Wednesday, December 8, 2010

லேடீஸ் ஸ்பெஷல்

என்ன இப்படிக் கிறுக்கி வெச்சிருக்கீங்கன்னு யாரும் கேட்டுட முடியாது இவங்களை. அதுக்குத்தான் ப்ளாக் பேருலயே கிறுக்கல்கள் அப்படிங்குற வார்த்தையை வெச்சிருக்காங்க. வழக்கமா நாம போடற பதிவுக்கு டிஸ்கி எழுதுவோம். இவங்க கொஞ்சம் மேல போய் வலைப்பூவுக்கே டிஸ்கி கொடுத்திருக்காங்க.

சரி என்னதான் எழுதுறாங்கன்னு, மன்னிக்கவும், கிறுக்குறாங்கன்னு போய்ப் பாத்தா தொலைஞ்சீங்க. வாரா வாரம் ஒரு ஹோட்டலுக்குப் போயிட்டு அங்க உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு ஒரு பதிவு அதைப் பத்தி. பர்ஸ் எடுத்துட்டுப் போறாங்களோ இல்லையோ கேமராவும் கையுமாப் போய்டுவாங்க போல. வித விதமா போட்டோ. படிக்கிறவங்களை வெறுப்பேத்துறதுக்கே போட்ட மாதிரி இருக்கும்.

இந்தப் பதிவுகளுக்கு விஜி மேடம் ஒரு டெம்ப்லேட் பின்னூட்டம் போடுவாங்க. ‘பாத்துட்டேன் அப்புறம்’ அப்படின்னு. அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். என்னிய வுட்டுட்டு நீங்க மட்டும் போய் நல்லா சாப்புடுறீங்க அப்படிங்கறதுதான்.

சரி, இது தவிர வேற என்ன எழுதி இருக்காங்கன்னு பாத்தோம்னா விதூஷ் எழுதின கவிதைக்கு ஒரு கோனார் நோட்ஸ். கோபுலுன்னு விகடன்ல ஒரு கார்டூனிஸ்ட் இருந்தார். அதுல ஒரு கார்ட்டூன் ஞாபகம் வருது. ஒரு சிறுவன் அப்பா இருக்கும் அறைக்குப் போவான். அவர் அப்போதுதான் முகம் முழுதும் ஷேவிங் கிரீம் தடவி வைத்திருப்பார். சிறுவன் பயந்து போய் வேறொரு அறைக்குப் போவான். அங்கே அம்மா நிறைய பேசியல் கிரீம் கொண்டு முகம் பூரா அப்பி வைத்துக் கொண்டிருப்பார். சிறுவன் அதைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான். எனக்கு அது மாதிரிதான் ஆச்சு. விதூஷ் கவிதையை முதலில் படித்தேன். அதன் பின் வித்யாவின் கோனார் நோட்ஸ். நான் பதிவு எழுத ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே எனக்கு நடந்த இரட்டை விபத்து இது. இது போக இவர் நிறைய முழி பேர்ப்புக் கவிதைகள் எழுதியுள்ளார். உங்களால் ஒரு கவிதைக்கு மேல் படிக்க முடியாது. ஒரு கவிதை படித்து முடிக்கும்போதே முழி பேந்து விடுமே!

அது என்ன மாயமோ, பக்கோடா கட்டித் தரும் பேப்பரில் உள்ள விஷயம் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கும். அந்தப் பொது விதியை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி பக்கோடா பேப்பர்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். முழி பேர்ந்ததுதான் மிச்சம்.

அடுத்தது தி கிரேட் விஜி. இவங்களைப் பத்தி நான் ஒண்ணும் பெரிசா சொல்ல வேணாம். ஏற்கனவே இவங்க பேர்ல இருந்த வலைப்பூ ஒண்ணு காணாம போச்சு. கூகிளுக்கே பொறுக்கலை. அதான் காணாம போச்சு. இப்போ புதுசா ஒண்ணு. தி கிரேட் விஜி அப்படின்னு வலைப்பூ பேரு. எப்படியும் பெரிசா பதிவு ஒன்னும் போடப் போறதில்லை. அதனால பேர்லயாவது கிரேட் இருக்கட்டும்னு வெச்சிக்கிட்டாங்க போல.

எனக்கு ஒரு சந்தேகம் வரும். இவங்களை நம்பி எப்படி சங்கத்தோட பொறுப்பை ஒப்படைச்சாங்கன்னு. அப்புறம்தான் தெரியுது, யார் ரொம்ப வெட்டியோ அவங்க பொறுப்பில்தான் சங்கம் இருக்கிறது என்று. நான் கூட ரொம்பப் பெருமைப் பட்டேன். நம்மையும் எழுதக் கூப்பிடுகிறார்களே என்று. அப்புறம்தான் தான் தெரியுது, வெட்டியா உள்ளவங்களைத்தான் எழுதவே கூப்பிடுவாங்கன்னு. அதெப்படி விஜி, நான் வெட்டிங்குறதை இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சீங்க?

இவங்க மூணு பெரும் விட்ட (கூகிள்) பஸ்ஸை வரிசையா நிறுத்தினா நைல் நதி நீளம் வரும். அவ்ளோ பஸ். எழுந்ததும் பஸ், புக்கு படிச்சா பஸ், சாப்பிட்டா பஸ், இத்யாதி. இதுல வித்யா பேஸ் புக்குல இருந்து சில விஷயங்களை எடுத்து பஸ்ல விடுவாங்க.

பதிவிற்குச் சம்பந்தமில்லாத விஷயம்

நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து கிட்டத்தட்ட என் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுபவர்கள் பரிசல்காரனும் வித்யாவும் (கொஞ்ச நாளாய் பின்னூட்டங்கள் இல்லை, ஏன்?). நான் இன்று ஏதோ கொஞ்சம் சுமாராக எழுத அவர்கள் கொடுத்த ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம். என்னுடைய சுமாரான ஒரு பதிவை வலைச்சர ஆசிரியராக அவர் இருந்தபோது அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் காரணங்களுக்காக நான் வித்யாவுக்கு சரிவர நன்றிகள் ஒருபோதும் சொன்னதில்லை. இந்தத் தருணத்தில் சொல்லி விடுகிறேன். வித்யா, மிக்க நன்றி.

11 comments:

ILA (a) இளா said...

இவங்க மூணு பெரும் விட்ட (கூகிள்) பஸ்ஸை வரிசையா நிறுத்தினா நைல் நதி நீளம் வரும். அவ்ளோ பஸ். எழுந்ததும் பஸ், புக்கு படிச்சா பஸ், சாப்பிட்டா பஸ், இத்யாதி. இதுல வித்யா பேஸ் புக்குல இருந்து சில விஷயங்களை எடுத்து பஸ்ல விடுவாங்க.//
ப்ஸ்ஸூண்ணா என்னான்னு சொல்லுங்க சாரே. எங்களிடே அதிக்கி ஏக்செஸ் இல்லா

pichaikaaran said...

அவர்கள் சார்பா , நான் பின்னூட்டம் இட்டு வாழ்துக்களை சொல்லிக்கொள்கிறேன்

Philosophy Prabhakaran said...

பரிசல்காரர் இப்பொழுது பதிவெழுதுவதை குறைத்துக்கொண்டார் என்று நினைக்கிறேன்... கவலை வேண்டாம் நாங்க இருக்கோம்...

Giri Ramasubramanian said...

இங்க எட்டிப் பாக்கறது கூட தப்போ?

பை தி வே...

// இவர் நிறைய முழி பேர்ப்புக் கவிதைகள் எழுதியுள்ளார்.//

ஷோக்கா சொன்னீங்க....

விஜி said...

இவங்க பேர்ல இருந்த வலைப்பூ ஒண்ணு காணாம போச்சு.//

தம்ப்ர்ர்ர்ரி நீங்க புதுசன்னு தெரியுது. நாமள்ளாம் ஒரு பதிவு போட்ட மக்கள் அதை வச்சே மூன்று மாசம் ஓட்டுமளவிற்க்கு பவர்ஃபுல் எலுத்தாலர்கள் :))) தெரியலைன்னா அக்கம்பக்கம் கேட்டுதெரிந்து கொள்ளவும்

விஜி said...

வெறும் விஜியா இருந்தது போதும்னு தான் க்ரேட்விஜியானேன் கோபி ..அரசியல் புரிய இன்னும் நீ வளரனும் தம்பி

விஜி said...

பரிசல்..மவனே அவரு பாவமா ஒரு கதை போட்டி வச்சாரு, எழுதியே அவரை துரத்திட்டியே ..நல்லாரு ராசா

Vidhya Chandrasekaran said...

இன்னைக்கு நானா. நடக்கட்டும்.

நன்றி கோபி. கொஞ்சம் பெர்சனல் வேலைகளில் பிஸியாகிவிட்டேன். பதிவைப் படிக்கிறேன். கமெண்ட் தான் போடுவதில்லை. இனிமே ஆரம்பிச்சிடறேன்.

Unknown said...

அந்த மூன்று பேருக்கும் நன்றி!கோபியை வளர்த்திவிட்டதற்கு...

(ஆனா எங்க நிலைமைய கொஞ்சமாவது நினைச்சுப்பாத்தாங்களா?)

Unknown said...

//பரிசல்..மவனே அவரு பாவமா ஒரு கதை போட்டி வச்சாரு, எழுதியே அவரை துரத்திட்டியே ..நல்லாரு ராசா//
ahaa...அது உங்க வேல தானா?

R. Gopi said...

இளா, google buzz. இதில் சாட் பண்ணலாம்.

பார்வையாளன், மிக்க நன்றி

பிலாசபி பிரபாகரன், மிக்க நன்றி

கிரி, மிக்க நன்றி

விஜி, :)

வித்யா, மிக்க நன்றி

பாரத் பாரதி, :)