Friday, April 4, 2008

இந்த வார கிசு கிசு

ரொம்ப நாள் ஆச்சுங்க கிசு கிசு எழுதி.

சரி, காதுல விழுந்த விஷயங்களை சொல்லுவோம்...அதென்னமோ கிசு கிசு படிக்கிறதுன்னாவே மக்கள் குதூகலாமாகிடறாங்க.

* வவ்வாலு சென்னையில இல்லையாம், புதரகவாசியாம். வேற பேருல பதிவு கூட எழுதிட்டு இருக்காராம்.

* திரட்டியும் தமிழ்ப் பதிவுகளும் இணையும் காரணம் என்ன? இதன் பிண்ணனியில் நடந்த விசயம் என்னவா இருக்கும்?

* இந்த வாரம் குடுமிப்புடி யாரு? பெயரில்லாதவர் சம்பந்தப்பட்ட பதிவுகள்னு நினைச்சா தப்பு. அது கில்லியில நடக்குது -http://gilli.in/digg-for-tamil-blogs/

* முகமூடிப் பதிவரும் மராம என்ற பதிவரும் ஒருத்தர்தானாம்.


விளம்பர இடைவேளை.சங்கத்தின் இரண்டாமாண்டு கொண்டாட்டம்

* KRSம், ஜிராகவனும் இருவரும் ஒரே நேரத்துல இந்தியா போனதுக்கு காரணம் ஏதோ ஒரு திரட்டி சம்பந்தமா இருக்கலாம்னு லோவெல் இருந்து ஒரு சேதி.

*தமிழ்வெளி தனியா வேலை வாய்ப்பு வலைத்தளம் ஆரம்பிச்சிருக்காங்க.

* மலேசியா போன சங்க(ம)ம் மூத்தப் பதிவர் அந்த பதிவர்களை பார்க்க முடியலேன்னு வருத்தத்துல இருக்காராம். புகைச்சல் இல்லைன்னு ஒருதரம் ஆத்தா மேல பண்ணின சத்தியமும் புஸ்ஸாகிருச்சாம்.

* இந்த மாதிரி கிசு கிசு வருதுன்னு தெரிஞ்சிகிட்ட தேனி அலெக்ஸ் ஒரு பதிவா போட்டு எஸ் ஆகிட்டாராம்.

* சிங்கப்பூரிலிருந்த பல பதிவர்கள் புதரகம் வரப்போறாங்களாம். அதுக்குக் காரணம் "அவராம்". நல்லதுதானே.

விளம்பர இடைவேளை.


பட்டையா போட விருப்பம் இருக்கிறவங்க போட்டுக்கலாம், கட்டாயம் ஒன்னும் இல்லே.

BLOGKUT-Blogs, News & Videos* கேள்வி பதில் சீசன்ங்கிறதனால வ.வா.சவுலயும் கேள்வி பதில் போடுறாங்களாம். முதல்ல பதில் சொல்றவருக்கு எதைச் சொன்னாலும் புரியாதாம்.

* ஐசுவர்யா பிறந்த ஊருல இருக்கிறவருக்கு ராத்திரியான செல் போன் பிரச்சினையாம், பொண்ணுங்க தொந்தரவு தாங்கலைன்னு தினமும் "புல்" நைட்டும் முழிச்சு இருக்க வேண்டி இருக்காம்.

*இட்லி வடை பத்துப்பேராமே? அந்தப் பத்துப் பேரு யாரு?

* எனி இந்தியன் - வார்த்தை பத்தி இட்லி வடை விமர்சனம் போட்ட காரணம் என்னவா இருக்கும்?

* ஓமம் ஒரு வெள்ளை வீட்டுல அடைக்கலம் ஆகிட்டாராம். இனி இந்தியாவுக்கு போற அவசியம் இல்லைன்னு சூலூருல பேசிக்கிறாங்க.

* சாம்புவும், ஈகிளும் வேலை இல்லாம இருக்காங்களாமே....

*சங்கமம் எல்லாப் பதிவுகளையும், அசையும் படங்களையும் திரட்டுறதால நெறைய கில்மா பதிவுகளையும், யூ டுப் கில்மாக்களும் வருதாம், அதை எல்லாம் என்ன சொல்லி நிறுத்துறன்னு தெரியாம எல்லாரும் மண்டை காயறாங்களாம். நல்ல படங்களை விட தமிழ்ல கில்மா படங்கள்தான் அதிகமா இருக்காம், என்ன கொடுமை சார் இது.

* இந்த மாசம் வலைப்பதிவுல 2 (அ-மீரா-கம்) மக்களுக்கு கண்ணாலம். அதுல ஒருத்தருக்கு நிறைய குசும்பாம்..

அடுத்த வாரம் கிசுகிசுக்கலாம்..

உங்களுக்கு தெரிஞ்ச கிசு கிசுக்களை இந்தப் பதிவுல் பின்னூட்டமாவே போடுங்க. அடுத்த வாரம் வெளியிடப்படும்.

13 comments:

ILA(a)இளா said...

அனானி அண்ணாத்த, பழைய மேட்டரு, அதான் அப்படியே வந்துருச்சு. திருத்திருவோம்ல. சிங்கம்லே?

Anonymous said...

புதரகம்னா என்ன?

புதுசு புதுசா கண்டுபுடிச்சு இம்சய கொடுக்கறீங்களே

தஞ்சாவூரான் said...

நல்லாயிருங்க. அது என்னய்யா புதரகம்?

நம்மளப் பத்திக் கிசுகிசு வராத வரைக்கும், படிக்க நல்லாத்தான் இருக்கு :)))

ILA(a)இளா said...

புதரகம்னா என்ன?

தஞ்சாவூரான் said...

ஓஒ...... புதரகம்ன்னா, அம்ரிக்காவா? :)

நான் ஏதோ, பாம்புகள் இருக்கும் ஊருன்னு நெனைச்சேன் (ஹ்ம்ம்ம்... அதும் ஒரு வகையில் சரிதானே, bush - க்கு உள்ளேதானே பாம்பும் இருக்குது)) :)))

ச்சின்னப் பையன் said...

சரியாப் போச்சு போங்க... புதரகம் அப்படின்னா இவ்ளோ நாளா நான் துபாய் பக்கம் உள்ள ஒரு ஊரு பேருன்னு நெனெச்சேன்!!!

Sud Gopal said...

Why this Kolai veRi???

ரசிகன் said...

//இந்த மாசம் வலைப்பதிவுல 2 (அ-மீரா-கம்) மக்களுக்கு கண்ணாலம். அதுல ஒருத்தருக்கு நிறைய குசும்பாம்..//

அடப்பாவமே ...இதைப்பத்தி 3 மாசமா மெயில் கும்மி ஓடிக்கிட்டிருக்கே தெரியாதா? நல்லவேளை கண்ணாலம் முடிஞ்சப்பறம் இதை கிசு கிசுவா போடாம விட்டிங்களே :P:P:P:)))

Anonymous said...

//மலேசியா போன சங்க(ம)ம் மூத்தப் பதிவர் அந்த பதிவர்களை பார்க்க முடியலேன்னு வருத்தத்துல இருக்காராம். புகைச்சல் இல்லைன்னு ஒருதரம் ஆத்தா மேல பண்ணின சத்தியமும் புஸ்ஸாகிருச்சாம்//

கிசு கிசு வெல்லாம் ஏதாச்சும் பிரபலமான ஆளை வெச்சி எழுதுங்கப்பா!

ILA(a)இளா said...

//கிசு கிசு வெல்லாம் ஏதாச்சும் பிரபலமான ஆளை வெச்சி எழுதுங்கப்பா!//
சிபி, My Friend விடவா பெரிய Problem ,,, ooops பிரபலம் இங்கே இருக்காங்க..?

Anonymous said...

//சிபி, My Friend விடவா பெரிய Problem ,,, ooops பிரபலம் இங்கே இருக்காங்க..?
//

அவங்க பிரபலம்தான்! அதுக்கும் இந்த கிசு கிசுவுக்கும் என்ன சம்மந்தம்னேன்?

ஒரு டீடெய்லும் தெரியலையேப்பா!

மலேசியா போன சிங்கம் சிபின்னா சத்தியம் வாங்குன ஆத்தா இவங்க கிடையாதே! பின்னே எப்படி கண்டுபிடிப்பாங்களாம்?

Anonymous said...

அதர் ஆப்ஷன் இல்லையா இங்கே?

Anonymous said...

அமீரகம் - துபாய், அரேபியா, குவைத்(!?)

புதரகம் - அமெரிக்கா?