Monday, December 13, 2010

தங்க்ஸ் பாடும் பாடு

ரங்ஸின் பாச்சா தங்ஸிடம் பலிப்பதில்லை. மாமியார்தான் சரி.

**************************************

மாமியார்: தொவச்ச துணிய ஏன் ஒனத்தாம வெச்சிருக்க?

மருமகள்: மழை பெய்யிது அத்தை

மாமியார்: (ஒரு வினாடியில் சுதாரித்துக் கொண்டு), அதனால என்ன குடையைப் பிடித்துக் கொண்டு ஒனத்துறது?

மருமகள்: ?!

****************************************

மாமியார்: ஒங்க மனுஷா யாருமே லெட்டர்ல பின் கோடு எழுத மாட்டாளா?

மருமகள்: இனிமே எழுதச் சொல்றேன் அத்த. ஆனா டெலிவரி ஆன லெட்டர்ல எல்லாம் ஏன் பின் கோடு எழுதுறீங்க?

மாமியார்: (வழக்கம் போல ஒரு வினாடியில் சுதாரித்துகொண்டு), நீங்களும் செய்ய மாட்டேள், செய்றவாளையும் செய்ய விட மாட்டேள். ஒங்காத்து வழக்கமே இதானே

மருமகள்: ?!

*************************************************************

மகன்: நம்ம அபார்ட்மென்ட் புது செக்ரட்டரி நான்தான்

மருமகள்: ஏங்க இந்தத் தேவையில்லாத வேல?

மாமியார்: (முழு உரையாடலையும் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல்) போன வாரம் உன் தம்பி அந்த மியூசிக் சபால செக்ரட்டரி ஆனப்போ அவ்ளோ சந்தோசப்பட்ட. ஆம்படையான் எதுக்கோ செக்ரட்டரி ஆயிருக்கான். சந்தோஷப் படாம ஏன் இப்படி அலுத்துக்கற?

மருமகள்: ?!

***************************

மருமகள்: ஏங்க ஏதோ முக்கியமான e-மெயில் வரணும்னு சொன்னீங்களே, வந்துதா?

மாமியார்: அவன் g-மெயிலுக்கு மாறி ரொம்ப வருஷம் ஆச்சுது. நீ இப்ப வந்து e-மெயில், f - மெயிலுங்குறியே

மருமகள்: ?!

*************************************************************

மருமகள்: என் தம்பிக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்காம்

மாமியார்: இரு கோடுகள் படத்துல நாகேஷ் சொல்ற மாதிரியில்ல இருக்கு. வேல செய்ரவாளுக்கு வேலையும், வேலை செய்யதவாளுக்கு ப்ரோமொஷனும் கொடுப்பா போலருக்கே

மருமகள்: ??
***********************************************************

மருமகள்: அத்தை, என் தம்பி IAS எக்சாம்ல தமிழ் நாடு அளவுல பத்தாவது ரேங்க் எடுத்துப் பாஸ் பண்ணிருக்கான்

மாமியார்: ஓ, அவன விட ஒன்பது பேர் நல்லா படிச்சிருக்காங்கன்னு சொல்லுமருமகள்:?!

*********************************************

மருமகள்: ஏம்பா டிரைவர், மெதுவாப் போப்பா. ரயிலுக்கு இன்னும் நெறைய நேரம் இருக்கு

மாமியார்: அவர் போற ரயிலுக்கு நேரம் ஆய்டுச்சோ என்னவோ? நீ போறபடி போப்பா.

மருமகள்:?!

*********************************************

மருமகள்: என் தங்கை எழுதிய கதை நாம வாங்கற வாராந்தரி பத்திரிக்கையிலே வந்திருக்கு அத்தை

மாமியார்: என் பொண்ணு ப்ளாக் எழுதுறா. ஒன தங்க கதைய அந்த புக் வாங்கினவங்க மட்டும்தான் படிக்க முடியும். என் பொண்ணு எழுதறத உலகமே படிக்கலாம். இன்னொன்னு தெரிஞ்சுக்கோ. பேப்பர்ல இருக்க எழுத்தோட ஆயுள் கொஞ்ச நாள்தான். பதிவுல எழுதுறது சந்திர சூரியன் உள்ளவரை இருக்கும்.

16 comments:

vinu said...

here also me the firsttttttttttttttttu

raji said...

மருமகள்: என்னங்க இப்பிடி எழுதிருக்கீங்க.பாவங்க இத படிக்கறவங்க.


மாமியார்:உன்னோட என் பையன் இருக்கறத விடவா?மருமகள்: ?!

ILA(@)இளா said...

மருமகள்: பார்த்தீங்களா உங்க பையன் உங்க மானத்தை எப்படி வாங்குறார்னு?

மாமியார்: மாமியார்ங்கிற இடத்துல மருமகளும், மருமகள் அப்படிங்கிற இடத்துல மாமியார்னும் இருந்துச்சு. நாந்தான் போனாப் போவட்டும்னு மாத்திட்டேன். we are very much improved in technology

சுசி said...

மருமகள்: இன்றைய மருமகள் நாளைய மாமியார்.

மாமியார்: ?!

ஆவ்வ்வ்வ்..

கோபி.. அசத்திட்டிங்க போங்க. இப்போ புரியுது நீங்க எவ்ளோ பொறுமைசாலின்னு :))

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha,ha.... :-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

:)

(smilie mattum poduvorukku smilie poduvor sangam)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மருமகள்: அத்தை, என் தம்பி IAS எக்சாம்ல தமிழ் நாடு அளவுல பத்தாவது ரேங்க் எடுத்துப் பாஸ் பண்ணிருக்கான்

மாமியார்: ஓ, அவன விட ஒன்பது பேர் நல்லா படிச்சிருக்காங்கன்னு சொல்லு

மருமகள்:?!//

Class!

விஜி said...

அய்யோ அய்யோ தலையை சுவத்தில முட்டிக்கற சத்தம்

வித்யா said...

ரத்தம் வருது:))))))

அம்பிகா said...

மாமியார்: (ஒரு வினாடியில் சுதாரித்துக் கொண்டு), அதனால என்ன குடையைப் பிடித்துக் கொண்டு ஒனத்துறது?
ஹா...ஹா... ஹா....

middleclassmadhavi said...

அருமை

ஹுஸைனம்மா said...

அந்த ஜி/இ/எஃப் மெயில்தான் கிளாஸ்!! மாமியார்களும் இப்ப ரொம்ப விவரமாயிட்டு வர்றாங்களாக்கும்!! ;-)))

Madhavan Srinivasagopalan said...

எல்லாமே சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் நண்பரே.

நாகை சிவா said...

கலக்கல்ஸ்

எம் அப்துல் காதர் said...

பாவம் வருங்கால மாமியார்ஸ் :)) இப்படி கண்ணை தொடச்சுக்க வச்சுட்டீங்களே!!

மதுரை சரவணன் said...

ரசித்தேன்.அத்தனையும் அருமை... வாழ்த்துக்கள்