Thursday, May 4, 2006

தாலிபான் பிடியில் ப.ம.க - கைப்புள்ள பேட்டி

கே: இவ்வளவு நாள் எங்கேப் போயிருந்தீங்க?
ப: என் கல்யாணத்துக்கு ஷாப்பிங் போயிருந்தேன்... என் அம்பு மின்னலு கைப்பொண்ணுக்கு கவுன் வாங்க கல்கத்தா போயிருந்தேன்.

கே: தேர்தல் பரபரப்பு நேரத்துல்ல ஷாப்பிங் அவசியமா?
ப:என்ன கேள்வி இது ராஸ்கல்.. சின்னப்பிள்ளத் தனமா இருக்கு... அவன்...அவன்... தேர்தல்ன்னு தெரிஞ்சும் எங்கே ஓட்டுப் போடச் சொல்லிருவாயங்களோன்னு நடுங்கி பயந்து பம்மி முகத்தை மூடிப் போட்டு மறைச்சுப் பிளேன் ஏறி நாடு விட்டு நாடு பறந்துகிட்டு இருக்கான்... நான் இங்கன கல்கத்தா தானேப் போனேன்... ஏன் இப்படி அதைப் பெரிய குத்தம் மாதிரி குத்தி காட்டுற.... நெக்ஸ்ட் கேளு...

கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
ப:செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க...

கே: மால்கேட்ல்ல அப்படி என்ன பண்றீங்க?
ப:பில்டிங் கான்டிராக்ட்ன்னு ஊருக்குள்ளே கவுரமாச் சொல்லி வச்சுருக்கேன் நீயும் அதையே மெய்ன்டேன் பண்ணு அது தான் உனக்கும் நல்லது... எனக்கும் நல்லது...

கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...

கே: உங்க வ.வா.ச உறுப்பினர்கள் தாக்கப்பட்டதைப் பற்றி அறிக்கை விடுவதாச் சொன்னீங்களே என்ன ஆச்சு?
ப: பாரீன்ல்ல இருந்து பராக்கு பாக்க வந்த பயபுள்ள ஒருத்தன் அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு குரூப் சேத்து சங்கத்து வாலிப புள்ளகளைப் பத்தி விட்டு பட்டயக் கிளப்பியிருக்கான்... கப்பித் தனமா நடந்து இருக்கான்...
அவன் முகத்துல்ல முடி இருந்துச்சாம்...அவன் யார்ன்னு தேர்தல் முடிஞ்சதும் நான் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவேன்...அப்ப நீயும் வந்துப் பாரு

கே: யாரையோ மறைமுகமாத் தாக்குற மாதிரி தெரியுது?
ப: மறைமுகம்...
முகம் எங்கே மறைஞ்சு இருக்குன்னு நீயே சிந்திச்சு ஒரு பதிலை எழுதிக்க...

கே:மக்கள் மத்தியிலே உங்க வ.வா.ச கூட்டணிக்கு வரவேற்பு எப்படி இருக்கு?
ப: இது கேள்வி... நல்லா கேக்குறப்பூ...
வயல்ல மவுசு தின்ன விவசாயில்லருந்து ... வேலியில்ல கம்ப்யூட்டர் முன்னாடி மவுசு உருட்டற பயபுள்ளக வரைக்கும் வ.வா.சக்கு தான் மவுசு... எங்க கூட்டணி தான் ரவுசு....
மால்கேட்ல்லருந்து கோல்கேட் பில்கேட் டோல்கேட்ன்னு அம்புட்டு பயலும் நம்ம சங்கத்து மேல பாச மழையப் பொழியறாங்க...
ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல).
அ.உ.ஆ.சூ.கு.க கொ.பா.செ செல்வனாரும் இதையே தான் சொல்லுறார்... இப்படி இப்போ என்க கையிலே இருக்க ஓட்டை எண்ணிப் பார்த்தாலே நாங்க எங்கிட்டோ லீடிங்ல்ல இருக்கோம் தம்பி...
இது தெரியாமா.. எதிர் கட்சிக்காரய்ங்க கிரகம் ஆடுறாயங்க....ஹய்யோ...ஹய்யோ...

கே: உங்க சங்கத்துல்ல ஆளே இல்லன்னு ஒரு குற்றசாட்டு அது பத்தி சொல்லுங்களேன்..
ப: இது என்ன சுப்பித்தனமாப் பேசுற...வாலிப சங்கம்ய்யா இது... இளைஞர்கள்ன்னா அங்கே இங்கேப் போய் அப்பிடி இப்பிடி இருப்பான்... அவங்களை எல்லாம் ஒரே இடத்துல்ல வச்சு எண்ணுறதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாதுப்பா...
எங்க சங்கத்து தம்பி பாண்டி டாவு கட்டுற புள்ளங்களை எண்ணுனா அதுவே அந்தக் கட்சிக்கு விழுற ஓட்டை விட மூணு மடங்கு அதிகம் இருக்கும்ப்பா எண்ண தெரியாததும் எண்ண முடியாததும் எதிர் குருப்போட வீக்னஸ் அப்பு... அந்த விவஸ்தக் கெட்ட கூட்டம் கூவிச்சுன்னு வக்கனையா நீயும் கேக்குற.. பாத்துக் கேளுப்பா இல்ல பத்திக்கும்....

கே: முகமுடி பற்றி?
ப: நல்லவர்...அந்தக் காலத்துல்ல பள்ளிக்கொடம் படிக்கும் போது மூட வேண்டியதையே மூடாம இருந்த அப்பாவி அவர்...
அப்படிப்பட்ட உத்தம தமிழரை இன்று சிலர் தங்கள் சொந்த சுயநலத்திற்காக முகமுடிப் போட்டு அரசியல் பிழைப்பு நடத்துவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
( அப்பாடா இப்படி ஒரு பினாத்தலானப் பதிலைச் சொல்லுரதுக்குள்ளே கண்ணு கட்டுதுப்பா... என்னப் பண்ணுறது..இதெல்லாம் பொது வாழ்க்கையிலே ஜகஜம்ன்னு ஆத்தா மயிலாத்தா போனிகபூர் மேல பாரத்தைப் போட்டுட்டு போக வேண்டியது தான்)

கே: ப.ம.க பற்றி?
ப:நல்லவர்கள் நிறைந்த அந்த இயக்கம் இன்று பிளவுப் பட்டு கிடப்பது மனத்தை வாட்டுகிறது....ஒரு உண்மையச் சொல்லுறேன் அந்தக் கட்சி இப்போ தாலிபன் பிடியிலே இருக்கு....அதைக் காப்பாத்த
இந்த கைப்புள்ள வாலிபனால்
மட்டுமே முடியும் என அங்குள்ளவர்கள் உண்மையாக நம்புகிறார்கள்.. விரும்புகிறார்கள்... இது யாராலும் மறுக்க முடியாது...
என்ன ஆனாலும் சரி... பரிதாபகரமாக இருக்கும் ப.ம.க வை ஆண்டவன் மற்றும் அ.உ.ஆ.சூ.கு.க , மல்லிகை கூட்டணித் தோழ்ர்கள்...வ.வா.ச செயல் சிங்களின் துனை கொண்டு இந்தக் கைப்பு மீட்பதை யாராலும் தடுக்கவே முடியாது....


கைப்புள்ளயின் பேட்டி தொடரும்....

20 comments:

ILA(a)இளா said...

//என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...//
ஹ ஹா ஹ ஹாஹ ஹாஹ ஹா அசத்தல்.

நிலா said...

//ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா//

//ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல).//

:-)))

G.Ragavan said...

ரொம்பச் சரியாச் சொல்லீருக்கீரய்யா கைப்பு...

தாலிபன் பிடிதான்...தாலின்னா பஞ்சாபி தாலி, குஜராத்தி தாலி....பன்னு தெரியாதா பன்னு...உருண்டையா இருக்குமே...பிச்சுப் பிச்சுத் திம்பாங்களே....டீயத் தொட்டுக்கிட்டு...இப்பிடிப் பட்ட நல்ல சாப்பாட்டை மக்களுக்கு இலவசமாக் கொடுப்போம்னு கொள்கைப் பிடியில பமக இருக்கிறத்தான் ரத்தினச் சுருக்கமா கைப்பு சொல்லீருக்காரு. அது புரியாம.....என்னவோ போங்க....போய் அவல் பொரி வாங்கி வெல்லத்தோட உருட்டி முழுங்குங்க.....

ஜொள்ளுப்பாண்டி said...

//எங்க சங்கத்து தம்பி பாண்டி டாவு கட்டுற புள்ளங்களை எண்ணுனா அதுவே அந்தக் கட்சிக்கு விழுற ஓட்டை விட மூணு மடங்கு அதிகம் இருக்கும்ப்பா//

ஆகா தேவண்ணே எம்மேல இம்பூட்டு நம்பிக்கையா???? அய்யா நான் என்ன சொல்றதுண்ணே தெரியலையே !! ஆஆஅவ்வ்

ஜொள்ளுப்பாண்டி said...

//அந்தக் கட்சி இப்போ தாலிபன் பிடியிலே இருக்கு....அதைக் காப்பாத்த
இந்த கைப்புள்ள வாலிபனால்மட்டுமே முடியும் //

தேவு தேவு கலக்கிபுட்டயே தேவு கலக்கிபுட்டே !!

பமக மக்கா! உங்களை காப்பாத்த அண்ணன் உங்கள் வாலிபன் (கவனிக்க தாலிபன் அல்ல)கைப்பூ வருகிறான் கலங்காதீர்கள் !!! :)))

ஆழியூரான். said...

கலக்குங்க..மக்கா...கலக்குங்க.... :)

srishiv said...

ஹா ஹா
அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றோம் ;)
ஸ்ரீஷிவ்...:)
கைப்ஸ் ரசிகர்மன்ற அசாம் மானில தலைவர் :D

பொன்ஸ்~~Poorna said...

பில்கேட்ஸை கலங்கடித்த மால்கேட் மலை அண்ணன் கைப்பு!!!
வாழ்க வாழ்க!!!!

ப.ம.கவின் பெருந்தலைவர்களைச் சிதறடிக்க வந்த சென்னை செம்மல் தேவ்!!!
வாழ்க வாழ்க!!!

அங்கே இங்கே ஓடி பஸ் ஸ்டாண்ட், பெண்கள் கல்லூரி என்று தாவித் தாவி கட்சிக்கு ஆள் சேர்க்கும் ஜொள்ளர் திலகம் பாண்டி !!!!!
வாழ்க வாழ்க!!!

என்றென்றும் எங்கள் அண்ணன் நெஞ்சில் நீங்காமல் வாழும் தளபதி சிபி!!!!
வாழ்க வாழ்க!!!!

பகைவரின் பாசறைக்குச் சென்று அறைகூவும் மகளிர் அணித் தலைவி கீதா..!!!!
வாழ்க வாழ்க !!!!

கடல் தாண்டிச் சென்று அம்மன் காவியம் படைக்கும் அன்பு அண்ணன், உடன்பிறவா சகோதரன் கார்த்திக்!!!!
வாழ்க வாழ்க.. !!!

பொன்ஸ்~~Poorna said...

இளமை ததும்பும் வ.வா.சவின் இந்திய விவசாயி அணித் தலைவர் இளா!!!
வாழ்க வாழ்க!!!

இன்னிக்கோ நாளைக்கோ என்றிருந்தாலும் பெருவில் பெருமதிப்புடன் பெருங்கூட்டம் கூட்டி பேராதரவு திரட்டும் பெருசு!!!
வாழ்க வாழ்க..

கட்சியின் சமீபத்திய ரசிகர், அஸ்ஸாம் மற்றும் ஏனைய கிழக்கிந்தியக் கிளையின் தலைவர் ஸ்ரீஷிவ்!!!
வாழ்க வாழ்க!!!

இன்றைக்கோ நாளைக்கோ எங்கள் கட்சியில் சேரப் போகும் கொத்தனார், ஜிரா, இராமனாதன், சுரேஷ் ஏனையோர்!!!

வாழ்க வாழ்க.. !!!!

பொன்ஸ்~~Poorna said...

இது ஆறு கோடித் தமிழர்களின் வாழ்த்தல்ல ...

உலகமெங்கும் உள்ள கோடானு கோடி தமிழ் ஆர்வலர்களின் வாழ்த்து...!!!! அவர்தம் எண்ணக் கருத்து..

பச்சோந்திகள் என்ன அவர்தம் முன்னோர்க்கு முன்னோரான டினோசர்கள் வந்தாலும் எங்கள் கட்சியின் ஆணி வேரை அசைக்க முடியாது என்பது இப்போது தெள்ளத் தெளிவாயிருக்கும்!!!!

பொன்ஸ்~~Poorna said...

//போய் அவல் பொரி வாங்கி வெல்லத்தோட உருட்டி முழுங்குங்க.....
//

ஏன், நாங்க எலந்த வட சாப்டக் கூடாதா?? :)-

பெருசு said...

ப.ம.க வுல எங்க ஆத்தா பெருந்தலைவர்கள் இருக்காய்ங்க.
எல்லாம் வெத்து வேட்டு ஆத்தா .
எதுவுமே சவுண்டு பார்ட்டி இல்ல,
நம்ம வ.வா.ச உறுப்பினர்கள் எல்லாருமே ஓலை வெடின்னு ப.ம.க (பட்டுப்போன மரக் கன்றுகள்)
ஆளுகளுக்கு தெரியுமாத்தா.
எல்லாம் சும்மா (கைப்பு ஸ்டைல்லெ படிக்கவும்).

ஆத்தா பொன்ஸூ

எலந்த வடைக்கு ஜிரா கிட்ட சொல்லியுட்டிர்க்கேன்.

Karthik Jayanth said...

////என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...//

பில்கேட்ஸ்சை ஒண்டிக்கு ஒண்டி சவால் விடும் வீரன், புவியாள பிறந்த மால்கேட் மாணிக்கம் வாழ்க !

கவிதையின் பிறப்பிடமே ! தாய் தமிழ் தந்த தங்க தாரகை,ஒரு கொடியில் பூத்த இரு மலரில் ஒரு மலர், அக்கா பிகிலு பொன்ஸ் வாழ்க !

சங்கத்தில் தாயுள்ளம் கொண்டு காக்கும் மகளிர் ணி தலைவி கீதா வாழ்க !

கடவுளின் செல்ல குழந்தை, இந்திய விவசாய அணி தலைவர் இளா வாழ்க !

என் இதய்த்தில் இடம் கொண்ட கோவை கோபுரம் அன்பில் சிபி வாழ்க!

உலகமெங்கும் சென்று புள்ளி விபர ஆரய்ச்சி செய்யும் புலி தேவ் வாழ்க !

உலக பெண்களின் காதல் மன்னன் அண்ணன் பாண்டி வாழ்க

பெருவில் சாதனை படைக்கும் அண்ணன் பெரு(சு) வாழ்க !

சங்கத்தின் புதிய ஆராய்ச்சி அண்ணன், அஸாம் அண்ணல், அவர்களே வருக !.

அ.உ.ஆ.சூ.கு.க , மல்லிகை கூட்டணித் தோழ்ர்கள் வாழ்க !

தல முண்ணிலையில் எங்கள் கட்சியில் சேர போகும் வட அமெரிக்கா கொத்தனார், 'பெண்'களூர் ஜிரா, ரஷ்ய கோமகன் இராமனாதன், அரேபிய சுல்தான் பெனாத்தலார் மற்றும் ஏனையோரே வருக வளம் பெருக !!!


வாழ்க தல !!!

வாழ்க சங்கம் !!!

கார்த்திக்

செல்வன் said...

தலை

பமகவை நினைத்து பீல் பண்ணாதீங்க.கருத்து கணிப்புல தோல்வி உறுதின்னு வந்ததும் அவங்க ஜில்ஜில் ரமாமணி,குஜிலியானந்தான்னு என்னன்னவோ செஞ்சு பாக்கறாங்க.அந்த ஜில்ஜில் ரமாமணி பாட்டி வேஷத்துல நடிக்க வேண்டியவங்க.கே.ஆர் விஜயாகூட ஒண்ணா படிச்சவங்களாம்.அப்ப எம்பூட்டு வயசிருக்கும் அவங்களுக்குன்னு யோசிச்சு பாருங்க.

நம்ம நயந்தாரா கூட்டணி முன்னாடி நிப்பாங்களா அவங்க?

நீங்க கலக்குங்க.

வாழ்க வ.வா சங்கம்,வெல்க தலை கைப்பு

தேவ் | Dev said...

//தாலிபன் பிடிதான்...தாலின்னா பஞ்சாபி தாலி, குஜராத்தி தாலி....பன்னு தெரியாதா பன்னு...உருண்டையா இருக்குமே...பிச்சுப் பிச்சுத் திம்பாங்களே....டீயத் தொட்டுக்கிட்டு...//

ஆகா ராகவரே நீராப் பேசுவது... ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாங்கய்யா.. உம்ம சுத்தி உமக்கு தெரியாமலே உம்ம ஆட்டயம் போட்டுட்டாங்கய்யா...ஆட்டயம் போட்டுட்டாங்கய்யா... நாங்க என்னச் சொல்லுறது.. இங்கனப் போய பாரும்..
http://chennaicutchery.blogspot.com/2006/03/blog-post_30.html

அந்தக் கட்சி இந்தக் கட்சின்னு பேதம் இல்லாம வந்து இலையிலே தல்ப் பேரைச் சொல்லிப் பாத்தி கட்டிட்டு போனாய்ங்களேய்யா..
நீர் அந்த விருந்துக்கு வராம இருந்தப்பவே நானும் தலயும் டவுட் ஆனோம்... உமக்கு தாலின்னு ரெண்டு பன் வாங்கி டீ தொட்டு திங்க விட்டுட்டு அவங்க மட்டும் வந்து செமக் கட்டு கட்டிட்டாங்கய்யா...

அந்த நேரத்திலும் தலப் பாசமா உமக்கு கொடுத்த பார்சலை வேணாம்ன்னுட்டு அவிங்களே வழிச்சு அடிச்சாய்ங்களேய்யா... க்லோ கணக்குல்ல இல்ல அடிச்சாயங்க...

அது எப்படிப்பட்ட விருந்து தெரியுமா?

துளசி டீச்சர் கேட்ட கேள்வியைப் பார்த்தாலே உங்களுக்கு விளங்கணுமே....

போனது போச்சு ஞாயித்துக் கிழம சங்கத்துல்ல அட்வான்சா வெற்றி விழா விருந்து இருக்கு மறக்காம வந்துறுங்க...

தேவ் | Dev said...

கூட்டணி சிங்கமே... அ.உ.ஆ.சூ.கு.கட்சியின் கொள்கைக் கோபுரமே...அன்பின் வானமே செல்வனாரே... பல லட்சம் கத்திகளும் பலக் கோடி பீரங்கைகளும் உங்களை நோக்கி வந்த போதும் கொண்டக் கொள்கையில் சற்றும் தளராது ...கட்சியின் மீதும் கட்சியின் தலைமையின் மீதும்..கூட்டணித் தோழ்மை மீது நீர் கொண்ட விசுவாசமும் பாசமும் நாடறியும் உலகறியும்....

ஜிகினா மயக்கத்தில் கோட்டையின் வழியை அவர்கள் தொலைத்து இன்று கண்டஹாரில் சிங்கிள் டீக்கும் பன்னுக்கும் சிங்கி அடிக்கும் வேதனையானச் செய்தி அறிந்து வருந்தம் ஏற்படுகிறது...

வரும் வாரம் தமிழ்மணம் வீசும் இந்த தமிழ் தட்டும் நல்லுலகில் மேலும் மல்லிகை மணமும் வீசும் எனபது உறுதி....

//நம்ம நயந்தாரா கூட்டணி முன்னாடி நிப்பாங்களா அவங்க?// :)

நெக்ஸ்ட் நாம் பதவி ஏற்பு விழாவில் ராஜ் பவனில் மீட் பண்ணுவோம்.

வாழ்க வ.வா.ச அ.உ.ஆ.சூ.கு.க மல்லிகை கூட்டணி.. நன்றி

கீதா சாம்பசிவம் said...

நான் தேர்தல் பிரசாரத்துக்குப் போயிட்டு வரதுக்குள்ளே என்ன என்னமோவெல்லாம் நடக்குதே.தலைவர் எங்கே? தலைவரைக் கடத்தியது யார்? சிவப்பு, கறுப்பு, வெள்ளை எலிப்படை ஏன் தலைவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கத்தவறியது? யார் சதி? பமகவா? எதிரி உள்புகுந்து விட்டானா?

கீதா சாம்பசிவம் said...

நான் தேர்தல் பிரசாரத்துக்குப் போயிட்டு வரதுக்குள்ளே என்ன என்னமோவெல்லாம் நடக்குதே.தலைவர் எங்கே? தலைவரைக் கடத்தியது யார்? சிவப்பு, கறுப்பு, வெள்ளை எலிப்படை ஏன் தலைவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கத்தவறியது? யார் சதி? பமகவா? எதிரி உள்புகுந்து விட்டானா?

தேவ் | Dev said...

வாங்க கீதா மேடம்... கூடுவாஞ்சேரி துவங்கி குமரி முனை சங்கத்து கொள்கைகளைக் கானாவா எடுத்து விட்டு தமிழ் பெருங்குடி மக்களைக் மகிழ்ச்சி குத்தாட்டத்தில் ஆழ்த்தி திரும்பி இருக்கும் உங்களைச் சங்கம் அன்போடு வரவேற்கிறது. இந்த தேர்தல் கண்காணிப்பு அதிகம் அதான் அவ்வளவாக் கட் அவுட் வைக்க முடியல்ல..ஆனாலும் ஆங்காங்கே பல்பம் மற்றும் கரித் துண்டில் உங்களுக்கு வரவேற்பு எழுதி வச்சிருந்தோம் பார்த்தீங்களா?

தேவ் | Dev said...

அசாம் பகுதியில் அயராது உழைத்து தேயிலை மலைகளில் நம் சங்கத்து கொடியைப் பறக்க விட்ட அசாம் மாநிலச் சங்கத்துச் செம்மல் ஸ்ரீஷிவ் அவர்களைச் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு அன்போடு வரவேற்கிறோம்... ஸ்ரீஷிவ் தான் அசாமின் வருங்கால முதல்வர் என்பதையும் நாட்டுக்கு இப்போது அறிவிக்கிறோம்... அசாமில் நம் சங்கத்திற்கு நாலு லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது... சங்கத்தின் அடுத்த தேசிய மாநாடு அசாம் செம்மல் ஸ்ரீஷிவ் தலைமையில் அங்கே கஸிரங்காத் திடலில் நடைப்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்