Friday, April 18, 2008

Wishes: ராம்

சுவரொட்டியில் வர வேண்டிய பதிவு ஒரு வித்தியாசமா இங்கே. காரணம் ராம்.
அவரு ஆர்குட்டுல நடத்தின அலப்பரைய ஏற்கனவே வெட்டி கிழிச்சு தொங்கப்போட்டாலும், அதென்னமோ ராமை உசுப்பேத்தி விடறதுல சங்கத்து சிங்கங்களுக்கு போட்டா போட்டி எப்பவுமே நடக்கும். அவர் ஆர்குட் புரைபுலை பாருங்க..

relationship status: single
(எலேய் எதுக்கு பிட்ட போடறேன்னு தெரியுது..)

birthday: April 19
(இருக்கட்டும், வருஷம் என்ன?)

languages i speak: English (US), Tamil, Kannada.
(சும்மா கதை விடக்கூடாது, i walk, talk, english எல்லாம் இங்கிலீசுன்னா தெருவுல வடை சுடற பாட்டிக்கும் இங்கிலீசு தெரியும்னு சொல்லும்.)

here for: friends
(girl friendsன்னு நேரா சொல்ல வேண்டியதுதானே)

children: no
(யாருக்குத்தெரியும்..)

humor: campy/cheesy, friendly
(அதை நாங்க இல்லே சொல்லோனும். நீங்களா சொல்லிக்க கூடாது)

fashion: classic
(தோடா, கிழிஞ்ச சாக்ஸ், சட்டை போட்டுகிட்டு போயி, அதை எல்லாருக்கும் காட்டுறதுதான் இப்போ fasshion. அந்த நாத்தம் புடிச்ச சாக்ஸ்ஸ தொவச்சு போடக்கூடாதா? செத்து போன எலி கூட உங்களைப் பார்த்தவுடனே எந்திருச்சு ஓடிச்சாமே? classic ன்னா ஹோம்லியா ஃபிகர் கிடைக்கும்னு நினைப்பா?)

smoking: no
(அடப்பாவி, அடப்பாவி, இது போதுமே உங்க புளுகு மூட்டைக்கு அச்சாரம்)

drinking: no
(அப்படிங்களான்னா, ஏன் ஏன் இப்படி ஒரு வெளி வேசம், தேவையா இது எல்லாம்?ஓஹ் மிக்ஸிங்க இல்லாம அடிப்பீங்க அப்படிங்கிறத சொல்ல வர்றீங்களா?)

pets:i love my pet(s)
(நீங்களே ஒரு petஆ போக வேண்டிய ஆளு, இதுல உங்களுக்கு pet(s)அதுவும் பிராக்கெட்ல, ரெண்டு அனகோண்டா வளர்த்துறதுதானே?)

living:alone, with roommate(s).
(தனியா ரெண்டு பேரு வந்து இருக்கோம்னு சொல்ற கவுண்டமணி மாதிரி இருக்குலே)

hometown: மதுரை
(மதுரை என்ன பாவம் செஞ்சுதோ தெரியல)

webpage: http://raamcm.blogspot.com/
(இதை எவனும் hack பண்ணித்தொலைக்க மாட்டேங்கிறானே :()

sports: ரம்மி,மூணு சீட்டு, மங்காத்தா
(நல்லா வருது வாயில, இதெல்லாம் எப்போ sportsல சேர்த்தாங்க?)

books:இன்னும் படிக்கணும்.
(ஆமா ஒன்னாங்கிலாஸ் பொஸ்தகத்தையே எத்தனை வருசமாத்தான் படிப்பீங்க?)

cuisines: Amma senchu kodukkira ethuvum..
(பக்கத்து ஊடு, எதிர்த்த வூடு, கீழ் வூடு இப்படி எந்த அம்மா எப்போ சாப்பாடு செஞ்சாலும் முதல்ல ஓடிப்போயி அம்மா.. தாயேன்னு நிப்பீங்களே அந்த அம்மாக்களா?

இப்படித் தெருவுல எந்த கார் நின்னாலும் ஓடிப்போயி நின்னு போஸ் குடுத்து போட்டோ
எடுத்துக்கும் எங்க அன்புத் தம்பி, ஆருயிர் நண்பன், தைரிய துருவம், சங்கத்தின் சிங்கம்(கருமம், எப்படி எல்லாம் சொல்லி தொலைக்க வேண்டி இருக்கு பாருங்க) பொறந்த நாள் வாழ்த்துக்கள்! சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.

('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....)

40 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)

மீ தி ஃபர்ஸ்ட்டூ?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹீஹீ.. ராமுடைய உண்மையான முகத்திரையை கிழித்த சிங்கம் இளாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.. :-)))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமண்ணே. :-)

சென்ஷி said...

:))

HAPPY BIRTHDAY RAM

மங்களூர் சிவா said...

இங்கயும் ஒரு தரம் சொல்லிக்கிறேன் வாழ்த்துக்கள் 'சின்ன கைப்புள்ளை' ராம்.

சென்ஷி said...

//பொறந்த நாள் வாழ்த்துக்கள்! சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//

ரிப்பீட்டே :))

மங்களூர் சிவா said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹீஹீ.. ராமுடைய உண்மையான முகத்திரையை கிழித்த சிங்கம் இளாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.. :-)))))
/
ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏய்

சென்ஷி said...

//cuisines: Amma senchu kodukkira ethuvum..(பக்கத்து ஊடு, எதிர்த்த வூடு, கீழ் வூடு இப்படி எந்த அம்மா எப்போ சாப்பாடு செஞ்சாலும் முதல்ல ஓடிப்போயி அம்மா.. தாயேன்னு நிப்பீங்களே அந்த அம்மாக்களா?//

இது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஓவரு... ஆனாலும் சூப்பரு :))

சென்ஷி said...

//relationship status: single
(எலேய் எதுக்கு பிட்ட போடறேன்னு தெரியுது..)
//

எதுக்குப்பா.. :))
(ஒண்ணுமே தெரியாதவன்)

சந்தோஷ் = Santhosh said...

kalakkal post.. Happy Bday Raam anna.

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹீஹீ.. ராமுடைய உண்மையான முகத்திரையை கிழித்த சிங்கம் இளாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.. :-)))))
//

சூப்பர் ரிப்பீட்டே :)

சந்தோஷ் = Santhosh said...

சென்ஷி said...
//பொறந்த நாள் வாழ்த்துக்கள்! சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//

ரிப்பீட்டே :))

yov senshi.. irukartha ellam avare eduthukita nanga ellam enga porathu.. ethellam nalla illa

சென்ஷி said...

//சந்தோஷ் = Santhosh said...
சென்ஷி said...
//பொறந்த நாள் வாழ்த்துக்கள்! சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//

ரிப்பீட்டே :))

yov senshi.. irukartha ellam avare eduthukita nanga ellam enga porathu.. ethellam nalla illa//

அட வுடு சந்தோசு... உனக்காக துபாய்ல ஒட்டகத்துல மேல போற பிகர் போட்டோவ அனுப்பி வைக்கறேன். ஆனா முகம் மட்டும் படுதாவால மூடி இருக்கும். பரவால்லையா :))

சென்ஷி said...

ஆஹா... கமெண்டு ஓப்பனுடோய் :))

கப்பி பய said...

:))))))))))


வாழ்த்துக்கள்ண்ணே!! வாழ்க வளமுடன்!! :))

கப்பி பய said...

அண்ணன் பொறந்த நாளுக்கு பல்வேறு ஊர்களிலுள்ல பல மொழி ஃபிகர்களிடமிருந்தும் வாழ்த்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன!!

கப்பி பய said...

பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது!!

ஆயில்யன். said...

வாழ்த்துக்கள்

சென்ஷி said...
//பொறந்த நாள் வாழ்த்துக்கள்! சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//

ரிப்பீட்டே :))

yov senshi.. irukartha ellam avare eduthukita nanga ellam enga porathu.. ethellam nalla illa

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))

ஆயில்யன். said...

//கப்பி பய said...
அண்ணன் பொறந்த நாளுக்கு பல்வேறு ஊர்களிலுள்ல பல மொழி ஃபிகர்களிடமிருந்தும் வாழ்த்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன!!
//
நல்ல சகுனம் நல்ல நேரம் எல்லாம் சேர்ந்திருக்குது :)))

ஆயில்யன். said...

வாழ்த்துக்கள் ராம் அண்ணா :)))

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள் ராயலண்ணா...

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது!!//

என்ன இது சின்னப்புள்ள தனமா???

உலகமெங்கும் தொலைபேசி சேவை ஸ்தம்பித்தது...

வெட்டிப்பயல் said...

//('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....)//

இது எங்களுக்கு இப்பவே வேண்டும்...

குமரன் (Kumaran) said...

பிறந்த நாள் வாழ்த்துகள் இராமசந்த்ரமூர்த்தி. இரவிசங்கர் கண்ணபிரானோட எடுத்துக்கிட்ட படங்களை எல்லாம் நேத்து தான் பாத்தேன். எம்புட்டு சின்னப்புள்ளையா இருக்கீங்க. உங்களைப் போயி இந்த இளா இம்புட்டு ஓட்டு ஒட்டித் தள்ளுறாரே. :-( விரைவில் இவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வளர்ந்து இவர்களை வயிற்றெரிச்சலை இன்னும் அதிகமாகக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன். :-)

வெட்டிப்பயல் said...

//living:alone, with roommate(s).
(தனியா ரெண்டு பேரு வந்து இருக்கோம்னு சொல்ற கவுண்டமணி மாதிரி இருக்குலே)//

இது தான் டாப்பு :-))

வெட்டிப்பயல் said...

//drinking: no
(அப்படிங்களான்னா, ஏன் ஏன் இப்படி ஒரு வெளி வேசம், தேவையா இது எல்லாம்?ஓஹ் மிக்ஸிங்க இல்லாம அடிப்பீங்க அப்படிங்கிறத சொல்ல வர்றீங்களா?)//

ராயலண்ணன் இதை டைப் பண்ணும் போது தண்ணி குடிச்சிட்டி இருக்கீங்களானு கேக்கறாங்கனு நினைச்சி No போட்டுட்டாராம்...

ஜே கே | J K said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

ஜே கே | J K said...

//கப்பி பய said...
பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது!!//

பிஸி பிஸி ஒரு அம்மினி சொல்லுதே. அந்த அம்மினி யாரு ராமண்ணே.

துளசி கோபால் said...

Happy Birthday Raam.

CVR said...

இராம் அண்ணாச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

//('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....////
இது வேறையா?? ;)

மதுரையம்பதி said...

எங்கள் தங்கம், மதுரையின் சிங்கம்
ராயல்பாரின் அங்கம், லால்பாகில் ஏங்கும்....இராமுக்கு வாழ்த்துக்கள்.

நெசமாவே டெலிபோன்ல பிடிக்க முடியல....நேற்றிரவு அண்ணாச்சி எடுக்கல்ல...:))

காயத்ரி said...

//(நீங்களே ஒரு petஆ போக வேண்டிய ஆளு//

ஹாஹ்ஹ்ஹா! நல்லா சிரிச்சேன்.. :)

பதிவுலக பாலகன் செல்வன்.ராயல் ராமிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

(சின்னதல போன் எடுக்கலயா? அப்ப என்கிட்ட பேசின பச்சப்புள்ள ஆரு?)

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் தல

இன்று போல் என்றும் வாழ்க ;)

ஜே கே | J K said...

அண்ணாச்சி இன்னும் போன் எடுக்காததன் காரணம் என்னவோ???

வல்லிசிம்ஹன் said...

ராமுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய வாழ்வில் மேலும் மேலும் வளம் பொங்்க்க்க்க இறைவனைப் பபிரார்த்திக்கிறேன்.

இராம்/Raam said...

அடபாவிகளா...... இன்னும் என்னத்ததாய்யா மிச்சம் வைச்சிருக்கீங்க..... ????

மானமின்னும் ஒன்னு இருக்குமில்லை அது போறதுக்கு......

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் சொன்ன, MM2 , சிவா, சென்ஷி,சந்தோஷ்,கப்பி, ஆயிலு, வெட்டி, குமரன் ததா, துளசி ரீச்சர், CVR, மெளலி, கவிதாயினி, கானா பிரபா, வல்லியம்மா எல்லாருக்கும் மிக்க நன்றிகள்..... :)

cheena (சீனா) said...

அன்பின் ராம்

நலம் -

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நன்றி

SanJai said...

ஹாஹாஹா.. ஏன் ஏன் இந்த கொலை வெறி? :P

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பிறந்த நாளன்னிக்கு வைகையில் தான் குளிக்கணம்னு கங்கணம் கட்டிக் கொண்டு மதுரை சென்றிருக்கும் ராயலாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

//smoking: no
drinking: no//

இது பற்றி இளா சொல்வது அத்தனையும் வடிகட்டாத பொய்!
திகில் நிறைந்த வடிகட்டிய உண்மைகள் "ராமின் ரூமு" - வரலாற்றுப் புதினத்தில் மட்டுமே வரும்!
வாசகர்கள் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்! :-))