Wednesday, May 17, 2006

குரூப் போட்டோ

என்ன மக்காப் பாக்கீய?அம்புட்டும் சங்கத்து சிங்கங்கத் தான்...

சிறுவயசுல்ல குரூப்பாத் திரிஞ்சப்போத் தனி தனியா எடுத்து வச்சப் போட்டோத் தான்...

ஆரு ஆர் இருக்கான்னு அடையாளம் கண்டு சொல்லுங்கப் பாப்போம்...ஒரு சின்ன க்ளூ நான் தான் இந்தப் போட்டோவெல்லாம் என் கேமராவில்ல தத்தக்கா பித்தக்கான்னு நடக்குற வய்சுல்ல புடிச்சுப் போட்டேன்.

36 comments:

நன்மனம் said...

ஓ, இது தான் பரிணாம வளர்ச்சியா?

வ.கு.ச லேந்து இப்ப வ.வா.ச

அடுத்து??

:-))

பொன்ஸ்~~Poorna said...

அந்த வாயில துணி வச்சி மூஞ்ச மூடிகிட்டு இருக்கே, அது தான் கீதா.. அப்பப்போ காணாம போய்டறாங்களே!!!

ஒற்றர் படைத் தலைவர் நன்மனம், அடுத்து வ.வ.ச = அதாங்க, வரு.வயசாளிகள் .சவிலும் இருப்போம்.. அது தான் கட்சியின் வளர்ச்சி :)

தேவ் | Dev said...

ஆகா பர்ஸ்ட் டார்கெட் கீதா அக்காவா?:)

தேவ் | Dev said...

மக்கா சொல்ல மறந்துட்டேன் தோழமைக் கட்சி அன்பர்களும் இந்தப் படத்துல்ல இருக்காங்க அவங்களையும் சேர்த்தே தேடுங்க:)

இளவஞ்சி said...

உங்க தலைவரு மட்டும்தான்னு நினைச்சேன்!

வந்து பார்த்தா சங்கம் முழுசும் "கைபுள்ளை"களாத்தான் இருக்கு!!!

கட்சி வெளங்கீரும்!!! :)

மஞ்சூர் ராசா said...

தம்பி நாமக்கல் சிபி கூப்பிடாமலே இந்த சங்கத்துலெ அப்படி என்னதான் நடக்குதூன்னு பாக்கலாம்னு வந்தேன். வந்த இடத்திலெ குரூப் போட்டொ.

தலிவா சமீபத்திய போட்டோ ஏதாவது போட்டிங்கன்னா நல்லா இருக்குமே...

பொன்ஸ்~~Poorna said...

அஞ்சாவது ரோவில் ரெண்டாவதா அப்பாவி மாதிரி மொகத்த வச்சிகிட்டு மேல இருக்குற பொண்ணுங்களை நோட்டம் விட்டுகிட்டு இருக்கிறது, க.பி.க கட்சியின் 'மூத்த' உறுப்பினர் போலிருக்கு..

அவரு என்ன பண்றாருன்னு தெரியாம கட்சியில சேர்ந்து மொத அறிக்கையும் விட்டுபுட்டு, என்னடா, இங்கிட்டு வந்துட்டோமேன்னு கன்னத்துல கைய வச்சிகிட்டு இருக்கிறவரு அதே கட்சியோட 'இட்லி'யோட சோடியும் புதரகமும் சேர்ந்த பேர்ல இருக்குற ஊர்க் கிளைய பாத்துகிடறவரு..

அடியிலேர்ந்து ரெண்டாவது ரோல, கடசீலேர்ந்து ரெண்டாவதா உக்காந்துகிட்டு "என்ன ஆனா எனக்கென்னான்னு" தொடச்சிகிட்டே இருக்கிறவரு அந்தக் கட்சியிலும் நம்ம கட்சியிலும் உயிர் கொடுத்து உழைப்பவர்...

என்ன தேவ் தம்பி, சரியா தப்பான்னு எப்போ சொல்லுவீங்க?!!

தேவ் | Dev said...

அக்கா போட்டோ புதிருக்குப் பதில் சொற் புதிரா?

ம்ம்ம் ரோசிக்க வச்சுட்டீங்க? யப்பா யாராவது உதவிக்கு வாங்க... போட்டோ எடுத்தவனுக்கே அக்கா குழப்பக் குழம்பு வச்சிட்டாங்களே

பொன்ஸ்~~Poorna said...

இளவஞ்சி,
இத்தனை வயசாகி, வாத்தியார் லெவலுக்குப் போனப்புறமும் நீங்க இன்னும் 'இள'வஞ்சியாத் தானே இருக்கீங்க?!! அது போல எங்கள் வாலிபர்களுக்கும் குழந்தை மனசு :)

கீதா சாம்பசிவம் said...

அம்மா பொன்ஸு, நான் காணாம ஒண்ணும் போகலை. நீங்க தான் ஞாயிற்றுக்கிழமை கூட வந்துட்டு அப்புறம் இரண்டு நாளாக என்னைக் கண்டுக்கவே இல்லை. தலைவர் வந்தாச்சு இல்ல. இனிமேல பாருங்க. நீங்க தினமும் எல்லார் பதிவிலயும் பிரசெண்ட் குடுக்கற மாதிரி நம்மகிட்டயும் சொல்லணுமில்ல. அதுவும் நான் நிரந்தரத் தலைவலி.

தேவ் | Dev said...

அது சரி கீதாக்கா.. அந்தப் போட்டோவில்ல பொன் ஸ் உங்களைக் கரெக்ட்டா அடையாளம் கண்டுக்கிட்டாங்களா அதைச் சொல்லாம போனாப் எப்படிங்க?

கோபி(Gopi) said...

ஏம்ப்பு,

எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...

நம்ம கைப்பு மாதிரி ஒன்னையுமே காணோமே...

(அது பாரின் போனப்ப எடுத்ததுன்னு சொல்லப்படாது... ஆமா!)

தேவ் | Dev said...

கோபி எப்படி கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுக் கேட்டீங்க.. உங்க டவுட் ரொம்ப சரிண்ணா

பொன்ஸ்~~Poorna said...

கைப்பு எங்கேன்னு கேட்ட கோபிக்கு ஒரு சீரியஸ் பதில்..

அந்த வயசிலும் சரியா போட்டோவுக்குப் போஸ் குடுக்கத் தெரியாமல் தலையை நீட்டும் கடைசி வரிசை, கடைசி படம் தான் எங்க தல கைப்பு!!!!

tbr.joseph said...

எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...

நம்ம கைப்பு மாதிரி ஒன்னையுமே காணோமே...//

அதானெ!

ஜொள்ளுப்பாண்டி said...

நான் எங்கே இருக்கேன்? நான் யாரு? இதுலே நான் யாரு?? யாராச்சும் சொல்லுங்க :((

கட்டை பிரம்மச்சாரிகள் கழகம்
( க.பி க) எல்லாம் நம்ம கிளைக்கழகம் தான். யாரும் பீதியடைய வேண்டாம். கட்டை பிரம்மச்சாரிகள் அனைவரும் அதில் Default ட்டா மெம்பர் ஆயிருவாங்க. பேரு நல்லா இருக்கா? நாந்தான் வச்சேன்:))

கீதா சாம்பசிவம் said...

நீங்க ரெண்டு பேரும் பமக வோட சேர்ந்துகிட்டு என்னையும் என் சங்கப் பணிகளையும் இருட்டடிப்பு செய்து வருவதை இந்த வலை உலக மக்கள் கண்டு களித்துத் தான் வருகிறார்கள். சிறுமதியாளர்களே, உங்கள் சதி அம்பலம் ஆகிவிட்டது. என்னுடைய சுற்றுப் பயண விவரங்களை இருட்டடிப்பு செய்த மாதிரி, எங்கள் தங்கத் தலைவராம், சிங்கத் தலவராம், கைப்புள்ள அவர்களைப் பற்றி "கல்கி" பத்திரிகையில் வந்திருப்பது பற்றி முதன் முதல் கண்டறிந்து அதற்காக ஒரு பதிவே போட்டு விட்டபின்னர் கைப்புள்ளயிடம் நல்ல பேர் வாங்குவதற்காக உங்களை முன்னிறுத்தி கொண்ட சிறு மதியாளர்களே இதை எல்லாம் இந்த நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

கைப்புள்ள said...

//எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...

நம்ம கைப்பு மாதிரி ஒன்னையுமே காணோமே...//

குட்டியிலே கழுதை கூட குதிரை மாதிரி இருக்குமின்னு சொல்வாய்ங்களே...அத நீங்க யாரும் கேள்வி பட்டதில்லையா...அது மாதிரி தான் இதுவும். நான் சின்ன கோந்தையா இருக்கறச்சே எங்க சின்ன அத்தை சிண்டி கிராஃபோர்டு கலர்ல இருப்பேனாம்...எங்காத்தா அடிக்கடி சொல்லும்.

Karthik Jayanth said...

அன்பு அண்ணன் போர் வாள் பாண்டி,

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது பழைய மொழி !

அண்ணண் உடையான் அடிமையாக மாட்டான் என்பது புது மொழி !

எனக்கு அண்ணண் பாலா ! & பாண்டி !

வாழ்க ! தல கைப்பு

பொன்ஸ் எனது அன்பு அண்ணண்கள் கட்சியின் Strategic Think Tank ஆக நியமித்த பொழுது எடுத்த படம் அது :-)

பொன்ஸ்~~Poorna said...

என்னவோ.. இப்படிக் கன்னத்துல கையவச்சிகினு உக்கார விட்டுட்டாங்களேன்னு நாளைக்குப் புலம்பாதவரை சரிதான் :)

Karthik Jayanth said...

அப்படி புலம்புபவர்களை மீட்டெடுப்பது, மேலும் பலர் புலம்பாமல் இருக்க வகை செய்வதுதான் எங்கள் கழகத்தின் கொள்கை..

அதை யோசிப்பதுதான் எமக்கு வேலை ! :-)

பொன்ஸ்~~Poorna said...

//அப்படி புலம்புபவர்களை மீட்டெடுப்பது, மேலும் பலர் புலம்பாமல் இருக்க வகை செய்வதுதான் எங்கள் கழகத்தின் கொள்கை.. //

இவ்வளவு சொன்னபிறகு, இதை நான் சொல்லவேண்டி இருக்கிறது...
ஒரு கொடியில் பிறந்த இரு மலர்களாக இருந்தாலும், சில நடைமுறைப்படுத்த முடியாத உங்களின் கொள்கைகளை நான் எதிர்க்கிறேன்.. இனி எத்தனை பேர் புலம்புராங்கன்னு பாருங்க..

ஜான்சி ராணி கவிதா!! எங்கே இருக்கீங்க !!! :)
பார்க்கலாம் ஒரு கை.. கொள்கைகளில் தெளிவில்லாத க.பி.கவுடன் இனி மொத்திப் பார்த்து தான் சாரி, மோதிப் பார்த்து தான் திருத்த வேண்டும்.. வாங்க வாங்க!!!

நிலா said...

//எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...

நம்ம கைப்பு மாதிரி ஒன்னையுமே காணோமே...

(அது பாரின் போனப்ப எடுத்ததுன்னு சொல்லப்படாது... ஆமா!)//

:-)))

//நான் சின்ன கோந்தையா இருக்கறச்சே எங்க சின்ன அத்தை சிண்டி கிராஃபோர்டு கலர்ல இருப்பேனாம்...//

கைப்ஸ்
இது உங்களுக்கே ஓவரா தெரியலை?:-))

கைப்புள்ள said...

கைப்ஸ்
இது உங்களுக்கே ஓவரா தெரியலை?:-))

உண்மையைச் சொன்னா இந்த உலகம் என்னிக்கு ஒத்துக்கிட்டிருக்கு...இன்னிக்கு ஒத்துக்க?

நன்மனம் said...

// கைப்புள்ள said...
கைப்ஸ்
இது உங்களுக்கே ஓவரா தெரியலை?:-))

உண்மையைச் சொன்னா இந்த உலகம் என்னிக்கு ஒத்துக்கிட்டிருக்கு...இன்னிக்கு ஒத்துக்க? //

கைப்ஸ்,

இந்த மாதிரி கமெண்ட்டுக்காக காத்திருந்து பதில் சொன்னா மாதிரி தெரியுது.:-)

Anonymous said...

"எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது..."

ஆமாமா!!! குரூப் போட்டோவை பார்த்துட்டு நம்ம வளைகிடா கிளையை சேந்த அரபு ஷேக்குகளும், வெள்ளைகார துரைகளும் ஃபீலிங்ஸாயீ
பிளாஷ்பேக்குக்கு போயிட்டாங்கப்பா.

அன்புடன்,
துபாய் ராஜா.

Anonymous said...

"எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது..."

ஆமாமா!!! குரூப் போட்டோவை பார்த்துட்டு நம்ம வளைகிடா கிளையை சேந்த அரபு ஷேக்குகளும், வெள்ளைகார துரைகளும் ஃபீலிங்ஸாயீ
பிளாஷ்பேக்குக்கு போயிட்டாங்கப்பா.

அன்புடன்,
துபாய் ராஜா.

தேவ் | Dev said...

//நீங்க ரெண்டு பேரும் பமக வோட சேர்ந்துகிட்டு என்னையும் என் சங்கப் பணிகளையும் இருட்டடிப்பு செய்து வருவதை இந்த வலை உலக மக்கள் கண்டு களித்துத் தான் வருகிறார்கள்.//

:((( உங்களை இப்படி இருட்டடிப்பு செயதவர்களுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவ் | Dev said...

//இந்த மாதிரி கமெண்ட்டுக்காக காத்திருந்து பதில் சொன்னா மாதிரி தெரியுது.:-) //

தல கிட்ட ம்றுபடியும் போட்டு வாங்க ஒருத்தர் கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டார்....

கைப்புள்ள said...

//இந்த மாதிரி கமெண்ட்டுக்காக காத்திருந்து பதில் சொன்னா மாதிரி தெரியுது.:-)//

ஆமாம்யா அது உண்மை தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?

உண்மையைச் சொன்னா இந்த உலகம் என்னிக்கு ஒத்துக்கிட்டிருக்கு...இன்னிக்கு ஒத்துக்க?

நன்மனம் said...

ஆகா!

தல புல் பார்ம்.... நா ஒத்துக்கிறேன்... ச.... ஒதுங்கிகறேன்...

இப்ப தான் புரியுது ஏன் தலனு.

:-)

நாமக்கல் சிபி said...

//கட்டை பிரம்மச்சாரிகள் கழகம்
( க.பி க) எல்லாம் நம்ம கிளைக்கழகம் தான். யாரும் பீதியடைய வேண்டாம். கட்டை பிரம்மச்சாரிகள் அனைவரும் அதில் Default ட்டா மெம்பர் ஆயிருவாங்க. பேரு நல்லா இருக்கா? நாந்தான் வச்சேன்:))//

இதை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன்.

ஜொள்ளுப்பாண்டி said...

//இதை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன்.//


சிபியண்ணே சும்மா லூஸில விடுங்க :)

நாமக்கல் சிபி said...

2வது வரிசையில 5வது இருக்கறதுதான் ப.ம.க தலைவர் முடமூடியாரா?

நாமக்கல் சிபி said...

என்ன தேவ் முதல் ஃபோட்டோவா தலை ஃபோட்டோவைப் போடாம நம்மளதைப் போட்டுட்டீங்களே!

:-)

நாகை சிவா said...

மக்கா! அடங்க மாட்டிங்களா