Saturday, April 28, 2007

உலககோப்பை 2011-பகுதி 2


முன் பகுதி சுருக்:

நடிகர்களும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குமான போட்டி. Toss என்றால் என்னவென்று தெரியாத அஜித், Toss ஜெயித்துவிடுகிறார், காஜி அடிக்கும் ஆசையில்...........

இனி இரண்டாம் பகுதி:

முதலில் களம் இறங்குகிறார் சிம்பு. அவருடன் கூட்டமாக சிறுவர்கள் (I am a little star, ஆவேனே superstar என்று ஜிங் ஜாக் அடித்துக்கொண்டே இறங்குகிறார்கள்). Pontingம் Gilchristம் இதென்ன சோதனை என்பது போல் முகத்தை வைத்துக் கொள்கிறாகள்.

Umpire நேராக சிம்புவிடம், "Mr.Simbu, நீங்க opening batsman அப்படின்னா நீங்க மட்டும்தான் களம் இறங்கனும். இந்த ஜால்ரா வேலையெல்லாம் வேண்டாம், இந்த பசங்களை காலி பண்ண சொல்லுங்க" என்கிறார்.

சிம்பு "யார் first ஆடுறாங்க அப்படிங்கிறது முக்கியமில்லை, கடைசி வரைக்கும் யாரு ஆடுறாங்க அப்படிங்கிறதுதான் முக்கியம்" என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் முன்பே கிரிக்கெட் class எடுக்கிறார்.

கடுப்பாகிப் போன Mathew Hayden "சின்ன பையா யாருய்யா நீயி" என்று வினவுகிறார். அந்த கேள்வி கேட்டதும், நரி போல ஊளையிடுகிறார், T.R. Commentatorஇடம் Micஐ பிடுங்கி:


நானும் கருப்பு, என் பொண்டாட்டியும் கருப்பு
சிம்பு மட்டும் எப்படியோ செகப்பு
அப்படின்னு கேட்டான் ஒரு பருப்பு
அதில் இருந்து என் பொண்டாட்டி மேல வெறுப்பு
என் மனசில கொதிக்குது நெருப்பு
இந்த topicஅ வெளில சொன்னா பிஞ்சிடும் என் செருப்பு

என்று தனது மன குமுறலை வெளிப்படுத்துகிறார்.

இந்த சமயம் வானத்தில் மூன்று helicopterகளால் மலர் தூவப்படுகிறது. கீழே நடந்து வருகிறார் தணுஷ். பேட்டை தூக்கமுடியாமல், அதன் கீழே சக்கரம் கட்டி சூட்கேசைப் போல இழுத்துக்கொண்டு வருகிறார்.

"சிம்பு! நீ ஜால்ரா பசங்களை வைச்சி போட்டது குரு விளையாடல், ஆனால் நான் ஆடப்போவதோ திருவிளையாடல்" என்று அனர்த்துகிறார்.

Umpire ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்து இவர்களை stump முன்னால் நிற்க வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.

Ponting சிம்புவை வெறுப்பெற்ற வேண்டும் என்பதற்காக அனைத்து fielderகளையும் சிலிப்பில் நிற்க வைக்கிறார். கடுப்பாகிறார் சிம்பு.

எதிரில் இருக்கும் தணுஷோ ரஜினி போல சிரிக்கிறேன் பேர்வழி என்று படு கேவலமாக சிரிக்கிறார். மேலும் கடுப்பாகிறார் சிம்பு.

இது போதாதென்று ஸ்டேடியத்தில் ஒரு ரசிகர் "we want sixer, we want sixer" என்று 6 கார்டை தலைகிழாக [ 9] பிடித்துக்கொண்டு கத்துகிறார். இது 9தாராவை சிம்புவுக்கு நினைவு படுத்த, மேலும் கடுப்பின் உச்சத்திற்கு செல்கிறார்.

முதல் பந்தை வீச வருகிறார் McGrath. கடுப்பில் இருக்கும் சிம்பு sixer அடிக்க மட்டையை தூக்குகிறார் சிம்பு. Middle stump இரண்டாக பிளந்து golden duck ஆகிறார்.

அதே சமயம், ஆர்வகோளாரில் தணுஷ் தன் wheel வைத்த பேட்டுடன் ரன் எடுக்க ஓடி வருகிறார். Wicket keeper பந்தை வீச இவரும் out.

முதல் பந்திலேயே அவுட் ஆன இவர்களை பெவிலியினில் வரவேற்கிறார் கவுண்டர். மிக polite ஆக "Brother, sorry... brothers, முதல் பந்திலியே இரண்டு பேரும் அவுட் ஆகி, அவங்களுக்கு world recordற்கு வழி செஞ்சிட்டீங்க. உள்ளே என் நண்பன் செந்தில் ஒரு பழம் வைச்சிருக்கான். தோலை ஒருத்தரும் பழத்தை இன்னொருத்தரும் சாப்பிட்டு வீடு போய் சேருங்க" என்கிறார்.

அடுத்து களமிருங்கிறார்கள் விஜய்யும், அஜித்தும்........... ஆட்டம் இனி தொடரும்.

Friday, April 27, 2007

என்ன பொழப்பு இது...

திடீர்னு வேலை வந்துருச்சு...என்னாது நமக்கே ஆணியா அப்படின்னு யோசிச்சிட்டு இருந்த நேரம் பாத்து எங்க டீம்ல வெக்கேசன்ல போன வெள்ளைக்காரி லவ்வர் கூட சண்டை போட்டுட்டு பாதில வந்துட்டா,சரி இதுதான் சமயம் அவ கைல ஆணி புடுங்கற மிசின ஒப்படைச்சுட வேண்டியதுதான்னு மூஞ்சி முள் எலி மாதிரி இருந்தாலும் யூ லுக் கார்ஜியஸ்,கழுதைஸ் அது இதுனு சொல்லி ஆணி புடுங்கர மிசின அவ கைல கொடுத்துடோம்ல...நம்ம எல்லாம் பந்திக்கு முந்து...ஆணி புடுங்க 10 ஸ்டெப்ஸ் பேக் அப்படிங்கற பாலிசில வாழுறோம்...

அமெரிக்கால நம்ம மக்கள் வசிக்கறது பத்தி நிறையபேரு எழுதி இருக்காங்க...நிறைய பேருக்கு இந்த வாழ்க்கை புடிச்சு இருக்கு....நிறைய பேருக்கு புடிக்கல...அது பத்தி எல்லாம் ஆராச்சி பண்றதுக்கு நமக்கு அறிவு இல்ல....எனக்கு இங்க புடிக்கல பல காரணம் இருந்தாலும் சிலத சொல்றேன்...உங்களுக்கும் ஏதாவது இருந்தா சொல்லுங்க....

1.இந்த போலீசு தொல்லை....நம்ம ஊர்ல கண்டக்டர் டிக்கட் குடுத்திட்டு காசு வாங்குவாங்க...அந்த வேலைய இங்க போலீசுகாரன் பண்றான்...
2.வெளியூர் போகும் போது ஒரு அவுசர ஆத்திரத்துக்கு ஓரமா நிறுத்தி ஒன் பாத்ரூம் போனா பைன் போடுறாய்ங்க...
3.நினைச்சா ஒரு நாயர் கடைக்கோ,அஞ்சப்பர்க்கோ போக முடியுதா..
4.வாரக்கடைசில பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணா...என்ன வெறுப்பு ஏத்தறதுக்கு சொல்றானுங்களா இல்ல உண்மைலயே பண்றாங்கன்னு தெரியல...எல்லோரும் ஒன்னு சேந்து மட்டன்,சிக்கன் ல எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் வெச்சு சாப்பிட்டு இருக்கோம்னு சொல்றானுக...எது எப்படியோ எல்லோரும் நல்லா சாப்பிட்டு ஒரு ஒருத்தனும் குறைஞ்சது ஒரு டன் வெயிட் இருக்கானுக...
ஏன்னா இவனுகள நம்ப முடியாது...படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....

எங்க பக்கத்து வீட்ல ஊருக்கு போய் இருக்காங்க...பசங்களுக்கு அங்க கிராமத்துல இருந்த ஆடு,மாடு எல்லாம் பார்த்து புடிச்சு போய்ருச்சு...இங்க வந்த அப்புறம் அந்த பையன் சொல்லி இருக்கான்...dad you guys are too lucky, you played with cows and buffalows all the time while you grew up...அதுக்கு அவனோட அம்மா சொல்லி இருக்காங்க உங்க அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky னு.....பாவம் அந்த பையனுக்கு தெரியல அது cows and buffalows கூட play பண்றது இல்ல, அதுக்கு பேரு மாடு மேய்க்கறதுனு.....

எங்க தெருல இன்னொரு வீடு பங்களாதேசி...அந்த அம்மா இன்னொரு வீட்டுக்கு போய்...கிரீம் கிதர் ஹே..கிரீம் கிதர் ஹே...னு கேட்டு இருக்கு...அந்த வீட்டுகாரங்களும் body cream னு நினைச்சு...இது கூடவா வந்து ஓசி கேப்பானு நினைச்சிட்டு...எடுத்து குடுத்து இருக்காங்க...அந்த அம்மா அத வாங்காம..மறுபடியும் கிரீம் கிதர் ஹேனு பாட ஆரம்பிச்சு இருக்கு...அப்புறம் தான் தெரிஞ்சுது..இந்த வீட்டு பையன் பேரு பிரேம் அததான் அந்த அம்மா கிரீம் கீரீம் னு சொல்லி இருக்கு....

எப்படியோ வெள்ளக்காரி புண்ணியத்துல ஒரு போஸ்ட்டு தேத்தியாச்சு...மறக்காம ஆப்படிச்சிட்டு போங்க....

Thursday, April 26, 2007

புட்சுக்கோ, ஒரு வயசு கொயந்தை பரிசு குடுக்குது

இந்தா இவிங்க எல்லாம் சேந்து சேட்டைப் பண்ணி, லந்தடிச்சு, நக்கலடிச்சு, நையாண்டி பண்ணி, கோமாளித் தனம் பண்ணி, கூத்துக் கட்டி, கொலவெறியிலே தலயைக் கலாய்ச்சு, கொண்டாட்டம் மட்டும் கொலதெய்வம்ன்னு கிளம்பி ஒரு வருசம் ஆவுதாம்... யார் இவிங்க? பெரிய வி.ஐ.பி ரேஞ்சாப்பா இவிங்க? அட மக்கா இவிங்க ரொம்ப நல்லவங்கய்யா....

தலைக்கு மேல ஆணி அந்தரத்துல்ல தொங்கும் ஆனாலும் பாருங்க கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்து வெறிச்சு வெறிச்சு சிரிப்பாய்ங்க...வாழ்க்கையிலே ரைட், லெப்ட், ஸ்டெரெயிட்ன்னு அஞ்சு அடிக்கு அம்பது ஆப்புன்னு வாங்கி ஒரு தினுசாப் பொழப்பு ஓடும்.. ஆனாலும் மக்கா இவிங்களுக்கு லொள்ளுக்கும் லோலயத்தனத்துக்கும் குறைவிருக்காது....

சொந்தமெல்லாம் எங்கோ இருக்க அந்த நினைப்பை அப்படியே கொஞ்சம் அங்கிட்டு ஹேங்கர்ல்ல மாட்டிட்டு இங்கிட்டு இவிங்களை மாதிரி கும்மு கும்முன்னு கும்பி அடிக்க யாராலும் முடியாது...

இவிங்க இவிங்க இவிங்கன்னு இந்த முழக்கு முழக்குறீயளே யார்ன்னு சொல்லுங்க....

அடேய் இவிங்களுக்கு கோவமே வராது....(ஏன் வந்தா உன் வீட்டு அட்ரஸ் கொடுத்து அனுப்பி வைக்கணுமா சொல்லு? )

கண்டபடி ஓட்டுறாங்க.... சும்மா இருக்காங்க.... (ஆர்.டி.ஓல்ல கேளு லைசன்செஸ் கொடுக்குறவன் அங்கேத் தானே இருக்காங்க.. )

எதுக்கு எடுத்தாலும் ஏகத் தாளமா? (அடுத்த வாரம் வா ஆதி தாளம் பழகி வைக்கிறேன்) . இவிங்க பேச்சுக்கு சாம்பிள்

வருத்தமா விலை என்ன?
கவலையா கிலோ எம்புட்டு?
பிரச்சனையா பில்லைக் கொடு பாப்போம்...
வலியா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


இது தாங்க இவிங்க...
அட இவிங்க எல்லாம் தாம்ப்பா... உங்க ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒளிந்தும் ஒளியாமலும் வலம் வரும் வருத்தப் படாத வாலிபன் பசங்க....கவலையைக் காத்தாடியா காத்துல்ல விட்டு கையை வீசிகிட்டுப் போறவங்க...

ஏன் அப்படி ...
ஏன்னா இவிங்களுக்கு வாலிப வயசாம்.. சொல்லுதாவா.... போதுமா இவிங்க புராணம்... அவிங்க வையப் போறாக... அவிங்க யார்... அவிங்களாப் போட்டின்னு சொன்னதும் சும்மா ரவுண்ட் கட்டி ரைட் போட்டவீங்க...
போட்டி வச்சாப் போதாது முடிவைச் சொல்லு.. ப்ரைசைக் கொடு நாங்கப் பொழப்பைப் பாக்கப் போவோம்ல்ல.. நீங்கச் சொல்லுறது நல்லாவே கேக்குது...

இதுவரைக்கும் உங்களை எல்லாம் பாத்து யாராவது பைசாப் பெறாத பதிவு போடுற வேலையைச் செய்யறன்னு கேட்டிருக்கலாம்.. ஆனா இனி கேக்க முடியாதுல்ல..

போட்டில்ல கலந்துகிட்ட எல்லாம் வீரர்களுக்கும் சூரர்களுக்கு வீரரிகளுக்கும் சூரரிகளுக்கும் எங்க சங்கம் சார்பா பெரிய சல்யூட்ப்பா....
போட்டின்னா வந்தா எல்லாரும் சிங்கம் தான்..கெலிச்சவங்க மட்டும் இல்ல.. மத்த எல்லாருமே சங்க மக்கள்ஸ் இதயங்களின் நேத்து முந்தா நேத்து இன்னிக்கு டூமாரோ டே ஆப்டர் டூமாரோ பார் எவர் அங்கம் தான் அதுல்ல நோ டவுட்ஸ்.


எல்லா பிட்டும் போட்டாச்சு இப்போ தான் மெகா பிட்டு.... பரிசு தொகை மொதல்ல 1000 ரூபா தான் சொல்லியிருந்தோம்... ஆனா பாருங்க வந்த பதிவுகள் எண்ணிக்கை எங்களையும் எண்ண வச்சுருச்சு ஆமாப்பா எக்ஸ்ட்ரா இரண்டு சேத்துக்க வச்சுருச்சு... 1002 இல்ல.. 3000 ஆயிரம் ரூபா...
படிக்க படிக்க சிரிப்பு... அப்படி இருக்க பதிவுன்னு பார்த்தா 105க்கும் கொடுக்கணும்.. 3000/105 கணக்குல்ல சங்கப் புள்ளங்க எல்லாரும் ரொம்ப வீக் சோ... கூட்டிக் கழிச்சு.. அப்படி இப்படின்னு பொட்டியைத் தட்டி இந்த மூவாயிரத்தை 6 பேருக்கு சமமா கொடுக்கலாம்ன்னு ஆல் சிங்கம்ஸ் அன்ட்ர்ஸ்டாண்டிங்ல்ல வந்துச்சுங்கோ...


அது படி ஆறு பேரைத் தேர்ந்தெடுத்தோம்... அவிங்க தான் இவிங்க..


** அருண்குமார் - துரத்து
** சிவிஆர் - நான் மாமாவிடம் மாட்டிக் கொண்ட கதை
** ஷைலஜா - காரிகையர் சங்க ஆண்டு விழா
** ஜெயஸ்ரீரி - As I am Suffering from...
** அபி அப்பா - ராதா "குரங்கு ராதா"வாகிய கதை!!

** கண்மணி - திருவாளர் திருமதி ரங்கமணி


இதோட முடிஞ்சு போச்சா, இன்மேதான் மெயின் ரீலு.


மை ஃபிரண்ட்
புச்சா வந்து அல்லாரும் எழுதறாங்கோ, கலக்கறாங்கோ, ஆனா எங்களை எல்லாம் மலேசியா கூட்டிகினு போயி சோக்கா ஃபிலிம் காட்டி கண்ல தார தாரயா தண்ணி வர வெச்சிருச்சுபா.ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் . எங்க சங்கத்து சிங்கம் அத்தனை பேரு மன்ஸையும் ஒரேடியா கொண்டுகினு போன மை ஃபிரண்டுக்கு ப்ரைஸ் குடுத்தா ஆச்சா, ஆஹாங். அதால புச்சா வந்தாலும் புதுமையா வந்த ஃபிரண்டுக்கு 2007-காமெடி கிவீன்ங்கிற பட்டம் குடுத்து சந்தோசப் பட்டுக்கிறோம்பாடுபுக்கு அண்ணாத்த...
உங்களைப் பாத்து விசில் விட்ட கூட்டத்துக்குச் சத்தியச் சோதனையா? உனக்கு நாங்க மார்க் போட முடியுமா சொல்லு? அப்புறம் ஒய் திஸ் சோதனை... ஒட்டு மொத்த ப்ரசும் உன்க்கேன்னு நாங்க சொல்லோ 'நமக்கெல்லாம் இன்னாத்துக்குப்பா பிரைஸு, புச்சா வர்ர பசங்களுக்கு குடுங்கப்பா"ன்னு சொல்லி எங்க எல்லார் கண்ணுலையும் தண்ணீ வர வெச்சுட்டியேபா.. அதனால என்னா எங்ககிட்ட மனசு இருக்கே குடுக்க... புச்சா எய்துருவங்களுக்கு பரிசும் .. உனக்கு எங்க சார்பா பட்டமும் கொடுக்குறோம் வாங்கிக்கணும்.. ப்ரைஸ் வாங்குறவங்களை வந்து நீங்கத் தான் வாய்த்தணும் அவங்க வளரணும்... ரைட்டா. அதால டுபுக்கு-தி திங்க் டாங்குக்கு இந்த வருஷ 2007-சிரிப்பானந்தா பட்டம் குட்த்து பெருமை படுத்தறோம். அல்லாரும் ஒரு தபா ஜோரா கைதட்டுங்க பார்ப்போம்

கெலிச்சவங்க எல்லாருக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிச்சுக்குறேன்.. அப்பால பரிசு பெற்றவர்கள் நம்ம பாசக்கார சிங்கம் ராயலை மெயில் மூலம் அணுகி உங்கள் விவரங்களைத் தெரிவித்து பரிசு கூப்பன்களை வாங்கிக்கங்க... ராயலில் மெயில் ஐடி..raam.tamil@ gmail.comகெலிச்சவங்க கெலிச்சவங்கச் சொல்லுற ஆறு பேர் பரிசு கெலிச்சுக்குறீங்க... மத்த மக்கள் எல்லாரும் எல்லோருடைய அன்பு நெஞ்சங்களையும் கெலிச்சுக்குறீங்க...ஓ,கே. மக்கா இன்னொரு முக்கியமான மேட்டர் அடக் கையக் கொடுங்க மக்கா..... தேங்க்ஸ் ... இந்த ஒரு வார்த்தைச் சொல்ல ஒரு வருசம் ஆயிருச்சுங்க....ஆமாமுங்கோ டு டே சங்கம் பர்த் டே அன்ட் சங்கம் 200வது பதிவுங்கோ... தேங்க்யூ மக்கா..

Wednesday, April 25, 2007

காணாமல் போன Greg கைப்புள்ள - வெளிவராத உண்மைகள்!

சங்கத்திலே கொண்டாட்டம் ஆரம்பிச்சு ரொம்ப நாளா ஆகிப்போச்சு, ஆனா அகில உலக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட இணையற்ற ஒப்பிலா தலைவர் கிரேட் கைப்புள்ளயே மட்டுந்தான் காணோம். என்னாச்சு ஏதாச்சு'ன்னு அவருக்காக நைட்பகலா உழைச்சு ஓடாப் போனே சங்கத்து சிங்கங்கள் எல்லாமே கன்னத்திலே கைவைச்சிட்டு கஷ்டத்திலே இருக்கோமின்னு மட்டுமின்னு நினைச்சிராதீங்க, நாங்கெல்லாம் பயங்கரமான சந்தோஷத்திலே மிதந்துட்டு இருக்கோம்.

அதுக்கான காரணம் என்னான்னு பார்த்தா தல கிரேட் கைப்புள்ள'யா இருந்து கிரேக் கைப்புள்ள'யா ஆகி சங்கத்திலே ஆப்பு வாங்கினது பத்தாமே இந்திய கிரிக்கெட் டீம்'க்கே கோச்சா போயி அங்க ஒன்ன முடியாமே இப்போ டோட்டல் டோமேஜ் புள்ளயா ஆகிட்டாரு'லே. அந்த சந்தோஷத்துக்காக ஸ்விட் எடுத்து கொண்டாடி கொண்டாடி களைப்பாகி போயிருக்கோம். இந்தமாதிரி நேரத்திலே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டுமின்னு பங்களாதேஷ் vs பெர்முடா விளையாடின சரித்திரபுகழ் மேட்ச பார்த்திட்டு இருந்தோம்.

சரி மேலே இருக்கிறதெல்லாம் கதை சொல்லுறமாதிரி இருக்கு. இனிமே லைவ் கமெண்டரி...

தேவ்:-
"ஏலேய் மக்கா நல்லா என்ஞாய் பண்ணுங்கய்யா! இதிலே நாமே காயப்போட்ட பசங்களும் நம்மளை காயப்போட்ட பசங்களும் ஒன்னுக்கூடி மேட்ச் விளையாடிட்டு இருக்காங்க!"

சிபி:- "ஹி ஹி.... இன்னிக்கு யாரு ஜெயிச்சாலும் தோத்தாலும் நம்ம தல'க்கு பெரிய ஆப்பு வைக்கனும்"

ஜொள்ளு:- "டூட்ஸ், அந்த கேமிரா மேன்ஸ் எல்லாரையும் மாத்தனும்! ஒரு பயலுகளும் எனக்கு ஏத்த மேட்சை காட்டமாட்டேன்கிறாய்ங்கே"

வெட்டி:- "ஆனாலும் பாண்டி நீயி அநியாத்துக்கு கடமை வீரனா இருக்கீயே? நாங்கெல்லாம் மேட்ச் பார்த்திட்டு இருந்தா நீ அங்க திரியிற பட்சி தெரியலைன்னு அங்கலாய்க்கிறே?"

ஜொள்ளு:- "சுமா சுமா என்னையவே சொல்லாதீங்கய்யா? நீங்களெல்லாம் வாய் விட்டு சொல்லலை! நான் வாய் விட்டு ஜொள்ளிறேன்! அம்புட்டுதான் வித்தியாசம்!"

புலி:-" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

இளா:- "என்ன புலி பசிக்கிதா? இந்த பாப்கார்ன் சாப்பிடு சரியா போயிரும்!"

புலி:- "யோவ் விவ், அந்த டிவி பின்னாடி இருக்கிற ஜன்னலிலே பாருங்கய்யா! ஏதோ கை தெரியுது? அய்யோ இங்க ஏதோ ஒரு ஜகன்மோகினி உள்ளே வந்துருக்கு சாமியோவ்!"

சிபி:- "நான் இங்கேதானே ஒட்கார்ந்து இருக்கேன்! யாரு எனக்கே தெரியாமே ஜகன்மோகினியா??"

சட்டென்னு ஒரு உருவம் உள்ளே நுழைக்கிறது, ஆளு பார்க்க பூனை பழமொழியிலே வர்ற விலங்கினத்தோட சுத்தமான நிறம், அந்த நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமே முட்டியை தொடற அளவுக்கு கிளிப்பச்சை கலருலே ஜிலுக்கு பர்முடா, ஜிவு ஜிவுன்னு கண்ணை பறிக்கிற செவப்பு கலருலே ஒரு தேநீர் சட்டையும் போட்டுக்கிட்டு "தல" சங்கத்து குடிசைக்குள்ளே என்டர்..

தேவ்:- " தல எங்க போயிருந்தே? நீ கொஞ்சநாளு இல்லைன்னோதும் நிறைய ஸ்கூப்நீயூஸ் பரவிருச்சு! அதுவுமில்லாமே ஒனக்கு எங்கதான் இப்பிடியெல்லாம் அட்ராக்ட்வான கலருலே டிரெஸ்ல்லாம் கிடைக்கிது?"

தல:- "ஏலேய் போர்வாளு, ஒனக்கு ரொம்பதான் ஏத்தம்? ஸ்கூப்நீயூஸ் போட்டதே நீதானே? ஏண்டா ஒழுங்கா கிரிக்கெட் விளையாடுங்கன்னு கூட்டிட்டு போனா அதே விளையாடமே அங்க இருக்கிற பொண்ணுகளோட செல் நம்பர்ஸ் வாங்கி SMS அனுப்பி அனுப்பி அங்கயிருக்கிற செல்போன் கம்பெனிஸ் எல்லாமே இன்னவரைக்கு ஜாம்'தான்! இப்போ நான் கொலைவெறியிலே இருக்கேன்! டிரெஸ் எங்ககிடைக்கிது'ன்னு கேட்டு இன்னும் என்னோட கோவத்தை ஏத்தாதே?"

ஜொள்ளு:- "தல நோ டென்சன்! கூல் மேன்! வேணுமின்னா இந்த மேட்ச நிப்பாட்டிட்டு இலியானா நடிச்ச பாட்டை போட்டு விடவா? தெலுங்கு பாட்டுதான்! நமக்கு அர்த்தம் புரியலைன்னா வெட்டிக்காரு செப்புவாரு!"

தல:- "வேணாம் விடு பாண்டி! இப்போ நான் இருக்கிற கோவத்துக்கு அந்த தோத்து போன பசங்களை டெவில் ஷோவிலே கவுண்டர் கேட்கிறமாதிரி கேள்வி கேட்கணும், So கிரிக்கெட் விளையாட போறன்னு சொன்ன அந்த வீணாப்போனவங்களுக்கு போனை போடு! நான் பேசியே ஆகனும்"

ஜொள்ளு எல்லார் நம்பர்'க்கும் போன் பண்ணுறார், வழக்கபோலே எல்லாரும் போனை எடுத்துட்டு "We are busy now"ன்னு கட் பண்ண இவனுகளை இப்பிடிதான் சாய்க்கனுமின்னு விளம்பர ஏஜென்ஸியிலே இருந்து பேசுறோமின்னு சொல்லி டெண்டுல்கர்,டிராவிட்,யுவராஜ் முணு பேத்தையும் ஒரெ லைனில் பிடிச்சி கான்பரன்ஸிலே போடுறார்.

தல:- "அடேய் வீணா போனாவய்களா! காசுன்னுதும் ஓடி வந்திட்டிங்களா? பொணம் எந்திருச்சு ஒட்கார்மின்னு சொன்னதுக்கப்புறம் நீங்களல்லாம் எம்மாத்திரம்!"

கிரிக்.கோஷ்டி:- "ஹலோ! நீங்க யாரு?"

தல:- "ஹிம் மும்பை தாதா! ஆட்டுக்காலு மண்டயனுகளா! நாந்தாண்டா கிரேக் கைப்புள்ள பேசுறேன்!"

டிராவிட்:- "ஹய்யா! ஒங்களை தான் டீமை விட்டு தூக்கிட்டாங்களே? இப்போதான் சந்தோஷமா இருக்கு!"

தல:- "ஏண்டா மண்டையா நீ பேசமாட்டே? நூறடி தூரத்திலே இருந்து லொங்கு லொங்குன்னு ஒருத்தன் ஓடிவந்து பந்து போட்டா அந்த இடத்திலே நிப்பாட்டுறவன் தானே நீயீ?"

டிரா:- "ஹலோ மிஸ்டர் கைப்பு! அது என்னோட திறமை! 100 மைல் வேகத்திலே வந்தாலும் ஒரே இடத்திலே நிப்பாட்டி வைக்கிறது திறமை.."

தல:- "மண்ணாங்கட்டி திறமை! நிப்பாட்டி வைக்கிற திறமையே அடிக்கிற அளவுக்கு வளர்ந்து இருந்தா நாமெல்லாம் போன வேர்ல்ட் கப்'லெ ஜெயிச்சு இருப்போமிடா? ஏண்டா நீ மட்டுமே பேசுறே? அந்த குள்ளகத்திரிக்காவும், சடைமண்டையனும் பேசமாட்டக்கிறாய்ங்கே?"

டெண்டுல்கர்:- "இப்போதான் புது ரூல் போட்டுருக்காங்களே? தலைவர் தவிர யாரும் பேசக்கூடாதுன்னு? அதுதான் நாங்கெல்லாம் பேசலை!"

தல:- "ஏலேய்! சடைமண்டையா? ஒனக்கு என்ன வந்துருச்சு??"

தோனி:-" நான் மவுனவிரதம்"

தல:- "ஒங்களுக்கெல்லாம் ஏத்தம்தாண்டா! அடேய் இம்புட்டு சம்பாரிச்சிங்களே? அதுக்கு ஏத்தமாதிரி விளையாடுனீகளா??"

டிரா:- "ஆமாம் ஒங்களுக்கு கூடந்தான் 1,7500 டாலர் சம்பளம்! அதுக்கு ஏத்தமாதிரி டிரெய்னிங் கொடுத்தீங்களா??"

தல:- "அடபாவிகளா! எனக்கு ஒன்னே முக்கா ரூவா'க்கு கோலிசோடா வாங்கி அதை பெருமையா எல்லார்கிட்டேயும் காட்டி குடி'ன்னு தீர்ந்து போன மினரல் வாட்டர் கேன்'லே தான் கொடுந்தானுக!"


டிரா:- "இப்போ இதுவரைக்கு ஒங்கிட்டே பேசுனதுக்கு அமெண்ட் எப்போ செட்டில் ஆகும்? டாலரா வருமா ? இல்லை ரூபாய்'வா?"

தல:-" என்னது ரெண்டு வார்த்தை பேசுனுதுக்கே காசா? இவிய்ங்களே எதை கொண்டு அடிக்கலாம்? அடேய் புலி இவியங்களே ஒரு உருமி உருமி பயமுருந்துடா?? பாவிபசங்க தொலைஞ்சு போகட்டும்!"

புலி:- "ஓகே தல.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

தல:- "ஏண்டா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா? சங்கத்தோட முதலாமண்டு போட்டின்னு சொல்லி ஆயிரம் ஓவா தாரேன்னு சொல்லிருக்கீங்களே? மறுபடியும் கஜானாலே கைவைச்சிட்டிங்களா??"

இளா:- "ஆமாம் அந்த கஜானா'விலே பொன்னும்,வைரமும் குவிஞ்சு கிடைக்கிறமாதிரியே பேசு? அதிலே ஒன்னோட ஜிலுக்கு ஜிப்பாவும்,நீ அழுதா ஆட்டுறதுக்கு கிலுகிலுப்பையுதான் இருக்கு! அதே கொண்டு போயி சேட்'கிட்டே அடகு வைக்க கொண்டு போன அவன் அதை பார்த்திட்டு வைச்சிறக்கிறதே நாமே தான் காசு கொடுக்கனுமின்னு எகாந்தாளம் பேசுறான்!"

தல:- "நீரெல்லாம் எலெக்சனிலெ நிக்கலாமய்யா! முச்சு விடாமே பேசிட்டு இருக்கே? யாருடா புதுசா சங்கத்திலே கமலா காமேஷ்'ன்னு யாரோ சேர்ந்து இருக்காலமே! யாரு அது?"

ஜொள்ளு:- "தல அது கமலா காமேஷ் இல்லே? அவங்க ஒரு ஆண்ட்டி, அவங்களை சங்கத்திலே சேர்ந்து என்னா ஆகப்போகுது? அவரு பேரு கமலேஷ் கண்ணன்"

தல:- " அது சரி? நீ நமிதா,இலியானா'ல்லாம் சேர்ந்திருந்தா குஷியா ஆகிருப்பே?"

ஜொள்ளு:- "ஏந்தான் தல என்னைமாதிரியே நீயும் குடையை தலையிலே கவுத்தி போட்டு இருக்கே?"


தல:- "ஹிம் அப்பிடி கேளு கேள்வியை? தோத்திடோம்மின்னு எல்லாபயலுகளும் என்னை கொட்டி கொட்டியே பூசணிக்கா சைஸ்க்கு தலை வீங்கி போயி கிடக்கு! அதை வெளியே தெரியமே இருக்கிறதுக்காக தான் அதை மூடி மறைச்சி வைச்சிருக்கேன்"

இராம்:- "தல! எல்லாரும் பருத்திவீரன் படம் பார்த்திட்டு ஒன்னை பிணந்திண்ணி'ன்னு நினைச்சிட்டாங்களா??"

தல:- "ஏலேய் ராயலு நக்கலா? என்னாட ஆச்சு 105 போட்டி பதிவுகளும்? எவ்வளோ பேரை சார்ட் லிஸ்ட் பண்ணிருக்கீங்க? அதை சொல்லுங்கடா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா??

போர்வாள்:-" ஓகே தல! மக்களே நாலு நாளா கண்முழிச்சி 105 பதிவுகளும் படிச்சி 14 பதிவுகளை இப்போதைக்கு அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுந்து இருக்கோம்."


 1. செல்வன்
 2. அம்பி
 3. செந்தழல் ரவி
 4. சவுண்ட்
 5. சந்தோஷ்
 6. அருண்
 7. jayashree
 8. அபி அப்பா
 9. மை ஃபிரண்ட்
 10. சைலஜா
 11. டுபுக்கு
 12. CVR
 13. கோல்மால் கோபால்
 14. கண்மணி
இறுதி முடிவுகள் சங்கத்தின் தொடக்க நாளான நாளை அறிவிக்கப்படும்.

Tuesday, April 24, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)

க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...

(தொடரும்...)

(இன்னும் பல படங்கள் இருப்பதால் ஒரே பகுதியில் முடிக்க இயலவில்லை... அடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் காத்திருக்கின்றன)

பட்டி மன்றம்!!!

பட்டி மன்றம்ன உடனே கேரளா பட்டினு நினைச்சுக்காதீங்க....அதாவது சரக்கு போட்டு அப்புறம் சாப்பிடாலாமா...இல்ல சாப்பிட்டு அப்புறம் சரக்கு போடலாமானு ஒரு பட்டி மன்றம்..நடுவர் வேற யார் நம்ம தல கைப்ஸ் தான்...யாரு யாரு எந்த அணினு எல்லாம் கேக்க கூடாது..யாருக்கு என்ன தோனுதோ சொல்வாங்க....சரி பட்டிமன்றத்துக்கு போலாமா..

தல:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ரொம்ப நல்ல தலைப்பு இதுல என்ன நன்மை தீமைனு அலசி ஆராய நம்ம சிங்கங்கள கேட்டுக்கறேன்...

விவசாயி(ILA) : அதாவது அமெரிக்காகாரன் பாசுமதி அரிசிக்கு பேடண்ட் வாங்கி இருக்கான்...ஆனா நம்ம ஐ.ஆர்.20 போட்டமுனா விளைச்சல் நல்லா இருக்கும்...

தல: யோவ் எத பத்தி பேச சொன்னா எத பத்தி பேசிட்டு இருக்க....

போர்வாள்(தேவ்): அதுபாருங்க இந்த டாஸ்மாக் கடைலயும் டூப்ளிகேட் சரக்கு விக்கராங்கன்னு நம்ம ஸ்டார் ரிப்போர்டர் விசாரிக்க போயி இருக்காரு...

தல: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எல்லா பயலுகளும் இப்படி தான் இருக்காங்க....

தளபதி(சிபி): நான் என்ன சொல்ல வரேனா..பழனிக்கு போனீங்கன்னா சித்தனாதன் கடைல பஞ்சாமிர்தம் வாங்கிட்டு சாப்பிடுங்க.....

தல: வேனாம்...என்ன கொலகாரனா ஆக்கிடாதீங்க....

ராம்: இங்க பெங்களூரு பப்புல பிகருங்க என்னமா இருக்குராய்ங்க....நான் தினமும் பப்புக்கு போவேன்....

நான்: ஆமா ராயலு...இங்கயும் அதே கூத்து தான்....

தல: அடேய்...என் பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு.....

வெட்டி:ஹைதராபாத்துல இப்போ ரியல் எஸ்டேட் நல்லா இருக்குனு கேள்வி பட்டேன்....

தல: போதும் நிறுத்திக்குவொம்...இதுக்கு மேல எவனாவது ஒரு வார்த்தை பேசுனீங்க...அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்...என்ன மேட்டருனுனே எவனும் கவல படாம அவன் அவன் பிரச்சனைய பேசிட்டு இருக்காய்ங்க.....

புலி(நாகை சிவா): தல டென்சன் ஆகாதீங்க...நான் பேசரேன் கேளூங்க....அதாவது பிரியானி சாப்பிட்டு சரக்கு அடிச்சா என்ன..சரக்கு அடிச்சிட்டு பிரியானி சாப்பிட்டா என்ன..எல்லாம் நமக்கு தான....

தல: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...இது பட்டி மன்றம் எதுனா ஒன்னு சொல்லு....

ஜொல்ஸ்: புலி சொல்றது சரி தான்...போத்திட்டு படுத்தா என்ன படுத்துட்டு போத்துனா என்ன...ஆனா போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா.....

தல: அடேய் அப்ரசன்டிசுகளா...நீங்க எல்லாம் ஏதாவது பேசுவீங்கன்னு தலம தாங்க வந்தேன் பாரு...இதுக்கு டாஸ்மாக்ல ஒரு கோட்டர் வாங்கி அடிச்சிட்டு கட்டதொரை கிட்ட அடி வாங்க போய் இருக்கலாம்....நான் பாட்டுக்கு பெகிரீன் "கேக்கறான்-மேக்கறான்" கம்பேனில பில்டிங் காண்டீட்டு வேல பாத்துட்டு இருந்தேன் என்ன கூட்டி கொண்டாந்து இப்புடி ரணகளம் பன்றாய்ங்களே.....

Monday, April 23, 2007

உங்களுக்கு 40, எங்களுக்கு மட்டும் 105

"நகைச்சுவைப் போட்டின்னு அறிவிச்சா யாரு வந்து எழுதப்போறாங்க, வேலையை பாருங்கப்பா" இது நண்பர்

" இல்லீங்க, தமிழ் வலைப்பதிவர்களும் நகைச்சுவையா எழுதறாங்க"- இது நம்ம சிங்கம்.

"அப்படியா வேணுமின்னா பாரு ஒரு பத்து பேரு தேறமாட்டாங்க"

"சரிங்க, போட்டி நடத்திட்டு சொல்றோம், தமிழ்ப்பதிவர்ங்க எவ்ளோ பேர் நகைச்சுவயாவும் எழுதறாங்கன்னு"

"இப்போ இந்த போட்டி நடத்தி என்னாத்த கிழிக்கப் போறிங்க"

"வ.வா.ச ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆச்சுங்க. அதுக்கு Global Warming Awareness'ம் அறிவிச்சு இருக்கோம். போட்டிக்கு வர பதிவுகளை தொகுப்பாக்கினா அப்படியே நல்ல நகைச்சுவை தொகுப்பும் கிடைக்கும். பதிவர்ங்ககிட்டே இருக்கிற நகைச்சுவை உணர்வையும் வெளிக் கொணர ஒரு நல்ல சந்தர்ப்பமாவும் அமையும்"

"சொன்னா கேட்கவா போறீங்க, எப்படியோ போங்க"

கைப்பு: ஆஹா, அந்த நண்பர் சொன்ன மாதிரியே மக்கா கவுத்திட்டாங்கய்யா கவுத்திடாங்க. போட்டிக்கு வந்த பதிவுகள் மட்டும் அதிகமில்லை அப்பு
105
.


ஷ் ஷ் அப்பப்பா இப்பவே கண்ண கட்டுதே, அன்னந்தண்ணி இல்லாம படிச்சாவே 2 வாரம் ஆவுமே. மின்னாடி சொன்ன மாதிரி 26ம் தேதிக்குள்ள ரிஜல்ட்டை சொல்லிருவாய்ங்களா? சொல்லுங்க அப்ரசண்டிகளா?

சிங்கங்கள் எல்லாம் ஒன்னா கோரஸாக: முயற்சி பண்றோம்...

Thursday, April 19, 2007

உலகக் கோப்பை 2011


இந்திய கிரிக்கெட் அணியை தண்டிக்கவும் தமிழ் சினிமா நடிகர்களை தண்டிக்கவும் நமது வ.வா சங்கத்திடம் மனு குவிந்தது.
எமது தீர்ப்பு "இனி தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் ஆடுங்கள், கிரிக்கெட் வீரர்கள் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே!"

முதல் பகுதி:

இதில் தமிழ் வீரர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள். அதன் நேரடி வர்ணணை முதல் பகுதியில் வெளிவரும். இரண்டாம் பகுதியில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்கும் தமிழ் படங்கள் திரையிடப்படும்.


அப்போ ஆட்டத்தை ஆரம்பிப்போமா?


பேட்டிங் ஆர்டர்:

சிம்பு
தனுஷ்
S.J. சூர்யா
விஜய் (Vice Captain)
அஜித்(விஜயகாந்த் .............. அதாவது Captain)
பிரகாஷ்ராஜ்
கார்த்திக்
நமீதா(Fast Bowler)
பாக்கியராஜ்
வடிவேல் சிங்
ராஜ்கிரண் (கடைசியில் அழுபவர்)

Substitues (அல்லகை's): T.R. & விஜயகாந்த்
Coach: கவுண்டமணி
Manager: செந்தில்Toss:
டாஸ் போட ரிக்கி பாண்டிங்கும், Referreeயும் ரொம்ப நேரமாக காத்திருக்கிறார்கள். கடுப்பாகி போன பாண்டிங், நேராக இந்திய Dressing Room நோக்கி விரைகிறார்.

"Captain, Captain, Indian Captain, please வாங்க" என்று கூக்குரலிடுகிறார், பாண்டிங்.
அப்பொழுது, சலங்கை சப்தம் கேக்கிறது. "இன்னிசை அளபெடையே" என்று பாட்டும் ஒலிக்கிறது.
பாண்டிங் குரல் கேட்டதும் சப்தம் திடுக்கென்று நின்றது. ஒய்யாரமாக சலங்கையுடன் நடந்து வருகிறார் அஜித்.

"பாண்டிங்! இனிமேல் என்னை 'தல'ன்னு கூப்பிடுங்க, ஏன்னா, இந்திய கிரிக்கெட் உலகத்துல இது புது சகாப்தம்......கெட்டதுக்கும் நல்லதுக்கும் நடக்கிற யுத்தம்." 10 செகண்ட் மெளனத்திற்கு பின் 'அது' என்று சத்தமாக கர்ஜிக்கிறார்.

பாண்டிங்கிற்கு விளையாடமலேயே வேர்க்கிறது. "தல! வாங்க Toss போட போகலாம். ஆனால், அதுக்கு முன்னாடி சலங்கையை கழட்டிட்டு வாங்க" என்கிறார். இதற்கு அஜித் மறுத்து வேகமாக தலையாட்ட அங்கே வருகிறார், Vice Captain, விஜய், அஜித்திற்கு சப்போர்ட்டாக.

நிறுத்துங்க Ponting (பூவே உனக்காக background music ஒலிக்கிறது)

"காதலுங்கிறது கால்ல கட்டியிறுக்கிற சலங்கை மாதிரிதான். கட்டறவங்க கட்டி ஆட்டம் போட்டா ஆட்டம் நின்ன பிறகும் சத்தம் கேட்கும்.....
நான் கிரிக்கெட் ஆட்டத்தை சொன்னேன்" என்று பிதற்றுகிறார் விஜய். அஜித்தும் விஜயும் கைத்தட்டிக் கொள்கிறார்கள்.

Ricky Ponting தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார். "யோவ், light போக போகுதய்யா" என்று கதறுகிறார்.

"ஒரு நிமிஷம் Ponting, நான் இப்போ வர்றேன்" என்று escape ஆகிறார் அஜீத். நேராக canteenல் அமர்ந்திருக்கும் coach கவுண்டமணியிடம் "Tossன்னா என்ன?" என்கிறார். அப்போது கவுண்டமணி அதிர்ச்சி தாங்காமல் குடித்துக் கொண்டிருந்த teaயை எதிரில் அமர்ந்துக் கொண்டிருந்த T.R. முகத்தில் துப்பி விடுகிறார்.

அஜீத்தை பார்த்து "என்ன கண்ணா சொன்ன". அஜீத் "Tossனா என்ன?" என்கிறார். கவுண்டர் "எங்க இன்னொருக்கா சொல்லு", அஜித் "Toss, Toss, Toss" என்று கத்துகிறார். கவுண்டர் தலை குணிந்து "இதென்ன சோதனை!, Tossன்னா என்ன அப்படிங்கிறத கூடவா coach சொல்லி தரணும். கடவுளே இது எனக்கு தேவையா?"

Tea முகத்தை துடைத்துக்கொண்டு T.R. பேச ஆரம்பிக்கிறார்.

அஜீத், இந்த Teamற்கு நீ Bossu

அதனால் நீ போடனும் Tossu

1 ரூபாய் coinஅ மேல வீசு!

Ponting சொல்றபடி வீழ்ந்தா நம்ம closeu

எப்படி இருந்தாலும் நம்ப all out for no lossu.....(ஏய் டண்டணக்கா டணுக்ணக்கா என்று இடத்தை விட்டு நகர்கிறார் T.R.)

Toss என்றால் என்னவென்று சரிவர புரியாமல் groundற்கு போகிறார் அஜித்..........இனி ஆட்டம் இனிதே தொடரும் - கமலேஷ் கண்ணன்.

டெவில் ஷோ - ராயல் ராம்

மக்களே அடுத்து ஒரு சினிமா பிரபலத்த தான் டெவில் ஷோல கூப்பிடலாம்னு இருந்தோம். தல கூட ரெடியாயிட்டேனு சொன்னாரு. அப்பதான் நம்ம போர்வாள்கிட்ட இருந்து ஒரு போன் நம்ம ராயலுக்கு இன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலையானு? சரினு வாழ்த்து சொல்லலாம்னு போன் பண்ணா எனக்கு டெவில் ஷோ போடலைனா நான் பேச மாட்டேனு ஃபீல் பண்ணிட்டாரு. சரினு, அப்படியே டெவில் ஷோக்கு அப்படியே ரெடியாகியாச்சு. இப்ப எல்லாம் நிகழ்ச்சிக்கு போவோம்

கவுண்டர்: "பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்"

ராயல்: "மிக்க நன்றி கவுண்ட்ஸ். ஆனா எம் பேர இப்ப வெறும் ராம் இல்லை. "ராயல்" ராம். கெஸட்ல கூட மாத்தியாச்சி."

கவுண்டர்: "அது என்ன ராயலு. நீ என்ன மைசூர் மகாராஜா பேமிலியா இல்லை இங்கிலாந்து எலிசபத் ஃபேமிலியா?"

ராயல்: "நோ நோ நோ நோ. எலி எல்லாம் எங்க வீட்ல இல்லை. எல்லாத்தையும் தம்பி பிடிச்சிட்டு போயி மஞ்சுளாக்கு கொடுத்துட்டான். என் சொந்த ஊர் மதுரை. அதனால பாண்டிய வம்சமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்"

கவுண்டர்: "ஏன்டா, பாண்டியன் படத்த தியேட்டர்ல பாக்க காசு இல்லாம சன் டீவில பாத்தவன் நீ? நீ ராயல் ஃபேமிலியா? ஏன்டா உனக்கு இந்த ஓவர் பில்டப்। "

ராயல்: "அது இல்லைங்க கவுண்ட்ஸ். ராயல்னு சொன்னா ஒரு ரிச் இருக்குமேனு தான். அதுவுமில்லாம எனக்கு ரிச்சி ரிச்னா ரொம்ப பிடிக்கும் அதான்."

கவுண்டர்: "அது எவன்டா அந்த ரிச்சி ரிச்?"

ராயல்: "ப்ளாக்ல என் ஃப்ரோபைல் போட்டோல இருக்கான் இல்ல.அவன் தான் ரிச்சி ரிச். நான் கூட ஏன் போட்டோ மாத்தினேனு ஒரு பதிவு போட்டேனே. நியாபகமில்லை."

கவுண்டர்: "ஓ! நீ ஏதோ ஒரு பொண்ணுக்கூப்பிட்டு ஃபோரம் போனப்ப இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்து ப்ரோபஸ் பண்ணி, கடைசியா மூணு பேரும் சேர்ந்து மொத்தனாங்கனு போட்டியே அதா? அது எப்படிடா உனக்கு மட்டும் இத்தன ஃபிகர் மாட்டுது?"

ராயல்: "அது நம்ம எழுத்து திறமைய பாத்துதான்."

கவுண்டர்: "டேய்! யாகூ சேட்ல நீ பண்ண அலும்பதான் உங்க போர்வாள் புட்டு புட்டு வெச்சிட்டாரே. இன்னுமும் ஏன்டா உனக்கு இந்த பில்டப்பு."

ராயல்: "ஹி ஹி ஹி..."

கவுண்டர்: "ஆமா அப்பறம் எதுக்கு அமெரிக்கால இருந்து வரவன எல்லாம் கலாய்ச்ச?"

ராயல்: "ஓ அதுவா? கப்பி வரும்போது சாக்லேட் வாங்கிட்டு வர சொன்னேன். அவன் வாங்கிட்டு வரல. அதனால தான். ஹி ஹி ஹி"

கவுண்டர்: "ஏன்டா அந்த ஒன்றையனா சாக்லேட்டுக்கு நீ இவ்வளவு அலும்பு பண்ணிருக்க.ஆமா அப்பறம் மதுரைல உங்க அப்பத்தாக்கிட்ட பெங்களூருக்கு போறதுக்கு பாஸ்போர்ட், வீசா எல்லாம் வாங்கனும்னு சொல்லியிருக்கியாமே. நிஜமாவா?"

ராயல்: "இந்த உண்மையெல்லாம் உங்களுக்கு யாருங்கண்ணா சொன்னா?"

கவுண்டர்: "நீ உங்க ஊர்ல சொல்லிருக்க விஷயமெல்லாம் கொஞ்ச கொஞ்சமா வெளிய வர ஆரம்பிடுச்சி கண்ணா... அப்பறம் எதுக்குடா ஆனா ஊனா ஃபீலிங் ஆகிடற?"

ராயல்: "ஓ! அதுவா??? சின்ன வயசுல இருந்தே யாராவது எதுனா சொன்னா இப்படி ஃபீல் ஆகற மாதிரி ஆக்ட் விடுவேன். உடனே சாக்லேட் வாங்கி கொடுத்துடுவாங்க."

கவுண்ட்ஸ்: "இந்த சாக்லேட் பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கும் போல இருக்கே. ஆமா குஷி படம் பார்த்துட்டு வரும் போது பேய் துரத்துச்சி, நாய் கடிச்சினு எல்லாம் போட்டிருந்தியே அது என்ன மேட்டரு?"

ராயல்: "அது ஒண்ணுமில்லைங்க... என் கூட வந்த என் ஃபிரெண்டுக்கும் எனக்கும் ஓட்ட பந்தயம் வெச்சோம்। அப்ப ஓடும் போது நாய் கடிச்சிடுச்சி. "

கவுண்ட்ஸ்: "டேய் எவண்டா ராத்திரி ஒரு மணிக்கு ஓட்ட பந்தியம் வைப்பான்? இதுக்கு தான் ஆன்லைன் ஆவிகள், ஆவி அம்மணி எல்லாத்தையும் பகைச்சிக்க கூடாதுனு சொன்னது. ஏதோ உன் நல்ல நேரம் நாய் உன்னைய விட்டுவெச்சிடுச்சி..."

ராயல்: "ஆமாங்க கவுண்ட்ஸ். சரிங்க கவுண்ட்ஸ் பர்த்டே அதுவுமா நான் ஆம்பிளைங்க கூட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை. நான் கிளம்பறேன்..."

கவுண்ட்ஸ்: "சரி பொறந்த நாளா இருக்கேனு நானும் உன்னை மன்னிச்சி விடறேன். இந்தா சாக்லேட்டு."

சந்தோஷமாக வாங்கி ஃபிகர்களிடம் கொடுக்க ஓடுகிறார் ராயல் :-)

ராயல் ராம்-பொறந்த நாளு

ராம்,

 • அவர எல்லாரும் குழந்தைன்னு சொன்னாலும் அவரு வளர்ந்த ஒரு குமரன்.
 • சதா வேலை நினைப்பாவே இருக்கிறவருங்க.
 • வல்லவரு, நல்லவரு நாலும் தெரிஞ்சவரு.
 • திறமை ரெம்வே அதிகம்.
 • மூளை கவுட்டி கவுட்டியா வேலை செய்யும்.
 • பொய் பேசவே மாட்டாரு.
 • பொண்ணுங்களை ஏறெடுத்தும் பார்க்காதவரு, பொண்ணுங்க கிட்டே சேட் பண்ணவே மாட்டாரு.
 • காலையில எழுந்த உடனே பல் விளக்கிருவாரு.
 • பொய் பேசவே தெரியாது.
 • தம், தண்ணின்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
 • கை போன்ல பொண்ணுங்க கிட்டேயும் பேசவே மாட்டாரு, பசங்ககிட்ட கூட அதிகமா பேச மாட்டாரு.
 • சீட்டு, ரேஸ், கேம்பிளிங்க் எதுவுமே தெரியாது.
 • பெங்களூரிலேயே இருந்தா Pubக்கு போனதே கிடையாது.
 • கடைசியா ஒன்னு. அவரு ரெம்ப நல்லவருங்கோஓஓஓஓஓஓஓ

டிஸ்கி: "ஒரு பதிவு முழுசா பொய் மட்டுமே பேச முடியுமான்னு கேட்டவருக்காக"

ராயல் ராமின் பிறந்த நாளுக்காக(Apr-19) இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறோம்

Tuesday, April 17, 2007

சங்கப் போட்டிப் பதிவுகள் - முழுப் பட்டியல்

வ.வா.சங்கத்தின் போட்டிக்கு வந்துள்ளப் பதிவுகள்

டோண்டு ராகவன்- 1
டோண்டு ராகவன்- 2
டோண்டு ராகவன்- 3
டோண்டு ராகவன்- 4
டோண்டு ராகவன்- 5

செந்தழல் ரவி -1
செந்தழல் ரவி -2
செந்தழல் ரவி -3
செந்தழல் ரவி -4

ஜி -1
ஜி -2
ஜி -3
ஜி -4

குலவுசனப்பிரியன் -1
குலவுசனப்பிரியன் -2
குலவுசனப்பிரியன் -3
குலவுசனப்பிரியன் -4
குலவுசனப்பிரியன் -5
குலவுசனப்பிரியன் -6
குலவுசனப்பிரியன் -7
குலவுசனப்பிரியன் -8

மாறன் - 1
மாறன் - 2

சந்தோஷ் - 1
சந்தோஷ் - 2
சந்தோஷ் - 3
சந்தோஷ் - 4

ஷைலஜா - 1
ஷைலஜா - 2
ஷைலஜா - 3

செந்தில்- 1
செந்தில்- 2

கோல்மால் கோபால் -1
கோல்மால் கோபால் -2
கோல்மால் கோபால் -3
கோல்மால் கோபால் - 4

அருண்குமார் - 1
அருண்குமார் - 2
அருண்குமார் - 3

சி.வி.ஆர் -1
சி.வி.ஆர் -2
சி.வி.ஆர் -3


மாதங்கி - 1

டுபுக்கு - 1
டுபுக்கு - 2
டுபுக்கு - 3

டேவ் தேவ் - 1

லக்கி லுக் - 1
லக்கி லுக் - 2
லக்கி லுக் - 3
லக்கி லுக் - 4
லக்கி லுக் - 5
லக்கி லுக் - 6
லக்கி லுக் - 7
லக்கி லுக் - 8
லக்கி லுக் - 9
லக்கி லுக் - 10
லக்கி லுக் - 11
லக்கி லுக் - 12
லக்கி லுக் - 13
லக்கி லுக் - 14
லக்கி லுக் - 15
லக்கி லுக் - 16
லக்கி லுக் - 17
லக்கி லுக் - 18
லக்கி லுக் - 19
லக்கி லுக் - 20
லக்கி லுக் - 21
லக்கி லுக் - 22
லக்கி லுக் - 23

அபி அப்பா -1
அபி அப்பா -2
அபி அப்பா -3
அபி அப்பா -4
அபி அப்பா -5
அபி அப்பா -6
அபி அப்பா -7

ராம்C -1

ACE -1

இலவசக் கொத்தனார் - 1

அம்பி - 1
அம்பி - 2
அம்பி - 3
அம்பி - 5

கண்மணி - 1
கண்மணி - 2

உதய் - 1
உதய் - 2
உதய் - 3
உதய் - 4

செல்வன் - 1

மை ஃபிரெண்ட் - 1
மை ஃபிரெண்ட் - 2

நாகை பாலமுரளி - 1
நாகை பாலமுரளி - 2
நாகை பாலமுரளி - 3
நாகை பாலமுரளி - 4
நாகை பாலமுரளி - 5
நாகை பாலமுரளி - 6
நாகை பாலமுரளி - 7

Jayashree -1
Jayashree -2

Monday, April 16, 2007

ஆரோக்ய சமையல்...

ஆரோக்ய சமையல்னு சன் டிவில வருதே..அந்த அக்கா எப்ப பாத்தாலும் வெளங்காத நாலு ஐட்டம் எடுத்து அரைச்சு தண்ணில போட்டு கொதிக்க வெச்சு..உப்பு,காரம் எதும் இல்லாம அப்படியே சாப்பிட சொல்வாங்க...அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....

எல்லோரும் அதே மாதிரி இருப்பாங்களா..அதுனால நல்ல டேஸ்டாவும் இருக்கனும், ஆரோக்யமாவும் இருக்கனும்னு உங்களுக்காக...ரூம் போட்டு, ரெண்டு கோட்டர், ஒரு ஆப் பிரியானி சாப்பிட்டு யோசிச்சதுல வந்த யோசனை....

தேவையான பொருட்கள்,
1. முந்திரி 1/2 கிலோ
2. பாதாம் 1/2 கிலோ
3. நெய் 1/4 கிலோ
4. வெண்ணெய் 1/4 கிலோ
5. மட்டன் 3/4 கிலோ(கொழுப்புடன் இருந்தால் நல்லது)
(வெஜ் சாப்பிடுறவங்க உருளை கிழங்கு போட்டுக்கலாம்)
6. மைதா 200 கிராம்
7. முட்டை 8
9. வெங்காயம்,பச்சை மிளாகாய், ஏலக்காய், கிராம்பு,சோம்பு,பூண்டு,இஞ்சி - வீட்டுல இருகற அளவு

இத் எல்லாம் சாப்பிட்டு எப்படிடா ஆரோக்யமா இருக்கமுடியும்னு கேக்கறீங்களா...என்ன அவுசரம் பொருங்க கொஞ்சம்....இத எல்லாம் போட்டு உங்களுக்கு எந்த முறைல சமைக்க தெரியுமோ சமைச்சிட்டு...அத எடுத்து பக்கதுல யாராவது பேச்சிலர்ஸ் இருந்தா அவங்களுக்கு கொடுத்திட்டு...ரெண்டு வாழைபழம் வாங்கி சாப்பிட்டு படுத்துக்கோங்க...ஆரொக்யமா இருக்கலாம்....பழம் வாங்க போக சோம்பேரி தனமா இருந்தா...அத அந்த பசங்களே கூட வாங்கி குடுத்துறுவாங்க...

எல்லோரும் சங்கம் நடத்தும் நகைச்சுவை போட்டில கலந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....நீங்களும் தமிழ் தொலைகாட்சிகளில் நடிகர் நடிகைகள் வந்து ஹேப்பி டமிழ் நியூ இயர்னு சொன்னத பார்த்து இனிதா புது வருசத்த துவக்கி இருப்பீங்கன்னு நம்பறேன்...

Friday, April 13, 2007

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி


சுட்டெரிக்கும் வெயிலில் நெடுந்தொலைவு கடக்க முற்படும் பயணிக்கு சிறிது இளைப்பார சின்ன இடமும் தாகம் தீர்க்க குளிர்ந்த நீரும் கிடைந்தால் அப்பயணி அடைவது என்ன? அதைவிட அவன் இளைப்பாற ஒதுக்கும் நிழல் கொடுக்கும் இடத்தில் மெல்லிய சாரல் என குளிர்ந்த காற்று அப்பயணியை உரசி சென்றால் அவன் அடையும் நிலை என்ன??

டேய் மண்டயா? நீ என்ன சொல்ல வர்றே'ன்னு நீங்க கேட்கிறது புரியுதுங்க, எல்லாத்தையும் வித்தியாசமாக செஞ்சு பழக்கப்பட்டு போன நமக்கு இதெயும் கொஞ்சம் வித்தியாசமா ஆக்கனும்மின்னு ஆசைதாங்க... இங்க பயணி சொன்னது உங்களைதான், பயணமின்னு சொன்னது உங்க வாழ்க்கையை, வெயில்ன்னு சொன்னது உங்க வேலையை, குளிர்ந்த நீர்ன்னா நகைச்சுவைங்க.. அப்புறம் நீங்க இளைப்பாற வர்ற இடம் நம்ம வ.வா.சங்கம்... :)
சரி மேட்டருக்கு வாறேன். சங்கத்தோட முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்த்தில் உங்களை மேலும் மகிழ்விக்க போட்டியென்ற நடத்தலாமின்னு சென்ற பதிவென்றில் அறிவித்து இருந்தோம்.பரிசுப்போட்டி:-

நகைச்சுவையாக ஒரு பதிவு எழுதி அதோட முகவரியை இங்கே பின்னூட்டமிடுங்கள்.

விதிமுறைகள்:-

1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.

2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.

3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை

4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.

5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.

6)பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.
7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஷிஹி)


பரிசுத்தொகை:-


1000 பொற்காசுகள் இல்லை........................ (இந்திய பண மதிப்பில் பரிசு, புத்தக வடிவில்)

கடைசி தேதி:-

21-04-2007 11.59 PM IST

உங்களின் நகைச்சுவை சாரல் நம் எல்லாரையும் குளிர்விக்க அன்புடன் வரவேற்கிறோம்.அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, April 11, 2007

க்ரேக் கைப்புள்ள - SCOOP NEWS

கடந்த மாதம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் விளையாட வெஸ்ட் இன்டீஸ் போறோம்ன்னு இதே சங்கத்தைச் சேர்ந்த மக்கள் கிளம்பியதும் அதன் பின் அவர்கள் அலட்டலாகப் பேட்டிக் கொடுத்ததும்.. சிறப்பு பயிற்சி என்று கும்மாளம் அடித்ததும் உங்களுக்கு நினைவிருக்கும்..

விளையாடச் சென்ற அணி... என்னவானது என்று விசாரிக்க நம் பதிவுலக சிறப்பு புலனாய்வு குழு முயற்சிகள் மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன...

கிரிக்கெட் விளையாடச் சென்ற இடத்தில் அணியின் மூத்த வீரர்கள் நடந்துக் கொண்ட முறை குறித்து பயிற்சியாளர் க்ரேக் கைப்புள்ள அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள் அமுக்கப் பட்டுள்ளன...

அந்த எஸ்.எம்.எஸ்களில் அப்படி என்ன இருந்தது...அதையும் பாருங்க...

"மந்திராப் பேடியை தனக்கு துணைப் பயிற்சியாளராய் கேட்டுத் தான் கதறியும் செவி மடுக்காத பதிவுலகக் கிரிக்கெட் போர்ட் பற்றி மனம் வெதும்பியுள்ளார் கைப்பு..
வெக்கத்தை விட்டு தன் சம்பளத்தில் முக்கால் பகுதியை மந்திரா பேடிக்கு விட்டுத் தருவதாய் கூறியும் போர்ட் அதை ஏற்க மறுத்து பினாத்தும் நபரை சிறப்பு பயிற்சியாளராய் நியமித்துத் தன்னைச் சிறுமைப் படுத்தியதாய் கைப்புக் கண்கலங்கி உள்ளார்"

காலைத்தோறும் தன் கையால் நாலு வீதித் தள்ளி இருந்த மாட்டுப் பண்ணைக்குச் சென்று தானே கறந்து வீரர்களுக்கு ஊட்டச் சத்து வழங்க வைத்திருந்த பசும் பாலின் க்ரீமி லேயரை கேப்டன் என்ற ஆணவத்தில் கொத்தனார் எடுத்துக் குடித்து விட்டு குப்புற படுத்து குறட்டை விட்ட நிகழ்வுகளை ரிங் டோனாக நண்பர்களுக்கு பார்வர்ட் செய்துள்ளார் க்ரேக் கைப்புள்ள..

விளக்கு வைத்தப் பின் விளையாட மாட்டோம் என்று அடம் பிடித்த சீனியர் பிளேயர்களும்... கடும் வெயிலில் ஆடினால் காம்ப்ளெக்ஷ்ன் கருத்து விடும்.. அவ்வளவாக விளம்பரங்கள் வராது என்று அடம் பிடித்த இளம் வீரர்கள் என அல்லல் கதைகளை இ மெயிலை இறைத்துள்ளார் கோச் கைப்புள்ள..

'சுமா'ராக தான் பயிற்சி செய்வேன்.. சு(ம்)மா சு(ம்)மா எல்லாம் பயிற்சி செய்ய முடியாது... நீ சு(ம்)மா சு(ம்)மா என்னை மிரட்டுனே என் ஆறு கோடி ரசிகர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என பல்டி அடித்த வெ(ற்)றி வீரர் கொடுத்த டார்ச்சர் என அவர் டைரியின் கண்ணீர் பக்கங்களூம் நம் கையில் சிக்கி உள்ளன...

மேட்ச் பிராக்டீஸ் பார்க்க வந்த இளம் ரசிகைகளின் யாகூ/ஜி-மெயில் ஐடி வாங்கி கடலை சாகுபடி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்த மீனாட்சி நகரின் வீரர் தன் லாப்டாப் புடுங்கி வைத்து அசிங்கப்படுத்திய நிகழ்வையும் பதிவாகப் போட்டுள்ளார்..

இன்னும் ரகசியங்கள் நிறைய உள்ளன...

உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையிலும் மக்களுக்கு உண்மைச் சொல்லக் கடமைப் பட்டு சங்கத்தின் போர்வாள் ஐடியைக் கைப்பற்றி இந்தப் பதிவை அவ்ர்கள் சங்கத்திலேயே வெளியிடுகிறோம்...

பதிவுலக மக்களே எங்கள் உயிரை இந்த சங்கத்துச் சிங்கங்கள் பிராண்டாமல் பாதுகாத்து கொடுங்கள்...

இவ்வளவு விசயங்களை விசும்பிய க்ரேக் கைப்பு இப்போ எங்கே? அதையும் தைரியமா உங்களுக்குச் சொல்லுறோம்.. கீழேப் போங்க.. படத்தைப் பாருங்க....

இந்தப் படத்தில் கீழ் நோக்கிப் பாய்வது யாருன்னு நான் உங்களுக்குச் சொல்லணுமா....

தள்ளி விடுறவங்களை உங்களுக்கு அடையாளம் தெரியுதா?

இதற்குப் பின்னால் பெரும் சதி இருக்கும் போல் உள்ளது..

முன்னணி கிரிக்கெட் பதிவர்களான மணிகண்டன், பாஸ்ட் பவுலர், அவந்திகா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சி பற்றி எதுவும் சொல்லாதது பெரும் அதிர்ச்சியாக உள்ளது....

பதிவுலகம் க்ரேக் கைப்புள்ளயை மறந்து விட்டதா என்ன?

Saturday, April 7, 2007

வ.வா.சங்கத்தின் 1ம் ஆண்டு ஆர்ப்பாட்டம்

அட, உண்மையா இது? அதுக்குள்ளேவா? நெசமாவா? உண்மைதாங்க, மலைப்பா இருக்கு. வ.வா.சங்கம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. 2006-ஏப்ரல் மாசம் 26ம் தேதி பொன்ஸ்ஸும், தேவும் ஏதேச்சையா ஏதோ பேசிக்க்ட்டு இருக்க அப்போ உதயமானதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.


நகைச்சுவை மட்டுமே எங்களின் மைய கரு என்று அன்று எடுத்த முடிவு இன்றும் தொடர்கிறது. பொன்ஸ்தான் வ.வா.சங்கத்துக்காக ஒரு சோதனை பதிவிட்டாங்க. அடுத்த நாளே யார் யார் சங்கத்துல இருக்கப்போறோம்னு தெரியாமலேயே ஒரு படம் அனுப்பிச்சதும், பொன்ஸ் அதையே ஒரு பதிவா போட்டாங்க. 45 பின்னூட்டம் விழுந்ததும் எங்களுக்கு உற்சாகம் பத்திக்கிச்சு. அப்ப ஆரம்பிச்ச ஆர்ப்பாட்டம்தான் இன்னும் அடங்கவே இல்லீங்க. ஆப்புக்களின் வேகம் அதிகமாக சங்கம் சாராத இன்னொருத்தர புடிச்சு மாசம் அட்லாஸ் வாலிபர்ன்னு பேர் வெச்சொம். அப்படியே தமிழ்ச்சங்கம், கதைச்சங்கம்ன்னு நிறைய கிளைகளும் உருவாகிச்சு.


ஆப்புக்களும், அட்லாஸ்களும் நிரம்பி, ததும்பி வழிஞ்சுகிட்டு இருக்கிற இந்த நேரத்துல முதலாமாண்டு நிறைவு விழாவை சாதாரணமா காமெடி பண்ணாமல் சமூகத்துக்கு (குறைந்தப்பட்சம் பதிவுலகத்துக்கு) ஏதாவது சொல்லனும்னு தோணியது. ஆதலால் எங்களுடைய முதலாமாண்டு நிறைவு விழாவை உலகையே ஆட்டிப்படைக்கும் 'GLOBAL WARMING" awarenessஆக அறிவிக்கிறோம்.

Global Warming awarenesssன்னா என்னான்னு நாங்க சொன்னா நல்லா இருக்குமா? விக்கிப்பசங்க சொன்னாதானே நல்லா இருக்கும். அதான், சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரும், விக்கி பசங்கள்ள ஒருவருமான இலவச கொத்தனார் Global Warming பத்தி ஒரு பதிவு போடப்போறாரு. அதைத் தொடர்ந்து, சங்கத்துக்கு அட்லாஸ்ன்னு ஒரு எண்ணம் வர காரணமான கோவி.கண்ணனின் ஆர்ப்பாட்ட பதிவு ஒன்றும் வரப்போகுது. எந்தவொரு வெற்றிகளும்,சாதனைகளும் உங்களை போன்ற நல்லோர் ஆதரவு இல்லாமல் ஏற்படுவதில்லை. இதுவரைக்கு எங்களுக்கு ஆதரவ(லி)ளித்து வந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி!

இதோ ஆரம்பிக்குது நமது ஆர்ப்பாட்டம்!! நகைச்சுவையை மட்டுமே கருத்தாக கொண்ட ஒரு போட்டியும் நடத்தலாமென்று உத்தேசம் உள்ளது, அதற்கு தாங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இன்று வரையிலும் தாங்கள் அளிந்தவந்த புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை இப்பொழுதும் அளிப்பிர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நண்பர்கள்.


Thursday, April 5, 2007

சங்கம் RECRUITMENT

வழக்கமா கம்பெனிக்குத் தான் ஆள் வேணும்ன்னு விளம்பரம் கொடுப்பாயங்க...


உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு குழு வலைப்பதிவிற்கு பதிவுகள் எழுதவும், வார்ப்புரு மேம்படுத்தவும் ஆட்கள் தேடி வரும் விளம்பரம் இது....
வயது எல்லாம் தடையில்லங்க.. வாலிப வயசுன்னு நினைக்கிறவங்க யாரும் எழுதலாம்..

பதிவுல்ல JEWELTASTE கண்டிப்பா இருக்கணும்... அடுத்தவங்களை புண்படுத்தாத JEWEL TASTE..

யார் வந்து கலாய்ச்சாலும் தாங்குற அளவுக்கு நல்லவனா.. இல்லை ரொம்ப நல்லவனா இருக்கணும்...

ஆண் / பெண் பேதம் இல்லை.. எல்லோரும் விண்ணப்பிக்கலாம்

வார்ப்புருவின் மூலம் JEWELTASTE கொடுக்க முடியும்ன்னு நினைக்கறவ்ங்களும் விண்ணப்பிக்கலாம்

இதுக்கெல்லாம் எவ்வளவு டாலர் சம்பளம்ன்னு கேக்கறவ்ங்களுக்கு கிலோ கணக்குல்ல அல்வாவை அன்புங்கற பேர்ல்ல கொடுப்போம் சிரிச்சுகிட்டே வாங்கிக்கணும்... ரொம்ப திறமைசாலிகளுக்கு சங்கம் வாங்கிய ஆப்புக்கள் சரி சமமாகப் பிரித்து அளிக்கப் படும்.

'SANGAM IS AN EQUAL OPPORTUNITY FAIR PLAY GROUP '

நேரமும்.... நாலு பேரைச் சிரிக்க வைக்கணும்ங்கற மனசும் உள்ளவங்க வாங்க...

உங்களைப் பத்தி சிறிசா ஒரு பின்னூட்டம் போடுங்க... அதுல்ல உங்க சுட்டியைக் கொடுங்க...


சங்கத்துக்கு வாங்க.. சிரிக்க வைச்சு சரித்திரம் படைங்க...

Wednesday, April 4, 2007

கங்குலிக்கு வாரிசு நம்ம நாட்டாமை

எல்லாரும் அடிச்சு, கிழிச்சு, தொவச்சு, தொங்கப்போட்ட இந்தியா கிரிக்"கெட்டு" மாதிரி இல்லிங்க இந்தப் பதிவு. நாட்டாமைய பத்தின ஒரு ஸ்பெஷல் ரிப்போட்டுங்க இது.

Maggi செய்யுற நேரமும், கங்குலி பேட்டிங் பண்ற நேரமும் ஒன்னு, கங்குலி பேட்டிங்க் பண்ண groundக்கு போகும்போது ஐஸ்கிரீமை வாங்கி வைய்யி, கறையருதுக்குள்ள வந்துருவாருன்னு எல்லாம் நக்கல் நையாண்டி பண்ணினா, நம்ம நாட்டாமை அதுக்கும் மேலைங்க.

நேத்து சரியா Tue- Apr 03, 11:43:00 PM IST க்கு சரித்திர பதிவு ஒன்ன போட்டாரு. சாப்பிட்டு வந்து, தமிழ்மணத்துல அந்தப்பதிவ தேடிப்பார்த்தா காணோம். அதுக்குள்ள அந்த பதிவு தமிழ்மணத்தை விட்டு போயிருச்சு. எப்படின்னு யோசிச்சு பார்த்தா அரை செஞ்சுரி அடிச்சுட்டு நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்கிறாரு நம்ம ஊரு நாட்டாமை. ஏன் இப்படி? அதனால

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுநாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுநாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுநாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு


ஒரு echo effect போட்டு படிச்சுக்குங்க.

Tuesday, April 3, 2007

Sangam Technologies-ஆப்புரைசல் டைம்

ஆப்புரைசல் மாசம் வந்துட்டாலே எல்லோருக்கும் வயித்துல புளிய கரைக்கும். ஆணி புடுங்கறேன்னு கதைவுட்டே ஒரு வருசத்தை ஓட்டினாலும் இந்த மாசம் அதை கண்டுபுடிச்சு ஆப்பு வெச்சுருவாங்களே இந்த டேமேஜருங்க. சே சே மேனேஜருங்க. இந்த பிராஜக்ட் மானேஜருங்களுக்கு உண்மையாலுமே ரொம்ப ஞாபக சக்தி அதிகமோ? போன வருசம் நான் கண்டுபுடிக்காத ஒரு பக்கை இப்போ ஒரு bugஆ சொல்லீ ஆப்புரைசல்ல ஒரு பாயிண்ட கம்மி பண்ணிபுடுறாங்கப்பா. ஜால்ரா அடிக்கிறவங்க எல்லாம் இந்த மாசம் காலரை தூக்கிவிட்டுக்குவாங்க, அப்படியே குட்மார்னிங் சார், குட் ஆப்டர்நூன் சார், குட் ஈவிங் சார் அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க. சரி சரி இந்தப் படங்களையும் பார்த்துட்டு ஆப்புரைசலுக்கு போயிருங்க..
அடிச்சாங்கையா ஆப்பு!!!

வணக்கம்...வந்தனம்...சுஸ்வாங்கதம்....நமஸ்கார்....என்னயும் ஒரு மனுசனா மதிச்சு இங்க வந்து ஆப்பு வாங்க வெச்ச சங்கத்தின் சிங்கங்களோட பெருந்தன்மைய பத்தி நான் தனியா சொல்ல வேண்டியது இல்ல....நான் பாட்டுக்கு ஏதோ ஒரு ஓரத்துல ஒரு பிளாக் வெச்சிக்கிட்டு கொஞ்சமா ஆப்பு வாங்கிட்டு இருந்தேன்...இப்போ தோப்புல கொண்டு வந்து விட்டுட்டாங்க..

இந்த மாசம் சங்கம் ஒரு வருச நிறைவ கொண்டாடுது...இந்த ஒரு வருசமா நம்மல எல்லாம் சிந்திக்கவே விடாம(உள்குத்து எல்லாம் இல்லீங்க) சிரிக்க வச்ச சிங்கங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!...உங்க சேவை பல பல வருடங்களுக்கு தொடர விருப்பத்துடன் வாழ்த்துக்கள்....

என்னடா இழுவ மேட்டருக்கு வாடானு சொல்றீங்களா...மேட்டர் இருந்து இருந்தா வந்துருக்கமாட்டேனா....

எனக்கு ஒரு சந்தேகம்....நமக்கு இந்த ஆணி புடுங்கற வேலை பாத்து ரொம்ப நொந்து போனா..விவசாயம் பாக்க போலாம் விவசாயம் பாக்கறவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க...ஆனா விவசாயம் பார்கறவங்க ரொம்ப நொந்து போனா கொஞ்ச நாளைக்கு இங்க வந்து ஆணி புடுங்க விடுவாங்களா....மாட்டாங்க ஏன் இந்த பாரபட்சம்...நாட்டின் முதுகுதண்டு விவசாயி(நம்ம விவ் மட்டும் இல்லங்க எல்லோரயும் தான் சொல்றேன்)...அவனுக்கு போர் அடிக்கும் போது ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ...என்னங்க சிரிக்கரீங்க...நல்லதா சொன்னா ஒருத்தருக்கும் புடிக்காதே....

இங்க ஒரு நாள் ஒரு லன்ச் பார்டிக்கு போனோம்...சாப்பிட்டு முடிச்ச உடனே எல்லோருக்கும் பீடா குடுத்தாங்க...அது வெத்தலை மத்த பீடா ஐய்டம் எல்லாம் போட்டு அரச்சு கல்கத்தா பான் னு pack பண்ணி இங்க விக்கறாங்க...அத பார்த்திட்டு வெள்ளைகாரர் ஒருவர் இது எப்படி பண்றாங்கனு கேட்டதுக்கு நம்ம ஆள் ஒருத்தர் சொன்னார்...கல்கத்தால இது குடிசை தொழில்...அங்க அங்க ஒரு 50 அல்லது 100 பேர வரிசையா உக்கார வெச்சு வெத்தலை,மத்த ஐட்டம் எல்லாம் குடுத்திட்டு போவாங்க...உக்காந்து இருக்கவங்க வாயில போட்டு மென்னு குடுக்கறத பின்னாடியே ஒரு ஆள் வந்து வாங்கி பேக் பண்ணுவாருனு...வெள்ளக்காரன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே....

நம்ம ஊர்ல ஹெல்மெட் போடனும்னு புது ரூல் போட்டு இருக்காங்க...அதுனால பல நன்மைகள் இருந்தாலும்...சில தீமைகளும் இருக்கதான் செய்யுது...நன்மைனா பாருங்க நான் சென்னைல இருந்த டைம்ல ரூல் இல்லனாலும் ஹெல்மெட் போட்டுதான் போவேன்...ஒரு நாள் பார்டிக்கு போய்டு லேட் நைட் திரும்பி வரும் போது போலீஸ் நிறுத்துனாங்க...நிறைய பேர நிறுத்தி வாய் ஊதிகாட்டுனு சொல்லிட்டு இருந்தாங்க...என்கிட்யும் கேள்வி கேட்டாங்க...உன் பேரு என்ன...லலாம்(சியாம்)...என்னாது....லலாம்(சியாம்)...யோவ் குடிச்சு இருக்கியா...கலாம் பேர வெச்சுட்டு இப்படி அவரு பேர கெடுக்கறயே...லங்க லென் வேலு லலாம் ல்ல லலாம் (இல்ல என் பேரு கலாம் இல்ல சியாம்)...என்ன சொல்றான் தெலுங்குல பேசரான் போல இருக்கு நமக்கு புரியல சரி போ...தீமைனு பாத்தா என்னதான் பைக்க எடுத்திட்டு படம் போட்டு காமிச்சாலும் அது நாம தான்னு பிகருங்களுக்கு தெரியாது...உங்களுக்கு தெரிஞ்ச நன்மை தீமை இருந்தாலும் சொல்லுங்க...

எப்படியோ ஒரு போஸ்ட் போட்டாச்சு...ஆராச்சி பண்ணாம அனுபவிங்க...சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...அதுவரை உங்கள் ஆப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் லலாம் ச்சே சியாம்...

வாராரு வாராரு...

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நாட்டாமை வாராரு

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நம்ம நாட்டாமை வாராரு
புதரகத்தில் இருந்து வாராரு நம்ம சங்கத்தின் அட்லாஸா இருக்க போறாரு
நம்மை சிரிக்க வைக்க வாராரு, எல்லா ஆப்பையும் தானே சுமக்க வாராரு

வராரு வாராரு நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

அப்ப அப்ப TBI போட்டு நம்மள மகிழ வச்சவரு நாட்டாமை
மகிழ வச்சவரு நாட்டாமை
R ன் சேட்டைகள் போட்டு நம்மை குலுங்க வச்சவரு நாட்டாமை
குலுங்க வச்சவரு நாட்டாமை
சமயங்களில் அவரு கடைய பூட்டி வச்சவரு நாட்டாமை
பூட்டி வச்சவரு நாட்டாமை
சமயம் வந்தா கெளதமி கிட்ட வழிஞ்சு வைக்குறவரு நாட்டாமை
வழிஞ்சு வைக்குறவரு நாட்டாமை

முந்துது முந்துது சாதி சனம் அட நாட்டாமை இன்னும் கண்ணுல காணலயே
வந்தது வந்தது கோடி சனம் இவருக்கு இங்கு ஆப்படிக்கவே

வாராரு வாராரு நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நம்ம நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

இவரு பீட்டர கேட்டு சாதி சனங்க மண்டய பிச்சுக்கிடு அலையுது
இவரு கவித கண்டதும் கோடி சனங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்குது

இவர் ஊடலை கண்டு சிரிப்பு உச்சந்தலைக்கு ஏறுது
யம்மா, இவரு பொலம்பலைகண்டு பொங்கி பொங்கி சிரிப்பு வருது

பின்னூட்ட பின்னூட்ட சாமியடி இது ப்ளாக்கரின் ஏழு பக்கமும் நிக்கும்மடி
நன்மையடி நன்மையடி இவர் பின் ஊட்டம் வந்தால் பதிவருக்கு நன்மையடி

தொட்டா துலங்கும் காலம்மடி இவரு இப்ப நம்ம சங்கத்திலடி
தொட்டும்மடி தொட்டுமடி இவரின் நக்கல் பதிவுகள் கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுமடி


தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடிடுங்களேன்
தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடிடுங்களேன்

**********

ஏப்ரல் மாத அட்லாஸ் வாலிபராக வந்து இருக்கும் தினமும் எல்லாரையும் பின்னூட்டத்தில் கவனிக்கும் நம்ம நாட்டாமையும், பதிவுலக டம்மி முதல்வரும், புளியோதரை மன்னனும், பக்கார்டி பாஸ்கருமாகிய திரு. ஷாம் வீரக்குமாரை சங்கம் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. மார்ச் மாதம் முழுவதும் நம்மை மகிழ வைத்த ஜாவா பாவலர் கயவன் கப்பிக்கு மீண்டும் ஒரு முறை சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.