Monday, March 31, 2008

மங்களம்

"திருச்செந்தூரில் சஷ்டி நாட்களில் கச்சேரிக்கு என்னை கூப்பிடுவார்கள். இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து காலை 6 மணி வரை வாசிக்க வேண்டும். அதிகாலை 5 மணிக்கு வரும் அடுத்த நாயன கோஷ்டி எங்கள் வாசிப்பை பாத்து, "என்ன வாசிப்புல ஒரு சுரத்தே இல்லையே"னு கமண்டு விடும்.

- தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் பழனிவேல் அவர்கள் தான் ஒரு டிவி பேட்டியில் இவ்வாறு சொன்னார். நம்ம நிலைமையும் அது போல ஆகி விட்டதோனு எனக்கு தோணுது.

ஒரு மாதமாக இந்த வ.வா சங்கத்தில் பதிவெழுத என்னையும் நம்பி, சங்கத்து சிங்கங்கள் வாய்பளித்தமைக்கு முதலில் நன்றி ஹை. ஆபிஸில் கடுமையான வேலை பளுவுக்கு இடையில் வாரம் ஒரு பதிவாவது போட்டு விட்டேன் என நான் இங்கு சீன் போட விரும்பவில்லை.

இப்ப எதை பத்தி எழுத நினைத்தாலும் கும்மி விடுவார்களோ?னு ஒரு வித பயம் வந்து விடுகிறது. நம்ம கொத்ஸ் மாதிரி தைரியமா பதிவுக்கு நாலு டிஸ்கி போட்டெல்லாம் எழுத தில் வரவில்லை. ஒரு வித தேக்க நிலைக்கு என்னை நானே உட்படுத்தி கொண்டுவிட்டேன் போலும்.

இந்த ஒரு மாதமாக நான் கிறுக்கியதையும் படித்து ஊக்கபடுத்திய மக்களுக்கும், சத்தம் போடாமல் படித்து விட்டு கமண்ட் போடாமல் போன மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து தமது நகைச்சுவை சேவையை சங்கம் தொடர வேண்டும்! என்ற விருப்பத்துடன் விடை பெறுகிறேன்.

பி.கு: சங்கம் நடத்தும் பிரம்ம ரசம் போட்டிக்கு நானும் என்னாலான பிரம்ம சாம்பாரை ஓட விட்டுள்ளேன். (ஹிஹி, ஒரு விளம்பரம் தான்)

Tuesday, March 25, 2008

ஜில்பான்சி ரசம்
























தல கைப்புவின் ஆணைப்படி பிரம்மரசத்தை டாங்கர் லாரில புடிச்சுட்டு வந்தாவது கரைபுரள ஓட வைக்க இங்கிட்டு வாங்க..இப்படி க்ளிக்குங்க

Monday, March 24, 2008

தஞ்சாவூர் Vs திருநெல்வேலி

தமிழ் நாட்டை பொறுத்தவரை எங்க ஏரியா உள்ள வராதே!னு கெத்தாக வளய வருபவர்களில் இந்த தஞ்சாவூரும் நெல்லை சீமைகாரர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

தஞ்சாவூர் சம்ரதாயம், நெல்லை சம்ரதாயம் என தனியாக குறிக்கும் வழக்கமே இருந்து வருகிறது. அது என்னடா தஞ்சாவூர் சம்ரதாயம்?னு தலய பிச்சிக்க வேணாம்.
நீங்கள் ஒரு தஞ்சாவூர்காரர் வீட்டுக்கு போகிறீர்கள் என வைத்து கொள்வோம்! "வாங்கோ! வாங்கோ!" என பாயை விரித்து, பேனை போட்டு, காப்பி எல்லாம் உங்க வீட்லயே சாப்டுட்டு தான் வந்ருப்பீங்க!னு ஒரு பிட்டை போடுவார் பாருங்கள், அது தான் தஞ்சாவூர் சம்ரதாயம்.

இப்பொழுது உங்களுக்கு அபி அப்பா நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. :)

அது என்ன நெல்லை சம்ரதாயம்?
கல்யாணத்தில் நடுப்பந்தியில் உட்கார்ந்து கொண்டு " நம்ம அண்ணாவுக்கு 2 கரண்டி பாயசம் விடுடா! அவருக்கு பால் பாயசம்னா உசுரு!"னு பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பது தான் நெல்லை சம்ரதாயம். இப்ப உங்களுக்கு நம்ம இலவசகொத்தனார் நினைவுக்கு வராரோ? :D


தஞ்சாவூர்காரர்களாகட்டும், நெல்லைகாரர்களாகட்டும், இருவரும் இரண்டு விஷயங்களில் காப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டார்கள்.
ஒன்று குளியல், மற்றது உணவு.

என்ன தான் ஸ்விம்மிங்க் பூல் இருந்தாலும், எங்க ஊர் காவிரிகரையில் முதுகு தேய்ச்சி(அவங்கவங்க முதுகை தான்) குளிக்கற மாதிரி வருமா? என தஞ்சாவூர்காரகளின் பீத்தல் என்ன, அட போய்யா! தாமிர பரணில முக்குளி போட்டு மூச்சடக்கி தொட்டு புடிச்சு விளயாடி குளிச்ச பயலுவ நாங்க!னு நெல்லைகாரர்களின் இறுமாப்பும் சரி மற்ற ஊர்காரர்களை (குறிப்பாக மதுரைகாரர்களை) நீண்ட பெருமூச்சு விட வைக்கும்.

இந்த இரண்டு பேருக்குமே நாக்கு நாலு முழம். காலை காப்பியாகட்டும், காலை உணவாம் பொங்கலும், கத்ரிகாய் கொத்சுவாகட்டும், இல்லை மணக்க மணக்க வெங்காய சாம்பார், உருளைகிழங்கு கறி என மதிய உணவாகட்டும், சாயந்தரம் காப்பிக்கு பின் சாப்பிடும் வெங்காய பக்கோடாவாகட்டும், அட இரவு அருந்தும் பாதாம்பாலாகட்டும் இந்த பயல்களுக்கு எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கனும்.


கும்பகோணத்து டிகிரி காப்பி குடிக்காத வாய் என்ன வாயே!
நெல்லை இருட்டு கடை அல்வாவை சுவைக்காத நாவென்ன நாவே! என திருமங்கையாழ்வார் சும்மாவா பாசுரம் பாடி வெச்ருக்கார். (பாசுரம் நன்றி -கேரெஸ் அண்ணா!)


தஞ்சாவூர்காரர்களுக்கு பொண்ணு குடுக்க யோசிப்பார்களாம். கல்யாணத்தில் மாப்ளை வீட்டார் ஆயிரம் நொள்ளை சொல்லுவார்களாமே! நெல்லைகாரர்களிடம் பொண்ணு எடுக்க யோசிப்பார்களாம்! பின்ன, கல்யாணத்துல ஏதும் தகராறுனா அருவாள் இல்ல பேசும்.

கும்பகோண வெத்தலையை கொண்டு வந்து வெச்சுட்டு தாலிய கட்டுங்கோ! என கும்மி அடிக்கும் தஞ்சாவூர் பெரியப்பாக்களும் உண்டு.
நம்மூர்காரவுகளுக்கு மட்டும் சாம்பார் சரியாவே ஊத்த மாட்டேங்கறான், எடுறா அந்த அருவாள!னு மீசை முறுக்கும் நெல்லை முறை மாமன்களும் உண்டு.
இருவருக்கும் நல்ல சங்கீத ரசனையும் உண்டு. தஞ்சவூர் ஜட்கா வண்டிகாரனுக்கு கூட சங்கீதம் தெரியுமாக்கும்! என இந்த தஞ்சாவூர் காரர்கள் குடுக்கும் பில்டப் இருக்கே! அவர்களை சொல்லி தப்பில்லை, பக்கத்துல திருவையாறு. நாத பிரம்மம் மூச்சு காற்று பட்ட இடமாச்சே! ஆரபிக்கும், நீலாம்பரியும் உள்ள வித்யாசத்தை சும்மா அசால்டா போகிற போக்கில் சொல்லிவிட்டு போவார்கள் இங்குள்ள மக்கள்.

இந்த ஜில்லாக்களுக்குள் பல ஒற்றுமையும் உண்டு. இரண்டு ஜில்லாவிலும் பாப நாசம் என்ற பெயர் கொண்ட ஊர்கள் உண்டு. தஞ்சையில் திருவிடைமருதூர் என்றால் நெல்லையில் திருபுடைமருதூர் உண்டு.
திரு நெல்வேலி என்றாலே நினைவுக்கு வருவது இருட்டு கடை அல்வா தான். தஞ்சையில் புகழ் பெற்ற ஸ்வீட் என்ன?னு யாரேனும் பின்னூட்டத்தில் சொன்னால் தன்யனாவேன்.

Tuesday, March 18, 2008

போர்டு மீட்டிங் - பிரம்ம ரசம்

"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்"





என்று உற்சாகமாகப் பாடியவாறே சங்கத்து பில்டிங்கினுள் நுழைகிறார் கைப்பு!





அங்கே இளா, தேவ், ஜொள்ளுப் பாண்டி, புலி, தம்பி கதிர், 'ராயல்' ராம் ஆகியோர் கவலையோடு முகத்தைத் தொங்கப் போட்ட படி அமர்ந்திருக்க வீடியோ கான்பரன்ஸில் கப்பி, வெட்டி மற்றும் நாமக்கல் சிபி ஆகியோரும் கவலை தோய்ந்த முகங்களுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.





"என்னாது சங்கத்துல சலசலப்பேயே காணோம்!"


என்றவாறே எல்லோரையும் ஒரு கணம் உற்று நோக்குகிறார் தல!





தல : "அட என் அப்பிரண்டிசுகளா! ஏன்யா எல்லாரும் கவலையா இருக்கீங்க?"





தம்பி : "தல எங்களை ஒண்ணும் கேக்காதீங்க! நாங்க வருத்தமா இருக்கோம்"





தல : "வருத்தமா இருக்கீங்களா? என்னாத்துக்கு? அட சிங்கங்களா! இது வருத்தப் படாத வாலிபர் சங்கம்யா! இங்கன இருந்துகிட்டு அதுவும் நானும் இருக்கும்போது வருத்தப் படலாமா? என்னன்னு சொல்லுங்கய்யா"





கப்பி : "வேணாம் தலை! விட்டுடுங்க! நாங்க பாத்துக்குறோம்"





தல : "என்னாது இது! சின்னப் புள்ளத் தனமா! ராஸ்கல்ஸ்! இவ்ளோ நேரமா கேக்கிறேன்! ஒருத்தரும் சொல்ல மாட்டேங்குறீங்க! இப்ப மட்டும் சொல்லலே! அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது சொல்லிட்டேன்! ஆமா"





என்று ஒரு அதட்டல் போட சிங்கங்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப் போய்விடுகின்றனர்!





நாமக்கல் சிபி ஒரு நிமிடம் ஆஃப் லைனில் சென்று விட்டு வருகிறார்!





இளா : "சரி தல! நீங்க இவ்ளோ தூரம் கேக்குறீங்க! அதனால சொல்றோம்"





தல : "ம் சொல்லு!"





இளா :"அதாவது தல! சங்கத்தோட ரெண்டாவது ஆண்டு விழா வருதில்லையா?"





தல : "ஆமா அதுக்கென்ன இப்போ?"





புலி : "அதுக்கொண்ணும் இல்லை தல! ரெண்டாவது ஆண்டு விழா வருதுல்ல"





தல : "அட ஆமாய்யா! சொல்றதையே திருப்பி திருப்பி சொல்றானே! ஸ்ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!"





கப்பி : "ஆமா தல! சங்கத்துல பத்து பைசா இல்லாத இந்த நிலைமைல ஆண்டு விழா போட்டிக்கு பத்தாயிரம் ரூவான்னு பரிசு அறிவிச்சிருக்கீங்களே"





தல : "அடப் பாவிகளா! நீங்களெல்லாம் சேர்ந்துதாண்டா போடச் சொன்னீங்க"





கப்பி : "இவ்ளோ நாளா நீங்க சங்கத்துப் பக்கம் வராம இருந்தபோது எல்லாத்தையும் நாங்களே பார்த்துகிட்டோம்! இப்போ ரெண்டாவது வருஷ போட்டிக்கு அறிவிப்பு நீங்கதான் போடணும்னு நாங்க ஏன் ஒத்தக் கால்ல நின்னோம்னு யோசிச்சீங்களா தல?"





தல : "ஆமா! ஒட்டு மொத்தமா சொன்னீங்களேடா! நீங்க போட்டாத்தான் ஒரு மதிப்பா மரியாதையா இருக்கும்னு! அதனாலதாண்டா அறிவிச்சேன்! அப்போ அதுக்கில்லையா! அப்ப என்னாத்துக்கு? "





தேவ் : "அதாவது தல! எல்லா இடத்துலயும் நாம சேர்ந்து போயி சவுண்டு விடுவோம். ஆனா கடைசியில அடி வாங்கி அவல் ஆகி, உடம்பை ரணகளமாக்கிக்குறது மட்டும் நீங்க! நீங்க அடிவாங்கும் போது மட்டும் நாங்க எல்லாரும் அடுத்த ஷாட்ல மாயமா மறைஞ்சிடுறோம் இல்லையா!"





தல : "ஆமா! அதான் ஒவ்வொரு இடத்துலவும் ஆப்பை வாங்கி கொடுத்துட்டு அடுத்த நிமிஷம் எஸ் ஆகிடுறீங்களே! அதுக்கென்ன இப்போ"





வெட்டி : "ஆனா பாருங்க தல! சமீப காலமா இதை பிராக்டீஸ் பண்ண எங்களுக்கு வாய்ப்பே அமையலை! அதனால ஒரு மேட்ச் பிராக்டீஸ் மாதிரி உங்களை போஸ்ட் போடச் சொன்னோம்!"



தல : "மாட்ச் பிராக்டீஸா! அதுக்கும் நான் போஸ்ட் போட்டதுக்கும் என்னப்பா சம்மந்தம்?"





சிபி : "அதாவது பரிசு பத்தாயிரம்னு அறிவிச்சது நீங்க! சரியா! போட்டில கலந்துகிட்டு ஜெயிக்குறவங்க பரிசு எங்கேன்னு உங்களைத்தான் கேப்பாங்க! அந்த டைம்லே நாங்க எல்லாரும் எஸ் ஆக பிராக்டீஸ் பண்ணிக்குவோம்!"





தல : "அடப் பாவிகளா! வெச்சிடீங்களேடா ஆப்பு!"





சிபி : "ஒரு போர்வீரனா இருந்தாலுமே கூட பயிற்சி இல்லைன்னா போர்க்களத்துல போயி தோத்துடுவான் தல"





ஜொள்ளுப் பாண்டி : "ஆமா பிராக்டீஸ் ஈஸ் அ மஸ்ட்"





தல : "சரி! அதுக்கும் இப்ப நீங்க சோகமா இருக்குறதுக்கும் என்னய்யா தொடர்பு?"



ஜொள்ளுப் பாண்டி : "நிறைய பேரு போட்டில கலந்துக்குவாங்கன்னு எதிர்பார்த்தோம்! ஆனா இதுவரைக்கும் ரெண்டே பேருதான் கலந்துகிட்டிருக்காங்க"



தல: "அதனால...........!"


ஜொள்ளுப் பாண்டி: "வெறும் ரெண்டே ரெண்டு பேர் கும்முறதெல்லாம் ஒரு கும்மா தல! நினைச்சிப் பார்க்க எங்களுக்கே அசிங்கமா இருக்கு! உங்களுக்கு எப்படி இருக்கும்! அதை நினைச்சித்தான் தல எங்களுக்கு கவலையா இருக்கு!


அங்க பாருங்க! அந்த கவலையை மறக்கத்தான் சிபி திரும்பவும் பீர் அடிக்க உக்காந்துட்டாரு"



தேவ் : "ஆமா தலை! சும்மா கும்முறதுலே எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை! எல்லாரும் சேர்ந்து சும்மா பின்னிப் பெடலெடுக்கணும் அப்பத்தான் நீங்களும் பிராக்டீஸ் பண்ணுற மாதிரி ஆச்சு! நாங்களும் பிராக்டீஸ் பண்ணுற மாதிரி ஆச்சு"

சிபி : " நீங்கதான் எங்க கவலையைத் தீர்த்து வைக்கிறேன்னு சொன்னீங்களே தல! தீர்த்து வையுங்க! எவ்ளோ செலவு ஆனாலும் நாங்க பார்த்துக்கிறோம்"


தல : "அடப் பாவிகளா! என்னை பஞ்சராக்க ஆள் பத்தலைன்னு என்கிட்டயே கவலைப் பட்டு பிட் போடுறீங்களா? உங்களை........."


என்று தல கோபமாக எழுந்திருக்க



சிங்கங்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் எஸ்கேப் ஆகிறார்கள்!

Monday, March 17, 2008

இராதா கல்யாணம்


வீடே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இதோடு நாலு வரன் தட்டி போயாச்சு, இந்த வரனை எப்படியாவது முடிந்து விட வேண்டும்னு எல்லோர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு குடிகொண்டு ஆட்டி படைத்தது.

கை நிறைய சம்பளம், கண்ணுக்கு லட்சணமாய் இராதா இருந்த போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லி வந்த நாலு இடங்களும் தட்டி விட்டது.

கல்யாணி! எல்லாம் ரெடியா? சும்மா மசமசனு ஒரே வேலைய செஞ்சுண்டு இருக்காதே! அவங்க வர நேரமாச்சு! வந்தபிறகு போண்டாக்கு எண்ணெய் இல்ல, கேசரிக்கு ரவை இல்லைனு வில்லு பாட்டு பாடாதே!

அடடா! நீங்க சும்மா இருந்தாலே எனக்கு எல்லா வேலையும் முடிஞ்சுடும்.
இந்த தடவை முந்திரி பக்கோடா, சூடா ரெடியா இருக்கு. கேசரி பதமா வந்துட்டு இருக்கு. எறக்கற சூட்ல கொஞ்சம் நெய் விட்டா போதும், காப்பிக்கு முதல் டிகாஷன் இறக்கி வெச்ருக்கேன், அவங்க வந்தவுடனே சூடா பாலுல கலந்துட வேண்டியது தான். என் உயிரை வாங்காம நீங்க வாசல்ல போய் நில்லுங்க!னு இராதாவின் அம்மா சொன்ன வினாடி, வாசலில் கார் சத்தம் கேட்டது.

தஞ்சாவூர் பெரிய கோவில் நந்திக்கு பட்டு வேட்டி கட்டியது போல் ஆஜானுபாகுவாய், வாய் நிறைந்த சிரிப்புடன் சம்பந்தி இறங்கினார். அதை தொடர்ந்து, ஷர்மிளா டாகூர் ஸ்டையில் கொண்டையுடன் சம்பந்தியம்மா பின் தொடர ஹாலில் சபை கூடியது.

என்ன சார்? ப்ரயாணம் எல்லாம் சவுரியம் தானே? முதல்ல டிபனை சாப்டுடலாமே? அப்புறம் கேசரி ஆறி விடும். இது இராதாவின் அப்பா. பாவம் அவர் கவலை அவருக்கு.


பெரியவங்க நீங்க சொன்னா சரி தான்! - கொண்டை பின் பாட்டு பாடியது.


பீங்கான் பிளேட்டுகளில் வசதியாக டிபன் பரிமாறபட்டது. இராதவின் அப்பாவும் சந்தடி சாக்கில் அவர் ஷுகர் லிமிட்டுக்கு மேலேயே அமுக்கினார்.
டிபன் முடிந்து வாயை துடைத்து கொண்ட கொண்டை, "ஏதேனும் பாட்டு பாட முடியுமா?னு வழக்கமான பிட்டை போட்டது.


ஓ! அதுக்கென்ன, வாதாபி கணபதிம் வேணும்னா? ஏந்தரோ மாஹானுபாவுலு போதுமா? இல்லாட்டி பாரதியார் கவிதைகள்ள ஏதாவது?னு தமிழ்மண நட்சத்திரம் போல இராதா அப்பா வெரைட்டி காட்ட, மகிழ்ந்து போன கொண்டை வாதாபி கணபதிமுக்கு தீர்ப்பு சொல்லியது.


இராதாவின் இனிமையான குரலால் அந்த ஹாலே பத்து நிமிடம் கட்டி போட்டது போல மயங்கி நின்றது. பின் வழக்கமான விஷயங்கள் எல்லாம் விவாதிக்கபட்டு, ஊருக்கு போய் லெட்டர் எழுதுவதாக சொல்லி விட்டது வந்த கூட்டம் கார் ஏறியது.


இந்த இடம் எப்படியும் முடிந்து விடும்பா! கவலைபடாதே! என ஆறுதலாய் அப்பா சொல்வதை கேட்டு, மீண்டும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க தொடங்கி விட்டான் இராதா என்ற இராதாகிருஷ்ணன்.

Friday, March 7, 2008

வயசு ரெண்டாச்சு - பிரம்ம ரசங்களை ஓட விடும் போட்டி - அறிவிப்பு

வணக்கம் மக்கா. வர்ற ஏப்ரல் மாசத்தோட நம்ம சங்கத்துக்கு வயசு ரெண்டாகுது. நாலு கால்ல தவழ்ந்துக்கிட்டு இருந்த குழந்தை இப்போ பல்லு முளைச்சு எந்திரிச்சு நிக்குது. சுத்தி நிக்கிறவங்களைப் பாத்து அழகாச் சிரிக்குது, ரொம்ப சந்தோஷமாயிடுச்சுன்னா ஒரு குதியாட்டமும் போடுது. ரெண்டு வருஷமா ஒவ்வொரு நாளும் இந்தக் குழந்தையோட வளர்ச்சிக்குக் காரணமா இருக்கறது சங்கத்துக்கு ஆதரவு கொடுத்துட்டு இருக்கற நீங்க எல்லாரும் தான். சங்கத்தோட ரெண்டாவது பிறந்தநாளை உங்க எல்லாரோடயும் கொண்டாடலாம்னு ஏற்பாடு. எப்படி? ஒரு இருபது-இருபத்தஞ்சு வயசு பையனா இருந்தா ரோட்டுல பீரை நீரா ஓட விட்டு குளிச்சு, தெளிச்சு, நனைச்சு கொண்டாடலாம். ஆனா நம்ம சங்கம் ரெண்டு வயசு குழந்தை இல்லையா? அதனால தமிழ் வலைப்பூவுலகத்துல சங்கத்தோட இரண்டாம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரம்ம ரசங்களை ஓட விட வைக்கலாம்னு ஒரு ஐடியா.



சரி...அது என்ன பிரம்ம ரசம்? வெளக்கறேன்...ஆனா வெளக்கனதுக்கு அப்புறம் வெளக்கமாத்தால அடிக்க வரப்பிடாது...சரியா? பிரம்மா - யாரு?...படைப்புக் கடவுள் இல்லையா? படைப்புன்னா creation - creativityன்னு சொல்லலாமா? ரசம்ன்னா ஜூஸ்...அதாவது உங்க கிரியேட்டிவ் ஜூஸ்களை ஓட வைக்க ஒரு போட்டி. ஜூஸ்களை ஓட விடற போட்டின்னாலும் ரூல்ஸ் இல்லாமலா? இந்தா கீழே இருக்குப் பாருங்க...

ரூல்ஸ்...
1. ஒரு படத்தை(ஃபோட்டோ, இமேஜ்) எடுத்துக்கனும். இந்தப் படம் உங்க சொந்தப் படமா இருந்தா ரொம்ப நல்லது.
2. நீங்கப் போட்டியில உபயோகிக்கிற படம் வேற எங்கேருந்தாவது எடுத்தீங்கன்னா, அனுமதி வாங்கிக்கிட்டு பயன்படுத்துங்க.
3. அதுக்கப்புறம் உங்க பிரம்ம ரசங்களைக் கரை புரள ஓட விட்டு, அந்தப் படத்துக்குப் பொருத்தமா சின்னதா ஒரு துணுக்கோ, இல்லை அந்தப் படத்துல இருக்கறவங்க பேசிக்கிற மாதிரி ஒரு வசனமோ எழுதனும்.
4. நீங்க எழுதற துணுக்கு, வசனம் எப்படி இருக்கனும்னு தெரியுமில்லே? சங்கத்துல எப்படி இருக்கனும்னு எதிர்பார்ப்போம்? காமெடி தூக்கலா இருக்கனும்...அம்புட்டுத் தான்.
5. படத்துக்குப் பொருத்தமா நீங்க எழுதியிருக்கற துணுக்கு/ஜோக்/வசனம் இதை நீங்க தேர்ந்தெடுத்த படத்தோட சேர்த்து உங்க வலைப்பூவுல ஒரு பதிவாப் போட்டுக்கங்க.
6. அப்புறம் இந்தப் பதிவுல பின்னூட்டப் பகுதியில உங்கப் பதிவோடச் சுட்டியைக் கொடுத்துடுங்க. சுட்டியைப் பின்னூட்டமா கொடுத்தா மட்டும் தான் உங்கப் படத்தை ஆட்டையில சேத்துப்போம். சரியா?

போட்டி தொடங்கும் நாள் - இன்னைக்கே...இப்பவே
போட்டி முடியற நாள் - மார்ச் 31, 2008(அதுக்குள்ளாற ஒங்கப் படங்களைப் பதிவாப் போட்டு பின்னூட்டமா இங்கன தெரிவிச்சிடுங்க)
முடிவுகள் வெளியிடப்படும் நாள் - ஏப்ரல் 10, 2008

நடுவர்கள் : 'வலையுலகக் குத்தூசி' லக்கிலுக் மற்றும் 'சிரிப்பானந்தா' டுபுக்கு

பரிசுகள் : மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 10,000. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயரில் அவர்கள் பரிசு பெறும் தொகையினை ஒரு தொண்டு நிறுவனத்துக்குச் செலுத்திடுவோம். உங்கப் பெயரில் செலுத்தப்பட்டத் தொகைக்குண்டான ரசீதை உங்க முகவரிக்கு அனுப்பி வச்சிருவோம்.

அப்புறம் என்ன மக்கா? எல்லாம் ஓகே தானே? பட்டித் தொட்டியெல்லாம் உங்கள் பிரம்ம ரசங்கள் காட்டாறு வெள்ளம் போல கரை புரண்டு ஓடட்டும்...

போட்டியில் உள்ள பதிவுகள்
1. பேபி பவன்
2. கிரிக்கெட் ரசிகன்
3. வீரசுந்தர்
4. சத்யா
5. ஆயில்யன்
6. அம்பி
7. ஆயில்யன்
8. ச்சின்னப் பையன்

Wednesday, March 5, 2008

மாவாட்ட வாரீகளா?

முதல் பகுதி

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத நமது கைபுள்ளை, உலக அதிசயமாக வெட்டிபயல் ஆன்லைனில் இருப்பது பாத்து சந்தோஷபட்டு ஆலோசனை கேட்கிறார்.


யப்பா! ராசா! எப்படி பா இருக்கே? கல்யாணம் ஆன பிறகு சங்கத்து பக்கமும் வரதில்ல, ஜிடாக்லயும் வரதில்ல.

ஈயத்த பாத்து இளிச்சதாம் பித்தளை! அங்க மட்டும் என்ன வாழுதாம்? சரி, சரி, வந்த விஷயத்த சொல்லுங்க, எனக்கு ஏகபட்ட (வெட்டி) வேலை இருக்கு.

அப்படி என்னப்பா வேலை உனக்கு..?

ஹிஹி, தல உங்கிட்ட சொல்றத்துக்கு என்ன? போண்டா பண்ணிடலாம்னு பருப்பை ஊற வெச்சு ஆட்டிட்டு இருக்கேன்.

கைப்பு, என்னாது போண்டாவா? ஏதேனும் பதிவர் மாநாடு நடக்க போகுதா? ஸ்வீட்டுக்கு என்ன போலியா? சே! போளியா?

பதறி போன வெட்டி, யோவ்! ஏன்யா என்ன சிக்க வெக்க பாக்கற? தங்கமணி ஷாப்பிங்க் போயிருக்காங்க, வரதுக்குள்ள சாயந்தர டிபனுக்கு போண்டா பண்ணி இம்ப்ரஸ் பண்ணலாம்னு பாத்தா இப்படி கோத்து விடறீங்களே தல?
வெட்டி பேச்சு எல்லாம் வேலைக்கு ஆவாது! நான் வறேன் என வெட்டிபயலும் அப்பீட்டாக கைப்பு செய்வதறியாமல் தவிக்கிறார்.

இந்த நேரம் பாத்து பினாத்தலார் தாமாகவே கைப்புவை பிங்க பண்ண, F1 F1 என கத்துகிறார் கைப்பு.


என்ன தல விவரம் தெரியாத ஆளா இருக்கீங்களே? உப்புமா எப்படி கிண்டனும்?னு விவரமா வைப்பாலஜில சொல்லி இருக்கேன் பாருங்க, அதையே இங்க செயல்படுத்துங்க, பாதி கிரைண்டர் மாவை கீழே சரிச்சு விடுங்க, அப்புறம் பாருங்க என்ன நடக்குது?னு என நமட்டு சிரிப்புடன் பினாத்தலார் பத்த வைக்க முயற்சிக்க,

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நான் உருப்படியா இருக்கறது உனக்கு பொறுக்கலையா? நல்லா இரு ராசா! எத்தனை நாளா என்னய பழி வாங்கனும்னு திட்டம் தீட்டினபா?

சரி விடுங்க தல, வேணும்னா நம்ம பதிவுலக காரைக்கால் அம்மையார், தானை தலைவலி, சகலகலா வில்லி, கீதா மேடத்துகிட்ட உதவி கேளுங்க.

அட ஆமா! நல்ல யோசனை தான்! போடுறா போனை மேடத்துக்கு...

டிரிங்க்...டிரிங்க்...டிரிங்க்...டிரிங்க்...என நேரு காலத்து போன் அலற..

ஹலோ யாரு? டாட்டா இன்டிகாம் காரங்களா? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மனசுல? நான் யாரு தெரியுமா? என் பேக்ரவுண்டு என்னனு தெரியுமா? ஒழுங்கா மரியாதையா என் வீட்டு இணையத்தை சரி பண்ணுங்க, அப்படியே இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர், நெருப்பு நரி எல்லாம் ஒழுங்கா வந்தாகனும், சரி பண்ணிட்டு என் காலை பிடிச்சு மன்னிப்பு கேளுங்க! மனசு இருந்தா மன்னிக்க பாக்கறேன். கர்ர்ர்ர்ர்.

உறுமலை கேட்டு கதிகலங்கி போன கைப்பு,

அய்யோ மேடம்! நான் உங்க தலைமை தொண்டன்(தலையில் அடித்து கொண்டு) கைபுள்ளை பேசறேன்.

ஹிஹி, எனக்கு தான் தெரியுமே! சும்மா உங்களை பயமுறுத்தி பார்த்தேன்!
(குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலையாம்)

ஆஹா! மேடத்தின் அறிவே அறிவு! மேடம், மாவாட்றதை பத்தி ஒரு சின்ன சந்தேகம்.

அடடா! அதேல்லாம் விட்டு பல வருஷம் ஆச்சே! இப்ப எல்லாம் சாம்பு மாமா தான்! நீயே சொல்லு! எங்கப்பா அதுக்கெல்லாம் நேரம் இருக்கு எனக்கு? என்னோட (மொக்கை) எண்ணங்களில் டெய்லி ஒரு பதிவாவது போடனும், முத்தமிழ் குழுமத்துல வேற எழுத கூப்ட்ருக்காங்க, நடுவுல ஜிடாக் வேற இருக்கு. தமிழ்மணத்துல நட்சத்திரமா என்னிக்கு கூப்ட போறாங்களோ தெரியல. ஏற்கனவே நான் ஒரு நட்சத்திரம் தான்னு உனக்கு தெரியும். இந்த ஊருக்கே தெரியும், என்ன நான் சொல்றது?

கைப்பு, (மடார், மடார்னு தலையில் அடித்து கொண்டே) ஆமா! இல்லையா பின்னே? சரி மேடம், நான் அப்புறமா போன் போடறேன் என நைசா நழுவுகிறார்.


இந்த நேரத்தில் நமது ஜொள்ளு பாண்டிக்கு தகவல் தெரிந்து ஜிடாக்கில் வந்து,

அண்ணே! இட்லி சுட்டாச்சாண்ணே? குஷ்பூ இட்லியா? இல்ல சிம்ரன் இட்லியா?

ஏன்டா வெந்த புண்ணில் வெங்காயத்தை தேய்க்கற?னு லைனை கட் பண்ணி விட்டு, வேற வழியே இல்ல! நாமே இந்த சவால சமாளிப்போம்! என சொல்லிய வினாடி, கரண்ட் புடுங்கி கொள்கிறது.

சொல்லி வைத்தாற் போல கைப்புவின் தங்கமணியும் வீடு வந்து சேர, பேக்ரவுண்டுல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!னு சவுண்டு மட்டும் கேட்கிறது.

முடிவு என்னனு நான் சொல்லவும் வேணுமோ?


வேற என்ன, ஸ்டார்ட் மியூஜிக் தான்! :)

Sunday, March 2, 2008

வயசை மறைப்பது எப்படி?

சங்க்கத்துப் பக்கம் எட்டிப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு! ஆஹா ஆப்பீசுல நம்மளையும் அநியாய ஆபீசரா உயர்த்தி வெச்சிட்டாங்களேன்னு பார்த்தா, கூடவே தினமும் பலகை முழுவதும் எக்கச்சக்கமா ஆணியை அடிச்சி கைல கொடுத்துடுறாங்க! என்ன பண்ணுறது! எத்தினி நாளைக்குத்தான் வேலை பாக்குற மாதிரியே நடிச்சிகிட்டிருக்க முடியும்!

விதியேன்னு ஆணி பிடுங்கிகிட்டிருந்தா வருஷக்கணக்கா சங்கத்துப் பக்கம் தலை காட்டலேன்னு அப்புறமாத்தான் தெரியுது! அதனாலதான் பதிவுலகத்துல கூட என்னய்யா அநியாய ஆப்பீசராகிட்டயான்னு கேக்குறாங்க!

இந்த ஒரு வருஷ காலத்துலே சங்கத்து சிங்கமெல்லாம் எப்படியெப்படியோ கர்ஜனை பண்ணி இருக்காங்க! எத்தனையோ அட்லாஸ் வாலிபர்லாம் வந்து போயிருக்காங்க! எல்லாரும் முதல்ல ஒரு நன்றியைச் சொல்லிக்கிடுறேன் மக்கா!

இப்பக் கூட ஒரு வாலிபர் (அம்பியை ஏன் வாலிபர்னு சொல்றாங்க? அவரு பார்க்க குட்டிக் குழந்தையா ல்ல இருக்காரு) அளப்பரை வுட்டுகிட்டு இருக்காரு! அவருக்கும் என்னோட நன்றி!

உள்நாட்டுப் பலகை கொடுத்ததோடு மட்டுமில்லாம ஆன் சைட் ஆணியும் புடுங்குப்பான்னு மலேஷியாவுக்கு அனுப்பிட்டாங்களேன்னு சந்தோஷமா வந்தேன்! இங்க வந்து பார்த்தா எங்க ஆப்பீஸ் அணியை விட பத்து மடங்கு பலகைல அடிச்சி வெச்சிகிட்டு ரெடியா உக்காந்துகிட்டிருக்கான் எங்க கஸ்டமர்!

மலேஷியா வந்திறங்கி செரம்பான்க்கு கார்லே போயிட்டு, அன்னிக்கே திரும கோலலம்பூர் வந்து போய், வாரம் ரெண்டு நாள் கோலாலம்பூர்லயும், மத்த நாளில் செரம்பான்ல ஒரு ஆஸ்பத்திரிலயும நம்ம ஆணி பிடுங்கற வேலை பயங்கரமா போயிகிட்டிருக்கு!

சங்கத்துப் பக்கம் தலை காட்டாத விஷயம் எப்படியோ மலேஷியா வரைக்கும் தெரிஞ்சி போயிடுச்சு போல!

கோலாலம்பூர்ல ஒரு பொண்ணு(பொம்பளை) ரயில்வே ஸ்டேஷன்லெ

"அங்கிள்! இந்த டிரெயின் செரம்பான் போகுமா"ன்னு கேட்டுது பாருங்க! அப்பத்தான் தூக்கி வாரிப் போட்டது.

அப்புறம் நான் தங்கி இருக்கும் ஹோட்டல்க்கு கீழே "பாவோ" விக்குற கடை போட்டிருக்குற ஒரு சீனப் பொண்ணு(அட! இதுவும் பொம்பளைதாங்க)
பார்க்குறப்போ எல்லாம்

"பாவோ! டிரை பண்ணுங்க அங்கிள்"னு சொல்லுது!

அட! பாக்குறவங்கெல்லாம் இப்படிச் சொல்றாங்களே என் காதை நானே தடவிப் பார்த்துகிட்டேன்! இத்தனைக்கும் "பாவோ" பொண்ணு கேக்குறப்போ சங்கத்து டீஷர்ட்தான் போட்டுகிட்டிருக்கேன்! இருந்ததலும் வருத்தப் படாத "வாலிபர்"னு ஒத்துக்க மாட்டேங்குறாங்க!

அதான் திரும்பவும் சங்கத்துல ஒரு ரவுண்டு எட்டிப் பார்த்துட்டுப் போவோம்! அதுக்குப் பிறகாவது ஒத்துக்குறாங்களான்னு பார்ப்போம்!


தம்பி ஜொள்ளுப் பாண்டிக்கு:
நம்ம ஜொள்ளுப் பேட்டைலயும் கடும் வறட்சியா இருக்காம்! எதிர்பார்த்து வர ரசிகைகள் எல்லாம் காலி குடத்தை எடுத்துட்டு வேற இடம் பார்க்க கெளம்பீட்டாங்களாம்! தம்பி பாண்டி "ஜொள்ளுப் பாண்டி" இப்போ "வெறும்" பாண்டி யா ஆகிட்டாருன்னு பேச்சு வரதுக்குள்ளேஎ சூதனமா உஷாராயிடு!

Saturday, March 1, 2008

மாவாட்ட வாரீகளா?

கைப்புள்ளை வழக்கம் போல டிவி வால்யூமை ம்யூட்டில் போட்டு, பேஷன் டிவி பார்த்து கொண்டிருக்க, அவரது தங்கமணி குரல் கொடுக்க, பதறியடித்து பொதிகை சேனலுக்கு மாற்றி வால்யூமை கூட்ட, அதில் கே.பி.சுந்தராம்பாள் "பழம் நீயப்பா! என பாடுவதை முறைத்தபடியே நடந்து சமயல்கட்டுக்கு சென்று பவ்யமாக உள்ளேன் அம்மா! போடுகிறார்.

இந்த பாருங்க, அவசரமா நான் என் பிரண்டை பாக்க ஹாஸ்பிடல் போறேன். சமையல் எல்லாம் முடிஞசது. கிரைண்டரில் இட்லிக்கு மாவு போட்ருக்கேன். அத கொஞ்சம் பாத்து, அப்பப்ப தண்ணி விட்டு, தெரியலைனா உங்க பிரண்ட் கொத்தனார் கிட்ட கேட்டு, சரியான பதத்துல மாவை அந்த சட்டியில வழிச்சு வைங்க! என்ன நான் சொல்றது புரியுதா? என பதிலுக்கு கூட காத்திருக்காமல் மேடம் பறந்து போக, நம்ம கைப்பு என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது?னு புரியாமல் பே! என ஒரு நிமிடம் முழித்து பின் சுதாரித்து கொள்கிறார்.

என்னாது???? தெரியலைனா, கொத்தனாருகிட்ட கேட்டுக்கனுமா? அவரு இதுக்கெல்லாம் கூடவா டெக்னிகல் கன்சல்டன்ட்டா இருக்காரு? சரி, தேவைனா கேட்டுக்கலாம், என்றபடியே மாவாட்டும் கிரைண்டரை பார்கிறார் கைப்பு. எப்படியும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வந்தா போதும்! என நிம்மதியாக மறுபடி பேஷன் டிவியை மியூட்டில் போட்டு (என்ன செய்ய, பழக்க தோஷம்) செட்டில் ஆகிறார்.

சரியாக பத்து நிமிடம் கழித்து வந்து பார்க்க, எவ்ளோ தண்ணி விடனும்?னு சிறிது குழப்பமாகி, ஜிடாக்கில் இருக்கும் கொத்ஸை பிங்க் பண்ணி மேட்டரை சுருக்கமாக சொல்லி உதவி கேட்க,

கொத்ஸ், "மாவு எதுக்கு? இட்லிக்கா? தோசைக்கா? "

அட என்னப்பா, நாளைக்கு இட்லி, மறு நாள் தோசை, இதுல என்னபா உனக்கு சந்தேகம்?

இப்ப அரைக்கிறது அரிசியா? உளுந்தா?
கைப்பு ஓடிபோய் மாவை உத்து உத்து பாத்தும் ஒன்னும் புலப்படாமல், மறுபடி ஓடி வந்து ஜிடாக்கில், "அரிசி மாதிரி தான் இருக்கு. இருந்தாலும் உளுந்துக்கும் சேர்த்தே ஐடியா சொல்லிடுங்க".

நீ முதல்ல அது அரிசியா? உளுந்தா?னு கண்டுபிடிச்சு வை, மீதிய அப்புறமா சொல்றேன்! என கொத்ஸ் நழுவ,

ஐடியா கேட்டா, குவிஸ் நடத்றாரு இந்த கொத்ஸ்! இந்த மேட்டரை நாளைக்கு நாலு டிஸ்கி போட்டு பதிவர் வட்டம்!னு லேபிள் குடுத்து ஒரு விவாதத்தை வேற ஆரம்பிச்சுடுவாரு. ஆளு பாத்து கேட்டேன் பாரு! என்ன சொல்லனும் என நொந்தபடி வேற யாரும் ஜிடாக்கில் சிக்குவார்களா?னு பாக்க அங்கு கேஆரெஸ் மாட்டுகிறார்.

ஆகா! இவர் ரொம்ப நல்லவரு, பக்குவமா கேட்டா பதமா சொல்லுவாரு! அண்ணே! எப்படிண்ணே இருக்கீங்க? என மெல்ல பேச்சை துவங்க,

"நம்மாழ்வார் அருளால் நலமாக உள்ளேன் கைப்பு! என்ன விஷயம்..?"

ஆகா! இப்பவே ஆரம்பிச்சிட்டார்யா இந்த மனுஷன்! சரி பேசித்தான் பாப்போம்! என கேஆரெஸிடம் விவரத்தை கூற,

"இது ஒன்னும் பெரிய கஷ்டமில்லை கைப்பு. இப்ப அரைக்கிறது அரிசியா? உளுந்தா?னு தெரியனும் அவ்ளோ தானே!"

"அவ்ளோ தான்! அவ்ளோ தான்! இது தெரிஞ்சா கொத்ஸ் உதவி பண்றேன்னு சொல்லியிருக்கார்".

அப்படியா? சரி, நல்லா கேட்டுக்கோங்க கைப்பு. "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்! இதுல கம்பர் என்ன சொல்லியிருக்கார்னா...

அண்ணே! இதுல கம்பர் எங்கண்ணே வந்தாரு?

பொறுங்க கைப்பு, நான் மேட்டருக்கு வரேன், அவ்ளோ உறுதியான மனம் படைத்த இலங்கை வேந்தனே மனம் கலங்கி விட்டான், அது போல உங்க கிரைண்டரில் உள்ள மாவு கொஞ்சம் உறுதியா, கெட்டியா இருந்தா அரைச்சுட்டு இருக்கறது அரிசி!னு சொல்ல வந்தேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்! அப்ப உளுந்துனா?

பாற்கடலில் கால் மாட்டில் இலக்குமி அமர்ந்திருக்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் கமலன் கண் திறக்க காத்திருக்க, "சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ" என பாட பாம்பணை மீது பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான்.....

அண்ணே! என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலையே?

பொறுங்க கைப்பு! அந்த பாற்கடலில் பொங்கி வழியும் அமுதம் போல உங்க கிரைண்டரில் மாவு பொங்குதா?னு பாருங்க. அப்படி பொங்குச்சுனா அது உளுந்து. சரி, நான் வரட்டா? என அவர் அப்பீட்டாக தலையில் கை வைத்து அமருகிறார் கைப்பு.



...தொடரும்