவங்க பசங்களும் லைன் கட்டி வெரப்பா நிக்கும்போது வேறென்னப் பண்ணுவாங்க? கூப்டு 'அன்பா' விசாரிச்சதுல, கோழைப் பசங்க பிளானை பப்பரப்பான்னு போட்டு ஒடச்சிட்டாங்க, அதுவும் எங்களையும் சேர்ந்தாப்டி போட்டுக் கொடுத்திடுச்சுங்க எட்டப்பனுங்க. அப்புறம் நடந்தத எங்கூரு வரலாறு சொல்லும். பின்ன, இன்னிவரை ஒரு மருந்துக் கடைலக் கூட டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாம மருந்துக் கிடைக்காது. அதுவும் ஒரு மாசத்துக்கு மேல பழசுன்னா, அந்த டாக்டருக்கே போனைப் போட்டிருவாங்க. பாருங்க எவ்ளோ பெரிய சமூக நலனுக்கு வித்திட்டிருக்கோம் நாங்க, அதப் புரிஞ்சிக்காம ஒரேக் குஷ்டமப்பா.

இப்டியாப்பட்ட சமூக சேவகர்களான நாங்க மூணு பேரும், கால ஓட்டத்தில், அவங்க மெட்ரிக் எக்சாம் முடிஞ்சதிலிருந்து பிரிஞ்சிட்டோம். கண்ணம்மா என்னமோ கவுந்தி அடிகளாட்டம் அநியாயத்துக்கு மாறிட்டா, சி ஏ பண்ணிக்கிட்டே இருக்கா, எப்போ முடிப்பான்னு தெர்ல. இவன் பேருக்கு சம்பந்தமில்லாத பிராமிசிங் நிறுவனத்தில், மனித வள மேம்பாட்டுத் துறைல நல்லப் பதவிக்கு வந்துட்டான்(நட்பை மறக்காம பேக்டோர் எங்கருக்குன்னு, எங்கூருக்கே மேப் போட்டுக் கொடுத்தான்). அங்க மொதல்ல மோப்பம் பிடிச்சு எஸ்சான மக்களில் அண்ணனும் ஒருவர். கட்டக் கடேசியா அவனுக்கும் இப்போ கண்ணாலமாம். மூணு பேருக்குமே இப்போ ஒருத்தரோட ஒருத்தர் பெரிய ஒட்டுதல் இல்லைன்னாலும், அது ஒரு அழகிய நிலாக் காலத்துல டெரரிஸ்டாட்டும் என்னா கொரங்கு வேலைலாம் பண்ணிருக்கோம்!!! இதெல்லாம் என்னாத்துக்கு? இப்போ நீ என்னதான் கருத்து சொல்லவரன்னு கேக்காதீங்க, ஒன்னியும் இல்ல, சும்மாச்சுக்கும் விஷயமில்லாம கொசுவத்திங்கர பேர்ல வழக்கம்போல பிளேடு போட்டிருக்கேன்.

Tuesday, July 21, 2009

கொழுப்பைக் கொறிக்கலாம் வாங்க

ஒடனே பிரியாணியத் திங்காதே இல்ல குண்டான் கோழியக் கண்டவுடன் காலி பண்ணுங்கர மாதிரிக் கொலைவெறி காயகல்பப் பதிவுன்னு நெனச்சு ஓடாதீங்க. உங்க சைடுக்கா நான் ஸ்டேன்ட் ஆகி சொல்றேன், கெட் அவுட்(எங்க லெக்சரர் ஒருத்தருக்கு திடீர்னு கெட் இன் மறந்துப் போய்டுச்சி, டபால்னு எங்க சைடுக்கா குதிச்சு வந்து நின்னுட்டு, கெட் அவுட்டுன்னு ஒரு போடு போட்டு எங்களைத் தெகைக்க வெச்சாரு, அதான் இங்க மீ தி காப்பியிங்).

கம்மிங் டு தி பாயின்ட், அம்மா அப்பாக்கிட்டருந்துக் கூட அசிங்க அசிங்கமா திட்டு வாங்காத கேர்ல்ஸ் அண்ட் பாயிஸ் நெஜமாவே கெட்டவுட்.

பர்ஸ்ட் அண்ட் ஸ்பெஷல் என்டிரன்ஸ் டு என்னைய மாதிரியான ஞானசூனியம்ஸ் அண்ட் கொரங்கு புத்தி கோவர்த்தனம்ஸ்.

மக்களாய் என்னாயிற்று நாம் கொண்ட கொலைவெறி லட்சியத்திற்கு?
நாம் பிறவிஎடுத்ததே சின்னக்கவுண்டர் செந்திலாட்டம் பேசி, பவ்வ்வ்வ்வ்வ்வ்.......ஆக்கத்தானே?
வீரத்தளபதியின் வழி வந்த சிங்க இனமே,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார், என்ற குறள் உன் கொரவளையை நெரிக்கவில்லயா? பிறவிப் பயனை பழைய பனியன் கணக்காய் பயன்படுத்தாமல் பூட்ட கேசாக்கியதேன்? நம் தாய் திருநாட்டில், நாம் பெற்ற புண்ணாக்கு பெயர், இன்று அந்நிய நாட்டில் அந்நியமாகிப் போகும் அபாயம் உள்ளது உனக்குத் தெரியவில்லையா? நம் புகழ்விளக்கு அணையா வண்ணம் அட்டகாசம் செய்யும் பொறுப்பு உன் கையில் என்பதை மறந்துவிட்டாயா மாணிக்கமே. வழக்கமாய், அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த ஜோதியாய் எந்நாட்டிலும் நாம் தனித்துத் தெரிவதன் காரணமென்ன? கொழுப்பைக் கொறித்து, இம்சையை இடுப்பில் சுமந்துத் திரிவதால்தானே?

அஞ்சப்பர் அண்ணாத்தயிடம் போய் பாரீஸ் முழுக்க தோசா கார்னர் ஆரம்பிக்குமாறு பிசினஸ் மேக்னாட்டாக பைசா பிரயோஜனமில்லாத ஐடியா கொடுத்துவிட்டு, நைசாக ஒரு தோசை வாங்கி அதை இரண்டு பேர் ஷார் செய்து ஆளுக்கு அரை தோசை தின்று, அவர் மண்டையை கிறுகிறுக்க வைத்த அஞ்சாநெஞ்சமெங்கே?

கண்ணாலம் காட்சிஎன்றால் நேராகப் போய் சூப்பர் டிரெஸ் எடுத்து வந்து, டெக்னிக்கலாக டேகை சுருட்டிவிட்டு, பீத்துவதற்கென்றே சென்ற பங்க்ஷன் முடிந்து ஜங்க்ஷனுக்கு வந்தவுடன் அதை மறுபடி மடித்து, மங்காத முறுவலுடன் முண்டக்கன்னி அம்மனாட்டம் முறைத்துக் கொண்டிருக்கும் ஷாப்பர் அக்காவை கவனிக்காதபடியே திருப்பிக் கொடுத்து டார்ச்சருக்கே டார்ச்சடித்த எம் குல மாதரெங்கே?

தாய் திருநாட்டில் எஸ்எம்எஸ் பிரீ என்று ஒரு செய்தி கிட்டினாலே, வெரல் வீங்கி வைத்தியம் பாக்குமளவுக்கு செல்போன் கம்பெனிக்காரங்களை கிடுகிடுக்க வைத்த நாம், இன்று இங்கு பிரீ கால் இருந்தும் பம்மிப் போய் பேஜாராகியிருப்பதேன்? பின்னொரு காலத்தில் பேஜர் கம்பெனிக்காரன் வைத்த சூனியத்தாலா?

வாய்பாட்டு சொல்லிக்கொடுக்கக் கெளம்பிய வரதராஜன்களை கர்ணகடூரமாகப் பாடி பயமுறுத்தி, வராதராஜன்களாக மாற்றிய தீரமெங்கே?பரதநாட்டியம் பயிற்றுவிக்க பிறவியெடுத்த பானுக்களின் காலொடித்து, பனுவாக்கிய பயமறியாப் பாவைகள் எங்கே? பதில் தெரியா கேள்விகளுக்கு பிதுங்கிப் பிழியாமல் பழமொழிக் கூறியே பயமுறுத்திய பாசமிகு பாண்டியரெங்கே?

நம் வீட்டுக் குப்பையைக் கேதர் செய்து குறிபார்த்து பக்கத்து வீட்டில் போட்டு, கேவல கேவலமாகத் திட்டு வாங்கியே பழக்கப்பட்ட நாம், திடீரென குப்பைத்தொட்டியில் குப்பையை போடும் கபீர் போக்கின் காரணமென்ன? நாம் பாடுபட்டு வளர்த்த பண்பாடு என்னாவது?

கலாச்சாரக் காவலராகும் காலம் நெருங்கிவிட்டது, குப்பையை நடுரோட்டில் கொட்டி, மண்டையில் கொட்டு வாங்குவோம் வா.
சல்சா நடனத்தைக் கண்டுபிடித்தவர் ஜலஜாவா எனக் கேட்டு காண்டாக்குவோம் வா.
ஈபில் டவருக்கே ஈயம் பூசுவோம் வா.
ஸ்விம்மிங் கத்துக் கொடுக்கும் கோச்சை விம்ம வைப்போம் வா.
ஹத யோகாவை ஷில்பா ஷெட்டியே வந்து சொல்லிக்கொடுப்பாரா எனக் கேட்டு கடுப்படிப்போம் வா.
அட்லாண்டிக் சிட்டியில் அட்ராசிட்டி கிடைக்குமா எனக் கேட்டு குபீர் கெளப்புவோம் வா.
அக்வாஜிம்மில் அக்வாபீனா கொட்டினால்தான் ஆச்சு என்று அடம்பிடித்து அடிவாங்குவோம் வா.
ஐநா சபையில் இந்த மைனாவிற்கு இடமில்லையா எனக் கேட்டு, இத்துப் போன டைமிங் சென்சால், பிளேடு போட்டே, பயங்கரவாதிகளின் லிஸ்டில் இடம்பிடிப்போம் வா.

மண்டையிலுள்ள மசாலாவைக் கிளற உகந்தது மசாலாப் பாலா, மசால் தோசையா என நீ விவாதித்துக் கொண்டிருக்கும் இந்நேரம், பாகிஸ்தான்காரன் நைசாக
பல பப்பாளி பிளான்களை வைத்து நம்மை முந்துகிறான் பார். பங்க்லாதேஷ்காரன் பல்டியடித்தே முந்தி விட்டான் பார். பொறுத்தது போதும் பொங்கியெழு. ஆஸ்திரேலியாக்காரர்கள் இந்த அதிபயங்கர குஷ்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி அரலூசாகட்டும். ஏற்கனவே நம் திறமையை துல்லியமாக வெளிப்படுத்திய சிக்காகோ நகரின் மகாத்மா காந்தி/ஜின்னா/முஜிபுர் ரகுமான் என்ற பட்டாத் தெரு, பம்மிப் பதுங்குபவர்களுக்கு பப்பரப்பாவெனப் பதில் கூறட்டும். கிளர்ந்தெழு, பொங்கிவிடு, புறப்படு.

இறுதியாக உன்னை உற்சாகப்'படுத்தியெடுக்க', சற்று நேரம் உற்று கவனித்தாலன்றி பாடியவர் ஆணா பெண்ணா என ஸ்ரீவித்யா மேடமே கண்டுப்பிடிக்க முடியாதபடியுள்ள, செல்டிக் காபி கம்பெனி ஓனரான ஹாரிஸின், முதல் முதலாகப் பாடலின் சில வரிகள்,

முதல் முதலாக முதல் முதலாக மொத்த மொத்தமாக மொத்து மொத்து வாங்க வா வா வா இனமே,
ஓஹோ, தனித் தனியாகத் தன்னந்தனியாக இலவசமாக செம வசவாக வாங்க
வா வா வா இனமே.

Sunday, July 19, 2009

பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... காலங்கள்

பொதுவா எனக்கெல்லாம் ஸ்கூல்ல, சின்ன வகுப்புப் படிக்கிறப்போ ஜாக்சன் தொரை கணக்கா தெரிவாங்க, ஆங்கிலோ இந்திய பசங்க. 'ஆ'ன்னு அவங்கல்லாம் பீட்டர் விடுறது பாத்து வாய் பொளக்குறது. இதுல இவங்கம்மா யாராச்சும் அதே ஸ்கூல்ல வேலைப் பாத்தா அவ்ளோதான். செம பவ்வ்வ்வ்............எல்லா டீச்சருங்களும், வீட்ல இருக்க டாக்கிட்டக் கூட டாக் இங்கிலிபீஸ்னு இம்சப்படுத்துவாங்க. அதால டீச்சர் வீட்டுப் பசங்களுக்குக் கூடுதலா இவங்க மேல கொலைவெறி இருக்கும். ஆனா தொரை லேங்குவேஜில் தில்லாலங்கடியா இருக்குறதில் கூட ஒரு பிரச்சினை கீதுன்னு, காலம் புரியவெச்சுச்சி.

நாங்கெல்லாம் ஒழுங்குப்புள்ளயா, யூகேஜிலருந்து, ஒரு விலங்குக்கு எக்சாம்பிள் கேட்டாக் கூட, ஒட்டா மக்கடிச்சு வாந்திஎடுக்குறதுதான். அப்போல்லாம் இந்தப் பசங்களோட ஆங்கில பிஸ்தை வெச்சு ஒரே ஸீனா இருக்கும். அப்டியிருக்கசொல்லோ, இந்த மேக் யுவர் ஓன் செண்டென்ஸ்னு ஆங்கிலத்துல வரும்ல, அதுல ஒருவாட்டி பீப்பிங் த்ரு அப்டின்னு வந்துச்சி. நாங்கெல்லாம் செவனேன்னு, மக்கடித்து வாழ்வாரே மெட்ரிக்கில் வாழ்வார், மற்றெல்லாம் ஐஸிஎஸ்ஸி பின் செல்பவர் அப்டின்னு எழுதுனா, நம்ம வகுப்பு தொரை மட்டும் சொந்த அறிவ உபயகோப்படுத்தி எல்லா டீச்சருங்களையும் படுத்திட்டார். அப்டியாப்பட்ட ஒரு வில்லங்கமான வரியை விரிவா விவரிச்சிட்டு ஹாயா போய்ட்டாரு. ஆனா, டீச்சரான அவங்கம்மாவுத் தான் ரொம்ப தர்மசங்கடமாகிட்டுது. அவனக் கூப்டு நாலு போட்டு கேட்டா, அவன் கொடுத்த, குற்றம் நடந்தது என்னங்கற ரிப்போர்ட் வேற செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......... ஆக்கிடுச்சி எங்க சிஸ்டரை.


இத விடப் பெரிய காமடின்னா, இதுக்கு எப்டி மார்க் கொடுக்குறதுன்னு நடந்த விவாதம்தான். கொடுத்தாலும் ரொம்ப குஷ்டமாகிடும், கொடுக்கலைன்னாலும் சரியா இருக்காது. அப்போலருந்து எங்கள மாதிரி சாம்பிராணிகளுக்குக் கெடச்ச மரியாதையே வேற. பின்ன, ஆர்வக் கோளாறு கேசுங்களால ஆகுற இம்சயத்தான் பாத்தாங்கல்ல.

இதே மாதிரி மொழிப் பிரச்சினை என்கிட்டயும் வெள்ளாடிடுச்சி. எப்டின்னா, நான் பிரான்ஸ் வந்து தம்தூண்டு பிரென்ச் புரிஞ்சிக்கக் கூட எனக்கு 1 மாசம் தேவப்பட்டுச்சி. ஆனா, எங்க மாமியார் அதுக்குள்ள என்னைய பிரென்ச் கருத்துப் போலீசா மாறச் சொல்லி டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... ஆக்குவாங்க. நானும் சும்மா சுப்ரமணிய ஸ்வாமி பேச்சைக் கேக்குற நிருபராட்டம் மையமா தலையாட்டுறது. ஒரு தடவ இப்டித்தான் டிவில முதியோர் சம்பந்தமான புரோகிராம் வந்துச்சி. இவங்க வழக்கம்போல என்கிட்டே திரும்பி ஸ்பீடா பேசிக்கிட்டே போய், என் கருத்த எதிர்பாக்கராப்டி நிறுத்துனாங்க. சரி இருக்கட்டும்னு மொதல்ல அவங்க மூஞ்சைப் பார்த்தேன் நல்லா சிரிச்சிக்கிட்டுத்தான் இருந்தாங்க, அடுத்து இவ்ளோ நேரமா பேசிருக்காங்களே, எதுக்கு மையமா தலைய ஆட்டனும், பேசாம இந்த தரமாவது நல்லா ஆமோதிச்சி தலைய ஆட்டோ ஆட்டுன்னு ஷேர்ஆட்டோ கணக்கா ஆட்டி ஆதரவு தெரிவிச்சி, அவங்க மனச குளிர்விக்கலாம்னு முடிவெடுத்து, தலைய சும்மா தஞ்சாவூர் பொம்மை கணக்கா ஆட்டினேன்.

பயங்கர குஷியாகிடுவாங்கன்னு பாத்தா, அப்டியே மூஞ்சு மாறிடுச்சி. என் மாமனார், என் ரங்கமணி எல்லாரும் அப்டியே, ராமநாராயணன் படத்துல மனுஷன ஹீரோவாப் பாத்த மாதிரி செம அதிர்ச்சி எபெக்ட் கொடுக்குறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........நாம ஆதரவுதான தெரிவிச்சோம், ஒய் திஸ் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........எபெக்ட் அப்டின்னு யோசிக்கும்போதே, கண்ணீர் மல்க என் மாமியார் ஓட, பின்னாடியே இவங்க ரெண்டு பேரும் போய் '$$$$ &&& §§§§ ££££', அப்டின்னு வெளக்கம்லாம் கொடுத்து ஒருவழியா சமாதானப்படுத்திட்டு வந்தப்புறம், மெதுவா அப்டி என்னத்த நான் தப்பா பண்ணேன், அவங்களுக்குத்தான ஜால்ரா அடிச்சேன்னு கேட்டேன். அதுக்கு கெடச்ச பதில்தான் என்னைய செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............ஆக்கிடுச்சி. அப்டி என்னத்த சொன்னாங்கன்னு முக்காவாசிப் பேர் யூகிச்சிருப்பீங்க, மீதி பேருக்கு தெரியனும்ல. அவங்க சொன்னது,'வயசானவங்க எல்லாம் இருந்தாலே தொந்தரவு தானே, நான் கூட சீக்கிரமே போய்டனும், கரெக்டா?' .

Sunday, July 12, 2009

டேக்சா தலையனும் டபரா மூஞ்சிகளும்

பொது அறிவு குவிஜு: இந்தியன் பேங்க் கோபால கிருஷ்ணன் இருக்காரே, அவரை குத்தவாளின்னு அறிவிச்சத வாபஸ் வாங்க சொல்லப்போறாங்களாம். ஏன்? விடை கடசீல.

கொலக் கொல கொலப் பண்றாங்கப்பான்னு கத்திட்டே ஓடனும் போல இருக்கு வர்ற பதினாலாம் தேதிய நெனச்சா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............பின்ன என்னாங்க, கொடும கொடுமன்னு கோவிலுக்குப் போனா, அங்க ரெண்டு சிவசங்கர் பாபா கல்கி அவதார வேஷத்துல டான்சாடுனாப்டி, இந்த ஹாரி பாட்டர் படம் ரிலீஸ் பண்றாங்களே.

கஷ்டப்பட்டு, குஷ்டப்பட்டுன்னு அந்த சீரீஸ் வந்தப்போ, நாமளும் கொயந்த மனம் படைத்த சுட்டிப் பெண்தான் அப்டின்னு முக்காவாசிப் பெண்களையும் ஆண்டிகளையும் போல நானும் ஒரு சீனப் போட எம்புட்டோ முயற்சி பண்ணேன். ம்ஹூம், யம்மாடி, என்னா கொடுமையா இருந்துச்சி, இத படிக்கிறத்துக்கு, எழவு, நான் எழுதுன கண்றாவி லவ் லெட்டரையே நாலஞ்சிதடவ படிக்கலாம் போலருந்துச்சி. இந்த அரலூசு ஹாசினி எபெக்டுக்கு(நன்றி சந்தோஷ் சுப்ரமணியம்) நாலஞ்சு வருஷம் முன்ன நல்ல வரவேற்பு இருந்ததால, அதைப் பாலோ பண்ண, பற்பல மங்கையர் மங்கா முயற்சியில் ஒரு முடிவோட ஈடுப்பட்டிருந்தபோது, பைந்தமிழ் மாதான நானும் செவ்வனே சீப்பால் மண்டையில் சொரிந்துக்கொண்டே இதற்காக செக்கிழுத்தேன்(முழுலூசான நீ அரலூசாக நடிக்க ஏன் கஷ்டப்பட்டேன்னு கேட்டா, உங்க சமையல நீங்க பாராட்டுறதுல இருக்கக் கஷ்டத்தைவிட உங்க மாமனார்/மாமியார் சமையலை பாராட்டுறது எம்புட்டு கஷ்டம்னு புர்தா). அடங்கொன்னியா, எங்கக்கா பையன் சொல்ற கதைல இருக்கக் கற்பனையும் இன்டிரெஸ்டிங்க் திருப்பமும் மாயாஜாலங்களும் கூட இதுல இல்லை.

சரி, புக்க படிக்கிறாப்டி பாவ்லா காமிச்சு வழக்கம்போல அட்ஜஸ்ட் பண்லாம்னு முடிவுப்பண்ணிட்டு கம்னு கெடந்தா, அப்பவும் விடாம வந்து, இதப் படிச்சிட்டு வர்ற பீலிங்கை சொல்லுன்னு ஒரு தறுதலக் குரூப்பு(பின்ன என் நண்பர்கள்னா) அலஞ்சிது. நாம என்னைக்கு இதுக்கெல்லாம் அசந்திருக்கோம், நா இப்டிங்கும்போது, இவங்க வேற எப்டி இருக்கப் போறாங்க. வேற எங்கயோ சீனப் போட, இங்க வந்து ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வோர் பீலிங்க்னு ஆட்டயப் போடுறாங்க, விக்கீயக் கூடப் படிக்காம, புருடா விட ஆளத் தேடுதுங்கன்னு புரிஞ்சிடுச்சி. விடுவனா நானு, சொம்மா சொழட்டி சொழட்டி சோழிய உருட்டுறாப்டி, கேவலக் கேவலமான திருப்பங்களோட டூப் விட்டாச்சு. அதையும் இதுங்க அட்சரம் பிசகாம நோட் பண்ணிக்கிட்டு எங்கயோத் தன் கொயந்த உள்ளத்த தேள் கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டிருக்குங்க. இதுல டார்ச்சரின் உச்சக்கட்டம்னா, இந்த கப்சாவையும் அந்த டாம் குரூஸ்(அதாவது ஸ்லைட்டா நட்டு கழண்ட கேஸ்) கோஷ்டி ஆமோதிச்சி ஜல்லியடிச்சிருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

ஏன் கொரங்கு உன்னை யாராவது பெல்டால அடிச்சு, சொவத்துல தேச்சு படிக்க சொன்னாங்களான்னு கேட்டீங்க, அப்புறம் கவுஜ பாடிடுவேன். மொதல்ல லொடுக்கு சுந்தரிகள், அல்லக்கைகள் இந்த டெர்ம்சுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சிட்டு வந்து பேசனும், ஆமா. நாங்க எந்த உருப்படியான, பெப் டிரென்ட் வந்தாலும் ஒடனே போய் அதை ஒட்டா காப்பி அடிச்சு, 'தூ' அப்டின்னு அந்த பெப் குரூப் காறித்துப்பி தொரத்திட்டு, வேற டிரெண்டுக்கு மாறுறவரை விடாம தொரத்துவோம்.

சரின்னு, ஆயிரம் கண்டிஷன் போட்டு ஒரு அபூர்வ சிகாமணியக் கண்ணாலம் பண்ணிட்டு வந்தா, ஏன் ஆயிரத்தோராவது கண்டிஷன் போடலைன்னு யோசிக்க வெக்குறமாதிரி இவரும் இந்த ஹாரி பாட்டர் ரசிகர். பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........ஆகிப்போச்சு. இதுல நான் போட்டுக் கொடுத்த பாதையான நைனையென நச்சரித்துக் காரியம் சாதிக்கும் வழிக்கு எனக்கே மேப் போட்டு காட்றாரு. பின்ன, அஞ்சப்பர் நாளைக்குப் போகனும்னா, இன்னைக்கு ஹாரி பாட்டர் பாத்தே ஆகனும்னா என்னத்தப் பண்றது. வாழ்க்கையில் சொத்தை வெச்சு வெள்ளாடுறதும், சோத்த வெச்சு சூதாடறதும் ரொம்பத் தப்புன்னு வர்ற மாரல் சயன்ஸ் கதைங்கள படிக்காதீங்க, இந்த வெளங்காமப் போன சூனியக்கார கதையப் போய் கட்டிட்டு அழுங்கன்னு ஒரு பாட்டம் குமுறினப்புறம், ஒரு சமாதான உடன்படிக்கைக்கு நாங்க வந்தோம்.

அதென்னன்னா, ஒன்லி ஹாரர் மூவீஸ் மட்டுமே திரையரங்கில் போய் பாக்குறது. இந்த கடுப்பஎல்லாம் திருட்டுத்தனமா டவுன்லோட் பண்ணி மட்டுமே பாக்குறதுன்னு ஒரு கொள்கை முடிவெடுத்தோம். ரத்தக் காட்டேரி, பேய், பிசாசு இப்டிப்பட்ட படங்களை தேடித்தேடி பாக்க ஆரம்பிச்சோம். (வேறென்ன, என்னைய ஸ்க்ரீன்ல பாத்துக்கற ஆர்வம் எனக்கு, பொண்டாட்டிய மேக்கப்பில்லாம பாக்குற ஆர்வம் அவருக்கு).

சரி அதான் பிரச்சினை முடிஞ்சிடுச்சே, இப்ப ஏன் பொலம்பி சாவடிக்கிறேன்னு கேட்டா, வேறொன்னுமில்லை மக்களா, இப்போ Daniel Radcliffe அண்ட் கோ கண்றாவியா வளந்து, பாக்க பயங்கரமா ஆகிட்டதால இதுவும் இப்ப ஹாரர் படம்தான், போய் பாத்தே ஆகனும்னு சொல்றாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

டிஸ்கி : எத்தனப் பேரு கெளம்பிருக்கீங்க இப்டி? கொயந்த உள்ளம்னு புரூவ் பண்ண, போய் கொயந்தயோட வெள்ளாடுங்க, இல்ல கண்றாவியான பால் சோறு தின்னு வாந்தி எடுங்க. இப்படியா போட்டு சாவடிக்கிறது?, அப்டின்னு டேமேஜ் பண்ண நெனைக்கிறவங்க வீட்ல எல்லாம் இருபத்துநாலுமணிநேரமும் வெறும் போகோ சானல் மட்டுமே வருமுன்னு, யாகவா முனிவர் கிமு 700ல சொல்லிருக்கார்.

விடை: டிராக் மீ டு ஹெல்(இந்தப் பதிவைச் சொல்லல) படம் பாத்தீங்கல்ல, வீட்டு லோன்ல சலுகைக் காமிக்காததால அந்தப் பொண்ணு என்னா பாடுபடுது. அப்டிப்பட்ட சூனியக்காரங்களுக்கு பயந்துதான் நம்ம கோவாலு சார் எக்கச்சக்கமா வாரி வழங்கிட்டாராம். இந்தியன் பேங்கை அவரு தன் சொந்த பேங்கா நெனச்சு, இரக்க சுபாவத்தொட பரம்பர சொத்தை பட்டாப்போட்டு கொடுக்குற உற்சாகத்தோட கடன கொடுத்திட்டு,கொஞ்சம் பயந்த சுபாவத்தால கடன வசூல் பண்ணாதது எல்லாம் ஒரு குத்தமா மக்களாய்? இதுக்குப் போய் உள்ள தூக்கி போட்டுட்டாங்களே. ச்சே என்னா நாடு இது!!!

Thursday, July 9, 2009

ஒலக லெவல் பிரபலத்துக்கு வந்த உன்னதக் கடிதம்

டிஸ்கி 1 : இது சோம்பேறி மனச புண்படுத்தும்னு யாராச்சும் நெனச்சாக்கா, ஹி ஹி, இப்டி காப்பியடிச்சாச்சும் சோம்பேறி மனச புண்படுத்த முடியுமான்னு பாக்கத்தான் செய்றேன்னு பெத்த ஸ்மைலுடன் தெரிவிச்சிக்கிறேன். இது கன்பர்ம்டா அதுக்கான முயற்சிதான்.

டியர் ஜாக்சனு,

நீங்க ரொம்ப நல்லா ஆடுறீங்க மச்சி. முக்கியமா "ஐ லவ் டு டூர்" அப்டின்னு உங்க நடிப்ப யூட்யூப்ல பாத்து பாத்து வயிறே புண்ணாக்காகிடுச்சு. அதில் வரும் மேக்கப் அக்காக்களின் நக்கலும் சிரிப்பும் மனதில் இன்னும் நிற்குது(எப்டியும் அது உங்களுக்கு நெனவிருக்காதுன்னு அதையும் அனுப்பிருக்கேன் பாருங்க).

நான் இதுக்கு முன்னாடி இப்படி மெயில் அனுப்பினது இராப்புக்கு மட்டும் தான். நீங்க என்ன மறுபடியும் எழுத வச்சிட்டீங்க. உங்க நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் வாங்கனும்னு நெனைக்கும் போதெல்லாம், நீங்க குவாட்டர் அடிச்சுட்டு குப்புற விழுந்து கெடப்பீங்களோன்னு நெனச்சு தான் இப்ப மெயில் அனுப்புறேன். உங்கள இராப்பின் "கேசட் கால தல" போஸ்ட் மூலமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க சமீபத்துல "ஜஸ்ட் பீட் இட்னு" ஒரு பாட்டு பாடிருப்பீங்க, அதே தான் இப்ப உங்களுக்கு நான் சொல்றேன் "மவனே! இனிமே பாடி ஆடுறத நிறுத்தின ஒதைப்பேன்". இது கடிதம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கட்டளை...

இப்படிக்கு,
Mrs. கொலைவெறி குப்பன், தில்லி பஜார்மை டியர் மிசஸ்.குப்பலாரி, சாரி பஜாரி , ஓவ் ஸாரி மிசஸ். கொலைவெறி குப்பன், தில்லி பஜார் ,

நான் போய் சேர்ந்து ரெண்டு வாரமாகுது, இப்பயா லெட்டரு போடற? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

அது ஏன் உனக்கு மட்டும் கண்ணால பாத்தா வயிறு புண்ணாகுது?

நீ நெஜமாவே மிஸஸா, இல்ல மிஸ்டரா? ஏண்டா டுபுக்கு, மேக்கப் அக்காங்களோட சிரிப்பு மனசுல நிக்குதுன்னு ஒரு பிட்டப் போட்டுட்டு, பேச்சா பேசுற வெண்ணை. இந்த டுபாக்கூர நான் உசிரோட இருக்கும்போதே நம்பிருக்கமாட்டேன். இப்ப நான் ஆவியா சுத்தறதுதான் சிஎன்என்லருந்து எல்லாத்துலயும் அலறுதே, பாக்கலையா(நீ எங்கருந்து பாத்திருக்கப் போற, எண்பத்திரண்டுல வந்த பாட்டையே சமீபத்துலன்னு சொல்லி பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........ஆக்குற). அடேய் டேய் அடடடேய், என் பேட்டிய எனக்கேப் போட்டு படங்காட்டுறியா? டேய் வேணாண்டா, என் ரெண்டாவது சம்சாரம் கொடுத்த பகீர் பேட்டியப் பாத்தல்ல, என்னா மாட்டி விட்டுறவா அவங்கக்கிட்ட? அவங்கக் கைல கெடச்சே கைமாதாண்டி மாப்ள.

அடங்கொன்னியா, சரக்கடிச்சு மட்டயாகுற சப்ப ரேஞ்சுல நானிருந்தா, ஏண்டாப்பா ஒரு மருந்துக் கடைய ஏலத்துல எடுத்து வெச்சு, முப்பது டாக்குடருங்கள இப்போ வம்புல மாட்டி விட்டிருக்கப் போறேன். இப்ப வேணா செத்து செத்து வெள்ளாடுற வெள்ளாட்டிருக்கு, சேர்ந்து ஆடலாமாடாப்பா?

அடேய் நீ சொல்லிருக்க மத்ததக் கூட தாங்கிப்பேண்டா, ஆனா இராப்புங்கற கொரங்கோட பதிவ பாத்துதான் என்னையத் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொல்லுறப் பாரு அதிலிருந்தே தெரியுதுடா, நீ பாப்பரசிக்கு பொறந்த பாப்பரசின்னு. டேய், இங்க வந்தாலும் விடமாட்டீங்களாடா? நீ தில்லின்னு போட்டுட்டா, நாங்க பாரின்னு பயந்து பம்மிடுவமாடா?

அடேய், மார்டின் பஷீர் தலையனுங்களா, அதான் என்னைய நிம்மதியா ஆவியாக்கூட உலாத்தவிடாம, ஒலகம் முச்சூடும் மூவாயிரம் சேனல்லருந்து, ட்விட்டர் வர போட்டு தாக்கோ தாக்குன்னு தாக்குறீங்களேடா. இதுல செல கெரகம் புடிச்சவங்க, நான் இன்னும் உசிரோடத்தான் திரியறேன், செத்துப் போனாப்டி சீனப் போடறேன்னெல்லாம் கெளப்பி விட்டு, இப்போ இங்கிருக்க பாதி ஆவிங்க என்னைய ஆவியே இல்லன்னு சந்தேகப்பட்டு செட்டு சேத்துக்க மாட்டேன்னு சாவடிக்குதுங்க, மீதி ஆவிங்க வந்து ஆட்டோகிராப் கேட்டும், மூக்க கிள்ளியும், சூரியனான்டக் கூட்டிட்டுப் போய் என் கலர சோதிக்கிறேன் பேர்விழின்னு அறிஞர் அண்ணாக்கிட்டக் கூட்டிட்டுப் போயும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்குதுங்க. இப்போ திருப்தியாடாப்பா உங்களுக்கு. இருக்கப்ப கருங்கொரங்கு ரத்தத்தை சூப் வெச்சு சிம்பன்சிக்குக் கொடுத்தேன்னு பீதியக் கெளப்பி விட்டுக் கும்மியடிச்சது போதாதாடா?

அந்த பிரின்ஸ் பயல போட்டுத் தாக்கறத்துக்காக நான் ஒன்னைக் கெளப்பி விட்டா, நீங்க ஒம்போதை கெளப்பிவிட்டு, உங்க டோப்புக்கு என்னைய ஏஜண்டாக்கிட்டீங்களேடா. ஆளவிடுங்கடா சாமி.


டிஸ்கி 2: அதெப்படி ஜாக்சனப் புடிச்சுத் தமிழ் பேச வெச்சேன்னா கேக்குறீங்க, நம்ம ஆவி ரவிச்சந்திரன் கணக்கா இங்கிருக்க மீடியத்தப் புடிச்சு, அல்லல்லல்லோன்னு கத்தி, டி.ஆர் பத்திரிக்கக்காரங்கக்கிட்ட ஆடுன ருத்திரத்தாண்டவத்த போட்டுக் காமிச்சு, பயமுறுத்தி, இதனை செவ்வனே செஞ்சேன்.

Sunday, July 5, 2009

அவ்வா அவ்வா அவ்வவ்வா

நானும் நம்ம முல்லைலருந்து யாராச்சும் இந்தப் பாட்ட வெச்சு ஒரு போஸ்ட் போடுவாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன், ஒருத்தரும் கண்டுக்கறமாதிரி காணோம்.

இதை நான் ரொம்ப தம்தூண்டா இருக்கறச்சே(எல்லார்க்கும் இருக்காப்டி, மாதுங்கா சித்தி எங்களுக்கும் உண்டுல்ல), கேட்டது. அது கொஞ்சம் வித்தியாசமா, திருவிழா கச்சேரி கணக்கா, கொஞ்சம் பிசிறடிச்சி இருந்தது. ஆனாலும், பாட்டென்னவோ டக்கரா இருந்துச்சி. ஏதோ ஆல்பம் அப்டின்னெல்லாம் பேசிக்கிட்டாங்க, பாடுன ஆள் பேரு மட்டும் மனசுல ஓட்டல. அப்போதான் ஒரு பாட்டை ஒருதரம் கேட்டாலே மனப்பாடமாகிடுமே நமக்கு. இன்னும் ஹிந்தின்னா கேக்கனுமா, காக்ரே பூக்ரேன்னு நாமளே ஒளறவேண்டியதுதான.

அப்பாலைக்கு கொஞ்ச நாள்ல எல்லாம் பிசிறடிக்காம அதே பாட்டு இன்னும் டக்கரா ரேடியோல வந்துச்சி, அடடா நெறைய பேர் சொல்லி, அண்ணன் இன்னும் தெளிவா பாடி அனுப்பிருக்காருன்னு ஒரு சிந்தனையப் போட்டுட்டு வழக்கம்போல தப்புதப்பா கூட சேர்ந்து கத்த ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நாள்ல ஊரே இந்தப் பாட்டை முணுமுணுக்குது. ரூப் தேரா, ஜிம்மி ஜிம்மி, யம்மா யம்மா, ஏக் தோ தீன் வர்சைல இன்னொரு பாட்டு கெடச்சிடுச்சுன்னு மதிமயங்கிக் கெடந்தோம்.

அப்றம்தான் நான் மொதல்ல கேட்டதுதான் ஒரிஜினல், ஹசன் ஜஹாங்கிரோடது. அதை வழக்கம்போல நம்ம மூசிக் அண்ணாத்தேக்கள் சுட்டாச்சுன்னு தெரிஞ்சிது.

ஆனா, இப்போ எவ்ளோ தேடுனாலும் சுட்ட பழம் கெடைக்கல, ஒரிஜினல்தான் கெடைக்குது. காப்பி அடிச்சு காப்பி போட்டவனும், தவளயக் கொன்னு தவுலு செஞ்சவனும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைங்கறத மறுக்கா உறுதிப்படுத்திச்சி இந்த மேட்டர்.
(பாட்டுக்கு ஆடுறவரை ஞாபகம் இருக்கா, தூர்தர்ஷன் சீரியல்கள் மட்டுமில்லாம, சுசித்ரா சேகர்கபூரோட தமிழ்ல சிவரஞ்சனின்னு ஒரு ஒலக மகா மொக்கப் படத்துல நடிச்சாரே)
இப்போவரைக்கும், கேசட்ல பாட்டு ரிக்கார்ட் பண்ற கடைங்க எதாவது சந்துல மிஞ்சிருந்தா, இந்தப் பாட்டு கண்டிப்பா இருக்கும் அவங்கக்கிட்ட.

நான் படிச்சது, கத்தோலிக்கப் பள்ளி. அங்க எதுன்னாலும் சிறப்பு விருந்தினர் கண்டிப்பா, ஒரு பிஷப், ஒரு பாதர் இப்டி யாராச்சும் இருப்பாங்க. இவர்களில் பந்தா பரமாத்மாக்களும், தூய பரமாத்மாக்களும் சரிவிகிதத்தில் உண்டு. ஆனா, இவங்கள்ளயே பொறுமையின் சிகரம்னா, கசிமீர் ஞானாதிக்கம் அவர்கள்தான். யப்பா, அவரு மாதிரி ஒருத்தர பாக்குறதுக்கு சான்சே இல்லை. பொதுவா, அவர் பதவில இருக்கவுங்க கொஞ்சம் பெரிய லெவல் விழான்னாதான் வருவாங்க. ஆனா, இவர் திருச்சபய சேர்ந்த சின்ன பள்ளி, சின்ன விழா எல்லாத்துக்கும் பாரபட்சமே பாக்காம கண்டிப்பா வருவார்.

ஆனா, இதால அவரு அடைஞ்ச டார்ச்சர்களில் ஒன்னு, அங்க நடக்கிற கலைநிகழ்ச்சிகள். ஒருதரம், சர்ப்ரைசா(அதிர்ச்சியடைய வேண்டாம், எங்க ஸ்கூல் பத்தி அப்பாலைக்கு வெளக்குறேன்), இந்த ஹவா ஹவா பாட்டை அவர் முன்னாடி போட்டு ஆடிட்டு, அவர் ரியாக்ஷனப் பாக்கனுமே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

இதோட ரீச் தமிழ்நாட்ல எந்தளவுக்கு இருந்திச்சுங்கறத்துக்கு, ஒரு உதாரணம்.
இந்தப் பாட்டை, தமிழ்ல கூட கேட்டதா ஞாபகம். அப்போதான், ஏக் தோ தீன்லருந்து நெறயப் பாட்டை இப்டி டப்புவாங்களே.

ஓகே ரைட், இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூல் போக ஆரம்பிக்கலை ரேஞ்ச் பின்னூட்டங்களப் போட்டுத் தாக்கலாம் வாங்க.

Friday, July 3, 2009

ஐ கேன் வாக் இங்கிலிபீஸ், டாக் இங்கிலிபீஸ், லாப் இங்கிலிபீஸ்.

பதிவர்களுக்கும்(என்னையும் சேத்துத்தான்), இந்த காட்சிகளுக்கும் எகனமொகனயா ஒரு ஒத்தும இருக்கு. என்னன்னு தெரியுதா?வேறொன்னுமில்லை, திமிர் பிடிச்சக் கதாநாயகி நம்ம மாஸ் ஹீரோக்களைப் பாத்து 'யூ யூ' என ஆரம்பிக்கும்போதே, அப்டியே செம பார்முக்கு வர்ற நம்ம ஹீரோக்கள் எலிசபெத் ராணியே கதறிட்டு ஓடுறாப்டி இங்கிலிபீஸ்ல கொதறிடுவாங்க. அதுமாதிரியே, தப்பித்தவறி யாராச்சும், ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டா, நாமளும் அதான பண்றோம்.

எல்லாம் விவேகானந்தர் துணை:):):)

Thursday, July 2, 2009

மனக்குஷ்டம் - பார்ட் 1

டிஸ்கி 1: இராப் என் கணவரின் குடும்பப் பெயர்.

என் பேர் முக்காவாசிப்பேருக்குத் தெரிஞ்சிருக்கும், தெரியாதவங்களும் இதப் படிச்சா ஈசியா கெஸ்ஸலாம்.

எனக்கு ஏன் பிளஸ்சிங் மிஸ்னு பேர் வெச்சாங்கங்கறதுக்கு ஒரு சப்பப் புராணம் இருக்கு. அதாவது, எங்கம்மாக்கு யூட்ரசை ரிமூவ் பண்ணவேண்டிய அளவுக்கு ஒரு பிரச்சினை இருந்துச்சாம், ஆனா, அறுவை சிகிச்சை பண்ணவேண்டிய அன்னைக்கு, அதை பண்ண வேண்டிய கடுகடு காளியாம் டாக்டர் இரமணி சிவராம், கால் தடுக்கி விழுந்து பல்லை ஒடைச்சிக்கிட்டாங்க. அவங்க பல்லெல்லாம் கட்டி தேறி வர்றத்துக்குள்ள பெட் ரெஸ்ட்ல இருந்த எங்கம்மாக்கு தானாவே குணமாகி, அதுக்கப்புறம் பொறந்த தெய்வக் கொயந்த நான். எனக்கிந்தப் பேரை வெச்சது எங்கத்தை. அவங்களோட பரம வைரியான ரமணி சிவராமின் பல்லை உடைச்சிட்டு, தடை பலத் தாண்டி பொறந்ததால இந்தப் பேரை வெச்சாங்க.

அட கெரகமே, உன்கிட்ட ஹலோன்னு சொன்னவங்களுக்குக் கூட இதச் சொல்லி சாவடிப்பியே, இங்கயும் அதையே ஏன் கீறல் விழுந்த ரிக்கார்டாட்டம் ரிப்பீட்டுறேன்னு கேக்குறது புரியிது. பட் யூ சி, வழக்கம்போல இத வெச்சு ஒரு கேவலமான கருத்து சொல்ல முயற்சி பண்ணப்போறேன்.

அந்தப் பேர் வெச்ச காரணத்தாலோ என்னவோ இன்னி வரை நானும் எங்கத்தையும் யாருக்கு யார் மொதல்ல சூனியம் வெக்கிறதுங்கற ரேஞ்சிலயே போட்டி போட்டுக்கிட்டு திரியற அளவுல இருக்கோம். அதோட, சின்ன வயசுலருந்தே கூடப் படிக்கிற லொடுக்கு மற்றும் 'தல'கள் அனைவரின் பேரும் சும்மா ஸோக்கா இருக்கச்சே, நம்ம பேர் மட்டும் இப்டி சுமாரா போச்சேன்னு ஒரே கவலையா இருக்கும்.

ஸ்கூலுக்கு புதுசா வர்ற கெமிஸ்டிரி வாத்திலருந்து, பிடி தாத்தா வரை எல்லாருக்கும் என் பேரை கேட்டவுடன் எகத்தாளம். அடங்கொன்னியா, மொத்தப் பரம்பரைக்கும் சேர்த்து ஒத்தப் பேரையே குத்தகைக்கு எடுத்து கித்தாய்ப்பா வெச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்க உங்களுக்கு இதெல்லாம் ஓவருய்யான்னு நெனச்சுக்கிட்டு லூஸ்ல விட்டிருவேன்.

சரி சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறப்பவாவது, நிம்மதியா இருக்கலாம்னா, அங்கயும் பிரிட்டனுக்கு பிரிட்டானியா பிஸ்கோத்து விக்கறவங்களாட்டம் பேரு வெக்கிறது, சுஷ்மிதா, ஸ்வேதா, பாபின்னு. கிர்ர்ர்ர்ர்ர்..............இதுல இதுங்க எல்லாம் சர்ச் பார்க் ரேஞ்ச் பள்ளிக்கூடத்துல படிச்சிக்கிட்டிருக்க, சுயத்தை இழந்த(இது பின்நவீனத்துவம், நாட் சாப்டற சுய்யம்) கேசுங்களா இருந்திட்டா, நம்ம பாடு அதோகதிதான். பருப்பு சாதம் சாப்ட பாண்டாக்களாட்டும், சாதா ஸ்கூலில் படிக்கும் எங்களைப் போன்ற சோதாக்களை, எங்க பெயர்களை வெச்சே தாளிச்சிடுங்க.

இந்தச் சமயத்தில் தான் அலைபாயும் பல்லுடையப்பன் எம்பெருமான் மாதவனோட மின்னலே ரிலீசாச்சு. கால்ராவோட பொறந்த டைபாய்டாட்டும் எனக்கு வெறி புடிக்க வெச்சாரு விவேக். எங்க வகையறா பேருடயோரை அந்தப் படத்துல டோட்டல் டேமேஜாக்கிட்டார். செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............ஆகி ரொம்ப நாள் மொளகா பஜ்ஜிய முழுங்குன மூஞ்சூராட்டம் திரிஞ்சிக்கிட்டிருந்தோம். அப்பாலைக்கு புலன்விசாரணைல இறங்கினப்போதான், இவரம்மா அப்போ முதியோர் இல்லம் போயிட்டதா கெளம்புன வதந்திக்கும், அவர் பொண்டாட்டி பேர் என்னாங்குறதும், அவங்க பேருக்கும், அந்த வசனத்துக்கும் இருக்க பட்டர்பிளை எபெக்ட் தொடர்பும் தெரியவந்துச்சி. அடப்பாவிகளா, உங்க படையலுக்கு, எங்கள பலியாடாக்கிட்டீங்களேய்யான்னு அவராட்டமே வெத்தா அனத்திட்டு ஓஞ்சோம்.

சரின்னு கடலை வறுக்க அபீஷியலா கத்துக் கொடுக்குற எடத்துல போய், நிம்மதியா ஜோதில(தியேட்டர் லேது) ஐக்கியாமாகிக்கிட்டிருக்கும்போதுதான் குட்டிசாத்தான் குட்டிக்கரணம் போட்டுக்கிட்டே நடக்கறாப்டி ஒருத்தன் வந்தான். 'என்னா சீனியருக்கெல்லாம் விஸ்(ஆமா அவனுக்கு சார்ட் நேம் புகழ் சுப்பி மாதிரி ஷா சொல்ல வராது) பண்ணமாட்டியா'ன்னான். ஓவ், திஸ் இஸ் ரேகிங், யூ மை சீனியர், அப்டிங்கற பாச உணர்ச்சியோட, வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்ச்சியை மண்டைல ஏத்திக்கிட்டிருக்கும்போதே, அடுத்த கேள்வியக் கேட்டான். வாட் இஸ் யுவர் நேம்னு, சொன்னா, அதுக்கு அடுத்து அவன் சொன்னதுதான், அவனோட சொட்டத் தலைய இன்னிவரைக்கும் மத்த இத்துப்போன சப்பைங்களிடம் இருந்து மறக்காம இருக்க வெக்குது. அது என்னன்னா, 'ஏன் உங்க வீட்ல காயத்திரி, நித்யா, பிரியான்னெல்லாம்(அப்பவும் இவன் யோசனை இம்புட்டுதான்) வெக்கலைங்கறான்'. ஆமாம்டாப்பா, மொட்ட புதன்ல, ஒரு குட்ட சொத்தப் பல்லன் இப்டி கேள்வி கேப்பான்னு கணிச்சு பேர் வெக்கனுமா, பாவிகளான்னு குமுறிட்டு இருக்கும்போதே தெனாவெட்டா தன் பேரை சொல்றான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................என் பேரோட ஆண்பால் அவன் பேர்.


இதுக்கப்புறம் மக்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, 'பொருளேய்,தொப்பி, சட' இப்டின்னு பற்பல உன்னதப் பெயர்கள வெச்சுக் கூப்டதால மனக்குஷ்டம்(பின்ன கொழுப்பெடுத்துக் கவலைப்பட்டா, அது குஷ்டம்தான) கம்மியாகியது. ஆனாலும் அப்பப்போ கடுப்பாகி வீட்ல கத்துனா, தோ பாரு தலைவருக்குப் புடிச்ச பேரு. அவங்க குடும்பத்துல முக்காவாசிப் பொண்ணுங்களுக்கு இந்தப் பேருதான் இருக்கும் பாருன்னு சமாதானம் வேற. தோடா, அவுங்கள்ல முக்காவாசிப் பேர் அரசியல்ல குதிக்கச் சொல்லோதான், தாத்தா வெச்ச பேரை யூஸ் பண்ணுவாங்கன்னு சாதா தொண்டருங்களுக்கே தெரியும்போது, எனக்கு கடுக்கா கொடுக்க முடியுமா.

இதெல்லாத்தையும் விட எனக்குப் பெரிய அதிசயம்னா, எங்களோட செட்டு சேரவேண்டிய நாகரத்தினங்களும், வள்ளிகளும், ராணிகளும் ,ரூபசந்திராக்களும் கூட சேம் சைட் கோல் அடித்ததுதான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........அதால, எல்கேஜியிலேயே எக்ஸ்ட்ரா கேஜியுடன் திரிந்த பிங்கியிடம் இருந்து ஓடினேன். பிப்டி பிளஸ்சான பிடி மாஸ்டரை பிப்த் ஸ்டாண்டர்டிலேயே பக்பக் பண்ண ஸ்வேதாவிடம் இருந்து ஓடினேன். கடலை, திவ்வியமான பொழப்பு. ஆனால் அதனை கல்லூரியிலாவது நிம்மதியாக வறுக்க விட்டார்களா இந்த அஷ்மிதாக்களும் அகான்ஷாக்களும்? இப்படி ஓட்டியவர்களிடமிருந்தெல்லாம் ஓடினேன் ஓடினேன், பைனல் இயர் வரை ஓடினேன். அன்று பிங்கிக்களும் ஸ்வேதாக்களும் அஷ்மிதாக்களும் அகான்ஷாக்களும் ஓட்டியபோது அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும், கடலையில் கட்டுடைப்பு செய்திருக்கவேண்டும், இப்பொழுது அட்வைஸ் பண்ணி பின்னூட்டம் இட வருவோர், அப்படிச் செய்தார்களா, சப்போட்டா வித்தார்களா இப்பொழுது காறித் துப்ப வருவோர்?
ஒருவழியா, பொங்குற பால்ல கூவம் தண்ணிய ஊத்துனாப்டி, ஆருமே கண்டுக்காததால கேவலமாகி தானா அடங்கிட்டேன்.

அப்பாலைக்குக் கல்யாணமாகி இங்க வந்தப்புறம் பாத்தா, என் பேர் சேர்ந்தாப்டி சகஜமானப் பெயர் இல்லைன்னாலும், பாதி பாதியா நெறயப் பேருக்கு இந்த நாமகரணம் உண்டுன்னும், நான் ஏங்கின பலரோட பெயர்கள் இங்கு நார்நாராக நாராசமாக கிழிக்கப் படுவதை கேட்கும்போதும், உன் பேரு உன் மொழியில்லயான்னு நக்கலடிப்பால் பேஜாரானோரைக் காணும்போதும், என் பெயர் நல்ல தமிழ் பெயர் என குத்துவிளக்காக நாடகம் நடிக்கும்போதும், சும்மா சித்தர் கணக்கா ஒரு தத்துவம் தோணிச்சி. அது என்னன்னா, 'பேரை வெச்சு பேரிக்கா வித்தவனும் இல்லை, உளுந்தை ஊறவெச்சு ஊறுகாப் போட்டவனும் இல்லை'ங்கறப் பேருண்மை புலப்பட்டுச்சி.

டிஸ்கி 2: அடக் கொரங்கு இது ஏன் உனக்கு இங்க புர்லன்னு கேக்குறவங்களுக்கு என் சூளுரை என்னன்னா, நான் மறத்தமிழ் மாது. அதால தொரைங்க டிக்ளேர் பண்ணினாத்தான் ஒத்துப்பேன்.