Friday, June 2, 2006

கைப்பூ ‘பெக்’ காம்

Image Hosted by ImageShack.us


‘தல’ கைப்புவை இந்த உலகக்கோப்பை உதைபந்துல எப்படியாச்சும் ஒரு ‘கோல்’ லாச்சும் போடவைத்து ‘தல’ யின் வீரத்தையும் சங்கத்தின் மேலாண்மையையும் நிரூபிக்க வேண்டிய அவசியத்திலிருப்பதால் அதற்கான ‘டெக்னிகல் அட்வைஸ்’ கொடுக்க சங்கத்தின் தங்கங்கள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். போனதடவை மாதிரி இல்லாம இந்த தடவை ஆளாளுக்கு ஒவ்வொரு கண்டத்திலே இருக்கறதாலே சங்க கூட்டத்தை Video Conference மூலம் நடத்த இந்தியாவில இருந்து ‘போர்வாள்’ தேவு, சங்க டீக்கடை செயலாளர் ஜொள்ஸ், தள்ளாடாத தளபதி சிபி, வீரத்தை ஏக்கர் ஏக்கரா சாகுபடி பண்ணிகீடு இருக்கர விவசாயி எல்லாரும் வந்து அசெம்பிள் ஆகியிருக்காங்க.

விளையாட்டுத்துறை டெக்னிகல் கமிட்டி தலைவரான , வட அமெரிக்க சிங்கம் புட்பால் கண்ட காளை பந்தினைப்பற்றிய அளப்பறியா அறிவையும் அதன் நெளிவு சுளிவுகளைப் பற்றி அர்ஜென்டீனிய டீன் தேழியிடமும் பேக்வார்ட் பார்வார்ட் ஆட்டத்தைப்பற்றி ப்ரேசில் தோழியிடமும் டிபன்ஸ் தொழில்நுட்பத்தை ஜெர்மானிய பெண் சிங்கத்திடமும் பல களங்களிலே கற்று , பயிற்சி பெற்று, வரலாற்று ரீதியாக இதுவரை நடைபெற்ற ஆட்டத்தினை பற்றி அலசி ஆராய்ந்து பதிவுகளை அள்ளித்தெளித்திருக்கும் அண்ணன் கார்த்திக் ஜெயந்த் தலைமையில் இந்தக் கூட்டம் கூடியிருக்கிறது.

சங்கம் கண்ட எங்கள் தல புட்பாலின் நாயகன் ஜெர்மனி கண்ட வ.வா ச. கோமகன் தல கைப்பு , வளைகுடாகிளை செயலர் துபாய் ராசா,( ராசா திருப்தியா ?) தென்னமெரிக்கவிலிருந்து பெருசு மற்றும் இந்தியாவிலிருந்தாலும் இண்டியானாவிலிருந்தாலும் ஓடி ஒடி சங்கப்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும் ஆற்றலரசி ( அப்படீன்னா என்னாக்கா??) ஆவிக்கதைகளையும் ஆவிபறக்க சாதம் வடித்தக் கதைகளையும் ஒருசேர பறிமாறிக்கொண்டிருக்கும் அக்கா பொன்ஸ்சும் ஆஜராகியிருக்கிறார்கள். மேலும் ஆற்றலரசிக்கு கடும் சவால் விட்டு சங்கப்பணிகளை ஆற அமர ஆற்றிவரும் கீதாக்கா மற்றூம் ஒரே கட்சி ஒரே தலைவர் ஒரே தொண்டர் என கழகம் கண்ட மாணிக்கம் எங்களுக்கு தோள் கொடுத்த நாயகன் அ.உ.ஆ.சூ.கு.ம.க. செல்வனும் தன் பரிவாரத்தோடு ப்ரெசென்ட் ஆகிறார். ( தேவூ அத்தனை பேரு பேரையும் சொல்றதுக்குள்ள தாவு தீருதப்பா!! யாரையாச்சும் வுட்டுருந்தா மன்னிச்சி என்னைய வுட்டுருங்க ப்ளீஸ் !! )

கைப்பூ : யப்பா யெல்லாருக்கும் திருப்த்தியா ? நான் பாட்டு செவனேன்னு ஒட்டகத்துலே ஏரி சித்தூர்காட்டு சிலுக்குவார்பட்டின்னு போயி கிட்டிபுல்லோ கபடியோ ஆடிகிட்டு இருந்தேன். என்னையப் போயி புட்பால் ஆடுறான்னு அல்லாரும் சேர்ந்து இப்படி அனுப்பி விட்டுட்டீயளே !!

கார்த்தி : தல கவலைப்படாதீங்க தல. அர்ஜென்டீனாவுக்கு ஒரு மரடோனா பிரேசிலுக்கு ஒரு ரொனால்டோ மாதிரி உங்களையும் ஆக்கிக் காட்டறேன் !!

ஜொள்ஸ் : கார்த்தி அண்ணே ‘தல’ க்கும் ட்ரென்யினிங்க கொடுக்க அர்ஜென்டீனால இருந்தோ இல்ல ப்ரேசில்ல இருந்தோ ஏதச்சும் பொண்ணு ட்ரெய்னர் வாறாகளா ??

கார்த்தி : ஏன் தலய மொத்தமா கவுக்கவா? தல முதல்லா கார்லோஸ் மாதிரி ஹேர் ஸ்டைல்ல மாத்துங்க ! மரடோனா மாதிரி உடம்மை ஏத்துங்க. ரொனால்டினோ போல பின்னாடி தீப்பிடிச்ச மாதிரி ஓடுங்க !!

பொன்ஸ் : ஹேய் கார்த்தி என்னா மேன் சொல்றே ? ‘தல’ இந்த வேர்ல்ட் கப்புல வெளையாடனும் தெரியுதா ?

கார்த்தி : அதுக்கும் கைவசம் பல டிப்பு வச்சிருக்கேன். ‘தல’ . இன்னிக்கு பெரிய பெரிய டீமுக்கே கேப்புல அல்வாவ கிண்டி கிண்டி கொடுக்கர சின்ன டீம் கேமரூன். அங்கன எனக்கு தெரிங்ச பெண்தோழி ‘உகாண்டா ஜிலேபியா’ இருக்காங்க. கால்பந்து ஸ்பெஷலிஸ்ட். . போனதடவை நான் லாஸ்வேகாஸ் போயிருந்தபோ ஒரு டான்ஸ் பார்ல பழக்கம். கோல் போடறது எப்படி அப்படீன்னு அவங்க உங்களுக்கு நெட் ப்ராட்டீஸ் கொடுப்பாங்க.

துபாய் ராசா : நெட் ப்ராக்டீஸ் கொடுக்கரப்போ நானும் ‘தல’க்கி தார்மீக ஆதரவு தரட்டா ??

ஜொள்ஸ் : உங்களுக்கு எதுக்கு சிரமம் துபாய் ? அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?
பொன்ஸ் : நெட் ப்ராக்டீஸ் கொடுக்க ஏதும் ஆம்பிளை கோச் இல்லையா கார்த்தி ?

கைப்பூ : ( அதை காதிலே வாங்காதவர் போல ) அப்படியா கார்த்தி இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம் நெட் ப்ராக்டீஸ்.

நாகை சிவா : என்னா கேமரூன் ? சூடான்ல இருந்து ஒரு ‘கோச்’ சை சூடா நான் இறக்கரேன் . ‘தல’ ம்ம்னு சொல்லுங்கோ !!

கார்த்தி : ச்சூ சும்மா குறுக்க பேசப்பிடாது. சங்க மக்கள் யாருக்காச்சும் புட்பால் தெரியுமா ? இல்ல அதையப் ஒரு பதிவாத்தான் போட தெம்பு இருக்கா ? யாரும் ஏது பேசப்பிடாது சொல்லிட்டேன்.

கைப்பூ : சரி சரி கோச்சுக்காத மேல சொல்லு கார்த்தி !!

கார்த்தி : கோலடிச்சா மட்டும் போதாது தல ! கோலடிச்சதுக்கப்புறம் அப்படியே ஓரமா நின்னு ரோஜர் மில்லா மாதிரி ஒரு ஸ்டைலா ஆட்டம் போடனும் அதுக்குத்தான் மதிப்பே. அப்படி ஆட கத்துக்கொடுக்க ப்ரேசில்ல இருந்து ரெண்டு ‘பெல்லி டான்சரை’ ஏற்பாடு பண்ணிடறேன்.

சிபி : எப்பா முதல்ல தல காலுக்கு பந்து வர ஏற்பாடு பண்ணுங்கப்பான்னா சும்மா பெல்லி டான்ஸ்சு பல்லி டான்சுன்னு ..

தேவு : அட இருங்க சிபி. நான் பெல்லி டான்ஸே பார்த்ததில்லை ஹிஹிஹி

கார்த்தி : குவாட்டர் பைனல் வந்துட்டாலே கூட போதும் எங்கேயோ போய்டலாம்.

ஜொள்ஸ் : கார்த்தியண்ணே அங்கேயும் குவாட்டர் தானா ? ???

தேவு : டேய் ஜொள்ளு மானத்த வாங்காதே .கொஞ்சநேரம் கம்ம்முனு கெட இது வேற குவாட்டர்.

இளா : சரி சரி மேட்டருக்கு வாங்க !

பொன்ஸ் : என்னா கார்த்தி சும்மா மரடோனா , ரோஜர் மில்லா ன்னு ரிடயர்டு கேஸ்சுகளப் பத்தி சொல்லிகிட்டு . ஒரு பெக்காம், ஒரு தியரி ஹென் மாதிரி கொஞ்சம் லேட்டஸ்ட் ப்ளேயர்ஸை பாரு.

கார்த்தி : ‘ தல ‘ The great german Wall ஆலிவர் கானுக்கே சூப்பு கொடுத்துட்டு ஆப்பு அடிக்கற மாதிரி ஒரு கோலடிச்சீங்கன்னு வைங்க. அவ்ளோதான் ! சும்மா பிச்சிக்கும்.

கைப்பூ : ( மனதுக்குள் ) ஆலிவர்கான், பெக்காம்னு ஏதேதோ சொல்றாங்களே நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஆப்பக்கடையும் ரெண்டு ‘பெக்’கு ந்தானே. இவனுக நம்மளை கவுக்காம வுடமாடானுக போல இருக்கே !!!

கார்த்தி : தல என்ன ஒரே யோசனை. பயமா இருந்தா சொல்லுங்க மெக்சிகோ சரக்கு ‘டக்கீலா’ இருக்கு. ரெண்டு ரவுண்டு உட்டுக்குங்க .அப்புறம் புட்பால் க்ரவுண்ட்
என்ன ? சும்மா எகிறி அடிக்கிற அடில பந்து கோல் கீப்பரை பேத்துகிட்டு உள்ள போயிறாது ?

ஜொள்ஸ் : என்னாது ஷக்கீலாவா ???

செல்வன் : ச்சூ என்ன பாண்டி??! அது ஷக்கீலா இல்லை ஆனா அதைவிட கிக்கா இருக்கற டக்கீலா .

கீதாக்கா : அபச்சாரம் அபச்சாரம் சங்க மீட்டிங்குண்ணு கண்ட கருமாந்திரத்தையெல்லாம் பேசிக்கிட்டு. ‘ சிறுசுக வெளச்ச வெள்ளமை வீடு வந்து சேராதாம் ‘ இதுக்குத்தான் என்னைய மாதிரி ஒரு பெரியவங்க வேணுங்கரது.
பொன்ஸ் : ( மனதுக்குள் ) க்கும் அப்படியே இருந்துட்டாலும் . ( சிரித்தபடி ) சரியா சொன்னீங்கக்கா.

கீதக்கா : போதும்பா கார்த்தி நீங்க கைபூவுக்கு ட்ரெய்னிங் கொடுத்தது. ஏ பொன்ஸு எல்லாம் ரெடியா ?

பொன்ஸ் : ( மந்தகாசப் புன்னகையுடன் ) அப்போவே எடுத்து ரெடியா வச்சுட்டேன்க்கா!!
என்னாது? என்னாது ?? எல்லா இடத்திலிருந்தும் குரல் வருகிறது. பொன்ஸ் புன்னகையுடம் ஒரு பொட்டியை எடுத்து மேலே வைக்கிறார்.

பொன்ஸ் : போன மீட்டிங்ல நான் உங்களுக்கு வெண்பா வடிக்க கத்துக் கொடுத்தேன். இந்த மீட்டிங்குல இப்போ நான் வெண்மையா ‘ சாதம் ‘ வடிக்க கத்துக்கொடுக்கப்போறேன்.
வாலிபர்கள் அனைவரின் முகத்திலும் மரண பீதி தெரிகிறது.

பொன்ஸ் : இதுதான் மைக்ரோவேவ் ஓவன். ரெண்டு கப் அரிசிய எடுத்துக்குங்க. சுத்தமான தண்ணியிலே அரிசிய ரெண்டு தடவை அலசுங்க. ஒருகப் அரிசிக்கு..

சொல்லிக்கொண்டே போக ஆங்காங்கே ஒவ்வொரு கண்டத்திலிருக்கும் சங்க செல்வங்களின் மானிட்டர்கள் ஆட்டொமேடிக்காக shutdowm ஆகிறது.




40 comments:

நாகை சிவா said...

பாண்டி முன்னுரையில் என் பெயரை துபாய் ராசாவ சமாதனப்படுத்த தான் விட்டிங்கனு எனக்கு தெரியும், ஆனா துபாய் ராசாவுக்கு தெரியாதுல, அதுக்கு தான் இதை இங்கு கூற வேண்டி உள்ளது.

நாகை சிவா said...

//சங்க மக்கள் யாருக்காச்சும் புட்பால் தெரியுமா ? இல்ல அதையப் ஒரு பதிவாத்தான் போட தெம்பு இருக்கா ?//
ஹ....அது தெரிஞ்சா நாங்க ஏன் இங்க குத்துக்கட்டி வக்காந்து இருக்கோம்...... கேட்குறார் பாரு கேள்வி............

நாகை சிவா said...

//சங்க செல்வங்களின் மானிட்டர்கள் ஆட்டொமேடிக்காக shutdowm ஆகிறது//
shutdown இல்ல ஜொள்ளு, எல்லாம் எரிஞ்சி போச்சு............:-(((

Geetha Sambasivam said...

அதானா,, மூணு மணியில் இருந்து இணைப்புக் கிடைக்கவே இல்லை.இதுக்குத்தான் என்னை மாதிரிச் சின்னப்பொண்ணுங்க இருக்கணும்கறது.(பொன்ஸ்;மனதுக்குள்:நறநறநறநறநற)

பொன்ஸ்~~Poorna said...

//இதுதான் மைக்ரோவேவ் ஓவன். ரெண்டு கப் அரிசிய எடுத்துக்குங்க. சுத்தமான தண்ணியிலே அரிசிய ரெண்டு தடவை அலசுங்க. ஒருகப் அரிசிக்கு..
//
என்னப்பா, இன்னுமா சாதம் வடிச்சிகிட்டு இருக்கீங்க? நம்ம தான் அடுத்து டீப் போடுவது எப்படின்னு அடுத்த கட்டத்துக்கு போய்ட்டோமே!!

Karthik Jayanth said...

இளா,

நீங்க ஏப்ரல் மாசத்துல லாஸ்வேகாஸ் வந்தீங்களா என்ன ? .. ஒரு குரல் கொடுந்திருந்தா போதுமே..

Syam said...

//ப்ரேசில்ல இருந்து ரெண்டு ‘பெல்லி டான்சரை’ ஏற்பாடு பண்ணிடறேன்//

ஏற்பாடு பண்ணிட்டு சொல்லுங்க நானே பர்சனலா போய் கூட்டிட்டு வந்துடறேன்

பொன்ஸ்~~Poorna said...

//ஆலிவர்கான், பெக்காம்னு ஏதேதோ சொல்றாங்களே நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஆப்பக்கடையும் ரெண்டு ‘பெக்’கு ந்தானே. //
அட தலைக்காவது அது தெரிஞ்சிருக்கு.. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஓவனும், அரிசி சாதமும்ந்தான்!!! என் நிலைமை இப்படியாகணுமா?!!

Karthik Jayanth said...

அய்யா syam,

//நானே பர்சனலா போய் கூட்டிட்டு வந்துடறேன்

இத தான் எங்க ஊர் பக்கம் நோகாம நொங்கு திங்குறதுன்னு சொல்லுவாங்க :-)))))))

பொன்ஸ்~~Poorna said...

பாசமலர் கார்த்திக், இன்னிக்கு கடைல உங்களைக் கழட்டி விட்டுட்டாங்களா? சங்கப் பணிய ஆத்து ஆத்துன்னு ஆத்தறீங்க?!!

ஆமாம், வீட்டுக்குப் போய் தோச சுடலியா? கமிட்மென்ட்ஸ்? இந்த வாரமும்?!! ;)

Karthik Jayanth said...

அக்கா ஆற்றலரசி பொன்ஸ்,

கடைல நம்ம இல்லாமையா.. அந்த ஆப்பு ஒரு பக்கம் வந்து கிட்டே இருக்கு.. கொஞ்ச நாளா சங்கத்து பக்கமே எட்டிப்பாக்கலயா அதான் என்ன நடக்குதுன்னு பாத்தேன் :-).

கமிட்மெண்ட் இல்லாம கார்த்தியா ?..இந்த வார்த்தைய எங்கன புடிச்சிங்க ? இத பத்தி நான் ஒண்ணும் பதிவு போட்டதா ஞாபகம் இல்லயே.. உங்களுக்கு எப்படி தெரியும் எங்க வீட்டுல இன்னைக்கு தோசை, கோழி குழம்புன்னு ?

பொன்ஸ்~~Poorna said...

//கமிட்மெண்ட் இல்லாம கார்த்தியா ?..இந்த வார்த்தைய எங்கன புடிச்சிங்க ? இத பத்தி நான் ஒண்ணும் பதிவு போட்டதா ஞாபகம் இல்லயே.. உங்களுக்கு எப்படி தெரியும் எங்க வீட்டுல இன்னைக்கு தோசை, கோழி குழம்புன்னு ? //

தம்பி, நம்ம இணைய ஜோசியர் தருமியப் பார்க்கணும்னு நெனைச்சு, பார்க்காம வந்த நாள்லேர்ந்து ஒரு அதிசயம் நடந்திருக்கு.. அடுத்தவங்க என்ன பண்ணப்போறாங்கன்னு முன்கூட்டியே சொல்றது தான்..
பை த பை.. கமிட்மென்ட் பத்தி நீ சொல்லவே இல்லை?? யார் கிட்ட சொன்னா என்ன? இந்த வாரம் தான் சொல்லி இருக்கப்பூ.. சரியா மூளையக் கசக்கிப் பாரு.. தெரியும்.. :)

Suka said...

என்ன கூத்து இது ...

கிரிக்கெட்டு .. புட்பாலு தான் உங்களுக்குத்தெரியுமா ..

NBA ..ல எம்பி எம்பி ஸ்லேம்டங்க் அடிச்சத யாரும் கண்டுக்கவே இல்ல..

மேவ்ரிக்ஸ்ஸும் சன்ஸும் எப்பிடி அடிச்சுக்கறாங்க தெரியுமா ...தலைக்காக..

இருங்க .. நானே ஃபோட்டோஸ் அனுப்பி வைக்கறேன்.

Karthik Jayanth said...

அக்கா ஆற்றலரசி பொன்ஸ்,

//நம்ம இணைய ஜோசியர் தருமி....
இணைய ஜோசியரா.. எங்க ஊர் சிங்கம் அவங்களை துவைச்சி தொங்க விட்டுக்கிட்டு இருக்குறார்.. அந்த மாதிரி ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க.. நானும் நிம்மதியா ஊர் பக்கம் வந்து செட்டில் ஆகுறேன்.. ஆனா ஒரு கன்டிசன் நான் மகளிர் ஜோசிய செக்சன்ல போடணும்.. ஹி ஹி.

நம்ம மூளை கசக்குறதுக்கு என்ன துணிமணியா ? இருக்குறது ஒண்ணே ஒண்ணு.. அதுவும் இப்பவோ அப்பவோதான் வேலை பாக்குது..அதையும் கசக்கிட்டா வேற மூளைக்கு நான் எங்க போவேன் :-) .

சரி கமிட்மென்ட்ன்னா நீங்க எல்லாரும் என்ன நினைச்சிகிட்டு இருக்குறிங்க.. உங்களுடைய புரிதல் என்ன ? ஏற்கனவே பதிவு போடுறேன்னு எங்க அண்ணன் வீரத்தின் விளை நிலம் விவசாயி, கேள் பிரண்ட், டான்ஸ்பார் ,பெல்லி டான்ஸ், லாஸ்வேகாஸ்ன்னு இமேஜை (?) சிரிப்பா சிரிக்க வைச்சிட்டாரு :-))))

இதுக்கு எல்லாம் எனக்கு ஸ்பெல்லிங்க்கூட தெரியாத சின்ன பையன் நான் :-)

Suka said...

இதோ .. இங்கிருக்கு அந்த போட்டோஸ்..

http://sukas.blogspot.com/2006/06/nba.html

Karthik Jayanth said...

//கார்த்தியண்ணே!!,அடங்காத பார்ட்டியல அடக்குற 'டக்கீலா'
இங்கயும் 'பேமஸ்'தானுங்ணா!!!.)


தல கைப்புவோட அறிவிக்கபட்ட அதிகாரபூர்வ இல்லம் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து
களப்பணி ஆத்திகிட்டு இருக்கும் தோழரே,

நல்ல விஷயம்ங்குறது நல்லவங்க இருக்குற இடத்தில் எல்லாம் பேமஸ் ஆகுறது ஜகஜம்.. என்னா எல்லாத்துக்கும் இது வாலிப வயசு :-)

நாமக்கல் சிபி said...

//சொல்லிக்கொண்டே போக ஆங்காங்கே ஒவ்வொரு கண்டத்திலிருக்கும் சங்க செல்வங்களின் மானிட்டர்கள் ஆட்டொமேடிக்காக shutdowm ஆகிறது//

ஓ! நம்ம மானிட்டர் தானாவே ஷட் டவுன் ஆனதுக்கு இதுதான் காரணமா? இன்னிக்கு கூட "தர்மான பதிவொண்ணு தா" ன்னு கொத்ஸ் அவர்களோட பதிவை திறந்ததுமே மானிட்டர் ஆஃப் ஆயிடுச்சு!

நாகை சிவா said...

வாங்க சுகா!
சங்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். NBA எல்லாம் ஏற்கனவே ஒரு கை பாத்துச்சுங்க. அதுமில்லாம NBA வருசம் வருசம் நடக்குது. இந்த உதைப்பந்து, கிரிக்கெட் எல்லாம் நாலு வருசத்துக்கு ஒரு தடவை தானே வருது, அதனால் இப்பவே ஒரு கை பாத்துடலாம் என்று தான் நம் தல இதில் குதித்து விட்டார். அடுத்த NBA Playoffs ல ஒரு கலக்கு கலக்கிடலாம்., என்ன.......

தல... தனக்குள் - உலகத்தில் எத்தனை விதமான விளையாட்டு இருக்கோ அத்தனையிலும் நம்ம இறக்கி அடி வாங்க விட மாட்டானுங்க போல இருக்கு. எல்லாம் விதி. அங்காள பரமேஸ்வரி நீ தான்மா இன்ன உசுரோட ஊர் போயி சேர்க்கனும்.

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.
பொன்ஸ்~~Poorna said...

//சரி கமிட்மென்ட்ன்னா நீங்க எல்லாரும் என்ன நினைச்சிகிட்டு இருக்குறிங்க.. உங்களுடைய புரிதல் என்ன ? //

இது கூட தெரியாம இருக்க நாங்க என்ன சின்னக் குழந்தையா?!!

// ஏற்கனவே பதிவு போடுறேன்னு எங்க அண்ணன் வீரத்தின் விளை நிலம் விவசாயி, கேள் பிரண்ட், டான்ஸ்பார் ,பெல்லி டான்ஸ், லாஸ்வேகாஸ்ன்னு இமேஜை (?) சிரிப்பா சிரிக்க வைச்சிட்டாரு :-))))
//
அதெல்லாம் விடுங்க கூட்டாளி. இங்கிட்டு யாருக்கும் தெரியாத மேட்டரையா பாண்டியும் இளாவும் எழுதிட்டாய்ங்க?!!

நாகை சிவா said...

கார்த்திக்!
உங்களை பத்தி தவறாக ஏதும் கூறவில்லையே.
நம்ம தல மாதிரி எனக்கும் பால் வடிகிற பாலக மனசுங்க, ஏதாவது கேட்டா பட்னு சொல்லிடுவோம்.... ஆனா மனசுல எதையும் வைத்துக் கொள்ள தெரியாது.

இது மாதிரி ஏதும் இல்லனு கொஞ்சம் சொல்லுங்க, கேட்க வேண்டியவங்களுக்கு கேட்குற மாதிரி.

நாகை சிவா said...

//நம்ம தான் அடுத்து டீப் போடுவது எப்படின்னு அடுத்த கட்டத்துக்கு போய்ட்டோமே!!//
ஆஹா, என்ன ஒரு அசுர வளர்ச்சி....
, இதில் உள்குத்து, வெளிக்குத்து ஏதும் கிடையாதுங்க. உண்மையில் பாராட்டு மட்டும் தானுங்க...........

நாகை சிவா said...

//(பாண்டி!!சிவாவையும்
சமாதனப்படுத்திட்டேன் பாரு!!!.)//

துபாய் ராசா, பாசகார பயபுள்ளயா இருக்கீயே..........
துபாய்ல நீ பறக்க விட்ட வெள்ள கொடி சூடானையும் தாண்டி தென் ஆப்பிக்கா வரை தெரிகிறதாம். அதனால அது கொஞ்சம் இறக்கிடு ராசா.
சமாதானம்.... சமாதானம்.

ஜொள்ளுப்பாண்டி said...

//நல்ல விஷயம்ங்குறது நல்லவங்க இருக்குற இடத்தில் எல்லாம் பேமஸ் ஆகுறது ஜகஜம்.. என்னா எல்லாத்துக்கும் இது வாலிப வயசு :-) //

என்னா கார்த்தி உங்களை சங்கத்தோட டெக்னிகல் புட்பால் கமிட்டி தலைவராக்கியிருக்கேன் ஒரு உற்சாகம் இல்லை :( ஒரு தெம்பு இல்லை :( என்ன ஆச்சு? உங்க அருமை பெருமைகளைப் பார்த்து புல்லைரிச்சிபோய்தானே இத்தனையும் :))

ஜொள்ளுப்பாண்டி said...

//அட தலைக்காவது அது தெரிஞ்சிருக்கு.. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஓவனும், அரிசி சாதமும்ந்தான்!!! என் நிலைமை இப்படியாகணுமா?!! //

அற்றலரசிக்கு இப்படியொரு நிலையா??
கலங்க வேண்டாம் பொன்ஸக்கா அண்ணன் கார்த்திக்கோட பதிவுகளை போய் படிச்சி பாருங்க. நானே அப்படித்தான் என் புட்பால் அறிவை வளர்த்திகிட்டேன்னா பாருங்களேன் !!!

ஜொள்ளுப்பாண்டி said...

//பாண்டி முன்னுரையில் என் பெயரை துபாய் ராசாவ சமாதனப்படுத்த தான் விட்டிங்கனு எனக்கு தெரியும், ஆனா துபாய் ராசாவுக்கு தெரியாதுல, அதுக்கு தான் இதை இங்கு கூற வேண்டி உள்ளது. //

சூடானிலிருந்தாலும் சூளைமேட்டில் இருந்தாலும் அல்லும் பகலும் சங்கத்தை தோளிலும் மாரிலும் சுமந்து சோர்வுறாமல் சங்கப்பணியாற்றிவரும் ஆப்பிரிக்க அடலேறு அன்பின் சிங்கம்
ஆற்றாமையோ ஆனந்தமோ புன்படாவண்ணம் எடுத்துரைக்கும் எனதருமை பாசபலர் நாகை சிவா அவர்களே !!!

சிவாண்ணே போதுமா ?? மன்னிச்சிக்குங்க சிவா.கூட்டணி பெரிசாய்டுச்சா !! என்ன பன்றது நானும் யாரையும் விட்டுட கூடாதுன்னுதான் முயற்சி பண்ணுனேன் :))

ஜொள்ளுப்பாண்டி said...

//(பாண்டி!!சிவாவையும்
சமாதனப்படுத்திட்டேன் பாரு!!!.)//

துபாய் தோழா !! என்னேயுன் பாசம் !! தெரிகிறது உன் நேசம் ! துபாய் துபாய்தான் !!! :))

Anonymous said...

"VVS" Laxman Varutha Padatha Valibar Sangathula senthutara ? :)

munna

Anonymous said...

"VVS" Laxman Varutha Padatha Valibar Sangathula senthutara ? :)

munna

Karthik Jayanth said...

சூடான் சிறுத்தையே சிவா,

நட்பின் நந்தவனமே ! பாசத்தின் பண்பாளனே ! சிங்கிள் மால்ட் விஸ்கி போல நல்ல உள்ளம் கொண்டவரே நாம் இருவரும் கருத்து வேற்றுமை இல்லாத இரு உள்ளங்கள் என்பதை அக்கா ஆற்றரலசி அறியாததல்ல.. இருந்தாலும் அவர்களின் அடுத்த அவியல் ஆராய்ச்சியால் எழுந்த புதிய சிந்தனைகளால் சங்கத்தின் சிங்கங்களை சோதனை செய்து பார்க்கிறார்கள் என்றே நாம் கருத வேண்டிய கட்டயத்தில் ஊள்ளோம்.. காலம் சொல்லும் நம் நட்பை !

மேட்டர் என்னான்னா அக்கா நம்மள மைக் டெஸ்டிங் பண்ணுறங்க :-)

(அடடா இந்த மாதிரி யாருக்கும் புரியாம / யாரும் கோவிச்சுக்காம ஒரு அறிக்கைய எழுதுறதுள்ள மூளை சூடாகுது இந்த வெயில் காலத்துல)

Syam said...

//இத தான் எங்க ஊர் பக்கம் நோகாம நொங்கு திங்குறதுன்னு சொல்லுவாங்க//

என்ன Karthik தலைக்காக ஒரு சேவை பன்னலாம்னு நினைச்சேன் இத போயி இப்படி சொல்லீட்டீகளே

Karthik Jayanth said...

ஆற்றலரசி பொன்ஸ்,

//இது கூட தெரியாம இருக்க நாங்க என்ன சின்னக் குழந்தையா?!!

முதல்ல நீங்க என்னன்னு சொல்லுங்க அப்புறம் சொல்லுறேன் அது சரியா தவறான்னு.. இப்படி விபரம் தெரியாத சின்ன குழந்தையா இருக்குறிங்களே அக்கா நீங்க :-)..

//இங்கிட்டு யாருக்கும் தெரியாத மேட்டரையா பாண்டியும் இளாவும் எழுதிட்டாய்ங்க?!

ஓ .. இதுல இப்படி வேறயா ? :-) நடக்கட்டும். நடக்கட்டும்..

//நம்ம தான் அடுத்து டீப் போடுவது எப்படின்னு அடுத்த கட்டத்துக்கு போய்ட்டோமே!!//

பாச மலரே உங்க இமலய சாதனைய நினைச்சி பேச்சே வரல .... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

***

தவணிகனவுகள் கண்ட தங்க மகன் அண்ணன் ஜொள்ளு பாண்டி அவர்கள்

வாழ்க !

வாழ்க !!

வாழ்க !!!

// ஒரு உற்சாகம் இல்லை :( ஒரு தெம்பு இல்லை :( என்ன ஆச்சு? உங்க அருமை பெருமைகளைப் பார்த்து புல்லைரிச்சிபோய்தானே இத்தனையும் :))

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா இருக்கு :-) சரி விடுங்கண்ணே.. இப்போதைக்கு

உற்சாகத்துக்கு 10001 கேஸ் Foster களும்(வெயில் காலத்துக்கு ஏத்தமாதிரி),

தெம்புக்கு நாமக்கல்லுல இருக்குற 10 கோழி பண்ணையையும்

வாங்கி நம்ம சென்னை கிளைக்கு அனுப்பிச்சிறேன் :-)

அருமை பெருமைகளை பார்த்து மட்டுமே மகிழ்ந்த மாதிரி நீங்களும் பார்த்து மகிழ லாஸ்வேகஸ்க்கு சங்கத்து வண்டியான 'ஏர்கைப்பு' ல இருந்து ஒரு வண்டிய கட்டிகிட்டு வாங்க.. மெயின் செலவு என்னுது.. ஊறுகா உங்களுது சரியா :-)))))))

***

வாங்க syam,

உங்க Gross itching கடமை உணர்ச்சிய நினைச்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

துபாய் ராஜா said...

/உற்சாகத்துக்கு 10001 கேஸ் Foster களும்(வெயில் காலத்துக்கு ஏத்தமாதிரி),/

அண்ணே!கார்த்தியண்ணே!அந்த 10001ஐ'பட்வைசர்'ம்,'ஹெனிகினு'மாபகுதியா பிரிச்சு தொகுதிவாரியா அனுப்பிச்சுவிடுங்க!பயபுள்ளய அனுபவிச்சுட்டுப் போகட்டும்.

(துபாய்)ராஜா.

துபாய் ராஜா said...

உற்சாகத்துக்கு 10001 கேஸ் Foster களும்(வெயில் காலத்துக்கு ஏத்தமாதிரி),/

அண்ணே!கார்த்தியண்ணே!அந்த 10001ஐ'பட்வைசர்'ம்,'ஹெனிகினு'மாபகுதியா பிரிச்சு தொகுதிவாரியா அனுப்பிச்சுவிடுங்க!பயபுள்ளய அனுபவிச்சுட்டுப் போகட்டும்.

(துபாய்)ராஜா.

துபாய் ராஜா said...

/துபாய் தோழா !! என்னேயுன் பாசம் !! தெரிகிறது உன் நேசம் ! துபாய் துபாய்தான் !!! :))/

ஆமாம் அன்புத்தம்பி பாண்டி!
இன்று நீ கூறியதைதான் அன்றே
அய்யன் திருவள்ளுவர்,

"துபாயருக்கு துபாய துபாய்க்கி துபாய் என துபாயெங்கும் துபாய் துபாய்!".

என்று கூறியுள்ளார்.;-)))))))))))).

(துபாய்)ராஜா.

துபாய் ராஜா said...

/துபாய் தோழா !! என்னேயுன் பாசம் !! தெரிகிறது உன் நேசம் ! துபாய் துபாய்தான் !!! :))/.

ஆம் பாண்டி ஆம்!நம் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் ஆழ்(கடல்)!.

இந்த அன்பால்தானே அரபிக்கடல் அகண்டுவிட்டது.வங்காளவிரிகுடா
வளைகுடா வரை வந்துவிட்டது.
இந்துமகா சமுத்திரம் நம் 'சங்கசிந்து'
பாடித்திரிகிறது.;-))))))))))).

(துபாய்)ராஜா.

பொன்ஸ்~~Poorna said...

//மேட்டர் என்னான்னா அக்கா நம்மள மைக் டெஸ்டிங் பண்ணுறங்க :-)//
மைக்ரோவேவ்ல டெஸ்ட் பண்ணி சோர்ந்து போயிருக்கேன்.. மைக் டெஸ்டிங்க்னு நக்கலா பண்றீங்க?!! அத்தன பயலுக்கும் வச்சிருக்கோம் ஆப்பு அடுத்த பதிவுல.. பாருங்க!!:) எத்தனை கேள்வி.. பதில் சொல்லுங்க எல்லாரும்!!!

Karthik Jayanth said...

அடடே ராஜா,

//அண்ணே!கார்த்தியண்ணே!அந்த 10001ஐ'பட்வைசர்'ம்,'ஹெனிகினு'மாபகுதியா பிரிச்சு தொகுதிவாரியா அனுப்பிச்சுவிடுங்க!பயபுள்ளய அனுபவிச்சுட்டுப் போகட்டும்.


பின்னுறிங்களே .. இதைத்தான் பண்புள்ள பார்ட்னர் உடையான் பீர் / பிராந்தி பாட்டில்களுக்கு அஞ்சான் அப்படின்னு 2 - ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர்கள் தத்துவ முத்துக்களா பொறிச்சி வச்சிருக்குறாங்க.

நீங்க சொன்ன மாதிரியே அனுபிச்சி வைச்சிடுறேன்.. இந்தியாவுக்கு நம்ம சங்கத்தின் மெயின் டிப்போவுக்கு அனுப்புற சரக்கை தரம் பார்த்து பிரித்து அனுப்பும் பெரிய பருப்பை சாரி பொறுப்பை அண்ணன்மார்கள் தேவும், பாண்டியும் மிகுந்த சிரமத்துக்கு இடையேயும் எடுத்துகொண்டுள்ளார்கள் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்

துபாய் ராஜா said...

கார்த்தியண்ணே!நம்ம ஊரு லோக்கல் சரக்கு முதல் அரேபிய,அமெரிக்க,
ஆப்பிரிக்க,ஆஸ்திரேலிய,ஸ்காட்லாந்து,ஐரிஷ் மற்றும் அனைத்து ஐரோப்பிய
நாடுகளது தயாரிப்புகளோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்ற முறையிலும் அடுத்த ஒரு மாதம் தாயகம் செல்வதாலும் நீங்க இந்தியாவுக்கு அனுப்புற சரக்கை தரம் பார்த்து பிரித்து அனுப்பும் பொறுப்பில்
தேவுக்கும்,பாண்டிக்கும் எனது அனுபவ ஆலோசனைகளை அள்ளி வழங்குவேன் என்பதை இதன்மூலம்
தெரிவித்துகொள்கிறேன்.

(துபாய்)ராஜா.

Arun Dinesh Kumar said...

superaa irukku unga blog