Tuesday, December 23, 2008

நெஞ்சுக்கு சேதி - பாகம் - 2

அண்ணன் போர்வாள் போர் முனையில் வஞ்சகர் தம் நஞ்சு கலந்து தொடுக்கும் விஷ அம்பினை எதிர்கொண்டு இனமானம் காக்க...சங்கத்தின் கோடானு கோடி வாலிப நெஞ்சங்களுக்கு சேதி அறிவித்து கொண்டிருக்கும் இந்த வேளையிலே... உலக பொருளாதாரம் முதல் வீட்டில் இருக்கும் தாரம் வரை பிரச்சனைகளை எதிர்கொண்டு..அண்ணனின் அழைப்புக்கு பின்னூட்டம் மின்மடல்..தொலைபேசி என பல வகையிலும் ஆதரவு தெரிவித்து உங்கள் தம் இனமான உணர்வுகளை பொங்கி எழச் செய்து கொண்டிருக்கும் இந்தச் சூழலை நாடே பார்க்கிறது......ஏன்..தில்லி சர்கார் கூட குனிந்து கவனிக்கிறது என்றால் அது மிகையாகாது...

பாலிவுட்டிலே பரபரப்புக்காக... அமிதாப்பச்சனும்.. அமீர்கானும் பதிவிட்டார்களே...அந்தப் பதிவுகள் அகில உலக கவனத்தை கவர்ந்ததாக கவர் ஸ்டோரி எழுதிய வட நாட்டவர் பத்திரிக்கைகள் இன்று இந்த இனமான நெஞ்சுக்கு சேதி பதிவினைப் பக்குவமாக பார்க்க துவங்கியுள்ளது என நாம் நெஞ்சை நிமிர்த்தினால் அது தவறகாது.. இது யாருக்கு கிடைத்த வெற்றி.. அண்ணனின் அழைப்புக்கு அவசரமாய் செவி மடுத்து சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து களம் காண புறப்பட்ட வீர வாலிப இனமே... என் உடன் பிறவா பிறப்புகளே... பதிவுலகின் பரபரப்புகளே.. நீங்கள் தான்...

"பதிவு தோன்றி பின்னூட்டம் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த கும்மி குடியாம்" அப்படி ஒரு சிறப்பான இனமாம் சங்கத்து சிங்கங்கள் இன வரலாற்றின் முதல் பக்கத்தைக் கூட முழுசாய் படிக்காமல் சங்கத்தின் மீதும் சங்கத்தின் முன்னணியினர் மீதும் ஊழல் என்றும்... ஊது குழல்... என்றும் புழுதி வாரி இறைப்பது இன்றைய சூழலில் ஒரு சிலருக்கு வாடிக்கையாகவும் வேறு பலருக்கு வேடிக்கையாகவும் போனது நெஞ்சுக்கு வேதனை அளிக்கக் கூடிய சேதி...

அண்ணனின் இந்தப் பதிவினை ஒரு பல்கலைகழகப் பட்டப்படிப்பாய் நினைத்து படிக்கும் பதிவுலக பரபரப்பே... எங்கள் தமிழின சுறுசுறுப்பே....

பதிவுகள் என்பது பிளாக் என அழைக்கப்பட்டு ஆங்கில மொழியில் லாக் ஆகி கிடந்த அந்த இருண்ட காலத்தை தமிழ் பதிவிடும் உயர் உள்ளங்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.. ஆங்கில கீ போர்ட்களில் தமிழ் போர் தொடுத்து... அழகு தமிழில் பதிவிட துவங்கியதில் சங்கத்து முன்னணியினர் பலரும் முதல் வரிசையில் நின்றது தமிழன் ஆன் சைட் சென்று கொடி நாட்டிய தலங்கள் அனைத்தும் மறுக்க முடியாத வரலாறு

பதிவு தேய்கிறது பின்னூட்டம் வாழ்கிறது... நம் பதிவுலக பேராசான் கொத்தனார் நமக்கு விடுத்த கூக்குரல்... நம் சங்கத்து பதிவுலக போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்ப்ட வேண்டிய வாக்கியம்...

அனானியின் பின்னூட்டத்தில் கும்மியைக் காண்போம்...அந்த கும்மிகளால் ஒலிக்கும் ஒவ்வொரு சிரிப்பிலும் இறைவனைக் காண்போம் சங்கத்து தளபதியார் ஆரம்பித்த இந்த கும்மிக் குரல் இன்னும் பதிவுலகின் வரலாற்று பக்கங்களில் ஆங்காங்கே எதிரொலித்த வண்ணமே உள்ளது... இதை உங்களால் மறுக்க முடியுமா???

ஒன்றே பதிவு அதில் ஒருவனே பின்னூட்டம் என்ற பொது தத்துவங்களை நாட்டுக்குச் நவின்றது சங்கம் என்பதை ஆன்றோர் பெருமக்கள் மறந்து விடக்கூடாது.. சான்றோர் சபையில் சொல் பிறழ கூடாது.... என்பதை இங்கு உயர் தமிழ் பதிவு குடிமக்களின் நெஞ்சுக்கு உரத்த சேதியாகச் சொல்லிக் கொள்ள விழைகிறேன்...

கூட்டணி என்பது ஒரு குடும்பம் என்பதையும்....குடும்பமே கூட்டணி.... என்பதையும்....சங்கத் 'தல' வரலாறு அறிந்தவர்கள் சாட்சியாக சொல்லுவர்... கூட்டணி பதிவின் கொள்கை கொடி தரணியெங்கும் பட்டொளி வீசி பறப்பதை இன்று கண்டு மகிழாத தமிழ் பதிவிடும் நெஞ்சம் உண்டா....

தனி பதிவுகளின் ஆவர்த்தனம் கோலோச்சியக் காலக்கட்டத்தில் சமத்துவம்.. சமநீதி.. சமப் பின்னூட்டம் அதன் மூலம் தேசிய நீரோட்டம் என உன்னதக் கருத்துக்களை ஊருக்குச் சொன்ன ஈரோட்டு உழவன் வளர்த்தெடுத்த சங்கத்தின் மீதா திராவகம் வீசுவது... சிந்திக்க வேண்டும்... சித்தம் கலங்கியவர் செய்யும் செயல்களுக்கு காரணம் தேடக் கூடாது...

பாண்டிய மன்னர்கள் கண்டது மூன்று தமிழ் சங்கம்.. இன்று பதிவுலகம் காண்பது தம்பி ஜொள்ளுபாண்டி சிறந்த நான்காம் நவீன தமிழ் சங்கம்.. இயல் தமிழ் ,இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனத் தமிழ் வளர்த்தனர் அந்த பாண்டிகள்.... நம் பாசத்துக்குரிய இந்த தம்பி பாண்டி வாலிப நாட்டின் இதய இடுக்குகளில் குந்தி குனிந்து கொண்டிருந்த இன்னொரு தமிழாம் "ஜொள்ளு" தலை நிமிரச் செய்த உணர்வான உண்மை பெருமைக்குச் சொந்தக்காரன் என்பதை மறுக்க முடியுமா...

வா ரணம் ஆயிரம்... என ரணங்களைத் தாங்க பழகிய இரும்பு நெஞ்சுகளுக்கு நாங்கள் சொந்தக்காரகள்... அந்த இரும்பு நெஞ்சுக்குள் ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களைப் பற்றியே சிந்திக்கும் உங்கள் பதிவ்லக தொண்டர்கள் நாங்கள்... போர் என்றாலும் முதல் வரிசையிலும்... வார் என்றால் வரிந்துக் கட்டியும் நிற்பவர்கள் இந்த வ.வா.சங்கத்தின் சிங்கங்கள்....

ஏ கன் எடுத்து எங்களைச் சுட்டாலும் அந்த தோட்டாவுக்கும் தோழமை பாராட்டும் உயர் தலயின் வழி நடப்பவர்கள் நாங்கள்...

வில்லு பூட்டி வந்தவரையும் சொல்லு கூட்டி பேசாத பழந்தமிழ் பண்பு கொண்டவர்கள் நாங்கள்

மர்ம யோகிகளின் மூடப் பேச்சுகளால் விழையாது நீதி... அதனால் கிளம்பப் போவது வெறும் பீதி...அவர்கள் கேள்விகளால் வேள்வி செய்வார்....வினாக்களால் வினை செய்வார்....ஒரு உன்னத கொள்கை பயணத்தைத் தடை செய்ய இப்படி வித்தைகள் பல புரிவார்கள்...அதில் எல்லாம் என் பாசத்துக்குரிய..உயிரினும் மேலான பதிவுலக பரபரப்புகளே சிக்கி சிதறாதீர்கள்

மக்கள் பணி அழைக்கிறது... நமக்கு நாமே பின்னூட்டமிட்டு நம் பதிவுகளை இன்னும் பரபரப்பாக்கும் திட்டம் இதோ துவங்கப்பட்டு வெற்றியடைந்து விட்டது.. அந்த வெற்றியை மேலும் சிறப்புறச் செய்ய உன் பங்கு அவசியம்...

வா... ஒரு எந்திரனாய் எழும்பு... வசூல் வேட்டைக்கு கிளம்பு...பதிவு புரியாவிட்டால் கொஞ்சம் குழம்பு... பரவாயில்லை.. புரிந்தவுடன் சோர்வினை அகற்றி சிற்று எறும்பை பணியாற்ற களம் காண வா....வா...வா...

அண்ணன் நெஞ்சுக்கு சொல்லிய சேதி இப்போதைக்கு முற்றும்...

பாலைவன பகலவன் பெனத்தலார் கொள்கை நாமம் வாழ்க... வாழ்க...
பேராசான் கொத்தனார் நமக்கு இட்ட நாமம் வாழ்க.. வாழ்க...

Monday, December 15, 2008

நெஞ்சுக்கு சேதி - பாகம் 1

பதிவுலக மாமணிகளே... பின்னூட்டப் பெருமணிகளே...கேள்விகள் ஒன்றும் எனக்கு புதிதல்லவே.. நான் நடந்து வந்த பாதையில் நாகங்களும் ஓடி வந்த ஹவேக்களில் ஒலமிட்ட ஒநாய்களும் ஏராளம்..தாராளம்..இந்தக் கேள்விகளில் ஒலிக்கும் ஏளனம் கூட எனக்கு பூபாளம்..

என் பொது வாழ்க்கை ஆசான் பாலைவன பகலவன் பெனத்தலாரும்..என் அண்ணன் ஜெர்சி தலைவன் இலவசனாரும் எனக்குக் காட்டிய வழியில் இது வரை இஞ்ச் அளவு கூட இப்படி அப்படி நகராமல் நடந்து கொண்டிருப்பவன் நான்...

பதிவுலகமும் அதைச் சார்ந்த ஆதி பதிவர்களின் வரலாறு புவியியல் புள்ளியியல் எதுவும் அறியாமல் காலம் மடியில் கொடுத்தக் கணிணியை விரலிடுக்கின் வித்தைகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சீமான்களும் கோமான்களும் கனவான்களும் கேள்வி என்ன... கேலி என்ன....விட்டால் பதிவுலகையேக் காலி கூடச் செய்வார்கள் போலிருக்கிறது...

பொறுமை காப்போம் பொறுத்துப் போவோம் என பல அன்பு நெஞ்சங்களும் பாச உள்ளங்களும் எனக்கும் மடலும் குடலும் ஆம் நல்ல அசைவ விருந்தில் முக்கிய பதார்த்தம் இட்டு கேட்டுக் கொண்டார்கள்.. சங்கத்தின் ஊது குழலாய் ஓயாமல் ஒலித்த என்னைப் பார்த்தூஉழல் ஊழல் என குழல் ஊத இன்று கிளம்பியிருக்கும் கண்ணபிரான்களின் கேள்விகளைப் படித்தப் போது...சங்கத்துச் சிங்கங்களே போர்வாளாம் எனக்கு இதயம் இடித்தது...கண்கள் பனித்தன....

போர்வாளுக்கு இப்படி என்றால்... ஒரு சாதரண அடிப்படை தொண்டனுக்கு எப்படி இருக்கும்... போர்வாளை தங்கள் தவப்புதல்வனாய் நினைக்கும் தாய்மார்களும்... அண்ணனாக கொண்டாடும் தங்கையரும் தாங்குவரா... சிந்தித்தேன்.. சித்தம் தெளிந்தேன்...களம் எனக்கு புதிதல்ல...பதிவு மேடை எனக்கு பஞ்சு மெத்தை..அதில் விழும் கமெண்ட்கள் என் மீது தெளிக்கப் படும் பன்னீர் புஷ்பங்கள் என எண்ணுபவன் நான்...


இன்று கேள்வி கேட்க கண்ணி தொடும் மேதாவிகள்.... சங்கம் வளர்ந்த வரலாறு அறிவார்களா...அவர்கள் எல்லாம் வேலை பார்க்கவே அலுவலகம் சென்றவ்ர்கள்... பன்னிரெண்டு மணி நேரம் உழைத்து அதற்கு பின் அவர் தம் மேலதிகாரிக்கு வளைத்து நெளித்து கூனி குறுகியவர்கள்... பதிவுலகமே வாழ்க்கை என பல நாட்கள் பணி செய்ய மறந்து புராஜ்க்ட்டைத் துறந்து..பெஞ்சில் அமர்ந்து.. அப்புரேசல் ஆப்புரேசல்களாய் மாற்றி.... அதனால் கிடைத்த வசைகளை இசையென மாற்றி கச்சேரி படைத்தவன் இந்தப் போர்வாள் என்பதாய் உண்ர்வார்களா...

அலுவலக கீ போர்ட்களுக்கும் அழகு தமிழ் உடுத்தி தமிழ் வளர்த்த பரம்பரையிடம் கேள்வி கேட்கிறீர்கள்..

பந்தல் போட்டு பதிவு வளர்த்த உங்களுக்கு சென்னை வீதி கச்சேரிகள் வைத்தவனிடம் எடக்கு கேள்விகள் கேட்க மட்டும் தான் தெரியும்...

ம்ம்ம்ம் மூன்று எழுத்துக்கும் தமிழக அரசியலுக்கும் உள்ள நெருக்கம் உம் கண்ணை மறைக்கிறதோ... ஆம்ஸ்ட்ராடாம்.. பாரீஸ் எனக் கண்ட இடத்தில் எல்லாம் கைத் தூக்கிய வண்ணம் புகைப்ப்ட கருவிக்கு வசிகரமாய் விருந்தளித்து உலகம் சுற்றும் வாலிபனாக ஆக முடியாது... அது பகல் கனவு... அதனால் கிடைக்காமல் போகலாம் உமக்கு அடுத்த வேளை உணவு...

அரிதாரம் பூசியதால் அரியணை ஏறலாம்... போர்வாள் போருக்கு வரவில்லை.. வாளோரம் துரு பிடித்திருக்கும்... அந்த துருவை வைத்து போர்வாளுக்கு பதிவுலகில் இருந்து துறவு கொடுக்கலாம் என எண்ணம் கொண்டீரோ....

நயகாரா ஓரமாய் நீங்கள் அமர்ந்து வயாக்ரா பற்றி நடத்திய ஆராய்ச்சி என்ன என்று என்னாலும் கேள்வி கேட்க முடியும்...கேள்விக்கு கேள்வி பதிலாகாது என நான் பாடம் படித்திருக்கிறேன்... அதனால் நாக் காக்கிறேன்... நாணயமாய் இருக்கிறேன்...

வாலிபத் தலைவன் வாலிபால் இளைஞன் கைப்புள்ள மால்கேட்டில் சிறைப்பட்ட போது சதிகாரர்களின் கையில் சங்கத்து மெயின் கேட் சாவி சிக்காமல் காத்தச் சரித்திரப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு வந்து கேள்வி கேளுங்கள்

பாலைவனத் தேசத்துக்கு பதிவுலக சூப்பர் ஸ்டார் விவாஜியார் பிடித்து அனுப்பப் பட்டப் போது அந்த விமானத்தில் அழகிகள் புடைச் சூழ அவர் அவதிப் பட்ட அல்லல் கதைகளை அயலவர் ஆசைக் காட்டி பதிவெழுதச் சொன்னப்போது கூட அதற்கெல்லாம் அசையாதவன் இந்த போர்வாள்

பல முக சித்தர் பல ஐடி பித்தர் அருமை நண்பர் தளபதியாரின் ஐடிகள் எத்தனை என்று என்னை விலை பேச வந்தவர்கள் புறமுதுகிட்டு ஓடிய விவரங்களைக் கேட்டு விட்டு வந்து கேள்வி கேளுங்கள்

தாவணி கனவுகளின் மொத்தக் காதலன் வாலிப தேசத்தின் முதல் குடிமகன் ஜொள்ளு பாண்டியின் காதல் டைரி குறிப்புகளுக்கு பொழிப்புரை புரியுமா உங்களுக்கு... முடிந்தால் புரிந்து கொண்டு வந்து கேள்வி கேளுங்கள்

நீங்கள் வரிசைக் கட்டி கேள்வி கேட்டு விட்டீர்கள்....

நெஞ்சுக்குள் பெய்யுது மாமழை... நீருக்குள் முழ்குது தாமரை....ஆம் இதயம் இடித்தது.. கண்கள் பனித்தன...

சத்தியத்தின் சோதனை துவங்கி விட்டது.... யுத்தம் துவங்கி விட்டது.... பதிவு போடும் நல்லுலகமே கேளுங்கள்... போர்வாள் முழக்கம்... உங்கள் நெஞ்சுக்கு ஒரு சேதி சொல்ல கிளம்பி விட்டேன்....

வாழ்க பதிவு... வளர்க பின்னூட்டம்... எழுக சங்கம்.. ஒழிக துரோகம்....

ஊழல் பதிவர் தேவ் - சில பகிரங்கக் கேள்விகள்!

ஜங்கத்தின் ஜிங்கம், சங்கப் போர்வெல்...ச்சே போர்வாள், அண்ணன் தேவ்-க்கு சில பகிரங்கக் கேள்விகள்!

1. எப்போ வருவார், எப்படி வருவார்-ன்னு தெரியாத தலைவர் கூட எந்திரன் பட ஷூட்டிங்கைத் தொடங்கிட்டாரு! ஆனால் பல படங்களுக்குப் பூஜை போட்டு, பேமன்ட்டை மட்டும் லம்ப்பா வாங்கிய நீங்க, இப்போ "தலைமறைவா" என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க?

2. அத்தனை படத்தின் கதாநாயகிகளையும் அவர்கள் அம்மாக்களையும் அப்பவே புக் பண்ண நீங்க, ஏன் இன்னும் கதாநாயகர்களையும் அவர்கள் அப்பாக்களையும் புக் பண்ணாம இருக்கீங்க?

3. போன மாசம் அந்தக் கதாநாயகிகளில் இரண்டு பேர், தங்கள் சீமந்தப் பத்திரிகையவே சங்கத்துக்கு அனுப்பி இருக்காங்க!
இதைப் பார்த்துட்டு மனமொடிந்து போன தளபதி சிபி, சங்கத்தின் 22ஆம் மாடியில் இருந்து தற்கொலை செஞ்சுக்கப் பாத்தாரு!
ஆனா ஆஸ்பத்திரியில் இருந்த சிபிக்கு, ஒரு சாத்துக்குடிப் பழம் கூட நீங்க அனுப்பி வைக்காததன் காரணம் என்ன?

4.
* விசாவதாரம்,
* பாபாகன்,
* ஷூ லேசு,ப்ரெளன் சாக்சு,
* அஞ்சரைக்குள்ள வண்டியிலே ராம்
* வெள்ளை மாளிகை 305-இல் கேஆரெஸ்,
* பதிவர் ஜிராவின் அவனோட ராவுகள்,
- இது போன்ற ஒலகத் தரம் வாய்ந்த படங்களுக்கு போட்ட ஒப்பந்தத்தின் கதி என்ன ஆச்சு?

5. சங்கத்தின் என்றும் பதினாறான எங்கள் ராயலை இந்தியாவில் இருந்து இந்தோனிஷியாவுக்கு ஏன் நாடு கடத்தினீங்க? அவன் செய்த குற்றம் தான் என்ன?

6. நீங்க வேலூர் ஜெயிலில் இருந்த போது, உங்க சார்பா பதிவு போட்ட CHINNA BOSS, உங்க வாரிசா? பினாமியா? போலியா?

7. சுட்டி விகடனில் வந்த உங்க "ஜொள்ளுப் பேட்டை"க்கு, சென்சாரில் முறையான அனுமதி வாங்கினீங்களா?

8. கோவியின் நாடக சபா-ன்னு நீங்க பதிவு போட்ட ஒரே காரணத்தால், பதிவர் கோவி.கண்ணன் இன்று விளிம்பு நிலைப் பதிவர் ஆகி விட்டார்!
கண்ட விவசாயிகளும் அவருக்கு Blog-O-Graphy போட்டு Mammo-graphy செய்யறாங்க!

விளிம்பு நிலைப் பதிவர், கோவி. கண்ணனின் மறு வாழ்வுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

9. முன்னாள் அட்லாஸ் சிங்கங்களான
* ரிஷான் ஷெரீப்,
* இச்-சின்னப்பையன்,
* ஆயில்யன்,
* கானா பிரபா
என்ற நால்வர் கூட்டணி, உங்க கிட்ட சங்கத்தை விலை பேசறாங்களாமே? அது உண்மையா?

10. சங்கத்தின் ரெண்டு போட்டியை, எதுக்கு மூன்றில் நடத்துனீங்க?
நீங்க "அதுல" மட்டும் தானே வீக்கு? கணக்குலயுமா வீக்கு?


மேற்கண்ட ஒவ்வொரு கேள்விக்கும் தேவ் அண்ணாத்த மட்டுமே பதில் சொல்லணும்-னு அவசியம் இல்லை! அவர் சார்பா யார் வேணும்னாலும் பதில் சொல்லலாம்!
குறிப்பா, அனானி பதில்களுக்கு அதிக மதிப்பெண்கள் உண்டு-ன்னு சொல்லிக்க கடமைப்பட்டுள்ளேன்! :)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தேவ், இங்கு வரும் தவறான பதில்களைத் திருத்தலாம்! தன் தரப்பு பதிலைத் தாராளமாகச் சொல்லலாம்! அதற்கான முழு உரிமையும் அவருக்கு கொடுக்கிறோம்!

தேவ் அண்ணனின் ஊழலை எதிர்த்து, தமிழ்ப் பதிவர்கள் தங்கள் தார்மீகக் கடமையாத்தணும்-ன்னு சங்கத்துச் சிங்கங்களின் சார்பாக கர்ஜித்து அமைகிறேன்!
2009-இல் சங்கம் மந்திரிசபையின் விஸ்தரிப்புக்கு இதெல்லாம் உதவும்!

தேவ் "நாமம்" வாழ்க!
நன்றி! வணக்கம்!
(மற்ற சிங்கங்களின் மேலும் கேள்விகள்/வேள்விகள் தொடரும்...
இப்படிக்கு ஆண்மீகப் பதிவர், கேஆரெஸ்)

Wednesday, December 3, 2008

அட்டுபிகரை டாவடிப்போர் சங்கத்தில் சில்ப்பாகுமார்.

ன்று, அண்ணன் சில்ப்பாகுமார் அவர்கள் வழக்கம்போல் பியூரெட் கழுவும் பி.ஹெச்.டி -பிகருக்கு நூல் விட்டுக்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக மின்மடலை பார்க்குமாறு ஒரு மர்மக்குரல் எச்சரித்துவிட்டு தொடர்பை துண்டித்தது. பேஸ்த்தடிச்சுபோய் மெயில் செக் பண்ணா, 'அட்டு பிகரை டாவடிப்போர்' சங்கத்தில் இந்த மாத சில்ப்பாகுமாராக செயல்படுமாறு அழைப்பு வந்திருந்தது. கூடவே சங்கத்து விதிமுறைகள் நிறைந்த கையேடும் அனுப்பப்பட்டிருந்தது. அவ்விதிமுறைகளை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே தருகிறார் அண்ணன் சில்ப்பா.


1. அ.டா. சங்கத்து சில்ப்பா குமாராக ஒப்புக்கொண்டமைக்கு நன்றி

2. உங்களை தொடர்பு கொண்டு சில்ப்பா குமாராக பரிந்துரைத்த நபர் இனிமேல் MM என்று அழைக்கப்படுவார்(மாப்ள பெஞ்ச் மன்னார்சாமி). உங்களுக்கும் அ.டா. சங்கத்திற்கும் உறவுப்பாலமாக MM இருப்பார்.

3. சில்ப்பாகுமாராக ஒப்புக்கொண்ட மாதத்தில், நீங்கள் குறைந்த பட்சம், அதாவது வாரம் ஒன்று என்ற வீதம் 4 அட்டுகளையாவது மடிக்க வேண்டும். MMன் ஆலோசனைப்படி அதிக பிகர்களை மடிப்பதை அ.டா. சங்கம் வரவேற்கிறது.

4. நீங்கள் மடித்த பிகரை காலேஜ் காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு மாப்ள பெஞ்சுக்கு அறிவியுங்கள். பிகரை அங்கீகரிக்கும் உரிமை மன்னார்சாமிக்கே உண்டு. நீங்களாகவே டாவடிக்கும் உரிமை உங்களுக்கு அளிக்கப்பட்டால் கீழ்கண்ட விதிகளுக்கு உட்படுதல் வேண்டும்.

அ. அட்டுபிகரை எந்த நேரத்திலும் அத்து விட முழு உரிமை மன்னார்சாமிக்கு உண்டு.

ஆ. பிகரிடம் பணம் பறிப்பது, பர்சை நோண்டுவது, அத்துமீறுவது, இன்னொரு பிகரிடம் சென்று டபுள் ஆக்ட் கொடுப்பது கூடாது.

இ. மடித்த பிகரை வைத்து பந்தா பண்ணுவது, சக சில்பாகுமாரை வெறுப்பேற்றுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்


5. நீங்கள் அ.டா.சங்க உறுப்பினராக இருக்கும் காரணத்தினால் உங்கள் பிகர்கள் தானாகவே மற்ற பொறாமை பொன்னுசாமிகளுடன் பழக அனுமதி உண்டு. நீங்கள் ஆட்சேபிக்கும் பட்சத்தில் உங்கள் அட்டு பிகர், விதி 4 ன் கீழ் உட்படுதல் அவசியம்.

6. அ.டா. சங்கத்தின் நோக்கமான டாவுக்கு உங்கள் பிகர்களை உடன்படச்செய்யுமாறு வேண்டுகிறோம்.

7. மேற்கண்ட விதிகளுக்கு உட்படாவிடில் உங்களை எந்த நேரத்திலும் உங்கள் பிகரிடம் போட்டுகொடுக்கவோ, பிகரை தூண்டிவிட்டு வேடிக்கைபார்க்கவோ மாப்ள பெஞ்சுக்கு முழு உரிமை உண்டு.

8. உங்களுக்கு அ.டா'வில் (சாதா) ஜிப்பா உரிமை மட்டுமே அளிக்கப்படும், அதாவது அட்டுகளை டாவடிக்கும் உரிமை மட்டுமே வழங்கப்படுகிறது. உங்கள் பிகரின் பிரன்சுகளை டாவடிக்கும் சில்க் ஜிப்பா உரிமை மாப்ள பென்ச் மன்னார்சாமிக்கே உண்டு.

9. மேற்பட்ட விதிகளுக்கு உட்பட்டு சில்பா குமாராக செயல்பட அ.டா.சங்கம் அன்புடன் அழைக்கிறது, புரிதலுக்கு நன்றி.

Tuesday, December 2, 2008

இட்லிவடை யாரு? ஆதாரத்துடன் விளக்கம்

இட்லிவடை யாருன்னு தெரியாம மண்டை காய்ஞ்சி போயிருக்கீங்களா? ஆதாரமே தர்றோம் பாருங்க. இட்லிவடை யாருன்னு மக்கள் சந்தேகப்பட்டாங்க?
  1. கிருபா சங்கர்
  2. பாபா(பாஸ்டன் பாலாஜி)
  3. ஐகாரஸ் பிரகாஸ்
  4. பாரா
  5. பத்ரி
  6. பெனாத்தலார்
  7. ஹரன் பிரசன்னா

இதுல பாபா, ஐகாரஸ், பத்ரி எந்தத்திரட்டியிலும் இணைச்சுக்கிறது இல்லே(சங்கமத்துல மட்டும் Fame categoryல நானே இணைச்சுகிட்டேன்-இளா).

இட்லி வடை என்ன சொல்றாருன்னா "இட்லிவடை எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக் கொள்வதில்லை. அவர்களாக இணைத்துக்கொண்டால் நான் பொறுப்பு இல்லை. "

இதுகொஞ்சம் இவுங்களுக்குப் பொதுவான விசயம். மீதிப் பேரை இப்போதைக்கு தள்ளி வெப்போம். கில்லி கோஷ்டியில பாபா, ஐகாரஸ், பாபா, பத்ரி இருக்காங்க. இது எதுக்குன்னு கேட்காதீங்க, மேட்டர் இருக்கு. அப்படியே தமிழிஷ்ல யாரு இ.வ'வை இணைக்கிறதுன்னு பார்த்தா கில்லி'ன்னு ஒரு பேரு.

அதனால மக்களே பாபா, ஐகாரஸ், பாபா, பத்ரி இவுங்கதான்னு சங்கம் சொல்ல வரலே.... நீங்களே முடிவு பண்ணிக்குங்க. சங்கம் இதுக்குப் பொறுப்பாவாது.

Saturday, November 22, 2008

தமிழ்மணம்-போதை ஏன்?-ஒரு ஆய்வு


படத்தைப் பெரிசு பண்ணிப்பாருங்க, விவரம் புரியும்....

Friday, November 7, 2008

குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007 - பரபரப்பு தகவல்கள்

வீரத்தளபதி நடித்து அடுத்து மக்கள் எல்லாரும் ஆவலோடு எதிர்பார்க்கும் குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007 படத்தைப் பற்றிய செய்திகளை ஆவலோடு எதிர்பார்க்கும் அண்ணன் ஜே,கே.ஆர் ரசிகர்களூக்கும் மக்களுக்கும் தான் இந்தப் பதிவு... படத்தின் இயக்குனர் தேவ்.. சிபியிடம் கூறிய சிறப்பு தகவல்கள் உங்களுக்காக...

சிபி : அது என்ன குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007 ?

தேவ்: இது ஒரு த்ரில்லர்ங்க...படத்தோட பீல் டைட்டிலே வரணும்ன்னு அண்ணன் ஆசைப்பட்டாரு..அதான் அப்படி வச்சிருக்கோம்..

சிபி: குவாட்டர்ன்னா வேற மேட்டர் மாதிரி இல்ல இருக்கு...இது எப்படி எல்லா மக்களையும் குறிப்பா தாய்குலங்களையும் சிறுவர்களையும் கவரும் சொல்லுங்க...

தேவ்: இந்த குவாட்டர் வேறங்க... இது ஒரு பாசப்பிணைப்புமிக்க கதை...ஒரு மனுசனோடு வாழ்க்கையோட..அவன் ஸ்கூல் போற காலம் முதல் ஆபிசில் ஆபிசரா ஆகி மேலே மேல போற வரைக்கும் காலைக் கட்டியிழுக்கும் கதை...

சிபி: புரியல்லயே...

தேவ்: அதாவது... ஒரு அஞ்சு வயசு பையனா நம்ம வீரத்தளபதி ஸ்கூலுக்கு போறார்..அப்போ அவர் பர்த்டேக்கு அவங்க அம்மா அப்பா.. ஆரஞ்ச் கலர் சட்டையும் பிங்க் கலர் டிராயரும் வாங்கித் தர்றாங்க... சிவப்பு கலர் ஷூ வாங்கி தர்றார்....அந்த ஷூவுக்கு....

சிபி: கருப்பு லேசா....

தேவ்: இல்ல... ப்ளாரண்ஸண்ட் க்ரீன் லேசு.. வாங்கித் தர்றார் அவங்க தாத்தா...அந்த லேசு தான் நம்ம படத்துக்கு முக்கிய கேரக்டர்...லேசு நம்ம அண்ணனோடவே வளருது.... அதை டைட்டில் போடும் போது பின்னாடியே காட்டுறோம்... லேசு மேல அண்ணனுக்கு இருக்கப் பாசம் பாத்து கண்டிப்பா கிரவுட் பீல் ஆவும்.. முக்கியமா லேடீஸ் கன்பர்மா பீல் ஆவாங்க...

சிபி: ம்ம்ம் அப்புறம்...

தேவ்: டைட்டில் முடியவும்...படத்தோட ஓப்பனிங்...அப்போ அண்ணனுக்கு ப்ர்த் டே...லேசுக்கு அது 25வது பர்த்டே...சாங் இருக்கு...லேசு சாங் முடிவுல்ல காணாமப் போயிடுது...அங்கே தான் கதையோட நாட்... குவாட்டர் அதாவது 25வது பர்த்டேவுல்ல லேசு மிஸ் ஆவுது...அதை தேடி அண்ணன் ஒரு 007ஆ கிளம்புறார்.. அதான் குவாட்டர் அடிச்ச ஷூ லேசு...

சிபி: ஒரு லேசு போய் தேடணுமா...

தேவ்: கேப்பீங்கன்னு தெரியும்...ஆனா அதுல்ல ஒரு முக்கிய நாட் இருக்கு... அண்ணனோட தாத்தா சாகும் போது ஒரு ரகசியம் சொல்லுறார்...அது என்னங்கறது தான் சஸ்பென் ஸ்.. அது லேசு..அப்புறம் அதோட சக்தி பத்தி... குவாட்டர் அடிச்ச பிறகு அந்த லேசு அபார சக்தி படைச்சதா மாறிடும்...அது செல்ப் ஆக்டிவேட்டட் நியுக்கிளியர் ரியாக்டர் ஒயரா மாறிடும்....

சிபி: அட்ரா சக்க.. டெக்னிக்கலாக் கூட மிரட்டலா இருக்கும் போல இருக்கே,,,

தேவ்: கண்டிப்பா... இன்னிக்கு தேதியிலே ஹாலிவுட்டே மிரள்ற மாதிரி லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாம் யூஸ் பண்ணப் போறோம்.. அதுக்கு எங்க புரொட்யுசர்ஸ் அன்பு அண்ணன் கே.ஆர்.எஸ் சாரும்... ராயல் ராம் சாரும் ஓ.கே சொல்லிட்டாங்க.. க்ராபிக்ஸ் மட்டும் 10 கோடி பட்ஜெட்...

சிபி: ஸ்டண்ட் எல்லாம் எப்படி?

தேவ்: இதுல்ல அண்ணன் வந்து ஒரு ஸ்காட்லாண்ட் யார்ட் சீக்ரெட் ஸ்பையா வர்றார்... சோ ஸ்டண்ட் எல்லாம் பிரமாதமா இருக்கும்... ஒரு கட்டத்துல்ல நிலா டு நிலா அண்ணன் தாவி பைட் பண்ற ஒரு பைட் இருக்கு... அதாவது குளோபல் வார்மிங் எதிர்த்து பைட் பண்ணுவார்....

சிபி: அது எப்படிஙக்.. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் போயிடதா...

தேவ்: கதையே அங்கே தான் இருக்கு... அண்ணன் ரேஞ்சுக்கு அண்ணனோட லேசை எடுக்க எந்த மனுசனுக்கு தைரியம் வரும்....

சிபி: ஆமா ஷூ பக்கம் போனாலே செத்துருவாங்களே...

தேவ்:அதைச் சொல்லல்ல...அண்ணனுக்கு சரியா டப் கொடுக்க எந்த ஆக்டரும் இல்ல.. சோ நம்ம படத்துல்ல அண்ணனுக்கு வில்லன்ஸ் எல்லாம் ஏலியன்ஸ் ஆல் பிளானட்ஸ் அட்டாக் பண்றாங்க க்ளைமேக்ஸ்ல்ல... அது பாக்கும் போது உங்களுக்கே புரியம்... மயிர் கூச்சேறியும்....

சிபி: சரி அம்மா..தங்க்ச்சி சென்டிமெண்ட் எல்லாம்,,.,

தேவ்: இருக்கு... அம்மா வோட செருப்பு தங்கச்சியோட ப்ளாரஸண்ட் பிங்க் ரிப்பன் தொலையுறது அதை கண்டுபிடிக்க அண்ணன் போராடுறதுன்னு ஒரு மனசைப் பிசையுற சடி கதையும் இருக்கு...

சிபி: காதல்...

தேவ்: அண்ணன் மாதிரி ஒரு யூத் நடிகர்...அவர் பின்னாடி இருக்கது எல்லாமே யூத்.. அதுவும் ஓரி இல்லாத... யூத்.. லவ் இல்லாம படமா...

சிபி: அண்ணன் லவ் பண்ணுறதும் ஏலியன் பொண்ணையா... ஜோடி பொருத்தம் கரெக்ட்டா இருக்குமே.. எத்தனை ஜோடிங்க அண்ணனுக்கு

தேவ்: நோ..நோ..அண்ணன் இதுல்ல் ஜேம்ஸ் பாண்ட் மாதிரி கேரக்டர் சோ பாண்ட் கேர்ள்ஸ் டைப்ல்ல ஹாட்டா இலியானா...தமன்னா...இப்படி ட்ரை பண்ணிட்டு இருக்கோம்...

சிபி: நல்ல வேளை நயந்தாரா எஸ்கேப்டா சாமி..ம்ம்ம் படத்துல்ல காமெடி...

தேவ்: என்னங்க இப்படி ஒரு கேள்வி...

சிபி: தப்புத் தான் அண்ணன் சீரியசா சீறுனாவே காமெடியாத் தான் இருக்கும்... இருந்தாலும்...

தேவ்: காமெடிக்கு ரஜினி...

சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா... அவர் ரசிகர்கள் உங்களைச் சும்மா விட மாட்டாங்க....

தேவ்: சிபி கூல்... காமெடிக்கு ரஜினி சார் படத்துப் பாணியிலே அண்ணனே பண்ணிடுவார்ன்னு சொல்ல வந்தேன்.. அதுக்குள்ளே என்னைக் கட்டம் கட்டுறீங்களே...

சிபி: மீசிக் பத்தி சொல்லவே இல்லயே...

தேவ்: அண்ணன் படத்து மீசிக்ன்னா சின்ன குழந்தையும் ரசிக்கணுமே... போன படத்துல்ல நிலா நிலா ஓடி வா போட்ட மாதிரி இதுல்ல கொல கொலயா முந்தரிக்கா நரியே நரியே சுத்தி வா... அப்புறம் ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே ஒரு பூ பூத்த்து,,,, போல நல்ல தமிழ் பாட்டோட,.,, ஜாக் அன்ட் ஜில் வென்ட் அப் தெ ஹில் பாட்டும் இருக்கு

சிபி: ஆகா... பாட்டு கேட்டா ரைம்ஸ் சொல்லுறாங்களே... சரிங்கண்ணா... படம் எப்போ ரிலீஸ்

தேவ்: எந்திரன் வரும் நம்ம குவாட்டர் அடிச்ச ஷூ லேசு 007ம் வரும்ங்கோ

சிபி: படம் பத்தி ஒன் லைன்...

தேவ்: ரொமான்டிக்கா.. காமெடியா... ஆன்மீகமா... சென்டிமென்டா.. த்ரிலிங்கா.. ஒரு சயின்ஸ் பிக்சன்...

இதைக் கேட்டு சிபி மயக்கம் போட்டு விழுகிறார்... படிச்சவங்க மயக்கம் போட்ட சொந்த முயற்சியிலே முகத்துல்ல தண்ணி தெளிச்சு எந்திரிச்சிக்கங்கோ

Thursday, November 6, 2008

குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007

ஜே.கே.பாண்ட் நடிக்கும்

குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007

சங்கத்தின் வாசலில் இப்படி ஒரு மெகா சைஸ் போஸ்ட்டர் ஓட்டப்பட்டது....அதிகாலை முதலே சங்கத்தின் முன்பு மக்கள் ( வாலிபக் கூட்டம் தான்) மொய்த்தது... வாலிபிகளின் வரவைக் கண்காணிக்க தனி படை அமைத்து அதன் தலைமையை பாண்டியே ஏற்று கொண்டது தனி பதிவி மேட்டர்.

ஜப்பான் சோனி டிவி... இங்கிலாந்து பிபிசி டிவி அமெரிக்கா சி.என்.என்... எல்லாமும் ஓபாமாவின் வெற்றியைக் கூட கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு சங்கம் முன்னால் தவமாய் தவமிருந்தது...

சங்கத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் பதவி ஏற்ற கப்பி கையில் லேப் டாப்போடு வந்து ஏரியாவை மேப் போட்டு அளந்துக் கொண்டிருந்தார்...

அண்ணன் வர்றார்...அண்ணன் வர்றார்.... சவுண்ட் பலமா ஒலிக்க...
சங்கத்தின் பின்னால் டிஜிட்டல் கட் அவுட்கள் டக்கு டக்குன்னு முளைக்க... வானவெடிகள் அதிர ஏரியாவே அல்லோலப்பட.... துண்டால் கூட்டத்தை விலக்கியப் படி தலக் கைப்பு முன்னால் வர... பின்னால் நாடே பாத்து பயங்கரமாய் மிரண்டு போயிருக்கும் அண்ணன் வீரத்தளபதி ஒரு ரொமான்டிக் லுக் விட்டப் படி வர்றார்...

பத்திரிக்கையாளர்களைக் கண்டவுடன் கண்டப்படி உணர்ச்சிவசப்பட்டு கரன்சிகளை கக்கத்தில் இருந்து வீரத்தளபதி நீட்ட பிரஸ் மீட் பிரஷ் ஜூஸோடு ஸ்டார்ட் ஆகிறது...
ஏய் கைப்புஸ் அந்த அமெரிக்கன் மேனுக்கு டாலர்ஸ்ல்ல செட்டில் பண்ணு... இங்கிலாண்ட் கைக்கு பவுண்ட்ல்ல அமவுண்ட் கொடுத்துரு... ஓ.கே.. என வீரத்தளபதி பொளந்துக் கட்டி பேட்டிக்கு தயார் ஆகிறார்...

வீரத்தளபதியின் வலது கையாக திகழும் நாகை சிவா... மைக் பிடித்து....
"என் பேர் வா..சிவா... என்ன எல்லாரும் செல்லமாப் புலின்னு கூப்பிடுவாங்க...

இப்போ நாம இங்கே வந்து இருக்கது.. உலகப் புகழ் நாயகன் அண்ணன் தென்னகத்தின் அல் பாசினோ.... "

"கொய்யாலே அண்ணன் கிட்டக் காசு வாங்கிட்டு அண்ணனை அல்பாயுசுனா சொல்லுற.... மவனே... "

- பொங்கி வந்த ரசிகரைத் தடுத்தக் கப்பி அல் பாச்சினோ ஒரு மாபெரும் நடிகர் என்பதை எடுத்துச் சொல்லி கீத்துக்கொட்டை எல்லாம் லேப் டாப்பில் காட்டி சமாதானப்படுத்துகிறார்...

அண்ணனோடு புது பட அறிவிப்பு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு தான் இன்றைய முக்கிய நிகழ்வு....

சிவா சொல்லிவிட்டு மேலும் தொடர்கிறார்...
படம் தயாரிக்கிறது சங்கம் பிலிம்ஸ் ...அதன் சார்பாக பைனான்சியர் கே.ஆர்.எஸ் மற்றும் ராயல் ராம்

படத்துக்கு இசை... இன்னும் முடிவாகல்ல... இயக்கம் நம்ம தேவ்... இன்னிக்கு இந்த விழாவுக்கு ரஜினி,கமல், கேப்டன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா., மம்முட்டி, மோகன்லால், சீரஞ்சிவி, நாகார்ஜுன், அமிதாப், சாருக்கான், சல்மான்கான், ஆமிர்கான், எல்லாரையும் கூப்பிட்டு யாருமே வாரதாக் காரணத்தாலே... பதிவுலகின் மிகப் பெரிய ஸ்டார் விவாஜியை முன்னிலையில் துவக்குகிறோம்...

சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கம் வீரத்தளபதி ஜே.கே.பாண்ட் நடிக்கும் குவாட்டர் ஆப் ஷூ லேசு 007,,,, சிவா ஆரவாரமாய் அறிவிக்க .. விசில் பறக்கிறது....அண்ணன் எழுந்து பாண்ட் தோரணையில் போஸ் கொடுக்க கேமராக்கள் க்ளிக் சத்தம் வானை கிழிக்கிறது...
பாண்ட் மீசிக் பின்னால் அதிர... அண்ணன் மைக் பிடிக்கிறார்.....

ம்ம்ம் படம் பத்தி பேசுறதுக்கு முன்னாடி உங்க கேள்விகளுக்கு அண்ணன் பதில் சொல்லுவார் என சிவா அறிவிக்க.... நிருபர்கள் மத்தியில் அக்கப்போராகிறது....

நீங்க அரசியலுக்கு வந்துட்டீங்களா? எப்போ வந்தீங்க..? ஏன் வந்தீங்க?

அரசியல்ல இருந்து வெளியே வருவீங்களா? எப்போ வருவீங்க?

இந்தப் படத்துல்ல உங்களுக்கு ஜோடி யார்? எத்தனை ஜோடி...?

இந்தப் படத்துல்ல நீங்க ஆடுற டான் ஸ் எந்த காட்டுல்ல.. சாரி நாட்டுல்ல ஆடப்படும் நடனம்?

நீங்க ஆலிவுட் நடிகர்களோடு ஆலிவுட்ல்ல நடிப்பீங்களா? அதுக்கு அவங்க ஒத்துக்கல்லன்னா என்னப் பண்ணுவீங்க?

உங்களுக்கு அடுத்து நீங்களே கொடுக்கப் போகும் மெகா பட்டம் என்ன?

கைப்புள்ளயை வச்சு காலத்தை ஓட்டிகிட்டிருந்த சங்கத்தை எம்புட்டு அமவுண்ட் கொடுத்து கரெக்ட் பண்ணீங்க...

கூடவே இருக்க இந்த ஆளு ( சிவா) ஒரு புலியாமே.. அப்படின்னா நீங்க புலி ஆதரவாளரா.....

அமெரிக்காவில்ல நியு யார்க்ல்ல உங்க படம் ரிலீஸ் ஆகாம தடுத்தார் ஜார்ஜ் புஷ் அப்படின்னு ஒரு குற்றசாட்டு இருக்கு... இப்போ புதிய அதிபர் ஒபாமா ஆட்சியிலே உங்க படம் அமெரிக்காவில்ல வருமா... அமெரிக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா....

இந்த பரபரப்பான கேள்விகளுக்கு அண்ணன் என்ன பதில் சொல்லியிருப்பார்... ஆவல் அதிகமாகிறதா...
நாளைக்கு சேம் டைம் சேம் பதிவு வாங்க.... படிச்சுத் தெரிஞ்சு புரிஞ்சுப் பொழச்சுக்குங்க....
.......

Tuesday, November 4, 2008

எச்சரிக்கை : பதிவர் நந்து

தீவாளி ஸ்பெசல் : சங்கத்துச் சிங்கம் நிருபர் நந்துவை பேட்டி கண்டார். நடந்தவை கீழே.


நிருபர்: வணக்கம் நந்து f/o நிலா அவர்களே
நந்து : வணக்கமுங்க.

நிருபர்: அதென்னாங்க பேரு நந்து f/o நிலா?

நந்து : நம்ம பேரைச் சொன்னாவே உக்காந்துட்டு இருக்கிறவங்க எல்லாம் எந்திருச்சி நின்னுக்கிறாங்க. அவ்ளோ பயம். சும்மா அதிருர பேரு நம்மளது. அதனால கொஞ்சம் லைட்டா இருக்க நிலாப்பேரையும் சேர்த்துகிட்டேன். ஆனாலும் நம்ம பேரை பதிவிலேயோ வேற எங்கேயோ கேட்டாவே மக்கள் அலறாங்க. அவ்ளோ மரியாதை.

நிருபர்: மரியாதையா? பயம்னு சொல்றாங்க?


நந்து : அதெல்லாம் நம்பாதீங்க. சஞ்சய் கட்டி விட்ட கதை அது.

நிருபர்: பதிவுலகம் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..

நந்து : ரஜினி ஒரு படத்துல சொல்லுவாரு தெரியுங்களா?

நிருபர்: ஆமாங்க. நான் ரொம்ப நல்லவன். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா..

நந்து: அது வடிவேலுங்க. ரஜினி சொன்னதைத்தான் நானும் சொல்றேன். ஆண்டவா பதிவர்களிடம் இருந்து என்னைக் காப்பாத்து, நண்பர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.

நிருபர்: குறிப்பா யாருன்னு சொல்ல முடியுங்களா?

நந்து: வாலி(வால்பையன்), சஞ்சய்(பொடிப்பையன்), குசும்பன் இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்குங்க.

நிருபர்: உங்க வீட்டுல பூச்சி மருந்து வாங்குற பழக்கம் உண்டுங்களா?

நந்து: வாங்கிட்டு இருந்தோம். என்னிக்கு கேமராவை கையில எடுத்தேன்னோ அன்னைக்கிருந்து வாங்குறதில்லீங்க.

நிருபர்: அட ஆச்சர்யமா இருக்கே. ஏன்??

நந்து: நான் கேமராவை கையில எடுத்துட்டாப்போதுங்க. புழு பூச்சி எல்லாம் பின்னாங்கால் பொடனில அடிக்க ஓடிரும். அய்யாவைப்ப் பார்த்தா அவ்ளோ பயம். ஒரு ஈ, எறும்பு விடாம விதவிதமா படம் எடுக்க ஆரம்பிச்சேன். அந்தத் தொந்தரவு தாங்காமயே எல்லாம் யூனியன் சேர்த்து ஓடிப்போயிருச்சுங்க. அதுமட்டுமில்லீங்க. ஓடிப்போன பூச்சி எல்லாம் ஒன்னா சேர்ந்து இனிமேல யாரும் கஷ்டப்பட வேண்டாம்னு வர புழு பூச்சி எல்லாம் தடுத்துடுதுங்க. இப்போ என் வயத்துல பூச்சி கூட வரதில்லைனா பார்த்துக்குங்களேன்.

நிருபர்: உங்களுக்கு Blue Crossக்கும் பிரச்சினைன்னு சொல்றாங்களே?

நந்து : நான் யாரு? எவ்வளவு படங்கள் எடுத்திருப்பேன்? பிராணிகளை படம் எடுக்கிறதுல ஒரு விருப்பம் அதிகம்ங்க. அதனால தெருவுல போற நாய், பூனை, மாடு இதுங்க எல்லாத்தையும் படம் எடுக்க ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க, நாம சொல்ற படி அதுங்க போஸ் தராது. ஒரு மாட்ட ஓட்டியாந்து 4 காலயும் தூக்கிட்டு இருக்கிற மாதிரி படம் எடுக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா மாடு ஒத்துக்கலை,. அதுக்காக நாலு போடு போட்டேன். அவ்ளோதான் இதுக்கு போயி ப்ளூ கிராஸு வந்துட்டாங்க. பொறாமை புடிச்சவங்க. எங்கே நானு பெரிய போட்டோகிராபர் ஆகிருவேன்னு நினைச்சு வெளிநாட்டுக்காறங்க பண்ற சதிதான் இது?

நிருபர்: குசும்பன், அபி அப்பா,.. இவுங்க எல்லாருங்களா?

நந்து : இல்லீங்க. ஹ்ஹஹஹ டமாஸ் பண்றீங்க. அவுங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்கிற உள்ளூர்க்காரங்க. இவுங்க உள்ளூருல இருக்கிற வெளிநாட்டுக்காரங்க...

நிருபர்: (வெளங்கிரும்..) உங்களுக்கு பொழுதுபோக்கு என்னன்னு சொல்லுங்களேன்?

நந்து : நமக்கு பொழப்பே பொழுதுபோக்குதானுங்க.

நிருபர்: அப்படின்னா?

நந்து : நான் ரொம்ப நல்லவங்க. ரெஸ்ட் எடுத்தே டயர்டாகிடுவேங்க. அதனால பொழைப்பே பொழுதுபோக்குதானுங்க..

நிருபர்: உங்க எழுத்துக்களைப்பத்தி(கொடுமை, இதைஎல்லாம் கேட்க வேண்டி இருக்கே)

நந்து : நான் ஒரு சீரியஸ் எழுத்தாளருங்க. ஆனா இந்த மக்களுக்கு மட்டும் அவ்வளவா பக்குவப்படலீங்க. அதனால அவுங்களுக்கு தகுந்த மாதிரி கருத்துக்களைச் சொல்லிட்டு வரேங்க.

Flash News: நிருபர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி.

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ -re entry

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)

க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...

Thursday, October 23, 2008

செல்போன் அழகி !!!

செல்போன் அழகி :உலகில்யாருக்கும் இந்நிலை வந்திருக்கக்கூடாது , அப்படியொரு நிலை ராகவனுக்கு , பாவம் அந்த பிள்ளை அவனும் வயசுக்கு வந்த நாள் முதல் பல பிகருகளுக்கு ரூட் விட்டும் ஏனோ ஒரு பிகரும் இவனை திரும்பி கூட பார்ப்பதில்லை . அவனும் போகாத காலேஜ் இல்லை பண்ணாத சேட்டையில்லை . இருந்தாலும் இப்படி ஒரு நிலை .


இந்த உலகம் இருக்கிறதே விசித்திரமானது , ஒருத்தன் பணக்காரன் ஆகிட்டானா அவன் அப்படியே பிக்அப் பண்ணி பணக்காரன் ஆகி போய்க்கொண்டே இருப்பான் . ஆனா ஏழை, அவன் நிலைமை மேலும் மேலும் ஏழையாகிட்டே இருப்பான் . ( ஏன்டா சொறனை கெட்ட சொறி மண்டையா உனக்கு எத்தன தடவ சொல்றது கதை எழுதும் போது கருத்து சொல்லாதேனு )

ராகவனுக்கு இதுவரைக்கும் ஒரு ஃபிகர்கூட செட் ஆகாதது ஏனோ மனசுக்குள் ஒரு நெறிஞ்சிமுள்ளாக துளைத்துக்கொண்டிருந்தது . அவனது நண்பன் கணேஷோ வகைவகையாய் விதவிதமாய் ரகம்ரகமாய் நூற்றுக்கணக்கில் சரவணஸ்டோர் போல இருந்தான் . ஆமாங்க அவனுக்கு மட்டும்எப்படித்தான் பிகர் செட்டாகுதோ தெரியவில்லை . எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே உஷார்தான் . அப்படியே பிக்அப் பண்ணி டேக்ஆஃப் பண்ணி பறந்துவிடுவான். ராகவனுக்கு அவனை பார்த்தால் பொறாமையாக இருக்கும் . ஒரு நாள் இப்படித்தான் ராகவன் தன் ஆற்றாமை தாங்கமல் வாயை விட்டு கேட்டே விட்டான்''மாப்பி................. மாப்பி , கணேஷ் மாப்பி '' கொஞ்சினான் ராகவன்.


''என்னடா''''நான் ஒன்னு கேப்பேன் தப்பா நினைக்கக் கூடாது''


''என்ன எழவுடா சொல்லு ''


''நீ நிறைய பொண்ணுங்ககிட்ட போன்ல கடலை போடற , உன்ன பாத்தா பொறாமையா இருக்குடா எனக்கும் ஒரு நம்பர் குடுத்தா நானும் பேசுவேன்ல''


''டே ராகவா... பொண்ணுங்க கிட்ட பேசறது ஒரு கலைடா அதுலாம் உனக்கு வராது , அதும் உனக்கு வயசு பத்தாதுடா ''


''டே டே டே பிளீஸ்டா .. நானும் கத்துக்கறேன்டா''


''சரி ரொம்ப கெஞ்சுற , உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு , இனிதானு ஒரு பொண்ணு இருக்கு , பாத்து பேசணும் , நம்பர் தரேன் யார் தந்தானு கேட்டா என் பேர சொல்லக்கூடாது ''


ராகவன் நம்பரை வாங்கியதும் வானுக்கும் பூமிக்குமாய் குதித்தான் , ஆஹா ''நமக்கும் கேர்ள்பிரண்ட் கிடைத்துவிட்டதடா என் செல்வமே'' என்று . மனதுக்குள் பட்டாம்பூச்சி டைனோசரஸ் ஸைசில் பறந்தது .


சரி நம்பர் வாங்கியாச்சு அடுத்த என்ன பண்ண , அவனுக்கு ஒன்றும் தெரியாது , உக்காந்து யோசிச்சான் , நின்னுகிட்டே யோசிச்சான் , படுத்துகிட்டு யோசிச்சான் , வாழைப்பழத்தில் வழுக்கி விழுந்து யோசிச்சான் , கக்கூஸ் போகும் போது யோசிச்சான் , டக்குனு ஒரு ஐடியா . எஸ்எம்எஸ் அனுப்பலாம்னு முடிவு பண்ணி அனுப்ப ஆரம்பிச்சான் , அதுதான் கீழ இருக்கு .


hi initha how r u

who is this

im ragav from chennai

ok i dont know u

me too

then why are u msgng

i want to frnedshp u

y

i like u

y

i dont know

ok tel me abt u

..................................................... இப்படியே அவங்க பிரெண்ட் ஷிப் ஈஸியாபிக்அப் ஆகிடுச்சு ( கதையை படிக்கும் வாசகர்கள் இப்படி முயற்சிகளில் இறங்க வேண்டாம் , messaging is injurious to your health and ofcourse your wealth )


மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சு மலர்ந்த நட்பு , போன்ல பேச ஆரம்பிச்சுது , ( அதிலிருந்து சில துளிகள் உங்கள் குஷிக்காக )


ராக : டேய் செல்லம் உன் குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு

இனி ; விட்டா என் தொண்டைய கடுச்சு தின்னுடுவ போலருக்கே

ராக ; போடி

இனி ; நீ ஏன்டா என்ன லவ் பண்ண

ராக ; உன்னோட நல்ல குணம்டா !! நீ ஏன் என்ன லவ் பண்ண

இனி ; நான் நிறைய பசங்ககிட்ட பேசிருக்கேன் , ஆனா நீ ஒருத்தன்தான் அதுல நல்லவன் , ஆமா உன்ன யாராவது லவ் பண்ணிருக்காங்களா

ராக ; ஓஓஓஓ நிறைய ஆனா நான் உன்ன மாதிரி ஒருத்திக்காகத்தான்டா இத்தினி நாளா வெயிட் பண்ணிட்டிருந்தேன்

இனி; ஆனா உன் பிரெண்ட் வினோத் வேற மாதிரி சொன்னானே

ராக ; அவன்கிட்டலாம் நீ ஏன் பேசற , அவனுக்கு நான் உங்கூட பேசறத பாத்து பொறாமை அதான்.

இனி ; அவன உன்கிட்ட பேசறதுக்கு முன்னாடியே தெரியும்டா , டேய் நீ எப்படி இருப்ப

ராக ; நான் சுமாராதான் இருப்பேன்டா , மீடியம் அய்ட், மாநிறம் , ஷார்ட்டா முடி , நீ எப்படிடா இருப்ப

இனி ; நான் நமீதா மாதிரி இருக்கேனு என் பிரெண்ட்ஸ்லாம் சொல்லுவாங்கடா


ராகவன் இந்த வார்த்தையை கேட்டதிலிருந்து குதூகலமாகியிருந்தான் , நமீதா மாதிரி ஒரு பிகரா நமக்கு , இருந்தாலும் இவனோட லெவலுக்கு நமீதா மாதிரி பிகர் ஜாஸ்திதான் என்று எண்ணிக்கொள்வான் .


செல்போன் கடலை காதலாகி காதல் காமமாகி காமம் கஸ்மாலமாகியிருந்தது .


இப்போதெல்லாம் கணேஷ்கிட்ட கூட பேசறத்தில்லை . அந்த பொண்ணுகிட்ட இவன் எல்லா உண்மையும் சொல்லி பாவ மன்னிப்பு வாங்கிட்டான் ஏன்னா பாருங்க இவன் ரொம்ப நல்லவன் அதான். இனிதாதான் சொல்லிருக்கா அவனோட சேராத அவன் ரொம்ப மோசம் என்று , அவன்ஏன் என்று கேட்டதற்கு அவனும் நானும் முட்டுக்காடு போனப்ப அவன் என்னோட தப்பா நடக்க முயற்சிபண்ணான் நான் அங்கேயே அவனோட நட்புக்கு முழுக்கு போட்டுட்டேனு சொன்னாள் . கணேஷ் இவனிடம் ஏன்டா என்கிட்ட பேசறதில்லனு கேட்ட போது அவன் இதையெல்லாம் சொன்னான் , அவனோ மச்சி அவள நீ இன்னும் நேர்ல பாத்ததில்ல , அவள மீட் பண்ணி பேசின இப்படிலாம் எங்கிட்ட பேச மாட்டே பிகருக்காக பிரண்ட்ஷிப்ப கட் பண்ற அளவுக்கு போயிடுச்சா தூ போடா என்று துப்பிவிட்டு போனான் . ராகவனுக்கு சுறுக் என்று இருந்தது .


( இதுக்கு மத்தியில் நான் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன் , கதையின் இந்த சீன்வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லை என்பதையும் அவர்களது காதலுக்கு இதுவரை வயது பதிமூன்று நாட்கள்தான் என்று நினைவில் கொள்க .)


ஒரு நாள் போனில் பேசுகையில் ஆவலோடு இனிதா செல்லம் நான் உன்னை நேர்ல பாக்கணும்டி என்று கேட்டான் , அவளும் சரிடா புருஷா எனக்கும் உன்னை பாக்கணும் போல இருக்குடா , சரி ஞாயித்துகிழமை எனக்கு மெட்ராஸ் யுனிவர்சிட்டில கிளாஸ் அங்க மீட் பண்ணலாம் வரப்போ வெள்ளை டிஷர்ட் கருப்பு பேண்ட் ஓகேவா நான் மஞ்சள் சுடிதார் என்றாள் .


சன்டேக்கு இன்னும் 5 நாள் இருந்தது , அதற்குள் தன்னை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்று சரவணா ஸ்டோர்ஸில் அலைந்த பனியன் டிஷர்ட் ஜட்டி சட்டை என பலதும் வாங்கினான் , AXE CHOCLATE அப்படினு ஒரு புது சென்ட்டு அதையும் வாங்கி கொண்டான் , அதை அடித்துக்கொண்டால் பெண்கள் நம் மேல் விழுந்து பிச்சு பிராண்டுவார்களாமே !!! எனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது . பியூட்டி பார்லருக்கு போய் முகத்தை பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவிக்கொண்டான்.


அந்த பொன்னாளும் வந்தது , காலையிலே சீக்கிரம் எழுந்து வீதி முக்கு பிள்ளையார் கோவிலுக்கு போய் இனிதா பேரில் அர்ச்சனையெல்லாம் செய்தான் . தன் காதலியை பார்க்கும் ஆவலில் விபூதி என்று நினைத்து குங்குமத்தை வாயில் கொட்டியதெல்லாம் பிள்ளையாருக்கு மட்டும்தான் தெரியும் .


மதியம் 2 மணிக்கு சந்திப்பதாய் முடிவுசெய்து இருந்தனர் . இவனோ காலை 11 மணிக்கே போய் இளவு காத்த கிளி போல பீச்சில் காத்திருந்தான் . அங்கே பல காதலர்கள் தானும் அது போல இன்னும் 3 மணிநேரத்தில் தன் காதலியுடன் குஜாலாக இருக்க போகிறோம் என்கிற ஆவல் அவனுக்குள் அதிகரித்தது .


அந்த கன்னியை(?) சந்திக்கப்போகும் தருணத்தை நினைத்தாலே அவனுக்குள் ஏதோ செய்தது , ஏதோ என்றால் ஏதோ அல்ல இது வேறு ஒரு ஏதோ அதாவது மனசுக்குள் மத்தாப்பு , கண்ணுக்குள் நிலவு போல .( நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல )


மணி 2.00 , சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம் , எப்படியும் ஒரு நாப்பது பெண்கள் இருந்தனர் . அவர்களில் அவளை எப்படி கண்டு கொள்வது , கூட்டத்தில் பாதி பெண்கள் ஒரளவுக்கு சுமாராக இருந்தாலும் அதில் பாதி பெண்கள் மகா மட்டமாக இருந்தனர் . மனசுக்கு ஏதோ தவறு நடப்பதாக தோன்றியது .


சரி விட்ரா விட்ரா என்று அவளுக்கு போனில் அழைத்தான் , அவள் போனை எடுத்து இருடா ஒரு பத்து நிமிஷம் ரெக்கார்ட் நோட்ல ஸைன் வாங்கிட்டு வந்திடறேன் என்று பதில் வந்தது . ஐயோ இன்னும் பத்து நிமிடமா மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது .


பத்து நிமிடம் மேலும் கற்பனை தொடர்ந்தது .


பத்து நிமிடம் கழிந்தது அவள் வந்தாள் . இவனை போனில் அழைத்தாள் , இவனும் பஸ்ஸடாண்டில் இருந்த அந்த மஞ்சள் சுரிதார் பெண்ணிடம் பேசினான் . அவள் அவன் எதிர்பார்த்ததை விட அழகாக இருந்தாள் , ( தேவயானி போல குடும்பப்பாங்காக )

இருவரும் கடற்கரைக்கு சென்றனர் . காதலித்தனர் . இப்படியே சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர் . கணேஷுக்கு வயிறு எரிந்தது . அதன் பிறகு THEY LIVE HAPPILY EVER AFTER தான் ..

.

.

.

.

.

.இன்னும் என்னங்க கதை அவ்ளோதான் ...... ஹலோ சார் கதை முடிஞ்சிது கிளம்புங்க ..... என்னது அந்த பொண்ணு அசிங்கமா இருக்கும்னு நினைச்சீங்களா... யோவ் ஒருத்தன் நல்லாருந்தா உங்களுக்கு புடிக்காதே .... என்னா வில்லத்தனம்......அவனே பாவம் பல வருஷத்துக்கப்புறம் ஒரு பிகர உஷார் பண்ணிருக்கான் அதுவும் அசிங்கமா இருக்கணும் நினைக்கிறீங்களே உங்களையெல்லாம் கொண்டு போய் உகாண்டா கருங்குரங்குக்கு கல்யாணம் பண்ணி வச்சு டார்ச்சர் பண்ணனும் .

சரி வந்தது வந்துட்டீங்க அப்படியே என்னை திட்டணும்ன ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்கோ ..... ( மக்கள்ஸ் என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போடலைண்ணா அடுத்த பதிவுல டார்ச்சர் அதிகமா இருக்கும் beware )

___________________________________________________________________

Wednesday, October 22, 2008

தோழர் மப்பு மன்னாரு !!

என் இனிய வலைத்தமிழ் மக்களே வணக்கம் , உங்கள் பாசத்திற்குறிய அதிஷகாந்த்( பேரோட காந்த் சேத்திகிட்டா பேமஸ் ஆகிரலாம் பிற்காலத்தில சி.எம்மா கூட ஆகலாம்னு சோசியர் ..... யாரு சுப்பையா சாரா இல்லைங்க நம்ம ஓம்கார் சுவாமிகள் சொல்லிஇருக்காரு அதான் )கொஞ்ச நாளா பிஸியாகிட்டேன் , தோ வந்திட்டேன் , அப்படிலாம் உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைதான் , ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் , அட்லாஸ் சிங்கத்துக்கும் முப்பத்தி ஒரு நாள் தானாமே , அதினால் இன்னைக்கு நாம நம்ம தோழர் மப்பு மன்னாருவோட கதைய பாக்கலாம் ,

_____________________________________________________________________

இந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா இதுல பாருங்க , மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... )

அட விசயத்துக்கு வாடா என் பொங்கி னு நீங்க திட்றது எனக்கு கேக்குது , அப்படித்தான் பாருங்க ஒருநா ( அட எழவெடுத்தவனே எத்தினி கதைலதான் ஒருநாள் ரெண்டு நாளுனு , மாத்தி சொல்லுனு மனசு தவிக்குது , ஆனா உங்க மேல இருக்கற பாசம் அத தடுக்குது ) டிசம்பர் மாசம் 31ம் தேதி , அந்த டாபரும் நானும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து புத்தாண்ட ப்புல் பாட்டிலோட கொண்டாடலாம்னு முடிவு பண்ணோம் .

மன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் ( ______ அப்படினு நான் திட்டினேன் அதெல்லாம் இங்க எழுதினா நாளானிக்கு அதே வார்த்தைல நாலு பேரு என்ன திட்டுவாங்க ) அந்த _____ என்னைக்குதான் பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு.

பாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே !! ( இது கூட ஒரு நா மன்னாரு மப்புல உளறினதுதான் )

மீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு நைன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) . நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க , அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்டிருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ) .

மாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடான்னான் , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே

நேரா வாஷ்பேசினுகட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறாட் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . எங்களுக்கு செம கடுப்பாயிடுச்சு . அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .


அது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் , அப்ப அவன் கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு , காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .

அவ்ளோதான் மன்னாரு தண்ணியடிச்ச கதை.

இருங்க போயிடாதீங்க அவனுக்கெப்படி மன்னாருனு பேரு வந்திச்சுனு தெரியுமா... அது ஒரு கவித்துவமான நிகழ்வு , அதை பத்தியும் அதிலிருந்த அழகியல பத்தியும் மயஜோக்கன் கூட அவரோட வலைப்பக்கத்தில பக்கத்தில , பக்கத்திலனே ரொம்ப பக்கத்தில கிடையாது பக்கத்தில பக்கத்தில அத எழுதிதான் அவரோட வெப்ஸைட் சுலோ ஆகிருச்சுனு நம்ம வாசுகி சுலோ சொல்லிச்சு .


அவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட்டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியாகி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 மப்பு பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட் ) ..


மச்சி அவ வசிக்கிறா ஆந்திரா
என் மனசில
வாசிக்கிறா தம்புரா...

எல்லாரும் அவன கேவலமா பாத்தோம் அவன் ஓயல , அந்த பொண்ணபாத்து ரொமாண்டிக்கா லுக் விட்டுகிட்டே

அவ என் மேல வீசறா சிறு பார்வைய
என் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய

எனக்கு கொலைவெறி வந்திச்சு , சரி சின்ன பையன் வயசுக்கோளாறுனு விட்டுட்டோம் ... ஆனாலும் சனியன் விடலையே

மச்சி
அவள பாத்தாலே பறக்குது தலை மேல கிளிடா
அவ என் மனசை சுக்குநூறா உடைச்ச உளிடாஅந்த பொண்ணு அப்பப்ப அந்த _______ ( மன்னிக்கனும் இங்கயும் கெட்ட வார்த்தை ) அடிக்கடி பார்த்து அவன சூடாக்கி எங்கள சாவடிச்சிட்டு இருந்தா

அவன் கவிதை சொல்லும் போது அப்படியே முகத்தில தில்லானா மோகானாம்பாள் சிவாஜியாட்டம் எக்ஸ்பிரசன் வேற .... அத பாத்து களுக்குனு ஒரு தடவ சிரிச்சிட்டா வேற ... அந்த எழவெடுத்தவ சிரிச்சா இவன் எங்க தாலியல்ல அறுப்பான் , அது அவளுக்கு தெரியுமாஅவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவ
கற்புக்கு பங்கம் வந்தா காட்டிருவா
செருப்ப கழட்டி - அப்படிப்பட்ட
விசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....அப்ப பாத்து ஒரு கார் அதுல பத்து பதினைஞ்சு ( சரியா எண்ணல நான் கணக்குல வீக் ... அதுக்காக மத்த சப்ஜெக்ட்டுனு கேக்காதீங்க மத்ததில நான் ரொம்க வீக்கு ) பசங்க.. அவ அவங்கள பாத்ததும் ஏறி எஸ்கேப்பு.. போகும் போது இவன பாத்து சிரிச்சிட்டே போனா...

என்ன அவ தோள்ல்ல பக்கத்தில இருந்தவன் கைய போட்டிகிட்டு அவள கிஸ்ஸடிச்சிக்கிட்டே போனான்....

பையன் நொந்துட்டான்... கண்ணெல்லாம் தண்ணி , விசும்பி விசும்பி தேம்பி தேம்பி உருண்டு உருண்டு புரண்டு புரண்டுலாம் அழல சும்மா லைட்டா அழுதான் ..... மச்சி கவிதைய ஏன்டா நிறுத்திட்ட சொல்லுடானு நாங்க கலாய்க்க ... அவன் ரொம்ப சோகமா... ( கிளைமாக்ஸ்ல கேன்சர் வந்து செத்து போற ஹீரோ வாட்டம் முகத்த வச்சுகிட்டு )

பருத்தி உடைஞ்சா வெளிய வரும் பஞ்சு
எதுக்குமே உடையாததுடா என் நெஞ்சு
அவளுக்கு இருக்காலாம் ஆயிரம் பேரு
அவனால்லாம் மண்ணாங்கட்டி சேறுஅவ எப்பவுமே புரிஞ்சிக்கல என் காதல
நான் அவளோட போட முடியலயே கடல....

(இறுமுகிறான்... கதைனா சூழலும் பேசனுமாமே அதான்ப்பா இது )

என் மனசு ஏறி போகுது காருல...
இனிமே எப்பவும் நான் டாஸ்மாக் பாருல பாருல பாருல,..... க்க்க்க் ( இறுமுகிறான் )

அவனுக்கு நேர்ந்த கொடுமைய பாத்து எப்பவுமே காசு கொண்டு வராத மன்னாருகிட்டருந்த காசு வாங்கி நாங்கல்லாம் தண்ணியடிச்சோம் , அவன் எப்பவும் போல நைன்ட்டி அடிச்சு வாந்தியெடுத்தான் .

எப்பவும் போல வாஷ்பேசினேயும் குத்திவிட்டான்.... அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு...

வாஷ்பேசின குத்திவிட்டா
அதோட அடைப்பு நீங்கும்
உன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன் மனசு
எப்படி தாங்கும்......குச்சி வச்சு குத்திவிட்டா
அடைப்பு நீங்க
உன் மனசென்ன
கக்கூஸா...

பாவிப்புள்ள போகும்போது
வெடிக்க வச்சிட்டாலே
உன்மனச
பட்டாசா....இப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....இப்படித்தாங்க வெறும் மன்னாருவா இருந்தவன் ஒரு மப்பு மன்னாருவா மாறினான் .

நம் தோழர் மன்னாருவின் சரித்திரம் இன்னுமொரு தரித்திரம் ........

இந்த சரித்திர தரித்திரத்தின் கதையை மேலும் தொடரலாம்... தொடராமலும் போகலாம் அல்லது என் வலைப்பூவில் தொடர வாய்ப்புண்டு .... ஜீவி ஆவி பாவி கூவி போன்ற பிரபல இதழ்களில் கூட வரலாம் அல்லது இதை ஒரு புதினமாக ( மப்புமன்னார் சரித்திரம் - பேர் நல்லாருக்கா ) கூட எழுதி காவியம் படைக்கலாம்... etc etc.......

___________________________________________________________________

Friday, October 10, 2008

ஜே.கே.ரித்திஷ்குமார் ஆவது எப்படி ? பயிற்சிப்பதிவு


இப்பூவுலகில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒரு நாள் பிரபலமாகிட வேண்டும் என்கிற அவலும் ஆசையும் நிச்சயம் இருக்கும் . எனக்கும் உங்களுக்கும் ஏன் இவ்வலையுலகில் வலம் வரும் சகலருக்கும் இருக்கும் . ஆனால் இன்றைய சினிமா நட்சத்திரங்களில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்ட ஒரு நல்ல நடிகர்,மாமனிதர் , மாமாமனிதர் , தொழிலதிபர் , வாழும் பாரி,ஓரி,காரி,பூரி, இப்படி பல அடைமொழிகளையும் தனக்குத்தானே சூட்டிக்கொண்டு திரையுலகில் யாரும் எட்டாத இடத்தை பிடித்த அண்ணன் ரித்திஷ்குமார் அவர்களைப்போல ஆகவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கனவாகும்.
ரித்திஷ்குமார் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த மனிதர் , அவரை பின்பற்றி இன்றைய தமிழக இளைஞர்களும் கண்களில் கண்ணாடியும் கலர்கலராய் ஜீன்சும் அணிந்துகொண்டு நம் நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்ய எண்ணி அவரைப்போல ஆகவிழையும் காட்சிகளை இன்றைய தமிழகத்தின் நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெரு , பர்மா பஜார் போன்ற பகுதிகளில் காணலாம் . ஊர்க்குருவி பருந்தாகுமா இல்லை ஓட்டகம்தான் படி ஏறுமா அது போல யாராலும் அவ்வளவு சுலபமாய் அண்ணன் ரித்திஷ்குமார் அவர்கள் எட்டிய தூரத்தை எட்ட இயலாது . அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது , அதுக்குதாம்பா இந்த பதிவு அக்காங்..........

1.முதலில் உடனடியாக ஏதாவது ஒரு உப்புமா கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அதில் உறுப்பினர் ஆகி விடுங்கள் .

2.மறந்துவிட்டேன் அதறகு முன் எங்காவது டீக்கடையில் கிளாஸ் கழுவவும் .

3.பிறகு எவனாவது இளிச்சவாயனுக்கு பினாமியாக இருக்கவும்
4.அந்த இனா வாயன் எங்காவது தலைமறைவாக இருக்கையில் அந்த சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளவும் .
5.உடனடியாக ஒரு படம் துவங்கவும் . அதில் கௌரவ வேடத்தில் நடித்து வெள்ளோட்டம் பார்க்கவும் .

6.இப்போது உங்களுக்கே உங்கள் யோக்கியதை தெரிந்திருக்கும் .ஸாரி உங்களுக்கே உங்கள் அழகு தெரிந்துவிடும்

7.மிக பிரபலமான படப்பெயரில் ஒருபிரபல ஆங்கில படத்தின் கதையை அப்படியே சுட்டு புதிய படத்தை தொடங்கவும்...........

8.முதலில் ஜேகேஆர் போல ஆக உங்கள் முகத்தை எப்போதும் பைல்ஸ் வந்த குரங்கைப்போல வைத்துக்கொள்ள வேண்டும் . ( பல் தெரியாமல் சிரிக்கணும் )

9.ஜிகினா வைத்த சட்டைகளையும் ஆரஞ்சு , மஞ்சள் , ரோஜா நிற பேண்ட்களையும் உபயோகிக்கவும்

10.அடிக்கடி மீடியாக்களில் நம் பெயர் வருவது போல எதாவது குரங்கு சேட்டைகளை செய்ய வேண்டும்

11.ஊரில் இருக்கும் ஆட்டோ , பைக்கு, சைக்கிள் , கைவண்டி , குழந்தைகள் நடைவண்டி என பாரபட்சமின்றி எல்லாவற்றிலும் உங்கள் பெயர் அல்லது உங்களது லேட்டஸ்ட் பட விளம்பரம் என உங்கள் சம்பந்தப்பட எந்த கருமத்தையாவது மாதம் 2000 ரூபாய் என பேசி அளித்து விடவும்

12.பத்திரிகையாளர்கள் உங்களை அசிங்கமாக திட்டினால் அதை துடைத்து போட்டுவிட்டு சிரித்தமாதிரி ஒரு படத்திற்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு எஸ் ஆகி விடவும் . பதில் சொல்லாதீர்கள் . அது மாபெரும் காமெடி ஆக்கப்படலாம்.

13.ஆளுங்கட்சிக்கு நிறைய நிதி கொடுக்கவும் , உங்கள் விழாக்களுக்கு அவர்களை அழைத்து சீன் போட உதவும் .

14.உங்கள் ஏரியாவில் நடக்கும் காதுகுத்து , மூக்கு குத்து , பூப்புனித நீராட்டுவிழா என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளவும் .

15.அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம் முன்னாலேயே காசு குடுத்து உங்கள் படத்தை பெரிதாக போட்டு சூறாவளி ஸ்டார் , அதிரிபுதிரி அண்ணன் இது போன்ற அடைமொழியோடு போஸ்டர் அடித்து கொள்ளவும்

16.நிறைய ஏழைகளுக்கு உதவி செய்யவில்லையென்றாலும் ஏழைகளோடு நின்று போட்டோ எடுத்து கொள்ளவும்

17.இது தவிர சினிமாவில் நடிக்கும் போது சில விடயங்களை பின்பற்ற வேண்டும்


1.காதல் காட்சிகளில் விளக்கெண்ணய் குடித்தமாதிரி முகத்தை வைத்துக்கொள்ளவும்

2.ஆக்சன் காட்சிகளில் இஞ்சிதின்ன டோமர் மாதிரி இருப்பது நல்லது

3.செண்டிமென்ட் காட்சிகளில் காலைவேளையில் எவ்வளவு முக்கியும் வரவில்லையெனில் எப்படி இருப்பீர்கள் அப்படி ஒரு முகபாவம் அவசியம்

4.வீரவசனம் பேசும்போது முகத்தை உராங்குட்டன் என்னும் விலங்கைபோலிருப்பது உசிதம் (உராங்குட்டனை பார்த்ததில்லையே மேலே படத்தில் பார்க்கவும் )


இதுபோல 45மண்டலங்கள் விடாது செய்து வர எல்லாம் வல்ல இலச்சிமலை ஆத்தா புண்ணியத்தில் நீங்களும் ரித்திஷ்தான்,


பி.கு. :


இது போன்ற முயற்சியால் விழையும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல , இம்முயற்சியில் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பல பேராபத்துகள் நிகழலாம் அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும்.


இது தவிர நீங்கள் முழுமையான ரித்திஷ்குமார் ஆன பின் குழந்தைகளிடம் தயவு செய்து போய்விடாதீர்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாளே சீதபேதி,வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் வரலாம்


அதே போல் ஆடு,மாடுகள் இருக்கும் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் . அவைகளின் சாவுக்கு நீங்கள் காரணமாயிருப்பதை கம்பேனி விரும்பாது.(பாவம் அனிமல்ஸ் )


ஜே.கே.ரித்திஷ் நாமம் வாழ்க ...... அகிலமெல்லாம் அவர் புகழ் வளர்க

Tuesday, October 7, 2008

பிட்டுப்படம் பாக்க வரியா....

'' ராமா எப்படியாவுது இன்னைக்கு அந்த படத்துக்கு போயிறணும்டா, !!!! '' கிருஷ்ணனும் ஒரு வாரமாக தினமும் பத்து முறையாவது இப்படி சொல்லிக்கொண்டே இருந்தான் .

கிருஷணன் புதுக்கல்லூரியில் போன மாதம் சேர்ந்த பின் கிடைத்த நண்பன்தான் ராமன் , பால்மணம் கொஞ்சம் மாறிய பாலக இளைஞர்கள் , கிருஷ்ணனுக்கு அந்த பட போஸ்டரை பார்த்ததிலிருந்து நிலை கொள்ளவில்லை . ஒரு வாரமாக தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் போதும் வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த போஸ்டரை ஐந்து நிமிடமாவது பார்த்து ரசித்து விட்டுத்தான் மறுவேலை .

'' கிருஷணா அந்த படத்துல அப்படி என்னதான்டா இருக்கு '' தன் அக்ரகாரத்தை தவிர எதையும் அறியாத ராமன் தலையை சொறிந்தபடி கேட்க ,

''ராமா அதுக்குதான்டா!! ஒரு தடவ அந்த படத்த பார்த்துடலாம்டா !!

அந்த படம் பேர பாத்தியா இளநெஞ்சை கிள்ளாதேனு வச்சுருக்காங்க பேர கேட்டாலே உனக்கு ஒரு மாதிரி இல்ல ''

'' ஆமாடா நேக்கும் ஏதோ மாதிரிதான் இருக்குடா , சரி அந்த சினிமா எந்த தியேட்டர்ல ஒடுறது ''

''ஜோதிலடா , ஒரு வாரம்தான்டா அந்த படம் ஒடும் , இன்னிக்கு புதன்ல நாளானிக்கு வேற படம் மாத்திருவான் ''

'' ஐய்யயோ ஜோதியா!!! கிருஷ்ணா அங்க பக்கத்துல தான் எங்க அத்திம்பேர் வீடு இருக்கு , அவரு இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க பாத்துட்டா , அது சரி அந்த தியேட்டர் பத்தி இவ்ளோ மேட்டர் எப்படிடா தெரிஞ்சுது ''

'' உங்க அத்திம்பேர பத்தி கவலப்படாத , நாம காலைல காலேஜ் கட் பண்ணிட்டு , 8 மணிக்கே போயி தியேட்டர்ல உக்காந்துருவோம் , ஓகேவா, உங்க அத்திம்பேர் மட்டுமில்ல ஊரே ஆபிஸ் போற பிஸில இருப்பாங்க , பயப்படாதே''

''என்னடா காலேஜ் வேற கட்டா , தப்பு மேல தப்பு செய்ய சொல்றியே , பராவால்ல அப்ப நாளைக்கு காலைல சரியா வந்துடு '' என்று தனது பேருந்து வரவும் அதில் படபடவென ஏறி வீட்டிற்கு கிளம்பினான் .

இரவு இருவருக்கும் தூக்கமே வரவில்லை , முதலிரவுக்கு காத்திருக்கும் மணமகனைப்போல மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் , கிருஷ்ணாவுக்கு அந்த பட கதாநாயகி ரேஷ்மா பற்றியே கற்பனை , ராமனுக்கு அவனது அத்திம்பேர் பற்றியே கற்பனை !!!! . படத்தில் பிட் இருக்குமா , இருந்தால் பாதி காட்டுவார்களா அல்ல முழுதாக காட்டுவார்களா , கதை இருக்குமா , சண்டை இருக்குமா , கதாநாயகன் யாரு , அவர் படம் ஏன் அந்த போஸ்டரில் இல்லை , படப்பேருக்கேத்த மாதிரி காட்சி இருக்கமா , யாராவது பார்த்துட்டா என்ன செய்ய , வீட்டில மாட்டிகிட்டா என்ன சொல்றது , டிக்கெட் விலை எவ்வளவு , இது தப்பில்லையா என இரவெல்லாம் மனதிற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் , சரியான தூக்கமே இல்லை இருவருக்கும் , வீட்டிலிருந்து 7 மணிக்கே இருவரும் கிளம்பினர் .

7.30க்கு சரியாக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர் , அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்து திரையரங்கை 10 நிமிடங்களில் அடைந்துவிட்டனர் . வழியில் இருவரும் இரவு தூங்காமல் யோசித்து கொண்டிருந்ததை குறித்தே பேசிக்கொண்டிருந்தனர் . பரங்கிமலை ஜோதி சென்னையில் பலருக்கும் பாலியலை அறிமுகப்படுத்திய அந்த அற்புத திரையரங்கு இன்னும் அந்த இருவருக்காக திறக்கவில்லை , இருவரும் மனம் நொந்து போய் பக்கத்தில் இருந்த பெட்டிகடையில் விசாரித்ததில் தான் தெரிந்தது படம் 12 மணிக்கென்று , அதுவரைக்கும் என்ன செய்வது எனப்புரியாமல் திரையரங்கு வாசலில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்து 12 மணிக்கு காத்திருந்தனர் .

இருவரும் இரவு உறங்காததால் அப்படியே அங்கேயே உறங்கிபோனார்கள் , கனவுகளிலும் அந்த படம் பற்றிய நினைவுகளே , இருவருக்கும் . கனவில் மழை பெய்தது
11.30 மணிவாக்கில் கிருஷ்ணா படாரென விழித்துக்கொண்டான், பக்கத்தில் யாரோ மூத்திரம் போய் கொண்டிருக்க ராமனை எழுப்பினான் , ராமனுக்கும் அப்போதுதான் நினைவு வந்தது , '' மச்சி வாடா தியேட்டர் திறந்துட்டாங்க வா போயி டிக்கட் எடுக்கலாம் '' கிருஷணா , ராமனை அங்கிருந்து கிளப்பினான் .

'' தம்பிங்களா இந்த படத்துக்கு சின்ன பசங்கள்ளால் வரக்கூடாது , கிளம்புங்க'' டிக்கெட் கொடுப்பவர் விரட்டினார், இப்படி ஒரு பிரச்சனையை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை , அவர்கள் என்ன செய்வார்கள் அவர்களது உருவம் அப்படி .

'' அண்ணா எனக்கும் இவனுக்கும் 18 வயசு ஆயிடுச்சுனா , நம்புங்கண்ணா , காலைலருந்து வெயிட் பண்றேங்கண்ணா '' கிருஷணா போராடினான் , ராமனும் ஆமாம் என்பது போல தலையை அசைத்துக் கொண்டிருந்தான் .

'' தம்பிகளா உங்கள பார்த்தா ரொம்ப சின்ன பசங்களா இருக்கு உங்கள உள்ள விட்டா எங்களுக்குதான்பா பிரச்சனை ''

'' அண்ணா , இந்தாங்கண்ணா என் காலேஜ் ஐடி கார்டு , இதுல வயசு போட்டிருக்கு பாருங்க !!''
'' தம்பிங்களா காலேஜ்ஜா படிக்கிறீங்க ,முதல்லயே சொல்லிருக்கலாம்ல , சரி இந்தாங்க டிக்கெட் ''
கிருஷ்ணாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்ததது . டிக்கெட் கிழிப்பவரிடம் ராமன் ஆர்வத்தில் '' அண்ணா படத்தில பிட்டு இருக்காணா '' , அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது , முறைத்தபடியே டிக்கெட்டை பட்டென்று கிழித்து கையில் கொடுத்தார் .

தியேட்டரின் உள்ளே குமட்டும் நாற்றம் , சீட்டெல்லாம் கிழிந்திருந்தது , திரையரங்கின் இருளான பகுதியாக தேடிபிடித்து அமர்ந்து கொண்டனர் . ராமனுக்கு வயிற்றை பிறட்டியது , கிருஷ்ணன் மிக ஆர்வமாக அமர்ந்து கொண்டிருந்ததால் அவனுக்கு அந்த துர்நாற்றம் தெரியவில்லை . திரையரங்கில் மொத்தமாய் 10 பேர்தான் இருந்தனர் .

மணி 12 ஆகியும் படம் தொடங்கவில்லை , 12.30 வரை அதுவே தொடர்ந்தது . மெதுவாக வெள்ளை திரை மேல் இருந்த சிகப்பு திரை மறைய , இருவரும் குஷியாகினர் . இன்னும் படம் தொடங்கவில்லை , இருவரும் மிக ஆர்வமாக திரையையே பார்த்துக்கொண்டிருந்தனர் , வெங்கடாசலபதி தரிசனத்திற்கு காத்திருக்கும் கடைநிலை பக்தர்களைப் போல .

இப்போது திரையரங்கில் 30 பேர் கூடியிருப்பர் . அதில் ஒருவன் நேராக இவர்களை நோக்கி வர அதிர்ந்து போயினர் , அவன் '' தம்பி இந்த சீட்டுக்கு யாராவது வராங்களா , '' இருவரும் பயந்த படி இல்லைங்க என்றனர் .

கிருஷ்ணனின் அருகில் அந்த நபர் அமர்ந்து கொண்டார் , பார்க்க காவல்துறை அதிகாரியை போல ஒரு தோற்றம் , அவர்களிருவருக்கும் கிலி மனதில் மட்டுமல்ல நுரையீரல் வரை பரவியது .

வெள்ளை திரை ஒளிர படம் துவங்கியது , எச்சில் துப்பாதீர்கள் , முன்சீட்டில் கால்வைக்காதீர்கள் , புகைபிடிக்காதீர்கள் , தினகரன் படியுங்கள் , மாலைமுரசு படியுங்கள் என , ஒவ்வொரு ஒளி கீற்றிற்கும் பக்கத்து சீட்டு நபர் கிருஷ்ணனை பார்த்து புன்னகைக்க , கிருஷ்ணனுக்கு குலை நடுங்கியது , படம் துவங்கியது .

'' டேய் ராமா இது என்னடா , யூ சர்டிபிக்கேட் போட்றுக்காங்க '' ,''எங்கிட்ட கேட்டா , உனக்குதான இதெல்லாம் அத்துபடி '' ராமன் கிசுகிசுத்தான் .

படம் பெயர் வந்ததும் தான் கிருஷ்ணனுக்கு நிம்மதியாய் இருந்ததது .

'' இளநெஞ்சை கிள்ளாதே '' '' கனவுகன்னி ரேஷ்மா '' பெயர்கள் ஒடிக்கொண்டே இருந்தது ,
5 நிமிடம் பெயர்கள் மட்டுமே ஓடி கொண்டிருந்தது .

'' நமோ நாராயணா'' ஒரு வயதானவர் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய படம் துவங்கியது ,
படத்தில் அந்த கிழவரின் இளம் மனைவியை அவர் பல முறை முயன்றும் திருப்தி படுத்த முடியாது கஷ்டப்பட , கதாநாயகன் அந்த பெண்ணை திருப்தி படுத்தினான் . படத்தில் பல முறை மிக நெருக்கமாக இருவரும் நெருங்குவார்கள் சட்டென அடுத்த காட்சி துவங்கிவிடும் . 5 முறை இதுவே தொடர்ந்தது .

படம் ஓடிக்கொண்டிருக்க திரை இருள , எல்லா விளக்குகளும் எரிந்தது . இடைவேளை .
ராமன் கிருஷ்ணனை முறைத்தபடி இருந்தான் , கிருஷணன் ராமனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் .

இடைவேளை முடிந்ததது , இடைவேளையில் இருவரும் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தனர் . விளக்குகள் அணைய படம் தொடர்ந்தது , இருவரும் இப்போதாவது ஏதாவது பிட் வராதா என ஏக்கத்துடன் பார்க்க , படம் துவங்கி 5 நிமிடத்தில் அனைவரும் வெளியேற துவங்கினர் . படம் நிருத்தப்பட்டது . பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவரும் கிளம்ப இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை .

இப்போது திரையரங்கமே காலியாகியிருந்தது , '' தம்பிகளா படம் முடிஞ்சுது கிளம்புங்க !! ''
''அண்ணா கிளைமாக்ஸ் போடவேயில்லையே '' ராமன் ஆர்வமாய் கேட்க '' தோடா கிளம்பு '' என முறைத்தான் திரையரங்க ஊழியன்.

இருவரும் சோகமாக அங்கிருந்து கிளம்பினர் . இருவரும் அந்த படத்திற்கு சென்று திரும்பியதிலிருந்து பேசிக்கொள்வதில்லை . நட்பு முறிந்தது .

இருவரும் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல எதிரில் பார்த்தால் முறைத்து கொள்வர் .
20 வருடங்களுக்கு பிறகு ,

ராமனின் நண்பன் வினோ , அது குறித்து கேட்டான் ,

'' அப்படி என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை , ஒரே காலேஜ்ல படிச்சு ஒரே கம்பெனில 15 வருஷமா வேலை செய்றீங்க ''

ராமன் அவனும் கிருஷ்ணனும் பிட்டு படம் பார்க்க போனதை சொன்னான் .

'' அதுல என்னடா பிரச்சனை படத்துல பிட்டு இல்லனா அவன் என்ன செய்வான் , தியேட்டர் காரன் மேலதான உனக்கு கோபம் வரணும் ''

'' என் கோபம் அதுக்கில்லடா , அந்த படத்துல வர கிழவன் பேரு ராமன் , கதாநாயகன் பேரு கிருஷ்ணன் அதுக்குதான்டா , அதுக்காக என்ன பார்த்து கேவலமா சிரிச்சுட்டாண்டா'' கண்களில் கண்ணீருடன் ராமன் .

Thursday, October 2, 2008

காந்தி கணக்கு பற்றிய ஒரு ஆராய்ச்சி!!!

நம்ம எல்லாருக்குமே ஒரு டவுட்டு இருக்கும் காந்திகணக்குனா என்னானு , எனக்கு கூட அந்த காலத்தில ( அந்த காலம்னா அந்த காலம் கிடையாது , சமீபத்தில சமீப காலத்திலனு வச்சிக்கலாம் ) . சரி நண்பருங்கிட்ட கேட்டா அவங்க அதுலாம் சொல்லித்தந்தா புரியாது அனுபவிக்கனும் மச்சி னுட்டாங்க.

இன்னாங்கடா இவனுங்களோட ரோதனையா பூட்ச்சேனு நாமளா கண்டுபுடிக்கலாம்னு ஆராய்ச்சில இறங்கி ஆராஞ்சா , அப்போதான் தெரிஞ்சிது அட இந்த மேட்டர் (விசயம்ங்க ) அனுபவிக்க வேண்டியது ஆராயக்கூடாததுனு . என்ன இவன் அது என்னானு சொல்ல மாட்டேன்றானேனு நீங்க யோசிக்கறது புரியுது எசமான் , அது ரொம்ப சிம்பிள் உங்களுக்கு புடிச்ச ஒரு பிகரையோ ( பல பிகருங்க இருந்தாலும் ஒகேதான் ) அல்லது சில அல்லது பல நண்பர்களையோ ஒன்னா சேத்துகிட்டு ஊருக்குள்ள ரொம்ப காஸ்ட்லியான ( இட்லி இல்ல காஸ்டிலி விலை உயர்ந்த ஒகேவா ) ஹோட்டலுக்கோ இல்ல தியேட்டருக்கோ அதுவுமில்லனா ஒரு நல்ல பாருக்கோ கூட்டிட்டு போயி டிரிட்டுனு சொல்லிட்டோ இல்ல சும்மானாச்சிக்கும் வேணும்கிறதுலாம் உங்க செலவுல பண்ணுங்க , எல்லாம் முடிச்சுட்டு ஆன செலவுக்கு காசு கணக்கு போட்டு கூட்டிகிட்டு போன மக்கள் கிட்ட கணக்கு கேட்டு பாருங்க , அவங்கல்லாம் முகத்தில ஒரு ரியாக்ஷனும் குடுக்காம தேமேனு முழிச்சுக்கிட்டு நிப்பாங்க , அது மாதிரி செலவு பண்றதுக்கு பேருதான் காந்தி கணக்கு . குடுத்தா திரும்ப வராத கணக்கு எல்லாமே காந்தி கணக்குதான் . இந்த மாதிரி வரலாற்றில கூட பல உதாரணங்கள் இருக்கு , ஆனா அதெல்லாம் இங்க சொன்னா என்னயும் சங்கத்த விட்டு விரட்டி என்னையும் புதுசா ஒரு சங்கம் தொடங்க வச்சிருவாங்க அதனால நோ ஹிஸ்டரி , ஸ்டிரைட்டா கம்மிங் டு த பாயிண்டு . கணக்கு கேட்ட விவகாரம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே .

சரி இந்த காந்தி கணக்குக்கு எதுக்கு காந்தி பேர வச்சாங்கனு தெரியுமா ? அதுக்கு ஒரு கதை இருக்கு ... அப்படினு லாம் சொல்லி பதிவ வளக்க விரும்பல அதுவும் சிம்பிள்தான் , காந்தி தாத்தா நமக்கெல்லாம் என்ன வாங்கித்தந்தாரு , ம்ம்ம் சுதந்திரம் , எதுக்கு வாங்கி தந்தாரு நாமெல்லாம் நல்லாருக்கணும் நாலு இடம் சுத்தணும் வேலா வேலைக்கு தண்ணி அடிக்கணும் , நிறைய தம்மடிக்கணும் , சைட்டடிக்கணும்னுதான , ஆனா பாருங்க அவரு நமக்கு இப்படி ஒரு சுதந்திரத்த வாங்கி தந்ததுக்கு எதினா பிரதிபலன் பாத்தாரா , இல்லையே அது மாதிரிதான் , எந்த பிரதிபலனும் பாக்காம நீங்க மத்தவங்களுக்கு செய்ற செலவுக்கு காந்திகணக்கு னு பேரு .

இதுக்கு டமாரு குமாரு மிக்கீபீடியால இன்னொரு விளக்கமும் இருக்கு அதாவது காந்தி ஒரு தியாகி நம்ம தலைவர் கைப்புள்ள மாதிரி எவ்ளோ அடிச்சாலும் தாங்கிப்பாரு , அதே மாதிரி நீங்க யாருக்காவது காசு குடுத்தாலும் , அவங்க உங்கள ஒரு தியாகியா நினைச்சு உங்களயும் காந்தி லெவல்ல திங்க் பண்ணி அந்த காச திருப்பி குடுத்து உங்கள அசிங்கப்படுத்தாம நீங்க குடுத்த காசு கணக்க .... காந்தி கணக்கா ஆக்கிருவாங்க .... நீங்களும் அவன திட்டவும் முடியாம அடிக்கவும் முடியாம அஹிம்சா வழில கால் பாதம் தேயற வரைக்கும் காசு கேட்டு அலைஞ்சிகிட்டு காந்தி மாதிரி ஒல்லியாகிடுவீங்க....

மக்களே இப்ப புரிஞ்சுதா காந்தி கணக்குக்கு ஏன் காந்திகணக்குனு பேருவந்திச்சுனு... இது தவிர காந்தி கொள்கை கூட இருக்கு ஆனா அத பத்திலாம் எழுதினா என்ன சங்கம் கவனிக்கும்ங்கறதால கழண்டுக்கிறேன்பா.......

இன்னைக்கு நம்ம சங்கத்தோட சார்பா காந்திஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறது சங்கத்து சிங்கங்கள் .

Wednesday, October 1, 2008

உங்கள் உயிருக்கு உலை வைக்கப்போகும் பதிவுகள் - !!

அண்ணா வணக்கங்கண்ணா

இந்த மாசம் நான்தானுங்கண்ணா அட்லாஸ் சிங்கம் அப்படித்தானுங்கண்ணா வவாச ல முடிவு பண்ணிருக்காங்க ,

இந்த மாசம் முழுக்க என்னோட அறிவ பிழிஞ்சு கசக்கி , மண்டைய குடாஞ்சு உங்களுக்குன்னே சில பல பிரத்யேக பதிவுங்கள போட்டு உங்கள கலங்கடிக்கலாம்னு இருக்கேன்.

இதுனா வரைக்கும் என்னோட வலைப்பூவுக்கு எவ்ளோ ஆதரவு குடுத்தீங்களோ அதே மாதிரி இங்கனயும் குடுக்கோணும்...

ஒழுங்கா மருவாதையா எல்லா பதிவுக்கும் நெறிய கமாண்டு போட்டு என்ன குஷி படுத்தலணா , அதுக்கடுத்த பதிவுல யாரெல்லாம் பின்னூட்டம் போடலியோ அவங்க டவுசர் கழட்டப்படும் என்பதை
தெரிவித்து கொள்கிறேன்ழ

சோத்துக்குதான உலை வைப்பாங்க உயிருக்கு எப்படி உலை வைக்க முடியும்

யாருப்பா இதுலாம் கண்டுபுடிக்கறது...

நாளைக்கு சந்திப்போமா....

வுடு ஜீட்......

Tuesday, September 30, 2008

எல்லோருக்கும் நன்றி!!! கேப்டனுக்கும் நன்றி!!!

எல்லோருக்கும் வணக்கம்.

எனக்கு அதிகமா எழுத வராது. ஆனா, நம்மளையும் மதிச்சி சங்கத்திலே கேக்கும்போது மறுக்கமுடியாம சிங்க அழைப்பை ஏத்துக்கிட்டேன்.

அன்னிக்கே வீட்லே சொல்லிட்டாங்க - சங்கத்திலே மட்டும்தான் நீங்க சிங்கம். அதுவும் ஒரே ஒரு மாசம்தான். வீட்லே எப்போவும் போல **&*$%** தான் அப்படின்னு. நானும் சரின்னு தலயை (அஜீத்தை இல்லீங்க) நல்லா ஆட்டி ஒத்துக்கிட்டேன்.

நான் இனிமே வவாச எழுதலே - அதனாலே வாலிபன் இல்லே - அப்படின்னு யாரும் தயவு செய்து நினைச்சிடாதீங்க... நான் எப்பவுமே வாலிப வாலிப அன்பன் தாங்க. (இந்த நேரம் யாரும் துக்ளக் பின்னட்டை விளம்பரத்தை நினைக்காதீங்க....)

என்னுடைய எல்லா மொக்கைகளையும் பொறுத்துக்கிட்டு பின்னூட்டம் போட்டவங்களும், பின்னூட்டம் போடாத கோடிக்கணக்கான மக்களுக்கும், சங்கத்துக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.. (அட.. கையெல்லாம் தட்டாதீங்கப்பா....)

போறதுக்கு முன்னாடி நம்ம கேப்டனுக்கு ஒரு முறை நன்றி கூறிவிட்டு சில புள்ளிவிவரங்களை கொடுக்கிறேன்.

மீண்டும் உங்க எல்லாரையும் பூச்சாண்டியில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ச்சின்னப்பையன்... ச்சின்னப்பையன்... ச்சின்னப்பையன்...

சிங்கமாக எழுதிய மொத்த பதிவுகள்: 23 (இதையும் சேர்த்து)

கிடைத்த மொத்த பின்னூட்டங்கள்: 445 (இந்த பதிவை சேர்க்காமல்)

ஒரு பதிவுக்கு வந்த அதிக பின்னூட்டங்கள்:47

ஒரு பதிவுக்கு வந்த குறைந்த பின்னூட்டங்கள்: 8

நடுனடுவே வவாசவில் மற்றவர்கள் போட்ட பதிவுகள்: 5

நான் துவங்கும்போது வவாச்வின் Counter: 123050

நேற்றைய தேதியில் Counter: 137500


Sunday, September 28, 2008

இது வகுச-லேந்து சுட்டது!!!


பிஸ்கட் பிஸ்கட்

ஜாம் பிஸ்கட்

என்ன ஜாம்?

கோ ஜாம்

என்ன கோ?

டீ கோ

என்ன டீ?

ரொட்டி

என்ன ரொட்டி?

பன் ரொட்டி

என்ன பன்?

ரிப்பன்

என்ன ரிப்பன்?

பச்சை ரிப்பன்

என்ன பச்சை?

மா பச்சை

என்ன மா?

அம்மா

என்ன அம்மா

டீச்சரம்மா

என்ன டீச்சர்?

கணக்கு டீச்சர்

என்ன கணக்கு?

வீட்டு கணக்கு

என்ன வீடு?

மாடி வீடு

என்ன மாடி?

மொட்டை மாடி

என்ன மொட்டை?

பழனி மொட்டை

என்ன பழனி?

வட பழனி

என்ன வட?

ஆமை வடை

என்ன ஆமை?

குளத்து ஆமை

என்ன குளம்?

திரி குளம்

என்ன திரி?

விளக்கு திரி

என்ன விளக்கு?

குத்து விளக்கு

என்ன குத்து?

கும்மாங் குத்து.... ஹாஹாஹா....

பிகு: அங்கங்கே ச்சின்னச்சின்ன தப்பு இருக்கும்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா, அது வகு சங்கத்தை சேந்தவங்ககிட்டேதான் கேக்கணும்!!!


Friday, September 26, 2008

வாலின் தலை எந்த சர்ச்சையிலும் அடிபடாமல் இருக்க 100 யோசனைகள்!!!

பதிவர் நண்பர் வால்பையன் மிகவும் வருத்தப்பட்டு நேற்று ஒரு பதிவு போட்டிருந்தார். அவருடைய தலை இனிமேல் எந்த சர்ச்சையிலும் அடிபட்டு உருளாது இருக்க நம்மாலான 100 யோசனைகளை தரலாமென்று நினைத்து இந்த பதிவிடுகிறேன்...


வால் -> இனிமேல் இந்த பதிவுத்தலைப்புகளில் மட்டுமே பதிவிடுங்கள்... இதற்காக நீங்கள் எனக்கு நன்றி கூறியெல்லாம் பதிவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


எலிக்குட்டியை சற்றே கீழே உருட்டுங்கள்...

கீழே

சற்றே கீழே...
இசையை துவக்குக......1. மொக்கை
2. பயங்கர மொக்கை
3. சூப்பர் மொக்கை
4. அருமையான மொக்கை
5. மொக்கையோ மொக்கை
6. மென்மையான மொக்கை
7. கடுமையான மொக்கை
8. நல்ல மொக்கை
9. கெட்ட மொக்கை
10. லோக்கல் மொக்கை
11. ஃபாரின் மொக்கை
12. உலக மொக்கை
13. சொந்த மொக்கை
14. அடுத்த வீட்டு மொக்கை
15. எதிர் வீட்டு மொக்கை
16. மேல் மொக்கை
17. கீழ் மொக்கை
18. வலது மொக்கை
19. இடது மொக்கை
20. சன்டே மொக்கை
21. மண்டே மொக்கை
22. ட்யூஸ்டே மொக்கை
23. வெட்னஸ்டே மொக்கை
24. தர்ஸ்டே மொக்கை
25. ஃப்ரைடே மொக்கை
26. சாடர்டே மொக்கை
27. வீக் ஸ்டார்ட் மொக்கை
28. வீக் எண்ட் மொக்கை
29. ஞாயிறு மொக்கை
30. திங்கள் மொக்கை
31. செவ்வாய் மொக்கை
32. புதன் மொக்கை
33. வியாழன் மொக்கை
34. வெள்ளி மொக்கை
35. சனி மொக்கை
36. வார துவக்க மொக்கை
37. வாரயிறுது மொக்கை
38. ஜனவரி மொக்கை
39. பிப்ரவரி மொக்கை
40. மார்ச் மொக்கை
41. ஏப்ரல் மொக்கை
42. மே மொக்கை
43. ஜூன் மொக்கை
44. ஜூலை மொக்கை
45. ஆகஸ்ட் மொக்கை
46. செப்டம்பர் மொக்கை
47. அக்டோபர் மொக்கை
48. நவம்பர் மொக்கை
49. டிசம்பர் மொக்கை
50. சித்திரை மொக்கை
51. வைகாசி மொக்கை
52. ஆனி மொக்கை
53. ஆடி மொக்கை
54. ஆவணி மொக்கை
55. புரட்டாசி மொக்கை
56. ஐப்பசி மொக்கை
57. கார்த்திகை மொக்கை
58. மார்கழி மொக்கை
59. தை மொக்கை
60. மாசி மொக்கை
61. பங்குனி மொக்கை
62. விடியல் மொக்கை
63. முற்பகல் மொக்கை
64. மதிய மொக்கை
65. பிற்பகல் மொக்கை
66. மாலை மொக்கை
67. முன்னிரவு மொக்கை
68. நள்ளிரவு மொக்கை
69. பின்னிரவு மொக்கை
70. அரியலூர் மொக்கை
71. சென்னை மொக்கை
72. கோவை மொக்கை
73. கடலூர் மொக்கை
74. தர்மபுரி மொக்கை
75. திண்டுக்கல் மொக்கை
76. ஈரோடு மொக்கை
77. காஞ்சிபுரம் மொக்கை
78. கன்னியாகுமரி மொக்கை
79. கரூர் மொக்கை
80. கிருஷ்ணகிரி மொக்கை
81. மதுரை மொக்கை
82. நாகை மொக்கை
83. நாமக்கல் மொக்கை
84. நீலகிரி மொக்கை
85. பெரம்பலூர் மொக்கை
86. புதுக்கோட்டை மொக்கை
87. ராமநாதபுரம் மொக்கை
88. சேலம் மொக்கை
89. சிவகங்கை மொக்கை
90. தஞ்சாவூர் மொக்கை
91. தேனி மொக்கை
92. தூத்துக்குடி மொக்கை
93. திருச்சி மொக்கை
94. திருநெல்வேலி மொக்கை
95. திருவண்ணாமலை மொக்கை
96. திருவாரூர் மொக்கை
97. திருவள்ளூர் மொக்கை
98. வேலூர் மொக்கை
99. விழுப்புரம் மொக்கை
100. விருதுநகர் மொக்கை

Thursday, September 25, 2008

ஒரு மென்பொருள் நிபுணரின் கதை...!!!

1996 - ஜனவரி 1:

"அப்பா. இங்கே வந்து பாருங்கப்பா. நான் இந்த வருஷ போனஸ்லே இந்த புது BSA SLR சைக்கிள் வாங்கியிருக்கேன்".

"ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்கம்மாவை பின்னாடி உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா".


2003 - ஜனவரி 1

"அம்மா, இங்கே வந்து பாரும்மா. நம்ம குடும்பத்திலே முதல்முதல்லே நான் கார் வாங்கியிருக்கேன்."

"ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உன் பொண்டாட்டியை பக்கத்துலே உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா."


2009 - ஜனவரி 1

(மனைவியிடம்) "ஏம்மா, இங்கே வந்து பாரு. ஆறு மாசமா சேமிச்ச பணத்திலேர்ந்து ஒரு புது சைக்கிள் வாங்கியிருக்கேன்".

"ரொம்பவே சூப்பரா இருக்குங்க. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்க பொண்ணை உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வாங்க".


செய்தி:

அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாவதைத் தொடர்ந்து, இந்தியாவில் மென்பொருள் நிறுவனங்களுக்கு ப்ராஜக்ட்ஸ் வருவது குறையும் என்று நம்பப்படுகிறது.

பல நிறுவனங்களில் ஏற்கனவே ஆட்குறைப்பு, கணிசமான சம்பளம் குறைப்பு ஆகியவை துவங்கிவிட்டன.

ஆனால், நான் வேலை செய்யும் நிறுவனம் போலவே எல்லா நிறுவனங்களும் இத்தகைய நடவடிக்கைகளை மறுத்து வருகின்றன.... :-(

ஆனாலும், எதற்கும் மனம் தளராத விக்கி போல் ( நம்ம விக்கி இல்லீங்க...), எதற்கும் வருத்தப்படாமல், பதிவுகளா, பின்னூட்டங்களா போட்டுத் தள்ளுங்கன்னு சங்கத்தின் சார்பாக வருத்தப்படாமல் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...

Wednesday, September 24, 2008

ர்ரிவர்ஸிபிள் (irreversable) - ஒரு உப்புமா முயற்சி!!!

நானும் நேத்து காலைலேர்ந்து யோசிச்சி யோசிச்சி ரொம்ப டயர்டா இருக்கேன்.

ர்ரிவர்ஸிபிள் - அப்படின்னா என்ன? கிழே இருக்கிற படத்தை பாருங்க.
இது பேருதான் உப்புமா. (சாப்பிட குடுக்கும்போது தங்கமணி அப்படித்தான் "சொல்லிக்" கொடுத்தாங்க!!!).

இதிலே உப்பு, ரவை, நெய், கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், மிளகாய், தண்ணீர், புளித்த மோர் எல்லாம் சேத்து செஞ்சிருக்காங்க..

ஆனால், உப்புமா ஆனபிறகு மறுபடி மேலே கூறிய பொருட்களை தனித்தனியா பிரித்தெடுக்க முடியுமா?


அதனால், ர்ரிவர்ஸிபிள் = உப்புமா அப்படிங்கற தீர்மானத்துக்கு நான் வந்துட்டேன்..


நீங்க என்ன சொல்றீங்க?


முக்கியமான பின்னுரை:

இதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு உப்புமா பற்றிய பதிவுகள் இருக்காதுன்றதை நான் இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாக கூற விரும்புகிறேன்...

ஆபீஸுல எபபடித் தூங்கறது?

கேள்வி: தல,ஆபீஸுல எபபடி தூங்கறது?
கைப்பு: கண்ண மூடிட்டுதான்.

Tuesday, September 23, 2008

ரெண்டு வருட காலம் உழைத்து நான் கற்ற மொழி...!!!

ஸ்பானிஷ் மொழியைப் படிக்க வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஸ்பானிஷில் ஒரு பக்கம், இரண்டு பக்கம், நாலு பக்கம் எழுதும் அளவுக்கு மொழி கைவசப்படும்.


சமீபத்தில் இதை படித்தவுடனேயே, டக்கென்று கொசுவர்த்தி கொளுத்தி விட்டேன்.


நானும் 'அந்த' மொழியை படிக்க/பேச எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். தினமும் போவோர் வருவோரிடமெல்லாம் 'அந்த' மொழி தெரியுமா என்று கேட்டு, அவரிடத்தில் பேசுவேன். சரியாக இரண்டே இரண்டு வருடம், 'அந்த' மொழியில் தேர்ச்சி பெற்றேன். என் திறமையைக் கண்டு என் பெற்றோரும், நண்பர்களும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


சரி சரி.. பில்டப் போதும்... 'அந்த' மொழி எந்த மொழி என்று கேட்பவர்கள் சிறிது கீழே படிக்கவும்....


கணிணிக்கு கீழேயல்ல... கணிணித்திரையிலேயே கீழே.......கீழே...
.. இன்னும் கொஞ்சம்...
... ப்ளீஸ்...
அந்த மொழி : தமிழ்
கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது என் வயது: இரண்டு


Monday, September 22, 2008

வ.வா. சங்கமும் 2011ம்

கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

ப:செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க...


கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...


கே:மக்கள் மத்தியிலே உங்க வ.வா.ச கூட்டணிக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

ப: இது கேள்வி... நல்லா கேக்குறப்பூ...
வயல்ல மவுசு தின்ன விவசாயில்லருந்து ... வேலியில்ல கம்ப்யூட்டர் முன்னாடி மவுசு உருட்டற பயபுள்ளக வரைக்கும் வ.வா.சக்கு தான் மவுசு... எங்க கூட்டணி தான் ரவுசு.... அம்புட்டு பயலும் நம்ம சங்கத்து மேல பாச மழையப் பொழியறாங்க... ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல). அ.உ.ஆ.சூ.கு.க கொ.பா.செ செல்வனாரும் இதையே தான் சொல்லுறார்... இப்படி இப்போ என்க கையிலே இருக்க ஓட்டை எண்ணிப் பார்த்தாலே நாங்க எங்கிட்டோ லீடிங்ல்ல இருக்கோம் தம்பி...
இது தெரியாமா.. எதிர் கட்சிக்காரய்ங்க கிரகம் ஆடுறாயங்க....ஹய்யோ...ஹய்யோ...

கே: உங்க சங்கத்துல்ல ஆளே இல்லன்னு ஒரு குற்றசாட்டு அது பத்தி சொல்லுங்களேன்..
ப: இது என்ன சுப்பித்தனமாப் பேசுற...வாலிப சங்கம்ய்யா இது... இளைஞர்கள்ன்னா அங்கே இங்கேப் போய் அப்பிடி இப்பிடி இருப்பான்... அவங்களை எல்லாம் ஒரே இடத்துல்ல வச்சு எண்ணுறதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாதுப்பா...
எங்க சங்கத்து தம்பி பாண்டி டாவு கட்டுற புள்ளங்களை எண்ணுனா அதுவே அந்தக் கட்சிக்கு விழுற ஓட்டை விட மூணு மடங்கு அதிகம் இருக்கும்ப்பா எண்ண தெரியாததும் எண்ண முடியாததும் எதிர் குருப்போட வீக்னஸ் அப்பு... அந்த விவஸ்தக் கெட்ட கூட்டம் கூவிச்சுன்னு வக்கனையா நீயும் கேக்குற.. பாத்துக் கேளுப்பா இல்ல பத்திக்கும்....

கே: ப.ம.க பற்றி?
ப:நல்லவர்கள் நிறைந்த அந்த இயக்கம் இன்று பிளவுப் பட்டு கிடப்பது மனத்தை வாட்டுகிறது....ஒரு உண்மையச் சொல்லுறேன் அந்தக் கட்சி இப்போ தாலிபன் பிடியிலே இருக்கு....அதைக் காப்பாத்த
இந்த கைப்புள்ள வாலிபனால்
மட்டுமே முடியும் என அங்குள்ளவர்கள் உண்மையாக நம்புகிறார்கள்.. விரும்புகிறார்கள்... இது யாராலும் மறுக்க முடியாது...
என்ன ஆனாலும் சரி... பரிதாபகரமாக இருக்கும் ப.ம.க வை ஆண்டவன் மற்றும் அ.உ.ஆ.சூ.கு.க , மல்லிகை கூட்டணித் தோழ்ர்கள்...வ.வா.ச செயல் சிங்களின் துனை கொண்டு இந்தக் கைப்பு மீட்பதை யாராலும் தடுக்கவே முடியாது....

எல்லாரும் மீள் பதிவு எழுதுறபோது நாங்களும் டைமிங்கா போடுவோம்ல.. முன்னாடியே நாங்க இந்த விஷயத்தைப் பத்தி எழுதுன பதிவு

பதிவர்களின் நலனுக்காக எனது முதல் சமையல் குறிப்பு...!!!


Friday, September 19, 2008

இந்த வாரயிறுதியில் நான் செய்யப்போகும் வேலைகளின் நீண்ட பட்டியல்!!!

ரொம்ப நாட்களாக தள்ளிக்கொண்டே போன வேலைகள் சிலவற்றை இந்த வாரயிறுதியில் செய்தே ஆகவேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். யார் நினைத்தாலும் என்னைத் தடுக்கமுடியாது என்றும் கூறிவிட்டேன்.

அதன்படி, செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் தயார் செய்துகொண்டுவிட்டேன். அது உங்கள் பார்வைக்கு.... பட்டியலில் ஏதேனும் விட்டுப்போயிருந்தால், தயவு செய்து எனக்கு உடனே தெரியப்படுத்தவும்...

சனிக்கிழமை:

1. காலையில் சிற்றுண்டி
2. சிறு தூக்கம்
3. மதிய உணவு
4. சிறிது நேரம் ஓய்வு
5. மாலை சிற்றுண்டி
6. சிறிது நேரம் கட்டையை சாய்த்தல்
7. இரவு உணவு
8. இரவுத் தூக்கம்

ஞாயிற்றுக்கிழமை:

1. காலையில் சிற்றுண்டி
2. சிறு தூக்கம்
3. மதிய உணவு
4. சிறிது நேரம் ஓய்வு
5. மாலை சிற்றுண்டி
6. சிறிது நேரம் கட்டையை சாய்த்தல்
7. இரவு உணவு
8. இரவுத் தூக்கம்

Wednesday, September 17, 2008

சுயசொறிதல் எனக்கும் பிடிக்காது - சென்ஷி, பரிசல் FYI...


நான் முதல் பதிவு போட்டு சுமார் 9 மாதங்களாகின்றது. தொடக்கத்திலிருந்தே எனக்கு சுயசொறிதல் பிடித்ததேயில்லை. நேற்றிலிருந்து தமிழ்மணத்தில் இப்படிப்பட்ட தலைப்புகள் சுற்றிக்கொண்டிருப்பதால், நானும் என் சார்பு நிலையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன்.


ஆனால், சில சமயம் சுயசொறிதல் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, நான் செய்வது என்னவென்றால்....

கீழே போய் பார்க்கவும்...

.....

கீழே......

..

இன்னும் கொஞ்சம்தான்......


சஹானாவிடம் சீப்பு கொடுத்து உதவி கேட்பேன்... ஹிஹி... பின்னே முதுகுலெல்லாம் ஒரு மனுசனாலே எப்படி சுயசொறிதல் செய்யமுடியும், சொல்லுங்க....
Tuesday, September 16, 2008

ஜிங்சக்... ஜிங்சக்... ஜிங்சக்...!!!

அலுவலகத்தில் ஜால்ரா
அடிப்பவர்களைப் பார்த்தால்

சில சமயங்களில்
சிரிப்பாக இருக்கிறது

பல சமயங்களில்
பயங்கர கோபமாய் வருகிறது

என் மேல் எனக்கே
ஏகப்பட்ட வெறுப்பாய் இருக்கிறது

என்ன காரணமாக இருக்கும்
என்று நினைத்துப் பார்க்கிறேன்

ஒரு வாரமாக தினமும்
ஒரு கடைவிடாமல் தேடியும்

ஜிங்சக் போட
ஜால்ரா கிடைக்கவில்லை

பல கடைகளில் சொல்கிறார்கள்
பயங்கர டிமாண்டாம்

அட்வான்ஸ் புக்கிங் செய்து
அள்ளிப் போகிறார்களாம்

இனியும் தாமதிக்க வேண்டாமென்று
இணையத்தில் தேடினேன்

ஈபேயில் வாங்கியது கைக்கு வந்து சேரும்வரை
ஈஈயென இளிக்கவேண்டும் வாய் காதுக்கு வரும்வரை...

Friday, September 12, 2008

கொஞ்சம் காசு இருந்தா குடுங்க...!!!என் சிரிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் சிரிக்கமுடியவில்லை!!!
என் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் பேசமுடியவில்லை!!!
என் பணம் அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் செலவழிக்கமுடியவில்லை!!!

அதனால், கொஞ்சம் காசு இருந்தா குடுங்க...!!!

பெண்கள் மென்பொருள் துறையில் பட்டையை கிளப்புவது எப்படி?

மத்த எல்லா துறைகளையும் விட மென்பொருள் துறைல பொண்ணுங்க அதிகமா வேலை செய்யறதுக்கு என்ன காரணம்னு ரொம்ப நாளா சிந்திச்சிருக்கேன். பதில் தெரியவே இல்லை. சரி யாரை கேக்கலாம்னு யோசிக்கும் போது மென்பொருள் துறைல யார் யார் வந்தா எப்படி எப்படி வேலை செய்வாங்கனு அந்த துறையை புரிஞ்சிருக்கறவரும், பொண்ணுங்க மனசை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கறவருமான நம்ம அட்லாஸ் சிங்கம் ச்சின்னப்பையனை கேட்டுடலாம்னு ஒரு ஃபோனை போட்டேன்.

ச்சி.பை : என்னப்பா வெட்டி எப்படி இருக்க?

வெ.ப: நல்லா இருக்கேண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?

ச்சி.பை: நான் என்ன உன்னை மாதிரி தங்கமணியை இந்தியாக்கா அனுப்பிருக்கேன். இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு டென்ஷனாக்காதப்பா.

வெ.ப: சரி சரி. எனக்கு ஒரு சந்தேகம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.

ச்சி.பை: எனக்கும் ஒரு சந்தேகமிருக்கு. தங்கமணியை இந்தியா அனுப்புவது எப்படினு ஒரு பதிவு போடேன். மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

வெ.ப: அண்ணே. அதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம். இப்ப எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம். அதை தீர்த்து வைங்க.

ச்சி.பை: சரிப்பா. சொல்லு.

வெ.ப: மத்த எல்லா துறையும் விட மென்பொருள் துறைல பெண்கள் அதிகமா இருக்கறதுக்கு காரணமென்ன?

ச்சி.பை: இது ஒரு நல்ல கேள்வி.

வெ.ப: பதிலை சொல்லுங்கண்ணே!

ச்சி.பை: இதுக்கு நான் பதில் சொல்றதை விட சில பல கேள்விகள் கேக்கறேன். அதுல இருக்குற சூட்சமத்தை புரிஞ்சிக்கிட்டா உனக்கே தானா புரிஞ்சிடும்.

வெ.ப: சரிண்ணே. கேள்வியை கேளுங்க

ச்சி.பை: சாப்ட்வேர்ல அதிகமா எல்லாரும் என்ன வேலை செய்வாங்க?

வெ.ப: டெவலப்பர்.

ச்சி.பை: டெவலப்பர்ஸ் அதிகமா என்ன செய்வாங்க?

வெ.ப: காப்பி பேஸ்ட்

ச்சி.பை: நதியா தோடு, குஷ்பூ ஜாக்கெட், சித்தி ராதிகா புடவை, கஜோல் சல்வார் இந்த மாதிரி பல ஐட்டம்ஸ் இருக்கு. ஆனா அஜித் சட்டை, விஜய் பேண்ட், சிம்பு பர்முடாஸ்னு ஏதாவது இருக்கா?

வெ.ப: இல்லையேண்ணே.

ச்சி.பை: இது தான் காப்பி பேஸ்ட்டோட துவக்கமே. இதுல யாரு எக்ஸ்பர்ட்னு புரியுதா?

வெ.ப: புரியுதுண்ணே.

ச்சி.பை: அது. அடுத்து என்ன வேலை அதிகமா செய்யறாங்க?

வெ.ப: டெஸ்டிங்

ச்சி.பை: அதுல என்ன பண்ணுவாங்க.

வெ.ப: எதுல என்ன தப்பு இருக்குனு கண்டுபிடிப்பாங்க.

ச்சி.பை: அப்படினா பொண்ணுங்க எல்லாம் பிறப்பாலே டெஸ்டர்ஸ் தான்பா. அவுங்களுக்கு எல்லாம் ட்ரெயினிங்கே கொடுக்க தேவையில்லை.

வெ.ப: எப்படினே சொல்றீங்க?

ச்சி.பை: மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனையெல்லாம் தெரியாதா உனக்கு? இந்த மாதிரி மாமனார்- மருமகன் பிரச்சனைனோ, மாமன் மச்சான் பிரச்சனனோ ஏதாவது இருக்கா? ஒரு பொண்ணு கல்யாணமாகி வந்தா ஒரே நாள்ல அவள பத்தி ஆயிரம் Bugsஐ ஒரு மாமியாராலயும், நாத்தனாராலயும் ரிப்போர்ட் பண்ண முடியும். அதே மாதிரி மாமியார் நாத்தனாரை பத்தி ஆயிரம் Bugsஐ அந்த பொண்ணு ரிப்போர்ட் பண்ணும். ஆனா நம்ம பையனால ஒரு நாலு அஞ்சி பக்ஸ் கூட ரைஸ் பண்ண முடியாது.

வெ.ப: ஓ. அப்ப பொண்ணுங்க டெஸ்டிங்லயும் பட்டையை கிளப்புவாங்கனு சொல்றீங்க?

ச்சி.பை: நான் என்ன சொல்றது. உலகத்துக்கே அது தெரியும். அடுத்து என்ன வேலை அதிகமா பண்றாங்க?

வெ.ப: மெயிண்டனன்ஸ் ப்ராஜக்ட்

ச்சி.பை: அதுல என்ன செய்வாங்க?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச ப்ராஜக்ட்க்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை இருந்தா ஏற்கனவே பண்ணியிருந்ததுல கொஞ்சம் மாறுதல் செய்வாங்க. அதிகமான வேலை இருக்காது.

ச்சி.பை: இட்லி உப்புமானா என்னனு தெரியுமா?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச இட்லி மீந்துச்சுனா வீணாகாம இருக்க அதை கொஞ்சம் மாத்தி எல்லாரும் சாப்பிடற மாதிரி கொடுக்கறது.

ச்சி.பை: அதே அதே. நீ முன்னாடி சொன்னதும் கொஞ்சம் கொஞ்சம் அது மாதிரி தானே ;)

வெ.ப: அண்ணே. எங்கயோ போயிட்டீங்க. அடுத்து டேமஜர்.. சாரி சாரி மேனேஜர்

ச்சி.பை: அதுல எல்லாரையும் வேலை வாங்கனும். அப்படி தானே?

வெ.ப: ஆமாம்னே.

ச்சி.பை: இது நான் உனக்கு சொல்லி தான் தெரியனுமா? வேலை வாங்கறதுல பொண்ணுங்களை மிஞ்ச ஆள் இருக்கா? காலேஜ் படிக்க ஆரம்பிக்கும் போது பசங்க பொண்ணுங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கறானுங்க. அது கட்டைல போற வரைக்கும் கண்டினியூ ஆகுது. சரி தானே?

வெ.ப: ஆமாங்கண்ணே...

ச்சி.பை: போதுமா இல்லை இன்னும் ஏதாவது வேணுமா?

வெ.ப: பொதும்ணே.. பொதும். என் அறிவு கண்ணை திறந்து வெச்சிட்டீங்க... பொண்ணுங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியராகற திறமை பை பர்த்தே இருக்குனு புரிய வெச்சிட்டீங்க.

ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.

வெ.ப: இதெல்லாம் நீங்க சொல்லனுமா? என்ன மக்களே. ரெடி தானே? கும்மி அடிக்கின்ற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

Thursday, September 11, 2008

நலம் நலமறிய ஆவல்...

காதல் கோட்டை படத்தில் ஒரு அருமையான பாடல் 'நலம் நலமறிய ஆவல்...'. இது காதலர்கள் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி பாடறது.

அதே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு அறுபது நாள் ஆனப்பிறகு (என்ன வெட்டி?... முப்பது நாள் போதுமா...) பாடினா எப்படி இருக்கும்றதுதான் இந்த கற்பனைப் பாடல்.

இது ஒரு ஜாலியான கற்பனைதான். அந்த பாட்டை கொலை செய்யும் முயற்சி இல்லை. அதனாலே, பின்வர்ற பாட்டை அதே மெட்டுலெ பாடி, எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

நம்ம ஹீரோ தனியா வெளிநாட்டுக்கு வந்துடறார். ஹீரோயின் இந்தியாவிலே....

இன்னொரு முக்கியமான விஷயம். ஒரிஜினல் பாட்டுலே - கேள்விகள் ஹீரோ கேக்கறமாதிரியும், பதில்கள் ஹீரோயின் சொல்றாமாதிரியும் இருக்கும். இங்கே அது அப்படியே உல்டா.

இப்போ பாட்டு....

நலம்.. நலமறிய ஆவல்... உன் நலம் நலமறிய ஆஆவல்...

நான்இங்கு சுகமே.... நீ அங்கு சுகமா?... ( நான்)

தீண்டவரும் காற்றினையே இங்கனுப்புங்க...... வேர்க்கிறதே...
ஏற்கனவே சம்மர் இங்கே... வெயில் வேறே மண்டையை பொளக்கிறதே...

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிவெக்கட்டா?
கப்பினில் போஸ்ட்மேனும் மயங்கிடுவாரே...

இரவினில் கனவுகள் தினம் தொல்லையா...
மப்பினில் நினைவில்லை கனவுகளே...ஏஏஏ......... ( நலம்)


கோயிலிலே நான் தொழுதேன்... கோவைக்கு நீங்க திரும்பிடவே...
கோடி முறை நான் தொழுதேன்... Contract Renew ஆகிடவே......

என் முகம் நீங்க பார்க்க கடிதமேதானா....
ஊர்லே வெச்சி பார்த்ததே... பயம் போகலியே....

நிழற்படம் அனுப்பட்டா, என் உயிரே...ஏ..?
திருஷ்டி பொம்மை இருக்குது... என்கிட்டேயே..... ( நலம்)

--------

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமே தப்பிக்கறவங்கல்லாம், மேலே சொன்ன கருத்தை வழிமொழியறாங்கன்னு நான் தெரிஞ்சிப்பேன். ரொம்ப ரொம்ப நன்றி...