Tuesday, October 30, 2007

ஒசை செல்லா Vs அபிஅப்பா - சண்டையின் நிஜமான பின்னணி!

ஒசை செல்லாவுக்கும் அபிஅப்பாவுக்கும் மொக்கை நம்பர்-1 நிகழ்ச்சியில் சண்டை நடந்த அன்று, அபி அப்பா அரங்கை விட்டு வெளியேறியதை பலர் பார்த்திருப்பீர்கள். பாதியில் கோவித்துக்கொண்டு வெளியேறினார் என்பதால் அவர் ஆட்டத்திலிருந்து நீக்கபடுகிறார் என்று அன்றே அறிவித்தார்கள். (ஒசை செல்லாவும் வெளியேறினார், ஆனால் அவர் நடுவர் என்பதால் திரும்பவும் வந்து கைத்தட்டலுடன் உட்கார்ந்துக்கொண்டார் )

சண்டை நடந்த அடுத்த வாரம், அந்த போட்டியில் சிறப்பு விருந்தினாராக பதிவுலக லாரா துளசி கோபால் கலந்துக்கொண்டார், அன்று அவரின் 500வது பதிவு வெளிவந்த நாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அன்று மொக்கை போட்ட ஜோடிகளில் அபிஅப்பா, கோபி மிஸ்ஸிங். ஆனால் தமிழ்மணத்தில் வந்த மொக்கை-1 நிகழ்ச்சியின் போட்டோக்களில், துளசிக்கு யானை பொம்மை கொடுக்கும் போட்டோவும் ஒன்று. இதில் என்ன ஆச்சரியம்? அபி அப்பாவும் அதிலே சிரித்துக்கொண்டு இருக்கிறார். சிகப்பு சொக்கா போட்டுகிட்டு, கோபி அதே சிகப்பு சொக்காவுடன் இருக்கிறார்.(அதேனா இரண்டும் பெயரும் ஒரே மாதிரி சொக்கானு அர்த்தம், ஒரு சொக்காகுள்ள இரண்டும் பெயரும் என்று அர்த்தம் இல்லை) ஆட்டத்திலுருந்து விதிகளின் படி நீக்கபட்டவர், எப்படி இங்கே வந்தார்? என்று எனக்கு தெரிந்த சிலரிடம் கேட்டேன், அவர்கள் 'தேவ் வின் ஸ்டார் ரிப்போர்ட் ல புலியின் புலன்விசாரணைய' பாருங்கள் விடை கிடைக்கும் என்றார்கள் அதன் விபரம் கீழே....

ஒசை செல்லா Vs அபி அப்பா - புலியின் புலன்விசாரணை
பதிவுலக சண்டையின் நிஜமான பின்னணி!

‘மொக்கை நம்பர் ஒன்‘ நிகழ்ச்சியில ஒசை செல்லாவும், அபிஅப்பாவும்(தொல்ஸ்) சண்டை போட்டாலும் போட்டுக்கிட்டாங்க.. பிள்ளை யார் கோயில் பிராகாரங்கள்லருந்து கேர்ள்ஸ் காலேஜ் கேன்டீன் வரைக்கும் மேட்டர் பத்தி எரியுதுங்க. அதிலும் ஒசை செல்லாவின் எனக்கு மொக்கை போட தெரியாது என்ற டயலாக் எப்.எம் வரைக்கும் பேமஸ்.

‘‘ஒசை செல்லா எப்பவுமே இப்படித்தாம்பா, ரொம்ப சென்ஸிடிவ்’’, ‘‘அபி அப்பாவும் கோவக்காரர்-தாம்ப்பா’’னு போயிட்டிருந்த விசாரிப்பு, போகப் போக உருமாறிடுச்சு. ‘‘இது மொக்கை நம்பர் ஒன் இல்லப்பா.. மொக்கையடிக்கப்பட்ட நம்பர் ஒன். அவங்க போட்ட சண்டை எல்லாமே செட்டிங்’’னு பதிவுலகல வட்டாரங்கள்லயே பேசிக்கிறாங்க.

‘‘உண்மையிலயே ஏதாவது சண்டை நடந்தா, அதை சமாதானப்படுத்தாம இப்படி வளைச்சு வளைச்சு பதிவா போட்டு பின்னூட்டம் வாங்கவா செய்வாங்க? அது ஏற்கனவே எழுதி வைத்த பதிவு தானே ... ‘லைவ்வா டைப் பண்ணியதே இல்லையே... எடிட் பண்ணிக்கூட போட்டிருக்கலாமே!’’ னெல்லாம் நம்ம அனானிகள் பலரும் புத்திசாலித்தனமா கேள்வி கேட்டிருந்தாங்க. ‘‘உண்மையைக் கண்டறிய புலியே புறப்பட்டு வா’’னு அத்தனை பேரும் பின்குறிப்பாலயே உசுப்பேத்தவும், பிராண்டி விடப்பட்ட புலி புயலாக புறப்பட்டு விட்டது (இது பரபரப்பான மேட்டர்ல..?)

முதல்ல போன இடம்.. கிடேசன் பார்கில் இருக்குற அபி அப்பாவின் ஆபிஸ்!

‘‘தெளிவா தெரியுது புலி.. இது தமிழ்மணமும் ஒசை செல்லாவும் சேர்ந்து நடத்தின நாடகம்தான். நீயே பார்த்திருப்பே.. செல்லா ஆரம்பத்துல இருந்தே என் விஷயத்துல சரியில்லை. சுத்தி இருக்குறவங்க அத்தனை பேரும் என்னைப் பாராட்டினப்பவும், ‘எனக்குப் பிடிக்கலை.. எனக்குப் பிடிக்கலை’ன்னே சொல்லிக் கிட்டிருந்தார்.

உண்மையிலயே சொல்றேன் புலி, இந்தப் மொக்கை போட்டி ஆரம்பிச்சதுல இருந்து என்னோட நினைப்பெல்லாம் எப்பவும் பதிவுலகம், மொக்கை, அனானி, கும்மி னு அதைச் சுத்தியேதான் இருந்துச்சு. அதிலும் நான் த.ம. 7 முறை ஸ்டார் இருந்து இருக்கேன் சீரியஸ்வே சொல்ல சட்னு மடக்கி, அட இது எப்ப நடந்துச்சு ஒரு முறை தானே ஸ்டாரா இருந்தீங்கனு கேட்க. ஹிஹி... 7 நாள் ஸ்டார் இருந்தேன் என்று சொன்னேன்,(அட கொக்கமக்கா) ஆக அப்படிப் பட்டவனைப் பார்த்து உனக்கு மொக்கை போடவே தெரியலைங்கற மாதிரி பேசினா எவ்வளவு கோவம் வரும்..? இத்தனைக்கும் மொக்கை போடுவதிலும் சரி.. கும்மி அடிப்பதிலும் சரி, நான் செல்லாவை விட சீனியர் ’’னு டென்ஷன் ஆனார். உடனே,

‘‘இதான் புலி .... இப்படி நான் டென்ஷனா-குறதைத்தான் அவங்க பயன்படுத்திக்கிட்டாங்க... பதிவுலகத்தில் ஏதாவது பிரச்னைன்னா கவுண்டர் ரேட்டிங் எகிறுமில்ல.. அதனாலதான், பிளான் போட்டு என்னை வெறுப் பேத்தி கடைசியில அவங்க நினைச்சதை சாதிச்சுக் கிட்டாங்க..’’னு அவர் ஆதங்கத்தைக் கொட்டவும் சந்தேகம் இன்னும் அதிக மாச்சு.

‘‘இவ்வளவு கோவத்துல இருக்குற நீங்க, அடுத்த ரவுண்டான கும்மி அடிக்கும் ரவுண்ட்ல போய் கலந்துக் கிட்டிருக்கீங்க. சமீபத்துல ஒரு பதிவுல சீஃப் கெஸ்ட் துளசியோட நீங்க நிக்கிற மாதிரி போட்டோ வெல்லாம் வந்திருக்கே நைனா.. அது எப்படி?’’னு நான் ஷார்ப்பா கேள்வி கேக்க, யோசிச்சு யோசிச்சு (இதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டார்) பதில் சொன்னார் அபி அப்பா..

‘‘அன்னிக்கு கோவத்தோட வெளியேறினதுதான் எனக்குத் தெரியும் புலி. அதுக்காக தமிழ்மணத்த விட்டு இருந்து எங்களை விலக்கிட்டாங்கனு தெரியாது. சரி, நடந்து முடிஞ்ச விஷயம்னு நானும் கோபியும் அடுத்த பதிவுலப் போயி கும்மி அடிச்சோம். ஆனா, பிரச்சனை வந்த பதிவ தமிழ்மணத்தில் திரட்டும் போது, ஏதோ நான்தான் வம்பிழுத்தேன்ங்கற மாதிரி காட்டி, எங்களை தமிழ்மணத்தில் இருந்து விலக்குறதா ‘முதல் பக்கத்தில் கட்டம் கட்டி போட்ட பிறகுதான், கடுப்பாகி, அந்தப் பக்கமே போகக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறம் என்னைக் கூப்பிட்டு செல்லாக்கிட்ட சமாதானமா போகச் சொன்னாங்க. முடியவே முடியாதுனு அடிச்சு சொல்லிட்டேன்’’னு அபிஅப்பா ஒரு விளக்கம் கொடுத்தார். அருகில் அமர்ந்து இருந்த குசும்பன் கன்னத்தை பிடித்து வர்காந்து இருக்கும் போதே தெரிந்தது அவர் அடிச்சு தான் சொல்லி இருக்கார் என்று. இதை நம்புறதும் நம்பாததும் பதிவர்கள் விருப்பம்!

அடுத்த விசாரணைக்கு நான் போனது, ‘மொக்கை நெம்பர் ஒன்’ நிகழ்ச்சியோட டைரக்டர் லக்கிலுக்கிட்ட.

‘‘அபிஅப்பா என்ன உங்களை இப்படி கவுத்துட்டார்.. உங்க மொக்கை போட்டியே சுத்த நாடகமாமே’’னு நான் எடுத்த எடுப்புல இடியை இறக்கினதும் ஆடிப் போயிட்டார் மனுஷர்.

‘‘இது அபாண்டம் புலி. ஒசை செல்லா, கொரிய பதிவர், செந்தழல் ரவி மாதிரி பெரிய பெரிய மொக்கை பதிவர்களை வச்சு நடத்துற போட்டி இது, அவங்களை என் இழுப்புக்கு இழுத்து நாடகம் போட முடியுமா? நீயே யோசிச்சுப் பார்’’னு அவர் சொல்ல, மத்தங்களை விட்டுட்டு அந்த கொரிய பெண் பதிவர வேணும்னா (சே... ரூட் மாறுதே... அடங்குடா புலி)‘‘அப்புறம் ஏன் சர்ச்சைக்குரிய மொக்க பதிவ ப்பளிஷ் பண்ணுனீங்க.? டிராப்ட்ல போட்டு வச்சு இருக்குலாம்ல ’’னு ஒரு புடி புடிச்சேன்.

‘‘தமிழ்மணத்தில் அபிஅப்பா & கோபி மொக்கை போட்டில கலந்து இருக்காங்கனு எல்லாருக்கும் தெரியும், அப்படி இருக்கும் போது திடீர்னு அவர் பதிவ போட்டியில் வராம இருந்தா மற்ற பதிவர்கள் தப்பா நினைப்பபங்களா? அதான் அவங்களுக்கு புரிய வைக்க தான் அந்த பதிவை ப்பளிஷ் பண்ணினோம்’’, அது போக இனிமேல் போட்டியில் கலந்து கொள்ள அவரு போடும் பதிவுகளும், மற்ற போட்டியாளர்களுக்கு அவர் போடும் பின்னூட்டம் திரட்டப்படாது னு அவரு சமாளிக்க..

‘‘எங்க அவர் பின்னூட்டம் திரட்டப்படாம இருக்கு? அதான் அடுத்த ரவுண்டுல வந்து கும்மி அடிச்சு இருக்காரே, அதிலும் அதிகாம பின்னூட்டம் இட்டவர்கள் பெயரில் அவர் பெயர் அனானிக்கு அடுத்த இடத்தில் வரும் அளவுக்கு அடிச்சி ஆடி இருக்காரே’’னு நான் கேக்க, ‘‘அப்படி யெல்லாம் இல்லையே’’னு சாதிச்சார் லக்கி. அந்தப் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டை காட்டினப்புறம் அவர் சைடுல இருந்து பெரிய சைலன்ஸ்.

‘‘கொஞ்சம் இருங்க’’னு ஆபீஸுக்குள்ள போய் என்னவோ டிஸ்கஸ் பண்ணிட்டு வந்தவர், ‘‘இதோ பாரு புலி, நாங்க ஒவ்வொரு பதிவையும், கொஞ்சம் அட்வான்ஸா எழுதி வச்சுப்போம். இப்போ அவர் சமாதானமாகிட்டா, அவர் சம்பந்தப்-பட்ட விஷயங்களை திரட்டுட்டுவோம். இல்லைன்னா திரட்ட மாட்டோம். முடிவு அவர்கிட்டதான் இருக்கு’’னு ஏதோ.. அவரால முடிஞ்ச வரைக்கும் குழப்புனாரு லக்கி....பதிவை முன்னாடி எழுதி வைப்பதுக்கும், பதிவுல கும்மி அடிச்சு பின்னூட்டம் போடுவதுக்கும் என்ன சம்பந்தம்னு நாமும் குழம்பி இடந்த காலி பண்ணிட்டு செல்லாவை பாக்க போனேன்.

‘‘என் இ - கலப்பை இருக்குதே புலி... அது ரொம்ப மோசம். எவ்வளவு கன்ட்ரோல் பண்ணினாலும் சும்மாவே இருக்க மாட்டேங்குது’’னு ஏற்கெனவே பதிவுலகில் மூணு முறை(???) படிச்சு போரடிச்சுப் போன ( அதே டயலாக்கை திரும்பவும் சொல்ல ஆரம்பிக்க.. தடுத்து நிறுத்தி கேள்வியை எடுத்து விட்டேன்..

‘‘பல பதிவுகளில் குழு பதிவராகவும், போட்டோகிராப்பராவும் இருந்துக்கிட்டு நீங்க ஏன் சங்கம் நடத்தும் போட்டியில் போய் கரகரனு அழுது கலவரப்படுத்தினீங்க?’’னு பளிச்னு கேட்டுட்-டேன்.

‘‘அது ஒவ்வொருத்தர் கேரக்டர் புலி. பெரிய பலசாலிகள்கூட குழந்தை மாதிரி.. சின்ன சின்ன பிரச்னைக்-கெல்லாம் அழுதுடுவாங்க. நானும் அப்படித்தான். எங்கப்பா மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுவேன். நான் கேள்விப்பட்ட வரைக்கும் என் வளர்ச்சியை பிடிக்காதவங்கதான், அபி அப்பாவை இப்படித் தூண்டிவிட்டு என் இமேஜைக் குறைக்குறாங்கனு நினைக்கிறேன்’’னு அவர் சொல்ல அதிர்ந்துட்டேன். ‘எல்லாம் அண்டை நாடுகளின் சதி’னு அரசியல்வாதிகள் சொல்ற மாதிரியே இருந்துச்சு அது.

‘‘நீங்களும் சேர்ந்துதான் டிராமா பண்றீங்கனு அபி அப்பா சொல்றாரே.. அது உண்மையா?’’னு கேட்டேன்.

‘‘நாம் பதிவு எழுதுற இடத்தில் மொக்கை போடலாம். படிக்க நல்லாயிருக்கும். அதுக்குனு நடுவரா போய் இருக்குற இடத்தில் மொக்கை போட முடியுமா புலி? நான் இப்போ நாலு குழு பதிவில் மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன். அது போக காமிரா பொட்டி வச்சு படம் பிடிச்சுக்கிட்டு இருக்கேன், ‘இத்தனை பிஸியான ஷெட்யூல்க்கு இடையில டைமை வேஸ்ட் பண்றீங்களே’னு நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க. நான் என்னோட மைண்ட் ரிலாக்ஸுக்காகத்தான், நாம் போட்ட மொக்கை போதும் அடுத்தவங்க போடும் மொக்கை பார்ப்போம் என்று அந்த புரோக்ராமுக்குப் போறேன். அப்படி போற இடத்துல வேணும்னு யாராவது இப்படி மொக்கை போட்டு நிம்மதியைக் கெடுத்துப்பாங்களா? எனக்கு ‘என் பதிவு தவிர’ வேறு இடத்தில் மொக்க போட தெரியாது புலி..... சத்தியமா அடுத்த பதிவில் மொக்கை போடவே தெரியாது..’’னு செல்லா உணர்ச்சிவசப்படவும்..

‘‘நீங்க, ‘நான்தான் தமிழ்மணத்த விட்டு போறேன்’னு சொல்லிட்டு, பதிவுலகில் இருந்து வெளியில போய்ட்டு திரும்ப வந்தப்பவும், பதிவே போட மாட்டேன் என்று சத்தியம் பண்ணின நேரத்தில், ஸ்ரீரங்க நாதர் மாதிரி படுத்துக்கிட்டு போஸ் குடுத்து ஒரு போட்டோ புடிச்சு அதை பதிவா போட்டீங்களே. அது ஏன்?’’னு வாய் வரைக்கும் வந்த கேள்வியைக் கேக்கக்கூட மனசில்லாம கெளம்பி வந்துட்டேன்.

அடுத்து, நான் போனது ரீப்பிட்டே கோபிய பாக்க.

‘ஒசை செல்லா- அபி அப்பா பிரச்னையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை’’னு முதல்லயே தெளிவா சொன்னவர், ‘மொக்கை நம்பர் ஒன்’ போட்டிய பத்தின தன்னோட ஏமாற்றத்தை அடுக்கினார்.

‘‘ரொம்ப எதிர்பார்ப்போட இந்தப் போட்டிக்குப் போனேன் புலி. ஆனா, எல்லாமே வெறுத்துப் போச்சு. கூட மொக்கை போடுறது எல்லாருமே நம்ம ஃப்ரெண்ட்ஸ்னு நினைச்ச எனக்கு, சில பதிவுகள் போட்ட பிறகு பிறகுதான் புரிஞ்சது.. யாருமே இதை மொக்கையுனே எடுத்துக்கலைனு.

எல்லாரும் தனித் தனி குழு வச்சுக்கிட்டு மொக்கை போட்டுக்கிட்டு இருக்காங்க. எனக்கு கைல நரம்பு பிராப்ளம் இருந்துச்சு.. டைப் பண்ணும் -போது கை விரல் வீங்கி வலி எடுக்கும். தொடர்ந்து ஆபிஸ்ல வேலை செய்யாமல் பதிவே படிப்பதால் மெமோ கொடுக்கும் வரை போச்சு... இதையெல்லாம் தாண்டி மும்முரமா மொக்கை போட்டு போட்டியில் கலந்துக்கிட்டேன்..’’னு சொன்னவரு,

‘‘அதுலயும் நானா எந்தத் தப்பும் செய்யாம என்னை போட்டியில இருக்கு வெளியேத்துறதா அறிவிப்பே செஞ்சப்புறம், இனிமேல் என்ன நடந்தாலும் யார் சொன்னாலும் நான் அங்க மொக்க போக மாட்டேன்’’னு உறுதியா சொன்னார்.

இப்படி ஆளாளுக்குப் பிச்சிக்கிட்டுப் போறேன்னுதான் சொல்றாங்க. ஆனா, இன்னொரு பக்கம் அடுத்த ரவுண்டு கும்மி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதைப் பத்தி கேட்டா யாருமே சரியான பதிலைச் சொல்லல. அதிலும் இந்த கோபி இந்த பக்கமே வர மாட்டேன் என்று என்க்கிட்டவே சொல்லிட்டு ஏன் இப்படி என்ற என் பதிவுக்கு எதிர் பதிவு போடுறான்.

‘‘அது பத்தாதுனு, நீ வேணா பாரேன்.. சீக்கிரத்துல ஒசை செல்லாவையும் அபி அப்பாவையும் கூப்பிட்டு வெச்சு ஒரு சமாதான டிராமா பதிவு வர போகுது..’’னும் பதிவுலகில் வேற வேற மாதிரி தகவல்களும் பரவிக்கிட்டு இருக்கு.

எது உண்மையோ.. எல்லாம் தமிழ்மணத்துக்கும், கவுண்டர் ரேட்டிங்குக்குமே வெளிச்சம்!

ஆனா, உண்மை எதுவா இருந்தாலும், இப்போ பதிவுலகம் கொஞ்சம் கோணலாதாங்க போயிட்டிருக்கு!

* தேன்கூடுல கிட்டத்தட்ட ‘மொக்கை நம்பர் ஒன்’ மாதிரியே வந்துட்டிருக்குற ‘கும்மியோ கும்மி’ நிகழ்ச்சியோட டைரக்டர் வெட்டிப்பயல் கிட்ட இதப்பத்தி கேட்டு வச்சேன்.. ‘‘நானும் அந்த பதிவு எல்லாம் படிச்சேன். இதெல்லாம் உண்மையா இருக்க முடியும்னு தோணலை. எனக்கும் சரி, எனக்கு தெரிஞ்ச சர்க்கிளிலும் சரி.. தமிழ்மணம் பக்காவா ப்ளான் போட்டு பண்ணின டிராமா இதுனுதான் தோணுது. இப்போ பதிவுலகில் ஒரு தலைப்பை எடுத்துக்கிட்டு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எதிர்வினை பதிவு போட்டு , ‘அடுத்த எதிர்வினை எங்கிட்டு இருந்து வர போகுதோனு ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்குவாங்கள்ல.. அப்படித்தான் இதுவும். சில சூடான பதிவ போடும் பதிவர்கள் அவங்களை அனானியா வந்து சில கேள்விகளை எழுப்பி அதுக்கு மிக சூடாக பதில் சொல்லுறேன் பேர்வழினு அந்த கேள்விய வச்சே தனியா ஒரு பதிவே போட்றேன் என்று சொல்லி அடுத்த பதிவு போடும் போது அதுல அப்படி என்னதான் இருக்குனு ஒரு ஆர்வத்தோட மற்ற பதிவர்கள் வந்து படிப்பாங்க. அப்படி ஒரு மார்கெட்டிங் ஸ்டைல் இது. பலபேர் பேர் படிக்குற பதிவுல ஒரு ஜட்ஜை எதிர்த்து ஒருத்தர் கமெண்ட்டுறது.. ஜட்ஜ் கோவிச்சுகிட்டு பதிவுலக விட்டு போறது.. அப்புறம் அவரை சமாதானப்படுத்தி அழைச்சுட்டு வர்றது.. அப்புறம் அவர் அழுதுகிட்டே பதிவு போடுறதுனு எல்லாமே பாக்குறதுக்கு பரபரப்பா இருந்துச்சு. உண்மையா நடந்திருந்தா ஓ.கே.. தமிழ்மணத்தோட பிளான்னா, நிஜமாவே சூப்பரா பண்ணியிருந்தாங்க.. இதையெல்லாம் பாராட்டணும்’’னு கிண்டலா பேசினார் அவர்.

நன்றி : இட்லி வடை, தேவ் ஸ்டார் ரிப்போர்ட்

Monday, October 29, 2007

சங்கம் ஸ்பெஷல் தீபாவளி ரீலிஸ் வெடிகள்!

சிவாஜி வெடி!

இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் வெடி இது தான்...

சிவாஜி வெடியில ஒரு வெடியை உங்க வீட்டு வாசலில் கொளுத்தினால் உங்க தெரு, உங்க ஊர் மட்டும் அல்ல அகிலகமே அதிரும்படி வெடிக்கும் வெடி இது. மெய்யாலுமே அதிருது இந்த வெடி.

G3 வெடி!

இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.

தழுக்கு முழுக்கு தம்பி வெடி!

நல்ல உயரமாக, அழகாக வடியமைப்புடன் வெளியீடப்பட்டு இருக்கும் இந்த வெடியின் சிறப்பு அம்சம், பத்த வைத்தால் மட்டும் போதாது பாவானா பாவானா என ரொமாண்டிக்கு குரல் எழுப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் வெடிக்கும்.

பிரதம வெடி!

இது நம்ம அனுகுண்டு தாங்க, இந்த வருசத்துக்குகாக பெயர மாத்தி வச்சு இருக்காங்க. ஆனா வழக்கம் போல சத்ததுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

ஜொள்ளு பாண்டி வெடி!

இது பெண்கள் கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும், ஆண்கள் இந்த வெடியை கொளுத்தி மகிழ வேண்டும் என்றால் பெண்கள் அதிகம் இருக்கும் இடத்திலோ, பெண்கள் கல்லூரி முன்போ, பெண்கள் பள்ளிகள் முன்போ கொளுத்தினால் வெடிக்கும். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் வெடித்த பிறகு ஜொள்ளாக வடியும் படி இதை வடிவமைத்து இருப்பது இந்த வெடியின் தனி சிறப்பாகும்.

கமல் வெடி!

இந்த ஒரு வெடி வாங்கி கொளுத்தினால் உயர போய் பத்து வெடியாக பிரிஞ்சு ஒவ்வொரு வெடியும் ஒவ்வொரு மாதிரியாக வெடிக்கும். திரியை வாயிலில் கிள்ளி வைத்தால் நல்லா பிரம்மாண்டமாக வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

நாமக்கல் ஸ்பெஷல் பீர்வெடி!

கண்டதோ Full-லு கொண்டதோ குவாட்டர்ன்னு இருக்குற இந்த ஸ்பெஷல் தீபாவளி வெடி டாஸ்மார்க் முன்னாடி கொளுத்தினாத்தான் சும்மா குத்தாட்டம் போட்டு எகிறி குதிச்சு வெடிக்கும். இல்லாட்டி புஸ்ஸுதான் !!! நயன், நமீதா, நவ்யா போன்ற 'ந' வரிசை திரைப்பட நடிகளைகளின் பேவரைட் வெடி இந்த வெடி தான்.

சூடான் சுளுக்கு வெடி!

இந்த வெடி வெடிக்கணும்னா கெடாவெட்டி பொங்க வச்சு fullu full ல்லா படையல் வச்சாத்தான் கொஞ்சமாச்சும் வெடிக்கும். ஆரம்பத்திலே கேஸ் இல்லாத பீர் மாதிரி லேசாதான் பொங்கும். ஆனா லேசா முதோ கியர்ல ஸ்டார்ட் பண்ணி அப்படியே 5 த் கியர்ல நைட்டு புல்லா வெடிச்சு எகிறதது தான் இதோட ஸ்பெசாலிடி ..

சிம்புவின் சொம்பு வெடி!

இந்த வெடியை வெடிக்கும் போது கைவசம் குடை இருக்க வேண்டியது அவசியம். வெடியை கொளுத்தின வுடன் புஸ்ஸு புஸ்ஸுனு சத்தம் ஒவரா கொடுத்துட்டு மேலே போயி நீர் நிரம்பி இருக்கும் சொம்பை கவிழ்த்தது போல் நீரா கொட்டும், அதில் நனையாமல் இருக்க தான் குடை. இந்த வெடியை வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிப்பது சாலச்சிறந்தது.

இன்னும் வரவிருப்பது...

கைப்புவின் பொட்டு வெடி...
விவசாயின் கொத்துக்கடலைவெடி...
தேவ்வின் குட்டிசுவர் வெடி...
வெட்டியின் கொல்டி வெடி...
கப்பியின் கயமை வெடி...
அபிஅப்பாவின் அபிநய வெடி...

Tuesday, October 23, 2007

சங்கம் வழங்கும் மொக்கை பதிவர் நம்பர் 1 - நடந்தது என்ன?

அபி அப்பா குழுவினர் மொக்கை பதிவர் நம்பர் 1ல் இருந்து வெளியேற்றப்பட்டத்தின் பின்னணி என்ன? இதோ உங்களுக்காக அங்கே படம்பிடிக்கப்பட்ட காட்சிகள்...

அபி அப்பா கோபமாக நின்றிருக்கிறார் (அப்படினு அவர் நினைச்சிட்டு இருக்கார். ஆனா அதை பார்த்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க. அவர் கோபமா இருக்கார்னு அவரே சொல்லியும் யாரும் நம்பவில்லை. கொஞ்ச நேரம் அவரே நம்பவில்லை). பக்கத்துல அப்பாவியாக "ரிப்பிட்டே" கோபி நின்றிருக்கிறார்.

நடுவர்கள் ஓசை செல்லா, (மொக்கை) மாஸ்டர் செந்தழல் ரவி மற்றும் ஒரு கொரிய பெண் பதிவர் (அவுங்களுக்கு இங்க என்ன வேலைனு கேக்க கூடாது)

ஓசை செல்லா: அபி அப்பாக்கிட்ட மைக் கொடுங்க...
என்ன பிரச்சனை?

அபி அப்பா: ஒன்னுமில்லை

ஓ.செ: என்ன பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?

அ.அ: ஐ அம் நாட் அப்ஸட்... ஐ அம் ஹேப்பி... வி டிட் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ். திஸ் இஸ் பெஸ்ட் டே ஆஃப் மை லைப்

ஓ.செ: அப்பறம் என் அப்சட்டா இருக்கீங்க? டெல் மீ... டெல் மீ வாட் இஸ் இன் யுவர் மைண்ட்... டெல் மீ. அபி அப்பா.. கமான்.

கோபி :அபி அப்பா கமான்...

அ.அ: ஏன் என் பதிவு பிடிக்கல?

ஓ.செ: அதை ஏன் அப்ப கேக்கல? எதுக்கு இப்படி கோவிச்சிக்கனும்?

அ.அ: ஐ அம் ஆஸ்கிங் யூ நௌ... எல்லாத்துக்கும் இடம், பொருள், ஏவல் இருக்கில்லை.

ஓ.செ: நான் இப்ப உங்களை ஒன்னு கேக்கறேன்... கும்மி பதிவு போட்டிங்க இல்லை?

அ.அ: ஆமாம் போட்டேன்.

ஓ.செ: அந்த பதிவ படிக்காமலே பதிவு அருமையா இருக்குனு முதல்ல பின்னூட்டம் போட்டேன் இல்லை.

அ.அ: ஆமாம்.

ஓ.செ: அன்னைக்கு ஏன் பின்னூட்டம் போட்டேனு கேட்டீங்களா?

(பின்னாடி மகளிரணியை சேர்ந்த ஒருவர் பலமாக கை தட்டுகிறார்... அதை அப்படியே ஃபோகஸ் பண்ணறோம்)

அபி அப்பா தீவிரமாக சிந்தித்துவிட்டு : கேக்கலை

ஓ.செ: அதே மாதிரி நானும் இன்னைக்கு சொல்லல.
அன்னைக்கு நீங்க கும்மி போஸ்ட் போட்ட போது பதிவ படிக்காமலே அருமை, அட்டகாசம்னு கும்மி அடிச்சது யாரு?

அ.அ: ஹிம்?

ஓ.செ: யாரு?

அ.அ: நீங்க தான்.

ஓ.செ: அன்னைக்கு சந்தோஷமா எடுத்துக்கிட்டீங்க இல்லை. மிக்க நன்றினு பின்னூட்டம் போட்டிங்க இல்லை. இன்னைக்கு இந்த பதிவு மொக்கையா இல்லைனு சொல்லும் போது அதுக்கு ஏன் மிக்க நன்றினு சொல்ல முடியல? ஒய் ஆர் யூ கெட்டிங் அப்செட்?

(செந்தழல் ரவி பக்கத்துல இருக்குற கொரிய ஃபிகருடன். இப்படி தான் இந்த ஆளு பள்ளிக்கூடத்துல படிக்கும் போது ஒரு வாத்தியார் இவர் ஃபெயிலானதுக்கு அடிச்சப்ப. அன்னைக்கு நான் பாஸானப்ப அடிக்கல. இன்னைக்கு நான் ஃபெயிலானப்ப மட்டும் எப்படி அடிக்கலாம். பாஸானதுக்கு ஒரு நியாயம், ஃபெயிலானதுக்கு ஒரு நியாயமானு? கேட்டு அவரையே மடக்கிட்டாரு... கொரிய ஃபிகர் எதுவும் புரியாம அவர் சொல்றதுக்கு தலையை ஆட்டிட்டு இருந்தது)

அ.அ : ஏன்னா நான் நல்லா மொக்கை போட்டேன். பதிவு மொக்கையாவே இல்லைனா எப்படி அது?

ஓ.செ: பதிவு மொக்கையாவே இல்லைனு நான் சொன்னனா?

அ.அ: யா.. வேணும்னா டேப் ரீவைண்ட் பண்ணி பார்க்கலாமா?

ஓ.செ: நான் சொன்னனா பதிவு மொக்கையா இல்லைனு? டிட் ஐ சே தட்? டிட் ஐ சே தட்?

அ.அ: பதிவு மொக்கையாவே இல்லைனா அது அப்படி? இந்த இடத்துல மொக்கையா இல்லை, அந்த இடத்துல மொக்கையா இல்லைனா பரவாயில்லை. மொத்த பதிவும் மொக்கையா இல்லைனா எப்படி? ஹவ் கேன் யூ சே தட்? அது எப்படி மொக்கையா இல்லைனு சொல்லலாம்?

ஓ.செ: என்ன சொன்னிங்க?

அ.அ: மொக்கையா இல்லைனு எப்படி சொல்லலாம்?

ஓ.செ: அது இல்லை.. ஹவ் கேன் யூ சே தட்டா? இதுல இருந்து என்ன தெரியுது, உங்க பதிவெல்லாம் கும்மி அடிச்சா தப்பில்லை ஆனா மொக்கை போடலைனு மட்டும் சொல்ல கூடாது. அப்படி தானே?

அ.அ: நோ நோ. நான் அப்படி சொல்லல. இந்த இடத்துல மொக்கையா இல்லைனு சொன்னா சரி. ஆனா பதிவே மொக்கையா இல்லைனு எப்படி சொல்லலாம். அன்னைக்கு அந்த பதிவுல ஒரு இடத்துல பதிவு மொக்கையா இல்லைனு மொக்கை மாஸ்டர் செந்தழல் ரவி சொன்னாரு. ஐ டுக் இட். இப்படி பதிவே மொக்கையா இல்லைனு சொன்னா எப்படி? நாங்க வெளி நடப்பு செய்யறோம்... வா கோபி.

கோபி: ரிப்பீட்டே...

சரி அபி அப்பா சொல்கிற "பதிவு மொக்கையா இல்லை"னு ஓசை செல்லா சொன்னாரா? ரீ டெலிகாஸ்ட்...

ஓ.செ: எனக்கு பிடிக்கல... எனக்கு பிடிக்கலை.. எனக்கு இது தான் பிரச்சனை. நான் கொஞ்சம்.. கொஞ்சம் இல்லை கொஞ்சம் ஓவராவே ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட். மொக்கையா இருந்துச்சி. நல்ல கரு. நல்லா எழுதியிருக்கீங்க. ஸ்டைல் இருந்துச்சி. எல்லாமே இருந்துச்சி. ஆனா எனக்கு பிடிக்கலை. நச்சுனு சொல்றேன். ஐ அம் நாட் ஜோக்கிங். பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல. எக்ஸ்ட்ராடினரி தீம். ஆனா மொக்கை போடறதை மறந்துட்டாரோனு நினைக்கிறேன். அங்க அங்க சமுதாயத்துக்கு பயனுள்ளதா எழுதிட்டாரு. ரவி மொக்கையா இருக்குனு சொல்லிட்டாரு. அந்த கொரியன் ஃபிகர் கூட சொல்லிடுச்சி. ஆனா எனக்கு பிடிக்கல. எல்லாருக்குமே மொக்கையா தெரியலாம். ஆனா எனக்கு மொக்கையா தெரியல... ஒரு இணைய நாடோடியா சொல்றேன்... இது மொக்கையா இல்லை.

ரீ டெலிகாஸ்ட் முடிந்தது...

ஓ.செ: நான் தானே உங்களை பேச சொன்னேன். நானே உங்களை என்னை ஏன் திட்ட சொல்லனும்?

அ.அ: சூடான இடுகைல வரணும்னு தான். வேற எதுக்கு?

ஓ.செ: என்ன? சூடான இடுகைல வரதுக்கா? அதை தான் நாலாவது பக்கத்துக்கு தள்ளிட்டாங்களே. அதுல வரதுக்கு நான் ஏன் இப்படி பண்ணனும்?
சரி. நான் ஒண்ணு சொல்லறேன்? ஐ ஜஸ்ட் வாண்ட் டூ சே சம்திங். நான் வந்து யாருக்கும் பயப்படாதவங்க. எதை பத்தியும் கவலையேப்படமாட்டேன்...

அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.

ஓ.செ: நான் என் மனசுல பட்டதை சொல்லுவேன். எனக்கு இந்த பார்ஷியாலிட்டி எல்லாம் பிடிக்காது. இந்த வலைப்பதிவுல வந்து தான் நான் பேர் வாங்கனும்னு இல்லை. நான் ஒரு இணைய நாடோடி. எனக்குனு ஃபேன்ஸ் இருக்காங்க. இணையம் ரொம்ப பெருசு. எல்லாரும் நல்லா மொக்கை போடறீங்க. வாழ்த்துக்கள். இன்னைக்கு இந்த வலைப்பதிவுல இருந்து விலக போறது யாருனா... ஓசை செல்லா... ஐ அம் கோயிங் டூ மிஸ் யூ ஆல்... (பின்னாடி வாய்வே மாயம் பாட்டு ஓடுது...)

மக்கள் எல்லாம் திகைச்சி போறாங்க. ஒரு சிலருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. பெண்கள் கண்களில் கண்ணீர் வடிகிறது. வலைப்பதிவுகள் எல்லாம் ஹேங் ஆகிறது...

மொக்கை பதிவர் 1 நிகழ்ச்சியாளர்கள் என்ன செய்வது என்று தவிக்கின்றனர்... ஓசை செல்லா லேப் டாப் ஷட் டவுன் ஆவதை பார்த்து உலகத்தில் வாழும் தமிழ் வலைப்பதிவர் அனைவரும் அவருக்கு ஃபோன் செய்கின்றனர். தமிழ் நாடு தொலை தொடர்பு துறையே ஸ்தம்பித்து போகிறது. கோவையில் போன் லைன் எல்லாம் அங்கு அங்கு வெடிக்கிறது. அமெரிக்காவில் ரிலையன்ஸ் இந்தியாவில் யாருக்கும் லைன் கிடைக்கவில்லை.

ஒரு வழியாக அவரை சமாதனப்படுத்தி வலைப்பதிவிற்கு அழைத்து வருகிறார்கள்...

அவர் பிறகு மொக்கை போடுவது எப்படினு மொக்கை போட்டு சொல்லி கொடுக்கிறார்...

சரி பார்ட்டிசிபண்ட் ஏதோ சொல்ல ஆசைப்படறாங்க. இதோ அவுங்களுக்கு கொடுக்கிறேன்.

மங்களூர் சிவா: இது ஒரு மொக்கை பதிவர் போட்டி. இதுல வந்துருக்கவங்க எல்லாருமே வலைப்பதிவர்கள். சில பேர் ரொம்ப மாசமா மொக்கை பதிவு போடறவங்க இருக்காங்க. என்னை மாதிரி புதுசா மொக்கை போடறவங்களும் இருக்காங்க. சீரியசா எழுதிட்டு அப்ப அப்ப மொக்கை போடறவங்களும் இருக்காங்க. சோ இது ஒரு இண்டக்ரிட்டி. மொக்கை போடறதுல ஒரு இண்டகிரிட்டி. நாங்க எல்லாரும் எங்களால முடிஞ்ச அளவுக்கு மொக்கை போடறோம்.

மொக்கை பதிவுனு வந்துடுச்சினா இவுங்க இத்தனை மாசம் மொக்கை போடறாங்க. இவுங்க இப்ப தான் மொக்கை போடறாங்கனு எல்லாம் கிடையாது. அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்.

அடுத்து வீ லவ் தி ஜட்ஜஸ்.இவுங்களே பெரிய மொக்கை பதிவருங்க. ஒரு பதிவை மொக்கையில்லைனு சொல்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படறாங்கனு எங்களுக்கு தான் தெரியும். ஒரு பதிவை மொக்கையில்லைனு சொல்றதுக்கு இவுங்க அநியாயத்துக்கு ஃபீல் பண்றாங்க. வீ லவ் யூ செல்லா.. நீங்க ஜீரி... நீங்க ஜீரி.

செந்தழல் ரவி (கடுப்புடன்): அப்ப நாங்க என்ன பூரியா?

மங்களூர் சிவா: நாங்க வெறும் பார்ட்டிசிபண்ட்ஸ் தான். நாங்க நல்லா மொக்கை போடறோமானு சொல்றதுக்கு தான் நீங்க இருக்கீங்க. அதுலயும் நீங்க எல்லாம் மொக்கைல ராஜாக்கள். இது எங்களுக்கு பெருமை...

இவ்வாறு மங்களூர் சிவா பேசிக்கொண்டிருக்கும் போதே அபி அப்பா வெளியேறினார்... பின்னாடி ஒரு தீம் மியூசிக் போடறோம்.

இது தான் அபி அப்பா போட்டியிலிருந்து வெளியேற காரணம். அவரை யாரும் துரத்தவில்லை என போட்டி அமைப்பாளர்கள் கூறினர்.

இது என்னக் கலாட்டான்னு யோசிக்கிறீங்களா.. புரியாதவங்க இந்தச் சுட்டியைத் தட்டிப் பாருங்க அப்புறம் திரும்ப வந்து படிங்க...