Tuesday, May 30, 2006

கேமரூன் காட்டானும் கண்டமும்...


ஒரு இளைஞன்னா ஒரு இளைஞி கையைப் பிடிச்சு இழுக்கத் தான் செய்வான்" என முழங்கி, வாலிபர்களின் உரிமைக்காக அன்றே குரல் கொடுத்து (பின்னர் கந்தல் துணியாய் கிழித்து காயப் போடப்பட்ட) தல கைப்புள்ள, கால் பந்து(எக்ஸ்கீஸ் மீ...உதை பந்து) விளையாட செருமேனி சென்றிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் வ.வா.ச. வாஷிங்டன் பகுதி கொ.ப.செவும் புதரகத்தின் பாதுகாவலருமான ஜார்ஜ் புதருடன் பேசி கைப்பு பங்குபெறும் ஆட்டங்களின் பிரத்யேக ஒளிபரப்பு உரிமையை ஸ்கை போர்ட்ஸிடமிருந்து சங்கத்தின் தொலைக்காட்சி சேனலான 'ஆப்பு டிவி'க்கு மாற்றம் செய்ய ஆற்றலரசி அக்கா பொன்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும் நாம் அறியாததல்ல. தலயின் மீது கொண்டிருக்கும் அபிமானத்தின் காரணமாக 'புதர்' இதற்கு உடனுக்குடன் இசைவு தெரிவித்து விட்டதாகவும், அத்துடன் உதைபந்தாட்ட ஓளிபரப்பு அனைத்து நாடுகளிலும் இன்னும் தெளிவாக தெரிவதற்காக, கூடுதலாக நான்கு செயற்கைகோள்களை போர்க்கால அடிப்படையில் ஏவ நாஸா (NASA) விஞ்ஞானிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் சங்கத்து சிங்கங்கள் தேவ்,பாண்டி,சுடான் சிவா ஆகியோர் கேமரூன் நாட்டு காட்டான் ஒருவனை தல மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகக் குமிறியதும், அதன் எதிரொலியாக அவன் தலயை ஏகவசனத்தில் புரியாத மொழியில் திட்டியதும், முன்னரே ஒரு முறை இணைய ஜோசியரும் தல ஊர்க்காரவுகளுமான தருமி "உனக்கு காலுக்கு கீழே கண்டம்" என எச்சரித்ததும் தலயை சற்றே பீதி அடைய செய்துள்ளது. எனினும் பீதிக்கு பீப்பீ ஊதிவிட்டு, தன் "வருங்கால" சந்ததியினரைப் பாதுகாக்கும் எண்ணத்தில் புதிய கெட்டப்பில் உதைபந்தாட்ட பயிற்சிக்கு 'தல' கிளம்பிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படம்.


அச்சமயம் நமது லத்தீன் அமெரிக்க வட்ட கொ.ப.செவும் உதைபந்தாட்ட சிறப்பு நிருபர்களில் ஒருவருமான பெருசு தலயைத் தொடர்பு கொண்டு கேட்டது.

பெருசு : ஏன் தல? கேமரூன் காட்டானுக்குப் பயந்து தான் நீ இந்த புது கெட்டப்பில் ஆட்டத்துக்குப் போறதா பேசிக்கிறாங்களே? அது உண்மையா?

தல : ஹா...ஹஹ்ஹா! பயமா? எங்களுக்கா? பீரங்கி குண்டு பெடரியில வந்து விழுந்தாலும் பெசகாம் பிரேடு(Parade) நடத்தற பரம்பரைய்யா நாங்க...யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்ட?

பெருசு : நான் கேக்கலை தல. அப்படி ஊருக்குள்ளாற பேசிக்கிறாங்க. அத தான் நா கேட்டேன். மன்னிச்சிக்க தல.

தல : சரி...சரி...நம்ம பெருமையை ஊர்க்காரனுவ தெரிஞ்சிக்கிற மாதிரி எதாச்சும் கேளு

பெருசு : சரி தல! இந்த சொக்காயைப் போட்டுக்குட்டு உதை வாங்க...சாரி...உதைபந்தாட போறியே...எதனா வேண்டுதலா?

தல : ஆன்...இது கேள்வி. சொல்றேன்...தமிலெழுத்துல கால், கொம்பு எல்லாம் சரியா போட்டு தப்பில்லாம திருத்தமா எளுதிக்க. நமக்கு எலக்கணம் ரெம்ப முக்கியம். காலுக்கு மத்தியிலே லைட்டு போட்டு வெளாடலாம்...ஆனா ஃபைட்டு போட்டு வெளாடப்படாது...அதுக்காண்டி எடுத்த முன்னெச்சரிக்கை தான் இதுன்னு கொட்டை எழுத்துல கொரியர் ஃபாண்டுல போடு.

ஆயினும் சங்கத்துக் கொள்கைகளில் மிகத் தெளிவாக இருக்கும் பெருசு கேட்ட அடுத்த சில கோக்குமாக்கான கேள்விகளையும் அதற்கு தல தன் பாணியில் அளித்த பதில்களையும் மேலும் பல சுவையான செய்திகளையும் தெரிந்து கொள்ள சங்கத்து நாளேடான "டாக்டர் நமது கைப்புள்ள"யைப் படியுங்கள்.

((தத்துவம் எண்- 1: ஆப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்))

15 comments:

தேவ் | Dev said...

//சங்கத்தின் தொலைக்காட்சி சேனலான 'ஆப்பு டிவி'க்கு மாற்றம் செய்ய ஆற்றலரசி அக்கா பொன்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும் நாம் அறியாததல்ல//

ம்ம்ம் முதல்ல அரிசி பிரச்சனை இப்போ டி.வியுமா?

ஆகா தளபதி நீங்கத் தான் இதை எல்லாம் கேக்கணும்
அய்யா சிபி எங்கே இருக்க? சீக்கிரம் வாய்யா சீக்கிரம் வாய்யா

தேவ் | Dev said...

//பீதிக்கு பீப்பீ ஊதிவிட்டு, தன் "வருங்கால" சந்ததியினரைப் பாதுகாக்கும் எண்ணத்தில் //

நல்ல எண்ணம். ஆனா இன்னும் கொஞசம் விளக்கமா சொன்னா விவரம் தெளிவாப் புரியும் ..

நாகை சிவா said...

//சங்கத்து நாளேடான "டாக்டர் நமது கைப்புள்ள"யைப் படியுங்கள்.//
சங்கத்து பத்திரிக்கைக்கு எல்லாரும் சந்தா கட்டியாச்சாப்பா?
கட்டாதவங்க சீக்கிரம் கட்டுங்க........
விளம்பரம் கொடுக்க நினைப்பவர்கள், நம்ம ஜொள்ள, சே... நம்ம பாண்டிய தொடர்பு கொள்ளவும்.

நாகை சிவா said...

கவசம், சீ... உடை ரொம்ப டைட்டா இருக்கே! எப்படி இத போட்டு கிட்டு நம்ம தல ஒடி உதைப்பந்த உதைக்க போகிறார். கண்ட இடத்துல பிடிச்சுக்கு போகுதுபா..........
சுளுக்கு எடுக்க உடனே ஏற்பாடு பண்ணிடுங்க.......

(துபாய்) ராஜா said...

//தல : ஹா...ஹஹ்ஹா! பயமா? எங்களுக்கா? பீரங்கி குண்டு பெடரியில வந்து விழுந்தாலும் பெசகாம் பிரேடு(Parade) நடத்தற பரம்பரைய்யா நாங்க...யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்ட?//

சங்கத்து கொள்கையை இன்னா சிம்பிளா சொல்லிட்டார்பா நம்ம தல.

(துபாய்) ராஜா said...

/லைட்டு போட்டு வெளாடலாம்...
ஆனாஃபைட்டு போட்டுவெளாடப்படாது/

"ஆஹா!ஆஹா!'தல'! தத்துவம்னா
இதுதான்யா தத்துவம்!!!!!!!."

(துபாய்) ராஜா said...

//கண்ட இடத்துல பிடிச்சுக்கு போகுதுபா..........
சுளுக்கு எடுக்க உடனே ஏற்பாடு பண்ணிடுங்க.......//

சிவா!!இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான நம்ம'தல'தம்ஃப்ரீய'
'முதுகலை சுளுக்கு டாக்டருக்கு'படிக்க
வச்சிருக்காரு !!!!!!.

http://kaipullai.blogspot.com/2006/05/blog-post_114795709369129191.html
போய்ப் பாருங்க சிவா!!!!!.

ஜொள்ளுப்பாண்டி said...

//"டாக்டர் நமது கைப்புள்ள"யைப் படியுங்கள்.//

ஆஹா இளா நமக்குன்னு ஒரு பத்திரிக்கையா ?? சொல்லவேயில்ல???

//'ஆப்பு டிவி'க்கு மாற்றம் செய்ய ஆற்றலரசி அக்கா பொன்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும் //

அட டிவி வேறயா ?? சங்கம் எங்கேயோ போய்கிட்டு இருக்கப்பூ !!!

கைப்புள்ள said...

//ஆனா இன்னும் கொஞசம் விளக்கமா சொன்னா விவரம் தெளிவாப் புரியும் .. //

யோவ்! பல்லை வெளக்கலாம், பாத்திரத்தை வெளக்கலாம்...வெவகாரத்தை எல்லாம் வெளக்க முடியாதுய்யா...வெவசாயி பாலிஷா சொல்லிருக்காரு...அத புரிஞ்சுக்காம இம்சை குடுக்கிறீங்களேயா?

கைப்புள்ள said...

//அட டிவி வேறயா ?? சங்கம் எங்கேயோ போய்கிட்டு இருக்கப்பூ !!!//

பாண்டி! இதுக்கே அசந்துட்டா எப்படி? உன்னை வெத்தலைக்கு பாக்கு வாங்க சொல்லி அனுப்புனோம் இல்ல...அந்த இடைபட்ட டைம்ல "ஏர் கைப்புள்ள"னு ஒரு விமான கம்பெனியும் "கைப்பு டேவிட்சன்"னு ஒரு பைக் கம்பெனியும் வெலைக்கி வாங்கிட்டோம்யா. இதெல்லாம் யாருக்காக? எல்லாம் ஒன்ன மாதிரி சங்கத்து சிங்கங்களுக்காகத் தான் கண்ணு!

(துபாய்) ராஜா said...

//"ஏர் கைப்புள்ள"னு ஒரு விமான கம்பெனியும் "கைப்பு டேவிட்சன்"னு ஒரு பைக் கம்பெனியும் வெலைக்கி வாங்கிட்டோம்யா. இதெல்லாம் யாருக்காக? எல்லாம் ஒன்ன மாதிரி சங்கத்து சிங்கங்களுக்காகத் தான் கண்ணு!"//

சங்கத்து சிங்கங்களின் சங்கநாதம் எங்க தல கைப்பு வாழ்க!வாழ்க!
(அந்த "ஏர் கைப்புள்ள"ஐ மட்டும் வளைகுடா கிளை பொறுப்புல வுட்டுடு
தல!பசங்களுக்கு பேரீச்சம்பழம் அனுப்ப யூஸ் பண்ணிக்கிறோம்.)

(துபாய்) ராஜா said...

//"யோவ்! பல்லை வெளக்கலாம், பாத்திரத்தைவெளக்கலாம்...வெவகாரத்தை எல்லாம் வெளக்க முடியாதுய்யா...வெவசாயி பாலிஷா சொல்லிருக்காரு...அத புரிஞ்சுக்காம இம்சை குடுக்கிறீங்களேயா? "//

தல!தல!இவ்வளவு நாள் நீ எங்க போய்ட்ட தல???.நமது புதர் கேட்ட
'பத்து கேள்விக்கு' பளிச்சுனு ஒரு பதில சொல்லு 'தல'!!!!!!!.

(துபாய்)ராஜா.

கைப்புள்ள said...

//அந்த "ஏர் கைப்புள்ள"ஐ மட்டும் வளைகுடா கிளை பொறுப்புல வுட்டுடு
தல!பசங்களுக்கு பேரீச்சம்பழம் அனுப்ப யூஸ் பண்ணிக்கிறோம்//

அந்த கவலையே ஒனக்கு வேணாம் ராஜா...உங்க நாடு சேக்கு யாரு அவரு... பேரு வர மாட்டேங்குது...அவரோட நேத்து நம்ம துபாய் பெரிய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற கடையிலே கோலி சோடா குடிக்கச் சொல்ல...நம்ம சங்கத்து கனரக பேரீச்சம்பழ சரக்கு போக்குவரத்துக்காண்டி துபாய்லயும் சென்னையிலேயும் ஜெட்டி கட்டித் தரேன்னு சொல்லிருக்காருப்பா.

Karthik Jayanth said...

தல,

இந்த கேப்புல நம்ம சங்கம் வாங்குன 'கைப்சாப்ட்' (kaipsoft)கம்பெனிய பத்தி ஒண்ணுமே சொல்லல? சரி சின்ன அக்கவுண்ட் எல்லாம் எதுக்கு சொல்லிட்டுன்னு விட்டுடிங்களா அது சரி. அப்படியே அந்த கட CIO வா என்ன அப்பாயின்ட் பண்ணிடிங்கன்னா நான் எதோ பொழப்பை பாத்துகிடுவேன் :-)

Dharumi said...

".........முன்னரே ஒரு முறை இணைய ஜோசியரும் தல ஊர்க்காரவுகளுமான தருமி......."//

- அட உங்களுக்கெல்லாம் எப்டிப்பு இந்த ரகசியமெல்லாம் தெரிஞ்சுது? கைப்புள்ள நம்ம ஊருக்கு வந்தப்போ ஒருத்தருக்கும் தெரியாமல்ல வந்து பாத்துட்டு போனாரு. அவர் சங்கத்தில இருக்கிற ரெண்டெழுத்து, மூணெழுத்து பேருள்ள ஆளுக கிட்ட சாக்கிரதையா இருக்கச் சொல்லியிருந்தேனே அந்த ரகசியமும் வெளியே வந்திருச்சா...இல்ல..யாருக்குமே தெரியாதா? தெரிஞ்சிருக்காது...அதான் ரொம்ப ரகசியமாச்சே...!