Friday, December 3, 2010

தங்கமணி தரும் அதீத விளக்கங்கள்

இதைத்தான் காலக் கொடுமைன்னு சொல்றது. போயும் போயும் என்னைய காமெடியா எழுத சொல்லி சொல்றாங்க விஜி. ஒரு வேளை என்னைய வெச்சுக் காமெடி பண்றாங்களான்னு தெரியலை. ச்சே ச்சே அப்படின்னு நீங்க சொல்லும்போதே எனக்குத் தெரியுது. விஷயம் அதேதான்.

சங்கத்தில் பதிவு எழுத என்னை ஏண்டா கூப்பிட்டோம்னு நொந்துக்கனும். அந்த அளவு சீரியஸா பதிவு போடலாம்னு இருக்கேன்.

இது போன்ற வலைக் குழுமங்களில் பதிவு எழுதுறதுன்னா என்னன்னு தெரியாம ஒரு வாட்டி அணில் கவிதா கிட்டப் போய் ‘நட்சத்திரப் பதிவர்’னா என்ன அப்படின்னு கேட்டு வெச்சேன். இப்பவே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். பதிவுலகத்துல நான் டம்மி பீஸ் அப்படின்னு.

பஸ்ல நான் கமென்ட் போடற அழகைப் பார்த்து அருணையடி என்னை, ‘கோபி தி இன்னோசென்ட் சைல்ட்’ அப்படிங்க்றார். இந்த அழகுல நான் போய் யாரைக் கலாய்க்க முடியும்? இதுல விஜி கிட்டயிருந்து அறிவுரை வேற. கன்னா பின்னான்னு கலாய்க்கனும்னு.

எப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம் இருந்த நேரத்துலதான் தங்க்ஸ் பத்தி நினைப்பு வந்தது. நீங்க இந்த men are from Mars, women are from Venus அப்படிங்கற புத்தகம் பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க. அந்தக் காலத்து இளைஞர் அப்படின்னா ‘வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான், அர்த்தமெல்லாம் வேறுதான், அகராதியும் வேறுதான்’ அப்படிங்கற பாட்டாவது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். விஜி, அபி அப்பா, அருணையடி, அணில் கவிதா இவங்கல்லாம் ஸ்கூல் போகும்போது வந்த படம்னு நினைக்கிறேன். நான் அப்போ பிறக்கவே இல்லை.

இதுல விஜிதான் எல்லாருக்கும் சீனியர் அப்படின்னு கேள்வி. ஆனா பாருங்க அவங்க அணில் கவிதாவை தத்து மம்மின்னு கூப்பிடுவாங்க. அப்பப்போ யூத் அப்படின்னு காமிச்சிக்க இளவரசிதான் அவங்களுக்குப் புடிச்ச ஹீரோயின்னு சொல்வாங்க. அவங்களுக்குத் தெரியாது. இளவரசி போய், இன்னும் எத்தனையோ பேர் போய் இப்போ தமன்னா வந்தாச்சுன்னு. இதுல சங்கத்துக்கு மட்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு பேரு.

சரி அவங்களைப் பத்தின நிறைய உண்மைகளைப் பாத்தாச்சு (இதுக்குப் பேர் கலாய்க்கிறது இல்லை, உண்மையைத்தான் சொல்றேன், நம்புங்க மக்கா). டாபிக் பத்திப் பேசுவோம். ஒரே வார்த்தைக்கு தங்க்ஸ் வேற அர்த்தத்திலும் ரங்க்ஸ் வேற அர்த்தத்திலும் புரிஞ்சிப்பாங்க அப்படின்னுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதான் தெரியுது ஒரே செயலுக்கு அவங்க ரெண்டு அர்த்தம் சொல்றாங்க. படிச்சுப் பாருங்க.

இந்தப் பதிவுல இன்னொரு சௌகரியம். ஒருத்தர் ரெண்டு பேர்னு கலாய்க்காம ஒட்டு மொத்த ரங்க்ஸ் குரூப்பையே கலாய்த்த மாதிரி ஆச்சு. சேம் சைட் கோல் தான். பரவாயில்லை. லூஸ்ல விடுங்க.

*****************************

தங்கமணி தரும் அதீத விளக்கங்கள்

(தங்க்ஸ் பேசுவது சாய்வு எழுத்துக்களில்)

ஏங்க உங்களுக்கு நான் செய்ற சில விஷயங்கள் புடிக்கலைன்னு நினைக்கிறேன்.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

சும்மா சொல்லாதீங்க. நீங்க கேளுங்க நான் சொல்றேன். தப்பா இருந்த மாத்திக்கிறேன்.

கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை. எல்லாவற்றையும் கேட்டு விடுவது என்று கேட்க நினைத்து எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்தேன்.

ஆமாம். புடவைக் கடையில் ஏன் இவ்ளோ நேரம் ஆக்குகிறாய்?

அப்படிக் கேளுங்க. நாங்கதான் கட்டுகிறோம் அப்படின்னாலும் பாக்கப் போறது நீங்கதான். பாக்கும் போது நல்லா லக்ஷணமா இருக்க வேண்டாமா அதுக்குத்தான் அவ்ளோ நேரம் செலவு பண்ணிப் புடவை எடுக்கிறோம். இதுலயும் உங்க நலன்தான் முக்கியம் எங்களுக்கு.

நீ சொல்றது இடிக்குதே. காலம்பர ஆபீஸ் போற அவசரத்துல உன்னைப் பாக்க டைம் எங்கே இருக்கு. சாயந்திரம் வந்ததும் டிவி பாக்கவும் பதிவு எழுதவுமே நேரம் போயிடுது. ராத்திரி பெட ரூமுக்குள்ள ஒரு நைட்டிய மாட்டிக்கிட்டுத் தான் வர்றே. நான் உன்னைப் புடவைல பாக்கவே முடியறதில்லையே.

அதாங்க தப்பு பூரா உங்க பேர்ல. நான் மெனக்கெட்டு நாலு அஞ்சு மணி நேரம் கால் கடுக்க நின்னு புடவைக் கடைல புடவை எடுத்து அதைக் கட்டிக்கிட்டு உங்க முன்னால வந்தா உங்களுக்கு என்னைப் பாக்க நேரமில்லை. உங்களைக் கட்டிக்கிட்டு....

நான் அதற்குள் அவளை இடைமறித்து, சரி சரி தப்பு எம்பேர்லதான்.

சரி அடுத்த கேள்வி கேளுங்க.

வேண்டாம். அடுத்த கேள்வி அடிபட்டுப் போச்சு

சும்மா கேளுங்க

ஏன் ரொம்ப நேரம் மேக் அப் போடுறேன்னு கேக்கலாம்னு இருந்தேன்... ஆனா அந்தக் கேள்விக்கும் நீ போன கேள்விக்கு சொன்ன பதிலைத்தான் சொல்லப் போற

சமத்துங்க நீங்க, ம்ம்ம் அடுத்த கேள்வி

நீ ஏன் எங்க மனுஷங்க வரும்போது அவங்க கிட்ட சரியாப் பேச மாட்டேன்கிற

நான் லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கேன் அப்படின்னு அவங்க நினைக்கக் கூடாதுல்ல.

சரி, ஏன் உன் மூஞ்சில எண்ணெய் வடியுது?

பொழுதன்னைக்கும் சீவி சிங்காரிச்சிக்கிட்டே இருப்பா போலருக்கே அப்படின்னு அவங்க தப்பா எடுத்துக்கக் கூடாதுல்ல அதான்.

அதுவே உங்க மனுஷங்க வரும்போது தலைகீழா மாறுதே ஏன் (பெரிதாக மடக்கிவிட்ட பாவனை என் தொனியில்)

நீங்க ஒரு டியூப் லைட்டுங்க. எங்க வீட்டில் இருந்து வர்றவங்க கிட்ட நான் நல்லாப் பேசலைன்னா உங்களுக்கும் எனக்கும் சண்டைன்னு நினைச்சிக்க மாட்டாங்க. பொண்ணை மாப்பிள்ளை நல்லா வெச்சிக்கலையோன்னு அவங்களுக்கு சந்தேகம் வந்துடாது.

எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது. நான் மிச்சத்தை நாளைக்குக் கேக்குறேனே.

இல்லை இல்லை. இன்னைக்கே முடிச்சிடுவோம்

யாரை, என்னையா?

இல்லைங்க கேள்வியை.

சரி, நீ சமையல் இன்னும் கொஞ்சம் ருசியாப் பண்ணலாமே (கொஞ்சம் எச்சரிக்கையாக ஒரு நான்கடி தள்ளி உட்கார்ந்து கொண்டேன்)

எனக்கு உங்க நாக்கை விட உங்க உடம்புதாங்க முக்கியமாப் படுது. சமையல் ருசியா இருந்தா நீங்க நிறைய சாப்பிட்டு வெயிட் போட்டுடுவீங்க. மத்தபடி எனக்கு நல்லாவே சமைக்கத் தெரியும். புதுசா விஜி அப்படிங்க்றவங்க பதிவுல பாவக்காயும் பரங்கிக்காயும் போட்ட ஒரு டிஷ் பத்தி நேத்தி படிச்சேன். செஞ்சு கொண்டு வரட்டுமா? இல்லை நேத்து நான் புதுசா ஒரு ஸ்வீட் கண்டுபிடிச்சேன். வெந்தயமும் நாட்டு சக்கரையும் போட்டு. அதை செஞ்சு கொண்டு வரட்டுமா?

இதற்கு மேல் கேள்வி கேட்க எனக்குத் தெம்பில்லை. மயக்கம் வந்தது போலக் கீழே விழுந்தேன்.

டேய் தம்பி, அந்தத் தண்ணி ஜாடியைக் கொண்டாடா. அப்பாவைத் தெளிய வெச்சுத் தெளிய வெச்சு அடிப்போம்.

ஓரக்கண்ணால் பார்த்தேன். பயபுள்ள என்னா வேகமா ஓடுது.

எழுந்து உட்கார்ந்து தங்க்சின் கையைப் பிடித்துக் கொண்டு இனி கேள்வியே கேட்பதில்லை, ஆளை விட்டுடு என்று கெஞ்சாத குறையாக சொன்ன பிறகே தப்ப முடிந்தது.

ரங்க்ஸ், நீங்க பாட்டுக்கு தங்க்ஸ் கேள்வி கேட்க சொன்னாலும் கேட்டு மாட்டிக்காதீங்க. தங்க்சை பொருத்தவரை நீங்கள் இரண்டு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஒன்று, தங்க்ஸ் செய்வது எப்போதுமே சரி.

இரண்டு, தங்க்ஸ் செய்வது சரியா தவறா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும் பட்சத்தில், விதி ஒன்றைக் கடைபிடிக்கவும்.

இது போக கேக்காம விட்ட கேள்வி இன்னும் நிறைய. அதுல ஒன்னு ரெண்டு நீங்க கேட்டுப் பாருங்க உங்க தங்க்ஸ் கிட்ட. பதிலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க, கேட்டு விட்டு உயிரோடு இருக்கும் பட்சத்தில்!

அது ஏன் உன் தங்கை நான் டூர் போகும்போது மட்டும் நம்ம வீட்டுக்கு வறா?

தேற்றம் (theorem) , கிளைத் தேற்றம் (corrolary) மாதிரி கேள்வி, கிளைக் கேள்வி: அதெப்படி நான் டூரை பாதியில் முடித்துக் கொண்டு உன்கிட்ட சொல்லாமலே ஊருக்கு வந்தாலும் அவ அதுக்கு முத நாளே கரெக்டா எப்படிக் கிளம்பிப் போயிடறா?

பேஷன் டிவி ஏன் நம்ம வீட்டில் வர மாட்டேங்குது?

26 comments:

விஜி said...

ஏய் கோபி ஊரை கலாய்க்க சொன்னா என்னையே கலாய்க்கறையா.... நல்லாரு

பார்வையாளன் said...

சூப்பர்

பார்வையாளன் said...

சூப்பர்

அருணையடி said...

/ஏய் கோபி ஊரை கலாய்க்க சொன்னா என்னையே கலாய்க்கறையா.... நல்லாரு/

வேலன் : "நாரதரே! உலகம் என்றல் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன? "

நாரதர் : "அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்"

அபி அப்பா said...

\\men are from Mars, women are from Venus அப்படிங்கற புத்தகம் பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க. \\

என்ன இப்புடி ஒரு கேள்விய கேட்டுபுட்டீக. அத படிச்சுட்டு பலதடவை தேம்பி தேம்பி அழுதிருக்கேன். அப்படி ஒரு புத்தகம்.மறக்க முடியுமா? இருங்க மீதி பதிவு படிச்சுட்டு வர்ரேன்!

கெக்கே பிக்குணி said...

சொந்த‌ செலவில‌ சூனியம். வேற ஒண்ணும் சொல்லறதுக்கில்லை.

அபி அப்பா said...

எங்கப்பா தமிழ்மண ஓட்டு பட்டை?? விஜி உடனே கவனிக்கவும்.

அபி அப்பா said...

பை தி பை கோபி உங்க வரவு கேழ்வரகாகுக!

அபி அப்பா said...

ஆகா போன பின்னூட்டத்திலே நல்வரகு என்பது நாறி போச்சு!

அபி அப்பா said...

திரும்பவும் மாப்பு. மாறிப்போச்சு நாறிப்போச்சு ஆகி நாறிப்போச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ILA(@)இளா said...

Template Testinggggg.

எஸ்.கே said...

ஆஹா சூப்பர்!

Gopi Ramamoorthy said...

விஜி, அருணையடி பதில் சொல்லிட்டார். நன்றி அருணை.

பார்வயலான், நன்றி

எஸ் கே நன்றி

கெக்கே பிக்குணி, சரியா சொன்னீங்க. உங்க ட்வீட் விகடன்ல வந்த்ரிக்கு போலயே, வாழ்த்துக்கள்

அபி அப்பா, மிக்க நன்றி வரவேற்புக்கும், கமெண்டுக்கும்

இளா, என்னா டெஸ்டிங் அது?

raji said...

இந்த பதிவு நிஜம்மாவே உங்க சொந்த அனுபவம்தான? ஐ! எப்டி கன்டுபிடிச்சேன் பாத்தீங்களா!

Chitra said...

:-))

பாரத்... பாரதி... said...

//பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்//

அது சரி..

பாரத்... பாரதி... said...

//நாரதர் : "அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்"//
nice

RVS said...

ஒரு பதிவிற்காக இப்படியா...
அசாத்திய தைரியசாலியப்பா நீங்கள்...
அர்த்தநாரீஸ்வரர் உங்களை காப்பாற்றட்டும். ;-)

கலையன்பன் said...

தங்ஸ்கூட செம கொடச்சல்.
அதனால, இந்தப் பதிவு
செம கலக்கல்!

vanathy said...

hahaa.. super, Boss.

ம.தி.சுதா said...

இருந்தாலும்.. அருமை..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Gopi Ramamoorthy said...

ராஜி மேடம், ஏன் இப்படி பப்ளிக்கா உண்மையைப் போட்டு உடைக்கிறீங்க!

சித்ரா, மிக்க நன்றி

பாரத் பாரதி, மிக்க நன்றி

ஆர் வீ எஸ், சொக்க நாதர்தான் காப்பாத்தணும்!

கலையன்பன், மிக்க நன்றி, சீக்கிரம் அந்த சிக்கலை சரி பண்ணுங்கள்

வானதி, மிக்க நன்றி

மதி சுதா, மிக்க நன்றி

கவிதா | Kavitha said...

அட இந்த பதிவை இப்பத்தான் பார்க்கிறேன்.

//ஒரு வாட்டி அணில் கவிதா கிட்டப் போய் ‘நட்சத்திரப் பதிவர்’னா என்ன அப்படின்னு கேட்டு வெச்சேன்.//

அந்த நட்சத்திர பதிவு எழுதறதுக்குள்ள.. நாங்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்.. ம்ம்ம்.. இதுல இப்படி எல்லாம் கேட்டு கொலவெறிய உண்டு பண்ணவேண்டியது.. ?!! :(


//விஜி, அபி அப்பா, அருணையடி, அணில் கவிதா இவங்கல்லாம் ஸ்கூல் போகும்போது வந்த படம்னு நினைக்கிறேன். நான் அப்போ பிறக்கவே இல்லை. //

போட்டோ போடாம இருந்து இருந்தா ஒரு வேள இதை நம்பித்தான் இருந்து இருப்பேன்... போட்டோல எங்க எல்லாரையும் விட 5-6 வயசு பெரியவரா இருக்கீங்களே...

கவிதா | Kavitha said...

//இதுல சங்கத்துக்கு மட்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு பேரு.//

ஸ்ஸ்ப்பா நல்ல வேள இந்த சங்கத்துல நானு உறுப்பினர் இல்லை இல்லை இல்லை... .!! :))

நாஞ்சில் மனோ said...

//பை தி பை கோபி உங்க வரவு கேழ்வரகாகுக!//
கூல்வரவாகுக.....:]]

Gopi Ramamoorthy said...

கவிதா, அந்தப் போட்டோ அஞ்சு வருஷத்துக்கு முந்தி எடுத்தது:)

நாஞ்சில் மனோ, நன்றி!