Wednesday, May 31, 2006

முக்கிய அறிக்கை - நாகை சிவா

நம் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடரை இழந்த சேதியை மூன்று நாள் தாமதமாக ஜொள்ளு பாண்டியின் மூலம் அறிந்த நம் தல கைப்புள்ளளை மன வேதனையும் ஆத்திரமும் அடைந்தார்.

நம் மகளிரணி தலைவி புதகரத்தில் இருந்து அனுப்பிய புது கைப்பேசியின் மூலம் ஜமைக்காவில் இருக்கும் ராகுல் டராவிட்டை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியாத காரணத்தால் மனம் கொதிப்பு அடைந்து உள்ளார்.

தான் உதைப்பந்து விளையாட சென்ற காரணத்தால் தான் இந்திய கிரிக்கெட் அணி தகுந்த ஆலோசனை கிடைக்காமல் தோல்வி அடைந்து இருக்குகலாம் என்ற குற்ற உணர்ச்சியில், உதைப்பந்தை உதறி விட்டு ஜமைக்கா புறப்பட தயார் ஆன அவரை தேவ் சமாதனப்படுத்தி நம் சங்க விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து உள்ளார்.

இதுகுறித்து முடிவு எடுக்க, சங்கத்தின் செயல்வீரர்கள் அனைவரையும் இன்று இரவு 11.11மணிக்கு நடைப்பெரும் அவரச கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிகிறோம்.

இக்கூட்டத்தில்,
நம் தல கைப்புள்ள உதைப்பந்தில் தொடர்ந்து உதை வாங்குவதா, இல்லை இந்திய கிரிக்கெட் அணியின் பெருமையை நிலைநிறுத்த ஜமைக்காவுக்கு உடனடியாக புறப்படுவதா? என கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.



பின் குறிப்பு: ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நம் சங்க பத்திரிக்கையின் வாயிலாக சங்கத்தின் சிங்கங்களுக்கு அறிவிக்கபடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, May 30, 2006

வரு.வா.சங்கம் - 25வது பதிவு


சங்கத்தின் இனிய செல்வங்களே

இது சங்கத்தின் சார்பாக வெளிவரும் 25வது பதிவு.

இந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும் இனிய நன்றி....

இது ஒரு ஆட்டோகிராப் பதிவு

ஆமா சங்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்களோ அதை வந்துப் பின்னூட்டமா எழுதிட்டுப் போங்க

வாழ்த்துங்க.. வைங்க... எந்த மொழியும் பயன்படுத்தப் படலாம்...

தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும்

வரு.வா.ச

கேமரூன் காட்டானும் கண்டமும்...


ஒரு இளைஞன்னா ஒரு இளைஞி கையைப் பிடிச்சு இழுக்கத் தான் செய்வான்" என முழங்கி, வாலிபர்களின் உரிமைக்காக அன்றே குரல் கொடுத்து (பின்னர் கந்தல் துணியாய் கிழித்து காயப் போடப்பட்ட) தல கைப்புள்ள, கால் பந்து(எக்ஸ்கீஸ் மீ...உதை பந்து) விளையாட செருமேனி சென்றிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் வ.வா.ச. வாஷிங்டன் பகுதி கொ.ப.செவும் புதரகத்தின் பாதுகாவலருமான ஜார்ஜ் புதருடன் பேசி கைப்பு பங்குபெறும் ஆட்டங்களின் பிரத்யேக ஒளிபரப்பு உரிமையை ஸ்கை போர்ட்ஸிடமிருந்து சங்கத்தின் தொலைக்காட்சி சேனலான 'ஆப்பு டிவி'க்கு மாற்றம் செய்ய ஆற்றலரசி அக்கா பொன்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும் நாம் அறியாததல்ல. தலயின் மீது கொண்டிருக்கும் அபிமானத்தின் காரணமாக 'புதர்' இதற்கு உடனுக்குடன் இசைவு தெரிவித்து விட்டதாகவும், அத்துடன் உதைபந்தாட்ட ஓளிபரப்பு அனைத்து நாடுகளிலும் இன்னும் தெளிவாக தெரிவதற்காக, கூடுதலாக நான்கு செயற்கைகோள்களை போர்க்கால அடிப்படையில் ஏவ நாஸா (NASA) விஞ்ஞானிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் சங்கத்து சிங்கங்கள் தேவ்,பாண்டி,சுடான் சிவா ஆகியோர் கேமரூன் நாட்டு காட்டான் ஒருவனை தல மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகக் குமிறியதும், அதன் எதிரொலியாக அவன் தலயை ஏகவசனத்தில் புரியாத மொழியில் திட்டியதும், முன்னரே ஒரு முறை இணைய ஜோசியரும் தல ஊர்க்காரவுகளுமான தருமி "உனக்கு காலுக்கு கீழே கண்டம்" என எச்சரித்ததும் தலயை சற்றே பீதி அடைய செய்துள்ளது. எனினும் பீதிக்கு பீப்பீ ஊதிவிட்டு, தன் "வருங்கால" சந்ததியினரைப் பாதுகாக்கும் எண்ணத்தில் புதிய கெட்டப்பில் உதைபந்தாட்ட பயிற்சிக்கு 'தல' கிளம்பிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படம்.


அச்சமயம் நமது லத்தீன் அமெரிக்க வட்ட கொ.ப.செவும் உதைபந்தாட்ட சிறப்பு நிருபர்களில் ஒருவருமான பெருசு தலயைத் தொடர்பு கொண்டு கேட்டது.

பெருசு : ஏன் தல? கேமரூன் காட்டானுக்குப் பயந்து தான் நீ இந்த புது கெட்டப்பில் ஆட்டத்துக்குப் போறதா பேசிக்கிறாங்களே? அது உண்மையா?

தல : ஹா...ஹஹ்ஹா! பயமா? எங்களுக்கா? பீரங்கி குண்டு பெடரியில வந்து விழுந்தாலும் பெசகாம் பிரேடு(Parade) நடத்தற பரம்பரைய்யா நாங்க...யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்ட?

பெருசு : நான் கேக்கலை தல. அப்படி ஊருக்குள்ளாற பேசிக்கிறாங்க. அத தான் நா கேட்டேன். மன்னிச்சிக்க தல.

தல : சரி...சரி...நம்ம பெருமையை ஊர்க்காரனுவ தெரிஞ்சிக்கிற மாதிரி எதாச்சும் கேளு

பெருசு : சரி தல! இந்த சொக்காயைப் போட்டுக்குட்டு உதை வாங்க...சாரி...உதைபந்தாட போறியே...எதனா வேண்டுதலா?

தல : ஆன்...இது கேள்வி. சொல்றேன்...தமிலெழுத்துல கால், கொம்பு எல்லாம் சரியா போட்டு தப்பில்லாம திருத்தமா எளுதிக்க. நமக்கு எலக்கணம் ரெம்ப முக்கியம். காலுக்கு மத்தியிலே லைட்டு போட்டு வெளாடலாம்...ஆனா ஃபைட்டு போட்டு வெளாடப்படாது...அதுக்காண்டி எடுத்த முன்னெச்சரிக்கை தான் இதுன்னு கொட்டை எழுத்துல கொரியர் ஃபாண்டுல போடு.

ஆயினும் சங்கத்துக் கொள்கைகளில் மிகத் தெளிவாக இருக்கும் பெருசு கேட்ட அடுத்த சில கோக்குமாக்கான கேள்விகளையும் அதற்கு தல தன் பாணியில் அளித்த பதில்களையும் மேலும் பல சுவையான செய்திகளையும் தெரிந்து கொள்ள சங்கத்து நாளேடான "டாக்டர் நமது கைப்புள்ள"யைப் படியுங்கள்.

((தத்துவம் எண்- 1: ஆப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்))

Monday, May 29, 2006

ஆற்றலரசிக்குப் பத்துக் கேள்விகள்

வழக்கம் போல் சங்கத்துக்கு வந்த தபால் பையை நம்ம பாண்டியும் நானும் பாத்துகிட்டு இருந்தோம். துபாய் பக்கமா இருந்து நம்ம துபாய் ராசா ஒரு மூணு கிலோ பேரீச்சம் பழமும் கூடவே கிலோ கணக்குல்ல பாசமும் அனுப்பியிருந்தார். பிரிச்சுச் சாப்பிட்டோம் நல்லாயிருந்துச்சு... பேரீச்சம் பழத்தைத் தான்ய்யா சாப்பிட்டோம்

ச்சே விஷயத்துக்கு வர்ரோம்...

நமது கைப்புள்ள இதழ் மாதிரி புதரகத்துல்ல நமது புதர் ன்னு ஒரு பேப்பர் வருதாம் அந்தப் பத்திரிக்கையிலிருந்து பொன்ஸ் அக்காவுக்கு ஒரு லெட்டர் வந்து இருந்துச்சு.

வரு,வா.சங்கம் பெரும் புள்ளிங்க அம்புட்டுப் பேர்க்கும் வர்ற லெட்டரைப் பிரிச்சுப் படிச்சு அவங்கிளுக்குப் பதில் போடுறது அம்புட்டும் இந்தத் தொண்டர்கள் வேலைத் தானே... லெட்டரைப் பிரிச்சா.. அக்காவோட அரசியல் எதிரி யாரோ எழுதியிப்பான்(ள்) போல இருந்துச்சு..

அக்காவுக்குப் போன் போட்டா அக்கா சோறு வடிக்காம பர்கர் தின்ன கதையை வெட்டியாப் பேசி போன் பில்லை ஏத்தி விட்டிருச்சு...

அப்புறமா நாங்கப் பதட்டமா லெட்டர் மேட்டரை எடுத்து விட்டு இதுக்கு என்னப் பதில் சொல்லுரதுன்னு கேட்டோம்...

அக்கா விவரத்தை அசால்ட்டாக் கேட்டுட்டு இந்தப் பிஸ்கொத்து கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்.. என் பேன்ஸ் பதில் சொல்லுவாயங்கன்னு நச்ன்னு போனைக் கீழே வச்சுட்டாயங்க...

அக்கா பேன்ஸ்ன்னு சொன்னது தலயிலே இருக்குமே அந்த மேட்டரா இல்ல தலக்கு எல்லாமே அந்த மேட்டரான்னு நானும் பாண்டியும் பாயைப் பிராண்டி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அந்தக் கேள்விகளை அப்படியே சங்கப் பலகையிலே ஒட்டுறோம்ய்யா.. அக்காவோட பேன்ஸ்க்குச் சமர்ப்பணம்.

நமது புதர் கேட்கும் பத்து கேள்விகள்

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்?
சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு... இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?

4.புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கியப் பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்புப் பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச... இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது... இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான...உயிரான... கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று 'வருத்தப்படுவதாய்' பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

அக்கா ஆற்றலரசியே பதில் சொல்லுங்கள்....

அக்கா இந்தக் கேள்வியைக் கேட்டவனைத் தூக்கிப் போட்டு துவம்சம் பண்ணிடுறோம்ன்னு நானும் பாண்டியும் பிளட் பாயிலாகிக் கேட்டப்போ

தம்பிகளா.. நீங்கப் பிளட் பாயிலாகதீங்க... போய ஆளுக்கொரு ஆப் பாயில் அடிச்சுட்டு உங்க வேலையைப் பாருங்க.. இந்தக் கேள்விகளுக்கு என் ரத்ததின் ரத்தங்களும் உடன்பிறப்புக்களும் பதில் சொல்லுவாயங்கன்னு கூலாச் சொல்லிட்டாங்கப்பூ

Saturday, May 27, 2006

உதை பந்து!


உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள ஜெர்மனி சென்றுள்ள கைப்புவின் முதல் பேட்டி:
(சற்று முன்புதான் தல ஒரு பயிற்சி ஆட்டத்தில் வழக்கம் போல பலரை பந்தாடி விட்டு களைப்புடன் வந்து அமர்ந்தார்).

பேட்டி இதோ:

நிருபர்: எப்படி இருக்குங்க கால்பந்தாட்டம்

கைப்பு: மொதல்ல பேர மாத்துய்யா, உதை பந்துன்னு பேர் வை. உதைச்சுதானே ஆடுறாங்க அப்புறம் என்ன?

நிருபர்: எவ்வளவோ விளையாட்டு விளையாடி இருப்பீங்க இந்த விளையாட்டு உலகம் முழுசும் பிரபலமா இருக்கு, நீங்களும் சேர்ந்ததனால இன்னும் பரபரப்பாயிருச்சு.. அதனால்...

கைப்பு:(குறுக்கிட்டு) என்னைய்யா விளையாட்டு இது, இங்கிட்டும் அங்கிட்டும் ஓட ஓட ஒரே பந்தை உதைச்சுகிட்டு, சே. எல்லாருக்கும் ஒண்ணொண்ணு குடுத்துறலாமில்ல. சின்னபுள்ளத்தனமா.

நிருபர்: ரொனால்டோ, பெக்ஹாம், ரூனே எல்லாம் உங்களுக்கு பயந்துக்கிட்டு ஊர விட்டு ஓடிட்டாங்கன்னு பேசிக்கிறாங்களே, அது உண்மையா?

கைப்பு: அது உண்மைதான். நான் விளையாட்ட விட்டு போக என்கிட்ட கெஞ்சினாங்க . நாந்தான் அவுங்களையெல்லாம் சமாதானபடுத்தி கூட்டி வந்தேன். பின்னாடி சங்கத்துல சேர்த்துகிறதாவும் வாக்கு கொடுத்துட்டேன். இருந்தாலும் போட்டின்னு வந்துட்டா கைப்பு சிங்கம் மாதிரி குதிச்சிருவானுல. இந்த போட்டிக்கு அப்புறம் சங்கத்துல கேட்டு உதை பந்தாட்டத்திலிருந்து VRS வாங்கிரலாம்னு இருக்கேன். நமக்கு வேற வேலை இருக்குள்ள...

நிருபர்: இது வரைக்கும் நீங்க ஒரு கோல் கூட போடலையாமே?

கைப்பு: நான் கஷ்டப்பட்டு காலால பந்த உதைச்சுகிட்டே முன்னாடி போறேன் ஒரு லூசுப்பையன் கால குறுக்கால உடுறான், விட்டேன் பாரு ஒரு அறை, ஹாஹா அப்புறம் வருவான பக்கத்துல. யாருகிட்ட இதெல்லாம் நடக்கும். அப்புறமா ஒருத்தன் இடுப்புல இடிக்கிறான் ஒரே உதை..

நிருபர்: பந்தையா?

கைப்பு: அவனத்தான். பின்னே விட்டுறுவோமா? அது கூட பரவாயில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி அந்த கூடையில போட்டா..

நிருபர்: என்னாது கூடையா? அது கோல் போஸ்ட்டுங்க

கைப்பு: எனக்கு தெரியாதா, உனக்கு தெரியுமான்னு டெஸ்ட்டு பண்ணேன்.(என்னா வில்லத்தனம்). எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி கோல் போஸ்ட்ல உதைச்சா பிக்காளி ஒருத்தன் கையால புடிக்கிறான், இருக்கட்டும்னு விட்டுட்டேன். அது யாரோ ஒருத்தன் நம்மல பார்த்து பிகுலு ஊதிட்டே இருக்கான் உதைக்கவும் மாட்டேன்கிறான், அவன் எதுக்கு வேஸ்ட்டா, அவனையும் மாத்தனும்.
பேட்டி தொடரும்

அரிய வாய்ப்பு!!!!!!

வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்னும் சங்கம் கண்டு,

அதை கல்கி கண்ட சங்கமாக்கி,

இந்தியா, சூடான், துபாய், பெரு, அமெரிக்கா என்னும் 'கண்டங்கள்' கண்ட கண்டமாக்கிய சாரி, சங்கமாக்கிய

என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய சிங்கங்களே!!!!!

இப்போது வந்திருக்கிறது ஒரு அரிய வாய்ப்பு.. இதுவரை வலைப்பூக்களில் மக்களின் முகமகிழ்ச்சிக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நம்மையும் ஆராய்ச்சி செய்கிறேன் என்று மதுமிதா கிளம்பியுள்ளார்..

உடலை ஆராய்ச்சிக்குத் தந்து ஏனையோரின் உயிர்காக்கும் மருத்துவப் பணிக்கு உதவும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்ட இவ்வுலகில், நம்ம மதுமிதா கேட்பது என்ன? என்ன?? என்ன???

அட, என்னங்க மது? என்ன கேட்டீங்க? மறந்து போச்சே!!

ஆங்.. மதுமிதா கேட்பது வெறும் விவரங்களைத் தான்.. பதிவர்களின் விவரங்களை..

என்ன விவரங்கள்?!! எல்லாம் தெரிந்தவை தான்..

அட, உங்களுக்குத் தெரிந்தவை, மற்றவர்களுக்கு அதிகம் தெரியாதவை..

"கேள்வி கேட்கத் தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது" என்று சொல்லும் சங்கத்தின் சிங்கங்களே, என்ன செய்ய?!!! , "கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?" என்று நம்ம மது கேட்காமல் விட்டு விட்டார்களே!!

என்னென்ன கேள்விகள் என்பதை இந்தச் சுட்டிக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்..

என்னென்ன பதில் சொல்லலாம் என்று ஒரு மாதிரிக்கு, நம் சங்கத்தில் இந்தச் சோதனையை ஏற்கனவே கடந்து வந்த கண்மணிகளின் வீட்டுக்குச் சென்று பார்த்து, (காப்பி அடிக்காதீங்கப்பூ... அப்படியே அடிச்சாலும் பேரு ஊராவது யோசிச்சிப் போடுங்க, அப்படியே வெட்டி ஒட்டாதீங்க தம்பிகளா :)) எழுத கைடு:

1. சித்தூர்காட் சிறுத்தை தல கைப்பு
2. புதரகம் போய் (ஆற்றிக் குடிக்கக் காப்பி கிடைக்காவிட்டாலும்) சங்கப் பணியைத் தவறாது ஆற்றும் பொன்ஸ்
3. நாகை மாவட்ட கொ.ப.செ. சூடான்(ன) சிவா
4. வட அமெரிக்க மேற்குக் கிளைச் செயலாளர் சந்தோஷ்

ஆகவே கண்மணிகளா, எழுதி முடித்த விடைத்தாளை இன்விஜிலேட்டர் கிட்ட கொடுக்காம அப்படியே வந்துருவீங்களே, அது மாதிரி இல்லாமல், இதை எழுதி முடித்தபின், மதுமிதா அக்காகிட்ட பத்திரமாக் கொண்டு போய்ச் சேர்த்துட்டு, அப்புறம் நம்ம சங்கப் பலகைலயும் ஒருவார்த்தை போட்டுடுங்க.. அப்போத்தான் நம்ம சங்க மக்கள் வந்து பார்த்து ஆதரவு கொடுக்க வசதியா இருக்கும்!!!

இத்துடன் சோடா குடிக்கும் வழக்கம் இல்லாததால், நல்லா ஐஸ்போட்டு ஒரு பாதாம் பால் (சிக்கனமா ஒரு 10 டாலரில் போதும், குங்குமப்பூ, பனங்கற்கண்டு எல்லாம் போட்டிருந்தாலும் பரவாயில்லை) கொண்டுவருமாறு சொல்லிக் கொண்டு, என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்..

பின் குறிப்பு (அதாங்க, மைக்கைப் பிடுங்கினதுக்கு அப்புறமும் பேசினது): வ.வா.சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டும் தான் என்பதில்லை,
க.பி.க. கழகத்தினர்,
வா.வ.ச வினர்(அட, கவிதா, நீங்களும் நானும் மட்டும் இருக்கோமே, அந்த சங்கம் தான்) ,
ப.ம.க வினர் மற்றும்
எங்கள் சங்கத்துக்கு அடிக்கடி எட்டிப் பார்த்து
ரசித்து விட்டு மட்டும் போகும் (அட ஒரு நெனப்புத்தாங்க!! ) மற்றவர்களும்
மதுமிதாவுக்குப் பதில் சொல்லலாம்...

(கைப்பு ஸ்டைலில் படிக்கவும்) : அவங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க.. யார் எத்தனை பதில் சொன்னாலும் தாங்குவாங்க!!!

தனிக் குறிப்பு: பெருசு: இது உமக்குத் தான்.. அப்படியே கனாக் கண்டுகிட்டு வெண்பாடிகிட்டு இருக்காதீர்.. சீக்கிரமா, ஜூன் 10க்குள்ள முடிச்சி கொடுங்க!!

Friday, May 26, 2006

கைப்பொண்ணுவின் கடைசி கடிதம்

இன்று காலை வரு.வா.சங்கம் தலைமை நிலையத்துக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கடிதம் மற்ற கடிதங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது.

உடைந்த இதயம் வடிவில் இருந்த அந்தக் கடிதத்தை பாண்டியும் நானும் பார்த்து திடுக்கிட்டோம் காரணம்... அந்தக் கடித்தின் அனுப்புனர் பெயர்....எங்கள் ஒன்னே முக்கால் வயதில் இருந்து எங்களின் ஓரேத் தானை தலைவனாக நாங்கள் முழு மனதோடு ஏற்று கொண்ட எங்கள் 'தல' பாசமிகு அண்ணன் கைப்புவின் உயிருக்குச் சொந்தக் காரியாகிய அன்பு அன்றில் பேர்ட் மற்றும எங்கள் மரியாதைக்கும் பாசத்திற்குமுரிய அண்ணியாம்... கைப்பொண்ணு...
அந்தப் பெயர் கோழிக் கிறுக்கலாய் கவ்ரின் பின்புறம் இருந்தது .

எங்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் கட்டிக் கொண்டது.. அவ்வ்வ்வ்வ்வ் என்ற சங்கத்தின் நாத ஒலிக் கூட எழுப்பமுடியாமல் திக்கி திணறி விக்கி உதறி நின்றோம் நாங்கள்....

கடித்ததின் முதல் வரியிலேயே ஒரு பேரல் காதல் வழிந்தது....
அந்த முதல் வரி என்னன்னா...

இந்த பாரசீக பேரட் மனசுல்ல வந்து கொய்யாச் செடி நட்டு வச்ச என் மம்முதக் கொய்யாலே.. என் காதல் அய்யாலே....

அதுக்கு மேலப் படிக்க முடியாம நாங்க அப்படியே அழுக ஆரம்பிச்சிட்டோம்.

கடிதத்தின் ரிவர்ஸ்ல்ல விலாசம் தேடுனோம்... அதுல்ல எதோ அமெரிக்கா அட்ரஸ் இருந்துச்சு....(புத்ரகம் வரு.வா.ச கிளைக்கு கடித்தின் நகல் அனுப்பப்ப்ட்டுள்ளது.. விவரங்கள் தனிப் பதிவில்)

அதுக்கு அடுத்த வரி எங்களைப் பதற வைத்தது...

அது...மேக்னட் கலர்ல்ல வந்து பிஷ் நெட் போட்டு என்னைக் கவர் பண்ண களவாணி மாமனுக்கு இந்த க்யூட் கைப்பொண்ணு எழுதும் கடைசி மடல்.....

பாண்டி கூட்டிட்டு வந்தப் பிரெஞ்சுப் பொண்ணு அது பிரெஞ்சு இல்லன்னு சொல்லிருச்சு... கடித்திலே இதுக்குப் பொறவு வர்ற செயதி எல்லாம் தலை கீழா தமிழ்ல்ல தான் எழுதி இருக்கு இந்தா மொத்தம் கடிதமும் அதன் விவரமும்...

என் ஆச சிரிப்பு எம்.சீ.ஆரே.. உம்ம மேல கொண்ட லவ்க்கு எப்படி நான் விளக்கம் கொடுப்பேன்...?

மொதமொதல்ல வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் என்னைப் பாத்ததும் என்னைய வச்ச கண்ணு வாங்காம சைட் அடிச்சுகிட்டே நின்னிங்க...அப்போ உங்களைப் பாத்துப்புட்ட உங்க அய்யாகிட்ட, அம்புட்டு பயலும் வேடிக்கைப் பாக்க டவுசர் கிழிய அடிய வாங்கிட்டும் கொஞசம் கூட அசராம என்னியப் பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சியளே அதச் சொல்லவா?

அதுக்கு அப்புறம் எங்கப்பார் இளவ்ட்டக் கல்ல தூக்குனாத் தான் உனக்கு எம்பொண்ணை உனக்குக் கொடுப்பேன்ன்னு சொன்னத்துக்காக இளவ்ட்டக் கல்லைத் தூக்கப் போய் மூச்சு திணறி முக்கி மூணு மாசம் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியிலே கிடந்தியளே அந்த வீரத்தைச் சொல்லவா?

ஆத்தூர்ல்ல அச்சு முறுக்கும்... கம்பத்துல்ல கடலை உருண்டையும்... பெரிய குளத்துல்ல பெப்பர் மின்ட்டும் வாங்கி கொடுத்த என் வில்லேஜ் வீராண்டியில்ல நீங்க....

தேனி டவுண்ல்ல வசந்து தியேட்டர்ல்ல இன்ட்ர்வெல் விடும் போது தேன் முட்டாய் வாங்கப் போன நீங்க... அது இல்லாம திரும்பி வர... நான் கண் கலங்க.... அங்கிட்டு இருந்த தேன் கூட்டுல்லயே கைய விட்டு தேனீகிட்ட கொட்டு வாங்கியும் கம்பீரமாக் கதறி பெரும் கலவரமே செஞ்ச காதல் அரசா... என் கனவு புருசா...

என் அழகு ராசா மேல எம்புட்டு பேருக்கு கண்ணு....உங்க அழகு எனக்கு மட்டும் தான்ன்னு உங்க ஆத்தாக் கிடாரி மேல சத்தியம் ப்ண்ணியளே...

ம்ம்ம் இம்புட்டு வீரம்.. காதல்... பாசம்.. இது எல்லாம் எந்தப் புள்ளக்குக் கிடைக்கும்

டார்லிங்!!!! ராசா அழகு ராசா ஐ லவ்ஸ் யூ....

ஆனா அந்த சரளாக்கா அன்னிக்கு உங்களைப் பார்த்து ஆயிரம் இருந்தாலும் ஆம்பிளைன்னா மீசை வேணும்டான்னு சொன்னதேக் கேட்டு என் சின்ன இதயம் சிதறிப் போச்சு.

கரபுர கரடி லேகியமெல்லாம் தடவிப் பார்த்தும்.. ஏன் மடக் மடக்குன்னு குடிச்சுப் பார்த்தும் எம் பொம்முக்குட்டி சிங்கத்துக்கு மீசையும் தாடியும் வளரவேயில்லையே.

இந்த ஏக்கத்துல்லயே என் வெயிட்டும் குறைஞ்சது.. என் கலரும் போயிகிட்டு இருந்துச்சு...

ஆச ராசா மீசையிலே இந்த கருப்பு ரோசா முகம் புதைச்சு லவ்ஸ் பண்ணனும்ங்கற கனவெல்லாம் கலைஞ்சுப் போயிட்டே இருந்தது...

என் மம்முத ராசாவும் என் மனக் கவலையைப் போக்க ஐடெக்ஸ் பென்சில் வச்சு வித்விதமா மீசை வரைஞ்சிட்டு வந்து செல்லம் அழுவாதாடா கண்ணுன்னு ஆறுதல் சொல்லுவீங்க.. அது என் மனசை எவ்வளவு வலிக்க வச்சதுத் தெரியுமா?

பென்சில் மீசை முகம் கழுவும் போது அழிஞ்சுப் போயிரும்ன்னு எனக்காக மூணு மாசம் முகம் கழுவாம என் ராசா கருத்து வேறப் போயிட்டீங்க... என் மவராசா காதலைப் போல வருமா?

அப்புறம் முகம் கழுவல்லன்னா நாறிப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்லி நீங்களும் முகம் கழுவிட்டு என் ஆசைக்காக ஒட்டு மீசை வச்சுட்டு நிப்பீங்க...
அந்த ஒட்டு மீசையை அந்த எடுப்பட்ட பயல்வ பார்த்தீபனும் கட்டத்துரையும் ஊதுவத்தி வச்சு நீங்க உறங்கும் போது சுட்டு சுட்டு விளையாடுவாய்ங்க... அதைக் கூட எம்மேல இருக்க அளவுக்கதிமான பியார் காரணமாப் பொறுத்துகிட்டு புன்னகைப்பீங்களே...

அய்யா எருமைக்கெல்லாம் பெருமை, கருமை பொறுமைன்னு புத்தி சொன்னவரே...

என்னாலேத் தாங்க முடியல்ல நீங்க மீசை இல்லாம தனியாப் போய் கண்ட சரக்க அடிச்சிட்டு கண்டமேனிக்கு புலமபறதை..

அதுன்னாலே நான் ஒரு முடிவு பண்ணுனேன்... உங்களுக்கு மீசை வளர எம்புட்டு செலவு ஆனாலும் பரவாயில்லன்னு...

ஆராய்ச்சிக்கு அஞ்சு கண்டம் சுத்தி வந்தேன்... அன்டார்டிக்காவுக்கு கூடப் போயிட்டு வந்தேன்...

என் முயற்சிக்கு நல்ல பலன் வந்துச்சு... மீசை முளைக்கிற மூலிகையை புதரகத்துல்ல ஒரு புதருக்குப் பின்னாலேக் கண்டுபிடிச்சேன்...

ஆனா..எப்படி சொல்லுவேன்...

இந்தக் கட்டத்துரையும் அவன் குரூப்பும் நான் கண்டுபிடிச்ச மூலிகையைப் புடுங்கி என் முகத்துல்ல மூணு வாரம் தேய்ச்சு விட்டுட்டாங்க...

அதுனால்ல...

அய்யோ இனி நான் உங்க முகத்துல்ல எப்படி விழிப்பேன்...

என் அழகு ராசா.. வீரமாண்டி ...அழகனுக்கெல்லாம் அழ்கன்ன்னு அசலூர் சந்தையில்ல பேர் எடுத்த மம்முத சிங்கத்து முகத்துல்ல நான் எப்படி முழிப்பேன்... அய்யோ

என்னிய சிரிக்கச் சொல்லி போட்டாவெல்லாம் புடிச்சாயங்க...

நான் என் பாட்டி ஊர் கிழக்காப்பிரிக்காவுக்குப் போறேன்... இனிமே நான் உன்னியப் பாக்க திரும்பி வரவேமாட்டேன்...

எனக்காக ஒண்ணு செய்வீயா மாமா.. அந்தக் கட்டத்துரை குரூப் கிட்டே தான் உனக்காக ஆசயாத் தயாரிச்ச மூலிகைத் தைலம் இருக்கு அதை எப்படியாவது நீ அவங்க கிட்ட இருந்து கைப்பற்றி மூணுவாரம் தேச்சு மீசை வளத்துக்கோ மாமா.. அப்போ நீ என் மேல வச்சுருக்க காதல் உண்மையானதுன்னு இந்த ஊருக்கே தெரியும்...

லவ் அன்ட் லவ் ஒன்லி
உன் பாச ஜிலேபி கைப்பொண்ணு:(

லெட்டர் கூட வந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு....




அந்த புகைப்படத்துக்குப் பின்னாடி இருந்த விஷயம்

மாமா இன்னொரு விஷ்யம் அந்தக் கும்பல் கூட ஒரு பொண்ணும் இருந்துச்சு... அந்தப் பொண்ணு கைப்பொண்ணைக் கொல்லணும்.. அப்படின்னு சவுண்ட் வேற கொடுத்துச்சு.. நான் பயந்துப் போயிட்டேன்.. அந்தக் குரல் நம்ம சங்கத்துக் கூட்டத்துல்ல கேட்டுருக்கேன்...ஆனா யாருன்னு சொல்ல பயமா இருக்கு....பாத்து மாமா
மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்...

Wednesday, May 24, 2006

வெள்ளை மாளிகையில் தலக் கைப்புள்ள..

செர்மனி செல்லும் வழியில் புதரகத்தில் வெள்ளை மாளிகையில் புதரக வரு.வா.ச அபிமானி ஜார்ஜ் புதர் கொடுத்த விருந்தில் கலந்துக் கொண்ட தல நியூயார்க் டைம்ஸ்க்காக அளித்த பிரத்தேயக போஸ்...

இந்தப் படம் அடுத்த நியூயார்க் டைம்ஸ் இதழ் அட்டையில் வரவிருக்கிறது... ஊர் பார்க்கும் முன் சங்கத்து மக்களுக்காக தலயின் சூப்பர் ஸ்டில் இதோ....



புதரகத்தின் புதிய பாட்ஷா என்ற தலைப்பு இந்தப் படத்திற்கு கொடுக்கப் படலாம் என்றும் தெரிகிறது...

Monday, May 22, 2006

கைப்புள்ளயின் புதுக் கலாட்டா

எப்பவும் எதிலும் பரபரப்பாக இருக்க வேண்டும் என விரும்பும் தலக் கைப்பு தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்..





பார்க்க படங்கள்...

கே: கைப்பு சார் நீங்க தீடிரென்னு ஜெர்மனி கிளம்புறதாச் சொல்லுறாயங்க உண்மையா?
ப: தப்பாக் கேக்குற... கிளம்பல்ல.. புல்லட் மாதிரி பாஞ்சிகிட்டு இருக்கேன்.. இனிமே நீ அடுத்த கேள்வி கேக்க ஜெர்மனிக்குத் தான் வரணும் ஆமா

கே: அரசியல்ல நீங்க ஆப்பு வாங்குனதுன்னாலேத் தான் இப்படி ஊர் விட்டு ஊர போறதாப் பேசிக்கிறாயங்க உண்மையா?
ப:பாண்டி.. இங்கேப் பார்றா .. நல்லாக் கேக்குறாயங்கய்யா கேள்வியை.... இப்படி கேட்டா நாங்க பயப்பட மாட்டோம்..( மெதுவானக் குரலில்) ஆமா இந்த உண்மையை உன் கிட்ட யாரு சொன்னா?

நிருபர்: நான் சும்மாப் போட்டு வாங்க்னேன்....
கைப்பு: மறுபடியும் போட்டு வாங்குறீயா.....கைப்புள்ள இனி நீ இருக்க கூடாது..கிளம்பிருடா.. கிளம்பிரு.. இல்லன்னா உன் மானத்தை மானிட்டராக்கி ராவா அடிச்சுபுட்டு உன் தன்மானத்தை சைட் டிஷ்ஷா தொட்டு அசிங்கம் பண்ணிருவாய்ங்கடா...
( கைப்பு காணாமல் போகிறார்)

ஜெர்மனி செல்லும் வழியில் புதரக வரு.வா.ச அபிமானியும் புதரக வாஷிங்டன் வெள்ளை மாளிகை தலக் கைப்பிள்ளை ர்சிகர் மன்றத் தலைவருமான ஜார்ஜ் புதரைச் சில நிமிடங்கள் கைப்பு மீட் செய்துள்ளார்...

அப்போது கைப்பு செர்மனிக்கு வருமாறு ஜார்ஜ் புதருக்குப் பாசமிகு அழைப்பு விடுத்தார். செர்மனிக்கு வரும் போது புதர் அணிவதற்கு சிறப்பு சீருடையும் வழ்ங்கினார்.

கைப்பும் புதரும் கலந்து மகிழ்ந்த அந்த விழாவில் கைப்பு கொடுத்த சிறப்பு ஆடையில் புதரின் படம் இதோ



படங்கள் உதவி: விவசாயி இளா

வாழ்த்து + போட்டி

இன்று _ _ ஆம் பிறந்த நாள் காணும் எங்கள் சங்கத்தின் பாதுகாப்பு அரண், தங்கத்தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள், அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ சங்கத்தின் சார்பாக மனதாற வாழ்த்துகிறோம்.

சரி இப்ப மேட்டரு... "_ _"க்கு மேலே சரியான நம்பரைப் பொருத்தும் முதல் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு, சங்கத்து சட்டியில் இப்போது கிண்டப் பட்டுக் கொண்டிருக்கும் டைமண்டு கல்கண்டு 100 கிராம் டிஜிட்டலாக வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் இரண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக, சங்கத்து சார்பில் நாளை எங்கள் தானைத் தலைவியுடன் டீ நாஸ்தா பண்ணும் அரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.

Saturday, May 20, 2006

பிகுலு அயல்நாட்டுப் பயணம்

வரு.வா.சங்கத்தின் கொ.ப.செ நேற்று இரவு சங்கத்தின் அயல் நாட்டு வளர்ச்சிகளை மேற்பார்வையிடுவதற்காக புதரகம் (நன்றி: முகமூடி) புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புதரகம்(அமெரிக்கா) கிளம்பிய அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவ்வளவாகப் பதில் அளித்தார்.

தம் பயணம் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியம் என்றும்...அயல்நாட்டில் வ.வா.சவைப் பெரிய அளவில் வளர்ப்பதே தன் பயணத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

இதர கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பிகுலு என்று சங்கத்தில் மரியாதையாக அழைக்கப்படும் பொன்ஸ் அக்காவின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிகுலு தன் புதரக பயணத்தின் போது முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் சிலரைச் சந்திப்பார் என்றும் அந்தச் சந்திப்பு வ்.வா.சங்கத்தின் புதரக அரசியல் வளர்ச்சியைப் பலப்படுத்தும் என்று தெரிகிறது.

சங்கத்தின் தலக் கைப்பு பிகுலை வாழ்த்தி சித்தூர்கட்டிலிந்து 50 ஒட்டகங்களில் பரிசுப் பொருட்களும் புதரக வ.வா.ச வளர்ச்சி நிதியும் அனுப்பி வைத்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வீக் என்ட் என்பதால் சங்கப் பணிகளின் ஆங்காங்கு சங்க நிர்வாகிகள் பிசியாகி விட்டதால் அவர்களிடமிருந்து எந்தக் கருத்தும் பெறமுடியவில்லை.

முக்கியத் தகவல்: பொன்ஸ் புதரகத்தில் இருந்து திரும்பி வரும் வரை சங்கத்தின் கொ.ப.செ பொறுப்பை சங்கத்தின் போர்வாள் தம்பி பாண்டி தன் இரும்பு தோள்களில் தூக்கிச் சுமப்பான் எனத் தலக் கைப்பு பேக்ஸ் அனுப்பி உள்ளார்.
மகளிரணி பொறுப்புக்கள் குறித்து இன்னும் ஒரிரு நாளில் அறிவிப்பதாயும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Friday, May 19, 2006

ஏலேலோ ஐலசா ....


தேர்தல் கலாட்டாக்களை முடித்து விட்டு தேர்தலில் நிகழ்ந்தவை பற்றி பேச வ வா சங்கம் ‘தல கைப்புள்ளே ‘ தலைமையில் கூடியிருக்கிறது. பொன்ஸக்கா, விவசாயி இளா, கோவை பிரதர் சிபி , போர்வாள் தேவ். மற்றும் ஜொள்ளுப்பாண்டி அனைவரும் சங்க பெஞ்சுகளில் அமர்ந்திருக்கின்றனர்.

கைப்பூ : நான் இல்லாத நேரத்திலே நீங்கல்லாம் இருந்து சங்கத்தை தூக்கி நிறுத்துனதுக்கு ரொன்ப டேங்ஸ்பா. நெம்ம சந்தோஸமா இருக்கு.

இளா : தல எங்கே தல போய்ட்டே?

கைப்பூ : தேர்தல் நேரத்திலே என்னைய அப்படியே மல்கேட், கோல்கேட்டுன்னு ஆளாளுக்கு ஆட்டோவில தூக்கி போட்டுட்டு போயி நொங்கெடுத்துத்துட்டான்க.

பொன்ஸ் : தல அத்தனைக்கும் சும்மாவா இருந்தீங்க? நீங்க திருப்பி கொடுக்கலையா?
கைப்பூ: இல்லையே ?!!
பொன்ஸ் : ஏன் ?
கைப்பூ : மொதோ மொதெல்லா மல்கெட்டுக்குத்தான் வர சொன்னான்க ! சரி ஏதோ நம்மளையும் மதிச்சு கூப்டான்களே நாம இல்லையின்னா எதுவுமே நடக்காதுன்னு நம்பி போனேன். அங்க போனா ஒரு 50000 லைன் இருக்கர புரோக்கராமக் குடுத்து Debug பண்ணுடா கைபூன்னு சொல்லிட்டானுக. நானும் எவ்ளோ நேரந்தான் debug பண்ண தெரிஞ்ச மாதிரியே மானிட்டரை பார்த்து நடிக்கரது ??
(அழுகிறார் கைபூ . உடனே சிபி கோயமுத்தூரிலிருந்து பொன்னாடை போர்த்த வாங்கி வந்த ஈரிழைத் துண்டை எடுத்து கொடுக்கிறார்.)
பொன்ஸ் : பண்ணத்தெரியாட்டி தெரியலைன்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே ?
கைப்பூ : நானும் சொல்லலாம்னுதான் போனேன். அப்போதான் சொன்னானுங்க. ஏண்டா ஹிண்டு நியூஸ் பேப்பரை தினமும் தொரந்து வச்சுகிட்டு என்ன பண்ரேன்னு!! அப்போதான் தெரிஞ்சது அவனுக debug பண்ண சொன்னது வேற நான் பார்த்து பார்த்து coding கோன்னு நெனச்சு மலைச்சுப்போனது வேறன்னு.
சிபி : அப்படிப்போடு அருவாளை. நீங்களும் நம்ம கேஸ் தானா?
கைப்பூ : சரி நம்ம தப்புதான் போல. ப்ரோக்ராம் சின்னதா இருக்கும்னு நம்பி திரும்பி போய்ட்டேன்.அங்க போனாதான் தெரியுது அது பேப்பரை விட ரொம்ப பெரிசுன்னு.
தேவ் : என்ன தல. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா ஆன்லைன்லே ஹெல்ப்புக்கு வந்துருக்க மாட்டேன்?
கைப்பூ : அங்கே எங்க ஆன் லைன்னு? எல்லாமே ஆப்புதான் !!! இது பத்தாதுன்னு அந்த மேனேஜரு மவராசன் போனைப்போட்டு வேறொரு கம்பெனி ப்ராஜட் மேனேஜர் கிட்டே பேச்சி ஏதாச்சும் முடியாத ப்ராஜட்டு இருந்துதுன்னா கொடுங்க இங்க ஒருத்தன் வசமா சிக்கியிருக்கான்னு சொன்னான்.

பொன்ஸ் : (கோபத்துடன்) ஏன் அப்பவும் சும்மா இருந்தீங்க ?
கைப்பூ : ( அழுகையினூடே ) அங்க வந்துருந்த ஒரு ப்ராஜெட்டு மேனேஜரு சொன்னாரு ‘’ ஹிண்டு பேப்பரைக் கொடுத்தாக்கூட கோடிங்னு நெனச்சு debug பண்ரான்யா ! இவன் ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாரு ( பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிகிறார்)
அப்பொழுது வெளியே சத்தம் கேட்கிறது.
“ கழகம் கண்ட தலை கார்த்தி வாழ்க !! வாழ்க !! “ பாலபாரதி கோஷமிட புன்னகையினூடே கையில் ஒரு கஞ்சிராக்கட்டையுடன் நுழைகிறார் கார்த்தி.

கார்த்தி : என்ன இரு ஒரே ஒப்பாரிச்சத்தமா இருக்கு ?
விவசாயி : கார்த்தி இதென்ன கலாட்டா? என்னமோ ஈமெயில் அக்கௌண்ட் ஓபன் பன்ற மாதிரி நீங்க பாட்டுக்கு ஒரு கட்டை பிரம்மச்சாரிகள் கழகத்தை ஓபன் இருக்கீங்க ?
கார்த்தி : எலி வலையினாலும் தனி வலை வேணும் இல்லையா ? நீங்க மெம்பராக முடியாதுன்னு கரிச்சி கொட்டாதீங்க. வேணும்னா கழகத்திலே வீக்கெண்ட் பார்ட்டி இருக்கு. ஸ்பெசல் பாஸ் தாரேன் வந்து கலந்துக்குங்க .
இதனைக்கேட்டதும் மிகவும் உற்சாக மாகிறார் இளா. “ எனக்கொரு பாஸ் எனக்கொரு பாஸ் “ சிபி அலறுகிறார். அதற்கும் ஆமோதிக்கிரார் கார்த்தி..

ஜொ.பாண்டி : கார்த்தி அப்படியே எனக்கு ஒரு 15 பாஸ் வேணும் சொல்லிபிட்டேன்.

பொன்ஸ் : சரி சரி சங்கத்தோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னான்னு பேச வந்துருக்கோம்கரதையே மறந்துட்டு ஆளாளுக்கு பார்ட்டியப் பத்தி பேசிகிட்டு இருக்கீங்க.

தேவ் : தேர்தலில் அனைவரும் ஒன்றாக பணியாற்றினாலும் ‘தல’ இல்லாமல் சமாளிக்கரதுக்குள்ளே தாவு தீர்ந்து போச்சு.

ஜொ.பாண்டி : ஆமாண்ணே. எப்படியோ ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சமாளிச்சிட்டோம்.

பொன்ஸ் : எல்லாம் சரிதான் ஆனா நம்ம சங்க ஆளுகளுக்கு இன்னும் மொழிப்பயிற்சி அளிக்க வேண்டிய அவசியத்தை உணர வச்சிது இந்த தேர்தல்.

ஜொ.பாண்டி : பொன்ஸக்கா என்னாதிது மொழி ? பயிற்சி ?
பொன்ஸ் : நல்ல அறிக்கை விட்டே நீ. ஆனா எதிர் முகாமில் இருப்பவர்களைப்போல நீங்கள் விட்ட அறிக்கையில் ஒரு வெண்பா உண்டா ஒரு பரணி உண்டா ?

ஜொ.பாண்டி : யக்கா அதெல்லாம் யாரு பாக்கிறா? வெண்பா வேகாதபா வெல்லாம் நமக்கெதுக்கு ?

பொன்ஸ் : சும்மா வாயை மூடிகிட்டு ஒக்காரு. உனக்கென்ன தெரியும் அதைப்பத்தி ? சங்கத்தில யாருக்காவது வெண்பா வடிக்கத்தெரியுமா ?
தேவ் : ( முனு முனுப்பாக ) முதல்ல உங்களுக்கு சோறு வடிக்கத் தெரியுமா ?
கைப்பூ : யேய் யாரது ராஸ்கல் சவுண்ட் வுடரது ? எதுன்னாலும் எல்லாருக்கும் தெரியர மாதிரி பேசனும் சொல்லிபிட்டேன்.

சிபி : பொன்ஸு நாந்தேன் குமார காவியம் அப்படீன்னுனெல்லாம் தமிழைப் பிரிச்சு மேஞ்சுகிட்டு தானே இருக்கேன்? ( பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கிறார்)
கார்த்தி : இந்தா வந்துட்டாரய்யா சிபி. சீக்கிரம் அண்ணனுக்கு ரெண்டு மீன்கொத்தி வாங்கித் தரணும் அப்போதான் வீரமாவாரு !!

பொன்ஸ் : சரி சிபியாச்சும் பரவாயில்லை. இந்த ஜொள்ளுபாண்டி இருக்கானே அறிக்கை விடுடாண்னா கைப்பூவப் பத்தி ‘ கவிஜ ’ எழுதுராராம் கவிஜ. அதுலே ஒரு சீர் உண்டா? நிரை உண்டா ?

ஜொள்ளு பாண்டி : ( பொன்ஸை பயமாகப் பார்க்கிறார்.) பொன்ஸக்கா நான் சும்மாதான் ஏதோ தல மேல உள்ள பாசத்திலே ...

பொன்ஸ் : பாசமாவது பாயாசமாவது. வெண்பான்னு வந்துட்டா பாசத்தையெல்லாம் ஓரங்கட்டி வச்சிடுவா இந்த பொன்ஸ். சங்க மக்கள் அனைவருக்கு ஒரு மாசம் வெண்பா crash course எடுக்கலாம்னு நான் முடிவு பண்ணி யிருக்கேன்.

இதைக்கேட்ட கைப்பு உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு கலவரமாக பார்க்கிறார்கள்.
உடனே கார்த்தி வெளியில் நின்று ஆதரவு தரும் பாலாவைப் பார்க்கிறார். சங்க உறுப்பினர் கண்களில் மரண பயம் தெரிகிறது. பாலா சமயோஜிதமாக கார்த்தியை வரவேற்க வாங்கி வைத்திருந்த அணுகுண்டை கொழுத்திப்போடுகிறார். இதுதான் சாக்கு என தேவ்
“அய்யய்யோ கட்டதொரை சங்கத்திலே ‘பாம்’ வைக்க பாக்குறான் எல்லாரும் ஓடுங்க!!! “ என கூவிக்கொண்டே பைக்ஸ் அண்ட் பேரஸ் இருக்கும் திசையில் ஓடுகிறார். தப்பித்தால் போதுமென சங்கத்தினர் தெரித்து ஓடுகின்றனர்.


Thursday, May 18, 2006

முக்கிய அறிக்கை


உலகம் முழுவதும் சேவை செய்து ஆப்பு வாங்க மற்ற நாடுகளில் இருந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.

இதனை பரிசீலித்த தலை இன்று முழுவது யோசித்த(?!) வண்ணம் உள்ளார்.

அத்னால் இன்று யாரும் 'தலை'யை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பின் குறிப்பு: இடைபட்ட நேரத்தில் வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சஙகம் அறிவிக்கிறது.

The Author of this post is விவசாயி இளா

Wednesday, May 17, 2006

குரூப் போட்டோ

என்ன மக்காப் பாக்கீய?



அம்புட்டும் சங்கத்து சிங்கங்கத் தான்...

சிறுவயசுல்ல குரூப்பாத் திரிஞ்சப்போத் தனி தனியா எடுத்து வச்சப் போட்டோத் தான்...

ஆரு ஆர் இருக்கான்னு அடையாளம் கண்டு சொல்லுங்கப் பாப்போம்...



ஒரு சின்ன க்ளூ நான் தான் இந்தப் போட்டோவெல்லாம் என் கேமராவில்ல தத்தக்கா பித்தக்கான்னு நடக்குற வய்சுல்ல புடிச்சுப் போட்டேன்.

கல்கி கண்ட 'தல'



மேல் விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்கவும்

Tuesday, May 16, 2006

சங்கமே முழங்கு !!



‘தல’ கொய்து விட்டார்கள்
பழி செய்துவிட்டார்கள்
சொன்னவர்கள் தலையினை
கொய்ய அரபிகடலோரமாய்
ஒய்யாரமாக வருகிறார்
எங்கள் தல கைபூ என
சங்கமே முழங்கு !!

அடைத்து வைத்துள்ளார்கள்
இவர்கள் ‘தல’யை வதைத்து
வைத்துள்ளார்கள்
சொன்னவர்கள் வாயில்
சிமெண்ட்டள்ளிப் போட்டு
அடைக்க வந்துவிட்டார்
எங்கள் ‘தல’ கைபூ என
சங்கமே முழங்கு !!

மல்கேட் என்ன ?
இந்தியாகேட் என்ன ?
எங்கு செல்லினும்
தொடைதட்டி (யுடன்) செல்லும்
தொடை நடுங்கா சிங்கம்
எங்கள் தங்கம் கைபூ என
சங்கமே முழங்கு !!



Monday, May 15, 2006

கல்கியில் கைப்பு!!!!!

இதனால் தமிழ் வலைப்பதிவு உலகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சியினருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், தமிழ் வலைப்பதிவு நாட்டில் மட்டும் கொடி நாட்டி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த எங்கள் சங்கத்தின் சிங்கம், முன்னாள் மால்கேட் மாணிக்கம், இந்நாள் சித்தூர்காட் சிறுத்தை, அண்ணன் கைப்புவின் சங்கமும், அவர்தம் பெருமையும் தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்துள்ளது..

இதை, ஜொ.பாண்டியின் உற்ற நண்பரும், நமது தோழமைக் கட்சியான க.பி.கவின் தலைவருமான பால பாரதி சொன்ன போது நானும் நம்பவில்லை.. அவர் சொன்னது போல், இந்த வார கல்கி இதழ் வாங்கிப் பார்க்கும்போது தான் அண்ணனின் பெருமையை அறிந்து மனம் பெருமிதத்தால் விம்மியது என்று சொன்னால் அது மிகையாகாது.

கல்கி இதழில் "ஸர்ச் இன்ஜின்" பகுதியில் அண்ணன் கைப்புவின் மாண்மையும் வலைப்பதிவின் நோக்கமும் தெளிவாக, சந்தேகத்துக்கு இடமின்றி விண்டு விண்டு வைக்கப் பட்டுள்ளது.

கல்கி சொல்வது யாதெனில்:

கைப்புள்ள கட்சி (கட்சி பேரத் தான்யா மாத்திப்புட்டாய்ங்க!!!)

(எங்கள் தலைவர் கைப்பு தலைமையில் உருவான லட்சிய கட்சி இது. கட்சியின் கொள்கை: கைப்புவைக் கலாய்த்தல்.)

கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
ப: செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க...

கே: மால்கேட்ல்ல அப்படி என்ன பண்றீங்க?
ப:பில்டிங் கான்டிராக்ட்ன்னு ஊருக்குள்ளே கவுரமாச் சொல்லி வச்சுருக்கேன் நீயும் அதையே மெய்ன்டேன் பண்ணு அது தான் உனக்கும் நல்லது... எனக்கும் நல்லது...

கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...

கண்ணுகளா, எங்ஙனயோ பார்த்தமாதிரி இருக்குதா? எல்லாம் நம்ம கழகப் போர்வாள், சென்னை சுனாமி, சீவலப்பேரி பாண்டியான அண்ணன் தேவின் "கைப்புள்ள பேட்டி" யின் பகுதி தான்..

எனவே சங்கக் கண்மணிகள் தமிழ்நாட்டுக்கே அண்ணனான 'கல்கி கண்ட தல' கைப்புவுக்கு பெரிய வெடிசூட்டு விழாவை, ஆங், டங் ஆப் தி ஸ்லிப்புங்கோ, முடி சூட்டு விழாவை சீக்கிரம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விழாவில் அண்ணன் புகழைத் திக்கெட்டும் பரவச் செய்த கழகப் போர்வாள் தேவுக்கு தங்க வாள் தர கட்சியின் நிதி நிலைமை இடம் கொடுக்காததால், ஒரே ஒரு வாளை மீன் போட்டு செய்த மீன் குழம்பையும் அளிக்க ஏற்பாடாகி இருக்கிறது. இந்த நல்ல செய்தியைச் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்த பாலபாரதி ஐயாவிற்கும் சங்கத்துச் சார்பாக பொற்கிழி காத்திருக்கிறது.. (அடியில் கிழிந்திருந்தால் சங்கம் பொறுப்பல்ல!)

அனைவரும் வாரீர்.. எதிரிக் கட்சித் தலைவரும் தொண்டர்களும் வரலாம், ஆனால், முகமூடியைக் கழற்றிவிட்டு வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

Saturday, May 13, 2006

கோர்ட்டில் பார்த்தீபன்... குமாஸ்தா ஓட்டம்..

பார்த்திபன், வ.வா.சங்கத்தினருக்கு அவதூறு ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்டதால், அதனை எதிர்த்து அவதூறு வழக்குப் பதிவு செய்யப் பட்டது. கோர்ட்டில் நடந்த விபரங்கள் பின்வருமாறு:

வக்கீல் வீராச்சாமி: யுவர் ஹானர், இந்த வழக்கு சம்பந்தமாக 'குண்டக்க மண்டக்க' பார்த்திபனைக் நெடுக்கு விசாரணை செய்யவேண்டும் (எவ்வளவு நாள் தான்யா குறுக்கு விசாரணை செய்யறது?!!)

ஜட்ஜ் கருத்து கந்தசாமி: Mர். வீராச்சாமி, ப்ளீஸ் ப்ரோசீட்

டவாலி: 'குண்டக்க மண்டக்க' பார்த்திபன்!
'குண்டக்க மண்டக்க' பார்த்திபன்!!
'குண்டக்க மண்டக்க' பார்த்தீபன்!!!

குமாஸ்தா: ம்ம்.. சொல்லுங்க: "நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.."

பார்த்தி: அது எப்படிங்க உண்மை சொல்ல முடியும்? இப்போ நான் கேக்கறேன்.. இந்த ஜட்ஜ் ஏன் கண்ணாடி போட்ருக்காருன்னு!! கண்ணு தெரியலை, போட்ருக்காருன்னு நீ சொல்லமாட்ட.ஏன்னா அது தான் உண்மை.. வெயிலுக்குப் போட்ருக்காருன்னு தான் நீ சொல்லுவ.. இல்லைன்னா உனக்கு வேலை போய்டும்ங்கறது உண்மை.. அந்த உண்மையச் சொன்னா, உனக்கு வேலை இல்லைங்கற உண்மைய உன்னால உண்மையா ஒத்துக்க முடியுமா?

குமாஸ்தா: (தொப்பியை எடுத்துவிட்டு தலையைப் பிய்த்துக் கொள்கிறார்).. ஏதோ குத்துமதிப்பா சொல்லும்மையா..

பார்த்தி: குத்துக்கு மதிப்பு இருக்கா? இந்தக் குத்துக்கு என்ன மதிப்பு? (என்று முஷ்டியை மடக்குகிறார்)

குமாஸ்தா: (ஜட்ஜைப் பார்த்து) ஐயா ஆளை விடுங்க.. இந்த ஆள் வெளியே போனதும் நான் திரும்பி கோர்ட்டுக்கு வர்றேன். எனக்கு ரெண்டு வாரம் சி. எல். குடுத்துடுங்க..

(ஜட்ஜ் பதில் சொல்லுமுன்னே குமாஸ்தா, தலை தெறிக்க வெளியே ஓடுகிறார்)

வக்கீல் வீராச்சாமி: யுவர் ஹானர், இப்படி எல்லாம் இவர் செய்வதால் தான் எங்கள் கட்சிக்காரர் கைப்பு வெளியே தலை மறைவாக இருக்கிறார்.

இன்னும் வரும்.. இப்போதைக்கு பார்த்தியைச் சமாளிக்க இத்தோட நிறுத்திக்கிறேன்.. மேலும் நடந்தது என்ன என்று அறிய வ.வா.சங்க நோட்டீஸ் போர்டை அடிக்கடி பாருங்கள் :)

Wednesday, May 10, 2006

மாவட்ட செய்திகள் - நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல், கைவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் இளங்கலை மாணவிகளை உறுப்பினர்களாகக் கொண்ட நமது வ.வா.சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மகளிர் அணிக் கிளையின் உறுப்பினர் ஒருவரை கடந்த ஞாயிறு அன்று சந்தித்தேன்.

அவர்களும் தங்கள் கல்லூரியில் நமது சங்கத்தின் கிளையொன்றை நிர்வகித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார். அவர்தம் கல்லூரியில் நமது சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாடினேன்.

அப்போதுதான் இக்கிளை அக்கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாக நிர்வகிப்பட்டு வருவதாகவும், தினமும் நம்ம தலை கைப்புவின் வீர வரலாற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுற்று வருவதாகவும் கூறினார்.


என்னே கைப்புவின் புகழ்! என்னே சங்கத்தின் வளர்ச்சி!

Thursday, May 4, 2006

நாமக்கல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்


சமீபத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிங்கப்பூரில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

தலைமை : தலை கைப்பு
முன்னுரை : ஜொள்ளுப் பாண்டி, வெண்பா வாத்தியார் ஜீவா
சிறப்புரை : பிகிலு பொன்ஸ் மற்றும் கானா கீதா
நன்றியுரை : பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் மற்றும் ஆர்த்தியக்கா
ஒருங்கிணைப்பு : மாநில செயற்குழு தலைவர் தேவ்
சிறப்புப் பேச்சாளர் : நடிகை நயன்தாரா

தாலிபான் பிடியில் ப.ம.க - கைப்புள்ள பேட்டி

கே: இவ்வளவு நாள் எங்கேப் போயிருந்தீங்க?
ப: என் கல்யாணத்துக்கு ஷாப்பிங் போயிருந்தேன்... என் அம்பு மின்னலு கைப்பொண்ணுக்கு கவுன் வாங்க கல்கத்தா போயிருந்தேன்.

கே: தேர்தல் பரபரப்பு நேரத்துல்ல ஷாப்பிங் அவசியமா?
ப:என்ன கேள்வி இது ராஸ்கல்.. சின்னப்பிள்ளத் தனமா இருக்கு... அவன்...அவன்... தேர்தல்ன்னு தெரிஞ்சும் எங்கே ஓட்டுப் போடச் சொல்லிருவாயங்களோன்னு நடுங்கி பயந்து பம்மி முகத்தை மூடிப் போட்டு மறைச்சுப் பிளேன் ஏறி நாடு விட்டு நாடு பறந்துகிட்டு இருக்கான்... நான் இங்கன கல்கத்தா தானேப் போனேன்... ஏன் இப்படி அதைப் பெரிய குத்தம் மாதிரி குத்தி காட்டுற.... நெக்ஸ்ட் கேளு...

கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
ப:செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க...

கே: மால்கேட்ல்ல அப்படி என்ன பண்றீங்க?
ப:பில்டிங் கான்டிராக்ட்ன்னு ஊருக்குள்ளே கவுரமாச் சொல்லி வச்சுருக்கேன் நீயும் அதையே மெய்ன்டேன் பண்ணு அது தான் உனக்கும் நல்லது... எனக்கும் நல்லது...

கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...

கே: உங்க வ.வா.ச உறுப்பினர்கள் தாக்கப்பட்டதைப் பற்றி அறிக்கை விடுவதாச் சொன்னீங்களே என்ன ஆச்சு?
ப: பாரீன்ல்ல இருந்து பராக்கு பாக்க வந்த பயபுள்ள ஒருத்தன் அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு குரூப் சேத்து சங்கத்து வாலிப புள்ளகளைப் பத்தி விட்டு பட்டயக் கிளப்பியிருக்கான்... கப்பித் தனமா நடந்து இருக்கான்...
அவன் முகத்துல்ல முடி இருந்துச்சாம்...அவன் யார்ன்னு தேர்தல் முடிஞ்சதும் நான் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவேன்...அப்ப நீயும் வந்துப் பாரு

கே: யாரையோ மறைமுகமாத் தாக்குற மாதிரி தெரியுது?
ப: மறைமுகம்...
முகம் எங்கே மறைஞ்சு இருக்குன்னு நீயே சிந்திச்சு ஒரு பதிலை எழுதிக்க...

கே:மக்கள் மத்தியிலே உங்க வ.வா.ச கூட்டணிக்கு வரவேற்பு எப்படி இருக்கு?
ப: இது கேள்வி... நல்லா கேக்குறப்பூ...
வயல்ல மவுசு தின்ன விவசாயில்லருந்து ... வேலியில்ல கம்ப்யூட்டர் முன்னாடி மவுசு உருட்டற பயபுள்ளக வரைக்கும் வ.வா.சக்கு தான் மவுசு... எங்க கூட்டணி தான் ரவுசு....
மால்கேட்ல்லருந்து கோல்கேட் பில்கேட் டோல்கேட்ன்னு அம்புட்டு பயலும் நம்ம சங்கத்து மேல பாச மழையப் பொழியறாங்க...
ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல).
அ.உ.ஆ.சூ.கு.க கொ.பா.செ செல்வனாரும் இதையே தான் சொல்லுறார்... இப்படி இப்போ என்க கையிலே இருக்க ஓட்டை எண்ணிப் பார்த்தாலே நாங்க எங்கிட்டோ லீடிங்ல்ல இருக்கோம் தம்பி...
இது தெரியாமா.. எதிர் கட்சிக்காரய்ங்க கிரகம் ஆடுறாயங்க....ஹய்யோ...ஹய்யோ...

கே: உங்க சங்கத்துல்ல ஆளே இல்லன்னு ஒரு குற்றசாட்டு அது பத்தி சொல்லுங்களேன்..
ப: இது என்ன சுப்பித்தனமாப் பேசுற...வாலிப சங்கம்ய்யா இது... இளைஞர்கள்ன்னா அங்கே இங்கேப் போய் அப்பிடி இப்பிடி இருப்பான்... அவங்களை எல்லாம் ஒரே இடத்துல்ல வச்சு எண்ணுறதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாதுப்பா...
எங்க சங்கத்து தம்பி பாண்டி டாவு கட்டுற புள்ளங்களை எண்ணுனா அதுவே அந்தக் கட்சிக்கு விழுற ஓட்டை விட மூணு மடங்கு அதிகம் இருக்கும்ப்பா எண்ண தெரியாததும் எண்ண முடியாததும் எதிர் குருப்போட வீக்னஸ் அப்பு... அந்த விவஸ்தக் கெட்ட கூட்டம் கூவிச்சுன்னு வக்கனையா நீயும் கேக்குற.. பாத்துக் கேளுப்பா இல்ல பத்திக்கும்....

கே: முகமுடி பற்றி?
ப: நல்லவர்...அந்தக் காலத்துல்ல பள்ளிக்கொடம் படிக்கும் போது மூட வேண்டியதையே மூடாம இருந்த அப்பாவி அவர்...
அப்படிப்பட்ட உத்தம தமிழரை இன்று சிலர் தங்கள் சொந்த சுயநலத்திற்காக முகமுடிப் போட்டு அரசியல் பிழைப்பு நடத்துவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
( அப்பாடா இப்படி ஒரு பினாத்தலானப் பதிலைச் சொல்லுரதுக்குள்ளே கண்ணு கட்டுதுப்பா... என்னப் பண்ணுறது..இதெல்லாம் பொது வாழ்க்கையிலே ஜகஜம்ன்னு ஆத்தா மயிலாத்தா போனிகபூர் மேல பாரத்தைப் போட்டுட்டு போக வேண்டியது தான்)

கே: ப.ம.க பற்றி?
ப:நல்லவர்கள் நிறைந்த அந்த இயக்கம் இன்று பிளவுப் பட்டு கிடப்பது மனத்தை வாட்டுகிறது....ஒரு உண்மையச் சொல்லுறேன் அந்தக் கட்சி இப்போ தாலிபன் பிடியிலே இருக்கு....அதைக் காப்பாத்த
இந்த கைப்புள்ள வாலிபனால்
மட்டுமே முடியும் என அங்குள்ளவர்கள் உண்மையாக நம்புகிறார்கள்.. விரும்புகிறார்கள்... இது யாராலும் மறுக்க முடியாது...
என்ன ஆனாலும் சரி... பரிதாபகரமாக இருக்கும் ப.ம.க வை ஆண்டவன் மற்றும் அ.உ.ஆ.சூ.கு.க , மல்லிகை கூட்டணித் தோழ்ர்கள்...வ.வா.ச செயல் சிங்களின் துனை கொண்டு இந்தக் கைப்பு மீட்பதை யாராலும் தடுக்கவே முடியாது....


கைப்புள்ளயின் பேட்டி தொடரும்....

Wednesday, May 3, 2006

சங்கம்.. சிங்கம்... கைப்பு..

சங்கம்.. சிங்கம்... கைப்பு..

--- தளபதி சிபிக்காக..

தொண்டரடிப் பொடி உறுப்பினர் பொன்ஸ்

எங்க வருத்தப் படாத வாலிபர் சங்கத்தைப் பற்றி இன்னும் நிறைய பேரு தெரிஞ்சிக்கனுக்கறதுக்காக வேண்டி இந்த அறிமுக மற்றும் கொள்கை விளக்க குறும்படத்தை வெளியிட்ட சங்கத்தின் கொ.ப.செ பொன்ஸ் அவர்களுக்கு நன்றி.

- நாமக்கல் சிபி

Monday, May 1, 2006

புதுசு கண்ணா புதுசு..




தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விவசாயி இளா

இளமைச் செறிவுடன் வடிவமைத்த புது போஸ்டர் :)


சங்கக் கண்மணிகளே.. !!!!!
புது போஸ்டரில் புது குழுமத்தின் பெயர் பாருங்கள்..!!


வந்து சேருங்கள்.. !!!!

-- தலைவர் சொல்படி
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொன்ஸ்...