Tuesday, April 29, 2008

வ.வா.சங்கத்துக்கு நன்றியுடன் என் தொகுப்பு


இரண்டு மாசம் முன் வ.வா.சங்கத்தில் இருந்து சங்கத்தின் ஒரு மாதப் பதிவுகளை எழுதும் படி கேட்டிருந்தார்கள். ஏப்ரல் மாசம் வச்சுக்கலாமா என்று கேட்டேன். அதற்கும் ஓகே என்றார்கள். எல்லாம் சரி ஆனால் என்ன எழுதுவது என்பது குறித்துத் தீர்க்கமாக ஏப்ரல் வரும் வரை நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து சங்கத்தின் விதிகளுக்கேற்ப ஏதோ என்னாலான அளவு பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றேன் என்று நினைக்கிறேன்.


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குறும்புத்தனமான ஆசைகள், கனவுகள் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் நம்மில் பலர் அதை வெளிக்காட்டாது எமக்கு நாமே போலியான முகமூடி கொடுக்கின்றோம். சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் வரும்போது இந்த உள்ளக்கிடக்கைகளுக்கு வடிகாலாய் இந்த வ.வா.சங்கம் அமைத்துத் தரும் பதிவுக்களம் அமைகின்றது. பின்னூட்டங்களில் கூட கலாய்ப்புக்களும் சிரி சிரிப்புக்களும் நிறையவே உண்டு. இங்கே கலாய்க்கவும், சிரிக்கவும் மட்டுமே வழி உண்டு. வழிமாறி வருபவர்களும் உண்டு ;-)


இந்த மாசத்துடன் தனது இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சங்கத்துக்கு இனிய வாழ்த்துக்கள்.


அந்த வகையில் இந்த நல்ல சந்தர்ப்பத்தை வழங்கிய சங்கத்துச் சிங்கங்களுக்கும், தொடர்ந்து உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-) மீண்டும் சந்திப்போம்.ஏப்ரல் மேயிலே பாட்டு பாருங்க"பெளர்ணமி நேரம் பாவை ஒருத்தி" பாட்டுக் கேளுங்க
இதுவரை சங்கத்தில் நான் கொடுத்த பதிவுகள்.

Software engineers' Dream Girl - 100% ஜொள்ளு பதிவு

எடுத்த எடுப்பிலேயே பில் கேர்ட்ஸ் மகள் என்று நினைத்துப் ஜொள்ளுப் புதிர் போட்டு மண் கவ்விய பதிவு.

பிந்திக் கிடைத்த தகவலின் படி கேள்வியே தப்பாம், நம்ம மங்களூர் அண்ணாச்சி சொன்னார். யாரோ ஒரு எடுபட்ட பயல் இது பில்கேட்ஸ் பெண்ணு என்று சொன்னாலும் சொன்னார். அதை உறுதிப்படுத்தாமலே போட்டுவிட்டேன். இது நடிகை Rachael Leigh Cook


I am a tamil, I can speak tamil ;-)

வெளிநாட்டில் வளரும் இந்தத் தமிழ்ப்பையன் தமிழ் பேசுவாராம், தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் குழைத்துப் பாடுகிறார்.பாடல்: பூபாளம் இசைக்குழுவின் தமிழ் ரெகே.


Computer programmer காதலன் எழுதும் கடிதமே...!

Computer programmer காதல் கடிதம் எழுதினா எப்படியிருக்கும், இப்படி இருக்குமா?
யாரோ எழுதியது, பிடித்ததால் பகிர்கின்றேன்.யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி

இந்தப் பதிவில் நம்மூர் காதல் வட்டாரங்களில் புழங்கும் சில கலைச் சொற்களின் அரும் பொருளைத் தரலாம் என்று முடிவு கட்டியிருக்கிறேன். சரி ஒவ்வொன்றாக நினைவில் நிற்பவையைச் சொல்கின்றேன் ;-)


என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......

வெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.பெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)


கலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்)

பல்குரல் கலைஞர்கள் மூர்த்தி கோபி இரட்டையர்கள், கட்டபொம்மன் நாடகத்தை நகைச்சுவை நடிகர்கள் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் நடித்துக் காட்டுகின்றார்கள்


இளைய தளபதியின் "குருவி" க்குப் போட்டியாக

மொக்கை சூப்பர் ஸ்டார் ரித்திஷ் குறித்த பதிவு


பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?

சரி இந்தப் பதிவில் எனக்குத் தெரிந்த பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்லும் வழிமுறைகளைப் பார்ப்போம்.பதிவர்கள் நடிக்கும் ரீமேக் படங்கள்

நம் அன்புக்குரிய பதிவர்கள் சிலர் படம் எடுத்தால் எப்படிப் பழைய படத்தலைப்புக்களைச் சுட்டு வைப்பார்கள் என்று சின்னக் கற்பனை.

14 comments:

ILA said...

பதின்ம வயச ஒரு முறை திரும்பி பார்க்க வெச்சிட்டீங்க. அட்லாஸா நீங்களிட்ட பதிவுகள் எல்லாமே அருமை. நன்றி! நன்றி!

கோபிநாத் said...

தல

கலக்கிட்டிங்க...வீடியோ..ஆடியோன்னுபோட்டு, டிப்ஸ் எல்லாம் கொடுத்து ஒவ்வொரு பதிவும் சூப்பர் ;))

கோபிநாத் said...

தல

ஏன் அந்த பெண்ணை பின்னாடி இருந்து அப்படி முறைச்சி பார்க்கிறிங்க !! ? ;))

இராம்/Raam said...

அதுக்குள்ளே நன்றியறிவிப்பு பதிவு போட்டுட்டிங்க... இன்னும் ரெண்டு நாளு இருக்கே... :))

உங்க பதிவுகள் அனைத்தும் அருமையா இருந்துச்சு...... இரண்டமாண்டு நிறைவு மாதத்தில் அட்லாஸ் சிங்கமா வந்த கலக்குனதுக்கு மிக்க நன்னி... :)

ஆயில்யன். said...

நல்ல பதிவுகள் இந்த மாதத்தில் அதுவும் ஆடியோ பதிவில் காமெடி மிக நன்றாக அமைந்திருந்தது

வாழ்த்துக்கள் :)

ஆமாம் இன்னும் இரண்டு நாட்கள் இருக்குல்ல அப்புறம் என்ன அவசரம்

ம்ம்ம் கண்டினியூ கண்டினியூ :)

கப்பி பய said...

கலக்கல்ஸ்!! நன்றி தல! :)

வெட்டிப்பயல் said...

கானா அண்ணா,
இந்த மாசம் உண்மையாலுமே ரொம்ப அருமையா போச்சு... பட்டையை கிளப்பனீங்க. எங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்தின உங்களுக்கு தான் நாங்க நன்றி சொல்லனும்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தல
அட்லாஸ் பதிவுகள் அத்தனையும் கலக்கல்ஸ் ஆப் கானா!
சந்தேகமே இல்ல! நீங்க அட்லாஸ் சிங்கம் இல்ல! அட்லாஸ் "வாலிபர்" தான்! வாழ்த்துக்கள்! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//யாரோ ஒரு எடுபட்ட பயல் இது பில்கேட்ஸ் பெண்ணு என்று சொன்னாலும் சொன்னார்//

யார் அந்த எடுபட்ட பயல்? :-)

பில்கேட்ஸ் பொண்ணா?
ச்சே...இந்த நேரம் பாத்து கோழி குருடான்னு முக்கியம் இல்ல, குழம்பு....அந்தப் பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது! :-)))

இனிமே றேடியோஸ்பதி, வீடியோஸ்பதி, மடத்துவாசல் பிள்ளையாரடி எல்லாத்துலயும் இந்த மாதிரி ஜொள்ளுப் பதிவு அப்பப்ப போட்டு கலைச் சேவை ஆத்தணும்-னு எங்க கானா அண்ணாச்சிக்கு உத்தரவிடுகிறேன்!

Boston Bala said...

பாலைவனச் சோல பாடலுக்கு சிறப்பு ஓ!

கைப்புள்ள said...

இந்த ஒரு மாதமும் ஆடியோ, வீடியோ, காமெடி பதிவுகள் எனக் கலக்கிய கானா அண்ணாத்தேக்கு ஒரு சிறப்பு 'ஓஓஓஓ'

நன்றி!!!

மதுரையம்பதி said...

கமெண்ட் போடல்லன்னாலும் பதிவுகளைப் படித்தேன். நன்றாக இருந்துச்சு.....நன்றி.

//ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குறும்புத்தனமான ஆசைகள், கனவுகள் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் நம்மில் பலர் அதை வெளிக்காட்டாது எமக்கு நாமே போலியான முகமூடி கொடுக்கின்றோம்//

இதென்னமோ மிகச்சரி. :)

கானா பிரபா said...

கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி

// கோபிநாத் said...
தல

ஏன் அந்த பெண்ணை பின்னாடி இருந்து அப்படி முறைச்சி பார்க்கிறிங்க !! ? ;))//

அது நீங்க தான் தல, மற்ற ஆள் தான் நானு ;-)

//இராம்/Raam said...
அதுக்குள்ளே நன்றியறிவிப்பு பதிவு போட்டுட்டிங்க... இன்னும் ரெண்டு நாளு இருக்கே... :))//

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, இன்னொரு வாய்ப்பில் சந்திக்கிறேன், இந்த வாய்ப்புக்கு நன்றி இராம்.

தேவ் | Dev said...

முதலில் நண்பர் கானா பிராபாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.. சொன்ன டைமுக்கு ஆஜராகி சங்கம் டைமை டோட்டல் காமெடி டைம் ஆக்கி கலக்கிட்டீங்க... இன்னும் உங்களை அப்போ அப்போ வீடியோ பதிவு போடச் சொல்லி தொந்தரவு பண்ணுவோம் அதை எல்லாம் இதே மாதிரி வந்து செஞ்சு கொடுக்கணும்ன்னு அன்பா மிரட்டிக்கிறேன்....