Thursday, May 4, 2006

நாமக்கல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்


சமீபத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிங்கப்பூரில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

தலைமை : தலை கைப்பு
முன்னுரை : ஜொள்ளுப் பாண்டி, வெண்பா வாத்தியார் ஜீவா
சிறப்புரை : பிகிலு பொன்ஸ் மற்றும் கானா கீதா
நன்றியுரை : பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் மற்றும் ஆர்த்தியக்கா
ஒருங்கிணைப்பு : மாநில செயற்குழு தலைவர் தேவ்
சிறப்புப் பேச்சாளர் : நடிகை நயன்தாரா

13 comments:

சிங். செயகுமார். said...

அங்க ஓடி இங்க ஓடி இப்போ சிங்கப்பூர்லேயும் கை வச்சாச்சா.....................

Karthik Jayanth said...

சங்கத்தின் பலத்தை காட்ட சைக்கிள் கேப்பில் எங்கள் பலத்தை காட்ட கூட்டத்தை கூட்டிய

தோழன் சிபி வாழ்க !

இது 'தல' யின் அன்புக்கு கட்டுபட்ட கூட்டம் ! கொள்கையால் ஒன்று பட்ட இமயம் இது !

இவர்கள் எலி குட்டியல்ல பொறி வைத்து பிடிக்க !

வாழ்க தல !!!

வாழ்க சங்கம் !!!

கார்த்திக்

Karthik Jayanth said...

ப.ம.க குலுக்கு நடிகை ஜலஜாஸ்ரீ பேட்டி அதிர்ச்சி உண்மை !

...//அவரும் அவருக்கே உரிய அன்போடு வருகின்ற தேர்தலுக்காக என்னை முற்றிலும் தாயாராக்கியிருக்கிறார்!


உங்கள் கட்சியில் களை எடுக்க வேண்டுமே !!! .. கட்சியின் நிலமை தெளிவாக தெரிகிறது அய்யா.. டாக்டர் என்ன இது ? சொற் குற்றமா ? இல்ல பொருள் குற்றமா ? இல்லை உண்மை நிலையா ?

வெள்ளை அறிக்கை வேண்டுவது ப.ம.க தொண்டர்கள். தரவில்லை என்றால் ஆகிவிடுவார்கள் குண்டர்கள்

தேவ் | Dev said...

தளபதி கோவைப் பிரதர் அன்பின் சகோதரர் சிபியாரின் லேசான அழைப்பைக் கேட்டுக் கூடிய சின்னக் கூட்டத்தின் ட்ரெயிலர் தான் இது..... மெயின் பிக்சர் மட்டும் பார்த்தா நீங்க மட்டும் இல்ல உங்களைப் பிச்டிச்சு வச்சுருக்க தாலிபன் கூட காலிபன் தான் ....

தேவ் | Dev said...

வ.வா.சங்கத்தின் உலக இலக்கியப் பிரிவு தலைமைக் கவிஞர் வாலிப நெஞ்சம் அன்பின் நண்பர் ஜெயக்குமார் அவர்களே வருக.. வருக... வ.வா.ச பற்றி ஒரு பொன்னானக் கவிதைத் தருக...பகைவர் எல்லாம் படை நடுங்கப் பொங்குத் தமிழில் பொங்குக:)

தேவ் | Dev said...

பேராசிரியர் பேரன்பிற்குரிய சங்கக் காவலர் கார்த்திக எங்கே? எனக் கேள்வி எழுப்பிய உங்கள் வாய்கள் எங்கே? எங்கள் பேராசிரியரின் போர்க்குரல் கேட்டு எங்கே பதுங்கிக் கிடக்கிறீர்கள்... வெளியே வாங்க.. வந்து எங்கள் பேராசிரியரின் பாதங்களில் பணிந்துப் போங்கள் மன்னித்து விடச் சொல்லுகிறோம்... ( கொஞ்ச ஓவராகக் கூவியிருந்தால் கொய்யலே கண்டுக்காதீங்க மக்கா)

பொன்ஸ்~~Poorna said...

இதுக்கு நடுவுல, குசும்பன்னு ஒருத்தர் நம்ம கட்சியோட நிரந்தர உறுப்பினர்னு சொல்லிட்டிருக்காரே, அவரை விட்டுட்டீங்க... அவரோட அறுவரானோம்னு எங்கயாவது போடுங்கப்பு!!!

ஜொள்ளுப்பாண்டி said...

அசத்திபுட்டே சிபியண்ணே
ஆடிப்போச்சி எதிரணி
கூட்டம் பார்த்து
ஓட்டைப் போடு
கும்மலக்கடி கிரி கிரி

இந்தப்படை போதுமா
இன்னுங்கொஞ்சம் வேணுமா
பமக மடிஞ்சு போச்சு
அதுக்கு பாடை கட்டி
வெடி வெடி !!

கும்மாலக்கடி கிரி கிரி
ஆட்டம்போடு வடைகறி
அளுங்காம குலுக்காம
சங்கம் வந்து விடுஇனி

பொன்ஸ்~~Poorna said...

//இன்னும் எத்தினி நாளைக்கிதான் பல்செட்டு பார்டிக கூடெல்லாம் ஒக்காந்து சீப்படப் போறீங்களோ //

சூப்பரு தம்பி பாண்டி.. சூப்பரு..

ஒரே எடத்துல பின்னூட்டம் குவிக்கிற பதிவுல எழுதறது இல்லைன்னு முடிவு பண்ணி இருக்கறதினால, இந்த எடத்துல வந்து எழுதறேனப்பு..

:) :)

ஜொள்ளுப்பாண்டி said...

பொன்ஸக்கா உங்க கொள்கை என்னைய புல்லரிக்க வைக்குதுங்கோ !!! இனிமே எல்லாரும் இப்படியே செய்வோம்.அப்படியே அவங்க பதிவுக்கு போயி வேணுமுன்னா சங்கப்பலகையிலே வந்து அதுக்கான பதிலை பார்க்கச்சொல்லி லிங்க் கொடுத்திடலாம் எப்படி??

கீதா சாம்பசிவம் said...

கூட்டத்தில் நான் பேசினது என்னோட போட்டோவோட வரணும்.கூடவே நிரந்தரத்தலைவலி, சீச்சீ, தலைவி,பொன்மனச்செம்மல், எங்கள் தங்கம் என்ற என்னுடைய பட்டப்பெயர்களெல்லாம் ஒண்ணு குறையாம இருக்கணும்.

கீதா சாம்பசிவம் said...

நான் தேர்தல் பிரசாரத்துக்குப் போயிட்டு வரதுக்குள்ளே என்ன என்னமோவெல்லாம் நடக்குதே.தலைவர் எங்கே? தலைவரைக் கடத்தியது யார்? சிவப்பு, கறுப்பு, வெள்ளை எலிப்படை ஏன் தலைவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கத்தவறியது? யார் சதி? பமகவா? எதிரி உள்புகுந்து விட்டானா?

குறும்பன் said...

சிங்கப்பூரில் எவ்வளவு நாமக்கல் மாவட்டகாரர்கள் இருக்கறாங்க அப்படிங்கிறத இந்த "போட்டோ" தெளிவா தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு காட்டியிறுக்கு. அடேங்கப்பா எவ்வளவு பேர்.