Friday, May 19, 2006

ஏலேலோ ஐலசா ....


தேர்தல் கலாட்டாக்களை முடித்து விட்டு தேர்தலில் நிகழ்ந்தவை பற்றி பேச வ வா சங்கம் ‘தல கைப்புள்ளே ‘ தலைமையில் கூடியிருக்கிறது. பொன்ஸக்கா, விவசாயி இளா, கோவை பிரதர் சிபி , போர்வாள் தேவ். மற்றும் ஜொள்ளுப்பாண்டி அனைவரும் சங்க பெஞ்சுகளில் அமர்ந்திருக்கின்றனர்.

கைப்பூ : நான் இல்லாத நேரத்திலே நீங்கல்லாம் இருந்து சங்கத்தை தூக்கி நிறுத்துனதுக்கு ரொன்ப டேங்ஸ்பா. நெம்ம சந்தோஸமா இருக்கு.

இளா : தல எங்கே தல போய்ட்டே?

கைப்பூ : தேர்தல் நேரத்திலே என்னைய அப்படியே மல்கேட், கோல்கேட்டுன்னு ஆளாளுக்கு ஆட்டோவில தூக்கி போட்டுட்டு போயி நொங்கெடுத்துத்துட்டான்க.

பொன்ஸ் : தல அத்தனைக்கும் சும்மாவா இருந்தீங்க? நீங்க திருப்பி கொடுக்கலையா?
கைப்பூ: இல்லையே ?!!
பொன்ஸ் : ஏன் ?
கைப்பூ : மொதோ மொதெல்லா மல்கெட்டுக்குத்தான் வர சொன்னான்க ! சரி ஏதோ நம்மளையும் மதிச்சு கூப்டான்களே நாம இல்லையின்னா எதுவுமே நடக்காதுன்னு நம்பி போனேன். அங்க போனா ஒரு 50000 லைன் இருக்கர புரோக்கராமக் குடுத்து Debug பண்ணுடா கைபூன்னு சொல்லிட்டானுக. நானும் எவ்ளோ நேரந்தான் debug பண்ண தெரிஞ்ச மாதிரியே மானிட்டரை பார்த்து நடிக்கரது ??
(அழுகிறார் கைபூ . உடனே சிபி கோயமுத்தூரிலிருந்து பொன்னாடை போர்த்த வாங்கி வந்த ஈரிழைத் துண்டை எடுத்து கொடுக்கிறார்.)
பொன்ஸ் : பண்ணத்தெரியாட்டி தெரியலைன்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே ?
கைப்பூ : நானும் சொல்லலாம்னுதான் போனேன். அப்போதான் சொன்னானுங்க. ஏண்டா ஹிண்டு நியூஸ் பேப்பரை தினமும் தொரந்து வச்சுகிட்டு என்ன பண்ரேன்னு!! அப்போதான் தெரிஞ்சது அவனுக debug பண்ண சொன்னது வேற நான் பார்த்து பார்த்து coding கோன்னு நெனச்சு மலைச்சுப்போனது வேறன்னு.
சிபி : அப்படிப்போடு அருவாளை. நீங்களும் நம்ம கேஸ் தானா?
கைப்பூ : சரி நம்ம தப்புதான் போல. ப்ரோக்ராம் சின்னதா இருக்கும்னு நம்பி திரும்பி போய்ட்டேன்.அங்க போனாதான் தெரியுது அது பேப்பரை விட ரொம்ப பெரிசுன்னு.
தேவ் : என்ன தல. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா ஆன்லைன்லே ஹெல்ப்புக்கு வந்துருக்க மாட்டேன்?
கைப்பூ : அங்கே எங்க ஆன் லைன்னு? எல்லாமே ஆப்புதான் !!! இது பத்தாதுன்னு அந்த மேனேஜரு மவராசன் போனைப்போட்டு வேறொரு கம்பெனி ப்ராஜட் மேனேஜர் கிட்டே பேச்சி ஏதாச்சும் முடியாத ப்ராஜட்டு இருந்துதுன்னா கொடுங்க இங்க ஒருத்தன் வசமா சிக்கியிருக்கான்னு சொன்னான்.

பொன்ஸ் : (கோபத்துடன்) ஏன் அப்பவும் சும்மா இருந்தீங்க ?
கைப்பூ : ( அழுகையினூடே ) அங்க வந்துருந்த ஒரு ப்ராஜெட்டு மேனேஜரு சொன்னாரு ‘’ ஹிண்டு பேப்பரைக் கொடுத்தாக்கூட கோடிங்னு நெனச்சு debug பண்ரான்யா ! இவன் ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாரு ( பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிகிறார்)
அப்பொழுது வெளியே சத்தம் கேட்கிறது.
“ கழகம் கண்ட தலை கார்த்தி வாழ்க !! வாழ்க !! “ பாலபாரதி கோஷமிட புன்னகையினூடே கையில் ஒரு கஞ்சிராக்கட்டையுடன் நுழைகிறார் கார்த்தி.

கார்த்தி : என்ன இரு ஒரே ஒப்பாரிச்சத்தமா இருக்கு ?
விவசாயி : கார்த்தி இதென்ன கலாட்டா? என்னமோ ஈமெயில் அக்கௌண்ட் ஓபன் பன்ற மாதிரி நீங்க பாட்டுக்கு ஒரு கட்டை பிரம்மச்சாரிகள் கழகத்தை ஓபன் இருக்கீங்க ?
கார்த்தி : எலி வலையினாலும் தனி வலை வேணும் இல்லையா ? நீங்க மெம்பராக முடியாதுன்னு கரிச்சி கொட்டாதீங்க. வேணும்னா கழகத்திலே வீக்கெண்ட் பார்ட்டி இருக்கு. ஸ்பெசல் பாஸ் தாரேன் வந்து கலந்துக்குங்க .
இதனைக்கேட்டதும் மிகவும் உற்சாக மாகிறார் இளா. “ எனக்கொரு பாஸ் எனக்கொரு பாஸ் “ சிபி அலறுகிறார். அதற்கும் ஆமோதிக்கிரார் கார்த்தி..

ஜொ.பாண்டி : கார்த்தி அப்படியே எனக்கு ஒரு 15 பாஸ் வேணும் சொல்லிபிட்டேன்.

பொன்ஸ் : சரி சரி சங்கத்தோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னான்னு பேச வந்துருக்கோம்கரதையே மறந்துட்டு ஆளாளுக்கு பார்ட்டியப் பத்தி பேசிகிட்டு இருக்கீங்க.

தேவ் : தேர்தலில் அனைவரும் ஒன்றாக பணியாற்றினாலும் ‘தல’ இல்லாமல் சமாளிக்கரதுக்குள்ளே தாவு தீர்ந்து போச்சு.

ஜொ.பாண்டி : ஆமாண்ணே. எப்படியோ ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சமாளிச்சிட்டோம்.

பொன்ஸ் : எல்லாம் சரிதான் ஆனா நம்ம சங்க ஆளுகளுக்கு இன்னும் மொழிப்பயிற்சி அளிக்க வேண்டிய அவசியத்தை உணர வச்சிது இந்த தேர்தல்.

ஜொ.பாண்டி : பொன்ஸக்கா என்னாதிது மொழி ? பயிற்சி ?
பொன்ஸ் : நல்ல அறிக்கை விட்டே நீ. ஆனா எதிர் முகாமில் இருப்பவர்களைப்போல நீங்கள் விட்ட அறிக்கையில் ஒரு வெண்பா உண்டா ஒரு பரணி உண்டா ?

ஜொ.பாண்டி : யக்கா அதெல்லாம் யாரு பாக்கிறா? வெண்பா வேகாதபா வெல்லாம் நமக்கெதுக்கு ?

பொன்ஸ் : சும்மா வாயை மூடிகிட்டு ஒக்காரு. உனக்கென்ன தெரியும் அதைப்பத்தி ? சங்கத்தில யாருக்காவது வெண்பா வடிக்கத்தெரியுமா ?
தேவ் : ( முனு முனுப்பாக ) முதல்ல உங்களுக்கு சோறு வடிக்கத் தெரியுமா ?
கைப்பூ : யேய் யாரது ராஸ்கல் சவுண்ட் வுடரது ? எதுன்னாலும் எல்லாருக்கும் தெரியர மாதிரி பேசனும் சொல்லிபிட்டேன்.

சிபி : பொன்ஸு நாந்தேன் குமார காவியம் அப்படீன்னுனெல்லாம் தமிழைப் பிரிச்சு மேஞ்சுகிட்டு தானே இருக்கேன்? ( பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கிறார்)
கார்த்தி : இந்தா வந்துட்டாரய்யா சிபி. சீக்கிரம் அண்ணனுக்கு ரெண்டு மீன்கொத்தி வாங்கித் தரணும் அப்போதான் வீரமாவாரு !!

பொன்ஸ் : சரி சிபியாச்சும் பரவாயில்லை. இந்த ஜொள்ளுபாண்டி இருக்கானே அறிக்கை விடுடாண்னா கைப்பூவப் பத்தி ‘ கவிஜ ’ எழுதுராராம் கவிஜ. அதுலே ஒரு சீர் உண்டா? நிரை உண்டா ?

ஜொள்ளு பாண்டி : ( பொன்ஸை பயமாகப் பார்க்கிறார்.) பொன்ஸக்கா நான் சும்மாதான் ஏதோ தல மேல உள்ள பாசத்திலே ...

பொன்ஸ் : பாசமாவது பாயாசமாவது. வெண்பான்னு வந்துட்டா பாசத்தையெல்லாம் ஓரங்கட்டி வச்சிடுவா இந்த பொன்ஸ். சங்க மக்கள் அனைவருக்கு ஒரு மாசம் வெண்பா crash course எடுக்கலாம்னு நான் முடிவு பண்ணி யிருக்கேன்.

இதைக்கேட்ட கைப்பு உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு கலவரமாக பார்க்கிறார்கள்.
உடனே கார்த்தி வெளியில் நின்று ஆதரவு தரும் பாலாவைப் பார்க்கிறார். சங்க உறுப்பினர் கண்களில் மரண பயம் தெரிகிறது. பாலா சமயோஜிதமாக கார்த்தியை வரவேற்க வாங்கி வைத்திருந்த அணுகுண்டை கொழுத்திப்போடுகிறார். இதுதான் சாக்கு என தேவ்
“அய்யய்யோ கட்டதொரை சங்கத்திலே ‘பாம்’ வைக்க பாக்குறான் எல்லாரும் ஓடுங்க!!! “ என கூவிக்கொண்டே பைக்ஸ் அண்ட் பேரஸ் இருக்கும் திசையில் ஓடுகிறார். தப்பித்தால் போதுமென சங்கத்தினர் தெரித்து ஓடுகின்றனர்.


25 comments:

பொன்ஸ்~~Poorna said...

நல்ல வெண்பா.. போங்கப்பா.. எனக்கு வேற வேலை இருக்கு.. இன்னும் ரெண்டு மாசத்துக்கு நோ வெண்பா.. நோ ஆசிரியப்பா.. எல்லாருக்கும் சம்மர் லீவு.. தலை ஊருக்கு வந்த சந்தோஷத்தைக் கொண்டாடுங்க :)

தேவ் | Dev said...

பாண்டி பின்னி பெடல் எடுத்துட்டா அய்யா.

ஊரையே கலாய்ச்சு காயப்போட்ட சங்கத்து மக்களை ஒரே பதிவில் ஒண்ணா உக்கார வச்சு கலாய்ச்ச உனக்கு என்னப் பட்டம் தர்ற்துன்னு தெரியாம தவிச்சு நிக்குறேன்ய்யா...

:)

தேவ் | Dev said...

ஆமா.. கீதா அக்கா அன்னிக்கு சங்கத்துக் கூட்டத்துக்கு வந்துருந்தாங்களே அவஙகளை விட்டுட்ட!!

சிறப்பு விருந்தினர் அ.உ.ஆ.சூ.கு.ம.க செலவன் பேசுனதும் மிஸ் ஆகி இருக்கு....

எல்லாத்தையும் விடு...

அண்ணி கைப்பொண்ணு அண்ணன் தல யோட சேந்து பாடுன டூயட் பாட்டை அப்படியே கட் பண்ணிட்டியே ஏன் ராசா?

கவிதா|Kavitha said...

நிஜமாவே கூட்டம் எல்லாம் இப்படி நடக்குதா?..

கைப்புள்ள said...

//நிஜமாவே கூட்டம் எல்லாம் இப்படி நடக்குதா?..//

சந்தேகப் படறாங்கையா...நம்ம வெயிட்டை இனிமே காட்டிற வேண்டியது தான். டோட்டல் தமிழ்நாடு ஸ்தம்பிக்கிற மாதிரி கூட்டுய்யா ஒரு ட்ரைசைக்கிள் ஊர்வலத்தை...அப்பவாச்சும் நம்பறாங்களானு பாப்போம்.

நாமக்கல் சிபி said...

//அண்ணி கைப்பொண்ணு அண்ணன் தல யோட சேந்து பாடுன டூயட் பாட்டை அப்படியே கட் பண்ணிட்டியே ஏன் ராசா? //

athaane? een raasa? ippadi cut pannine?

ஜொள்ளுப்பாண்டி said...

என்ன பொன்ஸக்கா இப்படி கோச்சுகிட்டு போனா என்ன அர்த்தம்?? :((

ஜொள்ளுப்பாண்டி said...

//ஊரையே கலாய்ச்சு காயப்போட்ட சங்கத்து மக்களை ஒரே பதிவில் ஒண்ணா உக்கார வச்சு கலாய்ச்ச உனக்கு என்னப் பட்டம் தர்ற்துன்னு தெரியாம தவிச்சு நிக்குறேன்ய்யா...//

தேவண்ணே உங்க அன்பு மாத்திரம் இருந்தா போதுண்ணே.வேறென்ன பட்டம் பெருசா என்ன ?? :))

ஜொள்ளுப்பாண்டி said...

//ஆமா.. கீதா அக்கா அன்னிக்கு சங்கத்துக் கூட்டத்துக்கு வந்துருந்தாங்களே அவஙகளை விட்டுட்ட!!

சிறப்பு விருந்தினர் அ.உ.ஆ.சூ.கு.ம.க செலவன் பேசுனதும் மிஸ் ஆகி இருக்கு....//

அய்யய்யோ அண்ணே!! கீதக்கா, செல்வன் மற்றும் நம் சங்கத்தில் விடுபட்ட எல்லோரும் என்னைய மன்னிச்சுங்குங்க! கொஞ்சம் அச்சால்ட்டா இருந்துட்டேன். :(

ஜொள்ளுப்பாண்டி said...

//நிஜமாவே கூட்டம் எல்லாம் இப்படி நடக்குதா?.. //

என்னங்க கவிதா சங்கக்கூட்டத்தை கிட்ட இருந்து 360 டிகிரியில பதிஞ்சிருக்கேன் இப்படி கேக்குறீங்களே ??

ஜொள்ளுப்பாண்டி said...

//டோட்டல் தமிழ்நாடு ஸ்தம்பிக்கிற மாதிரி கூட்டுய்யா ஒரு ட்ரைசைக்கிள் ஊர்வலத்தை...அப்பவாச்சும் நம்பறாங்களானு பாப்போம். //

தல இப்பவே ரெடி பண்ணிடலாம் ட்ரை சைக்கிளை !! :))

ஜொள்ளுப்பாண்டி said...

//athaane? een raasa? ippadi cut pannine? //

நான் வேணும்னு செய்வேனா சிபியண்ணே? ஏதோ வெண்பா வேகாதபா சத்தத்திலே அண்ணியோட பாட்டு மிஸ்ஸாயிடிச்சி. தேவண்ணே கொஞ்சம் ஹெல்ப் பண்ணக்கூடாதா??

பெருசு said...

வெண்பா வேண்டா மென்ற பெண்ணே
வெண்பொங் கல்போ துமா.

Anonymous said...

"//ஜொ.பாண்டி : கார்த்தி அப்படியே எனக்கு ஒரு 15 பாஸ் வேணும் சொல்லிபிட்டேன்//".

தங்கத்தம்பி பாண்டி!நம்ம வளைகுடா
கிளையோட பாஸ் பத்திரம்பா!!.
அண்ணன்மாரு யாராவது லவட்டி
பிளாக்ல வித்துற போறாய்ங்க!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

ஜொள்ளுப்பாண்டி said...

பெருசு ஏன் கஷ்டப்படுறீரு? கமான் கமான் !!

ஜொள்ளுப்பாண்டி said...

துபாய் ராசா உங்களுக்கு இல்லாத பாஸா? பேரல் பேரலா ஊரல் போடச்சொல்லிடறேன் ;-))

Anonymous said...

"//துபாய் ராசா உங்களுக்கு இல்லாத பாஸா? பேரல் பேரலா ஊரல் போடச்சொல்லிடறேன் ;-))".

பாண்டி எனும் தம்பியுடையான் பாஸுக்கு அஞ்சான்!!!!!!!!!.
பாசத்துக்கு அஞ்சான்!!!!!!!!.
பேரல் பேரலா உள்ள
ஊரலுக்கும் அஞ்சான்!!!!!!!!.
(ஊறுகாயை மறந்துறாதே தம்பி!!!).

அன்புடன்,
துபாய் ராஜா.

Agent 8860336 ஞான்ஸ் said...

/|\
0 0
.V.

Sridhar H said...

ஜொள்ளுப்பாண்டி அண்ணே! சங்கத்துல புதிய மக்களுக்கு பாஸ் கிடையாதா? அண்ணே! துபாய் ராசாவுக்கு பேரல், இந்த பக்ரைன்ல, கேக்ரன் மேக்ரன் கம்பெனில வேலபாக்குற தம்பிக்கு ஒரு cutting போதும்.

Anonymous said...

ஜொள்ளுப்பாண்டி அண்ணே! சங்கத்துல புதிய மக்களுக்கு பாஸ் கிடையாதா? அண்ணே! துபாய் ராசாவுக்கு பேரல், இந்த பக்ரைன்ல, கேக்ரன் மேக்ரன் கம்பெனில வேலபாக்குற தம்பிக்கு ஒரு cutting போதும்.

ILA(a)இளா said...

பாண்டி, கலக்கிட்டீங்க போங்க.. என்னாத்த சொல்ல.

ஜொள்ளுப்பாண்டி said...

துபாய்ராசா ஊரலுக்கே ஏற்பாடு பண்ணியாச்சு ஊறுகாய்க்கு ஏற்பாடு பண்ணாம இருப்பேனா?? ;))

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணே ஞான்ஸ் !! என்னா தத்துவம் என்னா தத்துவம்.என்னண்ணே ரொம்பநாளா ஆளக் காணோம்?? நெசமாவே சன்யாசம் வாங்கீட்டு போய்ட்டீயளா??

ஜொள்ளுப்பாண்டி said...

//ஜொள்ளுப்பாண்டி அண்ணே! சங்கத்துல புதிய மக்களுக்கு பாஸ் கிடையாதா? அண்ணே! துபாய் ராசாவுக்கு பேரல், இந்த பக்ரைன்ல, கேக்ரன் மேக்ரன் கம்பெனில வேலபாக்குற தம்பிக்கு ஒரு cutting போதும். //

ஸ்ரீதர் என்ன இப்படி கேட்டுபுட்டீக?? அண்டா அண்டாவா இருக்கு மொண்டு குடீங்க!!:))

ஜொள்ளுப்பாண்டி said...

//பாண்டி, கலக்கிட்டீங்க போங்க.. என்னாத்த சொல்ல. //


இளா உங்களைவிடவா?? :))