Friday, March 30, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - போர்வாள் தேவ்

மக்களே போன வாரம் கிரிக்கெட் மேட்ச்ல கொஞ்சம் பிஸியா இருந்ததால டெவில் ஷோக்கு லீவ் விட்டாச்சு... ஏண்டா தோத்தீங்கனு நம்ம திராவிட்கிட்ட கேட்டா நீங்க எங்களுக்காக டெவில் ஷோ போடாம விட்டு கொடுத்ததை பார்த்து மனசு வலிச்சுது அதனால இலங்கைகிட்ட நாங்க விட்டு கொடுத்துட்டோம்னு சொல்றான்.

தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லுது பாருங்க... சரி அத அடுத்த டெவில் ஷோல பார்ப்போம். இப்ப நம்ம நட்சத்திர பதிவர், என்னுடைய சிஷ்யன் கைப்புள்ளய கலாய்க்கற சங்கத்தின் சிங்கம் தேவ் வந்துருக்காரு...

க: "வா தேவு... அது என்ன உன் ப்ளாகுக்கு பேரு சென்னை கச்சேரி? உனக்கு பாட்டு பாட தெரியுமா மேன்??? சொல்லு..."

தேவ்: "அது ஒண்ணுமில்லைங்க கவுண்ட்ஸ்... நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைல தான். நான் முன்னாடி தங்கிருந்த வீட்டு கக்கூஸ்ல தாழ்ப்பாள் கிடையாது... சரினு தினமும் நம்ம கச்சேரி தான். இப்ப புது வீடு வந்தாச்சி. என்ன இருந்தாலும் பழச மறக்ககூடாதுனு என் வலைப்பதிவுக்கு சென்னை கச்சேரினு பேர் வெச்சிட்டேன்!"

க: "அட தேவ் மண்டையா... இதுக்குள்ள இத்தன ரகசியத்தை மறைச்சி வெச்சிருக்கியா நீயி... ஆமாம் நீ என்ன வேலை பாக்கற?"

தேவ்: "நான் சாப்ட்வேர் பீல்ட்ல இருக்கேன்.."

க: "டேய் யாருக்கிட்ட டக்கால்ட்டி விடற??? நீ சென்னைல ஏதோ சாய் சாந்தி தியேட்டர்ல ரீல் ஓட்ற வேலை பாக்கறதா கேள்வி பட்டேன்..."

தேவ்: "இது அநியாயம்... அக்கிரமம்..."

க: "டேய் ஓவர் சவுண்ட் விடாத... அப்பறம் கச்சேரில பாட முடியாம போயிடும்...! ஏன்டா அந்த லீ படத்த உலகத்துல பார்த்த ஒரே ஆள் நீயாதாண்டா இருப்ப?? சரி படம் எப்படினு சத்தியராஜுக்கு போன் பண்ணா, "மாம்ஸ் விஜய் டீ.வில டப்பிங் பண்ணி போட்டிருந்தான். என்னமா சண்டை போடறான் அந்த லீ பய. நம்மல மாதிரி யூத்க்கு பிடிச்ச மாதிரி பறந்து பறந்து சண்டை போடறான் மாம்ஸ். என்ன இருந்தாலும் சைனிஸ் படம் சைனிஸ் படம்தான்" அப்படினு ப்ரூஸ் லீ, ஜெட் லீ படத்த பத்தி பேசறான். அவன் மகன் நடிச்ச அவனே பார்க்க மாட்றான். அந்த படத்தையும் விடாம பார்த்து விமர்சனம் எழுதறனா நீ கண்டிப்பா அந்த தியேட்டர்ல ரீல் சுத்தறவனாத்தானே இருப்ப??."

தேவ்: "மக்கள் பாவம் கஷ்டப்பட கூடாதேனு அந்த கஷ்டத்த நான் ஏத்துக்கிட்டேன்... எங்க தல கைப்ஸ் இந்த மாதிரி பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கார்...!"

க: "வாடீ வா... இத்தன நாள் தான் அவன் பேர சொல்லி ஊர ஏமாத்திட்டு இருந்தே? உனக்குனு எழுத சொல்லி ஒரு வாரம் கொடுத்த அதையும் என்னனா அவுட் சோர்ஸ் பண்ணிட்டு இருக்க...??

தேவ்: "நான் அவுங்களுக்குள்ள இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்துட்டு இருக்கேன்...!!"

க:"இந்த டகால்டி எல்லாம் இங்க வேண்டான்டி... முதல்ல உன் திறமைய வெளிய கொண்டா? அப்பறம் அடுத்தவங்க திறமைய வெளிய கொண்டு வரலாம்!!"

தேவ்: "நான் ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டேனு உங்களுக்கு பொறாமை..."

க: "மக்களே!!! இந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆள் இல்லை... இவர் ஸ்டாராயிட்டாராம் உடனே நாலு பேர கேள்வி கேட்டு ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டாறாம். என்னுமோ ஸ்டார் டீவி ரிப்போர்ட்டர் கணக்கா பேசிட்டு இருக்கான் பாருங்க... அப்பறம் அது என்னடா பக்கம் 78, பக்கம் 102னு உன் இஷ்டத்துக்கு பேர் வெச்சிருக்க?"

தேவ்: "அதுவா... என் தெருல இருந்த 78ம் நம்பர் வீட்ல இருந்த ஃபிகரத்தான் நான் பத்தாவது படிக்கும் போது ரூட் விட்டுட்டு இருந்தேன். அப்ப எல்லாம் தினமும் அவ வீட்டு முன்னாடி தான் சைக்கிள் எடுத்துட்டு சுத்திட்டு இருப்பேன். அதெல்லாம் ஒரு பொற்காலம்..."

க: "ஏண்டா அது பொற்காலம் மாதிரியா இருக்கு? அது ஒரு கனாக்காலம் ரேஞ்சுக்கு இருக்கேடா... அதனால தான் அதுல உன் கதை, கவுஜ எல்லாம் எழுதி பிலிம் காட்டறயா?"

தேவ்: "ஆமாம்னா... நான் அது அவளுக்காக எழுத நினைத்த கவிதைகள்... ஆனா எதுவும் கொடுக்க முடியாமலே போச்சு!!"

க: "ஓ நோ!!! உனக்குள்ள இவ்வளவு சோகம் இருக்கா??? ஆமாம் உனக்கும் இந்த சாம்பு, இரவுக்கழுகு குழுவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லா பதிவுளையும் அவுங்கள பத்தியே கேள்வி கேட்டுட்டு இருக்க?"

தேவ்: "கவுண்ட்ஸ்... அப்படியெல்லாம் இல்லை, இந்த புலிய பத்தி எல்லாம் கிசு கிசு எழுதி பெரிய ஆள் ஆக்கறாங்க. அப்படியே நம்மலையுல் எழுதினா பெரிய ஸ்டாராயிடலாம் இல்லை.. அதான் பாக்கறேன்!"

க: "இந்த சினிமாகாரவங்க தான் இப்படி கெட்டு போயிருக்காங்கனா... நீங்களுமா??? சரி தேவு.. இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு ஓடி போயிடு... அது என்ன போர் வாள்??? நீ என்னைக்காவது போர்ல வாள் எடுத்து சண்டை போட்டிருக்கியா???"

தேவ்: "ஓ அதுவா??? சண்டைனு வந்துட்டா நான் வாள் வாள்னு கத்திட்டு இருப்பேன்... அது அப்படியே போர் வாளாயிடுச்சி.. இத மட்டும் வெளிய சொல்லிடாதீங்கண்ணா... நான் பெரிய லெவல்ல பில்ட் அப் கொடுத்து வெச்சிருக்கேன்..."

சொல்லிவிட்டு அடுத்த பேட்டி எடுக்க ஓடிவிடுகிறார் போர் வாள்!!!

Tuesday, March 27, 2007

ஜொள்ளு கோச்சிங் சென்டர்
அன்னிக்கு ஒரு நாள் அப்படியேக்கா நம்ம மெயில செக் பண்ணிகிட்டு இருந்தப்போ நம்ம சங்கத்து சிங்கம் ஒன்னு சோகமான ஸ்டேடஸ் மெசேஜ் போட்டுகிட்டு ஒக்காந்து இருந்துச்சு. இது என்னடா சங்கத்து சிங்கத்துக வந்த சோதனைன்னு கேட்டா அட பாண்டி இதுக்கு தானே காத்துக்கிட்டு இருந்தேன்னு பூத்து பூத்துன்னு ஒரே ஒப்பாரி !! என்னாடா இது வம்பா போச்சுன்னு வா ராசா வா ன்னு லேசா ஆன்லைன்லயே கொஞ்சம் மப்பேத்திவிட்டு கேட்டா “ பாண்டி ஆபீசுல ஆணி புடுங்கற வேலை சும்மா பின்னி பெடலெடுக்குது. எப்படா வீட்டுக்கு திரும்ப வருவோம்னு இருக்கு. சரி இப்படி ஓயாம கொள்ளாம திரிஞ்சுகிட்டு இருக்கமே அப்பபோ ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு பேச்சுத்துணைக்குன்னு ஏதாசும் பொண்ணுககிட்ட பேசலாம்னு போனா உடனே அல்லாருமே ஸ்டேடஸ் மெசேஜ்லயே என்கேஜ்டு மெசேஜ் போட்டுகிட்டு சல்லைய கொடுக்குதுங்க! என்ன பண்றதுன்னே தெரியலை?! என்னடா இது வாழ்க்கை !! வாழ்க்கைல கடலை திங்காம இருந்துடலாம் ஆனா கடலைபோடாம இருந்தா என்ன ஆவறது? நாளைக்கு என்னை என் பேரப்புள்ளைக கேட்டா ஒரே அவமானமா போய்டுமே ன்னு ஒரே அழுவாச்சி !!!

அட இது நம்ம சிங்கத்துக்கு மட்டுமா சோதனை அல்லாருக்கும் தானே!! இதுக்கொரு முடிவு கட்டியாகனும்னு களத்திலே குதிச்சிடோம்ல? . அட எது எதுகெல்லாமே கோச்சிங்க சென்ட்டர் வச்சுருக்காங்க நாம ஏன் பிகர் கிட்டே ஜொள்ளு.விட நம்ம சிங்கங்களுக்கு ஒரு ரிகரஸ் கோச்சிங் வச்சா என்னானு ரோசணை பண்ணி இதோ வச்சுடம்லே?? இதோ அந்த கோச்சிங் சென்டர்ல ருந்து Live telecast !

சங்கத்து வாசல்ல கே கொள்ளேன்னு ஒரே கூட்டம் என்னாடான்னு விலகிட்டு பார்த்தா அட நம்ம கோச்சிங்க சென்ட்டர்ல சேருரதுக்குதான் அவ்ளோ கூட்டம்.

கைப்பூ : அப்பூ பாண்டி சீக்கிரம் வாய்யா சீக்கிரம் வா. நீ கோச்சிங்க கொடுக்கறேன்னு மின்னாடியே தகவல் கெடச்சுடுச்சு அதான் வெள்ளனவே எந்திரிச்சு மொதோ ஆளா வந்து பர்ஸ்ட் பெஞ்சிலயே துண்டைப்போட்டுட்டம்ல?

ராயல் : பாண்டி தலயாச்சும் காலைல தான் வந்துச்சு ஆனா நான் நேத்தே வந்து மொதோ பெஞ்ச்லே குந்திகினு இருக்கேன்.

வெட்டி: ஹிஹிஹிஹிஹி பாண்டி என்னிக்கு நீ கோச்சிங் சென்டர் போர்ட்டை எடுத்து மாட்டுனயோ அன்னில இருந்தே பர்கர் புளிசாதம்னு வந்து செட்டில் ஆயிட்டோம்ல??

ஜொள்ளு: அஹா மக்களே இவ்ளோ ஆதரவா என்னோட கோச்சிங்குக்கு?? சரி சரி மொதல்ல அல்லாரும் என்னென்ன பண்ணுனீங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்?.

கைப்பு: பாண்டி நானு போற வர்ற பொண்ணுங்க என்ன பேசறாங்கன்னு பின்னாடி திரும்பிகூட பார்காம ரொம்ப டீசண்டா கவனிச்சுகிட்டு வாறேன். சரி பாதியிலே பேசிக்கிட்டு இருக்கறப்போ நாம பேசுனா டீசண்டா இருக்காதுன்னு நெனச்சுகிட்டு அவங்க பேசி முடிக்கட்டும் நாம ஆரம்பிக்கலாம்னு காத்துகிட்டு இருந்து பேச்சு சத்தம் நின்னவுடனே திரும்பி பார்த்தா அவங்க எஸ்கேப் ஆகி இருக்காங்க! நானும் பல டயலாக்கு எல்லாம் ரெடி பண்ணனதுக்கப்புறம் இப்படி ஆனா என்ன பண்ணுவேன் ( ஒரு ஒப்பாரி ) பேசறதுக்கு என்னவெல்லாமோ கற்பனை பண்ணி வச்சுகிட்டு வந்து படத்தை ரிலீஸ் பண்னலாம்னு வர்றப்போ ஆடியன்சே இல்லைனா எப்படி இருக்கும் ??

ஜொ.பாண்டி: no no no crying ஒகே!! தல நீங்க பண்ணுன மொதோ தப்பு பொண்ணுங்க பேசுனா நிறுத்துவாங்கண்னு நெனச்சது. ரெண்டாவது தப்பு நீங்க பொண்ணுங்க பேச்ச நிறுத்துவாங்க நாம பேசலாம்னு காத்துகிட்டு இருந்தது. அப்படி இருந்தா தாத்தா ஆக வேண்டியது தான். மூணாவது தப்பு இந்த டீசண்டா இருக்கறேன்னு ஒதுங்கி நின்னுகிட்டு இருந்தா நீங்க பார்க்க பார்க்கவே அவனவன் அள்ளிகிட்டு போய்ட்டே இருப்பானுக. ஓகே ?? நெக்ஸ்ட் யாரு ??

ராயல்: பாண்டி நானும் ஆர்குட்டு சாட்டுன்னு போய் மொதோ ஓவரிலேயே சிக்ஸர் அடிச்சு சூப்பரான ஓபனிங் கொடுக்கரேன். ஆனா நான் புடுச்சதை firewall எல்லாம் போட்டு காபந்து பண்ணுலாம்னு பார்த்தா என்னோட firewall எல்லாத்தையும் பேத்துகிட்டு கண்டவனும் என்னோடதை களவாடிகிட்டு போய்டுறானுகோ?? இப்படி எத்தனைய மிஸ் பண்ணியிருக்கேன் தெரியுமா??

பாண்டி: ஒகே ஓகே கவலை வேணாம் ராமு. நீ ஆர்குட்டு சாட்டுன்னு போய் தேத்தறது இருக்கட்டும் அப்பபோ உன்னைப்பத்தியும் லேசா ‘பிட்’டைப் போட்டீயா? உன் firewall லை ஒருத்தன் பேத்துகிட்டு இருக்குற வரை என்ன பண்ணுணே? ஏதோ ஒரு அந்நியன் வர்றான் அப்படீன்னாலே நீ உடனே ஒரு ரெட் அலர்ட் செட் பண்ண வேணாமா? அவன் என்ன எழுதறான் அதுக்கு உன் ஆளு என்ன சொல்லுதுன்னு அப்படியே 24hrs மானிடர் பண்ணிகிட்டே இருக்கனும். அதான் சிக்ஸர் அடிச்சாசில்லேன்னு மப்பை போட்டுகிட்டு ஒக்கார்துகிட்டு இருந்தா சிங்கிள் சிங்கிளாவே ரன் எடுத்து ஸ்டெம்பை பேத்தெடுத்துகிட்டு ஓடிறுவானுங்க ஜாக்கிரதை தெர்தா??

வெட்டி: பாண்டி இந்தியாவிலே இருக்குற வரைக்கும் கேபினுக்கு வெளியே எட்டிப்பார்த்தா எட்டடி பாயத் தோணுற மாதிரி கலர் கலரா இருக்கும். சரி பாரின் போக சொல்லறானுகளே கேபினுக்கு வெளியே ஒரே கவுனு மயமா இருக்கும்ன்னு நம்ம்ம்ம்பி சரின்னு ஒத்துகிட்டு வந்தா கவுனு பார்ட்டி எல்லாம் கவுனு பாட்டியால்ல இருக்கு !! நானும் காதல் கதை அது இதுன்னு பண்டல் பண்டலா எழுதி தள்ளுரேன். ஆனா என்னைய தள்ளிகிட்டு போறதுக்கு எதுவும் சிக்கலையே என்ன பண்ணுவேன்??


பாண்டி: அட கவலைய வுடு பாலாஜி ! காதல் கதை எழுதறது சரி. அதுல நீ எழுதுற டயலாகை எல்லாம் யாரு கிட்டவாச்சும் சொல்லி பார்த்தியா ??

வெட்டி: ஓஓஓ அப்பவே சொல்லி பார்த்தனே என் ரூம்மேட் கார்த்திகிட்டே!

பாண்டி: கிழிஞ்சது போ !! கார்த்தி கிட்டே சொல்லி என்ன ஆக போகுது? சின்னபுள்ள தனமால்ல இருக்கு !! யோவ் பாலாஜி கார்த்திகிடே சொன்ன நேரதுக்கு கார்த்திகா கிட்டே சொல்லி காட்ட வேண்டியது தானே ?

வெட்டி: அய்யோ யாரு அது கார்த்திகா ?

பாண்டி: ம்ம் ஹூம். பாலாஜிக்கு கொஞ்சம் ICU கோச்சிங் தான் கொடுக்கனும் . பாலாஜிய அப்படியே அள்ளிகிட்டு நம்ம பேட்டை ICU கோச்சிங் சென்ட்டருக்கு போங்கப்பூ !!

கைப்பூ: டேய் பாண்டி பாலாஜிக்கு மட்டும் ஏதோ ஸ்பெசல் கோசிங் கொடுக்கறேனு சொன்னியே என்னையும் அப்படியே அள்ளிகிட்டு போய் கோச்சிங்க் கொடுறா பண்டிக்கண்ணு !!

ராயல்: யேய் பாண்டி எனக்கொரு தீர்வசொல்லு இல்லே இப்பவே இங்கயே நான் தீக்குளிச்சுருவேன் !!

ஜொ.பாண்டி: அட கொக்க மக்க !! என்ன இது இம்ப்பூட்டு வேகம்?? இதே வேகத்தை அங்க கட்டி இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்? சரி சரி அல்லாரும்க்கு மொதல்ல கொஞ்சம் வார்மப் பண்ணணும் . என்னோட பின்னாடியே நகர்வல வாங்க போலாம்! அப்படியே வர்றப்போ சும்மா வரக்கூடாது ! அப்படியே நம்மளைப்ப பத்தி அருமை பெருமையெல்லாம் பாடிகிட்டே வரணும் சரியா ??

வெட்டி: அட நாறப்பயலே. எங்கள வச்சு ஏதோ தேத்தப்பாக்குறே போல இருக்கே. இதுக்குதான் இம்பூட்டு நேரம் எங்களை வச்சு மொக்கை பொட்டுகிட்டு இருந்தியா ?? தல இவனே வுட்ட இப்படியே நம்மளை வச்சு பொங்கலைப் பொங்கி தின்னுட்டு ஏப்பம் வுட்டுட்டு போய்கிட்டே இருப்பான். டேய் பொளங்கடா பாண்டிய !!

அலறிக்கொண்டே அனைவரும் துரத்த பாண்டி எஸ்கேப் !

Monday, March 26, 2007

கிரிக்'கெட்டுப் போச்சு'

நொந்து நூலாகி அந்து அவலாகிப் போயிருக்கும் இந்திய அணியினர் மக்களிடமிருந்தும் மீடியாவிடமிருந்தும் எப்படியோ எஸ்கேப்பாகி சென்னை வருகின்றனர். அங்கு ஏற்கனவே அவுட் ஆப் ஃபார்மில் இருக்கும் விஐபிக்கள் சிலரை சந்தித்து ஆலோசனை பெற ரகசிய மீட்டிங் ஏற்பாடு செய்கின்றனர். அல்டிமேட் ஸ்டார் அஜித், இயக்குநர் இடிதாங்கி பேரரசு, புரட்சிப்புயல் வைகோ என நம்மூர் ஆட்கள் கிரிக்கெட் அணியினரை தேற்ற வந்திருக்கின்றனர். 'அசத்தப் போவது யாரு', 'அரட்டை அரங்கம்' ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு டி.ஆரும் யாரும் கூப்பிடாமலே வந்திருக்கிறார்.

ஏதோ ஒரு சங்க மீட்டிங் என்று மண்டபத்துள் எட்டிப்பார்க்கும் சின்னக் கலைவாணர் விவேக்கை அலேக்காக பிடித்து உள்ளே இழுத்துவருகிறார்கள் நம் வீரர்கள்.

விவேக்: டேய் இங்க என்னடா நடக்குது? யாருடா நீங்கல்லாம்? உங்களையெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேடா?

டிராவிட்: விவேக் சார், நாங்க கிரிக்கெட்ல தோத்ததை எப்படி சமாளிக்கறதுன்னு ஏற்கனவே அவுட் ஆப் பார்ம்ல இருக்கவங்க கிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு வந்திருக்கோம். நீங்களும் உங்க அறிவுரையை சொல்லி எங்களைக் காப்பாத்தனும்

விவேக்(ஹை பிட்சில்): அடப்பாவிகளாஆஆ...அவுட் ஆப் ஃபார்முன்னு டிக்ளேரே பண்ணிட்டீங்களாடா...இனி நான் என்ன சொன்னாலும் கேட்கப்போறதில்ல...சரி உங்க மீட்டிங்கை நீங்க நடத்துங்க.நான் ஒரு கட்டிங் விட்டுட்டு கார்னர்ல உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கறேன்

அவர் முடிப்பதற்குள் டி.ஆர் துள்ளிக் குதித்து எழுகிறார்.

விவேக்: ஏன் சார் இந்த ஆரஞ்சு கலர் சட்டை எல்லாம் எங்கே புடிக்கறீங்க? ரொம்ப டைட்டாயிருக்கே..சிம்புவோடதா??

அதை கண்டுகொள்ளாத டி.ஆர் கோபமாக :
"கவர்ன்மெண்ட் ஸ்கூல் பேர் பால்வாடி
பைத்தியம் முத்தினா நம்மூர் ஏர்வாடி
சம்பாத்திச்சீங்களேடா பல கோடி
ஏமாத்திட்டீங்களே மோசமா விளையாடி"

என கண்களில் கண்ணீர் வழிய ஹைபிட்சில அலறுகிறார்.

வழக்கம் போல யாருமே அவரை கண்டுகொள்ளாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

டிராவிட்: இதெல்லாம் விளையாட்டுல சகஜம். ஆனா மக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. நீங்கதான் எங்க இமேஜை வளர்க்க ஏதாவது ஐடியா கொடுக்கனும் என மற்றவர்களைக் கேட்கிறார்.

அஜித்: நான் பேஸ்மாட்டேன். ஜெயிச்சுட்டு தான் பேஸ்வேன். என்னை யாரும் அழிக்க முடியாது. நான் தண்ணி ஊத்தி வளர்த்த ஸ்டேடியம் புல் இல்ல..தானா வளர்ந்த காட்டுப் புல்.

விவேக்: பேஸ் மாட்டேன் பேஸ் மாட்டேன்னு பேஸ் வாய்ஸ்ல பேசி டார்ச்சர்ஸ் பண்றாரே

சாப்பல்: அஜித், இப்ப நான் கூட உங்க ஐடியாதான் ஃபாலோ பண்றேன். மீடியாகிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டேன்

அஜித்: அதுஉஉ

என டெசிபலை ஏற்றி அலறுகிறார்.

அப்போது அங்கே யாரோ விசும்பும் சத்தம் கேட்கிறது. வைகோ கருப்புத்துண்டை முகத்தில் பொத்தியபடி அழுதுகொண்டிருக்கிறார்.

விவேக்: பொடால போட்டாங்க அழுதீங்க. கூட்டணியைவிட்டு வெளிய வந்ததுக்கு அழுதீங்க. கட்சியை உடைச்சதுக்கு அழுதீங்க. நடைபயணத்துல கால் வலிச்சுது அழுதீங்க. இப்ப கிரிக்கெட்ல தோத்ததுக்கும் அழனுமா? வைகோ சார், கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.

வைகோ: ஐயகோ என் உடன்பிறப்பே, உலகக்கோப்பையை நீ வென்றிருந்தால் கலிங்கப்பட்டியில் பிறந்த நான் உங்கள் பேரில் கலிங்கத்துப்பரணி பாடியிருப்பேனே... இப்படி தோற்றுவிட்டீர்களே

இதைக் கண்டு செண்டிமெண்டில் ஃபீலாகும் வீரர்கள் வைகோவை தேற்றுகின்றனர்.

வைகோ: 1970களிலே இங்கிலாந்து கிரவுண்டுகளிலே சிக்ஸர் சிக்ஸராக அடித்தானே என் உடன்பிறப்பு விவ் ரிச்சர்ட்ஸ், அவன் மண்ணிலே போய் நாம் தோற்றதுதான் அவமானமாக இருக்கிறது

என்று கோபமமக ரியாக்ஷனை அப்படியே மாற்றுகிறார்.

விவேக்: அந்நியன் அம்பி ரேஞ்சுக்கு ரியாக்ஷன் காட்டறாரே. இவரை இப்படியே பேசவிட்டா நாம தனியா பொதுக்குழு நடத்தனும் போலிருக்கு. அஜித் நீங்க என்ன ஒரே பஞ்ச் டயலாக்ல நிறுத்திட்டீங்க. வேற ஏதாவது ஐடியா குடுங்க

அஜித்: டிராவிட்ஜி, யாராவது ஓட்டலுக்கு டிஸ்கஷன் கூப்பிட்டா போகாதீங்க. கூப்பிட்டு வச்சு குமுறி அப்புறம் டீம்ல இருந்தே தூக்கிடுவாங்க. 'நான் கடவுளுக்கு' உடம்பை குறைச்சு என் பாடி வெயிட்டை விட தலைமுடி வெயிட் அதிகமா ஏத்திவச்சிருந்தே. கடைசில படத்துல இருந்தே தூக்கிட்டாங்க. இனிமே நீங்க் பிரஸ்மீட் போனா 'நான் கேப்டன்'ன்னு அடிக்கடி சொல்லுங்க. அப்ப தான் டீம்ல நிலைக்க முடியும். நீங்க இருக்கறது பஞ்சுமெத்தை. நான் சுமக்கறது முள்கிரீடம்.

டிராவிட் 'நான் கேப்டன்ன்ன்' என சொல்லிப்பார்க்கிறார்

டி.ஆர்: கிரிக்கெட் டீமுக்கு நீ கேப்டன்
பனிக்காலத்துல காதுக்கு வச்சுக்க காட்டன்
சினிமால எல்லாருக்கும் நான் பாட்டன்
சிம்புவுக்கு மட்டும்தான் சொல்வேன் வெல்டன்

விவேக்: இவர் வேற சம்பந்தா சம்பந்தமில்லாம பேசி கழுத்தறுக்கறாரே. இங்க வில்லங்கம் புடிச்ச ஒரு கேரக்டர் ரொம்ப நேரமா அமைதியா இருக்கே...ஆளைப் பார்த்தா அத்தனை பேரையும் க்ளீன் போல்டாக்க ஏதோ ப்ளானோட இருக்க மாதிரி இருக்கு. பேரரசு சார்.. ஏதாவது பேசுங்க

பேரரசு: என்னான்னு சொல்வேனுங்கோ, சீமானெல்லாம் சேகுவேரா டி-ஷர்ட்டை கழட்டிட்டு காக்கிச்சட்டை மாட்டி இன்ஸ்பெக்டரா நடிக்க ஆரம்பிச்சுட்டாரு. நான் காக்கிச்சட்டை மாட்டி ஆட்டோ டிரைவரா நடிச்சா ஒத்துக்க மாட்டேங்கறாங்க.

டிராவிட்: உங்க பிரச்சனையை விடுங்க பேரரசு. நீங்க தான் தமிழ்நாட்டுக்கே தலைவலின்னு கேள்விப்பட்டோம். எங்க பிரச்சனைக்கு உங்க கிட்ட ஏதாவது தீர்வு இருக்கா?

பேரரசு: இருக்கு சார். மொதல்ல உங்க பேரெல்லாம் மாத்துங்க. என்ன பேர் இதெல்லாம்? ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர்னு? நல்லாவா இருக்கு?? நான் சொல்ற மாதிரி பேரை மாத்துங்க..டிங்கர் டிராவிட், சலம்பல் சச்சின், கவுதாரி கங்குலி, யுனானி யுவராஜ், தோட்டா தோனின்னெல்லாம் பேரை மாத்துங்க

விவேக்: அப்படியே சனியன் சாப்பல்னு மாத்தி கெஜட்ல உட்டுடலாமா??

பேரரசு(தான் கவனிக்கப்படுவதைக் கண்டு சந்தோஷமாக): அப்படியே இனி விளையாடப்போனா கிரீமெல்லாம் தடவிட்டு போகாதீங்க. வடபழனி முருகன் கோயில் வாசல்ல சந்தனம் வாங்கிட்டு போய் மொகத்துல தடவிட்டு ஆடுங்க. இதனால அட்வாண்டேஜ் என்னன்னா மேட்ச் பார்க்கற ஜனங்களுக்கு யார் அவுட் ஆகறீங்கன்னே தெரியாது. எஸ்கேப் ஆகிடலாம்

விவேக்: அப்படியே ஒரு பஞ்சாமிர்த பாட்டில் வாங்கிக்கொடுத்துட்டா பெவிலியன்ல உட்கார்ந்து நக்கிட்டிருக்கலாமே

டி.ஆர்: தங்கச்சி உனக்கு கல்யாணம் பண்ணி நலங்கு வைக்க கரைச்சு வச்சேன் சந்தனம்.... இந்த பயலுக தோத்ததால நொந்துபோச்சே என் மனம்.. என ராகம் கட்டி பாட ஆரம்பிக்கிறார்.

இனி இந்த ஏரியாவில் இருந்தால் யாராவது கடித்துவிடுவார்களென அஜித்தை இழுத்துக்கொண்டு எஸ்ஸாகிறார் விவேக்.

அப்போது "என்ன சார் நடக்குது இங்க? ஒரு தமிழன் இருக்கற இந்திய அணி உலகக்கோப்பைல தோக்குது. இப்படியாப்பட்ட கிரிக்கெட் நமக்கு வேணுமா? தமிழனோட மானம் எங்க போச்சு? டிராவிட் உங்க பசங்கள கடலூர்க்கு லாரில கொண்டாந்துருங்க. 'பள்ளிக்கூடம்' படத்துல கிட்டிப்புல் விளையாடற டீம் நீங்க. இந்த படத்தை வச்சு உங்க இமேஜை நான் தூக்கி நிறுத்தறேன். என்ன சார் நடக்குது இங்க?" என பத்து இருபது பேருடன் தங்கர்பச்சான் அலட்டலாக உள்ளே நுழைகிறார்.

பேரரசுவும் டீ. ஆரும் என்ன டயலாக் பேசலாமென கொலைவெறியோடு யோசிக்க, "பெரிய கலவரமே நடக்கப்போகுது ஓடிடுங்கடா அப்ரண்டீஸ்களா" என தன் டீமை இழுத்துக்கொண்டு தப்பியோடுகிறார் டிராவிட்

Thursday, March 22, 2007

சங்கம் டெக்னாலாஜீஸ் -ERA

Year: 2030 !!!!!!!!!!!!!!!!!!!!!!!(இத்தனை ஆச்சரியக்குறி போட்டுருக்கமில்லே! நம்புங்க)

Place : IBM, USA (Two Americans Talking)

Currency Conversion Rate : INR 1 Rs = USD $ 100

Alex: Hi John, you didn't come yesterday to office?
அலெக்ஸ்: ஜானு, நேத்து ஆப்பீசுகு வரலியா?

John: Yeah, I was in Indian Embassy for stamping.
ஜான்: அட ஆமாம்பா, விசா வாங்க இந்தியா எம்பஸிக்கு போயிருந்தேன்

Alex: Oh really, what happened, I heard that nowadays it has become very strict.
ஆஹ் அப்டியா?அப்பாலிக்கா இன்னாபா ஆச்சு? அவுங்க ரொம்பதான் ஸ்டிரிக்டா கீராங்கப்பா

John: Yeah, but I managed to get it.
நாம யாரு, வாங்கிட்டோம்ல

Alex: How long it took to get it stamped?
எவ்வளவு நேரம் ஆச்சு?

John: Oh, it was nasty man, long queue. Bill Gates was standing in front of me and they played with him like anything. That's why it got delayed. I went there at 2 AM itself and waited and returned by 4 PM.
ஆஹ். அதா. அது ரொம்ப நேரம் ஆச்சு. அனுமார் வால் கணக்கா பெரிய கியூ வரிசை. நம்ம பில்லு எனக்கு முன்னாடிதான் நின்னுகிட்டு இருந்தார்ன்னா பாரேன். அவுர செம ரவுசு வுட்டாங்கப்பா. அதான் கொஞ்சம் லேட் ஆகிருச்சு. காலாங்காத்தால பல்லு கூட விளக்காம 2 மணிக்கே அங்கிட்டு போயிட்டேன். திரும்பி வரதுக்கு மத்தியானம் 4 ஆகிருச்சு.

Alex: Really? In India, it is a matter of an hour to get stamped for USA
அப்படியா? இதே இந்தியாவா இருந்தா புதரகத்துக்கு விசா வாங்க ஒரு மணி நேரம் இருந்தா போதுமாம். அதுவும் எல்லா பொட்டி கடையிலையே வாங்கிக்கலாமாம்.

John: Yeah, but that is because who in India will be interested in coming to USA man, their economy has been booming.
அட நீ வேற அவன் புதரகம் வர ஆசைப்படுறாங்க. அவுங்க பெரிய பணக்கார நாடுப்பா, நம்மல மாதிரி இல்லே.

Alex: So, when are you leaving?
எப்போ இந்தியா போகப்போறே?

John: Anytime, after receiving my tickets from the client in India and you know, I will be getting a chance to fly Air-India. Sort of dream come true.
எப்ப வேணுமின்னாலும் போயிருவேன். இந்தியாவுலிருந்து டிக்கெட் அனுப்பிச்சா உடனே கிளம்பிற வேண்டியதுதான். அதுவும் ஏர்-இந்தியாவுல் போவப்போறேன், என்னோட ரொம்ப நாள் கனவு இது. இல்லைன்னா கஜா தோணிதான். எப்படியாவது போயே தீரனும்.

Alex: How long are you going to stay in India.
எவ்வளவு நாள் அங்க இருக்க போறே?

John: What do you mean by how long? I will be settled in India, my company has promised me that they will process my Hara Patta ..(green card)
என்னா பேசுற நீ ராஸ்கல். அங்கனையே டேரா போட்டுற வேண்டியதுதான். என்னோட கிளையண்ட் பச்சை கலர் ரேசன் அட்டை குடுக்குறேன்னு சொல்லி இருக்காங்க. வேலை கிடைக்காட்டியும் பரவாயில்ல சரவண பவன்ல இல்லைன்னா ஃபுட் வேல்ட்ல வேலை பார்த்தே பொழைச்சுக்குவேன். திரும்பி மட்டும் வரவே மாட்டேன்.

Alex: Really, lucky person man, it is very difficult to get a Hara Patta in India.
அதிர்ஷ்டகாரன்பா நீ. பச்சை கலர் ரேசன் அட்டை கிடைக்க குடுத்து வெச்சு இருக்கனும்.


John: Yeah, that's why, I am planning to marry an Indian girl there.
அதனால தான் அங்கேயே ஒரு செம கட்டையா பார்த்து, இல்லைன்னா ஜொள்ளுபாண்டிகிட்ட சொல்லி ஒரு இந்திய ஃபிகர் பார்த்து கல்யாணம் கட்டி பச்சை கலர் ரேசன் அட்டை வாங்கிரனும், புதரகம் மட்டும் திரும்பி வரவே கூடாது. மனுசன் இருப்பானா இங்க.

Alex: But you can find lots of US girls in Hyderabad, Bangalore and Mumbai.
நம்ம பொண்ணுங்களே அங்கே இருப்பாங்களே, ஆனா எவன் அவளுகளை பார்ப்பானுங்க. சே. ராயல் ராமுன்னு ஒரு மானஸ்தன் இருப்பாரு, அவரோட ரெகமண்டோட ரவிக்கிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை ஏற்பாடு பண்ணுய்யா, நல்லா இருப்பே.


John: But, I prefer Indian girls because they are beautiful and cultured.
பார்ப்போம், நான் இந்திய ஃபிகரத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன், அவுங்கதான் அழகா இருக்காங்க. கலாச்சாரமாவும் இருக்காங்க.

Alex: Where did you get the offer, Bangalore ?
எங்கே வேலை கிடச்சு இருக்கு, பொங்கலூர்லயா?(சரியாதான் எழுதி இருக்கோம், 2030ல இப்படிதான் பெங்களூர் பேர மாத்தி வெச்சு இருப்பாங்க)

John: Yeah, salary is good there, but cost of living is quite high, it is Rs. 200000 for a single room accommodation.
சம்பளம் நல்லா கிடக்கும் ஆனா ஒரு ரூம் வாடகைக்கு இங்கே இருக்கிற சொத்தை எல்லாம் வித்துட்டுதான் போவனும்.

Alex: I see, that's too much for US people, Rs.1/- =$100/-. Oh God! what about in Hyderabad , Mumbai?
பரவாயில்லை, அங்கே போய் சம்பாரிச்சு இங்கே இருக்கிற மாதிரி பத்து மடங்கு சொத்த ஒரே வருசத்துல வாங்கிருவே. ஒரு டாலரு 100 ரூவாயாம்ல.


John: No idea, but it is less than what we have in Bangalore . It is like the world headquarters of software
தெரில, ஆனா சாஃப்ட்வேர் சிலிக்கான் பள்ளத்தாக்குன்னு பேசிக்கிறாங்க. ஆனா அங்கே தெரு நாய்ங்க ரொம்ப ஜாஸ்தி. கடிச்சு கொதரிரும். அத எதிர்த்து மேனகா காந்தி போராட்டி இருக்காங்க. போன வருசம் மட்டும் 1 லட்சம் பேரு நாய்க்கடியால செத்து போயிருக்காங்க. அதுவுமில்லாம காவேரி ஆத்து பிரச்சினை வேற வரும் அதனால கருநாடகா ரிஜிஸ்ட்ரேசன் வண்டியா பார்த்து வாங்கிக்க, அப்போதான் தப்பிக்க முடியும்.


Alex: By the way, who is your client?
யாரு உனக்கு வேலை தர போறது?


John: Sangam Technologies, a pure Indian company, specialising in Embedded and aappudeed Software.
கைப்பு நடத்துற சங்க டெக்னாலஜீஸ்ன்னு ஒரு பெரிய கம்பேனி, அவுங்க எம்படெட், ஆப்புடெட்ல பெரிய ஆளுங்களாம்.


Alex: How are you going to cope with their language?
அது சரி, எப்படி அவுங்க பாஷைய கத்துக்கப் போறே?


John: Why not? From my school days I have been learning Hindi as my first language here at New York. At the Consulate they tested my proficiency in Hindi and were quite impressed by my cent per cent score in TOHIL i.e. Test of Hindi as International Language.
எனக்குதான் ஹிந்தி தெரியுமே, பள்ளிக்கூடத்துல இருந்தே படிக்கிறேனுல. அதுவும் தொஹில் பாஸ் பண்ணிருக்கோம்பு.


Alex: So, you are going to have fun there.
அப்படியா என்சாய் பண்ணு. ஹ்ம், நான் எப்போ அங்கே போறதோ, எனக்கு ஒரு காலம் வராமையா போயிரும். இன்னொன்னையும் தெரிஞ்சிக்க, ஸ்டாலினோட பையன் ஆட்சிக்கு வரது வாரிசு அரசியல்ன்னு விஜயாகாந்தோட பையனும் மச்சானும் அப்பப்போ அறிக்கை விடுவாங்க, அதை மொழிமாத்தி எனக்கு அனுப்பிவை, என்னா?. அப்புறம் ரசி கண்ணா ரசி'னு ஒரு தமிழ்நாட்டுல ஒரு பொஸ்தகம் வருதான் அதையும் அனுப்பி வைச்சுரு. அப்படியே வரும்போது ஒரு கட்டு கணேஸ் பீடியும், செண்ட் பாட்டில் ஒன்னும் வாங்கிட்டு வா. அங்கே போனது எங்களை மறந்துடாதடா மாமு.

Thanks: இங்கிலி பீசுல "Sunil Gazula"
நன்றி- அவுட் சோர்ஸிங்க் புதரகத்திலிருந்து "வெட்டி"
தமிழாக்கம்- ஆன்சைட் இந்தியாவிலிருந்து "விவசாயி"

Monday, March 19, 2007

இரு துருவம் - 3

பாகம் - 2

நண்பர்களே, இவ்வளவு லேட்டா இந்த பாகத்தை போடறதுக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்... ஆணி ரொம்ப அதிகம்.

இனி கதைக்கு போகலாம்...

.......................................................

ஆடிட்டோரியத்திற்குள் பரபரப்பாக சுற்றி கொண்டிருந்தான் சரவணன். ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு வெளியே வந்தான். அங்கே வாசலில் அருமையாக இடப்பட்டிருந்த கோலத்தை பார்த்து ஆச்சரியமானான். அதன் அருகே இருந்தவர்களிடம் சரண்யாவை பற்றி விசாரித்தான். அவள் கோலம் போட்டு கை, கால் எல்லாம் கலரானதால் ஹாஸ்டலுக்கு சென்றிருக்கிறாள் என தெரிய வந்தது.

சரவணனும் மாணவர் விடுதிக்கு வேகமாக சென்று குளித்து ஃப்ரெஷாக வந்து சேர்ந்தான். அவன் வந்து சிறிது நேரத்திலே சீப் கெஸ்ட் வந்து சேர்ந்தார். ஒரு வழியாக விழா நல்ல படியாக முடிந்து சீப் கெஸ்டை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு வரும் போது வாசலில் கோலத்தை பார்த்தவுடன் தான் அவனுக்கு சரண்யா ஞாபகம் வந்தது.

அவளை தேடிய பிறகு தான் அவனுக்கு முதலாமாண்டு மாணவர்கள் டிப்பார்ட்மெண்ட் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவில்லை என்ற ஞாபகமே வந்தது. சரி போன் செய்து சொல்லிவிடலாம் என்று அருகிலிருக்கும் ஒரு ரூபாய் பூத்திலிருந்து லேடிஸ் ஹாஸ்டலுக்கு போன் செய்தான்.

போனை எடுத்த மாணவியிடம்

"ஹோலோ! ஃபர்ஸ்ட் இயர் சரண்யா இருக்காங்களா?"

"நீங்க யார் பேசறது?"

"நான் அவுங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயிண்ட் செக்ரட்டரி சரவணன் பேசறேன். கொஞ்சம் கூப்பிட முடியுமா?"

"டேய் சரவணா! நான் தான் வித்யா பேசறேன். எதுக்குடா ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுக்கு ரூட்விடற?"

வித்யா சரவணின் க்ளாஸ் மேட்...

"ஏய் லூசு... நீதானா? ரூட்டும் இல்ல ஒண்ணும் இல்லை. சும்மா தேங்க்ஸ் சொல்லலாம்னு கூப்பிட்டேன்"

"எதுக்கு தேங்க்ஸ் சொல்லனும். ஏன்கிட்ட சொல்லு அப்பதான் கூப்பிடவேன்"

"முதல்ல கூப்பிடு அப்பறம் சொல்றேன். சீக்கிரம் கால் கட்டாயிடும். இன்னும் 120 செகண்ட்ஸ் தான் இருக்கு. என்கிட்ட வேற காயின் இல்லை"

"சரி இரு கூப்பிடறேன்" சொல்லிவிட்டு
"ஃபர்ஸ்ட் இயர் சரண்யா... போன்" என்று சத்தமாக கத்தினாள். உடனே முதல் மாடியில் "சரண்யா போன்... சரண்யா போன்" என்று சத்தம் வந்தது.

"டேய் கூப்பிட்டுட்டேன். இப்ப சொல்லு"

"ஒண்ணும் இல்ல. இன்னைக்கு டிப்பார்ட்மெண்ட் ஃபங்க்ஷனுக்கு ஹெல்ப் பண்ணா. அதுக்கு தான் தேங்க்ஸ் சொல்லலாம்னு கூப்பிட்டேன்"

"டேய். ஏன்டா நாங்களும் தான் வேலை செஞ்சோம் எங்களுக்கு இப்படி போன் பண்ணி சொன்னியா என்ன?"

"லூசா நீ... நம்ம டிப்பார்ட்மெண்ட் ஃபங்ஷனுக்கு நீ பண்ண. அவளுக்கு என்ன டிப்பார்ட்மெண்ட் எல்லாம் இருக்கு. சரி நீ முதல்ல அவள்ட குடு"

சரியான நேரத்தில் வந்து நின்றாள் சரண்யா.

அவளிடம் போனை கொடுத்துவிட்டு "பேசி முடிச்சிட்டு செகண்ட் ஃப்ளோர்ல ரூம் நம்பர் 207க்கு வா" சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள் வித்யா.

"ஹலோ" பயம் நிறைந்த குரளில் பேசினாள் சரண்யா.

"ஹலோ நான் சரவணன் பேசறேன்"

"எந்த சரவணன்? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே"

"ஹலோ நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயிண்ட் செக்ரட்டரி"

"ஓ!!! சாரி சார்... சொல்லுங்க"

"இந்த சார் மோர் எல்லாம் செகண்ட் இயர் பசங்களோட வெச்சிக்கோ! கோலம் ரொம்ப நல்லா இருந்துச்சி"

"தேங்க்ஸ்"

"அது நான் தான் சொல்லனும். தேங்க்ஸ். சரி அதுக்குத்தான் போன் பண்ணேன். பை" சொல்லிவிட்டு போனை வைத்தான் சரவணன்.

அடுத்த நாள் காலை இண்டர்வெலில் காண்டினில் நண்பர்களுடன் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்தான் சரவணன்.

அவனை நோக்கி வந்தாள் சரண்யா. "சார் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்" அவள் சொன்னதை கேட்டதும் அவன் நண்பர்கள் அனைவரும் சரவணனை ஒரு மாதிரி பார்த்தனர். அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

"இருங்கடா வரேன்" சொல்லிவிட்டு கேண்டினை விட்டு வெளியே வந்தான் சரவணன்.

"நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல குடும்பத்து பொண்ணு. இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரிஞ்சா எங்க வீட்ல என்னை கொன்னு போட்டுடுவாங்க. ப்ளீஸ் இனிமே என்கிட்ட பேசாதீங்க" சொல்லிவிட்டு வேகமாக க்ளாஸ் ரூமை நோக்கி நடந்தாள் சரண்யா...

அவளை குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தான் சரவணன்...

(தொடரும்...)

Sunday, March 18, 2007

மாடு மேய்ப்பது எப்படி?

டிஸ்கி: இது ஒரு காட்டுத்தனமான எதிர்வினைப் பதிவு.

நம்ம தம்பி வறட்டி தட்டுவது எப்படின்னு விலாவாரியா ஆராய்ச்சிக் கட்டுரை போட்டிருக்காரு. வறட்டி தட்ட சாணி வேணும். சாணி போட மாடு வேணும். மாடு சாணி போடனும்னா நாம அதுக்கு தீனி போடனும். அதனால இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு பார்ப்போம்.

மாடு மேய்க்கற விதம் நாம இருக்க இடத்தைப் பொறுத்து மாறும். மெட்ராஸ் மாதிரி பட்டனத்துல இருந்தா மாடு மேய்க்கறதை மறந்துடலாம். அந்த நேரத்துல ஜொள்ளுப்பாண்டி அண்ணன்கிட்ட டிப்ஸ் கேட்டு வாழ்க்கைல உருப்படற வழியைப் பார்க்கலாம். சிறு நகரமாகவோ கிராமமாகவோ இருந்தா மாடு மேய்க்க மேல ப்ரொசீட் பண்ணலாம்.

இப்ப மாட்டை நாம தேர்ந்தெடுக்கனும். பால் வியாபாரம் செய்யறதுன்னாலும் வறட்டி பிசினஸ் செய்யறதுனாலும் எருமை மாடு தான் பெஸ்ட். எருமை பால் தான் கொஞ்சம் கெட்டியா இருக்கும். பால்ல நிறைய தண்ணி கலக்கலாம். அதே நேரம் நிறைய சாணியும் போடும். பசு மாடுன்னா நம்மாள நிறைய தண்ணி கலக்க முடியாது. அவ்வளவுதான். வறட்டி பிசினஸ் அதே அளவுல தான் இருக்கும்.

இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு மெயின் டாபிக்குக்கு போகலாம். காலைல எழுந்ததும் மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு உங்க வயித்துக்கும் கொஞ்சம் ஏதாவது காட்டிட்டு மாட்டை ஓட்டிட்டு கிளம்பனும். கிளம்பும்போது அத்தியாவசமான பொருட்கள் எல்லாம் எடுத்து வச்சுக்கனும். ஒரு செக்லிஸ்ட் வேணும்னா கூட தயார் பண்ணிக்குங்க. மாட்டைக் கட்ட கயிறு, அந்த கயித்தைக் கட்ட ஒரு குச்சி, கொறிக்கறதுக்கு எதுனா எடுத்துக்கலாம். அப்படி இல்லைனாலும் பிரச்சனை இல்ல. கடலை விதைச்சிருக்க புஞ்சை பக்கமா மேய்க்க போயிடலாம். நிலத்துக்கு சொந்தக்காரன் பார்க்காத நேரத்துல ஒரு கொத்து செடியைப் புடுங்கி மடியில கட்டிக்கிட்டா அன்னைக்கு கொறிக்க ஆச்சு. சாப்பாட்டுக்கு வீட்டுக்கு திரும்பி வரதுன்னா பிரச்சனை இல்ல. சாயங்காலம் வரைக்கும் மேய்க்கனும்னா சாப்பாடும் கொண்டுபோயிடனும்.

மாட்டை ஒரு தரிசு நிலத்துலயோ அறுவடை ஆகி முடிஞ்ச நிலத்துலயோ குச்சியை அடிச்சு கட்டி மேய விட்டுடனும். போட்டி நிறைய இருந்தா ஏரியா பிரிச்சுக்குங்க. அந்தளவு மட்டும் கயிறை விட்டு மாட்டைக் கட்டுங்க. ஏன்னா எந்த வேலை செஞ்சாலும் நாம கே.டி.குஞ்சுமோனா தான் இருக்கனும். மாட்டைக் கட்டும்போது பக்கத்துல முள்காடு எதுவும் இல்லாம பார்த்துக்கனும். இல்லனா மாடு உள்ள போய் சிக்கி நம்ம உயிரை வாங்கிடும். அதை வெளிய இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம கைகாலெல்லாம் அக்குபஞ்சர் ஆகிடும். அதே மாதிரி பக்கத்துல எவனாவது பயிர் வச்சிருந்தா அந்த பக்கம் நம்ம மாடு போகாம பார்த்துக்கனும். இல்லைனா பஞ்சாயத்து ஆகிடும். நமக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனை. அதுல இது வேற எதுக்கு?

மாடு அதுபாட்டுக்கு மேய்ஞ்சுட்டு கிடக்கும். நாம அந்த கேப்புல நிறைய வேலை பார்க்கலாம். பம்ப் செட்ல படுத்து தூங்கிடலாம். அப்படி தூக்கம் வரலைனா மாட்டுக்கு வைக்க புல் புடுங்கலாம். ரெண்டு மூனு பேரா செட் சேர்ந்துட்டா மரத்தடில உட்கார்ந்துட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடலாம். ஓடிப்போன முருகேசன் சம்சாரத்தைப் பத்தி பேசலாம். கேப்டன் கட்சியைப் பத்தி பேசலாம். பஞ்சாயத்து தலைவர் ரோடு காண்டிராக்ட்ல பணம் அடிக்கறதைப் பத்தி பேசலாம். அமெரிக்க போன கோடிவீட்டு குப்புசாமியோட ரெண்டாவது புள்ளையைப் பத்தி பேசலாம். அடுத்த மாசம் மெட்ராஸ் போறதுக்கு இப்பவே ப்ளான் போடலாம். துரைசாமி கல்யாணத்துக்கு மொய் எவ்வளவு வைக்கலாம்னு கூடிப்பேசி முடிவு பண்ணலாம். இப்படி ஏதாவது பேசியோ தூங்கியோதான் பொழுதைக் கழிக்கனும்.

பொழுது சாய்ஞ்சதும் மாட்டை ஓட்டிக்கிட்டு வீட்டைப் பார்த்து நடக்கனும். வறட்டி பிசினஸ்ல நீங்க ரொம்ப சீரியசா இருந்தா ஒரு கூடைல நம்ம மாடு நிலத்துல போட்ட சாணியெல்லாம் அள்ளிட்டு வரலாம். மாட்டைக் கொட்டாயில கட்டிட்டு ஒரு குளியலைப் போட்டுட்டு மாட்டுக்கு தண்ணி காட்டனும். தவிடு புண்ணாக்கெல்லாம் போட்டா பால் நல்லா கறக்கும். மாட்டுக்கு தண்ணி காட்டினதும் அதுக்கு வைக்கோலோ புல்லோ போட்டுட்டு நம்ம கட்டையை சாய்க்க வேண்டியதுதான்.

இதே நீங்க ஒரு நகரத்துல இருந்தா கொஞ்சம் பிரச்சனை. மாடு மேய்க்க இடம் அவ்வளவு சுலபமா கிடைக்காது. ஊருக்கு வெளியே ஏதாவது ஏரிக்கரை பக்கம் போகனும். அங்கயும் பட்டா இல்லாத நிலத்துல பக்காவா பங்களா கட்டி வச்சிருப்பானுங்க. அவங்க தொல்லை தாங்காது. நம்ம மாட்டுக்கு அரிப்பெடுத்து அவங்க வீட்டு சுவத்துல உரசினா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுங்க. அதனால மாட்டை அந்த மாதிரி ஆளுங்க வீடு பக்கம் போகாம பார்த்துக்கனும்.

டவுண்ல இன்னொரு பிரச்சனை, நம்ம மாடு போஸ்டர், பேப்பர் எல்லாத்தையும் விரும்பி சாப்பிடும். ஆனா நாம விடக்கூடாது. பால் அளவு குறைஞ்சுடும். சாணியும் கம்மியா போயிடும். வறட்டி பிசினஸ் டவுன் ஆயிடும். அப்படியே போஸ்டரை சாப்பிட விட்டாலும் அரசியல் கட்சி போஸ்டரை சாப்பிட விடாதீங்க. ஜீரணம் ஆகாது.

டவுண்ல இன்னொரு பிரச்ச்னை டிராபிக். ரோட்டுல மாடு போகவே இடம் இருக்காது. பின்னாடி லாரி பஸ்காரன்லாம் வந்து ஹாரன் அடிச்சுட்டிருப்பாங்க. அதையெல்லாம் கண்டுக்காம நாம மாடு போற வேகத்துல போகட்டும்னு விட்டுடனும். உணர்ச்சிவசப்படக் கூடாது. பட்டாலும் பெரிய எஃபெக்ட் இருக்காது.

மாடு மேய்க்க அடிப்படையா இவ்வளவு தெரிஞ்சா போதும். மத்த விஷயமெல்லாம் போகப்போக அனுபவ அறிவுல கத்துக்கனும். நல்ல முறையில மாடு வளர்த்து பால் கறந்து கோ-ஆப்பரேடிவ் சொசைட்டில அதை வித்து, வறட்டி தட்டி பிசினஸை டெவலப் பண்ணி எல்லோரும் அண்ணாமலை படத்துல தலைவர் ரேஞ்சுக்கு வளர வாழ்த்துக்கள் :)

Thursday, March 15, 2007

கவுண்டர் Devil Show - ஜொள்ளுப்பாண்டிகவுண்டர்:- "ஏண்டா கோமுட்டி தலையா சும்மா ஒன்னையே மிதிக்கிறதுக்கு பதிலா சங்கத்திலே திரியறய்வங்களுக்கு ஆப்பு அடிக்கலாமின்னு வந்தா ஒரு பயலுகளையும் காணோம், எல்லா பேரும் வீராசாமியண்ணே நடத்துற அரட்டை அரங்கத்தை வேடிக்கை பார்க்க போயிருப்பாங்களோ?"

கோமுட்டி தலையன்:- "அண்ணே அந்தளவுக்கெல்லாம் அவங்களுக்கு சத்து பத்தாதுண்ணே, லேசா யாராவது சவுண்ட் விட்டாலே பயந்து பம்மிருவாய்ங்கே? வீராசாமிண்ணே பத்தாயிரம் வாட்ஸ்'லே அவரு மட்டுமே மைக் பிடிச்சிட்டு பேசுறாரு, இவிய்ங்கே அந்த சவுண்ட்'க்கே விழுந்துருவானுக...! அண்ணே அங்கே பாருங்கண்ணே! சங்கத்து குடிசையை பார்த்து ஒருத்தன் வாறான், அதிலே பேக்கிரவுண்ட் மிசிக்கெல்லாம் கேட்கிது, அனேகமா ஜொள்ளாதான் இருக்கும், நான் கிளம்புறேன்"

க: "ஏலே கரிச்சட்டி மண்டையா, அவன் வந்ததும் நீ ஏண்டா ஓடுறே? சங்கத்து பயலுகளுக்கு இவனுக்கு ஏதோ இருக்கு? தூரத்திலே ஒருத்தன் தொப்பின்னு சொல்லிட்டு என்னத்தயோ கவுத்துட்டு வாறான், வாடா, வாடா??"

ஜொள்ளு: "அண்ணே என்னாண்ணே நான் உள்ளே வர்றப்போ பெரிய பெரிய அடைமொழியெல்லாம் சொல்லி வரவேற்கன்னு கோமுட்டியண்ணே'கிட்டே சொல்லிருந்தேனே?"

க:"அதானே பார்த்தேன், அதுதான் ஒன்னை பார்த்ததும் கோமுட்டி மண்டையன் ஓடிட்டானா? ஏண்டா அரைடவுசர் மண்டையா? இந்த அட்டு விளம்பரமெல்லாம் தேவைதானா ஒனக்கு?"

ஜொ:"இந்த காலத்திலே பூக்கடைக்கும் வெளம்பரம் வேணுமிண்ணே"

க:"ஒன்னோட மொகரகட்டைக்கு பழமொழி வேறயா? ஒன்னோட மண்டையிலே கவுத்து போட்டுருக்க அந்த கூடையை எடுக்கமாட்டியா நீ?"

ஜொ: "என்னோட அழகை பார்த்து நீங்க மயங்கி விழுந்துட்டா அப்புறம் என்ன பண்ணுறது?"

க: "அப்போ நீ நம்ம கோமுட்டி தலையன் மாதிரி அழகா தான் இருப்பே? முஞ்சியே காட்டுறேன்னு சொல்லி என்னை பயமுருந்திராதே?? ஊரெல்லாம் ஒன்னையே தேடி கடைசியிலே பொம்பளை பிள்ளைக காலேஜ் பக்கமா கூட திரிஞ்சிட்டு இருந்தோம்? நீ இங்கிட்டு வந்திருக்கே?"

ஜொ: "அண்ணே எல்லா நேரமும் முழுநேர வேலையே பார்த்துட்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் சேஞ்சு வேணுமில்லே அதுதான் காத்து வாங்கலாமின்னு சங்கம் பக்கம் வந்தேன்"

க:"ஆமாம் இவரு பெரிய நெத்தி வேர்வை நெலத்திலே விழறமாதிரி உழைச்சிட்டாரு? சேஞ்ச் வேணுமாம் சேஞ்ச்? பெர்முடாஸ் மண்டையா? ஏண்டா ஜொள்ளுப்பாண்டி'ன்னு பேரு வைச்சிக்கிட்டே?"

ஜொ: "அண்ணே! அது நானா வைச்சிக்கிட்டே பேரு இல்லிங்கண்ணா? அது மக்களா எனக்கு கொடுத்த பட்டமிண்ணா? அது நான் செய்யும் சமுதாயபணிக்கு மக்களா கொடுத்த வெகுமதியா நினைச்சு ஏத்துக்கிட்டேன்"

க:" ஆமாம் இவரு பெரிய சமுதாயகாவலரு? டேய் கூடைமண்டையா! நீ பண்ணுறது சேவையாடா? வார்த்தையை கேட்டா ஜீரணிக்கிறமாதிரி பேசுங்கடா"

ஜொ: "கிரேட் இன்சல்ட்! அண்ணே வேற கேள்வி கேளுங்கண்ணே?"

க:" ஏண்டா மண்டையா ஃபீல்'ஆ பண்ணுறே? பாவம்'டா அந்த ஃபீல், அதை விட்டுறா? ஆராய்ச்சியெல்லாம் பண்ணுறேன்னு சொல்லிட்டு நாலஞ்சு கட்டுரையெல்லாம் போட்டுருக்கீயே? அதை சப்மிட் பண்ணி லண்டன் யூனிவர்சிட்டியிலே டாக்டரு பட்டமா வாங்கப்போறே?"

ஜொ:"அண்ணே என்ன இப்பிடி கேட்டுபிட்டியேளே? நான் ஆராய்ச்சி பண்ணி போட்டதுக்கு மக்களே எனக்கு டாக்டரு பட்டம் குடுத்துட்டாங்க.. எதுக்கு லண்டன் யுனிவர்சிட்டியெல்லாம்? நான் வரைஞ்ச கட்டை சில குறிப்புங்கிறே பதிவுக்காக அமெரிக்கன் யூனிவர்சிட்டியிலே கெளரவடாக்டர் பட்டம் குடுக்கவந்தாங்க! நாந்தான் ஓவரு விளம்பரமெல்லாம் ஒடம்புக்கு ஆவாதுன்னு வேணாமின்னு சொல்லிட்டேன்!"

க: "அடேய் தண்ணிக்குள்ளே முக்கியெடுத்த பஞ்சுமிட்டாயி மண்டையா! பொய் சொன்னாலும் பொருந்துறமாதிரி சொல்லு? அது என்னாடா எல்லா பித்தளைகாரங்களுக்கு வாறத சந்தேகம் ஒனக்கு எப்பிடி வந்துச்சு, அதிலே எதுக்காவது உருப்படியா பதில் கிடைச்சதா?"

ஜொ: "அண்ணே! அது கோடிக்கணக்கான ஆம்பிளைச் சிங்கங்கள் மனசிலே இருந்துச்சு, அதை நான் எல்லாருக்கும் பொதுவா இருந்து கேள்விகணைகளை தொடுத்து பார்த்தேன்?"

க:"அடேய் கிபோர்ட் மண்டையா? கிணத்துக்குள்ளே கல்லை தூக்கிப்போட்டுந்தேன்னா ஒரு சொட்டு தண்ணியாவது ஒன்னோட முஞ்சிலே தெரிச்சிருக்கும், ஆனா நீ கேட்ட கேள்விக்கு ஒன்னாவது விடை கிடைச்சதா? அதுக்கு பதிலா ஒன்னாருவா ஆமவடையை வாங்கி தின்னுட்டு போயிருக்கலாமில்லே நீ?

ஜொ: "அண்ணே அதுக்கு நானெல்லாம் அசந்தேனா? ஆபாசத்துக்கும் கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசத்தை பத்தி ஆராய்ச்சிப் பண்ணினதுக்காக இந்தியாவிலே இருக்கிற யூனிவர்சிட்டியிலே டாக்டரு பட்டம் குடுக்கவந்தாங்க! வழக்கம்போலே நாந்தான் வேணாமின்னு சொல்லிட்டேன்!"

க: அடேயே போதுமிடா, அத்து தொங்குதுடா, விட்டுறுடா அந்த இத்து போன ரீல்சுத்துற வேலையே! ஏண்டா ஆட்டுக்கல் மண்டையா அஞ்சரைக்குள்ளே வண்டின்னு ஒன்னு எழுதுனேயே? அந்த தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருந்துச்சா'ன்னு சொல்லு, ஏண்டா இப்பிடியெல்லாம் கலவரமா தலைப்பை போட்டு படிக்க ஓடிவர வைச்சிட்டு ஏமாத்திறீங்க?

ஜொ:"அண்ணே! நான் படத்தோட கதையே சொல்லிருந்தை விட நான் படம் பார்க்க போன கதைதானே நல்லா இருத்துச்சு, இம்புட்டு ஞாபகமா வச்சு எப்பிடிண்ணே கேள்வியெல்லாம் கேட்கிறீங்க? ஒங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கிதுண்ணே?

க: "ஏண்டா அதை தேடி படிச்சு நீ எங்கயோ அடி வாங்கினதை எழுதி வைச்சிருந்தை பார்த்ததும் ஒன்னையே நேரா பார்த்தா தூக்கி போட்டு பந்தாடலமின்னுதான் இருந்தேன்..? ஆனா நீ போட்ட நாட்டுக்கட்டை ஆராய்ச்சி கட்டுரை நல்லா இருத்துச்சுடா ஜொள்ளுமண்டையா? ஆனா எப்பிடிரா நாளைக்கோ நாளைன்னக்கோ வேணுமின்னு நினைச்சு கூட பார்க்கமே ஜொள்ளு விட்டுக்கிட்டே இருக்கே?"

ஜொ: "அண்ணே இதைதான் ஜொள்ளானந்தா ஜொள்ளு விடறவன் எல்லாம் கெட்டவனும் இல்லை ஜொள்ளு விடாதவன் எல்லாம் நல்லவனும் இல்லை'ன்னு ஜொள்ளீருக்காரு, அவரு ஜொள்ளுரையை பின்பற்றுபவன் நானு "

க:"பின்பற்றுபவன்,ஊக்குபற்றுவன்னு ஏதாவது உளறுனே அப்பிடியே வந்து காதை கடிச்சிபிடுவேன், ஏண்டா வேகாத முட்டை மண்டையா? அடிபட்டு உங்கப்பா ஆஸ்பத்திரில படுத்து கெடந்தாருன்னு சொன்ன, அந்த நேரத்துலகூட நர்ச சைட் அடிக்கறயே நீயெல்லாம் என்னாதாண்டா நினைச்சிட்டு இருக்கே?

ஜொ:"அண்ணே ஒரு கடமைவீரனுக்கு அவனோட கடமைதானே முக்கியம்! எந்தவொரு நெருக்கடியிலும் தன்னோட கடமையிலிருந்தும் கடுகளவு கூட தடம் மாறக்கூடாதுன்னு பெரியவங்க சொல்ல கேட்டுருக்கேண்ணே? அதுதான்"

க: "இஞ்சி இடுப்புன்னா என்னான்னு தெரிஞ்சு என்னந்தான் பண்ணப்போறே நீயி? ஏதோ பாட்டு எழுதன ஆளு ஒரு எதுகைமோனைக்கு எழுதினா அதை வைச்சி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு திரியுறே? ஏண்டா குட்டிச்சுவரா போனவனே , குட்டி குட்டி'ன்னு நூறு மொறை சொல்லிட்டு நாய்க்குட்டிய சொன்னேன்னு பசப்பினலே, உண்மைலயே நாய்க்குட்டியதான் சொன்னியா?"

ஜொ: "அண்ணே! அது நாயி இல்லிங்கண்ணா! பூனைங்கண்ணா!"

க:"ஆமாம் ரொம்பமுக்கியம், ஒன்னையெல்லாம் ஒரேநேரத்திலே எல்லாம் பேட்டியெடுக்க முடியாது போலே? இப்போ மணி நாலாக போவுது! இந்நேரம் காலேஜ்'லாம் விட்டு கிளியா வெளியா பறக்க ஆரம்பிச்சிருக்கும், போயி ஒன்னோட கடமையை ஆற்றிட்டு வா? நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு டீக்கடையிலே ஆத்துறமாதிரி ஒன்ன ஆத்துறேன் அப்புறமா?"

கவுண்டர் பிரேக் விட்டதும் பாண்டி வில்லிருந்து புறப்படும் அம்பென தன் களப்பணியாற்ற கிளம்புகிறார்......

ஏலேய் கழுகு ராஸ்கோலு...

கடும் கடுப்புடன் கைப்புள்ள சங்கத்து திண்ணையில் ஏறி நின்று எட்டப் பார்த்துக் கொண்டிருந்தார்..

ஒரு பயலைக் காணும்.. அம்புட்டு பயலும் பாண்டி பொறந்த நாளுக்கு பீரும் கறி சோறும் தின்னுபுட்டு சேறும் சக்தியுமா எங்கிட்டுப் படுத்துக் கிடக்கானவளோ... என் கைப்பொண்ணு என்னைக் கைவிட்ட நாள்ங்கற ஒரே காரணத்துக்காக நேத்து தான் விருந்துக்குப் போகல்ல.. தலயாச்சே ஒத்த கிளாஸ்ல்ல ஒரு நாலு மடக்கு.. ஒரு நாலு லெக் பீசு.ன்னு பார்சலாவது போட்டு அனுப்பியிருக்கலாம்..

விளக்குமாத்துக் கூட்டத்துக்குத் தலயா வாழுறதை விட எங்கனயாவது பெருக்குமாறா வாழ்ந்து இருக்க இடத்தைச் சுத்தம் பண்ணலாம்ய்யா...

"ஏலேய் தேவ்.. இங்கண வா.. "

நான் பம்மி கைகட்டி நிக்க...தல என்னைச் சுத்தி வந்து பாத்தார்.

"நேத்து பலமான சரக்கோ... நல்ல தீனியா... தொண்டைக் குழி வரைக்கும் தின்னுருப்பப் போலிருக்கு. வாயைத் திறந்தா ஏப்பம் வந்துரும்ன்னு வாய்க்கு ஜீப் வச்சா மாதிரியே நிக்குற... நல்லாயில்ல.."

நான் எதுவும் பேசவில்லை...தலையைக் குனிஞ்சுகிட்டேன்..

"ஏன்டா..எனக்கு சங்கம் வைக்க சப்பான்ல்ல சாக்கிசான் மச்சினிச்சி வந்தப்போ வேணாம்ன்னு சொன்னேன்... அமெரிக்காவில்ல மைக்கேல் ஜாக்சன் கேர்ள் பிரண்ட் கேட்டப்போ நோன்னு சொன்னேன்.. லண்டன்ல்ல பாப் பாடுமே அந்தப் பிள்ள.. ஆங் பேர் கூட பட்டாணி பியர்ஸ்...

"தல அது பிரிட்டனி ஸ்பீயர்ஸ்"

"எதோ ஒண்ணு.. வருத்தமாப் பேசிகிட்டு இருக்கேன் திருத்தமாச் சொல்லுர நீயு.. மொகத்துல்லயே குத்திப் புடுவேன்... அந்தப் பிள்ளயப் பெத்த ஆன்ட்டி வந்து சங்கம் வைக்கிறேன்ன்னு ஸ்மைல் விட்டப்போக் கூட நான் சிலிப் ஆகல்லயே.. உனக்குத் தானே அந்த வாய்ப்பைக் கொடுத்தேன்.. இப்படி எனக்குத் துரோகம் பண்ணிட்டு வந்து நிக்குறீயே நல்லாயிருக்கா?"

"நான் என்ன தல பண்ணேன்...."

"பேசாதே நீ பெயிண்ட் அடிச்சு விட்ருவேன் உனக்கு.. ஆமாச் சொல்லு கத்தி பாத்திறுக்கீயா நீயு..."

"உங்களுக்கு தேவைப்பட்டா நறுக்க சங்கம் செலவுல்ல வாங்குனோமே அது தானே?"

"என்னது என்னிய நறுக்கவா? இது வேறவா?"

"அய்யோ தல ஆப்பிள்.. கொய்யான்னு உங்களுக்குத் தேவைப்பட்டா பழ்ம நறுக்கன்னு சொல்ல வந்தேன்.."

"சொல்ல வந்தாச் சொல்லணும்ய்யா வென்று... சொல்லாமா இருந்தா என்ன அர்த்தம்.. ஆமா கத்தியேப் பழம் நறுக்கப் பாத்து இருக்க நீயு... போருக்கு போயிருக்கீயா நீயு.."

"இல்ல தல"

" அப்புறம் உனக்கு போர்வாள்ன்னு பேரு வேற... எப்படி வந்துச்சு அந்தப் பெயர்?"

"எல்லாம் நீங்களும் சங்கமும் கொடுத்தது தல"

"வார்ததையிலே வெல்வேட் ஷாம்பூ வழிஞ்சாப் போதாது... மனசுல்ல இருக்கணும்.. மனசுல்ல இருக்கணும்ய்யா"

"இப்போ என்னத் தல ஆச்சி.. ஏன் இவ்வளவு டென்சன்...?"

"ப்ங்சனுக்கு என்னியக் கூப்பிட்டாங்களாய்டா.. டென்சன்னு மட்டும் சொல்லுங்கடா.. நேத்து அம்புட்டு பயலும் குடியும் கூத்துமா இருந்து இருக்கீய,....ஊரைச் சுத்திப் பாக்க வந்த வெளிநாட்டுப் புள்ளக இடுப்பைப் புடிச்சுகிட்டு டான் ஸ் எல்லாம் ஆடியிருக்கீங்க... என்னையக் கூப்பிடணும்ன்னு தோண்ல்ல உஙக்ளுக்கு" தலக் கண் கலங்க ஆரம்பித்தது..

" தல அப்படி டான் ஸ் எல்லாம் எதுவும் நடக்கல்ல... நம்ம பயல்வ ஆளுக்கு ஒரு பக்கம் ஆபிஸ்ல்ல ஆணி புடுங்குனதுல்லயே குவார்ட்டரை ஒரே கல்புல்ல குப்புற கவுத்த மாதிரி கவுந்து தான் விருந்துக்கே வந்தாயங்க... இதுல்ல டான் ஸ் எல்லாம் டூ மச்.. "

"பேப்பர்ல்ல போட்டோவோட போட்டிருக்கானேப்பா.. நம்ம டவுசர் பாண்டி சொன்னானே"

"டவுசர் பாண்டி நேத்து நாலு ரவுண்ட் பிரியாணி தின்னுப்புட்டு இன்னும் கொஞ்சம் பிரியாணி போடுங்கய்யான்னு பண்ண அலம்பல் தாங்கமா.. நம்ம ராயல் பிரியா ஆணி தானேடா வேணும்ன்னு அவன் உக்கார இடத்திலே நாலு ஆணியை எடுத்து வச்சுட்டான்.. பின்னாலே பாதிக்கப்பட்ட டவுசர் பாண்டி.. உங்க கிட்டத் தப்பா வத்தி வச்சிருக்கான்ய்யா"

"பாண்டி பொறந்த நாளுக்கு உன் கச்சேரியிலே பெரிய வெளம்பரம் எல்லாம் வச்சியே என பொறந்த நாள் என்னிக்குன்னு உனக்குத் தெரியுமாடா..பாண்டி பிகரை இன்ட்ரோ பண்ணுவான் பிக் அப் ஆயிரலாம்ன்னு கணக்குப் போட்டுத் தான் நீ இப்படி செஞசு இருக்கீயாம்... இளா குறுஞ்செயதி அனுப்பி உன் குட்டை உடைச்சுட்டார்ல்லே..."

"ஆகா பாசத்துல்ல பண்ண பலகாரத்தை இப்படி பரிகாசம் பண்ணலாமா தல... நம்ம புலிக்குட்டி பொறந்த நாளுக்குக் கூடத் தான் நான் வெளம்ப்ரம் வச்சேன் அதையும் விவகாரம் ஆக்கிருவீங்கப் போலிருக்கே"

"அந்தச் சண்டாளனைப் பத்தி பேசாதே.. அவனைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்..சூடான்னுக்கு போனப் பொறவு அவன் பிரெயின் குடோன் தப்பா வேலைச் செய்யுது..."

"தல அவன் நம்ம பய தல.. ஏன் இந்தக் கொலவெறி.."

"பேசாதே... அவன் பண்ணக் காரியத்துக்கு அவனை..."

"அப்படி என்னப் பண்ணான் தல....நாகையின் அடுத்த ச.ம.உ நான் தான் சொல்லிட்டானா? அது சும்மா அவிங்க ஊர் சின்னப் புள்ளகலைக் க்ரெக்ட பண்ண அவன் போடுற பிட் அதைப் போய் பெரிசா எடுத்துகிட்டு.. விடு தல..."

" ம்ஹூம் நீங்க ஒரு பயலும் சரியில்ல... அவன் அவன் தனக்குத் தானே சுய வெளம்பரம் செஞ்சுகிட்டு திரியுறீங்க.... "

"சங்கத்தைப் பத்தி அந்த கழுகு எழுதுனதுல்ல டென்சன் ஆகிட்டாங்களா தல..."

ஒரு வழியாத் தலயின் கோவத்துக்கான காரணத்தை நான் கண்டுபிடிக்க...தல மெல்ல கனைத்தார்..

"முன்னாடி சாம்புன்னு ஒரு குரூப் கிசுகிசுப் போட்டாயங்க.. அவிங்களும் சங்கம் பத்தி எழுதுனாயங்க பொறுத்துகிட்டேன்.. இப்போ இந்த கழுகும் கன்னாபின்னான்னு எழுதுது.. என்னாலே பொறுக்க முடியாது.. சங்கத்துப் பயலுக நீங்க எதாவது செய்வீங்கன்னு நான் சும்மா இருந்தா நீங்க என்னன்னா பிரச்சனையை விட்டுட்டு அவனுக்குப் பொறந்த நாள்.. இவனுக்கு கல்யாண நாள்... டெவிலுக்கு ஷோக் காட்டுறோம்ன்னு சல்லித் தனமாத் திரியுறீங்க.. அதான் நானே களத்துல்ல இறங்கிறதா முடிவு பண்ணிட்டேன்...."

" சொல்லுங்க தல என்னப் பண்ணனும்..."மொத்த சங்கமும் தல முன்னால் தீடிரென ஆஜராகி கைக் கட்டி நின்னோம்.

சங்கத் திண்ணையில் ஏறி நின்ன தல.. வானத்தைப் பார்த்தார்.. அங்கே சிறிசும் பெருசுமா வட்டமிட்ட கழுகை கைத் தட்டிக் கூப்பிட்டார். அவை தலயைக் கண்டு கொள்ளாமல் தன் ரவுண்ட்ஸில் கவனமாக் இருக்க தலக்கு அசிங்கமாப் போனது.. அதை அவர் வெளியே காட்டாமல் ( எப்போக் காடியிருக்கார்)

ம்ம்ம்.. நல்லாக் கேளுங்க...
ஏ! கழுகு ராஸ்கோல் உனக்கும் தான்...
உன் பதிவுல்ல என்னையப் பத்தியும் கிசு கிசு வரணும்..

நான் அகமதாபாளையத்துல்ல ரெண்டு சேட்டு வீட்டு புள்ளகளை உஷார் பண்ணி செட்டில் ஆயிட்டேன்..

இல்ல இந்த நமீதா புள்ளக்கு அகமதாபாளையம் பக்கத்து ஊர் தானமே.. அந்தப் புள்ளக்கும் எனக்கும் லவ்ஸ்..

சிம்புவைப் பிரிஞ்ச நயந்தாரா இப்போ என் ஓதட்டைக் கடிச்சு போஸ் கொடுக்கணும்ன்னு அடம் பிடிக்குது இப்படி எது வேணுமோ எழுது... ஆனா எழுதணூம்...
"

"இந்தக் கிசுகிசுல்ல பேர் வரமா ஒரு பய மதிக்கமாடேன்கிறான்..."ஒரு விதக் கெத்துடன் எங்களைப் பாக்க....

"இதெல்லாம் ஒரு பொழப்பான்னு " நாங்க அவருக்கு லுக் விட

வழக்கமானப் பாணியில் வழி விடு வழி விடு தலக்கு நிறைய வேலை இருக்கு.. பேக்கு மாதிரி பராக்கு பாக்காமப் போய் வாங்குற சம்பளத்துக்கும் போனஸ்க்கு ஒழுங்கா ஆணி புடுங்குடா அப்ரசெட்டுக்களான்னு கிளம்பி போயிட்டார்...

சினிமா! சினிமா!!

சிறுவயதில் சினிமாவிற்கு செல்வது என்பது எப்போதாவது நிறைவேற்றப்படும் ஆசை. தலைவர் படத்திற்கு மட்டும் அழுது அடம்பிடித்து செல்ல வேண்டும். இல்லையெனில் ஊரிலிருந்து வரும் அத்தை மாமாக்களுக்காகக் காத்திருக்க வேண்டும். காலப்போக்கில் வீட்டில் நம்மை கைகழுவி விட்டதும் திரையரங்கு இன்னொரு மைதானமாகிவிட்டது.

வடபழனியில் தங்கியிருந்தபோது சுற்றுவட்டாரத்தில் நிறைய திரையரங்குகள். கமலா, பங்கஜம், உதயம், காசி, அன்னை கருமாரி காம்ப்ளெக்ஸ், விஜயா, நேஷனல் என ஏதாவது ஒரு தியேட்டரில் நாங்கள் பார்க்காத படம் ஓடிக்கொண்டிருக்கும். வாரத்திற்கு ஏழு நாட்களும் நைட் ஷோ பார்த்த நாட்களுமுண்டு. சில சமயங்களில் ஒரு புது திரைப்படத்தைத் தியேட்டரில் பார்ப்பது என்பது பொழுதுபோக்காக இல்லாமல் கடமையாக மாறிவிடுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது அனைத்து படங்களும் விடுதி மைதானத்திற்கே வந்துவிடும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மைதானத்தில் திரை கட்டி சிடியில் திரைப்படங்கள் திரையிடுவோம். அது மட்டுமில்லாமல் எந்த குப்பை படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்ப்போம். 'இந்த படம் ரொம்ப கேவலமா இருக்குப்பா. திரும்ப போயிடுங்க' என கவுண்ட்டரில் டிக்கெட் விற்பவரே சொல்வதும் நடந்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படங்களில் குறிப்பாக இரண்டு படங்கள் மறக்கமுடியாதவை [விடுதியிலிருந்து 40-50 பேர் மொத்தமாக சென்று ஆப்பு வாங்கிய சிட்டிசனை விட்டுவிடுவோம் ;)]. ஒன்று சாமி. மற்றொன்று சார்லீஸ் ஏஞ்சல்ஸ்.

ஒரு படத்தைப் பார்த்தோ பார்க்காமலோ கருத்து சொல்வதைப் போலவே நமக்குள் ஊறிய இன்னொரு விஷயம் யாராவது வழி கேட்டால் தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக கைகாட்டிவிடுவது. 'சாமி' திரைப்படம் மதுரை 'சிந்தாமணி' தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் ஆறு பேர் கிளம்பிச் சென்றோம். தியேட்டருக்கு குத்துமதிப்பாகத்தான் வழி தெரியும். சிம்மக்கல்லில் இறங்கியதும் நானும் இன்னொரு நண்பனும் வலப்பக்கம் திரும்பாமல் நேராக நடக்க ஆரம்பித்துவிட்டோம். பின்னால் வந்த ஒருவன் எங்களுக்கு வழி தெரியுமா எனக் கேட்டதற்கும் "நாங்கள்ல்லாம் மதுரயை கரைச்சு குடிச்சவய்ங்க. பேசாம வா மாப்ள"ன்னு லந்துவிட்டுக்கிட்டு நடக்க ஆரம்பித்தோம்.

என்ன மேட்டர்னா மதுரையில் மாசி வீதி, பங்குனி வீதின்னு எல்லாம் சுத்தி சுத்தி இருக்கும். நாங்க இன்னர் ரிங்ல நடக்கறதுக்கு பதில் அவுட்டர் ரிங்க்ல நடந்துட்டு இருக்கோம். இந்த மேட்டரே அரை ரவுண்ட் அடிச்சப்புறம் தான் தெரியுது. அப்படியும் முன்னாடி போயிட்டிருந்த நாங்க ரெண்டு பேரும் அசரல. கொஞ்சம் வேகமா நடந்து பசங்க கண்ணுல இருந்து மறைஞ்சு அவங்க பார்க்கறதுக்கு முன்ன வேற யார்கிட்டயாவது வழி கேட்டுடலாம்னு வேகமா நடந்தோம். ஒரு ஜிகர்தண்டா தள்ளுவண்டி கடைக்காரர்கிட்ட கேட்டா "சிந்தாமணி தியேட்டர் ஒரு கிலோமீட்டர் முன்னாடியே இருக்கே"ங்கறாரு.

இதை பசங்க கிட்ட சொல்ல முடியுமா? லெப்ட் ரைட்டுன்னு எடுத்து எப்படியாவது தியேட்டருக்கு போயிடலாம்னு நடந்தா மீனாட்சி அம்மன் கோயிலே வந்துடுச்சு. அங்கயிருந்து எப்படியோ தியேட்டரை கண்டுபுடிச்சு போனா டிக்கெட் வித்துமுடிச்சுட்டாங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து படம் பார்க்காம போறதான்னு ப்ளாக்ல வித்துட்டிருந்த ஒரு அண்ணாச்சிகிட்ட ஆறு டிக்கெட்டை வாங்கி உள்ள போனா வச்சாங்க பாருங்க ஒரு ஆப்பு. டிக்கெட் கிழிச்சு குடுக்கறவரு அப்படியே ஆறு பேரையும் வெளிய தள்ளிவிட்டார். கேட்டா அது போன ஷோவோட டிக்கெட்டாம். அலைஞ்சு திரிஞ்சு அல்லாடி வந்தா ப்ளாக்ல வாங்கின டிக்கெட்லயும் ஆப்பு.

மத்த பசங்க எல்லாம் என்னவோ எல்லாத்துக்கும் நாங்கதான் காரணம்னு எங்க ரெண்டு பேரையும் முறைக்கறாங்க. இதுக்காக ஃபீல் பண்ணா முடியுமா? ஒரு ரெண்டு மணி நேரம் அப்படியே மாசிவீதியில சுத்திட்டு ஒரு கடையில ரவுண்ட் கட்டி சாப்பிட்டு நைட் ஷோ அதே படத்தை அதே தியேட்டர்ல பார்த்துட்டு தான் வந்தோம். முன் வச்ச காலை பின் வைக்கலாமா? அப்புறம் தல டிரெயினிங்குக்கு என்ன மரியாதை?

இதே மாதிரி இன்னொரு முறை 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' படத்துக்கு ஒரு பத்து பேர் கிளம்பினோம். மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்ல. தியேட்டருக்குப் போய் பார்த்தா நாலு பசங்க பாக்கெட்ல பத்து பைசா இல்லாம வந்திருக்காங்க. கைல இருந்த காசையெல்லாம் போட்டு டிக்கெட்டை வாங்கி படத்தை நல்லா ஜாலியா பார்த்தோம். காமரூன் டியாஸ், ட்ரூ பேரிமூர், சப்பை மூக்கு லூசி லியூன்னு நல்லா கில்பான்ஸா இருந்துச்சு.

படம் முடிஞ்சு வெளிய வந்து திரும்பி போக பஸ்ஸுக்கு காசு இருக்கான்னு பார்த்தா ஆறு ரூபாய் குறையுது. இதுக்காக டிக்கெட் வாங்காமலா போக முடியும்? நோ. நெவர்.

ஆபத்பாந்த்தவனா ஒரு பையன் செமஸ்டர் முழுக்க தோய்க்காம இருந்த துணிகளை தோய்க்க நாலு பாக்கெட் சர்ஃப் பவுடர் வாங்கி வச்சிருந்தான். அதை கடைல குடுத்து காசு வாங்கிக்கலாம்னு பக்கத்துல இருந்த ஒரு கடைல "அண்ணே, நாங்க திருப்பரங்குன்றம் தியாகராஜா காலேஜ்ல படிக்கறோம். என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்க. பஸ்ஸுக்கு டிக்கெட் காசு கொஞ்சம் குறையுது. இந்த சர்ஃப் பாக்கெட்டை வச்சுக்கிட்டு அதுக்கான காசை குடுக்க முடியுமா?"ன்னு பம்மிட்டே கேட்டோம்.

அந்த நல்ல மனுசனும் நாலு சர்ஃப் பாக்கெட்டை வாங்கிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். மீதி குடுக்க "ரெண்டு ரூபாய் சேஞ்ச் இல்லையே"ன்னு கெத்தா சொன்னான் நம்ம கூட இருந்தவன். அவர் கேவலமா ஒரு லுக் விட்டுட்டு "பரவாயில்ல தம்பி. இருக்கட்டும்"ன்னு ரெண்டு ரூபாய் போட்டுக் குடுத்தார். அந்த காசை வச்சு அடிச்சுபுடிச்சு ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம்.

இதுமாதிரி தியேட்டர் அனுபவங்கள் நிறைய இருக்கு. ஒரு நண்பனை மூனு மணி நேரம் தியேட்டர் வாசல்ல காத்திருக்க வச்சுட்டு நான் ஆபிஸ்ல ஆப்பு வாங்கிட்டிருந்த கதையெல்லாம் இருக்கு.

இதை எழுதிட்டு இருக்கும்போது என் நண்பன் "ஏன்டா, ஓசில இடம் குடுக்கறாங்கன்னு இட்லிக்கு சட்னி வைக்காததைக் கூட எழுதிட்டு இருப்பியா?"ன்னு கேட்கறான். " என்னங்க பண்றது. பொது வாழ்க்கையில இறங்கிட்டப்புறம் எல்லா வித மொக்கையும் போட்டுத்தானே ஆகனும்? :)))

Tuesday, March 13, 2007

அந்தி சாயும் பொழுது!!!

இடம் : சங்க திண்ணை
நேரம் : அந்தி சாயந்த பொழுது

தேவ், இளா, சிபி மூவரும் பதுங்கி பதுங்கி கைப்புள்ளக்கிட்ட வருகின்றார்கள்.

என்னா, எல்லா பயலும் இப்படி பம்மிக்கிட்டு வரீங்க, என்னா மேட்டரு.

மணியாச்சு, வீட்டுக்கு போகனும் இது இளா

ஆரம்பிச்சாட்டான்யா, பொழுது சாய கூடாதே, 16 வயதினிலே கமல் மாதிரி மணியாச்சு வீட்டுக்கு போகனும், பொண்டாட்டி வையும் ஆரம்பித்து விடுவீங்களே........ சரி என்னத்த பண்ணுறது உங்க தலைவிதி அப்படி.... சரி போயிட்டு காலையில சீக்கிரம் வந்து சேருங்....... அட அதுக்குள்ள மறைஞ்சுட்டானுங்களே........... ஹும் பொண்டாட்டினா அம்புட்டு பயம் நம்ம பய புள்ளகளுக்கு......

யப்பா பாண்டி, வயிற்ற லேசா இல்ல இல்ல நல்லாவே பசிக்குது, கேரியர கொண்டா, இன்னிக்கு என்ன மெனு

ஆமாம் சரவணபவன்ல இருந்து நமக்கு கேரியர் வருது பாருங்க, என்ன மெனு னு ஒரு கேள்வி வேற - இது சிவா

நம்ம தலைவலி கீதாக்கா வழக்கம் போல தயிர் சாதமும் மாவடும் தான் அனுப்பி இருக்காங்க - பாண்டி ஒரு சலிப்புடன் சொல்ல

அந்த அம்மா தாயுள்ளத்துடன் நமக்கு வக்கனையா சமைச்சு அனுப்புவாங்கனு பாத்தா அதே தயிர் சாதம் தானா, சரி அதோட அந்த நெத்திலி கருவாட கொஞ்சம் எடுத்து வை அப்ப தான் அந்த தயிர் சாதம் உள்ள போகும்.

சிவா கருவாட்டுடன் வர பாண்டி, கைப்புள்ள, சிவா மூவரும் அந்த தயிர் சாதத்தையும் விடாமல் ஒரு வெட்டு வெட்டி முடிகின்றார்கள்.

ஆமாம் எங்க இந்த வெட்டிப்பயலயும், ராமையும் காணாம் என கைப்பு கேட்க
சாப்பிடுற வரைக்கு கேட்கல, எல்லாத்தையும் காலி பண்ணிட்டு கேட்பதை பாரு என்று முனவி கொண்டே, வெட்டி அவன் பிரிவுல ரொம்ப நல்லா ஆணி புடுங்குறதால அவன இனிமே கடப்பாரை புடுங்குற பிரிவுக்கு மாத்திட்டாங்க, அதான் கடப்பாரை புடுங்க பயற்சி எடுக்க போய் இருக்கான்.

அவன களப்பணி பாருடா என்றால் கடப்பாரை புடுங்குற பணியா பார்த்துக் கிட்டு இருக்கான், அவன அப்பால தனியா டீல் பண்ணுறேன், இந்த ராயல் பயலுக்கு என்னாச்சு?

நம்ம ஜாவா புலவர இந்த மாசம் நம்ம சார்பா அடி வாங்குறது கூட்டிக்கிட்டு வந்தோம்ல, அவரு வந்த உடனே ஒடி போயிட்டாப்புல, அதான் அவர தேத்தி ஒட்டிட்டு வர போயி இருக்கான்.

ஒ, அதானா. நாம எல்லாம் பொழுதன்னைக்கு அடி வாங்கிட்டு இருக்கோம், எதாச்சும் அசந்து இருக்கோமா என்ன? என்று சொல்லி கொண்டே கைப்பு உடம்பை ஒரு மாதிரியாக வளைத்து ஏலேய் பாண்டி அந்த கட்டிலை எடுத்து அப்படி வெளியில் போடுடா, உடம்பு ஒரு மாதிரி நோகா இருக்கு.........

ஆரம்பிச்சாட்டான்யா, இன்னிக்கும் நம்மள கை, காலு அமுக்க சொல்ல, இத தெரிஞ்சு தான் வெட்டி பய சாயங்காலம் ஆனா எதையாச்சும் சொல்லிட்டு ஒடி விடுகின்றான் போல என முனவி கொண்டே பாண்டி கட்டிலை கொண்டு வந்து போடுகின்றார்.

கட்டிலில் கைப்பு படுத்துக் கொள்ள சிவாவும், பாண்டியும் ஆளுக்கு ஒரு புறம் அமர்ந்து கைப்பூவின் கை கால்களை அமுக்குகின்றார்கள்.

ஏன் தல, சூரியன் சாய்ந்தா போதும் இந்த இளா, சிபி, தேவ் இந்த மூனு பெயரும் ஒடி விடுகின்றார்களே., நீ ஒன்னும் தெரியாத அப்பிராணிகளான என்ன, சிவா, வெட்டிபய, ராயல் னு போட்டு படுத்தி எடுக்குற. இது நியாயமா.........

அடே பாண்டி, அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆச்சுடா, நம்மள மாதிரி வெட்டி பசங்களா அவங்க, அவங்களுக்கு குடும்பம் ஒன்னு இருக்குல, அதான் சாயங்காலம் ஆனா உடனே போயிடுறாங்க கைப்பு சமாதானம் படுத்த முயல்கின்றார்.

அப்ப நமக்கும் அது போல குடும்பம்(!!!) எல்லாம் எப்ப வரும் பாண்டி ஆர்வப்பட...

பாண்டி வேணாம், நீ ஏதுக்கோ அடி போடுற, அந்த மேட்டர இப்ப ஆரம்பிக்காத, எனக்கு தூக்கம் வருது. ஒரு நல்ல பாட்டா பாடு என கைப்பு சொல்கிறார்.

என்ன பாட்டு பாட என பாண்டி விழிக்க

அம்மா பாட்டு தான் என கைப்பு சிம்ம குரல் எழுப்ப முயல

சிவா இடையில் புகுந்து வேணாம் அவரு மாதிரி வாய்ஸ் குடுக்க முயற்சி பண்ணி அவர அசிங்கப்படுத்தாத விட்டுடூ... ஏலேய் பாண்டி எதாச்சும் ஒரு பாட்ட பாடி தொல.......

"ராத்திரி நேரத்து பூங்குயில்" என பாண்டி ஆரம்பிக்க

கைப்பு அலறிக்கிட்டே ஏய் இந்த பாட்டு எதுக்குடா இப்ப பாடுற, இது வேணாம் வேற எதாச்சும் ஒரு பாட்ட பாடு என சொல்ல

"நேத்து ராத்திரி" என மறுபடியும் பாண்டி தொடங்க

நிறுத்து.....நீ பாட்டே பாட வேண்டாம், நீ பாட ஆரம்பிச்சா வில்லங்கம் ஆயிடும் போல இருக்கு, யப்பா சிவா நீ எதாச்சும் ஒரு நல்ல தாலாட்டு பாட்டா பாடு. இந்த பாண்டி பய என்ன இன்னிக்கு அழு வைப்பதிலே குறியா இருக்கான் என கைப்பு சொல்கின்றார்.

அக்கஹ அக்கஹ என சிவா இறுமி காட்டி பாட ஆயுத்தமாக

பாண்டி இந்த சத்தத்தை கேட்டு ஒரு வித பயத்துடன் ஏய் சிவா இப்ப என்ன பண்ணுன, இதுக்கு அப்புறம் என்ன பண்ண போற என ஒரு மிரட்சியுடன் கேட்க

அடேய் பாண்டி அவன் எட்டு கட்டையில் பாடுவதற்கு ஒரு சவுண்ட் உட்டு பாத்தான், அம்புட்டு தான் நீ பயப்படாத, இல்ல எதுக்கும் நீ என் கையை கொஞ்சம் சேர்த்தே புடிச்சுக்கோ என பாண்டியிடம் சொல்லிவிட்டு யப்பா சிவா உனக்கு எட்டாம் நம்பர் ஒத்து வராது அதுனால ஏழு கட்டையிலே பாடு

ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ - என சிவா ஆரம்பிக்க

ஏய் நிறுத்து நிறுத்து உன்ன பாட்டு பாட சொன்னா என்ன நீ தாலாட்டு பாட ஆரம்பிச்சுட்ட என பாண்டி மறுபடியும் ஆரம்பிக்க

பாண்டி தல என்ன சொன்னார் என்னபதை நீ கொஞ்சம் ரிவைண்ட் பண்ணி யோசிச்சிக்கிட்டு இரு. நான் பாடி முடிக்கும் வரை வாய திறக்காதே என்ன? என்று பாண்டியை அடக்கி விட்டு சிவா மறுபடியும் பாட்டை ஆரம்பிக்கின்றார்.


ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ

கண்ணே நீ உறங்கு
ஆரிரோ ஆராரோ

காணே மயில் உறங்கு
ஆரிரோ ஆராரோ

பசும் பொண்ணே......... நீ உறங்கு
பூவரசு வந்து உறங்கு

யாரடிச்சு நீ அழுத
அடிச்சார சொல்லி அழு

மாமன் அடிச்சானோ
மல்லிக்கை பூ செண்டாலே

அத்தை அடிச்சாலோ
அரளி பூ செண்டாலே

அடிச்சாரை சொல்லி அழு
ஆக்கினைகள் செஞ்சு வைப்போம்

ஏய் ஏய், நிறுத்து நிறுத்து என பாண்டி மறுபடியும் ஆரம்பிக்க

இப்ப என்ன என்கிற மாதிரி சிவா பார்க்க

நீ பாடுன பாட்டில் குற்றம் இருக்கு என பாண்டி இழுக்க

பாண்டி என்ன பாடி முடிக்க விடு, அப்புறம் நீயே சந்தோஷப்படுவ, நடுவில் தொந்திரவு பண்ணாத என்ன....

அது எல்லாம் இல்ல, எனக்கு பதில் சொல்லிட்டு நீ மிச்சத்தை கண்டினியூ பண்ணு என பாண்டி வம்படி பண்ண

சரி கேட்டு தொல என சிவா அழுத்துக்கொள்ள, நம்ம தல "யாருக்கு கிட்ட அடி வாங்கவில்லை" என்று பாடு அதில் ஒரு அர்த்தம் இருக்கு அத விட்டு விட்டு "யாரு அடிச்சா சொல்லி அழுனு" சொன்னா என்ன அர்த்தம்னு கேட்குகிறேன் என பாண்டி பெருமித பார்வை பாக்க.........

பாண்டி, உன்ன கொன்னுடுவேன் சொல்லிட்டேன், நம்ம சிவா பய எம்புட்டு பீல் பண்ணி நான் தூங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தாலாட்ட பாடிக்கிட்டு இருக்கான், நீ என்னடான உடால உடால கேள்வி கேட்டு அவனை டிஸ்டர்ப் பண்ணுற, மவனே நான் சொல்லுற வரைக்கும் நீ வாயை திறக்க கூடாது சொல்லிட்டேன் என கைப்பு பாண்டியை கண்டித்து விட்டு, சிவா நீ கண்டினியூ பண்ணுடா செல்லம் என சொல்ல

சிவா நமட்டு சிரிப்புடன் தலையசைத்து கொண்டே ஒகே தல என சொல்லிவிட்டு

யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் சீண்டவில்லை
தானே அழுகுறாண்டி
தனக்கு ஒரு துணை வேண்டுமுனு - என முடிக்க

கைப்பு பதறி அடித்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து கோபப் பார்வையுடன் சிவாவை பார்த்து

நீ ஒருத்தன் தான் சங்கத்தில உருப்படியா இருக்கனு நினைச்சேன் நீயுமா... சரி நடத்துங்கடா என்ன அடி வாங்க வைக்க என்ன எல்லாம் பண்ணனுமோ அம்புட்டையும் பண்ணுறீங்க நீங்க......... டேய் பாண்டி இவனுக்கு இது மாதிரி பாட சொன்னது நீ தானா என கேட்க

பாண்டி தலை மேலும் கீழும் ஆட்டி விட்டு பின் இடதும் வலதுமாக ஆட்டுகின்றார்.

ஏய் பாண்டி எதாச்சும் ஒரு பக்கம் ஆட்டு, இப்படி இரண்டு பக்கமும் ஆட்டுனா என்ன அர்த்தம், ஏன் நீ வாய திறந்து பதில் சொல்ல மாட்டிங்களோ...

நீங்க தான் தல நான் சொல்லாம வாயை திறக்க கூடாதுனு சொன்னீங்க என பாண்டி குழந்தைத்தனமாக சொல்ல

கிளம்பிட்டானுய்யா கிளம்பிட்டானுங்க..................

Friday, March 9, 2007

சங்கம் டெக்குனாலஜீஸ்

சங்கம் டெக்னாலஜீஸ் திண்ணையில் உட்கார்ந்து ஆணி அடிக்கும் சுத்தியில் ஈ அடித்துக்கொண்டிருக்கிறார் தல. மற்ற சங்கத்து சிங்கங்கள் தல செலவில் ஆளுக்கு ஐந்து அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டு அசதியில் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது போர்வாள் தேவ் "தல..டெண்டர் வாங்கிட்டோம்" என கத்தியபடியே வரப்பில் ஓடி வருகிறார். மற்ற சங்கத்து சிங்கங்கள் தூக்கம் கலைந்து எழுந்துவருகிறார்கள்.

"தல, வெள்ளைக்காரன் ஆணி புடுங்கற காண்ட்ராக்டை நமக்கு கொடுத்துட்டான். நாம உடனே வேலையை ஆரம்பிக்கனும்" என மூச்சு வாங்கியபடியே ஹை டெசிபலில் அலறுகிறார்.

"என் வயித்துல பாலை வார்த்த ராசா! அப்ரண்டீஸ்களா இம்புட்டு நாள் ரெஸ்ட் எடுத்தது போதும். வேலையை ஆரம்பிங்கப்பு" என சவுண்ட் விட்டு எல்லோரையும் உள்ளே அனுப்புகிறார் கைப்பு.

சாப்ட்வேரைப் பற்றி ஒன்றும் தெரியாத தல போர்வாளை தனியே கூப்பிட்டு "ராசா, எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எல்லாப் பயலுகளுக்கும் தெரியும். ஆனாலும் இன்னும் மெயின்டெயின் பண்ணிட்டிருக்கேன். நீ தான் இந்த ஆணி புடுங்கற காண்ட்ராக்டை நல்ல படியா முடிச்சுக்குடுக்கனும்" என கெஞ்சியபடி பின்னால் செல்கிறார்.

"தல நம்ம அப்பரண்டீசுங்க எல்லாம் ஒன்னா ஒழுங்கா வேலை பார்க்கனும்னா அவங்களுக்குள்ள ஒரு டீப் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும். அதனால எல்லாரையும் கிரிக்கெட் வெளாட கூட்டிட்டுப் போறேன். அங்க போய் பேசி எல்லாம் ஒன்னா மண்ணா ஆனதும் வேலையைப் பார்க்கலாம்."

இதைக் கேட்டதும் சிங்கங்கள் சந்தோஷமாக மீண்டும் சங்க திண்ணைக்கே வருகிறார்கள்.

"அடப்பாவி மக்கா! வேலையை ஆரம்பிங்கடான்னா வெளாடப் போறோம்னு கெளம்பிட்டீங்களா? அதெல்லாம் இன்னைக்கு கிடையாது. எல்லாப்பயலுகளும் உள்ளே போங்க" என மீண்டும் உள்ளே அனுப்புகிறார். சிங்கங்கள் பொட்டி தட்டுவது போல் நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு பொட்டியில் இளாவும் தளபதி சிபியும் விண்டோஸ் பெயிண்ட்டை திறந்து வைத்துக்கொண்டு அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகளை வரைந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் பி.பி எகிற அவர்களிடம் வரும் கைப்பு 'ஒரு மாசத்துல எல்லா வேலையும் முடிக்கிறோம்னு தேவு தம்பி வாக்கு குடுத்துட்டு வந்திருக்கு. ஆக்ரோஷமா வேலை பார்க்க வேண்டிய நீங்க ரெண்டு பேரும் விளையாடிட்டிருக்கீங்க. என்ன இது?" என கண்கள் சிவக்கிறார்.

உடனே தளபதி 'தல! இது கலாய்த்தல் திணை. அதுல இப்படி தான் கோடு அடிக்கனும். கீழே பாரு. சின்ன ஃபாண்ட்ல இது சும்மா லுல்லலாய்க்குன்னு எழுதியிருக்கேன்' என விவரிக்கிறார்.

"சாமி, உங்க கலாய்த்தலை நிப்பாட்டிக்குங்க. நேரத்துல ஆணி புடுங்கலைன்னா மொத்த ஆப்பும் எனக்குத்தான். வேலையைப் பாருங்கய்யா" என்றபடி திரும்புகிறார். அப்போதுதான் இராயல் உள்ளே வருகிறார்.

தன் மொத்த கோபத்தையும் தன் கண்களில் காட்டி "எங்கே போயிட்டு வர்ற?" என தலை கேட்க,

"இண்டர்வெல் போனேன் தல" என அப்பாவியாய் சொல்கிறார் இராம்.

"இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள இண்டர்வெல்லா? சரி அதை விடு. இன்னைக்கு என்ன வேலை பார்க்க போற?"

"மைக்ரோசாப்ட் ஆபிஸ்ல வேலை பார்க்க போறேன் தல"

"ராஸ்கோல், என் ஆபிஸ்ல வேலை பார்க்க சோறுபோட்டு சம்பளம் குடுத்து உட்கார வச்சா அது எவன்டா மைக்ரோசாப்ட் அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கற? அவன் யாரு? கட்டதுரை ஆளா?"

"ஐயோ தல, ஆபிஸ்ன்றது ஒரு சாஃப்ட்வேர் பேரு. உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எங்களுக்குத் தெரியும். ஒரு மூலைல போய் உட்காரு. இல்ல நடக்கறதே வேற" என கத்திவிட்டு சீட்டுக்கு சென்று சீட்டாட ஆரம்பிக்கிறார்.

"இங்கிபிங்கி பாங்கி தல ஆஸ் தி டாங்கி" என பின்கட்டிலிருந்து சவுண்ட் வருகிறது.

அங்கே இளையதளபதி வெட்டி சீரியசாக ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

"அங்கே என்னடான்னா ஒருத்தன் கிரிக்கெட் விளையாடனும்னுட்டு இருக்கான். இங்க நீ இங்கிபிங்கி பாங்கி போடற. என்னங்கடா நடக்குது இங்க?"

"தல, டிஸ்டர்ப் பண்ணாத. நான் இந்த சாப்ட்வேரை டெஸ்ட் பண்றேன். இங்கிபிங்கி போட்டு அந்த டெஸ்ட் பாசாயிடுச்சா இல்ல பெயிலான்னு முடிவு பண்ணுவேன்" என எக்ஸ்ப்ளெயின் செய்கிறார் வெட்டி.

"அடப்பாவிகளா, இப்படித்தான் டெஸ்ட் பண்ணுவீங்களா? நான் கூட ஏதோ பெரிய டெக்குனிக்கு இருக்குன்னு நினைச்சனேடா..இதான் உங்க டெக்குனிக்கா?"

பக்கத்து சீட்டில் ஜொள்ஸ் செல்போனில் ஹஸ்கி வாய்ஸில் காலை பஸ்ஸில் கரெக்ட் பண்ன பிகரைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்.

"வேலை நேரத்துல என்னய்யா போனு?"

"வெள்ளைக்காரன் கூட தான் தல பேசிட்டிருக்கேன். அவனுக்கு எந்த மாதிரி ஆணியெல்லாம் புடுங்கனும்னு கேட்டுட்டிருக்கேன்" என பொய்மூட்டையய அவிழ்க்கிறார் பாண்டி.

"என்னமோ சொல்ற. நானும் நம்பறேன். சரி சூடான்ல ஒரு அப்பரண்டீசு உட்கார்ந்திருக்கானே. என்ன செய்யறான்? அவனுக்கு ஒரு போனைப் போடு" என்றதும் புலிக்கு டயல் செய்கிறார் பாண்டி. அது தவறுதலாக ஒரு அஜால்குஜால் நம்பருக்கு செல்கிறது. "ஹேய் ஸ்வீட்டி, எப்படி இருக்க?" என கொஞ்சல் குரலில் மறுமுனையில் ஒரு பெண். "ச்சே ராங்க் டைம்ல கரெக்ட் நம்பர்" என புலம்பியபடி தல பார்ப்பதுக்கு முன் கட் செய்கிறார் பாண்டி. அதற்குள் தலயின் செங்கல்போன் காட்டுக்கத்து கத்த அதை அலம்பலாக எடுக்கிறார் தல. மறுமுனையில் சிவா.

"தல இங்கன நிலமை ரொம்ப மோசமாயிருக்கு. விலைவாசி ஏறிடுச்சு. எனக்கு சம்பளத்தைக் கூட்டிக்கொடு" என்று சண்டை போடுகிறார் புலி.

"அடப்பாவி இன்னும் வேலையே பார்க்க ஆரம்பிக்கல. அதுக்குள்ள சம்பள உயர்வா? ராஸ்கோல். அடுத்த வாரம் பொதுக்குழு கூட்டும்போது முடிவு பண்ணிக்கலாம். போனை வை" என்று அணைக்கிறார் கைப்ஸ்.

அருகிலுள்ள பொட்டியில் மற்ற வலையுலகத்து சங்க மக்கள் அனைவரும் ரவியின் தேடுஜாப்ஸ் வலைப்பக்கத்தை மேய்ந்துகொண்டிருக்கின்றனர். "அட அநியாய அப்ரண்டீசுகளா, சங்கத்து ஆபிஸ்லயே வந்து அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போடறீங்களா" என நொந்து நூடுல்ஸ் ஆகிறார் தல.

அப்போது "ஐயோ என்னை விட்ருங்க! என்னால இதுக்கு மேல ஆணி புடுங்க முடியாது. இந்த ஆப்பே இன்னும் ஆறு மாசத்துக்கு காணும். சங்கத்து பணியை ஆத்தனும். இல்லன்னா தல என்னைக் கடிக்கும். என்னை விட்ருங்க. விட்ருங்க" என யாரையோ பார்த்து கத்தியபடியே சங்கத்தை நோக்கி ஓடி வருகிறான் கப்பி.

ஒரு பொறியில் இருந்து எஸ்கேப்பாகி இன்னொரு பொறியில் சிக்குவது போல் ஆப்பை தயாராக வைத்திருக்கும் சங்க மக்கள்ஸைப் பார்த்ததும் மயங்கிவிழுகிறான் கப்பி. அவனைப் பிடிக்க சிங்கங்கள் ஓடி வர "இன்று விடுமுறை" என சங்கம் டெக்னாலஜிஸ் வாசலில் போர்ட் மாட்டுகிறார் ராயல்.

Friday, March 2, 2007

ஹோலியா???

நம்ம ஊர்ல சோறு- அவிங்க ஊர்ல ரொட்டி

நம்ம ஊர்ல சாம்பாரு- அவிங்க ஊர்ல பன்னீரு

நம்ம ஊர்ல அரைக்கீரை- அவிங்க ஊர்ல பாலக்

நம்ம ஊர்ல வேட்டி- அவிங்க ஊர்ல பைஜாமா

நம்ம ஊர்ல காஞ்சிபுரம் பட்டு- அவிங்க ஊர்ல சுடிதாரு

நம்ம ஊர்ல அச்சம், வெட்கம், நாணம், பயிர்ப்பு - அவிங்க ஊர்ல அச்சம் மட்டும்தாங்க

நம்ம ஊர்ல முத்தம்- அவிங்க ஊர்ல சும்மா

நம்ம ஊர்ல சர்தார்ஜி- அவிங்க ஊர்ல மதராஸி

ஏன் இவ்வளவு வித்தியாசம்.. ஏன் இவ்வளவு இடைவெளி

நம்ம ஊர்ல மஞ்ச நீராட்டு- அவிங்க ஊர்ல ஹோலி

இவ்வளவுதான் நாங்க சொல்ல வந்தது.

அதனால் எல்லாரும் தண்ணீ அடிச்சு, தப்பா நினைக்கப்படாது, கலர் கலரா தண்ணி அடிச்சு
பாங்கு குடிச்சு, சட்டைய எல்லாம் நாசமாக்கி
"சந்தோசமா ஹோலி கொண்டாடுங்க" மக்காகிழே இருக்கிறத copy பண்ணி Browser Address bar'லே போடுங்க.... :)

javascript: i=0; c=["red","green","blue","yellow","magenta","orange","black","cyan"]; a=document.links;setInterval('i++;a[i % document.links.length ].style.color=c[i % c.length]',10);void(0); alert("'Dear friend, wish you a Very HAPPY HOLY’,\ ..******..");

Alone... in a Woman's World #2

Alone... in a Woman's Worldடோடத் தொடர்ச்சி...

வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி "அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு"ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க...

"இந்தப் பக்கம் என்னடா பார்வை? உன் வேலையைப் பாருடா"ன்னு ஒரு கத்து கத்திருந்தாங்கன்னாக் கூட ஒன்னும் இருந்திருக்காது.

ஆனா நான் திரும்பிப் பாத்ததை கவனிச்ச அந்த ஆண்ட்டிகள்ல ஒருத்தங்க ரொம்பப் பொறுமையாச் சிரிச்சிக்கிட்டே "நாங்க பேசறதெல்லாம் கேட்டா உங்களுக்கு ரொம்ப வித்தியாசமாவும் தமாஷாவும் இருக்குமில்ல?"ன்னு கேட்டாங்க. நான் எழுதிருக்கறதை படிக்கும் போது நக்கல் மாதிரி உங்களுக்குத் தோணலாம், ஆனா ரொம்ப ஃபிரெண்ட்லியாத் தான் கேட்டாங்க. ஒரு வேளை அவங்க பிரைவேட் பேச்சைக் கலைக்கற மாதிரி திரும்பிப் பாத்திருக்கக் கூடாதோன்னு தோணுச்சு. கொஞ்சம் சங்கடமாவும் போச்சு. அதுக்கு நான்"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க"ன்னு சொல்லி வச்சேன். ஒரு அஞ்சு நிமிஷம் அமைதிக்கப்புறம், "பாலை கேஸ்ல வச்சிருந்தது, அதை நிறுத்த நேரம் ஆனது, அதனால ஜீப்பை வெயிட்டிங்ல வெச்சிருந்தது, பசங்க ஸ்கூல் ஆனுவல் டே, வீட்டுக்காரரோட வாக்கிங் போறது" இதப் பத்தியெல்லாம் பேச்சு ஸ்டார்ட் ஆனதும் தான் என் குற்ற உணர்வுக்கு விடுதலை கிடைச்சது. இதையெல்லாம் படிச்சிட்டு லேடீஸ் பேசறதை நான் ஒட்டுக் கேக்கறேன் அது இதுன்னு யாராச்சும் பின்னூட்டம் போட்டீங்க...முப்பது பின்னூட்டம் நாப்பது பின்னூட்டம்னு கூட பாக்க மாட்டேன்...மிகக் கொடூரமான முறையில் மட்டுறுத்திப்புடுவேன்னு இப்பவே சொல்லிக்கிறேன். ஜாக்கிரதை. ஏன்னா நான் எழுதறது எல்லாம் ஒரு வழிப்போக்கனா தற்செயலா என் காதுல வாங்குனது தான். என்னாது அது...ஆங்...லோன்லி டிராவலரு...அதுவா இருக்கும் போது.

ஃபாஸ்ட் ஃபார்வர்டு பண்ணி எதிர்காலத்துல கொசுவர்த்திய சுத்துனப்ப போன பதிவுல சொன்ன எழுதாத சட்டத்தை(cardinal rule) நான் உடைச்சது நெனவுக்கு வந்தது. ஆனா கடந்த காலத்துல வான்கோழி பிரியாணி தின்ன நான் போய்க்கிட்டிருக்கற ஷேர் ஆட்டோ பயணத்துல அடக்க ஒடுக்கமா நல்ல பையனாத் தான் இருந்தேன். என்ன தான் எதேச்சையா அந்த ஆண்ட்டியும் அக்காவும் பேசறது நம்ம காதுல வந்து விழுந்தாலும் ஒரு வேளை நாமப் பண்ணறதுக்குப் பேரு தான் 'e(a)vesdropping'ஓ அப்படின்னு ஒரு சந்தேகம் வந்துடும். "சே! சே! நாம யாரு. ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்? நாமளாவது? லேடீஸ் பேசறதைப் போய் ஒட்டுக்கேக்கறதாவது"ன்னு நியாபகப் படுத்திக்க அப்பப்போ கடல் அரிப்பைத் தடுக்க அரசாங்கத்துக்கு என்ன யோசனை குடுக்கலாம்னு ஒரு முன்னாள் சிவில் இஞ்சினியரா சிந்திக்க ஆரம்பிச்சிடுவேன், அந்த யோசனையெல்லாம் சேகரிச்சு முடிச்சதும் ரோட்டோரத்துல காயப் போட்டிருக்கற கருவாடு ஏன் இவ்வளோ நாத்தம் அடிக்குதுன்னு செந்தில் மாதிரி யோசிக்க ஆரம்பிப்பேன்.

ஆனா செந்திலா இருந்தாலும் சிவில் இஞ்சினியரா இருந்தாலும் Woman's Worldஇல் ஒரு தனி பயணியா இருக்கற த்ரில் கிடைக்காதுப்பா. "பாப்பா! கப்பல் பாரு...கப்பல் பாரு" தூங்கிக்கிட்டிருக்க பாப்பாவை எழுப்பி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துல நின்னுட்டிருந்த கப்பலைக் காட்டறதுக்கு பாப்பாவோட கிராண்ட்மா(சும்மா ஆயான்னு சொல்லாம ஒரு சேஞ்சுக்கு கிராண்ட்மா) முயற்சி பண்ணாங்க. பாப்பாவுக்கு நல்ல தூக்கம் போல. லைட்டா கண்ணை முழிச்சிப் பாத்துட்டு, மறுபடியும் படக்குன்னு கண்ணை மூடி சடக்குன்னு என்மேல சாய்ஞ்சு தூங்க ஆரம்பிச்சிடுச்சு.

மறுபடியும் அவங்களோட கொஸ்டின் ஆன்ஸர் ஆரம்பம் ஆச்சு. அந்த 50+ ஆண்ட்டி கேள்வி கேக்கறதும், 30+ அக்கா பதில் சொல்றதுமான்னு இப்படியே போச்சு அவுங்க பேச்சு. இடையிடையில அவங்க கத்துக்கிட்ட விஷய ஞானத்தை எல்லாம் அந்த அக்காவுக்குப் போதிக்கறதுமே அவங்கக் குறிக்கோளா இருந்துச்சு. அவங்க எதோ பேசிக்கிட்டே இருக்கறதும், நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாக்கறதும், உள்ள அவங்க பேசறதைக் கேக்கறதுமா போய்க்கிட்டிருந்தது.

ஒரு வாட்டி நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாத்துட்டு திரும்பவும் உள்ள வரும் போது "நேத்து ராத்திரி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டுத் தாளிச்சு பருப்பு கடைசல் வச்சேன்மா. ரொம்ப நல்லாருந்தது. காலையில அதையே பழையதுக்கு போட்டுக்கிட்டு சாப்புட்டாரு" அப்படின்னாங்க ஆண்ட்டி.

"யாரு? உங்க வூட்டுக்காரரா?"ன்னு கேக்க ஆர்வமா இருந்தாலும்... கேக்கவா முடியும்? நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் தான் இருந்தாலும் அதை மறப்பேனா?

"நேத்து பூண்டு வெங்காயம் போட்டு ஒரு குழம்பு வச்சேன். பாப்பாவுக்கு மட்டும் தனியா பருப்பு வேக வச்சி சாதத்துல போட்டுப் பெசஞ்சு பன்னெண்டு மணிக்கெல்லாம் ஊட்டிட்டேன்"னு வாயால வலைக்குறிப்பு எழுத ஆரம்பிச்சிட்டாங்க அக்கா. அதுக்கப்புறமும் என்னென்னமோ பேசினாங்க...

துறைமுகத்துக்குள்ள நுழையறதுக்குத் தயாரா நின்னுட்டிருந்த பெரிய டிரெயிலர் லாரிகள் சாலையை அடைத்துக் கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஆகி ஆட்டோ ஒரு அஞ்சு நிமிசத்துக்கு ஊர்ந்து ஊர்ந்து நகர வேண்டியதாப் போச்சு. அந்த அஞ்சு நிமிசம் மட்டும் ஆட்டோவில் அமைதி நிலவியது.

நெரிசல் குறைஞ்சு ஷேர் ஆட்டோ வேகம் கூட்ட ஆரம்பிச்சதும் "ஏம்மா! கட்டை செவுத்துல பாப்பா ஜட்டியைக் காயப் போட்டிருந்தியே? எடுத்து உள்ள வச்சிட்டியா?"ன்னு ஆண்ட்டி அக்காவைக் கேட்க, "அதையெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே எடுத்து மடிச்சி வச்சிட்டேன்"னு பதில் வந்துச்சு.

குபீர்னு பீறிக்கிட்டு வந்த சிரிப்பை அடக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். ஆனா சிரிப்பை வரவழைத்த அந்த விஷயத்தை மீறி ஒரு விஷயம் யோசிக்க வைத்தது. என்ன தான் பசங்க உக்காந்துருக்காங்களேன்னு ஆட்டோவில ஏற யோசிச்சிருந்தாலும், அந்த பசங்க கவனிப்பாங்க அப்படிங்கறதை மீறி அவங்க பேசன விஷயங்கள்ல ஆதார ஸ்ருதியா இருந்தது ஒன்னு தான்...அது தன்னை சார்ந்தவர்கள் மீது அவர்கள் காட்டும் 'அன்பு'. ஒரு சில்பான்ஸ் விஷயத்துக்கு இந்தளவுக்கு நான் பிலிம் காட்டறதாக் கூடத் தோணலாம். ஆனா எனக்கென்னமோ அவங்க ரெண்டு பேரையும் பாத்து ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதிகமாப் படிச்சிருக்கக் கூட மாட்டாங்க...ஆனா அந்த அரை மணி நேர நெருக்கத்துல எத்தனை விதமான விஷயங்களைப் பத்திப் பேசியிருப்பாங்க... அதுக்கெல்லாம் எவ்வளவு வேகமா யோசிச்சிருப்பாங்கன்னும் நெனச்சி பாக்கறேன். Everything for somebody else's sake. பிரமிப்பாத் தான் இருக்கு.

அந்நேரம் பசங்க ஞாயித்துக் கெழமை ஒழுங்கா வேலை செய்யிறாங்களா இல்லை ஓபி அடிக்கிறாங்களான்னு தெரிஞ்சிக்கறதுக்காக எங்க பாஸ் என்னோட மொபைல்ல போன் பண்ணாரு. எல்லாம் நல்லபடியா ராயபுரம் கல்மண்டபத்தை நோக்கி பிரியாணிக்காகப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியப் படுத்திட்டு ராயபுரம் கல்மண்டபத்துல எறங்க ஆயத்தமாகிட்டு இருக்கும் போது "சோத்துக் கத்தாழையும் சீமை பொன்னாங்கண்ணியையும் ராத்திரி சட்டியில ஊறப்போட்டு வச்சிடு" அப்படின்னு எதோ பேசிட்டிருந்தாங்க. அடடா! எதோ அழகு குறிப்பு போலிருக்கே...இவுங்க சொல்லற சமாச்சாரத்தைத் தான் Aloe Veraன்னு சொல்லி லேக்மியும் கவின்கேரும் குப்பியில அடைச்சி விக்கிறானுங்கன்னு நெனச்சிக்கிட்டேன்.

நான் மட்டும் இருந்திருந்தா ஒரு வேளை ஆட்டோவுலேயே பீச் ஸ்டேஷன் போயிருப்பேனோ என்னவோ? ஆனா கூட வந்தவன் என்னைக் கொன்னு களையும்ங்கிறதுனாலயும் நான் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்னு நிலைநாட்ட வேண்டி இருந்ததுனாலயும் மயிலின் ஆட்டத்தை அறியா வான்கோழியின் சுவையைத் தெரிஞ்சிக்கிறதுக்காகவும் ஆட்டோவை விட்டு இறங்குனேன். எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது.

Thursday, March 1, 2007

BE CAREFUL!!!

வானுச வையோரே வயசுல பெரியோரே வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனும். மக்கள்ஸ் எல்லாரும் நலமா. இந்த அப்பாவி அப்ரண்டீஸை அட்லாஸ் ஆக்கிப் பாத்துப்புடனும்னு சங்கத்து சிங்கங்கள் முடிவெடுத்துட்டாங்க. எப்ப, யார் சிக்குவாங்கன்னு ரெடியா ஆப்பை கைல வச்சுகிட்டு ஸ்பேர் ஆப்பை பேண்ட் பாக்கெட்ல போட்டுட்டு திரியறவங்க இப்ப வகையா ஒருத்தன் சிக்கினா விடுவாய்ங்களா. வகைதொகை இல்லாம வரிஞ்சு கட்டப்போறாய்ங்க. இதுக்கெல்லாம் அசரவய்ங்களா நாம? 'நான் ஒரு முறை ஆப்பு வாங்கிட்டா அடுத்த ஆப்பை நானே மதிக்க மாட்டேன்'ன்னு வலியை வெளியக் காட்டாம ரியாக்ஷனை கண்ட்ரோல் பண்ணி சிரிச்சுட்டே இருக்கறதுதான் தலகிட்ட நாம எடுத்த ட்ரெயினிங்குக்கு மதிப்பு. அதே மாதிரி 'நான் ஒரு முறை மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணிட்டா என் மொக்கையை நானே தாங்க மாட்டேன்'. அதனால Be Careful :))

நம்ம தல கிட்ட எடுத்த ட்ரெயினிங்ல முக்கியமான எபிசோட் ஓசி காஜி அடிக்கறது. ஓசில ஆப்பே வந்தாலும் அதுல சீரியல் செட் அலங்காரம் போட்டு அல்டாப்பா உக்கார சொல்லிக்கொடுத்திருக்காரு தல. காலைல பல் துலக்கறதுல இருந்து ராத்திரி இழுத்துப்போத்திக்க பெட்சீட்டு வரைக்கும் இப்படி ஓசியிலயே ஓட்டறவய்ங்க பல பேர் இருக்காங்க.

இந்த மாதிரி ஆளுங்க கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே அவங்க கேட்கற விதம்தான், பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கற மாதிரி. நம்ம ப்ரெண்டு ஒருத்தர் இருக்காரு. எதையுமே அவருக்கு வேணும்னு கேட்கமாட்டாரு. "பாஸு, அந்த கடைல தேங்கா போளி நல்லாயிருக்கும் சாப்பிட்டிருக்கீங்களா"ன்னு தான் ஆரம்பிப்பார். இதுக்கப்புறம் நாம என்ன சொன்னாலும் எடுபடாது. நம்மள கையப்புடிச்சு கடைக்குக் கூட்டிட்டு போய் ஒரு போளியை வாங்கி அவர் சாப்பிட்டுட்டு கூட்டிட்டு வந்த கடனுக்கு நம்ம வாயில ஒரு போளியைத் திணிச்சு நம்ம பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து அவரே செட்டில் பண்ணிடுவாரு. நாம ஒன்னுமே செய்ய வேணாம். செய்யவும் முடியாது. அவர் அம்புட்டு திறமைசாலி.

அவரே காலேஜ் படிக்கற காலத்துல இன்னொரு காமெடி பண்ணியிருக்காரு. அப்பல்லாம் கைல அஞ்சு பத்து தான் இருக்கும். மாச மொத வாரத்துல வீட்டுக்கு போன் பண்ணாத்தான் பணம் வரும். அதுக்கப்புறம் ஒரு வாரத்துல போன் பண்ணவும் காசு இருக்காது. கடன் வாங்கி போன் பண்ணாலும் பணம் வராது. அப்படியான நேரத்துல நைட் ஸ்டடி போடறோம்னு நான், நம்ம ஓசி காஜி, அப்புறம் என்னை மாதிரியே இன்னொரு அப்பிராணி மூனு பேரும் ஹாஸ்டல் ரூம்ல உட்கார்ந்துகிட்டு பட்டறையைப் போட்டுட்டிருந்தோம். பட்டறைனா தெரியும்ல...அதாம்பா டாப்பு.

திடீர்னு நம்ம பாசுக்கு டீ குடிக்கற ஆசை வந்துடுச்சு. அவர் என்னைக்கு பாக்கெட்ல பணம் வச்சிருக்காரு? "பாசு, தூக்கம் வர மாதிரி இருக்கு. அக்கா கடைக்கு போய் டீ குடிச்சுட்டு வரலாமா?"ன்னு பேஸ்மெண்ட் போட ஆரம்பிச்சார். சரி ஒரு டீ அடிச்சுட்டு வரலாம்னு கெளம்பியாச்சு. மூனு டீ ஆறு ரூபாய்ன்னு கணக்கு பண்ணி என்கிட்ட இருந்த நாலு ரூபாய்கூட பக்கத்து ரூம் பையன்ட்ட ரெண்டு ரூபா கடன் வாங்கிட்டு போனோம்.

கடைக்குப் போனதும் நம்ம பாசு "பாஸு, நான் டீ குடிக்க மாட்டேன். பால் தான் குடிப்பேன்"ன்னாரு. "இல்ல பாசு, ஆறு ரூபா தான் இருக்கு.மூனு டீ தான் வரும். பால் மூனு ரூபா. பத்தாது"ன்னோம்.

உடனே பாஸு கடைக்காரர் பக்கம் திரும்பி ஆர்டர் கொடுத்தாரு பாருங்க. "ஒரு பால். ஒரு டீ ஒன் பை டூ". அவருக்கு பாலாம். காசு குடுக்கற எங்களுக்கு ஒன் பை டூ டீயாம். டேய் பாவி ஓசில குடிக்கற எகத்தாளத்தைப் பாருன்னு அவனை மொறச்சா ரியாக்ஷனே காட்டாம இருக்கான். அதுமட்டுமில்ல மிச்சமிருக்கற ஒரு ரூபாய்க்கு மசால் வடை வாங்கி பாதியை அவன் எடுத்துகிட்டு மீதி பாதியை எங்க ரெண்டு பேருக்கும் தூக்கிப்போட்டான். என்னத்த சொல்றது. நாங்களும் அரை டம்ளர் டீயாவது குடிக்கவிட்டானேன்னு வந்துட்டோம்.

இதுமாதிரி அடுத்தவங்க மிளகா அரைக்கறதுக்காகவே அண்டா சைஸுக்கு மண்டை வச்சிருக்கவய்ங்க நாங்க. பார்த்து சூதானமா அளவோடு ஆப்படிச்சு வளமோடு வாழுங்கப்பு.

தில்லுமுல்லு படம் பார்த்திருக்கீகளா? அதுல தேங்காய் சீனிவாசன் அப்பரண்டீசுகளுக்கு இண்டர்வ்யூ வச்சு நொங்கெடுப்பாரு. அப்ப சுப்பிரமணிய பாரதின்னு ஒரு அப்பரண்டீசு வருவாரு. அந்த டயலாக் ஞாபகம் இருக்கா?

"ல-னாவும் வராது!! ள-னாவும் வராது! ழ-னாவும் வராது!! பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. நீர் நாட்டுக்கும் அவருக்கும் பெரும் துரோகம் செய்யறீர்ய்யா"ம்பார் தேங்காய்.

அதுக்கு அசராத அப்பரண்டீசு "ஸார்ட் நேம் சுப்பி சார்"ன்னு இளிக்கும்.

"சுப்பியாவது கப்பியாவது கெட்டவுட்"ன்னு சீறுவார் தேங்காய்.

இதுமாதிரி எதுவும் வராம கப்பித்தனமா காமெடி பண்ணிட்டிருந்தவனை அலங்காரம் பண்ணி அட்லாஸ் ஆக்கிவிட்டிருக்கீங்க. உங்க வாழ்த்துக்களோட ஆட்டத்தை ஆரம்பிக்கறேன். தொடர்ந்து ஆதரவு தாங்க :)

BE CAREFUL! (நான் எனக்கு சொன்னேன்)