Friday, June 17, 2011

ஒரு எலக்கியவாதி உருவாகிறான் :))

நம்ம ஈரோ கோவாலு இருக்கானே அவன் பெரிய வஸ்தாது. எல்லாத்துக்கும் ரெஜிஸ்டர் மெயிண்டெயின் பண்ணுவான். ஆபிசில் அவனோட வேலையைப்பார்த்து மேனேசரு அவனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக்கொடுத்தாரு. கோவாலு பள்ளிக்கோடத்தில படிக்கும் போதே கம்ப்யூட்டர் க்ளாஸ் போயி அதை உப்பு போட்டு ஊறுகா தொட்டு கரைச்சு குடிச்சவன். நம்பி அவன்கிட்ட ஒரு கம்ப்யுட்டரை ஒப்படைச்சதும் அலுவாச்சியே வந்துடுச்சு. தினம் ஆபிசு வந்ததும் ஒரு துணி எடுத்து துடைச்சு தூசி தட்டி தொட்டுக்கும்பிட்டுட்டுதான் மறுவேலை.

திடீர்னு ஒரு நாள் அவன் கூகுளாண்டவரை எதையோ தேடப்போக அவனுக்கு தமிழ்ல ஒரு கட்டுரை சிக்குச்சு. என்னடா இது தமிழ்ல என்னவோ எழுதிருக்கேன்னு பார்த்தா, அது ஒரு பதிவு. ஆஹா இப்படி ஒரு மேட்டர் நமக்கு இதுவரைக்கும் தெரியாமப்போயிடுச்சேன்னு பயபுள்ள தேடித்தேடி ஒருவழியா ப்ளாக்ன்னா என்னான்னு கண்டுபிடிச்சான்.  கண்டுபிடிச்சானா அன்னைக்கு பிடிச்சுது அவனுக்கு கெரகம்.

முத நாள் ஒரு நாலு லைன் எழுதினான், அதை வெளியிட்டதும் அவனுக்கு அப்படியே புல்லரிச்சுப்போயிடுச்சு. அப்படியே சேர்ல சாய்ஞ்சு உக்காந்தானா.. கொஞ்சம் கண்ணை அசந்துட்டான். அவன் எழுதின பதிவு ஒரே நாளில் வாசகர் பரிந்துரையெல்லாம் தாண்டி எல்லா மணம், எலியிலையும் டாப்ல வந்துடுச்சு. பதிவுலகமே பரபரன்னு ஆயிடுச்சு. பேட்டி வந்து பரபரத்து போன பதிவுலக எஃபெக்ட் திரும்பவும் வந்ததுன்னு மூத்த பதிவர்கள் அறிக்கை விட்டாங்க. அதை பஸ்ல இருக்கும் 13,427 அண்ட் அரை பஸ்ஸர்களும் ரீஷேர் பண்ணி, புதிய எலக்கிய சுனாமியை ஊருக்கு அடையாளம் காட்டினாங்க.

மேற்கு புக் கடை, கண்மை போன்ற எல்லா பதிப்பாளர்களூம் அண்ணே நீங்க கைக்காசு போடவேண்டாம் நாங்க போட்டு அடிச்சுத்தரோம் புக்குன்னு ஆயிரம் காப்பி அடிச்சு எல்லா ஊரிலையும் புத்தக வெளியிட்டு விழா, அறிமுக விழான்னு அமர்க்களப்படுத்தினாங்க. எந்த பதிவர் டாப்ல இருந்தாலும் அள்ளிப்போட்டுக்கும் நொந்த விகடனில் வந்த அந்த பதிவு இன்னும் பிரபலமாக்கிடுச்சு. ஊரெல்லாம் தோரணம், கட் அவுட்டு, எலக்கியத்தை வாழவைக்க வந்த கம்ப்யுட்டர் கம்பன், அவ்வைப்பாட்டிக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த அறிவுக்கொழுந்து, எழுத்துலக விடிசனி.. அப்படின்னு கன்னாபின்னான்னு ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் பேனரு அதுல நம்ம கோவாலு கையில மவுஸோட ஸ்டைலா நிக்கும் போட்டா.

எந்த புக்கை எடுத்தாலும் கோவாலுவோட எலக்கிய உரை, இந்த மந்திரி அந்த போனை வாங்கினது நல்லதா கெட்டதான்னு நொந்த அகடனிலையும்,ங்ஙே பக்கங்கள்னு சந்தனத்திலையும் வாராவாரம் கோவாலு எடுத்த எலக்கிய வாந்தி. வாசகர் வட்டம், சதுரம் எல்லாம் தாண்டி கோவாலுவோட வாசகர்கள் சர்க்கஸ் பைக் ஓட்டுவாங்கல்ல கூண்டு அதிலேயே இருக்காங்களாம். செர்மனு, லண்டனு, ப்ரான்ஸுனு எல்லா ஊருலையும் இருக்கும் வாஜகர்கள் இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிடறாங்க.என்ன நம்ம கோவாலுக்குதான் போகக்காசில்லை, ஒரு எலக்கியவாதியை வேர்ல்ட் டூர் போக வைக்க முடியாத இந்த சமூகம் நாசமாப்போகட்டும்னு ஒரு கவர்ஸ்டோரி எழுதலாம்னு ஐடியால இருக்கான்.

திடீர்னு தமிழ்திரை உலகின் சூறாவளி இயக்குனர் அஸ்குபுஸ்குவிடம் இருந்து போன், அவரோட அடுத்த கதைக்கு ஒரு ஃபுல் பாட்டுக்கு சோலோ டான்ஸ் ஆடி, திரைக்கதை எழுதித்தரனும்னு கெஞ்சி போனிலேயே காலில விழுந்தார். நம்ம கோவாலு பெரிய மனசு பண்ணி தொலைஞ்சு போகுதுன்னு டான்ஸ் ஆட ஒத்துக்கிட்டு காஸ்ட்யும் டிசைனரை வீட்டுக்கு வரச்சொல்லி கன்பார்ம் பண்ணினான். நம்ம கெட்ட நேரம் அந்த ஒரு பாட்டு மட்டும் எல்லாச்சேனல்லையும் -டிஸ்கவரி, நேசனல் ஜியாகரபி உட்பட எல்லாச்சேனல்லையும் ஓட்டோ ஓட்டோன்னு ஓட்டி ஓவர் நைட்ல புதிய புயல் கோவாலுவா ஆயிட்டான்.

கோவாலு கட் அவுட்டுக்கு பதிவர்கள் சார்பில் பாலாபிஷேமும் பீராபிசேகமும் நடக்கனும்னு பிரபல, ப்ராப்பள பதிவர்களுக்கு மத்தியில் சண்டை எல்லாரும் ஊர்வலம் போறாக, உண்ணாவிரதம் இருக்காக. புதிய புர்ட்சி தலவலி கோவாலுவை அடுத்த முதல்வரா வேட்புமனு தாக்கசொல்லி...கோவாலுவும் மக்கள் கோரிக்கையை மகேசன் ( அதாங்க அந்த கடேசி வீட்டு மகேசு) கோரிக்கையா நினைச்சு வேட்புமனு தாக்கல் செய்யபோறான். அதுக்குள்ள பஸ்ஸர்கள், பதிவர்கள் எடுத்த கருத்து கணிப்பில் மானாவாரியா ஓட்டு வாங்கி ஜெயிச்சுட்டான். ஜெயிச்சு கோட்டைக்கு போகும் போது மழை வந்துடுச்சு. அட நாம பிரபலம் ஆனதிலேருந்து மழையில நனையவே இல்லையேன்னு தலையை மட்டும் நீட்டினா, மழை ச்ச்சோன்னு பேய்து...

அய்யே என்னா கோவாலு சாரு, இப்படி தூங்கறே? கம்ப்யுட்டரு வந்தா நல்லா வேலை செய்வேன்னு சொன்னாங்க, இப்படி வாயைத்தொறந்து தூங்கறே. ஒரு பாட்டில் தண்ணி ஊத்தி எழுப்பவேண்டியதா போச்சுன்னு அட்டெண்டர் அய்யாசாமி டெரரா நிக்கறான்....

அடக்கெரகமே. இம்புட்டு நேரம் கனாவா கண்டோம்னு ஃபீல் ஆயிடுச்சு கோவாலுக்கு, அப்படியே கம்ப்யுட்டரை ஷட் பண்ணிட்டு ரெஜிஸ்டரை ஓப்பன் பண்ணிட்டான்.....

மாரல் ஆஃப் தெ ஸ்டோரி : கனாக்காணுங்க...

டிஸ்கி. இதை படிச்சு எந்த பிரபல பதிவராவது நினைப்புக்கு வந்தா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது... ஆங் சொல்லிப்புட்டேன்