Thursday, November 16, 2006

கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ

100 பதிவுப் போட்டாச்சு.. படமெல்லாம் எடுத்தாச்சு.. எதித்து வந்த பார்த்தீபன், சரளாக்கா கட்டத்துரை குரூப்பை எல்லாம் ஓரம் கட்டியாச்சு... ப.ம.கன்னு ஒரு குரூப் அதைக் கூட அரசியல் ரீதியா சமாளிச்சாச்சு...

ஒரு மனுஷனுக்கு எவ்வளவு புகழ் வரணுமோ அதுக்கும் மேல வந்தாச்சு... கோடிக் கணக்குல்ல ரசிகர்கள் அதுக்கும் சில் கோடிகள் அதிகமான ரசிகைகள்.. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் எதோ மிஸ்ஸிங் ஆகுதோன்னு பீலிங்...

சங்கம் பில்டிங்கை பளிங்குல்ல கட்டி ஐரோப்பா ஸ்டைல் பாத் டப் கட்டி அதுல்ல குளிக்கலாமா....

ம்ம்ஹும் அது சரி பிடாது... காசினோ ராயல் படத்த தமிழ்ல்ல எடுக்கச் சொல்லி குழாய் கோர்ட் போட்டு அசினையும் திரிஷாவையும் சோடியாக்கி டூயட் பாடலாமா..... எதாவது செய்டா கைப்புள்ளன்னு கிரகம் தலக் காதுல்ல ஓதிகிட்டே இருக்க...


"நீ பாக்க காக்கா மாதிரி கருப்பா இருந்தாலும் ஓன் கொரலு குயில் மாதிரி ஸ்வீட்டா இருக்குன்னு முன்னொரு காலத்திலே அந்த பார்த்தி பையச் சொன்னது இப்போ எக்கோ எபெக்ட்ல்ல தலக் காதுல்ல மறுபடியும் ரிப்பீட்டாக ஆரம்பிச்சுருச்சு"

"எட்டணா இருந்தா எட்டூரு எம் பாட்டக் கேக்கும்...அட பத்தணா இருந்தா பத்தூரு என் பாட்டைப் பாடும்..." அப்படின்னு லைட்டா கொரலு விட ஆரம்பிச்சார்...

தல ஆஹா என்னமாப் பாடுறீங்கன்னு சங்கத்து இளைய தளபதி வெட்டி வெடுக்குன்னு எடுத்துக் கொடுக்க தலக்குப் பிடிச்சிருச்சு கிறுக்கு.

ராயல் ராமுக்கு போனைப் போட்டு பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் மருத ஹாஜி மூசாவில்ல இருந்து எடுத்தாரச் சொல்லு.. இனி நான் ஒரு சங்கீத வித்துவான்ன்னு சொல்லிட்டார்.

பாட்டுக்கு கொரலு முக்கியம் ட்ரெஸ் எல்லாம் எதுக்குன்னு சைட்ல்ல பம்மி நின்னு கேட்ட பாசக்கார பாண்டியைப் படக்கென்னு கோவமாப் பார்த்தார் தல..

"ட்ரெஸ் இல்லாம என்னிய அம்மணக்கட்டையாப் பாடச் சொல்லுறீயா நீ.. தெரிஞ்சிப் போச்சுறா எனக்கு தெரிஞ்சுப் போச்சு.. நான் ஒரு மேஜர் சுந்தர்ராஜ பாகவதரா ஆகறது ஓனக்குப் பிடிக்கல்ல எங்கே எல்லா பிள்ளைகளும் ஒன்னிய விட்டுட்டு என் பின்னால என் கொரலுக்கு மயங்கி வந்துருவாங்களோன்னு ஓனக்கு பயம்டா.. "

தல அது மேஜர் சுந்தர்ராஜ பாகவதர் இல்ல.. தியாகராஜ பாகவதர்... பவ்யமாய் வாசல் பக்கம் நின்ற நமது புலிக்குட்டி சிவா எடுத்துக் கொடுக்க...அவன் மீது டென்சன் ஆனார் தல்.

நான் என்ன பரீட்சைக்காப் போயிட்டு இருக்கேன்ய்ன்.. கரெக்ட் பண்ணுற.. ஒரு கலைஞன் பீலிங்க்ல்ல வார்த்தையை அப்படி இப்படி தான் சொல்லுவான்.. நீ தான் புரிஞ்சிக்கணும்...

அதே கோவத்தோடு இளைய தளபதி வெட்டியைத் தல முறைக்க..."தல நீங்க பாடலாம் தல,... நம்ம எளையராசா கூட உங்க மருதக்காரரு தானே அவர் அமைக்காத இசையா தல.. நீங்க நினைச்சா ஒரு லயனல் ரிச்சி, எரிக் கிளப்டன், ப்ங்க் பிளாயிட், எல்டன் ஜான், எல்விஸ் பிரிஸ்லி.. இவிங்க மாதிரி நீங்களும் வரலாம் தல"

"ஒரு பய பேர் கூட நம்மூர் காரன் மாதிரி இல்லையேடா.. அம்புட்டும் அசலூர் கார பேரா இல்ல இருக்கு என்று சந்தேகத்தோடு மறுபடியும் பாண்டியைப் பார்த்தார் தல..."

"அவ்ங்க எல்லாம் பாப் ஸ்டார்ங்க தல.."

" ஆகா.. இம்புட்டு நாளும் ஆப் வச்சிங்க.. நான் பாடப் போறது தெரிஞ்சது பாப் வைக்கப் போறீங்களா? விட மாட்டான்டா இந்தக் கைப்புள்ள"

"தல பாப்ங்க்றது ஒரு வகை பாட்டு தல... அதாவது.." என்று ஆரம்பித்த ராசுக்குட்டியைப் பார்த்து

"போது நிப்பாடிக்கா.. நீயும் அந்த விக்கிபீடியா குருப்ல்ல சிக்கிட்டியா.. அவிங்க தான் என்னக் கேள்வி கேட்டாலும் பதிவாப் போட்டு பல் இடுக்கு வரைக்கும் தகவல் சொல்லி நிரப்பி விட்டுருவாயங்க... எனக்கு அது வேணாம்.."

"அது இருக்கட்டும்.. ஒரு நல்ல வித்துவானுக்கு நல்ல ஆடை வேணும்.. அதை நம்ம ராயல் ராம் செஞ்சுருவான்... ஆங் வாகனம் வேணுமே" அப்படின்னு தல யோசிக்க..

தளபதி சிபியின் செல் போனில் கரகாட்டக்காரன் ரிங் டோன் அலறியது.

சிபி தலயைப் பாக்க.. தல சிபியை மொறைக்க...
தல சிபியை மொறைக்க..சிபி தலயைப் பாக்க..
சிபி தலயைப் பாக்க தல சிபியை மொறைக்க...
தல சிபியை மொறைக்க..சிபி தலயைப் பாக்க...

"இங்கேப் பார் இது டூ மச் ஆமா...கிரகம் புடிச்ச அந்தச் செல் போனை ஆப் பண்ணுப்பா இல்ல..." என தல எந்திரிச்சி நிக்க

"தல தல.. விவசாயி லைன்ல்ல இருக்காரு" என சிபி பதற...

"ஆரியம்... காரியம்.. வீரியம்ன்னு எதாவது வம்பு பிடிக்கப் போயிருப்பார்.. என்னான்னு கேளூ"

"தல சங்கம் நடத்துன போட்டியில்ல செயிச்சவங்க எல்லாருக்கும் கொடுக்கறதுக்குப் பரிசு வாங்கறதுக்கு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் போயிருக்காராமா.. அதுன்னால சங்கத்துக்கு ஒரு மூணு மாசம் லீவு சொல்லச் சொல்லுறார்"

தல லீவ் பத்தி யோசிக்கும் கேப்பில்

"தல விவசாயி ஊர்ல்ல இல்ல அவர் டிராக்டர் சும்மா தான் இருக்கும் வாகனமா அதையே வச்சுக்கலாமா.." பாண்டி பக்தி சிரத்தையாய் ஐடியா கொடுக்க

தல பாண்டியைக் கடிக்கும் பார்வை பார்க்கிறார்.

"வேணாம் வலிக்குது.. அழுதுருவேன்..ஆமா.. என்னிய நீ ரொம்பக் கேவலப் படுத்துற..."

தல மீண்டும் சிந்தனைக்குப் போகிறார்.. அப்படியே SWING IN THE RAIN பாடலை அலறலாய் பாடுகிறார்... பாட்டை நிறுத்திட்டு

"நான் முடிவு பண்ணிட்டேன்.. இந்த சங்கீத சீசன்ல்ல நான் கச்சேரி பண்ணப் போறேன்... எனக்குள்ளே ஒளிஞ்சு குப்புற படுத்து குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்க அந்த இசை ஜீவனை தட்டி எழுப்பி எதாவது சபா மேடையிலே உக்கார வச்சு பாட வைக்கத் தான் போறேன்..."

"தல ராகம் தாளம் பல்லவி இதெல்லாம் தெரியாம எப்படி தல நீங்க?" என்று பாண்டி மிகப் பணிவாய் கேட்க..

"தல அதெல்லாம் நம்ம ஊர்ல்ல தான் இருக்கு... நானும் தளபதியும் ஓங்களைக் கூட்டிட்டு போய ராகத்துல்ல 4 ஷோ பல்லவியில்ல 4 ஷோ... அனுபல்லவியில 4 ஷோன்னு பாக்க வச்சு தெரிய வச்சிடுறோம் தல"
என்று ராசுக்குட்டி உதவிக்கு வர....தல பெருமிதத்தில் ராசுக்குட்டியைக் கட்டிபிடித்து கதறுகிறார்.

தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க...

"போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.." பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.

பி.கு: தலயின் கச்சேரியில் விளம்பரம் செய்ய விரும்புவோர்கள் அணுகவும்
தேவ் - சென்னைக் கச்சேரி.

45 comments:

பொன்ஸ்~~Poorna said...

என்னாது இளைய தளபதியா?!! நீங்களே பேர் வச்சிகிட்டா, வுட்ருவோமா! எங்க இளைய தளபதி ஸ்டைலுக்கு முன்னாடி உங்க தளபதி அம்பேல் தெரியும்ல? வெறும் தளபதின்னு சொல்லுங்க,இல்லைன்னா, சிபின்னு சொல்லுங்க, நக்கல் மன்னன்னு சொல்லுங்க. இந்த இளைய தளபதி பேரை மட்டும் சொல்ல வேணாம் .. ஆமாம் சொல்லிடேன் !! :)

ILA(a)இளா said...

செய்தி:
தல கச்சேரி பண்ணி காணாமல் போனால் கண்டுபுடிக்க "SWING IN THE RAIN" என்ற இனிமையான தமிழ்ப்பாடலை சங்கத்தின் குடும்ப(?!) பாடலாக அறிவிக்கப்படுகிறது.

ILA(a)இளா said...

//இளைய தளபதி //
இந்தப் பிரச்சினையை முடிச்சு வெக்க சே சே முடித்து வைக்க தல உடனடியாக வந்து பஞ்சாயத்து பண்ணவும்

பொன்ஸ்~~Poorna said...

//தல கச்சேரி பண்ணி காணாமல் போனால் கண்டுபுடிக்க "SWING IN THE RAIN" என்ற இனிமையான தமிழ்ப்பாடலை சங்கத்தின் குடும்ப(?!) பாடலாக அறிவிக்கப்படுகிறது. //
தமிழ்ச் சங்கம் வச்சிகிட்டு இப்படி ஆங்கிலப் பாடலைப் போட்டால் நியாயமா? "போடா போடா புண்ணாக்கு" என்று தலையைப் பார்த்து எல்லாரும் பாடுவதையே சங்கப் பாடலாக, நான் பரிந்துரைக்கிறேன் ;)

ILA(a)இளா said...

"படகு, யானை, நாய்க்குட்டி,பூனை" அக்காவும் , நமது சங்கத்தை ரம்பம் போட்டு ஆரம்பித்து வைத்த பொன்ஸ் வேண்டுகோள்/மிரட்டல்/ஆணை'கிணங்க "போடா போடா புண்ணாக்கு" பாடல் சங்கத்தின் தமிழ் பாடலாக அறிவிக்கப்படுகிறது.

நிலா said...

என்னடா ரொம்ப நாளா ஆளையே காணும்னு பார்த்தேன்... பதிவு நல்லாருக்கு... முக்கியமா அந்த மேஜர் சுந்தரராஜ பாகவதர் நல்ல கண்டுபிடிப்பு

அடிக்கடி எழுதி எங்களையெல்லாம் சிரிக்க வைங்க, தேவ். அப்பத்தானே நாங்களெல்லாம் வலைபதிவு பக்கம் வருவோம்!

//தலயின் கச்சேரியில் விளம்பரம் செய்ய விரும்புவோர்கள் அணுகவும்
தேவ் - சென்னைக் கச்சேரி.//

பாருங்க... கிரேஸி ஐடியாஸுக்குன்னு ஒரு போட்டி அறிவிச்ச உடனேயே இந்த மாதிரி கிரேஸி ஐடியாவைக் கொட்றீங்களே :-)))

ILA(a)இளா said...

இருப்பினும் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நமது தல'க்கு குடும்பப்பாடலாம் ஆங்கில பாடலாக" Swing in the Rain" அறிவிக்கப்படுகிறது.

இராம் said...

இப்போதைக்கு உள்ளேன் ஐயா!!!!

(ஆ மெலெ பர்த்தினீ)

(சங்கத்திலே பின்னூட்டம்கூட போட இயலா அள்விற்கு எனக்கு வேலையை அளித்த என்னுடைய நிறுவனத்திற்கு கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.)

:((((((

கைப்புள்ள said...

ஏம்ப்பா தேவ்!
ஐ.நா. பொதுசபையில புரோகிராமு பண்ண நம்ம புலிக்குட்டி ஏற்பாடு பண்ணதைப் பத்தி ஒரு சின்ன மூச்சு கூட விடலை?

Anonymous said...

//"போது நிப்பாடிக்கா.. நீயும் அந்த விக்கிபீடியா குருப்ல்ல சிக்கிட்டியா.. அவிங்க தான் என்னக் கேள்வி கேட்டாலும் பதிவாப் போட்டு பல் இடுக்கு வரைக்கும் தகவல் சொல்லி நிரப்பி விட்டுருவாயங்க... எனக்கு அது வேணாம்.."//

இதுக்கு விக்கி பசங்க என்ன சொல்ல போறாங்களோ?

ILA(a)இளா said...

//ஆ மெலெ பர்த்தினீ//
தலைக்குதான் ஹிந்தி தெரியாது இல்லே அப்புறம் இப்படி திட்டினா மட்டும் உறைச்சுருமா?

இராம் said...

//ஆ மெலெ பர்த்தினீ)//

வந்துட்டோம்லே... அலுவல்கள் அதிகம் இருந்தாலும் சங்கப்பணியே முக்கிய பணியே என கருதி இதோ வந்து விட்டேன்!!!!

இராம் said...

//ராயல் ராமுக்கு போனைப் போட்டு பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் மருத ஹாஜி மூசாவில்ல இருந்து எடுத்தாரச் சொல்லு.. இனி நான் ஒரு சங்கீத வித்துவான்ன்னு சொல்லிட்டார்.//

ரைட்டேய்!!! தல'க்கி பிடிச்சே கலரான மஞ்சள் கல்ருலே ஜிகினா ஒட்டின சொக்கா ஒன்னும், கறும்பச்சைலே எட்டு மொழ வேஷ்டி வாங்கிரவேண்டியதுதான்....!!
;)

இராம் said...

//ஒரு மனுஷனுக்கு எவ்வளவு புகழ் வரணுமோ அதுக்கும் மேல வந்தாச்சு... கோடிக் கணக்குல்ல ரசிகர்கள் அதுக்கும் சில கோடிகள் அதிகமான ரசிகைகள்.. //

அதிலே யாரும் கேடிகள் இல்லேயே நம்மளை தவிர???? :-))))))

ILA(a)இளா said...

//"ஆரியம்... காரியம்.. வீரியம்ன்னு எதாவது வம்பு பிடிக்கப் போயிருப்பார்.. என்னான்னு கேளூ"//

கொஞ்சம் தலைமுறையைப் பத்தி எழுதலாம்னா, புடிக்காதே, எப்பவும் ஒரே நினைப்புதானா?
நினைப்புதான் பொழைப்பை கெடுக்குமாம்

ஜொள்ளுப்பாண்டி said...

தேவூ கச்சேரி கெளப்பி எடுக்குது !! தல களை கட்டுதுங்கோ !! :))

ஜொள்ளுப்பாண்டி said...

//ட்ரெஸ் இல்லாம என்னிய அம்மணக்கட்டையாப் பாடச் சொல்லுறீயா நீ.. தெரிஞ்சிப் போச்சுறா எனக்கு தெரிஞ்சுப் போச்சு.. நான் ஒரு மேஜர் சுந்தர்ராஜ பாகவதரா ஆகறது ஓனக்குப் பிடிக்கல்ல எங்கே எல்லா பிள்ளைகளும் ஒன்னிய விட்டுட்டு என் பின்னால என் கொரலுக்கு மயங்கி வந்துருவாங்களோன்னு ஓனக்கு பயம்டா.. "//

தல தல இப்படி என்னைய போயி சந்தேகப்படறீங்களே தல ஞாயமா ?? ;)))

ஜொள்ளுப்பாண்டி said...

//SWING IN THE RAIN பாடலை அலறலாய் பாடுகிறார்...//

வாவ் சங்கப்பாடலை தல பாடுறதை கேட்குறப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு :))

இராம் said...

//பி.கு: தலயின் கச்சேரியில் விளம்பரம் செய்ய விரும்புவோர்கள் அணுகவும்
தேவ் - சென்னைக் கச்சேரி. //

போர்வாள் அது சரி ! ஆனா கடைசிவரைக்கும் தல கச்சேரி போறதுக்கு வண்டி என்னான்னே சொல்லவே இல்லியே பார்த்திங்களா???

இல்லே இப்பவும் பொன்ஸ்க்கா அனுப்புன அதே நாய் வண்டிதானா........ ;)))

நாமக்கல் சிபி said...

தலை! எனக்கென்னவோ யாராரோ வெச்சிருந்த அந்த கரகாட்டக்காரன் வண்டிதான் பெஸ்டுன்னு தோணுது!

ஆன்லைன் ஆவிகள் said...

வண்டியெல்லாம் எதுக்கு?

நம்ம முதுகுல ஏறி உக்காந்துக்க தலை!
எந்த சபாவுக்கு போவோணும்னு மட்டும் சொல்லு!

பா.க.ச தொண்டன் said...

அட! நம்ம கடை வாடகை சைக்கிள் எதுக்கு இருக்குதுங்கறேன்?

பார்த்திபன் said...

ஏன் கூட டவுன் பஸ்ல வர்றாது.

டிக்கெட்டெல்லாம் எடுக்க வேண்டியது இல்லை. நாமெல்லாம் ஃபிளைட்லயே டிக்கெட் எடுத்தது கிடையாது.

முத்துக் கருப்பன் said...

சங்கத்து அசெட் வெஹிக்கிள் டிரை சைக்கிள் எதுக்கு இருக்கு? அதுல போவோம் தலை!

நமக்கு கூட ஒரு ஸ்கூட்டர் வாங்கணும். பார்ட்டி நிறைய விலை சொல்றான். நீங்க வந்து கொஞ்சம் மத்தியஸ்தம் பண்ணுங்க தலை!

நாகை சிவா said...

//ஏம்ப்பா தேவ்!
ஐ.நா. பொதுசபையில புரோகிராமு பண்ண நம்ம புலிக்குட்டி ஏற்பாடு பண்ணதைப் பத்தி ஒரு சின்ன மூச்சு கூட விடலை? //

தல, உன் திறமைக்கு ஐ.நா. சபை எல்லாம் ஒரு மேட்டரா? செவ்வாய் ல ஒரு கச்சேரி வைக்குறோம்.....

அது தான் உன் திறமைக்கு அழகு

நாகை சிவா said...

//சங்கம் பில்டிங்கை பளிங்குல்ல கட்டி ஐரோப்பா ஸ்டைல் பாத் டப் கட்டி அதுல்ல குளிக்கலாமா....//

இது பாருடா. பில்டப் கொடுக்கலாம், அதுக்கு இப்படியா குடுக்குறது.....

இலவசக்கொத்தனார் said...

//தமிழ்ச் சங்கம் வச்சிகிட்டு இப்படி ஆங்கிலப் பாடலைப் போட்டால் நியாயமா? "போடா போடா புண்ணாக்கு" என்று தலையைப் பார்த்து எல்லாரும் பாடுவதையே சங்கப் பாடலாக, நான் பரிந்துரைக்கிறேன் ;)//

இவர்கள் சங்கத்தில் நுழையும் பொழுது தல பாடிய "யானை யானை, பட்டிகாட்டில் யானை கூட பாத்ததுமில்ல" என்ற அருமையான பாடலை இருட்டிப்பு செய்வதற்காகவே இந்த பரிந்துரை என்பது நன்றாகவே தெரிகிறது.

இதற்கு விவசாயி உடன்பாட்டு பாடுவது ஏன்? எதாவது சம்திங் சம்திங் மேட்டரா?

இலவசக்கொத்தனார் said...

//நீயும் அந்த விக்கிபீடியா குருப்ல்ல சிக்கிட்டியா..//

விக்கிபீடியா வந்து இங்கிலிபீசு. இந்த பொடியங்களுக்கு என்ன தெரியும்? அதான் விக்கி பசங்கன்னு சரியா சொல்லுங்க தல.

சரி சொன்னதுதான் சொன்னீங்க, கொஞ்சம் சுட்டி கிட்டி குடுத்து ஒரு இலவச விளம்பரம் தரலாமில்ல. எல்லாம் ஒரு நல்ல காரியத்துக்காகத்தானே. :)

தேவ் | Dev said...

கொத்ஸ் உங்க ஆசையை நிறைவேத்தியாச்சு விக்கிபசங்களுக்கு லிங்க் கொடுத்தாச்சு.. அப்படியே எங்க தல இசை பயிற்சி எடுத்துக்குற மாதிரி ராகம் பத்தி உங்க விக்கியிலெ ஒரு பதிவுப் போட்டுருங்க... வந்து படிச்சிட்டு ஒரு கச்சேரி வச்சுருவோம்..

தேவ் | Dev said...

பாஸ்டன் பாலாவின் பின்னூட்டம் பிரசுரிக்கப் பட்டும் இங்கே தெரிய வில்லை...

Hillarious:)))

அதனால் அதனை மறுபதிப்பாய் வெளியிடுகிறோம்

Anonymous said...

//நம்ம முதுகுல ஏறி உக்காந்துக்க தலை!
//

ஆவி அண்ணே! பிரச்சினை பண்ணாதீங்க!

கைப்புள்ளையை நான்தான் தூக்கிட்டுப் போவேன்!

கைப்ஸ் நம்ம ஆளு! அகாங்க்!

Anonymous said...

dev neenga vadivel rasigara;) ithellam ethavathu director kitta sollunga mathavangalum rasikalame :) rasigai

நாமக்கல் சிபி said...

//சங்கம் பில்டிங்கை பளிங்குல்ல கட்டி ஐரோப்பா ஸ்டைல் பாத் டப் கட்டி அதுல்ல குளிக்கலாமா....//
தல எப்படியும் குளிக்க போறதில்லை.. அப்பறம் எதுக்கு இந்த ரோசனை :-)

நாமக்கல் சிபி said...

//தல, உன் திறமைக்கு ஐ.நா. சபை எல்லாம் ஒரு மேட்டரா? செவ்வாய் ல ஒரு கச்சேரி வைக்குறோம்.....

அது தான் உன் திறமைக்கு அழகு //

செவ்வாய்ல மட்டும் இல்லை...
வாரத்துல ஏழு நாளும் எங்க தலை கச்சேரி நடக்கும்.. இதை யாரும் தடுக்க முடியாது ;)

ஆன்லைன் ஆவிகள் said...

//ஆவி அண்ணே! பிரச்சினை பண்ணாதீங்க!
//

அம்மணி நமக்குள்ள சண்டை வேண்டாம்!

தலையோட தலையை மட்டும் எடுத்துகிட்டு போறேன்!

உடம்பை நீ கொண்டாந்துடுவியாம். சரியா!

இலவசக்கொத்தனார் said...

தேவு தம்பி,

ஒரு பின்னூட்டத்தில் சொன்னதைச் செய்து விட்டாய், நன்றி. ஆனால் மற்றும் ஒரு பின்னூட்டம் வந்ததே, அதனை இருட்டிப்பு செய்வது ஏன்?

நீயும் இந்த சதியில் உடந்தையாய் இருக்க மாட்டாய் என எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அந்த கயவர்கள் (அந்த விவகாரமானவங்களும் இந்த விவாவும்தாங்க) என்ன செய்து உன் கைகளைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள். பொறுத்தது போதும் தேவு, பொங்கியதும் அடுப்பை ஆஃப் செய்து விடு. (அட சட், இங்க வீட்டில் குடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் தப்பா பதிவுல வந்திருச்சி.) உனக்கு சரியா சொல்ல வேண்டியது பொறுத்தது போதும் தேவு, பொங்கி எழு.

மனதின் ஓசை said...

ம்ம்ம்.. கச்சேரி களை கட்டுது போல..நடக்கட்டும்..நடக்கட்டும்..

ஆமா.. இது என்ன ..தலயோட தல, உடம்பு, கை, கால்னு ஏலம் போட்டுகிட்டு இருக்கங்க.. சங்கத்து ஆளுங்களோட மறைமுக ஏற்பாடுதானா அது?

தேவ் | Dev said...

//இவர்கள் சங்கத்தில் நுழையும் பொழுது தல பாடிய "யானை யானை, பட்டிகாட்டில் யானை கூட பாத்ததுமில்ல" என்ற அருமையான பாடலை இருட்டிப்பு செய்வதற்காகவே இந்த பரிந்துரை என்பது நன்றாகவே தெரிகிறது.

இதற்கு விவசாயி உடன்பாட்டு பாடுவது ஏன்? எதாவது சம்திங் சம்திங் மேட்டரா?//

இளா வாய்யா வந்து பதில் சொல்லும்ய்யா

ஒரு சிபிஐ டைரி குறிப்பு said...

//இதற்கு விவசாயி உடன்பாட்டு பாடுவது ஏன்? எதாவது சம்திங் சம்திங் மேட்டரா//

சம்திங் சம்திங் நடந்திருப்பதற்குண்டான சந்தகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ள்ன!

யானைப் பாகி said...

யானைப் பாடலை புறக்கணித்தமையை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

நாகை சிவா said...

// உனக்கு சரியா சொல்ல வேண்டியது பொறுத்தது போதும் தேவு, பொங்கி எழு. //

தேவ், அவரு உசுப்பேத்துறார் என்று நீ பாட்டுக்கு கன்னா பின்னானு பொங்கிடாது. அப்புறம் வைத்திய செலவுக்கு நீ நம்ம விவ் கிட்ட தான் போய் நிக்கனும் சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//செவ்வாய்ல மட்டும் இல்லை...
வாரத்துல ஏழு நாளும் எங்க தலை கச்சேரி நடக்கும்.. இதை யாரும் தடுக்க முடியாது ;) //

யோவ் வெட்டி, செவ்வாய் கிரகத்தை சொன்னேன்ய்யா. இருக்குற எல்லா கிரகத்திலும் போய் தான் கச்சேரி பண்ணனும். இங்கன பண்ணினா ஜீவராசிகள் எல்லாம் போய் சேர்ந்து விடாதா, அதனால தான் ....

பார்த்திபன் said...

//ஆமா.. இது என்ன ..தலயோட தல, உடம்பு, கை, கால்னு ஏலம் போட்டுகிட்டு இருக்கங்க.. சங்கத்து ஆளுங்களோட மறைமுக ஏற்பாடுதானா அது?
//

பின்னே! தலையைத் தீர்த்துட்டா அடுத்த தலையா யாராவது ஆகிடலாம்ல!

ILA(a)இளா said...

//இதற்கு விவசாயி உடன்பாட்டு பாடுவது ஏன்? எதாவது சம்திங் சம்திங் மேட்டரா//
woodenபாட்டும் இல்லே, nylon பாட்டும் இல்லே, யானைன்னா மூணு கால் இருக்குமே அதானே?

நாமக்கல் சிபி said...

//யோவ் வெட்டி, செவ்வாய் கிரகத்தை சொன்னேன்ய்யா. இருக்குற எல்லா கிரகத்திலும் போய் தான் கச்சேரி பண்ணனும். இங்கன பண்ணினா ஜீவராசிகள் எல்லாம் போய் சேர்ந்து விடாதா, அதனால தான் ....//

எங்க தலை மேல உனக்கு ஏன் அவ்வளவு பொறாமை?

அவர் பூமில பாடக்கூடாதா?

நாங்க அவரை சூரியனுக்கும் கூட்டிட்டு போவோம் :-)

(சூரியம் எஃப்-எம் க்கு இல்லப்பா?)