Monday, December 6, 2010

...ஆகவே இனி யாரையும் கலாய்ப்பதில்லை...

(டிஸ்கி: வெறும் கலாய்ப்பது மட்டுமே நோக்கம். உங்களுக்குப் பிடிக்காத விஷயம் இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். நீக்கி விடுகிறேன்.

பதிவில் வருவது போன்ற உரையாடல்கள் நடக்கவே இல்லை.)

சென்ற பதிவில் யாரையும் குறிப்பிட்டுக் கலாய்க்கவில்லை என்று நிறைய கண்டனங்கள் வந்துள்ளன. எனக்குக் கலாய்க்க வரவில்லை என்கிற உண்மையும் தெரிய வந்துள்ளது எல்லோருக்கும். அதனால் இனிக் கலாய்ப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். கும்மிதான்.

எதுவா இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறது என் வழக்கம். பிள்ளையார் சுழி உயிரெழுத்து ‘உ’ மாதிரி இருக்கும். ‘அ’ வுக்கு முன் வரும் ‘உ’ அப்படின்னு சொல்லியே நான் ஒரு ரெண்டு பதிவு போட்டிருக்கேன். நீங்க படிச்சாத்தானே. சரி இப்போ யாரைக் கும்மப் போறோம்? வெரி குட் கண்டுபிடிச்சிட்டிங்களே. நம்ம உனா தானா அண்ணனைத்தான்.

தங்க்சும் (ம), ரங்க்சும் (க) பேசிக்கொள்(ல்)வது போல உள்ளது.

ம: இவர் பேர் நல்லாருக்கே

க: ஆளும் சொக்கத் தங்கம்

ம: அவர் எப்படி எழுதுவாரு?

க: அவர் பயங்கர பாஸ்ட். ஒரு உதாரணம் சொல்றேன். சினிமாவப் பாத்துக்கிட்டே இருப்பார். தியேட்டர்ல வணக்கம் போடறதுக்கு முன்னாடி இவர் முப்பது பக்கத்துல விமர்சனம் போட்டுடுவார்

ம: அடுத்த ஷோ வணக்கத்துக்கு முன்னாடியா?

க: போடி இவளே, அவர யாருன்னு நெனச்ச, அதே ஷோ முடியறதுக்குள்ளே

ம: எங்க நான் கொஞ்சம் படிக்கிறேன் (படித்து முடித்துவிட்டு) ஏங்க இவர் பேருக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய நம்பர் வெச்சிருக்காரு?

க: அவர்ட்ட கேட்டேன். அவ்ளோ ஹிட் வந்ததற்கப்புறம் தான் எழுதுவதை நிறுத்துவாராம்

ம: ரொம்ப நீளமா எழுதுறாரே?

க: நீ வேற, அவர் மல்டிபிள் சாய்ஸ் ஆன்செர்ஸ் எக்ஸாம்ல கூட அடிஷனல் சீட் கேட்டவராம்

ம: திரைக்கதை ஸ்கிரிப்ட் தொலைஞ்சு போனாக் கவலையே படவேணாம். இவர் பதிவுல இருந்து மீட்டுக்கலாம். ஏங்க நான் நெனைக்கிறத சொல்லட்டுமா?

க: எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சொல்லு பரவால்ல

ம: இவரோட வேகத்தைப் பார்த்தா இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்துல லாரன்ஸ் நெழல விட வேகமா சுடுவாரே அது ஞாபகம் வருதுங்க

க: தேவலையே அப்புறம்

ம: இவர் விளக்கமா எழுதுறதப் பார்த்தா சிங்கம் படத்துல சூர்யா, ராதா ரவி கேட்ட ஒரு கேள்விக்கு எல்லாத் தகவலும் தருவாரே அது ஞாபகம் வருதுங்க

க: நீ வுட்டா ரசிகர் மன்றமே வச்சிடுவ போலிருக்கே. சரி வா அடுத்து வேற ஒரு பதிவரைப் பத்திப் பாப்போம்.

ம: போங்க நீங்க, நான் என்ன வெட்டியா, எனக்குக் கிச்சன்ல வேலை இருக்கு. நீங்க ஒன்னு பண்ணுங்க. விஜி உங்களை விட வெட்டியா இருப்பாங்க. அவங்களுக்குப் போன் போட்டு ஐடியா கேளுங்க.

க: சரி சரி, இதெல்லாம் சொல்லிக்கிட்டு. ஆனாலும் ஐடியா சூப்பர். நான் விஜிகிட்ட பேசறேன்.

(விஜி பேசுவது சாய்வு எழுத்துக்களில்)

தத்து மம்மி, நான் கோபி பேசறேன்

சொல்லுங்க. என்னங்க என்னையே கலாய்க்கிறீங்க

சரி சரி லூஸ்ல விடுங்க. இனிமே நோ கலாய்த்தல். நேரா கும்மிதான். உனா தானா அண்ணனைக் கும்மியாச்சு. அடுத்து யாரைக் கும்மலாம்னு ஐடியா கொடுத்தீங்கனா...

நீயே சொல்லு.

நம்ம காபா எப்படி?

சரிதான், கும்மிடலாம்.

இந்தப் பேரே எனக்கு ரொம்பப் பிடிக்கும்

ஏன்?

நம்ம பொடியன் ஒரு வயசுல சின்ன சின்னதா வார்த்தைகள் பேசுவான். கொஞ்சம் போல சுருக்கி சொல்வான்.

சாக்லேட்- சாக்கு
கல்கண்டு – காக்கு

அதே போல இரண்டு வார்த்தைகள் வரும் இடத்தில் அப்ரிவியேட் (abbreviate) பண்ணுவான். அப்பா உன்னை எப்படிக் கொஞ்சுவார்னு கேட்டா காபா (கண்ணா பாப்பா) என்று சொல்லுவான். எனக்கு அந்த ஞாபகம் வருது.

அதெப்படி கோபி உன் பையன் இவ்ளோ புத்திசாலியா இருக்கான்?

அழகிலும், அறிவிலும் அவன் அவங்க அம்மாவைப் போல.

அதானே பாத்தேன். காபாவைக் கண்ணே பாப்பான்னுல்லாம் கொஞ்சாதீங்க. நல்லாவே இல்லை. மேலும் நீங்க போன் பண்ணது அவரைக் கும்மத்தான் அப்படிங்கறதை ஞாபகம் வெச்சுக்கோங்க.

சரி சரி, இவரோட வலைப்பூவில் என்ன சொல்லி இருக்கார்னு பாத்தீங்களா?

நல்லாத்தானே இருக்கு. மதுரைக்காரன் அப்ப்டிங்குறதுல பெருமைன்னு சொல்லியிருக்கார்.

அது சரி. ஆனா மதுரை இவரைப் பத்தி என்ன நினைக்குதுங்குறதுதான் முக்கியம்.

அப்படிப் பாத்தா நீ, நான்லாம் பதிவராவே இருக்க முடியாது கோபி.

விஜி, நீங்க பதிவரா?

சரி சரி, லூஸ்ல விடுங்க.

காபாவுக்கு ஒலக இலக்கிய வியாதி உண்டு. ச்சே தப்பா சொல்லிட்டேன். அவர் ஒரு உலக இலக்கியவாதி. உள்ளூர் இலக்கியமும் தெரியும். ஆனா ஊனா ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போய் ஒரு புக்கு வாங்கிட்டு வந்து அதை கூகிள் பஸ்ஸில் போட்டுடுவார். நான் உடனே அதைப் பத்தி ஒரு நாலு லைன் கமென்ட் போட்டுடுவேன்.

எனக்கும் தெரியும் அது. அது சரி கோபி, உன்கிட்ட இருக்குறதே மொத்தமா நாலு புக்குதான். அதுல நீ படிச்சதே நாலு பக்கம்தான். அதெப்படி நிறைய படிச்ச மாதிரியும், நிறைய புக்கு இருக்குற மாதிரியும் சமாளிக்க முடியுது உன்னால?

ரொம்ப சிம்பிள் விஜி. எல்லாப் பதிப்பகத்தின் நூல் பட்டியலைக் கையில் வெச்சுக்கிட்டா மேட்டர் ஓவர்.

சரி சரி காபா மேட்டர் என்னாச்சு.

இவர் சமீபத்துல என்ன பண்ணார்னு கேளுங்க. கிகுஜிரோ பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். நந்தலாலா பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். அடுத்து ரெண்டையும் சீன் பை சீன் ஒப்பிட்டு ஒரு பதிவு வரும்னு நினைக்கிறேன்.

கோபி அந்த எஸ்ரா மேட்டர்...

இவர் எஸ்ரா பாணில காமெடின்னு நினைச்சு ஏதோ எழுதப் போக எல்லாரும் அதுக்கு சீரியசா பின்னூட்டம் போட ஆரம்பிச்சாங்க. இவரே வந்து இது காமெடி அப்படின்னு சொல்ல வேண்டியதாப் போச்சு. ஹா ஹா, ஜோக்கு முடிஞ்சிடிச்சி விஜி, இப்ப நீங்க சிரிக்கணும்.

ஹா ஹா ஹா போதுமா? நீங்க ஒரு ஆணாதிக்கவாதி கோபி

தத்து மம்மி, என்னாச்சு?

பாருங்க பெண் பதிவர்களைக் கலாய்க்க மாட்டேங்குறீங்க?

இவ்ளோதானே. இருங்க சீட்டுக் குலுக்கிப் போடறேன். யார் பேர் வருதுன்னு பாப்போம்.

(வந்தது விதூஷின் பெயர்)

விஜி, விதூஷ் பேர் வந்திருக்கு.

எல்லா சீட்லயும் விதூஷ் பேர்தான் எழுதிப் போட்டாயோ?

என்ன நம்பிக்கையே இல்லாம?

சரி சரி சொல்லு

நீங்க இந்தக் கண்ணன் பட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்னு பாரதியார் எழுதின கவிதைத் தொகுப்புகளைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க.

கோபி, பாரதியார் பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க. வீட்டுக்கு லாரியே வரும்.

அவசரப்படாதீங்க. இவங்க அதே மாதிரி, முழிபேர்ப்புக் கவிதைகள், இந்தா பிடிச்சுக்கோ கவிதைகள், சயனைடு கவிதைகள் எல்லாம் எழுதி இருக்காங்க.

நானும் படிச்சேன். முழி நிஜமாவே பேந்து போச்சு.

இப்போல்லாம் தங்க்ஸ் எனக்குக் குடுக்கிற பனிஷ்மென்ட் இதான். இந்த மூணு கவிதையையும் கோடு போட்ட நோட்டுல மார்ஜின் போட்டு, ஸ்கெட்ச் பென் எல்லாம் யூஸ் பண்ணி ஒவ்வொரு கவிதையையும் பத்து பத்து வாட்டி எழுதணும். அடித்தல் திருத்தல் இல்லாம. பின்னூட்டங்கள் உட்பட எழுதியாகனும். இந்த முழி பேர்ப்புக் கவிதைகளுக்கு ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யா கோனார் நோட்ஸ் எல்லாம் கூடப் போட்டிருக்காங்க.

அந்தக் கொடுமை வேறயா? அடுத்து யாரைக் கலாய்க்கப் போறீங்க? ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யாவா?

இல்லை விஜி, ஆபீஸ் போகணும்.

உன் நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு. ஆபீஸ் போகனும்னுதான் சொல்ற. வேலை பாக்கனும்னு சொல்லலை. சரி வை போனை.

?????!!!!!!

17 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

உண்மைதான். நீங்க யாரையும் கலாய்க்கவே இல்லையே.
தங்கமணி உ.த.அண்ணனையும், விஜி உங்களையும் தான் கலாய்ச்சிருக்காங்க. அங்கங்க உங்களையே நீங்க கலாய்ச்சி இருக்கீங்க.
:)

விஜி said...

அடப்பாவி நாரதர் வேலையை இம்புட்டு நாசுக்கா பண்ணிருக்கையே...நான் ஊருல இல்லீங்கோ:))

Balaji saravana said...

//அவர் மல்டிபிள் சாய்ஸ் ஆன்செர்ஸ் எக்ஸாம்ல கூட அடிஷனல் சீட் கேட்டவராம் //

ஹா ஹா.. எப்புடி இப்படியெல்லாம்

கார்த்திகைப் பாண்டியன் said...
This comment has been removed by the author.
கார்த்திகைப் பாண்டியன் said...

பெப் பத்தல கோபி.. மாதாஜி துணைக்கிருக்க உள்ள இறங்கி அடிக்க வேணாமா? உங்கள ரொம்ப நல்லா கலாய்ச்சு இருக்கீங்க..;-)))

☀நான் ஆதவன்☀ said...

:)))

அட என்ன கோபி இன்னும் நல்லா கலாய்க்கனும் சரியா? அதுவும் முக்கியமா விஜி, விதூஷ் ரெண்டு பேரையும் :)

Chitra said...

கலக்கல்!

பார்வையாளன் said...

சிரிச்சு முடிச்சுட்டு அப்புறமா என் கருத்தை சொல்றேன்

பிரவின்குமார் said...

Ha ha super.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

போட்டு தாக்குங்க

வித்யா said...

அந்த பயம் இருக்கட்டும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்றி.. நன்றி.. நன்றி.. உங்களுக்கும், உங்க தங்கமணிக்கும்..!

நன்கு தெரிந்தவர்களைவிட.. முகம் பார்க்காதவர்கள், பேசியிருக்காதவர்கள் நம்மைப் பற்றி உரிமையுடன் கிண்டல் செய்வதுகூட ஒருவிதத்தில் நெருக்கமான ஒரு உறவைத் தருகிறது..!

நன்றிகள் கோபி..!

Vidhoosh said...

:))) கோபி : ரொம்ப பயந்து பயந்து எழுதினாப்ள இருக்கே. அந்த பயம் இருக்கட்டும். :))) # கவுஜையொன்னு பாடவா...

கா கா கடி கடிச்சு கொடுன்னு சொல்ற
தொலைந்து போன என்
பால்யத்தின் பற்களுக்கு
இன்னா செய்வேன்
#ஒரு தாத்தாவின் பால்ய நினைவுகளின் ஏக்கங்கள் [கவிஞ்சர் விதூஷ்]

Gopi Ramamoorthy said...

பெயர் சொல்ல விரும்பவில்லை, நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கு.

விஜி,:)

பாலாஜி சரவணா, அது அப்படித்தான்

காபா, அடுத்த வாட்டி ஒழுங்கா செய்றேன்

நான் ஆதவன், அடுத்த வாட்டி நல்லாக் கலாய்க்கிறேன்.

சித்ரா, நன்றி

பார்வையாளன், சிரிச்சு முடிச்சாச்சா?!


பிரவீன் குமார், மிக்க நன்றி

ஆர் கே சதீஷ்குமார், மிக்க நன்றி

வித்யா, பயமெல்லாம் கிடையாது. இனி வரும் பதிவுகளில் உங்களையும் கலாய்ப்போம்!

உண்மைத் தமிழன், லண்டன்ல இருந்தே நான் உங்களுக்குப் போன் பண்ணினே, ஞாபகம் இருக்காதே. மத்தபடி இது நானே எழுதியது. தங்க்சிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. டிஸ்கியில் சொல்லி இருக்கிறேனே

Gopi Ramamoorthy said...

விதூஷ், :)))

asiya omar said...

கலாய்ச்சமாதிரிதான் தெரியுது.

Gopi Ramamoorthy said...

ஆசியா ஓமர் சிஸ்டர், :)