Friday, December 24, 2010

ரங்கமணி குரங்கு பிடித்த கதை

ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.

*************************************

நான்தான் எங்கள் அபார்ட்மென்ட் செக்ரட்டரி. பாழாய்ப் போன குரங்குக் குடும்பம் ஒன்று இரண்டாவது ப்ளாக்கில் பிளாட் நெ 306 இன் பால்கனியில் சில நாட்களாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. ஹௌஸ் ஓனர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.

அசோசியேஷன் மீட்டிங்கில் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டார் அந்த பிளாட்டின் ஓனர். ஒரு செக்ரட்டரி என்ற முறையில் நான் இதைத் தடுத்திருக்க வேண்டும் என்பது அவர் வாதம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் அந்தக் குரங்கு குடும்பத்திற்கு அந்த பிளாட்டில் வந்து குடியேற NOC கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். வந்த கோபத்தில் அவர் பாதி மீட்டிங்கில் சென்றுவிட்டார். எல்லோரும் முடிவு செய்து குரங்கைத் துரத்தும் பொறுப்பை என் தலையில் கட்டினார்கள். நான் கூகிலாண்டவரைச் சரணடைந்தேன்.

நிலைமை புரியாமல் வீட்டில் வேறு என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். குரங்கு என்னிடம் முரண்டு பண்ணாது என்று உத்திரவாதம் கொடுத்தார்கள் (உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் மேலே வலது மூலையில் இருக்கும் என் புகைப்படத்தைப் பார்க்கவும்). விஷயம் அவர்கள் அம்மா வீட்டுக்கும் போனது. பிள்ளையாரைப் பிடிக்கப் போய்க் குரங்காய் மாறிய கதைதான் அவர்களுக்குத் தெரியுமாம். மேலும் மாப்பிள்ளை குரங்கை எப்படிப் பிடிக்கிறார் என்று பார்க்கக் கிராமமே ஆவலாக உள்ளதாம். குறைந்த பட்சம் மாமனார், மாமியார், அவளின் தாத்தா, தாத்தாவின் மூத்த சகோதரர்கள் இருவர் ஆகியோர் (கிட்டத் தட்ட ஒரு மினி zoo ) பெங்களூர் வர டிக்கெட் ஏற்பாடு செய்யும்படி உத்தரவு வந்தது.

இதனிடையே குரங்கு எங்கள் பிளாட்டின் பால்கனிக்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மா சொன்னதுதான். "உங்க வீடல் இப்ப எக்ஸ்ட்ரா மெம்பெர் வந்துர்க்காங்க. சம்பளம் ஜாஸ்தியா வேணும்".

ஒரு வேளை அந்தக் குரங்குக் குடும்பத்திற்கு ஒரு மினி zoo வே தன்னைப் பார்க்க தெரிந்து விட்டதோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டது. இதை வீட்டில் சொல்லப் போக, ஒரு வேளை நான் கஷ்டப்படுவது பொறுக்காமல் அவை சென்று விட்டன என்று சொன்னார்கள். அதோடு நிறுத்தாமல், அந்தக் குரங்கு ஒரு சகோதர பாவத்தில் என்மேல் பரிதாபப்பட்டு சென்றிருக்கலாம் என்றும் நினைப்பதாகக் கூறினார்கள். ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.

சில நாட்களுக்கு முன் பிளாட் நெ 306 இன் ஹவுஸ் ஓனரை வாக்கிங் போகும்போது பார்த்தேன். அவரைப் பார்த்து மையமாகப் புன்னகைத்து வைத்தேன். அவரே அருகில் வந்து குரங்கு போன செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். நான் என்ன செய்து விரட்டினேன் என்று கேட்டு வைத்தார். எனக்கு நாக்கில் சனி, செவ்வாய் மற்ற எல்லாக் கெட்ட கிரகங்களும் ஒரே நேரத்தில் குடியேறினர்.

"அது ஒன்னும் இல்லை சார். நான் போய் அந்தக் குரங்கு குடும்பத் தலைவனிடம் உங்களைப் பற்றி சில உண்மைகளைச் சொன்னேன். குரங்கே, உனக்கு இந்த ஓனரைப் பற்றித் தெரியாது. நீ பால்கனில இருக்க. இவர் பால்கனி லைட்டுக்கு மட்டுமில்லாம சூரியன், சந்திரன் வெளிச்சத்திற்கும் கரென்ட் காசு கேட்பார். தானாக அடிக்கும் காற்றுக்கு பேன் சார்ஜ் கேட்பார். இதற்கு மேல் குரங்குக் குட்டிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பார். உன்னுடைய சொந்தகாரர்கள் யாரும் வரக் கூடாது என்பார். வருட வருடம் 10 % வாடகை ஏற்றுவார். எல்லாவற்றுக்கும் மேலாக ரெண்ட் ரெசிப்ட் தரமாட்டார், இந்த மாதிரி எல்லாம் சொன்னவுடனே குரங்கு தன் குடும்பத்தோட ஓடிப் போய்விட்டது சார்" என்றேன். அதற்குப் பிறகு நான் அவரை எங்கும் காணவில்லை.

நான் இனி அசோசியேஷனில் தொடரக் கூடாது என்று அனைவரிடமும் அவர் பேசி வருவதாக் கேள்வி.






Wednesday, December 22, 2010

சண்டேன்னா ரெண்டு

கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் ரொமான்ஸ், நிறைய காமெடி உள்ள பதிவு இது.

********************************************

அவன்: நாம ரெண்டு பேரும் வேற வேற சாதி

அவள்: ஆமா. நீ ஆண் சாதி நான் பெண் சாதி

அவன்: நாங்க நான் veg சாப்பிடுவோம்

அவள்: நானும்தான், அதான் ஒந்தலையைத் தின்கிறேனே, புரியல, I am eating your brain

அவன்: ஒங்க வீட்ல ஒத்துப்பாங்களா?

அவள்: ஒனக்கு விருப்பமா இல்லயா, அதச் சொல்லு

அவன்: எங்கம்மா என்ன சொல்வாங்களோ?

அவள்: அத்தகிட்ட நான் பேசறேன்

அவன்: நீ ரொம்ப fastஆ போற

அவள்: ஆமாம். ஒனக்கும் சேர்த்து ஈடு கட்டணும்ல

அவன்: நாளைக்குக் குழந்த பிறக்கும், அதுக்கு எப்படி கல்யாணம் காட்சி எல்லாம்

அவள்: ஆமாம். ஒன்ன மாதிரி இருந்தா சிரமம்தான். குழந்தய என்ன மாதிரி வளத்துக்கறேன்

அவன்: அப்ப நீ ஒரு முடிவோடதான் இருக்க

அவள்: நாளைக்கி நீ ஒங்கம்மாவோட எங்க வீட்டுக்கு வரியா இல்ல நான் எங்கப்பாவோட ஒன் வீட்டுக்கு வரட்டுமா?

"இங்க வாயேன், இதப்படி" என்றான் அந்த மாத சஞ்சிகையின் ஒரு பக்கத்தைக் காட்டி.

ஒரு கையில் பூரிக்கட்டையும் இன்னொரு கையில் தேங்காயுமாகக் கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

" அது ரெண்டையும் வச்சிட்டுத்தான் வாயேன்" என்றான் ஒரு எச்சரிக்கை உணர்வோடு.

படித்துப் பார்த்துவிட்டு nice என்றாள்.

" இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் தொடை நடுங்கிகள்" என்றாள்.

"அதெல்லாம் கெடையாது. அந்தப் பொண்ணுதான் அந்தப் பையன் மேல மேல வந்து விழுந்தாங்கற மாதிரிதான் எனக்குப் படுது" என்றான்.

விறுவிறு என்று கிச்சனுக்குச் சென்றவள் பூரிக்கட்டையுடன் திரும்பிப் பார்த்து, "எலி, தான் சிக்கிக்கப் போறது தெரியாம பொறியச் சுத்தி சுத்தி வரும்" என்றாள்.

"இதுக்கு நீ அந்த பூரிக்கட்டயாலயே என்னய அடிச்சிருக்கலாம்" என்றான்.

அப்போது பார்த்து காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் எதிர்வீட்டு கிரி.

"சார், ஒங்க வீட்டு எலிப்பொறி கொஞ்சம் தாங்க, எங்க வீட்ல ஒரே எலித்தொல்ல" என்றார்.

"அவரையெல்லாம் தர முடியாது" என்றாள் அவசர அவசரமாக. உடன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

கிரி ஏதோ பேச வாயெடுக்குமுன் அவன் இடைமறித்து, "அது மேல பரண்ல இருக்கு சார். இப்ப கைல இல்லங்கறத அப்டி சொல்றாங்க, நான் என் பையன்ட்ட குடுத்து அனுப்பறேன் சார்" என்றான்.

அவர் சென்ற பிறகு அவனுக்கு நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது. என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் இன்னொன்று.

"சண்டேன்னா ரெண்டு" என்றாள்.

மறுபடியும் காலிங் பெல். கதவு திறந்தால் பையன்.

"அப்பா கிரி அங்கிள் எலிப்பொறி கேக்குறார். அந்த அங்கிளுக்கு எப்படிப்பா தெரியும் நம்ம வீட்டுல எலிப்பொறி இருக்குன்னு" என்றான்.

அவன் சண்டே டைம் பத்திரிக்கையில் முகத்தை மறைத்துக் கொண்டான். அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு பூரி உருட்ட ஆரம்பித்தாள்.

"இன்னிக்கு என்னம்மா டிபன்" என்றான்.

"பொங்கலும் பூரியும்" என்றாள்.

"ஓ, சண்டேன்னா ரெண்டா" என்றான்.

கணவனும் மனைவியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.. பையன் திருதிருவென விழிக்க ஆரம்பித்தான்.

Tuesday, December 14, 2010

விடாது துரத்தும் எக்ஸாம் பூதம்

நான் ஒரு டம்மி பீசுங்கறது இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கொஞ்ச நஞ்ச டவுட் இருந்தா இதைப் படிச்சுப் பாருங்க.

*******************************

"சார் நான் கோபி பேசறேன்"

"சொல்லு கோபி சௌரியமா?"

"நல்லா இருக்கேன் சார், நீங்க சௌரியம்தானே, கிருஷ்ணன் சொன்னான் சார்"

"ஆமாம்பா அவசியம் வந்துடு"

"நிச்சயமா சார்"

"MJN சொன்னாரு ஒன்ன chief கெஸ்டா போடா வேணாம்னு சொல்லிட்டியாமே, ஏம்பா"

"கிண்டல் பண்ணாதிங்க சார் "

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிறது பள்ளிப்படிப்பு முடித்து. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கூடம் போக ஒரு முறையும் தோன்றவில்லை. சொல்லப் போனால் காசி தியேட்டர் போகப் பள்ளியைக் க்ராஸ் செய்துதான் போக வேண்டும். அப்போதும் பள்ளி செல்லத் தோணியதில்லை. ஒரு வேலை மழை வந்திருந்தால் ஒதுங்கி இருப்பேனோ என்னவோ.

"டேய் பஸ் ஏறிட்டேண்டா"

"சரி, பத்து மணிக்கு வந்துரு"

"ஏன், விழா சாயந்தரம் தானே"

"கொடி கட்றது, நாற்காலி போடறது இதுக்கெல்லாம் ஆள் வேணாமா, நீதான் செய்யணும் அதெல்லாம்"

"என்னடா சொல்ற"

"காலம்பர வேற ஒரு விழா, 9 மணிக்கு வெங்கட்ரமணா வந்துரு, டிபன் சாப்டுட்டு ஸ்கூலுக்குப் போயிடலாம்"

" சரி காசி தியேட்டர்ல என்ன படம் ஓடுது"

" MR சார்கிட்ட பேசுறியா பக்கத்துலதான் இருக்கார்"

" போன வைடா சாமி"

ஆண்டு முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கும் விழா காலை பத்து மணிக்கு ஆரம்பமானது. "ஏன்டா, நான் படிக்கிற காலத்துல எனக்கு ஒரு பரிசும் கொடுக்கல" என்றேன். " அதுக்கெல்லாம் ஸ்கூலுக்கு ஒழுங்கா வரணும். போட்டில கலந்துக்கனும். ஜெயிக்கணும். தட்சிநாமுர்த்தி ஞாபகம் இருக்கா ?" என்றான் கிருஷ்ணன்.

என் நினைவு பின்னோக்கிச் சென்றது. எந்தப் போட்டி என்றாலும் அவன்தான் முதல் பரிசு வாங்குவான் - கோலம் மற்றும் தையல் போட்டிகளைத் தவிர. எனக்குப் பொதுவாக எந்தப் போட்டியிலும் விருப்பம் இருந்ததில்லை (சீ சீ இந்தப் பழம் புளிக்கும்) . இருந்தாலும் சில போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எல்லாரும் சொல்கிறார்களே பல்பு வாங்குதல் என்று. நான் கலந்து கொண்ட எல்லாப் போட்டிகளிலும் சீரியல் பல்பு செட் வாங்கினேன். தட்சிநாமுர்த்திக்கு உடனே போன் செய்து பேசினேன். "இப்பவும் பொறாமையா இருக்கா அவன நெனச்சா?" என்றான் கிருஷ்ணன். " லைட்டா" என்றேன்.

முதல் முறையாகத் தலைமை ஆசிரியர் அறைக்கு எந்த விதமான பிரச்னை பயமுமில்லாமல் நுழைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானக் கண்காணிப்பாளர் என்னையே உற்றுப் பார்த்து கிரௌண்ட் கேட்டின் பூட்டை ஒருமுறை உடைத்தது நான்தானே என்று கேட்டு உறுதி செய்து கொண்டார் (அவனா நீயி? ).

மாலை மூன்று மணிக்கு விழா ஆரம்பமானது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் ஆகியோருக்குப் பரிசுகளை வழங்க ஆரம்பித்தனர். (பய புள்ளைக கர்சிப் பாக்டரியே வச்சிருப்பாக போலிருக்கே, பக்கு பக்குன்னு எடத்தப் புடிக்குதுக). விழா முடிந்ததும் தலைமை விருந்தினர்களை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கிகொண்டனர். நானும் என் பேனாவை எதற்கும் இருக்கட்டும் என்று திறந்து வைத்துக்கொண்டேன் (நானும் ரௌடிதான்). என் நிலைமை கடைசியில் ஆளில்லாத டீக்கடை போலாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் (?!) மெனக்கெட்டு நன்றாகப் படித்திருக்கலாமோ என்று திடீரென்று தோன்றியது. "போன வாரம் கோகிலா வந்துருந்தப்ப ஒன்ன விசாரிச்சாப்பா " என்றார் MR சார் . எப்போதோ தொலைத்த பொருள் இப்போது கிடைத்த திருப்தி எனக்கு. மன நிறைவுடன் பஸ் ஏறினேன்.

"எங்கப்பா போயிருந்த நேத்தி" என்றான் பொடியன்

" எங்க ஸ்கூலுக்கு" என்றேன் பெருமிதத்துடன்

" நீ இன்னும் ஸ்கூலே படிச்சு முடிக்கலையா" என்றான் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று என் மனதுக்குப் பட்டது.

"நீ என்னோட படிப்பப் பத்திப் பொடியன்கிட்ட எதாவது சொன்னாயா" என்றேன்

"இல்லைங்க ஒங்க அம்மாதான், அப்பா மாதிரி இருக்காதேன்னு நேத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்க" என்றார் தங்க்ஸ்.

" ஆமாண்டா நாந்தான் சொன்னேன், என்ன இப்போ" என்றார் அம்மா.

" நான் 2000 த்துல அந்த எக்ஸாம்....." என்று முடிப்பதற்குள்

" கிருஷ்ணா அங்கிள் சொன்னாரு, ஏதோ Y2K, கம்ப்யூட்டர் ப்ராப்லம் அதனாலதான் நீ பாஸ் ஆனியாமே" என்றான் பொடியன்.

அம்மாவும் தங்கமணியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். நான் முறைக்க ஆரம்பித்தேன். ஒத்துக்கறேன் ஒத்துக்கறேன். நான் பல்பு வாங்கினத ஒத்துக்கறேன். ஆபீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன் என்றேன் மனதுக்குள்.

"ஏங்க அந்த ப்ரோமோஷன் எக்ஸாம் என்னாச்சு, அஞ்சு வருஷமா எழுதுறிங்களே" என்றார் தங்கமணி

மானங்கெட்ட மனசாட்சி வெளில எல்லாம் கேக்குது

Monday, December 13, 2010

தங்க்ஸ் பாடும் பாடு

ரங்ஸின் பாச்சா தங்ஸிடம் பலிப்பதில்லை. மாமியார்தான் சரி.

**************************************

மாமியார்: தொவச்ச துணிய ஏன் ஒனத்தாம வெச்சிருக்க?

மருமகள்: மழை பெய்யிது அத்தை

மாமியார்: (ஒரு வினாடியில் சுதாரித்துக் கொண்டு), அதனால என்ன குடையைப் பிடித்துக் கொண்டு ஒனத்துறது?

மருமகள்: ?!

****************************************

மாமியார்: ஒங்க மனுஷா யாருமே லெட்டர்ல பின் கோடு எழுத மாட்டாளா?

மருமகள்: இனிமே எழுதச் சொல்றேன் அத்த. ஆனா டெலிவரி ஆன லெட்டர்ல எல்லாம் ஏன் பின் கோடு எழுதுறீங்க?

மாமியார்: (வழக்கம் போல ஒரு வினாடியில் சுதாரித்துகொண்டு), நீங்களும் செய்ய மாட்டேள், செய்றவாளையும் செய்ய விட மாட்டேள். ஒங்காத்து வழக்கமே இதானே

மருமகள்: ?!

*************************************************************

மகன்: நம்ம அபார்ட்மென்ட் புது செக்ரட்டரி நான்தான்

மருமகள்: ஏங்க இந்தத் தேவையில்லாத வேல?

மாமியார்: (முழு உரையாடலையும் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல்) போன வாரம் உன் தம்பி அந்த மியூசிக் சபால செக்ரட்டரி ஆனப்போ அவ்ளோ சந்தோசப்பட்ட. ஆம்படையான் எதுக்கோ செக்ரட்டரி ஆயிருக்கான். சந்தோஷப் படாம ஏன் இப்படி அலுத்துக்கற?

மருமகள்: ?!

***************************

மருமகள்: ஏங்க ஏதோ முக்கியமான e-மெயில் வரணும்னு சொன்னீங்களே, வந்துதா?

மாமியார்: அவன் g-மெயிலுக்கு மாறி ரொம்ப வருஷம் ஆச்சுது. நீ இப்ப வந்து e-மெயில், f - மெயிலுங்குறியே

மருமகள்: ?!

*************************************************************

மருமகள்: என் தம்பிக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்காம்

மாமியார்: இரு கோடுகள் படத்துல நாகேஷ் சொல்ற மாதிரியில்ல இருக்கு. வேல செய்ரவாளுக்கு வேலையும், வேலை செய்யதவாளுக்கு ப்ரோமொஷனும் கொடுப்பா போலருக்கே

மருமகள்: ??
***********************************************************

மருமகள்: அத்தை, என் தம்பி IAS எக்சாம்ல தமிழ் நாடு அளவுல பத்தாவது ரேங்க் எடுத்துப் பாஸ் பண்ணிருக்கான்

மாமியார்: ஓ, அவன விட ஒன்பது பேர் நல்லா படிச்சிருக்காங்கன்னு சொல்லு



மருமகள்:?!

*********************************************

மருமகள்: ஏம்பா டிரைவர், மெதுவாப் போப்பா. ரயிலுக்கு இன்னும் நெறைய நேரம் இருக்கு

மாமியார்: அவர் போற ரயிலுக்கு நேரம் ஆய்டுச்சோ என்னவோ? நீ போறபடி போப்பா.

மருமகள்:?!

*********************************************

மருமகள்: என் தங்கை எழுதிய கதை நாம வாங்கற வாராந்தரி பத்திரிக்கையிலே வந்திருக்கு அத்தை

மாமியார்: என் பொண்ணு ப்ளாக் எழுதுறா. ஒன தங்க கதைய அந்த புக் வாங்கினவங்க மட்டும்தான் படிக்க முடியும். என் பொண்ணு எழுதறத உலகமே படிக்கலாம். இன்னொன்னு தெரிஞ்சுக்கோ. பேப்பர்ல இருக்க எழுத்தோட ஆயுள் கொஞ்ச நாள்தான். பதிவுல எழுதுறது சந்திர சூரியன் உள்ளவரை இருக்கும்.

Wednesday, December 8, 2010

லேடீஸ் ஸ்பெஷல்

என்ன இப்படிக் கிறுக்கி வெச்சிருக்கீங்கன்னு யாரும் கேட்டுட முடியாது இவங்களை. அதுக்குத்தான் ப்ளாக் பேருலயே கிறுக்கல்கள் அப்படிங்குற வார்த்தையை வெச்சிருக்காங்க. வழக்கமா நாம போடற பதிவுக்கு டிஸ்கி எழுதுவோம். இவங்க கொஞ்சம் மேல போய் வலைப்பூவுக்கே டிஸ்கி கொடுத்திருக்காங்க.

சரி என்னதான் எழுதுறாங்கன்னு, மன்னிக்கவும், கிறுக்குறாங்கன்னு போய்ப் பாத்தா தொலைஞ்சீங்க. வாரா வாரம் ஒரு ஹோட்டலுக்குப் போயிட்டு அங்க உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு ஒரு பதிவு அதைப் பத்தி. பர்ஸ் எடுத்துட்டுப் போறாங்களோ இல்லையோ கேமராவும் கையுமாப் போய்டுவாங்க போல. வித விதமா போட்டோ. படிக்கிறவங்களை வெறுப்பேத்துறதுக்கே போட்ட மாதிரி இருக்கும்.

இந்தப் பதிவுகளுக்கு விஜி மேடம் ஒரு டெம்ப்லேட் பின்னூட்டம் போடுவாங்க. ‘பாத்துட்டேன் அப்புறம்’ அப்படின்னு. அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். என்னிய வுட்டுட்டு நீங்க மட்டும் போய் நல்லா சாப்புடுறீங்க அப்படிங்கறதுதான்.

சரி, இது தவிர வேற என்ன எழுதி இருக்காங்கன்னு பாத்தோம்னா விதூஷ் எழுதின கவிதைக்கு ஒரு கோனார் நோட்ஸ். கோபுலுன்னு விகடன்ல ஒரு கார்டூனிஸ்ட் இருந்தார். அதுல ஒரு கார்ட்டூன் ஞாபகம் வருது. ஒரு சிறுவன் அப்பா இருக்கும் அறைக்குப் போவான். அவர் அப்போதுதான் முகம் முழுதும் ஷேவிங் கிரீம் தடவி வைத்திருப்பார். சிறுவன் பயந்து போய் வேறொரு அறைக்குப் போவான். அங்கே அம்மா நிறைய பேசியல் கிரீம் கொண்டு முகம் பூரா அப்பி வைத்துக் கொண்டிருப்பார். சிறுவன் அதைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான். எனக்கு அது மாதிரிதான் ஆச்சு. விதூஷ் கவிதையை முதலில் படித்தேன். அதன் பின் வித்யாவின் கோனார் நோட்ஸ். நான் பதிவு எழுத ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே எனக்கு நடந்த இரட்டை விபத்து இது. இது போக இவர் நிறைய முழி பேர்ப்புக் கவிதைகள் எழுதியுள்ளார். உங்களால் ஒரு கவிதைக்கு மேல் படிக்க முடியாது. ஒரு கவிதை படித்து முடிக்கும்போதே முழி பேந்து விடுமே!

அது என்ன மாயமோ, பக்கோடா கட்டித் தரும் பேப்பரில் உள்ள விஷயம் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கும். அந்தப் பொது விதியை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி பக்கோடா பேப்பர்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். முழி பேர்ந்ததுதான் மிச்சம்.

அடுத்தது தி கிரேட் விஜி. இவங்களைப் பத்தி நான் ஒண்ணும் பெரிசா சொல்ல வேணாம். ஏற்கனவே இவங்க பேர்ல இருந்த வலைப்பூ ஒண்ணு காணாம போச்சு. கூகிளுக்கே பொறுக்கலை. அதான் காணாம போச்சு. இப்போ புதுசா ஒண்ணு. தி கிரேட் விஜி அப்படின்னு வலைப்பூ பேரு. எப்படியும் பெரிசா பதிவு ஒன்னும் போடப் போறதில்லை. அதனால பேர்லயாவது கிரேட் இருக்கட்டும்னு வெச்சிக்கிட்டாங்க போல.

எனக்கு ஒரு சந்தேகம் வரும். இவங்களை நம்பி எப்படி சங்கத்தோட பொறுப்பை ஒப்படைச்சாங்கன்னு. அப்புறம்தான் தெரியுது, யார் ரொம்ப வெட்டியோ அவங்க பொறுப்பில்தான் சங்கம் இருக்கிறது என்று. நான் கூட ரொம்பப் பெருமைப் பட்டேன். நம்மையும் எழுதக் கூப்பிடுகிறார்களே என்று. அப்புறம்தான் தான் தெரியுது, வெட்டியா உள்ளவங்களைத்தான் எழுதவே கூப்பிடுவாங்கன்னு. அதெப்படி விஜி, நான் வெட்டிங்குறதை இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சீங்க?

இவங்க மூணு பெரும் விட்ட (கூகிள்) பஸ்ஸை வரிசையா நிறுத்தினா நைல் நதி நீளம் வரும். அவ்ளோ பஸ். எழுந்ததும் பஸ், புக்கு படிச்சா பஸ், சாப்பிட்டா பஸ், இத்யாதி. இதுல வித்யா பேஸ் புக்குல இருந்து சில விஷயங்களை எடுத்து பஸ்ல விடுவாங்க.

பதிவிற்குச் சம்பந்தமில்லாத விஷயம்

நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து கிட்டத்தட்ட என் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுபவர்கள் பரிசல்காரனும் வித்யாவும் (கொஞ்ச நாளாய் பின்னூட்டங்கள் இல்லை, ஏன்?). நான் இன்று ஏதோ கொஞ்சம் சுமாராக எழுத அவர்கள் கொடுத்த ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம். என்னுடைய சுமாரான ஒரு பதிவை வலைச்சர ஆசிரியராக அவர் இருந்தபோது அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் காரணங்களுக்காக நான் வித்யாவுக்கு சரிவர நன்றிகள் ஒருபோதும் சொன்னதில்லை. இந்தத் தருணத்தில் சொல்லி விடுகிறேன். வித்யா, மிக்க நன்றி.

Tuesday, December 7, 2010

தங்க்ஸ் இருக்கக் கவலை ஏன்?

போன பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்துகொண்டவை:

எனக்கு அடுத்தவரைக் கலாய்க்க வரவில்லை.

என்னை நான் நன்றகாவே கலாய்த்துக் கொள்கிறேன்.

சோ, எது வருதோ அதை செய்வோம்.

**********************

நான்: (பெருமையுடன்) இங்க பாரேன், விஜி என்னைக் கவிதை எழுத முயற்சி செய்யுமாறு கேட்டிருக்கிறார்

தங்க்ஸ்: ஏங்க, நீங்க அவங்களுக்கு எட்டு மெயில் அனுப்பிச்சு அடுத்து என்ன எழுதனும்னு கேட்டா அவங்க ஏதாவது சொல்லித் தானேங்க ஆகணும்

நான்: சரி விடு. அவங்க சொன்னத பேஸ் வேல்யுக்கு எடுத்துக்கலாம்

தங்க்ஸ்: ஏங்க அவங்க ஏதோ பிளான் பண்ணித்தான் கேட்டிருக்காங்க. நெஜமா சொல்லுங்க, ஒங்களுக்குக் கவிதா எழுத வருமா?

நான்: என்ன பெரிய விஷயம். அப்ப மத்ததெல்லாம் இந்தக் கதை, கட்டுரை இதெல்லாம் எனக்கு நல்லா வருதுன்னு நீ நினைக்கிறியா?

தங்க்ஸ்: (ஒரு வினாடி அதிர்ந்து போகிறார். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு) நான் என்ன நெனைக்கிறேன் அப்படிங்கறது முக்கியம் இல்லீங்க. வாசகர்கள் என்ன நினைக்கிறாங்க அப்படிங்கறதுதான் முக்கியம்.

நான்: பரவா இல்ல. ஏதோ கொஞ்சம் கமென்ட் வருது. ஒரு 90 பாலோயர் இருக்காங்க

தங்க்ஸ்: அதுல 80 பேர் கிட்ட நீங்க பேசும்போதுதான் நான் பாத்தேனே. செல்போனையே அவங்க காலா நெனைச்சு தண்ட சேவை (அப்படின்னா என்னன்னு பின்னூட்டத்துல கேளுங்க) பண்ணாத குறைதான்.

நான்: சரி மத்த பத்து பேர்?

தங்க்ஸ்: அதுல அஞ்சு பேர உருட்டி மெரட்டி சேர்த்தீங்க.

நான்: அப்ப மத்த அஞ்சு பேர்?

தங்க்ஸ்: உங்க வலைப்பூல எதையோ கிளிக் பண்ணப் போய் தெரியாத்தனமா பாலோயர் பட்டனைக் கிளிக் பண்ணிட்டாங்க

நான்: அது சரி, ஒன தங்கைக்கு மட்டும் எப்படி இத்தனை பாலோயர்?

அவள்: அவள் நல்லா எழுதுறாங்க

நான்: அப்பா நான் நல்லா எழுதலையா?

தங்க்ஸ்: அத விடுங்க, ராத்திரி சமையலுக்கு என்ன பண்ணட்டும்?

நான்: ஒங்க வீட்ல எல்லார்க்கும் நான்னா இளப்பம்தான்

தங்க்ஸ்: என்னை அப்படிச் சொல்லாதீங்க

நான்: (ஒரு வித ஆறுதலுடன்) தேங்க்ஸ் பா

தங்க்ஸ்: கல்யாணம் ஆனதுலேர்ந்து நான் இந்த வீட்டுப் பொண்ணு, அதத்தான் நான் சொல்ல வந்தேன்

நான்: அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி நீயும் அப்படித்தான் நெனைச்சுக் கிட்டிருந்தியா?

தங்க்ஸ்: அப்பாடி டியுப் லைட் இப்பத்தான் பிரகாசமா எரியுது. காலம்பரலேர்ந்து வோல்டேஜ் ப்ராப்ம். ஆமா நீங்க என்ன கேட்டீங்க?

நான்: ஒன்னும் இல்ல, நீ கொடுத்த பல்பை எல்லாம் அள்ளி வைக்க ஒரு கூடை எடுத்துட்டு வா

காலிங் பெல் அடித்தது. திறந்தால் அசோசியேஷன் ப்ரெசிடென்ட்.

அவர்: ஒண்ணுமில்ல கோபி, நம்ம பார்க்கிங் ஏரியா பூரா இருக்க டியுப் லைட்டை எல்லாம் எடுத்துட்டு CFL பல்புன்னு ஏதோ புதுசா வந்திருக்காம். கரென்ட் செலவு நிறைய மிச்சமாகுமாம். ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு என்றாலும் நீண்ட நாட்களுக்கு நல்ல பயன் தரும். செக்ரட்டரி அப்படிங்கற முறைல நீங்க என்ன நினைக்கிறீங்க? காஸ்ட் பெனிபிட் அனலிசிஸ் பண்றதுக்கு உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல. நீங்க சொல்றதுதான் பைனல். நீங்க பல்பா டியுப் லைட்டா?

நான்: என்ன சார் சொல்றீங்க?

அவர்: சாரி, பல்பா டியுபான்னு டிசைட் பண்ணிச் சொல்லுங்க

அப்படியே செய்வதாகக் கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

தங்க்ஸ்: பல்புதான் அப்படின்னு முடிவு பண்ணீங்கன்னா, நீங்களும் எல்க்ட்ரிஷியானோட போயிட்டு வாங்க. நீங்கதான் நல்லா பல்ப் வாங்குவீங்களே

அவருக்குப் பதில் சொல்லுமுன் பொடியன் உள்ளே வந்தான்.

பொடியன்: அப்பா, கீழ் வீட்டுல கரண்ட் போனப்போ அந்தத் தாத்தா பெட்ரோமாக்ஸ் லைட்டப் பத்தி ஏதோ சொன்னார். இப்ப அதெல்லாம் இல்லையாமே. ஆனா அவர் ஒங்கப்பாகிட்ட இருந்தாலும் இருக்கும். கேட்டுப் பார்னு சொன்னார். பெட்ரோமாக்ஸ் பல்ப் வாங்கி வெச்சிருக்கியாப்பா நீ?

Monday, December 6, 2010

...ஆகவே இனி யாரையும் கலாய்ப்பதில்லை...

(டிஸ்கி: வெறும் கலாய்ப்பது மட்டுமே நோக்கம். உங்களுக்குப் பிடிக்காத விஷயம் இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். நீக்கி விடுகிறேன்.

பதிவில் வருவது போன்ற உரையாடல்கள் நடக்கவே இல்லை.)

சென்ற பதிவில் யாரையும் குறிப்பிட்டுக் கலாய்க்கவில்லை என்று நிறைய கண்டனங்கள் வந்துள்ளன. எனக்குக் கலாய்க்க வரவில்லை என்கிற உண்மையும் தெரிய வந்துள்ளது எல்லோருக்கும். அதனால் இனிக் கலாய்ப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். கும்மிதான்.

எதுவா இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறது என் வழக்கம். பிள்ளையார் சுழி உயிரெழுத்து ‘உ’ மாதிரி இருக்கும். ‘அ’ வுக்கு முன் வரும் ‘உ’ அப்படின்னு சொல்லியே நான் ஒரு ரெண்டு பதிவு போட்டிருக்கேன். நீங்க படிச்சாத்தானே. சரி இப்போ யாரைக் கும்மப் போறோம்? வெரி குட் கண்டுபிடிச்சிட்டிங்களே. நம்ம உனா தானா அண்ணனைத்தான்.

தங்க்சும் (ம), ரங்க்சும் (க) பேசிக்கொள்(ல்)வது போல உள்ளது.

ம: இவர் பேர் நல்லாருக்கே

க: ஆளும் சொக்கத் தங்கம்

ம: அவர் எப்படி எழுதுவாரு?

க: அவர் பயங்கர பாஸ்ட். ஒரு உதாரணம் சொல்றேன். சினிமாவப் பாத்துக்கிட்டே இருப்பார். தியேட்டர்ல வணக்கம் போடறதுக்கு முன்னாடி இவர் முப்பது பக்கத்துல விமர்சனம் போட்டுடுவார்

ம: அடுத்த ஷோ வணக்கத்துக்கு முன்னாடியா?

க: போடி இவளே, அவர யாருன்னு நெனச்ச, அதே ஷோ முடியறதுக்குள்ளே

ம: எங்க நான் கொஞ்சம் படிக்கிறேன் (படித்து முடித்துவிட்டு) ஏங்க இவர் பேருக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய நம்பர் வெச்சிருக்காரு?

க: அவர்ட்ட கேட்டேன். அவ்ளோ ஹிட் வந்ததற்கப்புறம் தான் எழுதுவதை நிறுத்துவாராம்

ம: ரொம்ப நீளமா எழுதுறாரே?

க: நீ வேற, அவர் மல்டிபிள் சாய்ஸ் ஆன்செர்ஸ் எக்ஸாம்ல கூட அடிஷனல் சீட் கேட்டவராம்

ம: திரைக்கதை ஸ்கிரிப்ட் தொலைஞ்சு போனாக் கவலையே படவேணாம். இவர் பதிவுல இருந்து மீட்டுக்கலாம். ஏங்க நான் நெனைக்கிறத சொல்லட்டுமா?

க: எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சொல்லு பரவால்ல

ம: இவரோட வேகத்தைப் பார்த்தா இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்துல லாரன்ஸ் நெழல விட வேகமா சுடுவாரே அது ஞாபகம் வருதுங்க

க: தேவலையே அப்புறம்

ம: இவர் விளக்கமா எழுதுறதப் பார்த்தா சிங்கம் படத்துல சூர்யா, ராதா ரவி கேட்ட ஒரு கேள்விக்கு எல்லாத் தகவலும் தருவாரே அது ஞாபகம் வருதுங்க

க: நீ வுட்டா ரசிகர் மன்றமே வச்சிடுவ போலிருக்கே. சரி வா அடுத்து வேற ஒரு பதிவரைப் பத்திப் பாப்போம்.

ம: போங்க நீங்க, நான் என்ன வெட்டியா, எனக்குக் கிச்சன்ல வேலை இருக்கு. நீங்க ஒன்னு பண்ணுங்க. விஜி உங்களை விட வெட்டியா இருப்பாங்க. அவங்களுக்குப் போன் போட்டு ஐடியா கேளுங்க.

க: சரி சரி, இதெல்லாம் சொல்லிக்கிட்டு. ஆனாலும் ஐடியா சூப்பர். நான் விஜிகிட்ட பேசறேன்.

(விஜி பேசுவது சாய்வு எழுத்துக்களில்)

தத்து மம்மி, நான் கோபி பேசறேன்

சொல்லுங்க. என்னங்க என்னையே கலாய்க்கிறீங்க

சரி சரி லூஸ்ல விடுங்க. இனிமே நோ கலாய்த்தல். நேரா கும்மிதான். உனா தானா அண்ணனைக் கும்மியாச்சு. அடுத்து யாரைக் கும்மலாம்னு ஐடியா கொடுத்தீங்கனா...

நீயே சொல்லு.

நம்ம காபா எப்படி?

சரிதான், கும்மிடலாம்.

இந்தப் பேரே எனக்கு ரொம்பப் பிடிக்கும்

ஏன்?

நம்ம பொடியன் ஒரு வயசுல சின்ன சின்னதா வார்த்தைகள் பேசுவான். கொஞ்சம் போல சுருக்கி சொல்வான்.

சாக்லேட்- சாக்கு
கல்கண்டு – காக்கு

அதே போல இரண்டு வார்த்தைகள் வரும் இடத்தில் அப்ரிவியேட் (abbreviate) பண்ணுவான். அப்பா உன்னை எப்படிக் கொஞ்சுவார்னு கேட்டா காபா (கண்ணா பாப்பா) என்று சொல்லுவான். எனக்கு அந்த ஞாபகம் வருது.

அதெப்படி கோபி உன் பையன் இவ்ளோ புத்திசாலியா இருக்கான்?

அழகிலும், அறிவிலும் அவன் அவங்க அம்மாவைப் போல.

அதானே பாத்தேன். காபாவைக் கண்ணே பாப்பான்னுல்லாம் கொஞ்சாதீங்க. நல்லாவே இல்லை. மேலும் நீங்க போன் பண்ணது அவரைக் கும்மத்தான் அப்படிங்கறதை ஞாபகம் வெச்சுக்கோங்க.

சரி சரி, இவரோட வலைப்பூவில் என்ன சொல்லி இருக்கார்னு பாத்தீங்களா?

நல்லாத்தானே இருக்கு. மதுரைக்காரன் அப்ப்டிங்குறதுல பெருமைன்னு சொல்லியிருக்கார்.

அது சரி. ஆனா மதுரை இவரைப் பத்தி என்ன நினைக்குதுங்குறதுதான் முக்கியம்.

அப்படிப் பாத்தா நீ, நான்லாம் பதிவராவே இருக்க முடியாது கோபி.

விஜி, நீங்க பதிவரா?

சரி சரி, லூஸ்ல விடுங்க.

காபாவுக்கு ஒலக இலக்கிய வியாதி உண்டு. ச்சே தப்பா சொல்லிட்டேன். அவர் ஒரு உலக இலக்கியவாதி. உள்ளூர் இலக்கியமும் தெரியும். ஆனா ஊனா ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போய் ஒரு புக்கு வாங்கிட்டு வந்து அதை கூகிள் பஸ்ஸில் போட்டுடுவார். நான் உடனே அதைப் பத்தி ஒரு நாலு லைன் கமென்ட் போட்டுடுவேன்.

எனக்கும் தெரியும் அது. அது சரி கோபி, உன்கிட்ட இருக்குறதே மொத்தமா நாலு புக்குதான். அதுல நீ படிச்சதே நாலு பக்கம்தான். அதெப்படி நிறைய படிச்ச மாதிரியும், நிறைய புக்கு இருக்குற மாதிரியும் சமாளிக்க முடியுது உன்னால?

ரொம்ப சிம்பிள் விஜி. எல்லாப் பதிப்பகத்தின் நூல் பட்டியலைக் கையில் வெச்சுக்கிட்டா மேட்டர் ஓவர்.

சரி சரி காபா மேட்டர் என்னாச்சு.

இவர் சமீபத்துல என்ன பண்ணார்னு கேளுங்க. கிகுஜிரோ பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். நந்தலாலா பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். அடுத்து ரெண்டையும் சீன் பை சீன் ஒப்பிட்டு ஒரு பதிவு வரும்னு நினைக்கிறேன்.

கோபி அந்த எஸ்ரா மேட்டர்...

இவர் எஸ்ரா பாணில காமெடின்னு நினைச்சு ஏதோ எழுதப் போக எல்லாரும் அதுக்கு சீரியசா பின்னூட்டம் போட ஆரம்பிச்சாங்க. இவரே வந்து இது காமெடி அப்படின்னு சொல்ல வேண்டியதாப் போச்சு. ஹா ஹா, ஜோக்கு முடிஞ்சிடிச்சி விஜி, இப்ப நீங்க சிரிக்கணும்.

ஹா ஹா ஹா போதுமா? நீங்க ஒரு ஆணாதிக்கவாதி கோபி

தத்து மம்மி, என்னாச்சு?

பாருங்க பெண் பதிவர்களைக் கலாய்க்க மாட்டேங்குறீங்க?

இவ்ளோதானே. இருங்க சீட்டுக் குலுக்கிப் போடறேன். யார் பேர் வருதுன்னு பாப்போம்.

(வந்தது விதூஷின் பெயர்)

விஜி, விதூஷ் பேர் வந்திருக்கு.

எல்லா சீட்லயும் விதூஷ் பேர்தான் எழுதிப் போட்டாயோ?

என்ன நம்பிக்கையே இல்லாம?

சரி சரி சொல்லு

நீங்க இந்தக் கண்ணன் பட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்னு பாரதியார் எழுதின கவிதைத் தொகுப்புகளைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க.

கோபி, பாரதியார் பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க. வீட்டுக்கு லாரியே வரும்.

அவசரப்படாதீங்க. இவங்க அதே மாதிரி, முழிபேர்ப்புக் கவிதைகள், இந்தா பிடிச்சுக்கோ கவிதைகள், சயனைடு கவிதைகள் எல்லாம் எழுதி இருக்காங்க.

நானும் படிச்சேன். முழி நிஜமாவே பேந்து போச்சு.

இப்போல்லாம் தங்க்ஸ் எனக்குக் குடுக்கிற பனிஷ்மென்ட் இதான். இந்த மூணு கவிதையையும் கோடு போட்ட நோட்டுல மார்ஜின் போட்டு, ஸ்கெட்ச் பென் எல்லாம் யூஸ் பண்ணி ஒவ்வொரு கவிதையையும் பத்து பத்து வாட்டி எழுதணும். அடித்தல் திருத்தல் இல்லாம. பின்னூட்டங்கள் உட்பட எழுதியாகனும். இந்த முழி பேர்ப்புக் கவிதைகளுக்கு ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யா கோனார் நோட்ஸ் எல்லாம் கூடப் போட்டிருக்காங்க.

அந்தக் கொடுமை வேறயா? அடுத்து யாரைக் கலாய்க்கப் போறீங்க? ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யாவா?

இல்லை விஜி, ஆபீஸ் போகணும்.

உன் நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு. ஆபீஸ் போகனும்னுதான் சொல்ற. வேலை பாக்கனும்னு சொல்லலை. சரி வை போனை.

?????!!!!!!

Friday, December 3, 2010

தங்கமணி தரும் அதீத விளக்கங்கள்

இதைத்தான் காலக் கொடுமைன்னு சொல்றது. போயும் போயும் என்னைய காமெடியா எழுத சொல்லி சொல்றாங்க விஜி. ஒரு வேளை என்னைய வெச்சுக் காமெடி பண்றாங்களான்னு தெரியலை. ச்சே ச்சே அப்படின்னு நீங்க சொல்லும்போதே எனக்குத் தெரியுது. விஷயம் அதேதான்.

சங்கத்தில் பதிவு எழுத என்னை ஏண்டா கூப்பிட்டோம்னு நொந்துக்கனும். அந்த அளவு சீரியஸா பதிவு போடலாம்னு இருக்கேன்.

இது போன்ற வலைக் குழுமங்களில் பதிவு எழுதுறதுன்னா என்னன்னு தெரியாம ஒரு வாட்டி அணில் கவிதா கிட்டப் போய் ‘நட்சத்திரப் பதிவர்’னா என்ன அப்படின்னு கேட்டு வெச்சேன். இப்பவே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். பதிவுலகத்துல நான் டம்மி பீஸ் அப்படின்னு.

பஸ்ல நான் கமென்ட் போடற அழகைப் பார்த்து அருணையடி என்னை, ‘கோபி தி இன்னோசென்ட் சைல்ட்’ அப்படிங்க்றார். இந்த அழகுல நான் போய் யாரைக் கலாய்க்க முடியும்? இதுல விஜி கிட்டயிருந்து அறிவுரை வேற. கன்னா பின்னான்னு கலாய்க்கனும்னு.

எப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம் இருந்த நேரத்துலதான் தங்க்ஸ் பத்தி நினைப்பு வந்தது. நீங்க இந்த men are from Mars, women are from Venus அப்படிங்கற புத்தகம் பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க. அந்தக் காலத்து இளைஞர் அப்படின்னா ‘வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான், அர்த்தமெல்லாம் வேறுதான், அகராதியும் வேறுதான்’ அப்படிங்கற பாட்டாவது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். விஜி, அபி அப்பா, அருணையடி, அணில் கவிதா இவங்கல்லாம் ஸ்கூல் போகும்போது வந்த படம்னு நினைக்கிறேன். நான் அப்போ பிறக்கவே இல்லை.

இதுல விஜிதான் எல்லாருக்கும் சீனியர் அப்படின்னு கேள்வி. ஆனா பாருங்க அவங்க அணில் கவிதாவை தத்து மம்மின்னு கூப்பிடுவாங்க. அப்பப்போ யூத் அப்படின்னு காமிச்சிக்க இளவரசிதான் அவங்களுக்குப் புடிச்ச ஹீரோயின்னு சொல்வாங்க. அவங்களுக்குத் தெரியாது. இளவரசி போய், இன்னும் எத்தனையோ பேர் போய் இப்போ தமன்னா வந்தாச்சுன்னு. இதுல சங்கத்துக்கு மட்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு பேரு.

சரி அவங்களைப் பத்தின நிறைய உண்மைகளைப் பாத்தாச்சு (இதுக்குப் பேர் கலாய்க்கிறது இல்லை, உண்மையைத்தான் சொல்றேன், நம்புங்க மக்கா). டாபிக் பத்திப் பேசுவோம். ஒரே வார்த்தைக்கு தங்க்ஸ் வேற அர்த்தத்திலும் ரங்க்ஸ் வேற அர்த்தத்திலும் புரிஞ்சிப்பாங்க அப்படின்னுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதான் தெரியுது ஒரே செயலுக்கு அவங்க ரெண்டு அர்த்தம் சொல்றாங்க. படிச்சுப் பாருங்க.

இந்தப் பதிவுல இன்னொரு சௌகரியம். ஒருத்தர் ரெண்டு பேர்னு கலாய்க்காம ஒட்டு மொத்த ரங்க்ஸ் குரூப்பையே கலாய்த்த மாதிரி ஆச்சு. சேம் சைட் கோல் தான். பரவாயில்லை. லூஸ்ல விடுங்க.

*****************************

தங்கமணி தரும் அதீத விளக்கங்கள்

(தங்க்ஸ் பேசுவது சாய்வு எழுத்துக்களில்)

ஏங்க உங்களுக்கு நான் செய்ற சில விஷயங்கள் புடிக்கலைன்னு நினைக்கிறேன்.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

சும்மா சொல்லாதீங்க. நீங்க கேளுங்க நான் சொல்றேன். தப்பா இருந்த மாத்திக்கிறேன்.

கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை. எல்லாவற்றையும் கேட்டு விடுவது என்று கேட்க நினைத்து எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்தேன்.

ஆமாம். புடவைக் கடையில் ஏன் இவ்ளோ நேரம் ஆக்குகிறாய்?

அப்படிக் கேளுங்க. நாங்கதான் கட்டுகிறோம் அப்படின்னாலும் பாக்கப் போறது நீங்கதான். பாக்கும் போது நல்லா லக்ஷணமா இருக்க வேண்டாமா அதுக்குத்தான் அவ்ளோ நேரம் செலவு பண்ணிப் புடவை எடுக்கிறோம். இதுலயும் உங்க நலன்தான் முக்கியம் எங்களுக்கு.

நீ சொல்றது இடிக்குதே. காலம்பர ஆபீஸ் போற அவசரத்துல உன்னைப் பாக்க டைம் எங்கே இருக்கு. சாயந்திரம் வந்ததும் டிவி பாக்கவும் பதிவு எழுதவுமே நேரம் போயிடுது. ராத்திரி பெட ரூமுக்குள்ள ஒரு நைட்டிய மாட்டிக்கிட்டுத் தான் வர்றே. நான் உன்னைப் புடவைல பாக்கவே முடியறதில்லையே.

அதாங்க தப்பு பூரா உங்க பேர்ல. நான் மெனக்கெட்டு நாலு அஞ்சு மணி நேரம் கால் கடுக்க நின்னு புடவைக் கடைல புடவை எடுத்து அதைக் கட்டிக்கிட்டு உங்க முன்னால வந்தா உங்களுக்கு என்னைப் பாக்க நேரமில்லை. உங்களைக் கட்டிக்கிட்டு....

நான் அதற்குள் அவளை இடைமறித்து, சரி சரி தப்பு எம்பேர்லதான்.

சரி அடுத்த கேள்வி கேளுங்க.

வேண்டாம். அடுத்த கேள்வி அடிபட்டுப் போச்சு

சும்மா கேளுங்க

ஏன் ரொம்ப நேரம் மேக் அப் போடுறேன்னு கேக்கலாம்னு இருந்தேன்... ஆனா அந்தக் கேள்விக்கும் நீ போன கேள்விக்கு சொன்ன பதிலைத்தான் சொல்லப் போற

சமத்துங்க நீங்க, ம்ம்ம் அடுத்த கேள்வி

நீ ஏன் எங்க மனுஷங்க வரும்போது அவங்க கிட்ட சரியாப் பேச மாட்டேன்கிற

நான் லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கேன் அப்படின்னு அவங்க நினைக்கக் கூடாதுல்ல.

சரி, ஏன் உன் மூஞ்சில எண்ணெய் வடியுது?

பொழுதன்னைக்கும் சீவி சிங்காரிச்சிக்கிட்டே இருப்பா போலருக்கே அப்படின்னு அவங்க தப்பா எடுத்துக்கக் கூடாதுல்ல அதான்.

அதுவே உங்க மனுஷங்க வரும்போது தலைகீழா மாறுதே ஏன் (பெரிதாக மடக்கிவிட்ட பாவனை என் தொனியில்)

நீங்க ஒரு டியூப் லைட்டுங்க. எங்க வீட்டில் இருந்து வர்றவங்க கிட்ட நான் நல்லாப் பேசலைன்னா உங்களுக்கும் எனக்கும் சண்டைன்னு நினைச்சிக்க மாட்டாங்க. பொண்ணை மாப்பிள்ளை நல்லா வெச்சிக்கலையோன்னு அவங்களுக்கு சந்தேகம் வந்துடாது.

எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது. நான் மிச்சத்தை நாளைக்குக் கேக்குறேனே.

இல்லை இல்லை. இன்னைக்கே முடிச்சிடுவோம்

யாரை, என்னையா?

இல்லைங்க கேள்வியை.

சரி, நீ சமையல் இன்னும் கொஞ்சம் ருசியாப் பண்ணலாமே (கொஞ்சம் எச்சரிக்கையாக ஒரு நான்கடி தள்ளி உட்கார்ந்து கொண்டேன்)

எனக்கு உங்க நாக்கை விட உங்க உடம்புதாங்க முக்கியமாப் படுது. சமையல் ருசியா இருந்தா நீங்க நிறைய சாப்பிட்டு வெயிட் போட்டுடுவீங்க. மத்தபடி எனக்கு நல்லாவே சமைக்கத் தெரியும். புதுசா விஜி அப்படிங்க்றவங்க பதிவுல பாவக்காயும் பரங்கிக்காயும் போட்ட ஒரு டிஷ் பத்தி நேத்தி படிச்சேன். செஞ்சு கொண்டு வரட்டுமா? இல்லை நேத்து நான் புதுசா ஒரு ஸ்வீட் கண்டுபிடிச்சேன். வெந்தயமும் நாட்டு சக்கரையும் போட்டு. அதை செஞ்சு கொண்டு வரட்டுமா?

இதற்கு மேல் கேள்வி கேட்க எனக்குத் தெம்பில்லை. மயக்கம் வந்தது போலக் கீழே விழுந்தேன்.

டேய் தம்பி, அந்தத் தண்ணி ஜாடியைக் கொண்டாடா. அப்பாவைத் தெளிய வெச்சுத் தெளிய வெச்சு அடிப்போம்.

ஓரக்கண்ணால் பார்த்தேன். பயபுள்ள என்னா வேகமா ஓடுது.

எழுந்து உட்கார்ந்து தங்க்சின் கையைப் பிடித்துக் கொண்டு இனி கேள்வியே கேட்பதில்லை, ஆளை விட்டுடு என்று கெஞ்சாத குறையாக சொன்ன பிறகே தப்ப முடிந்தது.

ரங்க்ஸ், நீங்க பாட்டுக்கு தங்க்ஸ் கேள்வி கேட்க சொன்னாலும் கேட்டு மாட்டிக்காதீங்க. தங்க்சை பொருத்தவரை நீங்கள் இரண்டு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஒன்று, தங்க்ஸ் செய்வது எப்போதுமே சரி.

இரண்டு, தங்க்ஸ் செய்வது சரியா தவறா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும் பட்சத்தில், விதி ஒன்றைக் கடைபிடிக்கவும்.

இது போக கேக்காம விட்ட கேள்வி இன்னும் நிறைய. அதுல ஒன்னு ரெண்டு நீங்க கேட்டுப் பாருங்க உங்க தங்க்ஸ் கிட்ட. பதிலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க, கேட்டு விட்டு உயிரோடு இருக்கும் பட்சத்தில்!

அது ஏன் உன் தங்கை நான் டூர் போகும்போது மட்டும் நம்ம வீட்டுக்கு வறா?

தேற்றம் (theorem) , கிளைத் தேற்றம் (corrolary) மாதிரி கேள்வி, கிளைக் கேள்வி: அதெப்படி நான் டூரை பாதியில் முடித்துக் கொண்டு உன்கிட்ட சொல்லாமலே ஊருக்கு வந்தாலும் அவ அதுக்கு முத நாளே கரெக்டா எப்படிக் கிளம்பிப் போயிடறா?

பேஷன் டிவி ஏன் நம்ம வீட்டில் வர மாட்டேங்குது?

Wednesday, November 3, 2010

வதந்திரன் - 1

புதிய பதிவா....நெட்டுக்கு வா....
புதிய பதிவா....நெட்டுக்கு வா....
பிசில் வேலைவெட்டி எல்லாம் ஒதுக்கி
பாஸுக்கு தெரியாமல் பிரவுசரை ஓப்பன் பண்ணி
இருக்கும் அறிவை எல்லாம் அப்படி இப்படி தேக்கி
பதிவாக்கி மொக்கை போட்டு
படிக்கறவன் உயிரை எல்லாம் சேதமாக்கி......
புதிய பதிவா....நெட்டுக்கு வா....
புதிய பதிவா....நெட்டுக்கு வா....

மாற்றம் கொண்டு வா
புதுசா மொக்கை போட
வார்த்தையில் குழம்பு வை
படிச்சிட்டு புலம்ப வை....
உனது ஆற்றலால் கப்சா அள்ளி விடு
எல்லா வாசகனுக்கும் எதாவது மேட்டர் எடுத்து விடு
எல்லா மேட்டரிலும் வதந்தியாய் இரு...

வதந்திரன்...வதந்திரன்...வதந்திரன்...வதந்திரன்...வதந்திரன்...

நான் கொண்டது ஆறு ஐடி
நீ கொண்டது நூறு ஐடி
நான் போடுவது ஆறு கமெண்ட்
நீ போடுவது இரு நூறு கமெண்ட்
கொஞ்சம் கூட உண்மை இல்லை
எழுதுவது எதிலும் அர்த்தம் இல்லை
உண்மை சொன்னவன் உருப்பட்டது இல்லை
வதந்திரன் என்னிக்கும் உண்மை சொன்னது இல்லை

இளா, இளா
உங்க பதிவு எல்லாம் கப்சா இல்லையா
இளா, இளா, பல கண்டம் சென்றாலும் - உன் தந்தை மொழி மொக்கையல்லவா

புதிய பதிவா....நெட்டுக்கு வா....
புதிய பதிவா....நெட்டுக்கு வா....

----------------------------------------------------------
பத்து வருசக் கனவு....எவ்வளவு யோசிச்சு இருக்கேன் தெரியுமா...ஒரு பதிவு சொந்தமா போட...ஆனா முடியல்ல....காப்பி அடிச்சி போட்டா விலை போகல்ல...அதான்...முடிவு பண்ணேன்.....உலகமே படிச்சு படிச்சு அப்படியே கலங்கிப் போற மாதிரி ஒபாமா ஆரம்பிச்சு உள்ளுர் ஒமனா வரைக்கும் கனெக்ட் பண்ணி வதந்தியா பதிவு போடுற ஒரு பதிவரை கண்
டு பிடிக்கணும்ன்னு.... அது தான் இவன்...
வதந்திரன்..THE GOSIPPING BLOGGER

------------000--------------------------
இளா அண்ணே.....இவனை என்னப் பண்ண போறீங்க....இவனால்ல நாட்டுக்கு என்ன நல்லது நடக்க போவுது...இந்த தீஞ்ச காம்ப்ளென் மண்டையனை வச்சு என்னன்ணே ஆகப் போவுது....

நோ கப்பி. நோ....நான் வெறும் இளா இல்ல....பிரபல சையன்டிஸ்ட் இளா.....அதை முதல்ல புரிஞ்சிக்கோ....

அண்ணே....ஒரு ஓரமா உக்காந்து பழைய இரும்பு கடையிலே உருவுன ஐட்டத்தை எல்லாம் பெவிகால் போட்டு ஒட்டி... மெக்கானிக் கடையிலே கெஞ்சி வாங்குன பழைய நட்டு போல்ட் எல்லாத்தையும் சேத்து தலைன்னு சொல்லி எங்க வீட்டு கக்கூஸ் பக்கெட்டை கவுத்து விட்டு ஒரு ஐட்டத்தைக் காட்டி இப்படி ஒரு பில்டப்பு பாட்டு போட்டதே டூ ம்ச்.....இதுல்ல உங்களை நீங்க சையன்டிஸ்ட்ன்னு சொன்னீங்க்ன்னா... நான்
சையணைட் வாங்கி சப்பி செத்து போயிருவேன் சொல்லிட்டேன்....

கப்பி....நீ ஒத்துக்கலைன்னாலும் பரவாயில்ல.... நாடே என்னை சயண்டிஸ்ட்ன்னு நம்புது...ஸ்டில்லை பாரு... முக்கா இஞ்சுக்கு பிரெஞ்சு தாடி....கலைஞ்ச தலை முடி.... சுத்தி எலெக்ட்ரானிக் ஐட்டம் லேப் டாப்.... இப்படி ஒரு கெட் அப்...கன்ப்ர்ம்டா நான் சையண்டிஸ்ட் தான் கப்பி....

அய்யோ இந்த அனியாத்தைக் கேக்க யாருமே இல்லையா...அப்துல் கலாம்... சிவி ராமன்.. இவங்களுக்கு எல்லாம் பிரெஞ்ச் தாடியே இல்லையே...அப்போ அவங்க எல்லாம் சயண்டிஸ்ட் இல்லையா... தாடி வச்சவங்க எல்லாம் தான் சையண்டிஸ்ட்ன்னா... பாய் க்லடையிலே பிரியாணிக்கு வெட்ட போற ஆடு கூட
தான் தாடியோட நிக்குதுண்ணே... ஆடியன்ஸை ரொம்ப கலாய்க்கிறீங்க சொல்லிட்டேன்

அண்ணே...அந்த ஆன்ட்டி உங்க கூட பேசாம போக மாட்டேன்னு அடம் பிடிக்குறாங்க.... வாசல்லே நிக்குறாங்க....வெட்டி வெகுளியாய் வந்து சொல்ல

எந்த ஆன்ட்டி....

அமெரிக்கா ஓயிட் அவுசுல்ல ஆப்பிள் பறிக்குதே அந்த ஆன்ட்டி.... அண்ணே... பத்து வருசமா நீங்க தவமா தவம் பல ரெக்கமண்டேஷனுக்கு அப்புறம் அப்படி இப்படி உசார் பண்ணீங்களே அந்த ஆவடி லேடிஸ் கிளப் ஆண்டு விழால்ல மிஸ் ஆவடி
வாங்கிச்சேன்னே....மீனா...கப்பி சொல்ல...

மீனா எல்லாம் எப்பவோ ஓவர்ப்பா... அதெல்லாம் அவுட் ஆப் சிலபஸ்.....

சாரின்ணே...இது பேரு...சீனா.....தானா.... உங்களுக்கு வெயிட்டீங்....

இப்போ முடியாது....நான் பிசியா இருக்கேன்...இவனை ஒரு பிளாக் ஆவது போட வ்ச்சிட்டு தான் நான் வருவேன்.....சொல்லிடு...

மீண்டும் பாட்டு ஒலிக்க இளா வேலைக்கு போகிறார்...

எல்லாத் தகர டப்பாக்களையும் உருட்டி விட்டு இளா ...பிளாக்...பிளாக்....என்னை மாதிரியே பிளாக் பண்ணு...கமான் ஐ சே அப்படின்னு செம் அலம்பல் விட கப்பி கடுப்பாக அதைப் பாத்து கொண்டிருக்கிறான்....

இளாண்ணே.....

பிளடி ஐ யாம் சையண்டிஸ்ட்...எத்தனை தடவை சொல்லுறது

ஓகே சையண்டிஸ்ட் அண்ணே....இந்த தகரம் தலை நகரம் போவாது சொல்லிட்டேன்....வெளியே ரொம்ப நேரமா கரகாட்டக்கார கோஷ்ட்டிக்கு பேரீச்சம் பழம் வித்த பிஸ்னேஸ் மேக்னெட் நிக்குறார்...நான் வேணும்ன்னா பேரம் படியுதா பாக்கவா

பத்து வருச உழைப்புடா...இளா மறுபடியும் ஆரம்பிக்க....

அய்யோ அம்மா எனக் கப்பியும் வெட்டியும் தலை தெறிக்க ஓடுகிறார்கள்

இளா வீடு....கதவு திறக்க இளாவோட சித்தப்பா கெட்டப்பல்ல வதந்திரன் அங்கே நிக்குறார்...

டேய் இளா யார்டா இந்த பையன்.(ர்).....உனக்கு மீசை எடுத்தா மாதிரியே இருக்கான்...

அம்மா இவனுக்கு இன்னும் மீசையே முளைக்கல்ல...HE IS JUST A BABY..HE IS A BLOG ROBOT...

அப்படின்னா....

மீண்டும் பேக் கிரவுண்ட்ல்ல...புதிய பதிவா மீசிக் ஒலிக்க...

ஹாய் நான் ஒரு பிளாக் ரோபாட்.... மெமரி ஒரு கோடி பிளாகர் ஐடி....ஸ்பீட் ஒண்ணே முக்கால் கோடி கமெண்ட் பேர் செகண்ட்...

டேய் இளா என்னடா இதெல்லாம்....

அம்மா ...இது என்னோட பத்து வருச உழைப்பு....( கப்பி கண்ட படி மெர்சல் ஆகி நிற்க) டயலாக் கன்டினியூ ஆகுது...அதாவது...இவனை இப்போ நான் தமிழ் பதிவுலகத்துக்கு கூட்டிட்டு போய் நிறுத்தப் போறேன்...அங்கே இவனை சுதந்திரமா சுத்த விடப் போறேன்...அப்புறம் இவனை இந்திய
ராணுவத்துல்ல சேத்து விடப் போறேன்...

என்னாது இந்திய ராணுவமா....கிசுகிசு எழுதற ரோபோவை எதோ குமுதம் ஆனந்த விகடன் சினிக்கூத்து இல்லைன்னா இட்லி வடை ப்திவு....எதோ வ,வா.ச மாதிரி விளங்காத குரூப் பிளாக் இதுல்ல சேத்து விட்டா எதோ ஒரு அர்த்தம் இருக்கு.... அதை விட்டுட்டு ராணுவம்....போலீஸ்ன்னு பீதியைக் கிளப்பிகிட்டு...கப்பி கருத்து தெரிவிக்க

இளா அவன் சொல்லுறது நியாயம் தானே ...இவன் ராணுவத்துல்ல என்னடா பண்ணுவான்....

அம்மா அதை நான் சொல்ல முடியாது

ஏன்டா...

அது மட்டும் முடியாதும்மா

ஏன் எல்லாரும் கோபமாய் கேட்க

பயங்கர பீலிங்கோட இளா ....ஏன்னா அது ராணுவ ரகசியம்......அப்ப்படின்னு சொல்ல ரோபேவே மெர்சல் ஆகிறது...

இது செம் மொக்கடா சாமி..........கப்பி கண்களில் மட்டுமில்ல காதுகளிலும் கண்ணீர் வருது

அம்மா இவனுக்கு ஒரு பேரு வேணும்மா

ம்ம்ம் குட்டி....அப்படின்னு வை...உனக்கு ஒரு தங்கை பாப்பா பொறந்தா அந்த பேர் தான் வைக்கலாம்ன்னு இருந்தான்...

அம்மா இவன் தம்பிம்மா

விடுடா மீசை வேர இல்லை...தங்கைன்னே நினைச்சிக்கோடா...


அப்படி எல்லாம் நினைக்க முடியாது கதையிலே பின்னாடி முக்கிய ட்விஸ்டே அப்புறம் வராது....அது தமிழ் பண்பாட்டுக்கு செட் ஆகாது...

என்னடா சொல்லுற...

ம்ம்ம் ரோபோ பாரு புரியும்.....

அட சாமி ரீமேக் பண்ணுற ஆளு ஒரிஜினல் படத்தைப் பாக்க சொன்ன முதல் ஆளு இவர் தான் பா..இவர் ரொம்ப நல்லவர்ங்க...

தமிழ் பதிவர்கள் மாநாடு......
அங்கே......

ஹாய் ஐயாம் குட்டி த ரோபாட்....மெமெரி ஒரு கோடி பிளாகர் ஐடி.....ஸ்பீட் ஒண்ணே முக்கால் கோடி கமெண்ட் பேர் செகண்ட்....
எனக்கு எல்லா பதிவர்களையும் தெரியும்...அவங்க அனானியா வந்து போடுற கமெண்ட்சியும் தெரியும்...எனக்கு டிவிட்டரும் தெரியும் ஒபாமா டாட்டரயும் தெரியும்
எனக்கு கூகுளும் தெரியும்....அதுல்ல பஸ் எழுதுறதுக்கு முன்னாடி என் பாஸ் அடிக்கிற கோல்டன் ஈகிளையும் தெரியும்....

இனி குட்டியின் ராஜ்ஜியம் ஆரம்பம்....

வெயிட் அன்ட் சீ....

GET READY FOLKS...and HAPPY DIWALI FOLKS....

சங்கம் வழங்கும் ‘வதந்திரன்’ விரைவில்

சங்கம் தயாரிப்பில்
கைப்புநிதி மாறன்
வழங்கும்
சூப்பர் பதிவர் விவாஜி நடிக்கும்


வதந்திரன்


Tuesday, November 2, 2010

லோக்கல், ஞானி, சாரு, எந்திரன், வ..

என் உயிரினும் மேலான் உடன்பிறப்புக்களே அப்படி ஆரம்பிச்சா அது கலைஞர் ஸ்டைல்
என் ரத்தத்தின் ரத்தங்களே அப்படின்னு ஆரம்பிச்சா அது புரட்சித் தலைவர் ஸ்டைல்
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே அப்ப்டின்னு ஆரம்பிச்சா அது சூப்பர் ஸ்டார் ஸ்டைல்
எங்கப் பாசத்துக்குரிய சிங்கங்களே அப்படின்னு ஆரம்பிச்சா அது நம்ம வ.வா.சங்கம் ஸ்டைல்ன்னு ஆகிப் போச்சு...

இதே ஏப்ரல் 26, 2006 சங்கம் ஆரம்பிச்சோம்... இரண்டு வருசம் ஓடிப் போச்சு... மூணாவது வருசம் பொறந்திருச்சு...சந்தோசமா இருக்கு... எதோ சாதிச்ச மாதிரி இருக்கு... ஆரம்பிக்கும் போது என்னவோ தமாசாத் தான் ஆரம்பிச்சோம்....குழு பதிவு அதுவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊருல்ல இருந்துகிட்டு குழுவா செயல்படுறது அவ்வளவு சுலபம் இல்லை...சங்கம் ஆரம்பிக்கும் போது இருந்த உற்சாகத்துல்ல இளையதளபதி விஜய் சொல்லுற மாதிரி எவ்வளவோ செஞ்சுட்டோம் இதை செய்யமாட்டோமான்னு தான் ஆரம்பிச்சோம்... மக்களும் எவ்வளவோ படிச்சிட்டாங்க இதை படிக்க மாட்டாங்களான்னு ஒரு நம்பிக்கை... அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை... நகைச்சுவைக்கு என்றுமே மரியாதை உண்டு என்பது நாடறிந்த செய்தி... எங்கள் நகைச்சுவைக்கும் பதிவுலக மக்கள் கொடுத்த வரவேற்பும் ஆதரவும் தான் எங்களை இப்போ மூணாவது ஆண்டுக்குள்ளே அழைத்து வந்திருக்கு...

350க்கும் அதிகமான பதிவுகள், அதுக்கு அச்சு ஊடகங்களில் கிடைத்த ஆதரவு அங்கிகீகாரம், தொடர் வாசகர்கள் அதையும் தாண்டி சங்கத்து மக்களாகிய எங்களுக்கு கிடைத்த நட்பு வட்டம்.இதெல்லாம் சங்கத்தின் சின்னச் சின்ன சாதனைகள்...

முதல் ஆண்டு விழாவில் நடத்திய போட்டிகள்..அதில் உற்சாகமாய் பங்கேற்ற பதிவுலக நண்பர்கள்..அதின் மூலம் கொடுக்கப்பட்ட பரிசினை, பரிசு வென்ற நண்பர்களின் இசைவோட தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தது என சங்கம் மூலம் கிடைத்த மனநிறைவான அனுபவங்கள்...

இரண்டு ஆண்டுகள் முடிந்து மூணுல்ல அடியெடுத்து வைக்கும் போது கொஞ்சம் கொசுவர்த்தி சுத்தல்லன்னா எப்படி?

சங்கம் துவங்கிய 2006 ஆம் ஆண்டு வெளியான சில சுவாரஸ்யமான பதிவுகள் உங்கள் பார்வைக்குப் படைக்கிறோம்... பாருங்க... ரசியுங்க...எங்களோடு கொண்டாட்டத்தில் இணையுங்கள்

வ.வா.சங்கத்தின் முதல் சுவரொட்டி இது தானுங்க

சங்கத்தின் தல கைப்புள்ள சங்கத்தில் வெளியிட்ட முதல் அறிக்கையைப் படிக்க இங்கே வாங்க

சங்கத்தின் தல கைப்புள்ள பதிவுலக அரசியல் பிரவேசம் குறித்து அளித்த பேட்டியைப் படிக்க

கல்கி இதழில் சங்கம் வந்த நிகழ்வு பற்றி அறிய இங்கே பாருங்க

சங்கத்து இளம் சிங்கம் ஜொள்ளு பாண்டியின் கொள்கை முழக்க கவிதைப் படியுங்கள்

சங்கம் நடத்திய முதல் பற்றிய விவரம் இங்கே

தலக் கைப்புள்ளயின் காதல் கதை பத்திய விவரம் வேணுமா?

சங்கத்து மக்களின் கிரிக்கெட் ஆர்வம் பத்தித் தெரிஞ்சிக்கங்க

கிரிக்கெட் மட்டுமா கால்பந்தாட்டத்திலும் நாங்க குறைஞ்சவங்க இல்ல

சங்கத்தின் முதல் அட்லாஸ் பதிவர் யார்ன்னு தெரியுமா... சங்கத்தின் முதல் அட்லாஸ் பதிவு இதோ

பின்னூட்டக் கயமை ஆரம்பித்த வரலாறு இங்கே.. இந்தப் பதிவு பின்னூட்டக் கயமையை எதிர்த்து சிறப்பு பதிவுலக போலீஸ் வரும் அளவுக்கு பெயர் போன கொத்தனாரின் பதிவு

ஐன் ஸ்டீன் எடிசன் எல்லாரும் வியக்கும் அளவுக்கு சங்கத்து தளபதி சிபி உலகுக்கு எடுத்துச் சொன்ன சரித்திரப் புகழ் தத்துவம் இங்கே

சமீபக் காலத்தில் பதிவுலக ரங்கமணிகள் படித்து பயனடைந்த பெனத்தலாரின் MSc WIFEOLOGY ஆரம்பித்ததும் நம்ம சங்கத்தில் தான்

கொங்கு ராசா போட்டுத் தாக்குன ஒன் லைனர்ஸ்

கொங்குராசா கொடுத்த அட்லாஸ் வாலிபன் விளக்கம் கேளுங்க

நம்ம வெட்டிப் பயலின் ஆட்டோகிராப் பாகம் 1, பாகம் 2 பாகம் 3

டுபுக்கு சங்கத்தில் சொன்ன தீவாளி அனுபவம்

வானத்தில் இருக்க நிலாக் கிட்டவே பிரண்ட்ஷிப் வச்சிகிட்ட இவரை இந்தக் கெட்டப்புல்ல சங்கத்திலே தான் பாருங்க...

சங்கத்தின் 100வது பதிவில் சங்கம் பற்றி பாஸ்டன் பாலா அளித்த ரிப்போர்ட்

BLOGGERS MEET அப்படின்னா என்ன அப்படின்னு சங்கத்துல்ல நடந்த அலசல்

ஆர்குட் அலம்பல் பற்றி சங்கத்தில் வெட்டி பயல் அளிக்கும் தகவல்

தலக்கு வச்ச ஸ்பெஷல் கச்சேரி படிங்க

ராயல் தம்பியின் கன்னிப் பதிவு படிங்க...

இது ஓலக குடி மக்களுக்காக தலயோட ஸ்பெஷல் கட்டுரை

பேராசிரியர் தருமி சாரின் கலைவாணர் பிறந்த நாள் சிறப்பு பதிவு பாருங்க

சவுண்ட் பார்ட்டி உதயின் அசத்தலான சேட்டன் பத்தி தெரிஞ்சுக்குங்க

சங்கம் நடத்திய ஸ்டார் நைட் பத்தி இங்கே

2006 முடிஞ்சு 2007 ஆரம்பிச்ச தளபதி சிபியின் இந்த டைமிங் போஸ்ட் பாருங்க

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து சங்கத்தின் பயணம் இனிதே தொடர்கிறது..

இப்படிக்கு
சங்கத்து சிங்கம்ஸ்

தலைப்புக்கு அர்த்தம்: அசல் இங்கே ஒன்னுமே இல்லீங்க. ஒரு மீளபதிவுதான், போன வாரத்து சூடான மேட்டரை எல்லாம் தலைப்பா வந்திருச்சு

எனக்கு அவசரமா காமடி போஸ்ட்டுக்கு மேட்டர் வேணுமே!!! எங்க கிடைக்கும்??

எனக்கு இப்போ உடனடியாக எதுனா காமடி பதிவு எழுதியாக வேண்டிய கட்டாயம். மனதில் எதை பார்த்தாலும் காமடி தோணமாட்டேன்னு அடம். எல்லாமே சீரியஸ் விஷயங்களாகவே மாறி விட்டது. சரி, நம்ம ராதா கிட்டே கொஞ்ச நேரம் பேசினா எதுனா மேட்டர் கிடைக்கும் என நினைத்து நேத்து அவன் வீட்டுக்கு போனேன். பார்த்தவுடனே கேட்டான்." டேய் மெயில் ஐடி இருப்பவங்களுக்கு எம் எல் ஏ போஸ்ட் தர்ராங்களாமே உங்க கட்சில?" - இப்படித்தான் ராதா எதுவா இருந்தாலும் ஏடாகூடமா புரிஞ்சுப்பான். இது என்னவோ ரேஷன் கார்டு இருப்பவங்க எல்லாருக்கும் இலவச டி வி என்பது போல புரிஞ்சுகிட்டானே மகாபாவின்னு நினைச்சுகிட்டு "இல்லடா ராதா, அப்படி பார்த்தா எனக்கு ஒரு மாமாங்கம் முன்னமே எம் எல் ஏ பதவி வந்து மினிஸ்டர் ஆகி என்னன்னவோ ஆகியிருப்பேனே, எல் எல் ஏக்கு எல்லாம் மெயில் ஐடி தர்ராங்களாம்"ன்னு கோவமா விளக்கம் சொல்லிட்டு அவனிடம் இதுக்கு மேலே நின்னா பிரஷர் தான் ஏறுமே தவிர மேட்டர் எதும் சிக்காது என நினைத்து கொண்டிருக்கும் போதே சீமாச்சு அண்ணா போன்.


"என்ன ராஜா ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போயிட்டு வருவுமா, மாமனாரை சதாப்தில ஏத்தி அனுப்பிட்டு வருவுமே" என போனிய போது தலையாட்டி கிளம்பினேன். ரயில்வே நிலைய வாசலில் இருந்தே எல்லே ராம் அண்ணாச்சியின் பதிவை எல்லாம் அசை போட்டு கொண்டே உள்ளே போய் நின்ன போது சோழன் எக்ஸ்பிரஸ் வந்து நிற்க என் கூட படிச்ச ஒரு துரோகி மோகன்சந்த் மஞ்சள் பை தூக்கி கிட்டு இறங்கி போக நான் முகத்தை திருப்பி கொண்டேன். அவனுக்கு எனக்கும் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் முதலே செத்தா வாழ்ந்தா இல்லைன்னு ஆகிப்போச்சு. நடந்த சம்பவத்தை சொன்னா நீங்களும் கூட மோகன்சந்தை ஊரை விட்டு ஒத்துக்கி வைத்து அன்னம் தண்ணி ஆகாரம் கொடுக்காம, அவன் வீட்டில் கை நனைக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கு.

இப்போ மாதிரி இல்லை அப்போ. ஒருவனுக்கு மதிப்பே அவனவன் படிச்ச படிப்பிலோ, வாங்கும் ரேங்கிலோ, சொத்துபத்து வசதியிலோ இல்லை. வரக்கூடைய பொங்கல் வாழ்த்து அட்டையின் எண்ணிக்கை தான் எங்கள் தரநிர்ணய அளவு கோலாக இருந்த காலம். நானும் சிரமப்பட்டு இந்த உலகமே மெச்சும் அளவு "பெரியாஆளாக" வேண்டி மாறன் பிரதர்ஸ் மாதிரி கஷ்ட்டப்பட்டு உழைத்த காலம். என் வீட்டு விலாசத்தை பிட்டு பிட்டா பேப்பரில் எழுதி "எனக்கு நீ பொங்கல் வாழ்த்து அனுப்பினால் நான் உனக்கு அனுப்புவேன்" என வியாபார ஒப்பந்தம் எல்லாம் போட்டு வினியோகம் செய்து கொண்டிருந்தேன். இதோ மஞ்சள் பை மைனராக போகிரானே அந்த துரோகிக்கும் வினியோகம் செய்தேன். ஒருவேளை என் வகுப்பில் இருந்த நாற்பது பேரும் எனக்கு வாழ்த்து அட்டை அனுப்பிவிட்டால் பதிலுக்கு நன்றி கார்டு மொய் வைக்கும் அளவு வசதி இல்லை எனினும் அதிக பின்னூட்டம் வந்தால் "வருகை தந்த அனைவருக்கும் நன்றி"ன்னு கடைசியா ஒரு பின்னூட்டம் போட்டு ஓடிடுவோமே அது போல "மாணவர்கள், 6.F, "ன்னு போட்டு ஒரு கார்டு வாங்கி ஒட்டிடலாம் என நினைத்து கொண்டிருந்தேன்.

எந்திரன் விளம்பரம் மாதிரி எவனையும் விட்டுவிடாமல் நியாபகப்"படுத்தி" கொண்டும் இருந்தேன். பாய் இசாக் முதல், பாதர் பையன் டேனியல் வரை எனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பியும் இந்த காந்தி பெயரை வைத்து இருந்த காலிப்பய மாத்திரம் ஏமாத்தி விட்டான். இந்த துரோகத்தை எல்லா பொங்கலின் போதும் நினைத்து அழுகின்றேன். பொங்கலுக்கு பானை நியாபகம் வருதோ இல்லியோ இந்த பாழய்ப்போன மோகன்சந்த் நியாபகம் வந்து தொலைக்கிறான். நானோ காமடி பதிவுக்கு மேட்டர் தேடி அலையும் நேரத்தில் இவனா வந்து என் கண்ணில் மாட்டி தொலைய வேண்டும்??

விஷயத்தை ரயில்வே ஸ்டேஷனில் கேள்விப்பட்ட சீமாச்சு அண்ணா கொதித்து போனார். (போனீங்க தானே?) " விடு ராஜா விடு, இதோ என் மாமனார் சமீபமா 30 வருஷமா கேஸ் இல்லாம ஃப்ரீயா தான் இருக்காரு. உன் கேசை நடத்த சொல்லலாம்" என சொல்ல அதுக்கு கூட இருந்த சீமாச்சு அண்ணாவின் சகலர் " நீ வேற வாசன், நானே அவர் மேல கேஸ் போடலாம்னு இருக்கேன். வக்கீல் பொண்ணு தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு லட்சியமா இருந்தேன். மாமா இது வரை கோர்ட்டுக்கே போகாம மீண்டும் கோகிலா கமல் மாதிரியே இருக்கார். இதுக்காகவே நான் அவர் மேல கேஸ் போட போறேன்"ன்னு சொல்ல பாவம் மாமா ரொம்ப நொந்து போய் அவருக்கு வந்த போனில் " வந்துட்டேன் ஸ்டேஷனுக்கு வந்தாச்சு. சரியா நைன் தர்டிக்கு கோயம்ப்டூர்ல இருப்பேன். யா யா மாப்பிள்ளை எல்லாம் வந்திருக்கா ஸ்டேஷனுக்கு.. ஆக்சுவலி என்னை ரயில் ஏத்திவிடத்தான் வந்தா, ரயில் கிளம்ப இன்னும் அரை மணி இருக்கு. அது வரை எதுக்கு சும்மா இருப்பானேன்னு என் மானத்தை ரயில் ஏத்தி விட்டுண்டு இருக்கா" என சொல்லி கொண்டு இருந்தார்.

பாருங்க என் ராசிய! காமடி பதிவுக்கு மேட்டர் தேடினா நல்ல குடும்ப சண்டைக்கு மேட்டர் அமையுது. இதான் விதி. சரி மழை வருவது போல இருக்கு. வீட்டுக்கு போவோம். அட பிளாட்பாம் டிக்கெட் செக்கிங் வாசலில் நிற்பது நம்ம கவுதமன். அவனை தெரியுமா உங்களுக்கு. செட்டி தெருவாசி. நாங்க மூணாவது படிக்கும் போது அவனை கடத்திகிட்டு போயிட்டாங்க. ஒரு நாள் தேடியும் கிடைக்கலை. பின்னே அவனை யாரோ இதே ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடித்ததாக அப்ப ஸ்கூல் முழுக்க பேச்சு. நான் இதை சீமாச்சு அண்ணன் கிட்டே சொல்லிகிட்டே வந்தேன். "அண்ணே குழந்தைகளை கடத்தி போய் பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் தான் கடத்தி போனதாக அப்ப ஸ்கூல துண்டு முறுக்கி சார் எங்க கிட்ட சொல்லி யார் கிட்டயும் சாக்லெட் வாங்கி சாப்பிட கூடாதுன்னு சொன்னாரு. அதன் பின்ன நான் யார் கொடுத்தாலும் சாக்லெட் வாங்கி தின்பதில்லை. நீங்க வேணா அந்த பைவ்ஸ்டார் வாங்கி தாங்க. நான் திங்க மாட்டேன். ஹும் அவன் மாத்திரம் அன்னிக்கு தப்பி வரலைன்னா இந்நேரம் எதுனா ரயில்வே ஸ்டேஷனில் நின்னு கிட்டு கையேந்திகிட்டு இருந்திருப்பான்" என சொல்லி முடிக்கவும் நாங்க அவன் கிட்ட வருவதுக்கும் அவன் எங்க கிட்ட " சார் டிக்கெட்" என கேட்டு கையேந்தி நிற்கவும் சரியா இருந்துச்சு. அண்ணன் சொன்னாரு "ஆமாம், வாஸ்தவம் தான்"

வீட்டுக்கு வரும் போது நல்ல மழை. அடடா மழைடா அடை மழைடா என பாடி கொண்டே அபி அடை சாப்பிட்டு கொண்டு இருக்க நட்ராஜ் ஒரு கத்தை பேப்பர் வைத்து கொண்டு கப்பல் விட்டு கொண்டிருந்தான். அட அந்த பேப்பரை எல்லாம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என நினைத்து பிரித்து பார்த்து ஒரே கத்தல். சுத்தமாக என் காமடி பதிவு எழுதும் மூட் போயே போச். எல்லாமே என் காதல் கடிதங்கள். ரயில்வே ஸ்டேஷன் போகும் முன்ன தான் டுபுக்குவின் "லவ்லெட்டர்" பதிவு படிச்சுட்டு காமடி எழுதினா இது போல தான்யா எழுதனும் என நினைத்து கொண்டே போன எனக்கு இப்போ என் லவ்லெட்டர் எல்லாம் கப்பல்லாக போவது கண்டு கோவம் கோவம் கோவமான கோவம். "யார்டா இதை உனக்கு கொடுத்தது" என கோவமாக கேட்டேன். "யாரும் கொடுக்கலை, நான் தான் எடுத்துகிட்டேன்" என சொன்னான். எடுத்த இடத்தை காட்டிய போது எனக்கு பக்குனு ஆகி போச்சு. அது என் ரேசர் கிட். "அய்யோ இது ஏன் என் ரேசர் கிட்க்கு போச்சுன்னு கத்தியபோது தான் அபிஅம்மா " நேத்து தான் நீங்க அந்த சோப் தடவ பேப்பர் இல்லைன்னு கத்தினீங்க, அதான் ஒரு கத்தை பேப்பர் அதிலே வச்சேன்" ------கிழிஞ்சுது இனி இந்த மூட்ல நான் காமடி போஸ்ட் போட்டு என்னத்த வாழும்.

ஒரு மனுஷனை இப்படி எல்லா விதத்திலும் கோவப்படுத்தினா எப்படி காமடி போஸ்ட் போடுவது......

டிஸ்கி: இதல்லாம் எதுக்கு சொல்றேன்னா, காமடி எழுதுவது என்பது நெம்ப கஷ்ட்டம். அதை படிப்பவங்களுக்கு தான் சிரிப்பே தவிர எழுதுறவன் நாக்கு தள்ளிடும். ஆனா நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சிங்கங்கள் இருக்கே அதல்லாம் சேர்ந்து மூணு வருஷத்துக்கு பின்னே நகைச்சுவை போட்டி வைக்க போறாங்களாம். சங்கத்தின் தானை தலவிதீ இளைய சிங்கம் விஜி நாளை ஒரு மாபெரும் அறிவிப்பு செய்ய போறாங்களாம். காத்து வாக்கில் சேதி வந்துச்சு காதுக்கு. மீதி விபரங்கள் எல்லாம் அங்க பார்த்துடுங்க. ரெடியாகுங்க போட்டிக்கு. வரும் டிசம்பர் மாதம் முழுக்க சங்கத்திலே நகைச்சுவை கொண்டாட்டம் இருக்குது. மீதி விபரம் தானை தலைவிதீ விஜி சிங்கம் சொல்லுமப்பா.. இப்போதைக்கு நான் வடைபெறுகிறேன். ஹாப்பி தீபா'வளி. சந்தோஷமா கொண்டாடுங்க.

Thursday, October 21, 2010

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு...!

Justify Full’அக்கடா’ என்று உட்கார்ந்துகொண்டு நெடுந்தொடர் பார்த்துக் கொண்டிருந்த குப்புசாமி, அழைப்பு மணி சத்தம் கேட்டதும் எரிச்சலடைந்தார்.

"கோலம்மா! வாசல்லே யாருன்னு பாரு! யாராவது வேக்கூம் கிளீனர் கம்பனியிலேருந்து வந்திருந்தா நாம வீட்டையெல்லாம் சுத்தமே பண்ணுறதில்லேன்னு சொல்லி அனுப்பிடு!"

எரிச்சலோடு எழுந்துபோய் கதவைத் திறந்த கோலம்மாள், எதிரே 1950-ம் வருட மாடல் அம்பாசடர்கள் போல நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களைப் பார்த்து அதட்டினாள்.

"யாருங்க நீங்க?"

"நாங்க இன்கம் டாக்ஸ் ஆபீஸிலேருந்து வர்றோம்."

"அடுத்த வீடு பாருங்க! நாங்க எதுவும் போடறதில்லை!"

"மேடம்!" கண்ணாடி போட்டுக்கொண்டு சிவாஜியில் ஸ்ரேயாவைப் பார்க்க மாறுவேடத்தில் வந்த ரஜினி போலிருந்தவர் அதட்டினார். "நாங்க பிச்சை கேட்க வரலே! வருமானவரித்துறையிலேருந்து வந்திருக்கோம். உங்க வீட்டை செக் பண்ணனும்!"

"ஆமாம்! நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு....ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு..." என்றார் அசப்பில் விவேக் போலவே இருந்த இன்னொருவர்.

"என்னங்க, யாரோ வருமானவரி ஆபீஸ்லேருந்து வந்திருக்காங்களாம்!" என்று கணவருக்குக் குரல் கொடுத்தார் கோலம்மாள்.

"வருமான வரியா? நமக்குத் தான் வருமானமே கிடையாதே!" என்று எரிச்சலோடு எழுந்துவந்த குப்புசாமி, வாசலில் நிற்பவர்களை ஏற இறங்கப் பார்த்தார்.

"சார்! தப்பான வீட்டுக்கு வந்திருக்கீங்க! இது வாடகைவீடு! நான் ஒரு குமாஸ்தா! எனக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. ஒரே ஒரு சொத்தைப்பல்லுதான் இருக்கு. அதைப் புடுங்குறதுக்குக் கூட காசில்லாம ஆபீஸ்லே அட்வான்ஸ் கேட்டிருக்கேன். பக்கத்துத் தெருவுக்குப் போனீங்கன்னா ஒரு வட்டச்செயலாளர், ஒரு சீட்டுக்கம்பனிக்காரரு, ஒரு ஜோசியர் இருப்பாங்க! அவங்க வூட்டுலே செக் பண்ணினீங்கன்னா நிறைய தேறும்."

"சரியான தகவல் கிடைச்சுத்தான் இங்கே வந்திருக்கோம்! வழிவிடுங்க!" என்று கூறியபடி இரண்டு அதிகாரிகளும் வீட்டுக்குள்ளே அதிரடியாய் நுழைந்தனர்.

"சார்! சார்! சொல்றதைக் கேளுங்க! அந்த சோபாவிலே உட்காராதீங்க! அது சோபா இல்லை! சோபா மாதிரி!"

வந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். தாங்கள் கொண்டுவந்திருந்த பையை டீப்பாயின் மீது வைக்க முயன்றனர்.

"சார்! சார்! அதுமேலே வைக்காதீங்க! அது டீப்பாயில்லை; டீப்பாய் மாதிரி!"

"என்னங்க?" கோலம்மாள் கலவரத்தோடு கேட்டாள். "தொறந்தவீட்டுக்குள்ளே எதுவோ மாதிரி நுழைஞ்சிருக்காங்க! பேசிட்டு சும்மாயிருக்கீங்களே...போலீஸுக்கு போன் பண்ணுங்க!"

"இந்த மேடம் யாரு மிஸ்டர் குப்புசாமி?"

"என் பொஞ்சாதி மாதிரி...அதாவது உண்மையாவே என் பொஞ்சாதிதான்! ஐயையோ! எனக்குப் பதட்டத்துலே வாயெல்லாம் குழறது சார்!"

"உங்களைத் தீவிரமா விசாரிக்கணும் மிஸ்டர் குப்புசாமி! உங்க பொண்ணு எங்கே??"

"அவ செல்போனிலே பேசிட்டிருக்கா! திரும்பி வர ஒரு வாரமாகும். அதுவரைக்கும் நாம பேசிட்டிருப்போமே!" என்று ஒரு ஜமுக்காளத்தை விரித்து வந்த அதிகாரிகளை உட்காரவைத்த குப்புசாமி, ’ஒரு நிமிசத்துலே வர்றேன்,’ என்று கூறி கோலம்மாளை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள்ளே நுழைந்தாள்.

"கோலம்மா! வந்தவங்களைப் பார்த்தா நாலுநாள் சாப்பிடாதவங்க மாதிரி இருக்கான். கண்டிப்பா இவனுங்க வருமானவரி அதிகாரிங்களா இருக்க வாய்ப்பில்லே! திருடனுங்க தான்! இவங்களைத் தந்திரமா போலீஸ் கிட்டே மாட்டி விடலாம். நீ என்ன பண்ணுறே, ரெண்டு பேருக்கும் காப்பி கொண்டுபோய்க் கொடு!"

"சரிங்க!"

"இதோ பாரு! உன்னைப் பொண்ணு பார்க்க வந்தபோது கொடுத்தியே அந்த மாதிரி காப்பியை கொடுத்து ஏமாத்துற வேலையெல்லாம் வேண்டாம். நீ தினமும் போடுற காப்பி மாதிரியே போட்டுக்கொடு! முத முதலா அதைக் குடிச்சாங்கன்னா அரை மணியிலே கோமா ஸ்டேஜுக்குப் போயிருவாங்க! சரியா?"

"சரிங்க, இன்னிக்குக் காலையிலே பண்ணின ஜவ்வரிசி உப்புமா இருக்கு. கொடுக்கட்டுமா?"

"அடிப்பாவி, என்னைக் கொலைக்கேசுலே மாட்டிவிடப்போறியா? பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ?"

"சரி சரி, நீங்க போய்ப் பேசிட்டு இருங்க! நான் காப்பியோட வர்றேன்!"

"வெரிகுட்! இப்போதைக்கு காப்பி போதும். எனக்கு ஓவர் வயலன்ஸ் பிடிக்காது சரியா?"

குப்புசாமி உள்ளே நுழைந்ததும், வந்திருந்த அதிகாரிகள் ரகசியமாக எடுத்துக்கொண்டிருந்த குறிப்பை மறைக்க முயன்றனர்.

"மிஸ்டர் குப்புசாமி! உங்களோட அசையும் சொத்து, அசையா சொத்து பத்தின விபரம் சொல்றீங்களா?"

"சார், என் கிட்டே ஒரு செகண்ட்-ஹேண்ட் வண்டியிருக்கு சார். அதையே அசைக்கணுமுன்னா, கோவில் ஸ்பீக்கர்லே அனவுன்ஸ் பண்ணி எல்லாரும் வந்து தள்ளிவிடுவாங்க சார்! மத்தபடி எந்த சொத்தும் கிடையாது சார்!"

"நீங்க மூணு வருசமா ரிட்டர்ன்ஸ் ஃபைலே பண்ணலியே! என்ன காரணம்?"

"சார், எனக்கு வருசா வருசம் ரீஃபண்டு தான் வரும் சார்! அதை உங்க டிப்பார்ட்மென்டுலேருந்து திரும்பி வாங்குறதுக்கு அதை விட ஜாஸ்தியா செலவு பண்ணனுமேன்னு விட்டுட்டேன் சார்!"

"அது போகட்டும், திடீர்னு கொசுவண்டியோட நாத்தம் வருதே?"

"வேறொண்ணுமில்லே! என் வொய்ஃப் உங்களுக்குக் காப்பி கொண்டு வர்றா! இதோ வந்திட்டா...சாப்பிடுங்க சார்! சாப்பிட்டுக்கிட்டே சாவகாசமாப் பேசலாம்."

"மிஸ்டர் குப்புசாமி! நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! கடமையைச் செய்யும்போது காப்பி சாப்பிடறதுல்லே...!"

"ஐயோ சார், நீங்க தப்பா நினைச்சிட்டீங்க! இது காப்பியில்லை; காப்பி மாதிரி....! சும்மா சாப்பிடுங்க! ஏன் இப்படி சந்தேகமாப் பார்க்கறீங்க? ஒருவேளை மயக்க மருந்து கலந்திருக்குமொன்னு சந்தேகமா?" என்று கேட்ட குப்புசாமி, இரண்டு காப்பியிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் டபராவில் ஊற்றிக் குடித்தார்.

"இப்போ சந்தேகம் தீர்ந்திருக்குமே? சாப்பிடுங்க!" என்று சொல்லியதும், வந்தவர்கள் இருவரும் காப்பி பருகினர். பருகியதும் இருவரும் மூர்ச்சையடைந்தனர். சிறிது நேரம் கழித்து இருவரும் கண்விழித்தபோது....

"நான் எங்கே இருக்கேன்...?"

"நான் எங்கே இருக்கேன்...?"

"என்னங்க, போதை தெளிஞ்சிட்டதுங்க!" என்று பதறினாள் கோலம்மாள்.

"முழிச்சா நல்லது தானே?" என்று சிரித்தார் குப்புசாமி. அதற்குள் அவர்தான் தெருவிலிருப்பவர்கள் அனைவரையும் வீட்டில் கூட்டியிருந்தாரே?

"குப்புசாமி! நான் இதுவரைக்கும் யாரையுமே அடிச்சது கிடையாது. அதுனாலே முதல்லே நான் தான் இவங்களை அடிப்பேன். இந்தாங்க பத்து ரூபாய்...!" என்று ஒருவர் பணத்தை நீட்ட...

"இருபது ரூபாய் கொடுக்கிறவங்கதான் முதல்லே அடிக்கலாம்!" என்று குப்புசாமி அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

"இந்தாங்க சார்! இருபத்தி அஞ்சு ரூபாய்!" என்று காசைக்கொடுத்துவிட்டு, மயக்கம் தெளிந்து கொண்டிருந்த இருவரையும் மொத்த ஆரம்பித்தார் ஒருவர்.

போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு, தலைக்குப் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு, தெருவிலிருக்கிற எல்லாருக்கும் வந்திருப்பவர்களை நையப்புடைக்கிற வாய்ப்பு அளித்த குப்புசாமி, வசூலான பணத்தை வழக்கம்போல கோலம்மாளிடம் கொடுத்தார்.

சிறிதுநேரத்தில் திபுதிபுவென்று போலீஸ் வந்தனர். கீழே கிடந்தவர்களைப் பார்த்தனர்....

"ஐயையோ...சார்!" என்று பதறியபடி இருவரையும் எழுப்பினார் ஒரு போலீஸ் அதிகாரி.

"யாருய்யா இவங்களை அடிச்சது? இவங்க திருடங்க இல்லை. உண்மையாகவே வருமானவரி அதிகாரிங்க! எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்." என்று அவர் இரையவும், குப்புசாமி அரண்டு போனார்.

"சார் சார், இவங்க திருடனுங்கன்னு நினைச்சுத்தான் இப்படி அடிச்சுப்புட்டோம் சார்! மன்னிச்சிடுங்க சார்! எங்க மேலே கேஸ் போட்டுராதீங்க சார்!" என்று கெஞ்சினார்.

"இன்ஸ்பெக்டர் சார்! அவங்களை விட்டிருங்க!" என்று இரண்டு வருமான அதிகாரிகளில் சுமாராக அடிவாங்கிய ஒருவர் பேசினார். "எங்கே மேலே மிஸ்டேக் இருக்கு! வந்ததும் அடையாள அட்டையைக் காட்டியிருக்கணும். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? யப்பா...தெருவே பேரம் பேசி மொத்தியிருக்காங்கப்பா....ஆபீஸுக்குப்போயி உடனே வி.ஆர்.எஸ்ஸுக்கு எழுதிக்கொடுக்கப்போறேன்யா...!"

"ஐயாம் சாரி சார்!" என்று குப்புசாமி கையெடுத்துக் கும்பிட்டார். "தப்பாப்புரிஞ்சுக்கிட்டோம் சார்!"

"மிஸ்டர் குப்புசாமி! ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே? எனக்குத் தெரிஞ்சு காசுகொடுத்து உதைக்கிறதுக்கு இவ்வளவு பேரு இருக்காங்கன்னு இன்னிக்குத் தான் பார்த்தேன். உங்க தெருவிலே ஒருத்தர் விடாம நவராத்திரி கொலுவுக்கு கூப்பிடுறா மாதிரி கூப்பிட்டு இந்த மொத்து மொத்தியிருக்கீங்களே! ஏன் சார் இவ்வளவு கொலைவெறி?"

"மன்னிக்கணும் சார்! ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு முன்னாள் அரசியல்வாதி வருமானவரி அதிகாரி மாதிரி வேசம்போட்டு வீடுவீடாப் போய்த் திருடினதா பேப்பரிலே படிச்சேன். ரொம்ப நாளாவே நம்மூரு அரசியல்வாதிங்களைப் போட்டு மொத்தணுமுன்னு எல்லாரையும் போல எனக்கும் ஒரு வெறி இருந்திச்சா? அதான் என்னை மாதிரியே அரசியல்வாதிங்க மேலே கடுப்பா இருக்கிறவங்களை கூப்பிட்டு ஆசை தீர உதைக்க விட்டேன். ரொம்ப வலிக்குதா சார்?"

"வலியா? கழுத்துக்குக் கீழே எல்லாம் இருக்க வேண்டிய இடத்துலே இருக்கான்னு குனிஞ்சு பார்க்க வேண்டியிருக்குய்யா....! ஆனாலும் ரெண்டு பேர் அகப்பட்டா இந்த அடியா அடிப்பீங்க?"

"வெரி வெரி சாரி சார்! உங்க புண்ணியத்துலே நிறைய பணம் வசூல் ஆயிருக்கு சார்! நீங்க அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போகணும் சார்! அடுத்தவாட்டி உண்மையிலேயே நல்ல காப்பியா தர்றோம் சார்!"

"கா...ப்...பியா....?" இரண்டு அதிகாரிகளும் மீண்டும் மூர்ச்சையடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் அவர்களது நாடித்துடிப்பைப் பரிசோதித்துவிட்டு, தொப்பியைக் கழற்றிவிட்டு சொன்னார்.

"ஐயாம் சாரி!"

பி.கு: இதுலே எதுக்கு ஸ்ரேயா படம்? என்று கேட்பவர்களுக்கு! சும்மா, ஒரு ஐதீகம் அவ்வளவு தான்!

Sunday, October 17, 2010

சூ மந்திரத் தக்காளி!

பெண்களை கவர்வதற்கு ஜாய் அலுக்காஸ் போய் கண்ணைப் பறிக்கும் வைரநெக்லஸ் வாங்கிக் கொடுத்து, மாதாமாதம் கிரெடிட் கார்டு பில்லைப் பார்த்து முழிபிதுங்க வேண்டுமா?

போத்தீஸுக்கும், சென்னை சில்க்ஸுக்கும் போய் எந்திரன் படத்துக்கு முதல்நாள் மார்னிங் ஷோ போனவன் போல இடிபட்டு கசங்கி கந்தர்கோளமாக வேண்டுமா?

அநியாய வட்டிக்குக் கடன்வாங்கி, அடையாறு கேட் ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போய் ஆட்டுக்கால் சூப் வாங்கிக் கொடுக்க வேண்டுமா?

தேவையேயில்லை! இதையெல்லாம் விடவும் மிகவும் சுலபமான, சிக்கனமான ரகசிய வழியொன்று இருக்கிறது. அந்த வழியைக் கடைபிடித்தால், உங்களது மின்னஞ்சல் பெட்டியும் எனது மின்னஞ்சல் பெட்டியைப் போலவே காதல் மடல்களால் நிரம்பி வழிந்து குறுவை சாகுபடிக்கு ஒத்தாசை செய்யும் என்பது உறுதி.

நம்பிக்கையில்லையா? இதோ எனது மின்னஞ்சல் பெட்டியின் ஸ்க்ரீன்-ஷாட்!


இப்படி எனக்கு ஒரே நாளில் இந்தியாவின் கனவுக்கன்னிகளெல்லாம் மடல் மீது மடலாகப் போடுவதற்கு என்ன காரணம்? அவர்களது உள்ளங்களை என்னால் எப்படி கொள்ளை கொள்ள முடிந்தது? இது என்ன தங்கமலை ரகசியமா என்று யோசிக்கிறீர்களா?

தங்கமலை ரகசியம் இல்லை; தக்காளி ரகசியம்!

சிரிக்காதீங்க! தக்காளி என்றால் லேசுப்பட்டதா?

அதற்கு எப்போது கிராக்கி வரும் என்று தெரியாது. திடீரென்று கிலோ நான்கு ரூபாய்க்கெல்லாம் விற்கும்போது, பல வீடுகளில் பாயசம் தவிர எல்லாவற்றிலும் தக்காளி போடுவார்கள். அதை வைத்து ரசமும் வைக்கலாம்; கொத்சு பண்ணலாம்; தொக்கு அரைக்கலாம். கொஞ்சம் அழுகிப்போனால், பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்களின் முகத்தைக் குறிபார்த்து எறியலாம். இவ்வளவு அருமை பெருமை வாய்ந்த தக்காளியைப் பற்றி ரஜினி ஒருத்தர் தான் ’ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே! அழுகின தக்காளியே!’ என்று பாடியிருக்கிறார். இருந்தாலும் தலைவர் என்பதால் விட்டு விடுகிறேன்.

திருமணமாகாதவர்களே! உங்கள் காதலியை தக்கவைத்துக் கொள்ள இனிமேல், ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு உங்களது கஞ்சத்தனத்தை வெளிப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, தினமும் தக்காளி ஜூஸ் வாங்கிக் கொடுங்கள்!

’ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?’ என்றெல்லாம் இனிமேல் பாடாதீர்கள். ’தக்காளிப்பெண்ணே..!" என்று மாற்றிப் பாடுங்கள். கவிதை எழுதுபவர்களும் இனிமேல் காதலியைத் தக்காளியோடு ஒப்பிட்டு எழுதுங்கள். உதாரணத்துக்கு.....

"அன்பே!
உன் சருமத்தைப் பார்த்தால்
சரக்குமாஸ்டருக்கும் ஆசை வருமே!
தக்காளியென்று
தப்பாக நினைத்து விட்டாரோ?"

காதலியே இல்லாதவர்கள் காதலிக்கு கூடை கூடையாக தக்காளியை அனுப்புங்கள். காதல் கைகூடுவது நிச்சயம்.

திருமணமானவர்களே! உங்கள் மனைவியின் அன்பு மியூச்சுவல் ஃபண்டு போல பல்கிப்பெருக, தினமும் மல்லிகைப்பூ வாங்குகிறீர்களோ இல்லையோ, தவறாமல் தக்காளி வாங்கிக் கொடுங்கள்! திருமணதினத்துக்கும், பிறந்தநாளுக்கும் தக்காளிக்கலரில் உடை வாங்கிக்கொடுத்தால், உங்களது இல்லறம் தக்காளி ரசம் போல கமகமவென்று மணம்வீசும்!

தக்காளி சீனிவாசன் தயாரிக்கும் படங்களைத் தவறாமல் காதலி/மனைவியோடு பாருங்கள்!

தப்பித்தவறி, காதலியோடோ மனைவியோடோ ஊடல் ஏற்பட்டால் தக்காளி கெட்ச்-அப் வாங்கிக்கொடுத்து பேட்ச்-அப் செய்து கொள்ளலாம்.

அப்படியென்ன இருக்கிறது இந்தத் தக்காளியில் என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு விஷயமே தெரியாதா?

தக்காளி பெண்களின் இதயநோயைக் கட்டுப்படுத்தும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, காதலியாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி அல்லது ஒருவருக்கு காதலி, மனைவி இருவருமே இருந்தாலும் சரி, நிறைய தக்காளி வாங்கிக் கொடுங்கள்!

என்ன இருந்தாலும், அவர்களது இதயத்தில் குடியிருக்கிறவர்கள் அல்லவா நீங்கள்? தினசரி தக்காளி வாங்கிக் கொடுத்தால் குடியிருக்கிற வீட்டில் விரிசல் ஏற்படாமல் இருக்கும்.

இத்தோடு நிறுத்திவிடாமல், இனிமேல் ’காதலர் தினம்’ வரும்போது பூக்களை அனுப்புவதற்கு பதிலாக, கோயம்பேட்டுக்குப் போய் நிறைய தக்காளி வாங்கி அனுப்புங்கள்!

வாழ்க தக்காளி! வளர்க காதல்!

Thursday, October 14, 2010

இதென்ன கொடுமை?

பலர் என்னிடம் கேட்பதுண்டு. "சேட்டை, வலைப்பதிவில் எழுதுவதற்கு பதிலாக நீ பேசாமல் மெரீனா பீச்சில் வடைதட்டி வியாபாரம் பண்ணியிருக்கலாமே? பனகல்பார்க் பக்கத்தில் பஜ்ஜி போடலாமே?"

அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒரு வருடத்துக்கு முன்பு.....!(ஓடாதீங்கப்பு, சின்ன ஃபிளாஷ்-பேக் தான்!). மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நாளில், என் காதில் அந்தச் செய்தி வந்து விழுந்தது. என் இதயம் எக்ஸ்ட்ரா அப்பளம் போல எக்கச்சக்கமாக நொறுங்கியது.

இணையத்தில் என் அபிமான நடிகை ஸ்ரேயாவின் கன்னாபின்னாவென்ற படங்களை எவனோ கிராபிக்ஸ் பண்ணி பரப்புவதாகக் கேள்விப்பட்டதும், துக்கம் தாள முடியாமல், கல்யாண பிரியாணி ஃபுல் ப்ளேட் சாப்பிட்டுவிட்டு, நிறைய ஐஸ் போட்டு, ஒரு லஸ்ஸி வாங்கிக் குடிக்க வேண்டியதாயிற்று.

அன்றே செத்துப்போன என் கொள்ளுப்பாட்டியின் எள்ளுப்பாட்டி மீது சத்தியம் செய்து எப்படியாவது இந்த ’சைபர் கிரைம்’ என்கிற அக்கிரமத்தை வேறோடு அழித்தே தீர வேண்டும் என்று சபதம் பூண்டேன். (நீயே ஒரு சைபர்(ஜீரோ!). நீ எழுதுவதை விட பெரிய கிரைம் என்ன இருக்க முடியும் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்!)

உங்களுக்குத் தெரியுமா? சைபர் கிரைமால் 76% இந்தியர்கள் பாதிப்பு:60% பேர் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிப்பு என்று அண்மையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சைபர் கிரைமால் நானே பாதிக்கப்பட்டிருக்கிறேன் தெரியுமா? ஒரு தடவை, "உங்கள் மின்னஞ்சலுக்கு சிறந்த மின்னஞ்சலுக்கான ஒரு மில்லியன் டாலர் பரிசு,’ என்று ஒரு மடல் வந்தது. ’இதென்ன அபாண்டம்?நான் அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணியதே இல்லையே!’ என்று கூட யோசிக்காமல் அந்த மடலைத் திறந்ததும் ’செல்லாத்தா’ என்ற வைரஸ் எனது கணினிக்குள்ளே புசுக்கென்று நுழைந்து பரவி விட்டது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் எதுவும் பலனளிக்காமல் போகவே, பாடிகார்ட் முனீஸ்வரருக்கு கடா வெட்டி பொங்கல் வைத்தபிறகுதான் கம்ப்யூட்டர் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதே போல இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் எனது ஜீ-மெயில் ஐ.டி.களவாடப்பட்டு விட்டது. (சீரியசாப் பேசிட்டிருக்கும்போது சிரிச்சா எனக்குப் பிடிக்காது; மெய்யாலுமே என்னோட ஐ.டியும் காணாமப் போச்சு!) நானும் எல்லா நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்.அனுப்பித் தகவலை அனுப்பிக்கொண்டிருந்தபோது, திடீரென்று எனது ஐ.டியை மீட்கவும் முடிந்தது. "தெரியாத்தனமாக உங்களது ஐ.டியை ஹேக் செய்து விட்டேன். நீங்கள் எழுதிய, உங்களுக்கு வந்த மடல்களைப் படித்ததில், என் மூதாதையர்கள் சிக்கிமுக்கிக் கல்லை உரசி அடுப்பு மூட்டிச் சமைத்த காட்சிகளெல்லாம் என் கனவில் வர ஆரம்பித்து விட்டது. இனிமேல் யாருடைய ஐ.டியையும் திருட மாட்டேன்!" என்று ஒரு மன்னிப்புக் கடிதமும் சில நிமிடங்களில் வந்தது.

ஏதோ அது நானாக இருந்ததால், தப்பித்தேன்! கொஞ்சம் உருப்படியாக எழுதுகிறவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?

பலருடைய டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு,ஏ.டி.எம்.கார்டு என்று ரேஷன் கார்டு தவிர மீதமுள்ள எல்லா கார்டுகளையும் இணைய மோசடிகள் மூலமாகத் தவறாகப் பிரயோகிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. எனக்கு விசிட்டிங் கார்டு கூட கிடையாது என்பதால் தப்பித்தேன்.

இவ்வளவு பயங்கரமான ஒரு தீயசக்தியைக் குறித்து, சமூகப் பிரக்ஞையோடு ஒரு இடுகை போட வேண்டும் என்பதற்காக, ஒரு நாள் காஷுவல் லீவு போட்டு இந்த இடுகையைத் தயாரித்திருக்கிறேன்.

உங்களில் யாராவது ’வீராசாமி’ படம் பார்த்தீர்களா? (என்னது, ஒரே ஒருத்தர் தானா? உங்க பேரு என்ன விஜய டி.ராஜேந்தரா?) சரி போகட்டும்! அந்தப் படத்தில் நடித்த மேக்னா நாயுடு என்ற நடிகை அனுப்பியதாக பலருக்கு மின்னஞ்சல்கள் போகவும், நிறைய குடும்பங்களில் குழப்பமே ஏற்பட்டு விட்டதாம் ஐயா! இருக்காதா பின்னே? சினிமாவில் வருவதைப் போல, "நான் அம்மாவாகப்போகிறேன்," என்று இ-மெயில் குடும்பஸ்தர்களுக்குப் போனால், வீட்டுக்கு வீடு சப்பாத்திக்கட்டையும், அகப்பையும் பறக்காதா?

இந்த சைபர் கிரைமால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் நம்ம அசின் தான்! முதலில் அவரது இ-மெயில் களவு போனது.. பிறகு அசின் "தன்பெயரில் ஏதாவது மின்னஞ்சல் வந்தாலும் ரசிகர்கள் அதை நம்ப வேண்டாம்,"எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்குள் என் நண்பன் சுரேந்திரன் அசினிடமிருந்து மெய்யாலுமே மெயில் வந்து விட்டதென்று எண்ணி, "முறுக்கிச் சுவன்னதோ...மாறன் முத்திச்சு வர்த்திச்சதோ...?" என்று முண்டா பனியன், லுங்கியுடன் மலையாளத்தில் டூயட்டெல்லாம் பாடிக்கொண்டிருந்தான். அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வர சில பல குவார்ட்டர்களும், மசாலா பொறியும் தேவைப்பட்டன.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னரே, மீண்டும் ’என் பெயரில் மோசடி வெப்சைட்!’ என்று அசின் அண்மையில் புலம்பியிருக்கிறார்.

’நான் தான் அசின்,’ என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அசின் பேரில் ட்விட்டரில் ’என்னுடன் லைவாக சாட் பண்ண வாருங்கள்!’ என்று அழைப்பு விடுத்துள்ளாராம். நல்லவேளை, அண்மைக்காலமாக வலைப்பதிவர்கள் யாருமே யாருடனும் ’சாட்’ செய்வதில்லை என்று கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்திருப்பதால் அவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மற்றவர்கள் அப்படியா?

"அசின் சேச்சி! இனிமேல் எந்தப் படப்பிடிப்பா இருந்தாலும், உங்க ஊரு வேம்பநாட்டுக்காயல்லே தான் நடத்தணுமுன்னு கண்டிசன் போட்டிருக்கீங்களாமே? எதுக்கு? உங்களை நம்பி படமெடுக்கிற தயாரிப்பாளருக்கு எப்படி மூழ்குறதுன்னு ப்ராக்டீஸ் பண்ண வசதியா இருக்குன்னு தானே?" என்று ஒருத்தர் கேட்டிருக்காராம்.

இதே மாதிரி ஸ்ரேயாவோட பேரிலே யாரோ ட்விட்டர் ஆரம்பிச்சு, ’என் மனதைக் கவர்ந்த ஒரே ஆண் சேட்டைக்காரன் தான்!’ என்று எழுதவும், ஆந்திரா, தமிழ்நாட்டுலே பலருக்கு மாரடைப்பே வந்திருச்சாம். (முதல் மாரடைப்பு எனக்குத் தான்!)

இதே மாதிரி தனுஷ் பேருலே கூட ட்விட்டர் ஆரம்பிச்சிருக்காங்கன்னும் செய்தி வந்தது. இதைக் கண்டிச்சு ’அகில உலக ஒல்லிப்பிச்சான்கள் முன்னேற்றக்கழகம்’ கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தாங்க!

ஆகவே, பெரியோர்களே! தாய்மார்களே! சைபர் கிரைம்லேருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு.

உங்க வீட்டுலே சுத்தியல் இருக்கு தானே?

Saturday, October 9, 2010

ரங்குஸ்கி

டாக்டர் வசீகரன்: லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்

பத்து வருசம் ராப்பகலா முழிச்சு, வெறும் சுக்குக்காப்பியும் காலேஜ் பீடியும் குடிச்சு இந்த ரங்குஸ்கி கொசுவை உருவாக்கியிருக்கேன். இதுக்கு எல்லா பிளட் க்ரூப்பும் புடிக்கும்; எல்லா ஜீவராசியையும் கடிக்கும்.

நம்ம நாட்டை சமீபகாலமா புடிச்சு ஆட்டுவிச்சுக்கிட்டிருக்கிற நோய்கள் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா. இதுக்கெல்லாம் சில வலைப்பதிவர்கள் எழுதுற இடுகைகள் தான் காரணமுன்னு நிறைய பேரு நினைச்சிட்டிருக்காங்க! ஆனா, விஞ்ஞானபூர்வமா இந்த நோய்க்கெல்லாம் கொசுக்கள் தான் காரணம். இந்த வியாதி வந்தவங்க வலைப்பதிவு படிக்கிறது தற்கொலைக்கு சமம்; வலைப்பதிவு எழுதறது படுகொலைக்கு சமம்.

ஏடஸ் எகிப்டி-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க! நிறைய பேரு இது ஆந்திராவுலே பெத்தலகுண்டா பக்கத்துலே பண்ணுற ஒருவிதமான உப்புமான்னு நினைச்சிட்டிருக்காங்க! ஆனா, இந்த ஏடஸ் எகிப்டிங்கிறது ஒரு கொசு! இந்தக்கொசு கடிச்சா டெங்கு, சிக்குன்குனியா மாதிரி நோய்கள் வரும். இப்போ நான் கண்டுபிடிச்சிருக்கிற ரங்குஸ்கி யாரை ஏடஸ் எகிப்டி கடிச்சுதோ, அவங்களை இதுவும் போய் கடிச்சு நோய்க்கிருமியை உறிஞ்சி எடுத்திரும். தமிழ் சினிமாவுலே பாம்பு கடிச்சா கடிச்ச இடத்துலே மனுசனும் கடிச்சு விஷத்தை உறிஞ்சுவாங்களே அதே மாதிரி! ஆனா ஒண்ணு, நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ரங்குஸ்கி வலைப்பதிவு நடத்துறவங்களை மட்டும் கடிக்கவே மாட்டேங்குது! கேட்டா மனிசன் மனிசனைக் கடிக்கலாம்; ஆனா கொசு கொசுவைக் கடிக்காதுன்னு லாஜிக் பேசுது!

இந்த ரங்குஸ்கி கொசுவுக்கு கராத்தே, பரதநாட்டியம், பிரேக் டான்ஸ், பாப் மியூசிக் எல்லாமே தெரியும். அதுனாலே யாரு எவ்வளவு வேகமா என்ன பண்ணிட்டிருந்தாலும் கரெக்டா போய் கடிச்சிடும். இந்த மாதிரி பல ரங்குஸ்கிகளை உருவாக்கி டூட்டியிலே போட்டா, அப்புறம் டெங்கு, சிக்குன்குனியா சுத்தமா இருக்காது.Dot!

சேட்டைக்காரன்: டாக்டர் வசீகரன்! இந்தக் கொசுவை ரிஜக்ட் பண்ணறேன். வலைப்பதிவர்களுக்கு டெங்குக்காய்ச்சல், சிக்குன்குனியா வந்தா உதவாத இந்தக் கொசுவாலே யாருக்கு என்ன பயன்?

டாக்டர் வசீகரன்: கவலைப்படாதீங்க சேட்டை! உங்களை மாதிரி பதிவருங்களுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தா கடிச்சு குணமாக்க புதுசா ஒரு பன்றியை உருவாக்கிட்டிருக்கேன். மேலும் நீங்க கடிக்கிற கடிக்கு உங்களையெல்லாம் எந்த கொசுவும் அண்டாது. இன்னும் சொல்லப்போனா தமிழ்நாட்டுலே டெங்கு அதிகமாப் பரவாம இருக்கிறதுக்கே நீங்கதான் காரணம். கொசுக்கெல்லாம் உங்களைப் பாத்தா அவ்வளவு பயம். Dot!

சேட்டைக்காரன்: ஏன் டாக்டர்? எந்திரன் படத்துலே வில்லன் ரோபோவுக்கு ரெட்-சிப் சொருகி அதை வச்சு ஊரையே கலக்கினா மாதிரி இந்த ரங்குஸ்கியையும் தவறாக உபயோகிக்க வாய்ப்பிருக்கா?

டாக்டர் வசீகரன்: அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை! ரெட்-சிப்போட பாச்சாவெல்லாம் ரங்குஸ்கி கிட்டே பலிக்காது. ஆனா, நேந்திரங்காய் சிப்ஸ் மட்டும் ரங்குஸ்கி கண்ணுலே படாம பார்த்துக்கோங்க! அதுக்கு ரொம்பப் பிடிக்கும். Dot!

சேட்டைக்காரன்: அப்படீன்னா, ரங்குஸ்கியாலே யாருக்கும் எந்த ஆபத்துமில்லேன்னு சொல்லுங்க!

டாக்டர் வசீகரன்: ஒரே ஒரு ஆபத்து இருக்கு! பொதுவா இது வலைப்பதிவர்களைக் கடிக்காதுன்னாலும், ’எந்திரன்’ படத்தைப் பத்தி ஒரு இடுகை கூட போடாதவங்களை நம்ம ரங்குஸ்கி கடிச்சிடும். அதுக்கப்புறம் சிக்குன்குனியா,மட்டன்குனியா,லெக்பீஸ் குனியான்னு பல நோய்கள் அவங்களுக்கு வந்திடும். எவ்வளவு பெரிய டாக்டர் வந்து கடிச்சாலும், அதாவது கவனிச்சாலும் ரங்குஸ்கியோட கடியிலேருந்து தப்பிக்க முடியாது. Dot!

சேட்டைக்காரன்: ஐயையோ டாக்டர்! நான் ’எந்திரன்’ படத்தைப் பத்தி விமர்சனம் கூட போடலியே!

ரங்குஸ்கி: என்னது? விமர்சனம் போடலியா? பரவாயில்லே, திட்டியாவது எழுதினீங்களா?

சேட்டைக்காரன்: இல்லியே ரங்குஸ்கி! சும்மா ஒண்ணு ரெண்டு பிட்டு போட்டிருக்கேன்.

ரங்குஸ்கி: எந்திரன் படத்தை ஒண்ணு தூக்கி எழுதணும்; இல்லாட்டித் தாக்கி எழுதணும். ரெண்டையுமே செய்யாம வலைப்பதிவருங்கிற பேருலே ஊரை ஏமாத்திட்டா இருக்கே சேட்டை? முதல்லே உன்னைக் கடிக்கிறேன்.

சேட்டைக்காரன்: ஐயையோ டாக்டர்! காப்பாத்துங்க காப்பாத்துங்க! ரங்குஸ்கி கடிக்க வருது!

டாக்டர் வசீகரன்: உன் ரேஞ்ஜுக்கு உன்னை சானட்டோரியம் கொசு கடிக்குறதே தப்பு! ரங்குஸ்கி! கோ!!

சேட்டைக்காரன்: ஐயோ! டாக்டர் வசீகரன்! காப்பாத்துங்க டாக்டர்!

டாக்டர் வசீகரன்: சேட்டை! எனக்காக சனா காத்துக்கிட்டிருப்பா! நான் போறேன்...காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை....?

சேட்டைக்காரன்: டாக்டர், காதல் அணுக்கள் இருக்கட்டும், என் உடம்பிலே ஒரு யூனிட் ரத்தம் கூட தேறாதே டாக்டர்!

ரங்குஸ்கி: கமாண்ட் மோட் ரெடி! டார்ஜட் சேட்டைக்காரன்! ரெடி..ஸ்டெடி..கோ!

Wednesday, October 6, 2010

வ.வா.ச Vs சி.சி.க


இன்னும் சிறிது நேரத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் சிரிக்காத சிடுமூஞ்சிகள் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பங்குபெறும் ’சந்திப்போமா நிந்திப்போமா?’ நிகழ்ச்சி உங்களது அபிமான பெரியப்பா டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதைத் தொகுத்து வழங்கப்போகிறவர் "சிந்தனை சுனாமி" சுங்கச்சாவடி சுப்பாமணி!

சுப்பாமணி: வணக்கம் நேயர்களே! இன்று நம்முடன் உரையாட வ.வா.சங்கத்தின் சார்பாக இடைக்கால செயலாளர் சேட்டைக்காரன் அவர்களும், சி.சி.க-வின் நிரந்தரச் செயலாளர் முந்திரிக்கொட்டை அவர்களும் நம்மிடையே வந்திருக்கிறார்கள். இருவருக்கும் வணக்கங்கள்!

சே.கா: வணக்கம்! ஹிஹி!

மு.கொ: வணக்கம்!

சுப்பாமணி: சேட்டை! எதுக்கு ஒரு டைப்பா சிரிக்கிறீங்க?

சே.கா: அது ஒண்ணுமில்லீங்க! கவர்ச்சியா நடிச்சு போரடிச்சுப்போச்சுன்னு நமீதா சொல்லியிருக்காங்க! ஒரு வேளை அடுத்த படத்துலே காரைக்கால் அம்மையாரா நடிப்பாங்களோன்னு யோசிச்சேன். சிரிப்பு வந்திருச்சு!

மு.கொ: இது தான் தமிழனின் சாபக்கேடு! தமிழனின் தலைக்குள்ளே சினிமாவென்ற எருமைச்சாணத்தை மூளைக்கு பதிலாக உருட்டி வைத்து அனுப்பி விட்டது இயற்கை. ஐயகோ!

சே.கா: அப்படீன்னா நீங்க தமிழன் இல்லையா அண்ணே?

மு.கொ: சேட்டை! உங்களைப் போல நயன்தாரா யாரைத் திருமணம் செய்து கொள்ளுவார்? ஸ்ரேயாவின் பிறந்தநாள் விருந்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் முந்திரிப்பருப்பு போட்டிருந்ததா? தமன்னா உண்மையிலேயே கார்த்தியைக் காதலிக்கிறாரா என்றெல்லாமா நான் எழுதுகிறேன்?

சுப்பாமணி: என்னங்க இது? எடுத்த எடுப்புலேயே டாப் கியர்லே போறீங்க? பதிவர்களுக்கு சர்ச்சை தேவைதான்; ஆனால் அது சண்டையாக மாறி விடக்கூடாது.

மு.கொ: சண்டையும் சச்சரவும் பதிவர்களின் பரம்பரை சொத்து! சேட்டை! உம்மால் பணவீக்கத்துக்கு ஒரு தீர்வு சொல்ல இயலுமா?

சே.கா: புத்தூர் எண்ணையைத் தடவிப் பார்க்கலாமே? ஹிஹி!!

மு.கொ: பார்த்தீர்களா சுப்பாமணி! இவரைப் போன்றவர்களெல்லாம் ஆளுக்கொரு வலைப்பூ ஆரம்பித்து எழுதிக்கொண்டிருக்கிறார்களே?

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை அவர்களே! நான் முதலிலேயே சொன்னேனே, இன்று தப்பித்துப் போன பைத்தியக்காரரைப் பற்றி விவாதிப்போம் என்று? பிறகு ஏன் பதிவர்களைப் பற்றி விவாதிக்கிறீர்கள்?

சே.கா: ரெண்டும் ஒண்ணுதானே? ஹிஹி!

மு.கொ: சேட்டை! என்ன தைரியமிருந்தால் தப்பித்துப்போன பைத்தியக்காரனோடு பதிவர்களை ஒப்பிடுவீர்கள்? இது வரை யார் தப்பித்துப் போனார்கள் என்று புள்ளிவிபரத்தோடு உங்களால் சொல்ல முடியுமா?

சுப்பாமணி: அதானே, சேட்டை! ப்ளீஸ்! கொஞ்சம் புத்திசாலித்தனமாப் பேசலாமா?

சே.கா: அப்போ நீங்க பேசுங்க, நான் கேட்டுக்கிறேன்! என்னவோ நான் வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ணுறா மாதிரியில்லே பேசறீங்க?

சுப்பாமணி: நேயர்களே! ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு. கலந்துதையாடல், அதாவது கலந்துரையாடல் தொடரும்..!

சேட்டை! முந்திரி!! சண்டை போடாம இருங்க! யாரோ கூப்பிடறாங்க! என்னான்னு கேட்டுட்டு வந்திடறேன். சரியா!

செக்யூரிடி ஆபீசர்: (கிசுகிசுப்பாக) சுப்பாமணி சார்! இவங்க ரெண்டு பேருலே ஒருத்தர் தான் அந்தத் தப்பிச்சு வந்த பைத்தியமாம். ஆஸ்பத்திரிக்குத் தகவல் கொடுத்திட்டோம். ஆனா, அவங்க வர்ற வரைக்கும் சமாளிக்க முடியுமா?

சுப்பாமணி: என்னாது? இவங்கள்ளே ஒருத்தரா? நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு! அந்தப் பைத்தியம் சேட்டைக்காரன்னு பொய் சொல்லி ஸ்டூடியோவுக்குள்ளேயே நுழைசிட்டதா? சே!

செக்யூரிடி: எப்படி சார் நம்பிட்டீங்க?

சுப்பாமணி: என்னய்யா பண்ணட்டும்? வந்ததுலேருந்து கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு, கேனத்தனமாப் பேசிட்டிருந்ததாலே, உண்மையிலேயே இது தான் சேட்டைக்காரன்னு நம்பித்தொலைச்சிட்டேன்.

செக்யூரிடி: இனிமேதான் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா டீல் பண்ணனும். அந்தப் பைத்தியம் முந்திரிக்கொட்டை மேலே விழுந்து பிறாண்டிரக் கூடாது. எப்படியாவது வந்திருக்கிறது சேட்டைக்காரனில்லை, பைத்தியம்னு அவருக்குப் புரிய வைக்கணும்.

சுப்பாமணி: ஓ.கே!

நேயர்களே! ’சந்திப்போமா நிந்திப்போமா?’ நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் கலந்துரையாடப் போவது ’பைத்தியங்கள் ஏன் ஆஸ்பத்திரிகளிலிருந்து தப்பிக்கின்றன?’ சேட்டை! இது குறித்து உங்கள் கருத்தென்ன? இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட அனுபவம் இருக்கா?

சேட்டை: ஹிஹிஹி! அட பைத்தியம் தானே, தப்பிச்சுப் போனாப் போகட்டுமே! ரெண்டு நாள் ஊரைச் சுத்திட்டு வெறுத்துப்போயி திரும்ப ஆஸ்பத்திரிக்கே வந்திரப்போகுது.

மு.கொ: திரும்பத் திரும்ப இந்தச் சேட்டை பொறுப்பற்ற பதிலாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். முற்றின பைத்தியங்களை ஊருக்குள் உலவ விட்டால் என்னவாகும்? இது மிகப்பெரிய சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகி விடுமல்லவா?

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை சார்! விஷயம் தெரியாமக் கோபப்படாதீங்க சார். இவரு யாருன்னு தெரியாது உங்களுக்கு. தெரிஞ்சா இப்படிக் கோவிச்சுக்க மாட்டீங்க!

மு.கொ: இவரைத் தெரியாதா எனக்கு? சேட்டைக்காரன்னுற பேருலே தினம் ஒரு மொக்கை இடுகை போடுற வெத்துவேட்டு தானே இவரு?

சுப்பாமணி: ஐயையோ! புரிஞ்சுக்க மாட்டீங்கறீங்களே சார்! இவர் நீங்க நினைக்கிற மாதிரி அப்படிப்பட்ட ஆளு இல்லை!

சேட்டை: என்னது? என்னைப் பத்தி எனக்கே தெரியாத தகவல் ஏதாவது இருக்கா? உங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும். என்னான்னு சொல்லுங்கய்யா! இதுக்குன்னு தனி இடுகை போட்டுராதீங்க!

சுப்பாமணி: இருங்க சேட்டை! உங்களைப் பத்தித் தெரியாதா? நீங்க எவ்வளவு நல்லவரு, எவ்வளவு வல்லவரு..?

சேட்டை: அப்படியா? இதென்ன புதுப்புரளியா இருக்கு?

மு.கொ: சமூக அக்கறையோடு வலைப்பூ எழுதுகிற என்னை வைத்துக்கொண்டே சேட்டைக்காரனை நல்லவரு, வல்லவருன்னு சொல்றீங்களே? இது தான் நமது பின்னடைவுக்கு முக்கியமான அடிப்படைக்காரணம். பாரபட்ச அரசியலில், ஜனரஞ்சகம் என்ற பெயரில் புல்லுருவிகளை ஊக்குவித்து தமிழ்மொழிக்கு இழுக்கு விளைவிக்கும் அப்பட்டமான துரோகம்!

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை சார்! என்னாலே சத்தம் போட்டுச் சொல்ல முடியாது சார்! கொஞ்சம் பொறுங்க சார்! அவங்க வந்திடுவாங்க சார்! வந்து கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க சார்! அவசரப்படாதீங்க!

மு.கொ: என்னய்யா பின்நவீனத்துவம் மாதிரி புரியாத மாதிரியே பேசறீங்க? யாருய்யா வரணும்? எதுக்கு கூட்டிக்கிட்டுப்போகணும்? எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கே!

சுப்பாமணி: அதான்! அதே தான்! அதைத் தான் சொல்ல வந்தேன்! புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க!

மு.கொ: என்னது? விட்டா நான் தான் தப்பிச்சு ஓடுன பைத்தியமுன்னு சொல்லிடுவீங்க போலிருக்குதே!

சுப்பாமணி: அது நீங்க இல்லை!

சே.கா: அப்ப யாரு சுப்பாமணி? நீங்களா?

சுப்பாமணி: ஆமாம் சேட்டை! நான் தான்! நீங்க டென்சன் ஆகாதீங்க!

சுப்பாமணி: யோவ் சுப்பாமணி! நீங்க பைத்தியம்னா சேட்டை ஏன் டென்சன் ஆகணும்? என்னய்யா நடக்குது இங்கே?

குரல்: டேய் அவசரக்குடுக்கை! இங்கேயா இருக்கே? வார்டுபாய்ஸ்! போய்ப் பிடியுங்க அவங்களை!

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை! வாங்க சேட்டையைப் பிடியுங்க! இல்லாட்டி மறுபடியும் தப்பிருவாரு!

மு.கொ: ஐயையோ! என்னை விட்டிருங்க! நான் வர மாட்டேன்! நான் வர மாட்டேன்!

வார்டுபாய்: வரமாட்டேன்னா விட்டிருவோமா? மரியாதையா வரியா இல்லாட்டி ஊசி போடட்டுமா?

மு.கொ: ஊசியா? எனக்கு வலிக்கும். நான் அழுவேன்!

சுப்பாமணி: என்னது? முந்திரிக்கொட்டை தான் பைத்தியமா? நான் சேட்டைன்னில்லே நினைச்சிட்டேன்.

மு.கொ: சுப்பாணி சுப்பாணி! என்னை விடச் சொல்லுங்க சுப்பாணி!

(முந்திரிக்கொட்டையை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தரதரவென்று இழுத்துக்கொண்டு போகிறார்கள்)

சுப்பாமணி: சேட்டை! ஐயாம் சாரி! உண்மையிலேயே உங்களைத் தான் நான் பைத்தியமுன்னு நினைச்சிட்டேன். நல்ல வேளை, நான் நினைச்ச மாதிரி அது நீங்க இல்லை!

சே.கா: ஹையோ ஹையோ! ஊருலே ஒரே ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி தான் இருக்குதுன்னு நினைக்கறீங்களா?

சுப்பாமணி: அ.ப்..ப..டீ..ன்..னா...? நீங்களும்........?

சே.கா: ஹிஹிஹி! ஹிஹிஹி!