Monday, May 29, 2006

ஆற்றலரசிக்குப் பத்துக் கேள்விகள்

வழக்கம் போல் சங்கத்துக்கு வந்த தபால் பையை நம்ம பாண்டியும் நானும் பாத்துகிட்டு இருந்தோம். துபாய் பக்கமா இருந்து நம்ம துபாய் ராசா ஒரு மூணு கிலோ பேரீச்சம் பழமும் கூடவே கிலோ கணக்குல்ல பாசமும் அனுப்பியிருந்தார். பிரிச்சுச் சாப்பிட்டோம் நல்லாயிருந்துச்சு... பேரீச்சம் பழத்தைத் தான்ய்யா சாப்பிட்டோம்

ச்சே விஷயத்துக்கு வர்ரோம்...

நமது கைப்புள்ள இதழ் மாதிரி புதரகத்துல்ல நமது புதர் ன்னு ஒரு பேப்பர் வருதாம் அந்தப் பத்திரிக்கையிலிருந்து பொன்ஸ் அக்காவுக்கு ஒரு லெட்டர் வந்து இருந்துச்சு.

வரு,வா.சங்கம் பெரும் புள்ளிங்க அம்புட்டுப் பேர்க்கும் வர்ற லெட்டரைப் பிரிச்சுப் படிச்சு அவங்கிளுக்குப் பதில் போடுறது அம்புட்டும் இந்தத் தொண்டர்கள் வேலைத் தானே... லெட்டரைப் பிரிச்சா.. அக்காவோட அரசியல் எதிரி யாரோ எழுதியிப்பான்(ள்) போல இருந்துச்சு..

அக்காவுக்குப் போன் போட்டா அக்கா சோறு வடிக்காம பர்கர் தின்ன கதையை வெட்டியாப் பேசி போன் பில்லை ஏத்தி விட்டிருச்சு...

அப்புறமா நாங்கப் பதட்டமா லெட்டர் மேட்டரை எடுத்து விட்டு இதுக்கு என்னப் பதில் சொல்லுரதுன்னு கேட்டோம்...

அக்கா விவரத்தை அசால்ட்டாக் கேட்டுட்டு இந்தப் பிஸ்கொத்து கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்.. என் பேன்ஸ் பதில் சொல்லுவாயங்கன்னு நச்ன்னு போனைக் கீழே வச்சுட்டாயங்க...

அக்கா பேன்ஸ்ன்னு சொன்னது தலயிலே இருக்குமே அந்த மேட்டரா இல்ல தலக்கு எல்லாமே அந்த மேட்டரான்னு நானும் பாண்டியும் பாயைப் பிராண்டி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அந்தக் கேள்விகளை அப்படியே சங்கப் பலகையிலே ஒட்டுறோம்ய்யா.. அக்காவோட பேன்ஸ்க்குச் சமர்ப்பணம்.

நமது புதர் கேட்கும் பத்து கேள்விகள்

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்?
சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு... இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?

4.புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கியப் பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்புப் பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச... இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது... இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான...உயிரான... கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று 'வருத்தப்படுவதாய்' பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

அக்கா ஆற்றலரசியே பதில் சொல்லுங்கள்....

அக்கா இந்தக் கேள்வியைக் கேட்டவனைத் தூக்கிப் போட்டு துவம்சம் பண்ணிடுறோம்ன்னு நானும் பாண்டியும் பிளட் பாயிலாகிக் கேட்டப்போ

தம்பிகளா.. நீங்கப் பிளட் பாயிலாகதீங்க... போய ஆளுக்கொரு ஆப் பாயில் அடிச்சுட்டு உங்க வேலையைப் பாருங்க.. இந்தக் கேள்விகளுக்கு என் ரத்ததின் ரத்தங்களும் உடன்பிறப்புக்களும் பதில் சொல்லுவாயங்கன்னு கூலாச் சொல்லிட்டாங்கப்பூ

47 comments:

ILA(a)இளா said...

இப்பவே பதில் வேனும், இல்லைன்னா தீக்குளிக்கப்போவதாக பாண்டி அறிக்கை விட்டுள்ளார்

தேவ் | Dev said...

இளா எங்கிட்ட டீ குடிக்கப் போறேன்னு இல்ல சொல்லிட்டுப் போனான்:)

ILA(a)இளா said...

பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை....

இப்படி யாரோ பொன்ஸ் பத்தி 20 வருஷத்துக்கு முன்னாடி சொல்லிட்டாங்க. இப்ப இதை தோண்டியெடுத்து விசாரணை செய்வது தமிழ் அரசியலுக்கு எதிரானது
(தமிழக அரசின் அறிவிப்பு: யார் மீது தனிப்பட்ட முறையில் பழிவாங்குதல் கிடையாது)

ஜொள்ளுப்பாண்டி said...

//இப்பவே பதில் வேனும், இல்லைன்னா தீக்குளிக்கப்போவதாக பாண்டி அறிக்கை விட்டுள்ளார்//

ஐயோ அம்மா என்னதிது ??? ஆஹா இளா எம்மேல என்ன கோவம் உங்களுக்கு ? வுட்டா எம்மேல பெட்ரொல ஊத்தி நீங்களே பத்தவச்சிருவீங்க போல?? தேழா தேவூ காப்பாத்தப்பூ காப்பாத்து !

//இளா எங்கிட்ட டீ குடிக்கப் போறேன்னு இல்ல சொல்லிட்டுப் போனான்:) //


ஒருவேளை நான் டீ குடிக்கப்போறேன்ன்னு சொன்னது இளா காதிலே தீ குளிக்கப்போறேன்னு விழுந்திடுச்சோ ??

இது வெளிநாட்டு சதி என பிரகடணம் செய்கிறேன் !! துபாய் ராசா யாரச்சும் அங்கின இருந்து ஒரு பேரல் பெட்ரோல் வாங்க சங்கத்து சார்பிலே ஆர்டர் பண்ணுனாங்களா ?? சொல்லுங்கப்பா :(

ஜொள்ளுப்பாண்டி said...

நான் எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையாவே இருக்கேன்.நான் பாட்டுக்கு செவனேன்னு ஒரு ஓரமா ஒக்காந்து ஜொள்ளிகிட்டு இருக்கேன்.அசந்த நேரம் பாத்து அப்படியே அள்ளிகிட்டு போய்டாதீங்க கண்ணுங்களா :((

நாகை சிவா said...

ஆஆ.... நம் சங்கத்தின் மகளிரணி தலைவி மீது இப்படி ஒரு அபாண்ட(???) குற்றசாட்டுகளா?
இரத்தம் கொதித்தது, உள்ளம் பொங்கியது.இன்னும் என்னமோ ஆச்சு.
இருந்தாலும் சங்க கட்டுபாட்டை மீற கூடாது என்ற காரணத்தில், ம.தலைவி கூறியது போல் ஒரு ஆப்-ஆம்லெட்டு (ஆப்பாயில் கிடைக்கல) சாப்பிட்டு என்னை கட்டுபடுத்தி உள்ளேன்.

அப்புறம், சங்கத்தின் கண்மணிகள் யாரும் தீகுளித்தால் ஒரு லட்சம் கொடுக்கப்படும் என்று வேண்டாத விஷ கிருமிகள் வதந்தி பரப்பி உள்ளார்கள். யாரும் அதை கண்டு ஏமாற வேண்டாம் என சங்கத்தின் சார்பாக கேட்டு கொள்கின்றேன்.

பொன்ஸ்~~Poorna said...

// உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்?
சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?
//
இப்படி எல்லாம் கணக்குக் கேட்டால், வா.வ.சங்கத்தின் பொதுச் செயலளார் மற்றும் நிரந்தர தலைவி கவிதாவுடன் போன் போட்டு டிஸ்கஸ் செய்யவேண்டிய அவசியம் நேரலாம்...என்பதை மட்டும் இப்போது சொல்லிக் கொண்டு, என் பேன்ஸ்களின் பதில்களுக்கு காத்திருக்கவும் என்று சொல்லி முடிக்கிறேன்..

(போன வாரம் தான் நல்லா மெடிக்கர் போட்டு குளிச்சேன்.. பேன் எல்லாம் போய்டுச்சே!!! என்ன செய்ய?!!)

ILA(a)இளா said...

கணக்கு கேட்டா கட்சி உடைஞ்சிடும் சாமிகளா
(உதாரணம்-திமுக-மதிமுக)

(துபாய்) ராஜா said...

///"துபாய் பக்கமா இருந்து நம்ம துபாய் ராசா ஒரு மூணு கிலோ பேரீச்சம் பழமும் கூடவே கிலோ கணக்குல்ல பாசமும் அனுப்பியிருந்தார். பிரிச்சுச் சாப்பிட்டோம் நல்லாயிருந்துச்சு... பேரீச்சம் பழத்தைத் தான்ய்யா சாப்பிட்டோம்"///.

"தேவூ!பாண்டி! எல்லாருக்கும் குடுத்து
தானய்யா சாப்ட்டிய?இல்லாத ஆளுக்கு
பங்கு எடுத்து வச்சிருக்கீயளா?இல்லனா
சொல்லுங்கய்யா!இன்னொரு லோடு
கப்பல்ல அனுப்புறேன்.அப்புறம்
பேரீச்சம்பழத்துல ஊழல்னு எவனாவது 'பிராது' குடுத்துறப்
போறான்."

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!
//போன வாரம் தான் நல்லா மெடிக்கர் போட்டு குளிச்சேன்.. பேன் எல்லாம் போய்டுச்சே!!! என்ன செய்ய?!!) ?//

வாரத்திற்கு ஒரு முறை தான் குளியல் என்ற உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி விட்டீர்களே!நுணலும் தன் வாயல் கெடும்!:-))

(துபாய்) ராஜா said...

///"இது வெளிநாட்டு சதி என பிரகடணம் செய்கிறேன் !! துபாய் ராசா யாரச்சும் அங்கின இருந்து ஒரு பேரல் பெட்ரோல் வாங்க சங்கத்து சார்பிலே ஆர்டர் பண்ணுனாங்களா ?? சொல்லுங்கப்பா :("///

தம்பி பாண்டி!!நம்ம கைய மீறி அப்படிலாம் ஒண்ணும் நடந்துடாது.நீ
ஒண்ணு செய்யி,பேரீச்சம்பழம் வர்ர
கப்பல்ல ஏறி நம்ம ஏரியா துபாய்க்கு
வந்துடு.நம்ம சேந்து சங்கப்பணி ஆத்தலாம்.

தம்பி வா!தங்கமே வா!பூமியெல்லாம் அதிர புயல் போல் வா!கடலெல்லாம்
கலங்ககண்ணே வா!கலக்குவோம் வா!
(ஊருக்குப்போற வரை உக்காந்தடிக்க பேரல் பேரலா ஊறலும் இருக்கு.
ஊறுகாயும் இருக்கு.)

(துபாய்) ராஜா said...

"நமது புதர் கேட்கும் பத்து கேள்விகள்
அந்தக் கேள்விகளை அப்படியே சங்கப் பலகையிலே ஒட்டுறோம்ய்யா.."

நாங்களும் வ.வா.ச.வ.கி.யின் தலைமை அலுவலகமான நம்ம
'தல'யோட அதிகாரபூர்வ அரண்மனையிலும் ஒட்டுறோங்கோ!!

(வ.வா.ச.வ.கி.-வருத்தப்படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை)

வெட்டிப்பயல் said...

சபாஷ்! இதுக்குத்தான காத்துகிட்டிருக்கோம்!

Namakkal Shibi said...

நம்ம வேலையை அந்த சங்கத்து ஆளுங்களே பார்த்துக்குவாங்க போலிருக்கே!

:-))))))))))))))))))))))))))))))))))))))

நல்ல கேள்விகள். விடைகள் வராவிடில் சங்கத்தில் பிளவு நிச்சயம்.

ஆஹா! என்னிக்கு நடக்கப் போவுதோ? ஆவலாய்க் காத்துகிட்டிருக்கேன்!

Namakkal Shibi said...

//இப்பவே பதில் வேனும், இல்லைன்னா தீக்குளிக்கப்போவதாக பாண்டி அறிக்கை விட்டுள்ளார்//


மண்ணெண்ணெய், தீப்பெட்டி என் செலவு.

Namakkal Shibi said...

//8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?//

இது நம்ம சிபி சொல்லிக் கொடுத்து எழுதினா மாதிரி தெரியுதே!

பாவம் அவர்தான் வெண்பான்னு கேட்டாலே தலை தெறிக்க ஓடுறார்.
அவரோட கனவுல கூட வெ.வாத்தி ஜீவாவையும், பொன்ஸையும் பார்த்தவுடனே ஜகா வாங்கினாராமே?

வெட்டிப்பயல் said...

//ஐயோ அம்மா என்னதிது ??? ஆஹா இளா எம்மேல என்ன கோவம் உங்களுக்கு ? வுட்டா எம்மேல பெட்ரொல ஊத்தி நீங்களே பத்தவச்சிருவீங்க போல?? தேழா தேவூ காப்பாத்தப்பூ காப்பாத்து ! //

பார்த்தீங்களா பாண்டி! உங்களை சங்கத்துல எதுக்காக வெச்சிருக்காங்கன்னு! "எப்பவாச்சும் தீக்குளிக்க ஆளு தேவைன்னா இருக்கவே இருக்காரு நம்ம பாண்டின்னு" சிபி சொல்ல நானே ஒரு முறை காதால கேட்டிருக்கேன்.

எதுக்கும் சாக்கிரதையா இருந்துக்க சாமி! அம்புட்டுதான் நான் சொல்லுவேன்!

தேவ் | Dev said...

//இப்படி எல்லாம் கணக்குக் கேட்டால், வா.வ.சங்கத்தின் பொதுச் செயலளார் மற்றும் நிரந்தர தலைவி கவிதாவுடன் போன் போட்டு டிஸ்கஸ் செய்யவேண்டிய அவசியம் நேரலாம்...//

அக்கா அப்ப்டி எல்லாம் அவசரப் படாதீங்க ... கவிதா அக்கா வீட்டு போன் வயரை அவங்க அணில் குட்டி கடிச்சு வச்சுருச்சாம் அவங்க வீட்டுக்குப் போன் கிடையாது இப்போதைக்கு.
அப்புறம் செல் ட்ரை பண்ணாதீங்க... அந்தச் செல்லை அணில் குட்டி கடத்தி தன்னோட காதல் கிப்டா பக்கத்து மரத்து அணிலுக்குக் கொடுத்துருச்சாம்...

இப்போ கவிதா அக்கா அந்தப் பிரச்சனையிலே தவிச்சுகிட்டு இருக்காங்க...பாவம்

பொன்ஸ்~~Poorna said...

சங்கத்தின் சிங்கங்களே.. இந்தக் கேள்வியெல்லாம் விடுங்க.. நான் பதில் சொல்லிக்கிறேன்.. மது கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கப்பா!! நம்ம சங்கத்துல விளம்பரம் கொடுத்தும் அவங்க ஆராய்ச்சிக்குத் தேவையான சங்கதி வரலைன்னா எத்தனை அவமானம் சங்கத்துக்கு?!!!

தேவ் | Dev said...

//என் பேன்ஸ்களின் பதில்களுக்கு காத்திருக்கவும் என்று சொல்லி முடிக்கிறேன்//

அப்படின்னா உங்கத் தலையிலே ஏறியிருந்த அந்த பேன்ஸ் எல்லாம் இப்போ சுத்தமா இறங்கியிருச்சா????:)))))))))))

தேவ் | Dev said...

//போன வாரம் தான் நல்லா மெடிக்கர் போட்டு குளிச்சேன்.. பேன் எல்லாம் போய்டுச்சே!!! என்ன செய்ய?!//

பேனும் இல்லை போனும் இல்லை அக்காவுக்கு ரொம்பவும் கஷ்ட்டம் தான்...

இலவசக்கொத்தனார் said...

பாயிண்ட் நம்பர் 7

இதைப்பற்றி இந்த பதிவுக்கு முன்பே நான் அவரிடம் எழுப்பிய கேள்வி.

//இப்படி வெந்நீர் வைக்க எல்லாம் குறிப்பு போட்டுவிட்டு அதை நம்ம சமக்கால இலக்கியத்தோட பொறுத்திப் பேசறது எல்லாம் நல்லாவா இருக்கு? //

ஆனாப் பாருங்க அந்த கேள்வியையே காணும். நானும் அவங்க பதிலை எதிர்ப்பார்க்கறேன்.

தேவ் | Dev said...

அக்கா இது என்ன அக்கா பிசாத்து கேள்வி நாங்க எதையும் நம்ப மாட்டோம்....

ஆமா நம்ம சங்கத்துகாரங்களே உங்க சப்போர்ட்க்கு வர்றல்லியே... தர்மத்தின் தளபதி தலக் கூட உங்களுக்கு ஆதரவா ஒரு கருத்தும் சொல்லாம கம்ன்னு இருக்கதைப் பார்த்தா.. எனக்கு கொஞசம் டவுட் ஆகுது அக்கா:):(

Syam said...

எங்கள் தானை தலைவி வருங்கால முதல்வர் அக்கா பொன்ஸ் அவர்கள் மீது கேட்க்கப்பட்ட கேள்விகளை சங்க பலகையில் இருந்து நீக்காவிட்டால் உலகமெங்கும் பெரிய கலவரம் நடக்கும் என்று எச்சரித்து பேச வாய்ப்பு அளித்த அக்கா அவர்கள் வாழ்க என்று கூறி எனது உரையை இத்துடன் முடித்து கொள்கிறேன்

பொன்ஸ்~~Poorna said...

//தலைவி வருங்கால முதல்வர் அக்கா பொன்ஸ்//
சரி தான்.. தரும அடி எங்கேர்ந்து வரப் போகுதுன்னு புரிஞ்சிடிச்சி.. சியாம் தம்பி.. நல்லாருப்பா!!!

நாமக்கல் சிபி said...

//தரும அடி எங்கேர்ந்து வரப் போகுதுன்னு புரிஞ்சிடிச்சி.. சியாம் தம்பி.. நல்லாருப்பா!!!
//

தலைமைப் பதவிக்கு இருக்கும் ஆசை உள்ளங்கை நெல்லிக்கனெ போல தெளிவாகத் தெரிகிறது.

நம்ப முடியவில்லையே!

நாமக்கல் சிபி said...

நம்ம (கோஷ்டிப்) பூசல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த பார்த்தி, கட்டதுரை பயலுவ எல்லாம் எகத்தாளம் பேசிகிட்டு இருக்காங்கப்பூ! அதை முதலில் கவனிங்க!

தேவ் | Dev said...

//நம்ப முடியவில்லையே! //


தளபதிக்கும் சந்தேகம் வந்துருச்சு:(

என்னடா இது சங்கத்துக்கு வந்த சோதனை? ஆண்டவா !!!!

தேவ் | Dev said...

//தேவூ காப்பாத்தப்பூ காப்பாத்து ! //

நம்மளை எல்லாம் காப்பாத்த வேண்டிய தல உதை பந்து உதைக்க கவசம் போட்டு கப்பல் ஏறி செருமனிப் போயிட்டாரு....

இங்கே தல மாதிரி இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டிய அக்கா மேல எம்புட்டு குற்றசாட்டு.. என்ன பாண்டி பண்ணுறது

தேவ் | Dev said...

//"தேவூ!பாண்டி! எல்லாருக்கும் குடுத்து
தானய்யா சாப்ட்டிய?//

ராஜா தம்பி, ஆளுக்கு ரெண்டு தான்ய்யா சாப்பிட்டோம்.. ஒரு பெரும் பங்கைத் தலக்கு செர்மனிக்கு பார்சலும் மீதிய அக்காவுக்கு பார்சலா புதரகத்தும் அனுப்பிட்டோம்ய்யா.. இன்னும் மிச்சம் சொச்சத்தை உலகம் முழுக்க பிரிச்சு அனுப்பிட்டோம்ய்யா

இன்னும் ஒரு அஞ்சு பத்து கிலோ அனுப்புய்யா.. தலக் காமரூன் காட்டான் குரூப் கையிலே சிக்கி எந்நேரம் வேணும்னாலும் சின்னாபின்னமாகி சிதையலாம்.. எதோ பேரீச்சம் பழம் தின்னு ஓடம்பத் தேத்த உதவும்

தேவ் | Dev said...

//இப்படி வெந்நீர் வைக்க எல்லாம் குறிப்பு போட்டுவிட்டு அதை நம்ம சமக்கால இலக்கியத்தோட பொறுத்திப் பேசறது எல்லாம் நல்லாவா இருக்கு? //

பின்னூட்ட சூப்பர் ஸ்டார் கொத்ஸ் வேற கேள்வி கேட்டு இருக்கார்.
என்னப் பண்ணுறது அக்கா தான் எனக்கு கட்டளைப் போட்டு அறுசுவைத் தமிழன் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் கொத்தனாரின் ரசிகர் மன்ற தலைவர் பதவியே வாங்கிக் கொடுத்தாங்க...
இப்போ அவங்களை எதிர்த்தேக் கேள்வி கேட்க வேண்டிய நிலை.. என்ன கொடுமை சார் இது ( சந்திரமுகி பிரபு ஸ்டைலில் படிக்கவும்)

நாமக்கல் சிபி said...

//இப்படி வெந்நீர் வைக்க எல்லாம் குறிப்பு போட்டுவிட்டு அதை நம்ம சமக்கால இலக்கியத்தோட பொறுத்திப் பேசறது எல்லாம் நல்லாவா இருக்கு? //


வெந்நீர் வைப்பதெல்லாம் சமக்கால இலக்கியத்துலயா வருது? நான் என்னவோ சமைக்கலாம் இலக்கியத்துல வருதுன்னல்ல நினைச்சிருந்தேன்.

நாமக்கல் சிபி said...

//என்ன கொடுமை சார் இது //

:-))))))))))

நாமக்கல் சிபி said...

//ராஜா தம்பி, ஆளுக்கு ரெண்டு தான்ய்யா சாப்பிட்டோம்.. ஒரு பெரும் பங்கைத் தலக்கு செர்மனிக்கு பார்சலும் மீதிய அக்காவுக்கு பார்சலா புதரகத்தும் அனுப்பிட்டோம்ய்யா.. இன்னும் மிச்சம் சொச்சத்தை உலகம் முழுக்க பிரிச்சு அனுப்பிட்டோம்ய்யா//

கோவை பக்கம் எதுவுமே வரலியே!

(துபாய்) ராஜா said...

///"பேரீச்சம்பழத்துல ஊழல்னு எவனாவது 'பிராது' குடுத்துறப்
போறான்."///

/கோவை பக்கம் எதுவுமே வரலியே!/

ஆஹா!!'!!!!!!!"பிராது' குடுக்க ஆரம்பிச்சுட்டாங்கய்யா..........
ஆரம்பிச்சுட்டாங்கய்யா!!!!!!!!!!

தேவ் | Dev said...

தளபதியாரே என்னது வர்றல்லியா? AWB NO. தர்ரோம் செக் பண்ணுங்க.

நாமக்கல் சிபி said...

//AWB NO.//

ஏர் வே பில்லா! அப்ப கண்டிப்பா வந்துடும். நான் நம்ம சங்கத்து ஆளுங்க யாருகிட்டயாவது குடுத்து அனுப்பினீங்களோன்னு நினைச்சேன்.

(துபாய்) ராஜா said...

/கோவை பக்கம் எதுவுமே வரலியே!/

சிபிச்செல்லம்!!!!!கவலைப்படாத!!! இன்னும் ஒருலோடு கப்பல்ல வருது.
உனக்கு வேணும்னா தனியா ஒரு லோடு ப்ளைட்ல அனுபுறேன்.
கோயம்புத்தூரு ஏர்போட்ல போய்
எடுத்துக்க கண்ணு!!!!!.(ஸ்ஸ்ஸ்ஸ்!யெப்பா.....!!வளைகுடாகிளை மேல
'பத்து கேள்விகள்'வராம இருக்கத்தான்
இவ்வளவு பாடும்......)

(துபாய்) ராஜா said...

//ராஜா தம்பி, ஆளுக்கு ரெண்டு தான்ய்யா சாப்பிட்டோம்.. ஒரு பெரும் பங்கைத் தலக்கு செர்மனிக்கு பார்சலும் மீதிய அக்காவுக்கு பார்சலா புதரகத்தும் அனுப்பிட்டோம்ய்யா.. இன்னும் மிச்சம் சொச்சத்தை உலகம் முழுக்க பிரிச்சு அனுப்பிட்டோம்ய்யா//

"பாசக்கார பயலுவய்யா.........!!!"

Namakkal Shibi said...

ராஜா தம்பி,

இந்த பத்து கேள்வி வந்த தபால்ல துபாய் போஸ்ட் ஆபீஸோட முத்திரை இருந்ததாமே! வாஸ்தவமா?

(துபாய்) ராஜா said...

//"ராஜா தம்பி,இந்த பத்து கேள்வி வந்த தபால்ல துபாய் போஸ்ட் ஆபீஸோட முத்திரை இருந்ததாமே! வாஸ்தவமா?"//

கெட்டதுரை!!இதெல்லாம் நல்லால்ல!
வேணாம்!வுட்டுடு!அழுதுருவோம்!!!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!.

ஜொள்ளுப்பாண்டி said...

//தம்பி பாண்டி!!நம்ம கைய மீறி அப்படிலாம் ஒண்ணும் நடந்துடாது.நீ
ஒண்ணு செய்யி,பேரீச்சம்பழம் வர்ர
கப்பல்ல ஏறி நம்ம ஏரியா துபாய்க்கு
வந்துடு.நம்ம சேந்து சங்கப்பணி ஆத்தலாம்.

தம்பி வா!தங்கமே வா!பூமியெல்லாம் அதிர புயல் போல் வா!கடலெல்லாம்
கலங்ககண்ணே வா!கலக்குவோம் வா!
(ஊருக்குப்போற வரை உக்காந்தடிக்க பேரல் பேரலா ஊறலும் இருக்கு.
ஊறுகாயும் இருக்கு.) //

துபாய் ராசா ஆஆஆஆவ்வ்வ்

என்ன பாசம் என்ன பாசம் !! பாசத்தையும் அதையும் தாண்டி பேரலையும் காட்டினா நான் என்ன பண்ணுவேன் ஆஆஆஅவ்வ்

தேவ் | Dev said...

அக்கா நமது புதர் நிருபருங்க கேள்விக்கெல்லாம் பதில் என்னாச்சுன்னுக் கேட்டு கலாய்க்கிறாயங்க.. சீக்கிரமாப் பதிலைச் சொல்லி சங்க மானத்தைக் காப்பாத்துங்க...

இந்தத் தலய வேற காணோம்... ஒண்ணியும் புரியல்ல...

பாண்டி பிரதர் பானமுற்று கானம் பாடுவோம் வா.. வா.. வா

Coimbatore kusumbu said...

Miga periya oozhal nadanthirukkum pola irukke

பொன்ஸ்~~Poorna said...

ஹேப்பி வீக் எண்ட்.. நல்லா யோசிச்சி நாளைக்குச் சொல்லறேன்.. புதுப் பதிவா!!

Raja said...

//"ஹேப்பி வீக் எண்ட்.. நல்லா யோசிச்சி நாளைக்குச் சொல்லறேன்.. புதுப் பதிவா!!"//

பொன்சக்கோ!உங்க பதி(ல)வ உலகநாடுகளெங்கும் உள்ள வ.வா.ச.
உறுப்பினர்கள் ஆவலோடு உள்ளோம்.

எல்லாமே முக்கியமான கேள்விகள்.
ஒவ்வொரு கேள்விக்குமே தனித்தனி பதி(ல்)வுகள் எழுதலாம்.நல்லா யோசிச்சு எழுதுங்க!!

எங்க 'ஆவல' எதிரிகள் வாய்மென்ன
'அவல்' ஆக்கிறாதீங்க!!.

(துபாய்)ராஜா.

Raja said...

//"ஹேப்பி வீக் எண்ட்.. நல்லா யோசிச்சி நாளைக்குச் சொல்லறேன்.. புதுப் பதிவா!!"//

பொன்சக்கோ!உங்க பதி(ல)வ உலகநாடுகளெங்கும் உள்ள வ.வா.ச.
உறுப்பினர்கள் ஆவலோடு உள்ளோம்.

எல்லாமே முக்கியமான கேள்விகள்.
ஒவ்வொரு கேள்விக்குமே தனித்தனி பதி(ல்)வுகள் எழுதலாம்.நல்லா யோசிச்சு எழுதுங்க!!

எங்க 'ஆவல' எதிரிகள் வாய்மென்ன
'அவல்' ஆக்கிறாதீங்க!!.

(துபாய்)ராஜா.