Wednesday, May 10, 2006

மாவட்ட செய்திகள் - நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல், கைவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் இளங்கலை மாணவிகளை உறுப்பினர்களாகக் கொண்ட நமது வ.வா.சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மகளிர் அணிக் கிளையின் உறுப்பினர் ஒருவரை கடந்த ஞாயிறு அன்று சந்தித்தேன்.

அவர்களும் தங்கள் கல்லூரியில் நமது சங்கத்தின் கிளையொன்றை நிர்வகித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார். அவர்தம் கல்லூரியில் நமது சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாடினேன்.

அப்போதுதான் இக்கிளை அக்கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாக நிர்வகிப்பட்டு வருவதாகவும், தினமும் நம்ம தலை கைப்புவின் வீர வரலாற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுற்று வருவதாகவும் கூறினார்.


என்னே கைப்புவின் புகழ்! என்னே சங்கத்தின் வளர்ச்சி!

5 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

சிபியண்ணே கேட்டகறப்போ இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! அண்ணே அந்தக்கல்லூரியில ஏதச்சும் அண்ணனைப்பத்தி சொற்பொழிவு ஏதும் ஆத்தனும்னா சொல்லுங்களேன்.ஆத்தரதுக்கு நான் வாரேன் :)))

Unknown said...

சிபியார் அங்கே எதுக்குப் போனாருன்னு நினைக்கிற பாண்டி :) விசாரி விவரம் தெரியும்.... எல்லாம் தலப் புராணம் பாடத் தான்...

Unknown said...

சிபி நயந்தாராவை சிம்பு டாவு கட்டுறாரேமே நீங்க இதைப் பத்தி என்ன பீல் பண்றீங்கன்னு சங்கத்துல்ல ஒரு சொற்பொழிவுக்கு ஏற்பாடு பண்ணவா?

ஜொள்ளுப்பாண்டி said...

சிபியண்ணே மோசம்போய்ட்டீங்களே !! இப்படி காத்திருந்த நயன்தாராவை நேத்து வந்த சிம்பு கூடிட்டு போறதா? Noooo. Never.இதைய அனுமதிக்கக் கூடாது. என்ன பண்ணலாம் சொல்லுங்க? சனிக்கிழமையும் அதுவுமா அப்படியே எங்கனாச்சும் அண்ணன் தேவ் தலைமையிலே ஒரு பீச் ரிசார்ட் பக்கம் 'பீர்'ருடன் ஒதுங்கி அடுத்த 'கட்டை' நடவடிக்கை பற்றி ஆராயலாமா? ;)))

தளபதி சிபி இதைக் கேள்விப்படதிலிருந்து பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதாக பேட்டை உளவாளிகள் தெரிவிக்கின்றனர் :(

வெட்டிப்பயல் said...

உங்கள் தளபதி சிபி இப்போது வேறு பிரச்னையில் மாட்டிக்கொண்டார். சிபி மட்டுமல்ல தேவ், பொன்ஸ் ஆகியோரும் கூடத்தான்.