Saturday, May 20, 2006

பிகுலு அயல்நாட்டுப் பயணம்

வரு.வா.சங்கத்தின் கொ.ப.செ நேற்று இரவு சங்கத்தின் அயல் நாட்டு வளர்ச்சிகளை மேற்பார்வையிடுவதற்காக புதரகம் (நன்றி: முகமூடி) புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புதரகம்(அமெரிக்கா) கிளம்பிய அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவ்வளவாகப் பதில் அளித்தார்.

தம் பயணம் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியம் என்றும்...அயல்நாட்டில் வ.வா.சவைப் பெரிய அளவில் வளர்ப்பதே தன் பயணத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

இதர கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பிகுலு என்று சங்கத்தில் மரியாதையாக அழைக்கப்படும் பொன்ஸ் அக்காவின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிகுலு தன் புதரக பயணத்தின் போது முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் சிலரைச் சந்திப்பார் என்றும் அந்தச் சந்திப்பு வ்.வா.சங்கத்தின் புதரக அரசியல் வளர்ச்சியைப் பலப்படுத்தும் என்று தெரிகிறது.

சங்கத்தின் தலக் கைப்பு பிகுலை வாழ்த்தி சித்தூர்கட்டிலிந்து 50 ஒட்டகங்களில் பரிசுப் பொருட்களும் புதரக வ.வா.ச வளர்ச்சி நிதியும் அனுப்பி வைத்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வீக் என்ட் என்பதால் சங்கப் பணிகளின் ஆங்காங்கு சங்க நிர்வாகிகள் பிசியாகி விட்டதால் அவர்களிடமிருந்து எந்தக் கருத்தும் பெறமுடியவில்லை.

முக்கியத் தகவல்: பொன்ஸ் புதரகத்தில் இருந்து திரும்பி வரும் வரை சங்கத்தின் கொ.ப.செ பொறுப்பை சங்கத்தின் போர்வாள் தம்பி பாண்டி தன் இரும்பு தோள்களில் தூக்கிச் சுமப்பான் எனத் தலக் கைப்பு பேக்ஸ் அனுப்பி உள்ளார்.
மகளிரணி பொறுப்புக்கள் குறித்து இன்னும் ஒரிரு நாளில் அறிவிப்பதாயும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

14 comments:

சீனு said...

"புதரகம்"-ன்னா "வெளிநாடு"-ஆ?

என்னை மாதிரி அரைவேக்காட்டுக்களுக்காக ஒரு encyclopedia (with these new words alone) எங்காவது இருக்கா? ஏன்னா..."மறுமொழி மட்டுருதல்"-ன்னா "Comment Moderation"-ன்னு (correct-ஆ?) ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன்.

Anonymous said...

நமது கொ.ப.செ 'பிகுலு பொன்ஸின்'
'புதரகப் பயணம்' வெற்றிகரமாக நிறைவேற வருத்தப்படாத வாலிபர்
சங்க வளைகுடா கிளை சார்பில்
வாழ்த்துக்கள். புயலெனப் பாயும் போர்வாள் தம்பி பாண்டிக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

கைப்புள்ள said...

புதரகத்தை ஒரு கலக்க கலக்கச் சென்றிருக்கும் சகோதரியார் பொன்ஸ் அவர்களின் பயணம் இனிமையானதும், சங்க வளர்ச்சிக்குப் பல வழிகளில் பயனுள்ளதாக அமையவும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறேன். ஒட்டகத்துல அனுப்பி வச்ச அந்த ஸ்பெசல் சித்தூர்கட் ஆப்பை மறக்காம நம்ம பய புஷ்ஷு கிட்ட கொடுத்துருமா பொன்ஸ். இந்தியாலேருந்து என்ன வேணுமின்னு கேட்டதுக்கு ஆப்பு தான் வேணும்னு அளுவறான் லைக் எ சுமால் சைல்டு.

நாமக்கல் சிபி said...

வ.வா.சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக புதரகம் செல்லும் எங்கள் கொ.ப.செ வும், கொள்கை பீரங்கியுமான ஆற்றலரசி 'பிகிலு' அவர்களை வாழ்த்தி வழியனுப்புகிறோம்.

இனி 'பிகிலு' அவர்களின் உள்நாட்டு சங்கப்பணிகளை திறம்பட நிர்வகிக்கப் போகும் தம்பி பாண்டி அவர்களையும் உளமாற வாழ்த்துகிறோம்.

இது எங்கள் சங்கத்தின் மற்றுமொரு இமாலய வளர்ச்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எள் முனையளவும் ஐயமில்லை.

நாமக்கல் சிபி said...

அண்ணியார் கைப்பொண்ணு அவர்களும் தன் சார்பாக வாழ்த்துக்களை 'பிகிலு' அவர்களுக்கு தெரிவிக்கச் சொல்லியிருக்கிறார்.

கீதா சாம்பசிவம் said...

இப்படி ஆளாளுக்குச் சொல்லாமல் போனால் என்ன ஆறது? கொஞ்சம் கூட கண்டுக்காம மீட்டிங் போட்டாங்க, இப்ப என்னன்னா இந்த அம்மா "நிரந்தரத் தலைவலி" நான் இருக்க, மகளிர் அணி பத்தி யோசிக்கிறாங்களாமே. சன் டி.வி.ல வைக் கோவை இருட்டடிப்பு செய்ததை விட மோசமான இருட்டடிப்பா இருக்கே. கைப்புள்ள, இதை என்னனு கேக்காம வாழ்த்தி வழி அனுப்பறீங்க.

கைப்புள்ள said...

ஊருக்குப் போறவங்களை வாழ்த்துறது தானே நம்ம பண்பாடு. இப்ப பாருங்க நாளைக்கே வந்து இன்னொரு தரம் My thoughtsல உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவேன். சங்கத்து பொறுப்புகளுக்கும், வாழ்த்து சொல்றதுக்கும் சம்பந்தம் இல்லன்னு தான் நெனக்கிறேன். சரி தானே?

பொன்ஸ் சின்ன பொண்ணு, அதோட ஒத்த வயசு பொண்ணுங்க கிட்ட நம்ம சங்கத்து கொள்கைகளை எடுத்துச் சொல்லும். நீங்க அப்படியா? நம்ம சங்கத்தின் உயர்ந்த கொள்கைகளை நம்ம பக்கம் திரும்பி கூட பாக்காதவங்க கிட்ட எடுத்து சொல்லி ஆற்று படுத்தற மிகக் கடினமான பணியை ஏத்துக்கிட்டிருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் மகளிர் அணியின் இரண்டு கண்கள். உங்க ரெண்டு பேரோட சேவையும் சங்கத்துக்குத் தேவை.

பாருங்க நம்ம பசங்களும் இப்ப ஆமாம்னு சொல்லுவாங்க பாருங்க.(ஆமாம்னு ஒருத்தனாச்சும் சொல்லுங்கய்யா...அவ்வ்வ்...கண்ணைக் கட்டுதே!)

பொன்ஸ்~~Poorna said...

தல எது சொன்னாலும் சரிதான்..

ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்

தேவ் | Dev said...

ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்

தேவ் | Dev said...

சீனு

புஷ் = புதர் தமிழாக்கம்
புதர் இருக்குமிடம் புதரகம்.

இந்த மேலான விளக்கம் கொடுத்தவர் எங்கள் அன்புக்குரிய தலயின் தலைவர் முகமுடியார்.

நாமக்கல் சிபி said...

//பாருங்க நம்ம பசங்களும் இப்ப ஆமாம்னு சொல்லுவாங்க பாருங்க.//

ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்

கைப்புள்ள said...

ஆமாம்னு சொல்லி வயித்துல பாலை வார்த்தீங்க...நல்லாருங்க

(யப்பா...இந்த டயலாக்கையும் யூஸ் பண்ணியாச்சு)

கீதா சாம்பசிவம் said...

ஐஸ், ஐஸ், ஐஸ், ஐஸ், நல்லா ஜலதோஷம் பிடிச்சுக்கிட்டதுங்க.

Anonymous said...

Wow, very very funny BLOG. Love to become member,I would like to submit this pic to this association