Wednesday, November 3, 2010

வதந்திரன் - 1

புதிய பதிவா....நெட்டுக்கு வா....
புதிய பதிவா....நெட்டுக்கு வா....
பிசில் வேலைவெட்டி எல்லாம் ஒதுக்கி
பாஸுக்கு தெரியாமல் பிரவுசரை ஓப்பன் பண்ணி
இருக்கும் அறிவை எல்லாம் அப்படி இப்படி தேக்கி
பதிவாக்கி மொக்கை போட்டு
படிக்கறவன் உயிரை எல்லாம் சேதமாக்கி......
புதிய பதிவா....நெட்டுக்கு வா....
புதிய பதிவா....நெட்டுக்கு வா....

மாற்றம் கொண்டு வா
புதுசா மொக்கை போட
வார்த்தையில் குழம்பு வை
படிச்சிட்டு புலம்ப வை....
உனது ஆற்றலால் கப்சா அள்ளி விடு
எல்லா வாசகனுக்கும் எதாவது மேட்டர் எடுத்து விடு
எல்லா மேட்டரிலும் வதந்தியாய் இரு...

வதந்திரன்...வதந்திரன்...வதந்திரன்...வதந்திரன்...வதந்திரன்...

நான் கொண்டது ஆறு ஐடி
நீ கொண்டது நூறு ஐடி
நான் போடுவது ஆறு கமெண்ட்
நீ போடுவது இரு நூறு கமெண்ட்
கொஞ்சம் கூட உண்மை இல்லை
எழுதுவது எதிலும் அர்த்தம் இல்லை
உண்மை சொன்னவன் உருப்பட்டது இல்லை
வதந்திரன் என்னிக்கும் உண்மை சொன்னது இல்லை

இளா, இளா
உங்க பதிவு எல்லாம் கப்சா இல்லையா
இளா, இளா, பல கண்டம் சென்றாலும் - உன் தந்தை மொழி மொக்கையல்லவா

புதிய பதிவா....நெட்டுக்கு வா....
புதிய பதிவா....நெட்டுக்கு வா....

----------------------------------------------------------
பத்து வருசக் கனவு....எவ்வளவு யோசிச்சு இருக்கேன் தெரியுமா...ஒரு பதிவு சொந்தமா போட...ஆனா முடியல்ல....காப்பி அடிச்சி போட்டா விலை போகல்ல...அதான்...முடிவு பண்ணேன்.....உலகமே படிச்சு படிச்சு அப்படியே கலங்கிப் போற மாதிரி ஒபாமா ஆரம்பிச்சு உள்ளுர் ஒமனா வரைக்கும் கனெக்ட் பண்ணி வதந்தியா பதிவு போடுற ஒரு பதிவரை கண்
டு பிடிக்கணும்ன்னு.... அது தான் இவன்...
வதந்திரன்..THE GOSIPPING BLOGGER

------------000--------------------------
இளா அண்ணே.....இவனை என்னப் பண்ண போறீங்க....இவனால்ல நாட்டுக்கு என்ன நல்லது நடக்க போவுது...இந்த தீஞ்ச காம்ப்ளென் மண்டையனை வச்சு என்னன்ணே ஆகப் போவுது....

நோ கப்பி. நோ....நான் வெறும் இளா இல்ல....பிரபல சையன்டிஸ்ட் இளா.....அதை முதல்ல புரிஞ்சிக்கோ....

அண்ணே....ஒரு ஓரமா உக்காந்து பழைய இரும்பு கடையிலே உருவுன ஐட்டத்தை எல்லாம் பெவிகால் போட்டு ஒட்டி... மெக்கானிக் கடையிலே கெஞ்சி வாங்குன பழைய நட்டு போல்ட் எல்லாத்தையும் சேத்து தலைன்னு சொல்லி எங்க வீட்டு கக்கூஸ் பக்கெட்டை கவுத்து விட்டு ஒரு ஐட்டத்தைக் காட்டி இப்படி ஒரு பில்டப்பு பாட்டு போட்டதே டூ ம்ச்.....இதுல்ல உங்களை நீங்க சையன்டிஸ்ட்ன்னு சொன்னீங்க்ன்னா... நான்
சையணைட் வாங்கி சப்பி செத்து போயிருவேன் சொல்லிட்டேன்....

கப்பி....நீ ஒத்துக்கலைன்னாலும் பரவாயில்ல.... நாடே என்னை சயண்டிஸ்ட்ன்னு நம்புது...ஸ்டில்லை பாரு... முக்கா இஞ்சுக்கு பிரெஞ்சு தாடி....கலைஞ்ச தலை முடி.... சுத்தி எலெக்ட்ரானிக் ஐட்டம் லேப் டாப்.... இப்படி ஒரு கெட் அப்...கன்ப்ர்ம்டா நான் சையண்டிஸ்ட் தான் கப்பி....

அய்யோ இந்த அனியாத்தைக் கேக்க யாருமே இல்லையா...அப்துல் கலாம்... சிவி ராமன்.. இவங்களுக்கு எல்லாம் பிரெஞ்ச் தாடியே இல்லையே...அப்போ அவங்க எல்லாம் சயண்டிஸ்ட் இல்லையா... தாடி வச்சவங்க எல்லாம் தான் சையண்டிஸ்ட்ன்னா... பாய் க்லடையிலே பிரியாணிக்கு வெட்ட போற ஆடு கூட
தான் தாடியோட நிக்குதுண்ணே... ஆடியன்ஸை ரொம்ப கலாய்க்கிறீங்க சொல்லிட்டேன்

அண்ணே...அந்த ஆன்ட்டி உங்க கூட பேசாம போக மாட்டேன்னு அடம் பிடிக்குறாங்க.... வாசல்லே நிக்குறாங்க....வெட்டி வெகுளியாய் வந்து சொல்ல

எந்த ஆன்ட்டி....

அமெரிக்கா ஓயிட் அவுசுல்ல ஆப்பிள் பறிக்குதே அந்த ஆன்ட்டி.... அண்ணே... பத்து வருசமா நீங்க தவமா தவம் பல ரெக்கமண்டேஷனுக்கு அப்புறம் அப்படி இப்படி உசார் பண்ணீங்களே அந்த ஆவடி லேடிஸ் கிளப் ஆண்டு விழால்ல மிஸ் ஆவடி
வாங்கிச்சேன்னே....மீனா...கப்பி சொல்ல...

மீனா எல்லாம் எப்பவோ ஓவர்ப்பா... அதெல்லாம் அவுட் ஆப் சிலபஸ்.....

சாரின்ணே...இது பேரு...சீனா.....தானா.... உங்களுக்கு வெயிட்டீங்....

இப்போ முடியாது....நான் பிசியா இருக்கேன்...இவனை ஒரு பிளாக் ஆவது போட வ்ச்சிட்டு தான் நான் வருவேன்.....சொல்லிடு...

மீண்டும் பாட்டு ஒலிக்க இளா வேலைக்கு போகிறார்...

எல்லாத் தகர டப்பாக்களையும் உருட்டி விட்டு இளா ...பிளாக்...பிளாக்....என்னை மாதிரியே பிளாக் பண்ணு...கமான் ஐ சே அப்படின்னு செம் அலம்பல் விட கப்பி கடுப்பாக அதைப் பாத்து கொண்டிருக்கிறான்....

இளாண்ணே.....

பிளடி ஐ யாம் சையண்டிஸ்ட்...எத்தனை தடவை சொல்லுறது

ஓகே சையண்டிஸ்ட் அண்ணே....இந்த தகரம் தலை நகரம் போவாது சொல்லிட்டேன்....வெளியே ரொம்ப நேரமா கரகாட்டக்கார கோஷ்ட்டிக்கு பேரீச்சம் பழம் வித்த பிஸ்னேஸ் மேக்னெட் நிக்குறார்...நான் வேணும்ன்னா பேரம் படியுதா பாக்கவா

பத்து வருச உழைப்புடா...இளா மறுபடியும் ஆரம்பிக்க....

அய்யோ அம்மா எனக் கப்பியும் வெட்டியும் தலை தெறிக்க ஓடுகிறார்கள்

இளா வீடு....கதவு திறக்க இளாவோட சித்தப்பா கெட்டப்பல்ல வதந்திரன் அங்கே நிக்குறார்...

டேய் இளா யார்டா இந்த பையன்.(ர்).....உனக்கு மீசை எடுத்தா மாதிரியே இருக்கான்...

அம்மா இவனுக்கு இன்னும் மீசையே முளைக்கல்ல...HE IS JUST A BABY..HE IS A BLOG ROBOT...

அப்படின்னா....

மீண்டும் பேக் கிரவுண்ட்ல்ல...புதிய பதிவா மீசிக் ஒலிக்க...

ஹாய் நான் ஒரு பிளாக் ரோபாட்.... மெமரி ஒரு கோடி பிளாகர் ஐடி....ஸ்பீட் ஒண்ணே முக்கால் கோடி கமெண்ட் பேர் செகண்ட்...

டேய் இளா என்னடா இதெல்லாம்....

அம்மா ...இது என்னோட பத்து வருச உழைப்பு....( கப்பி கண்ட படி மெர்சல் ஆகி நிற்க) டயலாக் கன்டினியூ ஆகுது...அதாவது...இவனை இப்போ நான் தமிழ் பதிவுலகத்துக்கு கூட்டிட்டு போய் நிறுத்தப் போறேன்...அங்கே இவனை சுதந்திரமா சுத்த விடப் போறேன்...அப்புறம் இவனை இந்திய
ராணுவத்துல்ல சேத்து விடப் போறேன்...

என்னாது இந்திய ராணுவமா....கிசுகிசு எழுதற ரோபோவை எதோ குமுதம் ஆனந்த விகடன் சினிக்கூத்து இல்லைன்னா இட்லி வடை ப்திவு....எதோ வ,வா.ச மாதிரி விளங்காத குரூப் பிளாக் இதுல்ல சேத்து விட்டா எதோ ஒரு அர்த்தம் இருக்கு.... அதை விட்டுட்டு ராணுவம்....போலீஸ்ன்னு பீதியைக் கிளப்பிகிட்டு...கப்பி கருத்து தெரிவிக்க

இளா அவன் சொல்லுறது நியாயம் தானே ...இவன் ராணுவத்துல்ல என்னடா பண்ணுவான்....

அம்மா அதை நான் சொல்ல முடியாது

ஏன்டா...

அது மட்டும் முடியாதும்மா

ஏன் எல்லாரும் கோபமாய் கேட்க

பயங்கர பீலிங்கோட இளா ....ஏன்னா அது ராணுவ ரகசியம்......அப்ப்படின்னு சொல்ல ரோபேவே மெர்சல் ஆகிறது...

இது செம் மொக்கடா சாமி..........கப்பி கண்களில் மட்டுமில்ல காதுகளிலும் கண்ணீர் வருது

அம்மா இவனுக்கு ஒரு பேரு வேணும்மா

ம்ம்ம் குட்டி....அப்படின்னு வை...உனக்கு ஒரு தங்கை பாப்பா பொறந்தா அந்த பேர் தான் வைக்கலாம்ன்னு இருந்தான்...

அம்மா இவன் தம்பிம்மா

விடுடா மீசை வேர இல்லை...தங்கைன்னே நினைச்சிக்கோடா...


அப்படி எல்லாம் நினைக்க முடியாது கதையிலே பின்னாடி முக்கிய ட்விஸ்டே அப்புறம் வராது....அது தமிழ் பண்பாட்டுக்கு செட் ஆகாது...

என்னடா சொல்லுற...

ம்ம்ம் ரோபோ பாரு புரியும்.....

அட சாமி ரீமேக் பண்ணுற ஆளு ஒரிஜினல் படத்தைப் பாக்க சொன்ன முதல் ஆளு இவர் தான் பா..இவர் ரொம்ப நல்லவர்ங்க...

தமிழ் பதிவர்கள் மாநாடு......
அங்கே......

ஹாய் ஐயாம் குட்டி த ரோபாட்....மெமெரி ஒரு கோடி பிளாகர் ஐடி.....ஸ்பீட் ஒண்ணே முக்கால் கோடி கமெண்ட் பேர் செகண்ட்....
எனக்கு எல்லா பதிவர்களையும் தெரியும்...அவங்க அனானியா வந்து போடுற கமெண்ட்சியும் தெரியும்...எனக்கு டிவிட்டரும் தெரியும் ஒபாமா டாட்டரயும் தெரியும்
எனக்கு கூகுளும் தெரியும்....அதுல்ல பஸ் எழுதுறதுக்கு முன்னாடி என் பாஸ் அடிக்கிற கோல்டன் ஈகிளையும் தெரியும்....

இனி குட்டியின் ராஜ்ஜியம் ஆரம்பம்....

வெயிட் அன்ட் சீ....

GET READY FOLKS...and HAPPY DIWALI FOLKS....

27 comments:

ஹரன்பிரசன்னா said...

இன்னும் வாலிபர்களா? என்ன இதெல்லாம்?

என்.ஆர்.சிபி said...

//இன்னும் வாலிபர்களா? என்ன இதெல்லாம்?
//

Naanga Eppavume Vaalibargalthanya

கவிதா | Kavitha said...

//அந்த ஆன்ட்டி உங்க கூட பேசாம போக மாட்டேன்னு அடம் பிடிக்குறாங்க.... வாசல்லே நிக்குறாங்க....வெட்டி வெகுளியாய் வந்து சொல்ல
எந்த ஆன்ட்டி....//

பாட்டிய ஆன்ட்டி ன்னு சொன்ன வெட்டி கண்ணை முதல்ல டெஸ்ட் பண்ணுங்கோஓஒ ! :))

//ஒபாமா டாட்டரயும் தெரியும்//

ஏன்ப்பா வவாச ல எல்லா வாலிபர்களும் ஏன் அமெரிக்கா அதிபர்ங்க பொண்ணுங்க மேலே ஒரு கண்ணா இருக்கீங்க???

கவிதா | Kavitha said...

//Naanga Eppavume Vaalibargalthanya//

வேற யாராச்சும் இதை வந்து சொல்லி தொலச்சி இருக்கலாம்.. :(((( இவரு சொன்னா..அடுக்குமா?

கோவி.கண்ணன் said...

தேவ்...ரொம்ப நாளைக்கு பிறகு வந்து கலக்குறிங்க, கிராபிக்ஸ் அருமை.

அபி அப்பா said...

\\வேற யாராச்சும் இதை வந்து சொல்லி தொலச்சி இருக்கலாம்.. :(((( இவரு சொன்னா..அடுக்குமா?\\

ஆமா கவிதா! எனக்கே கடுப்பா வந்துச்சு. இருங்க நான் சொல்றேன்!

நாங்க எப்பவுமே வாலிபர்ஸ் தான்!

அஹமது இர்ஷாத் said...

அச‌த்துங்க‌..

ஆயில்யன் said...

தி பாஸ் தேவ்’ஸ் ரிடர்ன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)))))))

சென்ஷி said...

செம்ம ஆரம்பம் :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

அச‌த்துங்க‌..

polurdhayanithi said...

parattugal
polurdhayanithi

தமிழ் பிரியன் said...

கலக்கல் பாஸ்!

வெட்டிப்பயல் said...

தேவ் அண்ணே,
Back to Form :)

//எனக்கு எல்லா பதிவர்களையும் தெரியும்...அவங்க அனானியா வந்து போடுற கமெண்ட்சியும் தெரியும்//

கலக்கல் ;)

ILA(@)இளா said...

//இன்னும் வாலிபர்களா? என்ன இதெல்லாம்?//
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வாலிபர்களாத்தானே இருந்தோம். ரெண்டு வருசத்துலயா கிழடு தட்டிரும்? என்ன கொடுமை இது சரவணா

கோபிநாத் said...

சூப்பருண்ணே ;)

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நாளைக்கப்புறம்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

dev aNNe
back to form-uuuu!
ithu vathanthiran-aa?
illa dev-indiran-aa?
:))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நான் கொண்டது ஆறு ஐடிநீ கொண்டது நூறு ஐடி//

ithu kothanaar-ai cholReengaLo? :)

//நான் போடுவது ஆறு கமெண்ட்நீ போடுவது இரு நூறு கமெண்ட்//

ithu sibi-nu theriyuthu :)

//எழுதுவது எதிலும் அர்த்தம் இல்லை
உண்மை சொன்னவன் உருப்பட்டது இல்லை
வதந்திரன் என்னிக்கும் உண்மை சொன்னது இல்லை//

no chance; ithu iLa thaan! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஹாய் நான் ஒரு பிளாக் ரோபாட்.... மெமரி ஒரு கோடி பிளாகர் ஐடி....
ஸ்பீட் ஒண்ணே முக்கால் கோடி கமெண்ட் பேர் செகண்ட்...//

:))
My boss vivaji is a buggar sorry blogger.
Hello va va saa. Hello world.
Task Complete. Kummi not complete.
Dot

philosophy prabhakaran said...

பத்தவச்சிட்டியே பரட்டை...

கானா பிரபா said...

;) ஆகா

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

Takeoff is too good...

கைப்புள்ள said...

செம கலக்கல்ஸ் மச்சி...சந்தானம் கேரக்டர்ல கப்பி கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சி சிரிச்சி முடியலை:)

கைப்புள்ள said...

//கப்பி....நீ ஒத்துக்கலைன்னாலும் பரவாயில்ல.... நாடே என்னை சயண்டிஸ்ட்ன்னு நம்புது...ஸ்டில்லை பாரு... முக்கா இஞ்சுக்கு பிரெஞ்சு தாடி....கலைஞ்ச தலை முடி.... சுத்தி எலெக்ட்ரானிக் ஐட்டம் லேப் டாப்.... இப்படி ஒரு கெட் அப்...கன்ப்ர்ம்டா நான் சையண்டிஸ்ட் தான் கப்பி....
//

இது டப்பு...சே...டாப்ப்பு...பத்து வருச சைண்டிஸ்ட் இளா வாழ்க :)

Elamathi said...

ஏங்க, சங்கத்துல உறுப்பினர் சேர்க்கை ஏதும் நடக்குதா. சொன்னிநீங்கன்ன நாங்களும் சேர்ந்து கலாயிப்போம்ல...

THOPPITHOPPI said...

ஹிஹிஹி..........


இதை வலையுலக தீம் பாடலாக மாற்றலாம்