Wednesday, February 25, 2009

எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்குவோருக்கு அக்காக்கள் சொல்லும் ஆலோசனைகள்

தொப்பை, தொந்தி, டயர், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங், லக்கேஜ், எக்ஸ்ட்ரா லக்கேஜ் இப்படின்னு இடைபாகத்துல இருக்கற சில நரம்பு புடைப்புகளையும் சதை புடைப்புகளையும் பல பேரும் ஒரு வித நக்கலோட விளிக்கிறாங்க. இது இப்படி இருக்க, இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல...இது இடுப்பு பகுதியில் முறைப்படி டெவலப் செய்யப்படும் பைசெப்ஸ்(Biceps) தான் என்று பெருமை பட்டுக் கொள்ளும் ஒரு சாராரும் இருக்காங்க. தொப்பை, தொந்தி இதெல்லாம் ஆண்களுக்கே உரித்தான பிரச்சனை மாதிரி ஒரு கருத்து நிலவுது. அதனால அதை குறைக்க நுகர்வோர்கள் அதாவது பெண்கள் கிட்டவே ஆலோசனை கேக்கலாம்னு சங்கத்துல முடிவு பண்ணோம். இங்கே நுகர்வோர்னா என்னன்னு வெளக்கிடறோம். ஆண்கள் சுமக்கும் இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜைப் பாத்து அதிகமா கவலை படறதும், அதை உடனடியா குறைச்சிக்கனும்னு கருத்து சொல்றதும் பெண்கள் தான். ஏன் இப்படி சொல்றோம்னா இந்தப் பக்கம் ஆண்கள் கிட்டயும் பேசிப் பாத்தோம். அவங்க என்ன சொல்றாங்கன்னா "தொப்பையும் தொந்தியும் ஆண்களுக்கே உரித்தான சொத்து மாதிரி பரவலா ஒரு கருத்து நிலவுது. ஆனா அது உண்மையில்லை. இந்த விஷயத்துல பெண்களும் ஆண்களுக்கு சளைச்சவங்க இல்லை. ஆனா எக்ஸ்ட்ரா லக்கேஜை கரைக்கிறது சுலபம், அதை சேக்கறது கஷ்டம். அதனால கஷ்டப் பட்டு சேத்ததை நாங்க கரைக்க மாட்டோம், அதே மாதிரி கரைக்க சொல்லவும் மாட்டோம்" அப்படின்னு சொல்லிட்டாங்க.

அதனால அவங்களோட பெருந்தன்மையைப் பாராட்டிட்டு, தன்னுடைய கணவனோ, பாய் ஃப்ரெண்டோ, அப்பாவோ, தம்பியோ, அண்ணனோ, மகனோ இந்த மாதிரி எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்கறவங்களா இருந்தாக்கா அதை பாத்துட்டு முதல்ல குறைச்சிக்க சொல்லி ஆலோசனை சொல்ற நுகர்வோர்களான பிரபல பெண் பதிவர்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்றோம். எங்களோட இந்த வேண்டுதலுக்கு வரலாறு காணாத ஆதரவு இருந்தது. சங்கத்து தபால் பெட்டி ரொம்பி வழிஞ்சது. அதை முதன்முதல்ல ஓப்பன் பண்ணி பிரிச்சி படிச்சது நம்ம கப்பிப்பய தான். படிச்சிட்டு "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"னு கூக்குரலிட்டு அவ்வத் தொடங்கிட்டான். என்னாச்சோ ஏதாச்சோன்னு நாங்க எல்லாம் பதறிப் போய் ஓடியாந்து நாங்களும் பிரிச்சிப் படிச்சிட்டு கும்பலா அவ்வத் தொடங்கிட்டோம். எங்களை அவ்வ வச்ச அந்த அக்காக்களின் ஆலோசனைகள்ல சில உங்கள் பார்வைக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

1. எக்ஸ்ட்ரா லக்கேஜ் அப்படின்னா என்னன்னு கேக்கற அளவுக்கு மெயிண்டேன் பண்ணிக்கிட்டு இருக்கற 'பாய்ஸ்' சித்தார்த்தின் அதிதீவிர விசிறியான மலேசிய மாரியாத்தா மை ஃப்ரெண்ட் சித்தார்த்தி சங்கத்துக்கு அனுப்பிருக்கற ஆலோசனை கடிதத்தைப் பாப்போம்.

தொப்பையை குறைப்பது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ' தொப்பையை குறைப்பது எப்படி' என்ற பதிவிட தொப்பை இருப்பவர்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துலாவி துலாவி கேள்வி கேட்டால் ' என்ன தொப்பையை குறைக்க ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதை எல்லாத்தையும் மீறி நான் சொல்லிக்கொள்ள விரும்பும் ஆலோசனைகள் கீழே.

டிப்ஸ் 1 : உருளை கிழங்கு சிப்ஸ்க்கு பதிலாகமரவள்ளி கிழங்கு சிப்ஸ் சாபபிடவும்.

டிப்ஸ் 2 : தண்ணி அடிக்கும் போது சிப்ஸ்க்கு பதிலாக ஊறுகாயைப் பயன்படுத்தவும்.

டிப்ஸ் 3 : உங்களை விட பெரிய தொப்பை இருப்பவர்களுடன் வெளியே செல்லவும். அப்பொழுது உங்கள் தொப்பை குறைந்துவிட்டது போல் தெரியும்.

டிப்ஸ் 4 : பதிவு எழுத யோசிக்கும் போது மல்லாக்க படுத்து யோசிப்பதற்கு பதில் குப்புற படுத்து யோசிக்கவும். அதனால் தொப்பை அழுந்தி தானாக குறைய வாய்ப்புள்ளது.

டிப்ஸ் 5 : நிக்கற பஸ்ஸில் ஏறுவதையோ இறங்குவதையோ தவிர்க்கவும். ரன்னிங்கில் இருக்கும் போதே ஏறவும், இறங்கவும் முயற்சிக்கவும். கைனெட்டிக் எனர்ஜி உடம்பில் வேலை செய்யும் போது லக்கேஜ் கரைய வாய்ப்புண்டு.



2. அடுத்ததா வலையுலக மேரி க்யூரி, மின்னல் சுமதி அவங்க சொல்லிருக்கற ஆலோசனைகள். ஏன் இவங்களை க்யூரி அம்மையாரோட ஒப்பிடறோம்னு நீங்க தெரிஞ்சிக்கனும். இயற்பியல், வேதியியல் இந்த ரெண்டு பிரிவுலயும் ஆஸ்கார் அவார்டு...சாரி...நோபல் பரிசு வாங்குன முதல் விஞ்ஞானி மேடம் மேரி க்யூரி. அதே மாதிரி ஆண்கள் தொந்தியைக் குறைப்பதற்காக இயற்பியல் ரீதியாகவும் வேதியியல் ரீதியாகவும் வெகு விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு நடத்தி ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்பான ஆலோசனையை இவர் வழங்கியிருப்பதால் இவருக்கு "வலையுலக மேரி க்யூரி" பட்டத்தை அளிப்பதில் சங்கம் பெருமகிழ்ச்சி அடைகிறது. இப்போ அவங்க சொன்ன ஆலோசனையப் பாப்போம்.

"...இதுக்குத் தான் நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காகவே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா? அப்போ அத ஒருதரம் ட்ரை பண்ணிப் பாருங்க புரிஞ்சுடும் அதோட வலிமை."

மேல இருக்கற அவங்களோட இந்த ஆலோசனையைப் படிச்சிட்டு, "நாங்கெல்லாம் ரெகுலரா பேருந்துல பயணம் செய்யறவங்க தான்...ஆனாலும் ரிசல்ட் எதுவும் இல்லை. உங்க ஆலோசனையை இன்னும் கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்க" அப்படின்னு நம்ம தளபதி சிபி பதில் கடிதம் போட அதுக்கு அவங்க கிட்டேருந்து வந்த இன்னொரு பதில் கடிதத்தைப் படிச்சிட்டு நாங்க அவ்வ ஆரம்பிச்சது இன்னும் அடங்குன பாடில்லை. அது என்னன்னா...

"எப்படிங்க ரிசல்ட் இருக்கும்...இல்லை எப்படி ரிசல்ட் இருக்கும்னு கேக்கறேன். பஸ்சுல ஏறுனதும் முதவேலையா சீட்டைப் பாத்து உக்காந்துக்குவீங்க...அப்படி இடம் கெடைக்கலன்னா லேடீஸ் சீட்ல உக்காந்துக்குவீங்க...கொஞ்சம் ஏமாந்தா கண்டக்டர் சீட்ல உக்காந்துக்குவீங்க. இப்படி எல்லாம் இருந்தா எப்படி ரிசல்ட் இருக்கும். லக்கேஜை காணாப் போக்கனும்னா கொஞ்சம் மெனக்கெடனும். முதல்ல இந்த தானியங்கி கதவுகள் இருக்கற பேருந்துகள்ல ஏறக் கூடாது. பஸ் காலியா இருந்தாக் கூட படிக்கட்டுல தொங்கிட்டுத் தான் வரணும். கண்டக்டர் "ஏறி வாய்யா"ன்னு கத்துனா பதிலுக்கு நீங்க "நீ தான்யா தவளை வாயன், பன்னி வாயன்" அப்படின்னு பதிலுக்குக் கத்திட்டு படிக்கட்டுல தொங்கிட்டே பயணம் செய்யனும். நீங்க இந்த கமல் நடிச்ச சத்யா படம் பாத்திருக்கீங்களா? அதுல கமல் வளையோசை கலகல பாட்டுல பஸ்சுல ஃபுட்போர்ட் அடிச்சிட்டு போவாரு பாத்துருக்கீங்க இல்லை. அந்த மாதிரி டெய்லி பஸ்சுல கடைசி படிக்கட்டுல ஒத்த கால் சுண்டுவிரல்ல தொங்கிட்டு போவனும்ங்க.

அந்த மாதிரி தொங்கிட்டு போகும் போது லக்கேஜ் மேல காத்து வந்து மோதும். காத்து வந்து மோதுச்சுன்னா லக்கேஜ் சும்மா விட்டுருமா...அதுவும் காத்தை தன் மேல மோத விடாம பலமா பதிலுக்குத் தள்ளும். காத்து லக்கேஜை தள்ள, லக்கேஜ் காத்தை திரும்ப தள்ள இப்படியே தொடர்ச்சியா நியூட்டனின் மூன்றாம் விதி படி வினையும் எதிர்வினையும் நடந்து நடந்து லக்கேஜ் காலப்போக்குல மெல்ல கரைஞ்சிடும். இது ஒரு இயற்பியல் மாற்றம்(physical reaction)

பஸ்சுல ஃபுட்போர்ட்ல தொங்கிட்டு போகும் போது physical reaction மட்டும் இல்லாம ஒரு chemical reaction கூட நடக்கும். அது என்னன்னா பஸ் படிக்கட்டுல நீங்க தொங்கிட்டுப் போகும் போது வெளியில அடிக்கிற காத்தும் வெயிலும், அதாவது air and heat ஒன்னா சேந்து லக்கேஜ் மேல ஒரு வேதியியல் மாற்றத்தை நடத்தி அப்படியே அதை எரிச்சிடும். இதை oxidationனு சொல்லுவாங்க.

ஆனா இவ்வளவு ஐடியா குடுத்தாலும் ஃபாலோ பண்ண மாட்டீங்க. ஏன்னா உங்களை மாதிரி ஆளுங்க கூட அமலா மாதிரி ஃபிகர் இருந்தா தான் நான் ஃபுட்போர்ட் அடிப்பேன்னு சொல்லுவீங்க. அப்புறம் எங்கேருந்து ரிசல்ட் கெடைக்கும்?"

3. கண்ணனைக் கான துவாரகை செல்வதற்கு முன்னாடி சங்கத்தின் நிரந்தர தலைவி நம்ம கீதா மேடம் அனுப்பிச்ச ஆலோசனை கடிதம் இப்போ உங்க பார்வைக்கு. அவங்க கொஞ்ச வித்தியாசமா ஆண்களின் எக்ஸ்ட்ரா லக்கேஜ் கரைய பெண்கள் பின்பற்ற வழிமுறைகளைப் பற்றி சொல்லிருக்காங்க.

"எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்கற ஆண்களை, அந்த லக்கேஜைக் கரைக்க முயற்சி எடுக்க வைக்கனும்னா அதுக்கு அவங்க அடிமடியிலேயே கை வச்சாத் தான் திருந்துவாங்க. சாயந்திரம் ஏழு மணிக்கு ஆரம்பிச்சு இரவு பத்து மணி வரை ஓடற ஆனந்தம், திருமதி செல்வம், கலசம், கோலங்கள், அரசி இந்த மாதிரியான பாடாவதி மெகா சீரியல்களுக்குப் பெண்களுக்குச் சரிசமமா ஆண்களும் அடிமையாகிப் போய் இருக்காங்க. அதை எல்லாம் பாக்க அனுமதி வேணும்னா தெனமும் மாலை ஒரு மணி நேரம் ஜாகிங் போகனும்னு கட்டுப்பாடு விதிக்கனும். எண்ணெயில் பொரிச்ச சமாச்சாரங்கள் எதையும் கண்ணுலேயே காட்டப்படாது. அப்படியும் எப்பவாச்சும் ஆசை பட்டு பஜ்ஜி, போண்டா வேணும்னு ரொம்ப கெஞ்சி மன்றாடி கேட்டுக்கிட்டாங்கன்னா வீட்டுலேருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற ஒரு கடையைச் சொல்லி அங்கேருந்து எண்ணெய் வாங்கிட்டு வரச் சொல்லலாம். ஏன்னு காரணம் கேட்டாங்கன்னா உங்க சைடுல (உங்க வீட்டுக்காரரு சைடு கெடையாது) ரொம்ப ஒல்லியா லக்கேஜ் இல்லாத யாரையாச்சும் உதாரணம் காட்டி அவரு அந்த கடையில தான் எண்ணெய் வாங்கறாராம்...அதான் அப்படி இருக்குறாராம் அப்படின்னு சொல்லலாம். இப்படி சொன்னா ஒன்னு எனக்கு பஜ்ஜியே வேணாம்னு சொல்லிடுவாங்க இல்லைன்னா பத்து பத்து இருபது கிலோ மீட்டர் போயிட்டு வந்ததுல நல்லா பெண்டு நிமிந்து இருக்கும். அதுக்கப்புறம் பஜ்ஜி சாப்பிடற ஆசையே போயிருக்கும்"

Friday, February 20, 2009

எல்லாருக்கும் 10 கேள்விகள்

கேள்வி எல்லாரும் கேட்டாச்சு, சங்கத்துல இருந்து வரலைன்னா கோவிச்சுக்க மாட்டீங்கன்னுதான் இந்த 10 கேள்விங்க. இப்படி கேள்வியே கேட்டுட்டு இருந்தா பதில் யாரு சொல்றது?


  1. கேள்வி
  2. கேள்வி
  3. கேள்வி
  4. கேள்வி
  5. கேள்வி
  6. கேள்வி
  7. கேள்வி
  8. கேள்வி
  9. கேள்வி
  10. கேள்வி
அப்படியே 10க்கும் பதில் சொல்லிட்டுப்போங்க.

Friday, February 13, 2009

கவிமெழுகுவத்தி தாராபுரம் தகரநிலவன் கவிதைகள்

என்கிட்ட இருக்கு பிளாக்பெர்ரி - உன்
கண்ணு ரெண்டும் இனிக்கும் ஸ்ட்ராபெர்ரி!

**************



காலங்கார்த்தால விடியல் - அப்ப
உன்னைப் பார்த்தாலோ டரியல்!

*************



நைட்டானா வருது ஸ்டாரு - நான்
டைட்டானா குடிப்பேன் பீரு
சைட்டுன்னா அதுக்கு உன் பேரு - நீ
வெயிட்டுன்னா காலம்பூரா காத்திருப்பேன் பாரு!

**********************


படிக்காதவன் ஹீரோயின் தமன்னா!
நீ என்னை காக்க வந்த சூப்பர்வுமன்னா?

**************



அவளைப் பார்த்ததும் அடிச்சேன் பிகிலு!
அவ அடிச்சதுல கிழிஞ்சது என் செவுலு!

******************************




ரோட்டுல ஓடுது காரு!
சரக்கடிக்க டாஸ்மாக் பாரு!!
குட்டிக்கதைக்கு சாரு!!!
நீதானே என் லைஃப்புக்கு வேரு!!!!

******************

டே(ய்) கவிதை

ஜனவரி ஒன்னு நியூ இயர் டே
மே ஒன்னு லேபர்ஸ் டே
நவம்பர் பதினாலு சில்ரன்ஸ் டே
பிப்ரவரி பதினாலு வாலண்டைன்ஸ் டே
நவம்பர்ல வரும் தாங்க்ஸ் கிவிங் டே
நீ ஓகே சொல்ற நாள் எனக்கு லைஃப் கிவிங் டே

********

தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு

*********



காமெடி கிங் கவுண்டமணி!
சிவாஜி நடிச்சது ஆலயமணி!
மூன்றாம்பிறை நாய் சுப்ரமணி!
நான் ஆகனும் உன்னோட ரங்கமணி!

******************************




இஸிகோல்ட்டு கவிதை


கிஸ்ஸடிக்கும் காதலியும்
ஆப்படிக்கும் மேனேஜரும்
ஒன்றுதான்
இருவருமே
நேரம் பார்த்து
கழுத்தறுப்பார்கள்!


*****************************




? கவிதை

உன் தந்தை பிநவாதியா?
நீ அவர் எழுதிய புனைவா?
உன் அன்னை வலைப்பதிவரா?
நீ அவர் எழுதிய மொக்கையா?
உன் குடும்பம் கூட்டுப்பதிவா?
நீ வாய் திறந்தாலே கும்மியா?

************************


'இப்ப இன்னாங்கற நீ' கவிதைகள்

நீ வரும்போதெல்லம்
உன்னைப் பார்த்து
ஏன் சிரிக்கிறேன் என்கிறாய்
'இடுக்கண் வருங்கால் நகுக'
மறந்துவிட்டாயா கண்ணே!

**

நீ வாங்கிய தங்க வளையல்
நன்றாக இருக்கிறதா
என்கிறாய்
என் கிரெடிட் கார்டில் இப்படி
வரைமுறையின்றி தீட்டுவது
நன்றாகவா இருக்கிறது?

**

பாண்டியன் எக்ஸ்பிரஸில்
டிக்கெட் கிடைக்கவில்லை என்கிறாய்
போன மாதமே
ரிசர்வேஷன் செய்யாதது
உன் தவறென்று
எப்படி சொல்வேன் பெண்ணே?

**

- தகரநிலவனின் 'டரியல் காதல்' கவிதை தொகுப்பிலிருந்து

Thursday, February 12, 2009

நாங்களும் கடவுள் தான்

மக்கா! இந்த சினிமா படம் எல்லாம் பாப்பீங்க இல்ல? நாங்களும் பாப்போம். சில படங்களைப் பாக்கும் போது, தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு நவுத்த வேண்டிய இந்த படம் மயிரிழையில் அந்த வாய்ப்பை தவற விட்டுருச்சேன்னு வருத்தமா இருக்கும். சனிப்பெயர்ச்சியும் குருப்பெயர்ச்சியும் நம்ம கையில இல்லாட்டின்னாலும் ஒரு படத்தோட க்ளைமாக்ஸை மாத்தி ஒரு கட்டத்துலேருந்து இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தற சக்தி மட்டும் நம்ம கையில இருந்தா...



தமிழ் சினிமாவுல கதை சொல்லிருக்கற விதத்தைப் பாத்தீங்கன்னா, பெரும்பாலும் நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான் அப்படிங்கற மாதிரியாவோ, இல்லை எல்லாம் சுபமேன்னு முடியற மாதிரியாவோ இருக்கும். ஆனா நிஜ வாழ்க்கையில பாத்தீங்கன்னா, அப்படி இருக்கறதில்லை. மேல சொன்ன இந்த இரண்டு விஷயமும் இல்லாம போறதுனால தான் தமிழ் படங்கள் அடுத்த கட்டத்துக்குப் போக முடியாம தத்தளிக்குது. படத்தோட க்ளைமாக்ஸ் இப்படி இல்லாம இந்த மாதிரி இருந்துச்சுன்னா எப்படி இருந்துருக்கும்னு ஏங்கியிருக்கோம்ல? அந்த ஏக்கத்தை ஆக்கமா மாத்தா முடிஞ்சிச்சுன்னா...மாத்திப் பாப்போமா?

படம் 1 : குஷி

ஜெனி(ஜோதிகா), சிவா சாரி ஷிவா(விஜய்) இவங்க ரெண்டு பேரும் காதலைச் சொல்லிக்காம காலேஜ் முடிஞ்சு போகும் போது ஒருத்தரை நெனச்சி ஒருத்தரு ஃபீல் பண்ண ஆரம்பிக்கிறாங்க. பிரியறதுக்கு முன்னாடி காதலைச் சொல்லிடலாமேன்னு எக்மோர் டேசனுக்கும் செண்ட்ரல் டேஷனுக்கும் போவாங்க. அங்கே ரெண்டு பேரும் ஒவ்வொரு லெட்டரை எழுதி வச்சிட்டு அங்கே இருக்கற ரெண்டு பேரு கிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுவாங்க. அதுக்கப்பால ரெண்டு பேரும் லெட்டரைப் படிச்சிட்டு ஒருத்தரு மனசை ஒருத்தரு புரிஞ்சுக்கிட்டு கடைசியா ஒன்னு சேர்ந்துருவாங்க...இது ஒரிஜினல் கதை.

இப்போ லெட்டர் குடுத்த எடத்துலேருந்து க்ளைமாக்ஸை மாத்தி படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி பாப்போம்.

டாக்டர்.ஷிவாவுக்காக ஜெனி ஒரு பையன் கிட்ட லெட்டர் குடுத்துட்டுப் போறாங்க. அந்த பையனுக்கு, ட்ரெயின் கெளம்புறதுக்கு முன்னாடி ஒரு தம் போட்டா நல்லாருக்குமேன்னு தோனுது. உடனே அவனும் ப்ளாட்ஃபாரத்துல எறங்கி ஒரு தம் போடலாம்னு நெனச்சி எறங்குறான். அந்த நேரம் அந்த இரெயில் பெட்டியில, ஒரு அம்மா, அப்பா கைக்குழந்தையோட ஏறுறாங்க. குழந்தை அந்த நேரம் பாத்து ஆய் போயிடுது. "ஐயய்யோ! துடைச்சி விடறதுக்கு ஒரு பேப்பர் கூட இல்லையே"ன்னு அந்தம்மா பதறுறாங்க. "இரும்மா...இங்க எதோ பேப்பர் இருக்கு என்னன்னு பாப்போம்"னு பிரிச்சு படிக்கிறாரு குழந்தையோட அப்பா. படிச்சிட்டு "ஏதோ காதல் கடிதம் மாதிரி இருக்கும்மா" அப்படிங்கறாரு. "ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"ன்னு புடுங்கித் துடைச்சித் தூக்கிப் போட்டுடறாங்க.

அந்த பக்கம் செண்ட்ரல் டேஷன்ல ஜெனிக்காக ஷிவா ஒரு பொண்ணு கிட்ட லெட்டர் குடுத்துட்டு போறாரு. அங்கே பாருங்க...அந்த பொண்ணு காலைலேருந்து கொலை பசி. சரி எதாச்சும் பப்ஸ் சமோசா வந்தா வாங்கி சாப்பிடலாம்னு பார்க்கறாங்க. அந்த நேரம் பாத்து ஒருத்தன் ப்ளாட்ஃபாரத்துல சாம்பார் சாதம் வித்துக்கிட்டு போறான். கோக் பிஸ்ஸா இல்லாம சாப்பிடறது கஷ்டம் தான்னாலும் ஆபத்துக்குப் பாவமில்லன்னு சாம்பார் சாதத்தை வாங்கி அபுக்கு அபுக்குன்னு முழுங்கிடறாங்க. பசி அடங்குனதுக்கப்புறம் தான் ஸ்பூன் இல்லாம கையால சாப்பிட்டுட்டோம்னு உணருறாங்க. கையைக் கழுவலாம்னு வாஷ் பேசின் போயிப் பாக்கறாங்க...தண்ணியே வரலையாம். திரும்பி சீட்டுக்கு வந்து என்ன செய்யலாம்னு யோசிக்கிறாங்க. காதல் கடிதத்துல கை தொடைச்சு தூக்கிப் போட்டுடறாங்க. ஜெனிக்கும், ஷிவாவுக்கும் ஒருத்தரு மனசுல ஒருத்தருக்காக என்ன ஃபீலிங்க்ஸ் வச்சிருக்காங்கன்னு தெரியாமலே போயிடுது.

இங்கே...இந்த இடத்துல படத்தை டைரக்டர் தன்னோட டச்சைக் காட்டறாரு. "இளம் காதலர்களே! உங்களுக்கு காதல் வந்துச்சுன்னா நேரங்காலத்தோட சொல்லிடுங்க. இல்லைன்னா உங்க காதலுக்கு ஒரு சின்ன குழந்தையும், சாம்பார் சாதமும் கூட எதிரியாகக் கூடும் - நேசத்துடன் எஸ்.ஜே.சூரியா" அப்படின்னு முடிக்கிறாரு.

படம் 2 : காதலுக்கு மரியாதை

ஜீவா(டாக்டர் இளையதளபதி) மற்றும் மினி(ஷாலினி) ரெண்டு பேரும் காதலுக்கு ரெஸ்பெட்ட்டு குடுக்கறதுக்காக மீனவர் குப்பத்துல பிரிஞ்சிடறாங்க. அதுக்கப்புறம் க்ளைமாக்ஸ் காட்சியில ஜீவா எதுக்காகவோ தன்னோட மணிப்பர்ஸை நோண்டும் போது, மினியோட செயின் அவருக்கு கெடைக்குது. அந்த செயினைக் குடுக்கறதுக்காக குடும்பத்தோட மினி வீட்டுக்குப் போவாங்க. அங்கே ஜீவாவோட அம்மா குடுத்துடுங்கங்கறதும், மினியோட அம்மா எடுத்துக்கங்கங்கறதும் அந்த சமயத்துல இளையராஜாவோட புல்லாங்குழல் பிஜிஎம்மும் ஒலிக்க எல்லாம் சுபமா படம் முடியும். படமும் நல்லாத் தான் ஓடுச்சு.

ஆனா எங்களை பொறுத்த வரை "காதலுக்கு மரியாதை" ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாம எடுக்கப்பட்ட ஒரு படம். இப்ப இந்த படத்தையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி பார்க்கலாமே...

க்ளைமாக்ஸ் சீன்ல டாக்டர் மணிபர்சிலேருந்து மினியோட சங்கிலியை எடுத்து பாத்து எக்கச்சக்கமா ஃபீல் பண்ணிட்டு இருப்பாரு. தன்னோட அம்மா கிட்ட "அம்மா! இது மினியோட சங்கிலி. இது என்கிட்ட இருக்கக் கூடாது. இதை அவங்க கிட்டவே திருப்பிக் குடுத்துடணும்" அப்படீம்பாரு. உடனே அவங்க அம்மா அதை கையில வாங்கி பாத்துட்டு "இண்டர்வெலுக்கு முன்னாடி வச்ச சங்கிலியை, க்ளைமாக்ஸ் சீன்ல எடுத்துப் பார்க்கச் சொல்லி உனக்கு ஐடியா குடுத்தது யாருடா? சொல்லு...படத்தோட ப்ரொட்யூசர் சங்கிலி முருகன் தானே? டேய்! நீ இந்த சங்கிலியை பாத்து ஃபீல் பண்ணதுக்கு கூட நான் வருத்தப் படலைடா...ஆனா கல்யாணி கவரிங்ல வாங்குன இந்த ஐம்பது ரூபா சங்கிலியைத் திருப்பிக் குடுக்க குடும்பத்தோட க்வாலிஸ் கார் வச்சிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போகனும்னு சொல்றியே...அதை தான் என்னாலே ஜீரணிக்கவே முடியலை" அப்படீம்பாங்க.

மனைவி பேசிக்கிட்டு இருக்கறதை பார்த்த ஜீவாவோட அப்பாவும் சீனுக்குள்ளே இப்போ எண்ட்ரீ குடுக்கறாரு. இப்போ ஸ்க்ரீன்ல ஆடியன்சை நோக்கிப் பாக்கறாரு "தம்பீகளா! படிக்கிற வயசுல இந்த மாதிரி காதல் கத்திரிக்கான்னு சுத்துனா வாழ்க்கையில எந்த நாளும் முன்னேறவே முடியாது. இப்போ என்னையே எடுத்துக்கங்க...அப்படின்னு "டைரி 1946-1975" லெவலுக்குப் பேச ஆரம்பிக்கிறாரு. "ஐயயோ! இப்படியே இவரு பேசிட்டு இருந்தா அது ஈரோட்டுல பந்தல் கட்டி மைக் போட்டு பேசுனா மாதிரி ஆயிடுமே...படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாதுன்னு" ஜீவா ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிக்கிறாரு. சங்கிலியை மினி கிட்ட குடுக்க முடியலையேங்கிற ஏக்கத்துல அதே சங்கிலியாலே தூக்கு போட்டுக்க முயற்சி பண்ணறாரு. ஆனா பாருங்க...சங்கிலி யாருமே எதிர்பாராவிதமா அறுந்து போயிடுது. ஜீவா தொபுக்கடீர்னு தரையில் விழறாரு...தலையில பலத்த அடிபடறதுனால திடீர்னு லூசாயிடுறாரு...

இந்த இடத்துல டைரக்டர் ஒரு பயங்கரமான பிஜிஎம் போடறாரு "இவன் வாழ்க்கையில் வசந்தம் வீசுமா?..." அப்படின்னு படத்தை முடிக்கிறாரு.

நில்லுங்க. தொலைநோக்கு பார்வைன்னு சொன்னேன் இல்லை. அதையும் வெளக்கிடறேன்...உலகத் தரத்துக்கு ஏற்ப தமிழ் சினிமாவில் சங்கிலியால் தூக்கு போட முயற்சித்த ஜீவா லூசாயிடறாரு. லூசான ஜீவா வாழ்க்கையில் வசந்தம் வீசுச்சா இல்லையான்னு சொல்லற படம் தான் "கண்ணுக்குள் நிலவு". இதுவும் ஒரு மிகமிக எதார்த்தமான ஒரு காதல் படம். ஜீவா தன்னுடைய லூசுத்தனங்களையும் மீறி எப்படி மினி மாதிரியே இருக்கற இன்னொரு ஷாலினியோட ஒன்னு சேருறாருங்கிறது தான் கதை.

ஜப்பான் படம், ஸ்பானிஷ் படம், கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியன் படம் - இதையெல்லாம் பாத்து காப்பியடிச்சு தான் நம்ம தமிழ் படங்களை நகர்த்தனும் அப்படீங்கறது பலரோட மனசுல இருக்கற தப்பான அபிப்பிராயம். சிம்பிளான ஒரு கதை, எதார்த்தமான காட்சியமைப்புகள், அதை விட நிஜவாழ்க்கையில நம்ம எல்லோராலயும் பார்த்து ஏத்துக்கக் கூடிய க்ளைமாக்ஸ் காட்சிகள் இதெல்லாம் இருந்தா நம்ம தமிழ் படங்களையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். அதுனால "சங்கம் பிலிம்ஸ்" நிர்வாகக் குழு தீவிர ஆலோசனையில் இறங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பல ஏற்பாடுகளை எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதையெல்லாம் வரும் நாட்கள்லே நீங்களே பாப்பீங்க.

சரி அது என்ன "நாங்களும் கடவுள்"? கவிஞர் கண்ணதாசன் ஒரு பாட்டுல சொல்லிருப்பாரு -"நான் படை(கெடு)ப்பதனால் என் பேர் இறைவன்". இப்போ சொல்லுங்க நாங்களும் கடவுள் தானே?

வாங்க கடவுள்களே வாங்க! நீங்களும் வந்து உங்க திறமைகளை எல்லாம் காட்டுங்க!

Monday, February 2, 2009

சங்கம் பிலிம்ஸ்: பாவனா-வின் பிளாக்-காயணம் Part 2

ந.நா = நகைச்சுவை நாகேஷ்! குணச்சித்திரத் திலகமான மறைந்த நாகேஷ்-க்கு சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி! சிரிப்பஞ்சலியும் கூட!
பிளாக்-காயணம் - Part 1, மாதவிப் பந்தலில் துவங்கியது! இனி வரும் பகுதிகள், வ.வா. சங்கத்தில் தொடரும்! இதோ Part-2!


ஆப்பிளை, அண்ணலும் நோக்கினான்....அவளும் நோக்கினாள்!
பாவனா என்ற ஆப்பிளைக் கண்ட மாத்திரத்தில், நம்ம இலங்கை மன்னன் காதல் மன்னன் ஆயிட்டான்-டா! கொடுங்கோலன் மனத்தில் செங்கோலி புகுந்துட்டா டா, புகுந்துட்டா!

இராவணப் பிரபாவின் வாயில் இருந்து, காதல் ரசம் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுது! இன்னிக்கு பெண்களூர் மாநகரத்தில் நாம பாக்குறோமே...பரந்து விரிந்த ஜொள்சூர் ஏரி! அது தோன்றக் காரணமானவன் இந்த இராவணப் பிரபா என்பது தல புராணம்!

அன்று பாவனா கடித்த ஆப்பிளின் விதை, பெரிய மரமா முளைச்சி நிப்பதை, இன்னிக்கும் ஜொள்சூர் ஏரியில் பார்க்கலாம்!
இந்த மரத்தில் அவிங்கவங்க பேரை வெள்ளியில் பொறிச்சி வைச்சா, உடனே காதல் கை கூடும்! அடுத்த தபா ஜொள்சூர் ஏரிக்குப் போனீங்கனா, பிரபா பேரைச் சொல்லிப் பொறிச்சிட்டு வாங்க மக்கா! :)

அண்ணலுக்குப் பாவனாவைப் புடிச்சிப் போச்சு! ஆனால் அவளுக்கு?
பிரபாவின் இதழோரமாக இருக்கும் ஒரு பெரிய மச்சத்தைப் பாத்துட்டா பாவனா! - மச்சம் பெண்களுக்கு இருந்தா அழகு! ஆனால் ஆண்களுக்கு இருந்தா பல தாரம் உண்டாமே? காம வெறி புடிச்சி அலைவாங்களாமே?
பாவனா பயப்படுகிறாள் - ஓக்கே சொல்லலாமா? வேணாமா? கன்ஃப்யூஷன்ஸ் ஆஃப் கானா பிரபா!


பிரபாவுடன் வந்த விபீஷ்-ஜிராவும் பாவனாவை லுக்குகிறார்! அண்ணன் இராவணப் பிரபாவின் மேல் முதல் முறையாகக் கோபம், பொறாமை எல்லாம் ஒன்னா வருது அவருக்கு! கறுவுகிறார்! பாவனாவின் வாய் தவறி வந்த ஆப்பிளை, "பேக்-பேக்கில் போட்டுக்கட்டுமா-ண்ணே?"-ன்னு, நைசாக லபக்கிக் கொள்கிறார் விபீஷ்-ஜீரா!


சபையில் இராமபிரான்-கேஆரெஸ்ஸும், இலக்குவ-சீவியாரும் அமர்ந்து இருக்கிறார்கள்! இருவருக்கும் மனசுக்குள் மத்தாப்பூ! அதே சமயம் சந்தேக சித்தாப்பூ!

கேஆரெஸ்: "டேய் தம்பி, லட்சுமணா! நீ அவளை பாத்தியா?"

சீவீஆர்: "டேய் அண்ணா, இராமா! நீ அவளைப் பாக்கலீயே?"

கேஆரெஸ்: "இல்லடா தம்பி! நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை! நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை!"

சீவீஆர்: "மரியாதை கெட்டுரும்! எந்த யுகத்துப் பாட்டை எப்போ பாடிக்கிட்டு இருக்கே? உன்னை நம்பித் தான்-டா அவ கிட்ட என்னை இழந்துட்டேன்! ஒழுங்கா அந்த பிளாக்கர் வில்லை வளைக்கப் பாரு! இல்லை.....
சிம்ப்ளி சீவீ-ஆரு, காம்ப்ளெக்ஸ் நம்பீ-ஆரா மாறிடுவேன்! ஆமா!"

கேஆரெஸ்: "சரிடா! சரிடா! கோச்சிக்காதே! கேர்ள்ஸ் ஆஃப் மிதிலா நமக்கே! இதோ எழுந்து போகிறேன்!"
(விஸ்வாமித்ர-கொத்தனார், தோளைப் பிடித்து அழுத்துகிறார்! உட்கார வைக்கறார்! "டேய், கேஆரெஸ், வேணாம்! வெயிட் மாடி!" )

கேஆரெஸ்: "ஏன் மகரிஷி?"

கொத்தனார்: "வெண்ணை! கேள்வி கேக்காதே! ஜஸ்ட் வெயிட்! இலவசம் சொன்னா ஈசனே சொன்னாப் போல!"

அங்கே.....பிளாக்கர் வில்லை வளைத்து வளைத்துக் களைத்து விட்டார்கள் பிளாக் தேச அரசர்கள்!
உம்ம்ம்.....ஒருவரும் பின்னூட்ட நாணை ஏத்தக் கூட முடியலை!
போலி ஆப்ஷன், அனானி ஆப்ஷன், ஓப்பன் ஐடி ஆப்ஷன்...ஹூஹூம்! ஒன்னும் வேலைக்கு ஆவலை!

இராவணப் பிரபா வருகிறார்! - பராக்! பராக்!! ஓபாமா!!!



யாருமே எடுக்க முடியாத பிளாக்கர் வில்லைக் கையில் எடுத்து விட்டார் தல! ஆகா! ஆகா! சபை வாய் பிளக்கிறது!

கேஆரெஸ் மெர்சல் ஆகிறார்! கொத்தன ரிஷியை கொன்னா தான் ஆத்திரம் அடங்கும் என்று துடிக்கிறான் சீவீயாரு!
இதோ...இலங்கை வேந்தன் பிரபா பின்னூட்ட நாண் ஏத்தறாரு! ஏத்தறாரு! இழுத்து ஏத்தறாரு!

விபீஷ்-ஜீரா: "அண்ணே, மண்டூ-அண்ணியை மனசுல நினைச்சிக்கிட்டு, நல்லா வளைச்சி இழுங்கண்ணே!"

இராவண-பிரபாவுக்கு "அண்ணி"-ன்னு பேரைக் கேட்ட மாத்திரத்தில் தூக்கி வாரிப் போடுது! தூக்கிய வில்லு தொளதொளக்குது! தோளு குளுகுளுக்குது!
"ஐயோ அவளா? கட்டாந் தரையில கப்பல் ஓட்டுவாளே! பாறாங் கல்லுல பரிசல் ஓட்டுவாளே! பரிசல்காரீ!" - பரிசல் பேரைக் கேட்ட மாத்திரத்தில் பிரபா, பேயடிச்சாப் போல ஆயிட்டாரு! :)

அந்தச் சமயம் பாத்து, அப்பா-ஆஆஆ-ன்னு ஓடி வருகிறது ஒரு சின்னக் கொழந்தை! - இந்திர சித்து என்னும் ரிஷான் ஷெரீப்! நாளைக்குப் பொறக்கப் போகும் குழந்தையைக் கூட இது "அங்க்கிள்"-ன்னு தான் கூப்பிடும்!

போன ஜென்மத்தில் இந்த ரிஷான்-சித்து ஒரு அங்க்கிளானந்தா! பூவுலக ரம்பையான சில்க் ஸ்மிதா, இவரைப் பார்த்து "அங்க்கிள்"-ன்னு கூப்பிட்டாங்களா? அதிலிருந்து மனமொடிந்து போய், கர்மா தீராமல்...இப்படிப் பாக்குறவங்களை எல்லாம் அங்க்கிள் அங்க்கிள் என்று அழைக்கும் பூர்வ ஜென்ம வாசனை! :)

ரிஷான்-சித்து: "டாடி, மாடத்தில் இருக்கும் நாலு பேர்ல, யாரை நான் சித்தீதீதீ-ன்னு கூப்பிடணும்?"

அம்பி-ஜனகன்: "வாட்? பிரபா? உங்களுக்கு ஏற்கனவே கண்ணாலம் ஆயிருச்சா? சொல்லவே இல்ல?"

இராவணப் பிரபா, கோபத்துடன் ஒரு முறை முறைக்கிறார்! ச்சே...கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாமப் போச்சே! தலை கவிழ்ந்து போய் 108.3 FM-இல் உட்காருகிறார்!


விஸ்வா கொத்தனார்: "சபாஷ்! இது தான் சரியான நேரம்! கேஆரெஸ்! வெற்றி உனதே! போய் பிளாக்கர் வில்லை வளை!"

கேஆரெஸ்: "தங்கள் ஆணை குருதேவா!"

எடுத்தது கண்டார்! இற்றது கேட்டார்!
பிளாக்கர் வில்லை இதற்கு முன்பே பல பேர்கள் வளைத்து வளைத்து அதை லூசாக்கி விட்டார்கள்! போதாக்குறைக்கு இராவணப் பிரபா வேற பின்னூட்ட நாணை நல்லா ஏத்திட்டான்! கேஆரெஸ் தொட்ட மாத்திரத்தில் வில் வளைந்து பொடிப் பொடி ஆகிறது!

ஜய விஜயீ பவ! ஜய விஜயீ பவ! வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே!

விஸ்வா கொத்தனார்: "சபாஷ்! இது தான்டா பி.க! பின்னூட்ட கயமைத்தனம்!
எப்படி....இந்தக் கொத்தன ரிஷியின் திட்டம்? ஆன்மீகப் பதிவு போட்டா மட்டும் போறாது கேஆரெஸ்! அப்பப்ப மொக்கையும் போட்டாத் தான் வில்லு மொக்கையாகும் அறிஞ்சிக்கோ! தெரிஞ்சிக்கோ! புரிஞ்சிக்கோ!"

தமன்னா உடன் வர....பாவனா....மாடிப்படிகளில் இருந்து ஓடோடி வருகிறாள்! கைகளில் மலர்மாலை! பூமாரி பொழிகிறது! அ...த்...தா...ன்!

எதிர்ப்புக் குரல்: "நில்லு தங்கச்சி, நில்லு! "
எக்கோ: "நில்லு தங்கச்சி, நில்லு!"

சீவீஆர்: நான்சென்ஸ்! பூமாரி பொழியும் வேளையில் சோமாரி? யார் அவன்?

அங்கே......பாவனா சிஸ்டர்ஸ்-இன் பாசமிகு உடன் பிறப்புக்கள், போர்வாள் தேவ் & ராயல் ராம்!

கேஆரெஸ்: "எதுக்கு பாவனா நிக்கணும்? அவள் எனக்கு மாலையிட்ட மங்கை!"

ராயல்: "எங்களுக்கு தண்ணியிட்ட தங்கை!"
தேவ்: "ப்ளாக் லேபில் இட்ட சிங்கை!"

ராயல்: "மாலையிடும் முன் சில கண்டிஷன்ஸ் இருக்கு! சொல்றோம் கேளு இராமச்சந்திரா!"

தேவ்: "கண்டிஷன் நம்பர்#1 - தங்கச்சி பாவனா இப்போ மாலை மட்டுமே இடுவாள்! ஆறு மாசம் லிவிங் டுகெதர்! அப்பறம் பிடிச்சிருந்தா தான் கல்யாணம்!"

கேஆரெஸ்: "ஓ மை காட்! வாட் யூ கைஸ் ஆர் டாக்கிங்?"

ராயல்: "இந்தப் பீட்டர் எல்லாம் பிட்ஸ்பர்க்கோட வச்சிக்கோ! இது கன்னட நாடு! கொத்தில்லா?"
தேவ்: "ஆமாம்! கொத்திறலாம்! கொத்திறலாம்! கொத்தன ரிஷி-ன்னு ஒருத்தனைக் கூடவே கூட்டியாந்து இருக்காங்களே! கொத்தில்லாம், கொத்தில்லாம்"

ராயல்: "கண்டிஷன் நம்பர்#2 - இன்னிக்கே நீங்க நாலு சகோதரர்களும், தாய்லாந்து காடுகளுக்கு வனவாச ஹனிமூன் போகணும்! ஆனா, கூட நாங்களும் வருவோம்!
ஏன்னா, ஏன்னா....எனக்கு தாய்லாந்து போக ரொம்ப நாள் ஆசை! அங்கே பல விஷயம் பண்ணனும்-ன்னு எனக்கு ரெம்ப நாளா ஆசை!" :)

கேஆரெஸ்: "அடப்பாவிங்களா, நீங்க எல்லாம் வந்தா அது ஹனிமூன் இல்லடா! மெனி மூன்!"

தேவ்: "டேய் கேஆரெஸ்! இந்தச் சொல்லின் செல்வர் எல்லாம் பந்தலோட வச்சிக்கோ! கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா மாலை! இல்லீன்னா சங்கு! எது வேணும் உனக்கு?"

கேஆரெஸ் இராமன் அரை மனதாகச் சம்மதிக்க......, பாவனா லிவிங் வைபோகமே! கேஆரெஸ் லிவிங் வைபோகமே!
மற்ற தம்பிகள் எல்லாம் மின்னல் வேகத்தில் அரச மீனவன் (கிங் பிஷ்ஷர்) விமானத்தில் வந்து சேர...

"நிறுத்துங்கள் கல்யாணத்தை!"


தேவ்: "எவ அவ?"

பரசுராமன்-அபி அப்பா: "நான் தான்டா! மாய வரம் கொடுக்கும் மாயவர முனிவன்! இந்த கேஆரெஸ் ராமனுக்கும் முன்பே நான் ஒரு மூத்த ஆன்மீகப் பதிவன்! பேரு பரசுராமன்!"

ராயல்: "இவனுங்கள யாருப்பா உள்ள விட்டது? லஞ்ச் டைம் ஆனாப் போதுமே! பெர்மிஷன் போட்டுட்டு, கல்யாண மண்டபம் மண்டபமாச் சுத்துவாங்களே!"

அபி அப்பா: "மூடு வாயை! பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக பிளாக்கரை வளைத்தவன் நான் தான்! மொத்தம் 9999 பின்னூட்டம்! 999 ஃபாலோயர்ஸ்! பாவனா எனக்கே!

தேவ்: "அடங் கொய்யால! அந்தப் பொண்ணுக்கு நீ பெரியப்பா மாதிரி! உனக்கு பாவனா கேக்குதா? குஷ்பூ ஆன்ட்டி கூட உனக்குச் சரிப்பட மாட்டாங்க! கெட் அவுட்!"

அபி அப்பா: "இராமச்சந்திரா! நீ தர்மம் தெரிந்தவன்! நீ கெட்-அவுட் சொல்! நான் போகிறேன்!"

கேஆரெஸ்: "அட, பரசுராமா! இது வெறும் லிவிங் டுகெதர் தான்! கண்ணாலம் இப்போ இல்ல! நீங்க கல்யாணத்தின் போது தான் வம்பு இழுக்கணும்! எதையுமே அரைகுறையாக் கேட்டு, அரைகுறையாப் பண்ணுறதே பொழைப்பா போச்சு உமக்கு! சரி, இது லிவிங் டுகெதர்-ன்னு நம்ம ஊர் முழுக்கப் போய்ச் சொல்லி வைக்காதீங்க! இது பரம ரகசியம்! சரியா?"

அபி அப்பா: "சரி, கேஆரெஸ்! தங்கள் சித்தம், என் சிதம்பரம்!"
(ஜி-டாக்கில் லாகின் பண்ணி, முதலில் மாட்டிய நண்பரிடம்: "லிவிங் டுகெதர்-ன்னு யார் கிட்டயும் சொல்லிறாதப்பா! சரியா? ஹிஹி! இந்த அபி அப்பா வாயில் இருந்து ஒருத்தனும் ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடியாது! தெரிஞ்சிக்கோங்க!" :))


ஆகா...என்ன அற்புதக் கல்யாணக் காட்சி! மொய் எழுதுங்க மக்கா.....மொய் எழுதுங்க! :)
* ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே! ரவி-ராமன் மணமகன் ஆனானே! பாவனா மணமகள் ஆனாளே!
* வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்! பதிவருக்கும் திரட்டிக்கும் ஆனந்தம்!!

* சத்ருக்கன-கப்பி பய வித் சுருதகீர்த்தி-தமன்னா
* இலக்குவ-சீவீஆர் வித் ஊர்மிளா-இலியானா
* பரத-வெட்டிப்பயல் வித் மாண்டவி-சமீரா ரெட்டி
(உனக்கு மட்டும் எப்படிடா இதுல கூட...."ரெட்டியே" செட் ஆவுது? :)
* இராமபிரான்-கேஆரெஸ் வித் சீதா-பாவனா....

சீவிஆர்: வாங்க, வாங்க! போட்டோ செஷன் ப்ளீஸ்! ஆல் ஆப்ஜக்ட்ஸ், ப்ளீஸ் அலைன் யுவர்செல்ப்! அக்கார்டிங் டு Rule-Of-Thirds!
கப்பி: அடப்பாவி சீவீஆரு! நீ இன்னும் இலியானாவுக்கு மாலையே போடலையா??? மவனே! மாலையைப் போடுறா மாங்கா! :)

இலியானா குனிந்த தலை நிமிராமல்...இராமனை நோக்கி வர...
கேஆரெஸ்: "ஆங்ங்....எனக்கில்லைமா...தம்பி காமிராவும் கையுமா அங்கிட்டு நிக்குறான் பாரு! சாரி! எனக்கு எப்பமே ஒரு இல்! ஒரு வில்! ஒரு ஜொள்!" :)


தம்பதிகள் அன்றே தாய்லாந்த் காடுகளில்.....மிகவும் எளிமையான ஹனிமூன் குடிசைகளில்.....ஆனால், பூஜை வேளையில் கரடிகளாக இந்த மாமா-மச்சான் கூட்டணி, தேவ்-ராயல் கூட்டணி!

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா வா! முதலிரவுக்கு........எல்லா அலங்காரங்களும் ஏற்பாடாக....

ஆனா அப்போன்னு பாத்து....ஒரு ரூமில் இருந்து மட்டும்...குவா....குவா....குவா....

ராயல்: ஆகா...என்ன இது குழந்தை அழுவுற சத்தம்? இன்னும் முதலிரவே துவங்கலயே?
தேவ்: என்ன சத்தம் இந்த நேரம்? குவா-வா? குவா-வா?

"கொஞ்சம் மூடறியா?"-ன்னு ராயல், தேவ்-ஐ ஒரு முறை முறைக்க...
எந்த ரூமில் இருந்து சத்தம் வருது-ன்னு எல்லாரும் ஓடியே வந்து பார்க்க....
குவா குவா சத்தம் இஸ் கமிங் ஃபரம் வெட்டி-பரதன்ஸ் ரூம்...* www.vettipayal.com *

(தொடரும்.....)