Saturday, May 13, 2006

கோர்ட்டில் பார்த்தீபன்... குமாஸ்தா ஓட்டம்..

பார்த்திபன், வ.வா.சங்கத்தினருக்கு அவதூறு ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்டதால், அதனை எதிர்த்து அவதூறு வழக்குப் பதிவு செய்யப் பட்டது. கோர்ட்டில் நடந்த விபரங்கள் பின்வருமாறு:

வக்கீல் வீராச்சாமி: யுவர் ஹானர், இந்த வழக்கு சம்பந்தமாக 'குண்டக்க மண்டக்க' பார்த்திபனைக் நெடுக்கு விசாரணை செய்யவேண்டும் (எவ்வளவு நாள் தான்யா குறுக்கு விசாரணை செய்யறது?!!)

ஜட்ஜ் கருத்து கந்தசாமி: Mர். வீராச்சாமி, ப்ளீஸ் ப்ரோசீட்

டவாலி: 'குண்டக்க மண்டக்க' பார்த்திபன்!
'குண்டக்க மண்டக்க' பார்த்திபன்!!
'குண்டக்க மண்டக்க' பார்த்தீபன்!!!

குமாஸ்தா: ம்ம்.. சொல்லுங்க: "நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.."

பார்த்தி: அது எப்படிங்க உண்மை சொல்ல முடியும்? இப்போ நான் கேக்கறேன்.. இந்த ஜட்ஜ் ஏன் கண்ணாடி போட்ருக்காருன்னு!! கண்ணு தெரியலை, போட்ருக்காருன்னு நீ சொல்லமாட்ட.ஏன்னா அது தான் உண்மை.. வெயிலுக்குப் போட்ருக்காருன்னு தான் நீ சொல்லுவ.. இல்லைன்னா உனக்கு வேலை போய்டும்ங்கறது உண்மை.. அந்த உண்மையச் சொன்னா, உனக்கு வேலை இல்லைங்கற உண்மைய உன்னால உண்மையா ஒத்துக்க முடியுமா?

குமாஸ்தா: (தொப்பியை எடுத்துவிட்டு தலையைப் பிய்த்துக் கொள்கிறார்).. ஏதோ குத்துமதிப்பா சொல்லும்மையா..

பார்த்தி: குத்துக்கு மதிப்பு இருக்கா? இந்தக் குத்துக்கு என்ன மதிப்பு? (என்று முஷ்டியை மடக்குகிறார்)

குமாஸ்தா: (ஜட்ஜைப் பார்த்து) ஐயா ஆளை விடுங்க.. இந்த ஆள் வெளியே போனதும் நான் திரும்பி கோர்ட்டுக்கு வர்றேன். எனக்கு ரெண்டு வாரம் சி. எல். குடுத்துடுங்க..

(ஜட்ஜ் பதில் சொல்லுமுன்னே குமாஸ்தா, தலை தெறிக்க வெளியே ஓடுகிறார்)

வக்கீல் வீராச்சாமி: யுவர் ஹானர், இப்படி எல்லாம் இவர் செய்வதால் தான் எங்கள் கட்சிக்காரர் கைப்பு வெளியே தலை மறைவாக இருக்கிறார்.

இன்னும் வரும்.. இப்போதைக்கு பார்த்தியைச் சமாளிக்க இத்தோட நிறுத்திக்கிறேன்.. மேலும் நடந்தது என்ன என்று அறிய வ.வா.சங்க நோட்டீஸ் போர்டை அடிக்கடி பாருங்கள் :)

18 comments:

நாமக்கல் சிபி said...

களங்கத்தைத் துடைக்க சடுத்தியில் நடவடிக்கை எடுத்த சங்கத்தின் ஆற்றலரிசி மன்னிக்க ஆற்றலரசி 'பிகிலு' பொன்ஸ் அவர்கள் வாழ்க!

சட்ட ரீதியான இந்த பார்த்திபனின் தாகுதலுக்க சட்ட ரீதியாகவே பதிலடி கொடுப்போம்!

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்!

வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது வேறு ஏதும் கருத்துக்கள் கூறுவதற்கில்லை!

பொன்ஸ்~~Poorna said...

சிபி,
உங்க பின்னூட்டத்துல ஒரு பிழை இருக்குங்க.. சடுதியில் நு இருக்கணும்.. சடுத்தியில்னு போட்ருக்கீங்க.. அப்புறம்..

சிபி.. எங்க ஓடறீங்க...வாங்க வாங்க.. இனி சங்கத்துல தமிழ்ப் பாடம் எடுக்காம இருக்க முயற்சிக்கிறேன் :)

இலவசக்கொத்தனார் said...

இதனை ஒட்டி நான் தொடர இருக்கும் பொது நல வழக்கு மற்றும் வகுப்பு நடத்தை வழக்கு (அதாங்க class action suit) பற்றிய விபரங்களை பார்த்தியின் பதிவிலேயே பார்க்கவும்.

வெட்டிப்பயல் said...

கொத்ஸ் மற்றும் சிபி அவர்களே,

வழக்குகளெல்லாம் இருக்கட்டும், முதலில் கைப்புள்ளையையும், கைப்பொண்ணுவையும் கோர்ட்டில் ஆஜர் செய்ய முடியுமா உங்களால்?

அதைச் செய்யுங்கள் முதலில். பிறகு நீங்கள் குற்றவாளிகளா இல்லையா என்பதை கோர்ட் தீர்மானிக்கும்.

சந்தோஷ் aka Santhosh said...

கைப்பு சாமி மாதிரி அவர் எங்கும் இருப்பாரு எதிலும் இருப்பாரு இருக்காருன்னு நினைக்கிறவங்களுக்கு இருக்காரு மத்தவங்களுக்கு இல்லை.

இலவசக்கொத்தனார் said...

பார்த்தியின் புதிய கருத்துக்கும் அவர் பதிவில் பதில் போடப்பட்டுவிட்டது. அங்கு பார்த்துக் கொள்ளவும்.

வெட்டிப்பயல் said...

//கைப்பு சாமி மாதிரி //

வாக்குமூலத்திற்கு நன்றி சந்தோஷ்!

இதிலிருந்தே தெரியவில்லை! கைப்புவைக் கொன்றே விட்டார்கள் என்று!

வெட்டிப்பயல் said...

வழக்கில் திடீர் திருப்பம் - நீதிபதி மாற்றப்பட்டதின் பின்னணி என்ன?

ப்ரியன் said...

ஆகா கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க

நன்மனம் said...

//ப்ரியன் said...
ஆகா கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க//

நீங்க கிளம்பிடாதீங்க... இருங்க இப்ப தான் சுவாரசியமா போய்டிருக்கு..:-))

பொன்ஸ்~~Poorna said...

ஒற்றர் படைத் தலைவர் நன்மனம் அவர்களே..
கைப்புவைத் தேடித்தாங்கய்யா!! இப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கீங்க?!!!

வெட்டிப்பயல் said...

//கைப்புவைத் தேடித்தாங்கய்யா!! //

கைப்பு ஓ.கே. வாட் அபௌட் கைப்பொண்ணு?

நன்மனம் said...

பார்த்தி, இதுக்கு தான் வெய்ட் பன்னினேன்.

கைப்பொண்ணுவ கடத்தி வெச்சுக்கிட்டு தான இந்த கோர்ட் டிராமாவ ஆரம்பிச்சிருக்க?

இந்த வாக்குமூலமே திங்கட்கிழமை கோர்டில் உமக்கு எதிராக மாறும். இந்த டெக்னிக்கே கைப்பு தான் சொன்னாறு. கோர்டில் சந்திக்கும் முன் கைப்பொண்ணுவை விட்டுவிடுவது உனக்கு நல்லது இல்லை வருத்த படுவாய்!!!

நாமக்கல் சிபி said...

சங்கத்து உறுப்பினர்கள் சற்று அமைதி காக்க வேண்டும்!

நேர்வழியில் எதிக்க துணிவின்றி சூழ்ச்சிகளால் சங்கத்தின் புகழைக் கெடுக்க களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர் நம் எதிரிகள். இதற்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டியது நம் கடமை எனினும் நீதி மன்றத்தின் பார்வைக்கென்று வந்துவிட்டதால் சட்ட ரீதியாகவே இவர்களை சந்திக்க வேண்டும். அதுதான் நமக்கு பெருமை!

வழக்கு நிலுவையில் உள்ளாபோது வீண் விவாதங்களையும், அறிக்கைகளையும் நமக்கு நல்லது. அவற்றை விடுத்து சங்கத்துச் சிங்கங்கள்
சற்றேனும் சளைத்து விடாமல் எதிரிகளின் வழக்குகளைத் தவிடுபொடியாக்கும் பலமான ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும். இப்பணியில் எள்ளளவேனும் சுணக்கம் இருத்தலாகாது. காரணம் இன்னும் இருப்பதோ ஒரு நாள். வழக்கு விசாரணைக்கு திங்கள் கிழமை வருகிறது. அதற்குள் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம்.

அதனை மனதில் கொண்டு ஆளுக்கொரு திசையில் நாம் புறப்பட வேண்டும்! சங்கச் சிங்கங்கள் தங்களுக்குள் ஒருவரொருவர் ஐயம் கொள்தலையும் தவிர்க்க வேண்டும்! அது புல்லுருவிகளின் சூழ்ச்சி என்பதையும் புரிந்து கொள்ளா வேண்டும்!

இக்கணமே புறப்படுங்கள்! மனம் தளராதீர்.

Dharumi said...

பிகிலு,
இதெல்லாம் உங்க சங்க விஷயம்; அதுவும் கோர்ட்ல வேற இருக்கு. என்னமோ நடத்துங்க..நீங்களாச்சு, ஒங்க சங்கமாச்சு!

பினாத்தல் சுரேஷ் said...

கைப்பொண்ணு மேலேயும் கைப்பு மேலேயும் திடீர்னு பாசம் பொங்கி வழியறாரே பார்த்திபன்? அவருக்கு ஹவுஸ்புல் ட்ரீட்மெண்ட் தான் தரணும் போல!

வ வா ச வுக்கும், ப ம கவுக்கும் இடையே எந்தப்பிரச்சினைகள் இருந்தாலும் பொதுப்பிரச்சினையில் நாங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் (என்ன ஒரு பக்கம் பீரங்கி, இன்னொரு பக்கம் தீபாவளி கேப்பு) என்பதால், அரசியல் பண்பாட்டைக்காக்க வ வா ச வுடன் போராட நாங்களும் தயார்.

ஒ.ம் பினாத்தலார்.. மூ இ து பொ செ, ப ம க, வளைகுடா வட்டம்.

பொன்ஸ்~~Poorna said...

என்ன தருமி இது? இப்படிச் சொல்லிட்டு போனா என்ன அர்த்தம்?!!

நீங்க தான் ஏற்கனவே பாண்டியன் பேரவையில் வழக்காடியவர்!! வந்து கொஞ்சம் வாதாடி உதவி பண்ணுவீங்கன்னு பார்த்தா!!! சரி சரி, அப்புறம் உங்க கட்சியில் கோபிச்சுக்கப் போறாங்க.. நீங்க வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தாலே போதும் :)

கீதா சாம்பசிவம் said...

தலைவர் திங்கள் அன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அப்போது தெரியும் யார் புல்லுருவிகள் என்று.